PDA

View Full Version : கீற்றுக் கொட்டகை



RAGHAVENDRA
6th October 2014, 07:52 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/touringtalkies_zps0c04b601.jpg

கீற்றுக் கொட்டகை



"எங்க ஊர்.... லிருந்து ..... போகும் சாலையில் .... வது கிலோ மீட்டரில்.... பக்கம் திரும்பும் சாலையில் ஊர் எல்லையில் பெயர்ப் பலகையோடு துவங்கும்... அங்கிருந்து கொஞ்ச தூரம் போனால் .... என்ற பாட்டு லேசாக காதில் விழ ஆரம்பிக்கும்... உள்ளே போகப் போக பாட்டு சத்தம் பெரிசாகக் கேட்கும்... சாயங்காலம் 5.00 மணிக்கு அது அடையாளம்... ஜனங்க சாரை சாரையாக நடந்து இடது பக்கம் மலைமேட்டுப் பக்கம் செல்வார்கள் ... திரும்பிப் பார்த்தால் தொலைவில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருப்பார்கள்.. மாலைக் காட்சி டிக்கெட் கொடுக்கும் நேரம்... "



இப்படியெல்லாம் அந்தக் காலத்து நினைவுகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் அவ்வப்போது நிழலாடிக் கொண்டிருக்கும்.. என்னதான் DTS CUBE System Multiplex Online booking with snacks என்றெல்லாம் நவீன மயமாக்கலில் சினிமா உழன்றாலும் அன்றைய தலைமுறையினர் நினைவில் மூழ்கித் திளைப்பதும் இன்றைய தலைமுறை காணத் துடிப்பதும் அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள்...

இந்த அனுபவம் சினிமா பார்ப்பதோடு நின்று விடுமா என்ன... அந்த மாட்டு வண்டியில் விளம்பரத் தட்டி, கிராமஃபோன் ரிக்கார்டில் பாட்டு ஒலிப்பது, பிட் நோட்டீஸ் விநியோகம், என பல்வேறு விதங்களில் அந்தக் கால ரசிகர்களின் நெஞ்சில் பல நினைவுகள் சுற்றிச் சுழலும்.

இதையெல்லாம் நாம் இங்கே பகிர்ந்து கொள்வோமே...

ஒரு மேற்கோளுக்காக...



எம்.பி.உதயசூரியன்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.

நன்றி: ‘புதிய தலைமுறை’


மேற்காணும் கட்டுரைக்கான இணைப்பு http://chudachuda.blogspot.in/2012/01/blog-post.html

venkkiram
6th October 2014, 08:06 PM
நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!

RAGHAVENDRA
6th October 2014, 08:12 PM
மிக்க நன்றி வெங்கிராம். தங்கள் வரவேற்பிற்கு உளமார்ந்த நன்றி...

தங்களுடைய எண்ணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் திரியைப் பொறுத்த வரையில் அந்நாளைய தமிழ்த் திரையுலகம் எவ்வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது, எவ்வகையிலெல்லாம் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, என பலவிதமான கோணங்களில் நினைவலைகளைப் பகிரந்து கொள்வதே நோக்கமாக இருக்கும். அவ்வகையில் பார்த்தால் இது நட்சத்திரங்கள் அபிமானங்கள் இவற்றிற்கப்பால் நின்று தனிமனிதனின் வாழ்க்கையில் சினிமா என்ற ஒரு அறிவியல் சாதனம் ஏற்படுத்திய ஆளுமை இவற்றையே முன்னிறுத்தும், இது இயல்பாகவே நடக்கும். தாங்களும் தங்கள் வயதில் தாங்கள் சந்தித்த அல்லது அனுபவித்த நிகழ்வுகளைப் பற்றிப் பகிரந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாகவும் இத்திரி பயனளிக்கலாம்.

நோக்கம் நல்லதாக இருப்பின் நடப்பும் அவ்வாறே என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

RAGHAVENDRA
6th October 2014, 08:17 PM
50களின் இறுதியில் ஒரு கல்கி வார இதழில் வெளிவந்த மடாதிபதி மகள் திரைப்படத்திற்கான விளம்பரத்தின் நிழற்படம்

http://lh3.ggpht.com/_sEsdnTYdgAY/Sqxv6H8WriI/AAAAAAAAAC4/Yf1WMVpwzjI/s1600/madathipathi+magal+ad%5B3%5D.jpg

இவ்விளம்பரம் பதிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஸ்த்ரீ புமான் என்ற வார்த்தைகளைப் பற்றி குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. புமான் என்கிற வார்த்தை ஆணினத்தைக் குறிப்பதாக தெரிகிறது. வித்தியாசமான விளம்பரமாகவே தென்படுகிறது.

நன்றி http://tamilpokkisham.blogspot.in/2009/09/blog-post_13.html?utm_source=BP_recent

Richardsof
6th October 2014, 08:31 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

புதுமையான ,கடந்த கால டூரிங் டாக்கீஸ் நினைவுகளை எண்ணி பார்க்கும் முயற்சி . வாழ்த்துக்கள் .

1960-1975 கால கட்டத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் 450 கீற்று கொட்டைகைகள் இருந்தது . சிங்கள் புரஜெக்டர் . தினசரி இரண்டு காட்சிகள் .இரவு 7 மணி - கடைசி காட்சி 11 மணிக்கு துவங்கி விடியற்காலை வரை படம் ஓடும் .எங்கள் கிராமத்தில் இருந்த கொட்டகை பெயர் சரவணா - தரை டிக்கெட் - 15 காசுகள் . சேர் -40 காசுகள்
ஸ்பெஷல் இருக்கை 75 காசுகள் . மறக்க முடியாத நாட்கள்

RAGHAVENDRA
6th October 2014, 08:34 PM
http://4.bp.blogspot.com/-nqIA9uyfKIc/Uc5TZ2RHhzI/AAAAAAAAI3w/HatMclG_1Q8/s640/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%A F%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.png

http://2.bp.blogspot.com/-z27XJ-4xoTw/Uc5TkxxIajI/AAAAAAAAI34/yQrtNA7fQaE/s640/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF.png

இவ்விளம்பர நிழற்படங்களில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள பவானி என்ற திரைப்படம் வெளிவந்ததா என்பது நினைவில்லை..

நன்றி- http://venkatnagaraj.blogspot.com/2013/07/blog-post_1.html

RAGHAVENDRA
6th October 2014, 08:35 PM
மிக்க நன்றி வினோத் சார்... தங்களுடைய வருகைக்கு...

ஆவணத்திலகம் பம்மலாரைப் போன்று தாங்களும் அள்ளி வழங்கும் ஆவணங்கள் தமிழ்த்திரையுலக வரலாற்றையே எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தவை. தங்களுடைய அரிதான ஆவணங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

RAGHAVENDRA
6th October 2014, 08:41 PM
ஆமாம் வினோத் சார்..

தரை டிக்கெட், பெஞ்சு, சேர் மற்றும் சோஃபா என்று நான்கு விதமாக இருக்கைகள் பிரிக்கப் பட்டிருக்கும். அதிக பட்சம் 200 சதுர அடிக்கு மிகாத அளவில் மத்தியில் ஒரு கட்டிடம் இருக்கும். மேல் தளத்தில் ப்ரொஜக்டரும் கீழ்த்தளத்தில் அலுவலகமும் இருக்கும். அவ்வளவு தான். இதை விட்டால் கழிப்பறைகள் மட்டும் தான் கட்டிடம். மற்றபடி பொதுவாக மூங்கிலில் தான் கொட்டகை வேயப்பட்டிருக்கும். பார்வையாளர் திசையிலிருந்து பார்த்தால் இடது புறம் தாய்மார்களுக்கும் வலது புறம் பொதுவாகவும் மக்கள் தரை டிக்கடெ்டிலும் பெஞ்சு வகுப்பிலும் அமர வைக்கப்படுவார்கள்.

ஊர்ப்பெரிய மனிதர்கள், நாட்டாமை போன்ற சமுதாயத்தின் உயர்மட்ட மக்களுக்கு சோஃபா இருக்கை. சில சமயம் அவர்கள் வந்தபின் தான் படமே போடுவார்கள்.

படம் ரீல் ரீலாக இருக்கும் ஒரு பெட்டியில் அதிக பட்சம் மூன்று ரீல்கள் அடங்கும். ஒவ்வொரு பெட்டியும் ப்ரிண்ட் மாற்றி மாற்றிப் போடும் போதும் படம் நிறுத்தப்பட்டு விளக்குகள் எரியும். அவ்வேளையில் சிற்றுண்டி, தேநீர் என வியாபாரம் அமோகமாக இருக்கும்.

... நினைவுகள் தொடரும்...தொடரட்டும்....

RAGHAVENDRA
6th October 2014, 08:42 PM
கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

http://www.kalachuvadu.com/issue-126/pics/Kanavane-kankanta-teyvam.jpg

நன்றி காலச்சுவடு இணையதளம் http://www.kalachuvadu.com/issue-126/page40.asp

RAGHAVENDRA
6th October 2014, 08:47 PM
தமிழ்த்திரையுலகம் கால காலமாக நன்றிக்கடன் பட்டிருக்கும் ஆவணம்..

http://4.bp.blogspot.com/_OvWJwVrMeeo/TOnYKPugF3I/AAAAAAAAAJQ/S2jLcSVRG8U/s400/TamilFilmHistory_2004.jpg

சென்ற தலைமுறையானாலும், இன்றைய தலைமுறையானாலும் நாளைய தலைமுறையானாலும் கடந்த காலத் தமிழ்த்திரையுலகைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் மேற்காணும் புத்தகத்தைத் தொகுத்தளித்த வித்தகர்

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்

http://3.bp.blogspot.com/_OvWJwVrMeeo/TOnVUWveDXI/AAAAAAAAAJI/yT7LuM9qcPI/s400/filem-news-anandan.gif

rajeshkrv
6th October 2014, 09:07 PM
Raghav ji arumai arumaiyana thiri...

Richardsof
6th October 2014, 09:17 PM
1956- CART ADVT

http://i57.tinypic.com/2zi4f34.jpg

RAGHAVENDRA
6th October 2014, 09:31 PM
Thank you Rajesh for the support and encouragement.

RAGHAVENDRA
6th October 2014, 09:33 PM
Vinod Sir Super... continue...

கடந்த ஆண்டு பாசமலர் நவீனமயமாக்கலில் மறுவெளியீடு செய்யப்பட்டபோது கற்பனையில் அடியேனால் வடிவமைக்கப்பட்ட விளம்பர நிழற்படம்

https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/l/t1.0-9/1004825_207229276102777_345064141_n.jpg?oh=105b3bb ab6c9a843c9860e2e8875ed3f&oe=54C71D2D

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-ash2/v/t1.0-9/1014179_207229186102786_1813308886_n.jpg?oh=75f953 f24f7dca90959fc362b4094dc8&oe=54B549D4

Russellmai
6th October 2014, 10:13 PM
டியர் இராகவேந்தர் சார்,
தங்களால் இன்று துவங்கப்பட்டுள்ள கீற்றுக்
கொட்டகைத் திரிக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.

RAGHAVENDRA
6th October 2014, 10:52 PM
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபு சார். தாங்களும் பங்கு கொண்டு நினைவலைகளைப் பாய விடுங்கள்...

RAGHAVENDRA
6th October 2014, 10:54 PM
டூரிங் டாக்கீஸ் எனப்படும் கீற்றுக் கொட்டகை திரையரங்குகளைப் பற்றிய ஒரு கவிதை.. வேறோர் இணையதளத்திலிருந்து..



டூரிங் டாக்கீஸ்

http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/RvZX-jHmxBI/AAAAAAAAAGU/z6GXD4Gqed8/s400/dooring+talkies.JPG

நாலு தெருவுக்கு
நாற்பது வீடுகள்
நடுவே எழும்பியது
நமது கலைக்கூடம்.

M.G.R., சிவாஜி
இவர்கள்போல் இன்னும் பலர்
உயிர் பெற்று இன்றைக்கும்
உலா வரும் நிழற்கூடம்.

புத்தம் புதுக் காப்பி
மெத்தப் பழைய படம்
நித்தம் வருகை தரும்
மொத்த ஊரு சனம்.

மின்னும் விளக் கொளியில்
மங்கல் மணல் வெளியில்
நரை குவியல் தலைகளோடு
தரை முழுதும் மக்கள்வெள்ளம்.

கயவாடும் வில்லனை
நயமாக வீழ்த்தி
நாயகியைக் கவரும்
நாயகனைக் காணுகையில்,

காதுகள் அடைபடக்
காற்றினில் விசில் பறக்கும்
காகிதங்கள் தூள் சிதறும்
காலமெல்லாம் அது நிலைக்கும் !


நன்றி (http://vazhakkampol.blogspot.in/2007/09/blog-post_22.html)

RAGHAVENDRA
6th October 2014, 11:05 PM
நாடோடி இலக்கியன் பக்கம் என்ற இணைய தளத்திலிருந்து..

இக்கட்டுரையின் ஆசிரியர் டூரிங் டாக்கீஸ் பற்றிய தன் அனுபவங்களை அற்புதமாக எழுதியுள்ளார்..

அக்கட்டுரைக்கான இணைப்பு

http://naadody.blogspot.in/2009/07/blog-post_03.html

RAGHAVENDRA
7th October 2014, 06:26 AM
பாலு மகேந்திராவின் மலரும் நினைவுகள்

வெப்துனியா இணைய தளத்திலிருந்து...




http://tamil.webdunia.com/ta/articles/1312/24/images/img1131224044_3_1.jpg

இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!



Reproduced from: Webdunia page at (http://tamil.webdunia.com/article/memorable-cinemas-and-events/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%A E%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF% E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF %8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%A F%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-113122400044_3.html)

RAGHAVENDRA
7th October 2014, 07:01 AM
http://tamil.webdunia.com/ta/articles/1312/24/images/img1131224044_1_1.jpg

முள்ளும் மலரும் படக் குழுவினர்

RAGHAVENDRA
7th October 2014, 07:03 AM
http://awardakodukkaranga.files.wordpress.com/2009/03/7662.jpg?w=700&h=

பழைய ரத்தபாசம் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் டி.கே.எஸ்.சண்முகம், டி.கே.எஸ்.பகவதி மற்றும் ஸ்ரீதர்

RAGHAVENDRA
7th October 2014, 07:10 AM
எஸ்.என்.லட்சுமி - தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி

விகடன் நியூஸ் இணையதளத்திலிருந்து...



பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...

http://www.vikatan.com/av/2011/10/zwyzju/images/p125b.JPG

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...
''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''
''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''
''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''
(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...) ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன்.

எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல

நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

http://www.vikatan.com/av/2011/10/zwyzju/images/p125.JPG

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...
''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''
''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''
''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''
(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...) ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல

நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.

http://www.vikatan.com/av/2011/10/zwyzju/images/p125a.JPG

எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!'' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.
- அ.முகமது சுலைமான்


Reproduced from: http://news.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=&aid=6694&type=all

RAGHAVENDRA
7th October 2014, 07:13 AM
http://1.bp.blogspot.com/-dbh0riMFJsA/UayFDMHzMlI/AAAAAAAAE8c/Z2quJG89m0U/s1600/Samikannu_Vincent.jpg



தமிழகமே இன்று அடிமையாகிப் போயிருக்கும் சினிமாவை முதன்முதலில் திரையிட்டுக் காட்டிய காட்சியாளர் யார் தெரியுமா? திரு. சாமிக்கண்ணு வின்செண்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) அவர்கள் தான்.


கோவை கோட்டைமேட்டில் பிறந்து தனது 21 ஆம் வயதில் திருச்சி ரயிஸில் ரூ25க்கு ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் படாதபாடுபட்டு ரூ2,250 சேர்த்து ஒரு ப்யாஸ்கோப்பை Du Pont என்பவரிடமிருந்து 1905 பிப்ரவரி மாதம் வாங்கியிருக்கிறார். தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு தனது பயாஸ்கோப்பைத் தூக்கிக்கொண்டு லாகூர், மியான்மர் வரை சென்று கொட்டைகை அமைத்துப் படம் காட்டியிருக்கிறார். ஆசியா முழுதும் பயணித்தவர் தென்னிந்தியாவின் (தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) முதல் திரையரங்கைத் தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் 1914 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். அந்தத் திரையரங்கின் பெயர் - Variety Hall Talkies.


Reproduced from: http://babyanandan.blogspot.in/2013_06_01_archive.html

RAGHAVENDRA
7th October 2014, 07:16 AM
மேற்காணும் மேற்கோள்கள் அந்நாளைய திரையுலகின் நினைவுகளைத் தட்டி எழுப்பும் கூறுகள்... திரையுலகில் தொடர்புடைய பங்களிப்பு செய்த கலைஞர்களின் நினைவுகள்...

திரையுலக பங்களிப்பு என்பது கலைஞர்களையும் தாண்டி ரசிகர்கள் பொதுமக்கள் என ஆதரவுக்கரம் நீட்டியோரையும் சார்ந்துள்ளது. அவ்வகையில் நம்முடைய பங்களிப்பும் உள்ளது. நம்முடைய அபிமானக்கலைஞர்களுக்கு நம்முடைய பங்களிப்பைத் தாண்டி, பொதுவான அளவிலும் நாம் பங்களிப்பு செய்திருப்போம்.. அது எவ்வகையாயினும் இருக்கலாம்... டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்புத் தான்.

இவ்வகையான பொதுவான பங்களிப்பினை இங்கே பகிர்ந்து கொள்ளவே தங்களையெல்லாம் நான் வேண்டுகிறேன்.

Richardsof
7th October 2014, 08:18 AM
STARS....CITY TO VILLAGE.....

http://i61.tinypic.com/amp55v.jpg

Richardsof
7th October 2014, 08:38 AM
http://i60.tinypic.com/2e5kqwh.jpg

Richardsof
7th October 2014, 08:40 AM
http://i57.tinypic.com/jfcmt5.jpg

Richardsof
7th October 2014, 08:41 AM
http://i60.tinypic.com/rlyj2b.jpg

Russellbpw
7th October 2014, 11:14 AM
ராகவேந்தர் சார்

இந்த திரி நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை. காரணம், எதிர்ப்பு நேர்முகமாக அல்லது மறைமுகமாக இருக்கும் எந்த விஷயமும் மிக சிறந்த வெற்றியடையும் என்பது வரலாறு.

ஒரு சிலரை பொருத்தவரை திரிக்கு வாழ்த்து சொல்வது ஒருபுறம் இருந்தாலும், அந்த திரியில் நடிகர் திலகம் பற்றிய தகவல் வந்துவிடபோகிரதே என்ற கவலை ஒருபுறம், இன்னும் அவர் புகழ் பாட இத்துனை பேரா என்கிற வயிதெரிச்சல் ஒருபுறமும் கொண்டு இவர்கள் படும் பாடு ...படிக்கவே இவ்வளவு நன்றாக உள்ளது.

எந்த விஷயமானாலும் அதுவும் நமது திரை மற்றும் நாடக கலையை பொருத்த்தவரை முழுமுதற் கடவுள் கணேச மூர்த்தியை வேண்டிவிட்டு தான் மற்ற கடவுள்களை வேண்டுவது உசிதம்.

ஆடல், பாடல், வசனம், இலக்கியம், இலக்கணம், ஸ்டன்ட் இப்படி எந்த துறையாக இருந்தாலும் அதில் நடிகர் திலகம் இல்லாமல் இயங்காது. திருவிளையாடல் பாடலை போல நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ..அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா...என்ற பாடல் நடிகர் திலகத்திற்கு அமைந்தது சும்மா இல்லை.

என்ன எதிலும் நடிகர் திலகத்தை பற்றி பதிவுகள் பார்க்கும்போது திரு வென்க்கிராம் போன்றவர்களின் மனபுழக்கம் வெளிப்படுவது இயற்கையே.
நீலமலை திருடன் பட பாடலை போல...குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்...நல்லவர்க்கு தொல்லை தந்தே மடக்கிடும்...நீ எள்ளளவும் பயம் கொண்டு கலங்காதே டா ..அவற்றை யமனுலகு அனுப்பிவைக்க தயங்காதேடா ...சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ....! இந்த பாடல் வரிகளை போல இவர்களை எல்லாம் கடந்து தான் செல்லவேண்டியிருக்கிறது.

காழ்புணர்ச்சி கொண்டவர்கள்...கதரதான் செய்வார்கள்...வேறென்ன தெரியும் இவர்களுக்கு ...கதரட்டும்...கதரட்டும்...தொண்டை வலிக்கும் வரை கதரட்டும்...!

திரு வாசுதேவன் நெய்வேலி அவர்கள் திரியில் பதிவு செய்வதை மறைமுகமாக சாடி அவரை திரிக்கி வரவிடாமல் செய்த புண்ணியம் இவரையும் சாரும் நான் திரியில் நடந்தவை படித்து அறிந்து புரிந்த முறையில் ! மதுர கானத்தின் மதோன்னத வெற்றியை ஜீரணிக்க முடியாமல் வாசுதேவனை இவர் மறைமுகமாக தாக்குவதாக நினைத்தது மடமையிலும் மடமை. அதை இந்த புது திரியில் இப்படி எழுதியுள்ளார் என்றார் இவரின் complex என்னவென்று சொல்லுவது !

நாம் என்ன தகுதியில்லாத ஒருவரையா தலையில் வைத்து கொண்டாடுகிறோம் ? தமிழனின் பெருமையை உலகிற்கு முதல் முதலில் அறிமுகபடுத்தி, தலை நிமிர வைத்த, ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பா, அமெரிக்க போன்ற கண்டங்களின் தலை சிறந்த தலைவர்களும், திரை விற்பன்னரும் பாராட்டி விருதும், கௌரவமும் கொடுக்கும்படி திறமை காட்டிய திரை உலகின் எல்லா வகையிலும் உலக அரங்கில் விருதுபெற்ற ஒரே உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை அவரது பெருமைகளை இங்கு பதிவிட்டு வரும் ஒரு சிலரில் மிக முக்கியமான வைரமாக திகழும் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களை மறைமுகமாக வயிதெரிச்சலுடன் குறை கூறுவது மிகவும் தவறான ஒரு செயல் என்று இங்கு பிரகடனபடுத்துவதை என் கடமையாக நினைக்கிறன்.

இதில் அனைவரும் தங்கள் பங்களிப்பை கொடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

Even if it is cut and paste it is ok & absolutely fine !!!!!!

Contribution is most important than individual preferences !!!!!

முடிந்தால் இவர்களும் தொண்டு செய்யட்டும்..அதை விடுத்து எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லும் குணம் மிகவும் கீழ்த்தரமான ஒன்றாகும் என்று தெரிவித்து ...இந்த திரி மென் மேலும் வளர வாழ்த்துகிறேன் !

Rks

JamesFague
7th October 2014, 12:43 PM
Avan (GANESAN) INDRI ORU ANAVUM ASAIYADHU. We have to proceed further without caring those comments. ENGUM EDHILUM NEEKAMARA NIRANDHU NIRKKUM ORE

THALIVAN NADIGAR THILAGAM THAN.


Mr Raghavendra Sir,

As rightyly pointed out by Mr RKS we cannot move an inch without NT in all aspects. Wherever possible Ganesan will be there in this thread.

Congratulations for starting this thread and propogate the glory of ACTING GOD.

Regards

gkrishna
7th October 2014, 02:08 PM
குருஜி ராகவேந்தர் அவர்களுக்கு மதிய வணக்கம்

இன்று காலையில் மதுரகானம் திரியை படிக்கும் போது உங்கள் புதிய கீற்று கொட்டகை பற்றி படித்தேன். ஆனால் அதற்குள் கிளிக் செய்து உள்ளே சென்று பார்கவில்லை .இப்போது தான் பொறுமையாக எல்லா பதிவுகளையும் படித்தேன். அட்டகாசமான ஆரம்பம் சார் வாழ்த்துகள் .

Richardsof
7th October 2014, 02:19 PM
TOURING TALKIE- FROM NET

http://i60.tinypic.com/27x0ac4.jpg

Richardsof
7th October 2014, 02:20 PM
http://i58.tinypic.com/2lwrb7n.jpg

Richardsof
7th October 2014, 02:21 PM
http://i57.tinypic.com/35isw7d.jpg

Richardsof
7th October 2014, 02:22 PM
http://i62.tinypic.com/2ebhd7b.jpg

Richardsof
7th October 2014, 02:23 PM
http://i60.tinypic.com/178h3d.jpg

sss
7th October 2014, 02:31 PM
திரு வீயார் அவர்களே உங்கள் இழை அருமையானது ... வாழ்த்துக்கள்...

பாவமன்னிப்பு படம் திரையிட பட்ட தூத்துக்குடி லக்ஷ்மி தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி தமிழ்நாடு தீயணைப்பு துறை கொடுத்துள்ள தகல்கள் இதோ :

LAKSHMI TOURING TALKIES, TUTICORIN
(29 JULY 1979)

An example of a Cinema Hall fire that took place in Tamil Nadu was a fire in Lakshmi Touring Talkies at Lourdhammalpuram, Tuticorin. On 29.07.1979 about 4.30 p.m fire broke out in this touring talkies on the outskirts of Tuticorin. The construction was of inflammable material (thatched leaves) and hence the fire spread very quickly. Several persons escaped, but several other persons were unable to escape and were burnt to death within the theatre itself. Some others who escaped had sustained injuries and some of them succumbed to injuries. Over a hundred persons reportedly died in the disaster. One of the main point of controversy was how the gates other than the entrance which were admittedly closed, were fastened. Licensee contented that thattis were fastened by twine using a “sulukku” (kÇ]a). Others contended that the thattis were fixed to supporting poles by iron wires so tightly that they could not be unfastened. This prevented the spectators from opening the closed thattis when fire broke out and escaping through apertures which were intended to be the exits in such emergencies. There were only one entrance for women and children. Most of the bodies were heaped one over the other at this point. The picture ran properly for the first half an hour. Then there was an interval and after about 5 mts the picture resumed, when there was a small fire. This spread rapidly. The fire was from behind the screen. It rose up and shot to the roof. Short circuiting behind the screen was the cause of the fire. Even though there were 12 places, where power could have been taken from the distribution board, it was taken only from 7 and dummy fuses were inserted in the other 5, while regular fuse were inserted in 7. From the evidence of the Electrical Inspector, short circuit in the 230-v line leading to the speaker must have caused the fire. The wire to the speaker came from the roof and without any support. The wire freely moved about and so must have come together. The wires were not changed after they were fitted on October ’77. The insulation wore out. The last inspection was done by Electrical Inspector on 23.08.78. Some of the fuse wires had not blown off because they were thicker than the permitted size. None of the fuses recovered from the cabin room had blown off. 9 fuses had not blown from the power room and 7 from the distribution board. As per the practice in the Electrical Department, the officers do not verify whether the defects said to have been rectified were actually rectified or not. In this case many defects were pointed out during inspection on 23.08.78. Sufficient buckets of water as prescribed under the regulation were not even kept.

Number persons lost their lives is 73 and 88 were injured. Property lost is Rs. 20,000/- and saved is Rs. 60,000/-

http://www.tnfrs.tn.nic.in/major-incid.htm

Richardsof
7th October 2014, 03:05 PM
from net
http://i61.tinypic.com/2isgys4.jpg
நான் சென்னையில் இருந்து காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளுக்கு மட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறைக்கும்கூட எங்கள் ஊருக்குப் போய்விடுவேன். எங்கள் ஜெகநாதபுரம் கிராமத்துக்கு காரனோடையில் ஒரு டூரிங் டாக்கிஸும் ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் ஒரு டூரிங் டாக்கிஸும் இருந்தன. முறையே நாகு டாக்கீஸ். வெங்கடேஸ்வரா டாக்கீஸ் இது இரண்டுமே சுமார் நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில். "ஒளிவிளக்கு', "எங்க வீட்டுப் பிள்ளை' போன்ற படங்கள் என்றால் பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி என்று போய் வருபவர்கள் உண்டு. இப்போது பர்மா பஜாரில் "ஒளிவிளக்கு' சி.டி.யை பிளாட் பாரத்தில் பரப்பி விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏனோ மனசு கனக்கிறது.

எங்கள் வீடுகளில் படம் பார்ப்பது மிகுந்த ஆட்சேபகரமான விஷயமாக கருதப்பட்டு வந்ததால் (ரேடியோவில் சினிமா பாடல்கள் கேட்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது) எல்லோரும் தூங்கிய பின் செகண்ட் ஷோ பார்ப்பதுதான் ஒரே வழி.

அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக பம்பு ஷெட்டு காவலுக்குப் போகிறோம் என்று மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு சொல்லுவோம். ஆரம்பத்தில் வீட்டிலும் அதை நம்பினார்கள். பம்பு ஷெட் காவல் என்பது இரவு பத்து மணிக்கு மேல் த்ரி பேஸ் கரண்டு வந்த பிறகு மோட்டரை ஆன் செய்கிற வேலை.

இரவில்தான் பம்பு ஷெட்டுக்கான கரண்டு வரும். பத்து மணிக்கு மோட்டரை ஆன் செய்துவிட்டு படத்துக்கு ஓடுவோம். பத்தே காலுக்குப் படம். ஒரு சைக்கிள் இருக்கும். ஆனால் பெரும்பாலும் அதில் மூன்று பேருக்கு மேற்பட்டவர்தான் பயணிக்க வேண்டியிருக்கும். சீட்டில் உட்கார்ந்து இருப்பவன் தவிர, பின் பக்கம் கேரியரில் அமர்ந்திருப்பவனும் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து ஒப்புக்கு சப்பாணியாக பெடல் மிதிப்பான். சைக்கிள் என்பது சும்மா பெயருக்குத்தான். அதில் எப்போதும் பெடல் கட்டை இருக்காது. ட்யூபில் காற்று எந்த நேரத்திலும் கம்மியாகத்தான் இருக்கும். பிரேக் இல்லாமல் இருப்பதை நாங்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை.

டபுள்ஸ் போனாலே சோழவரம் போலீஸ்காரர்களுக்குக் கொண்டாட்டம். பிடித்துவைத்து கையில் இருப்பதைக் கறந்துவிடுவார்கள். ட்ரிபில்ஸ், ஃபோர்பில்ஸ் எல்லாம் போனால்? "கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என்று விளம்பரப்படத்தில் வருவதுபோல குதூகலமாகிவிடுவார்கள். போதாததற்கு லைட் இல்லையென்றால் பிடிக்கலாம் என்றுவேறு அவர்களின் குதூகலத்தை எண்ணை விட்டு வளர்த்தார்கள். ஒவ்வொரு நாள் படம் பார்த்துவிட்டு வரும்போதும் எங்களுக்கு எமகண்டம்தான். ஜி.என்.டி. ரோடை கடந்து கிராமத்துக்குச் செல்லும் சாலைக்குத் திரும்புகிறவரை உயிரே போகும். சில நேரங்களில் அவர்களின் விசிலை கவனிக்காததுபோல வேகமாக ஓட்டிச் செல்ல முயற்சி செய்வோம். மூன்று பேரை நான்கு பேரை வைத்துக் கொண்டு தப்பிப்பது சாமானிய வேலையில்லை. மாட்டிக் கொண்டால், செவுள் பிய்ந்து கொள்கிற அடி கிடைக்கும். "சி.ஐ.டி. சங்க'ரோ, "பாகப்பிரிவினை'யோ பார்த்துவிட்டு வந்த திருப்தியில் அந்த அடியெல்லாம் எங்களுக்கு உரைத்ததே இல்லை.

சந்தேக கேஸ் சிஸ்டம் இருந்ததால் போலீஸ்காரர்களுக்கு செகண்ட் ஷோ பார்க்கிற மக்களைச் சந்தேகப்படுவது இயல்பாக இருந்தது.

மாதத்திற்கொருமுறை சந்தேக கேஸில் யாரையாவது பிடித்ததாகக் கணக்கு காட்ட வேண்டும் என்பது போலீஸ்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். என் நண்பர்கள் சிலர் லாக்கப்பில் அடைபட்டு மறுநாள் கோர்ட்டில் பைன் கட்டவிட்டெல்லாம் திரும்பி வந்தார்கள்.

இன்னொரு தொல்லையும் மின்வாரிய ஊழியர்களின் மூலம் ஏற்பட்டது. அப்போது விவசாயத்துக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் இருந்ததால், பத்து மணிக்கு கரண்ட் கொடுப்பார்கள். பெரும்பாலோர் மோட்டரைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போய் படுப்பார்கள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் கரண்ட் போய்விட்டு திரும்ப வரும். மீண்டும் மோட்டர் போட்டால்தான் ஓடும். நிறைய பேர் தூங்கிவிட்டதால் மோட்டர் போடாமல் விட்டுவிடுவார்கள். மின்வாரியத்துக்கு கரண்ட் மிச்சம்.

ஆனால் நாங்களோ பம்பு ஷெட் காவலுக்குப் போவதாகக் கிளம்பி வந்தவர்கள். ஏன் கரண்ட் வந்ததும் மோட்டர் போடவில்லை என்று கேட்பார்கள். பம்பு ஷெட்டுக்குப் போவதற்கு சைக்கிள் எதற்கு? போன்ற சந்தேகங்கள் வந்து, நாங்கள் படம் பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். போலீஸிலும் மாட்டிக் கொண்டு குடும்ப மானத்தை வாங்கிவிட்டதால் நாங்கள் கெüரவமாக படம் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் நிறுத்திவிட்டோம்.

சொல்லி வைத்தது மாதிரி நாங்களும் கொஞ்சம் பெரிய மனிதர்களாக ஆனோம். எனக்கும் என் மைத்துனருக்கும் ஒரே நாளில் திருமணம். இருவருக்கும் 21 வயது ஆரம்பித்துவிட்ட ஒரே சட்ட ரீதியான தகுதியின் காரணமாக அந்தத் திருமணம் நடந்தது. எப்போது வேண்டுமானாலும் படம் பார்க்கும் தகுதி எங்களுக்கு வந்துவிட்டதால் செகண்ட் ஷோவை முற்றிலுமாக விட்டுவிட்டோம்.

"டெண்ட் கொட்டாயில்' படம் பார்ப்பது சமூகத்தின் பார்வையில் ஒரு மாத்து கம்மியான விஷயமாக இருப்பதும் எங்களைப் படம் பார்ப்பதில் இருந்து விலக்கிவிட்டது. பெரும்பாலும் அதில் படம் பார்ப்பவர்கள் கடும் உழைப்பாளிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர்...

டூரிங் டாக்கீசைப் பற்றி இப்போது நினைவுபடுத்த முடிந்தவை..

டெண்ட் கொட்டாயில் "சேர் } 50' என்றும் "தரை }30' என்றும் தாற்காலிகமாக சுண்ணாம்பில் எழுதியது போன்றதொரு போர்டு நிரந்தரமாக பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தது. விலைவாசி ஏற்றம் காரணமாக "சேர் }50', "சேர் - 60' என்று ஆன போதுகூட சேர் என்பதை மாற்றாமல் எண்ணை மட்டும்தான் மாற்றினார்கள்.

எங்களூருக்குச் சற்று தள்ளி, பூச்சி அத்திப்பேடு, தாமரைப்பாக்கம், மேலப்பேடு, கரலப்பேடு போன்ற இடங்களில் டெண்டு கொட்டகைகள் இருந்தன. டெண்ட் கொட்டகை என்பது நீளவாக்கில் ஒரு கோழிப்பண்ணை கொட்டகை போல இருக்கும். கோழிகள் வெளிவராமல் இருக்க அடைக்கப்படும் கம்பி வேலி மட்டும் அதில் இருக்காது. பெரிய துணி கட்டி திரையில் படம் காட்டுவார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் புரஜெக்டருக்கு நேராக தலையைக் காட்டினால் திரையில் சரோஜா தேவி மறைந்து பெரிய நிழல் தலை மட்டும் திரையில் தெரியும். அந்த ஒரு வினாடி சரோஜா இழப்புக்காக அந்த மறைத்தவனை அடிப்பதற்கு ஆள்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பரிப்பார்கள்.

மணலில் உட்கார்ந்து படம் பார்ப்பதுதான் மிகவும் பிடிக்கும். காலை நீட்டி உட்காரலாம். காலியாக இருந்தால் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம். முன்னால் இருப்பவர் தலை மறைத்தால், மண்ணைக் கோபுரமாகக் குவித்து உயரமாக உட்கார்ந்து கொள்ளலாம். சிலர் பெண்களுக்கான தடுப்போரமாக உட்கார்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுவார்கள். அதன்மூலம் சின்ன சந்தோஷங்களோ, சின்ன சண்டைகளோ நேரத்துக்கு ஏற்ப, ஏற்படும்.

ஃபிலீமை மாற்றி ஓட்டினால், கரண்ட் போனால், பிலிம் கட்டாகி வெண்திரையாக காட்டப்பட்டால் சவுண்டு விடலாம். அந்தக் கலகக் குரலுக்குப் பணிந்து பாதி காசை திருப்பித் தருமாறு உரிமைப் போரில் குதிக்கலாம். சில நேரங்களில் முதலாளி வந்து மறுநாள் இலவசமாக படம் பார்ப்பதற்கு அனுமதிக்கலாம். அப்போதெல்லாம் எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது போல இருந்தது. கிணற்றில் பொழுதெல்லாம் குளித்து, பக்கத்துத் தோட்டங்களில் மாங்காயோ, நாவல் பழமோ திருடித் தின்றுவிட்டு, பள்ளிக்கும் போய் வந்து, இரவெல்லாம் சினிமா பார்த்து, கோலியோ.. பம்பரமோ அந்தந்தப் பருவ விளையாட்டில் ஈடுபட்டு... அதன் பிறகும் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டுவதற்கு நேரம் இருந்தது. இப்போது காலையில் கண் விழித்த உடனேயே பசங்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட டென்ஷனை பார்க்கிறேன். படிக்கிறார்கள். பள்ளிக்குப் போகிறார்கள். டி.வி. பார்க்கிறார்கள். நாள் மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. அவர்களின் நேரங்களைக் களவாடியது யாரென்று தெரியவல்லை.எதற்கு இந்தக் கட்டுரைக்குத் தேவைப்படாத வீண் கவலை? என் விஷயத்துக்கு வருகிறேன்..

பின்னாள்களில் பகலிலேயே படம் பார்த்துவிட்டு வருவதற்கும் ரெட்ஸில்ஸ் நடராஜா தியேட்டரிலும் அம்பிகா தியேட்டரிலும் பொன்னேரி வெற்றிவேல்} கெளரி தியேட்டரிலும் நாற்காலியில் அமர்ந்தே படம் பார்க்கிற வாய்ப்புகள் அமைந்தன. டூரிங் டாக்கிஸில் தடுப்பு அரண்கள் இல்லாமல் இரண்டு பக்கமும் காற்றோட்டம் இருக்கும். தியேட்டரில் பகல் ஷோக்களில் எல்லா கதவும் அடைத்து புழுக்கமும் ஃபிலிம் சுருள் ஓடும் இடத்தில் இருந்து வரும் புகையின் காரணமாக ஏற்படும் பிராணவாயு பற்றாக்குறையும் எனக்குத் தொடர்ச்சியான தலைவலிக்குக் காரணமாக அமைந்து படம் பார்க்கிற ஆசையே போய்விட்டது.

இப்போதும் இரவில்தான் விவசாயத்துக்கான கரண்ட். ஆனால் கரண்ட் வந்தால் மோட்டார்கள் அதுவாகவே ஓடுகிற வசதிகள் வந்துவிட்டன. சைக்கிளுக்குப் பதில் பெரும்பான்மையானவர் வீட்டில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. எங்கும் டெண்ட் கொட்டகைகள்தான் இல்லை. டெண்ட் கொட்டகைகளின் இடத்தை சன் டிவி பிடித்துவிட்டது. எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த டாக்கீஸஸுகளின் வேலையை இப்போது விஜய்க்காகவும் பரத்துக்காகவும் சன் டிவி செய்து கொண்டிருக்கிறது.

சினிமா நிருபராக பணியாற்றிய நேரங்களில் 50} 60 பேர் படம் பார்க்கக் கூடிய சிறிய ஃப்ரிவியூ தியேட்டர் முதல் சத்தியம் ஸ்ரீ போன்ற திரையரங்குகள் வரை ஏஸியில் உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கிற போதும் எப்போதாவது ஒரு தரம் சந்தேக கேஸஸுக்குச் சிக்காமல் தப்பித்து ஓடி படம் பார்த்த நினைவு மனதுக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

gkrishna
7th October 2014, 03:06 PM
திரு ராகவேந்தர் அவர்களுக்கு
கீழ்க்கண்ட வேண்டுகோள் இங்கே பதிவிடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிவிடுகின்றேன்

இங்கே கீற்று கொட்டகை திரியில் நண்பர் திரு வென்கிராம் அவர்கள் இரண்டு கருத்துகள் சொல்லி இருக்கிறார்.

திரு வாசு அவர்கள் கடந்த 1ம் தேதி நடிகர் திலகத்தை பற்றி நிறைய பதிவுகள் மதுர கானம் பகுதியில் பகிர்ந்து கொண்டு சிவாஜியை சிலாகிக்கும் திரியாக மாறி விட்டது என்று சொல்லி இருக்கிறார் .மதுர கானம் திரியின் இரண்டாவது பாகம் ஆரம்பித்த பணியை செய்த காரணத்தாலும் நடிகர் திலகத்தின் ஒரு நீண்ட நாள் ரசிகர் என்ற முறையிலும்,சினிமாவை ஆழமாக நேசிப்பவன் என்ற உரிமையிலும் ஒரு கருத்தை மட்டும் திரு வென்கிராம் அவர்களுக்கு சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன் . மதுர கானம் திரியை எடுத்து கொண்டால் எல்லா கலைஞர்களின் பிறந்த நாள் மற்றும் சில சமயம் நினைவு நாளை கூட நினைவு கூர்ந்து உள்ளோம். (அந்த நாள்கள் தெரிந்த பட்சத்தில்) . சில சமயம் மறந்து இருக்கலாம். நடிகர் திலகம் அவர்கள் தமிழ் மற்றும் உலக சினிமாவின் ஒரு மிக சிறந்த ஆளுமை. அவரை கொண்டாடுவதில் அதுவும் வேறு எந்த திரியிலும் வெளி வராத சில நல்ல அபூர்வ புகைப்படங்கள் மற்றும் சில நிகழ்வுகளை திரு வாசு அவர்கள் வெளி கொணர்ந்து உள்ளார். அதை வெளியிடுவதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் திரு வாசு அவர்கள் இன்றைய ஸ்பெஷல் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 90 அபூர்வ பாடல்களை வெளி கொண்டு வந்து உள்ளார். அதில் நடிகர் திலகம் படத்தின் பாடல்கள் என்று எடுத்து கொண்டால் 5 கூட தேறாது. திரு வாசுவுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு பேசுவதாக தயவு செய்து நினைத்து விட வேண்டாம். மேலும் திரு வாசு அவர்கள் எல்லா நடிகர்களையும் (நடிகர்திலகத்தின் பரம சீடர் ஆக இருந்து பின்னாட்களில் போக் ரோடு நம்பி நான் இல்லை என்று சொன்ன திரு ஸ்ரீகாந்த் அவர்களை பற்றி கூட) நிறைய பாடல்களும் தகவல்களும் வெளியிட்டு உள்ளார். மேலும் முதன் முதலில் மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை பாடலை ஆரம்பித்து வைத்தவரும் அவர் தான். எஸ்வி அவர்கள் முன்னமே மக்கள் திலகத்தின் பாடல்களை வெளியிட்டு இருந்தாலும் நடிகர் திலகத்தின் சிறந்த தீவிர ரசிகர் மக்கள் திலகத்தின் பாடலை பதிவு இட்டு சிறப்பிப்பது என்பது திரு வாசு அவர்களின் பரந்த மனபான்மைக்கு சான்று. இதே போன்று நடிகர் திலகத்தின் இன்னொரு தீவிர ரசிகர் திரு கார்த்திக் அவர்கள் இதய வீணை திரை படத்தில் இடம் பெற்ற 'பொன் அந்தி மாலை பொழுது' பாடலை பதிவு இட்டு சிறப்பு செய்தார். ஆக மதுர கானம் நடிகர் திலகத்தின் புகழ் மட்டும் பாடும் திரி என்று கருதாமல் நடிகர் திலகத்தின் புகழையும் பாடும் திரி என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .

இரண்டாவதாக மதுர கானம் திரி பாடல்களுக்காக என்று ஆரம்பிக்க பட்டு இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டதாக கூறி உள்ளீர்கள். நிச்சயமாக அப்படி இல்லை. வெறும் பாடல்கள் மட்டும் நிரப்பி மதுர கானம் திரியை இன்னும் ஒரு youtube தளம் போன்று இல்லாமல் சினிமா பற்றிய ஒரு பன்முக திரியாக விளங்க வேண்டும் என்பதற்காக தான் கலை துறையில் உள்ளவர்களின் பேட்டிகள் ,அவர்களை பற்றிய துணுக்குகள் இடம் பெற்றன. அவற்றில் பல தகவல்கள் சிலருக்கு புதிதாக இருந்து உள்ளதாக பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். எல்லோருமே வலையில் பல்வேறு தளங்களுக்கு செல்பவர்கள் ஆக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது என்பதால் அந்த தகவல்கள் பரிமாற்ற பட்டன.மற்றபடி திரியின் நோக்கத்தை மாற்ற வேண்டும் என்றோ,மற்றவர்களின் பாடல்கள் வெளி வராமல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ கிஞசித்தும் கிடையாது .

இந்த தருணத்தில் திரு எஸ்வி அவர்களுக்கு மிக்க நன்றியை சொல்லியாக வேண்டும் . அவர் வெளியிட்ட பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் மிக அருமையானவை. ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தும் அளவிற்கு தகவல்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன .அவை எல்லாம் வெளி வருவதற்கு நமது திரிகள் நல்லதொரு ஊடகமாக விளங்க வேண்டும் என்பது தான் எல்லோரின் ஆசையாக இருக்க முடியும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது என்பது எனது எண்ணம்

திரு மது,திரு ராஜேஷ்,பேராசிரியர் ராஜ் ராஜ்,திரு சின்ன கண்ணன்,திரு.எஸ்எஸ்எஸ் போன்ற மூத்த பதிவாளர்கள் எத்தனையோ பாடல்களையும் அவர்களது மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். ஏன் நீங்களே கூட மன்மத லீலை ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடலை மிக சிறப்பாக ஆயுவு செய்து வேறு ஒரு பாணியில் வெளி கொண்டு வந்தீர்கள். அந்த பாடல் (ஏற்கனவே திரு கார்த்திக் அவர்களால் முதல் பாகத்தில் ஆயுவு செய்யப்பட்டு இருந்த போதும் ) உங்கள் எழுத்து திறமைக்கு ஒரு சான்று.அதே போல் சாருகேசி ராகத்தின் தொடர் பாடல்களை வெளியிட்டு வந்த போது ராகதேவன் இளையராஜாவின் சாருகேசி ராக பாடல்களை வெளியிட்டு மிக அழகாக பூர்த்தி செய்தவர் நீங்கள் தான் .சேவல் கூவி பொழுது விடிய போவது இல்லை . நான் சொல்லி உங்கள் திறமை வெளியில் தெரிய போவது இல்லை. ஏற்கனவே உங்கள் திறமை நமது திரியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். .

எழுதியதில் ஏதாவது பகுதி உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் .

இறுதியில் ஒரு வேண்டுகோள்
மதுரகானம் திரியில் தொடர்ந்து வருகை தந்து பாடல்களையும் மேலும் அது சம்பந்தமான ஆக்க பூர்வ விவாதங்களையும் ,மேல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளும்

என்றும் நட்புடன்

கிருஷ்ணா

vasudevan31355
7th October 2014, 05:29 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் கீற்றுக் கொட்டகை புதிய இழைக்கு என் மனப்பூர்வமான இதயபூர்வமான வாழ்த்துக்கள். பதிவுகள் அனைத்தும் அருமை.

vasudevan31355
7th October 2014, 07:50 PM
நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!

வெங்கிராம் அய்யா!

என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?

இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.

குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.

அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.

நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.

ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.

ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?

உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?

பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?

இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.

நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?

உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?

நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.

இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.

இப்போது 'மதுர கானங்கள்' திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

'மதுர கானங்கள்' திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.

தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!

எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!

அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.

கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?


மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.

இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?


நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.

மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
7th October 2014, 09:09 PM
திரு ராகவேந்தர் அவர்களுக்கு
கீழ்க்கண்ட வேண்டுகோள் இங்கே பதிவிடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிவிடுகின்றேன்


டியர் கிருஷ்ணா,
தங்களுடைய வருகைக்கும் மேலான பங்களிப்பிற்கும் என் உளமார்ந்த நன்றியும் வரவேற்பும் வணக்கங்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுமதியெல்லாம் கேட்பதெல்லாம் டூ மச் சார்.. இது நம் ஒவ்வொருவருக்குமான திரி.

அதுமட்டுமல்லாமல் விதிப்படியே பார்த்தாலும் கூட திரியைத் துவங்குவது நம்முடைய விருப்பம் என்றாலும் கூட அதில் பதிவுகளை அனுமதிப்பது, நீக்குவது, எடிட் செய்வது போன்ற அனைத்துமே அந்தத் திரிக்கென உள்ள மாடரேட்டரின் பொறுப்பாகும். இன்னும் சொல்லப் போனால் திரியைத் துவங்கியவர்களால் அதை முடக்க முடியாது.

தொடர்ந்து தங்களின் மேலான பங்களிப்பினைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th October 2014, 09:10 PM
வினோத் சார்
தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரியின் மவுசு கூடி வருகிறது. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th October 2014, 09:11 PM
வாசு சார்
தங்களுடைய வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி. தங்களுடைய மேலான பதிவுகளை இத்திரியிலும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.

RAGHAVENDRA
7th October 2014, 09:31 PM
கீற்றுக் கொட்டகை என்பது நவீன மயமான சினிமாவிற்கு முந்தைய பரிமாணம். கிட்டத்தட்ட 70களின் முற்பகுதி வரையில் தமிழ் சமுதாயத்தின், குறிப்பாக கிராமங்களின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியது. அவற்றின் பிம்பங்கள் அவற்றின் பிரதிபலிப்புகளெல்லாம் கருப்பு வெள்ளைகளாகவே பெரும்பாலும் அமைந்தன. அந்நாளைய நட்சத்திரங்களைத் தங்கள் வாழ்வுடன் மக்கள் இணைத்துப் பார்க்கும் பாலங்களாக விளங்கியவை கீற்றுக் கொட்டகைகள். சினிமாவை சராசரி மனிதனின் உறவாகவே அமைத்தவை கீற்றுக் கொட்டகைகள். மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பெருமை கீற்றுக்கொட்டகைகளுக்கே உரித்தான சிறப்பு. எவ்வளவு தான் நவீன மயமாக்கல் சினிமாவின் பல்வேறு துறைகளில் வந்தாலும் - அது ஒப்பனையாகட்டும், சண்டைக்காட்சிகளாகட்டும், ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும் அல்லது எந்தவிதத் துறையாக இருந்தாலும் அது எந்த வடிவில் தயாரிக்கப் பட்டாலும் மக்களின் உள்ளத்தில் புகுந்து உறவாடும் நெருக்கத்தை நவீன மயமாக்கப்பட்ட திரையரங்குகள் தருவதில்லை என்பது உண்மை. ஆயிரம் மல்டிப்ளெக்ஸ் வளாகங்கள், ஏராளமான நவீன திரையரங்குகள் வந்தாலும் மக்களால் ஒன்றிப் போக முடியவில்லை என்பது உண்மை.

அப்படிப்பட்ட உணர்வு பூர்வமாக மக்களின் மனதில் இடம் பிடித்த கீற்றுக் கொட்டகைத் திரையரங்குகளின் மூலம் மக்களின் ஆழ்மனதில் தங்களுக்கென்று நிரந்தரமான இடங்களைப் பிடித்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. இந்த இருவரின் ஆளுமையால் தான் இன்றும் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் நடிகர்கள் என்ற நிலைமையத் தாண்டி மக்களிடையே தலைவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டவர்கள். அதையும் தாண்டி இறைவனாகவே போற்றப்படுபவர்கள். மக்களால் தங்கள் குடும்பதில் ஒருவராகப் போற்றி வணங்கப் படுபவர்கள்.

தமிழிலுள்ள எந்த ஒரு ஊடகமும் இவர்கள் இருவரைத் தவிர்த்து தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் பேசும் நல்லுலகம் எங்குமே தழைக்கமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவிலுள்ள எந்தப் பகுதி ஊடகமாக இருந்தாலும் அவரவர் பகுதியைச் சார்ந்த திரை நட்சத்திரங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் போன்றவற்றை அனுசரித்து அந்த நாள் முழுவதுமே அவர்களுக்கென ஒதுக்குகின்றன.

இன்னும் சொல்லப் போனால் வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த குறிப்பிட்ட நாள் முழுதும் ஒரு லோகோவைப் போல அந்த நட்சத்திரத்தின் நிழற்படத்தை நாள் முழுதும் தங்கள் ஒளிபரப்பில் இணைத்து விடுகின்றன. வானொலிகளோ அன்று முழுதும் அல்லது குறைந்த பட்சம் குறிப்பிட்ட கால அளவிலாவது அந்த நட்சத்திரத்தைப் பற்றி நேரம் ஒதுக்கி தகவல்கள் ஒலிபரப்புகள் என தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றன.

இந்த அடிப்படையில் பார்த்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இல்லாமல் பழைய தமிழ்ப் படங்களைப் பற்றிய எந்த விவாதமும் நிறைவடையாது.

இது இயல்பாகவே அமைந்து விடும். இயல்பாகவே இடம் பெறும். இயல்பாகவே நடைபெறக்கூடிய உணர்வுடன் கலந்த விஷயமாகும்.

இந்த அடிப்படையில் ஒவ்வொரு பதிவாளரும் தங்களுடைய விருப்பம் அபிமானம் சார்ந்த வகையில் பதிவுகளை அந்த குறிப்பிட்ட நாட்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாத ஒன்றாகும்.

இதற்கு இத்திரியும் விதிவிலக்காகாது என்பதே என் தனிப்பட்ட அபிப்ராயம்.

vasudevan31355
7th October 2014, 10:05 PM
ரவிகிரண்சூர்யா சார் /கிருஷ்ணா சார்/வாசுதேவன் சார்/ராகவேந்திரன் சார்

தங்கள் புரிதலுக்கும், உண்மையின் பக்கம் தங்கள் கருத்துக்களைப் பதித்தற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

உள்ளங்கைகளால் சூரியனை மறைக்கலாம் என்ற நப்பாசை இனியும் பலிக்காது. 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது பழமொழி. தேன் கூட்டில் கைவைத்தால் இப்படித்தான்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

rajeshkrv
7th October 2014, 10:10 PM
அதுமட்டுமல்ல, சிவாஜி வெறியர்கள், எம்.ஜி.ஆர் வெறியர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்வார்கள்.. கமலுக்கு தினுசு தினுசாக திரிகள் இருக்கத்தான் செய்கின்றன நாளுக்கு ஒரு ப்ட்டத்துடன் நீட்டி முழக்கி திரியின் பெயர்கள் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.. இதையெல்லாம் நிறுத்தி விட முடியாது.

கீற்று கொட்டகையோ டூரிங் டாக்கீஸோ படம் பார்த்தது என்னவோ எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் படங்கள் தானே .. அந்த அனுபவங்களும் அந்த சூழலில் இந்த மாதிரி திரையரங்கங்களில் நடந்த விஷயங்களை பற்றி பேசவே இந்த திரி என்பது என் அபிப்ராயம்..

அவரவர் அவருக்கு பிடித்த நடிகரின் படங்களை கீற்று கொட்டகையிலோ டூரிங்டாக்கீஸிலோ பார்த்தை எழுதத்தான் செய்வார்கள் ..
கொட்டகையின் மூங்கில் கம்பியையும் அழுது வடியும் பல்பை பற்றியுமா எழுதுவார்கள் ...:)

vasudevan31355
8th October 2014, 07:01 AM
அருமையாக சொன்னீர்கள் ராஜேஷ்ஜி!

நான் கூட கீற்றுக் கொட்டகையின் வெளியே நின்று கொண்டே கவனித்தது உண்டு. அதாவது குற்றம் கண்டுபிடிக்க அல்ல. இரு திலகங்களின் படத்திற்கு கூட்டம் அதிகமாகி கொட்டகைக்கு வெளிப்புறம் நின்று பாதி திரை தெரிந்தும் தெரியாமலும் பார்த்த அனுபவங்களைச் சொல்கிறேன். அழுக்குப் படிந்த அந்த வெண் மஞ்சள் திரையில் தேய்ந்து போன படச் சுருள் காட்சிகளைக் காண்பதே தனி சுகம்.

அது போல தீபாவளி என்றாலும் சிவாஜி எம்ஜிஆர் படங்கள்தாம். அன்று மட்டும் 4 காட்சிகள் உண்டு. கீற்றுக் கொட்டகையின் நீள் பக்கவாட்டு வெளிச்சம் வரும் பகுதிகளை தார் சாக்குகள் தொங்க விட்டு திரையரங்கை இருட்டாக்க முயற்சி செய்திருப்பார்கள்.

படம் படுமங்கலாகத் தெரியும். ஆனால் விசில், கைத்தட்டல்கள் அள்ளும்.

இங்கு இருக்கும் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நடிகர் திலகம் படத்தை டூரிங் டாக்கீஸில் பார்த்த அனுபவத்தை எழுதி கிழுதி விடப் போகிறீர்கள்? அப்புறம் உங்க கதி அதோகதிதான். அதெல்லாம் கீற்றுக் கொட்டகைக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள்.

ராஜேஷ் சார் சொன்னது போல கேண்டீன் டீ, முறுக்கு, ஸ்பீக்கர், ஓப்பன் டாய்லட், மண் குவியல், குடித்து விட்டு தகராறு அடிதடி, சண்டை இப்படியாக கீற்றுக் கொட்டகையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் எழுதுங்கள்.

இன்னொரு கண்டிஷன். யாரும் ஒன்றிரண்டு பதிவுக்கு மேல் போடாதீர்கள். அப்புறம் கீற்றுக் கொட்டகையை நீங்கள் ஆக்கிரமித்து விட்டதாக பழி வரும். இந்தப் பாவமெல்லாம் உங்களுக்குத் தேவையா? நீங்கள் கும்பலில் நுழைந்து டிக்கெட் எடுத்த அனுபவத்தையும் எழுதக் கூடாது. இவன் கஷ்ட்டப்பட்டு டிக்கெட் எடுத்தான் என்று எழுதுகிறான் என்று உங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடக்கும்.

உங்களிடம் பாதுகாப்பு கவசம் இருக்கிறதா?:) திரியில் எழுத உங்களுக்கு ஆசை இருந்தால் தயவு செய்து அதை அணிந்து கொண்டு எழுத வரவும். இல்லை என்றால் உங்கள் நிலை பரிதாபமே.:)

RAGHAVENDRA
8th October 2014, 07:31 AM
http://thamizhstudio.com/images/tt_jeeva.jpg

ஓவியர் ஜீவா...



வே.ஜீவானந்தன் இயற்பெயர். ஓவியர் ஜீவா என்ற பெயரில் உலக திரைப்படங்களை பற்றி 'ரசனை' மாத இதழில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் எழுதி வருகிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒரு தொகுப்பாக 'திரைச்சீலை' என்ற பெயரில் திரிசக்தி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வழக்கறிஞர் என்றாலும் ஓவியராகவே அதிகம் அறியப்பட்டவர். கோவையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சித்ரகலா அகாடமி என்ற அமைப்பின் மூலமாக ஓவிய இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு...ஏராளமான ஓவியர்களின் கலை பயணத்தை சீரமைத்த பெருமை உண்டு.
திரைப்படங்கள் சார்ந்த சூழலிலேயே வளர்ந்ததினால் அவற்றின் மீது ஆழ்ந்த காதல் உண்டு. குடும்பச்சூழல் கோவையிலேயே முடக்கிப் போட்டாலும் , வீட்டிலிருந்து இரண்டு ஒளிப்பதிவாளர்களை தந்திருக்கிறார். ஒருவர், இந்தியிலும் புகழ் பெற்றிருக்கும் இளைய சகோதரன் மணிகண்டன், இன்னொருவர் இப்போதுதான் 'ஓடிவா' மூலம் கால் பதித்திருக்கும் மகன் ஆனந்த்.

ஓவியர் ஜீவா தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

திரையரங்கங்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு இருந்தது என்றால் சிரிப்பார்கள். திரையரங்கங்களுக்கு முன் வைக்கப்படும் பெரிய பேனர்களும் கட் அவுட்டுகளும் வரைவது என் தந்தையின் தொழிலாக இருந்தது. பின்னர் என் தொழிலாகவும் மாறியது. நகரத்தில் பிறந்து வளர்ந்ததால் டூரிங் தியேட்டர் அனுபவங்கள் இருந்ததில்லை. ஆனாலும் அதை ஒத்த தியேட்டர்கள்தான் அப்போது இருந்தன. நான் ஒரு தரை டிக்கட் 43 பைசா பையன். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் பென்ச் டிக்கட் ஆன 75 பைசாவுக்கு முன்னேறினேன். தரை டிக்கட் என்பது முதுகுக்கு சாய்மானம் இல்லாத நீள் பெஞ்சுகள். திரைக்கு வெகு அருகில். பென்ச்சில் அமர மனமில்லாதவர்கள் தீ என்று எழுதப்பட்ட சிவப்பு நிற மணல் பக்கெட்டுகள் மறைக்காமல் தரையில் படுத்துக்கொண்டும் படம் பார்க்கலாம். புகை பிடிக்க கூடாது என்று சிலைடுகள் முழங்கினாலும் பீடி புகை நிறைந்திருக்கும். போலீஸ் எப்போதுமா பிடிப்பதற்கு வருவார்கள்..? தரை டிக்கட்டுகளிலிருந்து பார்க்கும்போது திரை ஒரு குறிப்பிட்ட கோணத்தில்தான் தெரியும். இன்றும் என் நினைவு அடுக்கிலிருக்கும் படங்கள் மனக்கண்ணில் அப்படித்தான் தெரிகின்றன.

அப்போதெல்லாம் தியேட்டர்கள்தான் கோவை போன்ற நகரங்களில் ஒரே பொழுதுபோக்கு சாதனம். புது படங்களுக்கு, அதுவும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு கூட்ட நெரிசல் தாங்காது. முன்பதிவு இல்லாத வகுப்புகளுக்கு வரிசைகள் பிதுங்கி வழியும். இரண்டு மணிநேரம் முன்னால் வந்து கியூவில் காத்து நிற்பது என்பது சர்வ சாதாரணம். தவமாய் தவமிருப்பார்கள் ரசிகப்பெருமக்கள்.பொழுது போகவேண்டாமா...கடலை, பர்பி போன்ற சாதனங்களை ஆட்கள் விற்று வந்தாலும்...குட்டி குட்டி சூதாட்டங்கள்தான் மெயின். நாடா குத்துதல், மூணு சீட்டு, பர்பி சீட்டு குலுக்கல் என்று பொழுது போக நிறைய ஐட்டங்கள். சில சமயங்களில் இருந்த காசை அங்கேயே தொலைத்துவிட்டு கியூவிலிருந்து விலகிப்போகிறவர்கள் உண்டு. மனதிடம் மிக்கவர்கள் இந்த விளையாட்டுக்களில் கலந்து கொள்ளாமல் சுவற்றில் நாணயங்களை கொண்டு விதவிதமான வடிவங்களை ஆழ செதுக்கி தங்கள் கலை திறமையை வெளிப்படுத்துவர். டிக்கட் கவுண்டர் திறந்ததுதான் தாமதம், அத்தனை ஒழுங்கும் பறந்து விடும். முண்டியடிப்பவர்களும், தலைக்கு மேல் ஏறி பயணம் செய்பவர்களும் தங்கள் திறமையை காட்ட துவங்கி விடுவார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்கு இவற்றை ஒழுங்குபடுத்த சில சமயம் போலீசார் வரவழைக்கப்பட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் கையில் ஒரு தடியுடன் வந்து கியூவில் நிற்பவர்களை அடிக்கலாம். எதிர்ப்புணர்வே இல்லாமல் அடி வாங்கிக் கொள்வார்கள். ஒரு கோவை தியேட்டரில் வாசலில் ஐஸ்கிரீம் கடைக்காரர், கேண்டீன்காரர்கள் எல்லோரும் வந்து எங்களை சகட்டு மேனிக்கு அடிப்பதுண்டு. தியேட்டருக்குள் பாய்ந்ததும் இடம் பிடிக்கவேண்டும். என்னை போன்ற நோஞ்சான்களுக்கு முன் வரிசைதான் கிடைக்கும். கழுத்தை வளைத்து திரையை பார்க்கவேண்டும்.

காண்டீன்கள் தியேட்டர்களின் முக்கிய அங்கம். தட்டை முறுக்கு, தேங்காய் பர்பி, தேங்காய் பிஸ்கட், கடலை உருண்டை, சோடா கலர், காபி போன்றவைதான் விற்கப்படும் . தட்டுகளில் ஏந்தி உரக்க கூவிக்கொண்டு விற்பனையாளர்கள் தியேட்டருக்குள் சுற்றிக் கொண்டிருப்பார்கள், படம் ஓடாதபோதுதான்! ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் ஐட்டம். சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையும் காப்பியும் மகா பிரசித்தம். ஆங்கிலப்படங்களை திரையிட்டு வந்த ரெயின்போவில் குறைந்த விலைக்கு பப்சும் காப்பியும் கிடைக்கும். ஸ்ரீபதி தியேட்டரில் முட்டை பஜ்ஜி புகழ் பெற்றது. இதை போட்டுக்கொண்டிருந்தவர் ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார். கம்பெனி பாட்டு புத்தகங்கள் அப்போது தியேட்டர்களில் விற்கப்படும். சில தயாரிப்பாளர்கள் இதிலும் புதுமை புரிவார்கள். சீட்டு கட்டு வடிவத்திலும் ரிக்கார்ட் வடிவத்திலும் கூட பாட்டு புத்தகங்கள் விற்கப்பட்டன. இந்தி பாட்டு புத்தகங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்போது தினமும் மூன்று காட்சிகள்தான். சனி ஞாயிறுகளில் காலை காட்சி இருக்கும். அதிலும் பழைய படங்களையும் திரையிட்டு குறைந்த கட்டணத்தில் காட்டுவார்கள். சில தியேட்டர்களில் பழைய இந்திப்படங்கள் காட்டுவதுண்டு. சாந்தாராம் படங்களை கோவையிலும் சத்யஜித் ராய் படங்களை சென்னையிலும் இப்படித்தான் பார்த்தேன். ஸ்ரீபதி தியேட்டரில் எண்பதுகளில் இன்டெர் ஷோ என்று ஒரு காட்சி இரவு எட்டு மணிக்கு போட்டதுண்டு...பாஸ்பைண்டர், ஜானுச்சி போன்ற மேதைகளின் உலகப்படங்களை சப் டைட்டில்களுடன் சக ருசி உள்ளவர்களுடன் பெரும் திரையில் பார்த்த்த பொற்காலம் அது. கோவையில் தியேட்டர்களுக்கு இருந்த இன்னொரு கவர்ச்சி சினிமா பேனர்களும் கட் அவுட்டுகளும். சென்னை ஓவியர்களுக்கு ஈடாக இங்குதான் அற்புதமாக வரையப்படுகிறது என்று திரைத்துறையில் சொல்லப்படுவதுண்டு.

சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவு அப்போது தியேட்டர்களில் இருந்தது. ஒரு சைக்கிளுக்கு ஒரு டிக்கெட். நமக்கு பதில் சைக்கிள் கியூவில் நிற்கும். எம்ஜியார், சிவாஜி படங்களுக்கு இந்த கியூ கிலோமீட்டர் கணக்கில் சில சமயங்களில் நீளும்.டிக்கட் கொடுக்கும் சமயத்தில் வண்டிக்கு உரியவர்கள் அதை தள்ளிக்கொண்டு சென்று அதற்குரிய கவுண்டரில் டிக்கட் வாங்குவார்கள்.. அதிலும் சில சமயங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பெடல்கள் இன்னொரு வண்டியின் பெடல்களுடன் பின்னிப் பிணைந்து ஒரே ரகளைதான்! மெக்கென்னாஸ் கோல்ட் போன்ற புகழ் பெற்ற ஆங்கிலப்படங்களுக்கும் இதே நிலைதான்.
டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.

அவருக்கு என் மீது தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில் ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார்.

திரை அரங்கங்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சலிக்காது என்பது மட்டும் நிச்சயம்!


http://thamizhstudio.com/others_tt_4.php தமிழ் ஸ்டூடியோ.காம் இணைய தளத்திலிருந்து...

Richardsof
8th October 2014, 09:59 AM
எங்கள் கிராமத்து டூரிங் டாக்கீஸில் [ 1964-1969] தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட
தெலுங்கு பக்தி படங்கள் - மாயஜால படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன .என் .டி .ஆர் - காந்தா ராவ் - ராஜநாளா மிகவும் பிரபலமானவர்கள் . அதே போல் தமிழ் பக்தி படங்கள் மிகபெரிய வரவேற்பை பெற்றன .எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு பிறகு ஜெய் சங்கர் - ரவிசந்திரன் படங்கள்நன்கு ஓடியது .

adiram
8th October 2014, 11:47 AM
நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ராமர்' புகழ் பாடும் 'மங்கி' (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது.

அன்பு வாசு சார்,

இது மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் வந்த தங்கள் பதிவு.

என்னுடைய பெயரிலும் 'ராம்' இருப்பதால் இதுவரை முழுவிவரம் தெரியாமல் மறுகிக் கொண்டிருந்தேன். இப்போது சம்மந்தப் பட்டவர் பெயரை மட்டைக்கு இரண்டு கீற்றாக உடைத்து சொல்லி விட்டீர்கள்.

இனி நிம்மதி அடைந்தேன். நன்றி.

gkrishna
8th October 2014, 02:29 PM
http://www.puthiyaparvai.com/images/pattukkottai%20kalyanasundaram.jpg

இன்று (08/10/59 )பட்டுகோட்டையார் நினைவு தினம்

இளவேனிற்காலம். சித்திரை மாதம். விவசாய விளைச்சல் வீட்டில் செழிப்பையும் விதைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் உழவர்கள் தங்கள் தாய்மண்ணை வணங்க ‘நல்ஏர்’ பூட்டப் புறப்பட்டனர். விளை நிலங்களை அடைந்தனர். ஏர்களின் நுகத்தடிகளில் காளைகள் பூட்டப்பட்டன. பூஜைக்குரிய பொருட்கள் வாழை இலைகளில் வைக்கப்பட்டன. சூரிய வழிபாடும் இறை வழிபாடும் உழவுப்பெண்களின் கரம்பட்டு நம்பிக்கைச் சுடராய் ஒளிவீசியது.
நிலங்களில் இறங்கிய உழவர்கள் - தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடியபடி சந்தோஷக் கூச்சலிட்டு காளைகளைப் ‘போடா ராஜா! போடா ராஜா’ என்று தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த அழுத்தமாய் ஓடிய ஏர்களின் ஆழத்தில் பூமித்தாய் பூரித்துப் போயிருந்தாள்.
இவைகளை ரசித்தபடி வரப்பின் மேல் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது மெல்லிய காற்றாய் வயல்களினூடே வந்தது பாடல் ஒன்று. அந்தப் பாடல்...

“சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர்நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பா பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு --_- வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _- அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம் (அட)
இப்போ - காடுவெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே!”
என்ற வரிகள் எனது சிந்தனையில் ஏரோட்ட நான் உழவு நண்பனை அழைத்து - என்னய்யா நல்லேர் அதுவுமா எம்.ஜி.யார் பாட்டப் பாடுறியே! என்று கேட்க அவனோ சிரித்துக் கொண்டே “எம்ஜியார் பாட்டு தான்யா! ஆனா? அந்த பாட்டை எழுதினவர் யார் தெரியுமா? எங்காளு!’’ என்று புதிர் போட்டுப் பதில் சொன்னான் - எழுதியவர் பெயரையும் சொன்னான்.

நான் பிரமித்துப் போய் அந்தப் பாட்டுக் கோட்டையின் பாதச்சுவடுகளைத் தேடிப் புறப்பட்டேன்.

அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

‘மகாகவி’ என்றால் பாரதியாரையும், ‘புரட்சிக் கவிஞர்’ என்றால் பாரதிதாசனையும், ‘கவியரசு’ என்றால் கண்ணதாசனையும் குறிப்பதுபோல் ‘மக்கள் கவிஞர்’ என்றால் அச்சொற்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே சாரும்.

மக்களோடு பழகி, மக்களின் பழக்க வழக்கங்களையும் உற்றுக் கவனித்து, மக்களின் கோபதாபங்களைத் தமது பாடல்களில் வடித்ததால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ‘மக்கள் கவிஞர்’ என்று குறிக்கப் படுகிறார். இந்த மகத்தான பட்டத்தை பட்டுக்கோட்டையாருக்குக் கொடுத்த பெருமை இலக்கியப் பேராசான் ஜீவாவைச் சேரும்.

http://www.puthiyaparvai.com/images/jeevanantham.jpg

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வெற்றிகளுக்குத் தோள்கொடுத்துத் துணை நின்ற ஜீவா, “விவசாயி. மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முருக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணிவண்டிக்காரன். அரசியல்வாதி, பாடகன், நடிகன், நடனக்காரன் என பதினாறு தொழில்களில் ஈடுபட்டு கவிஞரானவர் பட்டுக்கோட்டையார்’’ என்று குறிப்பிடுகிறார்.

கல்யாணம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கமுள்ள சங்கம்படைத் தான் காடு என்ற கிராமத்தில் அருணாசலம் - விசாலாட்சி தம்பதிகளுக்கு 13.04.1930-இல் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார்.

அருணாசலம் பிள்ளையிடம் மண்டிக் கிடந்த கவிதைப்பயிர் மூத்தமகன் கணபதி சுந்தரத்திடமும் - இளைய மகன் கல்யாணத் திடமும் துளிர்விடத் துவங்கியது.இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கல்யாணம் அண்ணன் கணபதி சுந்தரம் தந்த ஊக்கத்தினாலும் உற்சாகத் தினாலும் கவிதைகளும் எழுதலானார். அதுமட்டுமின்றி எட்டு வயதிலேயே அண்ணன் எழுதிக்கொடுத்த சுயமரியாதைப் பாடல்களை மேடைகளில் பாடலானார். பாடல்களைப் பாடியதின் விளைவு தஞ்சை மாவட்டத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சு - கல்யாணத்தைச் சுயமரியாதைப் பாடல்கள் எழுதத் தூண்டியது.
“நல்லதைச் சொன்னா நாத்திகளா?’’ என்று தொடங்கும் பாடலை எழுதி அண்ணனிடம் பாராட்டும் பெற்றார்.
கல்யாணம் ஒருமுறை வயல்வெளிகளிக்குச் செல்கிறார். வயலைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறார். வழியில் ஏரிக்கரையிலிருக்கும் வேப்பமர நிழலில் இளைப்பாற அமர்கிறார். அப்போது கெண்டை மீன் ஒன்று துள்ளிக் குதிப்பதும் - தெரித்த நீர்த்திவலைகள் அருகி லிருக்கும் தாமரை இலைமேல் விழுந்து கிடப்பதும்...

“ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே -_ கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக்குஞ்சே!
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு _- ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக்குஞ்சே!’’

என்று கவிதையாய் மலர்ந்தது. இந்த கவிதையைக் கல்யாணம் எழுதியபோது அவருக்கு வயது பதினான்கு. இதுவே அவருடைய முதல் கவிதை.

அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குத்தகை நிலங்களிலே பயிரிட்டு வாழும் சூழல். விளைந்தாலும் விளையா விட்டாலும் ஒப்புக்கொண்டபடி விவசாயிகள் குத்தகை நெல்லை அளந்து கொட்ட வேண்டும். இல்லையேல் வீட்டிலுள்ள பண்டம் பாத்திரங்களும் - ஆடுமாடுகளும் அபகரித்துச் செல்லப்படும்.

இந்தக் கொடுமையான நிகழ்ச்சிகளைக் கல்யாணம் பார்த்திருக்கிறார், - சிந்தித் திருக்கிறார். கொடுமைகளைத் தகர்க்க மிராசுதார்களின் கொட்டத்தை அடக்க பொதுவுடைமை இயக்கம் தஞ்சை மாவட்டத்தில் நடத்திய போராட்டங்களும் கல்யாணத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தோழர் சீனிவாசராவ், களப்பால்குப்பு, வாட்டாகுடி இரணியன், சிவராமன் போன்றோர் போராட்ட மறவர்களாகப் புறப்பட்டபோது களம் புகுந்ததுடன் இயக்கம் தடை செய்யப்பட்டபோது தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கும் உதவியிருக்கிறார். தேர்தலில் வெற்றிபெற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.

விவசாய சங்கக் கலை நிகழ்ச்சிகள் - நாடகங் களுக்குப் பாடல் எழுதிய அனுபவம் _ இவை களால் கவிஞர், நடிகர் டி.எஸ். துரைராஜ் மூலம் சக்தி நாடகசபாவில் சேர்த்து நடித்தார்; டி.எஸ்.பி., என் தங்கை, முதல் ரௌடி, கவியின் கனவு ஆகிய நாடகங்களில் நடித்தார். கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்ததால் ‘ராஜகுரு சுந்தரம்’ என்றும் அழைக்கப் பட்டார்.

புதுவையில் நாடகம் நடத்தியபோது புரட்சிக்கவிஞரின் தொடர்பு ஏற்பட - பாவேந்தரைச் சந்திப்பதிலும் - அவருடைய படைப்புகளை நகல் எடுப்பதிலும் கல்யாணம் ஈடுபட்டார். நாடகக் கம்பெனி நலிந்து போனதால் பாரதிதாசனிடமே உதவியாள ராகச் சேர்ந்து அவரது ‘குயில்’ பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்பு கல்யாணத்தின் சினிமா உலகப் பயணத்திற்கு அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது.
‘ஜனசக்தி’ இதழ் நவம்பர் புரட்சி மலராக வெளிவந்தபோது நவம்பர் புரட்சியை வரவேற்று-

“புதிய ஒளி வீசுது பார்
இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுது பார்
இன்பம் அங்கே’’

என்று தொடங்கும் கவிதைதான் அச்சில் வெளிவந்த முதல் கவிதை. இந்தக் கவிதை ‘ஜனசக்தி’ நவம்பர் 7, 1954ஆம் ஆண்டு வெளிவந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் - நாடகத் திரைப்பட இயக்குநருமான டி.கே. பாலச்சந்தரும் அவரது நண்பர்களும் திண்டுக்கல்லில் நடக்க இருந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் நாடகம் ஒன்றை அரங்கேற்ற விரும்பினார்கள்.

மயிலை நித்யானந்தம் நாடகத்தை எழுத பட்டுக்கோட்டையார் பாடல்கள் எழுத - டி.கே. பாலசந்தர் இயக்கத்தில் 1954 ஆகஸ்ட் முதல் நாள் திண்டுக்கல் காந்தி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் ‘கண்ணின் மணிகள்’ நாடகம் அரங்கேற்றப் பட்டது.
பட்டுக்கோட்டையார் இந்த நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதோடு போலீஸ்காரனாக வும் நடித்தார். கவிஞரின் பாடல் வரிகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் குவிய நாடகத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிப் பேசிய இலக்கியப் பேராசான் ஜீவா “பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் மக்கள் கவிஞனுக்குரிய அடையாளமாகத் திகழ்கின்றன’’ என்றதுடன் பட்டுக்கோட்டையாரை மகாகவி பாரதியின் தகுதிக்கு உயர்த்தி “நீ, மீண்டும் தோன்றிய பாரதியடா?’’ என்று மனமுவந்து பாராட்டினார்.

பாடல் எழுதத் தொடங்குமுன் ‘வாழ்க பாரதிதாசன்’ என்று எழுதிவிட்டு பாடல் எழுதும் வழக்கத்தைக் கவிஞர் ஏற்படுத்திக் கொண்டார்.
1954-ல் படித்த பெண் என்ற திரைப் படத்தின் பாடல் எழுதும் வாய்ப்புப் பெற்றார் கவிஞர். இந்தப் படத்தில் -
“காபி ஒண்ணு எட்டனா
கார்டு சைசு பத்தனா
காண வெகு ஜோராயிருக்கும்
காமிராவைத் தட்டினா’’
என்ற பாடலையும்,
“வாடாத சோலை
மலர்பூத்த வேளை!’’
என்ற பாடலையும் எழுதினார். இந்தப்படம் 1956இ-ல் தான் வெளிவந்தது.

இதே ஆண்டில் துவக்கப்பட்டு 1955இ-ல் வெளியான ‘மகேஸ்வரி’ என்ற படம் பட்டுக்கோட்டையாரின் பாடலுடன் வெளிவந்த முதல்படம் என்ற பெருமையைப் பெற்றது.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் ‘பாசவலை’ படத்திற்குப் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் அவருக்குப் பேரும் புகழையும் தேடித்தந்தன.

பட்டுக்கோட்டையாருக்கும் ஆத்திக் கோட்டை கோவிந்த வேளாளர் மகள் கௌரவம்பாளுக்கும் 11.-9.-1957இ-ல் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

சினிமாவில் கவிஞர் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வந்தாலும் ‘ஜனசக்தி’ இதழில் கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தார்.
வாரக் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் - வள்ளி தண்ணீர் பாய்ச்சச் செல்கிறாள். - அங்கிருந்த மிராசு அவளைத் தடுக்கிறார். தண்ணீர் பாய்ச்ச -முடியாத கவலையோடு திரும்புகிறாள். - மறுநாள் வயலுக்குச் செல்கிறாள் தண்ணீர் நிறைந்து கிடக்கிறது. எப்படி நடந்தது இந்த அதிசயம்? கணவன் நாகனிடம் வள்ளி சொல்கிறாள்:-

“நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில்
போட்டது வளையை புரட்சி நண்டு
பாய்ந்தது தண்ணீர் பரவி எங்குமே
காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின’’

என்று தனது கவிதையில் ‘புரட்சி நண்’டை அறிமுகம் செய்கிறார் உழவுக் கவிஞர் கல்யாணம்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் திரைப் படத் துறையில் வெற்றிச்சிகரத்தை எட்டி - சினிமா போஸ்டர்களில் பாடலாசிரியர் பெயரையும் வரவழைத்து, ‘டைட்டிலில்’ பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று வரும்போது அரங்கில் பலத்த கைத்தட்டல் களையும் பெற்ற கவிஞருக்கு 16.08.1959-இல் லட்சக்கணக்கான தொழி லாளிகள் - விவசாயிகள் -பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் கோவையிலுள்ள முற்போக்கு மன்றங்கள் சார்பில் ‘மக்கள் கவிஞர்’ என்ற மாபெரும் பட்டம் வழங்கப்பட்டது. இதே ஆண்டில்தான் பட்டுக்கோட்டையாருக்கு மகனும் பிறந்தான்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு பல கவிஞர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அவை களில் முற்றிலும் வேறுபட்ட சிந்தனையில் எழுதப்பட்ட பாடல்கள் பட்டுகோட்டையார் பாடல்களே என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்குச் சான்றாக,
“ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்’’
“சின்னப்பயலே சின்னப்பயலே
சேதிகேளடா’’
“உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக் குணம்’’
“சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டை கட்டி’’
“தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’’
“சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி’’
“திருடாதே! பாப்பா திருடாதே’’
போன்ற பாடல்கள் திகழ்கின்றன. இந்தப் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டையாருக்கும் மக்கள் மத்தியில் தனியாசனம் பெற்றுத் தந்தன.

சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், டி.ஆர். மகாலிங்கம், எஸ்.எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி, சாவித்திரி, சந்திரபாபு போன்ற கலைஞர்கள் பட்டுக்கோட்டையார் பாடல்களுக்கு வாயசைத் திருக்கின்றனர்.

டி.எம். சௌந்தர்ராஜன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி, பி. சுசிலா போன்ற பின்னணிக் கலைஞர்கள் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

ஸ்ரீதர் இயக்குநராகவும், ஏ.எம். ராஜா இசையமைப்பாளராகவும், வின்சென்ட் ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமான ‘கல்யாணப் பரிசு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா தான் பட்டுக்கோட்டையார் கலந்துகொண்ட இறுதி விழாவாகும்.

கே. இளந்தீபன்
புதிய பார்வை | ஜூலை 1 - 15, 2014

RAGHAVENDRA
8th October 2014, 06:15 PM
சுந்தரபாண்டியன் சார்
வருக வருக... தங்கள் வரவு இத்திரிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
டூரிங் டாக்கீஸ் தீப்பற்றி எரிந்த அந்த செய்தி அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதனைப் பற்றிய தகவல் இந்நாளைய மக்களுக்கு அபூர்வமானதாகும்.
தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
8th October 2014, 06:17 PM
கிருஷ்ணாஜி
பட்டுக்கோட்டையாரின் நினைவு நாளில் அவரைப்பற்றிய கட்டுரை பொருத்தம். பல தகவல்களின் களஞ்சியமாக விளங்குகிறது அக்கட்டுரை.
மிக்க நன்றி. தொடர்க..

Russellbpw
8th October 2014, 08:03 PM
http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/IMG_21483645503091_zpsrlbtobze.jpeg (http://s1055.photobucket.com/user/senthilvel45/media/IMG_21483645503091_zpsrlbtobze.jpeg.html)

venkkiram
8th October 2014, 09:46 PM
அன்பு வாசு சார்,

இது மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் வந்த தங்கள் பதிவு.

என்னுடைய பெயரிலும் 'ராம்' இருப்பதால் இதுவரை முழுவிவரம் தெரியாமல் மறுகிக் கொண்டிருந்தேன். இப்போது சம்மந்தப் பட்டவர் பெயரை மட்டைக்கு இரண்டு கீற்றாக உடைத்து சொல்லி விட்டீர்கள்.

இனி நிம்மதி அடைந்தேன். நன்றி.

நன்றி ஆதிராம்! இப்போதுதான் அந்தப் பதிவினை மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் சென்று வாசித்தேன். எனது பெயரை வைத்து வசை பாடியிருக்கிறார். வாசிக்க சுவையாகவே இருக்கு.

"நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ஹானஸ்ட்' உள்ள அறிவுஜீவி ராஜாக்கள் உரைத்தது. ராமர் புகழ் பாடும் மங்கி (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது."

இதுவரை இந்தப் பதிவினை வாசிக்காமலையே 'மதுர கான' திரியினை தொடர்ந்து படித்தும், அங்கங்கே பங்கெடுத்தும் வந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. அவரை சிவாஜி திரியில் பங்கெடுக்காமல் தடுத்ததாக அவர் நினைக்கும் எனது பதிவு - நான் நேற்று மதுர கானத்தில் மேற்கோள் காட்டிய பதிவே. அது இன்றும் சிவாஜி பாகம் 12-ல் அப்படியேதான் இருக்கிறது. மாடரேட்டர் நீக்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஒரு ஜோடிக்கப்பட்ட ஒன்றாகவே கருதத் தோன்றுகிறது. எனிவே, நான் யாரைக் குறிப்பிட்டு அப்போதைக்கு அப்படியொரு கருத்தினை, அதுவும் பதிவர் ஹானஸ்ட் ராஜ் சொன்ன கருத்திற்கு வழிமொழியும் வகையில் பதிவிட்டேன் என்பது இப்போது நினைவில்லை. மதுரகானம் திரியின் முதல் பக்கத்தை முன்பேயே நான் வாசித்திருந்திருக்கலாம். அப்போதே அவ்வகையான புரிதலை சரிசெய்திருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஒருவிதத்தில் எனக்கும் நிம்மதியே. இனியாவது அவர் சிவாஜி திரியில் இணையட்டும். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த சர்ச்சை அமைந்துவிட்டது. பரவாயில்லை.

HonestRaj
9th October 2014, 12:20 AM
innaikuthan indha post paththi theriya vandhadhu...

nadigar thilagathin miga periya fan Vasudevan avargalukku oru situation narrate panren:

- oru theater'la 500 paer padam parkkuranga
- sivaji nadicha oru super padam
- 495 perukku padam arumaiya pidichirukku.. no objection..
- 5 perkku pidichirundhalum oru sila kuraigal.. pidikkalai.. eppadi venumnalum eduthukkalam..

ippo Vasudevan avargal nadigar thilagathin idathil irundhal enna seiveer?
* indha 495 paerukkaga thodarndhu padangalil nadipeergala? .. illai
* andha 5 paerkkaga field'il irundhu vilagividuveergala?

idharkku badhil sollunga.. adhukkapuram nan melum post panren...

rajeshkrv
9th October 2014, 06:20 AM
Madurai new cinema theatre... many many movies

http://www.thehindu.com/multimedia/dynamic/00794/cinema_GND3FVFAI_1__794860g.jpg

RAGHAVENDRA
9th October 2014, 07:07 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/02039/TH_MW2_2039471g.jpg

அந்நாளில் பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் காட்சியளித்த விஜயா வாஹினி படப்பிடிப்பு அரங்கத்தின் நுழைவாயில்... தற்போது ஆஸ்பத்திரி, நட்சத்திர ஹோட்டல், வணிக வளாகம் என மாறி விட்டது.

RAGHAVENDRA
9th October 2014, 07:09 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/02039/TH_MW4_2039473g.jpg

அன்பே வா படப்பிடிப்பின் போது விஜயம் செய்த நேபாள மன்னரும் ராணியும்...அவர்களுடன் எம்.ஜி.ஆர், ஏவிஎம், இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர், சரோஜா தேவி, மற்றும் பலர்.

RAGHAVENDRA
9th October 2014, 07:18 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/02106/TH-SIVAJI_2106646g.jpg

நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் - ஆண்டு 1953

இடமிருந்து வலமாக - குமாரி கமலா, கிருஷ்ணகுமாரி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், சந்திரபாபு, நாகேஸ்வரராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீராம், ஸ்வராஜ்

RAGHAVENDRA
9th October 2014, 07:24 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01666/safire_1964_jpg_1666681g.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/01666/28mpdevi_N_jpg_1666679g.jpg



கீற்றுக் கொட்டகையின் நேரெதிர் பரிமாணம் சென்னையில் துவங்கிய அத்தியாயத்தின் சான்று

மேற்காணும் பதிவுகளில் இடம் பெற்ற நிழற்படங்களுக்கு நன்றி ஸ்கைகிராப்பர் சிடி இணைய தளம்.

http://www.skyscrapercity.com/showthread.php?t=830356&page=19

RAGHAVENDRA
9th October 2014, 07:34 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc7/305227_204563836284964_19091009_n.jpg

சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் கட்டிய காலத்தில் எடுக்கப் பட்ட நிழற்படம். வலது புறம் மத்தியில் தோற்றமளிப்பது ஜெமினி ஸ்டூடியோஸ் நுழைவாயில்

RAGHAVENDRA
9th October 2014, 07:41 AM
https://sriramv.files.wordpress.com/2014/10/kalaivanar-arangam.jpg

பாலர் அரங்கமாகத் துவங்கி கலைவாணர் அரங்கமாக மாறி பின்னர் வெறும் தரையாகக் காட்சியளிக்கிறது தற்போது.. இதற்கு நேரெதிரில் இருந்த பாரகன் திரையரங்கமும் மிகப் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பாக மாறி விட்டது.

RAGHAVENDRA
9th October 2014, 07:45 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00256/24frPartha_G5V1GGM2_256901g.jpg

ஜெமினி ஸ்டூடியோவின் ஆஸ்தார இசையமைப்பாளர் எம்.டி.பார்த்தசாரதி இசையமைக்கும் காட்சி.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/unsung-veteran-of-tamil-cinema/article805324.ece

நன்றி ஹிந்து இணையதளம்

Russellmai
9th October 2014, 07:51 AM
கிருஷ்ணாஜி சார்,
பட்டுக்கோட்டையார் பிறந்த ஊரான சங்கம்படைத்தான்காடு
தற்போது செங்கப்படுத்தான்காடு என மருவி விட்டது.பட்டுக்கோட்டையில் நான்
பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது,பட்டுக்கோட்டையார் வீடு வழியாகப் பல
முறை செல்ல அடியேனுக்கு பாக்கியம் கிடைத்தது.இவரது ஊரிலும்,சுற்றியுள்ள கிராமங்களிலும் டூரிங் திரையரங்கம் கூட கட்டக் கூடாதென ஊர் கட்டுப்பாடு இருந்தது.
கோபு.

RAGHAVENDRA
9th October 2014, 07:56 AM
https://5611b3a7-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/hollywoodtheatres/cineramadome/Cinerama_Dome_1.jpg?attachauth=ANoY7crVZydc1DJ0waH QMZsvmaZgqaIYLs-yYPhCo1hmvbeCnZ_EmSMpGvxe4b3QkUdLQanI7RgsVUznT6FH3 Wn22WZxtheUvbJ9LMq5e-Ln0Q4C51n8lUPCWdyis8yY5L7ZjKYmq0L2x7gRw0HlKEH_LaVW EhPF5SbxkiCxj9fb_8I4HaMt4o4WMAi721NBVEe_kb2qYKBzTB AkLYQ5ZMyF0h18Gc28rh4u1G3Vws0htFQws1hKaL0BSMYRcpMU lTMuXrZZ1wDc&attredirects=0

திரையரங்கின் இன்னொரு பரிமாணமான சினிரமா...

சென்னையில் இம்முறையில் அமைந்த ஒரே திரையரங்கு பைலட் தியேட்டர்..

சினிரமா திரையரங்குகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

https://sites.google.com/site/hollywoodtheatres/cineramadome

Gopal.s
9th October 2014, 08:24 AM
ராகவேந்தர்,



கீற்று கொட்டகை- அருமையான தலைப்பு. பலவகை உள் அழகியல் கொண்ட ,பழைய எண்ணங்களை புதுப்பிக்கும் உத்வேகம் கொண்டது. நிறைய பங்களிப்பேன்.வாழ்த்துக்கள்.

rajeshkrv
9th October 2014, 08:29 AM
udaya studios .. kunchako how many movies did they make ... mesmerizing songs ... sheela,sarada abinayicha padangal..

http://www.karmakerala.com/news/wp-content/uploads/2009/11/udaya1.jpg

RAGHAVENDRA
10th October 2014, 09:15 AM
டியர் கோபால்
வருக வருக
தங்களுடைய வருகையினால் இத்திரியின் நோக்கம் முழுமை பெறும்.
ஒரு வேண்டுகோள்.
Please avoid negative and/or provocative comments.
தங்களுடைய எழுத்தின் மகிமை என்ற நிலவின் ஒளியை வேண்டாத வார்த்தைகள் என்ற மேகம் மறைக்கிறது. முழு நிலவின் ஒளியை முழுமையாய் அனுபவிக்க இந்த மேகங்கள் கலைய வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
10th October 2014, 09:16 AM
ராஜேஷ்
உதயா ஸ்டூடியோ பற்றிய தங்களுடைய பதிவு, தங்கள் எண்ணங்களை அந்த நிழற்படமே எடுத்துக் கூறி விடுகிறது.
தொடர்ந்து தாருங்கள் தங்கள் பங்களிப்பை

Richardsof
10th October 2014, 09:50 AM
வேலூர் நகரை சுற்றியிருந்த கீற்று கொட்டைகைகள்- 1965-1975

சேண்பாக்கம் - சண்முகா
காட்பாடி - அபசா
தொரப்பாடி - கணேசா
சாய்நாதபுரம் - ப்ளூ
சத்துவாச்சாரி - கந்தன்
பாகாயம் - விநாயகா
கொணவட்டம் - லக்ஷ்மி
திரை அரங்கு பெயர் நினைவில் இல்லை
பூட்டு தாக்கு
பொய்கை
விஷாராம்
கணியம்பாடி
கண்ணமங்கலம்
கழிஞ்சூர்
விருதம்பட்டு
தாராபடவேடு

மேற்கண்ட ஊர்களில் நான் முதல் வெளியீட்டில் பார்க்கமுடியாத பல தமிழ் படங்களை கீற்று
கொட்டைகளில் காணும் வாய்ப்பு கிடைத்தது . அவ்வாறு பார்த்த சில படங்கள் .

ஜெனோவா - ராஜகுமாரி - மர்மயோகி - மகாதேவி - புதுமை பித்தன் - காத்தவராயன் - மனோகரா
தூக்கு தூக்கி - பராசக்தி - மிஸ்ஸியம்மா -நாடோடி மன்னன் போன்ற படங்கள் நினைவில் உள்ளது .

JamesFague
10th October 2014, 10:35 AM
Now the Katpadi Apsara Theatre has been renovoted and renamed as either Aascar or Galaxy. I do not know whether it is

correct or not. The people who are residing now near Katpadi have to confirm.

vasudevan31355
10th October 2014, 01:34 PM
டூரிங் அனுபவங்கள்.

ஏம்பலம் என்ற ஒரு கிராமம். புதுவைக்கு பக்கம். நாங்கள் தூக்கணாம்பாக்கம் என்ற அருகிலுள்ள கிராமத்தில் குடியிருந்தோம். மலை 7 மணிக்குதான் ஏம்பலத்திலுள்ள சுரேஷ் என்னும் கீற்றுக் கொட்டகையில் படம் துவங்குவார்கள். அதனால் நாங்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சேர்ந்து மாட்டு வண்டி ஒன்று ஏற்பாடு செய்வோம். 4 மணிக்கெல்லாம் கிளம்பத் தயாராகி விடுவோம். லேடீஸ் எல்லாம் வண்டியில் அமர்ந்து கொள்ள வண்டியின் இரு பக்கமும் பிடிமானத்திற்காக செருகப்பட்டிருக்கும் சவுக்குக் கழிகளைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டே செல்வோம். வண்டி கிராமங்களின் கரடுமுரடான பாதையில் செல்ல மேடு பள்ளங்களில் ஆடி ஆடிப் போகும் சுகமே தனிதான். வழியில் அழகர் கோயில் ஒன்று வரும். அங்கு இறங்கி சாமி கும்பிட்டுவிட்டு கொஞ்சம் நொறுக்குத் தீனி கொறிப்போம். பின் 6 மணிக்கெல்லாம் கொட்டகைக்கு சென்று விடுவோம்.

அப்படித்தான் நடிகர் திலகத்தின் அபூர்வ படமான 'உலகம் பலவிதம்' படத்தை பார்த்தேன். மனசுக்கும் மத்தாப்பூ பொறிகள் சிந்த ஒரே குதூகலம். ஏனென்றால் என் கணக்கில் அதுவரை 'உலகம் பலவிதம்' படம் சேரவில்லை. இப்போது சேரப் போகிறது அல்லவா! வெளிர் மஞ்சளாகப் படம் தெரிய ஆரம்பிக்க அனுபவித்து பார்த்து அந்த நகைச்சுவைப் படத்தைக் கண்டு ரசித்தேன் குடும்பத்தோடு. பிறகு தியேட்டர் சிப்பந்தியிடம் அந்தப் படத்தின் போஸ்டர் கேட்டேன். அவரோ தீர்ந்து விட்டது என்று கைவிரித்து விட்டார். சற்று ஏமாற்றம். ஆனால் பார்க்க அரிதான நடிகர் திலகம் படத்தைப் பார்த்ததில் மிகப் பெரிய சந்தோஷம்.

ஏன் சொல்கிறேன் என்றால் கிடைத்தற்கரிய பல படங்கள் டூரிங் கொட்டகையில் பார்த்ததுதான்.

பொதுவாக தீபாவளி அன்று சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் அதிகம் திரையிடுவார்கள். பெரும்பாலும் பராசக்தி, பாச மலர், திருவிளையாடல், மாட்டுக்கார வேலன், ஆயிரத்தில் ஒருவன், நம்நாடு இப்படி. இந்த மாதிரி. வேறு நடிகர்களின் படங்கள் விசேஷ தினங்களில் நிச்சயம் இருக்காது.

வரக்கால்பட்டு என்ற கிராமத்தில் குடி இருக்கும் போது அங்கு ஒரு டூரிங் உண்டு. (கடலூர் பக்கம் ) ஆபரேட்டர் என்னுடன் படிக்கும் மாணவன். ராமு என்று பெயர். (அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தோம்) ஒருசமயம் 'குறவஞ்சி' படம் திரையிட்டார்கள். அன்று விடுமுறை தினம். நான் ராமுவிடம் சொல்லி படம் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவனோ காலை 10 மணிக்கு திரையரங்கிற்கு வந்துவிடு என்றான். எனக்கோ குழப்பம். காட்சி மாலை 7 மணிக்குதான். என்னடா இவன் காலையிலேயே வரச் சொல்கிறானே என்று. சொன்னபடியே போனேன். அவனும் நானும் மட்டுமே. கேபின் ரூமைத் திறந்து புரொஜெக்டரை 'ஆன்' செய்தான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் ஒளி ஊடுருவும் ஒரு துளையை மறைத்து அங்கு ஒரு வெள்ளைத்தாளை என்னிடம் கொடுத்து பிடிக்கச் சொன்னான் நானும் அப்படியே செய்ய குறவஞ்சி படம் பேப்பரில் ஓட ஆரம்பிக்க, நான் ஆடிப் போய் விட்டேன். ஸ்கிரீனுக்கே படம் போகவில்லை. பேப்பரிலேய படம் சிறிய அளவில் ஓட, நான் பேந்த பேந்த விழித்து அப்படியே ஒரு அரைமணி நேரம் படத்தையும் பார்த்து ரசித்தேன் இப்போது நம் 'ஐ பாடி'ல் பார்ப்பது போல. பெருமை பிடிபடவில்லை எனக்கு. பின் மாலைக் காட்சிக்கு நடிகர் திலகம் போஸ்டருக்கு மாலை வாங்கிப் போட்டு மெழுகுகள் ஏற்றி அமர்க்களம் செய்தோம்.

ம்..என்னெனவோ ஞாபகம் வந்து விட்டதே. எல்லாத்துக்கும் ரசிக வேந்தரே காரணம். பிடி சாபம்.

Scottkaz
10th October 2014, 07:18 PM
கீற்றுக் கொட்டகை வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்
முடிந்தவரை எனது பதிவுகள் உங்கள் பார்வையில்
http://i59.tinypic.com/2jdm62g.jpg
http://i59.tinypic.com/28a3xoi.jpg
தற்போது இந்த டென்ட் இல் படம் ஓடவில்லை
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Murali Srinivas
10th October 2014, 07:49 PM
கீற்றுக் கொட்டகை என்ற அழகான பெயரில் புதிய திரி துவக்கியிருக்கும் ராகவேந்தர் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்!

மற்றும் இதில் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

இந்த திரி வளர்க! வெல்க!

அன்புடன்

Richardsof
10th October 2014, 07:57 PM
Cinema theaters - Rise and Fall in temple city

Until two decades ago, evenings in Madurai meant movies. The entire town would descend on the streets and head to the theatres. Watching films was a ritual in this small town where every lane has a temple and where every turn once had a theatre.

“In the 1990's there were 52 theatres in Madurai city, out of which only 24 are functioning now. Before the 70's, ‘touring talkies' was very popular, in the city as well as the rural areas,” says Rm. M. Annamalai, State President of Tamil Nadu Theatre Owner's Association, “Later talkies became cinemas, benches were replaced with seats and the pole and tents gave way to concrete structures.”

Built in the 1930's, the Imperial Cinema was probably the first theatre to come up in temple town and ironically also the first one to be demolished 15 years ago. “From 1970 to the early nineties, there was spurt in the theatre business. Cinema going was a part of everyday entertainment those days,” recalls Annamalai, “There is a set of thirteen theatres in Madurai that can be called the oldest. Many are either shut down or have been pulled down, but Central, Vellaikannu and Regal are still functioning.”

Trophies and shields celebrating landmarks – ‘Sakala Kala Vallavan 150', ‘Padikkathavan 100' and so on – still decorate the showcase of the Central Cinema. Dusting them with care, D. Sundaram, the proprietor, says, “I feel proud whenever I see these trophies. Central was one of the sought-after theatre among movie buffs. We used to screen only two films per year and now it is two films per week. Films running for 100 or 200 days have become a thing of the past.”

“People run these old-time theatres as it is a prestige issue. Only old films are screened and there are audiences even today who come to watch MGR and Sivaji,” says Annamalai, “MGR hits like “Ayirathil Oruvan”, “Arasilangumari”, “Padakotti” and “Adimai Penn” and Sivaji starrers like “Manohara”, “Parasakthi”, “Vietnam Veedu” and “Vasantha Maligai” are evergreen movies that still draw people to the theatres.”

“MGR continues to be a phenomenon among movie lovers and many acknowledge that Madurai was much instrumental in making him the demigod. Our theatre is alive just because of MGR films” says E.M.G.S. Pothirajan, proprietor of Meenakshi Talkies and Meenakshi Paradise.

“Cinema was a strong tool at that time. Movies played a vital role even in politics. It was because of cinema that the DMK grew during the sixties” says Muthu, an MGR fan and an auto driver.

S. Ramadoss, an operator at Central, says, “Working in a cinema theatre was a matter of pride. I was the operator at Imperial Cinema and now at Central. It has been 35 years and I have seen technology change over the years.” Ramadoss's close association with cinema theatres earned him a short role in the film ‘Subramaniapuram' as an operator. “The scene in “Subramaniapuram” where people are shown fighting for tickets for ‘Murattu Kaalai' is a depiction of real trend that was once prevalent in major theatres in Madurai. It shows the craze people had for movies those days,” adds Ramadoss.

The women of Madurai have been known as movie enthusiasts. On weekend mornings theatres witnessed a huge rush of housewives. Decked in gold and the bests of Kanjivaram, the women dragged along their kids and carried tins full of murukkus, cheedais and athirasams – all to spend those three hours in reel-world. “It was common to watch three to four movies a week. I used to prepare snacks the night before and it was great fun buying tickets in the rush and groping in the dark to locate the seats,” remembers homemaker Dhanalakshimi, now in her sixties. “Finding the seat gave you a sense of thrill and achievement.”

She adds, “Cinema halls were the place where we forgot ourselves. We smiled and cried with MGR and Sivaji, enjoyed songs of M.S. Viswanathan and K.V. Mahadevan, cursed villains like P.S.Veerappa and Nambiar, worshipped K.R.Vijaya and Savithri when they played Goddesses and laughed our hearts out at the comedy of K.R. Ramachandran, A. Karunanidhi, Thangavelu and Nagesh.” Devotional films like ‘Rajakaliamman' and ‘Amman' had a strong following of women and theatres were treated as temples during the screenings.

N.M. Sivanathan, former owner of Chintamani Talkies says, “In olden days, theatre owners enjoyed a personal rapport with the producers and artistes. The trend of demanding a huge sum of money as Minimum Guarantee has left theatre owners in the lurch. Running a cinema hall has become much difficult and less profitable.”

Sivanathan's son Dr. N.M.S. Prabbakar beams, “Madurai was always considered the hot spot for films. Producers and celebrities paid often visits to theatres to gauge the pulse of audience. Chintamani enjoyed numerous such star visits.”

“The discerning Madurai movie-goer was considered difficult to convince and hence the town's response was always taken into consideration to judge a film's success. It was widely believed that if a movie makes it in Madurai, it will definitely be successful in the state,” says Iyyapan, an old-time film enthusiast.

Says Annamalai: “The current trend is mini multiplexes with capacities of 200 to 300. Air-conditioning and advanced facilities like 3D and DTS lure the audience. Only 10 percent of the film-goers continue coming to the regular theatres out of which five percent are choosy both about the films and the facilities provided. People now watch a film only if it is exceptionally good.”
courtesy -the hindu
__________________

RAGHAVENDRA
10th October 2014, 08:22 PM
வினோத் சார்
தமிழ்த் திரையுலக வரலாற்றை எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்வதில் இம்மய்யத்திற்கு கணிசமான பங்கு உள்ளதென்றால் அதில் தங்களுடைய பங்கு மகத்தானது. தங்களின் பதிவுகளின் மூலம் தமிழகம் தாண்டியும் தமிழ்த்திரைப்படங்கள் பெற்ற வரவேற்பினை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதன் ஒரு அங்கமாக இத்திரியிலும் தங்களுடைய பங்களிப்புகள் விளங்குகின்றன. வேலூர் சுற்று வட்டாரங்களில் அந்நாட்களில் இருந்த கீற்றுக் கொட்டகைத் திரையரங்குகளைப் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.
தொடருங்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th October 2014, 08:24 PM
ராமமூர்த்தி சார்
தங்களுக்கு என் முதற்கண் அன்பான வரவேற்பை அளிப்பதில் மகிழ்கிறேன். அருமையான நிழற்படம். அந்நாட்களின் திரையரங்குகளைப் பற்றிய விரிவான ஆய்வில் தாங்கள் அளித்துள்ள நிழற்படத்தில் இருக்கும் செமி பெர்மனெண்ட் திரையரங்குகளும் இடம் பெறும்.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை வேண்டுகிறேன்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th October 2014, 08:25 PM
முரளி சார்
இம்மய்யத்தைப் பொறுத்த வரையில் எந்த ஒரு விவாதமானாலும் தங்கள் பங்களிப்பில் அது முழுமையடைகிறது என்பதில் ஐயமில்லை. தங்கள் வரவேற்பிற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களுடைய பங்களிப்பினைத் தொடர்ந்து தரவேண்டுகிறேன்.

RAGHAVENDRA
10th October 2014, 08:29 PM
மதுரை நகரின் திரையரங்குகள் பற்றிய திரையரங்கு உரிமையாளர்களின் நினைவலைகளின் மூலம் அவர்களும் எந்த அளவிற்கு அவற்றுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வினோத் சார் இது போன்ற மேலும் பல நினைவலைகளை மீட்டும் தகவல்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.

RAGHAVENDRA
10th October 2014, 08:47 PM
பொதுவாக நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு டூரிங் டாக்கீஸ் எனப்படும் கீற்றுக் கொட்டகை திரையரங்குகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Touring Talkies or Nomadic Cinema என வெளிநாடுகளில் அறியப்படும் தற்காலிக திரையரங்குகள், குறைந்த காலங்களுக்கு அல்லது அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய விதிகளுடன் இயங்கும் வகையில் அனுமதி வழங்கபடும். இவற்றில் அலுவலகம் மற்றும் திரையீட்டுக் கருவிகளுக்கு என குறைந்த அளவிலான அறைகள் மட்டுமே கட்டப்படும். மற்ற படி பார்வையாளர்களுக்கு மணல் தரை மற்றும் இருக்கைகள் என இரு வகையில் அனுமதியளிக்கப்படும். மூங்கில் மற்றும் பனை அல்லது தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட கூரைகள், அவற்றிற்கு சாரங்கள், மற்றும் வெண்திரைக்கான பகுதி இவையெல்லாம் தற்காலிகமான அடிப்படையில் அமைக்கப்படும்.

இவையல்லாமல் செமி-பெர்மனென்ட் எனப்படும் வகையிலான திரையரங்குகளும் உண்டு.

காலப்போக்கில் சினிமா அனுபவங்கள் திரையரங்குகளின் தன்மை இவையெல்லாம் நவீன மயமாகி விட்டன.

என்றாலும் அந்நாளைய ரசிகர்கள் அனுபவித்த அந்த இனிமையான உணர்வுகள் இந்நாளில் கிடைப்பதில்லை என்பது உண்மையே.

rajeshkrv
11th October 2014, 02:43 AM
ராகவ் ஜி,
அருமையாக சொன்னீர்கள்

இன்று சத்தம் போட்டு சிரித்து கூட படம் பார்க்க முடியாது. அன்று அரட்டை அடித்து கொண்டும், சிரித்து மகிழ்ந்தும் கீத்து கொட்டகையில் பார்க்கும் அனுபவமே அழகு
நான் நிறைய கீற்று கொட்டகைகளில் படம் பார்த்ததில்லை இருந்தாலும் சில டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி

Richardsof
11th October 2014, 06:02 AM
courtesy - thinnai - net
கூடாரம் என்று விட்டல் ராவ் குறிப்பிடுவது ஆரம்ப கால டூரிங் டாக்கீஸ் என்று ஊருக்கு ஊர் பயணப்படும் தாற்காலிக சினிமா கொட்டகைகளைப் பற்றியதாகும். அந்தக் கூடாரங்களில் சர்க்கஸ் கம்பெனிகளும் வந்தன. அக்காலச் சூழலை விட்டல் ராவ் திரும்பக் கொணர்கிறார்,. ஒரே ப்ரொஜெக்டர் தான் இருக்குமாதலால் ஒவ்வொரு ரீலையும் மாற்றும் சில நிமிட இடைவெளியில் சோடா கலர், பாட்டு புத்தகங்கள் விற்பவர்களின் கூச்சல் எழும். திரையில் படம் சரியாக விழுகிறதா என்று பார்க்க ப்ரொஜெக்டர் அறையின் துவாரத்திலிருந்த் ஆபரேட்டர் பார்த்தால் உடனே “டே ஒழுங்கா ஓட்டுடா” என்றும் கூச்சல் எழுமாம். இது என் அனுபவத்தில் இல்லாத புது விஷயம். பின்னால் நாற்காலியில் அபூர்வமாக வந்து அமரும் உயர் வகுப்பு பெண்களை இடைவேளைகளில் தரையில் இருக்கும் சிலர் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். இன்னும் சிலர் வெற்றிலை மென்று தரை மணலில் துப்பி மூடிவிடுவார்கள். என்று இப்படிப் பட்ட காட்சிகள்..

பசுபு லேடி கண்ணாம்பா என்னும் அக்கால நக்ஷத்திர நடிகை பற்றி எழுதும்போது கண்ணாம்பா தமிழறியாத காரணத்தால் கண்ணகியோ, ஹரிச்சந்திராவோ எதானாலும் அந்த நீண்ட வசனங்களையும் கூட தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து தான் தமிழில் பேசுவாராம். பேசுவாரா, இல்லை கனல் தெறிக்குமா, கதறுவாரா, ஒன்றாம் மாதம் , இரண்டாம் மாதம் என்று லோகிதாசனைப் பெற்ற வேதனையைப் பட்டியலிட்டு? அப்படியும் கூட நமக்கு அது தெரியாது தமிழாக ஒலித்தது பெரிய விஷயம் தான். இப்போது விட்டல் ராவ் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அக்காலத்தில் தான் டப்பிங் வசதிகள் கிடையாதே. அப்படியும் அவர் அக்கால நக்ஷத்திர நடிகையாக உயர முடிந்திருக்கிறது. எம்.ஆர். ராதா முதலில் ஜகந்நாதய்யர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் தான் சேர்ந்தாராம். இக்கம்பெனியின் 1924- வருட நாடகம் “கதரின் வெற்றி” மிகப்புகழ் பெற்றது என்றும் அந்த நாடகத்தை, ராஜாஜி, மகாத்மா காந்தி, கஸ்தூர்பாய், தேவதாஸ் காந்தி, போன்றோரின் பாராட்டைப் பெற்றதாகவும் எழுதுகிறார் விட்டல் ராவ். காந்தியும் ராஜாஜியும் நாடகம் பார்த்தார்கள், பாராட்டினார்கள் என்பது புதிய கேள்விப்பட்டிராத செய்தி. எம்.ஆர். ராதாவின் கோபத்துக்கும் முரட்டு சுபாவத்துக்கும் ஆளானவர்கள் எம்.ஜி.ஆருக்கும் முன்னர் சிலர் இருந்தனராம். கிட்டு என்ற சக நடிகர் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டார் என்றும், தனக்கு பதிலாக கே.பி.காமாட்சி என்பவரை சினிமாவில் ஒப்பந்தம் செய்ததற்கு என்.எஸ்.கேயை கொல்லப்போகிறேன் என்று கிளம்பியவரை என்.எஸ்.கே போய் சமாதானம் செய்யவேண்டி வந்தது என்றும் பல இம்மாதிரி சம்பவங்கள் விட்டல் ராவிடமிருந்து தெரிகின்றன. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரம்பித்தது 1934-ல். இது புரிகிறது. ஆனால் நமக்குத் தெரியாத, ஆச்சரியப்படவைக்கும் தகவல், முதல் மலையாளப் படமே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டது 1935-ல் என்ற தகவல் விட்டல் ராவிடமிருந்து வருகிறது. மாடர்ன் தியேட்டர்ஸை டி.ஆர் சுந்தரம் நிறுவியதன் காரணமாக, சேலமே சினிமா நக்ஷத்திரங்களும், நாடக நடிகர்களும் நிறைந்த, அவர்கள் போவதும் வருவதுமான காட்சிகளும், விருந்தினர் மாளிகைகளும், ஹோட்டல்களும், இப்படியான ஒரு சலசலப்பும் பரபரப்பும் நிறைந்த நகரமாக உரு மாறியிருந்த காலம். டி.ஆர். சுந்தரம், மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த, எந்த பெரிய நடிகரையும் அதிகாரம் செய்து வேலை வாங்குபவர் என்ற புகழோடு, வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து, வெள்ளைத்தோலும் நீலக்கண்களும் கொண்ட புத்திரர்களும் கொண்டவர் என்றால், சேலத்தில் எல்லோரும் அது பற்றித் தானே பேசுவார்கள்! அதிலும் டி.ஆர். சுந்தரத்துக்கு சினிமா, நாடகம் என்று வாழ்க்கையின் திசை திரும்பியதற்கு அவரது மனைவிதான் காரணம் என்றால். ஒரு காலகட்டத்தின் தமிழ் நாடக சினிமா வளர்ச்சியில் க்ளாடிஸ் என்னும் அந்த பெண்ணிற்கும் பங்கு உண்டு என்றால்….. ஆனால் 1963-ல் சுந்தரத்தின் மரணத்தோடு அந்தக் கதை முடிந்தது. க்ளாடிஸ் அதற்கு முன்னே பிரிந்து சென்று விட்டாள்.

விட்டல் ராவ் சொல்லும் சில துணுக்குக் காட்சிகள்: அக்கால படங்களிலிருந்து. இது மாடர்ன் தியேட்டருக்கு மாத்திரமான சிறப்பு அல்ல. ஏதோ ஒரு ஹைதர் காலத்துக் கதை. என் டி ராமராவும் பாலாஜியும் கத்திச் சண்டை போடுவார்கள். க்ளோஸ் அப் காட்சி வரும். ராமராவ் ராஜா உடையில் வாளும் மோதிரங்களும். அத்தோடு சமீபத்தில் வாங்கிய ரிஸ்ட் வாட்சும் ஒளி வீசும். இன்னொரு காட்சியில் வீரர்கள் தப்பிச் செல்ல வசதியாக சுவற்றில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்விச்சை அணைக்க இருள் சூழும்.

Richardsof
11th October 2014, 06:09 AM
courtesy -net
முதலில் நினைவுக்கு வருவது சிறு வயதில் சினிமா பார்த்த அனுபவங்கள். இன்றைக்கு மல்ட்டி ப்ளெக்ஸ்களிலும், நவீன தியேட்டர்களிலும் ஏ.சி.யில் படம் பார்*க்க முடிகிறது. காலண்டரில் பார்க்கும் மகாவிஷ்ணு போல, மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் போல படுத்த வாக்கில் படம் பார்த்திருக்கிறீர்களா? ; நான் பார்த்திருக்கிறேன்.

அந்நாளில் டூரிங் டாக்கீஸ் என்கிற ஒன்று இருந்தது. வெட்டவெளியில் கூரை போட்டு, கம்புகள் நட்டு எல்லை அமைத்திருப்பார்கள். சைடில் தடுப்பு எதுவும் கிடையாது. எனவே மாலை ஷோவும், இரவு ஷோவும் மட்டுமே நடைபெறும்.

இரண்டே வகுப்புகள்தான். முதல் வகுப்புக்கு மடக்கு சேர் போடுவார்கள். மற்றவர்கள் மண் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். சிலர் மண்ணைக் குவித்து மேடாக்கி, ராவண சபையில் வாலில் அமர்ந்த அனுமன் போல உயரமாக அமர்வார்கள். சிலர் கிராமத்துப் பாட்டிகள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் நான் முன்பே சொன்னதுபோல மகாவிஷ்ணு போஸில் படுத்தபடி மக்கள் திலகத்தின் ‘நாடோடி மன்னனை’ பார்த்தேன். ஒரே ஒரு புரொஜக்டரில்தான் படம் ஓட்ட வேண்டும் என்கிற காரணத்தால் இரண்டு முறை ரீல் மாற்றுவார்கள். ஆகவே இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்கள், இடைவேளைக்குப் பின் பத்து நிமிடங்கள் ஆக, மூன்று இடைவேளைகள் எல்லாப் படத்துக்கும் உண்டு. இஷ்டம்போல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கைக் காற்றில் படம் பார்*த்த அந்த சுகம், இப்போது ஏ.சி. *தியேட்டர்களில் எனக்குக் கிடைப்பதில்லை.

Richardsof
11th October 2014, 06:15 AM
சினிமா அனுபவங்களைச் சொல்லும்போது தியேட்டரில் நான் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நாங்கள் காரைக்குடியில் இருந்தோம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்து அண்ணனின் ஆதரவில் படித்தவன் நான். அவருக்கு அடிக்கடி பணி மாறுதல் ஆகிற வேலை என்பதால் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊருக்கு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழல் இருந்தது. அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். சில நண்பர்கள் காலப்போக்கில் தொடர்பு விட்டும் போனார்கள்.



என்ன சொல்ல வந்தேன்? சினிமாவுக்குப் போனது! என் அண்ணன், நான், அம்மா, சித்தி நால்வருமாக காரைக்குடி அருணாசலா தியேட்டரில் (இப்போது வேறு ஏதோ பெயர் என்று சொன்னார்கள்) வசந்தமாளிகை படம் பார்க்கப் போயிருருந்தோம். சிவாஜி சாரின் நடிப்பை நான் மிகவும் ரசித்த படங்களுள் அதுவும் ஒன்று.

Richardsof
11th October 2014, 06:25 AM
courtesy - net

அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் . கழுத்தில் தங்க செயின் ,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட் ,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன் . டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம் . அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில் , அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி , விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான் .

அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன் . இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன் . உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன் . இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன் . அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை . இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும் .

தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார் . சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு . நாங்க பார்த்த படம் தான் . எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள் . ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன் . தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே . இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார் . வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன் . அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா . வில்லன் வீரப்பா . நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார் .வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் செயற்கையாய் பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன் . அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார் . கடைசியா வில்லனை கொன்று விடுவார் . கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார் . பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன் . அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார் . சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றானே !' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன் . என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை . நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது .

கடைசி சண்டை போது ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன் . ' சாக மாட்டார் . இப்ப வேடிக்கையை பாரு . வீரப்பா ஆள் காலி ' பெரியவர் தேறுதல் சொன்னார் .

படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார் . அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல பெருமிதமாக சொன்னார் " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது . வால் கூட தெரிஞ்சிருக்காது ."

வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "

அதற்கு மறு நாள் சென்னை சென்றேன் . அமெரிக்கன் சென்டெரில் Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது . அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.

அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு இருநூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவை பாடியுள்ளேன் . இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள் .

பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favourite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார். படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை .

.......

Richardsof
11th October 2014, 06:31 AM
டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.

சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.

மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.

நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.

டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

Richardsof
11th October 2014, 10:04 AM
courtesy - net
திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும் ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.

ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு. எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது.

சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும். எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.

Richardsof
11th October 2014, 10:18 AM
courtesy - net
http://i62.tinypic.com/2v0k8b6.jpg
சிறு வயதில் தியேட்டருக்குப் போவதென்றாலே திருவிழாவுக்குப் போவது போல் இருக்கும். ஏதோ போருக்குப் போவது போல பெண்களின் கூட்டம் படையெடுக்கும். போர்க் கருவிகள் மாதிரி கையில் வாட்டர் கேன்களும் நொறுக்குத் தீனிகளும் அடங்கிய பைகளுடன் விரைவது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

அப்பா எங்களைத் தியேட்டருக்கு அனுமதிப்பது அபூர்வம். சில நேரங்களில் அந்த அபூர்வம் நிகழ்ந்து விடும். தெருவோடு ஒரு பெரிய கூட்டமாய் போவோம். சாலையில் போகும் போது அம்மாவின் ஓட்ட நடைக்கு ஈடு கொடுத்து நடந்து போவேன். தியேட்டருக்குள் நுழைந்ததும் அம்மா என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். ‘இடுப்பில் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்க மாட்டார்கள்’ என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.
http://i61.tinypic.com/2updcw2.jpg
அப்பெரிய அரங்கத்தில் மிகப் பெரிய ஜனத்திரளை பார்ப்பது அந்த வயதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த பயம். அங்கு தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட், சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நாங்கள் எப்போதும் தரை டிக்கெட்தான். சரியான இடம் பார்த்து அம்மா உக்கார வைப்பாள். திரைக்கு அருகில் சென்று கதாநாயகன் வரும் நேரத்தில் கிழித்து வைத்திருந்த பேப்பரைத் தூவ அண்ணன் போய் விடுவான். கொண்டு வந்த தின்பண்டங்களை பங்கிடுவதில் எனக்கும் அக்காவுக்கும் சண்டைகள் அரங்கேறும்.

அம்மா பக்கத்து வீட்டு அத்தைகளை எல்லாம் அருகில் கூட்டி வைத்துக் கொள்வாள். தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்களின் சத்தமும், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பும், ஒலிபெருக்கியில் வரும் பாடலின் சத்தமும், வியர்வையின் நாற்றமும், மல்லிகைப்பூ வாசமும் அந்தத் தியேட்டரில் நிரம்பி வழியும்.

எந்தப் படம் ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் நான் தூங்காமல் இருந்ததில்லை. “தூங்காமல் படம் பாரு…படம் பாரு…” என்று அம்மா எழுப்புவாள். ஆனால், சினிமாவுக்குப் போய் வந்தது பற்றி பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்திற்கு கதை பேசுவேன்.

பக்கத்துவீட்டு அந்தோணியம்மா அத்தை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மாலை நேரக் காட்சிக்குப் போய் விடுவாள். ஜெயரத்தினம் அத்தை சிவாஜியின் பரம ரசிகை. சிவாஜி நடித்த படமென்றால் தினமும்கூட சினிமாவுக்குப் போவாள். ஆனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலமெல்லாம் போய், ரஜினி, கமல் என்று வந்த பின் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டாள்.

Richardsof
11th October 2014, 01:00 PM
TIRUNELVELI- REMOTE VILLAGE TENT VIEW
http://i62.tinypic.com/4g0ksi.jpg

Richardsof
11th October 2014, 01:01 PM
http://i59.tinypic.com/30063pg.jpg

Russellbpw
11th October 2014, 03:05 PM
கீற்று கொட்டகை - இந்தியா எங்கும் ஒருகாலத்தில் கிராமங்களில் மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கை கொடுத்த வசந்த மண்டபம்.

எனது சொந்த ஊரான திருத்தால என்கிற கிராமம். கேரளாவில் பட்டாம்பி என்ற ஊருக்கு அருகில் உள்ள குக்கிராமம். அங்கு பாபு என்ற கீற்றுகொட்டகை மிகப்ரபலம். இப்போது அங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ( கேரளாவில் ஏன் அதிக சதவிகித படித்தவர்கள் என்று இப்போது புரிந்துருக்குமே ?)

பள்ளி விடுமுறை நாட்களில் த்ருத்தாலா செல்வது வழக்கம். அந்த கிராமத்தின் கடவுள் " தாலத்தில் அப்பன் " - பரமசிவனின் லிங்கம் சுயம்புவாக ஒரு தட்டில் தோன்றியதால் அந்த பெயர் ! தாலம் என்றால் தட்டு என்பது பொருள்.

9 ஆவது அல்லது 11வது படிக்கும்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்தவுடன் வழக்கம் போல கிராமம் சென்றேன். தினமும் என்னுடைய கேரளா நண்பர்களுடன், அரட்டை, பாட்டு, கிரிக்கெட், கால்பந்து என்று பொழுதை கழிப்பதே ஒரு அலாதி இன்பம்.

தாத்தா மற்றும் பாட்டி மட்டுமே எங்கள் வீட்டில் அங்கு உள்ளார்கள். 9 பேத்திகளுக்கு பின் நான் பிறந்ததால் அந்த வீட்டில் "நானே ராஜா" !
இருந்தாலும் அவர்கள் வயதான காரணத்தினால் அவர்களை நான் எந்த தொந்தரவுக்கும் ஆளாக்குவதில்லை. என்ன தருகிறார்களோ அதை உண்டு, பொழுதை இப்படி கழிப்பது வழக்கம்.

போலியான நகர வாழ்க்கைக்கு நடுவே அப்படி ஒரு இடம் நமக்கு தேவை என்று இப்போது நினைப்பதுண்டு.

அங்கு உள்ள மிக பிரபல கீற்று கொட்டகை " பாபு ". இரண்டு காட்சிகள் மட்டும் ..நம்முடைய கோவை டிலைட் போல. மத்யம் மற்றும் மாலை காட்சி மட்டும். 95% மலையாள பழைய திரைப்படங்கள் மட்டும் திரையிடும் கொட்டகை. எங்கள் கிராமம் பக்கத்தில் கும்பிடி, கடவு என்ற இரு குக்ராமங்கள் உண்டு. அவர்களுக்கும் "பாபு" ஒரு திரை அரங்கே பொழுதுபோக்கு.

பெரும்பாலும் இங்கு பிரேம் நசிர், மது, சத்யன், ஜெயன், வின்சென்ட், இவர்களுடைய விறுவிறுப்பு நிறைந்த படங்கள் மற்றும் சரித்திர கதைகளம் கொண்ட வடக்கன் பாட்டு எனப்படும் தச்சோளி சஹோதரர்கள் மையமாமான படங்கள் இங்கு பெரும் பாலும் வசூலை குவித்துவிடும்.

இப்படி ஒரு தருணத்தில் ஒரு புதன் கிழமை என்னுடைய நண்பரில் ஒருவன் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்...சிரித்துக்கொண்டே ....டா..குமாரா (என்னுடைய ஊர்இல் அனைவரும் அழைக்கும் பெயர் குமார் என்பதாகும் ).நிங்களுடே ராஜ்யதிண்டே சிவாஜி கணேசன் சிநேமையா ஈஆழ்ச்சா என்று !! அதாவது உங்கள் ஊரின் சிவாஜி கணேசன் சினிமா இந்த வாரம் என்பது பொருள்.

நோடிசை வாங்கி பார்த்தேன். நடுநாயகமாக நம்முடைய நடிகர் திலகம் சுருள் வாளுடன் ஆக்ரோஷ போஸில் இடதுபுறம் பிரேம் நசிர் வலதுபுறம் ஜெயன் இவர்கள் புகைப்படம்.

கொட்டை எழுத்துக்களில் "தென் இந்திய சினிமாயுடே சிம்ஹம் சிவாஜி கணேசன் ஒப்பம் நம்முடெ ப்ரியன்கரன் நசிரும், ஜெயனும் அவதரிபிகுன்ன - தச்சோளி அம்பு !

அதை பார்த்தவுடன் வெள்ளி மதியமா அல்லது ஞாயிறா எப்போது என்ற குழப்பம் ..இருப்பினும் வெள்ளியே வென்றது !

வெள்ளிகிழமை எப்போழுதுவரும் என்ற ஏக்கத்தில் வெள்ளியும் வந்தது...மதிய உணவு முடித்து...ஒரு 12 அல்லது 15 பேர் கொண்ட குழுவாக
கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடந்து ...பாபு கீற்றுகொட்டகை நோக்கி படையெடுப்பு. நண்பர்கள் அவரது அக்காள் தமக்கை என எப்படியும் ஒரு 15 பேர் இருப்போம் என்று நினைக்கிறன்.

ருபாய் 1-25 பைசா டிக்கெட் வாங்கி உள்ளே சென்று பலகையில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடைந்த படம் தச்சோளி அம்பு. இரண்டு தியேட்டர் மக்கள் அந்த ஒரு கீற்று கொட்டகையில். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுக்குமே விசில் ..கைதட்டல் என்று...இடைவேளையில் கப்பலண்டி (வேர் கடலை) வாங்கி அனைவரும் தோல் உரித்து உண்பது இன்னொரு டைம் பாஸ்.

படம் முடிந்து வரும்போது நடிகர் திலகம் அவர்களை துப்பாகியால் சுடும் வில்லனை அனைவரும் "துஷ்டன் " என்று திட்டி தீர்த்தது இப்போதும் காதில் ரீங்காரம் !

கேரளாவை பொருத்தவரை அன்றும் சரி இன்றும் சரி...நடிகர் திலகம் அவர்களுக்கு , அவரது படங்களுக்கு இருந்த வரவேற்ப்பு போல வேறு எவருக்குமே இல்லை என்று கூட சொல்லலாம் ! மருத நாடு வீரன் படம் கூட தமிழகத்தில் 100 நாட்கள் ஓடவில்லை ஆனால் திருவனந்தபுரத்தில் 119 நாட்கள் ஓடியுள்ளது. அந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு தமிழகத்தை விட அவர் மீது பற்று கொண்ட வெறியர்கள் அதிகம் !

சென்னையில் பாரகோன், பிளாச, சித்ரா, ஸ்டார், காமதேனு, கபாலி ஆகிய திரை அரங்கில் கிட்டத்தட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய 305 இல் கிட்டத்தட்ட 210 உக்கும் மேற்பட்ட படங்கள் , திரு m g ராமசந்திரன் அவர்களுடைய 136 இல் 60 உக்கும் மேற்பட்ட படங்கள், திரு ஜெய்ஷங்கர் அவர்களுடைய 180 இல் 50 உக்கும் மேற்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். இதை தவிர விட்டலாச்சார்யா, ஜெமினிகணேசன் , அனால் இவைகள் எவையும் கீற்றுகொட்டகைகள் அல்ல ! இந்த அரங்கில் படம் பார்ப்பது அது ஒரு தனி மகிழ்ச்சி !

மிழில் முதல் சினிமா ஸ்கோப் - ராஜ ராஜ சோழன் - நூறு நாட்கள்

மலையாளம் முதல் சினிமா ஸ்கோப் - தச்சோளி அம்பு - 163 நாட்கள்

தெலுகு முதல் சினிமா ஸ்கோப் - சாணக்ய சந்திர குப்தா - 175 நாட்கள்

மூன்றிலுமே நடிகர் திலகத்தின் ஆளுமை. திரை உலகின் முழு முதற் கடவுளாக வணங்கப்படும் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மரியாதை !

Russellisf
11th October 2014, 04:07 PM
for jaisankar fans

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps02c032dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps02c032dc.jpg.html)

RAGHAVENDRA
11th October 2014, 06:39 PM
அடேயப்பா...

மலரும் நினைவுகள் அளிக்கும் உத்வேகத்தின் சிறப்பு தான் என்னே... வினோத் சார் தங்களுடைய அருமையான பகிர்வுகள் இத்திரியின் முழுமைக்கு சான்றாக விளங்குகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் பாராட்டும்.

தொடருங்கள்..

RAGHAVENDRA
11th October 2014, 06:41 PM
டியர் ஆர்கேயெஸ்
தங்களுடைய கேரள மண்ணின் வாசம், அங்கு நடிகர் திலகத்தின் ஆளுமை போன்ற பல விஷயங்கள் இத்திரியின் மூலம் நாமெல்லாம் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கிறது. தங்களுடைய அனுபவங்கள் நிச்சயம் நம்மைப் போன்ற தமிழக மக்களுக்கு புதியதாகத் தான் இருக்கும்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்..

RAGHAVENDRA
11th October 2014, 06:42 PM
யுகேஷ் பாபு சார்
இத்திரியின் பல்வேறு பரிமாணங்களில் நட்சத்திரங்களின் அந்நாளைய நிழற்படங்களும் அடங்கும். அவ்வகையில் ஜெய்சங்கர் அவர்களுடைய அபூர்வமான நிழற்படங்கள் இத்திரிக்கு பெருமை சேர்க்கின்றன.
தங்களை ஆவலுடன் வரவேற்பதோடு மேலும் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.

Russellisf
11th October 2014, 07:38 PM
கண்டிப்பாக சார் என்னால் முடிந்த அளவுக்கு இத் திரியில் பங்களிக்கிறேன்

chinnakkannan
12th October 2014, 01:23 AM
ஹாய் ஆல்..

ஹாய் ராகவேந்தர் சார்.. உங்களை வாழ்த்தவெல்லாம் எனக்கு வயதில்லை ..எனில் மை ஸின்ஸியர் நமஸ்காரங்கள் டு யூ.:).

முதன் முதலில் இங்கு வாழ்த்தலாம் என வந்தால் டெண்ட் கொட்டாய் பற்றி எரிந்துகொண்டிருந்தது..சரி அணைந்த பிறகாவது வரலாம் என்றால் முட்டை போண்டாவெல்லாம் போடவேயில்லை (ஆமாம் மாயமோதிரம் ராஜஸ்ரீ போஸ்டர் போட்ட டெண்ட் கொட்டாய் படம் கிடைக்கவில்லையா எஸ்.வி.சார்:) )

நடுவில் ராஜேஷ் மதுரை நியூசினிமாவின் ஸ்டில் ( நான் தினசரி அதைக் க்ராஸ் செய்து தான் தெ.ஆ.மூ.வீதியில் இருந்த எங்கள் கடை மற்றும் என் ஆடிட்டரின் ஆஃபீஸிற்குச் செல்ல வேண்டும்) ம்ம்..

எனில் சொன்னாற்போல நான் ஒரு காம்ப்ளான் பாயாக இருந்து வளர வளர மதுரை சிட்டி மேனாக (22 வயது வரை) இருந்தவன்.. எனில் கீற்றுக் கொட்டகை என அழைக்கப்படும் டெண்ட் கொட்டாய் எனத்தமிழில் அழைக்கப்படும் தியேட்டர்களுக்குச் செல்ல வாய்ப்பில்லை..இல்லை இல்லை வாய்ப்பில்லாமல் தான் இருந்தது..

ஆனால் ஆண்டவனுக்கும் விதிக்கும் யாரோ கிச்சு கிச்சு மூட்டினார்களோ தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஹி ஹி எனமெளனமாகச் சிரிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது..

அப்போது கல்லூரி முடித்து மேற்படிப்பிற்குச் சேர்ந்திருந்த சமயம்..எனது சகோதரியின் கணவர் வடக்குமாங்குடியில் பேங்க் மேனேஜர்.. வீடு அய்யம்பேட்டையில் வைத்திருந்தார்.. எனில் ஒரு பரீட்சைக்கான விடுமுறையில் அங்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது..

இந்தத் தஞ்சாவூர் டு கும்பகோணம் பாதையில் இடையில் வருவது அய்யம் பேட்டை.. இளம்பருவம்..கல்லூரி முடித்த இளங்காளை என்பதால் பச்சைப் பசேல் வயல்கள் பார்ப்பதற்கே கொஞ்சம்பரவசம்..ஆவல் எல்லாம் இருந்து அய்யம்பேட்டைக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து சேர்ந்தால்..மனதுக்குள்பலவிதபட்டாம் பூச்சிகள் வந்து சிறகுகளை பட் பட் படாரென அடித்தன..

காரணம் அவள்..(பெயர் வேண்டாமே) என் சகோதரியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ஆரணங்கு..படித்துக் கொண்டிருந்தது டீச்சர்ஸ் ட்ரெய்னிங்க் கோர்ஸ்.. அப்பாவிற்கு பிஸினஸ்..ஒரு அண்ணா ஒரு தம்பி..அவ்ர்களுக்கு என்ன பிஸினஸ் என்றால்…தறி..யெஸ்..செளராஷ்டிரா தான்..(டி.எம்.எஸ் உங்களுக்கு ரிலேஷனா.. போங்க உங்களுக்கு ஆனாலும் அதீதமான கற்பனை – என அந்தக்காலத்திலேயே எனக்கு சர்டிஃபிகேட் கிடைத்ததாக்கும்)

இருந்தாலும் பாவாடை சட்டை தாவணி போட்டவண்ணம் ஒரு பைங்கிளி வீட்டிற்குள்ளேயே வந்து பேசுவது இளம்பருவ அந்தக்கால ஆடவர்களுக்கு ஒரு இயல்புக்கு மாறான விஷயம் தான்.. அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்..கற்றுக் கொண்ட செள் மொழியில் நினைவிலிருப்பது ஒகமாவ் (வேகமா வா) மட்டுமே..(ம்ஹீம்..கற்பனையைக் கன்னாபின்னா என ஓட விடாதீர்கள்!)

அவளுக்கு ஒரு அண்ணன் என்றிருந்தேனே..அவன் பெயர் பிரபாகரன் என நினைக்கிறேன்.. ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செய்தால் ஒரு புளிப்பு ரைத்தா தந்தால் என்ன செய்வீர்கள்..அதைப் பொறுத்துக் கொண்டு மற்ற விஷயங்கள் நன்றாக இருக்கிறதா எனப் பார்ப்பீர்கள் அல்லவா..அதே போல அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது..காலப்போக்கில் அவன் கொஞ்சம் ஹெல்ப் செய்ததால் (டேய் ப்ரபாகரா அந்தப் பெட்டிக் கடை வரைக்கும் போய்ட்டு வரலாமா.. ஓ..வரேங்க..) கொஞ்சம் நட்பும் ஆனான்..

அந்தப் ப்ரபாகரன் ஒரு நாள் வந்தான் என்னிடம்.. கண்ணா..

என்னா..

சினிமா போகலாமா

தஞ்சாவூரா..அக்கா வையுமே.. வந்திருக்கறது படிக்கறதுக்குப் ப்ரபாகரா.. ஹாய்..”

“ஹாய்” என்றது எதற்கோ என் சகோதரியைப் பார்க்க வந்திருந்த அவளிடம்..!

அவள் ப்ரபாகரனை முறைத்து,என்னிடம் “ நீங்க இவனோடல்லாம் சேராதீங்க” என்று விட்டு உள்ளே செல்ல ப்ரபாகரன் ஒன்றுமே நடவாதது போல் “ வர்றீங்க்ளா.. தஞ்சாவூர்லாம் இல்லை.. பசுபதி கோவில் விஜயா” என்றான்

என்னப்பா படம்

படகோட்டிங்க..

ஏற்கெனவே சாந்தி தியேட்டர்ல மதுரைல பார்த்துருக்கேனே..ஆனா கொஞ்சம் 4 வருஷம் இருக்கும்..

பின்ன என்ன.. உங்க அத்திம்பேர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.. நைட் ஷோ..இங்கருந்து அண்ணாசிலை ஸ்டாப்ல இருந்து மொஃபஸல் பஸ் பிடிச்சுபசுபதி கோவில் ஸ்டாப்ல இறங்கிக்கலாம் (3 கி.மி என நினைவு) திரும்பறச்சே ஏதாவது பஸ் மாட்டும் வந்துடலாம் என்னாங்கறீங்க..

சரி எனச் சொல்ல அவன் உடனே எங்கள் வீட்டின் உள் சென்று உரிமையாய் போனெடுத்து என் அத்திம்பேரின் பாங்க்கிற்குப் போன்செய்து அவரிடம் பேசி ஓகே..ஆனா எதுக்கும் அவனோட அக்காட்ட கேட்டுக்கோ என வந்த பேச்சால் என் சகோதரியிடமும் பேசி ( நைட் ஷோவா போகறீங்க.. இவளே ஒங்க அண்ணன் பார்த்து கண்ணாவக் கூட்டி வருவானா..பாவம் அதுக்கு சூது வாது தெரியாது… போங்க மேனேஜர் வீட்டம்மா ..என் அண்ணா எட்டூருக்குப் போய்ட்டு வந்துருக்கான் ஒண்ணும் ஆகாது.. நானும்கூட ப் போகலம்னு ஆசை என அவளின் குரல் வர டொய்ங்க்க் என்று எம்ஜிஆர் தனது ரதத்தைக் கொணர்ந்து எனக்குத் தர நானும் அவளும் அதில் ஏறி ராஜாவின் பார்வை எனப் பாட ஆரம்பிக்கையில் இது என்ன அவளின் குரல் தொடர்கிறதே! ஆனா நைட்ஷோன்னா ப்ராப்ளம்க்கா காலைல வேலை இருக்கு நிரம்ப எனக் கவிதை முடித்தது..

ப்ரபாகரன் சற்று நிம்மதியாய் (ஏனெனில் அவன் அப்பாவிடம் அவள் பெர்மிஷன் கேட்டு அவனுக்குக் கொடுத்துவிடுவாள்) பெருமூச்சு விட்டு ஒரு ஒன்பது மணிக்குக் கிளம்பலாம் என்று சொல்லிக் கிளம்பிச் சென்றான்..

ஒன்பது என்று சொன்னவன் வந்தது ஒன்பதேகாலோஒன்பதரையோ..பின் விசுக்விசுக்கென்று அய்யம்பேட்டை அண்ணா சிலை ஸ்டாப்பிற்குச் சென்று அந்த இருளில் (ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை) இருகண்களுடன் வரும் மொபஸல் பஸ்ஸிற்காகக் காத்திருந்து ஏறி இரண்டு ஸ்டாப்புகளோ என்னவோ சரிவர நினைவில்லை கடந்து இறங்கி பசுபதிகோவிலில் கொஞ்சம் நடந்தால் பளீரென மின்னலடிக்கும் இளம்பெண் சிரிப்பாய் மின்னிக்கொண்டிருந்தாள் விஜயா.பலப்பல ட்யூப்லைட் வெளிச்ச் உபயத்தில்.. .கொண்டிருந்தது விஜயா டூரிங்க் தியேட்டர்..

முன்னே எம்ஜிஆர் மீனவத்தொப்பியுடன் வாங்க என மெளனமாய் வரவேற்க கோப விழி விழித்த சர்ரோஜா தேவி போஸ்டர். உள்ளே சென்றால்.. கண்ணா தரை டிக்கட்டே வாங்கட்டா..ஏம்ப்பா எனக்குப் பழக்கமில்லையே..சரி என மனசில்லாமல் சேர் டிக்கட் வாங்கிக் கொடுத்து விட்டு அவன் தரைடிக்கட் பக்கம் போகப் பார்க்க டேய் நானும் வர்றேன் என அவனுடனேயே சேர்ந்து தரை டிக்கட்டிற்கு ச் சென்று விட்டேன்..

என்னதானிருந்தாலும் கல்லூரி இளைஞன் ஆன காரணத்தினால் பேண்ட் தான் போட்டிருந்தேன்..கொஞ்சம் டைட்..தரையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தால் ர்ர்ர் எனச் சத்தம்..என்னகண்ணா வயிறு சரியில்லயா.. அடப் போடா ப்ரபாகரா. ஒண்ணும் இல்லை எனச் சமாளித்து உட்கார்ந்து (பெரிதாய்க் கிழிந்திருக்குமோ.. இருக்கிற நல்லபேண்ட்டில் ஒன்றாயிற்றே இது) ஆ எனப் படம் பார்க்க ஆரம்பித்தேன்..

நன்றாகவே இருந்தது அந்த அனுபவம்.ப்ரபாகரன் உச்சியிலோ சைடிலோ இருந்த ஃபேன் பக்கமாகவே அமர்ந்திருந்தான்.. படம் வந்து இரண்டாவது வாரமோ என்னவோ தியேட்டரில் அதிகக் கூட்டமில்லை. கொஞ்சம் சேர்பக்கம் திரும்பிப்பாருங்க..பார்த்தால் சேர் டிக்கட்டில் குறைந்த நபர்களே அமர்ந்திருந்தன.ர்.. தரை டிக்கட்டில் சுமாரான கூட்டம்..

படம் ஆரம்பித்து தரை மேல் பிறக்கவிட்டான், என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன்போனாண்டி எனபாடல்க்ள் வந்து போக இரண்டு மூன்று இண்டர்வல் என நினைவு.. படம் ஒரு வழியாய் முடிந்தது அரெளண்ட் இரண்டு இருக்கும்..

இப்ப என்னடா பண்ணப்ரபாகரா..

பஸ் கிடைச்சா போகலாங்க..

அப்படின்னா..

இல்லைன்னா நடராஜா தான்..

சாலையில் நின்று வந்தபஸ்ஸை நிறுத்தி ஏற முயற்சிக்கலாம் என்று பார்த்தால் எதுவும் நிற்கவில்லை..மோஸ்ட்லி திருவள்ளுவர் தான்..அவர்கள் நிறுத்தவும் மாட்டார்க்ள்..எனில் ப்ரபாகரன் சொன்னதுபோல நட ராஜா தான்..

நான் ப்ரபாகரன் பின் தியேட்டரில் சந்தித்த மற்றுமிரு இளைஞர்கள் (ப்ரபாவுக்குத் தெரிந்தவர்கள்) என நடக்க ஆரம்பித்தோம்..

சாலை இருபுறங்களிலும் கொஞ்சம் விளக்குகள் இருந்தாலும் மோஸ்ட்லி இருள்..தவிர மரங்களும் இருக்க கொஞ்சம் ச்ச்சிலீர் காற்றும் அடிக்க நட நட நடராஜா.. நேர் மேலே நிலா.. அய்யோ பாவம் கண்ணா இன்னும் இளச்சுடுவானேன்னு நினைத்ததோஎன்னவோ அதுவும் கூட வந்தது..(அப்போது நான் நன்கு ஒல்லியாய் இருப்பேனாக்கும்)

ஒருவழியாய் கிட்டத்தட்ட மூன்றரை வாக்கில் வீட்டிற்கு வந்து அக்கா கீழே ஒளித்துவைத்திருந்த வீட்டுச் சாவியை எடுத்துத் திறந்து ஹாலிலேயே டபக்… பட்டெனத் தூக்கம்..

மறு நாள்காலை அக்கா நன்றாகவே ப்ரபாகரனைக் கூப்பிட்டுத்திட்டினாள்.. நீ பாட்டுக்குப் பையனை ( நான் தான்!) ராவேளைல இப்படி நடத்திக்கூட்டுக்கிட்டு வரலாமா..ஏதாவது காத்து கருப்புல்லாம் அடிச்சா என்ன ஆறது.. ஏண்டி இவ்ளே நீயாவது முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது என அவளிடமும் கேட்க அந்தப் பெண்ணின் கண்ணோரம் நீர்.. எனக்குத் தெரியாதுக்கா இது இப்படிச் செய்யும்னு என அண்ணனைக் கோப முறை முறைத்து விட்டு என்னருகில் வந்து மெல்ல மென்மையாய் என்னைக் கரம் தொட்டு “ஸாரிங்க” என்றாள்… எனக்கு நிஜம்மாகவே பேய் (மோகினி) அறைந்தாற்போல சிலிர்த்தது..!

(பி.கு. அடுத்த இருவருடங்களில் என் அத்திம்பேருக்கு மறுபடிமாற்றல் வந்து சென்னை சென்றுவிட நான் ப்ரபாகரனையும் அவளையும் மீண்டும் சந்திக்கவேயில்லை.)

Scottkaz
12th October 2014, 04:54 AM
ராமமூர்த்தி சார்
தங்களுக்கு என் முதற்கண் அன்பான வரவேற்பை அளிப்பதில் மகிழ்கிறேன். அருமையான நிழற்படம். அந்நாட்களின் திரையரங்குகளைப் பற்றிய விரிவான ஆய்வில் தாங்கள் அளித்துள்ள நிழற்படத்தில் இருக்கும் செமி பெர்மனெண்ட் திரையரங்குகளும் இடம் பெறும்.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை வேண்டுகிறேன்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி திரு ராகவேந்திரன் சார்
http://i59.tinypic.com/2zje04j.jpg
http://i57.tinypic.com/aykrhg.jpg
http://i58.tinypic.com/30icn6f.jpg
வேலூர் அண்ணா கலை அரங்கம்
தற்போது இந்த அரங்கமும் சபாவாக மாறிவிட்டது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th October 2014, 06:40 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . நீங்கள் துவக்கிய இந்த கீற்று கொட்டகை - திரி கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . இன்றைய தலை முறையினர் தெரிந்த கொள்ள வேண்டிய பல அபூர்வ தகவல்கள் இணயத்தில் கிடைப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்


டூரிங் டாக்கீஸில் பார்த்திட்ட அந்த இனிமையான நாட்கள் -படங்கள் - அனுபவங்கள் நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு .

மறந்தே போய் விட்ட ஒரு சரித்திர சான்றை நீங்கள் நினைவு படுத்தி ,அதை திரியில் புதிய உத்வேகத்துடன் அழைத்து செல்ல காரணமான உங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றி .

எம்.ஜி.ஆர்.கூட திருமலை டாக்கீஸுக்கு வந்தாரே... சிவாஜி தன்னோட பட ரிலீஸ் அன்னிக்கு இங்க வந்தாரே...’ என தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை இந்த தியேட்டருடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள் 70 வயதைக் கடந்த செங்கல்பட்டு ரசிகர்கள். 'திருமலை டூரிங் டாக்கீஸ்’- சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ். 'காஞ்சி முருகன் - சென்னை கெயிட்டி - செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம்.
http://i59.tinypic.com/2ldkjl2.jpg
இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு, திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். 1940-ல் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக பொன்விழாவைக் கொண்டாட சில மாதங்களே இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிறுத்திக்கொண்டது இந்தத் திரை அரங்கம். இங்கு இறுதியாகத் திரையிடப்பட்ட படம் 'வாழ்வே மாயம்’!

''அது ஒரு பொற்காலம். 1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூணே முக்காலணா டிக்கெட். அதே வசதியைக்கொண்ட திருமலையில் ரெண்டணாதான். பி.யு.சின்னப்பா வோட 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளோட 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’னு அந்தக் கால சூப்பர் ஹிட் திரைப்படங்களை முட்டி மோதி பார்த்தது இன்னமும் நினைவில் இருக்கு. டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம்.

ஜாவர் சீதாராமன் போலீஸா நடிச்ச 'அந்த நாள்’ படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தேன். தன் மகன்களில் ஒருத்தரான கிட்டப்பாவை இதுக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார் திருமலை நாயுடு. அப்பவே புரொஜக்டரை இத்தாலியில் இருந்து வரவழைச்சார்!'' என பழைய நினைவுகளில் மூழ்கிய காவலர் கணேசன், ''ஏதோ இன்னிக்குத்தான் நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் பண்றாங்கனு நினைப்பீங்க. பாகவதரோட 'திருநீலகண்டர்’ படத்துக்கு அந்த நாள்லயே அப்படி நடந்திருக்கு. 'நீலகருணாகரணே...’னு பாகவதர் பாடிட்டு வர்ற காட்சிகளில் எல்லாம் விசில் சத்தம் காதைப் பிளக்கும். இப்பவும் தியேட்டரைக் கடந்து போகும்போது அன்னிக்குப் பார்த்த படப் பாட்டு எல்லாம் மனசுல காட்சியா ஓடும்'' என்று சோகமாகிறார்.

இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம். கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் ஸ்ரீதர் படித்து இருக்கிறார். பின்னாளில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.

தியேட்டர் வாசலில் பழக் கடை நடத்தி வந்த சந்திரசேகர், ''ஓஹோனு இருந்த இந்த தியேட்டரை வெளியாட்கள் லீஸுக்கு எடுத்து நடத்தினாங்க. அவங்களும் கட்டுப்படி ஆகலைனு விட்டுட்டாங்க. 'மாட்டுக்கார வேலன்’ படம் வந்தப்ப இங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை நின்னுச்சு. 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் பூஜை போட்டுத்தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு'' என்கிறார்.

தியேட்டரின் தற்போதைய நிலை குறித்து சினிமா விநியோகஸ்தரும் நாயுடுவின் பேரன்களில் ஒருவருமான நந்தகுமார், சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்... ''திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் எங்கள் தாத்தாவுடன் நட்பில் இருந்தார்கள். நாகேஷ் எப்பப் படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை மிஞ்சுதுய்யா. என்ன வித்தை பண்றீங்க?’னு கேட்பாராம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும் சென்னையில் இருக்கும்போது எப்போதாவது படம் பார்க்க வருவார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஸ்ரீதரோட எல்லாப் படங்களையும் நாங்க ரிலீஸ் செய்தோம். ஸ்ரீதர் எங்க சித்தப்பாவின் நண்பர். அவர் கல்யாணம்கூட எங்க தாத்தா தலைமையில்தான் நடந்தது. பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயானு ஏகப்பட்ட பேர் இங்க வந்து இருக்காங்க. 1979-ல் தாத்தா இறந்த பிறகு தியேட்டரை அப்பா கோவிந்தராஜன், சித்தப்பாக்கள் புருஷோத்தமன், கிட்டப்பா எடுத்து நடத்தினாங்க.

தியேட்டரை மூடினப்ப குறைந்தபட்ச கட்டணம் 65 பைசாதான். பெஞ்ச் டிக்கெட் 1.75 பைசாதான். இப்ப தியேட்டரின் பழம்பெருமையும் கட்டடமும்தான் மிஞ்சி இருக்கு. இருந்தாலும் தியேட்டரை மீண்டும் திறக்க முயற்சி எடுத்துட்டு இருக்கோம். திருமலை டாக்கீஸ் மறுபடியும் செங்கல்பட்டின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறும்னு நம்புறேன்!'' என்கிறார் நந்தகுமார்.

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

Richardsof
12th October 2014, 06:53 AM
எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.

புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!

இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.

மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.

ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.
courtesy - net

RAGHAVENDRA
12th October 2014, 07:54 AM
வினோத் சார்
செங்கல்பட்டு தேனி மாவட்டம் என டூரிங் டாக்கீஸ்களைப் பற்றிய ஒரு மினி டூரே அழைத்துச் சென்று நினைவுகளையும் அந்த நாட்களுக்கு கொண்டு சென்று விட்டீர்கள். சூப்பர் சார்

RAGHAVENDRA
12th October 2014, 07:59 AM
சி.க. சார்
பசுபதிகோயில் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான கோயில் உண்டு. அந்த வகையில் ஒரு முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இன்றும் அந்த கும்பகோணம் தஞ்சாவூர் பாதை ரம்மியமாகத் தான் காட்சியளிக்கிறது. அந்த சாலை சற்றே குறுகலாகத் தான் இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயில். தாங்கள் சொல்லும் அந்த டூரிங் டாக்கீஸ் அந்த குறுகிய தெரு வழியாகத் தான் போக வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரையில் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் அந்த தெருவில் கோயிலுக்கு சற்று முன்னர் வலது புறத்தில் மிகப் பெரிய பரப்பிலான இடத்தில் ஒரு கட்டிடம் பழைய தோற்றத்தில் இருந்தது. ஒரு வேளை ஏதேனும் கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கலாம். தாங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்டிடம் தான் தாங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸாக இருக்கலாம்.

அந்த பிரபாகரனை அதற்குப் பிறகு பார்த்தீர்களா...

RAGHAVENDRA
12th October 2014, 08:02 AM
ராமமூர்த்தி சார்
வேலூர் அண்ணா கலையரங்கம் நிழற்படங்கள் அருமை...
அது முனிசிபாலிட்டியினுடையதா அல்லது தனியாருடையதா..
தற்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா...
ஏனெனில் பல பிரபல கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் படித்ததாக நினைவு

RAGHAVENDRA
12th October 2014, 08:11 AM
சென்னை அம்பத்தூர் லூகாஸ் டிவிஎஸ் பின்புறம் கிட்டத்தட்ட இரண்டு கிமீ. அல்லது அதற்கும் மேலான தூரம் நடந்து சென்றால் மன்னூர்பேட்டை பகுதி வரும். அங்கே ராணி என்றொரு கீற்றுக் கொட்டகை இருந்தது. இதைப் பற்றி நான் முன்பே நடிகர் திலகம் திரியில் குறிப்பிட்டுள்ளேன். நாங்கள் திருவல்லிக்கேணியிலிருந்து செல்வோம். அபூர்வமான நாங்கள் பார்க்காத நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை அந்தக் கீற்றுக் கொட்டகை ஏற்படுத்தித் தந்தது. காவேரி இல்லற ஜோதி அவள் யார் போன்ற அபூர்வமான படங்களை அந்த டெண்ட் கொட்டகையில் தான் நாங்கள் பார்ப்போம். எங்கள் நண்பர்கள் குழுவில் - அனைவருமே சிவாஜி ரசிகர்கள் - ஒருவர் அந்தக் கொட்ட்கையில் ஓடும் நடிகர் திலகம் படத்தைப் பற்றிய தகவலைச் சொல்லி விடுவார். எந்த பழைய படமென்றாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான், அதிக பட்சம் ஒரு வாரம் ... என்ற வகையில் சுழற்சி முறையில் தான் திரையிடுவார்கள் - எனவே உடனே நாங்கள் மறுநாளே எப்பாடு பட்டாவது அப்படத்தைப் பார்க்க சென்று விடுவோம். தகவல் சொன்ன நண்பருக்கு அந்த ஏரியா அத்துப்படி என்பதால் அவர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக கிளம்புவோம் -- வீட்டில் திட்டு வாங்காமலா கட்டாயம் உண்டு - அப்போதெல்லாம் நேரடி பஸ்வசதி இல்லை இரண்டு அல்லது மூன்று பஸ் மாறி செல்வோம். படம் இரவு 1 மணிக்கு முடியும் அங்கிருந்து நடந்தே பேருந்து நிறுத்தத்திற்கு வருவோம்.. டீக்கடை கூட இருக்காது... வெளியூர் பஸ் மட்டுமே வரும். அதில் ஏறி சென்ட்ரல் வந்து அங்கிருந்து நடந்தே திருவல்லிக்கேணி வருவோம்...

இரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் சென்றால் வீட்டில் கதவு திறக்கும் பிரச்சினை என்பதால் நண்பன் வீட்டில் பொழுதைக் கழித்து விட்டு காலை 5 மணிக்கு எழுந்து வீட்டுக்குச் சென்று அரைகுறைத் தூக்கம் முடித்து அன்றாட கடமைகளுக்கு ஆயத்தமாவோம்.

மறுநாளைய விவாதம் முழுவதும் முதல் நாள் பார்த்த படத்தைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியுமே இருக்கும்..

இப்படிப்பட்ட சுவையான மறக்க முடியாத அனுபவங்களை இன்றைய தலைமுறை பெரிதும் மிஸ் பண்ணுகிறது...

vasudevan31355
12th October 2014, 08:33 AM
ராகவேந்திரன் சார்,

டூரிங் டாக்கிஸ் அதாவது கீற்றுக் கொட்டகை என்ற இந்தத் திரியில் சிவாஜி புகழ் பாடும் இந்தக் கட்டுரையைப் பதிந்ததற்கு நீங்கள் என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும். ஏனென்றால் சிவாஜி புகழ் பாடி விடும் திரியாக இந்த திரி போய் விடக் கூடாதே என்ற கவலையில் சிலர் சாப்பிடாமல் கூட கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிவாஜி பற்றிய பதிவுகள் வந்தால் சலிப்பு வேறு தட்டி விடும். சிவாஜி பற்றி முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு முன் நாம் எம்மாத்திரம்?

அதனால்தான் பயமாய் இருக்கிறது. இந்த வீணாய்ப் போன சிவாஜி பதிவுக்கும், கீற்றுக் கொட்டகைக்கும் என்ன சம்பந்தம் என்ற அறிவார்ந்த கேள்விகள் வேறு வரும். பாவம். நீங்கள் திரியை ஆரம்பித்தவர் என்று அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வேறு வரும். இந்தப் பாவமெல்லாம் எனக்குத் தேவையா?

இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு சிறு அறிவை வைத்து ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்துதான் இந்த பதிவை பயந்து பயந்து இங்கே இடுகை செய்கிறேன். இந்த கட்டுரையின் ஆசிரியர் திரு. மானா பாஸ்கரன் சிவாஜி என்ற நடிகரின் 'பாபு' படத்தை தன் தந்தையுடன் மணவாளம்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள 'லஷ்மி டாக்கீஸ்' என்ற கொட்டகையில் பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

அதனால்தான் இந்த பதிவு கீற்றுக் கொட்டகை திரியில் இட தகுதி மற்றும் பொருத்தம் வாய்ந்தது என்ற எனக்குத் தெரிந்த சிற்றறிவில் இதைப் பதிவிட்டுள்ளேன். (அந்த லஷ்மி டாக்கீஸ் கீற்றுக் கொட்டகையாக இருக்க, அப்புறம் தியேட்டர் பில்டிங் ஆக இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அது வேறு கீற்றுக் கொட்டகை திரியில் சிமெண்ட் கட்டிட திரையரங்கைப் பற்றி எப்படிப் போடலாம் என்று கேள்வி வருமோ என்று வேறு இன்னொரு பயம். 'அஞ்சி அஞ்சிச் சாவார்' கதைதான் என் கதை)

திரிக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவை நீக்கி விடுங்கள். ஏனென்றால் நான் சீனியர் ஹப்பர் என்றாலும் திரி தொடங்கியவர் எவரும் பதிவுகளை நீக்கிவிடலாம் என்ற 'மகா உண்மை' தெரிந்தவன். ரெண்டாவது எனக்கு என் பதிவுகளை இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஹப்பராக இருந்தும் டெலிட் வேறு செய்யத் தெரியாது. என்ன பண்ணித் தொலைய! எனக்கு இருக்கும் மூளை அவ்வளவுதான். நான் ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா வேறா? எனவே பிடிக்கவில்லை என்றாலோ, ரூல்ஸ் மீறி இருந்தாலோ, சம்பந்தம் இல்லை என்றாலோ நீங்கள் இந்தப் பதிவை எடுத்து விடலாம்.


இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள திரு.மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.

'நான் சிவாஜி கட்சி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg.html)

JamesFague
12th October 2014, 08:53 AM
Mr Raghavendra Sir,


As far as I am concerned the Anna Kalaiyarangam in Vellore is under the control of Vellore Corporation. But I do not
know whether it is correct or not and they used to screen films when I was in Chittoor.

Gopal.s
12th October 2014, 09:46 AM
கீற்று கொட்டகை.

என்னை போல பாக்கியம் செய்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. உலகத்தில் எவ்வளவு உன்னதங்கள்,இன்பங்கள்,வித வித அனுபவங்கள் உண்டோ அத்தனையும் அடைந்திருக்கிறேன்.

1950 களில் பட்டதாரி அன்னை(உயர்நிலை பள்ளி ஆசிரியை), பொறியியலாளரான தந்தை. ஆனாலும் எங்கள் மேல் எதையும் திணிக்காத முற்போக்கான ,பிள்ளைகளுக்கு நண்பர்களாக மட்டுமே இருந்த (60 களில் இது லட்சத்தில் ஒருவருக்கு கூட வாய்க்காது)உன்னத பெற்றோர்கள். ஜவகர் பள்ளி ஆங்கில கல்வி தவிர்த்து, நான் நண்பர்களுடன் என்.எல்.சி பள்ளியில்தான் படிப்பேன் என்றதும் மறுக்காமல் என்னை அனுமதித்த பெற்றோர். பத்தே வயதில் என் தேர்வுக்கு மதிப்பளித்தவர்கள்.நெய்வேலியில்,என்.எல்.சி பள்ளிகளில் கிட்டத்தட்ட 8 வயதில் மூத்த சக மாணவர்கள். அதிகாரிகள்,
மேற்பார்வையாளர்கள்,தொழிலாளர்கள்,நிரந்தரமற்ற பணியாளர்கள்,கூலிகள் அத்தனை மாணவர்களும் அருகருகே ,ஒரு நகர சூழலில்.பெற்றோர்களோ ,சாதி,மத,அந்தஸ்து வித்யாசம்
பாராத முற்போக்காளர்கள்.

இவர்கள் எல்லோருடனும் நட்பு பேணும் பாக்கியம். திடீர் குப்பம்,
தெற்கு மேலூர் என்று ராயப்பன்,மீனாட்சி சுந்தரம்,ராஜு,ராமசந்திரன் என்று குடிசை வீட்டு நண்பர்கள்.இவர்களுடன் தை பூசம்,பங்குனி உத்திரம்,இலவச சினிமாக்கள்,கண்காட்சிகள்,பொருட்காட்சிகள்,தொடர ்ந்த சைக்கிள் சுற்றுக்கள்,ரெகார்ட் டான்ஸ் ,கீற்று கொட்டகை என்று சுற்றியிருக்கிறேன்.

சொரத்தூர் ஜோதி,முத்தாண்டி குப்பம் (பெயர் மறந்து விட்டேன்),ஆடுதுறை ஆர்சியே,திருபுவனம் சாந்தி,திருவிடை மருதூர் ஸ்ரீதரன்,குத்தாலம் (பெயர்?)என்பவை கிட்டத்தட்ட பழைய படங்கள் அனைத்தும் நான் பார்க்க உதவியவை. சேர்,பேக் bench போக வசதியிருந்தும் (தரை- 25 காசு, பெஞ்ச் 35 காசு,back bench 60 காசு, மடக்கு சேர் 90 காசு) , தரையில் மற்ற நண்பர்களுடன் அமர்ந்து படங்களை ருசிப்பேன். (நாலு இண்டர்வல் .நடு நடுவில் ரீல் மாற்றம்,ரீல் அறுந்து போதல்).சமயத்தில் ரீல் வந்து சேராது. மாற்று படம் போட படும்.கார்பன் நெருக்கி வைக்காமல் அவ்வப்போது இருட்டு . ஆனாலும் என்னை நான் வெளியிட்டு ,சுதந்திரமாக படத்தை அனுபவிக்கலாம். கத்தலாம்.கை தட்டலாம்.விசிலடிக்கலாம்.குதிக்கலாம். நண்பர்களுடன் பேசலாம்.என்ன ஒரு அனுபவம்?ஆனாலும் வெற்றிலை எச்சில்கள் ,சில சமயம் சிறு நீர் நாற்றம் படுத்தியதால் ,பெற்றோர் எனக்கு கொடுத்த 1.50 ஐ, நண்பர்களுக்கு பேக் பெஞ்ச் டிக்கெட் வாங்கி (25 காசு அவர்கள் மீதி என் பங்கு) upgrade செய்து விடுவேன். (அவர்களையும் சிவாஜி ரசிகர்களாக upgrade செய்து விடுவேன்)

நான் சைட் அடித்த பெண் நண்பிகள் ,டைப் ரைட்டிங் வகுப்புகள் சேர்ந்த போது ,கூட சேரும் சபலம் வந்தாலும் சேராமல் விட்டது ,கம்ப்யூட்டர் காலத்தில் வேகமாக டைப் பண்ணும் வித்தையை வளர்த்து உதவியிருக்கும்.

கண்ணா மணி,ஸ்ரீதர்,சாமா என்ற திருவிடைமருதூர் ,திருபுவனம் கீற்று நண்பர்கள் எங்கிருக்கிறார்களோ?நெய்வேலி நண்பர்கள் தேடுவது சுலபம். சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்.மெயின் பஜார் கடை வியாபாரி. corporation worker .கோயில் அர்ச்சகர் .U .S .A ,australia என்று எங்காவது பீராய்ந்து தேற்றி விடலாம். ஒருவர் கிடைத்தால் அவர் மூலம் இன்னும் 5 பேர். திருவிடை மருதூர் நண்பர்களைத்தான் காணவே முடிவதில்லை.

நன்றி. என் பெற்றோர்களே. வீட்டுக்கு வரும் துப்பரவு தொழிலாளிக்கு அதே டம்ளர் தண்ணீர். மூத்தவராக இருந்தால் யாராக இருந்தாலும் அவர் என்று சொல்லும் மரியாதை .என்று என்னை செதுக்கியதற்கு.(ஆனாலும் எனக்கு efficiency குறைந்த ஏனோ தானோ நபர்களை அவர்கள் எந்த தொழில் எந்த நிலை கொண்டவரானாலும் பிடிக்காது.)
நன்றி நெய்வேலி. நன்றி என் நண்பர்கள்.



இன்னும் கூட எனக்கு அனைத்து தரப்பிலும் என்னை நன்கு புரிந்த உயிர் நண்பர்கள் உண்டு. படிப்பு,பணம்,அந்தஸ்து,உலக அனுபவம் இவை என் தலைக்கேறாமல் என்னை தரையில் வைத்திருப்பவை ,என் கீற்று கொட்டகை அனுபவங்களே.

vasudevan31355
12th October 2014, 01:03 PM
கோ,

கலக்குகிறீர்கள். என்ஜாய் செய்து படித்தேன். நெய்வேலி ஒரு சுவர்க்க பூமிதான். நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கலாம். அதனால்தான் கொஞ்சம் சிரமமில்லாமல் பதிவுகளும் இட முடிகிறது.

நீங்கள் குறிப்பிட நினைக்கும் டூரிங் செடுத்தான்குப்பம் அன்னை என்று நினைக்கிறேன். முத்தாண்டி குப்பத்துக்கு செடுத்தான்குப்பம் தாண்டித்தான் போக வேண்டும்.

நெய்வேலி என்று டைப் செய்து உங்கள் உயிர் நண்பர் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் என்ன அர்த்தம்.? 'என்னை' என்று அர்த்தம்.

Scottkaz
12th October 2014, 01:09 PM
முனிசிபாலிட்டி control லில் உள்ளது திரைப்படங்கள் போவதில்லை வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது


ராமமூர்த்தி சார்
வேலூர் அண்ணா கலையரங்கம் நிழற்படங்கள் அருமை...
அது முனிசிபாலிட்டியினுடையதா அல்லது தனியாருடையதா..
தற்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா...
ஏனெனில் பல பிரபல கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் படித்ததாக நினைவு

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

chinnakkannan
12th October 2014, 02:06 PM
சி.க. சார்
பசுபதிகோயில் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான கோயில் உண்டு. அந்த வகையில் ஒரு முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இன்றும் அந்த கும்பகோணம் தஞ்சாவூர் பாதை ரம்மியமாகத் தான் காட்சியளிக்கிறது. அந்த சாலை சற்றே குறுகலாகத் தான் இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயில். தாங்கள் சொல்லும் அந்த டூரிங் டாக்கீஸ் அந்த குறுகிய தெரு வழியாகத் தான் போக வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரையில் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் அந்த தெருவில் கோயிலுக்கு சற்று முன்னர் வலது புறத்தில் மிகப் பெரிய பரப்பிலான இடத்தில் ஒரு கட்டிடம் பழைய தோற்றத்தில் இருந்தது. ஒரு வேளை ஏதேனும் கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கலாம். தாங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்டிடம் தான் தாங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸாக இருக்கலாம்.

அந்த பிரபாகரனை அதற்குப் பிறகு பார்த்தீர்களா...

ராகவேந்தர் சார்.. பல வருடங்கள் ..கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இருக்கும்.. எனில் படம் போனது மட்டும் நினைவில்.. ப்ளஸ் அந்த இரவு நடை.. நெஜம்மாகவே த்ரில்ல்.. அந்தக் கட்டடமெல்லாம் நினைவில் கொஞ்சம் புகையாகத் தான் இருக்கிறது..

இல்லை..அப்புறம் அந்தப் ப்ரபாகரையும் அந்த அவளையும் பார்க்கவில்லை..:)

படம்பார்க்காமல் கீற்று க் கொட்டகை மட்டும் பார்த்தது மதுரை திருவாதவூரில்..இதுபற்றி மதுரகானங்க்ளில் எழுதியிருக்கிறேன்..

கீற்றுக் கொட்டகை மற்ற நண்பர்களின் உங்கள், கோபால், ரவிகிரண் சூர்யா,எஸ்வி சார் போன்ற அனுபவங்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன..படங்களும் நன்று.. நன்றி..

Richardsof
12th October 2014, 05:34 PM
[QUOTE=chinnakkannan;1171571]ஹாய் ஆல்..

ஹாய் ராகவேந்தர் சார்.. உங்களை வாழ்த்தவெல்லாம் எனக்கு வயதில்லை ..எனில் மை ஸின்ஸியர் நமஸ்காரங்கள் டு யூ.:).

முதன் முதலில் இங்கு வாழ்த்தலாம் என வந்தால் டெண்ட் கொட்டாய் பற்றி எரிந்துகொண்டிருந்தது..சரி அணைந்த பிறகாவது வரலாம் என்றால் முட்டை போண்டாவெல்லாம் போடவேயில்லை (ஆமாம் மாயமோதிரம் ராஜஸ்ரீ போஸ்டர் போட்ட டெண்ட் கொட்டாய் படம் கிடைக்கவில்லையா எஸ்.வி.சார்:) )

http://i58.tinypic.com/2web2tx.jpg

Richardsof
12th October 2014, 06:50 PM
சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.

இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.

இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.
Thanks - ravindran - net

Richardsof
12th October 2014, 06:59 PM
டூரிங் டாக்கீஸில் இருந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை பார்த்திருக்கிறேன். நான் பார்த்து அதிசயித்த முதல் தியேட்டர் - தூத்துக்குடியில்
http://i61.tinypic.com/vnmn90.jpg சார்லஸ் தியேட்டர்.

இந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.



தென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்?

இந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா? அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.

நான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா?’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

இந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.



எல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புகளின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.

இது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.

இப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.

கடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.

ஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. நான் கடைசியாக ‘சேது’ படம் பார்த்ததாக நினைவு. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது.

COURTESY - KUMARAN KUDIL -NET

vasudevan31355
12th October 2014, 08:04 PM
ஹாய் ஆல்..


அவளுக்கு ஒரு அண்ணன் என்றிருந்தேனே..அவன் பெயர் பிரபாகரன் என நினைக்கிறேன்.. ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செய்தால் ஒரு புளிப்பு ரைத்தா தந்தால் என்ன செய்வீர்கள்..அதைப் பொறுத்துக் கொண்டு மற்ற விஷயங்கள் நன்றாக இருக்கிறதா எனப் பார்ப்பீர்கள் அல்லவா..அதே போல அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது..காலப்போக்கில் அவன் கொஞ்சம் ஹெல்ப் செய்ததால் (டேய் ப்ரபாகரா அந்தப் பெட்டிக் கடை வரைக்கும் போய்ட்டு வரலாமா.. ஓ..வரேங்க..) கொஞ்சம் நட்பும் ஆனான்..



சி.க சார்,

கொன்னுட்டீங்க போங்க. ஒரு படம் பார்த்த விஷயத்தை இவ்வளவு சுவாரஸ்யமா அதுவும் மத்தவங்க பொறாமைப்படும் அளவுக்கு எழுதிட்டீங்களே! கொஞ்சம் காதல், கொஞ்சம் காமடி, கொஞ்சம் நட்பு, கொஞ்சம் பாசம், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம் என்று அதில் அதிலிருந்து 100 கிராம் கலந்து பதிவை பளிச்சென்று ஆக்கிவிட்டீரே.

நே மேலே நிலா

சூப்பர் சார். அது எப்படிங்க? நீங்க இளைச்சுடுவீங்கன்னு அதுவும் கூடவே வந்ததா?

//அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது//

எனக்குக் கூட இந்த மாதிரி அனுபவம் உண்டு சார். லஞ்சமாக பீர் எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவன் தங்கைக்காக அல்ல. எதிர் வீட்டுப் பெண் இங்கு லுக் விட்டதை அவன் பார்த்துத் தொலைத்ததினால்.

//அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்//

நாங்க ஒண்ணுமே சொல்லலீங்களே ராசா.

சுவைமிகு பதிவு. பதில் பதிவு லேட்டானதற்கு மன்னியுங்கள். கொஞ்சம் வேலைப்பளு.

vasudevan31355
12th October 2014, 08:06 PM
சி.க.சார்,

'மாய மோதிர'த்தில் பாரதிதானே! ராஜஸ்ரீயும் இருக்கிறாரா? நான்தான் மறந்து விட்டேனோ!

chinnakkannan
12th October 2014, 09:18 PM
அன்பின் வாசு சார்..
மிக்க நன்றி..அழகாய் ரசித்து எழுதியமைக்கும் பாராட்டுக்கும்.

அய்யம்பேட்டையில் இருந்த காலத்தில் இங்கிட்டு கும்பகோணம் அங்கிட்டு தஞ்சாவூர் என பஸ் பிடித்து பஸ் பிடித்து தியேட்டர் போய் படம் பார்த்ததுண்டு.. தஞ்சையில் பார்த்தது உயிரே உனக்காக..குடந்தையில் பார்த்தது மறந்து விட்டது.. ஆனால் சுற்றிலும் இருந்த சில கோவில்களை ஒரு சுற்று சுற்றித் தான் வந்தேன்..

மாய மோதிரம் பாரதியா.. தெரியலையே..மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு.. ராஜஸ்ரீயை.. எஸ்வி சார் ( நன்றி) வேறு ஒரு புகைப்படம் இட்டிருக்கிறாரே…

சார்லஸ் தியேட்டர் கெயிட்டி க்ரவுன் க்ளோப் தியேட்டர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி எஸ்வி சார்.. ஒரு பதிவில் முரளி சார் எழுதியிருந்தார் மதுரை ஸ்ரீதேவி தியேட்டர் இடிக்கப் பட்டு அபார்ட்மெண்ட்டாக மாறி விட்டது என்று.. படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை (எனக்குத் தெரியாது..தவிர மதுரையில் இருந்த உறவுகளும் ஊர் மாறிவிட்டனர்) எவ்வளவு படங்கள் சின்ன வயது முதல் கல்லூரிப் பருவம் வரை தொடர்ந்து..கடைசியாய் அங்கே பார்த்த படம் காதல் மன்னன் 93 ம் வருடமோ 96ம் வருடமோ லீவில் வந்த போது.. அதுவே எனது கடைசி மதுரை விசிட்டாகி விட்டது.. சின்ன வயதில் 1.45 பைசா கொடுத்து பால்கனியில் பார்த்த சுகம் ரூ 12.50 என காதல் மன்னன் பார்த்த போது ரொம்ப மிஸ்ஸானது..

rajeshkrv
13th October 2014, 05:20 AM
சி.க.சார்,

'மாய மோதிர'த்தில் பாரதிதானே! ராஜஸ்ரீயும் இருக்கிறாரா? நான்தான் மறந்து விட்டேனோ!

மாயமோதிரத்தில் பாரதி தான் நாயகி, ராஜஸ்ரீ வில்லி ரோல்.. பாரதியின் தந்தையை மயக்கும் வேடம்

Richardsof
13th October 2014, 05:27 AM
சென்னைக்கே புது நிறம் சேர்க்கும், சாஃப்ட் வேர் துறையின் அசுர வளர்ச்சி பழைய மகாபலிபுரம் சாலையில் பளீரென பிரதிபலிக்கும். இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பளபளா மினுமினு அலுவலகங்கள் அங்கு விண் முட்டி நிற்கும். அந்த வான் உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் நாவலூரில் ஒளிந்திருக்கிறது என்.ஆர்.கே. டூரிங் டாக்கீஸ்.
நான்கு புறமும் தார்பாய் விரித்த திரை மறைப்பு, அழுக்கு ஏறிய பெஞ்சுகள் எனப் பழமை மாறாமல் இயங்கும் அந்த டாக்கீஸில், ஆச்சர்யமாக டி.டி.எஸ். வசதி இருக்கிறது. மாலைக் காட்சி ஆரம் பிப்பதற்கு அறிகுறியாக முதல் மணி அடித்த சமயம் அந்த டூரிங் டாக்கீஸுக்கு விசிட் அடித்தோம்.

''25 வருஷங்களா இயங்கும் இந்த தியேட்டரை 17 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர் தியேட்டர்ல ரெண்டு ரூபாய் சம்பளத்துக்கு ஆபரேட்டரா இருந்தேன். வழக்கமா தினமும் சாயங்காலம் ரெண்டு ஷோ போடுவோம். சனி, ஞாயிறுகளில் மட்டும் பகல்ல எக்ஸ்ட்ரா ஒரு ஷோ. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் படங்கள் அதிகமா ஓடுச்சு. பிறகு விஜய், அஜீத் படங்கள். பெஞ்ச் டிக்கெட் 10 ரூபாய். பாக்ஸ் டிக்கெட் 15 ரூபாய். அதுக்கு முன்னாடி மண் தரை தான். தரையில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாதுனு அரசாங்கம் சட்டம் போட்டதால், வேற வழி இல்லாம மண் தரையில் பெஞ்ச் போட் டோம்.
சாஃப்ட்வேர் கம்பெனி ஆட்கள், கட்டட வேலை செய்யும் வட இந்தியர்களுக்காக நாலஞ்சு வருஷமா ஹிந்தி படங்களும் நிறையப் போடுறோம். தொழிலாளிகள் வாங்குற சம்பளத்துக்கு இங்கே இருக்குற சினிமா மால்களில் 200, 300 கொடுத்து படம் பார்க்க முடியாது. அதான் இங்க வந்து திருப் தியா படம் பாத்துட்டு போறாங்க!'' எனும் தியேட் டர் உரிமையாளர் கன்னியப்பன், டூரிங் டாக்கீஸின் ட்ரெண்ட் குறித்து தொடர்கிறார்.
''இங்கே 'அம்மன்’ படம் 15 நாள் ஓடுச்சு. 'சூரிய வம்சம்’ மூணு வாரம் ஓடுச்சு. எங்க தியேட்டர்ல ரொம்ப நாள்(!) ஓடின படங்கள் இவைதான். இது போக, விஜய் நடிச்ச 'வசீகரா’ படம் நல்லா போகும். இதுவரை 10 தடவைக்கும் மேல அந்தப் படம் போட்டு இருக்கோம். இப்பப் போட்டாலும் தொடர்ந்து ஒரு வாரம் ஓடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாரக் கடைசிகளில் ஒரு ஷோவுக்கு ஆயிரம் பேர் வருவாங்க. டி.டி.எஸ். போட்டா இன் னும் கூட்டம் வரும்னு நினைச்சு, அஞ்சு லட்சம் வரை செலவு பண்ணி ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் டி.டி.எஸ். போட்டேன். எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல டி.டி.எஸ். இருக்குற ஒரே டூரிங் டாக் கீஸ் நம்மதுதான்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஷோவுக்கு இப்ப 100 பேர் வர்றதே பெரிய விஷயமா இருக்கு.
http://i60.tinypic.com/jfw38z.jpg
செங்கல்பட்டு வட்டாரத்தில் மட்டும் 157 தியேட்டர் இருந்தது. இப்ப அது 56 தியேட்டர்களா குறைஞ்சிருக்கு. கேபிள் டி.வி, திருட்டு வி.சி.டி, இலவசமா கொடுத்த டி.வி-ன்னு எங்க பாதிப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள். முன்னே இங்க 15 பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. தியேட்டருக்கு வர்ற வங்களைவிட இங்கே வேலை செய் றவங்க கூட்டம் அதிகமாக இருந்த மாதிரி இருந்தது. அதான், இப்ப நாலு பேரை மட்டும் வேலைக்கு வெச்சிருக்கேன்!'' சோகப் புன்ன கையுடன் முடிக்கிறார் கன்னியப்பன்!
- பா.ஜெயவேல், படங்கள்: ஜெ.தான்யராஜு

rajeshkrv
13th October 2014, 05:28 AM
மெர்ரிலாண்ட் ஸ்டூடியோ
பல அருமையான படங்களை தயாரித்த திரு பி.சுப்பிரமணியம் அவர்களின் ஸ்டூடியோ

http://i.ytimg.com/vi/xobJJfhKJzU/maxresdefault.jpg

Murali Srinivas
13th October 2014, 02:58 PM
அன்பின் வாசு சார்..
மிக்க நன்றி..அழகாய் ரசித்து எழுதியமைக்கும் பாராட்டுக்கும்.

அய்யம்பேட்டையில் இருந்த காலத்தில் இங்கிட்டு கும்பகோணம் அங்கிட்டு தஞ்சாவூர் என பஸ் பிடித்து பஸ் பிடித்து தியேட்டர் போய் படம் பார்த்ததுண்டு.. தஞ்சையில் பார்த்தது உயிரே உனக்காக..குடந்தையில் பார்த்தது மறந்து விட்டது.. ஆனால் சுற்றிலும் இருந்த சில கோவில்களை ஒரு சுற்று சுற்றித் தான் வந்தேன்..

மாய மோதிரம் பாரதியா.. தெரியலையே..மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு.. ராஜஸ்ரீயை.. எஸ்வி சார் ( நன்றி) வேறு ஒரு புகைப்படம் இட்டிருக்கிறாரே…

சார்லஸ் தியேட்டர் கெயிட்டி க்ரவுன் க்ளோப் தியேட்டர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி எஸ்வி சார்.. ஒரு பதிவில் முரளி சார் எழுதியிருந்தார் மதுரை ஸ்ரீதேவி தியேட்டர் இடிக்கப் பட்டு அபார்ட்மெண்ட்டாக மாறி விட்டது என்று.. படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை (எனக்குத் தெரியாது..தவிர மதுரையில் இருந்த உறவுகளும் ஊர் மாறிவிட்டனர்) எவ்வளவு படங்கள் சின்ன வயது முதல் கல்லூரிப் பருவம் வரை தொடர்ந்து..கடைசியாய் அங்கே பார்த்த படம் காதல் மன்னன் 93 ம் வருடமோ 96ம் வருடமோ லீவில் வந்த போது.. அதுவே எனது கடைசி மதுரை விசிட்டாகி விட்டது.. சின்ன வயதில் 1.45 பைசா கொடுத்து பால்கனியில் பார்த்த சுகம் ரூ 12.50 என காதல் மன்னன் பார்த்த போது ரொம்ப மிஸ்ஸானது..

அன்புள்ள கண்ணா,

உங்கள் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அது மீண்டும் கீற்றுக் கொட்டகையில் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளமையின் துள்ளல் கட்டங்களில் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதை சார்ந்த அனுபவங்களை பதிவு செய்யும்போதும் சுவை கூடுகிறது. இது போன்ற இனிமையான அனுபவங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் எப்போது அசை போட்டாலும் மனதுக்குள் மயிலிறகால் வருடுவது போல் மழைத்துளி விழுவது போல் அத்துனை இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட அனுபவப் பதிவுகளில் எப்போதும் முடிவு சோகமாக(?) [அதன் பிறகு சந்திக்கவேயில்லை என்பது போன்ற] இருப்பதனாலேயே இது மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. இது "போன்ற" பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.

இந்த இனிமையைப் பற்றி பேசும்போது வேறொரு சோகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதுதான் நமது ஸ்ரீதேவி டாக்கிஸ் இன்று அபார்ட்மெண்டாக மாறி நிற்கும் நிலை. உண்மையிலே மிக மிக சோகமான விஷயம். நீங்கள் நடிகர் திலகம் திரியை ரெகுலராக படித்து வருவீர்கள் என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தைப் பற்றிய தொடர் ஒன்று எழுதி வருகிறேன். அதில் இப்போது தர்மம் எங்கே படம் ஸ்ரீதேவியில் வெளியான் போது நடந்தவற்றை எழுதி வருகிறேன், [நீங்களும் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள். 1971 ஜூலை சவாலே சமாளி டயத்தில் இருந்தேன் என்று சொளியிருந்தீர்கள். ஆகவே 1972 ஜூலை தர்மம் எங்கே படத்திற்கும் அங்கே இருந்திருக்க வேண்டும்] அதை பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு தியேட்டர் நினைவு வந்து மனம் மிக கனமாகி விடுகிறது.. அது போலவே ராஜேஷ் போட்ட நியூசினிமா தியேட்டரின் முகப்பு போட்டோ. அதுவும் எத்தனை எத்தனை இனிய அனுபவங்களை நமக்கு தந்திருக்கிறது? அது போன்றே சிந்தாமணியும். ஒரே ஆறுதல் [இதை ஆறுதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை] நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us].

இனியவற்றையும் அல்லாதவற்றையும் ஒரு சேர அனுபவிக்க தந்தற்கு நன்றி!

அன்புடன்

Gopal.s
13th October 2014, 04:59 PM
கீற்று கொட்டாய் மின்னுகிறது. எஸ்.வீ போடும் பதிவுகள் (net ) சுவையாகவே உள்ளது. high light முரளியை ஓடி வர செய்த மதுரை பதிவு. சுவையான பதிவு சின்ன கண்ணன்.(முரளிக்கு எப்பவுமே மதுரை மதுரை மதுரைதான்.)

பொதுவாகவே இந்த தலைப்பு எல்லோர் நினைவலைகள்,சிறு வயது ஏக்கங்கள்,மகிழ்வுகள்,nastolgia ,அழகுணர்ச்சி,அனுபவங்கள்,இழப்புகள் எல்லாவற்றையும் தூண்டி விட சாத்தியகூறு கொண்டது. நிறைய பங்களிக்க போகிறேன். இது வரை போட்டது teaser மட்டுமே. வெங்கி ,நீங்களும் வாருங்கள்.

rajeshkrv
13th October 2014, 08:48 PM
அன்புள்ள கண்ணா,

உங்கள் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அது மீண்டும் கீற்றுக் கொட்டகையில் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளமையின் துள்ளல் கட்டங்களில் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதை சார்ந்த அனுபவங்களை பதிவு செய்யும்போதும் சுவை கூடுகிறது. இது போன்ற இனிமையான அனுபவங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் எப்போது அசை போட்டாலும் மனதுக்குள் மயிலிறகால் வருடுவது போல் மழைத்துளி விழுவது போல் அத்துனை இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட அனுபவப் பதிவுகளில் எப்போதும் முடிவு சோகமாக(?) [அதன் பிறகு சந்திக்கவேயில்லை என்பது போன்ற] இருப்பதனாலேயே இது மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. இது "போன்ற" பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.

இந்த இனிமையைப் பற்றி பேசும்போது வேறொரு சோகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதுதான் நமது ஸ்ரீதேவி டாக்கிஸ் இன்று அபார்ட்மெண்டாக மாறி நிற்கும் நிலை. உண்மையிலே மிக மிக சோகமான விஷயம். நீங்கள் நடிகர் திலகம் திரியை ரெகுலராக படித்து வருவீர்கள் என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தைப் பற்றிய தொடர் ஒன்று எழுதி வருகிறேன். அதில் இப்போது தர்மம் எங்கே படம் ஸ்ரீதேவியில் வெளியான் போது நடந்தவற்றை எழுதி வருகிறேன், [நீங்களும் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள். 1971 ஜூலை சவாலே சமாளி டயத்தில் இருந்தேன் என்று சொளியிருந்தீர்கள். ஆகவே 1972 ஜூலை தர்மம் எங்கே படத்திற்கும் அங்கே இருந்திருக்க வேண்டும்] அதை பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு தியேட்டர் நினைவு வந்து மனம் மிக கனமாகி விடுகிறது.. அது போலவே ராஜேஷ் போட்ட நியூசினிமா தியேட்டரின் முகப்பு போட்டோ. அதுவும் எத்தனை எத்தனை இனிய அனுபவங்களை நமக்கு தந்திருக்கிறது? அது போன்றே சிந்தாமணியும். ஒரே ஆறுதல் [இதை ஆறுதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை] நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us].

இனியவற்றையும் அல்லாதவற்றையும் ஒரு சேர அனுபவிக்க தந்தற்கு நன்றி!

அன்புடன்

Murali sir, yes "aaruthal is the right word" while many movie halls are becoming muti complex, chinthamani still shines which is little comfort ..

All those memories - Vijayalakshmi, Jeyaraj, Saraswathi, Thangam, chinthamani, cinipriya/minipriya, midland, new cinema, regal, mathi innum niraya niraya

Richardsof
14th October 2014, 05:23 AM
வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.

நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.

ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.

என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.

இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.

தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.

அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.

காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.

ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.

சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.

I

என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.

Richardsof
14th October 2014, 09:21 AM
கிராமத்தின் விடியற்காலைகள் வேப்பம்பழக்காலங்களில் காக்கைகளின் கூக்குரலோடு விடியும். அதுவும் வேப்பம்பழக்கால ஆரம்பித்த ஓரிரு நாட்களில் வேம்பின் வாசம் ஒரு வித போதையூட்டும் . வீட்டின் வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் நல்ல காற்றுக்கும் விடுமுறை நாட்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவதற்கும் வசதியாக இருந்தது அதுவும் என் வீட்டில் காரின் டயர் இருந்தது டயரின் இரு முனையிலும் கயிறைக்கட்டி ஊஞ்சலாடுவது எங்கள் தெருவின் அனைத்துப்பசங்களுக்குமே ஒரு கனவு. வீட்டின் எதிரில் ஆறு , வீட்டின் பக்கத்தில் சாலை என பலவிதங்களில் எனக்குப் பெருமை தேடித்தந்தது என் வீடு. அதே நேரத்தில் தண்டனைகளின் போதும் ஊர் முழுவதும் எளிதில் செய்திப்பரவிடவும் அந்த இடமைப்பு ஒரு பெரிய தொல்லையாகவும் இருந்தது.

ஊரில் பெரும்பாலான வீடுகளின் வாசலிலோ கொல்லைப்புறங்களிலோ கட்டாயம் ஒரு வேப்பமரமாவது இருக்கும் கிராமத்தில். அதுவும் என் வீட்டில் ஒரு வேப்பமரமும் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முனீஸ்வரனின் கோவிலில் ஒரு பெரிய வேம்பும் இருந்தது. கோவில் வேம்புக்கும் அரசமரத்திற்கும் கல்யாணம் நடந்திருந்ததால் அதன் மேல் ஏறுவது தெய்வக்குற்றம் என்று பெரிதாக பேசப்பட்ட காலம் அது. எனக்கோ முனீஸ்வரனுக்கு அதன் மேல் பெரிதாய் நம்பிக்கையில்லை.

கிராமத்திலிருந்து இரண்டாவது கிமீட்டரில் சங்கரன்பந்தல் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அது எங்களின் கனவு ஊர் ஏனென்றால் அங்குதான் ஓடியன் தியேட்டர் இருந்தது. சிறு வயதில் எங்களின் பெரிய கனவுகளில் ஒன்று எங்களின் வீடுகள் சங்கரன்பந்தலுக்கு மாறிட வேண்டுமென்பதும் தினமும் படம் பார்க்க வேண்டுமென்பதாகவும் இருந்தது.

கிட்டத்தட்ட என் பதினொன்றாம் வயதில் அந்த தியேட்டரின் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 60 பைசா. பேக் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 1.20 பைசா. முன்னால் மணல்குவித்து உட்காருமிடத்தின் விலை 45 பைசா. எங்களுக்கு எப்போதுமே பேக் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்திட துடித்தாலும் அப்போதைய பொருளாதார நிலை பெஞ்ச் கிளாஸின் 60 பைசாவில் தள்ளிடும் எப்போதும்.

பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மட்டுமே வரும்.அதுவும் ஒரு எம்ஜிஆர் படமென்றால் அடுத்த படம் சிவாஜி படம். அதுவும் எம்ஜிஆர் படங்கள் மாதக்கணக்கில் ஓடும் . இந்த நிலையில் தான் ஆயிரத்தில் ஒருவன் வந்தது. எம்ஜிஆரின் படங்களைப்பற்றி நிறையக்கதைகள் சொல்ல எங்களூரின் துருத்தி ஆசாரி இருந்தார். தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவர். எப்போதும் தலைவரைப்பற்றி பேசியபடியே இருப்பார். மாயூரம் கூட்டத்தில் தலைவர்க்கு இந்தக்கையை கொடுத்தேன் என்றபடி அவரின் கைகளைக்கண்களில் ஒத்திக்கொள்ளும் பக்தர். அவர் சொல்லும் எம்ஜிஆரின் படக்கதைகளைக் கேட்கவே சனி , ஞாயிறுகளில் பசங்களின் கூட்டம் கொல்லுப்பட்டறையில் நிரம்பி வழியும். அவர் கதைகள் சொல்லியபடியே தேவையான வேலையையும் வாங்கிக்கொள்வார்.

ஆசாரியின் கதையில் மதி மயங்கி வாழ்நாளில் எப்படியாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பார்த்திட வேண்டும் என்கிற நிலைக்குத்தள்ளப்பட்ட நாளொன்றில் ஓடியன் தியேட்டரின் நோட்டீஸ்கள் எங்களூரில் மூன்று இடங்களில் மட்டுமே ஒட்டப்படும் காலமது. ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது ஓடியன் தியேட்டருக்கு.

அதுவும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாட்டை முழுவதும் ஆசாரி நடித்தே காண்பித்திருந்தார். நம்பியாரின் வில்லத்தனம் , கப்பல் , கடற்கொள்ளை, நாகேஷ் , ஜெயலலிதா என்று ஒரு வாரம் முழுக்க கதைக்கேட்டுவிட்ட நிலையில் படம் வந்திருந்தது.

இப்போது எங்கள் முன் இருந்த பெரிய பிரச்சனை பள்ளி நாளில் படத்திற்கு போக முடியாது, போவதாயிருந்தால் முதலில் காசு இல்லை, இரண்டாவது சங்கரன்பந்தலுக்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு போய்விட்டு திரும்பும் தைரியம் இருந்தாலும் வீட்டில் விட மாட்டார்கள்.

ஒரு வாரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் மாறிப்போக போவதான வதந்தி வேறு எங்களின் வயிற்றில் புளிக்கரைத்துக்கொண்டிருந்தது. பள்ளியில் முழுக்க ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு போவதான பேச்சு வேறு எரிச்சலைக்கிளப்பிக் கொண்டிருந்தது.

அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி பார்த்தும் சினிமா பார்க்க விட முடியாதென்று விட்டாள். எம்ஜிஆர் படமென்றாலும் இரண்டாம் ஆட்டம் போவதென்றால் நாவமரங்களைக்கடந்து போக வேண்டுமென்பதாலும் அந்த நாவ மரத்தில் மோகினிப்பேய் இருப்பதாய் பல கால பேச்சு என்பதாலும் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். இனி அம்மாவிடம் பேசிப்பயனில்லை என்று முடிவு செய்தேன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் வாளோடு நிற்கும் போஸ்ட்டரை நள்ளிரவில் பிய்த்து வந்து வீட்டின் கதவுக்குப்பின்னால் ஒட்டி வைத்தேன்.

இதனிடையே இரண்டு நாள் போய் விட்டிருந்தது. அப்போதுதான் சாதிக் வந்தான் உலக மகா யோசனையோடு. வேப்பப்பழக்காலமது. ஊர் முழுவதும் வேப்பப்பழங்கள் கொட்டி தெருவெங்கும் சிதறி நசுங்கி வாசமெடுக்கும் காலமது. வேப்பபழங்களைப்பொறுக்கி விற்பதுதான் அந்த யோசனை. படி 10 பைசா என்றும் சனிக்கிழமைக்குள் ஆளுக்கு ஆறு படிகள் சேர்த்திட்டால் சனிக்கிழமை மதியக்காட்சிக்கு எவருக்கும் தெரியாமல் போய்விட்டு சாயங்காலம் ஆறு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிடலாம் என்பதுதான் அந்த யோசனை. எனக்கும் வெகு எளிதான யோசனையாகவே பட்டது. தினமும் அம்மா தெருக்கூட்டி ஒதுக்கி வைத்திருக்கும் வேப்பம்பழங்களை எடுத்தாலே ஆறு படி மூன்று நாட்களில் தேறிடும் என்பதால், ”சாதிக் ஆயிரத்தில் ஒருவன் பாத்திட்டோம்னு நினைச்சுக்க” என்றேன்.

அந்த சாயங்காலமே என் கனவில் பெரிய மண் விழுந்தது. அம்மா சேர்த்து வைத்த வேப்பப்பழங்கள் நாத்தங்காலில் போடுவதற்காய் அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டிருந்தார். தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து வாசலுக்கு ஓடினேன்.

பார்த்தால் ஊரின் குஞ்சுக்குளுவான்களெல்லாம் ஆளுக்கொரு பையுடன் வேப்பப்பழம் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். சாதிக்கைப்பார்க்க அவனோ வெகுவாய் அழுகிற முகபாவத்துடன் தான் ஒரே ஒருவனிடம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கப்போகும் யோசனையை சொன்னதாகவும் அதுவும் ஒரு வெல்லக்கட்டி வாங்கித் தின்றதற்கு பதிலாய் சொன்னதாகவும் அது இப்படி ஊருக்கே தெரிந்த ரகசியமாகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ அதலபாதாளத்தில் குரல் கேட்பதாயிருந்தது.

ஊர் முழுக்க தெருவில் இருந்த வேப்பமரங்களை மொட்டையடித்துப்போயிருந்தார்கள் தெருப்பசங்கள். இப்போது எங்கள் முன்னால் இருந்தது முனீஸ்வரனின் வேப்பமரம். அரசமரத்தோடு பின்னிப்பிணைந்து வானத்துக்கும் பூமிக்குமாய் வளர்ந்து நிற்கும் வேம்பு அதுவும் முழுவதுமாய் அரச மரத்துக்குள் புதைந்து கிளைகள் மட்டும் வெளியில் தெரிய ராட்சச அரக்கனாய் தெரியும் வேம்பு. ஒரு பயலும் சாமிக்குப்பயந்து அந்த மரத்தின் பக்கம் மட்டும் போகவில்லை. நான் சாதிக்கைத்தனியா தள்ளிக்கொண்டு போய் திட்டத்தை விளக்கினேன். சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் ஒரு பயலும் முனீஸ்வரன் கோவிலின் பக்கம் போக மாட்டார்கள். விளக்கு வெளிச்ச ஏதுமில்லாமல் சூலமும் அரசமரமும் வேப்ப மரமுமாய் பறவைகளின் சப்தங்களோடு சில்வண்டுகளின் சப்தமும் பயமுறுத்திட , இரவு நேரத்தில் வெள்ளைக்குதிரையில் முனீஸ்வரன் உலா வருவதாய் சொல்லப்பட்ட கதையின் காரணமாகவும் அந்த நேரத்தில் குறுக்கே போகிறவர்கள் ரத்தம் கக்கி செத்துப்போய்விட நேரிடும் என்பதாலும் ஒரு காக்கா குருவிக் கூட இருட்டியப் பின் அந்த பக்கம் போவதில்லை.

முதலில் பயந்து வர மறுத்த சாதிக் , எம்ஜிஆரின் வாள் வீசும் போஸ்ட்டரைக்காட்டிய பின் ஒரு அரைமனதாக ஒப்புக்கொண்டான். ஏதோ ஒரு வேகத்தில் இதை சொல்லி விட்டாலும் இரவில் மரமோ ஒரு ராட்சச அரக்கனாய் முணுமுணுத்துக்கொண்டு காத்திருப்பதாய் பயமேற்பட்டது.
இருவரும் ஆளுக்கொரு பையுடன் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் கோவில் மரத்துக்குக் கீழாய் காலால் கூட்டி சேர்க்கத்துவங்கினோம். அரை மணி நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க இரு பையையும் நிரப்பி விட்டிருந்தோம். இப்போது பிரச்சனை எங்கு கொண்டு வைப்பது என்பதில் இருந்தது. வீட்டில் வைத்தால் அப்பா வயலுக்குக்கொண்டு போய்விடுவார். அம்மாவுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டும் எங்கு வைக்கலாம் என்ற யோசனையின் முடிவில் சாதிக் வீட்டின் சந்துக்குள் ஒளித்து வைத்திட முடிவெடுத்தோம்.

சனிக்கிழமையின் முடிவில் கோவில் மரத்தை முழுவதும் சுத்தம் செய்திருந்தோம். காலையிலிருந்தே வேப்பம்பழக்காரனைத் தேடிக்கொண்டிருந்தோம். எங்க எந்த வியபாரி போனாலும் வேப்பம்பழம் வாங்கிறீங்களா என்று கேட்டு அலைந்துக்கொண்டிருந்தோம்.

வந்தான்யா கடைசியா ஆறு மணிக்கு வியாபாரி, நாங்களோ அரைச்சாக்கை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பெருமையாக பார்த்தோம். அவனோ இவ்ளோதானா இருக்கு என்றபடி எடுத்தான் படியை.

எனக்கோ அதுவரை என் வீட்டின் ஒரு லிட்டர் அளக்கும் அரிசிப்படி ஞாபகம்தான் இருந்தது. அவன் வைத்திருந்த படியோ தகரத்தில் செய்யப்பட்ட படியாய் ஒரு மரக்கால் அளவுக்கொள்ளுமாய் இருந்தது. எங்களின் அரைச்சாக்கு வேப்பம்பழம் வெறும் ஐந்து படிகளில் முடிந்து போயிருந்தது.
அதிலும் நான்கு நாட்களில் பழங்கள் காய்ந்துப்போய் விட்டதால் அளவு இன்னும் குறைந்துப்போய் விட்டிருந்தது. நாப்பது பைசா மட்டுமே தரமுடியுமென்றும் அவன் பேரம் பேசத்துவங்க எனக்கு தூரமாய் எம்ஜிஆர் நகர்ந்துப் போய்க்கொண்டிருப்பதாய் பட்டது.

ஐம்பது பைசாவை சாதிக் சண்டைப்போட்டு வாங்கி விட்டிருந்தான், அதுவரை கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் கனவோடு இருந்த நானும் அவனும் நொந்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

இன்னும் நாப்பது பைசா தேறினால் மண் டிக்கெட்டுக்காவது படத்திற்கு போகலாம் என்றான் சாதிக். வேறு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டிக்கொண்டுருக்கையிலே அம்மா தலைவிரிக்கோலமாய் வந்து ஆளுக்கொரு அடியை முதுகில் வைத்தாள். முனீஸ்வரன் கோவில் வேப்பம்பழம் விவகாரத்தை அதற்குள் யாரோ சிண்டு முடித்து வைத்திருந்தார்கள்.

கையில் வைத்திருந்தக் காசைப்பிடுங்கி 25 காசுக்கு சூடமும் வாங்கிக்கொளுத்த செய்தாள், 25 காசை உண்டியலிலும் போட செய்தாள். ஞாயிறு முழுவதும் ஆற்றுத்தண்ணீர் கொண்டு வந்து கோவிலை சுத்தம் செய்ய வைத்தாள். ஆளுக்கு ஐம்பது தோப்புக்கரணம் வேற.

வீட்டிக்குள் வைத்து சிறப்பு அடி வேறு கிடைத்தது. கதவின் பின்னால் எம்ஜிஆர் வாள் வீசும் போஸ்ட்டரில் பார்த்துக்கொண்டிருந்தார்.

--
- கென் -

chinnakkannan
14th October 2014, 10:43 AM
///அன்புள்ள கண்ணா,

நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us]. /// அன்பின் முரளி சார்.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும்..அண்ட் உங்கள் நினைவலைகளுக்கும்.. ஸாரி நேற்றே என்னால் எழுத இயலவில்லை..

ஸ்ரீதேவி - எங்கிருந்தோ வந்தாள், தர்மம் எங்கே, சவாலே சமாளி நாளை நமதே இன்னும் பல படங்க்ள் வெகுசின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.. அம்மா, சகோதரிகளுடன் தான் பின் கொஞ்சம் வளர்ந்த பிறகு பற்பல படங்கள்..ம்ம் இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்..


கோபால் சார் மிக்க நன்றி..

ராஜேஷ் ஜெயராஜ் விஜயலஷ்மி.மினிப் ப்ரியா சினிப்ரியா.. நீங்க ஆற்றுக்கு அந்தக்கரைப்பக்கமா இருந்தீர்கள்..அண்ணா நகர் கேகே நகர்..?..

gkrishna
14th October 2014, 12:59 PM
வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.

நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.

ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.

என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.

இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.

தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.

அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.

காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.

ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.

சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.

I

என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.

எஸ்வி சார்

திரு வண்ணநிலவன் டூரிங் கொட்டகை அனுபவம் அருமை.

இந்த ஸ்ரீவைகுண்டம் தான் நான் பிறந்த ஊர் .60 களில் இந்த ரீகல் கொட்டகை மிகவும் famous .அவர் கூறியது போல் ஒரே கொட்டகை . இதற்கு அருகில் தான் கருங்குளம் ஊர் .ஸ்ரீவைகுண்டம் ஊரில் இருந்து 8 km தூரம்.

கருங்குளம். பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி அவர்கள் சொல்வது போல் திருநெல்வேலி திருசெந்தூர் ராஜபாட்டையில் உள்ள சிற்றூர். இங்கு தான் 'இன்று முதல்' சிகப்பு கலர்,மஞ்சள் கலர்,நீல கலர் போஸ்டர் எல்லாம் ஓட்டுவார்கள். போஸ்டர் இறுதியில் 'பாட்டு சண்டை அருமை .கண்டிப்பாக இரண்டு தினங்கள் மட்டும்' என்று இருக்கும். இந்த வாசகம் எல்லா போஸ்டர்களிலும் கான்ஸ்டன்ட் ஆக பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். பின் ஒரு டிசைன் போட்டு செல்வி ,ஸ்ரீவை என்று இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்று நண்பர்கள் எல்லோரும் சண்டை போட்டு கொள்வோம் . அப்போது நான் கொஞ்சம் புத்திசாலி .(சினிமா பார்ப்பதில் மட்டும்). அது 'செல்வி அச்சகத்தில் அட்சடிகப்படது ' என்று சொல்லி காலரை தூக்கி விட்டு கொள்வேன். :) இதற்கு விடை தெரியாதவர்கள் எல்லாம் இன்று அமெரிக்கா ,இங்கிலாந்த் ,ஜப்பான் என்று வெளிநாடுகளில் குப்பை கொட்டுகிறார்கள் . விடை சொன்ன நான் தமிழ்நாட்டில் ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறேன் :)

ஸ்ரீவைகுண்டம் ஊர் ராஜபாட்டையில் இருந்து 2 km உள்ளே போக வேண்டும்.நடுவில் தாம்பிரபரணி ஆறு ஓடி கொண்டு இருக்கும். முதலில் தாம்போதி என்ற சிறு பாலம் இருந்த நினைவு . பின்னாட்களில் பெரிய பாலம் கட்டிய நினைவு. அங்கு இருந்து சைக்கிள் மிதித்து கொண்டு கருங்குளம் வந்து போஸ்டர் பார்த்து விட்ட சென்ற நினைவு .உண்டு

துடிக்கும் துப்பாக்கி,துப்பாக்கியே துணை,கத்தி குத்து கந்தன் (எல்லாம் ரங்கராவ் நடித்த டப்பிங் படங்கள் ) பார்த்த நினைவு உண்டு. ஜெய், ரவி நடித்த 'நாம் மூவர்' ஒரு தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு தினம் மட்டும் போட்டு தீபாவளிக்கு முன் தினம் இரவு காட்சி பார்த்த நினைவு . இரவு இரண்டு மணிக்கு படம் பார்த்து விட்டு அண்ணனின் சைக்கிள் இல் doubles சென்ற நினைவு. அவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பில் இருந்தார் 68-70 களில்.

பின்னாட்களில் அருகில் உள்ள இன்னொரு கிராமம் செய்துங்க நல்லூர் என்று பெயர் .அங்கே சென்ட்ரல் என்று ஒரு டூரிங் கொட்டகை திறந்தார்கள் .ஜி ஆர் எட்மண்ட் என்று மந்திரி (மக்கள் திலகம் முதல் அமைச்சரவையில் கல்வி மந்திரி) திறந்த நினைவு. இதற்கு எல்லாம் புகை படம் என்னிடம் இல்லை . ஆனால் இப்போது தான் தெரிகிறது புகை படம் சேகரிக்காதது எவ்வளவு பெரிய தவறு என்று .70 களில் படிப்பிற்காக திருநெல்வேலியில் குடியேறினோம் .

மலரும் நினைவை மீட்டியதற்கு நன்றி எஸ்வி சார்

மன்னிக்கவும் என்னால் regal கொட்டகை,சென்ட்ரல் கொட்டகை புகைப்படம் கொடுக்க முடியவில்லை .அதற்கு பதிலாக அந்த ஊர் கருங்குளம் பின்னணியை கொடுக்கிறேன்.

http://karungulamtemple.files.wordpress.com/2008/08/1708200820621.jpghttps://c2.staticflickr.com/4/3203/2681320899_f0d97ffd9d.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Karungulam_Board.JPG/250px-Karungulam_Board.JPG

தாமிரபரணி ஆறு பிரிக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊர்
http://photos.wikimapia.org/p/00/00/53/39/74_big.jpg

chinnakkannan
14th October 2014, 01:49 PM
க்ருஷ்ணா ஜி.. ஸ்ரீ வைகுண்டம் கருங்குளம் நினைவுகள் நன்று.. புகைக்கபடங்கள் அருமை..ம்ம்

Richardsof
14th October 2014, 03:37 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

உங்கள ஊர் வரலாற்றை நிழற் படங்கள் மூலம் காணும் போது பசுமையான கிராமம் என்பதை உணர முடிகிறது .பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .கேரளாவில் இருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் .

http://i62.tinypic.com/do9pix.jpg

gkrishna
14th October 2014, 04:12 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

உங்கள ஊர் வரலாற்றை நிழற் படங்கள் மூலம் காணும் போது பசுமையான கிராமம் என்பதை உணர முடிகிறது .பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .கேரளாவில் இருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் .


உண்மை எஸ்வி சார்
அபரிமிதமான தண்ணீர் சார் .ஆனால் என்ன பிரச்சனைனா தண்ணீர் தவிர வேற ஒண்ணும் கிடையாது. அகண்ட காவிரி மாதிரி அகண்ட பரணி போக போக குருகிடுச்சு.சில சுயநலவாத ஆக்கிரமிப்பாளர்களால்.விவசாயம் தான் முக்கிய தொழில் .அதுவும் இப்ப நடுவைக்கும்,களை பிடுங்கவும் கூட ஆள் இல்லை

rajeshkrv
14th October 2014, 09:36 PM
கிருஷ்ணா ஜி

ஸ்ரீவை குண்டம் எனது அத்தையின் மகளை கொடுத்த ஊர். இரு முறை வந்திருக்கிறேன்.. கோயிலை ஒட்டியுள்ள வீடு தான் அவர்களுடையது ...

இன்னும் கண் முன் உண்டு அந்த ஊரின் பசுமை .. நினைவூட்டலுக்கு நன்றி.

RAGHAVENDRA
15th October 2014, 07:46 AM
Murali sir, yes "aaruthal is the right word" while many movie halls are becoming muti complex, chinthamani still shines which is little comfort ..

All those memories - Vijayalakshmi, Jeyaraj, Saraswathi, Thangam, chinthamani, cinipriya/minipriya, midland, new cinema, regal, mathi innum niraya niraya

Yes Murali and Rajesh ... this applies uniformly to all the places now..

RAGHAVENDRA
15th October 2014, 07:47 AM
வினோத் சார்
தங்கள் பங்களிப்பு அபாரம் அருமை... கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவும் என்பதைப் போல புகழுரை எதுவேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்..
அதுவும் அந்த கேரளா டூரிங் டாக்கீஸ்... அருமை..
தொடருங்கள்..

RAGHAVENDRA
15th October 2014, 07:48 AM
ராஜேஷ்
மெரிலாண்ட் சுப்ரமணியம் தென்னிந்திய திரையுலகில் தனியிடத்தைப் பெற்ற பெயர்... குறிப்பாக கேரளம் மற்றும் தமிழ்த்திரையுலகில் இவரைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாது.. அந்த புகழ் பெற்ற மெரிலாண்ட் ஸ்டூடியோவின் நிழற்படம் அவருடைய படங்களை நினைவூட்டிக் கொண்டே உள்ளன.

RAGHAVENDRA
15th October 2014, 07:50 AM
கருங்குளம் தந்த கிருஷ்ணா...

என்று சொல்லலாமா.. இலவசமாக தங்கள் ஊருக்கு எங்களையெல்லாம் அழைத்துச் சென்று விட்டீர்கள் சார்... ஸ்ரீவைகுண்டம் போன திருப்தியைத் தங்களுடைய பதிவே தந்து விட்டது...

ஒவ்வொருவருக்கும் மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது... திரியின் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.. அனைவருக்கும் உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
15th October 2014, 07:51 AM
கோபால்
தங்களுடைய இளம் வயது அனுபவங்கள் எந்த அளவிற்கு சுவையாகவும் சிலாகிப்பதாகவும் உள்ளனவோ அதே வகையில் தங்களுடைய பதிவுகளும் அமைந்துள்ளன.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
15th October 2014, 07:53 AM
சகோதரி ஸ்டெல்லாஜி
தாங்களும் தங்களால் பகிர்ந்து கொள்ளக் கூடிய, அந்நாளைய தற்காலிக திரையரங்குகளான கீற்றுக் கொட்டகைகளில் பார்த்த திரைப்படங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Richardsof
15th October 2014, 08:44 AM
THANKS RAGAVENDRAN SIR

டூரிங் டாக்கீஸ் - டெண்டு கொட்டாய் - கீத்துக்கொட்டகை’‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’
டூரிங் டாக்கீஸ் - டெண்டு கொட்டாய் - கீத்துக்கொட்டகை:

http://i61.tinypic.com/353cmld.jpg
ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.
COURTESY Muralikrishna

Russellisf
15th October 2014, 09:38 AM
TOURING TALKIES OPENING SONG IN AANPAVAM

https://www.youtube.com/watch?v=7Z4QfCBUCCc

Russellisf
15th October 2014, 09:40 AM
THALAIVAR WATCHING MOVIE IN TOURING TALKIES ( EN ANNAN MOVIE SONG NEELA NERAM)

https://www.youtube.com/watch?v=P2nWo2jLMkE

Russellisf
15th October 2014, 09:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps3a16500c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps3a16500c.jpg.html)

U ntil two decades ago, evenings in Madurai meant movies. The entire town would descend on the streets and head to the theatres. Watching films was a ritual in this small town where every lane has a temple and where every turn once had a theatre.

“In the 1990's there were 52 theatres in Madurai city, out of which only 24 are functioning now. Before the 70's, ‘touring talkies' was very popular, in the city as well as the rural areas,” says Rm. M. Annamalai, State President of Tamil Nadu Theatre Owner's Association, “Later talkies became cinemas, benches were replaced with seats and the pole and tents gave way to concrete structures.”

Built in the 1930's, the Imperial Cinema was probably the first theatre to come up in temple town and ironically also the first one to be demolished 15 years ago. “From 1970 to the early nineties, there was spurt in the theatre business. Cinema going was a part of everyday entertainment those days,” recalls Annamalai, “There is a set of thirteen theatres in Madurai that can be called the oldest. Many are either shut down or have been pulled down, but Central, Vellaikannu and Regal are still functioning.”

Trophies and shields celebrating landmarks – ‘Sakala Kala Vallavan 150', ‘Padikkathavan 100' and so on – still decorate the showcase of the Central Cinema. Dusting them with care, D. Sundaram, the proprietor, says, “I feel proud whenever I see these trophies. Central was one of the sought-after theatre among movie buffs. We used to screen only two films per year and now it is two films per week. Films running for 100 or 200 days have become a thing of the past.”

“People run these old-time theatres as it is a prestige issue. Only old films are screened and there are audiences even today who come to watch MGR and Sivaji,” says Annamalai, “MGR hits like “Ayirathil Oruvan”, “Arasilangumari”, “Padakotti” and “Adimai Penn” and Sivaji starrers like “Manohara”, “Parasakthi”, “Vietnam Veedu” and “Vasantha Maligai” are evergreen movies that still draw people to the theatres.”

“MGR continues to be a phenomenon among movie lovers and many acknowledge that Madurai was much instrumental in making him the demigod. Our theatre is alive just because of MGR films” says E.M.G.S. Pothirajan, proprietor of Meenakshi Talkies and Meenakshi Paradise.

“Cinema was a strong tool at that time. Movies played a vital role even in politics. It was because of cinema that the DMK grew during the sixties” says Muthu, an MGR fan and an auto driver.

S. Ramadoss, an operator at Central, says, “Working in a cinema theatre was a matter of pride. I was the operator at Imperial Cinema and now at Central. It has been 35 years and I have seen technology change over the years.” Ramadoss's close association with cinema theatres earned him a short role in the film ‘Subramaniapuram' as an operator. “The scene in “Subramaniapuram” where people are shown fighting for tickets for ‘Murattu Kaalai' is a depiction of real trend that was once prevalent in major theatres in Madurai. It shows the craze people had for movies those days,” adds Ramadoss.

The women of Madurai have been known as movie enthusiasts. On weekend mornings theatres witnessed a huge rush of housewives. Decked in gold and the bests of Kanjivaram, the women dragged along their kids and carried tins full of murukkus, cheedais and athirasams – all to spend those three hours in reel-world. “It was common to watch three to four movies a week. I used to prepare snacks the night before and it was great fun buying tickets in the rush and groping in the dark to locate the seats,” remembers homemaker Dhanalakshimi, now in her sixties. “Finding the seat gave you a sense of thrill and achievement.”

She adds, “Cinema halls were the place where we forgot ourselves. We smiled and cried with MGR and Sivaji, enjoyed songs of M.S. Viswanathan and K.V. Mahadevan, cursed villains like P.S.Veerappa and Nambiar, worshipped K.R.Vijaya and Savithri when they played Goddesses and laughed our hearts out at the comedy of K.R. Ramachandran, A. Karunanidhi, Thangavelu and Nagesh.” Devotional films like ‘Rajakaliamman' and ‘Amman' had a strong following of women and theatres were treated as temples during the screenings.

N.M. Sivanathan, former owner of Chintamani Talkies says, “In olden days, theatre owners enjoyed a personal rapport with the producers and artistes. The trend of demanding a huge sum of money as Minimum Guarantee has left theatre owners in the lurch. Running a cinema hall has become much difficult and less profitable.”

Sivanathan's son Dr. N.M.S. Prabbakar beams, “Madurai was always considered the hot spot for films. Producers and celebrities paid often visits to theatres to gauge the pulse of audience. Chintamani enjoyed numerous such star visits.”

“The discerning Madurai movie-goer was considered difficult to convince and hence the town's response was always taken into consideration to judge a film's success. It was widely believed that if a movie makes it in Madurai, it will definitely be successful in the state,” says Iyyapan, an old-time film enthusiast.

Says Annamalai: “The current trend is mini multiplexes with capacities of 200 to 300. Air-conditioning and advanced facilities like 3D and DTS lure the audience. Only 10 percent of the film-goers continue coming to the regular theatres out of which five percent are choosy both about the films and the facilities provided. People now watch a film only if it is exceptionally good.”

Russellisf
15th October 2014, 10:00 AM
This is taken from Ananda Vikatan Pongal issue 2009.


It tells about the experience of viewing MGR movie in a village touring talkies. The people are not more than 50 (highest) but MGR movies only gives collection.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_villager_zps1a1a0c1d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_villager_zps1a1a0c1d.jpg.html)

Russellisf
15th October 2014, 10:04 AM
Mgr fans experience in thoothukudi sathya touring talkies screnned continuously 100 week mgr films

தூத்துக்குடியில் எம்ஜிஆர்.,படப்பெட்டியுடன் சைக்கிள் பேரணி: திரளான ரசிகர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்.ஜி .ஆர்.நடித்த படத்தின் படப்பெட்டி சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்றனர். “புரட்சித்தலைவர்’ என்று தமிழ்த்திரையுலக சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தூத்துக்குடியிலுள்ள சத்யா தியேட்டரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவறாமல் எம்.ஜி.ஆர். நடித்த படம் திரையிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சத்யா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 99 வாரங்கள் தொடர்ந்து ஓடியதை தொடர்ந்து அவர் நடித்த “ஒளிவிளக்கு’ படத்தின் படப்பெட்டி தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தின் சார்பில் யானை மீது வைத்து சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்துசெல்லப்பட்டது. தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலையில் இருந்து ஆட்டம்-பாட்டத்துடன் துவங்கிய சைக்கிள் பேரணிக்கு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். சைக்கிள் பேரணி எட்டயபுரம் ரோடு, கீழரெங்கநாதபுரம், வடக்குரத வீதி, 2ம் ரயில்வே கேட் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் சத்யா தியேட்டரை சென்று அடைந்தது.


சைக்கிள் பேரணியில் வக்கீல்அணி துணைசெயலாளர் நட்டர்ஜி, மாணவரணி துணைசெயலாளர் சரவணகுமார், வட்ட செயலாளர் பெரியசாமி, திருமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, மாநில எம்.ஜி.ஆர்.சமூகநல பேரவை தலைவர் நாராயணன், டைரக்டர் நீலகண்டன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க இணை செயலாளர் பெருமாள்சாமி, ஜெபராஜ், செல்லப்பா, மகேஷ்குமார், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள், கைவண்டித் தொழிலாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Russellisf
15th October 2014, 10:15 AM
FULL SONGS TAKEN IN OPERATOR ROOM FILM VEYIL

http://www.youtube.com/watch?v=th3plTrXYBQ

Scottkaz
15th October 2014, 11:11 AM
வேலூர் தொரப்பாடி கணேஷ் அரங்கம் 96 வது மக்கள்திலகம் பிறந்தநாள் விழா
http://i57.tinypic.com/296lldx.jpg
என்று எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
15th October 2014, 05:51 PM
ஸ்ரீரங்கம் ரங்கராஜா திரை அரங்கு .இப்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQFn87wQTJhcKjkichSpfxLZYdLU_wA8 RhfC2xXxkAf5UJrHM17

gkrishna
15th October 2014, 05:55 PM
srirangam devi thirai arangu

http://ananthablahblah.files.wordpress.com/2012/11/devi-talkies.jpg

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பில் இந்த தேவி திரை அரங்கை பற்றி நிறைய எழுதி இருப்பார்

gkrishna
15th October 2014, 06:03 PM
http://www.taipeitimes.com/images/2010/04/03/p04-100403-a1.jpg

Children walk past the tent of Anup Touring Talkies traveling cinema at Shikhar Shingnapur, about 350km south of Mumbai.
புனே யில் இருந்து ஷிரிடி (சாய்பாபா ) கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது என்று நினைவு இந்த ஊர் .சனீச்வரன் கோயிலுக்கு புகழ் பெற்ற ஊர்

gkrishna
15th October 2014, 06:13 PM
India's reels on wheels facing the end of the road

http://msnbcmedia.msn.com/j/MSNBC/Components/Photo/_new/pb-110217-cinema-da-01.photoblog900.jpg
Two attendants sit at the entrance to traveling talkie cinema tents in the village of Ond, south of Mumbai, India.

Reuters photographer Danish Siddiqui reports on India's traveling cinema industry:

OND, India, Feb 16 - The sleepy village of Ond comes alive for a week every year when trucks loaded with tents and projectors reach its outskirts.

The tents are pitched in open fields, converting the trucks into projection rooms for screening the latest Indian blockbusters to exuberant villagers, who otherwise have few chances to see a film at all.

But now, this decades-old tradition known as the "talkie" is under threat in the face of cable television and a flood of pirated CDs and DVDs.

http://msnbcmedia.msn.com/j/MSNBC/Components/Photo/_new/pb-110217-cinema-da-05.photoblog900.jpg
A truck used as a makeshift projection room is pictured in the village of Ond.

"People used to like touring cinemas a lot, but after these new modes of entertainment only about 10 percent of the people come here to watch films," said Anup Chadha, the owner of Anup Talkies, one such company.

Anup, 31, inherited the firm from his father, who started in the era of black and white and ran the company for 40 years.

In Ond, some 350 km (218 miles) south of Mumbai, India's cinema capital and home to its Bollywood film industry, three different companies of touring talkies show films of different genres, in a bid to attract as much of an audience as they can.

Each company runs five shows of three hours each, with the last film show ending at three in the morning. Tickets cost less than half a dollar, about 15 to 20 Indian rupees.

http://msnbcmedia.msn.com/j/MSNBC/Components/Photo/_new/pb-110217-cinema-da-03.photoblog900.jpg
A man adjusts a film reel in a makeshift travelling talkie projection room set up on the back of a truck in the village of Ond.

The shows are packed with people of all ages, who stare raptly at the films as they are shown. Children jump and clap along with the scenes, although some lie down in their parents' laps as the hour grows late, eyes still fixed on the film.

For women, who often have few chances to leave the four walls of their homes, it is an eagerly awaited outing. Dressed in bright saris, they queue at ticket counters for what is one of their only forms of entertainment.

Despite this, though, the threat to the "tambu" - tent talkies -- looms larger every year.

"There were around 50 such tambu talkies in Satara district 10 years ago, but today only seven or eight are left," said Jaywant Thorat, 45, the owner of Ayodhya Talkies.

"We are running these theatres just because of our passion for it. If we shut down our tambu cinemas, regional cinema will find no audience since they don't show these films at multiplexes in the city," he added, referring to the fact that local language films are also shown.

http://msnbcmedia.msn.com/j/MSNBC/Components/Photo/_new/pb-110217-cinema-da-04.photoblog900.jpg
Villagers sit inside a travelling talkie tent to watch a movie in the village of Ond.

Not all the owners are giving up without a fight.

Some have devised new marketing strategies, such as distributing packets of shampoo and pocket-sized pictures of film actresses with the tickets, but the money from this is small.

Anup Chadha forecasts that touring talkies will be extinct within five years if the government doesn't step in.

"Sometimes I want to shut down this business but there are so many people associated with this talkie that I hang on for them," he said.

If that happens, the only cinema available to people in the villages may come from local devotees such as Suresh, a farmer who is also the owner of Akshay Talkies and has converted a vintage truck to a projector room, using a tractor to pull it.

"We can't afford to go to watch a film in a theatre, especially with the nearest town being 70 km (43.50 miles) away from here," said Vikas Shinde, a farmer who waited eagerly at the counter to grab his ticket.

"These talkies are just 100 metres away from my house."

http://msnbcmedia.msn.com/j/MSNBC/Components/Photo/_new/pb-110217-cinema-da-02.photoblog900.jpg
A man walks near posters advertising movies playing inside travelling talkie tents in the village of Ond.

gkrishna
15th October 2014, 06:19 PM
http://www.karmakerala.com/news/wp-content/uploads/2010/12/The-New-Theatres...one-of-the-venues.jpg

திருவனந்தபுரம் நியூ திரை அரங்கு
நீலா production merryland சுப்ரமணியன் அவர்களுக்கு சொந்தமானது
திரு ராஜேஷ் அவர்கள் கூட merryland ஸ்டுடியோ பற்றி குறிப்பிட்டு உள்ளார் .

Richardsof
16th October 2014, 09:22 AM
1950 களில் நாடகங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து, 1960 களில் முடி சூட்டி, 1970களிலும் கொடி கட்டி பறந்த சரித்திர நாயகர்கள் எம்ஜிஆர்-சிவாஜி. அதிக வருடங்கள் அடுத்த தலைமுறை நடிகர் கூட இல்லாத நிலை இவர்களின் காலங்கள். இவர்களின் ரசிகர்களே தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை
நிர்ணயிப்பவர்கள். இவர்களின் படங்களே திரைஉலகின் வாழ்வாதாரங்கள். இருவேறு கட்சிகளின் அனுதாபிகளாக தங்களை காட்டிகொண்டதாலே இவர்கள் இரு துருவங்களாக ஆக்கப்பட்டு, தமிழ் ரசிகர்களின் முதலிரு இடங்களில் கோலோச்ச வைத்தது. காங்கிரஸ் கட்சியின் நாயகனாக சிவாஜியும், திராவிட கட்சியின் நாயகனாக எம்ஜிஆரும் பார்க்கபட்டார்கள். குடும்ப சித்திரம், நடிப்பு, சரித்திர படங்கள், என்று சிவாஜி ஒரு புறமும், சமூக படங்கள், பொழுதுபோக்கு படங்கள் என்று எம்ஜிஆர் ஒரு புறமும் ரசிகர்களை தங்கள் பக்கம் மயங்க வைத்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி பற்றி சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் திராவிட அனுதாபியாக இருந்து காமராஜரின் பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பக்கம் சென்றவர் சிவாஜி. காங்கிரஸ் அனுதாபியாக இருந்து அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சியின் பக்கம் சென்றவர் எம்ஜிஆர் என்பது பலரும் அறியாத உண்மை. எம்ஜியார், சிவாஜி படங்கள் ஒன்றாக வெளியாகும் நாட்களே தீபாவளி போலானது. கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்று, இரண்டு நாட்கள் கூட திரைஅரங்குகளின் நின்று படம் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அவையே திரையுலகின் பொற்காலமாக கருதப்பட்டது.

JamesFague
16th October 2014, 09:40 AM
I think the Srirangam Rangaraja theatre is still running but i am not sure. In this theatre only I have watched Andaman Kadhali, Iru Nilavugal and

many other movies during summer vacation.


Regards

gkrishna
16th October 2014, 12:46 PM
நன்றி சித்தூர் சார்
திருவானைக்காவல் வெங்கடேசா னு ஒரு திரை அரங்கு .நிறைய பிட் படம் போடுவாங்க .அது இருக்கா இப்ப

gkrishna
16th October 2014, 02:13 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f5/Alam_Ara_poster%2C_1931.jpg
Alam Ara poster, 1931

On March 14 , 1931 Indian cinema created history . First Hindi talkie ” ALAM ARA “ made by Ardeshir Irani was released on this very day in the Majestic cinema of Bombay [ now Mumbai ] Though , ” RAJA HARISCHANDRA ” , first ever full – length silent feature film of India was made by Dada Saheb Phalke , the pioneer of Indian cinema , in 1913.
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Phalke.jpg/300px-Phalke.jpg

Dada Saheb Phalke - Father of Indian Cinema

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4d/Raja_Harishchandra.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/A_scene_from_film%2C_Raja_Harishchandra%2C_1913.jp g/300px-A_scene_from_film%2C_Raja_Harishchandra%2C_1913.jp g

A rare still in Raja Harishchandra

http://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/Newpaper_advertisement_for_Alam_Ara%2C_1931.jpg

A rare still in Alam ara
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/AlamAraStill.jpg/300px-AlamAraStill.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/AlamAra.jpg/300px-AlamAra.jpg

The name of the actors , who played major role in ” ALAM ARA ” , is worthy of notice for the today’s film connoisseurs. Apart from Master Vithal and Zubeida Begum Dhanrajgir [ known as Zubeida ] , it had singer Wazir Mohammad Khan as a faqir. Three prominent actors , who were part of the cast of ” ALAM ARA ” and who played major role in the talkie era and are known to today’s generation also , were Prithvi Raj Kapoor , Jillo Bai and L. V. Prasad .

t is sad that no print of the epic movie ” ALAM ARA “ is available today. This part of our history is lost for ever and no one is bothered . Ardeshir Irani’s path-breaking film is lost forever.

JamesFague
16th October 2014, 02:56 PM
Trichy Jupiter - Thyagam

Trichy Raja - Nallathoru Kudumbam

Trichy Ramba - Krishnan Vandahan

Trichy Marris - Thai Naadu

Tricy Sona - The Living Day Lights


The above movies are seen by at Trichy during summer vacation.


Now most of the theatres have been closed or changed as shopping malls.


Regards

Regards

gkrishna
16th October 2014, 03:12 PM
South Mumbai and Old Theaters Details

The era when Rajesh Khanna, Jitendra like actors rocked and Amitabh Bachchan Zanzeer released in cinema theaters of south Mumbai locations like Grant Road, Opera House and Mumbai Central was to be seen, These old theaters then had ticket costing Rs.1 and Rs 2.50. The then called Talkies use to be jammed packed with people watching 2 to 3 shows continuously of movie goes hit, That golden era of Indian cinema turned from Black and white to Color and so the old theaters were dilapidated and the new trend of multiplex arise in starting years of 2000 when chains like Big Cinema, Cinemax, Fame and Broadway are leading the talkies industries.

So what about those old theaters now, Are they closed ? and the answer is no the show still goes on, But now its nothing latest of those movies so more, rarely one can find new movies released and be screened in the list of old talkies of Mumbai as listed below. Almost all of these cinema house features Bhojpuri, Tamil, Telugu films, some times those old Bollywood hits too and some and most of them also show semi-adult movies that attracts the labor class, beggars at cost of Rs.25 and somewhere around. That is the entertainment in those talkies now a days for survival. Below are list of such theaters in South Mumbai locations like Grant Road, Mumbai Central and Opera House.

Maratha Mandir at Mumbai Central : DDLJ ( Dilwale Dulhaniya Le Jayenge ) movie is the first thing that comes in mnd when we get the name of this one of the very old theaters located at Mumbai Central East. And who will forget that royal entrance of legendary actor Dilip Kumar riding on Horse and theater location filled with Elephants on premier day of the royal film ‘Mughal-E-Azam’ which kept running for next 6 years since 1960, Wow. Till date the ticket cost at Maratha Mandir is like Rs.25, Rs.35 and below Rs.100.

http://www.mumbai77.com/Pictures/Gallery/albums/uploads/13-Jan-2011/normal_Maratha-Mandir-Cinema.jpg

The very first movie to get premiered here was Sunil Dutt’s Sadhna. This theater is old yet cannot be said outdated as DDLJ is still featured in Rs.25 and weekends are filled now also

gkrishna
16th October 2014, 03:15 PM
Royal Talkies, Grant Road : Before it started screening Bollywood movies in 1930’s, Since it started in 1911, Royal theater was known to show small documentaries shot and stage plays during Old Mumbai days. With seating capacity of 600 people, hardly any heads are seen now. Located at Royal Cinematography, M Saukatali Road, Mumbai Central, this is one of those beautiful memories of old talkies still in shape to be watched when along the way.

http://www.mumbai77.com/images/newblog/Old-Royal-Theater.jpg

gkrishna
16th October 2014, 03:20 PM
Edward Theater, Dhobi Talao : Historically this old theater was named after Kind Edward since 1914. Edward is best known for Mythological classic of all time called ‘Jai Santoshi Maa’ that released in 1974, now this is funny to hear but in those days it really happened outside this old theater, Womens from around area got so into the role played and spiritual Maa Santoshi of that movie that they came in well traditional dress with diya and thalis in front of screen (was allowed that time) to pray godess inside theater.

http://www.mumbai77.com/images/newblog/Old-Edward-Talkies.jpg

gkrishna
16th October 2014, 03:23 PM
New Roshan talkies, Grant Road : Exactly opposite Delhi Darbar at 195/197, Patthe Bapu Rao Marg is this old memory of Mumbai cinema called New Roshan Talkies, Started in 1930 with ticket rates till date at Rs.15 and Rs.20 attracting poor to watch the rerun movies since it started by a Parsi family in Mumbai, now with Mr Iqbal who takes care of theater with some of other changes like chairs and furniture with time and little profit.

http://www.mumbai77.com/images/newblog/Old-New-Roshan-Talkies.jpg

gkrishna
16th October 2014, 03:25 PM
Capitol Cinema, CST : Exactly opposite our Monument CST station is this old small white looking theater called ‘Capitol’ since 1879, Once the Gothic movie play house of residents around fort area which played some British dramas is now the B Grade Hindi movie show theater. The very first show at Capitol cinema was attended by Governor and his wife, which features a premier of ‘The Flag Lieutenant’ which was a British film

http://www.mumbai77.com/images/newblog/Old-Capitol-Cinema.jpg

gkrishna
16th October 2014, 03:26 PM
Nishat Cinema, Grant Road : Located at Sukhlaji Marg, Kamathipura, The famous Red light Area of Mumbai, Nishat cinema was once a play house started on 15th August 1952. This theaters is owned by Neeta Palhaj Nihalani, wife of Director pehlaj nehalani which now runs only Bhojpuri films after the play house was replaced with this old theater. Ticket cost are still Rs.15 and Rs.20 for all shows in this talkies.

http://www.mumbai77.com/images/newblog/Old-Nishat-Talkies.jpg

gkrishna
16th October 2014, 03:26 PM
Imperial Cinema Hall, Grant Road : Located at 360 Near Police Station, Lamington Road, Girgaum, Mumbai, Imperial is a special Bhojpuri cinema hall with good business collections in Night shows. Way back in 1905 when Imperial started, it was hosting famous orchestra’s in this theater. Those white round pillars with that old Orchestra style semi circled board with name ‘Imperial’ is some thing you will like to see once. Now if you want to try any Bhojpuri film at cost of Rs.30 and Rs.35 this is one of the special theaters for same

http://www.mumbai77.com/images/newblog/Old-Imperial-Theater.jpg

gkrishna
16th October 2014, 03:28 PM
Gulshan Theater, Opera House : Located at Play House 215, Opera House, Exactly opposite Delhi Darbar this is one of the oldest and cheapest cinema halls of Mumbai still running at ticket rates of Rs.9 and Rs.10. Good to be once as trial as the cinema halls is also been renovated some 10 years before, Let me say now that is a good cheap time pass location in Mumbai to enjoy movies from 1980’s and 1990’s, atleast in that hot summer day, feels like doing something funny and new in city.

http://www.mumbai77.com/images/newblog/Old-Gulshan-Cinema.jpg

gkrishna
16th October 2014, 03:59 PM
Alfred Cinema Hall, Grant Road : Another in the list of Old theaters of Mumbai, Located at Plot Number. 174/180 Patthe Bapurao Marg, Grant Road East, Mumbai. Alfred is one of those oldest talkies started in 1880 with name ‘Rippon’ then renamed to ‘Alfred’ in 1932 (i.e still before Independence), with ticket pricing as low as Rs.18 and Rs.20, people now visit this old beautifully European architectural cinema hall of Mumbai to see soft porn movies and action movies.

http://www.mumbai77.com/images/newblog/Old-Alfred-Theatre.jpg

gkrishna
16th October 2014, 04:34 PM
http://mevidur.files.wordpress.com/2010/11/ayodhyecha_raja_1932_marathi_film_india.jpg?w=468

ayodhyecha_raja_1932 - முதல் மராத்தி மொழி திரை படம்

gkrishna
16th October 2014, 04:37 PM
http://mevidur.files.wordpress.com/2010/11/joymati.jpg?w=468

joymati - முதல் அஸ்ஸாமி மொழி திரை படம் 1935

JamesFague
16th October 2014, 06:48 PM
Bangalore Theatres:

Bangalore New City Theatre - Watched so many picutres including Ramarajan's Gopura Deepam. No become shopping centre.

Kino - No idea

Saradha - I think it is still running

Nataraj - I think it is Still running

Pallavi - I think it is still running

Poornima - Still running

Urvashi - Still running

Parimala - No idea

Sangam - Become shopping mall

Lido - No idea

Rex - No idea

Sampige - No idea

some theatres near Ulsoor I forget the names where I have seen so many movies like Minsara Kanavu, Avvai Shanmugi etc.,

One theatre near Shivaji Nagar I do not know whether it is there or not.

Egipura Ravi near Koramangala - no idea about the running of the theatre

Easwari near Kathiriguppa - no idea about the running of the theatre

Chowdeshwari near Bank Colony - no idea about the running of the theatre

Navarang near Rajaji Nagar- I think it is still running

Santhosh theatre near Majestic - I think it is still running


There are other theatres near Majestic area where I have watched so many Hindi/Kannada movies during 90's. Unforgettable experience. Wonderful city.


Regards

Gopal.s
17th October 2014, 08:14 AM
கீற்று கொட்டாய் என்பதை ,நான் கீழ்கண்டவாறு அணுகுவேன். இந்த பெயர் ஒரு குறியீடு மட்டுமே. இதை நாம் சினிமா மீறிய ஒன்றாய் கூட அணுகலாம்.



1)பொதுவாக பழைய ஞாபக கிளறல்.

2)உண்மை தன்மை, அந்த பருவத்தின் உண்மை உணர்வுகள்.அவை முதிர்ச்சியற்று,வெட்கும் படி அமையினும்.

3)உயர்வு,தாழ்வு,வர்க்க பேதம்,அந்தஸ்து,இன்றைய நிலை பேணாமல் ,அதில் நுழைந்து புறப்படும் பக்குவம்.

4)மாறி வரும் காலத்தில், அன்றைய காலத்தின் அசல் பதிவுகள்.

5)அதில் ஊடாக நிற்கும் அழகியல்,இயற்கையான அடிப்படை வாழ்வு,சுரண்டல்,மனிதம்,அப்பாவித்தனம்,மூடிய மனங்கள்,சில குரூரங்கள்,வக்கிரங்கள்,காதல்கள்,காமங்கள்,குற்றங்கள ்,மீறல்கள்,அதிசயங்கள்,இழப்புகள்,வரவுகள்,நல் -வல் உணர்வுகள் ,பாசங்கள்,குதறல்கள்,ஈரங்கள் அனைத்தும் இருக்கும்.

6)மன உணர்வுகளில் செய்திகள் ஏறாமல், இன்னொரு மனத்தை குடியேற்ற செய்யும் பதிவுகள்.

7)இதில் மற்ற பதிவர்கள் போல cut paste செய்து,ஒரு ஊரின் டென்ட் கொட்டாய் ,அதில் தன் அபிமான நடிகரின் படம் எப்படி ஓடியது என்ற போலி பீற்றல்கள் என்று சுருக்காமல்,இன்னும் விரிவான தளத்தில் இருக்க வேண்டும்.

8)சுருக்கமாக, என் போன்ற,வாசு போன்ற,மது போன்ற,முரளி போன்ற,சி.க போன்ற,கிருஷ்ணா போன்ற ,ராகவேந்தர் போன்ற,கார்த்திக் போன்ற,வெங்கி போன்ற,P _ R போன்ற,Poem போன்ற ,சாரதி போன்ற,ஜோ போன்ற அழகுணர்ச்சி, எழுதும் திறன் கொண்ட பங்களிப்பாளர்களால் இத்திரி நிறைந்தால் ,நமக்கு முழு விருந்து காத்திருக்கிறது.

RAGHAVENDRA
17th October 2014, 08:26 AM
கிருஷ்ணா
செலவில்லாமல் மும்பையின் அந்நாளைய திரையரங்குகளைச் சுற்றிக் காண்பித்து விட்டீர்கள்.

ஆகாஷ்வாணி திரையரங்கில் தானே ஷோலே ஐந்து ஆண்டுகள் கிட்டத்தட்ட ஓடியது? அந்தத் திரையரங்கில் நடிகர் திலகத்தின் முழு நீள நிழற்படம் மாட்டப்பட்டிருந்ததாக முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை..

சித்தூர் வாசு
தங்களுக்குப் பரிச்சயமான ஊர்களில் இருந்த திரையரங்குகள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு மட்டுமல்ல அந்நாளில் அங்கிருந்த, இம்மய்யத்தில் இத்திரியினைப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற ஒவ்வொருவருக்கும் நினைவுகளை மீட்டியிருக்கும்.

வினோத் சார்
தங்களுடைய பங்களிப்பு இத்திரிக்கு மிகப் பெரிய பலம்.

கோபால் சார்
இத்திரியினைப் பற்றிய தங்களுடைய புரிதல் மிக அருமை.. எந்த கோணத்தில் இதை நாம் அணுக வேண்டும் என்பதைத் துல்லியமாக என் மனதைப் படித்து சொல்லியிருக்கிறீர்கள்.. This shows the wavelength we are sailing...

கோபால் சொல்லியிருப்பது போல் கீற்றுக் கொட்டகை என்பது ஒரு பழைய காலத்து டூரிங் டாக்கீஸ் என்பதையும் தாண்டி பழைய நினைவுகளைக் கிளற வைப்பதற்கான ஒரு icon ஆகவும் நாம் எடுத்துக் கொண்டால் அந்நாளில் நம்முடைய திரையரங்க விஜயம் மற்றும் அது தொடர்பான நம் வாழ்க்கையின் நிகழ்வுகளையும் சேர்த்து இத்திரியின் கருத்தரங்கினை விரிவாக்க உதவும்.

என்றாலும் கோபால் சார்
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அந்நாளில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு விஷயத்தில் தங்களுடைய அபிமானத்தை செலுத்தியிருப்பர். குறைந்த செலவிலான பொழுது போக்கு சாதனம் என்கிற வகையில் சினிமாவின் மேல் ஏற்பட்டிருக்கக் கூடிய அபிமானம், அதைத் தாண்டி அதிலிருந்து narrow down ஆகி ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது இசையமைப்பாளர் என்கிற வகையில் அபிமானம் focus ஆகி அது ரசிகர் என்ற பரிமாணத்தையும் அதற்கு அடுத்த பரிமாணத்தையும் அடைந்திருக்கும். அந்த நினைவுகளும் அதையொட்டிய நிகழ்வுகளும் வாழ்வில் என்றைக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

இவற்றைத் தவிர்க்க முடியாது.

Richardsof
17th October 2014, 08:35 AM
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அந்நாளில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு விஷயத்தில் தங்களுடைய அபிமானத்தை செலுத்தியிருப்பர். குறைந்த செலவிலான பொழுது போக்கு சாதனம் என்கிற வகையில் சினிமாவின் மேல் ஏற்பட்டிருக்கக் கூடிய அபிமானம், அதைத் தாண்டி அதிலிருந்து narrow down ஆகி ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது இசையமைப்பாளர் என்கிற வகையில் அபிமானம் focus ஆகி அது ரசிகர் என்ற பரிமாணத்தையும் அதற்கு அடுத்த பரிமாணத்தையும் அடைந்திருக்கும். அந்த நினைவுகளும் அதையொட்டிய நிகழ்வுகளும் வாழ்வில் என்றைக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
இவற்றைத் தவிர்க்க முடியாது.

THANKS RAGAVENDRAN SIR

Richardsof
17th October 2014, 08:50 AM
கீற்று கொட்டகை

கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது அவரவர் விருப்பமான நடிகர்கள் படங்களை பற்றி பதிவிடுவதை பற்றி கிண்டல் கேலி செய்யும் திரு கோபால் முதலில் தன்னுடைய ''நான் '' என்ற
அகந்தையை மாற்றி கொள்ளட்டும் .பிறரின் பதிவை மதிக்க முடியாத கோபாலுக்கு எங்கே நாகரீகம்தெரிய போகிறது ? எந்த திரிக்கு போனாலும் கோபாலின் நிலைமை இதே தான் .


உங்களுக்கு பிடித்தமான வற்றை பதிவிடுங்கள் . நாங்கள் இதுவரை எந்த நிபந்தனையும் , நிர்பந்தங்களையும் யார் மீதும் திணிக்கவில்லை .நீங்கள் வல்லவனாகவே இருங்கள் . கொஞ்சம் நல்லவனாக மாற யோசியுங்கள் .

Gopal.s
17th October 2014, 09:48 AM
கீற்று கொட்டகை

கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது அவரவர் விருப்பமான நடிகர்கள் படங்களை பற்றி பதிவிடுவதை பற்றி கிண்டல் கேலி செய்யும் திரு கோபால் முதலில் தன்னுடைய ''நான் '' என்ற
அகந்தையை மாற்றி கொள்ளட்டும் .பிறரின் பதிவை மதிக்க முடியாத கோபாலுக்கு எங்கே நாகரீகம்தெரிய போகிறது ? எந்த திரிக்கு போனாலும் கோபாலின் நிலைமை இதே தான் .


உங்களுக்கு பிடித்தமான வற்றை பதிவிடுங்கள் . நாங்கள் இதுவரை எந்த நிபந்தனையும் , நிர்பந்தங்களையும் யார் மீதும் திணிக்கவில்லை .நீங்கள் வல்லவனாகவே இருங்கள் . கொஞ்சம் நல்லவனாக மாற யோசியுங்கள் .

எஸ்.வீ,



எங்கு வந்தாலும் ஒற்றை agenda வுடன் வரும் ஆள் நானல்ல. பதிவுகளுக்கு இடம்,பொருள்,ஏவல்,உண்மை தன்மை அவசியம்.



உங்கள் பெயரையே குறிப்பிடாத போது ,எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லாத போது ஏன் வந்து தலை கொடுக்கிறீர்கள் என்றே புரியவில்லை.



அப்படி நாகரிகம் பார்ப்பவரானால் ,இன்றைக்கு உங்கள் கட்சியை கட்டி காக்கும் ,படித்தவர்கள் மத்தியில் உங்கள் கட்சிக்கு ஒரு பிடிப்பினை ஏற்படுத்திய உங்கள் தலைவியை பற்றியே ஒரு அநாகரிக பதிவு பதித்தீர்களே,அது என்ன வகை நாகரிகம்?



ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் பதிலில்லை என்னும் போது ,மற்றவருக்காக நீங்களும் எல்லை மீறியுள்ளீர்கள் என்னும் போது ,உங்கள் gentleman இமேஜ் எங்கே போனது?



என்னை பொறுத்த வரை வார்த்தைகள் மட்டுமே நாகரிக எல்லை இல்ல. இடம் பொருள் ஏவல் அறிந்து உரிய பங்களிப்பு, பொய் உரைக்காமை , அநாகரிக தாக்குதலை தவிர்த்தல் (விருதுகள் பற்றிய பதிவுகளின் போது பூப்பறிக்க போனீர்களா?பதிலுக்கு நாங்கள் விருது வந்த விதத்தை தீர அலசியிருந்தால் எங்கே கொண்டு போய் முகத்தை வைப்பீர்கள்),அளவு மீறி புகழ்ச்சி தவிர்த்தல் எல்லாமே நாகரிகம்தான்.



என் பதிவுகள் பொய்யுரையோ,முகஸ் துதியோ இல்லை. ஒவ்வொரு பதிவும் உழைப்பை,அறிவை சார்ந்தது.எங்கு வந்தாலும் என் பிரிய நடிகரை சுமந்து வந்து மற்றவரை போர் அடித்ததில்லை.

தோன்றியதை தோன்றிய படி உரைத்தாலும்,யாரிடமும் வன்மம் பாராட்டியதில்லை. என்னை பற்றிய விமர்சனங்களையும் நான் எதிர்கொண்டே உள்ளேன்.இன்று நாகரிகம் பற்றி lecture கொடுப்பவர்களின் சில பழைய பதிவுகளை போட்டால் உண்மை புரியும்.



நான் உங்களின் பதிவுகளுக்கு உரிய பெருமைகளை வழங்கியே உள்ளேன். இன்று கூட உங்களை நண்பராக கருதித்தான் பேசுகிறேன்.எழுதுகிறேன். அதே போல என் அபிமான நடிகருக்காக என் எழுதுகோல் பொய்மையாக வளைந்து கொடுத்ததேயில்லை.



இதற்கு மேலும் நாகரிகம் தேவையென்றால் அதை நான் எந்த பள்ளியிலும் கற்றதில்லை. பொய்யாக வாழ்வோருக்குத்தான் ,சார் போட்டு வார்த்தைகளில் பசப்பி, விஷம் விதைக்கும் வித்தை தெரியும்.



நானோ யாருக்கும் சலாமோ,சாரோ போடாதவன். போடுவதையும் விரும்பாதவன்.



இந்த திரியின் நோக்கம் குறுகி விடாமல் இருக்க ஆலோசனையாகவே கருத்துகளை வெளியிட்டேன். புரிய வேண்டிய மனித மூளைகளுக்கு புரிந்து விட்டது.சிறு மூளையில் மட்டுமே ஜீவிப்பவற்றுக்கு வயிற்றுக்கு மட்டுமே சோறிட முடியும்.

Richardsof
17th October 2014, 09:59 AM
வார்த்தை விளையாட்டு - உமது ஒரு பக்கத்தை காட்டுகிறது .சம்பந்தமே இல்லாதவார்த்தைகள் .
அளவோடு இருந்தால் எல்லாமே நலம் . உங்களுக்குத்தான் ....... நண்பனாக பரிதாப படுகிறேன் .
உங்கள் உள் மனதில் உள்ள வன்மங்கள் எனக்குதானே தெரியும் ?

இத்துடன் நிறுத்தி கொண்டு முடிந்தால் நல்லவற்றையே நினைத்து நல்லதையே பதிவிடுங்கள் .
மீண்டும் கிளறாதீர்கள் .வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு .

Gopal.s
17th October 2014, 10:15 AM
வார்த்தை விளையாட்டு - உமது ஒரு பக்கத்தை காட்டுகிறது .சம்பந்தமே இல்லாதவார்த்தைகள் .
அளவோடு இருந்தால் எல்லாமே நலம் . உங்களுக்குத்தான் ....... நண்பனாக பரிதாப படுகிறேன் .
உங்கள் உள் மனதில் உள்ள வன்மங்கள் எனக்குதானே தெரியும் ?

இத்துடன் நிறுத்தி கொண்டு முடிந்தால் நல்லவற்றையே நினைத்து நல்லதையே பதிவிடுங்கள் .
மீண்டும் கிளறாதீர்கள் .வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு .
நண்பர்களாக இருந்தால் ,ஒருவரது பலம்,பலவீனம் மற்றவர்களுக்கு புரிந்தே இருக்கும். ஆனால் அதை வைத்து பொதுவில் மிரட்டுவது, நாகரிக எல்லை மீறுவதாகும். இங்கு நிறைய நண்பர்களின் நிறைய விவரங்கள் எனக்கும் தெரியும். ஆனால் அவை என்னோடு மட்டுமே தங்கும்.அதுதான் நாகரிகம்.



என்னை விட வல்லவனை இதுவரை சந்தித்ததில்லை. இனிமேல் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சி அடைவேனே தவிர வருந்த மாட்டேன்.

Richardsof
17th October 2014, 11:35 AM
http://i61.tinypic.com/2z55da0.jpg

Richardsof
17th October 2014, 11:36 AM
MADURAI - ALANKAR

http://i59.tinypic.com/2058uoo.jpg

Richardsof
17th October 2014, 11:40 AM
1966
CHENNAI - GAIETY

http://i61.tinypic.com/24fwsgi.jpg

chinnakkannan
17th October 2014, 03:21 PM
”ஹவுஸ் ஃபுல்” நினைவுகள்

பகுதி ஒன்று..

ஹாய் ஆல்..

அந்தக்கால மதுரை தியேட்டர்களைப் பற்றி சில பகுதிகளாய் எழுதிப் பார்க்க உத்தேசம் என்றவுடன் நினைவுப்புறா மனதினிலிருந்து எழுந்து மெளஸருகில் அமர்ந்து என் விரல் விளையாடுவதைப் பார்க்க ஆரம்பித்தது..

அதாகப் பட்டது அறுபதுகளின் இறுதியில் என் தாய் தந்தையருக்கு எட்டாவதுமகனாகப் பிறந்த இளங்குருத்தாகிய நான் ( “பக் பக்..ஏன் ஆரம்பத்திலேயே பொய் சொல்றே” “ஹேய் மடப்ப்ரா.. ஸாரி டைப்போ மடப்புறா..நீ என்ன என் மனசாட்சியா..இப்படில்லாம் கொத்தப்படாது..சமத்தா வேடிக்கை பாரு”) என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்… எட்டாவது பையன் (எனக்கு முன் இருவர் பிறந்து ஒருவர் பிறப்பிலேயே மரிக்க, இன்னொரு ஐந்து வயது சகோதரி நான் பிறப்பதற்கு சிலவருடங்கள் முன் இடிந்து விழுந்த சரஸ்வதி ஸ்கூலில் (முரளி சாருக்குத் தெரிந்திருக்கலாம்)இடிபாட்டில் இறந்து போய்விட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார்) ஆகப் பிறந்த நான் வளர்ந்தது கல்லூரிப்படிப்பை முடித்தது எல்லாம் தேவி தியேட்டரின் அருகிலிருந்த கிருஷ்ணா ராயர் தெப்பக்குள வெஸ்ட் தெருவில் இருந்த எங்களது வீட்டில் தான்..

எனில் சுயசரிதையை விட்டால்..தேவி தியேட்டர்.. வீட்டின் ஆரம்பம் ஒரு தெருவென்றால் வீட்டின் முடிவு அடுத்த தெரு .( நீளமான எட் கட்டு வீடு) கொல்லைப் புறக் கதவைத்திறந்து வலதுபக்கம் பார்த்தால் சற்றுத் தொலைவில் தேவி தியேட்டர் வாசல் தெரியும்.. அங்கு தான் வரும் புதுப்படங்களின் கட் அவுட்கள் எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன்

தியேட்டர் வாசலில் இருந்து தியேட்டர் போவதற்கு ஒரு மணல் பாதை.. அதற்கு முன்னாலேயே பாதியில் இடது புறம் எண்பது பைசா தொண்ணூறு பைசா – ஆண்கள் டிக்கட் வலது புறம் 1.45. 2.90 டிக்கட்.. பின் ஒரு பெரிய கேட்..

புதுப்படம் ரிலீஸானால் க்யூவில் நிற்கும் போது அந்த ப் பெரிய கேட் வாசலில் ஒரு தலை நரைத்த நபர் குட்டிக் குட்டிக் கருங்கற்களை மிக்ஸியில் அரைத்தால் எழும்பும் ஒலியைப் போல ஹேய் ஒழுங்கா நில்லுப்பா கூட்டம் போடாதே எனச் சத்தம்போட்டு கையிலிருக்கும் ஒரு குச்சியால் தட் தட் எனக் கம்பிகளையும் தட்டுவார் – அவர் உள்ளிருந்த படியே..

என்னை சின்ன வயதில் எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்வது அம்மா தான்.. என் சகோதரிகளுடன். . மூத்த அண்ணன் ஸ்டேட்பாங்க்கில் வேலைக்குச் சென்று விட இரண்டாவது அண்ணன் கல்லூரியில் பியுசி படித்திருந்த காலகட்டம்.. மூத்த அக்கா கூட கோவைக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாய் நினைவு..
எனில் பார்த்த படங்கள் கணக்கில.. வயது விவரம் தெரிவதற்கு முன்பே பார்த்த பல படங்களில் சில எங்கிருந்தோ வந்தாள், நாளை நமதே, சவாலே சமாளி, தர்மம் எங்கே குலமா குணமா.வைர நெஞ்சம்... திடீர் திடீரென பழைய படங்க்ளும் போடுவதுண்டு அப்படிப்பார்த்த படங்கள் சிவகவி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சபாஷ் மீனா..இன்னும் இன்னும்..

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சமயத்தில் தான் கண்ணாக்குத் தனியாகப் படம் பார்க்க முடியும் எனத் தெம்பு வந்து என்னிடம் தொண்ணூறு பைசா கொடுத்து அனுப்பினார்கள்..ஒரு மேட்னி ஷோ.(காரணம் நான் வளர்ந்துவிட்டேனே மம்மி! அது அடுத்த பாரா)

அதற்கு முன் தான் டெஸ்ட் ட்ரைவ் என்பது போல சாந்தி தியேட்டரில் (மதுரை) மன்னாதி மன்னனுக்கு இளைய சகோதரி அம்மா எனப் போய் பார்த்த போது டிக்கட்டிற்கு (இந்தப் பையனை எல்லாம் பெண்கள் டிக்கட்ல விட முடியாதும்மா..ஆளு பாரு வளத்தியா இருக்கான்…: டிக்கட் கொடுக்கலேன்னா போ.. ஏன் கொழந்தையக் கண்ணு வைக்கறே என அம்மா திட்டி..கண்ணா இந்தா தொண்ணூறு காசு போய் ஆண்கள் செக்ஷன்ல ஒக்காந்துக்கோ என அனுப்பி- மறக்காம இண்டர்வெல்ல எட்டிப் பாரு – எனச் சொல்லி அனுப்ப, நான் சென்று ஆசையாய் அமர்ந்து படம்பார்த்து இண்டர்வெல்லில் எழுந்து நிற்க திரும்பிப் பார்த்த அம்மாவின் கண்களில் நிம்மதி.

இப்படியாகத்தானே மற்ற தியேட்டர்களுக்கும் தனியாகச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது ( ஒன்பதாம் வகுப்பு என நினைக்கிறேன்)

தேவி தியேட்டர்- வீட்டின் அருகாமை என்பதால் படம் பார்ப்பதும் சுலபம்..புதுப்படம் வந்தாலும் வீக் டேஸில் எப்படியாவது நின்று பார்த்தது உண்டு.. தெரு முனை திரும்பினால் சாலைகடக்காத இடது புறத்தில் ஒரு டீஸ்டால் ஒரு பெட்டிக்கடை..சாலைகடந்தால் எம்.ஆர்.எஸ் மணி சைக்கிள் கடை அதை ஒட்டி பார்பர் ஷாப் இட்லிக்கடை பின் ஒருவெற்றிலைபாக்குக் கடை (அந்த இட்லிக்கடைக்கே சொந்தம் என நினைக்கிறேன்) குண்டாக இருக்கும் ஒரே ஜாடையில் இருக்கும் சகோதரர்கள் அந்த வெ.பா.கடையில் எப்போதும் இருப்பார்கள் ஈவ்னிங் நைட் ஷோவில் அந்தக் கடைகளில் கூட்டமாயிருக்கும்..கோல்ட் ஸ்பாட் பொவொண்டோ, கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் என சேல்ஸ் தூள் பரத்தும்..

தேவியில்பார்த்த பழைய படங்களில் இப்போது நினைவுக்கு வருபவை படித்தால் மட்டும் போதுமா, போலீஸ்காரன் மகள், வானம்பாடி, ஆலய மணி., பாலும் பழமும்..இந்த ஆலயமணி கொஞ்சம் மறக்க முடியாது..

அப்போது என் இரண்டாவது அண்ணன் கல்லூரி முடித்து குவைத் சென்று விடுமுறைக்கு வந்திருந்தார்.. வா போலாம் நைட் ஷோ என அழைத்துச் சென்றார்.. பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பூட்டியிருந்த கம்பிகேட் திறந்து திண்ணை வழியாக குறுகலான மாடியில் ஏறி மொட்டை மாடியிலேயே தூங்கிவிட்டோம் (சூடு குறைய ஏற்கெனவே தண்ணீர் தெளித்து வைத்திருந்தோம்)

அதன் பின் வந்த நான்கு நாட்களில் இரவெல்லாம் மொட்டை மாடி தான்.. ஊர் அடங்கி நிசப்தமாய் இருக்கையில் தேவி தியேட்ட்ரில் இருந்து இரவுக் காட்சி கொஞ்சம் சத்தமாய்ப் பாட்டுக் கேட்கும்.. நான்கு நாட்களும் அண்ணனும் என்னுடன் மொட்டை மாடியில் தூங்கியதால் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை..தொடர்ச்சியாக கண்ணான கண்ணானுக்கு அவசரமாவில் ஆரம்பித்து சட்டி சுட்டதடா பாட்டு வரை கேட்டு பின் தியேட்டர் விட்டு ஜல் ஜல் கலகல பேங்க் பேங்க் டங் டங் என சத்தமிட்டு இரவுக்காட்சி முடித்த ஜனத்தின் ஒலிகள் கலைந்த பிறகு தான் தூங்கியிருக்கிறேன்..(அவர் லீவ் முடிந்துசென்றுவிட மொ. மா அனுபவத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி)

நினைவலைகள் கொஞ்சம் முன்னும்பின்னுமாய் அடிக்கின்றன.. எதற்கோ ஸ்கூலில் அரை நாள் திரும்பி வந்து அம்மாவைத் தொந்தரவு பண்ணிப் பார்த்த படம் வைர நெஞ்சம்.. அப்புறம் நாளை நமதே ரிலீஸின் சமயத்தில் ஹவுஸ் புஃல் ஆகி விட எண்பதுபைசா டிக்கட்டை இரண்டும் இரண்டும் நான்கு ரூபாய்க் கொடுத்து – பாவம் கண்ணா வோட முகம் வாடிடுச்சு எனக் கூட்டிச் சென்றது (ஐய ஏன் இந்தச் சின்னப்புள்ளய இந்த எம்சியார் படத்துக்கு கூட்டி வந்துருக்க.. ஏன் உனக்கென்ன டிக்கட் கொடு) ம்ம்

சாந்தி தியேட்டர் – மேலமாசி வீதி நேரு ஆலால சுந்தர வினாயகர் கோவில் தாண்டி இருக்கும்.. நுழைவாயிலைக் கடந்து சிறிது தூரம் நடந்து உள் செல்ல வேண்டும்.. மோஸ்ட்லி பழைய படங்கள் தான்.. வெள்ளி வெள்ளி ரிலீஸாகும் விட்டுப் போன பல பழைய படங்களை இங்கு தான் பார்த்திருக்கிறேன்..

குறிப்பாக என்னைமாதிரி லெஸ்பாக்கெட் மணி ஹோல்டருக்கெல்லாம் பஸ்காஸ் கொடுத்து கலெக்டர் ஆஃபீஸ் அருகில் இருக்கும் மினிப்ரியா சினிப்ரியா சுகப்ரியா போவதென்றால் காஸ்ட்லி சமாச்சாரங்கள்..எனில் அங்கு வந்த புதுப்படங்களை ஓடி முடித்ததும் இங்கு போடுவார்கள்.. மோகம் முப்பது வருஷம், மன்மதலீலை எனப் பார்த்திருக்கிறேன்..

நவராத்திரி முதன் முதல் பார்த்தது இங்கே தான்.. பார்த்துவிட்டுப் புரியாமல் வீடு வந்து அக்காவிடம் பேந்தப் பேந்த முழித்தவாறே ஏன் ஒன்பது சிவாஜி வராரு அவர்கள் ரொம்ப சஸ்பென்ஸ் வைத்து அப்புறம் சொல்றேன் என டபாய்க்க கடைசியில் .. அதாவது கண்ணா உலகத்தில ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாளோன்னோ.. அதான் படம்.. என குன்சாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது..

அப்படியே சாந்தி தியேட்டர் ரோட்டிலேயே ஒரு மிதி மிதித்து இடது புறம் திரும்பினால் கோவில் போகும் பாதை கொண்ட கசகசா ரோட்டின் நடுவில் சென் ட்ரல் தியேட்டர்.. அங்கு பார்த்த படங்களும் கணக்கில பட்டிக்காடா பட்டணமா சத்திய சுந்தரம் வறுமையின் நிறம் சிகப்பு ஆதிபராசக்தி.. ராம ஹனுமான் யுத்தம்..

சென் ட்ரல் தியேட்டரில் இளைய சகோதரிக்குக் கல்யாணம் ஆகி வந்திருந்த புது அத்திம்பேருடன் பார்த்த படம் ( மேலே 2.905க்குக் கூட்டிச் சென்றாராக்கும்) சட்டம் என் கையில். படம் பார்க்கையில் கமலின் வெளி நாட்டுக் காதலி இறந்து விட்டதாக கமல்ஹாசன் மதுக்களுடனும் மாதுக்களுடனும் பாடும் சொர்க்கம் மதுவிலே பாட்டில் எதேச்சையாக என்னைப் பார்த்த அத்திம்பேர் திடுக்கிட்டுப் போனார்.. என் இருகண்களிலிருந்தும் கண்ணீர் வழியத்துடைத்து கொண்டிருந்தேன்.. கண்ணா..இதெல்லாம் படம் தான்ப்பா.. இப்படி உணர்ச்சி வசப் படக் கூடாது என அவர் சொல்ல இல்லை அத்திம்பேர்..படம் பார்த்தா கண்ணுல தண்ணி வருது எனக்கு எனச் சொல்ல மறு நாளே டிவிஎஸ் ஆஃபீஸ் பின்புறம் இருந்த கண் டாக்டர் சுப்பராமனிடம் (அவரிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி.. ஒரு பத்து ரூபாய் தான் ஃபீஸ்.. அப்புறம் ஒருவருடத்திற்கு வாங்க மாட்டார்.. ) அழைத்துச் சென்று அவர் தினசரி வா..மருந்து போடுகிறேன் எனச் சொல்ல தொடர்ந்து ஒரு மாதம் போய்ப் போட்டுவிட்டு (குட்டிக்குட்டி ஸாம்பிள் ட்யூப் தான் .. டபக்கென பிசுக்கி கண்ணில் போட கண் பசைபோட்டற்போல் ஒட்டிக்கொண்டு கொஞ்சம் எரிந்து பத்து நிமிடம்கழித்து தான் திறக்கவே முடியும்) வந்ததில் என் படம் பார்க்கும் கண்ணீர் நின்றது)

அதே சாந்தி தியேட்டரில் இருந்து நேர் ரோட்டில் சென் ட்ரலுக்குத் திரும்பாமல் இன்னும் கொஞ்சம் எண்ண சைக்கிளை மிதித்தால் வலதுபுறத்தில் ஆரியபவன் ஹோட்டல்..பின் குறுக்கில்வருகிற ரோடு தான் டவுன்ஹால் ரோடு..அதில் இடதுபுறம் திரும்பி ஒருமிதி மிதித்தால் மாடர்ன் ரெஸ்டாரெண்ட் அதை ஒட்டி லெஃப்டில் ஒய் எம் சிஏ ஆப்போசிட் சைட் ஒரு பூங்கா..பூங்காவின் முன்னால் அந்தக்காலத்தில் குதிரை வண்டிகள் (ஒய் எம் சி ஏ ஆப்போஸிட்) பூங்காவிற்கு அந்தப்புறம் தான் நியூ சினிமா..

வஸந்த மாளிகை, ராமன் எத்தனை ராமனடி, எக்ஸார்ஸிஸ்ட் என நிறையப் படங்கள் இங்கு பார்த்திருக்கிறேன்..கொஞ்சம் சின்ன தியேட்டர் தான்..

சாந்தி தியேட்டரிலிருந்து நேர் ரோட்டில் சென்று டவுன்ஹால் ரோட்டிலும் திரும்பாமல் குறுக்கில் வரும் பெருமாள் கோவில் தெருவிலும் திரும்பாமல் (தெற்குமாசி வீதி திரும்பும் என நினைக்கிறேன்) நேரே ஒரு ரோட்டில் சென்று மெய்ன் ரோட்டிலிருந்து சற்றுக் குறுகலான சாலையில் சென்று திரும்பினால் மீனாட்சி தியேட்டர்..

முதலில் கருவேப்பிலையாய் ஒரு தியேட்டராய் இருந்தது பின் மினி பாரடைஸாகவும் இருந்தது.. மீனாட்சியில் பல படங்கள்.. சின்ன வயதில் ஆராதனா ஒளி விளக்கு, கர்ணன் ( ரீரன்) வாழ்க்கைப் படகு(பகல் பதினொருமணிக் காட்சி!) காதலிக்க நேரமில்லை.. மீனாட்சிபாரடைஸில் பார்த்தது பூவே பூச்சூட வா

கொஞ்ச்ம் மீனாட்சி பாரடைசின் பின்புறம் என்று தான் நினைக்கிறேன்..அமிர்தம் ஏஸி எனப் புதிய தியேட்டர் – அந்த சமயத்தில் கட்டினார்கள்..அங்கு பார்த்தபடங்களில் நினைவுக்கு வருவது ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க், மந்திரப் புன்னகை..

சாந்திதியேட்டரில் இருந்து வலது புறம் திரும்பி நாம் பார்த்த தியேட்டர்கள் சென் ட்ரல், நியூசினிமா, மீனாட்சி மீனாட்சி மினி.ஓகேயா..இனி இடது புறம் திரும்பி ஹிக்கின்பாதம்ஸ் பக்கம் வந்துவடக்குவெளி வீதியிலொ அல்லது குட்ஷெப்பர்ட் ஸ்ட்ரீட்டிலோ(தானே) ஆரம்பத்தில் இருக்கும் ஷக்தி சிவம் தியேட்டர்.. ஷக்தி ஏசி..முதன்முதலில் நான் பார்த்த ஏ.சி.தியேட்டர்..அமர் அக்பர் அண்ட்டோனி (78) முதல் படம்.. அப்போது தான் மணமுடித்திருந்த இளைய சகோதரியும் கணவரும் என்னைத் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு அவர்கள் போய்விட்டு வந்தார்க்ள்..அந்தக் கோபத்திலோ என்னவோ இன்றுவரை அமர் அக்பர் அண்ட்டனியைப் பார்த்ததே இல்லை..

சிவம் ஓப்பன் பண்ணிய போது போட்ட படம் தப்புத் தாளங்கள்.. க்யூவில் நின்றும் டிக்கட் கிடைக்காமல் ப்ளாக்கில் வாங்கி உள் சென்றால் உன் சீட் இது என்றார்கள் (எனக்கு அது தெரியாது) பார்த்தால் ஸ்க்ரீனுக்கு அருகாமையில் இரண்டாவது சீட்.. பட ஆரம்பத்தில் என்னடா பொல்லா த வாழ்க்கை எனப் பாடி ரஜினி என் தலையில் கால்வைப்பது போன்ற பிரமை! பின் பழகி விட்டது(முத்லும் கடைசியுமாய் அவ்வளவுகிட்டத்தில் பார்த்த படம்)

அதே போல தீபாவளி ரிலீஸில் அண்டர் லைன் செய்து வைத்திருந்து பார்த்த படம்( நல்லா இருக்கும் நு ஃபீலிங்கில்) சிகப்பு ரோஜாக்கள்.. அஞ்சு ஷோ போட்டு ஓட்டுகையில் டயம் தெரியாமல் மூன்று மணிக்கு மதியம் சென்று டிக்கட் எடுக்க படம் ஏழரைக்குத் தான் எனச் சொல்லி பார்த்து ( நல்லவேளை சீட் கொஞ்சம் கடைசியில் தான் இருந்தது..குட்ட்டித் தியேட்டர் ஆரம்பத்தில் கொஞ்சம் ஏசி..அப்புறம் நிறுத்தி கசகசா..வியர்வை) பத்தரைக்கு வீட்டுக்குச் சென்று ரேழியில் கொசுவலைக்குள் அப்பா உறங்கியிருக்க ஓசைப்படாமல் சென்று கவாங்கவாங்கெனபசித்த வயிற்றுக்கு அம்மா கொஞ்சம் குட்டித்திட்டலுடன் உணவளித்தது மறக்க முடியாது..
தேவி தியேட்டர் ரோட்டை திருவிக சாலை என்றும் வொர்க் ஷாப் ரோடு என்றும் சொல்வார்கள்..தேவி தியேட்டர் பார்த்த படி இருக்கும் இடத்தை வைத்து இடதுபுறம் வலதுபுறம் என இருக்கும் தியேட்டர்க்ள் பற்றி…

அடுத்த பதிவில்

(பர்ஸ்ட் இன் ட்டர்வெல்)

chinnakkannan
17th October 2014, 03:22 PM
”ஹவுஸ் ஃபுல்” நினைவுகள்

பகுதி இரண்டு..

ஹாய் ஆல்.. கொஞ்சம் போரடிக்கிறேனா..இல்லை என நினைக்கிறேன்..இருந்தாலும் வேறு வழியில்லை..

கலையாம் நடிப்பினைக் காட்டும் அரங்கில்
அலைகள் அடிக்கிறதே ஆம்..

தேவிதியேட்டரின் இடது புறம் ஒர்க் ஷாப் ரோட்டில் மன சைக்கிளை ( சொல்ல மறந்துவிட்டேனே.. மதுரையில் நான்பயன் படுத்திய வாகனங்கள்…பாண்டியன் பேருந்து, கனமான உயரமான ராலே சைக்கிள் (டாடியினுடையது) புத்தம்புது ஹீரோ சைக்கிள் (அத்திம்பேரினுடையது) லூனா மொபெட், அண்ணனின் சில்வர் ப்ளஸ்) ஓட விட்டால் ஆறு முச்சந்தி வரும்..அதில் குறுக்கால் சென்றால் ஆட்டுமந்தை, மாவட்ட மைய நூலகமருகில் குட்டி ரெளண்டபெளட், தாண்டினால் சிம்மக்கல்..போவதற்கு முன் இடதுபுறம் நுழைந்து சென்றால் கல்பனா தியேட்டர்..

வெய்ட் வெய்.ட் ..இந்த ஆட்டு மந்தை என்று சொன்னேனே..அதற்கு முன் ஒரு பெரிய பஸ்களை எல்லாம் ரிப்பேர் செய்யும் மிகப்பெரிய ஒர்க்ஷாப் இருந்தது..அதை இடித்து அங்கு இரண்டு தியேட்டர்கள் கட்டினார்கள்..தீபா ஏசி ரூபா ஏசி.. தீபாவில் சிகப்பு சூரியன் பார்த்த நினைவு.. பின் ஆங்கிலத்தில் ப்ரொடெக்டர், போல்டர் கீஸ்ட் எனப் பார்த்த நினைவு.. சில காலத்தில் அந்தத்தியேட்டர்கள் கொஞ்சம் பலான பிட் ஓட்டும் தியேட்டர்களாய் மாறியது ஒரு சோகம் (ரொம்ப ச் சின்னவை தான்)

கல்பனா தியேட்டரில் பார்த்த படங்கள் கணக்கில..மோஸ்ட்லி பழையபடங்கள்.. பார்த்து நினைவிலிருக்கும்புதுப்படம் செளந்தர்யமே வருக வருக..காரணம் மூத்த சகோதரி லீவில் வந்திருந்த் போது ரொம்பக் குடும்ப உறவுகளை அழைத்து (ஒரு பதினைந்து பேர்) சேர்ந்து போய்ப் பார்த்த படம்..!

கல்பனா தியேட்டரிலிருந்து மெய்ன் ரோட்டிற்கு வந்து யானைக்கல்லில் கீழ்ப்பாலம் இறங்காமல் சென்றால் இடதுபுறம் ஆல்பர்ட் விக்டர் ப்ரிட்ஜ் எனப்படும் மேற்பாலம் வரும்..அதில் செல்லாமல் கீழ்வழியாகவே சென்றால் நெல்பேட்டை..பின் வெத்தலைப்பேட்டை கம் சிந்தாமணி டாக்கீஸ்.. இந்த சிந்தாம்ணி டாக்கீஸில் பார்த்தபடங்களும் நிறைய.. உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம்..என.. வீட்டிலிருந்து சின்னவயதில் செல்வதென்றால் மெய்னாக குதிரை வண்டி வைத்து நான் முன்னால் ஏற அம்மா அக்காகள் புடை சூழ இங்கு சென்றிருக்கிறேன்.. திரும்பும் போது ரிக்ஷா(இரண்டு) அல்லது குதிரை வண்டி..

பக்கத்துத் தியேட்ட்ருக்கெல்லாம் சென்றால் ஒன்றும் சொல்லாத அப்பா இப்படி இந்தத் தியேட்டர்களுக்கெல்லாம் (மோஸ்ட்லி ஈவ்னிங்க் ஷோ) போய் வந்தால் வரும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார்.. என்ன படமோ போ..அப்படியாவது அவ்வளவு தூரம் போகணுமா..எனச் சொல்ல அம்மா ஏதோ முணுமுணுத்தபடியே உள் செல்வாள்..பின் சுடச்சுட இரவுடிஃபன் தயாராகும்..(அப்பா ஏற்கெனவே சாப்பிட்டிருப்பார்) அப்பா உறங்க ஆயத்தமாகி (ஷார்ப்பா ஒன்பதரை பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிடுவார்)ப் படுத்ததும் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் பார்த்த படத்தை ஹிஸ்ஹிஸ்ஸென ஒலியெழுப்பாமல் நானும் சகோதரிகளும் பேசியபடி தோசையோ சப்பாத்தியோ சாப்பிடுவோம்.

சிந்தாமணியிலிருந்து சற்றுத் தூரம் இடது புறம் எண்ண சைக்கிளை மிதித்து கீழ மாசிவீதியில் திரும்பினால் ( நேரே சென்றால் நான்படித்த செய்ண்ட் மேரீஸ் ஸ்கூல் அதற்கு இந்தப்பக்கம் உள்ள தெருவில் திருமலை நாயக்கர் மஹால்) சற்றுத் தள்ளி அலங்க்கார் தியேட்டர் வரும்..

அலங்கார் தியேட்டரில் பலபடங்கள்.. பார்த்திருக்கிறேன்..குறிப்பிட்டுச் சொல்வதானால் சொல்லத் தான் நினைக்கிறேன், ஒரு தலை ராகம்..

சொல்லத் தான் நினைக்கிறேன் அம்மா பார்க்கவேண்டும் என நினைக்கவேயில்லை..பக்கத்து வீட்டுப் பொன்னம்மா ஆச்சி நான் போறேன் சினிமாவுக்கு.. ரிக்ஷால தான் போறேன் கண்ணாவை அனுப்பறீங்க்ளா என அம்மாவைக் கேட்க அம்மா அவனைத் தனியாகவெல்லாம் அனுப்ப முடியாது என்று விட எதற்கோ வந்த நான் அதைக் கேட்டுவிட ஒரே அழுகை பிடிவாதம் தான்.. சரி..அவங்க ரிக்ஷால போய்க்கட்டும்.. நாம குதிரைவண்டில போலாம் எனச் சொல்லி கு.வ வைத்துப் போய்ப் பார்த்த் படம்.. படம் பார்த்த போது படம்பற்றி எனக்கொன்றும் புரியவில்லை தான்..இருந்தாலும் சந்தோஷம்..

ஒருதலை ராகம் ராலே சைக்கிளில் போனபோது ஓட்டவே கஷ்டமாஅ இருந்தது..கனம் வேறு..இருந்தாலும் நானும் சில நண்பர்க்ளும் போய் சுலபமாகவே டிக்கட் கிடைக்க – படம் எப்படி இருக்குமோ தெரியலை.. சரி பார்க்கலாம் – எனப் பார்த்தால் சர்ப்ரைஸ்.. எங்க்ளுக்குப் பிடித்துவிட்டது..மறு நாளோ அப்புறமோ விகடன் விமர்சனம் ஓஹோ என்று வர அடித்ததுலக்கி ப்ரைஸ் அலங்கார் தியேட்டருக்கு.. படம் ஓடு ஓடு என ஓடி நூறாவது நாளோ என்னவோ தியேட்டருக்கு பெய்ண்ட் எல்லாம் மாற்றிவிட்டார்கள். மாற்றிய பின் இன்னொருமுறை பார்த்ததாக நினைவு..

அலங்காரிலிருந்து தொடர்ந்தால் அபிராமி தியேட்டர்..(மஞ்ஞில் விரிந்த பூக்கள், கர்ஸ், ஏக் துஜேகேலியே, வா கண்ணா வா, சின்னஞ்சிறுசுகள் எனப் பல படங்க்ள்) அதன் பின் இன்னும்சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் இடது புறம் திரும்ப கணேஷா தியேட்டர் (!)..( ஓரிரண்டுபடங்க்ள் தான் பார்த்திருக்கிறேன்)..

க்ணேஷா தியேட்டர் வழியாகவும் செல்லலாம்.. அந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் வழியாகவும் செல்லலாம் சில தியேட்டர்களுக்கு..அது அடுத்த பகுதியில்

(செகண்ட் இன் ட்டர்வெல்)

chinnakkannan
17th October 2014, 03:24 PM
“ஹவுஸ் புல் “ நினைவுகள்

பகுதி மூன்று..

க.தியேட்டர் வழியாகவும், மேம்பாலம் வழியாகவும் செல்ல முடிந்த தியேட்டர்கள் சினிப்ரியா மினிப்ப்ரியா சுகப் ப்ரியா..

இந்த சினிப்ப்ரியா மதுரையில் முதன்முதல் 70 எம் எம் தியேட்டர்..மேக்கன்னாஸ் கோல்ட் தான் முதல் படம்.. ஆனால் பார்க்கச் சந்தர்ப்பமில்லை..இன்ஃபேக்ட் தியேட்டர் கட்டி மூன்றாம் வருடத்தில் தான் அந்தத் தியேட்டர் பக்கமே போக முடிந்தது என்னால்..

சினிப்ரியாவில் வைதேகி காத்திருந்தாள், மேக்னிஃபிஷியண்ட் செவன் எனப் பார்த்திருக்கிறேன்..மினிப்ப்ரியா மதுரையில் முதல் ஏ.சி தியேட்டர் பார்த்த படங்களில் முக்கியமானது பதினாறு வயதினிலே

பின் அண்ணா நகர் சுந்தரம் தியேட்டர்..புதியதாய்த் திறந்தது முதல் பார்த்திருக்கிறேன்..அதுவும் என் கல்லூரி விமான நிலையத்திற்கு அருகில் இருந்தது..அங்கிருந்து பஸ்கள் தாவித்தாவிப் பிடித்து இங்கு வந்து பார்த்திருக்கிறேன்.. பார்த்தவை ஆண்பாவம், ஹீரோ (ம்ம் மீனாக்ஷி சேஷாத்ரி டிங்க் டாங்க்) இன்னும் பல..

சரி..ரொம்ப ஆத்துக்கு அங்கிட்டு சுத்தியாச்சு..இந்தப் பக்கம் தேவிதியேட்டரின் வலதுபுறம் ரோட்டில் சென்றால் கர்டர் பாலம் ஆரப்பாளையம் க்ராஸ்..குறுக்கில் சென்றால் பரமேஸ்வரி தியேட்டர் (ஷோலே யாதோன்கி பாராத் புகழ்)..

பின் அந்தக் க்ராஸ் ரோட்டிலேயே நேரே சென்று தேம்பாவணி வளைந்தால் மதி தியேட்டர்.. அங்கிட்டு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே..

பின் அதேரோட்டில் வந்தால் அரசரடி வரும்.ம்ம்
ஆரப்பாளையத்திலிருந்து நேரே சென்று இடதுபுறம் திரும்ப குரு தியேட்டர்..பார்த்த் மறக்க முடியாத படங்கள் பயணங்க்ள் முடிவதில்லை முதல் மரியாதை

விட்டுப்போன தியேட்டர்க்ள் என நினைத்தால் ஷா, மது ஏசி, இங்கிட்டு நட்ராஜ், ஜெகதா… குருதியெட்டரிலிருந்து மாப்பிள்ளை வினாயகர் மாணிக்க வினாயகர்.. மதுரைக்குள் இருந்தும் போயே இராத சிட்டிசினிமா, இம்ப்பீரியல்.. அப்புறம் பஸ்ஸ்டாண்ட் அருகில் விக்டோரியா எட்வர்ட் ஹாலின் அருகில் ரீகல் ( எவ்ளொ இங்க்லீஷ்படங்கள், தமிழில் எதிரொலி தான் பார்த்தேன்)

சாந்தி தியேட்டரிலிருந்து வடுகக் காவல் கூடத் தெருவில் வளைந்து (ஆம் ஐ கரெக்ட் முரளிசார்) இடது புறம் திரும்பினால் ஏஷியாவின் பிக்கஸ்ட் எனச் சொல்லப் படும் தங்கம் தியேட்டர்.. ஹப்பா எவ்ளோ படங்கள் அங்கு சின்ன வயது முதல் கல்லூரி வரை..லிஸ்ட் போட்டால் தீபாவளி, தேர்தல் வெற்றி, ஜாமீன் வெற்றி என க் கொண்டாட்டத்தில் வெடிக்கும் சரவெடிகளை விட நீளமாகிவிடும்..ம்ம் தூறல் நின்னு போச்சு, ஸ்பை ஹூ லவ்ட் மி,, தி டீப், காற்றினிலே வரும் கீதம்..முத்து எங்கள் சொத்து ( ஒரு கேர்ள் ஃப்ரண்ட்டுடன் சென்ற நினைவு ஹி ஹி) என..

இப்படியாக தியேட்டர்களிலேயே ஊறி வளர்ந்த சி.க மதுரையை விட்டு பலவருடங்கள் ஆகிடுச்சாக்கும்.. பலவருடங்களும் சீமையிலேயே (?!) வேலை பார்த்த்தால்.. வீடியோ சிடி டீவிடி என்ப் போய் தியேட்டர் அனுபவம் மங்கித் தான் போய்விட்டது..எவ்வளவோ ஸோஃபிஸ்டிகேட்டட் தியேட்டர்க்ள் வந்தும் கூட ..இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே…அது ஏன் ஏன் நண்பனே…

மதுரையைப்பார்த்து கிட்டத்தட்ட இருபது வருடமாயிற்று..இதில் சொன்ன தியேட்டர்களில் எவ்வளவு தற்காலத்தில் உள்ளன என்று கூட எனக்குத் தெரியாது.. எல்லாம் என் மனசுக்குள் அப்படியே மாறாமல் இருக்கின்றன..

கட்டுரை சுவாரஸ்யக் குறைவின் அதன் முழுமுதற்பொறுப்பு என்னைச் சாரும் என்றாலும் பார்ட் ரெஸ்பான்ஸிபிளிட்டி ராகவேந்திரர் சாரையே சாரும் (பின் கீற்றுக்கொட்டகை வெற்றுவெளியில் கட்டியது அவர்தானே) எனச் சொல்லி நான் இப்போது எஸ்ஸ்ஸ்கேப்..!

(முற்றிட்டேன்.. இனி நிம்மதிப் பெருமூச்சு நீங்க்ள் விடலாம் )

Gopal.s
17th October 2014, 03:26 PM
Hats off chinnakannan.:2thumbsup:

Russellbpw
17th October 2014, 05:10 PM
என்னை விட வல்லவனை இதுவரை சந்தித்ததில்லை.
இனிமேல் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சி அடைவேனே தவிர வருந்த மாட்டேன்.

https://www.youtube.com/watch?v=2uSqufRgE5A

அடுத்த முறை சென்னை வரும்போது நீங்கள் என்னை சந்திப்பீர்கள்.

உங்கள் இந்த விருப்பத்தை நான் நிறைவேற்றி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன் சார் !

:smokesmile:

Russellbpw
17th October 2014, 05:18 PM
8)வாசு போன்ற,மது போன்ற,முரளி போன்ற,சி.க போன்ற,கிருஷ்ணா போன்ற ,ராகவேந்தர் போன்ற,கார்த்திக் போன்ற,வெங்கி போன்ற,p _ r போன்ற,poem போன்ற ,சாரதி போன்ற,ஜோ போன்ற அழகுணர்ச்சி, எழுதும் திறன் கொண்ட பங்களிப்பாளர்களால் இத்திரி நிறைந்தால் ,நமக்கு முழு விருந்து காத்திருக்கிறது.

அழகு...உணர்ச்சி...விருந்து....மதிமறக்க செய்யும் மனிதனை அவன் நிலையிலிருந்து கோபால் சார் !

ஏன் கோபால் சார்.....

இத்தனை பேரை ஏன் போ...ன்ற ?........எல்லாரும் இருக்கட்டுமே ?

இதுதான் சாக்குன்னு ...வராதவங்கள கூட போ...ன்ற ?

எல்லாரையும் உடனே நீங்க திரிக்கு வா,...ன்ற ! ஓகே ?

Rks

Richardsof
18th October 2014, 08:55 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg.html)

chinnakkannan
18th October 2014, 09:12 AM
நன்றி கோபால் சார்.. நேற்று முழுவதும் மதுரை நினைவுகளிலேயே மூழ்கியிருந்தேன்..ம்ம்

Gopal.s
18th October 2014, 09:37 AM
அடுத்த முறை சென்னை வரும்போது நீங்கள் என்னை சந்திப்பீர்கள்.

உங்கள் இந்த விருப்பத்தை நான் நிறைவேற்றி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன் சார் !



தங்கள் மூத்த சகோதரர் சுப்பு என்பவரை சந்தித்துள்ளேன். அவரே பாதி உயரம் கூட தொட முடியவில்லை. இளைவர் நீரா......எனக்கு நம்பிக்கையில்லை.

Russellbpw
18th October 2014, 12:55 PM
தங்கள் மூத்த சகோதரர் சுப்பு என்பவரை சந்தித்துள்ளேன். அவரே பாதி உயரம் கூட தொட முடியவில்லை. இளைவர் நீரா......எனக்கு நம்பிக்கையில்லை.

அண்ணனை நீங்கள் சந்தித்தது மகிழ்ச்சி. ஒரு 10 அல்லது 15 நிமிடம் மேல் அந்த சந்திப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறன்.

என்னுடைய அண்ணன் என்பதால் கூறவில்லை, ஆனால் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் பதிவிடுகிறேன்

அண்ணனுக்கு ஒரு குணம் உண்டு, அது அவருடைய பலகீனம் என்று கூட ஒரு விதத்தில் வைத்துகொள்ளலாம். அதாவது மற்றவர்கள் அவரை முழுவதும் ESTIMATE செய்ய விடமாட்டார். வித்தையை கற்பிக்கும் குரு தனக்கென ஒரு வித்தையை வைத்திருப்பதை போல....நீங்கள் அவர் இப்படிதான் என்று நினைக்கும் தருணம் ...அவருடைய இன்னொரு பரிமாணம் வெளிப்படும் கோபால் சார் ! QUITE UNASSUMING IT WOULD BE !!!!

உங்கள் தொனியை படிக்கும்போது ... இந்த பாடலிலும் ஒருவர் அண்ணனை அப்படிதான் நினைத்து பாடல் வழி உரைப்பார் ...அதற்க்கு அண்ணன் என்ன செய்கிறார் என்று பாருங்கள்....கிட்டத்தட்ட என் அண்ணனும் அப்படிதான் என்று வைத்துகொளுங்களேன் ! :smokesmile:

https://www.youtube.com/watch?v=81rltJE-QRg

gkrishna
18th October 2014, 02:36 PM
மன்னிக்கணும் நண்பர்களே.

இந்த பதிவை என்னால் முழுமையாக ஒரே பதிவாக போட முடியவில்லை. அதனால் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டியதாயிற்று .
சிரமத்திற்கு மன்னிக்கவும் .இந்தியன் எக்ஸ்பிரஸ் 2010 மும்பை பிரிவில் வெளி வந்த கட்டுரை

http://static.indianexpress.com/m-images/Sun%20Mar%2007%202010,%2022:25%20hrs/M_Id_139700_motion.jpg

IT'S 9 p.m. and the heat of the day is still to melt away. On any other night, most homes in the village of Mayani in Maharashtra's Satara district would have turned off their lights by now. But this is no ordinary night. The lights are off, but the day has just begun for Mayani's 15,000-odd residents. They strain their ears to catch the sounds from a loudspeaker installed in a huge ground in the heart of the village. A crackling voice asks them to leave whatever they are doing and come to watch the "action-filled, fighting-filled, high drama, Maidan-e-Jung".

Abbaso Massa, the unit hand of Amar Touring Talkies who is on the mike, makes the "South Indian film" dubbed in Hindi seem like the best thing to have happened to both the film industry and Mayani. After that, it doesn't require much persuasion for most villagers to succumb to Massa's marketing skills. For, this is the moment they had been waiting a year for—their tryst with 35 mm cinema loaded on the green trucks that trundle through the dusty fields every March.

Slowly, a trickle streams into the open ground where Amar Touring Talkies has set up its bamboo poles, loudspeakers, sound system and generator sets, covered the enclosed area with white tarpaulin on the sides, secured entrances with ropes and installed the 34-ft-by-14-ft white screen with a black border under the open sky. The two projectors secured inside the green truck—which also holds a DVD player, rectifier, mike, safe and controls for lights and generators—are ready for action.

Massa hurriedly scrambles down the van to rewind the spools of Maidan-e-Jung on what looks like a spinning wheel but is called 'the rewinder'. In seconds, a crowd gathers around him. Outside, the ticket booth has opened its window and tickets priced at Rs 15 sell briskly as families with chatais tucked under their arms, groups of youngsters and a clutch of kids shuffle into the enclosure to catch the trailers of Raaz and Diljale.

..(contd)

gkrishna
18th October 2014, 02:36 PM
By 10 p.m., Asan Bagwan, the 55-year-old owner of Amar Touring Talkies, has decided that he has a big enough crowd. A few villagers, who had been debating outside on whether to opt for Maiden-e-Jung at Amar Talkies or Arjun—The Warrior at the nearby Balkrishna Touring Talkies, also walk in, lured by the sound of the first scene that has the hero perched atop a mountain about to attack a convoy. Claps and whistles fill the air. Mayani's ten-day tryst with touring talkies has begun.

l l l

This is the kind of cinematic experience most of rural Maharashtra has grown up with. A tradition that started in the 1960s and, despite all odds, is still alive and on the move in the state.

"The touring talkies started sometime in the '60s. I started in 1963. In those days, people would buy an old truck, paint it in bright colours and fit it with projectors. You could get second-hand Japanese or German projectors for Rs 7,000. I started my company with a total investment of Rs 20,000," says 71-year-old Saroj Vasudev Inamdar, owner of Alankar Touring Talkies, one of the oldest in the state. Though there are about 40 touring talkies in the state, only six are active in western Maharashtra, while others operate mainly in the Vidarbha and Marathwada regions.

Typically, the talkies travel to about 10 villages in Satara district from October to April, pitching their tents and screens for 10-15 days at each place to coincide with the religious yatras that take place in those areas. "That is the time when people come in large numbers, including from the surrounding villages, for a darshan at the temple after which they spend time at the mela that comes up simultaneously and at the end of the day, make a beeline for our tambu (tent) screenings," says Inamdar, sweeping a glance at the fair being put together a few metres away.

.(.contd)

gkrishna
18th October 2014, 02:37 PM
A giant Ferris wheel is already up, as are some colourful rides, including a 'Brake Dance' canopy. Sweet shops with their colourful shamianas have started to line the road outside the open field, stacking up bright yellow jalebis. The Yashwant Baba Yatra is held every year in Mayani for 10 to 15 days in March. This is also the only time that villagers get to watch movies on 35 mm, with six screens simultaneously showing films in the open area from six in the evening to six in the morning.

"People come with their families and spend the entire night watching films. They catch one show at one talkie at 6 p.m., then decide which one to see at 9 p.m., followed by two more shows, one at midnight and the following at 3 a.m.," says Bagwan, whose father started Amar Talkies years ago along with his brothers. Earlier in the day, his tempos had made the round of the village to announce the screening of Maidan-e-Jung and distributed pamphlets.

Across the road, Balkrishna Touring Talkies is screening Arjun—the Warrior. The two companies have little competition today as the other four—Alankar Talkies, Anup Talkies, Krishna Koyal Talkies and Laxmi Talkies—will only set up their paraphernalia the next day. No one is unduly worried. They know the crowds will keep coming for the next10 days to each of the six screenings.

"Masur, a neighbouring village, was a bit low-key but Mayani should be better," says Inamdar. By the end of March, the talkies will move to Shignapur, and then they will go into overdrive. "In Shignapur, we will have screenings 24 hours a day. Here in Mayani, we couldn't pitch the tents because of the winds, but there, we will put up tents on the hillsides. We hope to draw over 500 people for every show. We were the first people to devise the concept of black tents in 1994, after which the screening of films in daytime became possible," says Nitin Deshpande of Alankar Talkies. The movie caravan will roll into other villages—Pusegaon, Pali, Aundh, Kole, Javel—all within 50 to 100 kilometres of each other.

..(contd)

gkrishna
18th October 2014, 02:39 PM
THE world of touring talkies is a self-contained one. The 10-odd people who travel with each unit carry their utensils, beds and belongings. The owners, most of whom hail from Vaduj in Satara district, make it a point to be there during the screenings. Working just six months a year on the talkies, most have other businesses ranging from agriculture to small stores. The employees, most of whom are now in their sixties, are old hands, recruited when they were in their twenties.

By now, they know just what the audience wants. The most popular films, they say, are Marathi, followed by South Indian action films. "Hindi and English (dubbed in Hindi) don't do too well here. Once, when we were about to show Dhoom at one of the villages, people tore down the poster and asked us to show the Marathi hit Harve Kumkum," says Tushar Tarlekar, a unit worker with Amar Talkies. Tarlekar travels six months with the group, earning a total of Rs 10,000. When he is not touring, he helps his mother run an eatery in Satara.

Interestingly enough, some of the talkies even manage to hold a premiere of some Marathi movies and get actors like Milind Gunaji or Upendra Limaye to put in an appearance at the show. Most owners are also distributors and that helps bring in popular films. Anup Talkies is one of the few companies that has showed Hollywood films dubbed in Hindi. "I showed 2012 at the last place and it had a reasonably good response," says owner Anup Jagdale.

The owners have also worked out their own formula for attracting crowds. "Mythological films are great hits. We also prefer them as they attract women and women always come with their children or husbands, which means more numbers. But women don't stay late. So we show these films first. The late night screenings are confined to action films as there are only men left in the audience by then," says Bagwan.

..(contd)

gkrishna
18th October 2014, 02:40 PM
According to Jagdale, who is also president of the Touring Talkies Association of Western Maharashtra, there is a tacit understanding amongst all members that there will be no screening of adult or "bold" films. And while there are stories of people demanding the rewinding of such scenes or a steamy song, owners say they do not really give in to the 'once more' cries.

A six-month travelling stint costs each company approximately Rs 70,000 and the profits are unpredictable. In fact, the dwindling fortunes of the talkies are a matter of concern for the owners. "There is little left in this business now," says Bagwan, who has decided against travelling to any other village and will only participate in the yatra in his hometown Mayani.

TV, cable and cheap CDs available in the market make it tough for the talkies, they say. "We are housefull only during the main one or two days of the fair. The rest of the time, it's a struggle," says Bagwan.

The tough times get the owners nostalgic about the good old days. While Inamdar feels that the '70s were the best period for him, Deshpande says the golden period was 1994-2000. "Cable and TV had still not taken over so much then. But today's times are bad," says Deshpande, who lives in Pune and works in the construction industry while his father and brothers handle the family business in the village.

Yet, no one is quite ready to sound a curtain call. Vijay Mane, a clerk in a school in Mayani, and a regular at the shows during the talkies' 10-day annual halt in his village, insists that nothing can replicate the ambience of open-air viewing with family and friends. "There's a certain magic to it. We have multiplexes in Vitha and Karad nearby but there's nothing like the talkies," he says.

(..contd)

gkrishna
18th October 2014, 02:42 PM
But there is little getting away from the fact that the industry desperately needs a new lease of life. Something that the occasional spotlight on it has failed to deliver—be it the 2006 film Truck of Dreams by London-based film maker Arun Kumar on a young village girl who abandons her life and follows her dreams with the help of a travelling cinema, or Israeli-born combat photographer Torgovnik's photo-essay on the talkies as part of a larger work. Will Road, Movie be able to do better? No one is quite sure. But what they are sure about is that the show must go on.

gkrishna
18th October 2014, 03:05 PM
Enjoy an evening at Touring talkies that is in its last lap in the city

http://www.thehindu.com/multimedia/dynamic/01543/MAMP08TOURINGPHOTO_1543993f.jpg

Speakers blared out popular yesteryear numbers, people opted for the thara (sand filled ground) ticket costing Rs.5 to watch their stars on the big screen, the murukku selling boy in a sprightly voice invited the crowd to taste the crispy snack…

Inside the world of tent kottayi (touring talkies)city’s cinema-crazy people relived tinsel town’s make-believe world. It used to be a major source of entertainment. Earlier there were 20 to 30 touring talkies in Madurai. Now only one is left which has a daily evening screening. “We don’t screen new releases but only old popular movies. Now people coming to watch it is also dwindling,” says M. Swaminathan, who has been running the Lakshmi Touring Talkies for more than 45 years in Tirupparankundram.

He rues touring talkies has lost its place to the sophisticated cinema halls. If at all, tent kottayi is remembered more for the experience of community gathering than the entertainment value.

“Watching a film in touring talkies was always exciting,” says R.Murali, Principal, Madura College. “Though there were benches and chairs, people preferred to sit on the sand filled ground to see the movie. There was an instant audience connect. I associate touring talkies with black and white movies.”

“The day when Oliyum Oliyum was telecast on TV, it marked the end of touring talkies,” says Swaminathan. “Everyday the satellite television shows 25 to 30 films. How can we expect crowd at our theatres,” he asks.

To grab peoples’ attention, the screen at this theatre is dotted with dancing lights that flicker to the music and song playing on the screen. “Those days theatre owners would distribute pamphlets to announcethe list of movies scheduled for screening. There were no permanent touring talkies then. Films were screened under thatched roof at different spots. After a fire accident in Tuticorin in 1979, the then State Government banned the use of thatched roof. Nowadays, light roof material (sheets made of waste plastics and tar) is used as a permanent roof at one spot,” says R.S. Rajan, Secretary, Yadharthaa Federation of Film Societies of India.

Earlier, the touring talkies owners would pitch their tents at a place to cash in on the festival season or near some temple during the temple festival in that particular area. “I remember watching a movie when I was in fourth standard. Then, culture of going to a theatre was entirely different, it was a family affair. I remember travelling from Uchipulli village to a nearby place called Ranganathapuram carrying torches in hand in the night to watch MGR’s Padakotti,” recalls M. Shanmugarajan, film actor.

Touring talkies used to be a place where people would sink all differences, economic or caste, and watch films together. Emotionally-driven, they felt proud to be identified as fans of a star. The rivalry between the MGR and Sivaji Ganesan fans are well known in these parts.

Touring talkies also played a major role during elections. They became an effective medium for canvassing. Dr.Murali describes it as a phenomenon that became a folk tradition breaking the class and caste barrier.

Touring talkies offered pure entertainment for less money. The benched ticket costs Rs.10 and if one chooses to take a chair, it costs another three rupees. This was also the place where small cyclostyled books carrying the lyrics of the songs from the movie sold like hot cakes. But alas, all this will soon become history when the last of the touring talkies at Tirupparankundram downs its shutters in three years.

Murali Srinivas
18th October 2014, 06:41 PM
கண்ணா,

மதுரையின் நானாவித தியேட்டர் பிரபந்தம் நன்று! எனக்குமே ஒரு trip down the memory lane ஆக இந்த பதிவு அமைந்தது. ஒவ்வொரு தியேட்டரையும் பற்றி அழகாக பதிவு செய்திருகிறீர்கள். குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்து தியேட்டர்களையுமே உங்கள் வீட்டிலிருந்து போகும் வழியைக் குறிப்பிட்டு எழுதிய விதம் ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

உங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. சாந்தி தியேட்டருக்கு முதலில் சந்திரா டாக்கிஸ் என்று பெயர். [உங்கள் தாய் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு தெரிந்திருக்கலாம்]. அது போன்றே அலங்கார் தியேட்டருக்கு பெயர் லட்சுமி டாக்கிஸ் என்பதாகும். 60-களின் இரண்டாம் பகுதியில் இவை பெயர் மாற்றம் பெற்றன.

ஒரு சில திரையரங்குகள் விடுபட்டு போய் விட்டனவோ என்று ஒரு எண்ணம். வெள்ளைக்கண்ணு, மிட்லண்ட், போத்திராஜா, சரஸ்வதி, மூவிலாண்ட் என்ற ஜெயராஜ், நடராஜ் [by pass road], தினமணி டாக்கிஸ், ஷா போன்றவை என் நினைவிற்கு வருகின்றது.

நீங்கள் குறிப்பிடும் தெரு சாந்தி தியேட்டருக்கு பக்கத்தில் மேலமாசி வீதி ஐயப்பன் கோவிலுக்கு எதிரே அமைந்திருக்கும் தெருவைதான் நீங்கள் வடுககாவல் கூடல் தெரு என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இல்லை அதன் பெயர் சம்பந்த மூர்த்தி தெரு. அதனை கல்லறை சந்து என்றும் அழைப்பார்கள். வடக்கு மாசி வீதியிலிருந்து தானப்ப முதலி தெருவை இணைக்கும் தெருவிற்கு பெயர்தான் வடுககாவல் கூடல் தெரு.

சரஸ்வதி ஸ்கூல் விபத்து 60 களின் மத்தியில் நடந்தது நினைவிருக்கிறது. அதில் உங்கள் சகோதரி சிக்கிக் கொண்டதைப் பற்றி கேட்கும்போது சங்கடமாக இருக்கிறது.

ஒரு நல்ல பதிவிற்கு மீண்டும் நன்றியும் வாழ்த்துகளும் கண்ணா!

அன்புடன் .

chinnakkannan
18th October 2014, 09:08 PM
முரளி சார் தாங்க்ஸ்..:)

எஸ்.. சாந்தி தியேட்டர் சாந்தியாக மாறிய போதிலும் சந்திரா டாக்கீஸ் என்று தான் அம்மா சொல்வார்..

நடராஜ் ஜெகதா என்று சொல்லியிருந்தேனே.. மிட்லண்ட் வெள்ளைக்கண்ணு விடுபட்டதன் காரணம் அவற்றிடம் போனது கிடையாது..(அரசரடி)..அதே போல ஜெயராஜ் ( நரிமேடு தானே..இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ் சைட்)..

ஷா.. நினைவில் இருந்தது..ஆனால் எந்த இடம் என எக்ஸாக்டாக நினைவிலில்லை..கலெக்டர் ஆஃபீஸ் தானே..? அது போல சரஸ்வதியும்.. அமிர்தம் தியேட்டருக்குப்பின்னாடியா சார்..? அவ்வளவாகப் போனதில்லை.. தினமணியும் போனதில்லை.. இந்த தின மணி, மிட்லண்ட்,வெள்ளைக்கண்ணு பட போஸ்டர்களெல்லாம் ரோஸ், பச்சை ஆரஞ்ச் காகிதத்தில் கறுப்பில் அடித்து “இன்று முதல் மணாளனே மங்கையின் பாக்கியம், கைராசி என மின்சார வாரிய நீள் செவ்வக பாக்ஸில் ஒட்டியிருக்கும் தானே..

போத்திராஜா எப்படி விட்டேன்.. எஸ்..இது பற்றி தேவிகா பற்றி எழுதிய போது எழுதியதால் மற்ந்திருக்கலாம்.. இரண்டு படம் பார்த்தேன்..ஒன்று ஆண்டவன் கட்டளை..இரண்டாவது பாத காணிக்கை.. (80 பைசாக்கு மாடி டிக்கட்!)

பாத காணிக்கையா ஆண்டவன் கட்டளையா நினைவில்லை..செல்லூர் தானே.. 25ம் நம்பர் பஸ் சென் ட்ரல் குலமங்கலம் அதில் ஏறி (அந்த்பஸ் கோரிப்பாளையத்தில் இடது பக்கம் – தேவர் சிலையிலிருந்து வெட்டி உள் செல்லும் என நினைக்கிறேன்) டாக்கீஸ்க்கு முன்னால் உள்ள ரோட்டில் இ\றங்கி படம் பார்க்கப் போனால். ஜாலியாகத் தான் இருந்தது படம் பார்க்கும் போது.. படம் விடும் போது ஒன்பதே முக்காலோ என்னவோ..வந்து சாலையோரம் நின்று நின்று கொண்டிருந்தால் பஸ் வரும் வழியவே காணோ.ம்.. சரி என எதிரில் ஆற்றின் படித்துறையில் தைரியமாக இற்ங்கி (அவ்ளோ ஒண்ணும் தூரமில்லை முரளிசார் இல்லியோ) பொசுக்கென நடக்க ஆரம்பித்தால்…

சுத்தமாக இருட்டு தான்..ஆற்றில் அங்கங்கே சிச்சிறிதாய் தண்ணீர் இருந்தாலும் நடக்க முடியும் தான்..தூரத்தே ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் பஸ்கள் செல்வதும் மெர்க்குரி விளக்குகள் அங்கிருந்த படியே ஹாய் கண்ணா எனச் சொல்வதுமாக இருந்தன..

இந்தப் பக்கம் கொஞ்சம் காலை எட்ட வைத்து நடந்து கொண்டிருக்க கொஞ்சம் சற்றுத் தொலைவில் ஏதோ எரிந்து வேறு கொண்டிருந்தது.. ஏதாவது பாடியோ..சேச்சே அப்படில்லாம் இருக்காது..ஒருவேளை இருந்தால்..என இப்படிப் பட்ட எண்ணங்கள் சின்னக் கண்ணன்மனதில் வர இறக்கை இருந்தால் பறந்திருக்கலாம்..எண்ணவோட்டத்திற்கு ஈடாய் நடைவேகம் கூட மாட்டேன் என்கிறது..சே..என நொந்திருந்த போது..தம்பீ…….

அப்போது தான் ஒரு சிற்றோடைபோன்ற தண்ணீரில் கால் வைத்திருந்தேன்.. இந்தக் குரல் அழைப்பது யார்.. கண்ணா..ஏற்கெனவே லேட் .. வீட்டுக்குப் போனால் அப்பா வையும் அம்மா கவலை..அண்ணா எங்கடா போனேன்னு திட்டும்.. இப்போ கூப்பிடறது யார்..

திரும்பினால் வெகு தொலைவில் ஒரு வெளிச்சப் புள்ளி அது மெல்ல மெல்ல என் அருகில் வருவது போல இருக்க…
கொள்ளிவாய்ப் பேய்களும்குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் ப்ரம்ம ராட்சதரும்
அச்சோ அடுத்தலைன் என்னவாய் இருக்கும்
அடச்சீ கண்ணா அச்சம் விட்டொழி…

பின் என்ன ஒரே ஓட்டமும் நடையும் தான்… பேச்சியம்மன் படித்துறை பின்னால் உள்ள படிக்கட்டுகளில் வந்து ஏற – அங்கு சில ஆள் நடமாட்டம் இருக்க தைரியமாகத் திரும்பினால் அந்த வெ.பு வும் தொடர்ந்து வர.. கிட்டக்கப் பார்த்தால் முண்டாசு கட்டிய ஆள்.. என்ன தம்பி.. தொணைக்கு பேசிக்கிட்டு வரலாம்னு கூப்பிட்டா இந்த ஓட்டம் ஓடுறீங்க என்றா.ன்.. செல்லூர் வாசியோ என்னவோ..

ஹி ஹி எனச் சொல்லிவிட்டு ஏறி இடதுபுறமிருந்த சந்தில் உள்ள ராகவேந்திரர்கோவில் இருந்த திசையில் கும்பிடு போட்டு பேச்சியம்மன் கோவில் கடக்கும் போது நின்றுகும்பிட்டுப் பார்க்கையில்..

பூட்டியிருந்த கோவிலின் உள்ளிருந்த அம்மன் முகத்தில் அழகிய புன்னகை…
(பிற்காலத்தில் இதையே ஒருகவிதையாய் எழுதினேன்)..

யெஸ் குரு.. சம்பந்தமூர்த்தி தெரு தான்.. கல்லறை ஸ்ட்ரீட் நினைவுக்கு வருகிறது.. அதன் முக்கில் ஒரு கனரா பாங்க் இருக்கும் ..ரோடு முடிந்துஇடது புறம் திரும்பினால் தங்கம்.. ரோடு முடிந்த உடனே க்ராஸ் செய்தால் கனரா பாங்க்..அதற்கப்புறம் உள்ள ரோட் தான் டிவிஎஸ் பின்புறம். வ்ரும் டாக்டர் சுப்ப ராமன் க்ளினிக் (ஹோட்டல் சுப்ரீம் எனப் பின்னால் வந்த ரோடா?) அப்படியே நேரே சென்றால்முனையில் காலேஜ் ஹவுஸ் வரும் சரியா?

வ்டுகக் காவல் கூடத் தெருவும் நினைவுக்கு வருகிறது.. தானப்ப முதலி தெரு..எவ்ளோ டைம் அந்தவழியாய்ப்போயிருக்கிறேன்.. அங்கே உள்ள பாண்டியன் மினி சூப்பர் மார்க்கெட் (இப்போதும் இருக்கிறதா) தான் எனக்கு அண்ணா முதன் முதல் ஸ்கூல் யூனிஃபார்மிற்காக மெரூன் காட்டன் பேண்ட் எடுத்துக் கொடுத்தான்..பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டிலிருது நேர் போய் (வளைந்து நேர் சென்றால் பூமார்க்கெட் ரோடு வரும் (சரியாங்க.. கொஞ்சம் புல் புல் அரிக்குது..ஏதாவது மாற்றம் வந்திருந்தால் சொல்லுங்க)) லெஃப்ட் போனால் சென் ட்ரல்.. அப்படிப் போவதற்கு முன் ஒரு கல்யாணமண்டபம் இருந்தது..அங்கு ஒரு சகோதரியின் கல்யாணம் நடந்தது.. பின் அதுவே மாடர்ன் ரெஸ்டாரெண்ட் டின்மெஸ் ஆக மாறியது என நினைக்கிறேன்..சாப்பாடு பிரமாதமாய் இருக்கும்..

அகெய்ன் தாங்க்ஸ்.:)

chinnakkannan
18th October 2014, 09:17 PM
ஜெய்ஹிந்த் புரம் முருகன் ஒரே ஒரு தபா போயிருக்கிறேன்.. பார்த்தால் பசிதீரும்..படம்.. அப்புறம் வில்லாபுரம்தியேட்டர்ஸ் விட்டுடுத்து..(வரலாறு முக்கியம் அமைச்சரே!: ) :)

மது ஏசி ஆரம்பித்த போது பார்த்திருக்கிறேன்..சின்ன வீடு அங்குதான் ரிலீஸ் ஆன நினைவு (பிற்காலத்தில் இதுவும் கெட்ட தியேட்டராக மாறிய (படம் ஓட்டும்) நினைவு.) அப்புறம்.. கொஞ்சம் மூணு கிலோமீட்டர் டிராவல் பண்ணினால் பத்மா என ஒரு தியேட்டர் (சரியா).. அங்கு தான் ஊமை விழிகள் பார்த்தேன்..:)

Scottkaz
18th October 2014, 10:12 PM
முத்தான 6000 பதிவுகளை மிக சத்தாக தந்த திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் திலகம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/30dec1k.jpg

RAGHAVENDRA
18th October 2014, 10:39 PM
தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி ராமமூர்த்தி சார்.

RAGHAVENDRA
19th October 2014, 09:22 PM
இப்பாடல் காட்சி ஒரு திரைப்படப் பாடல் என்ப்தைத் தாண்டி அந்நாளைய நினைவுகளை மீட்டும் ஒரு ஆவணமாகவும் திகழ்கிறது.

ஷண்முகப்ரியா திரைப்படத்தில் ஜெய விஜயா இசையமைப்பில் பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாடிய பாடல், இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே..

இப்பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள வாத்தியக்கலைஞர்களில் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் வாசித்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக புல்லாங்குழல் கலைஞர் நஞ்சுண்டையா அவர்களை மிகவும் அருகாமையில் திரையில் காணலாம்.

http://www.youtube.com/watch?v=xtNeZW9LFYg

இதனுடைய ஆவணத்தன்மை காரணமாகவே இங்கு இப்பாடல் காட்சி பதியப்படுகிறது.

இது போல் வாத்தியக் கலைஞர்கள், அல்லது அந்நாளைய தமிழக ஊர்கள், கோயில்கள், இவை போன்றவை இடம் பெற்ற காட்சிகளும் பகிர்ந்து கொள்ளலாம். மற்றபடி பாடலின் இனிமை, இசை போன்ற அம்சங்களை அலச இருக்கவே இருக்கிறது மனதை மயக்கும் மதுர கானம் தலைப்பு.

RAGHAVENDRA
20th October 2014, 06:53 AM
பொங்கும் பூம்புனல்

http://www.tamilstar.com/profile/uploads/artist/profile/ar5105Sridhar.jpg

தமிழ்த்திரையுலகின் முதல் டிரெண்ட் செட்டர். நான்கு சுவர்களைத் தாண்டியும் சினிமாவை கொண்டு செல்லலாம் என்பதற்கு அஸ்திவாரம் போட்டவர். நான்கு சுவர்களுக்குள்ளும் சினிமாவை சொல்லலாம் என்பதற்கும் அவர் தான் அஸ்திவாரம் போட்டார். புதிய முகங்கள், புதிய கோணங்கள், புதிய இசை, புதிய உத்தி முறைகள் என அவருடைய அனைத்து முயற்சிகளுமே அது வரை இருந்த நடைமுறைகளை மாற்றியவை. வெறும் நான்கு சுவர்களுக்குள் நெஞ்சில் ஓர் ஆலயம், நாடு தாண்டி சிவந்த மண் என இரு துருவங்களையும் இணைத்த புதுமை இயக்குநர்..

அவருக்கு இந்த உலகமே ஒரு கவிதை... அதை கதையில் கண்டார்...ஒளிப்பதிவில் கண்டார்... இசையில் கண்டார்...நடிப்பில் கண்டார்...படத்தொகுப்பில் கண்டார்... சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் கண்டார்..

அக்டோபார் 20 -- இன்று அவருடைய நினைவு நாள்...

இதோ அவருக்கு ஓர் அஞ்சலி,,,

http://www.youtube.com/watch?v=4p30PGZ4UC0

அவருடன் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய இயக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பார்வையாளனாக அவருடைய படப்பிடிப்பில், நடிகர் திலகத்தைக் காணும் வாய்ப்பு பெரும் பேறு. முன்பே நடிகர் திலகம் திரியில் குறிப்பிட்டிருந்தவாறு நெஞ்சிருக்கும் வரை படப்பிடிப்பில் அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோபம் வந்து நாங்கள் பார்க்கவில்லை. மாறாக கோபம் வரும் போது நகத்தைக் கடித்துக் கொண்டு சற்று எட்டிப் போய்விடுவார்.

தமிழ்த்திரையுலகத்தின் வரலாற்றில் தவிர்க்க இயலாத பெயர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர்.

RAGHAVENDRA
20th October 2014, 07:42 AM
பழைய இசைத்தட்டுக்களைப் பார்ப்பதுவே தனி சுகம்... அப்படி ஒரு கடையைப் பற்றி இணைய தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு.

http://www.kiruba.com/2012/03/the-hunt-for-the-vinyl-records.html

அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில நிழற்படங்கள்...

http://farm8.staticflickr.com/7015/6830763619_2cd28be09b_z.jpg

http://farm8.staticflickr.com/7022/6830799005_75b93556b3_z.jpg

http://farm8.staticflickr.com/7011/6830793501_103efd19eb_z.jpg

http://farm8.staticflickr.com/7016/6830822833_d93a90cb71_z.jpg

RAGHAVENDRA
20th October 2014, 07:43 AM
சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள லில்லி பாண்ட் கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள ரிதம் என்கின்ற கடையைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு

http://www.thehindu.com/features/metroplus/a-record-of-sorts/article4724188.ece

அக்கடையின் ஒரு பகுதி

http://www.thehindu.com/multimedia/dynamic/01460/GRAMAPHONE_1460135g.jpg

RAGHAVENDRA
20th October 2014, 07:46 AM
சென்னை அடையாறு தத்துவ ஞான சபையின் அருகில் ஒருவர் பழைய இசைத்தட்டுக்கள், பிளேயர்கள் என விற்றுக் கொண்டிருப்பார். அதைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு

http://www.thehindu.com/news/cities/chennai/he-sells-sounds-from-the-bygone-era/article2939636.ece

அவருடைய விற்பனைப் பொருட்கள்

http://www.thehindu.com/multimedia/dynamic/00936/TH28_GRAMAPPHONE_936675f.jpg

Richardsof
22nd October 2014, 05:17 AM
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

RAGHAVENDRA
22nd October 2014, 07:38 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/diwaligrtgs20142afw_zps4360b8ea.jpg

RAGHAVENDRA
23rd October 2014, 07:26 AM
இன்னும் மெய்ன் படம் போடலைடா.. அப்ப உள்ள போய்க்கலாம்...

என்று சொன்னவாறு அரசாங்க செய்திப் படங்களைப் பார்க்காமல் பலர் அந்நாளில் தவிர்த்திருப்பர்..
(அடியேன் நியூஸ் ரீலை விடமாட்டேனாக்கும்... மெய்ன் பிக்சர் போடும் வரைக்கும் காத்திருப்பதில் இன்பம் உண்டு... தலைவர் பாட்டு உபயம்).

அவ்வாறு அந்நாட்களில் பார்க்காமல் விட்ட எத்தனையோ நியூஸ் ரீல்களில் முக்கியமான விஷயங்கள் இன்றைக்கு வரலாறாக நமக்கு உதவுகின்றன.

இதோ பாருங்கள்.. ஜெனரல் மானேக்ஷா பதிவியேற்புக் காட்சியை...

அது மட்டுமா... இந்த நியூஸ் ரீலைப் பார்த்தால் தாங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.. எதற்காக நாங்கள் விடாமல் பார்த்தோம் என்று..

இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் மாட்ச்... காணக் கிடைக்காத காட்சி அப்போது.. தொலைக்காட்சி என்றால் என்ன எனத் தெரியாத காலங்கள்..

வடேகர், கவாஸ்கர், சலீம் துரானி, ஏக்நாத் சோல்கர், இன்ஜினீயர், பிஷன் சிங் பேடி, பி.எஸ்.சந்திரசேகர் என புகழ் பெற்ற கிரிக்கெட் நாயகர்கள்.. இந்திய அணியில், அதே போல், டோனி கிரெய்க், க்ரிஸ் ஓல்ட், ஆலன் நாட், என இங்கிலாந்து அணியில்...

அதே போல் மானேக்ஷா பதவியேற்பு விழாவில் வி.வி.கிரி, பிரதமர் இந்திரா, ஒய்.பி.சவான் என பலரை பார்க்கலாம்...

https://www.youtube.com/watch?v=4XQijHGcAuQ

RAGHAVENDRA
23rd October 2014, 07:31 AM
ARMED FORCES ACADEMY சர்தார் வல்லபாய் படேல் துவக்கி வைக்கும் காட்சி

https://www.youtube.com/watch?v=u_CyjfKjJtY

RAGHAVENDRA
23rd October 2014, 07:34 AM
இந்தியன் நியூஸ் ரிவியூ - 1741

ஜவஹர்லால் சர்வதேச கால்பந்து கோப்பைப் போட்டிகளை துவக்கி வைக்கிறார் இந்திரா காந்தி அவர்கள். மேலும் பல அந்நாளைய செய்திகள்

https://www.youtube.com/watch?v=SM265ejgxbs

RAGHAVENDRA
23rd October 2014, 07:52 AM
1978ம் ஆண்டு.. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாஜ்பாய் அவர்களின் பாகிஸ்தான் நல்லெண்ண விஜயம்...

https://www.youtube.com/watch?v=hAqFHK5LkYU

RAGHAVENDRA
23rd October 2014, 07:53 AM
1971ம் ஆண்டு...

இங்கிலாந்து நாட்டில் விஜயம் செய்த அஜீத் வடோகர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக ரப்பர் எனப்படும் கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை வென்று தாயகம் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்த காட்சிகள்...

https://www.youtube.com/watch?v=krMgDX5VhI4

சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு ரசிகர்கள் வழி முழுதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கையசைத்து பாராட்டிய அற்புதக் காட்சி...

chinnakkannan
23rd October 2014, 10:48 AM
இந்தியன் நியூஸ் ரீல் - நைஸ் ராகவேந்தர் சார்..அந்தக்காலத்தில் இது கொஞ்சம் படம்பார்க்க லேட்டாக ப் போனாலும் கொஞ்சம்
ரிலீஃபான விஷயம் என்று தான் சொல்லவேண்டும்.. நியூஸ் ரீல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நிம்மதியாக நல்ல சீட்டாய் இருட்டில் தேடி அமர்வதற்குள் அது இறுதிக் கட்டத்தை அடைந்து டெஸ்ட் மாட்ச் வந்து விடும்..( நியூஸ் ரீல் என்றாலே மனதுக்குள் ஒலிக்கும் குரல்...பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட்டார்)..

ஆனால் அப்படிக் கஷ்டப் பட்டுத் தேடி அமர்ந்தபிறகு அதற்கப்புறம் நாதஸ்வர ஒலியுடன் கலர்ப்படம் தமிழ் நாடு அரசுச் செய்திப் பிரிவு போடுவார் பாருங்கள்..ம்ம்

Russellisf
23rd October 2014, 08:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/175311765_zpsfad990dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/175311765_zpsfad990dc.jpg.html)

Russellbpw
23rd October 2014, 08:55 PM
இந்தியன் நியூஸ் ரீல் - நைஸ் ராகவேந்தர் சார்..அந்தக்காலத்தில் இது கொஞ்சம் படம்பார்க்க லேட்டாக ப் போனாலும் கொஞ்சம்
ரிலீஃபான விஷயம் என்று தான் சொல்லவேண்டும்.. நியூஸ் ரீல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நிம்மதியாக நல்ல சீட்டாய் இருட்டில் தேடி அமர்வதற்குள் அது இறுதிக் கட்டத்தை அடைந்து டெஸ்ட் மாட்ச் வந்து விடும்..( நியூஸ் ரீல் என்றாலே மனதுக்குள் ஒலிக்கும் குரல்...பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட்டார்)..

ஆனால் அப்படிக் கஷ்டப் பட்டுத் தேடி அமர்ந்தபிறகு அதற்கப்புறம் நாதஸ்வர ஒலியுடன் கலர்ப்படம் தமிழ் நாடு அரசுச் செய்திப் பிரிவு போடுவார் பாருங்கள்..ம்ம்

அது மட்டுமா....அந்த குரல் உங்களுக்கு ஒலிக்கவில்லையா...கீழ்கண்டவாறு...

இவர்தான் கேப்டன் குமார்...ஆயிரத்து தொளாயிரத்து 16ஆம் ஆண்டு...குஜராத்தை சேர்ந்த கர்ஜாபூர் கிராமம்....இங்கு வசித்து வந்த தொண்ணூறு வயது மூதாட்டி லட்சுமி பாய் கூறுகிறார்....

(பிறகு ஹிந்தியில் லட்சுமி பாய் உரைப்பது ) மெய்...இஸ் காவ் மெய் சாட் சால் ரேஹ்னே வாலி ஹூ...

தொடர்ந்து தமிழாக்கம்....நான் இந்த கிராமத்தில் சுமார் 60 வருடமாக இருக்கிறேன்....இப்போது நினைத்தாலும் பயங்கரமாக உள்ளது.......என்று அந்த குரல் முடிக்கும் முன்னரே.....

ற்ற்ர்ர்ர்ர்..என்ற சத்தத்துடன் திரைப்பட சென்சர் செர்டிபிகாடே காட்டப்படும்...தொடரும் விசில் சத்தம்...உயஈஈஈ....

chinnakkannan
23rd October 2014, 09:40 PM
//(பிறகு ஹிந்தியில் லட்சுமி பாய் உரைப்பது ) மெய்...இஸ் காவ் மெய் சாட் சால் ரேஹ்னே வாலி ஹூ..//ஆர்.கே.எஸ் ஸார்..ஹி ஹி..:) பயங்கரக் கொடுமைங்க அது.இந்தியும் புரியாது பயங்கரக் கோவம் கோவமா வரும்..!.எப்படிங்க நினைவு வச்சிருக்கீங்க..

அதற்கப்புறம் சைக்கிள் கேப்ல ஸ்லைட்ஸ் வேற. சிறந்த ஸ்டிச்சிங் ஸ்டைல்கிங், ஆடைகளின் கடல் ஹாஜிமூசா, மற்றவை நினைவிலில்லை.. .. அப்புறம்கையால் எழுதப்பட்ட ஸ்லைட் கருப்பு வெள்ளையில்.. பகல் பதினொரு மணிக் காட்சி கணவனே கண்கண்ட தெய்வம்.. தினசரி 3 காட்சிகள் சனி ஞாயிறு4 காட்சிகள் அந்த ஸ்லைட் கொஞ்சம் பத்து செகண்ட் மெளனமாக இருக்கும் அப்புறம் பின்னால கடோசீ சீட்பக்கத்துல இருந்த லைட் அணைஞ்சு அப்புறம் சென் ட்ரல் போர்ட் ஃபிலிம் சென்சார்..! :)

adiram
25th October 2014, 06:08 PM
ஸ்லைட், நியூஸ் ரீல், தமிழ்நாடு செய்திப்பிரிவு வர்ணனைகள் மூலம் எழுபதுகளில் தியேட்டர் உள்ளே அமர்ந்திருக்கும் உணர்வு.

தேங்க்யூ ராகவேந்தர், சின்னக்கண்ணன், ரவிகிரண்.

RAGHAVENDRA
25th October 2014, 11:39 PM
http://www.gebseng.com/04_slidemovie/lab30/screensize/slidemovie_slides.jpg

அந்நாட்களில் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் ஸ்லைடுகளின் நிழற்படம்... மாதிரிக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

RAGHAVENDRA
25th October 2014, 11:54 PM
அன்றைய மினர்வா இன்றைய பாட்சா திரையரங்கு சென்னை பிராட்வே பகுதி..

http://www.thehindu.com/multimedia/dynamic/01169/08MPBATCHA_1169410f.jpg

மினர்வா என்ற பெயரில் இயங்குவதற்கு முன் நேஷனல் திரையரங்காக தொடங்கப்பட்டதன் நிழற்படம் -

http://www.thehindu.com/multimedia/dynamic/00760/21_SM_P_5_Stephen_H_760603g.jpg

நேஷனல் / மினர்வா / பாட்சா ... திரையரங்கின் வடிவமைப்பு நிழற்படம்

http://www.thehindu.com/multimedia/dynamic/00760/21_SM_P_5_Stephen_H_760602g.jpg

நிழற்படங்களுக்கு நன்றி ஹிந்து இணைய தளம்

RAGHAVENDRA
26th October 2014, 12:01 AM
இடிக்கப் படும் கோவை முருகன் திரையரங்கம்.. ஆண்டு 2011

http://www.thehindu.com/multimedia/dynamic/00362/CB22--_MURUGAN_THEA_362925e.jpg

நிழற்படம் நன்றி ஹிந்து பத்திரிகையின் இணையதளம்

RAGHAVENDRA
26th October 2014, 12:13 AM
இந்தியாவின் முதல் திரையரங்காகக் கருதப்படும் கொல்கத்தா எல்ஃபின்ஸ்டன் திரையரங்கு

http://www.filmkailm.com/wp-content/uploads/2012/10/Elphinstone-1024x603.png

RAGHAVENDRA
26th October 2014, 12:15 AM
http://i50.tinypic.com/2hp13ww.jpg

எர்ணாகுளம் பத்மா திரையரங்கம்..

தற்போது இயங்குகிறதா தெரியவில்லை..

RAGHAVENDRA
26th October 2014, 12:21 AM
பையனூர் திவ்யா திரையரங்கம் கேரளா

http://i45.tinypic.com/2uy22bq.jpg

Variety Hall Cinema Talkies Coimbatore, 1914

http://www.thehindu.com/multimedia/dynamic/01798/19mar-kol-03_-S_TH_1798538g.jpg

above image courtesy: The Hindu website

RAGHAVENDRA
26th October 2014, 02:54 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00780/14MP_LEAD_780871g.jpg

சென்னை அண்ணாசாலையில் தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடம் - பல ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம்..

நிழற்படத்தில் நடு நாயகமாகத் தெரியும் ஓர் கட்டிடம்.. அதன் இடப்புறம் ஒட்டியவாறு திரும்பும் தெரு தான் எல்லீஸ் சாலை. திரையிலிருந்து நோக்கும் போது இடப்புறம் திரும்பும் சாலை வாலாஜா சாலை. ஒரு மனிதர் குனிந்து நின்றிருக்கும் சாலை அண்ணா சாலை சென்ட்ரலை நோக்கி செல்லும் திசை.

மின்சாரம் தற்போது போல் பூமிக்கடியில் அல்லாமல் உயரமான கம்பங்களினூடே செல்வதைக் காணலாம்.

இந்த இடத்தைப் பற்றி மெல்லிசை மன்னர் டி.கே.ராம மூர்த்தி அவர்களின் எண்ண அலைகள்... ஹிந்து நாளிதழின் இணையப் பக்கத்திலிருந்து..



T.K. Ramamurthi on a sylvan Mount Road, accompanying MKT Bhagavathar on the violin and the simple joys of walking along the seashore.

When they bombed Madras in 1942, the Japanese failed to inflict significant losses. The attack, however, succeeded in robbing residents of their peace. Fear of more attacks resulted in a massive exodus. Many turned their backs on the city for good, selling their properties for a trifle. I also fled the city with all my possessions, a violin in one hand and a bed in the other.

As I boarded a train for Trichinopoly my pocket was picked and I was set back by Rs. 150, received as settlement from my employer, an agency of Columbia Graphophone Company. After spending six months in Thiruvidaimaruthur, I returned to Madras. Rented rooms in areas around Mount Road defined living for me as I worked with companies that had offices on this arterial road.

The Government House had a glitter all its own for its Banqueting Hall — later called Rajaji Hall — where balls were organised for the British. On rare occasions, its doors were opened to Indian entertainment, a notable case being MKT Bhagavathar's concert to raise funds for people affected by the evacuation — accompanying him on the violin was an honour for me.

When I worked for HMV Gramophone Company, housed in Khaleel Mansions, opposite Spencer's, I was allowed to stay in a room that was attached to our workplace — imagine an office on Mount Road ringed by trees. The land where Rani Seethai Hall and the South Indian Film Chamber Theatre stand today was a dense mango grove overrun with snakes. Across the road, a Corporation park — which gave way to the Woodlands Drive-In — contributed to the sylvan environment. Greenery of this kind gave me a sense of the familiar, when I came to Madras in 1932, as a ten-year-old leaving behind a Trichinopoly that was largely untouched by modernity. My family lived on Neeli Veeraswami Chetty Street, which further promoted the illusion of living in a tradition-bound small town. My father, Krishnaswamy played the violin for the various projects of Shining Stars Society, which gave theatre fans the pleasure of listening to plays through gramophone records.

Whenever I worked for the Society, I received a rupee as daily remuneration. With this earning, I would indulge in an ice-cream that attracted children to Spencer's — a small circular building in those days. Slurping on the ice-cream I would walk along the rushing waves on the beach from Marina to Santhome. When I returned drenched in sea water, my father would give me a sound thrashing.

When I was on my own, I stayed at a room in Royapettah. There was no dearth of hotels in and around Mount Road. Officer's Hotel, opposite Midland Theatre, was patronised by vegetarians and I bought a monthly coupon book. Wherever one turned, there was a cinema. Most importantly, there was Musee Musicals, where I could get strings for my violin. For a youngster who enjoyed music, films, good food and Nature, there was no better place.

BIO T.K. Ramamurthi Born in 1922, he has achieved distinction as a Tamil film music composer and violinist. He reached the height of his career during the 1950s and 1960s, when he teamed up with M.S. Viswanathan. MSV and he scored film music under the name of Viswanathan-Ramamurthi. The two went their separate ways in 1965 and reunited to compose music for a film in Tamil in 1995. Ramamurthi has worked as music director for 700 films, including Malayalam and Telugu. He shares the title Mellisai Mannar with MSV.

I REMEMBER Listening to the radio was a community ritual. The cone speakers installed by the radio station were a big hit.

நன்றி .. ஹிந்து நாளிதழின் இணைய தளம்..http://www.thehindu.com/features/metroplus/memories-of-madras-a-reminiscent-note/article2449928.ece

Richardsof
26th October 2014, 04:59 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

சென்னை -அண்ணா சிலை வைப்பதற்கு முன் இருந்த மவுண்ட் ரோடு நிழற் படம் மிகவும் அருமை .நான்

சென்னையில் படித்த நேரத்தில் [ may 1969- march -1972] மறக்க முடியாத இடம் -அண்ணா சாலை . அங்கிருந்த

புகழ் பெற்ற திரைஅரங்கங்கள் . ஜெமினி அருகே வைக்கபட்டிருந்த பதாகைகள் - கட் அவுட் மற்றும் வர இருக்கும் புது

படங்களின்பதாகைகள் கண்களுக்கு விருந்து . அன்றைய காலங்களில் டிக்கெட் முன் பதிவிற்கு முதல் நாள் இரவே

திரை அரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டம் . ஆரவாரங்கள் . மறக்க முடியாத நாட்கள் .

அண்ணா சாலையில் என் அனுபவத்தில் நான் பார்த்த ரசிகர்களின் ஆராவார கூட்டம் - திரு விழா சில முக்கிய

அரங்குகள் - படங்கள் பற்றிய ஒரு மினி குறிப்பு

[ may 1969- march -1972]

1969

மிட்லண்ட் - அடிமைப்பெண்

குளோப் - சிவந்த மண்

சித்ரா - நம்நாடு

சாந்தி - தெய்வமகன்

1970

பிளாசா - மாட்டுகார வேலன்

வெலிங்டன் - எங்க மாமா

மிட்லண்ட் - என் அண்ணன்

பராகன் - தேடி வந்த மாப்பிள்ளை

சித்ரா - எங்கள் தங்கம்

தேவி பாரடைஸ் - சொர்க்கம்

சாந்தி - எங்கிருந்தோ வந்தாள்


1971

குளோப் - குமரிகோட்டம்

தேவி பாரடைஸ் - ரிக்ஷாக்காரன்

தேவி பாரடைஸ் - நீரும் நெருப்பும்

சாந்தி - சவாலே சமாளி

மிட்லண்ட் - வீட்டுக்கு ஒரு பிள்ளை

1972

தேவி பாரடைஸ்- ராஜா

வெலிங்டன் - சங்கே முழங்கு

சித்ரா - நல்ல நேரம்

பிளாசா - ஞானஒளி

31.3.1972 குட் பை டு சென்னை .

1.4.1972 முதல் 31.3.1975 வேலூர் கல்லூரி நாட்கள் .

வேலூர் திரை அரங்கு அனுபவங்கள் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்

Richardsof
26th October 2014, 05:37 PM
MADURAI - CHINTHAMANI -1970

http://i59.tinypic.com/2jepimv.png

gkrishna
27th October 2014, 11:25 AM
படித்ததில் பிடித்தது

வானொலி

எனக்கு தெரிந்த முதல் ரேடியோ கோடம்பாக்கத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் பகுதியில் நங்கள் வசித்தபோது தான்.

அப்போது மார்கோனியை எனக்கு பரிச்சயமில்லை. தெரியாது. பின்னால், நுங்கம்பாக்கத்தில் தான் மார்க்கோனி என்கிற ரேடியோ கண்டுபிடித்தவர் அறிமுகமானார். அதற்கு காரணம் ஸ்ரீ விஜயராகவன் சார். ஏனென்றால் அவர் தான் எட்டாவது வகுப்பில் எனக்கு சயன்ஸ் வாத்தியார்.

ரேடியோ நான் இலவசமாக கேட்டது முதலில் கேசவ நாயர் டீ கடையில் தான். அதுவும் சாயந்திரம் ரூபவாகினி என்று ரேடியோ சிலோன் நிகழ்ச்சியை எல்லோரும் ஆவலாக கேட்பதை அறிந்து அதை வைத்திருப்பார். மயில் வாகனன் என்பவர் நீளமாக பேசுவார். நிறைய கிராமங்கள் ஆசாமி பேர்கள் எல்லாம் சொல்லி விட்டு அப்புறம் தான் ஏ. எம். ராஜா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் பாட விடுவார். விரும்பிக் கேட்ட நேயர்கள் குடும்பங்களின் பெயர்கள் விசித்தரமாக இருக்கும். நடு நடுவே கேட்கவிடாமல் சுசித்ராவின் குடும்பம் என்று ஒரு நிகழ்ச்சியை ஹார்லிக்ஸ் நிறுவனம் இடையில் செருகும்.

ஆகாசவாணி என்று ஒரு சிவரஞ்சனி ட்யூன் வெகுநாள் என்னை கவர்ந்தது. அந்த ட்யூனை பாடிக்கொண்டே சைக்கிளில் சுற்றியது நினைவிருக்கிறது

ரேடியோவை வீட்டில் பார்த்தது முதலில் சூளைமேட்டில் சம்பகம் மாமி வீட்டில். முத்து சாமி மாமா சாதுவாக காணப்பட்டாலும் கோபக்காரார். அவர் மகன் மாலி அறையும் குத்தும் வாங்கும்போது நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. மாமா ஒரு மர்பி ரேடியோ வைத்திருந்தார். பெரிதாக இருக்கும். அதன் தலையிலிருந்து ஒரு வயர் ஜன்னலை கடந்து மொட்டை மாடிக்கு போகும் அங்கு ஒரு மூங்கில் கொம்பில் ஐக்கியமாகும். ரேடியோவை அடிக்கடி வலது இடது பக்கமாக மாற்றி மாற்றி திருப்பினால் கொர கொர சப்தம் கொஞ்சம் குறைத்து கேட்கும் அவ்வளவுதான். கோரகொரவிற்கு இடையே இருமிக்கொண்டே மகாராஜா ஆப் விஜயநகர் விஜி என்று ஒருவர் பந்து எப்படி ஒருவன் போட்டான் எங்கே போகவேண்டிய அது எப்படி மார்க்கம் திரும்பி கிரிக்கெட் குச்சியில் படாமல் ப்ராரப்தமாக அந்த மட்டையாளன் காலையே சுற்றியது. அதனால் அவன் வெளியேறியது. எத்தனை தூரம் பந்து எகிறியது. எங்கே அடித்தார்கள் அதை யார் துரத்தியது. அதற்குள் எவன் தலை தெறிக்க அங்கும் இங்குமாக ஓடினான் என்றெல்லாம் சொல்வார். ஜனங்களின் சப்தம் கொரகொரவோடு ஐக்கியம் ஆகி ஒரே களேபரமாக இருக்கும். மாலி ஒருநாள் அந்த ரேடியோவை எங்கோ திருகி அதன் உள்ளேயிருந்து சப்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முயன்றபோது ரேடியோ இறந்து விட்டது. மாமா அன்று அவனைப் பின்னி விட்டார். இவ்வளவு அடி வாங்கி மாலி துடிக்கும்போது சும்மயிருந்த ரேடியோ, மாமா அதன் தலையில் ஒரு தட்டு தட்டி ஒரு குலுக்கு குளுக்கினவுடன் உயிர் பெற்றது. கொரகொர அதிகமாகவே கேட்டது. நான் அதிக நேரம் ரேடியோ பக்கத்தில் ஒரு கும்பலே நெருக்கி அடித்து கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்தது ஜனவரி 30 1948 அன்று. காந்தி இறுதி ஊர்வலம் அநேக திருவாசக தேவார ஆழ்வார் பாசுரங்கள் வயலின் வீணை அழுகை களுக்கு இடையே ஒலிபரப்பின போது. அண்ணல் காந்தி பற்றி அறியாத தெரியாத பருவம் எனக்கு. எனவே அவர்கள் என்ன கேட்கிறார்கள் ஏன் ரேடியோ அழுகிறது என்று தெரியவில்லை. அதன் அழுகை ஓலம் என்னை ஈர்க்கவில்லை.

நான் வாங்கின முதல் ரேடியோ ரீசா என்று கிண்டியில் ஒரு ரேடியோ தொழிற்சாலையிலிருந்து. ரங்கராஜன் என்று ஒத்தைனாடியாக ஒரு மனிதர். நாம் ஏதோ கேட்டால் அவர் எங்கோ யோசித்துக்கொண்டே பாதி பதில் சொல்பவர். அவர் அந்த ரேடியோ கம்பனியின் க்வாலிடி கண்ட்ரோல் பரிசோதனை செய்து ஒரு சிறு காகிதத்தில் கையெழுத்துப்போட்டு ஒவ்வொரு ரேடியோ முதுகிலும் ஒட்டி அனுப்புபவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி படையெடுத்து ஒரு ரேடியோ சல்லிசான விலையில் தரச்சொன்னேன். நூற்று முப்பது ரூபாய்க்கு ஒரு நல்ல ரேடியோ தருகிறேன் வா என்று கிண்டிக்கு தொழிற்சாலைக்கு வரச்சொன்னதால் அங்கே சென்று அவரை பார்த்தேன். என்னை துளியும் கவனிக்காமல் நிற்கவே வைத்துவிட்டு யாரிடமோ பேசிக்கொண்டே சென்று விட்டார். ஆங்கே சிலையானேன். பிறகு வந்தார்.

'நீ 'எப்போ வந்தாய்?''

''குண்டாக வழுக்கை தலையோடு ஒருவருடன் பேசிக்கொண்டே நீங்கள் காபி குடித்தபோது''

''ஒ அவரா. சரி எதற்கு வந்தாய்?''

''ரேடியோ தருவதாக ரெண்டு நாள் முன்பு இன்று வரச் சொன்னீர்கள்.''

''இருக்காதே. சரி எந்த ரேடியோ வேண்டும்?

''நீங்கள் இதோ இந்த மாடல் நல்லது என்று சொன்னீர்கள் என்று அவர் எழுதிக்கொடுத்த ஒரு நம்பரை அவரிடமே காட்டினேன்.''
இடது சுண்டுவிரலால் காதைக் குடைந்து கொண்டே, '' இது இப்போது வருவதிலையே. எதற்கும் பார்க்கிறேன்''

சற்று நேரத்தில் ஒரு அட்டைப்பெட்டியோடு அது வந்தது. ஏகப்பட்ட பார்மாலிட்டி. கடைசியில் பல கைஎழுத்துகள், ரிஜிஸ்டர்கள் அதன் பெயரை எழுதிக்கொள்ள வெளியே தூக்கிக்கொண்டு வந்தேன். அன்றிரவு ரங்கராஜன் வந்து அதைப் பொருத்திகொடுக்க ரேடியோ பாடியது. முதலில் எங்களுக்கு நெல் பயிர் செய்வது எப்படி என்று ஒருவர் சொல்லிக்கொடுக்க, அப்புறம் தெலுங்கில் எங்கோ ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து வேறொரு ஸ்டேஷனில் திருப்பி யானைக்கு அரிக்குமா என்று சிலர் தங்களுக்குள்ளேயே பேசுவது கேட்டோம். என் அப்பாவுக்கு ரேடியோ பிடித்து விட்டது. பிபிசி வருமாடா இதில் என்று ஷார்ட் வேவ் ஸ்டேஷன்கள் தேடினார். அலை அலை யாக ஒ வென்ற சப்தம். வெறுத்துப்போய் ''இந்த சனிக்கு எவ்வளவு கொடுத்தாய்?'' என்று திட்டு கிடைத்தது.

அதற்கப்புறம் பல வருஷங்களில் ட்ரான்சிஸ்டர் என்று புதிதாக ரேடியோ உருமாறியது. அதை எல்லோர் வீட்டிலும் விஜிபி போன்ற நிறுவனங்கள் மாதாந்திர தவணையில் கொடுத்தார்கள். அது கொஞ்சம் நன்றாக பாடியது. கொரகொர அப்பவும் சிற்றலை ஸ்டேஷன்களில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் தூக்கிச் செல்லமுடிந்தது. ac dc வால்வ் ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தன. பினாகா கீத் மாலா கேட்டு ரபி, முகேஷ் லதாவெல்லாம் நிறைய அர்த்தம் புரியாமல் இந்தியில் கேட்டிருக்கிறேன்.

பல வருஷங்கள் ஓடிய பின் பாக்கெட் ட்ரான்சிஸ்டர்கள் வர ஆரம்பித்தன. கையில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பாட்டு கேட்க ஆரம்பித்தோம். ராஜி அத்தையால் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. ''அட இந்த பயல் கையிலே ஒரு சின்ன பொட்டியில் தியாகராஜ பாகவதரே பாடுகிறாரே'' என்று அதிசயித்தது ஞாபகம் வருகிறது.

ரேடியோக்கள் டெலிவிஷன் வரும் வரை ஏக போகமாக அரசாண்டன. இன்று அவை தனித்வத்தொடு இயங்க காணோம்.

Russellbpw
28th October 2014, 07:17 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

சென்னை -அண்ணா சிலை வைப்பதற்கு முன் இருந்த மவுண்ட் ரோடு நிழற் படம் மிகவும் அருமை .நான்

சென்னையில் படித்த நேரத்தில் [ may 1969- march -1972] மறக்க முடியாத இடம் -அண்ணா சாலை . அங்கிருந்த

புகழ் பெற்ற திரைஅரங்கங்கள் . ஜெமினி அருகே வைக்கபட்டிருந்த பதாகைகள் - கட் அவுட் மற்றும் வர இருக்கும் புது

படங்களின்பதாகைகள் கண்களுக்கு விருந்து . அன்றைய காலங்களில் டிக்கெட் முன் பதிவிற்கு முதல் நாள் இரவே

திரை அரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டம் . ஆரவாரங்கள் . மறக்க முடியாத நாட்கள் .

அண்ணா சாலையில் என் அனுபவத்தில் நான் பார்த்த ரசிகர்களின் ஆராவார கூட்டம் - திரு விழா சில முக்கிய

அரங்குகள் - படங்கள் பற்றிய ஒரு மினி குறிப்பு

[ may 1969- march -1972]

1969

மிட்லண்ட் - அடிமைப்பெண்

குளோப் - சிவந்த மண்

சித்ரா - நம்நாடு

சாந்தி - தெய்வமகன்

1970

பிளாசா - மாட்டுகார வேலன்

வெலிங்டன் - எங்க மாமா

மிட்லண்ட் - என் அண்ணன்

பராகன் - தேடி வந்த மாப்பிள்ளை

சித்ரா - எங்கள் தங்கம்

தேவி பாரடைஸ் - சொர்க்கம்

சாந்தி - எங்கிருந்தோ வந்தாள்


1971

குளோப் - குமரிகோட்டம்

தேவி பாரடைஸ் - ரிக்ஷாக்காரன்

தேவி பாரடைஸ் - நீரும் நெருப்பும்

சாந்தி - சவாலே சமாளி

சாந்தி - BABU

மிட்லண்ட் - வீட்டுக்கு ஒரு பிள்ளை

1972

தேவி பாரடைஸ்- ராஜா

வெலிங்டன் - சங்கே முழங்கு

சித்ரா - நல்ல நேரம்

பிளாசா - ஞானஒளி

31.3.1972 குட் பை டு சென்னை - WHEN DID THIS MOVIE COME ? JAISHANKAR (or) RAVICHANDRAN ? I HAVE NOT HEARD ABOUT THIS FILM SIR ! IS THIS IN LINE WITH REVOLVER RITA, JACKPOT JANGO etc., ? I searched in You Tube also...am unable to see anything..Kindly Post Link. Good Title ...Is this a suspense film (or) action?

1.4.1972 முதல் 31.3.1975 வேலூர் கல்லூரி நாட்கள் .

வேலூர் திரை அரங்கு அனுபவங்கள் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்
.....

gkrishna
5th November 2014, 10:59 AM
இசை அமைப்பாளர் எம் பீ எஸ் என்று அன்புடன் அழைகபடும் எம் பீ ஸ்ரீநிவாசன் அவர்களின் மதுரை வாழ்கை - மின் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட தொழிற் சங்க நண்பர் வங்கி ஊழியர் திரு எஸ் வீ வேணு அவர்களுக்கு நன்றி

வென்னீரும் -காபி வாசனையும் ...!!!
காஸ்யபன்
(75 வயது அன்பர், நண்பர் எழுத்தாளர் காஸ்யபன் நாகபுரியில் இருப்பவர். சிறப்பான பழைய நினைவுகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துபவர்....)

இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் (மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தவர்) அவர்களின் சகோதரரின் மகன் !

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப் போன்ற இளைஞர்களை கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் !

முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் ! 20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !

எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :

" என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில் கம்பி வேலி போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "

"இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும்!"

"அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!

"இல்லைனா ?"

"பைத்தியமே ! அது தாண்ட கட்சி வாழ்க்கை ! "

( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது )

இ ரவில் அரை பட்டினியோடுதன் படுப்போம் ! காலையில் எழவே மனசு வராது ! அழுக்குப்பாயில் புரளுவோம் ! காலையில் டீகாபி குடிக்க காசு கிடைக்காது !

"டேய் ! என்திங்கடா !"என்றுகுருசாமி நாயனா சத்தம் போடுவார் ! அவர் அடுப்பு பத்தவச்சு வென்நீர் போடும் சலனம் கேட்கும் ! அடி ச்சுப்பிடிச்சு எந்திரிச்சு முகம் கால் கழுவுவோம் ! மண்டையன் ஆசாரி சந்து வாசலில் நிற்போம் !"

"உள்ளெ எட்டி எட்டி பாப்போம் !"

"நாயனா ஒரு தட்டில் ஐந்து அலுமினிய டம்ளரோடு வருவார் !"

"கிருஷ்ணா காப்பில காபி பொடி அரைக்கான ? "

"வாசன தூள் பறக்குது நாயனா "

"அத மோப்பம் பிடிச்சுக்கிட்டே இந்த வென்னிய குடிங்கடா "

"நாங்களும் அதை குடிப்போமே "

( எம்.பி எஸ் அவர்களின் நேர்காணல் செம்மலரில் அப்போது வெளிவந்தது ! மிக விரிவாக அவர் சொன்னத எல்லாம் எழுதியிருக்கிறேன் )

gkrishna
5th November 2014, 11:13 AM
படித்ததில் பிடித்தது

காவியம் பல்சுவை மாத இதழில் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை

அனுபவங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல!-ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

வாழ்க்கையில் எது நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, நல்லதும் கெட்டதுமாய் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள் பலருக்கு நிகழ்ச்சிகளாக இருக்கிறபோது சிலருக்கு மட்டுமே அந்நிகழ்ச்சிகள் அனுபவங்களாக இருக்கின்றன. பட்டறிவு என்று அனுபவத்தைச் சொல்வதுண்டு. அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. பட்ட பிறகுதான் பலருக்கு அறிவே வருகிறது. எனவேதான் பட்ட(அ)றிவு.

“பார்த்தது கோடி
பட்டது கோடி
சேர்த்தது என்ன
சிறந்த அனுபவம்’’

என்பார் கவியரசர் கண்ணதாசன். ‘குனிந்து போகவும்’ என்ற அறிவிப்பைக் காட்டிலும் நிமிர்ந்து நடந்து நெற்றியைப் பெயர்த்துக்கொண்ட அனுபவம்தான் அடுத்த முறை நம்மை கவனமாக இருக்கச் செய்கிறது என்றால் அடிபட்ட அந்த அறிவுதான் பட்டறிவு.

“அனுபவங்கள் நமது அறிவை விசாலப்படுத்தினால் கூட அசட்டுத்தனங்களைக் குறைப்பதில்லை’’ என்று பில்லிங்ஸ் என்ற ஆங்கில அறிஞ--ன் ஒருவன் சொல்லியிருக்கிறான். இனிமேல் எவனையும் நம்பக்கூடாது என்று பட்ட பிறகு கிடைக்கிற அனுபவம் சிலநேரங்களில் நல்ல மனிதர்களையும் நம்பவிடாமற் செய்துவிடுகிறது. மோசமான முதல் அனுபவம் அடுத்தவரிடம் நாம் அசட்டுத்தனமாக நடந்து கொள்கிற அறிவைத்தான் அநேகமாக நமக்குப் புகட்டுகிறது. எனவே அனுபவம் அறிவுமாகும், அசட்டுத்தனமும் ஆகும்.

அனுபவங்களை நமக்கு அதிகமாகக் கற்றுத் தருபவை அவமானங்களும், தோல்விகளும், துரோகங்களும்தான். பரிவட்டமும், பளபளப்பான வரவேற்புகளும், வெற்றிகளும், வந்து குவிகிற புகழும் அனுபவங்கள் என்கிற கணக்கில் கருதப்படுவதில்லை. அவையெல்லாம் நம் அகங்களைக் குளிர்விக்கிற புறம் தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமே.

அதுபோல நுகர்வதைப் பலர் அனுபவம் என்று கருதிக் கொண்டிருப்பார்கள். உண்பது, உறவு கொள்வதெல்லாம் நுகர்தலே தவிர அனுபவங்கள் ஆகா. வேளாண்மைதான் அனுபவமே தவிர வெந்ததை உண்பதல்ல. காதல்தான் அனுபவமே தவிர கட்டியணைப்பதல்ல. எது நமக்குக் கிடைக்கிறது என்பது அனுபவமல்ல. எப்படி அதை, எதில் அதைப் பெறுகிறோம் என்பதே அனுபவம்

பயணம் என்பது ஒரு வினை, செயல். புறப்பட்ட இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்வது. புறப்பட்ட நேரத்திலிருந்து போய்ச்சேர்கிற வரை நாம் தூங்கிவிட்டால் பயண நோக்கம் முடிந்து விட்டதாகப் பொருள். ஆனால் விழித்திருந்து வழியில் நகர்கிற மரங்கள், வளர்ந்திருக்கிற வரலாற்றுச் சின்னங்கள், விழியில் விழுகிற காட்சிகள், அருகில் வந்தமர்கிற சக பயணியுடன் உரையாடல் இவற்றில் ஈடுபாடு காட்டினால் அனுபவம் கிடைக்கும். பார்ப்பதும் பகிர்வதும் தருகிற அனுபவத்தைப் பலர் பகலில் கூடப் பயண நேரத்தில் படுத்துறங்கிக் கழித்து விடுவார்கள். எனவே பயணிப்பதிலும் அதிகமாய்ப் பயண அனுபவம் பெறுதலே பயனுள்ளது.

படித்தல் என்பதுகூட ஓர் அனுபவம்தான். பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில், பயிற்சிக்கூடத்தில் என வளரும் செவி வழிக் கற்றல், புத்தகங்கள் படித்தல் என்னும் அனுபவத்தில் படித்தலுக்கும் அப்பாலும் பல அனுபவங்கள் சேர்ந்து கொள்ளும். பசுமை நிறைந்த நினைவுகள் அனுபவ உணர்வுகளாய் நம் நெஞ¢சங்களில் நிறைந்து கிடக்கும். பள்ளிக்கு வெளியில்கூட நமக்குக் கிடைக்கும் பாடம், ஏட்டறிவுக்கு அப்பால் நாம் ஏற்றுக்கொள்கிற பட்டங்களாகவும், பட்டறிவாகவும் இருக்கக்கூடும். நல்லதும் கெட்டதுமாக நாளும் நமக்கேற்படும் அனுபவங்களில் நல்லவை பயன்படும் என்றால் அல்லாதவை அனுபவப் பாடம் தரும்.

அனுபவங்களாகக் கருதப்படுபவை பெரும்பாலும் நாம் இழப்பவை பற்றியதுதான். அனுபவங்களை நாம் அதிகமாய்ச் சந்திப்பது தோல்விகளில்தான். தோல்விகளிலிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்கிறோம். உலகிலேயே அதிகமான மனிதப் பயன்பாட்டு சாதனங்களைக் கண்டுபிடித்திருக்கிற தாமஸ் ஆல்வா எடிசன் விபத்துகளில் விரக்தி அடைந்ததில்லை. தோல்விகளில் துவண்டு போனதில்லை. ஒருமுறை அவருடைய ஆய்வுக்கூடத்தில் தீவிபத்து ஏற்படுகிறது. அறை முழுதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தார். “என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தவிர்ப்பதற்கான அனுபவத்தை இந்த விபத்து எனக்குக் கற்றுத் தந்துவிட்டது. அடுத்தமுறை இந்தத் தவறுகளைத் தவிர்ப்பேன்’’ என்றார் அவர்.

ராபர்ட் ப்ரூஸ் என்கிற அரசன் தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்திக்கிறான். ஒவ்வொரு முறையும் மேலேற முயற்சித்து விழுந்து விழுந்து எழும் சிலந்தி அவனுக்கு ஓர் அனுபவத்தைப் புகட்டுகிறது. வெற்றி பெறுகிறான். கணித மேதை இராமானுஜம் கணக்கு பாடத்தில் தோற்ற அனுபவத்திற்குச் சொந்தக்காரர். அடுத்த வெற்றியை அவருக்குக் கணிதம் மட்டும் கற்றுத்தரவில்லை, தோல்விகளும் கற்றுத் தந்தன.

விபத்துகள் நிகழ்கிறபோது விலை மதிப்புள்ள செல்வங்கள் பாழாகலாம். ஆனால் அதற்கான காரணங்களும், தவிர்த்தல்களும் அடுத்தடுத்த இழப்புகளைத் தடுக்க உதவுகின்றன. விபத்து எனும் அனுபவம் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே விளங்கப் பட்டிருந்தால் அந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுமேயன்றி தவிர்க்கப்படுவதில்லை. சுனாமி, ஜப்பானியர்களுக்கு நிரம்பவே கற்றுத்தந்துள்ளது. ஹிரோஷிமா- நாகசாகி அனுபவங்கள் இன்றும் அவர்களை கவனமாக இருக்கச் செய்திருக் கிறது. கடுமையாக உழைக்கச் செய்திருக்கிறது. அன்றாடம் நமக்கேற்படும் விபத்துகள் அனுபவங் களாகி அடுத்தடுத்த விபத்துகளைத் தடுக்கும் வழிவகைகளை யோசிக்கச் செய்கின்றன.

அவமானங்கள்கூட சிலருக்கு அன்றாட வாழ்வில் ஏற்படுகிற நிகழ்ச்சியாக இருக்கும். அவமானப்படுவதுகூட ஒருவகையான அனுபவம் தான். “அவமானங்களைத் தாங்கிக் கொள்வது ஆய கலைகள் அறுபத்து நான்கோடு அறுபத்தைந்தாவது கலை’’ என்பார் --ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்கள். உலகில் அவமானங்களால் நொடிந்து போகிறவர்களும், ஒடிந்து விழுகிறவர்களும் அநேகர். ஆனால் விழித்தெழுகிறவர்களும் வாழ்ந்து காட்டுகிறவர்களும் இச்சமூகத்தில் இல்லாமலில்லை.

தேவகுமாரனாகத் தொழப்படுகிற ஏசுபிரானுக்கு நேராத அவமானமா? இரண்டு திருடர்களோடு அவரைச் சிலுவையில் அறைந்ததோடு “நீ தேவகுமாரனல்லவா. கிரீடம் வேண்டுமா’’ என்று முள்கிரீடத்தை அணிவித்து அவமானப் படுத்தினார்கள். அது ஒரு நிகழ்ச்சியாக மட்டும் கருதப்படவில்லை. உயிர்த்தெழுந்த அதிசயத்தோடு உன்னதமான தெய்வீக அனுபவம் ஆனது. ஆப்பிரிக்காவில் அண்ணல் காந்திக்கு நேராத அனுபவமா! முதல் வகுப்புப் பயணச் சீட்டுடன் பயணித்த அவரை நடுவழியில் இறக்கிவிட்டு அவமானப்படுத்திய வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியது அவரை உலகப் போராளி களுக்கெல்லாம் உன்னதமான வழிகாட்டியாகவும் கையேந்திய ஆயுதங்களாக அஹிம்சையையும், சத்யாகிரஹத்தையும் உலகத்திற்கு உணர்த்திற்று.

நம்பிக்கை துரோகங்கள்கூட அனுபவங்கள்தான். அவற்றை வெறும் நிகழ்ச்சிகளாகக் கொள்ளாத வர்கள் எழுந்து விடுகிறார்கள். ஏனையோர் விழுந்தே கிடக்கிறார்கள். எதிரிகள் நமக்குக் கற்றுத் தருகிற அனுபவங்களை விட நம்பிக்கை துரோகிகளே அதிகமாகக் கற்றுத் தருகிறார்கள். அறிவும், அனுபவமும் வெவ்வேறானவை. அனுபவம்

அறிவைப் புகட்டலாம். நிச்சயமாக அறிவு அனுபவத்தை தராது. அனுபவம் நமக்கு அவசியமானது. அதற்காக எல்லாவற்றையும் அனுபவங்களினால் பெற வேண்டுமென்பதுமில்லை. ஆம், எல்லாவற்றிற்கும் அனுபவங்கள் அவசியமென்பது மில்லை. ஒருவர் நன்றாகப் பணியாற்றுவார் என்பதற்குப் பத்தாண்டு அனுபவம் உதவலாம். ஒருத்தி நன்றாகக் குடும்பம் நடத்துவாள் என்பதற்கு முன்னனுபவம் இல்லாதிருப்பதே முக்கியமானது.

எல்லாமும் அனுபவங்கள்தான். அவற்றுள் நல்லவை மட்டுமே நமக்கு வேண்டியவை. அல்லாதவை அகற்றப்பட வேண்டியவை. மகராஜபுரத்தின் இசையில் மயங்கிய அனுபவத்தை எல்லோரிடமும் சொல்லி மகிழலாம். ஆனால் சரோஜாவுடன் (கற்பனைப் பெயர்) செலவழித்த இரவை யாரிடம் சொல்ல முடியும்? வெளிநாடு போய்வந்த விவரத்தை வரிவரியாக எழுதலாம். விஸ்கி அடித்த விவரத்தை விவரிக்கக்கூடுமா? மாமனார் வீட்டுக்குப் போய் வருவது மருமகனுக்குப் பெருமை. மத்திய சிறைக்குப் போய் வந்ததில் என்ன பெருமை இருக்க முடியும்?

ஓர் அனுபவத்தில் நமக்குப் பெருமை இல்லையென்றால் அந்த இழிவான அனுபவத்தைச் சொல்லத் தயங்குவது போல அந்த அனுபவத்தைப் பெறக் கூச்சப்பட வேண்டும். தவிர்க்கவும் வேண்டும். எது நமக்குப் பயன் தருகிற அனுபவமோ, எது நமக்குப் பெருமை தருமோ, அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். இதுவே அனுபவங்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். எனவேதான் அனுபவசாலிகள் ‘எல்லாம் அறிந்தவர்கள்’ என்கிற அந்தஸ்தை சமூகத்தில் பெற்றிருக்கிறார்கள். நம்மைப் பக்குவப்படுத்துகிறவை அனுபவங்களாகும். நல்லது கெட்டதை நமக்கு அறிவிக்கிறவையும் அவைதான். எதையும் ஏற்கவும், தவிர்க்கவும் அனுபவங்களே நமக்குக் கற்றுத்தருகின்றன. அனுபவத்தை நாம் ஆசான் எனும்போது கவியரசர் கண்ணதாசன் மட்டும் அதை ஆண்டவன் என்கிறார்.

“அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்’’

என்பார் அவர். அனுபவம் குறித்த புரிதலை அற்புதமாக வெளிப்படுத்திய கவிஞ-ர் அவர். எது அனுபவம் என்கிற தெளிவை அவரது கவிதையை முழுமையாகப் படிப்போர் புரிந்துகொள்வர்.

வாழ்க்கை அனுபவம் சார்ந்தது. அனுபவம் வாழ்க்கை சார்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும் இரண்டுக்கும் இடையில் சன்னமான வேறுபாடு உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவே ஓர் அனுபவம் வேண்டும். அறிவும் வேண்டும். அனுபவமும் வாழ்க்கையும் நம் ஆசான்கள். அனுபவம் நமக்குத் தேர்வை நடத்தி விட்டுப் பாடம் தருகிறது. வாழ்க்கையோ பாடம் நடத்தி விட்டு தேர்வை வைக்கிறது.
https://ci4.googleusercontent.com/proxy/kYxelZpn-XvuL5U6qtZjtmhcGQ8WMoS1v_JB7CTOElMUkwFKBKbIrVIiwFW dwjImPiFOTDSuzZAJcbs0rvyYxlCMZZx4MfbYl1i7gja_DA=s0-d-e1-ft#http://www.kaviyam.in/images/stories/2014/oct/news/07.png

Gopal.s
5th November 2014, 12:29 PM
சிவாஜி ரசிகர்கள் பெருந்தன்மையாக கண்டு கொள்ளாமல் விடுவதால் அவிழ்த்து விடுகிறார் மூட்டைகளை.



நீரும் நெருப்பும் படத்துக்கு கூட்டமாம். பாபுவுக்கு இல்லையாம். விட்டால் 15 நாள் ஓடிய என் கடமை கூட கூட்டத்தில் சேர்ந்து விடும் போல.



4 theatre இல் நூறு நாள் கண்ட கர்ணன் தோல்வி. 3 theatre மட்டும் நூறு நாள் கண்ட ஆயிரத்தில் ஒருவன் வெற்றி. கோவையில் 45 நாள் நெருங்காத,ஒரே theatre இல் ஓடிய படகோட்டி மெகா வெற்றி என்று சொல்லும் போக்கு கீற்று கொட்டகையிலும் விதைக்க படுவது கண்டிக்க தக்கது. சொன்னால் உண்மையை பாரபட்சமில்லாமல் சேருங்கள். மாற்று முகாம் நாலு படங்களை குறிப்பிட்டு,எங்களின் ஒரு படத்தை உளு உளாங்காட்டிக்கு சொல்லும் தந்திர நடுநிலைமை வேண்டாமே!!!

Richardsof
5th November 2014, 12:40 PM
இங்கேயுமா கோபால்

சரி . நான் சென்னையில் இருந்த நேரத்தில் நேரிடையாக பார்த்த கூட்டத்தை பற்றி எழுதினேன் .
நீரும் நெருப்பும் - முதல் நாள் மக்கள் வெள்ளத்தை பார்த்தது பற்றிதான் எழுதினேன் . நான் பார்க்காதஒன்றை குறிப்பிடவில்லை . அதே நேரத்தில் நான் பார்த்த எங்க மாமா - சவாலே சமாளி பற்றியகுறிப்பை கவனிக்க வில்லையா ? முடிந்தால் உங்கள ''கதைகளை '' அவிழ்த்து விடவும் .

காதும் உண்டு .பூவும் உண்டு .நீங்கள்தானே எங்களுக்கு வழி காட்டி .

gkrishna
17th November 2014, 05:18 PM
ஸ்டார் இன்றே கடைசி!

முக்கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர், பிப்ரவரி 29-ம் தேதியோடு மூடப்பட உள்ளது என்பது திரைப்பட ரசிகர்களுக்கு வருத்தம் தரும் செய்தி. 52 வருடங்களாக இங்கு பணிபுரியும் ராஜசேகரன், ஸ்டார் தியேட்டர் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

http://www.vikatan.com/av/2012/03/ztunwr/images/ch110b.jpg

''1952-ம் ஆண்டு டிக்கெட் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து, புக்கிங் கிளார்க் ஆகி, இப்ப மேனேஜரா இருக்கேன். மௌனப்படங்கள் வந்த காலத்தில் ஆரம்பிச்ச தியேட்டர் இது. அப்ப இந்த தியேட்டர் பேரு 'சினிமா பாப்புலர்’. பேசும் படங்கள் வெளிவந்தப்பதான் 'ஸ்டார் டாக்கீஸ்’னு பேரை மாத்தினாங்க. ஆரம்பத்துல தமிழ்ப் படங்களைவிட இந்திப் படங்கள்தான் இங்க அதிகமா ரிலீஸ் ஆச்சு. ஸ்ரீபிரகாசா, ஜெயசாமராஜ உடையார், பிஷ்ணுராம் மேதி, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் தமிழக கவர்னர்கள் மற்றும் அறிஞர் அண்ணா, என்.வி.நடராஜன், ஜெமினிகணேசன்னு இங்க படம் பார்த்த பிரபலங்களோட லிஸ்ட் ரொம்பவே பெருசு. ஜெயலலிதா மேடம் குழந்தையா இருக்கும்போது அவங்க அம்மா சந்தியாகூட இங்க படம் பார்க்க வந்திருக்காங்க. வி.என்.ஜானகி, விஜயகுமாரி, எம்.என்.ராஜம் இந்த மூணு பேரும் அடிக்கடி இங்க படம் பார்ப்பாங்க.

தர்மேந்திரா நடிச்ச 'யாதோன் கி பாரத்’ படம் தொடர்ந்து 400 நாட்கள் ஓடுச்சு. இதைக் கேள்விப் பட்ட தர்மேந்திரா, இங்க வந்து படம் பார்த்துட்டு பாராட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துட்டுத்தான் எம்.ஜி.ஆரைவெச்சு 'நாளை நமதே’ படம் எடுத்தாங்க. அதுவும் இங்க 100 நாளைக்கு மேல ஓடுச்சு. திலீப், வைஜெயந்தி மாலா பாலி நடிச்ச 'மதுமதி’யும் 400 நாள் ஓடுச்சு. 'சந்திரலேகா’, 'பெற்றால்தான் பிள்ளையா’, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’னு இங்க ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்த படங்கள் ஏராளம்.

தியேட்டர் ஆரம்பிச்சப்ப 921 சீட் இருந்துச்சு. அப்புறமா 818 சீட்டா மாத்தி அமைச்சாங்க. அந்தக் காலத்திலேயே ஏ.சி. தியேட்டர்ங்கிற பெருமை ஸ்டாருக்கு உண்டு. கட்டுப்படி ஆகாததால ஏ.சி-யை எடுத்துட்டோம்.அப்ப டிக்கெட் எல்லாம் அணா கணக்குத்தான். எனக்குத் தெரிஞ்சு நாலே முக்கால் அணா, 10 அணா, 15 அணாவுக்கு டிக்கெட் வித்து இருக் கோம். இப்ப டிக்கெட் ஏழு ரூபா, 25 ரூபா, 35 ரூபா.

17 வருஷத்துக்கு முன்ன வரை புதுப்படங்கள்தான் ரிலீஸ் செஞ்சோம். 1995-ல் டி.டி.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம் ஆனப்ப, பணம் இல்லாததால இங்க அந்த சிஸ்டத்தைக் கொண்டுவர முடியலை. அதுல இருந்து ஏற்கெனவே ரிலீஸ் ஆன படங்களையே எடுத்து ஓட்டுறோம். இங்க படம் பார்க்க வர்றவங்க எல்லாருமே அடித்தட்டு மக்கள்தான். சனி, ஞாயிறுனா கூட்டம் கொஞ்சம் அதிகமா வரும். மத்தபடி கலெக்ஷன் கம்மிதான்'' என்றவரைத் தொடர்கிறார் டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் டி.ஏ.ராஜகோபால்.

'எம்.ஜி.ஆர்., ரஜினி, சூர்யா படங்களை எப்பப் போட்டாலும் கூட்டம் வரும். அதனால அவங்க படங்களை அடிக்கடி ஓட்டுவோம். 'பெற்றால்தான் பிள்ளையா’ படம் ஓடிக்கிட்டு இருந்த நேரம், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் நடந்துச்சு. அந்த விஷயம் இங்க படம் பார்த்துட்டு இருந்தவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு நாற்காலிகளை உடைச்சு, திரையைக் கிழிச்சு டாக்கீஸையே நாசம் பண்ணினாங்க. இருந்தாலும் ரெண்டு நாள்லயே எல்லாத்தையும் சரிபண்ணி மறுபடியும் படத்தை ஓட்டினோம். இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து இருக்கு. சமீபத்தில்கூட 'மன்னன்’ படத்தில் விஜயசாந்தி ரஜினியை அடிக்கிற ஸீன்ல ரசிகர் ஒருத்தர் விஜயசாந்தியை செருப்பால் அடிக்கிறதா நெனைச்சு திரையையே கிழிச்சுட்டாரு. ஆனால், இதுவரை நாங்க ஒருமுறைகூட போலீஸ்கிட்டப் போனது இல்ல. ஏன்னா, என்னதான் தகராறுகள் நடந்தாலும் ரசிகர்கள்தான் எங்க பலம். ஆனா லும் கலெக்ஷன் கம்மியா இருக்கி றதாலதான் டாக்கீஸை மூடறோம்.

தேவானந்த் நடிச்ச 'டாக்ஸி டிரைவர்’ படம் ஓடினப்ப, என் அப்பா டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப அவர் சென்னை டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு காட்சியை இலவசமா ஓட்டினாரு. இப்ப கடைசி படமான பாட்ஷாவையும் சென்னை ஆட்டோ டிரைவர் களுக்கு இலவசமா ஓட்டி னோம்.

நான் உள்பட இங்க வேலைபார்க்கிற பெரும்பாலானவங்க ரெண்டு மூணு தலைமுறையா ஸ்டார் டாக்கீஸ்லதான் வேலை செய்யறோம். ஒரே இடத்துல
இத்தனை வருஷமா இருந்துட்டு இப்ப பிரியப்போறோம்னு நினைச்சாலே வருத்தமாத்தான் இருக்கு'' என, அவர் சொல்லும்போதே அங்கு உள்ள ஊழியர்கள் தங்களை அறியாமல் அழுதனர்

http://www.vikatan.com/av/2012/03/ztunwr/images/ch110a.jpg

gkrishna
17th November 2014, 05:27 PM
'இந்த 15 பேரின் உழைப்புதான் எங்க முதலீடு!'' - தன் அருகே பசை வாளிகளுடன் நின்று இருந்த இளைஞர்களைக் கைகொள்ளாமல் கட்டி அணைத்துச் சிரிக்கிறார் நந்தகுமார். சென்னையில் கலை, இலக்கியம், அரசியல், நாளிதழ், வார இதழ் எனப் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் சுவரொட்டிகளை ஒட்ட நாடும் ஒரே நபர்!

http://www.vikatan.com/av/2012/02/ywqmdd/images/c114c.JPG

'இன்னைக்கு சென்னையில போஸ்டர்னா அது நாங்க ஒட்டினதாத்தான் இருக்கும். நாங்க மட்டுமேதான் ஒட்டுறோம்னே எழுதிக்கங்க. அதுக்குக் காரணம், எங்க அப்பா ஆறுமுகம். அவர் 1951-ல் இந்த போஸ்டர் தொழில்ல இறங்கினார். அப்ப இந்தத் தொழில்ல இங்க நிறையப் பேர் இருந்தாங்க. 'நான் தாம்பரம்... நீ ராயப்பேட்டை’னு ஏரியா வாரியா அவங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டுத் தொழில் பண்ணினாங்க. அப்ப எங்க அப்பா வசம் மவுன்ட் ரோடு ஏரியா இருந்தது. காலப்போக்கில் மத்தவங்க இந்தத் தொழில்ல இருந்து வெவ்வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. இப்ப சென்னையில நாங்க மட்டும்தான் இந்தத் தொழில்ல இருக்கோம். எங்க அப்பாவுக்குப் பிறகு நான் தனியா வந்து ஒட்டின முதல் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி’ பட ஆடியோ ரிலீஸ்.
அரசியல் பொதுக்கூட்டம், சினிமா பூஜை, ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ், புது டி.வி. நிகழ்ச்சினு விதம்விதமான போஸ்டர்கள் தினமும் சாயங்காலம் 6 மணிக்கு எங்க கைக்கு வரும். நைட் 9 மணிக்கு மேல்தான் எங்க வேலையே தொடங்கும். விடியவிடிய ஓட்டினா பளபளனு பொழுது விடியறப்ப சென்னை முழுக்கவும் போஸ்டர் ஒட்டி முடிச்சிருப்போம். என் சர்வீஸ்ல ஒரு முறைகூட 'இந்தப் போஸ்டரை லேட்டா ஒட்டிட்டீங்க’னு எந்தப் புகாரும் வந்தது இல்லை. சமயங்கள்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு சம்பந்தப்பட்ட பட டீமும் எங்களோட வரும். தாணு, எஸ்.ஜே.சூர்யானு பலர் தங்களோட பட ரிலீஸ் சமயத்துல கூடவே வந்து உற்சாகப்படுத்துவாங்க. அவங்களும் பசை தடவி எங்களோட சேர்ந்து போஸ்டர் ஒட்டுறதெல்லாம்கூட நடக்கும். விஜய் நடிச்ச 'குருவி’ பட 100-வது நாள் விழாவில் 'பட வெற்றிக்கு இவங்களும் ஒரு காரணம்’னு மேடையில் கூப்பிட்டு ஷீல்டு கொடுத்தார் தயாரிப்பாளர் உதயநிதி. இது எங்க உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்.

சமயங்கள்ல, 'என்ன நந்து சார், ராயப்பேட்டை பக்கம் நம்ம பட போஸ்டரை நேத்து பாத்தேன். அதுக்குள்ள நம்ம போஸ்டர் மேல வேறொரு போஸ்டரை ஒட்டிட்டீங்களே?’னு சில சினிமாப் பிரபலங்கள் குறைபட்டுக்கொள்வதும் நடக்கும். போஸ்டர் எக்கச்சக்கமா குவியும்போது இந்த மாதிரி நடப்பதும் உண்டு. அதேபோல், 'எங்க போஸ்டர்மேல உங்க பசங்க போஸ்டர் ஒட்டிட்டாங்க’னு அப்பப்ப அரசியல்வாதிகள் சண்டைக்கு வருவாங்க. பேசி சமாதானம் செய்வோம். போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருக்கும். இதெல்லாம் இந்தத் தொழில்ல சகஜம் சார்'' என்று சிரிப்பவர், ''இவங்க எங்க மாமா. அப்பாகூட ஆரம்பகாலத்துல இருந்து இந்தத் தொழில்ல இருந்தவங்க'' என்று தன் தாய் மாமன் ராஜசேகரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

http://www.vikatan.com/av/2012/02/ywqmdd/images/c114a.jpg

'எனக்கு இப்ப 80 வயசு. 50 வருஷத்துக்கும் மேல் இந்தத் தொழில்ல இருந்தேன். இந்த வயசுலயும் நான் உங்களைப்போல யூத்தா இருக்குறதுக்கு, இந்தப் போஸ்டர் வேலையும் ஒரு காரணம். இப்ப எல்லாம் வண்டியில போஸ்டரை வெச்சுக் கட்டிக்கிட்டுப் போறாங்க. அப்ப எல்லாம் சைக்கிள்தான். ராயப்பேட்டையில் கிளம்பினா பெரியமேடு, தாம்பரம்னு சைக்கிள் சவாரிதான். இப்போ நினைச்சுப் பார்த்தாச் சிரிப்பும், அழுகையும் வர்ற அளவுக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். ஒருதடவை பிரதமர் நேரு, தி.மு.க-வை விமர்சனம் பண்ணிப் பேசி இருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இங்க உள்ள காங்கிரஸ்காரங்க நேருவை வரவேற்று போஸ்டர் அடிச்சுக் கொடுத்து ஒட்டச் சொன்னாங்க. தி.மு.க. ஆட்களோ, நேருவை எதிர்த்துக் கண்டன போஸ்டர் அடிச்சுக் கொண்டுவந்து ஒட்டச் சொன்னாங்க; தர்மசங்கடமாப் போச்சு. வேற வழி இல்லாம ரெண்டு போஸ்டர்களையும் வளைச்சு வளைச்சு ஒட்டினோம். போலீஸ் எங்களைத் துரத்தினதும் சந்துபொந்துனு ஓடி ஒளிஞ்சதையும் நினைச்சா இப்பவும் சிரிப்புதான் வருது. எந்தத் தொழிலையும் ரசிச்சு செஞ்சா கண்டிப்பா ஜெயிக்கலாம்கிறதுக்கு நாங்கதான் தம்பி உதாரணம்!'' என்ற ராஜசேகரின் முகத்தில் உழைப்பின் பெருமிதம்.

http://www.vikatan.com/av/2012/02/ywqmdd/images/c114b.jpg

http://www.vikatan.com/av/2012/02/ywqmdd/images/c114.jpg

Scottkaz
24th November 2014, 10:29 AM
http://i60.tinypic.com/fnxnj6.jpg
தற்போது ஓடிக்கொண்டு உள்ளது

Scottkaz
24th November 2014, 10:30 AM
http://i57.tinypic.com/55kmdh.jpg

gkrishna
26th November 2014, 11:53 AM
http://4.bp.blogspot.com/-kHVnFUkdj84/T0xu9L_DfXI/AAAAAAAAVmY/buhgw3Rr4sQ/s1600/1943+MKT-Gruhapravesam.JPG

gkrishna
26th November 2014, 11:54 AM
http://2.bp.blogspot.com/-W1vPauoQ4uA/T0x5VzqsLAI/AAAAAAAAVmg/EozB6O6yzVU/s1600/1944+MKT-2+days+before+arrest.JPG

gkrishna
26th November 2014, 11:55 AM
http://2.bp.blogspot.com/-eyAOizfwM2A/T0x7QSpC_oI/AAAAAAAAVmw/jNsJYArnxYA/s1600/1945+Lakshmikanthan.JPG

இவர் கொலைசெய்யப்பட்டது நிஜம்.
எம்.கே.டி, என்.எஸ்.கே இன்னும் சிலரும் சிறைக்குச் சென்றதும் நிஜம்.
ஆனால் கொலையாளி யார் என்பது இன்றைக்காவது தெரியுமா?

vasudevan31355
17th April 2016, 09:30 AM
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள்.

http://4.bp.blogspot.com/-I00wvE8YwOM/VF2UXZJa1LI/AAAAAAAASrI/VpQ5iF3Ncu8/s640/Andham-Kosam-Pandem_09-12-1971_03.jpg

'மன்மத லீலை' கமலின் காமக் குதிரை போல் 70-களின் பக்கம் திரும்பி மனம் ரிவர்ஸ் அடிக்கிறது. என்ன பொன்னான தருணங்கள்! குடும்ப பாரமறியா குதூகல வாழ்க்கை. நல்லது கெட்டது அவ்வளவாகத் தெரியாத வயது. 'சினிமாவுக்குக் கூட்டிப் போ' என்றால் அப்போது அவன்தான் கெட்ட பையன். கோலி, கிட்டி விளையாண்டு, சோர்வுக்கு கோலி சோடா உடைத்து, காலி பண்ணின ஜாலி காலமது.

விஷயத்திற்கு வருகிறேன். காலைக் காட்சி என்று தனியே அப்போது போடுவார்கள். நான் எட்டாவது படிக்கும் போதே 'சனி, ஞாயிறு காலை பத்து மணி காட்சிக்கு மட்டும்' என்று நீலக்கலர் பவுடரில் பிரஷ்ஷால் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் ஒரு வால் போன்ற நீள்பேப்பரில் போஸ்டரின் மேல் எழுதி கிராஸாக ஒட்டப்பட்டிருக்கும். தனியாகவே அது நன்றாகத் தெரியும்.

காலை பத்துமணிக் காட்சி என்றாலே தெலுங்கு டப்பிங் படங்கள்தாம் கோலோச்சும். காந்தாராவ், என்.டி.ஆர் இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் வாராவாரம் எங்கள் கடலூர் கமரில் 10.00 மணிக் காட்சிக்கு திரையிடப்படும். படம் ஒரு வாரத்திற்கு முன் மெயின் பிக்சரின் இடைவேளையின் போது டிரைலராக காட்டப்படும்.

விட்டலாச்சார்யாவின்

'மன்னனைக் காத்த மாவீரன்'

என்று பழுப்புக் கலர் ப்ரின்ட்டில் டிரைலர் போடுவார்கள். இடைவேளையில் வெளியே 10 பைசா டீயை அரை ஜான் அளவு கிளாசில் முழுக்கப் பார்த்து 'நிறைய கொடுத்திருக்கான் டோய்' என்று மனசில் சந்தோஷப்பட்டு குடித்தால் ஐந்தாறு முனரில் கிளாஸ் காலியாயிடும். (ஆமா! முனருக்கு பெரிய ' று' வா சின்ன 'ரு' வா?... பேச்சு வழக்கு வார்த்தைதானே அது?) டீ குடித்து முடிப்பதற்குள் 'திடு'மென பத்து மணிக்காட்சி படம் டிரைலராக ஓட, 'டங்.. டங்' என்ற கத்திச் சத்தம் கேட்க, வேகவேகமாக இருட்டில் ஓடி, அனைவர் கால்களையும் மிதித்து, திட்டு வாங்கி இருக்கையை தேடித் பிடித்து அமர்ந்து, முன்னாடி இருக்கையில் அமர எத்தனிப்பவர்களை 'மறைக்கிறான் பார்'' என முறைத்து, மனதுக்குள் வசை பாடி, என்.டி. ஆரைக் கண்டவுடன் எக்காளக் குதூகலமிட்டது அந்தக் காலம்.

https://cdn.veblr.com/download/201303111362990104282705786.jpg

ஒரு நான்கைந்து நட்சத்திர ஷேப் வடிவங்கள் சிறிதும், பெரியதுமாய் லாங் ஷாட்டிலும், ஷார்ட் ஷார்ட்டிலும் தூர தூர போய், கிட்ட கிட்ட வந்து ஒளிர, அதன் நடுவே 'மாயா ஜாலங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி வரும். பார்க்கும் போது மனம் பரவசமடையும். பெரும்பாலும் ராஜநாளா தான் ஹீரோவிடம் கத்திச் சண்டை செய்து 'லெக்கின்ஸ்' கிழிந்து நிற்பார் பரிதாபமாக. அப்படியே அடுத்த காட்சியாக ராஜஸ்ரீயோ இல்லை விஜயலலிதாவோ ஸ்டுடியோ செட்டில் வெட்டப்பட்ட சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...என் மதன ராஜா' என்று டிராக் பாடுபவர்களின் பின்னணயில் பாடுவார்கள். அப்போது அரங்கு திடீரென்று நிசப்தமாகி விடும். உச்சக்கட்ட மாணவப் பருவமாதலால் நம்மையறியாமல் இருக்கையில் நாம் உயருவோம்.:) பின்னால் இருப்பவர் நம் தலையில் தட்டி 'மறைக்குது....குனிந்து உட்கார்' என்று மிரட்டுவார்.

திடீரென்று குளியல் காட்சி மறைந்து அகோர உருவம் ஒன்று ராட்சஸனாக வந்து அவதாரம் எடுத்த ஆண்டவன் போல வந்து நின்று தடித்த குரலில் வசனம் பேசும். அப்படியே நாயகனை 'அலேக்'காகத் தூக்கி வீசும் போது நம் நெஞ்சமெல்லாம் நடுங்கும்.

'பயங்கரக் காட்சிகள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் மின்னியவாறு வந்து போகும்.

உடனே ஒரு டூயட்.

https://cdn.veblr.com/download/20130311136299018628969535.jpg

'ஏ... பெண்ணே! அழகுப் பெண்ணே!' என்று ஆலமர விழுதைப் பிடித்து காந்தாராவ் தொங்கி வருவார். சம்பந்தமே இல்லாமல் படுகவர்ச்சியாக காபரே உடை அணிந்து ஜோதிலஷ்மி இடுப்பை கிரைண்டராக மாற்றுவார். கொட்டாயில் சும்மா விசில் பிச்சி உதறும்.

'கவர்ச்சி நடனங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் ஓடியாரும்.

அடுத்து காட்சி மாறி கண் தெரியாத நாயகனின் அம்மா சென்டிமெண்ட் வசனம் பேசுவார்கள். வசனம் பேசி முடித்தவுடன்தான் நம் காதுகளில் அது கேட்கும். 'ச்சூடம்மா' என்பது வசனகர்த்தாவின் சாதுர்யத்தால் 'பாரம்மா' என்று கேட்கும். 'பாடல்கள் புரட்சிதாசன்' என்று டைட்டில் வரும்.

ஒன்றா.... இரண்டா.. இப்படி மாயாஜாலப்படங்கள் வரிசயாக. தியேட்டர் கண்டிப்பாக நிரம்பி விடும். பெண்கள் யாருமே வரமாட்டார்கள். போஸ்டரில் கூட்டத்தை இழுக்க 'தெலுங்கு எம்.ஜி.ஆர்' காந்தாராவ் நடித்தது' என்று பட்டமெல்லாம் புத்திசாலித்தனமாக கொடுத்திருப்பார்கள்.

மன்னனைக் காத்த மாவீரன்,

வீரவாள்,

மாயத்தீவு ரகசியம்,

பட்டி விக்கிரமாத்தன்,

காவேரி மன்னன்,

மாய மோதிரம்,

https://i.ytimg.com/vi/m1YxtQVXX7E/hqdefault.jpg

இந்த மாதிரி ராஜ மந்திரக் கதைகள் நிறைந்த படமே ஆரமபத்தில் காலைக் காட்சிப் படங்களாக வெற்றிநடை போட்டு ஆந்திரக் கதாநாயகர்களை ஈஸியாக தமிழ் பாமர ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி நெஞ்சில் பதிய வைத்தன.

இதில் இன்றுவரை அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் காந்தாராவ், ராமாராவ் அணியும் அன்றைய உடலின் நிறத்தை அப்படியே காட்டும் 'லெக்கின்ஸ்' உடைகள்தான். இதுபற்றி எங்களிடம் விவாதமே நடக்கும். அது 'எலாஸ்டிக் டிரஸ்' என்று ஒருவன் சாதிப்பான். 'போடா முண்டம்... பின்னால 'ஜிப்' இருக்கும்டா... நம் கண்ணுக்கு அது தெரியாம மறைச்சி காண்பிப்பாங்க'.... என்று இன்னொருவன் புத்திசாலியாவான்.

எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!

பின் ஒரு கட்டத்தில் ரசிப்பு முன்னேற்றத்தின் காரணமாக நவீன சமூக படங்கள் மாயாஜாலப்படங்களை தள்ளி ஓரம் கட்டிவிட்டு அவைகளின் இடத்தைப் பிடித்தன.

http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/The_James_Bond_of_Telugu_Cinema_2013_07_17_09_43_2 2.jpg

இப்போது கிருஷ்ணாதான் 74,75 களின் காலைக்காட்சி ஹீரோ. போஸ்டரில் துப்பாக்கி பிடித்தபடி கிருஷ்ணா வீரமாக போஸ் கொடுக்க, கீழே விஜயலலிதா டைட் பேன்ட் போட்டு, மேலே ஷர்ட் போட்டு அதை முடிச்சியும் போட்டு இடுப்பில் கைவைத்தபடி டான்ஸ் போஸ் கொடுப்பார். அப்புறம் கிருஷ்ணா வில்லனுடன் மோதுவது போல ஒரு காட்சியும் அதில் இருக்கும். கத்திச் சண்டைகளையும், மாய வேஷங்களையும் பார்த்து சலித்து, புளித்துப் போன போது புது தீபாவளி துப்பாக்கி 'டுமீல்...டுமீல்' சப்தம் காதுகளுக்குள் இனிமையாக விழுந்தது.

நாகேஸ்வரராவ் 'சோகராவ்' என்பதால் காலைக் காட்சிகளில் அவருக்கு இடம் இல்லை.

https://i.ytimg.com/vi/K-kd2QhVqVk/hqdefault.jpg

இந்தப் படங்களில் பழைய வில்லன்கள் இருக்க மாட்டார்கள். சத்யநாராயணா, பிரபாகர் ரெட்டி என்று வில்லன்கள் 'கௌபாய்' ரேஞ்சில் துப்பாக்கி பிடித்து ஓரிரு பெண்களை கற்பழித்து, 'கேம்ப்ளிங்' விடுதி நடத்தி, அதில் காபரே ஆடவிட்டு, பல கொலைகள் செய்து, நம்பிக்கை துரோகம் செய்து காட்டிக் கொடுத்த தன் கூட்டத்து ஆளை முதலை வாயில் தள்ளி, மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான் என எச்சரித்து எக்காளமும், கும்மாளமும் இடுவார்கள்.

வெட்டவெளி சென்னை மகாபலிபுரம் தார் ரோட்டில், சவுக்குத் தோப்புகள் சரமாரியாய் சைடில் வளர்ந்து கிடக்க, ஒப்பன் ஜீப்பில் வில்லன் ஜீப்பை துரத்துவார் ஹீரோ. ஜீப்களின் டயர் திரும்பும்போது 'குளோஸ்-அப்' ஷாட் அதம் பறக்கும். வெத்து ரோடு 'விர்'ரென்று பறக்கும் வளைவுகளில் வந்த ஷாட்களே திரும்பத் திரும்ப வரும். அதைக் கண்டு பிடித்து பெயர் வாங்கி விடுவேனாக்கும். ஹ.. ஹ. ஹீரோ' கிருஷ்ணா வந்து (இவர் தெலுங்கு 'ஜேம்ஸ் பாண்ட்') வில்லன்களுடன் படம் முழுக்க பத்து சண்டைகள் போட்டு, இறுதியில் போலிசிடம் பிடித்துக் கொடுத்து படத்தின் முதல் டூயட் பாடலை இறுதியில் மீண்டும் நாயகியுடன் சேர்ந்து நான்கு வரி பாடி நம்மை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.

இப்படி

மோசக்காரனுக்கு மோசக்காரன்,

கில்லாடிக்குக் கில்லாடி;

துடிக்கும் துப்பாக்கி,

கத்திக்குத்து கந்தன்

சென்னையில் சி.ஐ.டி 77

(இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கும், வில்லனுக்கும் கைபலப் பரிசை போட்டி ஒன்று நடக்கும் சூதாட்ட விடுதியில். இருவரும் அவரவர்கள் கைகளை டேபிள் மீது வைத்து கோர்த்து வலது பக்கமும் இடதுபக்கமும் ஒருவரை ஒருவர் சாய்த்து மிஞ்சப் பார்ப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் வலது பக்கம், இடது பக்கம் இரு பக்கங்களிலும் பெரிய கொடுக்கு கொண்ட தேள்கள் சில நகர்ந்து கொண்டிருக்கும். வில்லன் கிருஷ்ணாவின் கைகளை பிடித்து சாய்த்து அப்படியே ஜெயிப்பது போலக் கொண்டு போகும் போது தேள்கள் கொடூரமாய் கிருஷ்ணாவின் கையைக் கொட்ட எக்கும். பார்க்கும் நாங்கள் படுடென்ஷனாக நகம் கடிப்போம். பின் பதிலுக்கு கிருஷ்ணா வில்லனின் கைகளை சாய்த்து இறுதியில் தேள் வில்லன் கைகளைக் கொட்டும்போது நம் முகத்தில் சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.

அடுத்த நாள் திங்களன்று ஸ்கூலில் பத்து மணிக் காட்சி பார்த்த கதை நடக்கும். சுற்றி அனைத்து நண்பர்களும் காதில் ஈ புகுவதைக் கூட கவனியாமல் கதை கேட்பார்கள். இதில் நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

'படத்துல எத்தனை சண்டைடா?'

http://www.thehindu.com/multimedia/dynamic/00204/2009040350400402_204316g.jpg

ஏன்னா அத்தனை பசங்களுக்கும் சண்டைக் காட்சின்னா அவ்வளவு உயிர். எட்டு சண்டைகளாவது ஒரு படத்தில் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பசங்களுக்குப் பிடிக்கும்.

அப்புறம் ஹீரோக்கள் டாமினேஷன் போரடிச்சுப் போய் ஹீரோயின்கள் கட்டிப் பிடித்து ஸ்டன்ட் பண்ணி, ரிவால்வார் பிடித்து 'டுமீல்' பண்ணி எதிரிகளை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜோதிலஷ்மி, விஜயலலிதா. இந்தப் படங்களுக்கு கூட்டம் எக்ஸ்ட்ராவாக வரும். இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பார்ப்போம். கவர்ச்சிக் காட்சிகள் வேறு அதிகம்.

https://i.ytimg.com/vi/la6N7aJZVaY/hqdefault.jpg

ரிவால்வார் ரீட்டா,

கன் பைட் காஞ்சனா

இப்படி படங்கள் வந்து சக்கைப் போடு போடும்.

இதுவல்லாமல் கன்னட ராஜ்குமார் தமிழ் பேசுவார். அவர் படங்களுக்குத் தக்கவாறு' கோவாவில் சி.ஐ.டி, பெங்களூரில் சி.ஐ.டி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று சாமர்த்தியமாக வியாபாரத் தந்திரப் பெயர் சூட்டிவிடுவார்கள்.

பக்த ஆஞ்சநேயா, ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம், லட்சுமி கடாட்சம் என்று பக்திப் படங்களும் அவ்வப்போது காலைக் காட்சியில் மிளிருவதுண்டு.

பத்துமணிக் காட்சி முடிந்து ஞாயிறு அன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனால் பாட்டி 'எங்கேடா போயிட்டு வர்றே?' என்று தன் அதிகாரத்தைக் காட்டும்.

'இன்னைக்கி ஸ்கூல்ல்ல 'ஸ்பெஷல் கிளாஸ்' பாட்டி' என்று கூசாம பொய் சொல்லிட்டு, மீன் நடுமுள்ளை மட்டும் விட்டுவிட்டு, 'முதல் மரியாதை' தலைவர் கணக்காய் இழுத்து இழுத்து உறிஞ்சி ருசித்து சாப்பிட்டது மறந்து போகுமா?

http://www.joblo.com/images_arrownews/gz01.jpg

அப்புறம் இதெல்லாம் போரடிச்சுப் போய் இங்கிலிபீஷ் படங்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. காட்ஜில்லா, கிங்காங் என்று இப்படி படங்கள். 'இன்னா சொல்லு... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்தான்... அவனை மாதிரி எடுக்க முடியாது... என்று காந்தாராவை புகழ்ந்து பேசிய வாய் அப்படியே தடம் புரளும்.

இதன் நடுவில் நாகேஷ் இங்கு பிரபலம் என்பதால் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படும். 'நகைச்சுவை நாயகன்' நாகேஷ் என்று போஸ்டர் அடித்து வந்த 'நியூவேவ்' பாணி படம் ஒன்றை நான் அப்போது ரசித்துப் பார்த்திருக்கிறேன். கீழே 'இது ஒரு நியூவேவ் படம்' என்று போஸ்டரில் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் நிறைய கவர்ச்சி நாயகிகள்.

அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'.

காந்தாராவ், ராமாராவ் இவர்களெல்லாம் அரச கதைகளிலிருந்து மீண்டு வந்து கால மாற்றம் காரணமாக 'பாண்ட்' பாணியில் துப்பாக்கி பிடித்து தோற்றுப் போனார்கள். காந்தாராவ் பேன்ட் சூட் அணிந்தால் யார் பா ர்ப்பார்கள்? அவருக்கு விட்டலாச்சார்யா பாணி டிரஸ்தான் பொருத்தம். பின்னாளில் நரசிம்மராஜு அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால் கிருஷ்ணாவை வெல்ல வேறு எந்த நாயகர்களின் துப்பாக்கிகளும் இல்லை. அவர் இளமை மாறா தனிக்காட்டு 'சுடு'ராஜா.

'மெக்கனாஸ் கோல்ட்' தாக்கத்தில் மனைவி விஜயநிர்மலா எடுத்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' படம் தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போட்டது.

இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார்.

இத்தோடு விட்டு விடுகிறேன் என் காலை காட்சி அனுபவங்களை.

நீங்களும் மல்லாந்து படுத்து பழசை அசை போட்டு, உங்க காலைக் காட்சி அனுபவங்களை எழுதுங்களேன்.

நம்ம கிருஷ்ணா சாருக்கு இப்படிப்பட்ட பதிவுன்னா ரொம்ப பிடிக்கும். மனுஷர் சிக்க மாட்டேன் என்கிறார்.

vasudevan31355
17th April 2016, 09:34 AM
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள். ...தொடர்கிறது.

பொதுவாக சிட்டியில் உள்ளவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கம்மி. சிட்டி தள்ளி உள்ள பகுதிகளிலும், நடுத்தரமான கடலூர், சிதம்பரம், விழுப்புரம் போன்ற நகரங்களிலும் இந்த காலை 10.30 மணிக் காட்சி மிகவும் பிரசித்தம். 'எப்படா சனி, ஞாயிறு வரும்' என்று தவம் கிடப்போம். வெள்ளிக் கிழமைதான் தியேட்டர் வாசலில் அது சம்பந்தமான போஸ்டர் ஒட்டுவார்கள்.

கொஞ்சம் 'டீப்'பாக சிந்தனை செய்த போது இன்னும் சில படங்கள் கூட ஞாபகத்துக்கு வந்தன. தெலுங்குப் படங்கள் அல்லாது கன்னடப் படங்களுக்கும் இத்தகைய பெருமை உண்டு.

https://i.ytimg.com/vi/9yI7gT17EVc/hqdefault.jpg

அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு.

அப்புறம் கன்னட ராஜ்குமார் நடித்த 'மயூரா' என்ற 'அரச' படம் தமிழ் பேசி ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றது. ராஜ்குமாரின் லாவகமான வாள்வீச்சு படத்தை தூக்கி நிறுத்தியது. பிரம்மாண்டமான தயாரிப்பு.

https://i.ytimg.com/vi/nvOHSxDrEbU/hqdefault.jpg

'சகோதர சவால்' என்ற கன்னடப்படம் 'சகோதர சபதம்' என்று வெளிவந்து விஷுணுவர்த்தன், ரஜினி நடிப்பில் நன்றாக ஓடியது. ரஜினி அப்போது தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தை தயாரிப்பாளர்கள் விடுவார்களோ! செமையாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

http://4.bp.blogspot.com/-w6StyR2PAk4/UoGrJXvDxCI/AAAAAAAAN40/2iq_3prHeMs/s640/G.HANUMANTHA+RAO.jpg

தெலுங்கில் கிருஷ்ணாவும், என்.டி.ஆரும் இணைந்து நடித்த 'கடவுள் படைத்த மனிதர்கள்' (தெலுங்கில் 'தேவுடு சேசின மனுஷுலு') அந்த மாதிரி இன்னொரு படம். நாயகி ஜெயா மேடம்.

அப்புறம் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் மூவி 'வைரக் கிரீடம்'

ராமகிருஷ்ணா இன்னொரு ஆக்ஷன் ஹீரோ. இவர் நடித்து வெளிவந்த 'பைட்டர் பகவான்' சக்கைப் போடு போட்டது.

ரஜினியின் வளர்ச்சி காலத்தில் அவர் நடித்த மொழி மாற்றுப் படம் 'இன்ஸ்பெக்டர் ரஜினி'. 'உங்க சௌத்ரியை எங்கள் இன்ஸ்பெக்டர் ரஜினி முந்திட்டார்' என்று அப்போதைய ரஜினி ரசிகர்கள் எங்களிடம் செம காமெடி பண்ணினர்.

https://upload.wikimedia.org/wikipedia/en/c/ce/Tigertelugufilm.jpg

பிறகு ரஜினியும், என்.டி ஆரும் இணைந்த படம்' என்ற விளம்பர வாசகத்தில் வெளிவந்து தோல்வியைத் தழுவிய 'டைகர்'. ரஜினிக்கு ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியும், ராமாராவிற்கு ராதா சலூஜாவும் ஜோடி

என்.டி.ஆர் தனியே ஹீரோவாக நடித்த 'ராயல் டைகர் ராமு',

என்.டி.ஆர், வாணிஸ்ரீ ஜோடியில் 'சிம்மக்குரல்'.

கிருஷ்ணா நடித்த 'ரத்த சம்பந்தம்'

லேடி ஆக்ஷன் மூவி 'பொல்லாத பெண்'. இதில் லதா, சரத்பாபு ஜோடி.

இன்னும்

https://i.ytimg.com/vi/s2P6Xr-63go/maxresdefault.jpg

கௌபாய் குள்ளன்,

ஜூடோ சுந்தரி,

லேடி பைட்டர் ரேகா,

நேபாளத்தில் சி.ஐ.டி 999,

'டெத் ரைட்ஸ் எ ஹார்ஸ்' ஆங்கிலப்படத்தின் தழுவலான, மிக பாப்புலரான 'ரிவால்வார் ரீட்டா',

துப்பாக்கி ரங்கன்,

கத்திக்குத்து கந்தன்,

http://www.mangomobiletv.com/vod_images/B0000001A61.jpg

டூபான் மெயில் (இந்தப் பெயரில் மஞ்சுளா நடித்த தெலுங்கு தழுவல் ஒன்றை பார்த்திருக்கிறேன். 'அழகி'க்கு ஹீரோ நரசிம்ம ராஜு. கிரிபாபு, விஜயலலிதாவும் உண்டு )

டூபான் க்வின்

இப்படி நிறைய.

இன்னொரு படம் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

'நகரத்தில் திருடர்கள்' என்று ஒரு படம் வந்ததே...நினைவிருக்கிறதா?...படுபயங்கரமான படம். காலைக் காட்சி பார்த்துவிட்டே நடுங்கிப் போய் வீட்டுக்கு வந்தேன் வேர்க்க விறு விறுக்க.

இன்னும் கூட சில நினைவுக்கு வருகின்றன.

பூதம் எனது நண்பன்,

மாய சக்தி,

ராக்கெட் ராணி,

நாக சக்தி

இப்படியும் படங்கள் காலை காட்சியாக உலா வந்தன.

மலையாளத்தில் வின்சென்ட் நடித்த (அவரது நூறாவது படம் என்று நினைக்கிறேன்) 'பிக்னிக்' என்ற படம் பார்த்ததும் உண்டு.

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/00/Ponni_film.jpg/220px-Ponni_film.jpg

நம்ம கமல், லஷ்மி நடித்த 'பொன்னி' என்ற படம் கூட பின்னாளில் கமல் ஸ்டாரான பிறகு 'கொல்லிமலை மாவீரன்' என்று வெளிவந்தது.

https://merryfrolics.files.wordpress.com/2009/01/pyasa18.jpg?w=476&h=351&crop=1

அப்புறம் கமல் நடித்த 'ஏழாம் இரவில்' என்ற மொழி மாற்றுப் படமும் இந்தக் காலைக் காட்சி லிஸ்ட்டில் சேருமே. கமலுக்கு கோராமை மேக்-அப். இது இந்தியிலும் 'பியாசா சைத்தான்' என்று மொழி மாறியது

https://horrorpediadotcom.files.wordpress.com/2013/03/darwaza-1978-hindi-horror-ramsay-brothers.jpg

இதுவல்லாமல் நேரிடையாகவே வந்த இந்திப்படம்... பேய்ப்படம் ஒன்று 'தர்வாஜா'. ஐயோ! குலை நடுங்க வைக்கும் படமல்லவா அது.

இன்னும் நிறைய இருக்கிறது. ஞாபகம் வர,வர தரலாம்.

இதெல்லாம் செம ஜாலியான காலங்கள். பின் இவைகளின் காலம் போய் நீங்கள் சொன்ன மாதிரி மலையாள 'A' சர்டிபிகேட் படங்களே பின்பு காலைக்காட்சி படங்களாய் நெடுநாள் கோலோச்சின. இந்தப் படங்கள் வெறும் முக்கால் மணி நேரத்தில் முடிந்து விடும். இவைகளிலும் சண்டைக் காட்சிகள் உண்டு. உடலுறவு சண்டைக் காட்சிகள்.

https://i.ytimg.com/vi/Jw5tqA1b_Mk/hqdefault.jpg

'மழு' (ஆயுதம்) நிஜமாகவே நல்ல படம். பாலன் கே.நாயரின் கடின உழைப்புக்கு ஒரு சான்று அந்தப் படம். 'பாப்பாத்தி' ரதி தேவி மருமகள். சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை மருமகளுக்கும், மாமனாருக்கும் ரசாபாசம் நடந்துவிட (இது படத்தில் டீசென்ட்டாகவே இருக்கும்... அது கூட படத்தின் முக்கால்வாசி பாகத்திற்குப் பிறகு... சுகுமாரன் என்ட்டர் ஆவதற்கு முன் ) நம்ம ஆளுங்க அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முண்டு உடுத்திய 'பாப்பாத்தி' ரதிதேவியின் போஸை எட்டு சீட் போஸ்டராக ஒட்டி,'மாமனாரின் இன்ப வெறி'யாக மாற்றி, தமிழகத்தையே காம வெறி பிடிக்கச் செய்து விட்டார்கள் பாவிகள். அந்தப் படத்தில் கடும் கிராமத்து உழைப்பாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாயர்.

அது போல ஜெயபாரதியின் முதுகை மட்டும் பெரிதான போஸ்டராக்கி 'இதோ இவிட வரே' படத்துக்கு பெரியவர் முதல் சிறியவர் எல்லோரையும் வரச் செய்து விட்டார்கள். நல்ல வேளை. 'சோமனின் காமம்' என்று இதற்கு தமிழில் பெயர் சூட்டாமல் விட்டார்களே! அதுவரை பிழைத்தோம்.

சரி! சப்ஜெக்ட் வேறு திசை நோக்கி பாய எத்தனிக்கிறது. நிறுத்திக் கொள்வோம்.

எது எப்படியிருந்தாலும் சரி! எழுபதுகளின் வெயிலில் தியேட்டர்களின் கதவுகளைத் திறந்து வைத்து, காற்றுக்காக அங்கேயே ஏங்கி, வேர்த்து நின்று விஜயலலிதா, கிருஷ்ணா, ஜோதி இவர்களின் பழுப்பு கலர் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளையும், குதிரையோட்டங்களையும் ரசித்த காலங்களை காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.

காலைக்காட்சி அல்லாது மீதி மூன்று ஷோக்களும் என் 'இதய தெய்வ'த்தின் படங்களுக்கே முதலிடம். அதிலும் 'ஞான ஒளி'க்கு பிரதான இடம் அன்றும் இன்றும் என்றும். அப்புறம்தான் மற்ற படங்கள் எல்லாம்.

RAGHAVENDRA
19th April 2016, 03:41 PM
உளமார்ந்த நன்றி வாசு சார். மேலும் இது போன்ற பல நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

RAGHAVENDRA
19th April 2016, 03:42 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/13043232_1099744373409567_1936098911473494916_n.jp g?oh=71e61be299b3b63652efe695b8fac3a3&oe=57759ADF

Vintage Heritage is screening the classic "Gomathiyin Kathalan" on Sunday, 24th April 2016. Details given in the attachment.

Gomathiyin Kathalan is a thriller. Excellent score by the Maestro G. Ramanathan, class act by T R Ramachandran and Savithri and others, interesting and entertaining. Not to be missed by lovers of classics.