PDA

View Full Version : INTERVIEWS With TV Artists



Pages : [1] 2

R.Latha
16th August 2007, 08:32 AM
Post interviews with CINE actors, actress, directors or others!

R.Latha
16th August 2007, 08:32 AM
`சவுபர்ணிகா' சீரியல் பார்த்தவர்களை `யார் இந்தப் பொண்ணு?' என்று கேட்க வைத்தவர் புவனேஸ்வரி! முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. `பட்ஜெட் பத்மநாபனில்' ஆரம்பித்து இதுவரை 12 படங்களை முடித்தவர் சீரியல்களில் அரைச் சதத்தைத் தாண்டி விட்டார். `பாசம்' சீரியலில் இருந்த இந்த `வில்லி'யுடன் `முத்து... பத்து' சந்திப்பு...

* சீரியல், சினிமா- முதலிடம் எதற்கு?

சீரியலுக்குத்தான்.

* நல்ல சம்பளம் - சிறிய பாத்திரம், குறைவான சம்பளம் - கனமான பாத்திரம்- எதைத் தேர்வு செய்வீர்கள்?

கனமான பாத்திரத்தை...

* நிஜத்தில் நீங்கள் வில்லியாகக் கருதுவது யாரை?

என்னுடைய கோபத்தை...இதை நினைத்துத்தான் நான் பயப்படுவேன்.

* வில்லியாக விரும்பி நடிக்கிறீர்களா? அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிக்கிறீர்களா?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...!

* நீங்கள் பொறாமைப்படும் நபர்?

ஐஸ்வர்யாராய்...

* மறக்க நினைக்கும் சம்பவம்?

என் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தையும்...

* உங்களைப் பற்றிய தவறான கிசுகிசுவைப் படிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்?

சிரித்துக் கொள்வேன்!

* ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் தவித்ததுண்டா?

இல்லை...அந்த நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.

* நடிகையாகாமல் வேறு வேலைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணியதுண்டா?

அப்படி நினைப்பு வந்ததில்லை...ஆனால் கல்யாணமாகி செட்டிலாகி இருக்கலாம் என்று எண்ணியதுண்டு!

* உங்களின் அழகாக நீங்கள் கருதுவது?

என்னுடைய கண்களை...

R.Latha
16th August 2007, 08:34 AM
[tscii:bf7f92ffed]`பரபர...சுறுசுறு' என சுற்றிவரும் ஐஸ்வர்யாவின் பேச்சும் `படபட ஸ்பீடு!' ஏழு வருடத்துக்குள் 45 சீரியல், 5 சினிமா என்று முடித்த இந்த `ஐஸ்' தேவதை இப்போது ஜோடி நம்பர் ஒன் ஆட்டத்தில் படுபிஸி

ஆட்டத்தின் இடைவெளியில் கொடுத்த பேட்டி:

* டிவியில் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னோட போட்டோவை பார்த்து டிவியில் `கங்கா யமுனா சரஸ்வதி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன கேரக்டர் தான் என்றாலும் நன்றாக இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. இந்த ஏழு வருஷத்தில் 45 சீரியல்கள், 5 படங்கள் பண்ணிட்டேன். அண்ணாமலை சீரியல்தான் எனக்கு பிரேக் கொடுத்தது. சி.ஜே.பாஸ்கர் எனக்கு நடிப்பை நன்றாக கற்றுக் கொடுத்தார். இப்போது ஆனந்தம், பந்தம், கிரிஜா, நம்ம குடும்பம் என்று நடித்து வருகிறேன். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக ரிகர்சல் என்று எப்பவும் ஆட்டம்... நடிப்பு என்று ஒரே கொண்டாட்டம்தான்!

* படித்துக் கொண்டே நடிப்பதில் சிரமம் இல்லையா?

பத்தாம் வகுப்புக்கு மேல் ஸ்கூலுக்கு போக முடியல...அதனால் பிளஸ்டூ பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன். அப்புறம் சென்னை பல்கலைக்கழகத்தில் கரஸ்பான்டன்ஸில் பி.பி.ஏ., முடிச்சேன்.

* நடிப்பு தவிர வேறு என்னவெல்லாம் தெரியும்?

டான்ஸ் ஓரளவு தெரியும். அதுவும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக கத்துக்கிட்டேன். மத்தபடி வேற எதுவும் தெரியாது.

* வீட்டிலும், தோழிகளும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

ஐஸூ...

* சும்மா இருந்தால் என்ன பண்ணுவீர்கள்?

பாட்டுக் கேட்பேன். டிவியில் கிரிக்கெட், டென்னிஸ் விரும்பிப் பார்ப்பேன். தோழிகளுடன் ஜாலியா சென்னையைச் சுத்தி வருவேன்.

* காதல்..?

அதெல்லாம் நமக்கு ஒத்து வராது; நேரமும் கிடையாது!

* பிடித்த விளையாட்டு?

நான் ஸ்கூல்லேயே அதெலட்டிக் வீராங்கனை. வாலிபால், த்ரோபால் ஆகியவையும் தெரியும்.

* நீங்க முன்னுதாரணமாகக் கருதுவது யாரை?

எனக்கு நானே ரோல்மாடல்! மத்தவங்க போல நான் எதுக்கு வரணும்?

* பிடித்த நடிகர், நடிகை?

மாதவனையும், சிம்ரனையும் ரொம்பப் பிடிக்கும்.

* சினிமா வாய்ப்பு வந்தது எப்படி?

சீரியலில் சிநேகிதி, தங்கை கேரக்டர்களில் நடிப்பதைப் பார்த்து டும் டும் டும் படத்தில் தங்கை கேரக்டர் கொடுத்தார்கள். அப்புறம் தவசி, லவ்லி, ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்களில் நடித்தேன்.

* உங்க குடும்பத்தைப் பற்றி?

அப்பா ராஜாமணி பிசினஸ்மேனë. அம்மா சித்ரா ஹவுஸ்வைப். ஒரு அக்கா. அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சு. இப்போ வீட்ல நம்ம ராஜ்யம்தான்!

* எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்று ஆசை?

நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும். நடிச்சுக்கிட்டே... இருக்கணும்!

ரொம்ப...ரொம்பச் `சின்ன' ஆசைதான்![/tscii:bf7f92ffed]

bingleguy
16th August 2007, 09:14 AM
TV artists oda interview excerpts podureengala ? illa neen iview eduthu adhoda responses ai share panreengala ????

aanaa
16th August 2007, 05:35 PM
தங்களின் கற்பனைகளா??
:-)

இந்த லொல்ளுதானே வேணாம்கிறது :-))))))))))

யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிறது

aanaa
16th August 2007, 05:51 PM
http://www.nilacharal.com/enter/interview/suji.html
=======================================

sudddathu
===============


SUJITHA - Heroine from Kanavarukka ..and so on

==========================

'Started acting when I was 40 days old' - Sujitha

An exclusive interview with the Golden Girl of Chinnathirai , Sujitha




Sujitha, one of the busiest artistes in the TV world today, agreed to give us an exclusive interview amongst her heavy schedule.We made it a short and sweet one.

Nilacharal : Can we ask how old are you,Suji?
Suji : Ofcourse.My date of birth is 12th July 1983

Nilacharal:Tell us about your family
Suji : I have an elder brother and an younger sister.

Nilacharal:How would you describe yourself?
Suji :A very sensitive gir love being with the family

Nilacharal : Do you remember your first experience in front the camera?
Suji :No...because I started acting even before knowing what is cinema and camera.When I appeared in first moview Abbas,I was just 40 days old.Next was in Munthabaii Muduchu when I was six months old.

Nilacharal : How would you describe cine industry?
Suji :Beautiful Industry decorated with Flowers and thorns

Nilacharal :What is your favourite charecter?
Suji : The one in Poovizhi Vaasalile

Nilacharal : Do you fine any difference between acting in cinema and serials?
Suji : Responsibility and Recognition is very high in cinema compared to serial.

Nilacharal : What is your special talent?
Suji : Professionally....my classical dance.Personally....my jovial charecter.

Nilacharal: What is the biggest achievement so far in your life?
Suji : My acting career which started when I was just 40 days old.

Nilacharal : Have you acted in any other language apart from Tamil?
Suji :Yes.I have also acted in Telugu, Kannada, Malayalam and Hindi.

Nilacharal:What are your current projects?
Suji :Heroine in a Kannada Movie with Mr. Siva Rajkumar and 4 serials.

Nilacharal : What is your score of your acting career as of now?
Suji :Around 90 films and around 20 serials.

========================
Is it legal ? if not I will remove it

R.Latha
27th August 2007, 10:00 AM
சீரியல்களில் சீரியஸாக தோன்றும் காயத்ரி ப்ரியா, நேரில் நேர்மாறாய் ஜாலியாக இருக்கிறார். கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இனிக்க... இனிக்க சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார்! காம்பியரிங், சீரியல் என்று கலந்துகட்டி கலக்கும் இவருடன் ஒரு கலகல பேட்டி...

நீங்க சென்னைவாசி தானா?

ஆமாம்...நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க அப்பா பெரிய பாடகர். நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கார். அம்மா டீச்சர். ஒரே அண்ணன், தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் எம்.காம்., படிச்சிருக்கேன்.

டிவிக்குள் எப்போது நுழைந்தீர்கள்?

பத்தாவது படிக்கும் போது என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்து மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் காம்பியர் வாய்ப்பு...அதில் பிஸியாக இருந்தபோது `நாகபந்தம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதுவரை 50 சீரியல்கள் தாண்டி விட்டேன். இப்போ...`செல்லமடி நீ எனக்கு' சீரியலில் நடித்து வருகிறேன்.

சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லையா?

வந்தது...அப்போது டிவியில் பிஸியாக இருந்ததால் சினிமா மிஸ் ஆயிடுச்சு! இப்போ ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன்.

சினிமாவில் எந்தமாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை?

எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கேரக்டர் ரோல் கிடைத்தால் நல்லது!

டிவியில் நீங்கள் நடித்த சீரியலைப் பார்ப்பது உண்டா? அப்போது என்ன நினைப்பீர்கள்?

நான் நடித்த சீரியல் மட்டுமல்ல, நான் பங்கு பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வீட்டில் ரெக்கார்டு செய்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்த்து எப்படி இன்னும் பெட்டராக, செய்யலாம் என்று யோசிப்பேன்.

சீரியல் என்றாலே அழுகைதானே அடையாளம்? உங்களுக்கு அழுவது பிடிக்குமா?

இல்லை...எனக்கு அழுவது பிடிக்காது. இப்போதெல்லாம் டிவியில் அனைத்து உணர்வுகளும் காட்சிகளாக வருகின்றன. அழுது புலம்பும் சீன்கள் குறைந்து விட்டன.

தோழிகளும், வீட்டிலும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

வீட்டில் காயத்ரி...இல்லாவிட்டால் ப்ரியா என்று கூப்பிடுவார்கள். தோழிகளுக்கு நான் `ஜி.பி'!

காம்பியரிங், சீரியல் நடிப்பு இதில் உங்களுக்கு பிடித்தது எது?

இரண்டுமே பிடிக்கும் என்றாலும் காம்பியரிங் செய்வது கொஞ்சம் த்ரில்லானது!


நீங்கள் நடித்த சீரியல்களில் உங்களுக்குப் பிடித்தமான சீரியல் எது? பிடித்த கேரக்டர்?

நான் நடித்ததில் பிடித்த சீரியல் `ஆடுகிறான் கண்ணன்'. இதில் வரும் `ருக்கு' கேரக்டர் ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் காம்பியரிங், சீரியல் பண்ணுவதை பார்த்துவிட்டு, கல்லூரி மற்றும் வீட்டில் என்ன விமர்சனம் செய்வார்கள்?

கல்லூரியில் எல்லாருமே நல்லா என் கரேஜ் செய்வார்கள். வீட்டில் அண்ணன் மட்டும் ஏதாவது கிண்டலடிப்பார். மற்றபடி பெற்றோர் எப்பவுமே நம்ம பக்கம்தான்!

உங்களுடைய பொழுதுபோக்கு?

தோழிகளுடன் நல்லா ஊர் சுத்துவேன்...பர்ச்சேஸ் பண்ணுவேன். எப்பவும் செல்போனில் பேசிக்கிட்டே... இருப்பேன்.

என்ன மாதிரியான கேரக்டர்கள் செய்ய விருப்பம்?

டபுள் ஆக்ஷன் கேரக்டர் செய்ய விருப்பம். அதாவது ஒன்று அப்பாவி...மற்றொன்று ஆக்ஷன்னு கலக்கணும்!

காயத்ரி ப்ரியா வீட்டில் எப்படி?

இதோ...பார்க்கிறீர்களே...! இப்படித்தான் எப்போதும் வீட்டில் ஜாலியாக இருப்பேன்! சீரியல்களில் மட்டுமே சீரியஸ் நடிப்பு!

எதிர்கால ஆசை?

சினிமாவோ...சீரியலோ எதில் நடித்தாலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்கவேண்டும். அதைவிட முக்கியம் எல்லாரிடமும் நல்ல பொண்ணுன்னு பெயர் எடுக்கணும் இதுதான் என்னோட கனவு..ஆசை...லட்சியம் எல்லாம்!

R.Latha
27th August 2007, 10:00 AM
சில வருடங்களுக்கு முன் சிரிப்புப் புயலாக தமிழகத்தைத் தாக்கியவர் திண்டுக்கல் ஐ. லியோனி. பட்டிமன்றத்தைப் பாட்டு மன்றமாக, சிரிப்பு மன்றமாக மாற்றியவர் இவர். `கங்கா- கௌரி' என்ற படத்திலும் முத்திரை பதித்த லியோனியின் `முத்து... பத்து' குத்து...

`லியோனி' என்றால் என்ன அர்த்தம்?

இத்தாலி மொழியில் சிங்கம் என்று அர்த்தம்! இதை நான் வச்சுக்கலை... பெற்றோர் வைத்த பெயர்தான்!

பட்டிமன்றங்கள் வெறும் சிரிப்பு மன்றங்கள்தானே?

ஒரு காலத்தில் சீரியசாக இருந்தன. இந்த அவசர யுகத்தில் நாங்களும் சுருக்கமா... நகைச்சுவையா... பேசி சொல்ல வந்த கருத்தைப் பதியவைத்தோம். காலத்தின் தேவையாகத்தான் பட்டிமன்றம் சிரிப்பு மன்றமாக மாறிவிட்டது.

நகைச்சுவையாகப் பேசியதால் விளைந்த சங்கடம்?

இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை! நான் நகைச்சுவையாகப் பேசினால் சிரிப்பாங்களே தவிர யாரும் சங்கடப்பட்டதும் இல்லை... என்னை சங்கடப்படுத்தியதும் இல்லை!

சினிமாவை கிண்டலாக விமர்சித்த நீங்களே சினிமாவில் நடித்தது எப்படி?

சினிமாவை மட்டுமல்ல... எல்லா துறைகளைப் பற்றியும் கிண்டலடிப்போம். அதுக்காக அந்த துறையில் நுழையக்கூடாது என்று

சட்டமில்லையே!ஆசிரியரான உங்களுக்கு பள்ளி மாணவர்கள் வைத்த பட்டப்பெயர்?

`யுரேகா' என்று கூவிய கிரேக்க அறிஞரான ஆர்க்கிமிடிஸ் பெயரை எனக்கு பட்டப்பெயராக வைத்திருப்பதாகச் செய்தி!

உங்களை அசத்திய ரசிகர்? அதிர்ச்சி அடைய வைத்த ரசிகர்?

பிரான்சில் ஒரு நிகழ்ச்சி... பேசியவுடன் ஒரு பிரான்ஸ்காரர் ஓடிவந்து என்னை கட்டிப்பிடிச்சு இரண்டரைபவுன் மோதிரத்தை எனது விரலில் மாட்டினார்- இது அசத்தல்.

மலேசியாவில் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பெண் திடீரென்று ஓடி வந்து `கிஸ்' பண்ணிடுச்சு- இது அதிர்ச்சி.

கோபமாக இருக்கும் மனைவியை நகைச்சுவையாகப் பேசி திசை திருப்பியதுண்டா?

அதுதானே நமக்கு பெரிய ஆயுதம்! ஒருதடவை சனி, ஞாயிறு நாட்களில் வீட்டில்தான் இருக்கணும்னு மனைவி ஆர்டர் போட்டுட்டாங்க! அப்போ நமது முதல்வர் நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டார்கள். எனது மனைவியிடம் ``என்ன, இதையும் வேண்டாம்னு சொல்லிடவா?'' என்று கிண்டலாக கேட்டேன். உடனே அவுங்க ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க!

உங்களின் நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மை உண்டா?

நான் கறுப்பாவா...இருக்கேன்! மாநிறமாத்தானே இருக்கேன்! சிகப்பா இருக்கிறவங்களைப் பார்த்து நான் இரக்கப்படுவேன்!

அதிகம் அறிமுகமில்லாதவர் திடீரெனக் கடன் கேட்டால்...?

ரொம்ப யோசிப்பேன். ஏன்னா... நிறைய தடவை கொடுத்து ஏமாந்துட்டேன்!

அன்றாட வாழ்வில் பேச்சுத்திறமை கை கொடுக்கிறதா?

கண்டிப்பா... `வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'னு கிராமத்தில் சொல்வார்கள். நான் போகும் நிகழ்ச்சிகளில் கோபமாக அல்லது `தண்ணி'யைப் போட்டுட்டு பிரச்சினை பண்ணும் சிலரை நானும் தண்ணியைப் போட்ட மாதிரி பேசி வழிக்குக் கொண்டு வந்துடுவேன்.

R.Latha
27th August 2007, 10:05 AM
19/08/07
01. "யோசிச்சு நடந்துக்கிட்டா பிரச்னையிலிருந்து தப்பிச்சிக்கிடலாம்!' பளிச்சென்று சொல்கிறார் ப்ரீத்தி சீனிவாசன்

விஜய் "டிவி'க்காக "ஜோடி நம்பர் ஒன்'னுக்காக நடிகர் டிங்குவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ப்ரீத்தியை "பேட்டி'க்காக ஓரங்கட்டினோம். அவரின் பேட்டி:

* நடிகைகள் போடும் உடைகளுக்கு இளம்பெண்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறதே?

டிவி, சினிமா இரண்டும் மக்களிடம் நெருக்கமானதாகிவிட்டது. அதனால அதில வர்றவங்க போடுகிற டிரஸ் மாதிரி நாமும் போட்டுக்கிடணும்ன்னு யூத் கேர்ள்ஸ் நினைக்கிறதில தப்பில்லே. அதே நேரம் பப்ளிக்கில அதே மாதிரி டிரஸ் போட்டுட்டு போனா மக்கள் என்ன நினைப்பாங்க. பிரச்னை ஏதும் வருமான்னு கொஞ்சம் யோசிக்கணும். மத்தவங்க நம்மை பார்க்கணும்ங்கிறதுக்காக அரைகுறையா டிரஸ் போடுவதை கேர்ள்ஸ் தவிர்க்கணும்.

* கல்லுõரி மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு போட்டிருப்பது பற்றி?

வரவேற்க வேண்டிய விஷயம். படிக்கிற இடத்தில வீண் பிரச்னை வந்துடக்கூடாதுன்னு நினைச்சுதான் இப்படி கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கணும். மாடர்ன் கலாசாரம்ங்கிற பெயர்ல டிரஸ்சால படிக்கிற இடத்தில பிரச்னை ஏதும் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிறது நல்லதுதானே.

* எங்க போனாலும் அப்பாவை துணைக்கு அழைத்துக் கொண்டு போவது முன்னெச்சரிக்கையாகவா?

சீரியல் ஷூட்டிங் போகும் போது நான் மட்டும்தான் போவேன். விழாக்களுக்கு போகும்போது மட்டும் அப்பாவை அழைச்சிட்டு போவேன். அப்பா, அம்மா கூட இருந்தால் நல்லதுதானே.

* இந்த வாரம் நடிகை பிரச்னை வாரம் என்று சொல்லும் அளவிற்கு நடிகைகள் வாரா வாரம் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனரே?

ஆண்களுக்கு இணையாக எல்லா துறையிலும் பெண்கள் ஒர்க் பண்ணிட்டிருக்காங்க. அவுங்களிடையே எவ்வளவு பிரச்னையிருந்தாலும் அவ்வளவாக வெளியே தெரியாது. சினிமா, "டிவி'யில ஒர்க் பண்றவங்கன்னா சின்ன பிரச்னைகூட பரபரப்பாக வெளியே தெரிஞ்சுடுது. சினிமா, "டிவி'யில ஒர்க் பண்றவங்களுக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருப்பதாலதான் சின்னப் பிரச்னையில் சிக்கிகிட்டாலும் பரபரப்பாயிடுது. எல்லா விஷயத்திலும் அடுத்து என்னவாகும்ன்னு கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கிட்டா பிரச்னையிலிருந்து தப்பிச்சிக்கிடலாம்.

* சீரியல்களில் சீனியர், ஜூனியர் நடிகைகள் இடையே பூசல் ஏதும்?

பிரச்னை ஏதுமில்லை"டிவி'யில் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய நிறுவனங்கள் சீரியல் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன. முன்னணி சீனியர் நடிகைகள் பலர் "டிவி'யில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்கள் ஜூனியர்கள் நடிகைகளிடம் மோதிக் கொள்வதில்லை. நல்ல ப்ரண்ட்ஸாத்தான் பழகுறாங்க.

இவ்வாறு ப்ரீத்தி சீனிவாசன் தெரிவித்தார்.


[tscii:7971e52e1b]
[/tscii:7971e52e1b]

R.Latha
27th August 2007, 10:06 AM
12/08/07

01. காமெடியில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை வருத்தப்படுகிறார் டி.வி. நடிகை சோபனா

என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ. மதுரம், தங்கவேலு சரோஜா, நாகேஷ் மனோரமா, கவுண்டமணி, செந்தில் கோவை சரளா ஜோடி போட்டு நடிக்கும்போது காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க! "டிவி'யிலும், சினிமாவிலும் காமெடி நடிப்பில் ஆர்வம் காட்டும் "டிவி' நடிகை சோபனாதான் இப்படி வருத்தப்படுகிறார். "ஆறு மனமே ஆறு' தொடர் ஷூட்டிங் கில் நடித்துக்கொண்டிருந்த அவரை "பேட்டி'க்காக சந்தித்த போது உடனே "யெஸ்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடிதான். சோபனாவின் பேட்டி:

* காமெடி கேரக்டரில் நடிக்க நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?

காமெடி கேரக்டரில் நடிப்பது அவ்வளவு ஈசியில்லை. மீண்டும் மீண்டும் சிரிப்பு சீரியலில் நடிக்க அழைச்சாங்க. வெண்ணிறாடைமூர்த்தி சீன்ல அடிக்கிற லுõட்டியை பார்த்ததும் நாமும் டயலாக் பேசி கலக்கிடனும்ணு நம்பிக்கை வச்சு நடிச்சேன். கிளிக் ஆயிடுச்சு. எப்படி நடிச்சா, பேசினா ரசிகர்களை சிரிக்க வைக்க முடியும்ன்னு பல்ஸ் பார்ப்பதில் மூர்த்தி சார் கெட்டிக்காரர். எதார்த்தமாகவே அவரது ஒவ்வொரு செயலிலும் காமெடி கலந்திருக்கும். நாமும் சிரித்து மற்றவங்களையும் சிரிக்க வைப்பதுங்கிறது பெரிய விஷயம். அதனால தான் காமெடி சீன்ல நடிக்க ஆசைபடுகிறேன்.

* காமெடி சீனில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதாக சொன்னார்களே?

முன்பெல்லாம் காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க. பெயருக்கு டயலாக் போர்ஷன் வைப்பதால திறமை இருந்தாலும் நடிப்பில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது.

* காமெடி நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்களோ, மற்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைக்காதோ என்று பயந்ததுண்டா?

காமெடி சீன்ல நடிக்க நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா லேடின்னு பார்க்கப்போன விரல் விட்டு எண்ணிடலாம். மனோரமா ஆச்சி, கோவை சரளாவுக்கு பிறகு அடுத்து எந்த நடிகை ஜொலிப்பவங்க யார்ன்னு தெரியலை. காமெடி சீன்ல கலக்கணும்ன்னு ஆசையிருக்கு. அதற்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கணும்ல ஜில்லுனு ஒரு காதல், கோவை பிரதர்ஸ், எம்மகன், பிறப்பு படங்களில் நடிச்சேன். இப்ப தீக்குச்சி'ங்கிற படத்தில நடிச்சிட்டிருக்கேன் "ஆறு மனமே ஆறு' சீரியலிலும் எனக்கு நல்ல ரோல் கிடைச்சிருக்கு. வித்தியாசமான ஸ்டோரி

காமெடி சீரியல்களில் நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சினிமாவில் இல்லையே?

* காமெடி சீன்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததற்கு காமெடி நடிகர்கள்<தான் காரணம் என்று நினைக்கிறீர்களா?

""படத்தில் காமெடி சீன் எவ்வளவு தேவை, அதை எப்படி வைக்கலாம் என்று முடிவு செய்றது டைரக்டர்கள்தான். அப்படியிருக்க நடிகர்களை எப்படி குறை சொல்ல முடியும். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு காமெடி நடிகர்கள் நினைப்பதில்லை. சின்ன சீனாக இருந்தாலும் எல்லோர் நடிப்பிலும் அந்த சீன் நல்லா வரணும்ன்னுதான் அவுங்க நினைப்பாங்க. வடிவேல், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா ஸ்ரீப்ரியா ஆகியோர் சீன் நல்ல வரணும்ன்னு துடிப்பாக இருப்பாங்க. சீன்ல இருக்கிற சக நடிகர்களையும் நல்லா நடிக்க வைக்க திடீர் திடீர்ன்னு நல்ல, நல்ல ஐடியாக்களை அள்ளிவிடுவாங்க. நினைச்சமாதிரி சீன்ல இருப்பவங்க நடிக்காட்டி எத்தனை "டேக்' ஆனாலும் வடிவேலுவும், வெண்ணிறாடை மூர்த்தியும் விடமாட்டாங்க. திருப்தி வரும் வரை சீன் எடுப்பாங்க. கூட நடிப்பவர்களை நல்லா நடிக்கணும்ன்னு நினைப்பாங்க. ஸ்ரீப்ரியா ஷூட்டிங் ஸ்பாட்ல காமெடியை சரமாரியா அள்ளவிடுவார்,'' என்றவரை டைரக்டர் அடுத்த சீன் ஷூட்டிங்கிற்கு அழைக்க பறந்தார்.
[tscii:344f1f308b]
[/tscii:344f1f308b]

R.Latha
27th August 2007, 10:08 AM
"அப்பா அம்மா சந்தோஷப்பட்டா போதும் அசத்துகிறார் அனுஹாசன்

"எது ரைட்'ன்னு படுதோ அதை செய்வேன் அப்பா அம்மா சந்தோஷப்பட்டா அது தான் எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷமாக நினைப்பேன்! இப்படி "சென்டிமென்ட்'டாக பதில்களை அள்ளி விட்ட அந்த நடிகை தொகுப்பாளினி! யார் தெரியுமா? விஜய் "டிவி'யில் "காபி வித் அனு' தொகுப்பாளினி அனுஹாசன்தான் கலைஞர் "டிவி'க் காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கலக்கல் பேட்டி:

* "டிவி'யில் கவனம் செலுத்தும் அளவிற்கு சினிமாவில் கவனம் செலுத்தவில்லையே ஏன்?

சினிமா மீது ஆர்வம் இல்லாமலில்லை "இந்திரா' படத்தை சுகாசினி இயக்கினாங்க பயமில்லை, ஈசியா இருந்தது. கிராமத்து ஸ்டோரி பிடிச்சிருந்தது. நடிச்சேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்காததற்கு காரணம், ரொமான்ஸ் சீன்ல நடிக்க மாட்டேன், குட்டி, குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நடிக்க, ஆடமாட்டேன்னு கண்டிஷன் போட்டேன். எனக்கு பிடிச்ச மற்றவங்களை சங்கடபடுத்தாத கேரக்டராக இருந்தால் நடிக்கலாம்ன்னு நினைச்சேன். அப்போது பேஷன் வெறி எனக்கு கிடையாது.

* சினிமா பற்றி கமல், சுகாசினி ஏதும் அட்வைஸ் செய்யவில்லையா?

யாரு எப்படி நடந்துக்கணும்ங்கிறது அவுங்க, அவுங்களுக்கு தெரியும்ன்னு அவுங்க நினைப்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்வைஸ் சொல்லிகிடறதெல்லாம் கிடையாது. நான் இதை செய்யப்போறேன், அதற்கு உங்கள் அட்வைஸ் எதிர்பார்க்கிறேன்னு கமல் சித்தப் பாக்கிட்டேயோ, சுகாசினி அக்காகிட்டேயோ கேட்டா சரியான வழியை சொல்லிடுவாங்க. அது சரியாயிருக்கும்.

* கமல், சுகாசினியிடம் உங்களுக்கு பிடித்தது?

இரண்டு பேரும் ஒரே மாதிரி கடின உழைப் பாளிங்க எதைச் செய்தாலும் இது என் வேலையில்லைன்னு விடமாட்டாங்க. நடிப்பா இருந்தாலும் சரி, ஸ்கிரிப்ட் ஒர்க்கா இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி இன்னும் நல்லா செய்யணும்ன்னு செய்வாங்க. அதற்காக நேரம், காலம் பார்க்காம அவுங்களுக்கு திருப்தின்னு தோணும் வரை கடுமையா உழைப்பாங்க. அதனாலதான் அவுங்க ஜெயிக்கிறவங்களா நின்னுட்டிருக்காங்க.

* "டிவி'க்களில் வரும் நீங்கள் சினிமாவிற்கு வருவதற்கு சாதகமான வழிகள் இருந்தும் தவிர்ப்பது ஏன்?

ஒவ்வொரு நிலையிலும் எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செஞ்சிட்டிருக்கேன். நடிப்பு எனக்கு பிழைப்பு இல்லை. பெரிய நடிகையாகணும்ங்கிற வெறி எனக்கு கிடையாது. என்ன விலை கொடுத்தாவது நான் நடிக்கணும்ன்னு நினைக்கலை. டைரக்டர்கள் சொல்ற மாதிரியெல்லாம் நடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருந்தா நிறைய படங்களில் நடித்திருக்கலாம். இப்ப "ஃ' என்ற படத்தில பாம் ஸ்குவார்ட் கேப்டனா நடிச்சிட்டிருக்கேன். நல்ல ஸ்கிரிப்ட் பிடிச்சதால நடிக்கிறேன்.

* சமீபத்திய புதிய தகவல் ஏதும்?

கலைஞர் "டிவி'க்காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் ஹீரோயினியாக நடிக்கிறேன். என் கனவு ஹீரோ போலீஸ்தான். எங்கு அநியாயம் நடக்குதோ, அநீதி நடக்குதோ, சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயம் நடக்குதோ, அங்கெல்லாம் போலீஸ் தட்டிக்கேப்பாங்க அப்படீன்னு சின்னப்பிள்ளையாக இருந்தபோது நினைச்சிருக்கேன். இப்ப போலீஸ் ஆபிசரா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் கனவு ஹீரோ போலீஸ் ஆசை என்பதால ஆர்வமா நடிச்சிருக்கேன். ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு.

* உலகில் நீங்கள் பெரிதா நினைப்பது எதை?

உலகில் சந்தோஷப்படும் விஷயம் நிறைய இருக்கு நான் படும் சந்தோஷத்தை பார்த்து அப்பா, அம்மா சந்தோஷப்பட்டா அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். எது ரைட்னு படுதோ அதைச் செய்வேன். எது நல்லதுன்னு தோணுதோ அப்படியே நடப்பேன். சுதந்திர பறவை மாதிரி என்னோட பயணம் இருக்கணும். அதே நேரம் யாரையும் சங்கடபடுத்தாமலும் இருக்கணும்வாழ்க்கையில் நுõறு சதவீதம் சந்தோஷமா வாழணும். மற்றவர்களுக்கு பிரச்னையில்லாமல் எனக்கு பிடித்தமானவைகளை செஞ்சிக்கிட தயக்கமில்லை.

இவ்வாறு அனுஹாசன் அசத்தினார்.
[tscii:c515eb2137]
[/tscii:c515eb2137]

R.Latha
26th October 2007, 08:15 AM
தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், மிக அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஹிட் மேல ஹிட்'.

""மேனின் குறும்பு கொப்பளிக்கும் கிசுகிசுக்களும், மிதுனாவின் தேன்மொழிப் பேச்சுமே இந்த நிகழ்ச்சியின் சக்ஸஸ் எபிசோட்களுக்குக் காரணம்..'' என்கிறது, தொடர் டிவி ரசிகர்களின் எஃப்.ஐ.ஆர்!

இனி, "ஹிட் மேல ஹிட்'டுக்குக் காரணமான மிதுனா உங்களுடன்....

வேகமாக புகழ் அடைவதற்கான வழியாக நிறையப் பேர் தேர்ந்தெடுப்பது மீடியாவைத்தான். நீங்களும் அப்படித்தானா?

ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரதிபா என்னுடைய குடும்ப நண்பர். அவர் மூலமாகத்தான் நான் ஜெயா டிவியில் அறிமுகமானேன். ஒரேநாளில் அவர்கள் வைத்த வீடியோ, மாடுலேஷன் டெஸ்ட் எல்லாவற்றிலும் நான் பாஸôகி விஜேவாகிவிட்டேன். அப்போது பட்டபடிப்புக்காக நான் லண்டனிலிருக்கும் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.

அதற்கான விசா எனக்கு கிடைக்காத நிலையில், எம்.ஓ.பி.யில் ஒருவருடம் படித்துக் கொண்டிருந்த போது, விளையாட்டாக எனக்கு வந்த வாய்ப்புதான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி. நான் படிக்கும் படிப்பின் மூலமாகவும், அது தொடர்பான பணியில் சிறப்பதும்தான் என்னுடைய லட்சியம். எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டால் அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.

அப்படி எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்புதான், ஜெயா டிவியில் நான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனது. மற்றபடி மீடியாவில் சேர்வதின் மூலம் புகழ் அடையவேண்டும் என்ற திட்டமிடல் எல்லாம் கிடையாது.

இந்த வருடம் ஆகஸ்ட்டில்தான் லண்டனிலிருந்து வந்தேன். வந்ததும் மீடியாவில் எனக்கிருந்த பழைய நண்பர்களுடன் பேசும்போதுதான், விஜய் டிவியில் இப்படியொரு நிகழ்ச்சிக்கான வாய்ப்பு எனக்கு வந்தது.

மெகா தொடர்கள்தான் இன்றைக்கு தமிழகத்தில் பெண்களின் முதல் சாய்ஸôக இருக்கின்றது. அதுபோன்ற தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

நிச்சயமாக மாட்டேன். நடிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

சின்னத் திரையை விடுங்கள் பெரிய திரையில் வாய்ப்பு வந்தால்...?

எவ்வளவு பெரிய அகன்ற திரையாக இருந்தாலும் என்னுடைய பதில் இதுதான். எனக்கு வராத விஷயத்தை, நான் முயற்சிப்பதே இல்லை.

நீங்கள் லண்டனில் இருந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் மக்கள், இந்தளவுக்கு டிவி சீரியஸ்களின் மீது "க்ரேஸôக' இருப்பார்களா?

லண்டன் வாழ் மக்களிடம் இங்கிருக்கும் மக்கள் அளவுக்கு சீரியல்களின் ஆதிக்கம் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால் லண்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் சீரியல்களுக்கு பெரிய மதிப்பு இருக்கின்றது. காலம் காலமாக தாய்நாடு பற்றிய நினைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய மொழிச் சீரியல்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கிறார்கள். அங்கிருக்கும் தமிழர்களுக்கும் தமிழ் சீரியல்களின் மேல் பெரிய அளவுக்கு க்ரேஸ் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சீரியல்களுக்கு மாற்றாக டாக்-ஷோக்களை மக்கள் ரசிக்கிறார்களா?

நிச்சயமாக அப்படி ரசிகர்கள் நினைக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் டாக்-ஷோக்களுக்கு இந்தளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்குமா?

நீங்கள் பங்கேற்கும் "ஹிட் மேல ஹிட்' நிகழ்ச்சியின் சிறப்பு என்ன?

ரசிகர்களின் அதிகப்படியான எஸ்.எம்.எஸ். எந்தப் புதிய பாடலுக்கு வருகிறதோ அந்தப் பாடலை ஒளிபரப்பும் நிகழ்ச்சிதான் ஹிட் மேல ஹிட். இந்த நிகழ்ச்சியில் ஹீ மேன் போன்று "வி மேன்'(விஜய் டிவி மேன்) ஒருவர் தோன்றி, சுவாரஸ்யமான தகவல்களை, விறுவிறுப்பான சினிமா சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். இதற்கு ரசிகர்களிடமிருந்து நிறைய வரவேற்பு இருக்கிறது.

இன்னும் எதுமாதிரியான நிகழ்ச்சிகளில் உங்களின் திறமையை வெளிப்படுத்த இருக்கிறீர்கள்?

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்துவிட்டு, இப்போதைக்கு எம்.பி.ஏ. படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை. "இத்தனை நிகழ்ச்சியில் தலை காட்டுகிறேன் பேர்வழி' என்றில்லாமல், ஒரு நிகழ்ச்சி செய்தாலும் அதை "இன்வால்வ்மென்ட்'டோடு செய்ய வேண்டும் என்று நினைப்பவள் நான்.

மீடியாவில் நீடிப்பது மட்டும்தான் உங்களின் லட்சியமா?

ஏற்கனவே நான் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தம்பி பத்தாவது படிக்கிறான். இரண்டு மூன்று வருடங்களில் அவனும் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க இருக்கிறான். இந்த இரண்டு மூன்று வருடங்கள் அவனோடு ஜாலியாக லூட்டி அடித்துக் கொண்டிருப்பது, பெற்றோர்களுடன் இருப்பதை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். நானே ஒரு ஹோம்-சிக் பேர்வழி. ரொம்ப நாள் வீட்டைப் பிரிந்து என்னால் இருக்கமுடியாது. ஆனாலும் படிப்பு என்று வரும்போது போய்தானே ஆகவேண்டும்? தம்பி வெளிநாட்டிலிருந்து வந்துவுடன் நான் மறுபடியும் செல்ல வேண்டியிருக்கும். பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையில் சாதனைகளைப் புரியவேண்டும். அதற்கு உதவும் படிப்புகளில் ஜெயிப்பதுதான் என் லட்சியம். மீடியா எப்போதுமே எனக்கு பேஷன் (டஹள்ள்ண்ர்ய்) தான்! [tscii:362819bf62][/tscii:362819bf62]

R.Latha
26th October 2007, 08:17 AM
ஒரு நடன விழாவைத் தொடங்கிவைக்க அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா, ""நான் நடனத்தை இருந்து பார்த்து விட்டுத்தான் போவேன்!'' என்று காத்திருந்து நடனத்தைப் பார்த்து, பாராட்டி விட்டுப் போனார். அது, டான்ஸ் மாஸ்டர் தம்பதிகளான வாமன்- மாலினி தம்பதிகளின் மகள் நீபாவின் பரத நாட்டிய அரங்கேற்றம். அழகான அவரது கண்கள் பேசும்போதே அபிநயம் பிடிக்கிறது.


ஆடும்போது அலைபாயும் அதன் அபிநயத்தை சொல்லவும் வேண்டுமா?

வாணிமஹாலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு நாமும் அழைக்கப்பட்டிருந்தோம். அவரது நடனத்தைப் பார்த்த வியப்பு மீளாமலேயே பேட்டியைத் தொடங்கினோம்...

என்ன திடீர் அரங்கேற்றம்?

""திடீரென்று இல்லை. பல மாதங்களாக வீணா ரமணி மாஸ்டரிடம் கிளாசிக்கல் டான்ஸ் கத்துகிட்டு வந்தேன். இப்போதான் அரங்கேற்றம் பண்ண காலம் கனிந்திருக்கு. டைரக்டர் பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன், தேவயானி, இராஜகுமாரன், ராதிகா சுர்ஜித் என நிறைய பேர் வந்து பாராட்டினாங்க.

என் கூட "மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடன டீமும் வந்து வாழ்த்தியது. ரொம்ப பெருமையா இருக்கு. நான் கற்றது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா?

சினிமாவில் நடிக்கும்போதே சீரியலிலும் நடிக்கிறீர்களே?

எனக்கு நல்ல வாய்ப்புகள் சினிமாவில் இன்னும் வரலை. பேசப்படும் அளவுக்கு நல்ல ஒரு கேரக்டர் அமைஞ்சதுன்னா அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரும்.

அதுவரைக்கும் கிடைக்கும் கேரக்டர்களில் ஜொலிக்க வேண்டியதுதான். சும்மா வீட்டில் இருக்க முடியாதே. இப்போ கூட பாரதிராஜா ஸôர் என் நடனத்தைப் பார்த்துவிட்டு என்னை வைத்து ஒரு ஃபோட்டோ செஷன் எடுக்கணும்னு சொல்லியிருக்காரு.

தற்போது நடித்து வரும் படங்கள்?

"பெருசு' படத்திற்குப் பிறகு நடித்த "கண்ணும் கண்ணும்' படம் விரைவில் ரிலீஸôகுது. சின்ன கேரகடர் என்றாலும் நச்சுன்னு இருக்கும். இப்போ "பள்ளிக்கூடம்' படத்தில் சீமான் மனைவியா நடித்ததைப் பல பேர் பாராட்டினாங்க.

அதுமாதிரி சின்ன கேரகடர் என்றாலும் "அம்முவாகிய நான்' படத்தில் பார்த்திபன் அக்கா மகளாக எனக்கு மனசுக்குப் பிடித்த விட்டுக்கொடுக்கும் கேரகடர். கெஸ்ட் ரோல் என்றாலும் மறுப்பதில்லை. அதிலும் அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புதான்.

இப்போ ஜாகுவார் தங்கம் மகன் விஜயசிரஞ்சீவி நடிக்கும் "சூர்யா', "வயசு அப்படி', "மாயவரம்', "வசந்தத்தை நோக்கி' போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

சின்னத்திரையில் நடிக்கும் நிகழ்ச்சிகள்?

சன் டி.வி.யில் "பந்தம்' தொடரில் ஆண்ட்டி கேரக்டர் பண்றேன். "மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சி மூலம் நல்ல பேரும், பாராட்டும் கிடைச்சிருக்கு. பாலன் இயக்கிய "ராசாத்தி' என்கிற டெலிஃபிலிமில் எனக்குப் பிடிச்ச நல்ல கேரக்டர் கிடைச்சிருக்கு.

டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்ற எண்ணமிருக்கா?

அம்மாவும், அப்பாவும் ஏ. கே. சோப்ரா மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தவர்கள். "கோடைமழை' படத்தின் மூலம் அறிமுகமாகி இருவரும் úஸôலோவாகவும் ஆடியிருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு இந்தத் துறையில் முன்னுக்கு வந்தவர்கள்.

அதனால் எனக்கு சினிமாவில் நுழைவது எளிதாக இருந்தது.
நடிப்புக்காக மட்டும்தான் நான் அம்மா அப்பாவிடம் டான்ஸ் கத்துகிட்டேன். ஆனால், டான்ஸ் மாஸ்டராக வரவேண்டும் என்று இதுவரை நினைக்கவில்லை. நடிப்பில் அதிக ஆர்வம், ஈடுபாடு இருப்பதால், வெற்றி கிடைக்கும் வரை அதில்தான் என் கவனமெல்லாம்.

உங்களை நடனத்தில் அசர வைத்தவர் யார்?

பிரபுதேவாதான். அவர்தான் என் மானசீக குரு. அவரைப் பார்த்து, அவரிடமிருந்துதான் நான் நடன அசைவுகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அவரின் நடனத் திறமைதான் நேற்று அவரை நடிகனாக்கியது. இன்று இயக்குனராகவும் மாற்றியிருக்கிறது.

அவர் இயக்கிய "போக்கிரி' படத்தில், நடனத்தில் மட்டுமல்லாது ஆக்ஷனிலும் அசத்தியிருப்பார். இப்போது ஹிந்திப் படம் டைரக்ட் பண்றார் என்று நினைக்கும்போது பெருமையா இருக்கு. அதே மாதிரி லாரன்ஸ் மாஸ்டர். அவரோட வெற்றியைப் பார்க்கப் பிரமிப்பா இருக்கு.

அவர் ஊனமுற்ற கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி நடனம் ஆடவைப்பது ஆச்சர்யமா இருக்கு. அதேபோல் எதுவுமில்லாத, முதியோர்களுக்குப் பல உதவிகளையும் செய்து வர்றார்.
அழகானவங்க யார்னு கேட்டா முக அமைப்பில் சொல்லாம, அக அமைப்பில் உண்மையா இருக்கறவங்களைச் சொல்லணும்.

அதுதான் சரியா இருக்கும். உள்ளத்தில் மற்றவர்களை நினைத்து தியாக வாழ்க்கை வாழ்பவர்கள்தான் அழகானவர்கள். அந்த வகையில் லாரன்ஸ் மாஸ்டர்தான் அழகில் என்னைப் பிரமிக்க வைத்தவர்.

இருப்பதிலேயே எளிதான நடனம் எது?

குத்து டான்ûஸ யார் வேண்டுமானாலும் ஆடி விட முடியும். அதற்குப் பெரிய அளவில் இலக்கணம் எதுவும் கிடையாது. ஆனால் கிளாசிக்கல் டான்ஸ் அந்த மாதிரி கிடையாது. அது சிக்கலானது, அதை முறைப்படிதான் பயில வேண்டும்.

அதுக்கு ரொம்ப பொறுமையும், நிதானமும் வேணும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அதில் அதிக ஈடுபாடும், திட்டமும், உழைப்பும் வேணும். அதனால், நடனம் என்று முடிவு எடுக்கும்போது எல்லாவகை நடனத்தையும் கத்துக்கிட்டா எளிதாக இருக்கும்.

கதை எழுதறவங்க எப்படி எல்லாவகையான உலக இலக்கியங்களையும் தேடிப்பிடித்து தங்கள் அறிவை வளர்த்துக்கிறாங்களோ, அதே மாதிரி நடனத்தில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களும் புதிய புதிய நடன வகைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் முயற்சிகளோடே இருப்பது நல்லது.

பெற்றோரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

அவங்களோட முழு ஒத்துழைப்பாலதான் நான் இந்தளவுக்குப் பயிற்சியும், முயற்சியுமா இருக்கேன். நான் சினிமா உள்ளவரை... ஸôரி! நான் இருக்கும் வரை சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை உருவாக்கி நடித்துக் கொண்டிருப்பேன்.

அதில், நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தை மக்கள் தருவார்கள். எனக்குத் தெரிந்தது எல்லாம் சினிமாதான்'' என்று தனது விழிகளை அபிநயம் பிடிப்பதுபோல் உருட்டி, ""என்ன சரிதானே!'' என்பது போல் கேட்கிறார் நீபா! [tscii:e0a3e37444][/tscii:e0a3e37444]

aanaa
26th October 2007, 05:37 PM
தகவலுக்கு நன்றி

R.Latha
26th December 2007, 02:25 PM
""இனி என் எல்லாச் சந்திப்புகளும் சில்லுன்னு ஒரு சந்திப்புதான்'' என்கிறார் நடிகை ஷார்மிளா. விஜய் டி.வி.யில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பு இல்லாத நிலையில் திரைத்துறையில் இருந்து சின்னத்திரைக்குப் பலர் தாவுவது வழக்கம். ஆனால் "இதயதுடிப்பு', "வதம்' உட்பட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிற நிலையிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்துகிறார் ஷார்மிளா. அவருடன் அமைந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு:

வழக்கமான டாக் ஷோ நிகழ்ச்சிகளிலிருந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு' எந்தவிதத்தில் வித்தியாசப்படுகிறது?

இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சாதனையாளர்களையும் அவர்கள் பற்றிய விவரங்களும் எல்லோருக்கும் தெரியும். சாதனையாளர்கள் உருவாவதற்கு ஏணிப்படிகளாய் இருந்தவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? சாதித்த பிறகு எத்தனை பேர் தங்கள் ஏணிப்படிகளை நினைவுகூர்கிறார்கள்? இந்த நிகழ்ச்சி மூலம் ஏணிப்படிகளை நாங்கள் கவுரவிக்க இருக்கிறோம். நடிகர் மாதவன் பேட்டியை ஒளிபரப்புகிறோம் என்றால் அவர் வெற்றிபெறுவதற்கு யார் உறுதுணையாக இருந்தாரோ அவரையும் நிகழ்ச்சியில் வரவழைத்து, எந்தெந்த வகையில் எல்லாம் மாதவன் வெற்றிபெற உதவினார். அவர் பார்வையில் மாதவனின் ப்ளஸ் என்ன? மாதவன் மாற்றிக்கொள்ள வேண்டியது எது என்பதையெல்லாம் அலசுகிறோம்.

சாதனையாளர் என்றால் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமா?

அதுதான் இல்லை. மருத்துவம், பொறியியல் என எல்லாத்துறை சாதனையாளர்களும் இந்த நிகழ்ச்சியில் வருவார்கள். மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.

தொடர்பில்லாத துறைகளைச் சேர்ந்தவர்களோடு கலந்துரையாடுகிறபோது உங்களுக்குச் சிரமமாக இருக்காதா?

சாஃப்ட்வேர் என்ஜினியரிங் படித்துள்ளேன். படிப்பு வாசனையும் எனக்கு உண்டு என்பதால் ஓரளவு எனக்கு அனைத்துத் துறை தொடர்பான விஷயங்களும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தபிறகு, எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறேன். புத்தகத்தைப் படித்தெல்லாம் நிகழ்ச்சியை வழங்குவதால் ஏதோ இறுக்கமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். ஜாலிக்கு ஜாலி... ஜோலிக்கு ஜோலி என்கிற வகையில் இருக்கும்.

இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இதனால் எனக்குப் பொது அறிவு அதிகம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம். இரண்டாவது இயல்பாகப் பழகக்கூடிய ஒரு நடிகையைத் தேடியிருக்கிறார்கள். மூத்த நடிகைகளைப் போடுகிறபோது, வருகிற சாதனையாளர்கள் அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். அதைப்போல நடிகைகளும் அவ்வளவாகச் சாதனையாளர்களோடு இறங்கி பேசமாட்டார்கள். நான் அப்படியில்லை. நடிகை என்கிற பந்தா எனக்குச் சிறிதும் இதுவரை இருந்ததில்லை. இதனாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

வாய்ப்பு இல்லாதபோதுதான் எல்லோரும் சின்னத்திரை பக்கம் வருகிறார்கள். நீங்கள்?

நான் கதாநாயகியாக நடித்த "இதயதுடிப்பு' என்கிற படம் வெளியாக உள்ளது. "வதம்' உட்பட நாலைந்து படங்களில் தமிழில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வரவில்லை. சீரியலுக்கு நடிக்க வந்தால்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். சங்கீதா, கனிஹா போன்றோர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டே சினிமாவில் நடிக்கவில்லையா? அதைப்போல்தான் நானும் வந்துள்ளேன். இன்னொரு வகையில் சினிமாவில் நடிப்பது என்பது கிணற்றுத் தவளை வேலை போல. இந்நிகழ்ச்சியை வழங்குகிறபோது உலக அறிவு நமக்குக் கிடைக்கிறது. இது எனக்குப் பிடித்திருக்கிறது.

சீரியலில் நடிக்கவே மாட்டீர்களா?

க்ளிசரினுக்கு வேலை இல்லாத நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதுவும் இப்போது இல்லை. பெரிய திரையில் ஒரு வலம் வந்துவிட்ட பிறகுதான். நடிப்புக்கு அடுத்ததாக எழுத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆங்கில கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். "திசை' என்கிற ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதினேன். அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன். நடிப்பிற்கு பிறகு கதை வசனம் எழுதி நானே படங்களை இயக்குவேன். இதுதான் என்னுடைய அடுத்த இலக்காக இருக்கும்.

அப்போதாவது க்ளிசரினுக்கு வேலை இல்லாத சீரியல்கள் எடுப்பீர்களா?

மெகா சீரியல்கள் என்னால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுகிறேன். மூன்று நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை எடுக்கக்கூடிய தகுதி மட்டும்தான் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன்.

உங்கள் ஏணிப்படி யார்?

என் அப்பா. என் அம்மாவுக்குக்கூட என்னைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். என் அப்பாவுக்குதான் என்னைப் பற்றி எல்லாம் தெரியும். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் என் அப்பாவே.

R.Latha
26th December 2007, 02:27 PM
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல... தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் இப்போதெல்லாம் வேற்று மொழித் தொடர்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருப்பவர்களைத் தமிழ் சீரியல்களில் நடிக்க வைப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். இந்த வெள்ளோட்டத்தில் புயலாகப் புறப்பட்டிருப்பவர் மீனாகுமாரி.

மெகா தொலைக்காட்சித் தொடரின் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாகப் பொருந்தும் முகம் மீனாகுமாரிக்கு. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். மெகா தொடர்களில் நடிப்பதோடு அவ்வப்போது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மீனாகுமாரி நம்மிடம் பேசியதிலிருந்து...

மலையாளத்தில் என்னென்ன சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள்?

ஸ்த்ரி ஜென்மம், வாத்ஸல்யம், ஸ்ரீராமன் ஸ்ரீ தேவி போன்ற மலையாள மொழித் தொடர்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கிலும் நிறைய தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் அன்பு மொழி, ஏவி.எம்.மின் "நாணயம்' போன்ற பிரபல தொடர்களில் நடித்துள்ளேன்.

தற்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் உங்களுக்கு மாறுபட்ட கேரக்டர்கள் கிடைத்திருக்கிறதா?

நிச்சயமாக. கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "வைரநெஞ்சம்' தொடரில் என்னுடைய கேரக்டர் பெயரே சக்தி. பெயருக்கு ஏற்றாற்போல் குடும்பத்தின் மானத்தையும் காப்பாற்றி, தன்னுடைய சுயகெüரவத்தையும் காப்பாற்றும் வலிமையான பாத்திரம். ஒரே வீட்டில் மருமகள்களாகப் போகும் அக்கா, தங்கைக்கு இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதையின் கரு. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில், என்னுடைய கேரக்டரின் பெயர் காவேரி. பொறுப்பைத் தட்டிக் கழித்தே பழகிவிட்ட தந்தை, அவருடைய செயல்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாத அம்மா, தம்பி, சகோதரி... என்று பெரிய குடும்பத்தைக் காப்பாற்றும் ஒருவரே சம்பாதிக்கும் உறுப்பினராக நான். இந்த நிலைமையில் என் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள்தான் கதை. இரண்டு சீரியல்களிலும் என்னுடைய நடிப்புக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

திரைப்பட வாய்ப்பு வந்தால் சீரியலில் நடிப்பதற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் தருவீர்களா?

திரைப்படங்களில் நடிப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சீரியல் என்பது அப்படியில்லை. மெகா சீரியலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால் அதற்குரிய பொறுப்புணர்ச்சியோடு முடித்துக் கொடுக்கவேண்டும். மெகா தொடர்களில் நான் நடிப்பதற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் நடிப்பதாக இருந்தால் திரைப்படங்களில் நடிப்பதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கண்டிஷனோடுதான் சமீபத்தில் கூட "கிரீடம்' படத்தில் அஜீத்தின் சகோதரியாக நடித்தேன்.

மெகா சீரியல்களுக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் மெகா சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அந்தளவுக்கு சீரியல்கள் முக்கியத்துவம் கொடுக்கிறதா? திடீரென்று நினைத்தால் ஒருவரை நீக்கிவிடுகிறார்களே...?

நான் முன்பே சொன்னது போல் மெகா சீரியல் என்பது நீண்ட நாள் எடுக்கப்படும் விஷயம். இரண்டு வருடம் மூன்று வருடம் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், அந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்கள் நடக்கலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையலாம். சிலருக்கு திருமணம் நடந்து, தொடர்ந்து நடிக்க முடியாத நிலை வரலாம். இதுபோல் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர்களும், வேறு சில காரணங்களால் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில நடிகர்களை மாற்றுவது நடக்கிறது. இது எல்லோருக்கும் நடக்கும் விஷயம் அல்ல. எப்போதாவது, யாராவது ஒருவருக்கு நடக்கும் விஷயம். இது நடப்பதற்கும் பின்னணியில் நிச்சயமாக நியாயமான காரணம் இருக்கும். ரசிகர்களுக்கு தேவை நல்ல கதையும். திறமையான நடிகர்களும்தான்.

நடிகராக இல்லை, ரசிகராக இருந்து சொல்லுங்கள். தொலைக்காட்சி ரசிகர்களின் ரசிப்புத் தன்மையில் எத்தகைய மாறுதல் வரவேண்டும்?

இப்போது நிறைய சேனல்கள். நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. ரசிப்புத் தன்மைக்கும் பஞ்சமில்லை. விளையாட்டு, சீரியல், டாக்-ஷோ, டான்ஸ் ஷோ, பாடுபவர்களுக்கென்று ஷோ, க்விஸ் நிகழ்ச்சிகள், அரட்டை கச்சேரிகள்... குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என்று என்ன இல்லை. எல்லாவற்றையும் ரசிப்பதற்கென்று தனித் தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ரசிகர்களிடம் இன்றைக்கு இருக்கும் ரசனைக்கு என்ன குறை?

ஒன்று அழுது வடிந்து கொண்டிருக்கும் பெண். இல்லாவிட்டால், பழிவாங்கத் துடிக்கும் பெண். இந்த இரண்டு எல்லைகளை நோக்கி நகர்பவளாகத்தானே சீரியலில் பெண்களின் கேரக்டர்கள் இருக்கின்றன?

எப்படிப்பட்ட பாத்திரம் என்பதைச் சொல்வதற்காகத்தான் நீங்கள் சொல்லும் எல்லைகளைத் தொட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலுமே நிறைய அரசியல் இருக்கத்தானே செய்கின்றது! [tscii:17dfc8d5f5][/tscii:17dfc8d5f5]

R.Latha
26th December 2007, 02:30 PM
நடிப்பு, நடனம் என்று எல்லாவற்றிலும் சின்னத் திரை வட்டத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர், ப்ரீத்தி. அவர் டிங்குவுடன் போட்ட ஆட்டத்தைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. ஜோடி நெ. 1 போட்டி நடந்த அரங்கத்தில் இருந்த ஆடியன்ஸ், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் முதல் நடுவர்கள் வரை ப்ரீத்தியின் நடனத் திறமையைக் கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சின்னத் திரை, வெள்ளித் திரை என்று எதைப் பற்றிக் கேட்டாலும் பளிச்சென்று வருகிறது அவரிடமிருந்து பதில்.

மீடியாவில் உங்களின் என்ட்ரி எப்படி, எப்போது நிகழ்ந்தது?

2002-ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே "திரைக்குப் பின்னால்' என்னும் நிகழ்ச்சியை ராஜ் டி.வியில் தொகுத்தளித்தேன். மெகா தொடரைப் பொறுத்தவரை கே.பாலசந்தரின் "வீட்டுக்கு வீடு லூட்டி', "அண்ணாமலை' போன்ற சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். முன்னணி தொலைக்காட்சி இயக்குனர்கள் பெரும்பாலானவர்களின் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்கள்?

கலைஞர் டி.வி.யில் ஏவி.எம்.மின் "வைரநெஞ்சம்' தொடரிலும், கே.பி.சார் டைரக்ஷனில் "நான் அவள் இல்லை' தொடரிலும் நடித்துவருகிறேன்.

தேவையில்லாமல் ஃபுட்டேஜ் பிராப்ளத்திற்காக சீரியல்களில்தான் காட்சிகளை இழுப்பார்கள். இந்த விஷயம் இப்போது டாக்-ஷோ, டான்ஸ் ஷோக்களிலும் தொடர்கின்றதே?

சில விஷயங்களை அந்தக் குறிப்பிட்ட போட்டிச் சுற்று முடிந்தவுடன்தான் ஒளிபரப்ப முடியும். சில எபிசோடில் போட்டியாளர்களின் வீடுகளில், அவர்கள் பயிற்சி பெறும் விதங்களைக் கூட காட்டுவதற்காக இருக்கலாம். மற்றபடி டான்ஸ் ஷோக்களை ஃபுட்டேஜ் பிராப்ளத்தில் சேர்க்க முடியாது.

டான்ஸ்-ஷோவில் பங்கெடுத்தவர்கள் முதல் நடுவர்கள் வரை எல்லோருமே ஏன் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இது இயற்கையானதா, திட்டமிட்ட ஒன்றா?

நிச்சயமாக திட்டமிடல் எல்லாம் கிடையாது. அந்தந்த நேரத்தில் நிகழ்ந்ததைத்தான் ஜோடி நெ.1-ல் நீங்கள் பார்த்தீர்கள்.

ஜோடி நெ.1 போட்டியில் பரிசு பெற்ற பணத்தைக் கொண்டு சமூகத்திற்குப் பயன்படும் வகையில் ஏதாவது செய்வதற்கு திட்டம் உள்ளதா?

எதிர்காலத்தில் நிச்சயமாகச் செய்வேன்.

போட்டியின் போது அடிக்கடி கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று நடுவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்களே...என்ன அது?

நம்முடன் ஆடும் பார்ட்னர்களின் மூவ்மென்ட்களுக்கு ஏற்றார் போல் நம்முடைய மூவ்மென்ட்களில் சிலச் சில மாற்றங்களை உடனுக்குடன் செய்வதுதான் கெமிஸ்ட்ரி. வேற ஒண்ணுமில்லீங்க!

ஜோடி நெ.1-ல் ஜெயித்ததின் மூலம் கிளாசிக்கல் டான்சர் என்ற இமேஜில் பாதிப்பு வராதா?

அது வேறு. இது வேறு. நான் கலாக்ஷேத்திராவில் நடனம் பயின்று கிளாசிக்கல் டான்சராக இருப்பது, சின்னத் திரை ரசிகர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நான் நடிகையாக மட்டுமே அவர்களுக்கு அறிமுகமாகியிருந்தேன். நான் ஆடவும் செய்வேன் என்பதே நிறையப் பேருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

பெருகி வரும் நடனப் போட்டிகள், டாக்-ஷோக்கள் போன்றவற்றால் மெகா சீரியல்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

எல்லாவகையான ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதற்கே சேனல்கள் இயங்குகின்றன. அதனால் எந்தப் புது விஷயத்தாலும், சீரியல்களுக்கு இருக்கும் மவுசு பாதிக்கப்படாது.

சினிமாவில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகருடன் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தால் ஆடுவீர்களா?

நிச்சயமாக ஆடமாட்டேன்.

உங்களின் ரியல் ஜோடியைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

இன்னும் இல்லை. இப்போதென்ன அவசரம்?!

R.Latha
31st January 2008, 12:56 PM
Meera Vasudevan Interview

குடும்பப் பிரச்சினை... காவல் துறையில் புகார்... விவாகரத்து... செய்திகளுக்குப் பிறகு தெள்ளத் தெளிவான மீரா வாசுதேவனை கலைஞர் டிவியில் பொங்கலன்று பார்க்கமுடிந்தது. டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் ஷோவில் காம்பியரிங் கலக்கல் மீராதான்!

இனி ஹஸ்கி வாய்ஸில் மீராவின் பதில்கள்...

நீங்கள் காம்பியரிங் செய்யும் ரியாலிட்டி ஷோவின் தனித் தன்மை என்ன?

நீங்கள் இதுவரை பார்த்த எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி, அதில் ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக இருக்க வேண்டும், ஐ.டி. பார்க்குகளில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்கும். கலைஞர் டி.வி.யில் கலா மாஸ்டர் டைரக்ட் செய்யும் டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கூட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறோம். இதுதான் நான் காம்பியரிங் செய்யும் இந்த ரியாலிட்டி ஷோவின் ஸ்பெஷாலிட்டியே!

சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் சின்னத் திரையில் நடிக்க வந்தீர்களா?

அப்படிச் சொல்ல மாட்டேன். சிறந்த நடிகைக்கான தமிழ் மாநில அரசின் விருதைப் பெற்றவள் நான். ஏனோதானோ என்று என்னால் படங்களில் நடிக்க முடியாது. என்னுடைய இந்தத் தீர்மானத்தில் மண் விழுந்தது, என்னுடைய திருமணத்திற்குப் பின்தான். என்னுடைய கணவரின் வற்புறுத்தலால் பல படங்களை எனக்கு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. நல்ல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்பதாக இல்லை. அவர்களின் வற்புறுத்தலால்தான் டிவி பக்கமே வந்தேன். ஆனால் கணவன் போடாத சோறை, எனக்கு இந்தச் சின்னத் திரைதான் இப்போது போட்டுக் கொண்டிருக்கிறது!

என்ன படிக்க வேண்டும், எந்த மாதிரியான பணியில் ஈடுபடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இந்தக் காலப் பெண்கள், தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு விடுவது ஏன்?

எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், புகழின் உச்சியில் இருந்தாலும் தனக்காக உருகும் ஒரு துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பவளாகத்தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். இதற்கு நான் உள்பட எந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்புதான் பெண்களின் பலவீனம்; இந்த பலவீனத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம்.

மீடியாவின் வெளிச்சத்தில் வலம் வரும் பல பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருட்டு சூழ்ந்திருக்கிறதே...?

பேங்க் பணியில் இருப்பவர், மார்க்கெட்டில் காய், கனிகள் விற்பவர், ஐ.டி. பணிகளில் இருப்பவர்.... இப்படிச் சமூகத்தில் எந்தப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. மீடியாவில் புகழின் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் தோல்விகள்தான் எல்லோருக்கும் எளிதாகத் தெரியும்.

டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ எவ்வளவோ வந்தாலும் மக்களிடம் சீரியல்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையவில்லையே?

இனிமேலும் குறையாது என்பதுதான் என்னுடைய கருத்து. டாக் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே பார்ப்பவர்களை என்டர்டெயின் பண்ணுவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது. சீரியல்கள் அப்படி இல்லை. அதன் ஒவ்வொரு எபிசோட்டுடனும் ரசிகர்கள் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோடு, சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் கதைச் சம்பவங்களை பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். வெற்றியும், தோல்வியும், பொறாமையும், மாமியார் கொடுமையும், குடிகார கணவர்களின் கொடுமையும் இவற்றுக்கு எதிராகப் போராடும் பெண்களின் கதைகளும் தானே இன்றைக்கு பெரும்பாலான தொடர்களின் மையக் கருத்தாக இருக்கின்றது. இதற்கு பெண்களிடம் வரவேற்பு எப்படிக் குறையும்?

டி.வி.சேனல்களில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

குழந்தைகளுக்கென்று சேனல்கள் இருக்கின்றன, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான சேனல்கள் இருக்கின்றன. கலந்துரையாடல், அர்த்தமுள்ள அரட்டை அடிப்பதற்கான சேனல்கள் இருக்கின்றன. இளைஞர்களுக்காக டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ போன்றவைகளுக்காக தனித் தனி சேனல்கள் இருக்கின்றன. விளையாட்டுக்கென்று இருக்கின்றன... இன்னும் என்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். போதுமான அளவுக்கு எல்லா சேனல்களுமே இருக்கின்றதே!

கிளிசரின் தேவைப்படாத கதாபாத்திரங்கள் உங்களுக்கு சின்னத் திரையில் கிடைக்கின்றதா?

நிச்சயமாகக் கிடைக்கின்றது என்றுதான் சொல்லுவேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூர்யவம்சத்தில், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையையும், குடும்ப மானத்தையும் மனம் கலங்காமல் காப்பாற்றும் வேடம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வைஜெயந்தி ஐ.பி.எஸ். தொடரில் காக்கிச் சட்டை அணிந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதில் கிளிசரினுக்கு வேலை இல்லை... துப்பாக்கிக்குத்தான் வேலை!

முன்னணி நடிகைகளாக இருந்தவர்களே, ரீ-என்ட்ரி ஆகும்போது "ஐட்டம் சாங்'குகளில் தூள் கிளப்புகிறார்கள்... நீங்கள் எப்படி?

ஐட்டம் சாங் ஆடவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் நடிப்புத் திறமைக்கேற்ற வாய்ப்பு நிச்சயம் வரும். சின்னத் திரையில் இன்னும் நிறைய சீரியல்களில் நடிப்பேன். மறுபடியும் சினிமாவில் நல்ல ரோல்களில் என்னைப் பார்க்கலாம். இது உறுதி. இனிமேல் எனக்கு நல்ல காலம்தான்!

R.Latha
31st January 2008, 01:03 PM
Chandra Lakshmanan (Kolangal) Interview

"செய்யற வேலை யை ஒழுங்கா செஞ் சாத் தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது!' விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலில் நடிக்கும் சந்திரா லட்சுமணனை "ஜோடி நெ.1' போட்டி ஆட் டத்தின் போது "பேட்டி'க்கு சந்தித்தோம். சந்திராலட்சுமணனின் சுவாரஸ்யமான பேட்டி:



* நீங்கள் நடிக்கும்"காதலிக்க நேரமில்லை' சீரியலில் திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்பது போல கதை போகிறதே?

காதலிக்க நேரமில்லாத ஆணும், பெண்ணும் காதலிப்பதற்காக ஒரு புதிய தளத்தை உருவாக்கி தங்களுடைய காதலை சொல்ல முயல்றாங்க. திருமண பந்தம் இக்காலக் கட்டத்தில் சுமையாக கருதப்படுகிறதா? திருமணத்திற்கு முன் இருவரும் இணைந்து வாழும் உறவை ஏற்றுக் கொள்ள முடியுமா? உண்மையான காதலை எப்படி தெரிந்து கொள்வது? பரபரப்பான இந்த வாழ்க் கை சூழலில் காதலுக்கு நேரம் உண்டா, காதலிக்கும் போது இருக்கும் நேசம், பாசம் திருமணம் முடிந்த சில காலங்களில் குறைந்துவிடுகிறதா இப்படி பல கேள்விகளோடு "காதலிக்க நேரமில்லை'கதை போகிறது. சீரியலில் எனக்கு டைரக்டர் கொடுத்த கேரக்டரை செஞ்சிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்கிற கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.

* கோவிலில் "சீட்' எழுதிப் போட்டு, நடிக்க வந்ததாக பேசப்பட்டதே?

காலேஜ்ல கேட்டரிங் டெக்னாலஜி படிச்சு முடிச்ச பிறகு அடையார்ல பார்க்ஷெரட்டன் ஒட்டலில் டிரெயினிங் போயிருந்தப்ப,அங்கு என்னை டைரக்டர் சந்தோஷ் பார்த்தார். அவரது படத்தில் நடிக்கிறியான்னு கேட்டார். அப்பா அம்மாக்கிட்டே சொன்னேன். அவுங்க சாமிக் கிட்டே கேட்டுடலாம்ன்னு சொல்லி "சீட்' எழுதிப் போட்டு பார்த்தோம். நடிக்கலாம்ன்னு வந்தது. படத்தில் நடிச்சேன். மலையாளத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து "ஸ்டாப் வயலன்ஸ்' படத் தில் நடிச்சேன். நுõறு நாட்களை தாண்டி ஓடியது. தொடர்ந்து 10 படங்களில் நடித் தேன். சீரியலிலும் நடிச்சிட்டிருக்கேன்.

* "காதலிக்க நேரமில்லை' சீரியலில் உங்களோடு இணைந்து நடிக்கும் பிரஜினும் நீங்களும் "ஜோடி நெ.1'லும் இணைந்து ஆடும் வாய்ப்பு எப்படி வந்தது?

விஜய் "டிவி' நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களை வச்சு தான் "ஜோடி நெ.1' வடிவமைக்கப்பட்டுள்ளது."காதலிக்க நேரமில்லை'யில் நானும் பிரஜினும் நடிப்பதால் இப் போட் டியில் ஜோடி போட்டு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. வேறு ஏதும் காரணம் இல்லை.

* நடிகை ஸ்ரீவித்யாவுடன் சேர்ந்து முன்பு மேடைகளில் கச்சேரி செய்ததாக சொன்னார்களே, இசையில் நாட்டம் உண்டா?

இசையின் மீது ஆர்வம் அதிகமிருந்ததால கத்துக்கிட்டேன். குருவாயூர் கோவிலில் நானும் ஸ்ரீவித்யா மேடமும் சேர்ந்து பாடி னோம். மென்மையான மனுஷி. அவுங்க இறந்த மாதிரியே தெரியலை. அவுங்க உயிரோடு இருப்பது போலவே நினைக்க தோன் றது. நாங் கள் தெய்வச் சன்னதியில் சேர்ந்து பாடியதை மறக்க முடியாது.

* அதிர்ஷ்டம் என்று நினைப்பது எதை?

சினிமா "டிவி'யில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இரண்டு, மூன்று வருடம் கழிச்சு பிரேக் வந்துடும். எனக்கு அப் படி பிரேக் ஏதும் ஏற்படலை. சினிமா, சீரியல்ன்னு வாய்ப்பு வந்திட்டிருக்கு. எல்லாம் கடவுள் கொடுக்கிறார்ன்னு நினைச்சிட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கேன். இது என்னோட அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறேன்.

* கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏதும்?

கல்லூரினா காதலிலில்லாம இருக்குமா. எனக்கு காதல் வரலை. ஆனா நிறைய லவ் லெட்டர் வந்தது. எதையும் கண்டுக்காம விட்டுட்டேன். இப்ப நினைச்சா சிரிப்பாயிருக்கு. எந்தக் கவலையும் தெரியாம ப்ரி பேர்ட்ஸா பறக்கிற காலம் காலேஜ் லைப் தாங்க.

* காதல் விஷயத்தில் இப்போது உங்கள் நிலை...?

""காலேஜ் லைப்ல லவ் லெட்டரை ஜாலியா எடுத்து விட்டுடலாம். தொழில்ல லவ்'வின் பார்வை வேறு விதமாகதான் இருக்கும். செய்யற வேலையை ஒழுங்கா செஞ்சாத்தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது. என்னோட பழகுகின்ற மற்றவங்களுக்கும் நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரியும். அதனால யாரும் காதல் கணை இதுவரை தொடுக்கலை.எனக்கு லவ்'வும் வரலை. லவ்' பண்ண பயப்படவும் வேண்டியதில்லை. அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு நான். ஒரு ஆளைக் காட்டி இவரைத் நான் காதலிக்கிறேன். மேரேஜ் செஞ்சு வைங்கன்னா செஞ்சு வச்சுடுவாங்க. என்னோட முடிவுகள் சரியானதாகத் தானிருக்கும்ன்னு பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் இதற்கு காரணம். <<உலக நடப்புகளை அப்பா அம்மா எனக்கு சொல்லிக் கொடுத் திருங்காங்க. எப்படி வாழ்ந்தால் பிரச் னையில்லாமல் பெருமையா வாழலாம்ன்னும் சொல்லி வளர்த்திருக்காங்க. இப் படி வளர்க்கப்பட்ட நான் எப்படி "ரூட்' மாறி போவேன் சொல் லுங்க. எனக்கு வர்ற மாப் பிள்ளை என் அப்பா அம்மாவுக்கு பிடித்த ஆளாகத் தானிருப்பார். கடவுள் எனக்கு வேண்டியவரை தான் என்னிடம் காட்டுவார்,'' என்று ஆர்வமாக சொன்னார் சந்திராலட்சுமணன்.
[tscii:7eec098f1d][/tscii:7eec098f1d]

R.Latha
31st January 2008, 01:05 PM
Priyanka Interview

சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் "தவம்' சீரியலில் ஷூட்டிங்'கில் பிரியங்காவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""அப்பா அம்மாவை பத்திரமா பாதுகாக்கணும், அவுங்களோட வயசான காலத்தில நாம காட்டும் பாசம், பரிவு அவுங்களை சந்தோஷப்படுத்தணும். முதியோர் இல்லத்தில விட்டுட்டு அவுங் களை அன்புக்கு ஏங்க வைக்கக் கூடாது,'' என்று உருக்கமாக சொன்னார். பிரியங்காவின் பேட்டி:



* சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து "டிவி'பக்கம் வந்துட்டீங்களே?

நடிக்கணும்ன்னு வந்துட்டு, சினிமாவில் நடிக்க ஆசையில் லாம இருக்குமா. "காதல் கிறுக் கன், துõள், மருதமலை, அலை' ன்னு பல படங்கள்ல நடிச்சிட் டேன். சினிமாவுல நடிக்க காத்திருந்து நாட்களை வேஸ்ட் செய்ய வேண்டியிருந் தது. "டிவி' பக்கம் வந்ததால ஒவ்வொரு நாளும் பிரயோசனமானதாக இருக்கு. மாதத் தில் 20 நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். "டிவி'ப் பக்கம் வந்ததால சினிமாவுக்கு நான் ஒன்றும் "குட்பை' சொல்லிடலை. நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.

* காமெடி சீனில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப் பட்டதே?

எனக்கு காமெடி சீன்ல நடிக்க ஆசையிருக்கு. "மருதமலை' படத்தில வடிவேலுவுடன் நடிச்சேன். சாதாரணமான சீனை வடிவேலுவிடம் கொடுத்தாலே போதும், மனுஷர் அட்டகாசமா காமெடி செஞ்சு அசத்திடுவார். சீன்'ல அவரோட ஈடுபாடு,எதார்த்த ரீயாக்ஷன்ல இருக்கிற காமெடி கலக்கல் மிரட்டும். சென்டிமென்ட் சீன்'ல நடிக்கிறதைவிட காமெடி சீன்'ல நடிப்பது சிரமம். இருந்தாலும் சென்ட்டிமென்ட் சீனைவிட காமெடி சீனுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கு. காமெடி சீன்'ல நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சா வெளுத்து வாங்கிடுவேன்.

* சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிப்பது பற்றி?

வில்லி கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன்னு சொல்றதைவிட இந்த கேரக்டரில் நல்லா செய்வேன்னு நினைச்சு டைரக்டர்கள் கொடுக்கிறாங்க. ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் முக்கியமானவங்களா இருந்தா லும், டேர்னிங் பாயிண்ட்'டா வில்லி கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. நடிக்க வந்த பிறகு இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டிருக்கலாமா, எந்தக் கேரக்டரிலும் நான் நடிப்பேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஏ.வி.எம்.. நிறுவனத்திற்காக "ஸ்டில்' சாரதியுடன் ஒரு சந்திப்புக்கு காம்பியரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் சித்தி, அண்ணாமலை, அஞ்சலி'ன்னு நிறைய வாய்ப்பு வந்தது. அரசி, தீரன் சின்னமலை, தவம், ரேகா ஐ.பி.எஸ்., நடிச்சிட்டிருக்கேன்.

* நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்க நினைக்கும் இயக்குனர்கள் பற்றி?

படத்தின் கதையை சொல்லும் போதே இயக்குனர்கள் சீன்களை சொல்லிடுவாங்க. அதில் கிளாமராக நடிக்க வேண்டிய சீன் இருந்தாலும் சொல்லிடுவாங்க. எதுவும் சொல்லாம ஷூட்டிங் ஸ்பாட்'டில் போய் டைரக் டர் சீன் சொல்லி கிளாமரா நடிக்கணும்ன்னு சொல்லும்போதுதான் பிரச்னை வந்துடுது. சீன் பற்றி முன்பே பேசிட்டா ஷூட்டிங்' போகும் போது பிரச்னை இருக்காது. கிளாமராக நடிப்பது பற்றியும் பிரச்னை வராது.

* தவிர்க்க வேண்டிய விஷயம் என்று ஏதும் மனதில்?

""அப்பா, அம்மாவைவிட கண்கண்ட தெய்வம் இல்லைன்னு தான் சொல்வேன். அவுங்க வயசான காலத்தில அவுங்களை இடைஞ்சலா நினைக்கக்கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவுங்களை கவனிச்சிக் கிடறதுக்கும் நேரம் ஒதுக்கணும். வசதி வாய்ப்பிருந்தும் பல பேர் பெற்றோர் களை முதியோர் இல்லத் தில கொண்டு போய் விடறாங்க. அவுங்க அங்கு அன்புக்கு ஏங்கி தவிக்கிறாங்க, நம்மலை எப்படியெல்லாம் பாது காத்து வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கணும். அம்மா, அப்பாவை கடைசி வரை சந்தோஷமா காப்பாத்தணும். குழந் தைங்க நம்மளை நல்லபடியா பாத்துக்கிடுதுன்னு அவுங்க சந்தோஷப்பட்டாத்தான் நாம நல்லாயிருப்போம்,'' என்று உருக்கமாக சொன்ன பிரியங்காவை அவரது அம்மா மொபைல் போனில் அழைக்க பறந்தார்.
[tscii:7d6f912e69][/tscii:7d6f912e69]

aanaa
31st January 2008, 07:55 PM
Thanks for the info LATHA

Arthi
31st January 2008, 08:06 PM
who is Chandra Lakshmanan in kOlangal??? :confused2:

aanaa
1st February 2008, 08:53 PM
who is Chandra Lakshmanan in kOlangal??? :confused2:

Ganka

check here
http://mychandu.wordpress.com/2007/11/28/kadhalikka-neramillai-vijay-tv-serial/

Arthi
2nd February 2008, 01:04 PM
who is Chandra Lakshmanan in kOlangal??? :confused2:

Ganka

check here
http://mychandu.wordpress.com/2007/11/28/kadhalikka-neramillai-vijay-tv-serial/

nandri :D

aanaa
6th February 2008, 07:45 PM
[tscii:77c1f223d2]ஐம்பதாவது பகுதியை கடந்து வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது சந்தனக்காடு தொடர். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் இத்தொடர் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை ஒப்பனையில்லாமல் வெளிப் படுத்தி வருகிறது. படத்தின் இயக் குனர் வ.கவுதமனை தமிழ்திரையுல கத்தின் முக்கிய இயக்குனர்களும், தமிÖறிஞர்களும், தமிழ் ஆய்வா ளர்களும் பாராட்டி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் பிரான்ஸ், மலே சியா, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அயல் நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்த தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னைக்கே வந்து கவுதமனை பாராட்டியதோடுஇத் தொடரை தடை செய்ய சொல்லி தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார். எதிர்கால சந்ததிகளான சின்னக்குழந்தைகள் என் வீட்டுக்காரரின் மேல் இருந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வது போல் இந்த தொடர் அமைந்திருக்கிறது. உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்திருக்கிறீர்கள். என் பகுதியும் என் குழந்தைகள் பகுதியும் வர எனக்கு முழு சம்மதம் என்று தெரிவித்து இருக்கிறார் முத்துலட்சுமி.

சந்தனக்காடு தொடர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக டைரக்டர் கௌதமன் கூறினார். "சந்தனக்காடு தொடருக்காக அவர் கஷ்டப்பட்டு உழைத்துப் கொண்டிருக்கிறார். இதன் பயனாக கவுதமனுக்கு 2 சினிமா படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தனக்காடு தொடரில் வீரப்பன் வேடத்தில் கராத்தே ராசா, முத்துலட்சுமி வேடத்தில் தீபிகா (இவர் 10ம்வகுப்பு மாணவி) அர்ச்சுனன் வேடத்தில் வ.லெனின், வால்டர் தேவாரம் வேடத்தில் அழகு நடித்துள்ளனர். [/tscii:77c1f223d2]

aanaa
6th February 2008, 07:46 PM
ஜெயா டிவியின் அடுத்த புத்தம் புதிய நிகழ்ச்சி கடிச்சா தங்கம். தினமும் இரவு 8.30 மணிக்கு

ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாஸ்கி தொகுத்து வழங்குகிறார்.

இது நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். இதில் நேயர்கள் கலந்து கொண்டு கடி ஜோக் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

நிகழ்ச்சியின் இடைஇடையே நகைச் சுவை காட்சிகள் காட்டப்படும். தினமும் சிரித்துக் கொண்டே தங்கம்

வெல்லலாம்.

aanaa
8th February 2008, 06:54 AM
Bhuvana 's Interview
- as maayaa in Anjali , Nandhini in Suryavamsam


நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது புரிகிறதா புவனா சொல்றது...!
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது. கலை ஆர்வத்தை ஆண்டவன் கொடுத்த கிப்ட்டாக நினைக்கிறேன் என்று சொல்லும் புவனா, மேடை கச்சேரியிலும், சீரியல்களிலும் திறமை காட்டி கொண்டிருக்கிறார்.

தேன்மொழியாள், சூர்யவம்சம், அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் புவனா, சரிகா என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்.

புவனாவின் பேட்டி:

* கலைத்துறையை தவிர வேறு வேலைக்கு போக முடியாது என்று உறுதியாக இருந்தீர்களாமே?

எனக்கு இசையின் மீது தான் நாட்டம் இருந்தது. மனசுக்கு பிடிச்ச விஷயத்தில் நாட்டம் செலுத்தினால்தானே சாதித்க முடியும். பிடிக்காத விஷயத்தில் எப்படி சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள என்னால ஆபீஸ்ல போய் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உட்கார முடியாது. அதனால தான் வேறு வேலைக்கு போக வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்.

* நினைச்ச மாதிரி இடத்தை பிடித்து விட்டீர்களா?

இசையின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது ஆண்டவன் கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன். நடிப்பு, பாட்டு, நடனம் மற்றவங்களை சந்தோஷப்படுத்த ஆண்டவன் நமக்கு கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன்.மேடையில பாடிட்டிருந்தப்ப கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி என்னை பார்த்தார். சீரியலில் நடிக்கிறியான்னு கேட்டார். "அஞ்சலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் "சூர்யவம்சம், தேன்மொழியாள், அலைபாயுதே' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்.

* சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?

"அஞ்சலி'யில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அனுதாபம் பெறும் கேரக்டர். அடுத்து வில்லியாக நடித்து அசத்தணும்ன்னு ஆசை இருக்கு.

* கச்சேரிகளில் பாடிய உங்களுக்கு சினிமா வாய்ப்பு?

அண்ணாமலை மன்றத்தில் கச்சேரியில பாடிட்டிருந்தப்ப தியாகராஜன் என்பவர் என்னை பார்த்திருக்கிறார். என்னை பற்றி மலேசியா வாசுதேவனிடம் சொல்ல, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்தேன். அவரது "உலவும் தென்றல்' "ரீ மிக்ஸ்' ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது குழுவில் நிறைய பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். இசையில் நுணுங்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இசையில் அவர் எனக்கு "காட் பாதர்'ன்னு சொல்வேன். மேடையில் நான் பாடியதை பார்த்த மோகன் என்பவர் எனக்கு போன் செய்து இசையமைப்பாளர் தேவா சாரை போய் பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னார். நான் போய் பார்த்தேன். அவரோட இசையமைப்பில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பல படங்களில் பாடியிருக்கிறேன். அவரது மேடைகச்சேரிகளிலும் நான் பாடியிருக்கிறேன்.

* காதல் திருமணம் செய்து கொண்டீர்களே; குடும்பம் எப்படி இருக்கிறது?

மேடையில் பாடும்போது என்னோட சேர்ந்து பாடிய வெங்கடேஷும் நானும் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டோம். இருவருமே இசை துறையில இருந்ததால குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்க முடியலை. இதனால, யாருக்கு நல்லா வாய்ப்பு அமையுதோ அவுங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிடுவோம். அடுத்தவங்க வேறு தொழில் செய்யலாம்ன்னு முடிவு செஞ்சோம். எனக்கு பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைச்சதால நான் கலைத்துறைக்கு வந்து விட்டேன்.அவர் கடிகார கடை நடத்தி வருகிறார். என்னோட முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பதால் வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு.

* முன்னேற வழி கேட்டால்...?

எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லைன்னு நினைச்சு முயற்சிக்கணும். உடனே சக்ஸஸ் கிடைக்கலாம், இரண்டு வருடம் கழிச்சும் சக்ஸஸ் கிடைக்கலாம். ஏன் 10 வருஷங்கள் கழிச்சுக்கூட சக்ஸஸ் கிடைக்கலாம். பொறுத்திருந்து நல்ல தருணம் வரும் போது அந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

* கலைத் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிரச்னை எளிதாக ஏற்பட்டு விடுகிறதே?

செய்யற வேலையை விட்டுட்டு சம்பந்தமில்லாத வேலையில இறங்கினா சிக்கல் வராம என்ன செய்யும். தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா பிரச்னை எப்படி வரும். வேகமான உலகத்தில் எல்லாத்திலும் பெண்கள் உஷாராக இருக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா பிரச்னை நம்மை எப்படி நெருங்கும், என்று ஆர்வமாக சொன்னார் புவனா.

aanaa
8th February 2008, 06:57 AM
[tscii:05ada3594e]
Priyanka

almost in all movies she is there

her interview
சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் "தவம்' சீரியலில் ஷூட்டிங்'கில் பிரியங்காவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""அப்பா அம்மாவை பத்திரமா பாதுகாக்கணும், அவுங்களோட வயசான காலத்தில நாம காட்டும் பாசம், பரிவு அவுங்களை சந்தோஷப்படுத்தணும். முதியோர் இல்லத்தில விட்டுட்டு அவுங் களை அன்புக்கு ஏங்க வைக்கக் கூடாது,'' என்று உருக்கமாக சொன்னார். பிரியங்காவின் பேட்டி:



* சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து "டிவி'பக்கம் வந்துட்டீங்களே?

நடிக்கணும்ன்னு வந்துட்டு, சினிமாவில் நடிக்க ஆசையில் லாம இருக்குமா. "காதல் கிறுக் கன், துõள், மருதமலை, அலை' ன்னு பல படங்கள்ல நடிச்சிட் டேன். சினிமாவுல நடிக்க காத்திருந்து நாட்களை வேஸ்ட் செய்ய வேண்டியிருந் தது. "டிவி' பக்கம் வந்ததால ஒவ்வொரு நாளும் பிரயோசனமானதாக இருக்கு. மாதத் தில் 20 நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். "டிவி'ப் பக்கம் வந்ததால சினிமாவுக்கு நான் ஒன்றும் "குட்பை' சொல்லிடலை. நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.

* காமெடி சீனில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப் பட்டதே?

எனக்கு காமெடி சீன்ல நடிக்க ஆசையிருக்கு. "மருதமலை' படத்தில வடிவேலுவுடன் நடிச்சேன். சாதாரணமான சீனை வடிவேலுவிடம் கொடுத்தாலே போதும், மனுஷர் அட்டகாசமா காமெடி செஞ்சு அசத்திடுவார். சீன்'ல அவரோட ஈடுபாடு,எதார்த்த ரீயாக்ஷன்ல இருக்கிற காமெடி கலக்கல் மிரட்டும். சென்டிமென்ட் சீன்'ல நடிக்கிறதைவிட காமெடி சீன்'ல நடிப்பது சிரமம். இருந்தாலும் சென்ட்டிமென்ட் சீனைவிட காமெடி சீனுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கு. காமெடி சீன்'ல நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சா வெளுத்து வாங்கிடுவேன்.

* சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிப்பது பற்றி?

வில்லி கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன்னு சொல்றதைவிட இந்த கேரக்டரில் நல்லா செய்வேன்னு நினைச்சு டைரக்டர்கள் கொடுக்கிறாங்க. ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் முக்கியமானவங்களா இருந்தா லும், டேர்னிங் பாயிண்ட்'டா வில்லி கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. நடிக்க வந்த பிறகு இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டிருக்கலாமா, எந்தக் கேரக்டரிலும் நான் நடிப்பேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஏ.வி.எம்.. நிறுவனத்திற்காக "ஸ்டில்' சாரதியுடன் ஒரு சந்திப்புக்கு காம்பியரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் சித்தி, அண்ணாமலை, அஞ்சலி'ன்னு நிறைய வாய்ப்பு வந்தது. அரசி, தீரன் சின்னமலை, தவம், ரேகா ஐ.பி.எஸ்., நடிச்சிட்டிருக்கேன்.

* நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்க நினைக்கும் இயக்குனர்கள் பற்றி?

படத்தின் கதையை சொல்லும் போதே இயக்குனர்கள் சீன்களை சொல்லிடுவாங்க. அதில் கிளாமராக நடிக்க வேண்டிய சீன் இருந்தாலும் சொல்லிடுவாங்க. எதுவும் சொல்லாம ஷூட்டிங் ஸ்பாட்'டில் போய் டைரக் டர் சீன் சொல்லி கிளாமரா நடிக்கணும்ன்னு சொல்லும்போதுதான் பிரச்னை வந்துடுது. சீன் பற்றி முன்பே பேசிட்டா ஷூட்டிங்' போகும் போது பிரச்னை இருக்காது. கிளாமராக நடிப்பது பற்றியும் பிரச்னை வராது.

* தவிர்க்க வேண்டிய விஷயம் என்று ஏதும் மனதில்?

""அப்பா, அம்மாவைவிட கண்கண்ட தெய்வம் இல்லைன்னு தான் சொல்வேன். அவுங்க வயசான காலத்தில அவுங்களை இடைஞ்சலா நினைக்கக்கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவுங்களை கவனிச்சிக் கிடறதுக்கும் நேரம் ஒதுக்கணும். வசதி வாய்ப்பிருந்தும் பல பேர் பெற்றோர் களை முதியோர் இல்லத் தில கொண்டு போய் விடறாங்க. அவுங்க அங்கு அன்புக்கு ஏங்கி தவிக்கிறாங்க, நம்மலை எப்படியெல்லாம் பாது காத்து வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கணும். அம்மா, அப்பாவை கடைசி வரை சந்தோஷமா காப்பாத்தணும். குழந் தைங்க நம்மளை நல்லபடியா பாத்துக்கிடுதுன்னு அவுங்க சந்தோஷப்பட்டாத்தான் நாம நல்லாயிருப்போம்,'' என்று உருக்கமாக சொன்ன பிரியங்காவை அவரது அம்மா மொபைல் போனில் அழைக்க பறந்தார்.
[/tscii:05ada3594e]

R.Latha
12th February 2008, 08:20 AM
Bhuvana (THENMOZHIYAL, SURYA VAMSAM, ALAIPAYUTHE)

எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது. கலை ஆர்வத்தை ஆண்டவன் கொடுத்த கிப்ட்டாக நினைக்கிறேன் என்று சொல்லும் புவனா, மேடை கச்சேரியிலும், சீரியல்களிலும் திறமை காட்டி கொண்டிருக்கிறார்.

தேன்மொழியாள், சூர்யவம்சம், அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் புவனா, சரிகா என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்.

புவனாவின் பேட்டி:

* கலைத்துறையை தவிர வேறு வேலைக்கு போக முடியாது என்று உறுதியாக இருந்தீர்களாமே?

எனக்கு இசையின் மீது தான் நாட்டம் இருந்தது. மனசுக்கு பிடிச்ச விஷயத்தில் நாட்டம் செலுத்தினால்தானே சாதித்க முடியும். பிடிக்காத விஷயத்தில் எப்படி சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள என்னால ஆபீஸ்ல போய் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உட்கார முடியாது. அதனால தான் வேறு வேலைக்கு போக வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்.

* நினைச்ச மாதிரி இடத்தை பிடித்து விட்டீர்களா?

இசையின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது ஆண்டவன் கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன். நடிப்பு, பாட்டு, நடனம் மற்றவங்களை சந்தோஷப்படுத்த ஆண்டவன் நமக்கு கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன்.மேடையில பாடிட்டிருந்தப்ப கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி என்னை பார்த்தார். சீரியலில் நடிக்கிறியான்னு கேட்டார். "அஞ்சலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் "சூர்யவம்சம், தேன்மொழியாள், அலைபாயுதே' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்.

* சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?

"அஞ்சலி'யில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அனுதாபம் பெறும் கேரக்டர். அடுத்து வில்லியாக நடித்து அசத்தணும்ன்னு ஆசை இருக்கு.

* கச்சேரிகளில் பாடிய உங்களுக்கு சினிமா வாய்ப்பு?

அண்ணாமலை மன்றத்தில் கச்சேரியில பாடிட்டிருந்தப்ப தியாகராஜன் என்பவர் என்னை பார்த்திருக்கிறார். என்னை பற்றி மலேசியா வாசுதேவனிடம் சொல்ல, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்தேன். அவரது "உலவும் தென்றல்' "ரீ மிக்ஸ்' ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது குழுவில் நிறைய பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். இசையில் நுணுங்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இசையில் அவர் எனக்கு "காட் பாதர்'ன்னு சொல்வேன். மேடையில் நான் பாடியதை பார்த்த மோகன் என்பவர் எனக்கு போன் செய்து இசையமைப்பாளர் தேவா சாரை போய் பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னார். நான் போய் பார்த்தேன். அவரோட இசையமைப்பில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பல படங்களில் பாடியிருக்கிறேன். அவரது மேடைகச்சேரிகளிலும் நான் பாடியிருக்கிறேன்.

* காதல் திருமணம் செய்து கொண்டீர்களே; குடும்பம் எப்படி இருக்கிறது?

மேடையில் பாடும்போது என்னோட சேர்ந்து பாடிய வெங்கடேஷும் நானும் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டோம். இருவருமே இசை துறையில இருந்ததால குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்க முடியலை. இதனால, யாருக்கு நல்லா வாய்ப்பு அமையுதோ அவுங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிடுவோம். அடுத்தவங்க வேறு தொழில் செய்யலாம்ன்னு முடிவு செஞ்சோம். எனக்கு பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைச்சதால நான் கலைத்துறைக்கு வந்து விட்டேன்.அவர் கடிகார கடை நடத்தி வருகிறார். என்னோட முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பதால் வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு.

* முன்னேற வழி கேட்டால்...?

எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லைன்னு நினைச்சு முயற்சிக்கணும். உடனே சக்ஸஸ் கிடைக்கலாம், இரண்டு வருடம் கழிச்சும் சக்ஸஸ் கிடைக்கலாம். ஏன் 10 வருஷங்கள் கழிச்சுக்கூட சக்ஸஸ் கிடைக்கலாம். பொறுத்திருந்து நல்ல தருணம் வரும் போது அந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

* கலைத் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிரச்னை எளிதாக ஏற்பட்டு விடுகிறதே?

செய்யற வேலையை விட்டுட்டு சம்பந்தமில்லாத வேலையில இறங்கினா சிக்கல் வராம என்ன செய்யும். தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா பிரச்னை எப்படி வரும். வேகமான உலகத்தில் எல்லாத்திலும் பெண்கள் உஷாராக இருக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா பிரச்னை நம்மை எப்படி நெருங்கும், என்று ஆர்வமாக சொன்னார் புவனா.

R.Latha
12th February 2008, 12:00 PM
[tscii:05d56b6148]venkat nisha

‘‘விளையாட்டாகத்தான் எங்கள் காதல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் திகட்டத் திகட்டக் காதலித்தோம். கல்யாணமும் செய்து கொண்டோம்.

இதோ கடவுளின் பரிசாய் எங்கள் குழந்தை மாயா. அதே காதல், அதே ஜாலியோடு வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. கலகலவெனப் பேசுகிறார்கள் விஜய் டி.வி.யில் நடந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய நிஷா வெங்கட் இருவரும். (வெங்கட் வேறு யாருமில்லை... பிரபல பியூட்டிஷியன் மைதிலியின் மகன்)

‘‘எங்களுடைய காதல் கதையை என்னன்னு சொல்றது?’’ என்று இருவருமே அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள்.

‘‘நிஷா, நீ சொல்லுமா’’ என்று வெங்கட்டும், ‘‘இல்ல... இல்ல, நீங்களே சொல்லுங்க’’ என்று நிஷாவும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டார்கள்.

கடைசியில் தங்களுக்குள்ளாகவே ‘இங்க்கி, பிங்க்கி, பாங்க்கி’ போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் வெங்கட் சொல்வதாக முடிவானது.

‘‘நிஷா அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். நானும் அதே காலேஜில் தான் படித்தேன். (நிஷா எனக்கு ஜூனியர்) காலேஜில் படிக்கும் ஒவ்வொரு பையனும் அந்த வயதில் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாச்சே.... எனக்கும், ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டும் என்று முடிவெடுத்து, நிஷாவிடம் ஃபிரெண்டானேன். ஆனால் போகப் போக நிஷாவின் நல்ல குணங்கள் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டன. குறிப்பாக ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகும் நிஷாவின் குணம் சம்திங் நைஸ். கொஞ்சம் கொஞ்சமாக நிஷாவின் மேல் எனக்கு மரியாதை கலந்த அன்பு வந்து விட்டது’’ இதற்கிடையில் தெரிந்த நண்பர் மூலமாக சி.ஜே. பாஸ்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாமலை’ தொடரில் சுப்பு என்கிற கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இது மட்டுமே வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருக்காதே’’ என்று வெங்கட் சொல்ல நிஷா இடைமறித்தார்.

காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோமே தவிர, அந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக நாங்கள் செட்டிலாகவில்லை. வெங்கட்டும் பெரிதாய் எதுவும் சாதனைகள் செய்யாத காலகட்டம் அது. விளையாட்டாய் காதலிக்கும் போது, வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாய் அக்கறை இல்லை. ஆனால், கல்யாணம், குடும்பம் என்று வந்தால் பணம் வேண்டுமே... அதனால் இருவரும் வேலைக்குப் போக முடிவெடுத்தோம். நான் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். வெங்கட்டும் அவருடைய அம்மா நடத்தி வரும் பார்லரைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். இருவருமே எங்கள் காதலை வீட்டில் சொல்ல முடிவெடுத்தோம். ஆனால் என்னுடைய மாமியாருக்கோ (வெங்கட்டின் அம்மா) தனக்கு வரப்போகும் மருமகள் தன்னுடைய பியூட்டி பார்லரைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு பியூட்டி நாலெட்ஜ் இருக்க வேண்டும்’’ என்று நினைத்தார்.

ஆரம்பத்தில் எனக்கு பியூட்டி ஃபீல்டைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால் வெங்கட்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்காகவே என் மாமியாரின் பார்லரிலேயே பியூட்டிஷியன் கோர்ஸைப் பிராக்டிக்கலாகக் கற்றுக் கொண்டேன்’’ என்று நிஷா சொல்ல,

‘‘உங்களுக்கு ஒன்று தெரியுமாங்க, நாங்க அந்த சமயத்தில் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்ததே சேர்ந்து படிக்கிறதுக்குத்தாங்க’’ என்று வெங்கட் சொன்னவுடன் நமக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. ‘‘ஆமாங்க... ஸ்கின் பியூட்டி, ஹேர் டிரெஸ்ஸிங் சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் படிப்பதற்காக டெல்லி வரை செல்ல முடிவெடுத்தோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் சென்றால், நிஷா அங்கே தனியாகத் தங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் கல்யாணம் செய்து கொண்டு வீட்டில் ஹனிமூன் என்று சொல்லி விட்டு டெல்லிக்குப் படிக்கச் சென்றோம். கோர்ஸை நல்லபடியாக முடித்து ஊருக்குத் திரும்பி, நானும் நிஷாவும் பிஸினஸை நல்லபடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தவிர, தற்போது வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஆனந்தம்’ உட்பட பல சீரியல்களில் நான் பிஸி...’’ என்றவர்,

என் மனைவி மீது நான் அதிக அளவு காதல் கொண்டது அவளின் பிரசவத்திற்குப் பிறகுதான். காரணம் குழந்தை பிறந்தவுடன் பிரெயினில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிஷா கோமாவுக்குச் சென்று விட்டாள். ‘‘என் நிஷா இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று நினைத்து நினைத்துத் தவித்தேன். என் உயிரே என்னை விட்டுப் போகப் போவது போல் ஒரு உணர்வு. அவள் கோமாவிலிருந்து, கண் விழித்த அந்தக் கணத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது’’ என்று அதுவரை ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த வெங்கட், நெகிழ்ந்து போய்ப் பேசினார்.

‘‘நான் வெங்கட் கூட ‘ஜோடி நம்பர் 1’ல் ஆடினதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்கு டெலிவரியான சமயத்துல கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இல்லியா? அப்போ உடம்பு எடை கூடி, மனதளவிலும் ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தேன். அந்த சமயத்துல தான் ‘ஜோடி நம்பர் 1’ வாய்ப்பு வந்தது. வெங்கட் ஒரு நல்ல டான்ஸர்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் எனக்கோ டான்ஸ் ஆடத் தெரியாது. நம்மால வெங்கட் ஜெயிக்க முடியாமப் போயிடுமோன்னு போட்டியில கலந்துக்க ரொம்பவே பயந்தேன். ஆனால் வெங்கட்தான் ‘நிஷா உனக்கு ஒரு அவுட்லெட் வேணும். நாலு பேரைப் பார்த்து பேசிப் பழக இது ஒரு நல்ல சான்ஸ். அதனால நாம தோத்தாலும் பரவாயில்லை... நீயும் என்னோட கண்டிப்பா ஆடணும்னு சொன்னாரு’ அவருக்காகத்தான், ஆட ஆரம்பிச்சேன். ஸ்டெப்_பை_ஸ்டெப்பா ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தோம். இந்தப் போட்டியில நாங்க ‘செவர்லெட்’ காரை ஜெயிச்சதை விட, என் கணவர் என் மேல் எவ்வளவு அக்கறை வச்சிருக்காருங்கிறதுதான் என்னை ரொம்பவே சந்தோஷப்பட வைத்து விட்டது’’ என்கிற நிஷா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்குப் பிறகு ரொம்பவே பிஸி. தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தும் பியூட்டி கோர்ஸ்கள், டான்ஸ் ப்ரோகிராம்கள் என்று பம்பரமாகச் சுழல்கிறார் நிஷா.

எனக்கும் நிஷாவுக்குமான காதல் வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும்தான் இருக்கிறது. ஆனால் அதை நாங்கள் இருவருமே பெரிதுபடுத்துவதில்லை. ஒரேயொரு விஷயத்தில்தான் எனக்கு நிஷாவின் மேல் பயங்கரமாகக் கோபம் வரும் என்றவர், ‘‘நிஷா எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவெடுக்க ரொம்பவே தயங்குவாள். அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி... உதாரணத்திற்கு, ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று இரண்டு பேரும் முடிவெடுத்தால், பரபரவென்று கிளம்புவாளே தவிர எந்த ஹோட்டலுக்குப் போகலாம்? எந்த டிஷ் சாப்பிடலாம் என்று கேட்டால், நீங்களே சொல்லுங்கள் என்று சொல்வாளே தவிர, தனக்கு எது பிடிக்கும் என்ன வேண்டும் என்று கேட்கவே மாட்டாள். ஒவ்வொருவருக்குமென்று தனித் தனியாக விறுப்பு வெறுப்புகள் இருக்கிறது. நிஷாவுக்கு எத்தனையோ முறை இதைச் சொல்லிவிட்டேன்... கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்’’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார் வெங்கட்.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. அது என்னமோ தெரியலை கல்யாணத்துக்கப்புறம் எனக்குன்னு எதையும் யோசிக்கத் தோணலை நான் வேற, வெங்கட் வேறயா என்ன?’ நிஷா இயல்பாகச் சொன்னபோது, அவர்களுக்கிடையே இருந்த காதலின் ஆழம் புரிந்தது.

காதல் தான் எங்களுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்தது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘‘காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், ஆரம்பத்தில் சந்தோஷமாக இருக்கும். போகப் போக பிரச்னைகள் அதிகமாகி விடும்’’ என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

‘‘சரியான புரிதல் இருந்தால் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் மரியாதையும், நம்பிக்கையும் வையுங்கள். எங்கள் காதல் நாங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கத் தேவையான சக்தியைக் கொடுத்திருக்கிறது. இதோ இந்த சக்தியோடு பியூட்டி சம்பந்தமான அகாடமி ஒன்றை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து வருகிறோம்! நடத்தியும் காட்டுவோம்’’ நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார்கள் வெங்கட்டும் நிஷாவும்.
[/tscii:05d56b6148]

aanaa
12th February 2008, 07:34 PM
thanks for the info LATHA

aanaa
13th February 2008, 12:15 AM
[tscii:b15227f73f] [/tscii:b15227f73f]
"காதலிக்க நேரமில்லை' சுகாசினிராஜு

"எது சரின்னு படுதோ அதை அழுத்தமா சொல்லிட்டா தொந்தரவு நெருங்காது!'' "சுளீர்' என்று சொல்கிறார் சுகாசினிராஜு

விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலிலும், "ஜோடி நெ.1'லும் திறமை காட்டி வருகிறார் ராஜஸ்தான் இறக்குமதியான சுகாசினிராஜு. ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் "ஜோடி நெ.1' ல் போட்டி ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த சுகாசினியை"பேட்டி'க்காக சந்தித்த போது, அவர் இருந்த அவசரத்திலும் நேரம் ஒதுக்கி "பேட்டி' கொடுத்து அதில் "அட்வைஸ்'களையும் அள்ளிவிட்டார்.


அவரது பேட்டி:

* நடனத்தின் மீது ஆசை ஏற்பட்டதால் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டதாக பேசப்பட்டதே?

சினிமாவில், "டிவி'யில் வதந்திக்கு பஞ்சம் ஏது?. என்னை பற்றியும் பேச்சு வந்திருச்சா. சொந்த மாநிலம் ராஜஸ்தான். பரதநாட்டியம் எனக்கு பிடிக்கும். கற்றுக்கொள்ள நினைச்சப்ப சென்னையில கலார்க்ஷத்திராவில் சேர்ந்து கத்துக்கிடலாம்ன்னு தெரிஞ்சவங்க யோசனை சொன்னாங்க. சென்னைக்கு வந்தேன். நினைச்சபடி பரதநாட்டியம் கத்துக்கிட்டு டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் குழுவில் நிறைய மேடைகளில் ஆடியிருக்கிறேன். சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் நிகழ்ச்சிக்காக போய் வந்தி ருக்கேன்.

* நீங்கள் நினைத்தபடி வாய்ப்பு கிடைத்திருக்கிறதா?

விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. ஸ்டோரி வித்தியாசமா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு.மோதலில் ஆரம் பித்து காதலில் முடிவது போல எனது கேரக்டர். டைரக்டர் நல்ல எதார்த்தமா ஸ்டோரியில விஷயங்களை சொல்லியிருக்கார். சீரியலில் நடிச்சதால "ஜோடி நெ.1' போட்டியிலும் விஜய் "டிவி' மூலம் வாய்ப்பு கிடைச்சது. போட்டியில "மதுரை ஜில்லா' பாடலுக்கு "போக் டான்ஸ்' நல்லா ஆடியதால இந்த வாரம் பரிசும் கிடைச்சிருப்பது சந்தோஷமாயிருக்கு. இது என் முயற்சிக்கு "பூஸ்ட்' மாதிரி இருக்கு.

* "ஜோடி நெ1' போட்டியில் ஜெயித்துவிடுவீர்களா?

நம்பிக்கையோடு களமிறங்கியாச்சு. "கனா காணும் காலங்கள்' வின்னி எனக்கு ஜோடி. ஜெயித்துகாட்டணும்ன்னு நம்பிக்கை இல்லாமலா போட்டி'யில களமிறங்குவோம்.வித்தியாசமா டான்ஸ் செய்து அசத்தணும்ன்னு ஆசையிருக்கு. நினைச்சது நடந்து ஜெயிச்சுட்டா சந்தோஷம் தான்.

* சென்னையில் தங்கியிருப்பது வசதியாக இருக்கிறதா?

அப்பா ஆர்மியில இருந்ததால எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் சென்னைக்கு படிக்க வந்தப்ப, புது ஏரியான்னு பயப்படாதே. நீ செய்றது சரிதான்னு நினைச்சா செஞ்சிடு. எதுவந்தாலும் பாத்துக்கிடலாம்ன்னு சொன்னாங்க. நீ துணிச்சலான ஆளு. எந்தப் பிரச்னையும் உனக்கு வராது. இருந்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு பிரச்னை எளிதா வந்துடும். அதனால உஷாரா நடந்துக்கணும்ன்னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. வேகமான உலகத்தில் சூழ்நிலைக்கு தக்கபடி மக்களின் செயல்பாடு எப்படியெல்லாம் மாறும், தேவையில்லாத விஷயங்களை எப்படி தவிர்க்கலாம்ன்னும் நிறைய எனக்கு அம்மா சொல்லியிருக்காங்க. அவுங்களுடைய வழிகாட்டுதல் ரொம்ப உதவியா பாதுகாப்பாயிருக்கு.

* மற்றவங்களோடு பழகுவதற்கு கட்டுப்பாடு எதும்?

மனுஷங்கள்ல கெட்டவங்க இல்லாமலில்லை. எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்ல முடியாது. நாம சரியா இருந்தா யாரும் நம்மை நெருங்க முடியாது. ஆண்களுடன் பேசக் கூடாது, பழகக் கூடாதுன்னு கட்டுப்பாடு தேவையில்லை. நாம எப்படி பேசணும், எப்படி பழகணும்ன்னு தெரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிடணும். அவுங்க எப்படி பேசறாங்க, எந்த நோக்கத்தில் பேசறாங்க. ஏன் அப்படி பேசறாங் கன்னு கவனமாயிருக்கணும். தேவையில்லாத பேச்சு வந்தா சும்மா இருந்திடக் கூடாது. ஏன் இப்படி'ன்னு கேட்டுடணும். நம்மலோட பதில் பேச்சிலிருந்தே அவுங்க நம்மை பற்றி தெரிஞ்சுக்கிட்டு, நாம எப்படிப்பட்ட ஆளுன்னு புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிடுவாங்க. எது சரின்னு படுதோ அதை அழுத்தமா சொல்லிட்டா தொந்தரவு நெருங்காது.

* பிடிக்காத விஷயம்?

முகத்திற்கு நேராக "ஆகா ஓகோ'ன்னு பேசிட்டு, இதையே மற்றவங்களிடம் வேறு மாதிரியாக மாற்றி பேசறவங்களை பிடிக்காது. "பொய்'யை சொல்லி தப்பிக்க நினைப்பதைவிட உண்மையை சொல்லி தண்டனையை ஏற்றுக்கொள்வதே மேல்'ன்னு நினைக்கணும். "பொய்' பேசறவங்களை எனக்கு பிடிக்காது. இந்த மாதிரி மனுஷங்களை சந்திக்கிற சூழ்நிலை எனக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிட்டிருக்கேன் என்று சொல்லிய சுகாசினி ராஜு "ஜோடி நெ.1"ல் ஆட்டம் போட ஏ.வி.எம்., ஸ்டூடியோவிற்குள் பறந்தார்.

R.Latha
18th February 2008, 03:10 PM
Lollu Saba Rajini

"தவம்' சீரியலில் நடித்து கொண்டிருந்த ரஜினிநிவேதாவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""சினிமா, "டிவி'யை மட்டுமே நம்பியிருக்கும் தொழில் முறை கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க புதியவர்கள் உதவ வேண்டும்,'' என்றார் உருக்கமாக... ரஜினிநிவேதாவின் பேட்டி:

* சினிமா, டிவியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நீங்கள் திடீரென்று விலகி, மீண்டும் வந்திருப்பது பற்றி?

இந்த பீல்டுல நுழைஞ்சப்ப நிறைய பட வாய்ப்புகள் கிடைச்சது. "பயணங்கள் முடிவதில்லை, சிகப்பு ரோஜாக்கள், தங்கமகன், போக்கிரிராஜா'ன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். படங்கள்ல பாட்டுக்கு டான்ஸ் கம்போசிங்கும் செஞ்சிட்டிருந்தேன். மேரேஜுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டாச்சு. குடும்பம் குழந்தைகள்ன்னு சில வருடங்கள் ஓடிப்போச்சு. நடிக்க வேணாம்ன்னு நினைச்சாலும் மனசில இந்த பீல்டு மேல ஆர்வம் இருந்திட்டுதானிருந்தது. முன்னணி நட்சத்திரங்களோடு நடிச்சிட்டு, பரதநாட்டியத்தையும் முறையாக கத்துக்கிட்டு "சகுந்தலை பிறந்தாள்'ங்கிற பெயர்ல நாட்டிய நாடகத்தை ஆர்வமா அரங்கேற்றினேன். இவைகளையெல்லாம் குடும்பத்திற்காக மறக்க வேண்டிய நிலை வந்தது. பரவாயில்லைன்னு நினைச்சேன். அமிர்தானந்தமயி ஸ்கூல்ல டான்ஸ் டீச்சரா சேர்ந்தேன். பரபரப்பு இல்லாத அமைதியான வேலை. பிள்ளைங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்கூலுக்கு குழந்தைகளை அழைச்சிட்டு போக வரும் பெற்றோர்கள் அருமையா டான்ஸ் பண்றீங்க. நிறைய நடிச்சிருக்கீங்க. திறமை இருந்தும் ஏன் நடிப்பதை விட்டுடீங்க... நீங்க திரும்ப செய்யலாமேன்னு சொன்னாங்க. மீண்டும் நடிக்க வந்துட்டேன்.

* நடிக்க வருவதற்கு முன், மாதா அமிர்தானந்த மயியிடம் ஆசியை பெற்றது பற்றி?

அவுங்க ஸ்கூல்ல ஒர்க் பண்ணினதால அம்மா சென்னை வந்தபோது சந்தித்து, என்னோட முடிவை சொன்னேன். "ஆர்வமிருந்தா செய்' என என்னை ஆசீர்வதிச்சாங்க. "டிவி'க்கு வந்துவிட்டேன். படம் ஒன்றிலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறேன்.

* டிவி'யில் புதியவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கிடைத்து வருகிறதே?

சினிமா, "டிவி' யில நிறைய வாய்ப்பு இருக்கு. புதிய வர்கள் நிறைய வந்துக்கிட்டிருக்காங்க. சினிமா "டிவி'யை மட்டுமே நம்பி, நிறைய பேர் தொழில் தெரிஞ்சவங்க இருக்காங்க. இவுங்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கலை. இந்த தொழிலையே நம்பியிருப் பவர்களுக்கு இந்த பீல்டில் முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பு அளிக்கணும். திறமையுள்ள பலர் நல்ல வாய்ப்பு கிடைக்கலையே, நம்மை யாரும் தேடாம விட்டுட்டாங்களேங்கிற ஏக்கம் இருக்கு. அவுங்க வெளிப்படையா காட்டிக்கொள்ளவில்லை. தொழில் மீது பக்தி வைத்து, நேசிப்பவர்களுக்கு சினிமா, "டிவி' டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்து உதவ வேண்டும்.

* முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்த நீங்கள் நடன இயக்குனராக வந்திருக்கலாமே?

பசுமர்த்திகிருஷ்ணமூர்த்தி மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக நான் ஒர்க் பண்ணிட்டிருந்தப்ப அவர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா ஒர்க் பண்ணிட்டிருந்தார். "மன்மத லீலை' படத்தில் கமலஹாசன், ஜெயப்ரதா பாடி ஆடும் பாட்டுக்கு நான் டான்ஸ் கம்போஸ் பண்ணினேன். ஸ்ரீவித்யா, வாணிஸ்ரீ, சச்சுக்கெல் லாம் நான் டான்ஸ் கம்போஸ் செஞ்சிருக்கேன். நடிப்பு மீதிருந்த ஆர்வத்தால தனியா டான்ஸ் மாஸ்டரா ஒர்க் பண்ணனும்ன்னு ஆசை அப்போது இல்லை.

* சினிமா ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்?

""குலபுத்ரா'ங்கிற கன்னடப் படத்தில் நான் மரத்தில் மறைந்திருந்து இலைகளை ஒடிச்சு கீழே இருக்கும் ஹீரோ மீது வீச வேண்டிய சீன். நடிப்பு எதார்த்தமாயிருக்கணும்ன்னு நினைச்ச நான் வேக வேகமா இலைகளை ஒடிச்சு கீழே வீசிக்கொண்டிருந்தேன். நான் மரத்தை ஆட்டியதால் கிளை ஒன்றில் துõங்கிக் கொண்டிருந்த பாம்பு சர்ரென இறங்கி என்னை நோக்கி வேகமாக வர, அதை பார்த்த உதவி இயக்குனர் அலற, நான் அப்போது தான் பாம்பை பார்த்து பயந்து போய் கீழே குதித்தேன். நல்ல வேலை உதவியாளர்கள் என்னை கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததால் அடிபடாமல் தப்பினேன். "குடி குடியை கெடுக்கும்' ங்கிற "டிவி' நிகழ்ச்சிக்காக சிதம்பரத்தில் திடீரென்று சாலையில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. குடிகார கணவர் சாலையில் ஓட ஓட என்னை அடித்து இம்சிப்பது போல சீன். அங்கு திடீரென்று ஷூட்டிங் நடத்தியதால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உண்மையிலேயே குடிகாரன் என்னை அடிக்கிறான்னு ஓடி வந்து தடுத்தனர். "டிவி' ஷூட்டிங்'கென தெரிந்ததும் அவரை அடிக்காமல் விட்டு விட்டதை மறக்க முடியாது,'' என்று மலரும் நினைவுகளை சொன்னார் ஆர்வமாக ரஜினிநிவேதா.

[/tscii][tscii]

R.Latha
18th February 2008, 03:14 PM
Arinthadhum Ariyathadhum SHILPA

‘ஸாவரியா...ஸாவரியா' என்ற ஹிந்தி பாடலை யாராவது பாடுகிற சத்தம் கேட்டால் சுற்றும் முற்றும் தேடிப் பாருங்கள். பாடுவது -விஜய் டிவியில் ‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சி மூலம் பலரைப் பேட்டி காணும் ஷில்பாவாக இருக்கலாம். அடிக்கடி அவர் முணுமுணுக்கும் பாடலாம் இது. ஹிந்துஸ்தானி இசையில் பாடுவதற்குப் பயிற்சி பெற்று வரும் கேரளப் பெண்ணான அவரை ஓர் இசைவேளையில் சந்தித்தோம்.

பேட்டி எடுப்பது சிரமமா? பேட்டிக் கொடுப்பது சிரமமா?

கொடுப்பதுதான். எடுக்கிறபோது கேள்விதான் கேட்கப்போகிறோம். நம் இஷ்டம்போல் கேட்கலாம். ஆனால், பேட்டி கொடுக்கிறபோது அப்படியில்லை. யோசித்துப் பேசவேண்டும். சொல்கிற தகவல் தவறாகிவிடக் கூடாது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பேட்டிக் கொடுப்பதுதான் சிரமம்.

கல்லூரியில் படித்த காலத்திலிருந்த இயல்பிற்கும் இப்போது தொகுப்பாளினியாக இருப்பதற்கும்

ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா?

இல்லை. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கலகலப்பான காரெக்டர் என்னுடையது. என் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கலகலப்பும் புன்னகையும்தான் ‘ரேடியோ ஒன்'னில் பணியாற்றவும், ஜெயா டிவியில் ‘உங்க ஏரியா உள்ளே வாங்க' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் உதவியது என்று நினைக்கிறேன். இப்போது விஜய் டிவியில் ‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கும் இதுதான் உதவுகிறது. இதனால் என்னளவில் எவ்வித இயல்பு மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியில் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த பிரபலத்தின் பேட்டி?

பிரபலங்களிடம் எடுத்த அனைத்துப் பேட்டிகளுமே சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தன. இதில் நான் மிகவும் விரும்பி எடுத்தது நடிகர் மாதவனுடைய பேட்டி. பிரமிப்புடனே அவருடன் பேட்டி எடுத்தேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் பேசத் தொடங்கிய பிறகு அந்தப் பயம் போய்விட்டது. பெரிய பிரபலம்போல் பேசாமல் வெகு இயல்பாகப் பேசினார். ‘ஸ்கூல் போகிற பெண்போல இருக்கிறாய்' என்று என்னைக் கேலியும் செய்தார். மாதவனுடன் நான் எடுத்த பேட்டிக்குத் தோழிகள் மத்தியில் அதிகப் பாராட்டு கிடைத்தது. அதுவே என்னைக் கவர்ந்த பேட்டியும்.

ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறீர்கள்... திரைப்பாடல் பாட விருப்பமிருக்கிறதா?

ஹிந்துஸ்தானி இசை எனக்கு உயிர். சௌம்யா மதன்கோபாலிடம் நாலைந்து வருடங்களாகக் கற்று வந்தேன். இப்போது ராமமூர்த்தியிடம் கற்றுவருகிறேன். இருப்பினும் முழுதாய் கற்றோம் என்கிற எண்ணம் எனக்கு வரவே இல்லை. இசை என்பது கடல். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட விருப்பம் உள்ளது. யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை. நிச்சயம் பாடுவேன்.

நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா?

சீரியலில் நடிப்பதற்கு இரண்டு பேர் அழைத்தார்கள். எனக்குத்தான் விருப்பமில்லை. எதையும் முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். நடிப்பதற்கு எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. தொகுத்து வழங்குவது என்பது நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நன்றாகப் பேசுகிறோம் என்பதற்காக நடிக்கமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. திரைத்துறையிலிருந்து அழைப்பு வந்தாலும் நிச்சயம் நடிக்கப் போகமாட்டேன்.

வேறெதில் ஆர்வம்?

இசை...இசை..இசைதான். வேறெதிலும் ஆர்வமில்லை. ஹிந்துஸ்தானி இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். திட்டமிட்டு பயிற்சி பெற்று வருகிறேன். சாதிப்பேன்.

பிடித்தது கேரள வாசமா? சென்னையா?

கேரளாவை எல்லோருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் ‘கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கிறளவுக்குப் பார்க்கிற இடமெங்கும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருப்பதுதான். எனக்குப் பிடிக்காததற்கு முக்கியக் காரணமும் அதுதான். அழகழகான கட்டடங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன்படி எனக்கு சென்னைதான் மிகவும் பிடிக்கும். நான் எல்லாவற்றிலும் தலைகீழ்![/tscii][tscii]

aanaa
19th February 2008, 01:51 AM
Interview with Gautham

Q:Did your interest and inclination to dance lead you to become an artiste or was it vice-versa?
Gautham: My interest towards dancing was totally different; it was a passion I discovered, something I wanted to do all along my life. Acting happened along the way. I did not plan for it to happen, it was something I eventually took up as it came along. And dancing helped me in my acting career. As I was a dancer it was easy for me to emote, because basically dance is also a form of expression like acting.

Q: Do you have any dance school where you train and inspire people who want to become dancers?
Gautham: Yes, I do run a dance school where we teach proper and authentic Western dancing. It serves as an opening for those who want to learn more about different forms of dances around the world. The dance school we conduct is affiliated to a foreign board that is in Australia.

Q: Are you trained in Indian and Western classical dance?
Gautham: Yes, I am trained in Western and classical dance. I am still under training; I am doing my grade five in 'jazz'.

Q: Being an artiste, a TV anchor, a performer of dance, and a choreographer? Which do you enjoy doing the most? Or what is the order if you like doing everything?
Gautham: Ok I can be an artiste, a TV anchor, a dancer or a choreographer I enjoy doing everything as it is related to the media. I enjoy doing anything and everything as long as it is a part of the media. So there is no choice of preference or order when it comes to doing what I am doing now. As long as it is concerned with media I am happy.

Q: Who is your favorite choreographer(s)? What do you like about him/her/them the most?
Gautham: Favorite choreographer - right now there are many of them. But if there is one person who has always been on my mind it is Gene Kelly.

Q: How do you feel when people say actor 'Major' Sunderrajan is Gautham's Dad instead of the other way around?
Gautham: It doesn't matter if I am recognized as the son of 'Major' Sunderrajan or if he is recognized as Gautham's Dad. The way I am recognized or acknowledged does not bother me, as it is the fact, the basic fact. So there is nothing to feel about it.

Q: Are you doing any movies/TV serials as of now?
Gautham: Yes, I am doing a movie with Director Agathiyan called 'Kadhal Samrajjiyam' and I am doing four or five serials along with my 'Thillana Thillana' dance show on Sun TV.

Q: In one of your interviews we heard a pretty interesting narration from you about you meeting your wife? Is it true?
Gautham: Yes meeting my wife, it is quite a long love story. We met in 1990 and we got married in 1996, six years of love and then finally marriage. It is too long to write it down here. It is a long story but an interesting story. May be some other time. Thank you.

aanaa
25th February 2008, 11:10 PM
குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்தார் சுஜிதா; சினிமாவை விட, "டிவி'யே எனக்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாயிருக்கிறேன்'' என்கிறார். அவரின் பேட்டி:


* சென்னையில் உங்களை பார்க்க முடியவில்லை என்று சினேகிதிகள் சொல்கின்றனரே எங்கு இருக்குறீர்கள்?

கலைஞர் "டிவி'க்காக "அக்கா தங்கை' சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். தெலுங்கில் "ஏதடுக்குலு' (ஏழாவது படி) மலையாளத்தில் "பூ காலம்' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன். மூன்றுக்கும் 25 நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன். அதனால சென்னையில தொட ர்ந்தார் போல தங்க முடியலை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு. சென்னையிலதான் வீடு இருக்கு.

* இப்படி நீங்கள் பறக்க கணவர் சரி சொல்லிட்டாரா?

சென்னையில விளம்பர படக் கம்பெனி வச்சிருக்கார். சீரியல்கள்ல நல்ல வாய்ப்பு கிடைச்சதால ஒர்க் பண்ண அனுமதிச்சிருக்கார். நான் இங்கும் அங்குமா பறப்பதை பார்த்துட்டு உனக்கு சிரமாயிருந்ததுன்னா விட்டுடு. டெக்கனிக்கல் அயிட்டங்களை கத்துக்க கம்பெனிக்கும் உதவியா இருக்கும், உனக்கு கிடைக்கும் அனுபவம் பயனுள்ளதா இருக்கும்ன்னு சொன்னார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.

* நடிப்பு மீது ஆர்வம் உள்ள உங்களுக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏதும்?

சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை. குழந்தையாக இருக் கும் போதே அம்மா என்னை சினிமாவில விட்டுட்டாங்க. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட என் அண்ணன் சுரேஷும் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துட்டான். கூட நடிப்பவங்க நீ எதிர்காலத்தில் ஹீரோயினாக வருவாய்ன்னு சொல்லும்போதுகூட எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசை அப்போதே இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு சொன் னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண் டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. பிறகு எப்படி சினிமாவில் ஹீரோயினா நடிக்கலையேன்னு வருத்தப்படுவேன் சொல்லுங்க.

* சினிமாவில் ஹீரோயினா நடிக்க மாட்டேன் என்று மறுத்த நீங்கள், சீரியலில் மட் டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏதும் நிர்பந்தமா?

நிர்பந்தமெல்லாம் ஏதுமில்லை. ஏ.வி.எம்.., நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டுவிழாவுல சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது எனக்கும், எனது அண்ணன் சுரேஷிற்கும் கிடைச்சது. அப்போது அவுங்க தயாரிச்ச "ஒரு பெண்ணின் கதை' சீரியலுக்கு 14 வயசுள்ள பெண் தேடிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் நடிக்க அழைச்சாங்க. கதையும் பிடிச்சிருந்தது. சரின்னு சொல்லிட்டு செஞ்சேன். தமிழ், மலையாளம், தெலுங்கு என சீரியல்களில் நான் நினைச்ச மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. என்னோட கேரக்டர் நல்லபடியா எனக்கு பிடிச்ச மாதிரி அமைஞ்சதால நடிச்சேன். என்னை பார்ப்பவர்கள் மரியாதையாக பழகுறாங்க. அவுங்க குடும்பத்தில ஒருத்தங்க மாதிரி சினேகம் பாராட்டுறாங்க. சமீபத்தில ஒரு பாட்டி என்னை சந்திச்சப்ப கன்னத்தில முத்தமிட்டு வாழ்த்தினாங்க. சந்தோஷமாயிருந்தது.

* வாழ்க்கை நன்றாக அமைய வழி கேட்டால், <உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

நம்ம லைப் நம்ம கை யில இருக்கு. நாம எப்படி செயல்படுறோமோ அப்படித்தான் லைப் இருக்கும். தேவையில்லாத விஷயங்களை செஞ்சிட்டு, கோவிலுக்கு விடாம போறேன்; எனக்கு இப்படியெல்லாம் பிரச்னை வருதேன்னு சொன்னா எப்படி? நாம நினைச்சது நடக்கணும்ங்கிறதுக்காக எதை வேண்டுமானாலும் செய்துடலாம்ன்னு நினைச்சிடக் கூடாது. எதைச் செய்தாலும் யோசித்து செய்யணும். இருக்கும் "பாசிட்'டிவான சூழ் நிலைகளை பயன் படுத்திக்கிட ஆசைப்பட்டு "நெகட்டி'வான வேலைகள்ல இறங்கிடக் கூடாது. நமக்கு என்ன லிமிட்டோ அத்தோடு நின்னுக்கணும். இந்த நினைப்போடு எந்த வேலைக்கு போனாலும் பிரச்னை ஏதும் வராது. வந்தாலும் தைரியமா நின்னு ஜெயிக்கலாம்ன்னு தைரியம் தன்னால வரும்,'' என்று பொறுப்பாக சொன்ன சுஜிதா தெலுங்கு சீரியலில் நடிப்பதற்காக ஐதராபாத் செல்ல விமானம் பிடிக்க மீனம்பாக்கத்திற்கு காரில் பறந்தார்.

aanaa
2nd March 2008, 06:54 AM
MANORAMA TO RECEIVE A DOCTORATE FROM CALIFORNIA UNIVERSITY.

at hxxp://films-channels.blogspot.com/2007/11/manorama-to-receive-doctorate-from.html

replace xx=tt

aanaa
4th March 2008, 07:21 PM
[tscii:9fd66791e4]சொர்ணாவின் பதில்கள்..

எதிலும் எச்சரிக்கையா இறங்கினா நம்மோட முயற்சிக்கு நல்ல முடிவு கிடைக்காமல் போகாது! : சொர்ணா


""தாய்மனசு துவங்கி சந்திரமுகி வரை நுõற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சொர்ணா சீரியல் பக்கம் வந்திருக்கிறார். பாலசந்தரின் தேன்மொழியாள் சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்த சொர்ணாவுக்கு விசா கிடைக்க தாமதம் ஆனதால் மீண்டும் நடிக்க வந்ததாக கூறினார். சொர்ணாவின் பேட்டி:

* திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டீர்கள் என்றார்கள். திரும்ப நடிக்க வந்திருக்கீங்களே?

அமெரிக்காவுல பிலடெல்பியாவுல என்னோட கணவர் சாப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். திருமணம் முடிஞ்சதும் விசா கிடைக்க கொஞ்சம் தாமதமாச்சு. இந்தியாவிலேயே இரு. எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அழைச்சிட்டு போறேன்னார். இங்கே இருக்கும்போது நடிக்க உனக்கு விருப்பம் இருந்தால் படமோ, சீரியலோ எதிலும் நடிக்கலாம்ன்னும் சம்மதம் சொன்னார். அப்பத்தான் பாலசந்தரின் தயாரிப்பில் தேன்மொழியாள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடிச்சிட்டிருக்கேன். மே மாதம் அமெரிக்கா போயிடுவேன்.

* சந்திரமுகியில் நடிக்க மறுத்ததாக பேசப் பட்டதே?

சந்திரமுகி படத்தின் டைரக்டர் வாசு என்னை நடிக்க அழைச்சப்ப அந்தப் படத்தில ரஜினிகூட பிரபலமானவங்க நிறைய பேர் நடிக்கிறதா கேள்விப்பட்டிருந்தேன். நமக்கு என்ன கேரக்டர் கிடைக்கப்போகுது. ஏதும் துக்கடா கேரக்டராக அமைந்துவிட்டால் திருப்தியா ஒர்க் பண்ண முடியாதுன்னு நினைச்சுதான் தவிர்த்தேன். நல்ல கேரக்டர். ரஜினியோட நடிக்கிறே. ரஜினி உன்னோட அழகை வர்ணிக்கிற மாதிரியெல்லாம் சீன். கலகலப்பா, காமெடியா வச்சுருக்கேன்னார். சரின்னு சொல்லிட்டு நடிச்சேன். வடிவேல் எனக்காக அடிக்கிற லூட்டி, ரஜினி பேசற கலகலப்பான வசனங்கள்ன்னு நாங்கள் சம்பந்தப்பட்ட சீன்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது. சந்திரமுகியில நடிக்காம விட்டிருந்தால் இப்படி ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேன்னு மனசுல வருத்தம் இருந்திட்டிருக்கும். ரஜினியுடனும், வடிவேலுவுடனும் நடிச்சது சந்தோஷமாயிருக்கு.

* சீனில் ரஜினி நடிப்பு ஏதும் சொல்லிக் கொடுத்தாரா?

முதல் நாள் ஷூட்டிங்ல இருந்தப்ப ரஜினி பேசுவாரோ, மாட்டாரோன்னு நினைச்சிட்டிருந்தேன். நான் இருந்த பக்கமா போனவர் என்னை பார்த்ததும் அவராகவே என்னோடு பேசினார். அவர் பேசியதும் அவரோடு நானும் பேசினேன். அவரோட எளிமை, தொழில் பக்திதான் அவரை இந்தளவிற்கு உயர்த்தியிருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டேன். ரஜினி, வடிவேல், நான் சம்பந்தப்பட்ட காபினேஷன் சீன்களில் ரஜினியின் காமெடி நடிப்பு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தவங்களை எல்லாம் கலகலன்னு சிரிக்க வச்சது.

* பெண்கள் துணிச்சலா செயல் பட?

அவுங்கமேல அவுங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்கணும். நம்ம வாழ்க்கையை நாமதான் நிர்ணயிக்கணும். எதை செய்தாலும் யோசித்து செய்யணும். நம்மோட முயற்சிக்கு பலன் கிடைக் குமா, அது சரியான முயற்சிதானான்னு முடிவு செஞ்சிடணும். விருப்பமில்லாம எதையாவது செய்து பாதிக் கிணறு தாண்டிவிட்டு மீதி கிணறு தாண்ட முடியாம போனா ஆபத்து தானுங்கிறதை முன்கூட்டியே முடிவு செஞ்சிட்டு, எதிலும் எச்சரிக்கையா இறங்கினா நம்மோட முயற்சிக்கு நல்ல முடிவு கிடைக்காமல் போகாது.

* ஓட்டல்களில் தங்கினால் பிரச்னை வந்துவிடும் என்று நடிகைகள் பயப்படறாங்களே?

மனுஷங்க வாழ்க்கையில எதில்தான் பிரச்னையில்லை. எல்லாம் நாம நடந்துக்கிற விதத்திலிருக்கு. கவனமாயிருந்தா சிக்கல் எப்படி வரும். ஏதோ ஒரு ஓட்டலில் பிரச்னை என்றால் எல்லா ஓட்டலும் அப்படித்தான்னு சொல்ல முடியுமா? மனுஷங்களை பார்க்கும் போதே அவுங்க எப்படிப்பட்டவங்க, நாம எப்படி நடந்துக்கிட்டா பாதிப்பு வராதுன்னு நாம முடிவு பண்ணி எச்சரிக்கையா நடந்துக் கிட்டா மீறி எதுவும் நடக்காது. என்று சொன்ன சொர்ணாவை, உதவி இயக்குனர் "நீங்க நடிக்க வேண்டிய சீன் ஸ்டார்ட் பண்ணிட்டோம்' என்று அழைக்க ஷூட்டிங்' புளோருக்கு பறந்தார்.

[/tscii:9fd66791e4]

mr_karthik
6th March 2008, 03:35 PM
[tscii][size=18]சொர்ணாவின் பதில்கள்.. திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்த சொர்ணாவுக்கு விசா கிடைக்க தாமதம் ஆனதால்

:rotfl2: :rotfl2: :lol: :lol: :lol:


[tscii][size=18] அமெரிக்காவுல பிலடெல்பியாவுல என்னோட கணவர் சாப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். திருமணம் முடிஞ்சதும் விசா கிடைக்க கொஞ்சம் தாமதமாச்சு. இந்தியாவிலேயே இரு. எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அழைச்சிட்டு போறேன்னார். இங்கே இருக்கும்போது நடிக்க உனக்கு விருப்பம் இருந்தால் படமோ, சீரியலோ எதிலும் நடிக்கலாம்ன்னும் சம்மதம் சொன்னார்.

Whatever may be...
but aangalai thittuvatharku mattum marandhudaatheenga madam :lol: :lol: :lol: :lol: :lol: :lol:


[tscii][size=18] மே மாதம் அமெரிக்கா போயிடுவேன்.

:rotfl2: :rotfl2: :rotfl2:


* பெண்கள் துணிச்சலா செயல் பட?

அவுங்கமேல அவுங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்கணும். நம்ம வாழ்க்கையை நாமதான் நிர்ணயிக்கணும். எதை செய்தாலும் யோசித்து செய்யணும். நம்மோட முயற்சிக்கு பலன் கிடைக் குமா, அது சரியான முயற்சிதானான்னு முடிவு செஞ்சிடணும். விருப்பமில்லாம எதையாவது செய்து பாதிக் கிணறு தாண்டிவிட்டு மீதி கிணறு தாண்ட முடியாம போனா ஆபத்து தானுங்கிறதை முன்கூட்டியே முடிவு செஞ்சிட்டு, எதிலும் எச்சரிக்கையா இறங்கினா

advice........ :banghead: :banghead: :banghead:

R.Latha
12th March 2008, 12:34 PM
PREETHA (RAGAV)

பிரீத்தாவின் கருத்துக்கள் அதிரடியாய் சிந்திக்க வைக்கின்றன. அவருடைய செயல்கள் இளம் பெண்களை சிலிர்க்க வைக்கின்றன.

"கணவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறவராக இருந் தாலும் அவரால்தான் நாம் வாழ்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. நாம் யார் என்று தெரியவேண்டும். நமது நிழலில் அவர் இருக்க விரும்புவதில்லை. அதுபோல் அவருடைய நிழ லிலும் நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


பிரபலமான இரண்டு பேர் வாழ்க்கையில் இணையும்போது ஒருவரிடம் இருக்கும் குறை, இன் னொருவரால் களையப்பட வேண்டும். அன்பால் ஒருவரை ஒருவர் மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நான் திருமணத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்கள் அமெரிக்காவில் தங்கி யிருந்து படித்தேன். இங்கு என் கணவர் தனியாக இருந்தார். அங்கு நான் தனியாக இருந்தேன். ஒருவரை ஒருவர் நம்பினோம். அந்த நம்பிக்கை எல்லா நேரமும், எல்லா கணவன்- மனை விக்குள்ளும் இருக்கவேண்டும். அந்த நம்பிக்கையே கல்யாணத்திற்கு பிறகும் காதலை வளர்க் கும்...''-என்பது பிரித்தாவின் அழுத்தமான கருத்து.

28 வயதான இவருடைய செயல்வேகம் பிரமிக்க வைக்கிறது. பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் புரோகிராம் மேனேஜர் வேலை. வருடத்திற்கு பல லட்சங்கள் சம்பளம். கூடவே மனித வள மேம்பாடு தொடர்புடைய துறைகளின் பயிற்சியாளர். நடிகை, பாடகி, நடன கலைஞர், உள்அறை அலங்கார நிபுணர்... இப்படி பல முகங்கள். அதிகாலை முதல் இரவு வரை பரபரப்பாக இயங்கும் இவருடைய வேகத்தைப் பார்த்தால், `எப்போதான் ரெஸ்ட் எடுப்பீங்க?' என்று கேட்கத் தோன்றுகிறது.

இவர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்!

"நான் பிறந்த மூன்றாவது மாதத்திலே பெற்றோருடன் மஸ்கட் நாட்டிற்கு சென்றுவிட்டேன். பன்னிரெண்டாம் வகுப்புவரை அங்கு தான் படித்தேன். அங்கு எல்லோரும் வசதியானவர்கள். எல்லா வீடு களிலும் எல்லாமும் இருக்கும். அதனால் அங்கு வாழ்க்கையோடு போட்டிபோடும் நிலை இருந்ததில்லை. அங்கு உலகில் உள்ள பல்வேறு நாட்டு மக்களை சந்திக்க முடிந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் உணர்ந்து, என்னை நானே மேம் படுதிக்கொண்டேன்''

கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்த பின்பு இங்கு கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?

"நான் மஸ்கட்டில் ஆண்களோடு சேர்ந்துதான் படித்தேன். இங்கு எத்திராஜ் பெண்கள் கல் லூரியில் டிராவல் மேனேஜ்மென்ட்டில் சேர்ந்தேன். இந்த கல்வி எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது. ஏனென்றால் பள்ளிக்காலத்திலே நான் 20 நாடுகளுக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் எது பிடிக்கும் என்பதைவிட, எது பிடிக்காது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அரபு நாடுகளில் மற்றவர்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகத்திற்கு நேராக நம் பாதங்கள் இருக்கும்படி காலுக்கு மேல் கால் போட்டுக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கண்ணோடு கண் பார்த்து பேசவேண்டும். பிரான்சில் உள்ளவர்களை சந்திக்க சென்றால் உடை மிக நேர்த்தியாக இருக்க வேண்டும். கசங்கிப்போன சட்டையைப் போட்டுக்கொண்டு சென்றால் அவர்கள் மரியாதையே தரமாட்டார்கள். ஜெர்மனி மக்களிடம் நேரந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. டிராவல் மேனேஜ்மென்ட் படிப்பு என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

அதன் பின்பு அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் `மாஸ்டர் இன் சோஷியல் ஒர்க்' படித்தேன். அது எம்.பி.ஏ. படிப்பை போன்றது. அங்கு படிக்கும் போதே எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. படிப்பிலும் தங்கபதக்கம் பெற்றேன். அப்போதே நான் டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் நானும், ராகவ்வும் சந்தித்தோம். காலப் போக்கில் காதலிக்கவும் தொடங்கினோம்''

ஒருவரை இன்னொருவர் ஈர்க்க என்ன காரணம்?

"நாங்க இரண்டு பேருமே தமிழ். அவர் `பிளஸ்-டூ'வில் மாநில சாதனை படைத்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்ïட்டர் சயின்ஸ் பாடத்தில் தங்கப் பதக்கம் பெற்ற வர். அவரும் வெளிநாட்டில் படித்தவர். எங்கள் குடும்பமும் படிப்பில் சிறந்தது. எங்கள் இருவருக்குமே இசை பிடிக்கும். ஆனாலும் எங்களில் யாருக்கு என்ன சுதந்திரம் தேவை என்பதைப் பற்றி நாங்கள் நிறையப் பேசி முடிவுசெய்தோம். எங்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்ததும் நிச்சயதார்த்தம் செய்தார்கள். ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்து கொண்டோம்''

நிச்சயதார்த்தத்திற்கும்- திருமணத்திற்கும் ஒரு வருட இடைவெளியா? அந்த நாட்கள் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்திருக்குமே?

"அது ரொம்ப ஜாலியான வாழ்க்கை. அவருடைய குடும்பத்தினர் மேற்கிந்தியதீவுகளில் வசிக்கிறார்கள். என் பெற்றோரும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் சுதந்திரமாக விட்டு விட்டார்கள். அதனால் அவருடைய நண்பர்கள் இருபது பேரோடு மூணாறு சுற்றுலா சென்றோம். எதிர்ப்பும், அதிக கட்டுப்பாடும் இருந்தால்தான் நமக்கும் வம்பு பண்ணத்தோன்றும். எங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை எல்லைமீறாமல் அனுபவித்தோம்''

திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற அனுபவம் எப்படி இருந்தது?

"ஒன்றரை வருடம் அமெரிக்காவில் தங்கியிருந்து `கம்ïனிகேஷன் ஸ்டடீஸ்' பயின்றேன். இன்று நான் பல்வேறு துறைகளில் பயிற்சியளிப்பதற்கு அமெரிக்காவில் கிடைத்த கல்வி உறுதுணையாக இருந்தது''

சர்வதேச அளவில் பெரும்பாலான நிறுவனங்களில் அழகாக இருக்கும் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்களாமே?

"மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அழகான பெண்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அழகோடு சேர்த்து அறிவையும் பெற்ற பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். நான் அப்படித்தான்''

நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிறைய சம்பாதிக்கிறீர்கள். ஆனால், அந்த துறையில் இருக்கும் பெண்கள் உடல்- மன பிரச்சினைகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்களே?

"உண்மைதான். மற்ற துறைகளில் நாற்பது வருடங்கள் உழைக்க முடிந்தால் இந்த துறையில் 20 வருடங்கள்தான் உழைக்க முடியும். ஆனால் நான் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவைகளை கடைபிடிக்கிறேன். அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நானும், என் கணவரும் தினமும் ஜிம்முக்கு போய்விடுகிறோம். சேர்ந்து நடனமும் ஆடுகிறோம்.''

நீங்கள் என்ன மாதிரியான பயிற்சிகளை வழங்குகிறீர்கள்?

"இன்று தனி மனித மேம்பாட்டிற்காகவும், உழைக்கும் ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் `டீம் ஸ்பிரிட்' எனப்படும் குழுவாக இணைந்து செயல்படும் தன்மை மிக முக்கியம். அந்த இயல்பை உருவாக்குவதற்கான பயிற்சியை நான் வழங்குகிறேன். இதனால் நிறுவனங்களில் உள்ள பணி யாளர்களிடையே இடைவெளியும், போட்டி மனப்பான்மையும் குறைந்து நெருக்கம் ஏற்படும். `மோட்டிவேஷன்' `கிராஸ் கல்ச்சர்' `கம்ïனிகேஷன்' போன்ற பலவிதமான மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளை கொடுக்கிறேன்''

இப்போது பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் நீங் கள் எதிர்காலத்தில் எந்த துறையில் நிலைக்க விரும்பு கிறீர்கள்?

"எனக்கு ரொம்ப பிடித்தது நடனம், நடிப்பு, சமையல். எதிர்காலத்தில் உள்ளறை அலங்கார கலையிலும் ஈடுபடு வேன். என் வீட்டைப் பாருங்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு அலங்காரமும் என் கைவண்ணம்தான். வாழ்க்கை ரொம்ப அழகானது. நாம் வீட்டை அலங்காரம் செய்து ரசிப்பது போல், வாழ்க்கையையும் நன்றாக ரசித்து அனுபவிக்க வேண்டும். பலரும் தங்கள் வீடுகளில் குறிப்பிட்ட அறை களைத்தான் ரசனையாக அலங்காரம் செய்கிறார்கள். டாய் லெட், பாத்ரூம், சமையல்அறை போன்றவைகளை கண்டு கொள்ளாமலே விட்டுவிடுகிறார்கள். நமது உடலில் எல்லா உறுப்புகளையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது போல் வீட்டிலும் எல்லா இடங்களையும் சுத்தமாகவும், உள் ளறை அலங்காரத்துடனும் வைத்திருக்க வேண்டும்.''

ராகவ் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இளம் ரசிகைகள் இருப்பார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது நெருக்கடிகள்?

"ஒரு நடிகர் பிரபலமாக வேண்டும் என்றால் இளம் பெண்களின் ஆதரவு தேவை. நடிப்பை ரசிப்பதோடு அவர்கள் நிறுத்திக்கொண்டால் மகிழ்ச்சி. நேரடியாக தேவையில்லாமல் `வழிந்தால்', `ஏம்மா அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான்தான் மனைவி. எங்களுக்கு குழந்தைகூட இருக் குது' என்று நேரடியாகவே நறுக்கென சொல்லிவிடுவேன். இந்த மாதிரி பேசும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நான் சிந்திப்பதில்லை''

நீங்களும் நடிக்கிறீர்கள். நடனமாடுகிறீர்கள். அழகாகவும் இருக்கிறீர்கள். உங்களிடம் யாராவது வழிந்தால் ராகவ் என்ன செய்வார்?

"நம்ம ஊரு பெண்களுக்கு பொது இடங்களில் என்ன மாதிரி பிரச்சினைகள் வரும் என்பது எனக்குத்தெரியும். அதனால் நான் எந்த ஆணும் நெருங்கும் அளவிற்கு விடமாட்டேன். இங்குள்ள ஆண்களும், பெண்களுக்கு மரியாதை தருவதில் குறைந்தவர்கள் இல்லையே..!''

பிரீத்தாவின் பெற்றோர்: சுப்பிரமணியம்- உஷா. இவருடைய சகோதரர் கணேஷ் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். பிரீத்தாவும், கணேசும் இரட்டையர்கள். பிரீத்தா- ராகவ் தம்பதிகளுக்கு தனிஷா என்ற குழந்தை உள்ளது.

[tscii:c7ae59b959][/tscii:c7ae59b959]

aanaa
15th March 2008, 09:36 PM
காமெடி டைம் அர்ச்சனா பெண்குழந்தைக்கு தாயான பூரிப்பில் குண்டாகி விட்டார். உடம்பை குறைக்க கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றாலும் உடல் மெலியவில்லை. இன்னும் 3 மாதங்களுக்குள் முன்பு போல கொடிஇடைக்கு வந்து விடுவேன் என்று அவர் சவால் விட்டுள்ளார்.

இதற்கிடையே அர்ச்சனா கலைஞர் டிவிக்கு தாவி விட்டார். ஸீ டிவியில் சேர்ந்து விட்டார்,விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வழங்கப்போகிறார் என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதுபற்றி அர்ச்சனாவிடம் கேட்டபோது இன்னும் 3 மாதம் கழித்து முடிவு எடுப்பேன் என்றார்.

aanaa
19th March 2008, 06:03 PM
அப்பா, அம்மாவை மதிச்சு நடக்கணும் : பணிவாக சொல்கிறார் புஷ்பலதா

பெங்களூரிலிருந்து தமிழ் சீரியலுக்கு புதிய வரவாக புஷ்பலதா வந்திருக்கிறார். "மகராசி, வசந்தம்' சீரியங்களில் நடித்துக் கொண் டிருக்கிறார். புஷ்பலதாவின் பேட்டி:


* நீங்க நடித்த சீரியலை பார்த்த இலங்கை டாக்டர் குடும்பத்தினர் சென்னை வந்து உங்களை சந்தித்தார்களாமே உண்மையா?

கலைஞர் "டிவி'யில் நான் நடிக்கிற "மகராசி' சீரியல் பெண்கள் துணிச்சலா செயல்பட்டா எதிலும் சாதிக்கலாம்ங்கிறதை போல கதை போகுது. இந்த கதை போலவே இலங்கையில் ஒரு டாக்டரின் குடும்பத்திலும் சில நிகழ்வுகள் இருந்ததாம். இதனால என்னை பார்க்கணும்ன்னு நினைச்சு அவுங்க குடும்பத்தினர் சென்னை வந்திருக்காங்க. அன்று நான் வீட் டில் இல்லை. "மகராசி'யை தயாரிக்கும் அண்ணாமலை புரொடக் ஷன்ஸ் ஆபீஸ் போய் "ஷூட்டிங்' எங்கு நடக்குதுன்னு விசாரிச்சுக்கிட்டு ஸ்பாட்டுக்கு போயிருக்காங்க. அன்றைக்கு நான் "ஷூட்டிங்' போகலை. யூனிட்'டில் இருந்தவங்க மொபைல் போன்ல என்னை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனால அவுங்க ஓட்டலில் தங்கிவிட்டு மறுநாள் "ஷூட்டிங் ஸ்பாட்'டில் வந்து என்னை பார்த்தாங்க. "ஏன் இவ்வளவு செலவு செஞ்சுட்டு வந்து பார்க்கணுமா, போனில் பேசியிருக்கலாமே'ன்னு கேட்டேன். அவுங்க குடும்பத்தில் இதேபோன்று சில நிகழ்வுகள் இருந்ததாம். அதனால என்னை நேரில் பார்த்து பேசணும்ன்னு நினைச்சு சென்னை வந்தோம்ன்னு சொன் னாங்க. நாம எங்கேயோ இருக்கிறோம், எங் கேயோ இருக்கும் அவுங்க நம்மை தேடி வந்து பார்த்து நட்பா பேசறாங்க. "டிவி'யில் இருந் ததால தான் இப்படி ஒரு சந்திப்பு ஏற்பட்டது. இதை என்னோட நடிப்புக்கு கிடைச்ச பரிசா நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

* சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் தான் சீரியலுக்கு வந்ததாக பேசப்பட்டதே?

தெலுங்கில் "கருத்தவியம்' சீரியலை பார்த்த டைரக்டர் ப்ரியன் என்னை "மகராசி' சீரியலுக்கு அழைச்சு வந்தார். படத்தில் நடிக்கணும்ன்னு ஆசை தான். தெலுங்கு சீரியலில் நடிச்சிட் டிருந்தப்ப இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு கூடவே கண்டிஷனும் இருந்தது. நான் முடியாதுன்னு சொன்னதால வாய்ப்பு நழுவிப் போயிடுச்சு. அதற்காக நான் வருத்தப்படலை. நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்ன்னு இருக்கேன். "டிவி'யில் நல்ல வாய்ப்பு வந் திட்டிருக்கு. ஒர்க் பண்ணவும் சிரமமில்லை. யூனிட்'ல எல்லாரும் நல்லா பழகுறாங்க. ரிலாக்ஸ்சா ஒர்க் பண்ண முடியறது. இப்படித் தான் எதிர்காலம் இருக்கும் ன்னு சொல்ல நாம ஆண்டவன் இல்லையே. நாம நல்லபடியா நடந்துக்கிட்டா நடப்பதும் நல்லதா நடக்கும்ங்கிற நம்பிக்கையில இருந்திட்டிருக்கேன்.

* சீரியலில் சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் சில நடிகைகள் பொது இடங்களில் "டூ பீஸ்' சில் வந்து கலக்குகின்றனரே?

மாடர்ன் டிரஸ் போடுவது அவுங்க அவுங்க இஷ்டம். பப்ளிக்ல அறிமுகமான நாம எப்படி நடந்துக்கணும்ன்னு கொஞ்சம் யோசிச்சா டிரஸ் விஷயத்தில கவனமா இருக்கணுன்னு தோணிடும். பொழுது போக்கு அம்சங்கள்ல நாட்டம் உள்ளவங்க மாடர்ன் டிரஸ் போட்டுக்க ஆசைப்படுவாங்க. மாடர்ன் டிரஸ் போட்டுக்கிடறது தவறுன்னு சொல்ல மாட்டேன். முகம் சுளிக்கிற மாதிரி டிரஸ் போட்டுக்கிறதை தவிர்க்கலாமேன்னு சொல்லலாம். சேலை. சுடிதார் தான் எனக்கு பிடிக்கும். ஜீன்ஸ், டிசர்ட் போடுவது கிடையாது.

* சமீபத்திய சந்தோஷம் ஏதும்?

"மகராசி'க்கு நல்ல முகராசி இருக்கு. சீரியல் பீல்டில் எனக்கு "பளிச்'ன்னு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. "டிவி' சீரியல்கள்ல டி.ஆர்.பி., ரேட்டிங்'ல முன்னணியில "மகராசி' இருந்து வருவதாக கலைஞர் "டிவி' பொதுமேலாளர் ப்ளாரென்ட் பெரேரா சொல்லியிருக்காங்க. சந்தோஷமாயிருக்கு.

* கட்டுப்பாட்டை மீறி வீட்டில் அடி வாங்கிய சம்பவம் ஏதும்?

""அப்பா, அம்மா சொன்னதை நான் மீறினது கிடையாது. சுட்டித்தனம் கூட செய்ததில்லை. அப்பா, அம்மா அவுங்க உயிரை விட மேலாக நம்மை உயிரா நினைச்சு வளர்க்கிறாங்க. நமக்காக எவ்வளவோ தியாகம் செய்றாங்க. சாப்பிடற சாப் பாடு, போடுகிற டிரஸ் எதுவானாலும் குழந்தைகளுக்கு பிறகு தான் அவுங்களுக்குன்னு செய்துக்கிடறாங்க. இப்படிப்பட்டவங்க நம்மை கண்டிக் கிறாங்கன்னா காரணமில்லாமல் இருக்காது. அதனால அப்பா, அம்மாவை மதிச்சு நடக்கணும். அதே நேரம் பிள்ளைகளின் மனநிலை அறிந்து பெற்றோர்கள் நடந்துக்கணும். நல்ல வழிகாட்டணும். குழந்தைகளின் நியாயமான கோரிக்கைகள் பெற்றோருக்கு பிடிக்கலையென்றாலும் குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நிறைவேற்றி வச்சால் அந்த குடும்பத் தில் சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காது,'' என்று அழுத்தமாக சொன்னார் புஷ்பலதா

aanaa
27th March 2008, 07:48 PM
அழணும்னா உடனே அழுதுடுவேன்; சிரின்னா உடனே சிரிச்சிடுவேன் : சொல்கிறார் காயத்ரி

விஜய் "டிவி'யில் "ஜோடி நெம்பர் ஒன்' நடன போட்டியில் ஆட்டம் போடும் காயத்ரி, "மதுரை, ரேகா ஐ.பி.எஸ்., கல்யாணப் பரிசு' சீரியல்களிலும் நடித்து வருகிறார். "சிவா மனசுல சக்தி' படத்திலும் நடிக்கிறார். காயத்ரியின் பேட்டி:


* மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்ததாக சொன்னாங்களே, அங்கு ஏதும் பிரச்னையா "டிவி' பக்கம் வந்திருக்கீங்களே ?

பி.டெக்., முடிச்சிட்டு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் வேலை செஞ்சிட்டிருந்தேன். நல்ல சம்பளம் கிடைச்சது. இருந்தாலும் "டிவி' பக்கம் போகலாம்ன்னு ஆசை இருந்தது. வாய்ப்பு கிடைச்சா செய்யலாம்ன்னு நினைச்சிட்டிருந்தேன். கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருந்தப்ப கூடவே மாடலிங் கும் செஞ்சிட்டிருந்தேன். என்னை பார்த்த விஜய்ஆதிராஜ் அவருடன் "மீண்டும் ஒரு காதல் கதை' சீரியலில் நடிக்க அழைச்சார். வேலையை விட்டுட்டு "டிவி' பக்கம் வந்துட்டேன். "மதுரை, ரேகா ஐ.பி.எஸ்., கல்யாணப் பரிசு' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்."சிவா மனசுல சக்தி' படத்தில நல்ல கேரக்டர் கிடைச்சதால சினிமாவிலும் கால் வச்சாச்சு.

* நல்ல சம்பளத்தில் வேலையிலிருந்த உங்களுக்கு சீரியலில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கிறதா?

வாழ்க்கைக்கு பணம் தேவை தான். பணம் கிடைக்கிறதேன்னு பிடிக்காத வேலையை ஏனோ தானோன்னு செஞ்சுட்டிருப்பதைவிட பிடிச்ச வேலையை செஞ்சு அதுல என்ன கிடைக்கிறதோ அதுவே நிறைவா நினைச்சு சந்தோஷப் படணும். அப்பத் தான் பிடிச்ச வேலையை திருப்தியா செய்யலாம். பிடிச்சதுன்னு ஒரு வேலைக்கு வந்த பிறகு அங்க அவ்வளவு சம்பளம், இங்க இவ்வளவு சம்பளம்ன்னு கணக்கு பார்த்திட்டிருக்கலாமா சொல்லுங்கள்.

* வேறு துறைகளில் ஆர்வம் ஏதும்?

"லைப் ஈஸ் பியூட்டி புல்'ங்கிற பெயர்ல தமிழ் ஆல்பத்தில நடிச்சிருக்கேன். நாமும் தனியா ஆல்பம் பண்ணனும்ன்னு ஆசையிருக்கு. சரியான வாய்ப்பு அமையும் போது செய்வேன்.

* சீரியலுக்கு வந்து சிரமப்பட்ட விஷயங்கள் ஏதும்?

நடிக்க வந்த புதுசுல சீன்ல அழத் தெரியாது, வெட்கப்பட தெரியாது. ஆர்வமா நானே சீரியலுக்கு வந்ததால இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. அழனும்னா உடனே அழுதுடுவேன். சிரின்னா உடனே சிரிச்சிடுவேன். இந்த பீல்டு'ல ஆர்வமா கவனமா இருந்தா வாய்ப்பு வரும்.

* விஜய் "டிவி' "ஜோடி நெம்பர் ஒன்' போட்டியில் வெற்றி பெறுவீர்களா?

போட்டியில இருக்கிறவங்க சிலர் முறையா டான்ஸ் கத்துக்கிட்டு வந்திருக்காங்க. சிலர் டான்ஸ் மேல இருந்த ஆர்வத்தில வந்திருக்காங்க. எனக்கு டான்ஸ் மேல ஆர்வம் இருந்ததால தான் வந்திருக்கேன். யாரிடமும் டான்ஸ் கத்துக்கலை. போட்டியில "ரிகர்சல் ஸ்டார்ட்' ஆனதுமே டான்ஸ் மேல எனக்கு அதிரடி ஈர்ப்பு வந்திடுச்சு. அதனாலதான் போட்டியில இன்னும் நாங்க நின்னிட்டிருக்கோம். ஜெயிச்சுடுவோம்ங்கிற ஆசை இருக்கு. போட்டியில எல்லாருமே நல்லா ஒர்க் பண்ணிட்டிருக்காங்க. ஜெயிச்சா சந்தோஷம் தான்.

* "டிவி'யெல்லாம் சரியா வராது, அமெரிக்காவில் நல்ல கம்பெனியா பார்த்து வேலை தேடு என்று உங்க அம்மா கண்டிஷன் போட்டாராமே?

அம்மாவுக்கு இந்த பீல்டு முதலில் பிடிக்கலை. என் வழியில என்னை விட்டுடுங்கன்னு சொன்னேன். என்னோட ஆர்வத்தை பார்த்துட்டு தான் "டிவி'க்கு வர சம்மதிச்சாங்க. எனக்கு நல்ல வாய்ப்பு வந்துட்டிருப்பதால என்னை விட என்னோட அம்மா சந்தோஷமாயிருக்காங்க. வெளிநாட்டு வேலை பற்றியெல்லாம் இப்ப ஏதும் பேசுவதில்லை.

* கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரச்னைகள் பெரிதாக இருக்கிறது என்று சொன்னார்களே?

எந்தத் துறையிலும் பெண்களுக்கு "சேப்ட்டி' கிடையாது. தேவையில்லாத டார்ச்சர் இல்லாமலிருக்கா? யாரு என்ன செய்றாங்க. எந்த நோக்கத்தில செய்றாங்க. எதற்காக செய்றாங்கன்னு தெரியாமலிருக்காது. டார்ச்சர் எந்த வகையில வருதோ அதே போக்கில போய் அவுங்களுக்கு நல்ல பாடம் புகட்டணும். நம்ம வழியில அவுங்க எந்த கிராசும் செய்யாத அளவிற்கு நம்ம எதிர்ப்பை காட்டிடணும். மறைமுகமா "டார்ச்சர்' கொடுக்கிறவங்களை நேரடியாக எதிர்ப்பதைவிட அறிவையும், திறமையையும் பயன்படுத்திக்கூட எதிர்க்கலாம். முடியலையா அலட்டிக்காம வேறு வேலை பார்த்துட்டு போயிடறது நல்லது.

* உங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னாங்களே?

""இப்பத்தான் "டிவி' பீல்டுக்கு வந்திருக்கேன். அதற்குள் மேரேஜ்ன்னு சொன்னா எப்படி சார். இந்த பீல்டுல ஸ்ட்ராங்கா நிக்கணும்ன்னு ஆசையில வந்திருக்கேன். திருப்தியடைஞ்ச பிறகு தான் மேரேஜ் பண்ணிக்குவேன். லவ் பண்ணி மேரேஜ் செஞ்சுக்கிடணுன்னு ஆசை இருக்கு. லவ் பண்ற ஆளு எனக்கு லைப்ல எல்லா வகையிலும் சரியான ஆளாத் தான் இருப்பார்'' என்று சொன்ன காயத்ரியை அவுங்க அம்மா மொபைல் போனில் அழைத்ததும் பறந்தார்.

aanaa
2nd April 2008, 06:26 PM
சரியா நடந்தா சிக்கல் வராது! சாந்தி ஆனந்த்ராஜ் அட்வைஸ்

தீர்க்க சுமங்கலி, அவர்கள், சூர்யவம்சம், ஆசை உட்பட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் சாந்தி ஆனந்த்ராஜ். தற்போது ராஜ் டிவிக்காக ஆறுமனமே ஆறு, கலைஞர் டிவிக்காக சூப்பர் சுந்தரி ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் கலைத்துறைக்கு வருவதற்கு பாட்டி ஜெமினி வரலட்சுமிதான் காரணம் என்றவர் செய்யற வேலையில கவனமா இருந்தா நினைச்சதை சாதிக்கலாம் என்றும் அனுபவம் சொன்னார். சாந்தி ஆனந்த்ராஜின் சுவராஸ்யமான பேட்டி:



* உங்கள் பாட்டி உங்களை கலைத்துறைக்கு அழைத்து வந்ததாக உங்க வீட்டில் சொன்னாங்களே?

என்னோட பாட்டி ஜெமினி வரலட்சுமி, சக்கரதாரி படத்தில் ஜெமினிகணேசன் ஜோடியாக நடிச்சவர். இந்த பீல்ட்ல அவருக்கு ஈடுபாடு இருந்ததால, என்னையும் கொண்டுவர ஆசைப்பட்டு நடிப்பு, பரதநாட்டியம்ன்னு எல்லாம் கத்துக்க ஏற்பாடு செஞ்சாங்க. பார்த்திபன் நடிச்ச சுகமான சுமைகள் படம் மூலம் நடிக்க துவங்கி சினிமா, சீரியல்கள்னு பட்டியல் நீண்டுக்கிட்டிருக்கு.

* திடீர், திடீர் என்று பிரச்னை வந்துவிடுகிறது என்று புலம்பும் பெண்கள் பற்றி?

இயல்பாகவே பெண்கள் பாதுகாப்பாக நடந்துகிடணும்ங்கிற நிலைதானிருக்கு. எல்லாப் பெண்களுக்கும் பிரச்னை வந்துடறதில்லை. என்ன செய்றோம்ன்னு தெரியாம, ஏதோ செஞ்சிடவறங்க தான் சிக்கலில் மாட்டிடறாங்க. சிக்கலிலிருந்து சமாளிக்க எடுக்கிற முயற்சியும் தோல்வியில முடியறப்ப மேலும் பிரச்னையில, சிக்கி உயிரை விடவும் துணிஞ்சிடறாங்க. எந்த பிரச்னையா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்களிடம் தைரியமா பேசி முடிச்சிடணும். முடியலைனா நம்மை சுற்றி உள்ள நல்ல மனிதர்கள் யார்ன்னு பார்த்து அவுங்களிடம் சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்க்கணும். இதைவிட்டுவிட்டு, சிக்கலை தீர்க்க ஏனோ தானோன்னு எதையாவது செய்து வேதனை படக் கூடாது.

* வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டாததால் பல நடிகைகளுக்கு வீட்டில் பிரச்னை என்று பேசப்படுகிறதே?

திருமணமான பெண்கள் எந்தப் பணியில இருந்தாலும் வீட்டு மேலேயும் பொறுப்பா நடந்துக்கிடுவாங்க. வெளியில வேலை பார்க்கிறவங்களுக்கு அதிக நேரம் ஆயிடும்போது வீட்டை அவ்வளவாக கவனிக்க முடியாம போயிடும். சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்டு வீட்டார்கள் குறை சொல்லக் கூடாது. புரிஞ்சுக்கிடாதவங்க சின்ன பிரச்னையை கூட பெரிசா சொல்லிடும்போதுதான் சிக்கலாயிடுது. நான் படங்களில்,சீரியல்களில் பிசியா இருந்தப்ப எனக்கு மேரேஜ் நடந்தது. பிறகு நடிப்பதா வேண்டாமா என்ன செய்யலாம்ன்னு என்னோட கணவரிடம் கேட்டப்ப, நடிப்பின் மீது உனக்கு ஆர்வம், திறமை இருக்கும்போது அது என்னால முடங்கக் கூடாது. உன்னோட முயற்சிக்கு தடையா நான் இருக்க மாட்டேன். நீ செஞ்சிட்டிருக்கிற வேலையை தாராளமா செய்யலாம்ன்னு சொன்னார். ஷூட்டிங்ல நேரம் கொஞ்சம் அதிகமானா போன் போட்டு சொல்லிடுவேன்.வீட்டில் அதைச் செய்யலை இதைச் செய்யலைன்னு கோபிச்சுக்கிட மாட்டார். அவரோட நல்ல ஒத்துழைப்பாலதான் நான் செய்யற வேலையை ஒழுங்கா பொறுப்பா செய்ய முடியறது. வீட்டிலேயோ, வெளியிலேயோ நாம நடந்துக்கிடற விதத்திலதான் முடிவும் இருக்கு.எந்த விஷயமானாலும் நாம சரியா நடந்துக்கிட்டா சிக்கல் வராதுன்னு நான் சொல்வேன்.

* நடிப்பில் பாலசந்தரை அசத்தியதாக சொன்னார்களே?

பாலசந்தர் இயக்கிய சேரன் எக்ஸ்பிரஸ் சீரியலில் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சது. கணவர் விபத்தில் இறந்திடுவார். நான் மாதமாயிருப்பதால அதை என்னிடம் மாமியார் சொல்லாமல் மறைப்பாங்க. மாமியராக இருந்தாலும், ஒரு மகளைப் போல என்னை பாவிப்பாங்க. விபத்து பற்றி தெரியாமலேயே, கதையும் முடிஞ்சுடும். அருமையான ஸ்டோரி. ரொம்ப ஆர்வமா நடிச்சேன். நடிப்பை பார்த்துட்டு பாலசந்தர் சார் பாராட்டினார்.

* பிறந்த வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் புகுந்த வீட்டில் இல்லை என்று புலம்பும் பெண்கள் பற்றி?

புகுந்த வீட்லேயும்முழு சுதந்திரம் கிடைக்கும். மருமகளை மாமியார் தனது மகளை போல பாவிச்சா பிரச்னை எப்படி வரும். மருமகளும் மாமியாரை, தன் அம்மாவைப் போல கவனிச்சுக்கிட்டா அவுங்க ஏன் மருமகளை பற்றி குறை சொல்லப் போறாங்க. விட்டுக் கொடுக்கும் தன்மை இருவரிடமும் இருக்கணும்.

* நீங்கள் ஆசைப்படுவது எதுவும்...?

எனக்கு எந்த ஆசையும் இல்லை. அமைதியா வாழ்க்கை போயிட்டிருந்தா போதும். எல்லாத்தையும் கடவுள் பாத்துக்கிடுவார். எனக்கு எது நடந்தாலும் அது அவரால்தான் நடக்கிறதுன்னு நினைச்சுக்குவேன். சந்தோஷம் வந்தா ஏத்துக்கிடற மனநிலை, சங்கடம் வந்தால் அதனை சமாளிக்கிற மனநிலையை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கார். என்னோட நினைப்பு நல்லபடியா இருக்கையில நடப்பதும் நல்ல படியாதானே இருக்கும்ங்கிற நம்பிக்கையோடு இருந்துக்கிட்டிருக்கேன்' என்றவர் சூப்பர் சுந்தரி சீரியலில் நடிக்க முட்டுக்காட்டுக்கு புறப்பட்டார்.

R.Latha
7th April 2008, 08:20 AM
TINKY MARRIED

கங்கா யமுனா சரசுவதி தொடரில் அறிமுகமான நடிகை டிங்கி, தொடர்ந்து அலைகள், மாங்கல்யம், பெண், ஜனனி, நீ நான் அவள், அகல்யா, கணவருக்காக என தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பு முத்திரை பதித்தார். இப்போது திருமணமாகி கடந்த வாரம் சென்னையில் திருமண வரவேற்பையும் நடத்தினார்.

வரவேற்பு விழாவுக்கு சின்னத்திரையே திரண்டு வந்திருந்தது. நடிகர்கள் ராஜேஷ், டெல்லிகணேஷ், கருணாஸ், சக்திகுமார் , பரத் கல்யாண், நடிகைகள் கவுசல்யா, ஈஸ்வரிராவ், மஞ்சரி, உமாரியாஸ், சுஜிதா என திரும்பிய திசையெல்லாம் சின்னத்திரையின் நட்சத்திரங்கள்.

மணமக்களை வாழ்த்திய கையோடு டிங்கியிடம், "இனி நடிப்பு அவ்வளவு தானா?'' கேட்டோம்.

டிங்கி இந்த கேள்வியை எதிர்பார்த்தது போல் பதிலை தயாராக வைத்திருந்தார். "நடிப்பு அனுபவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. வட இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் இருந்த இந்த டிங்குவை சின்னத்திரை தான் ரசிகர்களுடன் சொந்தம் கொள்ள வைத்தது. இந்த சொந்த உணர்வுடன் என் அடுத்த கட்ட வாழ்க்கையை தொடங்கவிருக்கிறேன். கணவர் கோபிக்கு சிங்கப்பூரில் பிஸினஸ் என்பதால் டிங்கி கோபி என்ற பெயரில் அங்கே என் வாழ்க்கை தொடங்கும்.''

aanaa
23rd April 2008, 11:13 PM
சுப்புலட்சுமியின் பேட்டி:

சீரியல் ஷூட்டிங் பார்க்கப் போன சுப்புலட்சுமிக்கு சீரியல் இயக்குனர் சுந்தர் கே.விஜயன் செல்வி சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததால், அரசி, காத்து கருப்பு, காதலிக்க நேரமில்லை, தேன்மொழியாள் என்று சீரியல்களில் சுப்புலட்சுமி பிசியாகி விட்டார். சுப்புலட்சுமியின் சுவாரஸ்யமான பேட்டி:

வீடு முழுக்க ஜோதிகா படம் ஒட்டி வச்சிருக்கீங்களே என்ன விசேஷம்?
ஜோதிகாவின் தீவிர ரசிகை நான். அவுங்க நடிச்ச எல்லா படமும் எனக்கு பிடிக்கும். சந்திரமுகி கிளைமேக்ஸ் சீன்ல நடிப்பால அசத்தினாங்க. அப்படி யாராலும் நடிக்க முடியாது. அவுங்களோட ஸ்டைல், மேனரிசம், பேச்சு, சிரிப்பு, காஸ்ட்யூம் செலக்ஷன் எல்லாம் எனக்கு பிடிக்கும்.
நடிகையே ஒரு நடிகையின் ரசிகையாயிட்டீங்க.ஜோதிகாவை நேரில் சந்தித்த அனுபவம் ஏதும்?
ஜோதிகாவை நேரில் சந்தித்து பேசணும்ன்னு ஆசையிருந்தது. எங்க அக்கா பிரியங்கா மூலம் அந்த வாய்ப்பு அமைஞ்சது. ஜோதிகா நடிச்ச "மணிகண்டா' படத்தில என்னோட அக்கா பிரியங்காவும் நடிச்சாங்க. "ஷூட்டிங் ஸ்பாட்'டுக்கு வந்து ஜோதிகாவை சந்திச்சு பேசணும்ன்னு சொன்னேன். அழைச்சிட்டு போறேன்னு சொன்ன அன் றைக்கு எனக்கு ஸ்கூல் இருந்தது. ஸ்கூலுக்கு "கட்' அடிச்சிட்டு ஜோதிகாவை பார்க்க போனேன். அன்பா பழகினாங்க, இனிமையா பேசினாங்க. ரொம்ப எளிமையா இருந்தாங்க. அவுங்களோட ஒவ்வொரு செய்கையும் எனக்கு பிடிச்சிருந்துச்சு. என்னோட பர்த்டே'க்கு வாழ்த்து சொன்னாங்க. நடிக்க வரவேண்டாம். நல்லா படிச்சு வேலைக்கு முயற்சி பண்ணு'ன்னும் அப்ப சொன்னாங்க. எதிர் பாராதவிதமா நான் நடிக்க வந்துட்டேன். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக் கலை. திறமையான நடிகை அவுங்க. மீண்டும் நடிக்க வரணும். அவுங்க சினிமாவில் நடிக்க சூர்யா சார் விட்டுக் கொடுக்கணும். அவுங்களோட ரசிகையா கேட்டுக்கறேன்.
நடிகை ராதிகா உங்களுக்கு நடிப்பு சொல் லிக் கொடுத் தாங் களாமே?
ராடன் "டிவி' தயாரித்த "செல்வி' தான் நான் முதலில் நடிச்ச சீரியல். அதுவும் ராதிகா மேடத்தோடதான் அதிகமா நடிக்க வேண்டியிருந்தது. ஆக்ட்டிங்ல அவுங்க சாதிச்சவங்க. முதல் நாள் ஷூட் டிங்ல அவுங்க கூட சரியா நடிச் சிட முடியுமான்னு பயமாயிடுச்சு. அவுங்க என்னிடம் நல்லா பேசினாங்க. பயப்படாம உன் இஷ்டத்திற்கு நடி. சரியில் லைன்னா பார்த்துக்கலாம்ன்னு சொன் னாங்க. சில சீன்களில் இப்படி நடிச்சா நல்லாயிருக்கும்ன்னு நடிப்பு சொல்லிக் கொடுத்தாங்க. பெரிய நடிகை என்ற பந்தா ஏதும் அவுங்களிடம் இல்லை. அவுங்களோட நடிச்சதால யார் கூடவும் பயமின்றி நடிக்கலாம்ங்கிற தைரியமே எனக்கு இப்ப வந்திடுச்சு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிச்சிடலாம்னும் துணிச்சலிருக்கு.
வெளிநாட்டில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்?
செல்வி ஷூட்டிங் கிற்காக இலங்கை போயிருந்தோம். கொழும்பு, கதிர்காமம், நூரேலியான்னு அங்கு பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது. டிசம்பர் 26ம் தேதி கொழும்பு கடற்கரை அருகில் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. முதல் நாள் மாலை ஷூட்டிங் பற்றி பேசிக் கொண்டிருந்தப்ப ராதிகாமேடம் நாளைக்கு ஷூட்டிங் வேணாம்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. மறுநாள் ஷூட்டிங்கை ரத்து செஞ்சுட்டாங்க. அன்று தான் சுனாமி தாக்குதல் நடந்தது. இலங்கை உட்பட பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. "செல்வி' சீரியல் ஷூட்டிங் நடத்த இருந்த இடத்திலிருந்த எல்லாவற்றையும் கடலலை அடிச்சுட்டு போயிடுச்சு. நாங்க அந்த நேரத்தில் கடற்கரையில் ஷூட்டிங்கில இருந்திருந்தா ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டிருக்கும். ராதிகாமேடத்தால யூனிட்ல உள்ள எல்லாரும் தப்பியதை மறக்க முடியாது.
சமீபத்தில் மனம் நெகிழ்ந்த சம்பவம் ஏதும்?
நெசவுத் தொழிலாளர்களின் வேதனையான வாழ்க்கை பற்றிய டாக்குமென்ட்ரி படத்தில் நடிப்பதற்காக அம்பாசமுத்திரம் போயிருந்தேன். சினிமா டைரக்டர் ராஜிவ் மேனனோட மனைவி லதா மேனன் தான் அதன் டைரக்டர். நெசவாளர்களின் வாழ்க்கை பற்றி நான் தெரிஞ்சுக்கிட்டா எதார்த்தமாக நடிக்க வாய்ப்பாயிருக்கும்ன்னு சொல்லி, நெசவாளர் வீட்டுக்கு அழைச் சுட்டு போய், அவுங்களோட பேச வச் சாங்க, அவுங்க துணி நெய்வதை பார்க்க வச்சாங்க. அதன் பிறகு தான் ஷூட்டிங் நடந்தது. துணி நெய்கிற சீன்ல கயிறெல்லாம் அடிச்சு ஈசியா நடிச்சிட்டேன். ஆனா, மறுநாள் கை, கால் வலி எடுத்திடுச்சு. ஒரு நாள் பேருக்கு ஒர்க் பண்ணியதே தாங்க முடியலை. வருடம் முழுவதும் இப்படின்னா பாவங்க அவுங்க. ஏதோ பணம் கொடுக்கிறோம். கலர் கலரா துணி வாங்கி போட்டுக்கறோம். அந்தத் துணி தயாராவதற்கு பின்னணியில் எவ்வளவோ உழைப்பும், எவ் வளவோ வேதனைகளும் புதைஞ்சு கிடக்குங்க. இது அவுங்களை நேர்ல பார்க்கிறவங்களுக்கு புரியும். நம்மால முடிஞ்ச அளவு கைத்தறி துணிகளை நாம வாங்கினா நெசவாளர்களுக்கு உதவியா இருக்குமுங்க'' என்று நெகிழ்வாக பதில் சொன்ன சுப்புலட்சுமியை அவரது அம்மா ராணி, கோவிலுக்கு போக வேண்டும் என்று மொபைல் போனில் அழைக்க, புறப்பட்டு சென்றார்.

aanaa
29th April 2008, 05:12 PM
பெண்கள் எதிலும் சாதிக்க முடியும் - சொல்கிறார் சுப்ரஜா

ஆந்திர வரவான சுப்ரஜாவை பேட்டிக்காக அரும்பாக்கத்தில் உள்ள இந்தியன் மருத்துவமனையில் நடந்த கஸ்தூரி சீரியல் ஷூட்டிங்கில் சந்தித்த போது, கணவரின் ஒத்துழைப்பு இருந்தால் பெண்கள் எதிலும் சாதிக்க முடியும், என்று கணவர் புகழ் பாடினார். சுப்ரஜாவின் பேட்டி:

அழுகின்ற சீன்களில் நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவதாக டி.வி. சீரியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதே?
ஆண்களைவிட பெண்கள் நிறைய சீரியல் பார்க்கிறாங்கன்னு ஒரு கணிப்பு இருக்கு. வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்ல வித்தியாசமாக படறதைதான் டைரக்டருங்க சீரியலில் கதையாக கொண்டு வர்றாங்க. நடிப்பவர்கள் அழாமல் நடிக்க முடியுமா? மனுஷங்கன்னா அழுவதும், சிரிப்பதும் எதார்த்தம். அப்பத்தான் அவுங்க மனுஷங்க. அழற சீன் சீரியலில் நிறைய வந்தாலும் சென்டிமென்ட் சீன்களில் நடிக்க எனக்கு பிடிக்கும்.
புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்ததாக பேசப்பட்டதே உண்மையா?
தெலுங்கில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். கஸ்தூரி சீரியல் மூலமா தமிழுக்கு வந்திருக்கேன். அக்கா தங்கையிலும் நடிச்சிட்டிருக்கேன். இதற்கே நேரம் சரியாக இருக்கு. மலையாள சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. நடிக்கலாம்'ன்னு இருக்கேன். தமிழில் இரண்டு வாய்ப்பு வந்தது. நேரமில்லாததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
தமிழ் சீரியலில் நடிக்க உங்களுக்கு முன் அழைப்பு விடுக்கப்பட்டபோது தமிழ் தெரியாது, வாய்ப்பு வேண்டாம் என்று மறுத்ததாக பேசப்பட்டதே?
நான் நடிச்ச தெலுங்கு சீரியலை பார்த்துட்டுதான் கஸ்தூரி சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. சினிமான்னா சில சீன்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். மொழி தெரியாவிட்டாலும் சமாளிச்சுடலாம். சீரியலில் டயலாக் நிறைய பேசவேண்டியிருக்கும், மொழி தெரியாம சமாளிக்கிறது சிரமமாயிருக்கும்ன்னு நினைச்சேன். அதனால மறுத்தேன். நீ சரி சொல்லும்மா நாங்க பாத்துக்கறோம்ன்னு தயாரிப்பாளர் சொன்னார். சரின்னு நடிச்சேன். ரெண்டு வருடமா சென்னையிலிருந்ததால, தமிழ் எனக்கு பிடிச்சதால விரைவா கத்துக்க முடிஞ்சது. தெலுங்கைவிட இங்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாயிருக்கு. ஷூட்டிங் கில் அழற சீன் ஒன்றில் ஷூட் செய்து முடிஞ்சதுகூட தெரியாமல் அழுது கொண்டேயிருந்தேன். சீன்' ஓகே, ஆயிடுச்சுன்னு டைரக்டர் சொன்ன பிறகும்கூட அழறதை நிறுத்த முடியலை. அந்தளவிற்கு ஈடுபாடு இருந்தது.
திருமணம் ஆகாத நடிகைகளைவிட திருமணம் ஆன நடிகைகளுக்கு பிரச்னை அதிகமாயிருக்கு என்கின்றனரே?
நடிகைகளுக்கு மட்டும்தான் பிரச்னை வரும் மற்றவங்களுக்கு வராதுன்னு ஏதும் கட்டுப்பாடு இருக்கா சொல்லுங்க. யாராயிருந்தாலும் சரியா நடந்துக்கிட்டா எப்படி பிரச்னை வரும். கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கிட்டா, எப்படி நடந்துக்கிட்டா லைப் சந்தோஷமாயிருக்கும்ன்னு யோசித்து நடந்துக்கிட்டா பிரச்னை எப்படி வரும். நடிகையா வரணும்ன்னு குழந்தையாக இருந்தபோதே எனக்கு ஆசை இருந்தது. எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கலை. திருமணம் ஆனதும் கணவர் என்ன சொல்வாரோ, நடிக்க அனுமதிப்பாரா, மாட்டாரா'ன்னு நினைச்சிட்டிருந்தேன். என்னோட ஆசையை புரிஞ்சுகிட்டவர் நடிக்க அனுமதிச்சார். எங்கள் வீட்டில் வேண்டாம்ன்னு சொன்னாங்க. நான் பார்த்துக்கறேன்னும் அவுங்களையும் சமாதானப்படுத்தினார். அவரோட ஒத்துழைப்பால நான் நடிச்சிட்டிருக்கேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டதால வாழ்க்கை சந்தோஷமாயிருக்கு.
பெண்கள் பெண்களை பற்றி குறை கூறுவது அதிகமாயிருக்கு என்று பல பெண்கள் புலம்புகின்றனரே?
பெண்கள்னாலே ஒருத்தரை ஒருத்தர் குறை கூறுவது சகஜமாயிடுச்சு. நமக்கு பிடிச்சது மத்தவங்களுக்கு பிடிக்காது, மத்தவங்களுக்கு பிடிச்சது நமக்கு பிடிக்காது. இதே நிலை தான் எல்லாருக்கும். அவுங்க அவுங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்றாங்க. இதில நாம சொல்ல என்ன இருக்கு. தேவையில்லாம யாரையும் நாம இஷ்டத்திற்கு ஏதேதோ சொல்லி சங்கடப்படுத்தக் கூடாதுன்னு எல்லாரும் நினைச்சா குறை எப்படி வரும். பலரும் பலவிதமாயிருப்பதால எதிலும் அமைதி ஏற்படுவது சிரமமாயிடுது.
பிரச்னையில் சிக்கிய அனுபவம் ஏதும்?
வீட்டை விட்டு வெளியே ஒர்க் பண்ண போறப்ப எப்படி நடந்துக்கிடணும்ன்னு எங்க வீட்ல சொல்லியிருக்காங்க. வீட்ல உள்ள மூத்தவங்க சொல்றதை கேட்டு நடந்தாலே போதும் நமக்கு நாமே பாதுகாப்பான ஆளாயிடுவோம். எந்தப் பிரச்னையும் நெருங்காம பார்த்துக்கிற அளவுக்கு தைரியம் இருப்பதால இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை, என்று சொன்ன சுப்ரஜாவை, கஸ்தூரி சீரியல் டைரக்டர் நடிக்க அழைக்க, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் புகுந்து கொண்டார்.

R.Latha
5th May 2008, 07:54 AM
LEKHA RATHNAKUMAR

சின்னத்திரையில் `இருட்டில் ஒரு வானம்பாடி' தொடங்கி `நீ எங்கே என் அன்பே' வரை 5 சீரியல்களை இயக்கியவர் லேகா ரத்னகுமார். இவரது சீரியல்களில் `இசை லேகா சொனட்டன்'என்று வரும். இன்றைய பிரபலங்களின் இசைக்கு எந்தவிதத்திலும் குறைந்திடாத இந்த இசைக்கு சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட, இந்த இசையையே தனது சீரியல்களின் தொடர் இசையாக ஆக்கிக்கொண்டார்.

இப்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் டைட்டில் இசைக்கு ஒரு இசையமைப்பாளர் ஒரு பாடலை உருவாக்கிக் கொடுப்பதோடு சரி. அப்புறமாய் பின்னணி இசைக்கெல்லாமே இந்த லேகா சொனட்டன் இசைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு இசை லைபரரி. லேகா - சொனடான் என்ற பெயரில், ஜெர்மன் ரிக்கார்டிங் கம்பெனியின் கூட்டு முயற்சியில் ஒரு மிïசிக் லைப்ரரியை ஆரம்பித்திருக்கிறார் லேகா ரத்னகுமார். இந்த லைப்ரரியில் இண்டியன் மிïசிக், வெஸ்டர்ன் மிïசிக் மற்றும் பல நாட்டு கிளாசிகல், கிராமப்புற மிïசிக் என எல்லாம் உண்டு.

சின்னத்திரையிலோ, பெரிய திரையிலோ எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதாவது ஆக்ஷன், காதல், சோகம், காமெடி, கிராமத்துக் கதை, நகரத்துக் கதை, ஆக்ஷன் திரில்லர் - இப்படி எந்தவிதமான கதைக்கான பின்னணிக்கும் பயன்படுத்தக்கூடிய சி.டி.க்கள் இந்த லைப்ரரியில் இருக்கின்றன. இதுமாதிரியான அங்கீகாரம் பெற்ற மிïசிக் லைப்ரரி இந்தியாவிலேயே இது மட்டும்தான்'' என்கிறார், லேகாரத்னகுமார்.
[tscii:fc637f64af][/tscii:fc637f64af]

R.Latha
6th May 2008, 12:53 PM
PRIYA RAMAN

வளசரவாக்கத்தில் உள்ள "மனோ ஹவுஸ்' படப்பிடிப்புத் தளம். வி.சேகரின், "பொறந்த வீடா புகுந்த வீடா' தொடரின் படப்பிடிப்பு.

""நம்ம குடும்பக் கெüரவத்தை நான் எப்படிக் காப்பாத்துறேனோ... அப்படி என் தங்கச்சி காப்பாத்துவாம்மா. நீங்க ஒண்ணும் வருத்தப்படவோ, சந்தேகப்படவோ வேணாம்'' என்று டயலாக் பேசுகிறார் ப்ரியா ராமன்.

ஷாட் முடிந்து திரும்பிய ப்ரியா ராமனிடம் "கொண்டாட்டம்' பகுதிக்குப் பேட்டி என்றதும் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

பானுப்ரியா நடித்துக் கொண்டிருந்த வேடத்தில் திடீரென்று நீங்கள் இடம் பெற்றது எப்படி? "பொறந்தவீடா புகுந்த வீடா' தொடரில் நடிக்க ஆரம்பித்த கதையைச் சொல்லுங்கள்?

இந்தத் தொடர்ல பானு அக்காதான் நடிச்சிட்டு இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். நான் வேறொரு சீரியல் முடிச்சிட்டு, எனது மகன் பிறந்ததையடுத்து கொஞ்சம் ஓய்வில் இருந்தேன். அப்பத்தான் வி.சேகர் ஆபீஸிலேர்ந்து பேசுனாங்க. பானு அக்கா தனிப்பட்ட காரணத்தினால தொடர்ல இருந்து விலகுவதாகச் சொல்லி, என்னை நடிக்கக் கேட்டாங்க.

ஒரு நடிகை செய்ததை இன்னொரு நடிகை செய்ய பொதுவாகவே தயங்குவாங்க. ரெண்டு பேருமே சினிமாவுல நடிச்சவங்க. இது ஒரு ஈகோ விஷயமா "டீல்' பண்ணாம நடிக்கணும்னு சொன்னாங்க. நான் ஏற்கெனவே வி.சேகர் சாரோட ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டேன். தேதி இல்லாம நடிக்க முடியல. இப்போ வாய்ப்பு வந்ததும் சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். மக்களும் என்னை ஏத்துகிட்டாங்க.

நீங்க நடித்த காட்சிகளை பானுப்ரியா பார்த்தாங்களா? என்ன சொன்னாங்க?

இல்ல. அவங்க குடும்பத்தில பெரிய ஃபங்ஷன் இருந்ததா கேள்விப்பட்டேன். அதனால தொல்லை பண்ணல. ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு.

சினிமாவுலேர்ந்து சின்னத்திரைக்கு வந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

நான்கு, ஐந்து வருஷத்துக்கு முன்பு ஒரு சினிமா நடிகைகிட்ட சீரியல்ல நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டால், அய்யோ... நான் படம்தான் பண்ணுவேன். கதாநாயகி வேஷம் கிடைக்கலைன்னாகூட அம்மாவா, அக்காவா சினிமாவுலதான் நடிப்பேன்னு சொல்வாங்க. சீரியல்ல நடிக்க மாட்டேன்னு மைண்ட்ல பிக்ஸ் ஆகியிருந்தது மறைந்து இப்போது, நெக்ஸ்ட் லாஜிக்கல் ஸ்டெப் இதுதான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இது இறக்கம் இல்லை. பேரலல் இன்டஸ்டிரியா இருக்கு. இதுக்கு ஆடியன்ஸ் இருக்காங்க. டெக்னிஷியன்ஸ் இருக்காங்க. இது ஒரு பெரிய இன்டஸ்ட்ரியா வளர்ந்தாச்சு. எந்த விஷயத்திலும் குறைந்ததோ, தாழ்ந்ததோ இல்லன்னு ஆகிடுச்சு. சின்னசின்ன டெக்னிக்கல் வித்தியாசம்தான் அதுக்கும் இதுக்கும் இருக்கு. எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கு.

சினிமா இன்டஸ்ட்ரிக்கு விரும்பிதான் வந்தீர்களா? இங்கே வந்தபிறகு வேறு எதையும் தவறவிட்டதாக வருத்தம் இருக்கிறதா?

எனக்கே ரொம்ப பிரமிப்பா இருக்கு. எங்க குடும்பத்தில ஐ.ஏ.எஸ்., டாக்டர்னு படிச்சவங்க. அப்படி ஒரு பேமிலிலேர்ந்து இதுக்கு வரணும்னு ஆசை இருந்தது எனக்கு. இந்தளவுக்கு வருவேன்னு எதிர்பார்க்கல. 1994லிருந்து 2008 வரை பதினாலு வருஷம் பயணம். இந்தப் பதினாலு வருஷத்துல கதாநாயகியாகத்தான் இருக்கேன். அதுல நல்ல வரவேற்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எதுவானாலும் பெரிய திரை, சின்னத்திரை எதுவானாலும் பெரிய அங்கீகாரம் கிடைச்சுது. ஐம்பது, ஐம்பத்தி ஐந்து படம் பண்ணியிருக்கேன். எட்டு, ஒன்பது சீரியல் பண்ணிட்டேன். எனக்கு இந்தத் தொழில் பிடிக்கும். இந்தத் தொழிலைக் காதலிக்கிறேன். எல்லோரும் கேட்பாங்க. இந்தத் தொழில்ல சம்பாதித்து, இதுலயே முதலீடு செய்றீயேன்னு...

மாம்பழம் வியாபாரம் செய்றவங்க அதில் சம்பாதித்த பணத்தை, புது மாம்பழம் வாங்கத்தான் நினைப்பார்கள். ஒரு கூடை மாம்பழம் கெட்டுப் போயிட்டதால. அந்தத் தொழிலை விட்டுட மாட்டார்கள். அதுமாதிரி ஒரு படம் ஓடல. நஷ்டங்கிறதுக்காக இதைவிட முடியாது.

உங்களோட கணவர் ரஞ்சித், நடிகராகத் தரும் அறிவுரை?

நாங்க ஒருத்தரை ஒருத்தர் ஆரோக்கியமாக விமர்சித்துக் கொள்வோம். அறிவுரை என்பதைவிட "கன்சல்டேஷன்' கண்டிப்பா இருக்கும். எனக்கு அவர் சொல்றதைவிட, நான்தான் அவருக்கு அதிகம் சொல்வேன். அவர் எப்பவுமே மென்மையானவர். மீசை வைச்ச குழந்தைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு மென்மையான மனம் படைத்தவர். என் கணவர் என்பதற்காக நான் என்னுடைய தனிப்பட்ட உரிமை எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவரும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்ன செய்கிறார்கள்?

ஆதித்யான்னு ஒரு பையன். பதினேழு மாசம் ஆச்சு. அப்படியே அவர் ஜாடை. ஆனால் என் கலர்ல இருக்கான். ஒரு தாயான பிறகுதான் ஒரு பெண் முழுமையடைவான்னு சொல்வாங்க. அது நூறு சதவிதம் உண்மை. இதற்கு முன்பு நான் ஒரு கல்லூரி மாணவி மாதிரி இருந்தேன். இப்போது பொறுப்பு அதிகரித்திருக்கு. அவன் என்னென்ன கத்துக்கணும், எப்படி வரணும், வளரணும்னு நிறைய ஆர்வம் இருக்கு.

புதுசா வேறு என்ன திட்டம் இருக்கு?

இந்த வருஷம் புதிய படம் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கேன். வி.சேகர் சார் யூனிட்ல வொர்க் பண்றது பெருமையா இருக்கு. ஹோம்லியான யூனிட். எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்கும் கதாபாத்திரம் எனக்குக் கிடைச்சிருக்கு.

சீரியல்ல நடிக்க வரும்போது சினிமா கதாநாயகி என்கிற எண்ணத்தை ஓரங்கட்டிட்டு வரணும்னு ஒரு பிரபல நடிகை சொன்னாங்க. அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

டி.வி. இன்டஸ்ட்ரி ஹீரோயின் ஒரியண்டட் இன்டஸ்ட்ரி. சினிமாவுல ஹீரோவை சுத்தி கதை நகரும். அவருக்கான வியாபாரத்தை நம்பி அதுகேத்த மாதிரி பாட்டு; பைட்டு; காட்சின்னு பண்ணுவாங்க. ரெண்டு கதாநாயகி. இவங்களுக்கு இவ்வளவுதான் வாய்ப்புன்னு ஃபிக்ஸ் ஆயிடும். ஆனால் டி.வி.யில் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம். இதற்கு சினிமா நடிகையா இருந்துதான் நடிக்க வரணும் என்கிற அவசியமும் கிடையாது. இங்கே அந்தக் கேரக்டர்தான் தெரிவாங்க... அவர்களைதான் ரசிகர்கள் விரும்புவாங்க. அப்படியொரு பவர்ஃபுல்லான மீடியா. தியேட்டர் இல்லாத ஊர்லகூட டிவி இருக்கு. மக்கள்கிட்ட தினம்தினம் ஒரு மெசேஜ் சேர்க்க முடியும். அதனால நாம எப்பவும் நடிகையா தெரியாமல் அந்தக் காரெக்டரா தெரியணும். அப்போதான் வெற்றி கிடைக்கும் அந்த காரெக்டருக்கு.
[tscii:049d5d4df5][/tscii:049d5d4df5]

aanaa
7th May 2008, 12:31 AM
அம்மா அட்வைஸ் பெண்களுக்கு தேவை : சொல்கிறார் மத

அப்பா அம்மாவின் பாசம், அட்வைஸ் பெண்களுக்கு அவசியம். இவைகளை மதித்து நடந்தால் பிரச்னை வராது! -கலைஞர் டி.வி.யில் மானாட மயிலாட நடன போட்டியில் ஆடிக்கொண்டிருந்த நடிகை மது சொன்ன மதுரமான வார்த்தைகள் இவை. அவரின் பேட்டி:

* பேஷன் டெக்னாலஜியில் ஆர்வமாக இருந்ததாக உங்கள் வீட்டில் சொன்னாங்களே "டிவி' பக்கம் வந்திருக்கீங்களே?
பிடிச்ச நல்ல விஷயங்கள்ல உறுதியா இருந்து, லைப்ல பயன்படக் கூடிய விஷயங்கள்ல இன்ட்ரஸ்ட் எடுத்துக்கிட்டு கத்துக்கிட்டா அடுத்த முயற்சிக்கு ஸ்ட்ராங்காயிருக்கும்ன்னு நினைச்சேன். ஸ்கூல் முடிச்சதும் பேஷன் டெக்னாலஜி படிச்சேன். என்னோட மாடலிங் போட்டோவை பார்த்துட்டு கஸ்தூரி சீரியலில் நடிக்க அழைச்சாங்க. டி.வி., சினிமா பக்கம் போகணும்னு எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததால வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன். வைரநெஞ்சம், "புரியாத புதிர், கலக்கல் சந்துரு காமெடி ஷோவில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. மானாட மயிலாட டான்ஸ் புரோகிராமிலும் கலந்துக்கிட்டு ஆடிட்டிருக்கேன்.
* போட்டியில் ஜெயிச்சுடுவீங்களா?
மானாட மயிலாட டான்ஸ் போட்டியில ஜெயிச்சிடணும்ன்னு அதில கலந்துக்கிட்டிருக்கிற எல்லாருக்கும் ஆசையிருக்கு. அதனாலதான் போட்டி போட்டு வித்தியாசமா பாடல்களை செலக்ட் பண்ணி ரிஸ்க் எடுத்து ஆடிட்டிருக்கோம். நிச்சயம் ஜெயிக்கணும்ங்கிற கான்பிடன்ஸ் இருக்கு. இதற்கு காரணம் கலா மாஸ்டர்தான். முதலில் என்னை போட்டிக்கு செலக்ட் பண்ணும்போது என்னால் போட்டியில் சரியா ஆட முடியுமான்னு பயமாயிருந்தது. உன்னால முடியும். நீ நல்லா செய்வே, வந்து ஆடுன்னு கலா மேடம் சொன்னாங்க. என்னோட பிரண்ட்ஸ்களும் என்கரேஜ் பண்ணினாங்க. போட்டியில ஜெயிக்கணும்ங்கிற ஆர்வத்தோட சுரேஷ்வரும் நானும் ஆடிட்டிருக்கோம்.
* நடிகைகள் விழாக்களுக்கு வரும் போது கிளாமராக டிரஸ் போட்டுட்டு வந்து கலக்குகின்றனரே உங்களுக்கு அப்படி ஆசை ஏதும்?
எனக்கு அப்படியெல்லாம் ஆசையில்லை. அழகா நீட்டா டிரஸ் பண்றதுதாங்க பெண்களுக்கு நல்லது. கவர்ச்சியா தெரியணும்ங்கிற நோக்கில டிரஸ் பண்றதால பிரச்னைதான் வரும். அடுத்தவங்க இப்படி செய்றாங்களேன்னு நாமும் அப்படி செய்தோம்னா சிக்கல்தான். வித்தியாசமா, கிளாமரா டிரஸ் பண்ண ஆசைப்படும் பெண்கள் அவுங்களுக்கு நல்லவங்களா தெரியறவங்களிடம் டிரஸ் விஷயத்தில ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பேஷன்னு சொல்லிக்கிட்டு அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு கூட்டங்களுக்கோ பப்ளிக்கிலோ போகக்கூடாது. அப்படிப்பட்ட டிரஸ்களை தயாரிக்கவும் கூடாதுன்னு அரசு கட்டுப்பாடு போடணும். மீறிப் போட்டுக்கிட்டு போறவங்க மேல அதிரடி நடவடிக்கை எடுத்தா அப்புறம் யாரும் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போக பயப்படுவாங்க.
* மேல்மருவத்தூரில் அடிக்கடி உங்களை பார்ப்பதாக சொன்னாங்களே, அப்படி என்ன பலமான வேண்டுதல்?
எனக்கு கோவிலுக்கு போவது ரொம்ப பிடிக்கும். எங்க பேமிலியில இருக்கிற எல்லாரும் மேல்மருவத்தூர் கோவில் பக்தர்கள். அதனால மாதா மாதம் கோவிலுக்கு குடும்பத்தோட போயிட்டு வருவோம். அமைதியான சூழ்நிலையில் மனசு லேசாயிடும். என்ன செய்தால், எப்படி நடந்துக்கிட்டா சரியாயிருக்கும்னு மனசில நினைச்சு சாமிக்கிட்டே வேண்டிக்குவேன். ஏழைகளுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை செய்வேன். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ்'ன்னு வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே மாதிரியா அம்மன் சன்னதியில் முக்கியத்துவம் இருப்பதால நிறைய பேர் கோவிலுக்கு வர்றாங்க.
* முக்கியமான நினைப்பு ஏதும்?
வசதி வாய்ப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அப்பா, அம்மாவை எந்த சூழ்நிலையிலும் மறந்துடக் கூடாது. அவுங்களை நல்லபடியா வச்சுக்கணும். நாம செய்கிற விஷயங்கள்ல அவுங்க சந்தோஷப்பட்டாங்கன்னா அதைவிட அவுங்களுக்கு நாம செலுத்தும் நன்றிக்கடன் வேறென்ன இருக்கு.
* இப்படி நடந்தால் தேவலாம் என்று ஏதாவது நினைப்பு?
இந்தியாவில் திறமையானவங்க நிறைய பேர் இருக்காங்க. வெளிநாட்டினருக்கு சவால் விடும் திறமை நம்மவங்களிடம் இருக்கு. இருந்தும் பல நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து ஆட்களை வேலைக்கு அழைச்சிட்டு வர்றாங்க. இங்குள்ள திறமையானவங்களை இனம்கண்டு பயன்படுத்தினால், சாதிப்பாங்க. திறமையானவங்களுக்கு உரிய முக்கியத்துவம் உள்ள வேலை வாய்ப்புகள் கிடைக்காததால வெளிநாடுகளுக்கு ஓடிடறாங்க. அங்கு பெரிய ஆட்களாக இருக்காங்க. எதிலும், ஆற்றல் உள்ளவங்க, திறமையானவங்க இங்கேயே வேலை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தா நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியா இருக்கும்.
* பிடிக்காத விஷயம்?
யாரையும் மட்டம் தட்டி பேசக்கூடாது. அலட்சியப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவங்களாகத்தான் இருக்காங்க. அது தெரியாம அவுங்களை அலட்சியப்படுத்திடறாங்க. தனித் தன்மையை புரிஞ்சுக்கிட்டு அவுங்களை நல்ல படியா நடத்தினா அவுங்களும் சமுதாயத்தில முக்கியமானவங்களாயிடுவாங்க, என்று பொறுப்பாக சொன்னார் மது.

aanaa
12th May 2008, 06:24 PM
சொர்ணமால்யா :


விஜய் டிவி'யின் ஜில்லுன்னு ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், நடிகை சொர்ணமால்யாவை பேட்டிக்காக, அவரது வீட்டில் சந்தித்த போது, பத்திரிகைகளில் எதை, எதையோ, அவுங்க இஷ்டத்திற்கு எழுதுவது சங்கடமாயிருக்கு; அழகான பெண்களை பற்றி எழுதினாத்தான் படிப்பாங்கன்னு நினைச்சு, பொய்யான விஷயங்களை எழுதி ஏன் அவஸ்த்தைப்படுத்தணும்; பத்திரிகை தர்மம் எங்கே போச்சு' என்று கோபப்பட்டார். சொர்ணமால்யாவின் குமுறல் பேட்டி:

* டிவி'யில், ஜில்லுன்னு ஒரு சந்திப்பு எப்படி போயிட்டிருக்கு?
விஜய் "டிவி'யில் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக, "ஜில்லுன்னு ஒரு சந்திப்பு' இருந்ததால, தொகுத்து வழங்க ஒத்துக் கிட்டேன். உழைப்பால, தனித்திறமையால, வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தவங்க இந்நிகழ்ச்சியில், வி.ஐ.பி.,க்களாக அழைக்கப்பட்டிருக்காங்க. இதுவரை பேசாத விஷயங் களை நிகழ்ச்சியில் பேச வைக்கணுங்கிற ஆசையில எங்க, "டீம்' ஆர்வமா," ஒர்க்' பண்ணிட்டிருக்கு. வி.ஐ.பி.,க்களின் பேச்சை கேட்பவர்கள், நாமும் உழைச்சு முன்னேறணுங்கிற நினைப்பை ஏற்படுத்தும். என்னோட தங்கை ராதிகா, எனக்கு "காஸ்ட்யூம் டிசைன்ஸ்' மற்றும் ஆபரணங்களும் தேர்வு பண்ணி கொடுத்திருக்கா. நிகழ்ச்சியில் ஒன்றி ஆர்வமா," ஒர்க்' பண்ணிட்டிருக்கேன்.
* எந்த எதிர்பார்ப்போடு கலைத்துறைக்கு வந்தீர்கள்? எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
எங்க குடும்பமே, கலைக் குடும்பம் தான். நான் கலைத்துறைக்கு வந்தது பெரிய விஷயமில்லை. மூன்று வயசிலிருந்து பரத நாட்டியம் கத்துக்கிட்டேன். 14 வயசில "டிவி'யில்," காம்பியரிங்' செய்ய வந்துட்டேன். 16 வயசில, அலைபாயுதே படம் மூலம் சினிமா பக்கமும் வந்துட் டேன். பணம் கிடைச்சது; புகழும் கிடைச்சது. சினிமாவிலும் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. படிப்பு தான் முக்கியம்ன்னு நான் நினைச்சதால எல்லாப் படங்களையும் ஏத்துக்கலை. நேரம் கிடைக்கும் போது படங்களில் நடிச்சேன். எம்.பி.ஏ., முடிச்சிருக்கேன். பரதநாட்டியம் பற்றி சென் னைப் பல்கலைக்கழகத்தில பிஎச்.டி., பண்ணிட்டிருக்கேன். பரதநாட்டியம் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கு. படிப்பு, பாட்டு, நாட்டியம்ன்னு பிசியா நாட்கள் போயிட்டிருக்கு. திறமையிருக்கு, தகுதியிருக்கு, சம்பாதிக்கிறோம்'ங் கிற மெதப் பெல்லாம் எனக்கில்லை. கலைத்துறைக்கு வந்தது நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம்.
* பத்திரிகைகளில் உங்களை பற்றி அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வருகிறதே. ஏன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை?
எந்தப் பிரச்னையையும், பத்திரிகைகள் சமுதாய பொறுப்புணர்வோடு அணுகணும். நல்லதோ, கெட்டதோ எதுவாயிருந்தாலும், பொறுப்போடு எழுதணும். வீட்டுக்கு வீடு வாசல்படி; யார் வீட்டில் பிரச்னை இல்லை. நடிகர், நடிகைகளை பற்றி ஏடாகூடமா, இஷ்டத் திற்கு எழுதறதால அவுங்களோட, நிஜ வாழ்க்கையில பாதிப்பு ஏற்படுமேன்னு நினைச்சு பார்க்க மாட்டேங்கிறாங்க. இதனால, சின்னச் சின்ன பிரச்னைகள் கூட பெரிசாயிடுது. அழகான பெண்களை பற்றி எழுதினாத்தான் விற்கும் என்று மட்டும் பத்திரிகை காரங்க நினைக்கிறாங்க. அந்த எழுத்துக்களால அந்த பெண்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்படுவாங்கன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க. பத்திரிகைகளில் வந்த செய்திகளால் எனக்கு ரொம்ப பாதிப்பு ஏற்பட்டிருக்கு. எனக்கு திருணம் ஆச்சு; டைவர்ஸ்சும் ஆச்சு. மனசுல வருத்தம், கோபம் இருந்தது. இவைகளையெல்லாம் தாண்டி வந்திருக்கேன். யாரோ எதையோ எழுதிட்டு போகட்டும்.

செய்தியை பார்த்துட்டு என்னை பற்றி எடை போடுபவர்கள் பற்றி கவலை இல்லை. யாருக்கும் விளக்கம் கொடுக்க தேவையுமில்லை; நேரமும் இல்லை. எது சரி, எது தவறுன்னு அவுங்க, அவுங்களுக்கு தெரிந்து கொள்ள அறிவு இருக்கு. ஆறாவது அறிவை உபயோகப்படுத்தாத மனிதருக்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. என்னோட, விவாகரத்து வழக்கு கோர்ட்டுல நடந்திட்டிருந்தப்ப எம்.பி.ஏ., தேர்வு எழுதிட்டிருந்தேன். நான் கோர்ட்டுக்கு போனா, பத்திரிகைகாரங்க, டிவிகாரங்க சூழ்ந்துக்கிடுவாங்க. என்னோட மனசுல உள்ள வலி, வேதனை, தவிப்பு பற்றி அவுங்களுக்கு தெரியுமா? என்னை படம் பிடிக்கணும் செய்தி போடணும் அந்த நோக்கம் மட்டுமே அவுங்களுக்கு. இப்படிப்பட்ட பிரச்னையிலும் கோர்ட்டிலிருந்து தேர்வு எழுத ஓடினேனே அதை ஏன் எழுதலை. என்னோட மனோதிடம் பற்றி எழுதியிருக்கலாமே; படம் பிடித்து போடலாமே, ஏன் செய்யலை? மக்களுக்கு பயன்படாத விஷயத்துக்கு மீடியாக்கள், ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* உங்களை பற்றி வரும் செய்திகள் பற்றி வீட்டார் என்ன நினைக்கின்றனர்?
நான் எப்படி பட்டவள் என்பது எனது குடும்பத்தாருக்கு தெரியும். தெரிஞ்சுக்க விரும்பறவங்க, ஆறாவது அறிவை பயன்படுத்தணும். அது இல்லாதவர்களை நினைக்க கஷ்டமாயிருக்கு. உன்னை பற்றி இப்படி செய்திகள் வருகிறதே என்று கேட்பவர்களுக்கு, தேவையில்லா செய்திகளை படிச்சு நேரத்தை வீணடிப்பதை விட, நல்ல புத்தகங்களை படிச்சு, அந்த நேரத்தை பயனுள்ளதாக செஞ்சுங்கலாமேன்னு சொல்ல வேண்டியிருக்கு. பத்திரிகைகளால் என் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கு. சமீபத்தில் பத்திரிகை தர்மத்தை மறந்து ஏதோ நோக்கத்தில் என்னை பற்றி பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. பொய் செய்திங்கறதால நான் கண்டுக்கலை. எங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்ட இசை குடும்பத்தினர் இந்த செய்தியை பார்த்துவிட்டு, என்ன இப்படி செய்தி வந்திருக்கிறது என்று பேசினாங்க. அவுங்க குடும்பத்துக்கு நெருக்கமானவங்க.

நாங்க எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டிருக்கோம். நல்ல விஷயங்களை பேசியிருக்கோம். என்னை பற்றி முழுவதுமாக தெரிஞ்சவங்க. அவுங்ககூட நம்பிக்கை இல்லாம பேசியதை பார்க்கும் போது வேதனையாயிருந்தது. அவுங்க எங்க மேல காட்டியது போலித்தனமான நட்பு தானான்னு நினைச்சு வேதனைப்பட்டேன். யாரோ எதையோ எழுதப்போய் எனக்கு எப்படி பாதிப்பு வருது பாருங்க.
* இசைப் பள்ளி துவங்கப் போவதாக சொன்னாங்களே?
என்னோட, ரங்கமந்த்ரா டிரஸ்ட் மூலம் நாட்டிய சாலாவையும், சங்கீத சாலாவையும் நடத்திட்டிருக்கேன். சிலப்பதிகார கதையில் மாதவி கதையை மையமாக வச்சு, நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம் என்ற பெயரில் நாட்டிய நாடகத்தையும் நடத்திட்டிருக்கேன். நிறைய குழந்தைகளுக்கு பரதநாட்டியம், கர்நாடக இசை பாட்டு, நாடகம் பற்றி சொல்லிக் கொடுக்கிறேன்.
* தஞ்சாவூருக்கு அடிக்கடி சென்று வருவதாக பேசப்படுகிறதே, என்ன விசேஷம்?
தஞ்சாவூர் எங்க சொந்த ஊர். அங்க போகணும்னா யாரிடமும் சொல்லிட்டு தான் போகணுமா என்ன. அங்கு என்னோட நாட்டிய பள்ளியும் இருக்கு. உலகத்தில் உங்களுக்கு பிடிச்ச ஊர் எதுவென்று கேட்டால், தஞ்சாவூர்ன்னு தான் சொல்வேன். பிறந்த மண் மேல பிரியம் இருக்காதா? நான் அமெரிக்கா போயிருந்தப்ப நியூயார்க்கில் மன்ஹாட்டன் நகரின் கட்டடத்தில் 60வது மாடியில் நானிருந்தேன். நியூயார்க் நகரம் முழுவதும் தெரியும் அழகான காட்சி. டைம்ஸ் ஸ்கொயரில் உலக மக்களை எல்லாம் ஓரிடத்தில் பார்க்கலாம். சோனி "டிவி'க்காரங்க என்னிடம், பேட்டி எடுத்தாங்க. அப்போது உங்களுக்கு பிடிச்ச ஊர் எதுன்னு கேட்டாங்க. தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் தான் எனக்கு பிடிச்ச இடம் என்று நான் சொன்னேன்.

இவ்வாறு கூறி, சந்தோஷப்பட்டுக் கொண்டார் சொர்ணமால்யா.
thanks to Dinamalar

R.Latha
14th May 2008, 08:26 AM
[tscii:27e2ab6eac]Santhanam

Favourite Actors : Rajnikanth, Nagesh

Favourite Actresses : the list is too long
.
Favourite Director : Simbhu Devan, Shankar

Favourite Food : My mom’s kitchen

Favourite Films : Arai En 305il Kadavul

Favourite Holiday Destination : Kuala Lumpur, Backwaters of Kerala

Life Is : To live every moment

My Biggest Break : Lollu Sabha[/tscii:27e2ab6eac]

aanaa
19th May 2008, 05:12 PM
டீன் ஏஜ் பெண்கள் ரொம்ப உஷாருங்க : சரியா சொல்றார் ரியா

கலைஞர் டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரியா, சின்னத்திரை அழகிப் போட்டியில் ஜெயித்து அழகிப் பட்டத்தை வென்ற சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார். பேட்டிக்காக சந்தித்தபோது டீன்ஏஜ் பெண்கள் ரொம்ப உஷாருங்க. எங்கே எப்படி நடந்துக்கணும், எங்கே எப்படி தப்பிச்சிக்கிடணும் எல்லாம் தெரியும். அவுங்களுக்கு அட்வைசெல்லாம் சொல்லத் தேவையில்லைன்னு நச்ன்னு பதிலை அள்ளிவிட்டார். ரியாவின் அதிரடி பேட்டி:

* அழகிப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு பிறகு கலந்து கொண்டீர்களாமே?

சின்னத்திரை அழகிப் போட்டி நடக்கிறது. நிறைய பேர் கலந்துக்கிறாங்க. நீயும் கலந்துக்கிறியா'ன்னு நடிகர் விஸ்வா கேட்டார். முதலில் எனக்கு விருப்பமில்லாததால வேண்டாங்கன்னு சொல்லிட்டேன். எங்க குடும்ப நண்பர் நடிகர் சாய்பிரசாந்த் என்னை சந்திச்சப்ப "அழகிப்போட்டியில கலந்துக்க மாட்டேன்னு சொன்னியாமே... தேடி வர்ற வாய்ப்பை வேண்டாம்ன்னு ஏன் சொல்றே, முயற்சிக்கலாமே'ன்னு சொன்னார். விஸ்வாவும் "கலந்துக்க முயற்சி பண்ணிப் பார்'ன்னு மீண்டும் சொன்னார். சரி கலந்துக்கலாமேன்னு அழகிப் போட்டியில கலந்துக்கிட்டேன். ஜெயிச்சது ஆச்சரியமா இருக்கு. எது எப்ப நடக்கும்ன்னு இருக்கோ அது நடந்து தானே ஆகும்ன்னு நினைக்கத் தோணுது.

* போட்டியில் 10 நடிகைகளில் நீங்கள் ஜெயித்ததற்கு ஏதும் ஸ்பெஷல் காரணம் உண்டா?

அழகிப் போட்டியில் என்னோட பல நடிகை கள் கலந்துக்கிட்டாங்க. எனக்கு முதலிடம் கிடைச் சது.
இரண்டாவது இடம் தாரிகாவுக்கு கிடைச்சது.
மூன்றாவது இடத்தில் அனிஷா வந்தாங்க.
கண்ணழகியாக ஸ்வேதாவும்,
சரும அழகியாக ஜூலியும்,
நடை அழகியாக தீபாவும்,
உடற்கட்டு அழகியாக மதுவும்,
புன்னகை அழகியாக காவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க.
போட்டி நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது. எல்லாருமே ஆர்வமா கலந்துகிட்டதால போட்டி பலமாயிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பா செய்திருந்தோம். நான்காவது சுற்றில் கேள்வி - பதிலில் எனக்கு கூட மார்க் கிடைச்சதால ஜெயிச்சுட்டேன்.

* சின்னத்திரை அழகிப் போட்டியில் ஜெயிச்சிருக் கீங்க. அடுத்து சென்னை அழகி, அடுத்து தென்னிந்திய அழகி என அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் ஏதும்?

என்னோட அப்பா, அம்மா என்ன சொல்றாங்களோ அவுங்க முடிவுப்படி தான் நான் நடப்பேன். அழகிப் போட்டிகள்ல அவுங்க கலந்துக்கன்னா கலந்துக்குவேன். வேண்டாம்ன்னா விட்டுடுவேன்.

* சினிமாவில் நடிக்கும் எண்ணம் ஏதும்?

என்னோட அப்பாவும், அம்மாவும் "டிவி', சினிமா எதுவும் உனக்கு வேண்டாம்ன்னு தான் சொன்னாங்க. டி.வி.யில எனக்கு சான்ஸ் கிடைச்சப்ப செய்யலாமான்னு யோசிச்சப்ப உனக்கு எந்தப் பிரச்னையும் வராது. நீ உன் இஷ்டத்திற்கு ஒர்க் பண்ணலாம்ன்னு சாய்பிரசாந்த் சொன்னார். அப்புறம் அப்பாவிடம் சொன்னேன். சரி செய், சிரமப்படாதே, பிடிக்கலைன்னா வந்துடுன்னார். நான் நினைச்சபடி டி.வி.யில ஒர்க் பண்ண முடிஞ்சதால செய்யறேன். காம்பயரிங் செய்றது இன்ட்ரஸ்ட்டாயிருக்கு. பிரண்ட்ஸ்ங்க நல்லா செய்றேன்னு என்கரேஜ் பண்ணினாங்க. காம்பயரிங் பீல்ட்ல நல்ல இடத்திற்கு உயரணும்னு ஆசை இருக்கு. கலைஞர் டி.வி.,யில் காம்பயரிங் செய்ய நல்ல வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமாயிருக்கு. சீரியலில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. செய்யலேன்னு தவிர்த்துட்டேன். சினிமா வேண்டாம்ன்னு வீட்ல சொல்லியிருக்காங்க. எது எப்படி நடக்குதோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

* பெண்கள் எப்படி நடந்து கொண்டால் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்று சொல்வீர்கள்?

போகிற இடங்கள்ல, வேலை பார்க்கிற இடங்கள்ல என்ன நடக்குது, எப்படி நடக்குதுன்னு தெரியாமலிருக்காது. நாம எப்படி நடந்துக்கிடணும், எப்படி மற்றவங்களை நடத்தணும்ன்னு தெரியாமலிருக்காது. பிடிக்காத இடமாயிருந்தா உடனே அந்த இடத்தை விட்டு போயிட்டா பிரச்னை எப்படி வரும். நாம நடந்துக்கிற விதத்தில தான் மற்றவங்களோட ரியாக்ஷன் இருக்கும். நாம ஒழுங்கா நடந்துக்கிட்டா மற்றவங்களின் ரியாக்ஷனும் ஒழுங்காயிருக்கும். நாம சரியா இருந்து அவுங்க சரியா நடந்துக்கிடலையினா அவுங்க நமக்கு தேவையில்லாதவங்கன்னு நாம ஒதுக்கிடணும்.

* டீன் ஏஜ் பெண்களுக்கு அட்வைஸ் ஏதும்?

வீட்ல எப்படி நடந்துக்கணும், பப்ளிக்ல எப்படி நடந்துக்கணும், வேலை பார்க்கிற இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்ன்னு எல்லாத்திலேயும் டீன்ஏஜ் பெண்கள் உஷாராயிருக்காங்க. அந்த அளவிற்கு துணிச்சலும், திறமையும் அவுங்களுக்கு இருக்கு. அட்வைசெல்லாம் அவுங்களுக்கு தேவையில்லை. அவுங்களை தைரியமா பேசவிட்டாலே ரொம்ப பேருக்கு அட்வைஸ்களை அள்ளி விடுவாங்க, என்று சொன்ன ரியாவை, அவரது அம்மா மொபைல் போனில் அழைத்ததும் புறப்பட்டு சென்றார்.

aanaa
26th May 2008, 07:38 PM
நடிகை இனிதா


எந்தப் பிரச்னையானாலும் அப்பா அம்மாவிடம் சொல்லிட்டா அவுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க என்று சின்னத்திரை நடிகை இனிதா கூறினார். வைரநெஞ்சம், அத்திப்பூக்கள், சுற்றமும் நட்பும், சவாலே சமாளி என சீரியல்களில் "பிசி'யாக இருக்கும் காஞ்சி இனிதாவை, பேட்டிக்காக சந்தித்தபோதுதான் இப்படி அப்பா அம்மா புகழ் பாடினார். இனிதாவின் பேட்டி:

* சீரியல் ஷூட்டிங் பார்க்க போன இடத்தில் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றார்களே?
நடிகை சச்சு எங்க ஊர்காரங்க. அவுங்க நடிச்ச கல்யாணம் கலாட்டா சீரியல் ஷூட்டிங் மயிலாப்பூரில் ஒரு வீட்டில் நடந்தது. நான் பார்க்க போயிருந்தேன். அந்த சீரியல்ல நடிச்சிட்டிருந்த பெண், ஷூட்டிங்கிற்கு வரலை. என்ன செய்றதுன்னு டைரக்டர் நினைச்சிட்டிருந்தப்ப, சச்சு மேடத்துக்கிட்டே நான் நிற்பதை பார்த்துட்டு, அவுங்களிடம் வந்து டைரக்டர் என்னை பற்றி விசாரித்தார். நீ நடிக்கிறியாமான்னு கேட்டார். எனக்கு நடிக்க தெரியாதுன்னு சொல்லிட்டேன். சச்சு மேடத்திடம் சொல்லி என்னை நடிக்க சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டார். அவுங்களும் நீ நடிக்கிறேன்னு சொல்லும்மா, நான் உங்க வீட்ல சொல்லிக்கிடறேன்னு சொன்னாங்க. எந்த பிரச்னையும் வராதுன்னும் சொன்னாங்க. அப்புறம் அந்த சீரியலில் நானும் நடிச்சேன். குப்பத்து சாஸ்திரிகள், விசாலம், புத்த ஜாதகம் என நாற்பது சீரியல்களில் நடிச்சிட்டேன்.
* சந்தோஷமான நினைவுகள்?
பத்தாவது வரைதான் படிக்க முடிஞ்சது. சீரியலில் நடிக்க வந்ததால தொடர்ந்து படிக்க முடியாம போச்சு. எல்லாருக்கும் படிச்சு டாக்டராகணும், இன்ஜினியராகணும்ன்னு ஏதாவது ஒரு ஆசையிருக்கும். படிக்கிறோமோ, படிக்கலையோ டாக்டரா இன்ஜினியரா, உயர் அதிகாரியா கேரக்டர்களில் நடிக்கும்போது, அது நடிப்பாக இருந்தாலும் நாமும் இன்ஜினியர், டாக்டரா ஆகியிருந்தால் எப்படி இருக்கும்ன்னு நினைச்சுக்க தோன்றும். இந்த நினைப்பே சந்தோஷமாயிருக்கு. எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் வாழலாம்ன்னு நினைக்கிறோமோ, அப்படி பட்ட கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது நிறைவா செய்ய முடியுது.
வீட்டு கட்டுப்பாடுகளால் வெளியில் வந்து எதையும் சாதிக்க முடியவில்லை என்று புலம்பும் பெண்கள் பற்றி?
பெண்களோட நியாயமான உணர்வுகளை வீட்டில் உள்ளவங்க புரிஞ்சுக்கிட்டு அவுங்க செய்ய நினைக்கிறதை செய்ய அனுமதிச்சா நிச்சயம் அவுங்க சாதிப்பாங்க. பெண்கள் முன்னேற குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவசியம். பெண்கள் சுதந்திரமா செயல்பட அனுமதிக்கணும். அதே நேரம் சுதந்திரத்தை தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாதுங்கிற உறுதியும் பெண்களுக்கு இருக்க வேண்டும்.
* சனிக்கிழமையென்றால், கோவில்களுக்கு போய்விடுகிறீர்களாமே அப்படி என்ன வேண்டுதல்?
கோவில்களுக்கு போவது எனக்கு விருப்பமான விஷயம். எதுவாயிருந்தாலும் கடவுளிடம் சொல்லிடுவேன். எது நடந்தாலும் அதுவும் கடவுள் செய்றதா நினைச்சு ஏத்துக்கிடுவேன். பெருமாள் கோவில்களுக்கு அதிகமாக போவேன். என்ன வேண்டிக்கிறேன்னு வெளியில சொல்லக்கூடாது. ஆண்டவனிடம் வேண்டிக்கிடுறதை அடுத்தவங்களிடம் சொன்னால் பலிக்காதுன்னு சொல்வாங்க. அதனால சொல்லமாட்டேன்.
சினிமா ஆசை ஏதும்?
சினிமா வாய்ப்பு வந்தது. சீரியல்களில் பிசியாக இருந்ததால என்னால ஏத்துக்க முடியலை. அதற்காக நான் வருத்தப்படலை. சினிமாவை விட சீரியல் 100 மடங்கு பெட்டர்ன்னு சொல்வேன். எந்த பரபரப்பும் இல்லாம அமைதியா தினசரி ஆபீஸ் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு.
* கலைத்துறையில் உள்ள இளம் நடிகைகள் சில நேரம் தற்கொலை வரை போய் விடுகின்றனரே?
பிரச்னை எங்கில்லை. நாம தான் எச்சரிக்கையா நடந்துக்கணும். பிரச்னையை மனதிற்குள் போட்டு சுமையாக்கி கொள்வதைவிட அப்பா, அம்மாவிடம் சொல்லிடறது நல்லது. அவுங்களிடம் நேரடியா சொல்ல துணிச்சலில்லை என்றாலும், நெருக்கமான தோழிகளிடம் சொல்லி பிரச்னைக்கு தீர்வு கண்டுடணும். பிரச்னை முடிவுக்கு உயிர் தான் விலைன்னு நினைக்கக் கூடாது. நாம எதை செய்றோமே அதைப்பற்றி முன்கூட்டியே யோசித்து, இப்படி செய்தால் சரியாயிருக்கும், இப்படி செய்தா சரிப்படாதுன்னு முடிவு செஞ்சுடணும். சரியான வழி எதுவோ அதில போனா எல்லாம் சரியா நடக்கும்.
கிராமத்தில் ஷூட்டிங் நடந்தா ஆர்வத்துடன் கலந்துக்கிடறதா சொன்னாங்களே, கிராமத்தின் மீது அப்படி என்ன ஈடுபாடு?
கிராமத்தில இருக்கும் அமைதி பிடிச்சிருக்கு, மக்கள் அன்பா பழகுறது பிடிச்சிருக்கு, கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடணும்ன்னு எனக்கு ஆசை இருந்தது, அந்த ஆசையும் நிறைவேறிடுச்சு. மெகா "டிவி' நிறுவனத்தின் சார்பில், ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள ஒரு கிராமத்தில பொங்கல் பண்டிகைக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. சுற்றமும் நட்பும் சீரியல் டீமில் நானும் இருந்ததால, பொங்கல் கொண்டாட்டத் தில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. நிறையப் பேர் நடிகர், நடிகைகளோட கிராம மக்களும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துக்கிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது என்றவர், சவாலே சமாளி சீரியல் ஷூட்டிங் இருக்கு, போக வேண்டும் என்று புறப்பட்டு போனார்.

R.Latha
27th May 2008, 03:29 PM
DANCE MASTER KALA

""டான்ஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படுவதைவிட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும்'' என்கிறார் கலா. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள்!

"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்து 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ள அவரை ஏவி.எம். ஸ்டூடியோவில் சந்தித்தோம்.

"ஆடத் தெரியாதவன் அரை மனிதன்' என்பதுபோன்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளதே?

இது வரவேற்கத்தக்க நிலை. சினிமா பாட்டுக்கு ஆடுவதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிற நிலைதான் முன்பு இருந்தது. அடியோடு இப்போது மாறியிருக்கிறது. இதற்கு ஊடகங்களின் உறுதுணை முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. பரதம் ஆடுகிறவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

வழிபாட்டுக்கு உரியவர்கள்போல் டான்ஸ் மாஸ்டர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். பெரிய நடிகர், நடிகைகளெல்லாம் கூட அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்களே?

எல்லோரும் இதைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது தவறில்லை. குருவிற்கு வணக்கம் செலுத்துவது போன்ற செய்கைதான். ஒவ்வொரு நாளும் நான் வீட்டிலிருந்து புறப்படும்போது நாட்டியக் கடவுளான நடராஜர் காலைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் கிளம்புவேன். அவருடைய நாட்டியத்தில் பாதியையாவது நான் கற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். அதேபோலத்தான் டான்ஸ் மாஸ்டர் காலைத் தொட்டு வணங்குகிறவர்களும் நினைக்கிறார்கள்.

நடிகர், நடிகைகளால் போற்றப்பட்டாலும், பரதம் சொல்லிக் கொடுக்கிறவர்களுக்கு நிகரான மரியாதையை திரைப்படத் துறையில் நடனம் அமைக்கும் மாஸ்டர்களுக்கு சமூகம் கொடுக்கவில்லையே?

உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால் பரதம் உட்பட எல்லா ஆட்டங்களையும்விட சினிமாவிற்கு ஆடுவதுதான் மிகவும் சிரமமானது.

மெல்லிசை பாடல்கள் போய் துள்ளல் இசை பாடல்களாக ஆனது போல சினிமா ஆட்டங்களும் அதிரடியாக இருக்கிறது. ஆட்டத்திற்கேற்ப பாட்டு மாறியதா? அல்லது பாட்டிற்கேற்ப ஆட்டம் மாறி இருக்கிறதா?

இசை, பாட்டிற்கேற்ப மாறிய மாற்றம்தான். கால மாற்றத்திற்கேற்பதான் எல்லாமே இருக்கும்.

ஆட்டம் என்ற பெயரில் பாடல்களில் ஆபாசம் வெளிப்படுத்துவதற்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் காரணம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?

பாடலைப் பொறுத்தவரை டான்ஸ் மாஸ்டர்கள் பங்களிப்பு அதிகம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆபாச ஆட்டங்களுக்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் பொறுப்பு என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இசை, பாடலுக்கேற்ப நாங்கள் ஓர் ஆட்டம் வைத்திருப்போம். அதை அப்படியே இயக்குநர்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய விருப்பத்திற்கே கமர்ஷியலாக மாற்றி அமைக்கச் சொல்லுவார்கள்.

உதாரணத்துக்குச் சொல்கிறேன். "கொக்கரக்கர கிரிகிரி' பாடல். அதற்கு நான் ஒரு வகையில் நடன அசைவுகளை அமைத்திருந்தேன். அது இயக்குநருக்குப் பிடிக்கவில்லை. மாற்றி அமைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியாக மும்தாஜ் காலைத் தூக்கி வைக்க, அவர் காலுக்கு அடியில் பிரசாந்த் புகுந்து வருவதுபோல மாற்றி அமைத்தேன். உடனே ஓ.கே. ஆகிவிட்டது. இந்தப் பாடலுக்கு வெகுவான பாராட்டு கிடைத்தது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

கதாநாயகிகளைப் போல கதாநாயகர்களும் ஆடவேண்டும் என்பதாக மாறிவிட்டது. இதனை மாற்றியமைத்த பெருமை யாரைச் சாரும் என்று நினைக்கிறீர்கள்?

காலமாற்றத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்காக இப்போதுதான் நாயகர்கள் ஆடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சந்திரபாபு சார், நாகேஷ் சார், ரவிச்சந்திரன், சிவக்குமார் என பலர் டான்ஸ் செய்திருக்கிறார்கள். இப்போது நகைச்சுவை நடிகர், வில்லன், கதாநாயகன் என எல்லாருமே ஆடவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்கள், உங்கள் தங்கை என ஒரு சிலரே இந்தத் துறையில் நிலைத்து இருக்கிறீர்கள். பெண்கள் இந்தத் துறைக்கு அதிகம் வருகிறார்களா?

பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.

ஒரு பாடலுக்கான ஆட்டத்தை நடிகர்களை வைத்து தீர்மானிப்பீர்களா? அல்லது தீர்மானித்ததற்கேற்ப நடிகர்களை ஆட வைப்பீர்களா?

நடிகர்களுக்கேற்ப தீர்மானிப்பதுதான் என்னுடைய ஸ்டைல். அப்படித் தீர்மானித்தால்தான் நடிகர்களால் ஆடமுடியும். பிரபுதேவா ஆட்டத்தை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. யாராருக்கு எப்படி ஆடமுடியுமோ அப்படிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

நன்றாக ஆடக்கூடியவர்களாக நீங்கள் கருதும் நடிகை, நடிகர்?

நடிகை சிம்ரன். பிரமாதமா ஆடுவா. ரம்பா ஹிப் மூவ்மெண்ட் சூப்பரா செய்வா. உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதில் ஜோதிகா. நடிகர்களை இப்படி வரையறுக்க முடியாது. விஜய், அஜித், சூர்யா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.

"மானாட.. மயிலாட' நிகழ்ச்சியில் ஆர்த்தியைச் சேர்க்க எப்படி முடிவு எடுத்தீர்கள். முன்பே அவர் ஆடுவார் எனத் தெரியுமா?

குண்டாக இருப்பதற்கும் ஆடுவதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் யார் வேண்டுமானாலும் ஆடலாம். ஆர்த்தியைத் தேர்வு செய்தபோது, "அவர் எப்படி ஆடுவார்?' என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். ஆனால், இப்போது பார்க்கிறபோது அவரைப்போல உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதற்கு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரபு அண்ணன் குண்டாகத்தான் இருக்கிறார். அவர் ஆடவில்லையா?... குஷ்பு. என்ன ஆட்டம் ஆடுகிறார். எனவே ஆடுவதற்கு மனம்தான் தேவை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெறும் ஜட்ஜ்களிடையே சண்டை நடப்பது இப்போதைய ட்ரென்ட். உங்கள் மூவரிடையே எப்போது சண்டை?

டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் இப்படிச் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக் காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!

ஜட்ஜ் என்றால் கறாராக இருக்க வேண்டாமா? இரக்கப்பட்டுக் கொடுப்பது போல பத்து மதிப்பெண்களை ரம்பா அடிக்கடி வழங்குகிறாரே?

ஷூட்டிங்கிற்கு வருவது வீட்டிற்குப் போவது என்று வளர்ந்த பெண் ரம்பா. அவருக்கு வெளி உலகம் தெரியாது. யாரும் தோற்பதை அவர் விரும்பவில்லை. தோற்றுப் போகிறவர்களுக்குக்கூட அவருடைய சொந்த செலவில் பரிசு கொடுப்பவர். வேறு யாரும் அப்படிக் கொடுப்பதில்லை. இப்போது கறாராகத்தான் கொடுக்கிறார்.

aanaa
27th May 2008, 10:09 PM
DANCE MASTER KALA
"மானாட.. மயிலாட' நிகழ்ச்சியில் ஆர்த்தியைச் சேர்க்க எப்படி முடிவு எடுத்தீர்கள். முன்பே அவர் ஆடுவார் எனத் தெரியுமா?
.

:clap:

aanaa
1st June 2008, 06:38 PM
பக்குவமாய் சொல்கிறார் ரஞ்சிதா

பாரதிராஜாவின் நாடோடித்தென்றலில், கிராமத்து பெண்ணாக அறிமுகமான நடிகை ரஞ்சிதா, பதினைந்து வருடங்களுக்கு பிறகு அரசியல் கெட்அப்ல தெக்கித்தி பொண்ணு சீரியலில் கலக்கிட்டிருக்கிறார். ரஞ்சிதாவின் பேட்டி:

* பாரதிராஜா இயக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்கும் டிவி தொடரில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
நாடோடி தென்றலுக்குப் பிறகு பாரதிராஜாவின் பொம்மலாட்டம், தாஜ்மஹால் படங்களிலும் நான் நடிச்சிருக்கேன். சீரியலுக்கு இப்பத்தான் வந்திருக்கிறேன். சினிமாவில், நடிப்பதை விட டிவி சீரியலில் நடிப்பது பிடித்திருக்கிறது. நல்ல ரோல், அழுத்தமான கேரக்டர், இனி வரும் சீன்களில் டைலாக் போர்ஷன் அதிரடியா இருக்கு. பெண்கள் உறுதியாக இருந்தால், எதிலும் சாதிக்கலாம்ன்னு கதை போகுது.
* நீங்கள் உயரமாக இருப்பது உங்களுக்கு மைனஸ்சா, பிளஸ்சா எப்படி நினைக்கிறீர்கள்?
உயரம் அதிகம்தான். இதனால பிரச்னை இல்லை. கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தால், நடிக்க கூப்பிடப் போறாங்க. உயரம் எனக்கு மைனஸ் என்று நான் நினைக்கவில்லை.
கஷ்டப்பட்டு நடித்த கேரக்டர் பற்றி?
நாடோடி தென்றல்' படத்தில், கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், பாடி லேங்குவேஜ்ன்னு எல்லாமே புதுசு. கிராமத்து பெண்ணாக நடிப்பது சிரமமாயிருந்தது. படம் வந்த பிறகு என்னோட இயல்பான நடிப்பை பார்த்த எனக்கே ஆச்சரியமாயிருந்தது.
* ராணுவவீரரை திருமணம் செய்த உங்களுக்கு வீட்டிலும் மிலிட்டரி கெடுபிடிதானா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எப்போதுமே அவர் சொன்னதில்லை.திருமணம் பந்தம் ஏற்பட்டுவிட்டாலே ஆணுக்கும், பெண்ணுக்கும் பொறுப்பு தானே வந்திடுமல்லவா, இந்த பொறுப்பு எனக்கும் இருக்கு. நடிப்பையும், குடும்பத்தையும் பாலன்ஸ் செய்றதுன்னா சினிமாவை விட "டிவி' சீரியல் பெட்டர்ன்னு நினைச்சேன். பாரதிராஜா மூலம் வாய்ப்பு வந்தது. நடிச்சிட்டிருக்கேன். மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் ஷூட்டிங்' நடப்பதால், மற்ற நாட்களில் குடும்பத்தை கவனித்துக் கொள்ள நேரம் கிடைக்கிறது. சந்தோஷமாயிருக்கு.
சிம்ரன், விந்தியா போன்ற மற்ற நடிகைகளை போல உங்களையும் அரசியலுக்கு அழைத்தால்?
என்னையும் அரசியலுக்கு வந்துவிடுங்கள் என முக்கியமான இடங்களிலிருந்து அழைப்பு வந்தது. நான் தவிர்த்துவிட்டேன். அரசியல் பற்றி தெரியாது. விருப்பமும் இல்லை. மறுத்து விட்டேன்.
* சின்ன வயதில் என்னவாக ஆசைப்பட்டீர்கள், அதன்படி நடந்ததா?
ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரியாக ஆக வேண்டும்ன்னு சின்ன வயசில் ஆசைப்பட்டேன். அதற்கான சூழ்நிலைகள் அமையாமல் போனதால் நினைச்சதை சாதிக்க முடியவில்லை. சரியா முயற்சி பண்ணியிருந்தா நினைச்சதை அடைந்திருக்கலாமோன்னு இப்போது நினைச்சு பார்க்க தோணுது.
சினிமாவின் நவீன வளர்ச்சி பற்றி சொல்ல விரும்புவது?
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப படைப்புகளில் வித்தியாசமில்லை. சில இயக்குனர்கள் மட்டுமே ஹீரோவைவிட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்குகின்றனர். ஹீரோக்களின் சப்போர்ட்டில் படம் பண்ணவே டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அமீர், பாலா போன்ற சிலர் மட்டுமே ஸ்கிரிப்ட்களை கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரொம்ப வருஷத்திற்குப் பிறகு காதல், வெயில் போன்ற ஹீரோயினை மையமாக கொண்ட கதைகள் வந்திருப்பது சந்தோஷமாயிருக்கு.
நீங்கள் நடிக்க விரும்பும் காரெக்டர் பற்றி?
தெக்கித்திப் பொண்ணு சீரியலில் நடிக்கும் அரசியல்வாதி கேரக்டர் நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாது. இதில் பண்றேன். சீரியலில் இதுவரை வந்த அரசியல்வாதிகளை விட அட்டகாசமா நடிக்கணும்ன்னு கேரக்டர் சம்பந்தமா ஹோம் ஒர்க் பண்ணி நடச்சிட்டிருக்கேன். சீரியல் பார்த்துட்டு என் நடிப்பை நீங்களே பாராட்டுவீங்க. ரசிகர்கள் பாராட்டுவாங்க பாருங்க, என்றவரை டைரக்டர் அடுத்த சீன் நடிக்க அழைத்ததும் ஷூட்டிங் ஸ்பாட் டுக்குள் ரஞ்சிதா புகுந்து கொண்டார்.

aanaa
9th June 2008, 06:06 PM
பிடிச்சிருந்தால் மட்டுமே நடிப்பேன் : மதுரை சீரியல் நாயகி ஸ்ரீஜா பேட்டி

சினிமா, டிவியில பணம், புகழ் கிடைகிறதேன்னு இஷ்டத்திற்கு நடிக்கிற ஆள் நானில்லை. எனக்கு கேரக்டர் பிடிச்சிருந்தால் மட்டுமே நடிப்பேன் விஜய் டிவியின் மதுரை சீரியலில், மீனாட்சியாக நடித்து கலக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜாவின் வார்த்தைகள்தான் இவை. ஸ்ரீஜாவின் சிலீர் பேட்டி:

* கேரளாவிலிருந்து தமிழ் சீரியலுக்கு வந்தது பற்றி?
நான் இங்கு டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவுக்கு வந்துட்டேன். நடிக்கணும், நடனம் ஆடணுங்கிற ஆர்வத்தில ஸ்கூல்ல மூன்றாவது படிக்கும் போதே கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன். ஐந்தாவது படிச்சிட்டிருந் தப்ப, மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந் தப்ப மீண்டும் பட வாய்ப்புகள் கிடைச்சது. கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, வால் கண்ணாடி படங்களில் நடிச்சேன்.சுவாமி ஐயப்பன் படத்தில நடிச்சிட்டிருந்தப்ப மதுரை சீரியலுக்கு டைரக்டர் ஜெரால்டு ஹீரோயின் தேடிட்டிருந்திருக்கிறார். அப்ப என்னோட போட்டோவை சுவாமி ஐயப்பன் படத்தயாரிப்பார் கார்த்திகேயன் டைரக்டர் ஜெரால்டிடம் காட்டியிருக்கிறார். பார்த்த டைரக்டர் இதே மாதிரி பெண்தான் நான் நினைச்சிருக்கிற கேரக்டருக்கு பொறுத்தமாயிருப்பாள்ன்னு சொல்லியிருக்கார். மதுரை சீரியலில், நடிக்க அழைப்பு வந்தது. நடிச்சிட்டிருக்கேன். ஆனந்தம் சீரியல் தயாரிப்பாளரின் மணிக் கூண்டு சீரியலிலும் ஹீரோயினாக நடிக்கிறேன். .
* கேரளா சினிமாவில் ஏதும் பிரச்னையா?
கேரளாவில் ஏதும் பிரச்னையில்லை. ஷூட்டிங்க்கு என்னோட அப்பா வருவாங்க, இல்லாட்டி அம்மா வருவாங்க. சீரியலோ, சினிமாவோ நடிக்க ஒப்புக்கொள்ளும் முன் கதை என்ன, காஸ்ட்யூம் என்ன, ஷூட்டிங் எங்கே நடக்கிறது, எத்தனை நாள் நடக்கிறதுன்னு தெளிவா கேட்டுக்கிட்டு அப்பா சரி சொல்றார். முன்கூட்டியே இப்படி கட்டுப்பாடா நடந்துக்கிறதால ஷூட்டிங் ஸ்பாட்'ல எந்த பிரச்னையும் வந்தது கிடையாது. சினிமாவை விட சீரியலில் நடிப்பது பிடிச்சிருந்தது. நடிச்சிட்டிருக்கேன். மலையாளத்திலும், தமிழிலும், சினிமா வாய்ப்புகள் வந்தன. அவுங்க கேட்ட தேதிகளில், சீரியல் ஷூட்டிங் இருந்ததால, ஏத்துக்க முடியாம போச்சு. மற்றபடி சினிமாவில் நடிப்பதில், எனக்கு ஏதும் பிரச்னையில்லை.
* புதுமுக நடிகைகளுக்கு கிளாமர் எண்ணம் மேலோங்கியிருக்கிறதே?
மற்றவர்கள் எது வேண்டுமானாலும் நினைச்சுக்கிட்டு வருவாங்க. அது அவுங்க இஷ்டம். அது பற்றி நான் என்ன சொல்ல முடியும். மலையாள படங்கள்ல நடிக்க அழைத்த போது முதலில் காஸ்ட்யூம் பற்றி தான் அப்பா கேட்பாங்க. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். என்னை பார்க்கிறவங்க சிநேகமா மரியாதையா பேசற அளவுக்கு பேசப்படும்ன்னு நான் நினைக்கிற படி கேரக்டர் அமைந்தால் மட்டுமே, நடிப்பேன். என்னோட உடல் வாகிற்கு கிளாமர் கேரக்டரெல்லாம் ஒத்து வராது.
* மதுரை சீரியல் பற்றி?
ஈர்ப்பான கதை. ஸ்பீடான ஸ்கிரீன் பிளே, மதுரை ஏரியா பேச்சு எல்லாம் மதுரை சீரியலுக்கு பிளஸ் ஆகிவிட்டதால, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. முதல் சீரியலிலேயே, எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைக் கும்ன்னு நான் நினைக் கலை. ஷூட்டிங் ஸ்பாட்ல, ஷாப்பிங் செல்கிற இடங்கள்ல, என்னை அடையாளம் கண்டுக்கிட்டு நலம் விசாரிக்கிறாங்க. யூத்கேர்ள்ஸ் சிநேகமா பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
* சென்னையில் தொடர்ந்து தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறிர்களாமே.. ஏதும் பயமா?
மதுரை சீரியல் ஷூட்டிங் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் தான் நடக்குது. ஷூட்டிங் முடிஞ்சதும் கோட்டயத்திற்கு புறப்பட்டு போயிடுவேன். ஷூட்டிங் இல்லாதபோது, இங்கு தங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதனாலதான், நான் உடனே புறப்பட்டு ஊருக்கு போயிடறேன். இந்த சீரியலோட அடுத்ததாக, ஒரு சீரியலும் கிடைச்சிருப்பதால, சென்னையில் இனிமேல் அதிக நாட்கள் தங்குவேன்னு நினைக்கிறேன்.
* சினிமாவில் நடிக்க அதிரடி கண்டிஷன் போடுவதாக கோலிவுட்டில் பேசிக்கிடறாங்களே?
கிளாமர் கேரக்டர்ல என்னால நடிக்க முடியாது. பணம் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறதுன்னு நினைச்சு இஷ்டத்திற்கு நடிக்க என்னால் முடியாது. நல்ல கேரக்டராக இருந்தால் நடிப்பேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.
* தமிழ் கற்றுக்கொள்வதாக சொன்னார்களே?
சினிமாவைவிட சீரியலுக்கு மொழி அவசியம். சீரியல் ஷூட்டிங் மாதக்கணக்கில் நடக்கும். மொழி தெரிஞ்சிருந்தால், டைலாக் பேசுவதற்கு ஈசியா இருக்கும். தமிழ் கத்துக்கிட்டேன். பிடிச்சிருக்கு என்று சொன்ன ஸ்ரீஜா, சீரியலில் அடுத்த சீனில் நடிக்க இயக்குனர் அழைத்ததும் ஷூட்டிங் ஸ்பாட்'டுக்குள் புகுந்து கொண்டார்.

aanaa
16th June 2008, 11:39 PM
ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும் : நம்ம குடும்பம் கவி பேட்டி

நம்ம குடும்பம், திருமதி செல்வம், பொறந்தவீடா புகுந்த வீடா சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை கவி, கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கோகுலுடன் இணைந்து போட்டி போட்டு ஆடிக்கொண்டிருக்கிறார். கவியின் பேட்டி:

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் நீங்கள் நடிக்க வந்ததாக பேசப்பட்டதே?
சினிமா, டிவியில நடிக்கணும்ங்கிற ஆர்வம் எனக்கு இருந்ததால எப்படி இந்த பீல்டுக்குல போகலாம்ன்னு யோசிச்சேன். ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தி வந்த ஒய்.ஜி.பி., ஆக்டிங் அண்ட் பைன் ஆர்ட்ஸ் அகடமியில் சேர்ந்து பயிற்சி பெறலாம்ன்னு நினைச்சு அங்கு போய் சேர்ந்தேன். நடிப்பு கத்திட்டிருந்தப்ப அவரோட நாடகத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. செய்திகள் வாசிப்பது யு.ஏ.ஏ., வசூல் சக்கரவர்த்தி, இது நியாயமா சார், ரகசியம் பரம ரகசியம்னு பல நாடகங்கள்ல அவரோட சேர்ந்து நடிச்சேன். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் சரியா செய்துடலாம்ன்ணு நம்பிக்கை வந்தது. அந்த நேரத்தில என்னோட போட்டோவை பார்த்த, டைரக்டர் சுந்தர் கே.விஜயன் அவர் இயக்கிய கில்லாடி செல்லம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். விடாது கருப்பு, சொந்தம், பெண்ணின் கதை என பல சீரியல்களில் நடிச்சாச்சு. நம்ம குடும்பம், திருமதி செல்வம், பொறந்த வீடா புகுந்த வீடா சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன். மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஆடிட்டிருக்கேன். எத்தனை வாய்ப்பு வந்தாலும் பயப்படாம ஏத்துக்கணும். கடுமையா உழைக்கணும்ன்னு நினைச்சிட்டிருக்கேன்.. .

எம்.பி.ஏ., படித்துவிட்டு இந்த பீல்டுக்கு வந்திருக்கீங்களே; வேலை வாய்ப்பு ஏதும் கிடைக்காததாலா?
வேலை வாய்ப்பு கிடைக்கலேங்கிறதுக்காக நான் இந்த பீல்ட்டுக்கு வரலை. நான் படிச்சிட்டிருந்தப்பவே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. டிவி பீல்ட்டுக்கு வரணும்ன்னு முன்பே நினைச்சிருந்ததால சந்தோஷமா தான் வந்தேன். வந்ததிலிருந்து நல்ல, நல்ல வாய்ப்புகள் கிடைச்சிட்டிக்கு. நினைச்ச மாதிரி வாய்ப்பு கிடைச்சிட்டிருக்கப்ப இதை விட்டுட்டு வேறு வேலைக்கு எப்படி போக முடியும். என் படிப்புக்கு ஒரு அலுவலகத்தில போய் வேலை பார்த்தா எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அதைவிட அதிகமா சம்பளம் இங்கு கிடைக்குது. இது விரும்ப ஒர்க் பண்ற ஷாப்ங்கிறதால ஒர்க் ஈசியாயிருக்கு. ஆபீஸ்சிற்கு வேலைக்கு போய்ட்டு வர்றமாதிரி இருக்கு. நான் ஒர்க் பண்ற சீரியலில் நடிங்கிறவங்க என்னோட நட்பா, நல்லபடியா பழகுவதால எந்தப் பரச்னையும் இல்லை. இந்த “பீல்டைவிட மற்ற பீல்டு எனக்கு பெரிதா தெரியலை.

நடிகைங்கிற அறிமுகத்தால் தேவையில்லாத பாதையில் போய் சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் பற்றி?
நடிகைகள் இந்த பீல்ட்ல நிறைய பேர் இருக்காங்க. யாரோ சிலர் ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கலாம். அதற்காக எல்லாரும் அப்படித்தான்னு எப்படி சொல்ல முடியும். நடிகைகள்னா ரசிகர்களிடம், ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதனை நாம ரூட்மாறி கெடுத்திக்கிடறதை விட மரியாதையா, கவுரவமா நினைச்சு நல்ல படியா நடந்துக்கிட்டா, என்றைக்கும் மதிப்போடு இருந்திடலாம்.

உடம்பை அழகா வைத்துக் கொள்ள ஜிம்முக்கு போறீங்கன்னு சொன்னாங்களே?
ஜிம்முக்கெல்லாம் போறதில்லை. நேரம் கிடைக்கும்போது வீட்டில் எக்சசைஸ் செய்வேன். இப்படிசெஞ்சால் தான், உடம்பை ட்ரிம்மா வச்சுக்க முடியும்கிறதைவிட உணவு வகையில கட்டுபாடு வச்சுக்கிட்டாலே உடம்பு நல்லாயிருக்கும். ஆசையாயிருக்குன்னு அளவிற்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. கொழுப்பு சத்து உள்ள உணவுகளை சாப்படுவதில் லிமிட் வச்சுக்கிடணும். தண்ணீர் நிறைய குடிக்கணும். நேரத்திற்கு சாப்பிட்டாலே போதும். டயட் கண்ட்ரோல்ன்னு பெரிசா அலட்டிக்க வேண்டிய அவசியமில்லை.

பெற்றோரை கோபித்துக் கொள்ளும் பெண்கள் பற்றி?
அப்பா, அம்மாவை எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்திடக் கூடாது. அவுங்களை மதிச்சு நடந்துக்கணும். பிள்ளைங்க நல்லாயிருக்கணும், அவுங்களை எப்படி வழி நடத்தினா சரியாயிருக்கும்ன்னு அனுதினமும் யோசிச்சு, யோசிச்சு அன்பை கொட்டி வளர்க்கிறவங்க. பள்ளைங்களை எப்படி நடத்தினா, அவுங்களோட எதிர்காலம் நல்லா அமையும்ன்னு எந்த பரதி உபகாரமும் பார்க்காம இரவு, பகலா உழைக்கிறவங்க. பள்ளைங்க சந்தோஷப்படணும்கிறதுக்காகவே, எந்த கஷ்ட,நஷ்டத்தையும் ஏத்துக்கிடறவங்க அம்மா, அப்பாதான். அவுங்களை எந்த சூழ்நிலையிலும் குறை சொல்லக் கூடாது. எம்.பி.ஏ., படிச்சிட்டிருந்தப்ப சீரியலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவுங்க நீ விரும்பயபடி வாய்ப்பு கிடைச்சிருக்கு உன்னோட ஆர்வத்தை, டேலன்டை பயன்படுத்தி நல்லபடியா சாதிச்சுக்கோன்னு என்கரேஜ் செஞ்சாங்க. நானும் துணிச்சலா டிவி பீல்டுக்கு வந்தேன். நல்ல படியா வாய்ப்புகளும் கிடைச்சிட்டிருக்கு. மேரேஜ் வரை நடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன், என்று சொன்ன கவி மானாட மயிலாட ரிகசலுக்காக பறந்தார்.

aanaa
27th June 2008, 06:30 PM
படிப்பை விட முக்கியம் எதுவும் இல்லை : டிவி நடிகை ப்ரியா பேட்டி


கல்வியை விட மனிதனுக்கு முக்கியத்துவம் வேறெதுவும் இல்லை! கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் ப்ரியா, ஜோடி நெ.1 நடனப்போட்டிக்காக ஏவி.எம்., ஸ்டுடியோவில் பைனல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தபோது அளித்த ஆர்வமிக்க பேட்டி:-

* கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் மறுத்ததாக பேசப்பட்டதே. பிறகு எப்படி...?

எம்.ஓ.சி., வைஷ்ணவா காலேஜ்ல பி.காம்., செகண்ட் இயர் படிச்சிட்டிருந்தப்ப, விஜய் டிவியில, வசூல்ராணி போட்டியில கலந்துக்கிட்டேன். அதில என்னை பார்த்த டைரக்டர், கனா காணும் காலங்கள் சீரியலில் ஸ்கூல் ஸ்டூடன்ட்டா நடிக்க வைக்கலாம்னு நினைச்சிருக்கார். உடனே எனக்கு அழைப்பு வந்தது. சீரியலில் நடிக்க ஆசைப்பட்டு, படிப்பை விட்டுடக் கூடாதுன்னு நினைச்சேன். அதனால, வந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டேன். பி.காம்., முடிச்சதும், மீண்டும் அழைப்பு வந்தது. சம்மதிச்சுட்டேன். சிம்பிள்!

* படிப்பு அவ்வளவு தானா?

சீரியலில் நடிக்க படிப்பு அவசியம் இல்லைன்னாலும், படிப்பைப் பாதியில விடும் எண்ணமில்லை. என்னோட எண்ணமெல்லாம் எம்.பி.ஏ., முடிக்கணும். தனியா பிசினஸ் செய்யணும்கிறதுதான். நான் நினைச்ச இலக்கை நோக்கி நடக்க, எங்க வீட்டுல உள்ளவங்களோட அன்பான ஒத்துழைப்பு உதவியாயிருக்கு.

* படிக்கப்போயிட்டா நடிக்க நேரம் கிடைக்குமா?

நடிப்பை விட படிப்புக்குத்தான் முதல்ல முக்கியத்துவம் கொடுப்பேன். கல்லூரி நேரம் போக மற்ற நேரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா, நடிப்பேன். வெஸ்டர்ன் டான்ஸ் தெரியும். போட்டிகள்ல கலந்துக்கவும் ஆர்வமிருக்கு. நான் எது செஞ்சாலும் அதில எப்படியாவது ஜெயிச்சுடணும்கிற நினைப்புதான் மேலோங்கியிருக்கும். நினைச்சதை சாதிச்சிடலாம்கிற தைரியமிருக்கிறதால, மற்ற விஷயங்களில் என்னோட நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டேன்.

* சீரியலில் நடித்துக்கொண்டிருந்த உங்களுக்கு ஜோடி நெ.1ல் எப்படி வாய்ப்பு கிடைத்தது?

விஜய் டிவியில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்தவங்களை வச்சுதான் ஜோடி நெ.1 போட்டியை ஆரம்பிச்சாங்க. அதனால எனக்கும் சான்ஸ் கிடைச்சது. நல்ல நல்ல கான்செப்ட்டா தேடிப்பிடிச்சு போட்டி டான்ஸ் செஞ்சதால, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. இது, இனி எல்லா டான்ஸ் போட்டிகளிலும் கலந்துட்டு, ஜெயிக்கணும்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு.

* கல்லூரியில் படித்துவிட்டு பள்ளி மாணவி கேரக்டரில் நடிப்பது எப்படி இருக்கிறது?

திரும்பவும் ஸ்கூலுக்கு போன மாதிரியிருக்கு. கனா காணும் காலங்கள் ஸ்டோரியை டைரக்டர் செஞ்சிருந்தாலும், ஸ்கூல்ல படிச்ச அனுபவம் எங்களுக்கும் இருப்பதால, இந்த சீரியலில் நடிக்கிற எல்லாரும் கொஞ்சம் கூட பயப்படாம நடிச்சிட்டிருக்கோம். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ, அதைவிட, சிறப்பா நடிக்கணும்னு எங்களுக்குள்ள போட்டியே இருக்கு. ஷூட்டிங்குக்கு போற மாதிரியே தெரியலை, ஏதோ ஸ்கூலுக்கு ஜாலியா போயிட்டு வர்ற மாதிரியிருக்கு.

* ஒரு தத்துவம் ப்ளீஸ்... இளைய சமுதாயத்திற்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?

ஒவ்வொருவரும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். என்ன செய்ய நினைக்கிறோமோ அது பற்றி முன் கூட்டியே, ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கணும். யோசிச்சு முடிவு செஞ்சா, அந்த முடிவை செயல்படுத்த தயங்கக் கூடாது. வாழ்க்கைக்கு நல்லதுன்னு பட்டா, அதை அடையறதுக்கு துணிஞ்சு போராடணும். ஜெயிக்கிறது மட்டுமே நோக்கமாயிருக்கணும். இந்த நினைப்போட களமிறங்கினால், மற்ற எதுவும் பெரிய இடர்பாடா தெரியாது. பேசியது ப்ரியாவா, ப்ரியானந்தாவா

aanaa
1st July 2008, 08:29 PM
நான் மதுரைக்கார பொண்ணுங்க : தெக்கத்திப்பொண்ணு விசாலினி பேட்டி

தெக்கித்திப் பொண்ணு, ஆனந்தம் விளையாடும் வீடு, அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் விசாலினி, அடுத்து சினிமாவில் காலூன்ற அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருக்கிறார். விசாலினியின் பேட்டி:

* தெக்கித்திப் பொண்ணு சீரியலில் மதுரை பேச்சை வெளுத்து வாங்குறீங்களே; சொந்த ஊர் எது?
நான் மதுரைக்கார பொண்ணுங்க. இருக்கறது சென்னையில. அப்பாவும், அம்மாவும் அந்தமானில் டீச்சராக ஒர்க் பண்ணிட்டிருக்காங்க. சென்னையிலதான் டிகிரி படிச்சேன். டிவி, சினிமா மேல ஆர்வம் இருந்ததால முயற்சிக்கலாம்னு இருந்தேன். திடீர்னு திருமணம் ஆயிடுச்சு. நடிக்கணும்ங்கிற ஆர்வம் நிறைவேறுமா என்ற நிலையில் எனக்கு டிவி சீரியல் களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

* முதலில் கிடைத்த வாய்ப்பு?
விஜய் டிவியில் காதல் டைட்டிலில் வந்த வாராந்திர சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. நடிச்சேன். இந்த பீல்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகுது. ஆனந்தம் விளையாடும் வீடு, அலைபாயுதே, தெக்கித்திப் பொண்ணு சீரியல்களில் நான் நினைச்சபடி கேரக்டர் அமைஞ்சதால ஆர்வமா சூட்டிங் போயிட்டிருக்கேன்.

* தெக்கித்திப் பொண்ணு சீரியலில் வாய்ப்பு எப்படி கிடைச்சது?
எனக்கு தெரிஞ்சவங்க, என்னோட போட்டோவை பாரதிராஜா சாருக்கு காட்டியிருக்காங்க. வரச்சொல்லு; கேரக்டருக்கு பொருத்தமாயிருந்தா நடிக்க வச்சிடலாம்னு சார் சொல்லியிருக்கார். தேனிக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல சூட்டிங் நடந்தது. யூனிட்டோடு நானும் அங்கு போயிருந்தேன். அந்த கிராமத்து மக்களின் பேச்சை பார்த்தப்ப, அவங்களை போல நாமும் பேசணுங்கிற ஆர்வம் ஏற்பட்டது. நான் நடிக்க வேண்டிய டயலாக் போர்ஷனை வாங்கி முன் கூட்டியே படிச்சு வச்சுக்கிட்டேன். கிராமத்து பொண்ணா நடிச்சு, டைரக்டரை அசத்திடணும்ங்கிற நினைப்போடு சீன்ல போய் நின்னேன். பாரதிராஜா சார், எப்படி நடிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. கேமரா ஆன் சொன்னதும், அப்படியே மதுரை பொண்ணு போல பேசி நடிச்சேன். டைரக்டருக்கு பிடிச்சுப் போச்சு. என்னோட கேரக்டர் மெருகேறியிருக்கு. டைரக்டரின் முதல் சீரியல்லயே நடிக்க கிடைச்ச வாய்ப்பை பெரிசாக நினைக்கிறேன்.

* சமீபத்தில் சந்தோஷப்படுத்திய விஷயம் ஏதும்?
தெக்கித்திப் பொண்ணு சீரியலில் நான் சந்திரசேகர் மனைவியா அம்சமணி கேரக்டரில் வந்து, மதுரை பேச்சு பேசி, மாமியாரை ஒரு ஆட்டு ஆட்டி வைக்கும் சீன்ல என்னோட நடிப்பை ரசித்து பார்த்ததா ரசிகைங்க சொன்னாங்க. மதுரை மண்வாசனை பேச்சை நல்லாத்தான் பேசுறீங்கன்னாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்குள் பாரதிராஜா சார் இருக்காங்க. எந்த கேரக்டர் எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும், எந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்தணும்கிறதை முன் கூட்டியே அழுத்தமா ஒவ்வொருத்தர் மனசிலும் அவரே பதிய வச்சுட்டதால எல்லாரும் மதுரை, தேனி மாவட்ட மக்களாகவே ஒன்றி நடிச்சிட்டிருக்காங்க. .

* திருமணம் செய்த பிறகு நடிக்க போனதால் வீட்டில் பிரச்னை ஏதும்?
என்னோட கணவர் ஏர்டெல் நிறுவனத்தில ஒர்க் பண்ணிட்டிருக்கார். என்னோட ஆர்வத்தை அவரிடம் சொன்னப்ப, நல்ல வாய்ப்பு கிடைச்சா நீ நடிக்கிறதுல ஆட்சேபனை இல்லைன்னு சொன்னார். நாங்க நினைச்ச மாதிரியே நல்ல வாய்ப்புகள் வந்தது. சீரியலில் என்னோட எதார்த்த நடிப்பைப் பார்த் துட்டு, நல்லா செய்திருக்கேன்னு சொன்னார். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கலாம்னும் சொல்லியிருக்கார். .

* ஆர்வத்துடன் சீரியல் பக்கம் வந்த நீங்கள், சினிமா பக்கம் போகும் எண்ணம் ஏதும்?
ஆசைப்பட்ட மாதிரி சீரியல்களில் நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. படத்திலும் நல்ல வாய்ப்பு கிடைக்கணும்னு ஆசையிருக்கு. மறுஅவதாரம் படத்தில் நடிச்சிருக்கேன். நல்ல கம்பெனி, நல்ல வாய்ப்பு கிடைச்சால் படத்தில் நடிக்கலாம்னு இருக்கேன்.

* பிரச்னைகளை சந்தித்த அனுபவம் ஏதும்?
இந்த பீல்டுல எந்த பிரச்னையும் எனக்கில்லை. முதல்ல நம்ம மரியாதையா நடந்துக்கிட்டா நம்மை மத்தவங்க மதிச்சு நடத்துவாங்க. எந்த பிரச்னையும் நம்மை மீறி நடக்காது. நாம இருக்கிற சூழ்நிலையில் எப்படி நடந்துக்கிட்டா சரியாயிருக்கும், எப்படி நடந்துக்க கூடாதுன்னு முடிவு பண்ணிடணும். ஒர்க் பண்ற இடங்கள்ல இதே மாதிரி நடந்துக்கிட்டா பிரச்னை எப்படி வரும்?, எனக் கேட்டு முடித்தார். அட... இவ்ளோ விவரம் இருந்தால் போதாதா?

aanaa
19th July 2008, 06:17 PM
The Tamil Nadu Government adjudged actress Khushboo as the Best Small Screen Actress of the year 2007. Abhishek was selected as the Best Actor for the year. Actress Devi Priya, the actress who caught in sex controversy last year, was selected as the Best Character Actress of year 2007. The Best Serial Award goes to 'Selvi' produced by Radhika Sarath Kumar's Radan Media works.

The award is comprised with a cash prize of Rs.2 lakhs, Gold coated memento and a certificate. Interestingly, most of the awards gone to serials telecasted in Sun TV, an arch rival of Chief Minister owned Kalaignar TV! A panel comprised 8 members including the director of information and publicity lead by its Chairperson Justice Maruthamuthu watched all the 14 serials and finally announced the best.
Chief Minister of Tamil Nadu Dr. Karunanidhi will distribute awards to the artists and technicians in a grand ceremony held at Kalaivanar Arangam later. The date will be announced soon according to the convenience of the Chief Minister.

'Sorgam', produced by AVM selected as the second best serial. Here is the list of Awardees:

Best Mega serial: Selvi (Rs.2 lakhs cash prize and memento)
Best Serial second price: Sorgam (Rs.1 lakh cash and memento)
Best actor: Abhishek (Malargal)
Best Character Actress: Devi Priya (Kolangal)
Best supporting actor: Delhi Kumar (Aanandham)
Best Villain: Ajay (Kolangal)
Best actress in Negative role: Brinda Das (Aanandham)
Best script writer: Raj Prabhu (Selvi)
Best Dialogue writer: Kumaresan (Agalya)
Best Director: Samudhirakkani (Selvi)
Best Editor: Prem (Lakshmi)
Best background score: Kiran (Many serials)
Best Dubbing artists: Ravi Shankar, Pramila
Best Thrilling effects: Eshwar (Sindbad)

All the awardees will get a gold medal worth 5 sovereign and a memento from the hands of Chief Minister Karunanidhi.

aanaa
23rd July 2008, 07:43 PM
விரும்பியதை படிக்க அனுமதிச்சா சாதிப்பாங்க : சோனியாஸ்ரீ


ராஜ் டிவியில் "சூப்பர் டாப் டென், சினி மினி, தினம் தினம் புது ரீல், ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சோனியாஸ்ரீ, "கிரேஸி மோகனின், "சாக்லெட் கிருஷ்ணா'விலும் நாயகியாக நடிக்கிறார். "பிள்ளைங்க விரும்பியதை படிக்கவும், விரும்பிய வேலையை செய்யவும் அனுமதிச்சாங்கன்னா ஆர்வமா உழைப்பாங்க, நினைச்சதை சாதிப்பாங்க' என அழுத்தம் திருத்தமாக சொன்ன சோனியாஸ்ரீயின் ஆர்வப் பேட்டி:



* நடிக்க வேண்டாம் என்று சொன்ன பிறகும், நடித்தே ஆவேன் என்று வந்திருப்பது பற்றி?

"டிவி"யில பாட்டு பார்த்தா, ரேடியோவில் பாட்டு கேட்டா ஆடிடுவேன். இரண்டு வயசுலிருந்தே இப்படி ஒரு இன்ட்ரஸ்ட் எனக்கு இருக்கு. இவள டான்ஸ் கிளாஸ்ல விட்டா நல்லா ஆடுவாளேன்னு தெரிஞ்சவங்க சொல்ல, என் அம்மா என்னை மூன்று வயதிலேயே பரதநாட்டியம் கத்துக்க அனுப் பினாங்க. மியூசிக் காலேஜ்ல சேர்ந்து பரத நாட்டியம் கத்துக் கிட்டேன். டில்லி, மும்பை, கோல்கட்டா, திருவையாறு என பல இடங்களில் நிறைய ஸ்டேஜ் புரோகிராம் செஞ்சிருக்கேன். இருந்தாலும் நான் இந்த பீல்டுக்கு வருவதில் உறவினர்களில் பலருக்கு விருப்பமில்லை. பிடிக்காத வேலையை செஞ்சு அவஸ்தை படுறதை விட, பிடிச்ச வேலையை செஞ்சு சாதித்து காட்டணும்கிற நினைப்பில இந்த பீல்ட்டுக்குள்ள வந்திருக்கேன். நினைச்சதை சாதிப்பேன்.


* உறவினர்கள், நல்லதுக்குத் தானே இப்படி சொல்லியிருப்பர் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பிள்ளைகளோட எண்ணத்தை தெரிஞ்சுக்கிட்டு அவங்களோட வளர்ச்சிக்கு பெற்றோர்களும், உறவினர்களும் வழி காட்டணும். நான் டாக்டருக்கு படிக்க நினைச்சேன், அதனால நீ டாக்டருக்கு தான் படிக்கணும், நான் வக்கீலுக்கு படிக்க நினைச்சேன் நீ சட்டப் படிப்பு தான் படிக்கணும்ன்னு பெற்றோர்கள் கட்டாயப்படுத்தினால், விருப்பம் இல்லாத படிப்பை பிள்ளைங்க எப்படி முழுமையாக படிப்பாங்க? பிள்ளைங்க விரும்பியதை படிக் கவும், விரும்பிய வேலையை செய்யவும் அனுமதிச்சாங் கன்னா ஆர்வமா உழைப்பாங்க, நினைச்சதை சாதிப்பாங்க. எனக்கு நடிப்பு பிடிச்சிருக்கு, நடனம் பிடிச்சிருக்கு. நிச்சயம் இதில உயர்ந்த இடத்திற்கு வரணும்கிற ஆர்வமிருக்கு. அதற்கான முயற்சியும் செஞ்சுட்டிருக்கேன்.


* அலுவலகத்துக்கு போய் வேலை செய்யப்பிடிக்காமல்தான் டிவி, நாடகம் பக்கம் வந்துவிட்டீர்கள் என்று பேசப்பட்டதே?

ஆபீசிற்கு போய் டயத்திற்கு வேலை செய்யறதில் எனக்கு ஆர்வமில்லை. நடிப்பு மேல தான் எனக்கு ஆர்வமிருக்கு. இதில தான் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்குது. அதனால் தான் இந்த பீல்டை நான் செலக்ட் பண்ணியிருக்கேன்.


* வீட்டில் எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு போடுகிறார்கள் என்று வேலைக்கு போகும் பெண்களின் புலம்பல் பற்றி?

வேலைக்கு போகிற பெண்கள் பாதுகாப்பா போயிட்டு வரணும். பிரச்னை ஏதும் வந்திடக் கூடாதுன்னு நினைக்கிறது இயல்பு தான். வேலைக்கு போகிற இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படியிருக்குன்னு வீட்டார் நினைக்கிறதில் தவறில்லை. பணிபுரிகின்ற இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை. கால் சென்டர், ஐ.டி., பார்க்குகளில் இரவு பகலா வேலை நடந்திட்டிருக்கு. இந்தச் சூழ்நிலையில் நீ அந்த நேரத்தில வேலைக்கு போகக் கூடாது, இந்த நேரத்தில் வேலைக்கு போகக் கூடாதுன்னு கட்டுப்பாடு போடுவதை விட பெண்கள் வேலைக்கு போயிட்டு பாதுகாப்பா வந்து சேர்வதற்கு, வீட்டிலிருக்கும் ஆண்களும் உதவியாக இருந்துட்டா இப்படி பிரச்னை வராதுன்னு சொல்வேன்.

* டிவியில் இருந்து மேடை நாடகத்திற்கு வந்திருப்பது பற்றி?
கிரேஸி மோகனும், மாது பாலாஜியும் நிறைய நாடகங்களை நடத்தியிருக்காங்க. நாடக உலகில் முன்னணியில இருந்திட்டிருக்காங்க. சினிமாவுல ஹவுஸ் புல் காட்சி ஒடுதோ இல்லையோ இவங்களோட டிராமாவெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாகிற அளவுக்கு இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இவுங்களோட சாக்லேட் கிருஷ்ணா நாடகத்துல மாது பாலாஜிக்கு ஜோடியா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. நடிச்சிட்டிருக்கேன். கிரேஸி மோகனும், பாலாஜியும் நல்லா நடிக்க என்கரேஜ் பண்றாங்க. அவுங்களோட நடிக்கிற எல்லாருக்கும் நல்லா நடிக்கிறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறாங்க. இப்படி ஒரு "டீம்'ல நடிக்கிறதுக்கு சந்தோஷமாயிருக்கு. உற்சாகமாகக் கூறி விடைபெற்றார் சோனியாஸ்ரீ.

aanaa
1st August 2008, 06:09 PM
[tscii:a714766a17]
பெண்களை பாரமா நினைக்காதீங்க : ஆனந்தம் சொப்னா பேட்டி

"ஆணுக்கு நிகராக பெண்கள் எல்லாத் துறையிலும் சாதிக்கத் துவங்கியிருக்காங்க... இந்நிலையிலும் பெண் குழந்தைகளை தங்களுக்கு பாரமா பெற்றோர்கள் நினைக்கக் கூடாது,'' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் "டிவி' நடிகை சொப்னா. அவரது பேட்டி:

*புதுமுக நடிகைகளுக்கு "டிவி' சீரியல்களில் எளிதாக வாய்ப்பு கிடைக்கிறதாமே?
நிறைய "டிவி' சேனல்கள் இருக்கிறது, நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்றாங்கன்னு நினைச்சு இப்படி பேச்சு வந்திருக்கலாம். சான்ஸ் எளிதா கிடைப்பதில்லை. சீரியல் பீல்டில் இருப்பவங்களோட நண்பர்கள், உறவினர்களுக்கு, அறிமுகத்தை வச்சு எளிதா வாய்ப்பு கிடைச்சிருக்கலாம். இந்தத் துறையை சேராதவங்க சீரியல் பீல்டுக்குள் எளிதா நுழைஞ்சுட முடியறதில்லை. சினிமாவில், சீரியலில் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. வாய்ப்பு கிடைப்பது சிரமமாகத்தானிருந்தது. பல கம்பெனிகளுக்கு அலைய வேண்டியிருந்தது. என்னோட ஆர்வத்தை பார்த்துட்டு எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தாங்க. நடிக்க துவங்கியதிலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைச்சிட்டிருக்கு. தெலுங்கு தான் தாய்மொழி. பிளஸ் 2 முடிச்சப்பவே தெலுங்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு ஏ.வி.எம்.,மின் "அக்கா' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. "ஆனந்தம், சூரியவம்சம், திருமதி ஜானகிராமன், ஆனந்தம் விளையாடும் வீடு, திருமதி செல்வம்'னு சீரியல் வாய்ப்பு கிடைக்க ஆர்வமா நடிச்சிட்டிருக்கேன்..
முன்னேறத் துடிக்கும் பெண்கள் பற்றி?
ஆண்களுக்கு நிகரா எல்லாத் துறையிலும் பெண்களும் சாதனை படைச்சிட்டிருக்காங்க. லேட்டஸ்ட் டெக்னாலஜியில் பெண்களுக்கு அதிக ஆர்வமிருக்கு. முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வமா உழைக்கிறாங்க. வீட்ல, பணிபுரியும் இடத்தில நினைச்ச மாதிரி சப்போர்ட் கிடைச்சா எந்தப் பெண்ணும் சாதிப்பா. "பெண் தானே! இவளால என்ன செய்ய முடியும்'னு நினைக்கக் கூடாது. எந்த வகையில் உதவி செஞ்சா உயர்வாள்னு பார்த்து செஞ்சுட்டா, ஆண்களுக்கு நிகரா எல்லாத் துறையிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிப்பாங்க.
* நாகரீகம் என்ற பெயரில் பொது இடங்களில் அரைகுறை ஆடையுடன் வரும் பெண்கள் பற்றி? இவைகளில் உங்களுக்கு நாட்டம் உண்டா?
பெண்களுக்கு மரியாதையே அவங்க உடுத்தற உடையில் தானிருக்கு. எந்த உடை உடுத்தினாலும் அதில் கண்ணியம் இருக்கணும். மற்றவங்க குறை பேசற அளவுக்கு இருக்காம பார்த்துக்கனும். கல்லுõரிகளில் உடை விஷயத்தில் கட்டுப்பாடு போட்டிருக்காங்கன்னா காரணமில்லாமல் போட மாட்டாங்க. படிக்கிற இடத்தில் முக்கியத்துவம் படிப்புக்கு தான் இருக்கணும். மற்ற விஷயங்களின் பக்கம் கவனம் திரும்பக் கூடாதுன்னு தான் கட்டுப்பாடு போட்டிருக்காங்க. பெண்கள் பாதுகாப்பா நடந்துக்க ஒரு லிமிட் வச்சுக்கணும். எந்த சூழ்நிலையிலும் அதனை தாண்டக் கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டா பிரச்னை எப்படி வரும்?
* மொபைல் போனில் மணிக்கணக்கில் கடலை போடும் பெண்கள் பற்றி?
மொபைல் போனில் நான் அதிகமாக பேசுவதில்லை. மற்றவர்கள் பேசினால் அது அவர்கள் விருப்பம். மற்ற பெண்கள் பற்றி தனிப்பட்ட முறையில் ஏதும் சொல்ல முடியாது. தேவையான விஷயத்திற்கு பேசலாம். பொழுது போக்கிற்கு யாரோடவாவது கடலை போட பேச வேண்டியதில்லை. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வாங்க. நியாயம் சொல்வாங்க. இதிலே போய் யாரும் நல்லது சொன்னாலும் அவங்களுக்கு குறையாத் தான் தெரியும். ஒவ்வொருத்தரும் நேரத்தின் அருமை, காலத்தின் அருமை, பணத்தோட அருமை, செயலோட அருமை தெரிஞ்சா, யோசிச்சா, சிரமங்களை பற்றி மனப்பூர்வமா உணர்ந்தா, தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க.

.. என சொப்னா சொல்லிக் கொண்டே போக, நமக்கு ஏதோ ஆன்மீக சொற்பொழிவைக் கேட்ட உணர்வு.
[/tscii:a714766a17]

aanaa
13th August 2008, 06:31 PM
அப்பா-அம்மா புகழ் பாடுகிறார், நம்ம குடும்பம் நீபா





"நாம செய்ற நல்ல விஷயங்களால அப்பா அம்மா சந்தோஷப்பட்டா அதுதான் நாம அவுங்களுக்கு செய்ற நன்றி கடன்!'' இப்படி, அப்பா, அம்மா புகழ் பாடினார், நம்ம குடும்பம், பந்தம்' சீரியல்களில் நடிக்கும் நீபா. "மானாட மயிலாட'விலும் போட்டி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். நீபாவின் பாசப் பேட்டி:


* மானாட மயிலாட நடனப் போட்டியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி?

டான்ஸ் மாஸ்டர் கலாக்கிட்டே எங்க அப்பா வாமன் உதவி டான்ஸ்மாஸ்டரா இருந்தாங்க. போட்டி அறிவிச்சதுமே என்னோட பேர் ஞாபகம் கலா மாஸ்டருக்கு வந்திருக்கு. என்னை அழைச்சு கலந்துக்க சொன்னாங்க. எங்க குடும்பத்தாரிடம் கலா மாஸ்டர் வச்சிருக்கிற நல்ல நட்புக்காக இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது. டான்ஸ்ல ஆர்வமுள்ள பலருக்கு கலா மாஸ்டர் நிறைய உதவிகளை செஞ்சிருக்காங்க. பலர் உயர்ந்திருக்காங்க. டான்ஸ்ல, நடிப்பில உயர்ந்த இடத்திற்கு வரணும்ங்கிற ஆசை எனக்கும் இருக்கு. .

* மஸ்தானா மஸ்தானா' டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்று பத்து லட்சம் ரூபாய் பரிசு பெற்றது போல இந்த போட்டியில் பரிசை வெல்லும் ஆசை?

போட்டியில ஆடிச் ஜெயிக்கிறது சந்தோஷமான விஷயம். ஜெயிச்சுடணும்ன்னு ஆசையிருக்கு. என்னோட ஜோடியா ஆடும் கார்த்திக் ஒவ்வொரு போட்டிலும் நல்லபடியா ஒத்துழைப்பு கொடுப்பதால நல்லபடியா டான்ஸ் ஆட முடியறது. டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் புதுசு, புதுசா தீம் கண்டுபிடிச்சு பாட்டுக்கு எங்களை ஆட வைப்பதால ரசிகர்களை ஈர்க்கும் படியாக டான்ஸ் அமைஞ்சிடுவது சந்தோஷமாயிருக்கு.

* சினிமாவில் நடிக்க ஆசை இருக்கா, இல்லையா?

பெரிசு படத்தில் ஹீரோயினா நடிச்சேன். குடியரசு படத்தில் நடிகர் வெங்கடேஷ் ஜோடியா நடிச்சிருக்கேன். சீரியல்களில் நல்ல வாய்ப்பு கிடைச்சதால சினிமா பக்கம் போகவில்லை

* சினிமாவில் நடிப்பதை உங்கள் தம்பி விரும்பாததால் தான் சினிமாவில் நடிக்கவில்லை என்று பேசப்பட்டதே?

என்னோட வாழ்க்கை நல்ல படியா அமையணுங்கிறதில என்னோட தம்பி பத்மநாபன் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கான். திருப்பூரில் இன்ஜினியரிங் காலேஜ்ல பி.இ., படிச்சிட்டிருக்கான். அமைதியான ஆளு. அக்கா எப்படி நடந்துக்கணும்ன்னு அவன் நினைக்கிறானோ அப்படியே நானும் நடந்துக்கணும்ன்னு நினைச்சிட்டிருக்கேன். சினிமாக்களில் நடிகைகளுக்கு கிளாமர் கேரக்டர்தான் அதிகமாயிருக்கு. வாய்ப்பு கிடைக்கிறதேன்னு நினைச்சு சரி சொல்லிட்டு சூட்டிங் ஸ்பாட்ல போய் அந்த டிரஸ் போட மாட்டேன், இந்த டிரஸ் போடமாட்டேன்னு தகராறு செய்வதைவிட ஹோம்லி கேரக்டர்னா சொல்லுங்க நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். இதனால சில வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன்.

* நடனப் போட்டியில் கிராமிய சுற்றில் ஆடுவதற்கு மிகவும் சிரமம் இருந்ததா?

உடம்புக்கு சரியில்லாம இருந்ததால போட்டியில தேவதையை கண்டேன் படத்தில வரும் பாடலுக்கு ஆடுவது சிரமமாயிருந்தது. சமாளித்து ஆடிட்டு வந்தேன். முழங்கால் முட்டி வீங்கிடுச்சு. ரொம்ப அவஸ்தைப்பட்டேன். இதேபோல அழகன் படத்தில் வரும், கோழி கூவும் நேரமாச்சு பாடலுக்கு ஆடும் போதும் சிரமமாயிருந்தது.

* டிவியில் நடிக்கும் நடிகைகள் பிரபலமாயிருந்தாலும் கூட சினிமா வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை என்று குறை பேசப் படுகிறதே?

சினிமாவிலிருந்து சீரியலுக்கு குஷ்பு, தேவயானி, ரஞ்சிதா, சித்தாரா, ரேகா, கவுசல்யான்னு நிறைய பேர் வந்திருக்காங்க. ஆனால் டிவியில் பேமஸ் ஆகி சினிமாவுக்கு சென்றவங்க அவ்வளவாகயில்லை. டிவியில நடிக்கிற நடிகைகளுக்கு சின்ன, சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது. ஹீரோயின் சான்ஸ் அவ்வளவாக கிடைப்பதில்லை..

* மதிக்கக் கூடிய மனிதர் என்று கேட்டால்?

மதிக்கக்கூடிய மனிதர்கள்ன்னு சொன்னா அவுங்க பெற்றோர்கள் தான். நாம கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நம்ம பிள்ளைங்க நல்லாயிருக்கணும்ன்னு அனுதினமும் நினைச்சு பிள்ளைகளுக்காகவே வாழறவங்க, பிள்ளைங்களுக்கு நல்ல லைப் அமைச்சு கொடுக்கிறவங்க அப்பா அம்மாதான். அவுங்க மனசு கஷ்டப்படாம நடந்துக்கிறதுதான் நாம அவுங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன்னு சொல்வேன். அவுங்களை நல்ல படியா பாத்துக்கணும். பெற்றோரை மதிக்காம நடக்கிறவங்களுக்கு நல்ல சாவு கிடைக்காது, நரகம் தான் கிடைக்கும், என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன நீபா டான்ஸ் ரிகர்சலுக்கு போவதாக கூறிவிட்டு பறந்தார்.

aanaa
19th August 2008, 08:18 PM
[tscii:c0121e6023] [/tscii:c0121e6023]எதிர்கால திட்டம் எதுவும் இல்லை : திவ்ய தர்ஷினி பேட்டி



கலகலப்புக்கும், கலாய்ப்புக்கும் குறைவில்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஒரு வித்தியாசத்தை காண முடியும் என்றால், அது திவ்யதர்ஷினியிடம்தான் காண முடியும். ஆம், அந்த அளவுக்கு விறுவிறுப்பு குறையாமல் நடத்துவதில அசத்தல் தர்ஷினி தான் அவர். ரெக்கை கட்டிய மனசு, எதிர்நீச்சல் என பாலசந்தரின் சீரியல்களில் நடித்தவர். திவ்யதர்ஷினியின் பேட்டி:

* காம்பியரிங் செய்யும் போது சமயோசிதமாக பேசுவதற்கு யாரிடமும் பயிற்சி ஏதும் எடுத்து கொண்டீர்களா?

பயிற்சியெல்லாம் எடுக்கலை. காம்பியரிங் பண்ணுவதில் எனக்கு இயல்பா இன்ட்ரஸ்ட் இருந்ததால முழுமையான ஈடுபாட்டோடு ஒர்க் பண்ண முடியுது. விஜய் "டிவி'யில் வரும் ஜோடி நெ.3ல் என்னோட சேர்ந்து ஒர்க் பண்ற தீபக்கும், நானும் சின்ன வயசிலிருந்தே நல்ல பிரண்ட்ஸ்கிறதால நான் என்ன பேசறேன்னு பார்த்து, அதற்கு தகுந்தபடி அடுத்து என்ன பேசணுமோ, அதை சரியா ஈர்ப்பா பேசிடுவான். அதே போல அவன் எப்படி பேசினாலும், அதற்கு தகுந்தபடி வார்த்தைகளை சமயோசிதமாக சேர்த்து நிகழ்ச்சியில நானும் பேசிடுவேன். "டிவி' ரசிகர்களை குதுõகலப்படுத்தணும்ன்ங்கிறது மட்டுமே, நிகழ்ச்சியில எங்கள் நோக்கமாயிடறதால சூழ்நிலைக்கு ஏற்றார் போல பேசி ஜமாய்ச்சிடறோம். இந்த பீல்ட்ல ஆர்வம் இருப்பதால தான் எங்களால இதனை சரியா ஈர்ப்பா செய்ய முடியுதுன்னு சொல்வேன். .

* டிவி, சினிமா பீல்டில் குழந்தையிலிருந்தே இருந்து வருகிறீர்கள், இத்துறையில் உள்ளவர்கள் பற்றி?

மத்தவங்களை பற்றி சொல்றதைவிட நாம நல்ல படியா நடந்துக்கிட்டா அவுங்களும் நல்ல படியாதான் நடந்துக்குவாங்க. குழந்தையாக இருந்ததிலிருந்தே இந்த பீல்ட்டில் இருந்ததால ஒர்க் பண்றதுக்கு எந்த சிரமமும் எனக்கு ஏற்பட்டதில்லை.

* நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை ஏதும்?

இந்த பீல்டுல நடிப்பு, நடனம்ன்னு எந்த வாய்ப்பு கிடைச்சாலும் சரியா செஞ்சிடணும்ங்கிற நினைப்பு எப்போதும் எனக்கிருக்கு. பாலசந்தரின் ரெக்கை கட்டிய மனசு, எதிர்நீச்சல் சீரியலில் நடிச்சப்ப நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க. தடயம், செல்வி சீரியலில் நடிச்சப்ப நல்லா நடிக்கிறேன்னாங்க. விஜய் டிவி அடுத்து ஜோடி நெ.4 நடத்தி அதில் ஆடுவதற்கு அழைத்தால் ஆடமாட்டேன்னு சொல்ல மாட்டேன்.

* தொடர்ந்து உங்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்க காரணம் எதும்?

பிடிக்கிற வேலையை செய்யும்போது ஈடுபாடு தானாக வரும். எனக்கு இந்த பீல்ட் பிடிச்சிருக்கு. என்னோட நிகழ்ச்சிகளில் என்னோட ஈடுபாட்டை பார்த்தவங்க திவ்யதர்ஷினி காம்பியரிங் செஞ்சா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறவங்க அழைக்கிறாங்க. இந்த பெண் நடிச்சா நல்லாயிருக்கும்ன்னு நினைச்சா வாய்ப்பு கொடுக்கிறாங்க. நானாக சான்ஸ் கேட்டு தேடிப்போறதில்லை. கிடைச்ச வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அது எனக்கு பிடிச்சிருந்தா ஏத்துக்கிட்டு செஞ்சிட்டிருக்கேன். வாய்ப்பு கிடைக்க வேறு ஏதும் ஸ்பெஷல் காரணமில்லை..

* பிரச்னை வரும் போது மற்றவர்களிடம் அழுதுவிட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைக்கும் பெண்கள் பற்றி?

மத்தவங்களை பற்றி நான் ஏதும் சொல்றதுக்கில்லை. அழுவது, அடம்பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் யோசிப்பேன். எப்படி நடந்துக்கிட்டா நாம நினைப்பது சரியா நடக்கும்ன்னு பார்ப்பேன். அழுது, அடம்பிடித்து நினைச்சதை சாதித்து கொள்வதைவிட சமயோசிதமாக யோசித்து நடந்துக்கிட்டு பிரச்னையை தவிர்க்க நினைப்பேன். இந்த ரூட்தான் எனக்கு சரியா படுது..

* எதிர்கால திட்டம் ஏதும் இல்லை என்கிறீர்கள், எதையாவது நோக்கி பயணம் இருந்தால்தானே சந்தோஷமாக இருக்கும்?

எது நடந்தாலும் அதனை ஏத்துக்கிட்டு சமாளிக்கலாம்ன்னு நினைப்பு இருக்கு. அதனால எதிர்கால திட்டம்ன்னு எதையும் நினைக்கல. எது நடந்தாலும் அது நல்லதுக்கு தான் நடக்குதுன்னு நினைச்சிட்டா போகுது.

* நீங்கள் சமீபத்தில் சந்தித்த வித்தியாசமான மனிதர்?

பிரசன்னான்னு ஒருத்தரை ரேடியோ ஒன் நிகழ்ச்சிக்கு போனப்ப சந்திச்சேன். நல்லா படிச்ச மனுஷன் விவரமானவர். படிச்ச படிப்புக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். சமூக சேவையில ஆர்வமாயிருப்பதால வேலை, சம்பளம் பற்றி பெரிதா நினைக்கலை. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கணும்ன்னு ஆர்வம் அவரிடம் இருக்கு. குழந்தைங்க எங்காவது ஏழ்மையால படிக்க முடியாம திண்டாடுறாங்கன்னு கேள்விப்பட்டா அங்கு போய் அந்தக் குழந்தையை சந்திச்சு படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். அவுங்க தொடர்ந்து படிக்கவும் வழிகாட்டுறார். குழந்தைகளுக்கு படிப்பு அவசியம். அதை அவுங்க இழக்கக் கூடாதுன்னு நினைக்கிற அவரோட நினைப்பு பிடிச்சிருக்கு. அவரோடு இந்தச் சேவை சாதாரணமாயிருந்தாலும் பல குழந்தைகளுக்கு நல்லது நடக்கிறது நல்ல விஷயம்தானே.

aanaa
30th September 2008, 11:02 PM
பழைய பாடல்கள் எனக்கு பிடிக்கும் : "சொக்குதே மனம்' ப்ரியா சொல்கிறார்


ஜெயா டிவியில் "சொக்குதே மனம்' நிகழ்ச்சியை ஜனரஞ்சகமாக நடத்தி வரும் ப்ரியாதான். அவர் சிரிப்பே, அவரை அடையாளம் காட்டி விடும். அந்த அளவுக்கு சிரித்தபடியே பாடுவது அவர் தனிச்சிறப்பு. ப்ரியாவின் ப்ரியமான பேட்டி:

சட்டம் படித்த உங்களுக்கு சங்கீதத்தின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம்?
சட்டப் படிப்பு படிச்சிருந்தாலும் எனக்கு இசையின் மீதுதான் ஆர்வம் அதிகமாயிருந்தது. என்னோட அப்பா சுப்பிரமணியமும், அம்மா மைதிலியும் இசைப்பிரியர்கள். டி.எம்.எஸ்., எம்.எஸ்.சுப்புலட்சுமி, பி.லீலா பாடிய பாடல்களை விரும்பி கேட்பாங்க. நானும் அவுங்களோட பழைய பாடல்களை கேட்டதால கர்நாடக இசை கற்றுக் கொள்ள ஆசை வந்தது. கர்நாடக இசை கத்துக்கிட்டேன். இசையையே ஏன் தொழிலாக வச்சுக்க கூடாதுன்னு நினைச்சேன். மேடைக் கச்சேரிகளில் பாடத் துவங்கினேன். அப்போது, பொதிகை "டிவி'யில் காற்றினிலே வரும் கீதம் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைச்சது. "துள்ளாத மனமும் துள்ளும்', ஜெயா "டிவி'யில் "சொக்குதே மனம்'ன்னு நிகழ்ச்சிகள் அமைய சந்தோஷமாயிருக்கு..

* பழைய பாடல்களை தேடிப்பிடித்து மக்களிடம் கொண்டு செல்ல ஆர்வம் காட்டுவதற்கு காரணம் ஏதும்?

பழைய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். "சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்கள், எதார்த்தம், குரலின் மென்மை என பல விஷயங்களில் பழைய பாடல்கள் எனக்கு பிடிச்சிருக்கு. பழைய பாடல்களை பற்றிய நிகழ்ச்சிகள் ஏதும் டிவிக்களில் இல்லை. பழைய பாடல்களை மீண்டும் மக்கள் ரசிக்க நாம எடுத்து செல்லலாமேன்னு நினைச்சேன். அந்த முயற்சிதான் "பொதிகை' சேனலில் "காற்றினிலே வரும் கீதம்', "துள்ளாத மனமும் துள்ளும்' நிகழ்ச்சி நடத்தினேன். ஜெயா "டிவி'யில் "சொக்குதே மனம்' நிகழ்ச்சி போயிட்டிருக்கு. இந்நிகழ்ச்சி மக்களுக்கு பிடிச்சிருப்பதால மேடைக் கச்சேரிகள் நடத்தவும் நிறைய வாய்ப்புகள் தேடி வந்திட்டிருக்கு. இந்நிகழ்ச்சிக்காக, வரும் 28ம் தேதி திருச்சியில் "மெகா லைவ் ஷோ' வுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கோம். என்னோட "ப்ரியம் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் மூலம் மக்கள் "டிவி'யில் "வளாகம்' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திட்டிருக்கோம். தொழில் முயற்சிகள், நடத்த முடியாத கம்பெனிகளை மீண்டும் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் என பல விவரங்களை இதில் சொல்கிறோம்.


* சினிமாவில் பாடும் முயற்சி ஏதும்?

தமிழில் அஜீத் நடித்த "பரமசிவம்' படத்தில "ஆசை தோசை அப்பளம் வடை' பாடலை பாடியிருக்கேன். "பெரியார்', "தவம்', "எம்.ஜி.ஆர்., இல்லம்', "மூன்றாம் பவுர்ணமி' படங்களிலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் சில பாடல்களை பாடியிருக்கேன். சீரியல்களிலும், இசை ஆல்பங்களிலும் பாடியிருக்கேன். "சொக்குதே மனம்' நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால* ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை "டிவிடி'யாகவும் வெளியிட கேட்டிருக்கின்றனர். அதற்கான முயற்சியும் நடந்திட்டிருக்கு.


* நிகழ்ச்சிக்கு பழைய பாடல்களின் முதல் வரியை தலைப்பாக வைத்தது பற்றி?

இசை நிகழ்ச்சிக்கு மட்டுமா, திரைப்படங்களுக்குகூட பழைய பாடல் வரிகளை "டைட்டி'லாக வைக்கிறாங்க. நிகழ்ச்சிக்கு ஈர்ப்பா "டைட்டில்' எப்படி வைக்கலாம்ன்னு நினைச்சப்ப பழைய பாடல் வரிகளையே" டைட்டி'லாக வச்சிடலாம்ன்னு நினைச்சோம். "துள்ளாத மனமும் துள்ளும், காற்றினிலே வரும் கீதம், சொக்குதே மனம்'ன்னு பாடல் வரிகளையே பெயராக வச்சுட்டோம்.


* இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த ஈடுபாடு வந்தது பற்றி?

"நான் ஆர்வப்பட்ட இசையே தொழிலானதால முழு ஈடுபாட்டோடு ஒர்க் பண்ண முடியறது. பழைய பாடல்களை தேடிப்பிடிச்சு கேட்க மக்களுக்கு நேரமில்லை. இப்ப உள்ள நவீன தொழில் நுட்பத்தால் மக்களின் இசை ஆர்வத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கு. தமிழ் சினிமாவில் ஜாம்பவான்கள் பலர் இசையில் சாதனை நிகழ்த்தி விட்டு சென்றிருக்கின்றனர். அவுங்களுக்கு நான் செலுத்தும் மரியாதையாக அவுங்களோட பாடல்களை மீண்டும் மக்களின் காதுகளுக்கும், விழிகளுக்கும் கொண்டு செல்ல முயற்சித்ததன் விளைவுதான், இந்நிகழ்ச்சியின் வடிவமைப்பு. அனைத்து தரப்பு மக்களையும் எங்கள் நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. இதனால மேடை நிகழ்ச்சிகள் பல கிடைச்சிட்டிருக்கு. டில்லி, மும்பை தமிழ்ச் சங்கங்களிலும் எங்களின் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைச்சிருக்கு என்றும், ஆர்வமாக சொன்ன ப்ரியா, மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவசர, அவசரமாக காரில் பறந்தார்.

aanaa
10th October 2008, 03:28 AM
எல்லாரையும் இழுக்கிற பேமிலி ஷோ : சுதா கணேசன்


ஆறு வயதிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்கள் குடும்பத்தோடு கூட்டமா உட்கார்ந்து ஆர்வத்துடன் பார்க்கும் நிகழ்ச்சி இது. ஆறிலிருந்து அறுபது வயது வரை எல்லாரையும் இழுக்கிற "பேமிலி ஷோ'ன்னு இந்நிகழ்ச்சியை சொல்வேன்'' - பொதிகை சேனலில் வரும் அருமையான "குவிஸ்' நிகழ்ச்சி ஞாயிறுதோறும் வரும் கேள்விக்கு என்ன பதில்! இதன் தொகுப்பாளர் எப்போதும் புன்முறுவலுடன் நிகழ்ச்சியை நடத்தும் சுதாகணேசன் சொன்னதுதான் இது. சுதா கணேசனின் பேட்டி :

இந்நிகழ்ச்சி எப்படி உருவானது, யார் காரணம்?

டாக்டருக்கு படிச்சிட்டு வெளிநாடு போயிருந்தேன். ஏழு வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு வந்ததும் "டிவி' சேனலில் ஒர்க் பண்ணலாம்ங்கிற நினைப்பு இருந்தது. எனக்கு டீச்சிங் ரொம்ப பிடிச்சிருந்ததால இது தொடர்பான நிகழ்ச்சிகள் ஏதாவது செய்யலாம்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்பத்தான் பொதிகை சேனலில் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரகாஷ் இப்படி ஒரு நிகழ்ச்சியை செய்ய ஆர்வம் காட்டி வருவதாக என்னோட கிளாஸ் மேட் சுமந்த்ராமன் மூலம் கேள்விப்பட்டேன். பிரகாஷையும், தயாரிப்பாளர் ஹேமலதாவையும் சந்தித்து பேசினேன். ஒரு "டீம்' ஒர்க்கா இந்நிகழ்ச் சியை செய்யலாம்ன்னு பிரகாஷ் சொன்னார். இப்படித்தான் "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சி உருவானது."பொது அறிவு, கணிதம், லாஜிக்' என பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கூறும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சியை வடிவமைத்தோம்.

* இந்*த நிகழ்ச்சி ரசிகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது?

தனியார் "டிவி'க்களில் மசாலாத்தனமாக பொழுது போக்கு நிகழ்ச்சிகள் விதவிதமாக வந்துக்கிட்டிருக்கும் நிலையில் வாரத்தில் முதல் மற்றும் மூன்றா வது, குறிப்பிட்ட மாதத்தில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 12.05 மணியிலிருந்து 1 மணி வரை நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு வார இடைவெளியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போதும் பல நாடுகளில் உள்ள நேயர்களை நிறையவே ஈர்த்துள்ளது.

* ஒரு கேள்விக்கு பல பதில்களை தேடி சொல்வதில் சிரமம் ஏதும்...?

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிற நேயர்கள் அவுங்களுக்கு பதில் தெரியாவிட்டால் எங்களிடமிருந்து தெரிஞ்சுக்க ஆசைப்படறாங்க. தெரிஞ்சவங்க அவுங்களுக்கு தெரிஞ்ச பொருத்தமான பல பதில் களையும் சொல்றாங்க. இதனால கேள்விகளுக்கு பதிலை பல இடங்களிலும்,பல துறைகளிலும் தொடர்புடைய புத்தகங்களை தேடி, தேடி படிக்க வேண்டியிருக்கு. படித்த விஷயங்களை நேயர்களிடம் கொண்டு செல்ல "கேள்விபதில்' குறித்து ஆராய்ச்சியே நடத்த வேண்டியிருக்கு.

* இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்து நேயர்களின் கருத்து?

"டிவி'யில வர்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகையில ரசிகர்கள் இருப்பாங்க. சில நிகழ்ச்சிகளை குடும்பத்தில இருக்கிறவங்க ஒன்றாக பார்க்க தயங்க வேண்டியிருக்கும். எங்கள் நிகழ்ச்சி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள்னு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து ஆர்வமாக பார்க்கிறாங்க. ஒருத்தருக்கு பதில் தெரியாவிட்டால் மற்றவங்க கண்டுபிடிச்சு சொல்றாங்க. வெளியில உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டும் எப்படியாவது பதிலை சொல்லிடணுங்கிற ஆசையும், ஈர்ப்பும் அவுங்களுக்கு இருக்கு. "ஆறிலிருந்து அறுபது வயது வரை' என குடும்பத்திலுள்ள எல்லாரையும்இழுக்கிற "பேமிலி ஷோ'வுனு இந்நிகழ்ச்சியை சொல்வேன்.

* உங்கள் பதிலுக்கு எதிராக விவாதம் நடத்தும் நேயர்கள் பற்றி?

கெட்டிக்கார நேயர்கள் எங்களுக்கு நிறைய பேர் உள்ளனர். சில நேரம் நாங்கள் சொல்லும் பதிலும் அவர்கள் சொல்லும் மற்றொரு பதிலும் சரியானதாக இருக்கும். நாங்கள் எங்கள் பதில் எதிலிருந்து பெறப்பட்டது. அதன் முக்கியத்துவம் என்ன, எந்தவகையில் இதை கையாளப்பட்டது என்று விரிவாக விளக்கம் சொல்லி அவர்களை திருப்திபடுத்த வேண்டியிருக்கு.

* நெகிழ்ந்து போன சம்பவம் ஏதும்?

"பிளஸ் 2" படிக்கும் ஒரு மாணவ நேயர் கடிதத்தில் சொல்லும் போது, "தேர்வுக்கு படிப்பதால "டிவி' பார்க்கக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்காங்க. ஆனா "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியை மட்டும் பாத்துக்கலாம்ன்னு அனுமதிச்சிருக்காங்கன்னு எழுதியிருந்தான். குழந்தைகளையும், பெற்றோர்களையும் இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. ரீடெலிகாஸ்ட் புதன்கிழமைகளில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை பார்க்கலாம். குவிஸ் போட்டி மட்டும் இருக்காது.

* வேறு "டிவி'க்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் எண்ணம் ஏதும்?

"சம்பாதிக்கணுங்கிறது மட்டுமே எனது நோக்கமில்லை. சமுதாயத்திற்கும் என்னால முடிந்த நல்ல விஷயங்களை செய்யணும்கிற ஆர்வத்தில இதில ஒர்க் பண்ணிட்டிருக்கேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சியைவிட மக்களுக்கு ஏதாவது வகையில பயனுள்ள தரமான நிகழ்ச்சின்னா ஏத்துக்கிட்டு ஒர்க் பண்ணலாம், என்று சொன்ன சுதாகணேசன் அடுத்த "எபிசோட்'டுக்கு கேள்விகள் தயாரிக்கும் பணிக்காக புறப்பட்டார்.

R.Latha
10th November 2008, 02:35 PM
01.11.08 விருந்தினர் பக்கம் (நடிகை தேவயானி)

நீங்கள் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சி?

வாக்கிங்.

எந்த நேரத்தில்?

மார்னிங்கில்

பிடித்த ஹெல்த் ஃபுட்?

வெஜிடேரியன் ஃபுட்

பிடித்த ஹெல்த் ஃபுரூட்?

ஆப்பிள்

ரிலாக்ஸேஷன்?

குழந்தைகளைப் பார்த்துக்கறதே எனக்குப் பெரிய ரிலாக்ஸேஷனா இருக்கு.

ஹெல்த் அட்வைஸ்?

சிரிச்சுட்டே இருக்கணும். ழிஷீஸீளிவீறீ திஷீஷீபீ, ணிஜ்மீக்ஷீநீவீsமீ.. :P

aanaa
10th November 2008, 09:48 PM
சிரிச்சுட்டே இருக்கணும். ழிஷீஸீளிவீறீ திஷீஷீபீ, ணிஜ்மீக்ஷீநீவீsமீ.. :P
:lol:

aanaa
17th November 2008, 07:26 AM
Name: Chetan
Sex: Male
DoB : 30/09/1970
Marital Status: Married
City: Chennai
State: Tamilnadu
Country: India
Educational Qualification: BBM
Weight: 70
Height Feet: 5
Height Inches: 6
Eye Colour: Brown
Hair Colour: Black
Skin Colour: Brown
Languages Known: Tamil, Kannada, Telugu, Hindi ,English.
Experience : YES
Films : 8 films in kannada
Album : sang for a film in kannda and also for a serial in tamil

Television : 25 serials in tamil
i am an actor who has done around 8 films in kannada and more than 25 tv serials in tamil.i got my first big break in the superhit serial 'marmadesam',directed by naga and produced by minbimbangal.After this,i worked with all the leading directors, like c.j.baskar, sundar.k.vijayan, thirumurugan to name a few.Right now, i am doing the main roles in 'metti oli' and 'aadugiran kannan'.i am looking at the poosibilities of doing some good roles in films aswell. i am really looking forward to do roles differently. Right from the time i started acting,i also started working as an assistant director. i have worked in several films and serials. I have also directed some tele films in kannada.In tamil, i hav dircted some epiusodes of 'veettukku veedu looty' for minbimbangal.I am working on some film scripts right now and would like to direct them.I am also a singer who has sung for music director hamsalekha in kannada for a film and title songs for several serials in kannada and one in tamil.
Interested to become an : ACTOR

aanaa
17th November 2008, 07:49 PM
நாகரீக பெண்களுக்கு நித்யா அட்வைஸ்



எதிலும் கவனமா நடந்துக்கணும் : நாகரீக பெண்களுக்கு நித்யா அட்வைஸ்

"எந்தவொரு விஷயத்திலும் கவனமா நடந்துக்க வேண்டும் என்று நாகரிக பெண்களுக்கான அட்வைஸ்களை அள்ளிவிட்டார் நடிகை நித்யா ரவீந்தர். விளையாட்டு வீரர் சந்திரசேகரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஜெயா "டிவி'க்காக "சந்திரா' சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடித்துக் கொண்டிருந்த நித்யாவை "பேட்டி'க்காக சந்தித்த போது தான் இப்படி பதிலை அள்ளிவிட்டார். நித்யா ரவீந்தரின் பேட்டி:



டிவியால் வன்முறை அதிகரித்துள்ளது என்று அமெரிக்க புள்ளி விவரம் சொல்கிறதே?

எதில கெடுதல் இல்லை; கம்ப்யூட்டர் இருக்கு, மொபைல் போன் இருக்கு. இவைகள்ல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் போன்ல பேசுவதைவிட மெசேஜ் செலவு கம்மிதான். இப்படி வசதி இருந்தும் மணிக் கணக்கில் தேவையில்லாம கடலை போடுவதால அதிகம் செலவு செய்றவங்களும் இருக்காங்க. உலகப் பொருளாதாரத்தின் மேன்மைக்கு இன்டர்நெட் தொடர்பும் ஒரு காரணம்ன்னு சொல்றாங்க. இதுல கெடுதலும் இல்லாமலில்லை. நல்ல நோக்கத்திலதான் புதிய கண்டுபிடிப்புகளும், வசதிகளும் மேம்படுத் தப்பட்டு வர்றப்ப, என்ன நோக்கத்திற்காக இவைகள் உருவாக்கப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தினால் நல்லதே நடக்கும். அதைவிட்டுட்டு தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்தினால் சிக்கல் வரத்தானே செய்யும். .

* நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள், தற்போது சினிமா பக்கம் காணவில்லையே?

சீரியல்களில் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்கள் பண்ணிட்டிருக்கேன். சீரியலில் உள்ளதைப் போல சினிமாவுல அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களுக்கு பெரிய முக் கியத்துவம் இல்லை. சீரியல்களில் எப்படி நடிக்கணும்ன்னு நினைக்கிறாமோ அப்படியே நடிக்க முடிகிறது. "சந்திரா, வசந்தம், செந்தூரப் பூவே, திருப்பாவை, நாகவள்ளி,' என சீரியல்களில் மாதம் முப்பது நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். இதில பிசியாக இருக்கும் போது இதை விட்டுட்டு சினிமாவுக்கு போக நினைக்கலை. இருக்கிறதை விட் டுட்டு பறக்கிறதை பிடிக்க நினைப்பதைவிட இருப்பதை நல்லபடியா பயன்படுத்திக்கிட்டா போதும்ன்னு இருக்கேன். எனக்கு திருப்தியா பிடித்த கேரக்டர் சினிமாவில் நடிப் பேன்.

* தெய்வ பக்தி நிறையவாமே?

தெய்வ நம்பிக்கை எனக்கிருக்கு. எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் நம்மால எதுவும் செய்ய முடியாது. அந்த ஆண்டவனோட உதவியும் இருக்கு. நல்லது செய்யணும்ன்னுங்கிற எல்லா மனுஷங்களுக்கும் தெய்வ நம்பிக்கை நிறையவே இருக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லா கோவில்களுக்கும் போவேன். நாம செய்ற விஷயங்கள் நல்லதா, கெட்டதா, பலன் என்ன, இதனால நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் நன்மை என்ன இப்படி பல விஷயங்களை அசைபோட்டு பார்த்து நல்லதுன்னு படுகிற விஷயத்தை தயக்கமில்லாம செஞ்சிடலாம்ன்னு முடிவுக்கு வருவதற்கு மனசு நல்லபடியா ரிலாக்ஸா இருக்கணும். கோவில்களுக்கு செல்லும்போது இந்த ரிலாக்ஸ் கிடைக்கிறது.

* நாகரீகம் பேர்ல ஏடாகூடமான டிரஸ்களை போடும் ஆர்வம் பெண்களிடம் அதிகரித்து வருகிறதே?

"நாகரீகத்தை பாலோ பண்றதில தவறில்லை. அவுங்களோட நாகரிகப் போக்கு மற்றவர்கள் பார்த்து முகம் சுளிக்கும் நிலையாகிவிடக் கூடாது. பிள்ளைங்களின் டிரஸ் விஷயத்தில பெற்றோர் தேவையானவைகளை அவுங்களுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைக்கணும். பெற்றோர் பிள்ளைங்களை எவ்வளவு சுதந்திரமா வளர்க்கிறாங்களோ அந்த நம்பிக்கைக்கு பாதகமா பிள்ளைங்க நடந்துக்கக் கூடாது. மனுஷங்களுக்கு எதையும் பகுத்துணரும் அறிவு இருக்கு. பாலும், தண்ணீரும் கலந்திருந்தபோதிலும் பாலைமட்டும் பிரித்தெடுக்கும் அன்னப் பறவையை போல எதிலும் கவனமா நடந்துக்கணும். அவசரப்பட்டு எடுக்கிற முடிவைவிட யோசித்து எடுக்கிற முடிவுக்கு பலம் அதிகம், பயனும் அதிகம்.

* பெண்கள் சாதிப்பதற்கு ஊக்குவிப்புகள் பற்றி?

பெண்கள் படிக்கிறபோது பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியம். உலக நடப்புகளை அவுங்களுக்கு தெளிவா புரியவைக்கணும். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போது அங்கு கணவரும், குடும்பத்தினரும் பெண்ணோட நல்ல செயல்களுக்கு சப்போர்ட் செய்றவங்களாக இருந்தால் நிச்சயம் அந்த பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காது. கணவர், மனைவிக்கு உரிய சுதந்திரம் கொடுக்கணும். பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் நல்ல சப்போர்ட் கிடைச்ச நிறைய பெண்கள் பல துறைகள்ல சாதிச்சிட்டிருக்காங்கன்னு சொல்லிக் கொண்டிருந்த நித்யாவை டைரக்டர் அடுத்த சீனில் நடிக்க அழைக்க, பறந்தார்..


* நெகிழ்ந்து போன சம்பவம் ஏதும்?

"பிளஸ் 2" படிக்கும் ஒரு மாணவ நேயர் கடிதத்தில் சொல்லும் போது, "தேர்வுக்கு படிப்பதால "டிவி' பார்க்கக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்காங்க. ஆனா "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியை மட்டும் பாத்துக்கலாம்ன்னு அனுமதிச்சிருக்காங்கன்னு எழுதியிருந்தான். குழந்தைகளையும், பெற்றோர்களையும் இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. ரீடெலிகாஸ்ட்

aanaa
26th December 2008, 09:48 PM
சினிமாவுக்கு சீரியல் ஆர்வம் -"ரம்யா


விஜய் டி.வி.யின் "மதுரை' சீரியலில் நடித்து வரும் நடிகை "ரம்யா'வை சந்தித்த போது கூறியதாவது:

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக விஜய் டி.வி.யின் "காதல் கதை' என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலின் இயக்குநர் எ.பி. ராஜேந்திரன் மூலம் சுறுசுறுப்பான கிராமத்து பெண் கேரக்டர் கிடைத்தது. குறும்புத்தனமான அந்த நடிப்பு எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போது விருப்பமில்லை. "காதல் கதை' சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நிறைய வாய்ப்புகள் வந்தன. "நிம்மதி', "கௌரவம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தேன். அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது "சதிலீலாவதி', "மதுரை' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். இரண்டு சீரியல்களுமே மக்களிடம் நல்ல பெயரை எடுத்திருக்கிறது.

"மதுரை' சீரியலிலும் தண்டல் தாமரை என்ற சுறுசுறுப்பான கிராமத்து பெண்ணாக வருகிறேன். என்னவோ தெரியவில்லை எனக்கு அமைகின்ற கேரக்டர்கள் எல்லாமே கிராமத்தை மையமாக வைத்தே வருகின்றன. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமையப் பெற்றதால் சுலபமாக மாறிவிட்டது.

சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வரவில்லை, நானும் தேடி போகவில்லை. சினிமாவைப் பொறுத்த வரை புடவை மட்டுமே கட்டி நடிக்கும் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். மற்றபடி சினிமாவில் பெரிய அளவிலான ஆசைகள் எதுவும் இல்லை.

சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு யாருமே ஆர்வமாக போவதில்லை.

தற்போது சூரியன் எஃப்.எம். விளம்பரத்தில் நடித்தது மறக்க முடியாததாகும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறேன்.

aanaa
26th December 2008, 09:50 PM
"சீரியல்... ஒரு ஆலமரம்!' - "சாய் பிரசாந்தை'


கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "கோகுலத்தில் சீதை' தொடரில் "ஹரி' கேரக்டரில் நடித்து வரும் "சாய் பிரசாந்தை' சந்தித்த போது அவர் கூறியது:

பிறந்தது பெங்களுர். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயதில் இருந்தே சினிமாதான் என் கனவு. அதற்காக படிப்பு உள்பட நிறைய இழந்திருக்கிறேன். தூக்கத்தில் எழுப்பி எந்த கேரக்டரில் நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன். சில முக்கியமான தருணங்களில் நான் சுயமாக எடுத்த முடிவுகளே என்னை இது வரைக்கும் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த "பாரதி' படத்தில் சின்ன பாரதியாக நடித்ததுதான் என் பயணத்தின் முதல் படி. முதல் படியே ஒரு முண்டாசுக் கவிஞனின் கேரக்டரை ஏற்றது ரொம்ப பெருமையாக இருந்தது. அதன் பிறகு "வீட்டுக்கு வீடு லூட்டி', "வித்யா', "அண்ணாமலை', "செல்வி', "அரசி', சன் மியூசிக் காம்பியரிங், இசையருவி காம்பியரிங் என பயணம் போய் கொண்டே இருக்கிறது.

தற்போது கலைஞர் டி.வி.யில் "கோகுலத்தில் சீதை', சன் டி.வி.யில் "கலசம்' ஆகிய தொடர்களிலும், சுந்தர்.சி.யின் "ஐந்தாம் படை' படத்திலும் நடித்து வருகிறேன்.

சீரியல், சினிமா என இருவேறு உலகத்தில் பயணிப்பது கஷ்டமாகதான் உள்ளது. சினிமாதான் என் உலகம் எனக் கருதி வந்த எனக்கு சீரியல் ஒரு ஆலமர நிழலாக உள்ளது. சினிமாவை நோக்கி மட்டும் பயணம் செய்து தோற்றுப் போன நிறைய இளைஞர்களின் கதை இங்கு உண்டு. சினிமாவில் உச்சாணிக் கொம்பில் இருந்தவர்கள் சீரியலுக்கு வந்த கதையும் இங்கு உண்டு. சினிமாவாக இருந்தாலும், சீரியலாக இருந்தாலும் மக்கள் ரசிக்கும் தரத்தை கொடுக்கவேண்டும்.

சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் போது சினிமாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் சினிமாவில் சாதித்து விட்டேன் என பேட்டி கொடுப்பவர்கள் இனி யாருமே இருக்கமாட்டர்கள். ஏனென்றால் இப்போது காலம் மாறி விட்டது. சினிமாவாக இருந்தாலும், சீரியலாக இருந்தாலும் எல்லாம் தெரிந்தால்தான் நடிக்க போகலாம். நடிகருக்காக சினிமா மாற்றப்பட்ட காலம் போய் சினிமாவுக்காக நடிகர் மாற்றப்படுகிற காலம் இது. இப்போது சினிமாவில் ஜெயிப்பதற்கு நிறைய திறமைகள் வேண்டும். திறமை இல்லாதவர்களை மக்கள் விரைவில் ஓரம் கட்டி விடுவார்கள் என்றார் "சாய்பிரசாந்த்'.

aanaa
26th December 2008, 09:52 PM
[tscii:b17d057c1f]
Grill Mill -- Aishwarya



Do you remember your original name?

How can I forget my original name — Santha Meena? Aishwarya is my screen name. However, both were selected by my mother, to whom I’ve given a lot of trouble. I now want her to be happy because of me. That’s why I focus all my energy on work, try to be less aggressive and share my love with relatives and friends who call me ‘Ammu’. For me, Aishwarya is an artist. But Santha Meena is an ordinary person with a big family behind her.
Your role in Abhiyum Naanum is different from what you have done so far.

The whole credit goes to director Radha Mohan who has handled the film in a mature way. I’m a director’s actor. Abhiyum Naanum proves that.
Were you happy to play Trisha’s mother?

Why not? The only request I placed before the director was I would not grey my hair. In fact, I was not approached for the role in the first instance. It went to another actor who turned it down. My grandmother who watched Mozhi told me that I must do a film with such a director. It so happened that I got a call from Prakash Raj only after her death. He wanted me to do the role in their forthcoming film directed by Radha Mohan. I immediately said yes. I also met the actor who refused the role and thanked her for doing so.
Are you happy on the home front?

I am content with what is happening on the home front. I’m staying with my mother and I’m in touch with my relatives. I want my daughter to be a balanced person. I’m happy to see that she is enjoying life

[/tscii:b17d057c1f]

R.Latha
5th January 2009, 12:25 PM
01-01-09 விருந்தினர் பக்கம் (தேவதர்ஷினி)

நீங்கள் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சி என்ன?

யோகாதான் நான் விரும்பி பண்றேன். டைம் கிடைக்கும் போது நடக்கிறேன்.
எந்த நேரத்தில்?

மார்னிங்லதான்.

பிடித்த ஹெல்த் ஃபுட்?

எல்லா ஃபுட்டும் விரும்பிச் சாப்பிடுவேன்.

பிடித்த ஹெல்த் ஃபுரூட்?

வாழைப்பழம்.

ரிலாக்ஸேஷன்?

பாப்பாவைப் பார்த்துக்கறதுதான் என்னை மாதிரி அம்மாக்களுக்கு ரிலாக்ஸேஷனே.

ஹெல்த் அட்வைஸ்?

டயட்டை நானும் பண்றேன் பேர்வழின்னு சாப்பிடறதைக் குறைக்கக்கூடாது. நாற்பது வயசுக்கு மேல டயட்டை தவிர்க்கலாம். மற்றபடி தேவையான அளவு சாப்பிடுங்க. யோகா பண்ணுங்க.


http://www.kumudam.com/magazine/Health/2009-01-01/pg4.php

aanaa
10th January 2009, 08:59 AM
[tscii:5282194662] Grill mill - Saranya


You were a heroine but have suddenly started donning the roles of mother and sister?

I was the heroine in Nayagan. After that I did a few films and got married. I couldn’t pursue acting for nearly five years, as my children needed me. When they were big enough to take care of themselves, I made a comeback. Being a mother, I’m able to relate to the character I portray now.
Are you happy with the roles you are getting now?

I’m more than happy as I have got name and fame. I’m enjoying every minute of my life now.
These days, you’re not seen on the small screen…

I don’t have the time for television now. The big screen takes up nearly 20 days of my time in a month. If I were to take up projects on television, I don’t think I would be able to see my children at all.
Have you achieved what you wanted?

I have got more than what I wanted in a short span. In fact, I never thought I would get such a reception in the industry. And all this has been possible because of my directors and co-artists. My husband, children and family are proud of me. When I was a heroine I got an invitation just to attend a big function. But I got two awards from the same organisation a few years ago. I think it’s an achievement.


.hindu.- /2009/01/09
[/tscii:5282194662]

aanaa
10th January 2009, 09:00 AM
[tscii:72d87f5663] My first break



A. R. Srinivasan

How it happened

My baptism as an actor took place in YGP’s “United Amateur Artistes”. I did major roles in his stage plays which were witnessed by stage and cinema stalwarts such as MGR, Sivaji, Gemini Ganesh, Savithri, A. P. Nagarajan and T. K. Shanmugam. Once director Sridhar, who presided over the jubilee function of our play “Under Secretary” liked my performance and called me to play the heroine’s young father in his film “Oh! Manju”. Thus began my stint in cinema. The role brought me laurels with one critic even comparing me with a Hollywood performer! All this was exhilarating, but the movie flopped.
How it felt

However, it did not prevent offers coming my way to play the rich father’s role. “Chittukkuruvi” and Uchakattam were the two movies that shifted me from the role of father to that of a police officer. The crowning moment was when I played the cop in Nayagan. After this I thought it best to stop wearing khakhi. There were instances when I was mistaken for a real cop during outdoor shoots, which in a way helped control the crowd. Being an executive in a company, I had to do a balancing act which was at times difficult. I was lucky to have worked with great directors such as Sridhar, Mani Ratnam, Bharathiraja and A.C. Trilokchander and to share the frame with such luminaries as Sivaji Ganesan, Rajnikant and Kamal Hassan.
How life changed

It was inevitable that I was drawn into theatre, cinema and television. It was a happy moment when two plays I’d directed, “Kannan Vandhan” for UAA and “Mezhugu Bommaigal” for Vani Kala Mandhir, were made into successful movies, Gowravam and Pilot Premnath, featuring Sivaji in the roles done by me in the plays. Another important event was my participation, with YGP and YGee. Mahendra, in a skit on the inaugural telecast of Madras Doordarshan on August 15, 1975. All these fetched me awards and titles.

hindu-/2009/01/09[/tscii:72d87f5663]

aanaa
10th January 2009, 09:03 AM
[tscii:91543ed433] Two worlds, one goal

Sithara, who’s making a mark in two Tamil soaps hopes to do many films too this year



working on her own terms Sithara

The slight Malayalam twang notwithstanding, Sithara sounds comfortable in Tamil. “I’ve always been,” laughs the actor who is making quite an impression in lead roles on the small screen. “I’m doing just two — ̵ 6;Parasakti’ on Raj and ‘Kavari Maangal’ on Jaya,” she clarifies. Though Sithara prefers to work in one mega at a time so as to avoid too much exposure, she was so taken in by her character in ‘Kavari Maangal’ that she decided to go ahead with it, despite being committed to ‘Parasakti’ which had already taken off then. “Rajapandian, the director of ‘Parasakti,’ has worked under Mani Ratnam and I’m happy with the way the serial is shaping up,” she informs.

She also finds the involvement with which Prabhu Nepal directs her for ‘Kavari Maangal’ “amazing.” Says Sithara, “It has the right tempo and my character is of a woman for whom self-respect is everything. I love the role.”

Not so long ago, actors who accepted television assignments, would forget their big screen aspirations. The mindset is changing now. “Acting is my profession. The size of the screen hardly matters to me,” Sithara contends. She is now working in the Tamil film, Sarithiram, opposite Raj Kiran.

The last you saw her on the big screen was in Padaiyappa, in a character role! Natpukkaaga with Saratkumar was another. “Who would miss the chance to work in a Rajini film?” she laughs. So where was she all these days? The heroine who began straight at the summit with K. Balachander’s Pudhu Pudhu Arthangal and went on to do the super hit film, Pudhu Vasantham, with Murali, seemed to have vanished from the Tamil scene! “I was very much around,” she smiles. “Only that I was doing a lot of films in Telugu and Kannada. In fact, for five years at a stretch I was working only in Kannada films with nearly all the heroes — Anant Nag, Sashi Kumar, Vishnuvardhan … That could be a reason,” she ponders.
On familiar ground

Television isn’t a new medium to Sithara. Her first soap was Abavaanan’s ‘Ganga Yamuna Saraswathi,’ after which came the AVM production, ‘Aarthi.’ That television gave her even more recognition among the masses came as a surprise to Sithara. Today she straddles both mediums. How does she manage? “In a month I allot five days each for the two soaps. So it isn’t all that tough.”

It was quite by accident that the dancing beauty entered cinema. When the school goer and student of Mohiniyattom from the Noopura School in Trivandrum was asked to play a role in the Malayalam film, Kaveri, Sithara’s orthodox family put its foot down. It took a lot of convincing from the dance school, before her father gave the nod. Mammootty, Mohanlal and Nedumudi Venu were her co-actors. Even before she finished her first film, G. Aravindan’s Oridathu with Vineet came her way, after which it was a spate of movies with imposing names such as Joshi, Priyadarshan, Sathyan Anthikad and Bharathan. “Looking back, my debuts in all the languages have been extraordinary,” she says.

Balachander brought her to Tamil with the super hit, Pudhu Pudhu Arthangal. As most of the unit hands she worked with in Malayalam spoke Tamil, Sithara picked up the language in no time. Mouli’s Manasu Mamatha marked her Telugu entry. Then came Suresh Krissna’s Vasundhara for Usha Kiran Movies. The makers who are active on the small screen too, offered her “beautiful characters” in their Telugu serials. Thus the transition to TV was alluring enough.

“You have to work harder for the small screen, in the sense unlike in cinema about six to seven scenes are canned in a day. That’s the only difference I feel,” she says. Is she planning marriage in the New Year? “If I meet Mr. Right, I could get married tomorrow,” she laughs. “Meanwhile I hope to do more films in Tamil this year.”

hindu- /2009/01/09[/tscii:91543ed433]

aanaa
10th January 2009, 09:04 AM
[tscii:a9161d9da8] Celebrating Kurinji, Mullai, Marudham, Neidhal

(Makkal TV, Tuesday to Friday, 9 p.m.)

In Tamil culture, land is divided into four categories, based on the nature of each terrain. They form the backdrop of the four-day Pongal programme in which college students showcase their skills, with an accent on the lifestyle of people in each category.


hindu.- 2009/01/09[/tscii:a9161d9da8]

aanaa
10th January 2009, 09:06 AM
Pudhiya Konangigal

(Makkal TV, Tuesday to Friday, 10.30 p.m.)

For four days at a stretch, the channel assures 96 hours of continuous viewing. This programme, which concentrates on comedy, will dwell on the present day life of the people living in the divisions mentioned above. Instead of the usual timings, Pragadeeswaran and Senthil will entertain viewers late in the evening, with their humorous songs.

aanaa
10th January 2009, 09:06 AM
Makkal Virudhu 2008

(Makkal TV, Wednesday, 6.03 p.m.)

The channel honours 31 achievers in the field of literature, music and theatre, besides those in medicine, agriculture, environment, sports and science, in the year gone by. Though this will be the first time Makkal Awards are presented, it is being envisaged as an annual Pongal event.

aanaa
10th January 2009, 09:06 AM
[tscii:1e332456df]
Mallukattu

(Makkal TV, Wednesday, 7 p.m.)

If the intriguing title of the show brings to mind the well-known ‘jallikattu’ of the South, you aren’t off the mark. Just like the formidable bulls in ‘jallikattu,’ young, robust men will appear on imposing sets for a display of a variety of talent.
[/tscii:1e332456df]

aanaa
10th January 2009, 09:06 AM
[tscii:126d42c602]
Thamizh Pechu Engal Muchu

(Vijay TV, Sunday, 9 a.m.)

The search for the best Thamizh orator in Tamil Nadu has ended. Vijayan from Thanjavur has emerged winner. An intensive search was conducted across the State in cities including Salem, Coimbatore, Madurai, Tiruchi, Tirunelveli and Chennai. Innovative rounds were conducted such as ‘Kaaviya Surukkum’, ‘Vaadham Vivadam’ and ‘Vannangalum Varnanaigalum.’ The grand finale was held at Anna Kalaiarangam on December 20, 2008, where many literary icons and academicians participated.
[/tscii:126d42c602]

aanaa
10th January 2009, 09:07 AM
[tscii:6c40728b65]
Lyricist Snehan introduced the three finalists — Vijayan, Arul Prakash and Abirami. The final performance was staged in front of a live audience. The three finalists had to speak on ‘Thamizhan.netru, indru, naalai’. The special guest, Nakkeeran Gopal and the audience chose Vijayan and Arul Prakash as the top two. In the final round, the two had to talk on ‘Naadu Engae Pogiradhu?’ This time, the voting was by Tamil scholars and the audiences. After a tie, Vijayan was declared winner and takes home the prize money of Rs. 5 lakh.[/tscii:6c40728b65]

aanaa
10th January 2009, 09:07 AM
[tscii:642e84dea3]
Pongal Special

(Vijay TV, Wednesday and Thursday)

Vijay has lined up special programmes on January 14 and 15. January 14: At 7.30 a.m., it is ‘Sivakumarin diary’ where the actor takes a trip down memory lane. At 9 a.m., in a special episode of ‘Koffee with Anu Season 2’, Anu chats with veteran director Bharathiraja. At 10 a.m., Vijay and the crew share their views on ‘Villu.’ At 12 noon, in ‘Nayanmigu Nayantara’, the actor speaks about her films and friends. At 1 p.m. in ‘Cheranin Pokkisham’, Cheran dons the role of anchor and gets celebrities including Sivakumar, Satyaraj and Kanimozhi to share the one thing they treasure the most. At 2 p.m., watch ‘The Transporter’ dubbed in Tamil. At 5.30 p.m., a curtain-raiser of ‘Nandalala,’ a film by Mysskin, will be presented.
[/tscii:642e84dea3]

aanaa
10th January 2009, 09:07 AM
[tscii:dcbd6e64f5]
January 15: At 8 a.m., watch Premier Sirappu Pattimandram with Leoni as the judge. The topic of debate is ‘What fuels society’s growth — traditional values or modernism?’ At 9 a.m. is ‘Neeya Naana’ where a debate on urban-rural divide will be conducted and moderated by Gopinath. At 10 a.m. ‘Vivel Azaghiya Cinderella’ will feature Trisha. At 1 p.m., do not miss ‘Smiley Sneha’, where the actor will participate in adventure sports such as rifle shooting and scuba diving. At 1.30 p.m., in ‘Darling Darling Divya,’ Divya Spandana shares her personal photo album with viewers. Get to know more about Arya at 2 p.m. on ‘Naan Arya’, where he speaks about his upcoming project ‘Naan Kadavul’.
At 3 p.m. it is ‘Chennai Virundhu’, a three-day festival, where all the stars from the small screen will perform under one roof. Watch curtain-raisers of ‘TAXI 4777’ and ‘Villu’ at 6 p.m. and 6.30 p.m. respectively.
[/tscii:dcbd6e64f5]

R.Latha
20th January 2009, 02:02 PM
ஜெயா டி.வி.யின் "காலை வணக்கம்', "கோலிவுட் டைரி' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் "சித்ராவை' சந்தித்தபோது கூறியதாவது:

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தற்போது சென்னை வைஷ்ணவா கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். என் அக்கா வைஷ்ணவிதான் முதன் முதலில் ஜெயா டி.வி.யில் காம்பியராக இருந்தாள். அப்போது நான் அவளுடன் ஸ்டுடியோவிற்கு செல்வேன். அப்போது அங்குள்ளவர்களிடம் நிறைய பேசுவேன். என்னை பார்த்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உன் அக்காளுடன் சேர்ந்து நீயும் காம்பியரிங் செய்தால் நன்றாக இருக்குமே என சொன்னார்கள்.

அதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. பின்பு அக்கா மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிடவே அக்கா இடத்துக்கு நான் போய்விட்டேன். அக்கா காம்பியரிங் செய்த போது பார்த்தவை இப்போது பயன்படுகிறது. அவ்வவளவுதான் நான் காம்பியர் ஆன கதை. மற்றபடி காம்பியர் ஆவதற்கு எந்த விதமான முயற்சிகளையும் நான் எடுத்ததில்லை.

தற்போது ஜெயா டி.வி.யில் "காலை வணக்கம்', "கோலிவுட் டைரி' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கல்லூரி இல்லாத நேரங்களில் மட்டுமே ஸ்டுடியோவிற்கு போவேன். மற்ற நேரங்களில் படிப்புதான்.

சின்ன வயதில் இருந்த ஐ.டி. துறையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.

மற்றபடி காம்பியருக்கு பிறகு சீரியல் அப்புறம் சினிமா என எல்லோருக்கும் இருக்கிற ஆசைகள் எனக்குச் சுத்தமாக இல்லை. அதைப் பற்றி எதுவும் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை.

5 வருடங்களுக்கு பிறகு எதாவது ஒரு ஐ.டி. கம்பெனியில் நிச்சயமாக பெரிய பதவியில் இருப்பேன் அவ்வளவுதான் இப்போதைக்கு. கல்லூரி வாழ்க்கையை மட்டுமே சந்தோஷமாக அனுபவித்து வருகிறேன். நான் ஏற்கெனவே நடிகை ஷோபனாவிடம் 3 வருடங்களாக பரத நாட்டியம் கற்று வருகிறேன். ஷோபனாதான் என் பரத நாட்டிய குரு. தற்போது சென்னையில் உள்ள பிரபல நாட்டியப் பள்ளியில் நடனம் கற்று வருகிறேன் என்றார் சித்ரா

aanaa
8th February 2009, 08:18 PM
[tscii:b18179e10e]


தவிர்க்க முடியாமல் தவித்தேன்

ஜானவி

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள தெரு போன்ற செட்டில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜானவி. "என் மன வானிலே' படத்தில் "ரோட்டோர பாட்டுச் சத்தம் கேட்குதா....' பாடலுக்கு அழகாக நடனமாடியும், போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகானை அழவைக்கும்படியும் நடித்தவர் இவர். "அன்பு' படத்தில் ஹீரோயினாக நடித்தவர். "அது தீபுவாச்சே' என்று மிரட்டாதீர்கள். அவர்தான் இப்போது ஜானவி என்று பெயர் மாற்றியிருக்கிறார். நாம் ஜானவியிடம் பேசினோம்.

* "அன்பு' படம் வெளியான பிறகு அடுத்தடுத்து உங்களுக்கு பட வாய்ப்பு வராமல் போனது ஏன்?

இயக்குநர்கள் விரும்பினால்தான் படங்கள் வரும். எனக்கு இயல்பிலேயே ஹோம்லியான முகம் அமைந்துவிட்டதால் நான் குடும்பப் பாங்கான கேரக்டருக்குத்தான் ஒத்துவருவேன் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

ஆனால், தங்கை கேரக்டருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் ஒத்துக் கொள்ளவில்லை. நல்ல வாய்ப்புக்களை மட்டும் பயன்படுத்தி நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

* இப்போது என்னென்ன படங்கள் கைவசம்?

தெலுங்கில் ஈ.வி.வி. சத்தியநாராயணா டைரக்ஷனில் "எவ்ரி கோலா வாலூதே' என்ற படத்தில் ஹீரோயினா, ஆர்யன் ராஜேஷ் ஜோடியாக நடித்தேன். அந்தப் படம் அங்கே சில்வர் ஜூப்ளி.

அடுத்து கன்னடத்தில் முரளி ஹீரோவாக நடித்த "சித்து' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அது விரைவில் ரிலீஸôகவுள்ளது. அடுத்து சிவ்ராஜ் குமார் ஜோடியாக "அன்னாதங்கி' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படமும் விரைவில் ரிலீஸôக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் நான்தான் ஹீரோயின்.

தமிழில் "எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் "ஜெயம்'ரவியின் தங்கையாக நடித்தேன். இப்போது சேரன் ஸôர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கும் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தில் பரத்தை துரத்தித் துரத்திக் காதலிக்கும் சுட்டிப் பெண்ணாக நடித்து வருகிறேன். இதில் இன்னொரு நாயகி மல்லிகா.

அடுத்து, ஆர்.பி.செüத்ரி தயாரிப்பில் அவரது மகன் "ஜித்தன்' ரமேஷ் ஜோடியாக "மது' படத்தில் நடிக்கிறேன். அதில் இன்னொரு ஹீரோயினாக ப்ரியாமணி நடிக்கிறார்.

"மது' படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் முழுக்க காலேஜ் பெண்ணாக நடிக்கிறேன். தலைமுடி ஷார்ட்டா வைத்துக் கொண்டு, காலேஜையே கலக்கிக் கொண்டிருப்பேன். ஆனா செகண்ட் ஆஃப்ல நீண்ட தலைமுடி வைத்துக்கொண்டு குடும்பப் பாங்கான பெண்ணாக வருவேன்.

விவேக், ஹீரோ பரத் இருவருடனும் இணைந்து பர்ஃபாமன்ஸ் பண்ணக்கூடிய நல்ல கேரக்டர் அமைஞ்சிருக்கு. இளையராஜா ஸôர் இசையில் தென்னரசு டைரக்ட் பண்றார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம் எது முக்கியம்னு முடிவு பண்ணியிருக்கீங்க?

தமிழ் தான் முதல் சாய்ஸ். பிறகுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம்.

நல்ல கேரக்டர் வரணும். நல்ல பர்ஃபாமன்ஸ் செய்து எனது திறமைகளை வெளியே கொண்டு வரணும்னு ஆசை.

ஒரே நேரத்தில் இரண்டு வாய்ப்புகள் வந்து எதை ஒப்புக் கொள்வது என்ற குழப்பங்களும் வருகிறது. இப்படித்தான் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, கே.எஸ். ரவிகுமார் ஸôர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு அழைப்பு வந்தது. அதைத் தவிர்க்க முடியாமல் தவித்தேன்.

* மும்பை நடிகைகள் தாராளமாகக் கவர்ச்சி காட்டி நடிக்கும்போது நீங்கள் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு எப்படிக் களத்தில் நிற்கப் போகிறீர்கள்?

கவர்ச்சிங்கிறது நிரந்தரம் இல்லை. ஒருத்தரோட கவர்ச்சியை எத்தனைப் படங்களில் ரசிக்க முடியும்? அதனால் கவர்ச்சியால் மட்டும் ஜெயித்து விட முடியாது. திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.

சேலஞ்சிங்கான கேரக்டர் கிடைத்து, அவற்றில் நடித்து பேசப்படணும்னு ஆசையாய் இருக்கு. தமிழில் எனக்கான ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும். அந்த இடம் கிடைக்கும் வரை போராடுவேன்.

* ஏன் அடிக்கடி பெயர் மாற்றுகிறீர்கள்?

நான் அடிக்கடி பெயர் மாற்றவில்லை. வீட்டில் எனக்கு திவ்யலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். செல்லமாக தீபிகா என்று அழைத்தார்கள். ஆனால், "அன்பு' படத்தின் டைரக்டர் தீபு என்று மாற்றி வைத்தார். இப்போதுதான் ஜானவி என்று பெயர் மாற்றியிருக்கிறேன்.

என் அம்மா பெயர் ஜானகி என்று இருப்பதால் அதில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி ஜானவி என்று வைத்திருக்கிறேன்.

எனது பெரியம்மா விஜயலட்சுமிதான் எனக்கு சினிமாவில் வழிகாட்டியாகவும், கூடவே இருந்து உதவியும் வருகிறார்'' என்கிறார் திவ்யலட்சுமி.
[/tscii:b18179e10e]

aanaa
8th February 2009, 08:20 PM
'எவ்வளவு நாளைக்குத்தான் பாவாடை, தாவணி?'

சினேகா!

""எனக்கு நம்பர்-ஒன், நம்பர்-டூ என்று எண்களில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. உடையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து கவர்ச்சியைக் காட்டுபவர்கள்தான் "நம்பர்-ஒன்' என்று சொல்கிறார்கள்.

நான் அப்படி நடிக்க விரும்பவில்லை. குடும்பப் பாங்கான வேடங்களில், ஆபாசம் இல்லாத அழகான கிளாமர் வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' என்று எடுத்த எடுப்பிலேயே பேச ஆரம்பித்தார் சினேகா!

""அதனால்தான் "பவானி' படத்தில் ஆக்ஷன் கதாநாயகி வேடம் போட தயாராகி விட்டீர்களா?'' என்றதும், கலகலவென சிரிக்கிறார். பிறகு பேசும்போது, ""விஜயசாந்தி நடித்த "வைஜெயந்தி ஐபி.எஸ்.' படத்தை அப்படியே "பவானி'யாக எடுக்கவில்லை.

ஒரு சின்ன கருவை மட்டும்தான் அந்தப் படத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அதை வைத்து இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்த்திக்குமார்.

அது ஒரு ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம். இது வேறு ஸ்டைலில் இருக்கும். எவ்வளவு நாளைக்குத்தான் பாவாடை, தாவணியுடன் நடிப்பது? கொஞ்சம் மாறுதல் வேண்டாமா? அதற்காக "பவானி' படத்தில் வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

விஜயசாந்தி அரசியலில் குதித்தது போல நீங்களும் அரசியலில் குதிப்பீர்களா?''

இன்னும் ஐந்து வருஷம் நடிக்கலாம்னு இருக்கேன். அது என் விருப்பம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல்.
நடிகர்களில் சிரஞ்சீவியும், விஜயகாந்தும் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை வரவேற்க வேண்டியதுதான்.

உங்களது நிறைவேறாத ஆசை?

சென்ற என் பிறந்த நாள் அற்புதமான நாளாக அமைந்தது. அன்னைக்கு எனக்கு நிறைய நகைகளும், பரிசுப் பொருட்களும் கிடைத்தன. இருந்தாலும் நான் குறைவாகத்தான் ஆசைப்படுவேன். நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை.

நிறைய சம்பளம் கொடுத்தால் ஒரு பாட்டுக்கு ஆடுவீர்களா?

என் கொள்கைகளை நான் என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை. "ஒவ்வொரு பூக்களும்...' போன்ற பாடல் காட்சியாக இருந்தால் சம்மதிப்பேன். குத்துப் பாடலில் ஒருபோதும் ஆட மாட்டேன்.

அடிக்கடி கோயிலுக்குப் போகிறீர்களாமே? என்ன வேண்டுகிறீர்கள்?

வேண்டுதலை வெளியில் சொல்லக் கூடாது என்பார்கள். அப்படி சொன்னால் அந்த வேண்டுதல் நிறைவேறாதாம். பொதுவாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும், அவை நல்ல படங்களாக இருக்கவேண்டும். வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். விருதுகள் கிடைக்கிற மாதிரியான வேடங்கள் அமையவேண்டும் என்று ஆசைப்படுவேன். அது என் உள்மனசு எண்ணம்.

உங்கள் வருங்கால கணவர் சினிமாவை சேர்ந்தவராக இருப்பாரா?

தொழில் அதிபராக இருப்பார் என்று இப்போது சொல்லிவிட்டு பின்னர் சினிமாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நீங்கள் கேட்கமாட்டீர்களா? அதனால் இப்போதைக்கு என் திருமணத்தைப் பற்றி நான் எதையும் முடிவு செய்யவில்லை, சொல்லவும் விரும்பவில்லை.

பண்ருட்டியில் திருமண மண்டபம் கட்டியது போல் வேறு எங்கேயாவது திருமணம் மண்டபம் கட்டி வருகிறீர்களா?

அதை என் அப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.

இப்போது நடித்துவரும் படங்களைப் பற்றி கூறுங்கள்?

"அறுவடை', "பவானி', "சிலம்பாட்டம்', "முரட்டுக்காளை', வசந்த பாலனோட "அங்காடித் தெரு' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் "அங்காடித் தெரு'வில் கெஸ்ட் ரோல்தான் பண்றேன். அப்புறம் மூன்று படங்களில் நடிக்க பேசி வருகிறேன்'' என்றார்.

R.Latha
20th February 2009, 01:50 PM
விஜய் டி.வி.யின் அழகு தொகுப்பாளினி "ரம்யா'.


இயக்குநர் ஆவதே லட்சியம்'

தனக்கு இதுவரை வந்த காதல் கடிதங்களை சேர்த்து வைத்திருக்கிறார்; ஏன் என்று கேட்டால் நாளை எனக்கு வரும் கணவரிடம் காண்பிக்கதான் என்கிறார்

உலகத்திலேயே சென்னைதான் எனக்கு பிடித்த ஊர். ஏனென்றால் நான் பிறந்த இடமாயிற்றே. வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பியரிங்கில் ஆர்வம் வந்தது.

எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். எல்லோர் மாதிரியும் என்னையும் என்ஜினீயர், டாக்டர் ஆக்கி அழகு பார்க்க நினைத்தது என் குடும்பம். அதில் எல்லாம் மனது ஒட்டவே இல்லை. ஏதாவது வித்தியாசமாகச் சாதிக்க வேண்டும் என தோன்றியது. அதனால்தான் இந்த துறைக்கு வந்தேன்.

இதற்காக நிறைய இழந்திருக்கிறேன். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே. கல்லூரி காலத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.

சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால் இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும்.

காம்பியரிங் மூலமாக நிறைய சினிமா உலக நட்பு கிடைத்தது. அவர்களும் உதவி இயக்குனராக பணிபுரிய அழைக்கிறார்கள். காம்பியரிங்கில் சிக்கிக்கொண்டதால் என்னால் அங்கு எளிதாகப் போக முடியவில்லை. என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன்.

கமர்ஷியல் சினிமாக்கள்தான் இன்றைய சினிமா உலகத்தை ஆட்சி செய்கின்றன. எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பெண் இயக்குனர்கள் கூட உணர்வுப்பூர்வமான கதைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நிலையை நான் மாற்றுவேன்.

காம்பியரிங் ஆசையில் தினமும் புதியதாக நிறைய பேர் வருகிறார்கள். காம்பியரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பியரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்.

இதுவரைக்கும் நிறைய பேர் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் என்னை பாதிக்கவில்லை. இதுவரை எனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நாளை எனக்கு வரும் கணவரிடம் அவற்றைக் காண்பிப்பதற்காக... என்கிறார் குறும்புடன்
http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090212112857&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0

R.Latha
2nd March 2009, 02:56 PM
[tscii:efd1642545]நடிக்கும் உணர்வே இல்லாமல் நடிக்கிறோம்!

நடிகர் சேத்தன்

‘அத்திப்பூக்கள்' தொடரில் தனது ஆழமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதின் மூலம் பெண் ரசிகைகளின் பேராதரவிற்கு உரியவராகிவிட்டார் சேத்தன். அவரது பேச்சும், பார்வையும், நடிப்பும் ரசிகர்கள் மனதில் தேங்கிவிட்டது. அவரிடம் பேசவும், பாராட்டுக்களை பகிர்ந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அவரைப் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது ரசிகர்களின் ஆவலைச் சொன்னோம். அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்தது.

புன்னகை மாறாமல் நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள்...

டிவி மீடியாவில் நடித்து இவ்வளவு ரசிகைகளை எப்படி உங்களால் பெறமுடிந்தது?

டிவி எப்பவும் பெண்கள் மீடியம். அதில் நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும், பெண்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும். எனக்கு நடிப்பதற்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நானும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். நல்ல கேரக்டராக இருந்தாலும் சரி, நெகட்டிவ்வான கேரக்டராக இருந்தாலும் சரி. நமக்குக் கிடைக்கும் புகழ் எல்லாமே அந்த கேரக்டருக்குக் கிடைக்கும் மரியாதைதான்.

நிஜ வாழ்க்கையில் தம்பதியாக இருக்கும் நீங்களும் தேவதர்ஷினியும் சீரியலுக்காக ஒரு குழந்தையை இன்னொரு பெண்ணிடமிருந்து பெறும் காட்சியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

எல்லாருமே சென்டிமென்டுக்கு உட்பட்டவங்கதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பொதுவாகவே கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதனால அது இயற்கையாகவே வந்துடும். எங்களுக்குக் குழந்தைகள்னா இயல்பிலேயே ரொம்பப் பிடிக்கும். உயிர்னு வெச்சுக்குக்கங்களேன். அதனால் அந்தக் காட்சியில் நடிக்கும்போது உண்மையிலேயே உணர்வுபூர்வமா நடிச்சோம். எல்லாருக்கும் இருக்கிற ஏக்கம், ஆசைகளைத்தானே டைரக்டர் ஒரு காட்சியில் பயன்படுத்துவாங்க? அதனால் அந்தக் காட்சியில் நடிக்கிற உணர்வே எங்களுக்கு வரவில்லை.

குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே நடிப்பது ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா?

ப்ளஸ்தான். வெவ்வேறு தொடர்களில் நடித்தாலும் ஒரே தொடரில் நடித்தாலும் ப்ளஸ்தான். உழைப்புக்கு உழைப்பு. வருமானத்திற்கு வருமானம். ஒரே தொடரில் நடிக்கும் போது, அதிக நேரம் ஒன்றாக இருக்கிறோம். நிறைய விஷயங்களை பேசிக்க முடியும்.

‘அத்திப்பூக்கள்' தவிர வேறு சீரியலில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?

சினிமாவில் நடிக்கிறேன். இப்போது ‘பூக்கடை ரவி' என்ற படத்தில் என்-கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிச்சிருக்கேன். ‘முத்திரை' படத்தில் லீகல் அட்வைஸரா நடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. இப்போதைக்கு நிறைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

பிரேம்குமார் மாதிரி நீங்களும் சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்து விட்டீர்களா?

அப்படி முழுக்கு, முடிவுன்னு எல்லாம் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லக்கூடாது. ஆரம்பத்துலேர்ந்து இருக்கிற ஆசை சினிமா. அவ்வளவுதான். சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிஸியாகிவிட்டேன். அதனால் சினிமாவில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பத்து வருஷம் ஆகிவிட்டது. மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். ஏனென்றால் அதுதான் என்னுடைய கனவு!

அபிஷேக், ‘கதை' என்கிற படத்தை இயக்குகிறார். அதுபோல் நீங்கள் எப்போது இயக்குனராகப் போகிறீர்கள்?

கூடிய சீக்கிரம். அதுக்கான முயற்சியும் இருக்கு. யோசனைகளும் இருக்கு. நான் சின்னத் திரையிலிருந்து வருவதால் எப்படிப்பட்ட படத்தைத் தருவேன் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். நிச்சயமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத்தான் அது இருக்கும். ஆனால் வழக்கமான படமாக இருக்காது. தனியாகத் தெரியும் வகையில் இருக்கும்.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090219050449&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4
[/tscii:efd1642545]

R.Latha
2nd March 2009, 02:59 PM
[tscii:918fc8178a]‘சின்னச்சின்ன ஆசை' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆர்த்தி!

அடுத்தவர்களின் ஆசையை நிறை வேற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு அக்காவாக, அன்புத் தோழியாக, அம்மாவாக பரிணமிக்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் ‘சின்னச்சின்ன ஆசை' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆர்த்தி!

சலனப்படுத்தாத பேச்சு, துருதுரு செயல்பாடு, அழகான உச்சரிப்பு, எப்போதும் சிரித்த முகம். இவற்றுக்குச் சொந்தமான ஆர்த்தியிடம் பேசிய திலிருந்து...

சின்னத்திரையில் பிரவேசிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

நான் பாரதி கல்லூரியில் எம்.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது முழுக்கமுழுக்கத் தமிழில் தொகுத்து வழங்க தொகுப்பாளினி வேண்டும் என்ற மக்கள் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். என் திறமைகளுக்கு மதிப்பு அளித்து இந்த வாய்ப்பை அளித்தார்கள். ஆரம்பத்தில் படித்துக்கொண்டே தொகுத்து வழங்கி வந்த நான் தற்போது முழுநேர தொகுப்பாளினி.

சின்னச்சின்ன ஆசை நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் அனைத்திலும் உள்ள குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசையை, அவர்களை நேரில் சந்தித்துக் கேட்டு, அதனை நிறைவேற்றுவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதற்கு ஏராளமானோரின் ஆதரவும் அமோக வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இப்போது 50 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தினத்தன்று வெறும் அரை மணிநேர நிகழ்ச்சியாக நாங்கள் தயாரித்த போதிலும், பார்வையாளர்களின் அதிக வரவேற்பு கிடைத்ததால் வாரந்தோறும் நிகழ்ச்சியாக மாறியது. இதன் மூலம் பெரும்பாலான குடிசைகளைச் சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றணும். என்னுடைய ஆசையை நிறைவேற்றவில்லை என்று ஒரு குழந்தைகூட சொல்லக்கூடாது என்பதில் எங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் உங்களின் மறக்க முடியாத அம்சம்?

ஒரு குழந்தை ‘அக்கா என் காலில் போட்டிருந்த கொலுசை என் அப்பா தூங்கிக்கிட்டிருந்தபோது கழட்டிப் போய் வித்து குடிச்சிட்டார். அதனால, எனக்குக் கொலுசு வாங்கிக் கொடுங்க'ன்னு கேட்டது. இதை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது.

இதைப்போல குப்பை பொறுக்கி வாழ்க்கையை ஓட்டும் தாய். அவர் வருமானத்தில் படிக்கும் அவர் பையன். அந்தப் பையன் ‘அம்மாவுக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள்' என்று கேட்டான். அதை மறக்கமுடியாது. இதைப்போல நிறைய இருக்கிறது. மூன்று குழந்தைகள் என்னை அம்மா என்று கூப்பிட்டார்கள். அந்தச் சமயத்தில் உண்மையாகவே நான் தாய்ப் பாசத்தை உணர்ந்தேன்.

பொது நிகழ்ச்சிகளில் மக்களைச் சந்தித்தபோது உங்களை பாதித்த விஷயம்?

மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால், பேசுவாங்களோ என்கிற தயக்கத்தோடு பார்க்கிற ரசிகர்கள், மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அவங்க குடும்ப உறுப்பினராகப் பாவிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி என்னிடம், ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் என் மகனுக்குத் தேடிக்கொண்டிருக்கேன்'னு சொன்னது மக்களிடையே எனக்குக் கிடைத்த நன்மதிப்பைக் காட்டியது.

ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது கஷ்டமாக இல்லையா?

தமிழ்தாங்க நம்முடைய தாய்மொழி. அதில் பேசுவதுதான் நமக்கு அழகு. அதுதான் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய உணர்வு இல்லாம பக்கமா இருக்கிற மாதிரியான உணர்வை தமிழால்தான் ஏற்படுத்த முடியும்.

உங்களுடைய மற்ற பொழுதுபோக்கு?

நிறைய புத்தகம் படிப்பேன். எங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனி நூலகமே அமைத்திருக்கிறார்கள்.

எப்போதும் புடவையுடன் வலம் வருவதில் சிக்கல் இல்லையா?

இல்லவே இல்லை. ஏனெனில் மற்ற ஆடைகளில் தொகுத்து வழங்கும்போது மனதில் சில நெருடல்களோடு உரையாடல்களைச் சொல்ல வேண்டி இருக்கும். அதனால் நிகழ்ச்சியில் நம்முடைய ஈடுபாடு குறைய நேரிடும் எனக் கருதுகிறேன். புடவை அணிவதன் மூலம் எந்த வித நெருடலும் இல்லாமல் ஈடுபாட்டோடு தொகுத்து வழங்க முடிகிறது. அதனால் புடவைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

எதிர்கால ஆசை?

எத்தனை நிகழ்ச்சிகள் செய்து வந்தாலும், எதிலும் என் தனி அடையாளத்தைப் பதிவு செய்யத் தவறக்கூடாது என்பதுதான்.

வேறென்ன நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள்?

ஆரம்பத்தில் வளாகம், வேலைவாய்ப்புத் தகவல்கள், தற்போது சொல்விளையாட்டு, சின்னச்சின்ன ஆசை இன்னும் பல.

நேரலையில் நேயர்களை எதிர்கொள்வதற்கு தனி பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா?

இல்லை. ஓரிரு நிகழ்ச்சிகளில் பயம் நீங்கி சரளமாகப் பேசத் தொடங்கிவிடுவேன். எனது கல்லூரி நாட்களில் நானே நாடகங்களை இயக்கி நடித்ததால் மேடை அச்சமின்றி பேசக்கூடிய திறமை உள்ளது. அந்தத் திறமை எனக்குப் பேருதவியாக உள்ளது.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090219045839&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4


[/tscii:918fc8178a]

aanaa
28th March 2009, 05:20 AM
இலக்கை எட்ட வழி : வண்ணத்திரை ராஜி டிப்ஸ்

கலைஞர் "டிவி'யில் வண்ணத்திரை, "சிரிப்பொலியில்' டாப் டென் காமெடியை தொகுத்து வழங்கி வருபவர் ராஜீ; "எதை செஞ்சாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உறுதியான முடிவோடு உழைத்தால் நினைச்சது நடக்கும்', என்று அழுத்தமாக சொன்னார்.
ராஜீயின் பொறுப்பான பேட்டி:

* காமெடி நிகழ்ச்சிக்கான காம்பியரிங் பற்றி?

காமெடி நிகழ்ச்சிக்கு மட்டும் நான் காம்பியரிங் செய்யணும்ன்னு ஏதும் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி நடத்த போவதற்கு முன்பாக ஒரு முறை வீட்டில் எனக்கு நானே ரிகர்சல் பார்த்துக் கொள்வேன். நிகழ்ச்சிகளை எந்தெந்த தருணங்களில் எந்த விதமாக தொகுத்து வழங்கினால் ரசிகர்களை ஈர்க்கலாமென்றும் நினைப்பேன். காம்பியரிங் போது அழகான உச்சரிப்பு, மேனரிஸம், ஸ்டைல் என கவனம் செலுத்தும் போது நிகழ்ச்சி மெருகேறும். ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.

* ரேடியோ எப்.எம்., அனுபவம் ஏதும்...?

ரேடியோ எப்.எம்.,மில் "உங்களுக்காக 'நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்தபோது நிறைய ரசிகர்களோட எண்ணங்களை புரிந்து கொள்ள முடிந்தது. "மும்பை சுந்தரி, திக்... திக்... தீபா' நிகழ்ச்சிகளுக்கு காம்பியரிங் செய்தேன். நிகழ்ச்சி எப்படியிருந்தால் ரசிப்பாங்கன்னும் அப்சர்வ் பண்ண முடிந்தது. ரசிகர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களை ஈர்க்கும் வகையில் என்னோட காம்பியரிங் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

* சீரியலில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கீங்களாமே...?

"டிவி' பீல்டுக்கு வருவதற்கு என் அப்பாவும் ஒரு காரணம். நான் "பிளஸ் 2' படிச்சிட்டிருந்தப்ப அப்பா சந்திரமோகன் சென்னை தொலைகாட்சியில் சீரியல்களை இயக்கி வந்தார். அவரது சீரியலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக மெசேஜ் நிறைய இருந்தது. எய்ட்ஸ், குடி பழக்கம், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு என பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. நானும் அப்பாவுடன் உதவி இயக் குனராக ஒர்க் பண்ணினேன். பிறகு ராஜ் "டிவி'யில் "பரதம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இப்ப கலைஞர் "டிவி'யில் "வண்ணத்திரை' சிரிப்பொலியில் "ஜாலியா தமாஸ் டாப் டென் காமெடி' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கலைஞர் நியுஸ்ல "உங்கள் மாவட்ட செய்தி'யிலும் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.

* துடிப்பான பெண்களுக்கு உங்கள் ஆலோசனை?

பெண்கள் எல்லாத்துறையிலும் பயமின்றி கால் பதிக்க முடிகிறது. எந்தப் போட்டியையும் அறிவு பூர்வமாக சமாளித்து ஜெயிக்க கூடிய நிலையும் உள்ளது. எந்தத் துறையில் விருப்பம் இருக்கோ அதற்கு செல்ல வழியை தேட வேண்டும். மாதம் ஆனா சம்பளம் வருதுன்னு இல்லாம பார்க்கிற பணியில மேலும், மேலும் வளர்வதற்கான வழிகளில் கவனம் செலுத்தினால் போட்டிகளை சமாளித்து நினைத்த இலக்கை எட்டலாம் .

* உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

எம்.ஏ., ஜர்னலிசம் மாஸ் கம்யூனிக்கேஷன் கோர்ஸ் படிச்சிருக்கேன். படிப்பு முடிச்சதும் "டிவி' மீடியாவுக்கு போகணுன்னு ஆசை வந்தது. நினைச்ச பீல்டுக்கே வந்துவிட்டேன். நாம செய்ற வேலைகளால் மற்றவர்கள் நம்மை திரும்பி பார்க்க வைக்கணும்ங்கிற ஆர்வம் உள்ளவர்களின் நினைப்பு எனக்கும் இருக்கு. அதற்கான நல்ல தருணங்களை எதிர்பார்த்திட்டிருக்கேன். நினைச்சபடி வாய்ப்புகள் அமையும்போது புதுமைகளை செய்து மக்களிடம் வரவேற்பு பெற முயல்வேன்,' என்றும் ராஜீ ஆர்வமாக சொன்னார்.

நன்றி: தினமலர்

aanaa
28th March 2009, 05:22 AM
மசாலா சீரியல்கள் : மின்னல் தீபா பேட்டி

மாயி படத்தில் இடம் பெறும்... மாயி அண்ணன் வந்திருக்காக... மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்திருக்காக... வாம்மா மின்னல்...! என்ற காமெடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே கவர்ந்தது. நம்மையும் அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்த அந்த காமெடி சீனில் மின்னல் போல் வந்து மறையும் பெண்ணாக நடித்தவர் நடிகை தீபா. மின்னல் பெண் கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தீபா சின்னத்திரையில், செல்லமடி நீ எனக்கு, சூப்பர் சுந்தரி, ரேகா ஐ.பி.எஸ். சீரியல்களில் நடித்திருக்கிறார்; "ஜெயா "டிவி'க்காக "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடித்து வருகிறார். அவரின் பேட்டி:

* சீரியல்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெறுகிறது என்று ரசிகர்களே குறை கூறுகின்றனரே?

நிறைய "டிவி' சேனல்கள் வருவதால போட்டி, போட்டு சீரியல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவேண்டிய நிலை உள்ளது. சீரியல் பரபரப்பா பேசப்படணும், ரசிகர்களை ஈர்க்கணும்ங்கிற முடிவில் டைரக்டருங்க களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. ஸ்பீடாகவும், த்ரிலிங்காகவும் சீரியலை நகர்த்த சினிமா மாதிரி சீரியல்களுக்கும் மசாலா தடவ வேண்டியிருக்கு. சில சீரியல்களில் வன்முறை காட்சிகளும் இடம் பெற்று விடுகிறது. "டிவி' சீரியலுக்கும் சென்சார் வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வராது.

* சென்டிமென்ட், வன்முறை பிடிக்காததால் தான் காமெடி சீரியல்களில் நடிக்கிறீர்களா?

நானும் பல சீரியல்களில் பல்வேறு கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். இப்ப ஜெயா "டிவி'யில் "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். இந்த கேரக்டரில் தான் நடிப்பேன் என்று தனி திட்டம் ஏதும் இல்லை. எல்லாக் கேரக்டரிலும் நடிப்பேன்.

* சென்டிமென்ட் சீனில் நடிப்பதை விட காமெடி சீனில் நடிப்பது சிரமம் என்கின்றனரே?

சென்டிமென்ட் சீன்ல ஈசியா நடிச்சிடலாம். நமக்கு ஏதும் ரிலாக்ஸ் இருக்காது. காமெடி சீனில் நடிப்பது ஜாலியாகவும் ரிலாக்ஸாவும் இருக்கும். காமெடி வசனங்களை பேசி நடிக்கும் போது மொத்த யூனிட்டும் சிரிச்சுக்கிட்டே ஒர்க் பண்றதால ஷூட்டிங் வேகமா நடக்கும்.

* கலையுலகில் நடிகைகள் அவ்வப்போது "ஏடாகூடமா' சிக்கிக் கொள்கின்றனரே?

பிரச்னையில்லாம எதுவும் இல்லை.எல்லாத்தையும் பார்த்து எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கிட்டா நாம சேர வேண்டிய இடத்தை சென்றடைந்து விடலாம்ன்னு நினைச்சு கவனமா நடந்தா எந்த பிரச்னையும் வராதுன்னு நான் சொல்வேன்.

* சினிமாவில் நடித்து விட்டு "டிவி'க்கு வந்து விட்டீர்களே, சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டீர்களா?

"சினிமாவில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நிறைய நடிச்சுட்டேன். "மாயி'படத்தில மின்னல் கேரக்டர்ல நடிச்சேன். எங்கே போனாலும் "வாம்மா மின்னல்' என்று படத்தில் பேசப்படும் வசனத்தை சொல்லி ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வரவேற்பு கிடைச்சது. அதன்பிறகு "திரையுலகத்திலும் சரி, "டிவி' வட்டாரத்திலும் சரி மின்னல் தீபான்னே தான் அழைக்கின்றனர். "மாஸ்கோவின் காவிரி' படத்தில் சந்தானத்தோட ஜோடியா நடிச்சிருக்கேன். சீன் நல்லா வந்திருக்கு,''என்று தீபா சந்தோஷம் பொங்க சொன்னார்.


நன்றி: தினமலர்

aanaa
28th March 2009, 05:24 AM
சின்னத்திரை ஸ்பெஷல் பிட்ஸ்

* நம்பினால் நம்புங்கள்: ஜீ தமிழ் சேனலில் திங்கள் முதல் வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உண்மைத் தொடர். அறிவியல் உண்மைகளுக்கு அப்பாற்பட்டு அமானுஷ்யமாக நடக்கும் மர்ம நிகழ்வுகளை சொல்லும் நிகழ்ச்சி இது.

* இலவசமா பறக்கறாங்க: ராஜ் "டிவி'யும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்தும் சிங்கப்பூர் சுற்றுலா போட்டியில் பங்கேற்ற நேயர்களில் முதல் இண்டு வார வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மே 1ம் தேதி வரை போட்டி கூப்பன்கள் வரும். 100 பேருக்கு சிங்கப்பூர் பறக்கும் வாய்ப்பு உண்டு. ராஜ் "டிவி' பாருங்க; தினமலர் நாளிதழில் போட்டி கூப்பனை எடுங்க; தூள் கிளப்புங்க.

* வருகிறார் கிருஷ்ணர்: ராஜ் "டிவி'யில், ஜெய கிருஷ்ணா தொடர் நாளை முதல் வார நாட்களில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அரண்மனை சிறையில் பிறந்து, கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்வது உட்பட எல்லாவற்றையும் காணலாம்.

* கலக்கறாங்க: முதலில், ஜெயா சேனல்; அடுத்து, விஜய் "டிவி' இப்போது ஜீ சேனல் வரை இசைப்போட்டிகளுக்கு குறைவில்லை.
விஜய் "டிவி' சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கர்நாடக இசை சுற்று; ஏழு பேரும் அருமையாக பாடினாலும், "எல்லாம் இன்ப மயத்தில் ராகினிஸ்ரீ, குட்டி நித்யஸ்ரீ; பல ஆண்டு பயின்று பாடுவது பெரிய விஷயம் இல்லை; ஆனால், கர்நாடக இசை வாடையே தெரியாமல் அதில், கலக்கினாரே பிரசன்னா; சபாஷ்!

* சீனியர் சீரிஸ்: ஜெயா சேனலில், எஸ்.பி.பி., நடத்தும் என் னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியில், இளம் பாடகர், பாடகிகள், இல்லத் தரசிகள், டூயட் சீரிஸ் தொடர்ந்து இப்போது 30 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் சீனியர் சீரிஸ். இன்று இரவு 11 மணிக்கு மறு ஒளிபரப்பு.

* திரும்பிப் பார்க்கிறேன்: ஜெயா சேனலில் வார நாட்களில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், கலைஞர்கள் பங்கு பெற்று அவர்களின் அனுபவங்களை விவரிக்கின்றனர். சரோஜாதேவி, சோவை தொடர்ந்து நாளை நடிகை காஞ்சனா.

* சபாஷ் குடும்பம்: இமயம் "டிவி'யில், சனி தோறும் இரவு 8 மணிக்கு; இரு குடும்பங்கள் பங்கேற்கும் போட்டி நிகழ்ச்சி; புரிந்து கொள்ளுதல் உட்பட ஐந்து சுற்று போட்டி உண்டு.


நன்றி: தினமலர்

aanaa
28th March 2009, 08:38 PM
சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் நடிகை ராகவி.

ஏவி.எம். நிறுவனத்தின் "சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். "ராஜா கைய வைச்சா', "மருதுபாண்டி', "நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன.

பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது. அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன்.

சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.

சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். "ஜெயம்', "பிருந்தாவனம்', "பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை.

திருமதி செல்வத்தில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும். ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம்.

இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்கிறார் ராகவி.


நன்றி: தினமலர்

aanaa
28th March 2009, 08:42 PM
[tscii:ab36fab3b5]
"பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை': பூஜா



ஆரம்ப காலத்திருந்தே பெண்களின் பிரச்னைகள் பற்றித்தான் சீரியல்கள் பேசி வருகின்றன. அவ்வப்போது சில சீரியல்கள் இதற்கு எதிர்மறையாக வந்தாலும், பெண்களின் பிரச்னைகளை முழுமையாகக் கையில் எடுத்திருக்கிறது விஜய் டி.வி.யின் "ரோஜா கூட்டம்' என்கிறார் பூஜா.

காலத்திற்கு ஏற்றவாறு பெண்களின் வாழ்க்கை முறை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் என சொல்லிக்கொண்டாலும் பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகள், வெளியே சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றன. அவர்களுடைய நிலை இன்னும் மாறவில்லை.

5 பெண்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் விதவிதமான பிரச்னைகள்; அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் "ரோஜா கூட்டம்' சீரியலின் முழுக் கதை.

இந்த சீரியலில் நான் மாடல் நடிகை மானஸô என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சில விஷயங்களில் விட்டுத் தர வேண்டும் என்ற நிலை வரும் போது மானஸô எப்படி அந்த நிலையைக் கையாளுகிறாள் என்பதுதான் என் கதை. ஒரு நடிகையின் பிரச்னைகளைப் பேசுகிற இந்த கேரக்டர், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், இந்த கேரக்டரில் ரசித்து நடிக்கிறேன். "ரோஜா கூட்டம்' சராசரி தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த நேரமும் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இதில் இல்லை.

இதைத் தவிர "அத்திப் பூக்கள்', "தங்கமான புருஷன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். "அத்திப் பூக்கள்' ஈஸ்வரி, "தங்கமான புருஷன்' தாரா ஆகிய இரண்டு கேரக்டர்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் ரசிக்கக் கூடிய மூன்று சீரியல்களில் நடிப்பது சிரமமாக இருந்தாலும் அவற்றுக்கு பாராட்டு கிடைக்கும்போது அதிலும் ஒரு சுகம். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

குஷ்புதான் என்னை முதல் முறையாக நடிக்க அழைத்தார். அவருடைய "குங்குமம்' சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அவர்தான் என் குரு. அதற்கு பிறகு நிறைய சீரியல்கள் செய்தாகிவிட்டது.

சினிமாவைப் பொருத்தவரை நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போதும் வருகிறது. அவை எல்லாமே ஹீரோயினுடைய காதலுக்கு ஐடியா தந்துவிட்டுச் செல்வது போன்ற கேரக்டர்கள்தான். சினிமாவில் சும்மா போய் நிற்பதை நான் விரும்பவில்லை. நானும் சினிமாவில் நடித்தேன் என்ற பதிவு எனக்கு வேண்டாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம் என்றார்.



நன்றி: தினமலர் [/tscii:ab36fab3b5]

aanaa
28th March 2009, 08:45 PM
"சீரியலுக்கென்றே தனி சேனல் வர வாய்ப்பு'



சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்த பலருக்கு சீரியல்கள்தான் அரவணைப்பாக உள்ளன. சீரியல்களின் தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவி வருகிறது என்கிறார் "விழுதுகள்' சந்தானம்.

சிறு வயதில் இருந்தே நடிப்புதான் எனக்கு எல்லாம். பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசைதான் என்னையும் நடிகனாக்கி விட்டது. அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் தொடங்கிய என் நடிப்பு ஆர்வம் இன்று அன்றாட சீரியல்கள் வரை வந்து நிற்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு இடம் மாறிவிட்டதே தவிர ஆர்வம் மாறவில்லை.

டி.டி. தொலைக்காட்சியில் வந்த விழுதுகள்தான் என் முதல் சீரியல். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலிருந்து "விழுதுகள்' சந்தானம் ஆகிவிட்டேன்.

முதன் முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட சீரியலில் நடித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அந்த சீரியலை தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் பீம்சிங் மகன் கோபி இயக்கியிருந்தார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தாகி விட்டது. பாலசந்தர், சிஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் பணிபுரிந்தாகி விட்டது. அவ்வப்போது சில படங்களிலும் நடித்தேன். நாடகங்கள் மீது இருந்த ஆர்வம் சினிமா மீது இல்லை.

இப்போது நிறைய சேனல்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் டி.டி.யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை வேறு. காமெடி, இசை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் வந்து விட்டது. விரைவில் சீரியலுக்கென்று ஒரு சேனல் வந்தாலும் வரலாம்.

சீரியல்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போதவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் உலகம் பிஸியாகிவிட்டது. ஒரு நடிகையை மையமாக வைத்து 4 அல்லது 5 சீரியல்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. நடிகர்களின் வாழ்க்கையை சீரியல்கள் தற்போது மாற்றிவிட்டது.

இப்போது நிறைய பேர் சிறு வயதிலே சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை.

"மகள்', "திருமதி செல்வம்', "நாணல்', "பந்தம்', "கோலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறேன். அனைத்திலும் நல்ல கேரக்டர்கள். அவை எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தால் சரி என்றார்.



நன்றி: தினமலர்

R.Latha
30th March 2009, 12:26 PM
[tscii:f7e3691f1c]சீரியலுக்கு சென்சார் தேவை' (நடிகை தேவிப்ரியா)

சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான் என்கிறார்

சினிமா நடிகைகள் சீரியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடிகையின் சினிமா சாதனை சீரியலில் தொடர்கிறது? சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது. சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். யாருடைய வாழ்க்கையில்தான் இந்த விஷயங்கள் இல்லை? மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் தேவை இல்லை.

பாலியல் தொடர்பான விஷயங்கள் சினிமாவை விட சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது. சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

இப்போது ‘சதிலீலாவதி', ‘தெற்கத்தி பொண்ணு', ‘பந்தம்', ‘ஆனந்தம் விளையாடு வீடு' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். ‘சதிலீலாவதி' மாலதி, ‘தெற்கத்தி பொண்ணு' கீதா நாயுடு ஆகிய கேரக்டர்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன.

நடிகர் ஜே.கே.ரித்தீஷின் தயாரிப்பில் ‘ஆண்டாள்' என்ற புது சீரியலில் நடித்து வருகிறேன். அதில் இதுவரை பார்க்காத புதிய தேவிப் பிரியாவை பார்க்கலாம்.

சினிமாவில் முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். சமீபத்தில் ‘வல்லமை தாராயோ', ‘நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் தேவிப்ரியா.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/இண்ய்ங்ம்ஹ/இண்ய்ங்ஐற்ங்ம்ள்.ஹள்ல்?ஐஈ=ஈசஇ20090329123629&பண்ற்ப்ங்=இண்ய்ங்ம்ஹ+%2ஈ+சங்ஜ்ள்&ப்பண்ற்ப்ங்=%ஊ9சய்%அ7கள்&பர்ல்ண்ஸ்ரீ=0
ள/ற்ள்ஸ்ரீண்ண்ன[/tscii:f7e3691f1c]

R.Latha
30th March 2009, 12:35 PM
[tscii:6a2278f0cb]சினிமாத்துறை எனக்கு பிடிக்காது: (நடிகைசந்த்ரா)

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு சுதந்திரம் இருக்காது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமணத்துக்கு பிறகுதான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் பிரஜீன் மனைவியும் நடிகையுமான சந்த்ரா.

கிரண் டி.வி.யில் நான் காம்பியராக இருந்தபோது பிரஜீன் சன் மியூசிக்கில் இருந்தார். ஒரே துறையில் இருந்ததால் ஏற்பட்ட இனம் புரியாத உணர்வுதான் காதலாக மலர்ந்து விட்டது.

என் நிகழ்ச்சியை மிஸ் செய்தாலும் உங்கள் நிகழ்ச்சியை நான் மிஸ் பண்ணுவதே இல்லை என போன் செய்து பிரஜீன் வழிந்த தருணங்கள் நிறைய உண்டு.

எங்களின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் சம்மதம் இல்லாதபோது நாங்களே கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். திருமண வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. சந்தோஷமான வாழ்வைக் கொடுத்த காதலுக்கு நன்றி.

ராஜ் டி.வி.யின் ‘நாகம்மா', விஜய் டி.வி.யின் ‘ரோஜாக்கூட்டம்' என இரு சீரியல்களிலும் நடித்து வருகிறேன். சீரியல் வாழ்க்கை நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். என்னை பொருத்தவரைக்கும் சீரியலில் இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை என்றுதான் சொல்வேன்.

மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துவிட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். நாயகியாக 10 படங்களில் நடித்திருக்கிறேன். ‘கஸ்தூரி மான்' நான் நடித்ததில் பிடித்த படம்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது இல்லை. சினிமா எனக்கு பிடிக்காமல் போனதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சினிமாவுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராததால் அதிலிருந்து ஒதுங்கிவிட்டேன். சினிமாவில் தினந்தோறும் எதிரிகள் உருவாகக் கூடிய நிலை உண்டு. சீரியலில் அது இல்லை.

என்னுடைய ஜனனி கேரக்டர் ரோஜாக் கூட்டத்தில் முக்கியமானது. நிறைய பேசிக்கொண்டும், சேட்டை செய்துகொண்டும் வாழும் பெண் திருமணத்துக்கு பின் எவ்வாறு மாறுகிறாள். அவளுடயை கனவுகளை சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதா? புத்தக இடுக்குகளில் வைக்கப்பட்ட ஆயிரம் மயிலிறகுகள் போல் மனதில் ஆயிரம் கனவுகளை வைத்திருக்கும் கேரக்டர்தான் ஜனனி. ரொம்ப ஆர்வமாக நடித்து வருகிறேன்.

‘ரோஜக் கூட்டம்' சீரியல் பார்த்துவிட்டு நிறைய பேர் சினிமாவில் நடிக்க அழைக்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம்... ‘சினிமாத்துறை எனக்கு பிடிக்காது; நடிக்க அழைக்காதீர்கள்' என்பதுதான் என்கிறார் சந்த்ரா.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090327123606&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:6a2278f0cb]

R.Latha
30th March 2009, 12:58 PM
[tscii:0a9d4b982e]‘சீரியல் - கனவுலகம் இல்லை': நடிகை ராகவி

சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் நடிகை ராகவி.

ஏவி.எம். நிறுவனத்தின் ‘சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். ‘ராஜா கைய வைச்சா', ‘மருதுபாண்டி', ‘நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன.

பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது. அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன்.

சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.

சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். ‘ஜெயம்', ‘பிருந்தாவனம்', ‘பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை.

திருமதி செல்வத்தில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும். ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம்.

இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்கிறார் ராகவி.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090324112837&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:0a9d4b982e]

aanaa
31st March 2009, 02:51 AM
[tscii:008d7efe80]சீரியலுக்கு சென்சார் தேவை' (நடிகை தேவிப்ரியா)

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/இண்ய்ங்ம்ஹ/இண்ய்ங்ஐற்ங்ம்ள்.ஹள்ல்?ஐஈ=ஈசஇ20090329123629&பண்ற்ப்ங்=இண்ய்ங்ம்ஹ+%2ஈ+சங்ஜ்ள்&ப்பண்ற்ப்ங்=%ஊ9சய்%அ7கள்&பர்ல்ண்ஸ்ரீ=0
ள/ற்ள்ஸ்ரீண்ண்ன[/tscii:008d7efe80]

:lol:

aanaa
2nd April 2009, 10:12 PM
குடும்பப் பாங்கான கேரக்டருக்கு வரவேற்பு : சித்தாரா

சினிமாவிலிருந்து நடிகை சித்தாரா "டிவி' சீரியலுக்கு வந்திருக்கிறார். ஜெயா "டிவி'யில் "கவரிமான்', சீரியலிலும், வசந்த் "டிவி'யில் "பராசக்தி' சீரியலிலும் நடித்து வருகிறார். சித்தாரா பேட்டி:

* சினிமாவிலிருந்து "டிவி' பக்கம் எப்படி?சினிமாவை முழுவதுமாக விட்டுட்டு "டிவி'க்கு வரலை. சினிமாவிலோ, "டிவி'யிலோ வரும் வாய்ப்பையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதில்லை. செலக்ட் பண்ணி நடிச்சிட்டிருப்பதால நான் ஏற்கிற கேரக்டரில் யதார்த்தம் இருக்கும்.
ஜெயா "டிவி'யில் "கவரிமான்' சீரியல் கதை பிடித்தது நடித்தேன். வசந்த் "டிவி'யில் "பராசக்தி' சீரியல் கதையை இயக்குனர் ராஜபாண்டி சொன்ன போது அதில் என் கேரக்டருக்கு உள்ள முக்கியத்துவமும், கதையின் போக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால நடிச்சிட்டிருக்கேன்.

* குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பது...?அமைதியான சூழ்நிலை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படித் தான் இருக்கணும்ன்னு எனக்கு நானே கட்டுப்பாடு வச்சிருக்கேன். அமைதியும், மரியாதையும் எனக்கு முக்கியம். இவைகள் இல்லாத இடங்களில் நான் இருக்க மாட்டேன். யதார்த்தமாக ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில் என்னென்ன கிடைக்கணுமோ அது கிடைச்சால் போதும்ங்கிற நினைப்பு மட்டுமே இருக்கு. என்னை சுற்றியுள்ள சூழ்நிலைகளும் எனது முடிவுகளையொட்டியே இருப்பதால் என்னால் நினைச்சபடி அமைதியாக வாழ முடிகிறது. சீரியலோ, சினிமாவோ குடும்பப்பாங்கான கேரக்டருக்கு வரவேற்பு என்றென் றும் இருந்துக்கிட்டு தானிருக்கு. பெண்க ளின் அமைதியான செயல்பாடும், தியாகமும் வேறு யாருக்கும் இருக்காது.

* பிடித்தவைகளில் மட்டுமே நடிப்பது பற்றி?வாழ்க்கைக்கு பணம் தேவைதான். அதற்காக பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. என் மனசுக்கு எது எப்படி நடக்கணும்ன்னு நினைக்கிறேனோ அதை நிறைவு செய்யத்தான் உழைக்கிறேன். அந்த உழைப்புக்கு என்ன கிடைக்கணும் என்று இருக்கிறதோ அது கிடைக்கும். இப்படித்தான் என்னோட நினைப்பும்,முடிவும் இருக்கு. மலையாளத்தில் ஐ.வி.சசி இயக்கும் "வெள்ளத் தூவல்', படம் முடிந்தது. ராஜசேனன் டைரக்ஷன்ல "சிறகுகள்' படத்தில் நடிக்கிறேன். தமிழில் ராஜ்கிரண் ஜோடியாக "சரித்திரம்' படத்திலும், தெலுங்கில் ஆனந்த் நடிக்கும் படத்திலும் நடிச்சிட்டிருக்கேன்.

* நீங்கள் நடிக்க வரும் போது உள்ள சினிமா உலகம், இப்போது உள்ள சினிமா உலகம் பற்றி?எல்லாத்திலும் வேகம் இருக்கு. புதுமையை கொண்டு வருவதில் போட்டியிருக்கு. நிறைய படிச்சவங்க சினிமா, "டிவி' பீல்ட்டுக்கு வந்திட்டிருக்காங்க. யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாரை யும் யாரும் மிரட்டி ஏதும் செய்துவிடவும் முடியாது. திறமையும் செய்கிற தொழிலில் ஈடுபாடும் உள்ளவங்க பீல்டில் நிலைச்சு நிற்கிறாங்க. உஷாராகவும் இருக்காங்க. நடிப்பில் ஆர்வம் இல்லாமல், ஏதோ ஆசையில பெயரளவுக்கு பீல்டுக்கு வர்றவங்க வந்த வேகத்தில திரும்ப போயிடறாங்க.

இவ்வாறு சித்தாரா பொறுப்பாக சொல்லி பேட்டியை முடித்துக்கொண்டார்.



நன்றி: தினமலர்

aanaa
4th April 2009, 09:23 PM
சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல்'


நடிகைகளைப் பொருத்தவரை சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சரியாக நடித்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் நடிகை நீபா.

"நீலவானம்' என்ற சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகி நிறைய பேர் பாராட்டினார்கள். அப்படியே நடிப்பில் ஆர்வமும் வந்து விட்டது.

"பெருசு', "குடியரசு', "பள்ளிக்கூடம்', "அம்முவாகிய நான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து விட்டேன். சீரியல், சினிமா என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்களை மட்டுமே விரும்புகிறேன். அந்த தருணங்கள் வருகிறபோது நிச்சயம் நான் சினிமாவில் சாதிப்பேன்.

இப்போது "தங்கமான புருஷன்', "நாணல்', "ரோஜாக் கூட்டம்' ஆகிய சிரியல்களில் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியல், சினிமா என இரண்டையும் காதலிப்பதால் நடிப்பில் சலிப்பு ஏற்பட்டதில்லை. காதலிக்க கூடிய விஷயத்தில் எப்படி சலிப்பு ஏற்படும்.

"தங்கமான புருஷன்' ரமணி, "ரோஜாக் கூட்டம்' ராதிகா, "நாணல்' காதம்பரி ஆகிய கேரக்டர்கள் சீரியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு கேரக்டரின் சாயல் இன்னொரு கேரக்டரில் தெரியாமல் இருந்தாலே போதும் சீரியலில் பெயர் வாங்கி விடலாம். சீரியல் மட்டும் இல்லை சினிமாவுக்கும் இது பொருந்தும்.

சீரியல்களில் பெண்களின் சராசரி வாழ்க்கை காட்டப்படுவதால் சில விஷயங்கள் சீரியலுக்கு சீரியல் மாறுபடாமல் இருக்கும் அவ்வளவுதான். சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சினிமாவில் சராசரி வாழ்க்கை அந்த அளவிற்கு பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் சினிமாவில் நடிப்பது ஒரு விதத்தில் ஈஸிதான்.

சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் மாடர்ன் ட்ரெஸ் அணிய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். ஏன்... அணிய கூடாது? கதைக்கு மாடர்ன் ட்ரெஸ் தேவைப்படுகிறது. அதனால்தான் அப்படி. இன்றைய சூழ்நிலையில் ஒரு கல்லூரி மாணவியை தாவணி அணிந்த பெண்ணாகக் காட்டினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஏனென்றால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. மாற்றங்களுக்கு ஏற்ப சீரியல்களும் மாறுவதைத் தவிர்க்க முடியாது என்றார் நீபா.

நன்றி: தினமணி

aanaa
4th April 2009, 09:25 PM
"சீரியலுக்கு சென்சார் தேவை'


சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான் என்கிறார் நடிகை தேவிப்ரியா.

சினிமா நடிகைகள் சீரியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடிகையின் சினிமா சாதனை சீரியலில் தொடர்கிறது? சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது. சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். யாருடைய வாழ்க்கையில்தான் இந்த விஷயங்கள் இல்லை? மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் தேவை இல்லை.

பாலியல் தொடர்பான விஷயங்கள் சினிமாவை விட சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது. சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

இப்போது "சதிலீலாவதி', "தெற்கத்தி பொண்ணு', "பந்தம்', "ஆனந்தம் விளையாடு வீடு' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். "சதிலீலாவதி' மாலதி, "தெற்கத்தி பொண்ணு' கீதா நாயுடு ஆகிய கேரக்டர்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன.

நடிகர் ஜே.கே.ரித்தீஷின் தயாரிப்பில் "ஆண்டாள்' என்ற புது சீரியலில் நடித்து வருகிறேன். அதில் இதுவரை பார்க்காத புதிய தேவிப் பிரியாவை பார்க்கலாம்.

சினிமாவில் முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். சமீபத்தில் "வல்லமை தாராயோ', "நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் தேவிப்ரியா.

நன்றி: தினமணி

aanaa
5th April 2009, 02:30 AM
Wit is his forte



Vijayasarathy

For some people the advice, "Talk less - work more", makes no sense; for them talking is tantamount to working. Call them comperes or video/radio jockeys or just anchors, they fall in this category. And one among this genre from Chennai was in Visakhapatnam recently to do a shoot.

Meet Vijayasarathy, the compere of one of the most popular info-tainment show on Sun TV, 'Neengal Ketta Paadal' (film song of your choice). He is also a regular face in television serials and films.

During his 'Neengal Ketta Paadal' mission in Vizag, Vijay had taken some time off to meet this scribe and discuss his journey to stardom.

Though he happens to be the son of the late Tamil actor Sasi Kumar, Vijay never dreamt of joining the entertainment industry until a couple of years ago.

He narrates his sojourn into 'dream factory' thus: "My parents left this world when I was barely three years old. Since then I was brought up by my maternal grandmother, so the film industry was way beyond my reach. After completing my post-graduation in zoology, I started my career as a medical representative with Hindustan Ciba-Geigy selling tranquillisers. But today after spending a couple of years in the industry I realise that Ciba was the place where I unknowingly picked up and sharpened my inherent strength of communication skills. My job at Ciba impelled me to initiate dialogues with unkown persons and pose questions to them. Today that's what I am exactly doing but in a different format and platform."

How did the transformation from medical rep to television anchor happen?

"Ciba transferred me to Assam and that was the period when insurgency was at its peak. After having lost my parents in a tragic fire accident my old grandparents did not allow me to go to Assam, hence I resigned and joined Kirloskars for some time. After a brief stint over there, on an advice from a friend of mine I joined JJ TV (now Jaya TV) as producer and compere. Three months after I joined, JJ wound up. And that was the beginning of my struggling days.

"I do not remember seeing my dad in person except in the recorded movies but it was during those days that his goodwill worked like miracle for me. I started introducing myself as son of Sasi Kumar and I was instantly accepted. I got my first major break as an actor in a serial called 'Marmadesam' directed by Naga and that was the turning point in my life. It was there that I picked up the nuances of acting. But the major break was when I clinched the role of Fraud Kannan in the soap opera, 'Chitthi' ('Pinni' in Telugu). I was instantly recognised as an actor and, thereafter, offers kept pouring."

Today Vijay is instantly recognised in Tamil Nadu, Karnataka and parts of Andhra Pradesh. Apart from playing the lead roles in serials like 'Vikramaditya' and 'Chitthi' he has also acted in a couple of Tamil films as hero.

On 'Neengal Keta Paadal', he says, "This is basically an info-tainment show where we visit different locations and give a brief report about the place right from its historic facts to economic developments, and in the end we focus on a tourist couple and play a song of their choice. This programme is extremely popular on Sun TV and its TRP rating is one among the top few.

"As part of this programme I have toured almost entire India and a couple of foreign countries. I have even toured Errawadi and Velachery after the disasters and these episodes not only touched the people's heart but were also well appreciated for its contents."

For a compere to succeed, is it essential that one should be blessed with good looks and a motor mouth?

Vijaysarathy shakes his head. "Apart from the gift of the gab one should be well informed and witty. It is true that the vocal chords deliver the words but the word factory is in the brain. A compere who can inform and as well entertain will last longer. He or she should be constantly on the job to strengthen one's repertoire, as one should remember that presence of mind is a sine qua non for compering. And as far as good looks are concerned, it is not at all a criterion. My success is due to the 'boy next door' image, just simple average looking."

Though Vijay likes to make it big in films, his first love is TV. "Today TV is a strong and effective medium and I like interactive shows. Right now Ihost a celebrity talk show in air for Sun TV and its popularity is already on the rise."


thanks to Hindu

R.Latha
6th April 2009, 02:29 PM
[tscii:337e39976d]மானாட மயிலாட நீபா


‘சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல்'

நடிகைகளைப் பொருத்தவரை சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சரியாக நடித்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் நடிகை நீபா.

‘நீலவானம்' என்ற சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகி நிறைய பேர் பாராட்டினார்கள். அப்படியே நடிப்பில் ஆர்வமும் வந்து விட்டது.

‘பெருசு', ‘குடியரசு', ‘பள்ளிக்கூடம்', ‘அம்முவாகிய நான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து விட்டேன். சீரியல், சினிமா என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்களை மட்டுமே விரும்புகிறேன். அந்த தருணங்கள் வருகிறபோது நிச்சயம் நான் சினிமாவில் சாதிப்பேன்.

இப்போது ‘தங்கமான புருஷன்', ‘நாணல்', ‘ரோஜாக் கூட்டம்' ஆகிய சிரியல்களில் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியல், சினிமா என இரண்டையும் காதலிப்பதால் நடிப்பில் சலிப்பு ஏற்பட்டதில்லை. காதலிக்க கூடிய விஷயத்தில் எப்படி சலிப்பு ஏற்படும்.

‘தங்கமான புருஷன்' ரமணி, ‘ரோஜாக் கூட்டம்' ராதிகா, ‘நாணல்' காதம்பரி ஆகிய கேரக்டர்கள் சீரியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு கேரக்டரின் சாயல் இன்னொரு கேரக்டரில் தெரியாமல் இருந்தாலே போதும் சீரியலில் பெயர் வாங்கி விடலாம். சீரியல் மட்டும் இல்லை சினிமாவுக்கும் இது பொருந்தும்.

சீரியல்களில் பெண்களின் சராசரி வாழ்க்கை காட்டப்படுவதால் சில விஷயங்கள் சீரியலுக்கு சீரியல் மாறுபடாமல் இருக்கும் அவ்வளவுதான். சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சினிமாவில் சராசரி வாழ்க்கை அந்த அளவிற்கு பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் சினிமாவில் நடிப்பது ஒரு விதத்தில் ஈஸிதான்.

சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் மாடர்ன் ட்ரெஸ் அணிய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். ஏன்... அணிய கூடாது? கதைக்கு மாடர்ன் ட்ரெஸ் தேவைப்படுகிறது. அதனால்தான் அப்படி. இன்றைய சூழ்நிலையில் ஒரு கல்லூரி மாணவியை தாவணி அணிந்த பெண்ணாகக் காட்டினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஏனென்றால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. மாற்றங்களுக்கு ஏற்ப சீரியல்களும் மாறுவதைத் தவிர்க்க முடியாது என்றார் நீபா.

[/tscii:337e39976d]

R.Latha
6th April 2009, 02:50 PM
[tscii:0e65401cb6]வாழ்க்கை கவிதைத்தனமானது': ஹேமமாலினி



வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்போதாவது வரும் மாற்றங்கள்தான் அவரவர்களின் வாழ்க்கை சூழலை தீர்மானிக்கின்றன. அது போல்தான் என் ‘காம்பியரிங்' வாழ்க்கையும் என்கிறார் ஏர் டெல் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி ஹேமமாலினி.

இலங்கையில் ஒரு சேனலுக்காக நான் நடத்திய நிகழ்ச்சியில்தான் யூகியைப் பார்த்தேன். முதலில் நாங்கள் பேசிக் கொள்ளும் போதெல்லாம் காதல் இல்லை. பின்னர் எல்லோருக்கும் வருவதைப் போல் எங்களுக்குள்ளும் காதல் வந்து விட்டது.

திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதும் யூகியுடன் அதே காதல். காதல் திருமண வாழ்க்கை கவிதைத் தனமானது. அதை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.

திருமணத்துக்கு பின் காம்பியரிங் செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது. விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கரில் யூகியும் இருப்பதால்தான் நானும் இருக்கிறேன்.

சினிமா, சீரியல்களில் நடிப்பது என்றால் திருமணத்துக்கு முன்பே நடித்திருப்பேன். அதில் ஆர்வம் இல்லாததால் அங்கு போகவில்லை. இப்போதும் சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமா, சீரியலை பொறுத்தவரை அப்போது இருந்த நிலைதான்.

இப்போது இயக்குனர் ரமணா நடித்து வரும் ‘குதிரை' படத்தில் காம்பியராக ஒரு காட்சியில் வருகிறேன். பிடித்திருந்ததால்தான் அதுவும்.

சில நேரங்களில் யூகி, ஷூட்டிங் முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவார். அப்போதும் தூங்காமல் மறுநாள் ஷூட்டிங்குக்கு தேவையான காட்சிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாததால் தூங்கி தூங்கி வழிவேன்.

சினிமா மற்றும் சீரியல்களுக்கு போனால் நிறைய விஷயங்களை இழக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஜெயிக்க முடியும். அது என்னால் முடியாது. விஜய் டி.வி.யின் ‘ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் யூகியும் தோற்றுப் போனதால் இப்போது கிளாசிக்கல் டான்ஸ் வகுப்புக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். இதையடுத்து யோகா செய்வதில் எனக்கு ஈடுபாடு உண்டு.

விஜய் டி.வி.யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெகுவான ரசிகர்களை கவர்ந்து நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எனக்கும் மியூசிக்கில் கொஞ்சம் ஆர்வம் உண்டு என்பதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஈடுபாடு உண்டு என்றார்.[/tscii:0e65401cb6]

R.Latha
8th April 2009, 12:39 PM
[tscii:9da30e65ed] Meena


You switched to TV because of fewer film commitments?

Even when I was busy doing films a few years ago, I got many offers to do serials. But I kept postponing them. Finally, I agreed to do Lakshmi as the story was good. Now I am doing another serial. I am happy dividing my time between TV and films.
What about marriage?

Will let you know when it happens.
After marriage will you continue to act?

I don’t like to plan things. So I have not thought about it. If interesting roles come my way, I will do them. Anyway, why talk about it now? Let marriage happen first.
Do you think you have achieved enough?

I don’t know. Maybe if I sit and think about it, I could come up with an answer. Wherever I go people from different walks of life come to me and tell me many good things about my acting. This kind of encouragement keeps me going.
How has your next film Mariyathai shaped up?

One will see a different Meena in the film. I must thank director Vikraman for giving me the role. It is a family-oriented film like Vanathai Pole and I am happy to do it.
You must have done more than 150 films. Don’t you ever get tired of facing the camera?

Certainly not. I am doing some good roles now. I have worked in 200 films in the four South Indian languages and one Hindi film. Each day brings a new challenge.


You switched to TV because of fewer film commitments?

Even when I was busy doing films a few years ago, I got many offers to do serials. But I kept postponing them. Finally, I agreed to do Lakshmi as the story was good. Now I am doing another serial. I am happy dividing my time between TV and films.
What about marriage?

Will let you know when it happens.
After marriage will you continue to act?

I don’t like to plan things. So I have not thought about it. If interesting roles come my way, I will do them. Anyway, why talk about it now? Let marriage happen first.
Do you think you have achieved enough?

I don’t know. Maybe if I sit and think about it, I could come up with an answer. Wherever I go people from different walks of life come to me and tell me many good things about my acting. This kind of encouragement keeps me going.
How has your next film Mariyathai shaped up?

One will see a different Meena in the film. I must thank director Vikraman for giving me the role. It is a family-oriented film like Vanathai Pole and I am happy to do it.
You must have done more than 150 films. Don’t you ever get tired of facing the camera?

Certainly not. I am doing some good roles now. I have worked in 200 films in the four South Indian languages and one Hindi film. Each day brings a new challenge.

http://www.hindu.com/cp/2009/04/03/stories/2009040350401600.htm[/tscii:9da30e65ed]

aanaa
13th April 2009, 11:22 PM
கோலங்கள் அகிலாவின் அனுபவ பேட்டி

சிவசக்தி, கோலங்கள்' சீரியலில் நடித்து வரும் அகிலா விஜய் "டிவி'க்காக "ரோஜாக்கூட்டம்' சீரியலிலும் நடித்து வருகிறார். படுஅழுத்தமான அவரின் அனுபவ பேட்டி:

சொந்தமாக கம்பெனி வைத்திருப்பதாக சொன்னார்களே?

சீசன்ஸ் ஈவன்ட்ஸ்'ங்கிற பேர்ல நானும் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து சென்னை தி.நகரில் நிறுவனம் ஒன்று வச்சிருக் கோம். ஸ்டார் நைட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புரோக்கிராம்ன்னு பல புரோக்கிராம்கள் நடத்திக் கொடுத்திருக்கோம். சமீபத்தில் "பிளாக் அண்ட் ஒயிட்' என்ற டைட்டிலில் பழம்பெரும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட "ஸ்டார் நைட்' புரோக்கிராமும் நடத்திக் கொடுத் தோம்.

நிகழ்ச்சிகளை நடத்தும் போது பிரச்னைகளை சந்தித்த சம்பவம் ஏதும்?

சின்ன நிகழ்ச்சிகளைவிட பெரிய நிகழ்ச்சிகள்ல நிறைய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். பிரச் னை வருதேன்னு நினைச்சு செய்த வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்துடமுடியாது. இட்லி வேணும்ன்னு நினைச்சா, அது சட்டியில் வெந்தால் என்ன, குக்கரில் வெந்தால் என்ன, நமக்கு தேவை இட்லி. நான் செய்ய வந்ததை நல்லபடியாக செய்து முடிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்ததால தான் தனியா நிறுவனம் வச்சு நடத்துகிற அளவுக்கு தைரியமாக முயற்சிக்க முடிகிறது.

சாதாரண வேலை யை செய்துவிட்டு சாதித்து விட்டோம் என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் பற்றி ...?

யாரோ எவரோ எது வேண்டும்னாலும் பேசிக்கலாம். அது அவுங்க அவுங்க இஷ்டம். அவுங்க நேச்சர்'ன்னு நினைச்சு நாம கண்டுக் காம விட்டுடணும். அவுங்க நமக்கு வேண்டப்பட்டவங்களாக இருந்தா நாம திருத்த முயற்சி பண்ணலாம். எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந் துக்கணும்ன்னு எடுத்து சொல்லலாம். அவுங்க இதிலும் சரிப்பட்டு வரலைன்னா நாம ஒதுங்கிட வேண்டியது தான்.

அருகில் இருந்து துதி பாடுபவர்கள் பற்றி?

ஜால்ரா போடுறவங்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது ஆபத்தானது. இந்த மாதிரி மனிதர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வதைவிட ஒதுக்கி விடுவதே மேல்.

வேலைக்கு போகிற பெண்களுக்கு வீட்டாரின் கட்டுப்பாடு பற்றி?

பெண்களை எப்படி நடத்தினா அவுங்க சுதந்திரமாக நினைச்ச இலக்கை எட்ட முடியும்ன்னு பெற்றோர்களுக்கு தெரிகிறது. அதனால் பெண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டினால் தடைகள் அவ்வளவாக இப்போது இல்லை என்று சொல்வேன்,'' என்று அகிலா அழுத்தமாக சொன்னார்.


நன்றி: தினமலர்

R.Latha
15th April 2009, 11:52 AM
thank you aana

R.Latha
15th April 2009, 12:53 PM
டி.வி. நடிகை நீரஜா.

செய்தித்தாள்களிலும், டி.வி.யிலும்
மாமியார் பிரச்னை, வீட்டு பிரச்னை இவற்றையெல்லாம் தாண்டி, இப்போதைய பெண்களுக்கு சமுதாயத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளன. செய்கிற தொழிலில் எத்தனை பெண்களுக்கு இந்த சமுதாயம் சுதந்திரம் கொடுத்து விட்டது என்று கேட்கிறார் டி.வி. தொடர் நடிகை நீரஜா. செய்தித்தாள்களிலும், டி.வி.யிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் குறித்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. கணவரின் கொடுமை, மாமியார் கொடுமை என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஏராளம். பெண்களின் நிலை இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. கணவரை விவாகரத்து செய்து விட்டு குழந்தையுடன் வாழும் பெண்ணின் கேரக்டர்தான் விஜய் டி.வி.யின் ரோஜக் கூட்டத்தில் எனக்கு. கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியே நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளும் பெண்களின் நிலையை என் கேரக்டர் பிரதிபலிக்கிறது. என்னைப் போல் ஏதோ காரணங்களால் தனித்து வாழும் சில பெண்களின் கதையும் இந்த சீரியலில் உண்டு. தற்போது பெண்களின் பிரச்னையை கதையாகச் சொல்லும் ஒரே சீரியல் ரோஜக் கூட்டம்தான். விவகாரத்து செய்த பெண்களுக்கு ஆண்களை கண்டாலே வெறுப்பு, பயம் ஏற்படுவது உண்மைதான். அந்த விஷயங்களை காட்டி நடிப்பது சற்று கஷ்டமாகத்தான் உள்ளது. சீரியல்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. குறும்படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறேன். அதை பார்த்தவர்கள் ‘ரோஜக் கூட்டம்' சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கதையும் நன்றாக இருந்ததால் ஓ.கே சொல்லி விட்டேன். மற்றபடி சீரியல் எனக்கு புதிய இடம். தற்போது ‘யாதுமாகி நின்றாய்' என்ற புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அந்த சீரியல் ஜீ டி.வி.யில் விரைவில் வர இருக்கிறது. அந்த சீரியலும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தரும். சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு சீரியல்தான் என்றார் நீரஜா.


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0 %AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8 8+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0 %AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF% 87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E 0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF% 8D&artid=/WB93lTKdsk=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=
[/tscii:b759a6be80]

R.Latha
17th April 2009, 01:52 PM
[tscii:908d5470a3]‘சீரியல்களில் மட்டுமே திருப்தி' அகிலா.

சினிமாக்களுக்கு இருக்கிற வரவேற்பைப் போல் சீரியல்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சீரியல்களின் கதை களம் இன்னும் மாறவில்லை. அதை மாற்றினால் சீரியல்களுக்கான வரவேற்பு இன்னும் கூடும் என்கிறார் சீரியல் நடிகை அகிலா. சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது. சீரியல்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்தும் மாறியிருக்கிறது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தி சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. அவ்வளவுதான் சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் பெருகி வரும் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கி வருகிறது. இந்த போட்டி ன்னை போன்ற நடிகைகளுக்கு நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியிடும் எந்த துறையும் வருங்காலத்தில் சிறந்து விளங்கும். தற்போது ‘சிவசக்தி' தொடரில் வீட்டில் இருந்து வெளியேறி தன்னம்பிக்கையுடன் வாழும் காஞ்சனா என்ற கேரக்டரிலும், ‘ரோஜாக் கூட்டத்தில்' திருமணமாகி குடும்பத்தை சிறப்பாக நடத்தும் லீனா என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறேன். இரண்டுமே சவால் நிறைந்த கேரக்டர்கள் ஆகும். வேறு எந்த சீரியல்களிலும் இப்போது நடிக்கவில்லை. இந்த கேரக்டர்களை சிறப்பாக செய்தாலே போதும். பொழுது போக்கு என்று எனக்கு தனியாக எதுவும் கிடையாது. நடிப்பதே பொழுதுபோக்காக இருப்பதால் எப்போதும் அதை பற்றிதான் சிந்தனைகள் இருக்கிறது. இந்த இரண்டு சீரியல்களை சரியாக செய்யவே நேரம் போதவில்லை. இந்த சினிமாவில் அந்த நடிகர் நடித்திருக்கிறார். அதனால், அதை பார்க்க வேண்டும் என்று சொல்லுவதை போல், சீரியல்களும் ஆகி விட்டன. இது சீரியல்களின் வெற்றி. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை காத்திருக்க முடியாது. இப்போதைக்கு சீரியல்களில் மட்டும்தான் திருப்தி என்றார் அகிலா.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0 %AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B 3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0 %AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87+%E0%AE% A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0 %AE%A4%E0%AE%BF&artid=Sl87t2wdMBA=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=

[/tscii:908d5470a3]

aanaa
25th April 2009, 05:41 AM
[tscii:da606fd56f]
'ஆண்களின் வீரம் பெண்களைக் கவரும்'

சிநேகா

ஒரு மாலை பொழுதில் சிநேகாவை, சென்னை ஆலப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அந்த வீட்டில் தனக்காக தனி அலுவலகமே அமைத்திருக்கிறார் சிநேகா! அந்த அலுவலகத்தில் அவருடனான சந்திப்பில் படபடவென மனம் விட்டு யதார்த்தமாகப் பேசினார். அந்தப் பேச்சில் எந்தத் தடங்கலும், தடையும் ஏற்படவில்லை.

நீங்க இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி சொல்லுங்க?

""பவானி', "முரட்டுக்காளை', "கோவா', "நூற்றுக்கு நூறு' எனப் பல படங்களில் நடித்து வர்றேன். இதில் "முரட்டுக்காளை'யின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. மே மாதத்திலிருந்து "கோவா' படத்தோட ஷூட்டிங் ஆரம்பமாகும். அதற்குப் பிறகு "நூற்றுக்கு நூறு', அதற்கடுத்து "ஆட்டோகிராஃப்-பாகம்-2' என வரிசையாக போகும்.

"பவானி'யில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த கேரக்டரில் நான் நடித்ததைப் பார்த்து நிறையப் பேர் "பில்டப்' பண்ணிப் பேசினாங்க. அதாவது, நான் ஹீரோக்களுக்கு சமமாக பறந்து பறந்து அடிக்கிறேன், அவங்களுக்கு இணையாக சண்டை போடறேன்னு!

அதெல்லாம் பொய். ஹீரோக்கள் எல்லாம் எவ்வளவு உயரத்துல இருக்காங்க. சில ஹீரோக்கள் ஃபைட்டுக்காகவே பேசப்படுறாங்க. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றிய இந்த "பில்டப்' எல்லாம் சுத்த பொய். என்னோட முதல் ஆக்ஷன் படம் "பவானி'. இதில் ஒரு ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி என்னை அவங்களுடன் கம்பேர் பண்ணவே கூடாது.

சினிமாவில் ஆண்கள் என்றால் கம்பீரம், பெண்கள் என்றால் கவர்ச்சி என்றுதானே காட்டுகிறார்கள்?

அப்படின்னு சொல்ல முடியாது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களும் வந்துகொண்டுதானே இருக்கு? ஆனா, ஆண்களின் வீரம் பெண்களைக் கவரும். அதுபோன்று, பெண்களின் அழகு ஆண்களைக் கவரும். இது அந்த காலத்திலிருந்தேப் பேசப்பட்டு வரும், பார்க்கப்பட்டு வரும் விஷயம்.

அதை நான் எப்படி மாத்த முடியும். "பவானி' படத்தைப் பொறுத்தவரையில் அந்த கதாபாத்திரத்துக்கு என்னால் எவ்வளவு ஆக்ஷன் பண்ணமுடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். இதில் மூணு ஃபைட் இருக்கு. அறிமுக காட்சியே புதுசா இருக்கும். வழக்கமாக முடியை தூக்கிப் போட்டுக்கிட்டு சிரிக்கிற சிநேகா இல்லாமல், புதுமையான சிநேகாவை இப்படத்தில் பார்க்கலாம்.

விஜயசாந்திக்கு "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படம் ஆக்ஷன் நடிகை என்ற முத்திரையைத் தந்தது. அது மாதிரி ரசிகர்களைக் கவர வேண்டும் என்று இந்தப் படத்தில் நடிக்கிறீங்களா?

அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கல. இது அந்தப் படத்தோட ரீ-மேக். இந்தப் படத்தில் நான் விஜயசாந்தி அளவுக்கு பேர் வாங்குவேனான்னு எனக்குத் தெரியாது. ஒரு வித்தியாசமான படம் பண்ணனும்னு ஆசைப்பட்டு பண்றேன்.

அதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியாது. என்னால எவ்வளவு சிறப்பாக கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுப்பதற்காக நிறைய சிரத்தை எடுத்து நடித்திருக்கேன். நான் விஜயசாந்திக்கு நிகராக பண்ணியிருக்கேனா? இல்லையா? என்பதை படம் பார்த்து ரசிகர்கள் முடிவு செய்வாங்க.

சண்டைக் காட்சிகளில் எப்படி நடித்திருக்கிறீங்க?

இந்தப் படத்துக்கு "தளபதி' தினேஷ்தான் ஸ்டண்ட் மாஸ்டர். அவர் என்னை நடிக்க வைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டார். அவருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லணும். ஒரு பெண்ணால் எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். என்னைவிட பெரிய உருவத்துல இருக்கிற ஒருவரை அடிக்கும்போது எப்படிப்பட்ட எக்ஸ்பிரஷன்ûஸ வெளிப்படுத்தணுமோ அப்படி வெளிப்படுத்தி நடித்திருக்கேன்.

ஓடும்போதுகூட இப்படி ஓடினா நல்லா இருக்கும், அப்படி ஓடினா நல்லா இருக்கும்னு சொல்லி நடிக்க வைத்திருக்காங்க. ஏன்னா, கத்துக்குட்டிதனமாக இருக்கக்கூடாது அல்லவா? நான் ஆக்ஷனில் நல்லா பண்ணியிருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க. அது எப்படி வந்திருக்குன்னு படம் வரும்போதுதான் தெரியும். சில காட்சிகளில் ரோப் கட்டி எல்லாம் நடிச்சிருக்கேன். இதெல்லாம் வித்தியாசமான அனுபவமா இருந்தது.

"பவானி' வேடத்துக்காக போலீஸ் டிரெஸ் போட்டதும் எனக்குள் ஒரு வீரம் வந்துடுச்சு. நடக்குற ஸ்டைலே மாறிப்போச்சு. ஒரு போலீஸ் அதிகாரிக்கான கம்பீரம், மிடுக்கு தானாகவே வந்துடுச்சுன்னு சொன்னாங்க. அது எப்படின்னு எனக்கே தெரியல.

அது மாதிரி "பார்த்திபன் கனவு' படம் பண்ணும்போது டைரக்டர் கரு. பழனிப்பன் சார் கேட்டார், ""பேண்ட், சட்டை போட்டு ஜனனி கேரக்டராக வரும்போது படு ஜாலியாக வர்றீங்க, அப்புறம் சேலை கட்டி வரும்போது அடக்கமாக உங்க நடையும், ஸ்டைலும் வேறு மாதிரி இருக்கே, இது எப்படி?''ன்னு. இதுதான் என்னோட பிளஸ்ன்னு நினைக்கிறேன்.

இனிமேல் ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் நடிப்பீங்களா?

இல்லை... இல்லை...! நான் தனிப்பட்ட ஒரு இமேஜில் சிக்க விரும்பல. ஹோம்லியாவும் நடிப்பேன், நல்ல கதை, பாத்திரம் என்றால் ஆக்ஷனிலும் நடிப்பேன். இப்போது வருஷத்துக்கு ஆறு, ஏழு படங்கள் பண்றேன். எல்லாம் ஆக்ஷன் படங்களாக பண்ண முடியுமா என்ன? அப்படி பண்ணினால் அது போரடித்து விடும்.

நீங்க முதலில் நடித்த "ஆனந்தம்', "என்னவளே' போனற படங்கள் குடும்பப் பாங்காக அமைந்ததால் உங்களை அதே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து விட்டார்களா?

ஆமாம். அது உண்மைதான். அதுல எனக்கு சந்தோஷமும்கூட! தமழ்நாட்டுக்கு எவ்வளவு கதாநாயகிகள் வந்தாலும் சினேகாவுக்குன்னு ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை ரசிகர்கள் எனக்கு கொடுத்திருக்காங்க. இது சந்தோஷமான விஷயம்.

ஹோம்லியான வேடங்கள் செய்து இப்போது ஆக்ஷன் வேடங்கள் பண்றதால இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். என்னை ஹோம்லியா பார்க்கவும் ஒரு சாரர் இருக்காங்க, ஆக்ஷனில் பார்க்கவும் ஒரு கூட்டம் இருப்பாங்க. யாரை இழக்கவும் நான் விரும்பல. அதனால் நான் கண்டிப்பா ஹோம்லியாகவும், கிளாமராகவும், ஆக்ஷனும் பண்ணுவேன்.

"பவானி' படத்துல விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன், "முரட்டுக்காளை'யில் ரதி மாதிரி கிளாமரா?

சூப்பர் கிளாமர். பாவாடை, தாவணியில் சூப்பராக வருவேன். செல்வபாரதி இயக்கத்துல, சுந்தர்.சி.யுடன் நடிப்பது நல்லா இருந்தது. ஏற்கனவே செல்வபாரதி டைரக்ஷன்ல "வசீகரா' படத்துல நடித்திருக்கேன். "பவானி'க்கும், "முரட்டுக்காளை' கேரக்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மேக்-அப்ல இருந்து, டிரெஸ், ஹேர் ஸ்டைல், நடிப்புன்னு எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

பழைய "முரட்டுக்காளை' படத்துல ரதி நல்லா கிளாமர் பண்ணியிருப்பாங்க. நான் என்னால எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். ஒவ்வொரு படத்திலும் எனக்கு வித்தியாசமான பாத்திரங்கள் அமையுது. "பள்ளிகூடம்' படத்தில் என்னை கோகிலாவாக பார்த்தாங்க. "பவானி'யில் பவானியாக பார்ப்பாங்க. எந்தப் பாத்திரம் என்றாலும் சிநேகா நல்லா நடிச்சிருக்காங்கன்னு எல்லோரும் சொல்லணும். அதுதான் எனக்குத் தேவை.

"கோவா' படத்தில் "படையப்பா' ரம்யாகிருஷ்ணன் மாதிரி வில்லியாக நடிக்கிறீங்களாமே?

அதை முழுக்க வில்லி பாத்திரம் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் நெகட்டீவான ரோல், அவ்வளவுதான். ஆனால் ரொம்பவும் நல்ல பாத்திரம். வெங்கட் பிரபு சார் கதை சொல்லும்போது என் கேரக்டரை குறிப்பிட்டு ""இதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியாது, கதையை கேளுங்க'' என்றார். அப்போது, எனக்கும் நெகட்டீவ் ரோல் பண்ணனும்னு ஆசை இருக்கு. நான் பண்றேன்னு சொல்லி உடனே ஒத்துக்கொண்டேன்.

இப்போது தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறீங்க இல்லையா?

"பவானி' படத்தை தெலுங்கிலும் எடுக்கிறாங்க. இது தவிர இப்போது வேறு எந்தத் தெலுங்கு படமும் பண்ணல. தமிழ் ரசிகர்கள்கிட்ட எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குதோ, அது மாதிரிதான் தெலுங்குலயும். தமிழ்ல பண்ற மாதிரிதான் அங்கேயும் படங்களை தேர்வு பண்றேன்.

தெலுங்கில் அதிகமா கிளாமர் எதிர்பார்ப்பாங்களே?

ஆமாம். அங்கே கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க. அப்படி என்னால பண்ண முடியாது. எனக்கேற்ற வேடங்கள் என்றால் பண்ணிட்டு போவேன். மற்றபடி வல்கரா நடிக்க மாட்டேன்.

இனிமேல் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்கப்படும் படங்களில்தான் நடிப்பீங்களா?

அதை நான் முடிவு செய்ய முடியாது. ரெண்டு மொழியிலயும் ஒரே நேரத்துல எடுக்கும்போது, ரெண்டு மொழிக்கும் தகுந்த மாதிரி வியாபாரம் இருக்கும். அப்போது அதுக்கு தகுந்த மாதிரி, கதையைப் பண்ணனும். அப்படி அமையும்போது கண்டிப்பா நடிப்பேன.

கல்யாணம் எப்போ?

இன்னும் மூணு வருஷம் ஆகலாம். நான் சினிமா துறைக்கு வந்து எட்டு வருஷம் ஆயிடுச்சு. எங்க வீட்ல யாரும் இதுவரை என்னை திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தல. எது நடக்கணுமோ அது நடக்கும், எப்போ நடக்குமோ அப்போ கண்டிப்பா நடக்கும்.

பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா? அல்லது காதல் திருமணமா?

தெரியல. ஆனா, எனக்கு நடக்கும் கல்யாணம் எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கும். அதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்றேன்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பீங்களா?

எல்லாத்தையும் காலம் தான் தீர்மானிக்கும். நாம் என்ன சொல்ல முடியும்? வாழ்க்கை போகிற வழியில் போக வேண்டியதுதான்'' என்றார்.

சந்திப்பு : ஜி. பாலன்



தினமணி் [/size][/tscii:da606fd56f]

R.Latha
27th April 2009, 01:09 PM
[tscii:b11cad7968]
‘மெட்டி ஒலியை தாண்டும் வளையோசை'

27 Monday

சீரியல்களில் நடித்த அனுபவங்களில் சில வாழ்க்கைக்கு பயன்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் சில சீரியலுக்கு பயன்படுகிறது. எது எப்படியோ எனக்கு இரண்டுமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் ‘மெட்டி ஒலி' உமா மகேஷ்வரி.

‘மெட்டி ஒலி' என்கிற மெகா ஹிட், என் சீரியல் பயணத்தில் என்னை நானே வியந்து பார்க்கிற ஒரு விஷயம். சரியான கதை, கதைக்கு ஏற்ற நடிகர்கள் என எல்லாமே அமைந்து விட்டால் சீரியல்கள் ஜெயிக்கும் என்பதற்கு அந்த சீரியலே ஒரு உதாரணம்.

மெட்டி ஒலிக்கு பிறகு ‘நம்ம குடும்பம்', ‘மஞ்சள் மகிமை', ‘சிவசக்தி' என பல தொடர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ‘வளையோசை' என்ற சீரியலும் சேர்ந்திருக்கிறது.

எனக்கு வருகின்ற கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. அதில், என்னுடைய கேரக்டர்களும் அப்படிதான். வளையோசையில் சுசீலா எனும் கேரக்டரில் வருகிறேன். ஒரு பெண்ணுக்கு வளையல்கள் எவ்வளவு முக்கியமோ அது போல்தான் வளையோசைக்கு என் கேரக்டரும்.

‘மெட்டி ஒலி' என்ற பெரிய ஹிட்க்கு பிறகு என்னை எல்லோரும் ‘மெட்டி ஒலி' மகேஷ்வரி என்றுதான் அழைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சீரியல்களுக்கு மக்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்பதற்கு மெட்டி ஒலியே சாட்சி. அது என் வாழ்க்கையின் சாட்சி.

மறுபடியும் சன் டி.வி.யில் ‘மெட்டி ஒலி' மறு ஒளிபரப்பு செய்யபடுகிறது. அதை மக்கள் மீண்டும் பார்க்கிறார்கள் என்கிற போது பெருமையாக இருக்கிறது. மெட்டி ஒலியின் வெற்றியை நான் கணக்கில் வைத்து கொள்ளவில்லை. அதை தாண்டிய வெற்றி தேவைப்படுகிறது. அதை ‘வளையோசை' கொடுக்கும் என நினைக்கிறேன்.

வளையோசையும் மெட்டி ஒலி போன்ற குடும்ப கதை அம்ச உள்ள சீரியல் என்பதால் அதை என்னால் சொல்ல முடிகிறது. வீட்டில் இருப்பதற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. ஏனென்றால் இரண்டு இடத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார் உமா மகேஷ்வரி.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0 %AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B2%E0%AE% BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E 0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE %B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E 0%AF%88&artid=wZmijy|dBzE=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:b11cad7968]

R.Latha
4th May 2009, 03:54 PM
[tscii:94e9571da0]என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணாதீங்க!'

First Published : 04 May 2009 11:06:00 AM IST

Last Updated :

‘மாயி' படத்தில் ‘வாம்மா... மின்னல்' என்றதும் மின்னலாய் வந்து மாயமாய் மறைந்து போனவர் தீபா. அதன் பிறகு எங்கே போனார் எனத் தேடினால் ‘மின்னல்' தீபா என்ற அடைமொழியுடன் சீரியல்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இனி அவரே....

‘மாயி' படத்தின் ‘வாம்மா... மின்னல்' காமெடி, பட்டி தொட்டியெங்கும் என்னைக் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு வந்த சினிமா வாய்ப்புகள் எல்லாம் என்னை முழுமையான காமெடி நடிகை ஆக்கிவிடும் போலிருந்தது.

காமெடி என்ற வட்டத்துக்குள் இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்பதால்தான் என்னை நீங்கள் சினிமாவில் பார்க்க முடியவில்லை. இல்லையென்றால் சினிமாவில் நானும் ஒரு ரவுண்டு வந்திருப்பேன்.

இப்போது சீரியல் உலகில் எனக்கென தனி இடம் இருக்கிறது. அதைக் காப்பற்றி கொள்ளவே பம்பரமாய் சுற்றி வருகிறேன். தமிழில் ‘வளையோசை', ‘பொய் சொல்ல போறோம்', தெலுங்கில் ‘சந்திரலேகா' என அருமையான கதைகளைக் கொண்ட தொடர்கள் கிடைத்திருக்கின்றன.

‘வளையோசை'யில் ஆர்த்தி என்ற கேரக்டரில் கதாநாயகனின் தங்கையாக நடிக்கிறேன். என்னுடைய கேரக்டர் கதையில் சில திருப்பு முனைகளை ஏற்படுத்தப் போகிறது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘வளையோசை'யில் இப்போதுதான் கதை வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. என் கேரியரில் இந்த தொடர் நல்ல பெயரை வாங்கித் தரும்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் எனக்கு திருப்தியாக இருக்கும் கேரக்டரில் மட்டும் நடிப்பேன்.

காதல், திருமணம் என எதற்குமே இப்போது அவசரமில்லை. அதற்கான காலம் வரும்போது அது நிச்சயம் நடக்கும். அதற்குள் சினிமாவில் சாதித்து விட்டு குடும்பத்தோடு அதைப் பார்க்க வேண்டும் என்றார் ‘மின்னல்' தீபா.
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0 %AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF% 8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E 0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%80%E0%AE %AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3% E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE %99%E0%AF%8D%E0%AE%95!&artid=ADqvhsUXWys=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:94e9571da0]

aanaa
9th May 2009, 06:06 PM
மாற்றங்களை ரசிக்கிறேன்'

First Published : 09 May 2009 09:51:00 PM IST

Last Updated :

விரும்பிய நேரத்தில் விரும்பியது எல்லாம் கிடைக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். கிடைக்காத நேரத்தில் மனம் சஞ்சலப்படுவதும், கிடைக்கும் போது துள்ளி குதிப்பதும் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கிறது. அது போல்தான் என் வாழ்க்கையும் என்கிறார் நடிகை காயத்ரி ஜெயராம்.

""மனதை திருடி விட்டாய்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எனக்கு சினிமா உலகம் மிகவும் பிடித்திருந்தது. சினிமா நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இன்று வரைக்கும் எனக்கு சினிமா பிடிக்கும். அதில் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. இப்போது இல்லை. காரணம் மாற்றங்கள்தான்.

சின்ன வயதில் இருந்தே நீச்சல், டைவிங் இதுவெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால், சினிமாவை விட அதன் மீதுதான் எனக்கு காதல் இருந்தது. அதுதான் என்னை சினிமாவில் இருந்து சற்று தள்ளி வைத்து விட்டது.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுமையாக முழுக்கு போட்ட என்னை நீச்சல், டைவிங் என வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு இழுத்து போய் விட்டது. இப்போது மலேசியாவில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான நீச்சல் மற்றும் டைவிங் பள்ளியில் டீச்சராக இருக்கிறேன். அந்த ஆர்வம் என்னை சினிமாவில் இருந்து முழுமையாக நீக்கி விட்டது.

வருடத்தில் ஆறு மாதம் சென்னைக்கு வந்து போவேன் அப்போதுதான் என்னை விஜய் டி.வி.யின் "ச்சீயர் லீடர்ஸ்' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க சொன்னார்கள். நானும் ஒ.கே. சொல்லிவிட்டேன். இப்படி கிடைத்ததுதான் இந்த நடுவர் பதவி.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மறுபடியும் மலேசியாவிற்கு பறந்து விடுவேன். திரும்பி வரும்போது எது கிடைக்கிறதோ அதை செய்வேன். அதில் எனக்கு திருப்தி இருந்தால் மட்டும்.

இனி சினிமா, சீரியல்களில் பார்ப்பது என்பது முடியாத விஷயம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என் வாழ்க்கையில் சினிமா என்பதும் ஒரு இடம் அதில் நான் இருந்தேன் அவ்வளவுதான். இப்போது மாற்றங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்'' என்றார்.


நன்றி: தினமணி

aanaa
16th May 2009, 02:43 AM
குடும்ப கதையில் உள்ள சௌகரியம்': ஆனந்த கண்ணன

First Published : 12 May 2009 11:36:46 PM IST

Last Updated : 13 May 2009 02:04:51 AM IST

சின்னத் திரை ஆனந்தகண்ணன் தற்போது "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

""சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எனக்கு இயற்கையிலே நாட்டுப்புறவியலை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. அதற்காக அப்பாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு சென்னை வந்து கூத்துப் பட்டறையில் சேர்ந்து, வந்த வேலையை பார்த்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் பாக்கெட் மணி தீர்ந்து விடவே வந்து சேர்ந்த இடம் தான் மீடியா.

மீடியாவில் முன் அனுபவம் இல்லையென்றாலும் எனக்கு தெரிந்தவற்றை வைத்து சரியாக செய்தேன். அதற்கு மக்களும் சரியான அங்கீகாரம் கொடுத்தார்கள். அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவன் நான்.

அதன் பிறகு சீரியல், ரேடியோ என வாழ்க்கை ஏதோ ஒரு பாதையில் பயணமாகி கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் தினமும் அமெரிக்க மாப்பிள்ளை, அத்தை பையன், ஹீரோவின் நண்பன் என ஆயிரம் சினிமா கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கும். அதில் எதிலும் மனசு ஒட்டவே இல்லை.

திடீரென்று ஒரு நாள் இயக்குநர் பாலு என்னிடம் ஒரு கதை சொன்னார். பாலு "காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற ஹிட் அடித்தவர். அவர் கதையை சொல்லி முடித்து விட்டு கண்ணன் நீங்கதான் ஹீரோ என்றார். நானும் ஒ.கே. சொல்லிவிட்டேன்.

"இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' என அந்தக் கதைக்கு பெயர் வைக்கப்பட்டு இப்போது படமாகி கொண்டிருக்கிறது. சும்மா சாதரணமாக வந்து விட்டு போகும் ஒரு குடும்ப படம். படத்திற்காக மற்ற ஹீரோக்கள் செய்வதை போல் பத்து கிலோ, இருபது கிலோ என உடல் எடையை குறைக்க வேண்டியதில்லை என்பது குடும்பக் கதைகளில் உள்ள சௌகரியம்.

எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு குடும்பப் படங்கள் இங்கே அதிர்வுகளை எற்படுத்தி இருக்கிறது. அது போல், இந்தப் படமும் தமிழ் சினிமாவில் சில அதிர்வுகளை எற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிங்கப்பூரிலிருந்து எதற்கோ வந்த என்னை காலம் எங்கோ இழுத்து விட்டிருக்கிறது. இன்னும் எங்கோ கொண்டு போகிறதோ அங்கே போய்தானே ஆக வேண்டும். பயணங்களின் தொகுப்புதானே வாழ்க்கை? நான் பயணிக்க ரெடி ஆகி விட்டேன்'' என்கிறார் ஆனந்த கண்ணன்.

நன்றி: தினமணி

aanaa
16th May 2009, 02:51 AM
[tscii:7971e52e1b]Shruthi daughter of Kamal Hassan who has been given a chance to music direct the film Unnaipol Oruvan, is always casual and has no tension at all. She has no fears over her entry in the music line for the film and she at any time never had the tension that one more responsibility of becoming an actress for the film Luck, being produced in the Bollywood.

She says, “ I never had the fear for becoming a music director, it was my father Kamal Hassan who alone recommended me to music direct Unnaipol Oruvan. Of course, I am always careful to earn the name of a good music director. I also wanted to become good actress. I have self-confidence in me, that I could prove a good music director”.

She adds: Because of my parents’ inducement, I have learnt Hindustani Music, and the music has become inseparable from me. I was about to act with Madhavan in a film, and for some reasons, I had to abandon the plan. The genes of my father, runs through the veins of myself. If my father is assigned any duty or job, he would take care of those things and would finish them in an appreciable way. This I have notice on several occasions, and I too want to follow his ideals.

When asked about her the modern style with modern dresses, she said that she had been wearing it quite a long time and it was her usual custom to dress like that. “ I can’t change my style, since my childhood and it is like asking a person why he brushes his teeth every day in the morning.

“ My father used to advise me always to work sincerely and also cautioned me not to become jealousy over one’s praise. These advises are like weapon saving me.

When asked about her sister Akshara, Shruthi said she had been concentrating on her studies, besides she had been learning Kuchipudi dance. “After finishing her studies, it is she who has to decide and choose her career” says Shruthi.

If there is any controversy will you support your father? Our reporter asks this question. Shruthi smilingly replies, “ I always used to give my moral support to my dad”.[/tscii:7971e52e1b]

aanaa
30th May 2009, 08:41 PM
வில்லியாக நடிப்பதில்தான் திருப்தி' - நீலிமா ராணி.




"சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்' என்கிறார் "கோலங்கள்' தொடரில் வில்லி ரேகாவாக மிரட்டிக்கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி.

""இப்போது நிறைய பேர் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். காரணம், ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு எல்லா விஷயங்களிலும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. காமெடி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவேலையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.

ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முகங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம்.

இப்போது "கோலங்கள்', "பராசக்தி' ஆகிய தமிழ் சீரியல்களிலும் "மாயா' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே எனக்கு திருப்தியாக இருக்கிறது. இதைத் தவிர தற்போது வெளியான "நியூட்டனின் 3-ம் விதி', "ராஜாதிராஜா' படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் "ஜக்குபாய்', "புகைப்படம்', "ரசிக்கும் சீமானே' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

சீரியல்களில் பெண்களையே முன்னிலைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பதுதான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

கோலங்களில் என்னுடைய ரேகா கேரக்டர் வில்லி ரகத்தை சார்ந்துதான் அமைந்திருக்கிறது. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையான காதலி போன்ற கேரக்டர்கள் கொடுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிறது. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்'' என்றார் நீலிமா ராணி.



நன்றி: தினமணி

aanaa
31st May 2009, 06:59 AM
[tscii:a8ed8350e7]
வெளியுலகம் அதிகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று வீட்டுக்குள் உலகத்தை கொண்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். கேலக்ஸி பப்ளிகேஷன் பதிப்பாளர் + வெளியீட்டாளர். இருக்கும் இடம் தெரியாம இருக்கணும் என்று வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று சாயா விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி.

ஒரு கார் ஷெட்டில் இரண்டு டேபிள், சேருடன் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி இன்று பல கார்கள் நிற்கும் வகையில் போர்டிகோ அமைத்திருக்கிறது. பதினைந்து வருட அனுபவத்தில் செய்தி, பொழுதுபோக்கு என்று பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது.


கேலக்ஸிக்கு முன்னுதாரணம் என்று எதுவுமில்லை என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் இன்று இது மாதிரி நிகழ்ச்சி தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது கேலக்ஸி.

ஒரு நிகழ்ச்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சென்றது கேலக்ஸிதான். பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியை கனடா, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறது.

இப்போதெல்லாம் கையில் பணம் இருந்தால் டிவியில் புரோகிராம் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புரடக்*ஷன் பண்ணுறது ஈசி. அந்த புரோகிராமை தூக்கி நிறுத்துவதுதான் கஷ்டம். அதை திறம்பட செய்து வரும் கேலக்ஸி, இன்னும் பல நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

சேரும் இடத்தை பொறுத்தே நதியின் சிறப்பு என்பார்கள். ரமேஷ்பிரபாவை சந்தித்த பிறகுதான் என் வாழ்க்கை சிறந்தது என்கிறார் விஜயலட்சுமி.

’’பொறந்தது மூணும் பொண்ணுங்க என்பதால அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க. ரெண்டு அக்காவை விடவும் எனக்கு கொஞ்சம் கவனிப்பு அதிகம் இருக்கும். நடுத்தர குடும்பம்தான் ஆனா அம்மா(ஜெயா), அப்பா(ஆறுமுகம்) எங்களை கஷ்டம் இல்லாம வளர்த்தாங்க.

. ரொம்ப தூரம் போய் படிக்கக்கூடாதுன்னு வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்கூலில்தான் படிக்க வச்சாங்க.சென்னை மண்ணடி ஏ.ஆர்.எஸ்.ஸ்கூலில்தான் +2வரை படிச்சேன்.

நான் ஆசைப்பட்ட கல்லூரி எல்லாம் பஸ்ஸில் போய் படிக்கும் தூரத்தில் இருந்ததால அங்க போய் படிக்க அனுமதிக்கல. வீட்டுக்கு பக்கத்திலே நடந்து போகும் தூரத்தில இருந்ததால பாரதி பெண்கள் கல்லூரியில பி.காம் படிச்சேன்.

எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா நானும் என் ரெண்டு அக்காவும் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை அதிகமா படிச்சது இல்லை. டெய்லி பேப்பர் கூட வீட்டுக்கு வாங்கிட்டு வரமாட்டாங்க அப்பா. அதுல ரொம்ப மோசமான செய்தி எல்லாம் வரும்... அதனாலதான் அப்பா வாங்கிட்டு வரலன்னு அம்மா சொல்லிடுவாங்க. இதனாலதான் டிவியும் வாங்கல.

எங்க பூர்வீகம் கும்பகோணம் பக்கம் குடவாசல். ஆனா துணி வியாபாரத்தால சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டாங்க அப்பா. ரெண்டு அக்காவையும் சென்னையிலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. பெரிய அக்காவுக்கு 10th படிச்சதும் கல்யாணமாச்சு. அடுத்த அக்காவுக்கு +2 முடிச்சதுமே கல்யாணம் ஆச்சு. நான் மட்டும் நிறைய படிச்சு வேலைக்கு போய்தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.

பஸ்ஸூல போகுற தூரம் தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி.காலேஜ். ஆனாலும், மல்லுக்கட்டி வீட்டில் சம்மதம் வாங்கிட்டேன். எம்.காம். சேர்ந்தேன். ரெண்டு நாள் காலேஜ் போனேன். அப்ப ஒரு யோசனை வந்துச்சு. இன்னும் ரெண்டு வருசம் படிச்சு காலத்த எதுக்கு ஓட்டிக்கிட்டு... பேசாம இப்பவே வேலைக்கு போயிட்டா என்னன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

காலேஜ் விட்டதும் தேனாம்பேட்டையிலிருந்து மண்ணடி போறதுக்குத்தான் பஸ் ஏறினேன். மவுண்ட் ரோடு வழியாதான் பஸ் போகும். ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆபீஸ் மவுண்ட் ரோட்டில்தான் இருக்கு. என் தோழி சுபா அங்கே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா. அவள பார்த்து வேலை வி்*ஷயமா சொல்லலாம்னு போனேன். அவளோ டக்குன்னு என்னை மதன் சார்கிட்ட கொண்டு போய் நிறுத்திட்டா.

ஆனந்த விகடனில் (96ல்) எனக்கு எடிட்டோரியல் செகரட்டரி போஸ்டிங் கிடைச்சது. ஒரு வருஷம் அங்க வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துலதான் அவர (ரமேஷ்பிரபா) சந்திச்சேன். விகடன் மாணவர் திட்ட நிருபரா இருந்து அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரா அங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். விகடனுக்கு பக்கத்திலே இருந்த கிளாரியன் ( clarion) விளம்பரக் கம்பெனியில் முழு நேரமா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார்.

காலேஜ் படிக்கும் போது படிப்பு, வேலைவாய்ப்பு சம்பந்தமாக அவர் எழுதின புத்தகங்கள் சில தோழிகள் மூலமாக படிச்சிருக்கேன். ரொம்ப பெரிய ஆளுன்னு நினைச்சிருந்தேன். நேரில் பார்த்தப்போ ரொம்ப சின்னப்பையனா இருந்தார். இந்த ஆச்சர்யத்தைதான் முதல் சந்திப்பில் அவர்கிட்ட சொன்னேன்.

விகடனில் அவர் நிறைய பிஸினஸ் தொடர்கள் எழுதுவார். அது சம்பந்தமாக அடிக்கடி அவர் அங்கு வருவார். நல்ல பழக்கம் இருந்தது. ஒரு வரஷத்துக்கு பிறகு நியூ இந்தியா கம்பெனியில் எனக்கு ஜாப் கிடைச்சது. அவருக்கும் ‘உள்கா’ விளம்பரக் கம்பெனியில் பிராஞ்ச் மேனேஜர் போஸ்டிங் கிடைச்சது. எப்போதும் போல யதார்த்தமாக சந்திச்சுக்கிட்டோம்.எங்க வீட்டுக்கு எல்லாம் அவர் அடிக்கடி வருவார். அம்மா,அப்பாவுக்கு அவர் மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு.

யதார்த்தமான சந்திப்புகள் பிறகு அர்த்தமுள்ள சந்திப்புகளாக மாறிப்போச்சு. 90ல் இரு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இனம் வேறுங்கிறதால அவுங்க பக்கம் கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. அப்புறம் எல்லாம் சரியாச்சு’’ என்று சொல்லும் விஜயலட்சுமிக்கு, ரமேஷ்பிரபா பிஸினஸ் சம்பந்தமாக எழுதின புத்தகங்களில் ரொம்ப இம்ரஸ் பண்ணினது ‘எதையும் விற்கும் உலகம்’! இவரும் அவரும் சேர்ந்து இதைத்தான் விற்கணும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நேரம்.

‘’காலேஜ் சமயத்துல அவர் நிறைய காலேஜ் புரோகிராம் பண்ணியிருக்கிறார். அதே மாதிரி பண்ணலாம்னு முடிவெடுத்து சன் டிவியில் சொன்னார். ஓகே ஆச்சு.

93ல் வார்த்தை விளையாட்டுன்னு சன் டிவியில் புரோகிராம் பண்ணினார். அந்த புரோகிராமுக்கு நான் கோ-ஆர்டினேட்டரா இருந்தேன்’’ என்கிறார்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெகு சில மட்டுமே இருந்தன. அதுவும் தூர்தர்ஷன் டிவிக்குதான் அவை தயாரித்து கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் கேலக்ஸி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலாக நிகழ்ச்சி தயாரித்து கொடுத்ததை சொல்கிறார்.

‘’ராஜ் டிவியில் 94ல் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ புரோகிராம் பண்ணினோம். சிலோன் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த எம்.எச்.அப்துல் ஹமீது சார்தான் அந்த புரோகிராமை தொகுத்து வழங்கினார். நல்ல வரவேற்பு இருந்துச்சு அந்த புரோகிராமுக்கு.

அவர்(ரமேஷ் பிரபா) திருச்சி பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் பிறந்தவர். ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர். இந்த தலைமுறையில வசதி கொஞ்சம் குறைவு. அப்படியும் இவருக்கு பூர்வீக சொத்து இருந்துச்சு. ஆனாலும் அந்த பணத்துல கேலக்ஸியை ஆரம்பிக்கல. கையில் இருந்த கொஞ்ச பணத்தை வைத்துதான் ஆரம்பிச்சோம். ஆழ்வார்பேட்டையில் ஒரு கார் ஷெட்டில் தான் கேலக்ஸி ஆபீஸ். இரண்டு டேபிள் சேர் மட்டும் இருக்கும். அவரு பிஎஸ்சி, பி.டெக், எம்பிஏன்னு நிறைய படிச்சிருக்கிறார். அந்த படிப்பு, அவரோட திறமை, என்னோட ஒத்துழைப்புன்னு எல்லாம் சேர்ந்து கேலக்ஸியை வளர்த்தெடுத்தது’’என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார். 97ல் சொந்த நிறுவனம் ஓரளவிற்கு வளர்ந்து விட்டதால் அதுவரை தான் பார்த்து வந்த நியூ இந்தியா வேலையை விட்டு விலகியிருக்கிறார். அந்த சமயத்தில் நியூ இந்தியாவில் அவர் வாங்கிய சம்பளத்தொகை பன்னிரண்டாயிரம்.

’’சிலோன் ரேடியோவுக்கு ஏஜண்ட்டாக இருந்து விளம்பரமும் புரோகிராமும் செஞ்சு கொடுத்தோம். அவரோட திறமையை பார்த்து சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பு வந்தது அவருக்கு. அப்புறம் விஜய் டிவியில் டெமோ பிஸினஸ் புரோகிராம் பண்ணினோம்.

சன் டிவியில பாட்டுக்கு பாட்டு ஆரம்பிச்சோம். அடுத்து ஸ்டார் சமையல் புரோகிராம் பண்ணினோம். வீட்டை விட்டு வெளியே போகாம சினிமா எதுவும் பார்க்காம வளர்த்ததால சமையல் கலை நிறைய கத்துக்கிட்டேன். அதெல்லாம் இந்த புரோகிராமுக்கு யூஸ் ஆச்சு’’ என்று நெகிழ்கிறார். நிகழ்ச்சிகளோடு சேர்ந்து கேலக்ஸி நிறுவனமும் வளர்ந்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை கார் ஷெட்டில் இருந்து மெல்ல மெல்ல கோபாலபுரத்திற்கு மாறியிருக்கிறது கேலக்ஸி. பிறகு அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் ஒரு வாடகை வீட்டில். இப்போ அதே கற்பகம் அவென்யூவில் கம்மீரமாக சொந்த பில்டிங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

‘’ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. போகப்போக எல்லாம் தெரிய வந்துச்சு. பொதுவாகவே பொண்ணுங்களுக்கு சிக்கன புத்தி இருக்கும். அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகம். அது கேலக்ஸிக்கு கைகொடுத்திருக்கு. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு எபிசோடு மட்டுமே எடுப்போம். இப்போ அனுபவம் இருப்பதால ஒரு நாளைக்கு நாலு எபிசோடு எடுக்குறோம்.

டிவிக்கு நிகழ்ச்சி தயாரிக்கறீங்களே நீங்க சீரியல் எடுக்கலாமேன்னு கேட்குறாங்க. உண்மையை சொன்னா எனக்கு சீரியலே பிடிக்காது. எப்போதும் தூங்குற நேரம் மட்டுமே வீட்டுக்கு போறேன். அம்மாதான் ஒரே மகள் இனியாவையும் வீட்டையும் கவனிச்சிக்கறாங்க. என்னோட அப்பாவும் அவரோட அப்பாவும் தவறிட்டாங்க.

சில பேரு சினிமா எடுக்கலாமேன்னு சொல்லுவாங்க. கேலக்ஸி அதுக்கெல்லாம் தலையாட்டாம அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்ற பழமொழிக்கு ஏத்தபடி போய்க்கிட்டிருக்கு. இப்போ கலைஞர் டிவியில் ‘விடியலே வா’ன்னு புரோகிராம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எல்லாமே சிரிப்புதான் புரோகிராமும் சக்சஸ் ஆகியிருக்கு.

ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தா கரெக்ட் டயத்துக்கு போயிட்டு கரெக்ட் டயத்துக்கு வந்துடலாம். வருசத்துல ஏகப்பட்ட லீவு இருக்கு. சொந்த நிறுவனம் என்பதால அந்த சவுகரியம் எல்லாம் இல்லாம போச்சு. ஆனா, பலபேரு வந்து, நாங்க உங்க நிறுவனத்தை முன்னுதாரமா வச்சுத்தான் வந்திருக்கிறோம். கணவனும் மனைவியும் சேர்ந்து வொர்க் பண்ணுறத பார்த்துட்டுத்தான் நானும் என் வொய்ப்பை கொண்டு வந்திருக்கிறேன்... என்றெல்லாம் சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு’’என்று மகிழ்கிறார். புதுசு கண்ணா புதுசு விளம்பரம் பட்டி தொட்டி எல்லாம் முனுமுனுக்கப்பட்டது. அந்த விளம்பரத்தை பண்ணிக்கொடுத்தது ‘சாய் அட்வர்டைசிங்’ என்ற கேலக்ஸியின் ஒரு பிரிவு. பிரிண்ட் மற்றும் விசூவல் மீடியாவுக்கு விளம்பரப் பறிமாற்றம் செய்துவருகிறது சாய் அட்வர்டைசிங்.

‘’எனக்கு தமிழ்,ஆங்கிலம், இந்தி,மலையாளம், தெலுங்குன்னு அஞ்சு லாங்வேஜ் தெரியும். அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும். இதனால அட்வர்டைசிங்கில் நல்லா பண்ண முடியுது. கேலக்ஸி பப்ளிகேஷன் ஆரம்பிச்சு நான் எழுதுன சமையல் கலை புத்தகங்கள், அவர் எழுதுன கல்வி, பிஸினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடுறோம்’’ என்று சொல்கிறார்.

இத்தனை மொழிகள் தெரிந்தாலும் அத்தனை மொழியிலும் ஏன் நிகழ்ச்சிகள் செய்யவில்லை என்றால் ‘சீரியல் என்றால் ஒரு லாங்வேஜ்ல உள்ளத அப்படியே டப்பிங் செஞ்சுடலாம். நியூஸ்..அப்புறம் ஒரு மொழியைச்சார்ந்து எடுக்குற புரோகிராமை இன்னொரு லாங்வேஜ்க்கு டப்பிங் பண்ண முடியாது. நேரடியா வேறு மொழிகளுக்கு புரோகிராம் பண்ணனும்கிற எண்ணம் இல்ல. ஆனாலும் சூர்யா மலையாள டிவிக்காக ‘காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு புரோகிராம் பண்ணினோம்’ என்கிறார்.

ஏதோ மலையாள மந்திரம் போலத்தான் இருக்கும். காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு அவர் சொன்னது. ஆனால் அது பிரச்சனை பெருசா இருந்தாலும் ஈஸியா முடிஞ்சிடும் என்ற அற்புதமான தமிழ் அர்த்தத்தை தருகிறது. அது போலவே நல்ல பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் கேலக்ஸியும் அர்த்தமுள்ளதாகவே விளங்குகிறது.

[/tscii:a8ed8350e7]

aanaa
31st May 2009, 07:01 AM
நடிக்கத் தயங்கினேன்!

-கோலங்கள் - திருச்செல்வம்

முரசொலி மாறன் மறைந்த தினம் 23.11.2003, அன்று முதல் தான் 'கோலங்கள்' மெகா தொடர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. அந்த மெகாவின் மகா கேப்டன் அண்ட் நாயகன் தொல்காப்பியன் என்கிற திருச்செல்வனிடம் பேசியபோது;

''தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள 'நாடியம்' தான் எனக்கு சொந்த ஊர், எங்களது விவசாயக் குடும்பம், அப்பா வேலுச்சாமி, அம்மா சரஸ்வதி, இரண்டு அக்கா செல்வி, மாதவி என்று, நான் தான் கடைக்குட்டி, அழகான அன்பான சிறிய குடும்பம்.

சொந்த ஊர் நாடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் அதன் பின் தேவக்கோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், போர்டு பிஷப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன்.

அதன் பின்னர் தஞ்சை பூண்டி கல்லூரி பி.எஸ்.சி., பிசிக்ஸ் படித்தேன். அஞ்சல் வழியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., படித்தேன்.

கலைத்துறை ஆர்வம் கொண்ட நான். 1988ல் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரி சேர்ந்து, 1991ல் படிப்பை முடித்து வெளியே வந்து சவுண்ட் என்ஜினியராக ஐந்தாண்டு பணியாற்றினேன். சுஜாதா டப்பிங் தியேட்டரிலும், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்தேன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் படங்களின் தரங்கள், படமாக்கிய முறை, காட்சிகள் எடுத்த விதம் என்று சினிமா தொழில் சார்ந்த பல விஷயங்களை தெரிந்து முடிந்தது.

இந்த அனுபங்கள் எல்லாம் நாமும் ஏன் இது போன்று படங்கள் இயக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் உதயமானது. நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் திருமுருகன் என்னுடன் கூடப் படித்தவர். இருவரும் ஒரேசெட். அப்போத திருமுருகன் 'காவேரி' என்றொரு சீரியலை இயக்குனார். அவருடன் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்து திருமுருகன் இயக்கிய மெகா சீரியலான 'மெட்டிஒலி'யிலும் நான் அசோஸியேட் டைரக்டராக என் பணியை தொடர்ந்தேன். அசோஸியேட் வேலையோடு 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார்.

நான் முதலில் தயங்கினேன். காரணம் அப்போது என் நினைப்பெல்லாம் டைரக்ஷன் மட்டும்தான். நானும் ஒரு டைரக்டராக வேண்டும் என்று முயற்சித்து வேறு இருந்தேன். பலரிடம் கதை சொல்லி வாய்ப்பு தேடலில் இருந்த நேரம் அதனால்தான் நடிக்கச் சொன்னதும் தயங்கினேன்.

பின்னர் 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் பாத்திரத்தில் நடித்தேன். அதனால் நடிப்பிலும் நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கும் நடிப்பு வரும் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியது. டைரக்ஷன் பயிற்சியோடு நடிப்பும் தெரிந்துகொண்டேன்.

அழைத்து கதையைக் கேட்டார்கள். நான் சொன்ன கதை அவர்களுக்கு மிகவும் பிடித்து போக 'கோலங்கள்' மெகா தொடர் இயக்கும் வாய்ப்பு கிடைத்த'மெட்டிஒலி'யின் மகா வெற்றியை தொடர்ந்து விகடன் டெலி விஸ்டா தயாரிப்பு நிறுவனம் என்னை து நான் இயக்குநரானது இப்படிதான்.

'கோலங்கள்' நெடுந்தொடர் ஐந்து வருடங்களை கடந்து தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது. குடும்பப் பெண்களிடம் எங்கள் தொடருக்கு அதிலும் கதை நாயகி 'அபி'க்கு மரியாதைக் கூடிக் கொண்டே இருக்கிறது. தங்கள் குடும்பங்களில் ஒருத்தியாக 'அபி'யை கொண்டாடுகிறார்கள்.

அதே போல தோழமை மிக்க எனது 'தொல்காப்பியன்' கேரக்டருக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. எனக்கு நிறைய பேர் போனிலும், நேரிலும் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். நடிகைகள் வடிவுக்கரசி, கீதா, லட்சுமி, விஜயசாந்தி, அமைச்சர் சற்குணப்பாண்டியன் என்று வி.ஜ.பி. பெண்மணிகள் பலர் 'கோலங்கள்' தொடரைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.

'கோலங்கள்' கதைக்களம் குடும்பம் சார்ந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் எதையும் தைரியமாகச் செய்யக்கூடிய சாதனை பண்ணக் கூடிய தகுதி பெண்ணுக்கும் உண்டு.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக என்றிருக்கும் கலாசாரம் இதில் தவிடு பொடியாக்கியுள்ளது. இதில் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா போன்ற பல முக்கியத்துவம் தரப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறது.

அதேபோன்று ஆதி, அபிஷேக் போன்ற பிரபலங்களின் கதாபாத்திரங்களும் பேசப்படும் வகையில் அமைந்தது. கோலங்களின் வெற்றி தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டு அந்தந்த மொழி சேனல்களில் ஒளிபரப்பாகிறது. கன்னட மொழியில் 'ரங்கோலி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உதயா சேனலில் ஒளிபரப்பாகிறது.''

-சரி அடுத்த என்ன?

''ஒரு பெரிய இயக்குநர் என்று பெயர் பெறுவதுதான் என் லட்சியம். 'கோலங்கள்' என் திறமையை வெளிபடுத்த உதவியிருக்கிறது.

கோலங்களின் வெற்றி. படங்களை இயக்கும் வாய்ப்பு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நெடுஞ்தொடர் முடிந்த பின் படம் இயக்குகிறேன். பெரிய நிறுவனங்களின் அழைப்புகள் வருகின்றன அதை முறையாக பயன் படுத்திக் கொள்ளலாம்.''

திருச்செல்வத்திற்கு திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் பாரதி. ஒரே மகள் பிரியதர்ஷினி. வீட்டில் மகளை 'அபி' என்று அன்பாக அழைக்கிறார்.

aanaa
6th June 2009, 07:12 PM
[tscii:ac82dbbcb2]old - FYI




Family dramas

Seetha entered films when she was just a toddler in a Telugu film Bhandalu Anu Vandalu which was produced and directed by actress Lakshmi long back. That was followed by umpteen roles as a child artiste. But when she grew up she did not find a good role in films. So her attention was shifted to the small screen, a move that has proved to be fruitful. In a short span, she has completed a number of serials including Radhika’s Chitthi and En Peyar Ranganayaki on Sun TV. Currently she is acting in AVM’s Nambikkai, a serial produced by Krishnaswamy associates and four other Telugu serials. A closer look at this charming actress:
Other Stories
Interview
News
Review

How did you become an actresss?
I started my career when I was three years old. My grandma was instrumental in my joining films. Actress Laksmiji was frantically looking out for a small girl to act in her home production in Telugu. My grandma took me to the production manager and even before I could understand what was happening, I was put in front of the camera. Since then I have been acting. When I was young, my father got married a second time and left us alone. So, it was inevitable that I make an earning through films. Thus I completed 11 films as a child artiste.

Do you recollect your first day of acting?
It was a nightmare. I didn’t really know what has to be done in front of a crowd. It was a whole new experience for me. Everything scared me. Lakshmi madam got very angry and asked the production manager to throw me out of the sets. But all of them persuaded me to try and somehow I managed finally.

We heard that you did some semi porn Malayalam films. Is it true?
These are all are cooked up stories. I haven’t done anything of that sort. After I grew up, as a teenager, the first Malayalam film I did was Devaragam. The films that followed were all decent ones. This semi porn culture in Malayalam films started when I was acting in films in other languages. But I don’t know from where this rumour spread. I am getting a few Malayalam offers but I am scared to go near them. I think twice, find out the credentials about the company and its genuinity from my friends before accepting them.

Aren’t you interested in glamourous roles?
Right from the begining I have refused glamourous roles. I don’t think glamourous costumes will suit my figure. Secondly I have decided to do only family roles which don’t require revealing outfits.

Don’t you think this will affect your career?
Money wise .. Yes. I have missed out certain films. But the amount of mental peace it has given me is immeasurable. As of now my hands are full with TV serials.

When are you going to become a heroine?
As far as TV is concerned I have been always a heroine. I have no desire to become one in films. I have had enough with films. I have crossed that stage now.

You seem to be disgusted with films?
Yes. Very much. It’s a man’s world. You have to undergo casting couch. Added to this, I have plenty of bounced cheques given to me by the producers.

So TV is the best bet for you!
Undoubtedly. There is no casting couch. There are fixed timings. You go in the morning and come back in the evening. Here one doesn’t require to wear glamourous outfits. And no one cheats you in payment.

What is your ambition?
I couldn’t continue my studies after eighth standard. I know nothing but this showbiz. My whole world revolves around this. I want to be known as a popular actress.

http://www.screenindia.com/old/20020222/rtelu3.html[/tscii:ac82dbbcb2]

R.Latha
11th June 2009, 01:09 PM
சினிமா
'கனவை நிஜமாக்கும் பயணம்': பிரஜின்

First Published : 11 Jun 2009 11:53:00 PM IST

Last Updated :

'எல்லோருக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த மாதிரி நான் ஆசைப் பட்ட இடம்தான் சினிமா' என்கிறார் "முத்திரை' படம் மூலம் நடிக்க வந்திருக்கும் பிரஜின்.
""சின்ன வயதில் இருந்து இன்று வரைக்கும் விரும்பியதில் சில விஷயங்கள் கிடைக்காமல் போனலும், பெரிதும் நேசித்த சினிமா கிடைத்து விட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரிந்த எனக்கு இளைப்பாறும் நிழல் போல "முத்திரை' படம் கிடைத்துள்ளது.
புதுமுக இயக்குநர் ஸ்ரீநாத் என்பவர் இயக்கும் அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படம் வந்த பிறகு சினிமாவில் எனக்கென தனி இடம் உருவாகும். அதுபோல ஹீரோவாக நடித்து வரும் "சா பூ த்ரி' படமும் முடிந்து விட்டது.
இனி பிரஜினை ஹீரோ அல்லது கேரக்டர் ரோலில் தொடர்ந்து பார்க்கலாம். டி.வி. தொகுப்பாளர், சீரியல் நடிகர் என வலம் வந்த என்னை சினிமாவில் பார்ப்பவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது "முள்ளும் மலரும்' என்ற தமிழ்ப் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறேன். முதல் சினிமா வந்த பிறகுதான் என்னுடைய சினிமா ஆர்வம் எல்லோருக்கும் தெரிய வரும். அதுவரை டி.வி.காரர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்து விட்டார்கள் என்றுதான் மக்கள் பேசி கொள்வார்கள்.
டி.வி.யாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் இங்கே திறமைதான் முக்கியம். அதை சிறப்பாக வெளிபடுத்துபவர்களை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.
டி.வி.யில் எனக்கு பிரேக்கை தந்த சீரியல் விஜய் டி.வி.யின் "காதலிக்க நேரமில்லை' சீரியல்தான். சினிமாவில் பிஸியாகி விட்டதால் சீரியல்களைக் குறைத்து வருகிறேன். நிகழ்ச்சிகளைத் தொகுப்பதிலும் ஆர்வம் இல்லை. சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற கனவுதான் என் கண் முன்னே இப்போது பயணமாகிறது. அதை நிஜமாக்க பயணம் செய்து வருகிறேன் என்கிறார் பிரஜின்.

aanaa
16th June 2009, 05:03 AM
[tscii:648c0fac0d]FYI



தேசிய விருது பெற்று தேசமெங்கும் பேசப்பட்ட சின்னப்பெண் கீர்த்தனா இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறார். கூடவே குறும்புத்தனமும் வளர்ந்திருக்கிறது. கலகல பேச்சால் புதுமைப்பித்தன் ரா.பார்த்திபனிடம் பேசிக்கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்.

என் அப்பா எனக்கு தாயுமானவர் மட்டுமல்ல. அலாரமானவர், ஓட்டுநரானவர், இன்னும் நிறைய ஆனவர் என்று சொல்லிவிட்டு ஒரு நீ...................ண்ட ஹிஹி. கன்னத்தில் முத்தமிட்டால ரெட்டை வால் சுந்தரியை நேரில் பார்க்க முடிந்தது.

’’கன்னத்தில் முத்தமிட்டால் ரெட்டைவால் சுந்தரி கேரக்டர் அப்பாவ ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி. பெரும்பாலும் சுந்தரின்னுதான் கூப்பிடுவாங்க.

உண்மையில அப்பாவ நான் அம்மான்னுதான் கூப்பிடனும். ஆமாங்க, காலையில் எஙகளை எழுப்புவது முதல் வீட்டுக்கு மளிகை வாங்குவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது வரை எல்லாமும் செய்வார் அப்பா. அவரைப்பொறுத்தவரை நான் இன்னமும் கைக்குழந்தைதான். என்னை விட்டு வெளியூருக்கு மட்டுமல்ல; வடசென்னை, தென்சென்னைக்கு கூட சீக்கிரத்துல கிளம்பமாட்டார்.

தற்காலிகமான பிரிவுக்கு கூட அவ்வளவு தயங்குவார் அப்பா. எப்போதும் என்கூடவே இருக்கனும் என்று பிரியப்படுவார் அப்பா. அது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. அப்பாவை பக்கத்துல இருந்தே பார்த்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.

அப்பா ரொம்ப கிரியேட்டிவ். சின்ன விசயமோ, பெரிய விசயமோ எதையும் ரொம்ப கூர்ந்து கவனித்து எல்லோருடைய எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் மீறி ரொம்ப புதுமையான விதத்தில் வெளிப்படுத்துவார் அப்பா. புத்திசாலித்தனமாகவும், ‘அட’ன்னு சொல்லுற மாதிரியும் எப்படி ‘டக்கு’ன்னு இவரால சொல்ல முடியுதுன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இதெல்லாத்தையும் பக்கத்துல இருந்தே பார்த்து பார்த்து என்னையும் அதுமாதிரியே டெவலப் பண்ணிக்குவேன்.

அப்பாவோட கவிதைகள் எல்லாமே பிடிக்கும். எந்த சந்தர்ப்பத்தில் கேட்டாலும் கவிதைகள் வந்து விழும். இப்ப ஊரெல்லாம் பவர்கட். ஆனா எங்கவீட்டுக்கு மட்டும் பவர்கட் பிரச்சனை இல்ல. அப்பாவோட மண்டைக்குள்ளதான் பல்ப் இருக்குதே’’ என்று சொல்லிவிட்டு சிரித்தவர், என்ன புரியலியா என்று சொல்லிவிட்டு ’அப்பாவோட சிந்தனையைத்தான் அப்படி சொன்னேன்’ என்றவரிடம், உங்க வளர்ச்சியில் அப்பாவின் பங்கு என்ன? என்றதும்.


’’எல்லாத்தையும் திட்டமிட்டு செய்வேன். அது அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமா நான் கிடார் கத்துக்கிறதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். அப்பா ரொம்ப சந்தோசப்படுறதுக்கு என்ன காரணம் தெரியுமா. அப்பா ஆசைப்பட்டு கத்துக்க முடியாம போன விசயம் இசை.


‘’நல்ல இசையை விட வேற எதுவும் உன்னை சந்தோசமா வைக்க முடியாது. அதை நீ வாசிக்குறதுல எனக்கு ரொம்ப பெருமை’’ ன்னு பாராட்டுவார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலில் +2 படிக்கிறேன். கால்பந்தாட்டத்தில் தமிழக அளவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இதுக்கெல்லாம் அப்பாவோட ஆதரவும் ஊக்கமும் தான் காரணம். அப்பாவோட விருப்பத்தால பாலே நடனமும் கத்துக்கறேன்.

என் ஆரோக்கியத்துல அதிகம் அக்கறை எடுத்துக்குவார் அப்பா. அப்புறம் முக்கியமான ஒன்னு. பாதுகாப்பு உணர்வில் அதிக கவனம் செலுத்துவார் அப்பா. அதனாலதான் பப்பிகள் கூட வளர்க்க அனுமதிக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரே ஒரு பப்பி மட்டும் வளர்க்க சம்மதம் வாங்கிட்டேன். வோட்கா பப்பிக்கு ஃப்ரண்ட் வேணுமாம்னு சொல்லி ஒரு ஷிவாவா பப்பி வாங்கிடுவேன் என்று சொல்லும் கீர்த்தனா, இயற்கை மீதும் பறவைகள், நாய்கள் மீதும் அலாதியான பிரியம் வைத்திருக்கிறார். அப்பா போலவே இவரும் இயக்குராகனும்னு கனவு வச்சிருக்கிறார். இப்போதே அதற்கான ஒத்திகைகளில் ஈட்பட்டுவிட்டார்.

‘’அப்பா தன்னுடைய கதை, திரைக்கதைகளுக்கு என்னை ஒரு பார்வையாளரா வைத்துக்கொள்வார். அது சம்பந்தப்பட்ட விமர்சனங்களை கேட்பார். என்னையும் நிறைய ஐடியா சொல்லச்சொல்லுவார்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நடித்திருக்கும் விதத்தை பாராட்டி பேசுவார். இப்போதைக்கு இதுதான். மற்றபடி நிறைய படஙகள் பார்க்குறேன்.+2 முடிச்சிவிட்டு விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சு விட்டுத்தான் டைரக்*ஷன் பண்ணுவேன்’’ என்றவர் தனது இத்தனை சிறிய வயதிலேயே வாழ்க்கை பற்றிய பெரிய விசயமான மரணம் பற்றி அப்பா மூலமாக தெரிந்து கொண்டதை குறிப்பிட்டார்.

‘’சில வருஷங்களுக்கு முன்னால் மரணத்தை பற்றியும் அதுக்கு அப்புறம் இருக்குற வாழ்க்கை பற்றியும் திடீர்னு ஏதோ ஒரு பயமான நினைப்பு எனக்கு வந்துச்சு. அதை எப்போ நினைச்சாலும் அப்செட் ஆயிடுவேன். அந்த சமயத்துல அப்பாதான் ரொம்ப அழகா, தைரியப்படுத்துற விளக்கம் கொடுத்தார்.

வெறுமைதான் நம்மளை பயமுறுத்தும். அதனால போற பாதையை வெறுமையா வெச்சுக்காதே. பாதை முழுக்க சின்னச்சின்னதாய் புள்ளிகள் வெச்சுக்கோ. இதை நல்லா செஞ்சு முடிச்சதும் அடுத்தது அதை நல்லா செஞ்சு முடிச்சதும் அதுக்கடுத்துன்னு நிதானமா நகர்ந்து போ. எல்லாம் சரியான இடத்துல சரியான விதத்துல நடந்திருக்கும் என்று சொல்லி என்னை தேற்றினார் அப்பா. எனக்கு சிறந்த வாழ்க்கை வழிகாட்டிதான் அப்பா.

அப்பான்னா அப்பாதான். நேற்று என்னை மகிழ்ச்சியா வச்சிருந்தார்ன்னா இன்று மகிழ்ச்சியோட உச்சத்துல வச்சிருப்பார்.

அப்பா - என்னைவிட உயரமான, அடர்த்தியான, அழகான, விநோதமான சினேகிதர். எல்லோருக்கும் கிடைக்காது இப்படிப்பட்ட அபூர்வமான அப்பா’’ என்று நெகிழ்கிறார் கீர்த்தனாபார்த்திபன்.
[/tscii:648c0fac0d]

aanaa
16th June 2009, 05:19 AM
சினிமாவின் சாபக்கேடு'!



தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டிப் பறந்த சந்திரபோஸ், இப்போது சின்னத்திரையின் ஆஸ்தான நடிகராகிவிட்டார். அவருடைய சின்னத்திரைப் பிரவேசம் குறித்து கேட்டபோது...

""சிவாஜி, எம்.ஜி.ஆர் போல பெரிய நடிகராக வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை சென்னைக்கு பயணமாக வைத்தது. இப்போது இருப்பது போல அப்போது சினிமாவில் சுலபமாக நுழைந்துவிட முடியாது. இருப்பினும், சென்னையில் செயல்பட்டு வந்த "பாய்ஸ்' நாடக கம்பெனியில் நடித்து வந்தேன். அப்போது நடிப்பு உள்பட நாடகத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் கற்க வேண்டும். அதன் காரணமாக இசை என்னை தொற்றிக் கொண்டது.

இசையமைப்பாளராக ஆவேன் என்றெல்லாம் நான் நினைத்ததில்லை. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சினிமாவில் நுழைந்த பிறகு அதை விட்டு வெளியே வர முடியாது.

சினிமா தொழில் தெரிந்தவனுக்கு இளநீர் கூட சீவத் தெரியாது. தோற்றாலும் ஜெயித்தாலும் சினிமாதான் வாழ்க்கை. தோற்போமா? ஜெயிப்போமா? எனத் தெரியாமல் இருக்கும் ஒரே துறை சினிமாதான். இதை சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

பல மொழிகளிலும் 372 படங்களுக்கு இசையமைத்து விட்டேன். நான் இசையமைத்து இன்னும் வெளிவராமல் 17 படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. சினிமாவில் எப்போதும் தொடர்ந்து ஒடுகிற குதிரை மீதுதான் பணத்தைக் கட்டுவார்கள். இடையில் குதிரைக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும் தூக்கி விட இங்கே ஆள்கள் இல்லை.

எனக்கும் அது மாதிரி ஒரு சறுக்கல் ஏற்பட்டது. வாய்ப்புகள் இல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல் வீட்டில் முடங்கிக் கிடந்தேன். அந்த நேரத்தில் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம் சுழற்றி அடித்தது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அதன் பிறகு "கத்திக் கப்பல்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பார்த்த பழைய நண்பர்கள் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்டி, நான் சினிமாவில்தான் இருக்கிறேன் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்.

பின்பு சீரியல் வாய்ப்புகள் கிடைக்கவே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது "வளையோசை', "திருப்பாவை', உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறேன்.

இசையமைப்பாளராக இருந்த போது அடைந்த சந்தோஷத்தை விட இப்போது கிடைக்கிற சந்தோஷத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் இருப்பதாக உணர்கிறேன் என்றார் சந்திரபோஸ்.

நன்றி; தினமணி

aanaa
5th July 2009, 06:24 PM
'சம்பா, கனவுகள்' உட்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது கலைஞர் "டிவி'யின் "பவானி' சீரியல் ஹீரோயின். பாவனாவின் அனுபவ பேட்டி:

* சீரியலுக்கு மீண்டும் வந்திருப்பது?
சீரியலில் நடிச் சிட்டிருந்தப்பவே மேரேஜ் ஆயிடுச்சு. குடும்பம், குழந்தையின்னு நான்கு வருடங்கள் சீரியல் பக்கம் வரமுடியலை. இப்ப நல்ல வாய்ப்புகள் வந்தது.என்னோட கணவரும் என்கரேஜ் பண்ணினார்.

* மற்ற சீரியல்களைவிட "பவானி' சீரியலில் முக்கியத் துவம் ஏதும்?
மெயின் ரோல் பண்றேன். சீனியர்கள் நிறைய பேர் நடிக்கிறாங்க. ஸ்கிரிப்ட் வித்தியாசமாயிருக்கு. நான் இதுவரை நடிச்ச சீரியல்களில் மத்த கேரக்ட்களை சுற்றியே என் கேரக்டர் இருக்கும்.

* நான்கு வருட இடைவெளியில் மீண்டும் நடிக்க சிரமம் ஏதும்?
இடைவெளி விட்டதால் சிரமம் ஏதும் இல்லை. இன்னும் நல்லா செய்யறது எப்படின்னு தான் நினைப்பு இருக்கு.

* ஆண்களைவிட பிரச்னைகளில் பெண்கள் தான் அதிகம் சிக்கிவிடுகின்றனர் என்று பேசப்படுவது பற்றி?
பெண்கள் பிரச்னைகளில் சிக்காமல் ஒதுங்கிடறது தான் நல்லது. நாம நடந்துக்கிற விதத்திலதான் பிரச்னை வருவதும், வராததும் இருக்கு. பெண்கள் முன் மாதிரி விழிப்புணர்வு இல்லாமலில்லை.
அறிவு பூர்வமாக நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. தேவையற்ற விஷயங்கள் பக்கம் மூக்கு நீட்டாம ஒதுங்கிட்டாலே எந்தப் பிரச்னையும் வராது.

* சீரியல்களில் வன்முறை காட்சிகளும், பெண்களை "அடாவடி'த்தனமாக சித்தரிக்கப்படும் சீன்'கள் நிறைய வருகின்றனவே?
சீரியல்களில் நல்லதும் வருது, தேவையற்றதும் வருதுன்னு குறை சொல்றதைவிட நல்ல விஷயங்களை எடுத்துக் கிட்டு,தேவையில்லாத விஷயங்களை இப்படியும் நடக்குமோன்னு நினைச்சு உஷாராக நாம நடந்துக்கிடலாமே,'' என்று சொன்ன பாவனா, சீரியல் ஷூட்டிங்கிலிருந்து மொபைல் போனில் அழைப்பு வர புறப்பட்டு சென்றார்.

R.Latha
13th July 2009, 01:32 PM
குத்துப் பாட்டுகள் எப்போதும் உள்ளன!

First Published : 12 Jul 2009 07:01:10 PM IST

Last Updated :

ஒரு டி.எம்.எஸ்., ஒரு சீர்காழி கோவிந்தராஜன், ஒரு பி.பி.ஸ்ரீனிவாஸ், ஒரு எஸ்.பி.பி. என்று ஒரு சில பாடகர்களே தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. இன்று நிறையப் பாடகர்கள், நிறைய இசை அமைப்பாளர்கள். தினம் தினம் அறிமுகமாகும் புதுமுகங்கள். அப்படி அறிமுகமாகிறவர்கள் எல்லாம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்துவிடுவதில்லை. கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் வி.வி.பிரசன்னா. இளம் பாடகரான அவரை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.



சினிமாவில் பாட வந்தது எப்படி?

எனக்குச் சொந்த ஊர் கோவை. படித்தது பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் ஆர்வம் எல்லாம் பாட்டில், இசையில். பள்ளிநாட்களிலேயே கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டும், வயலினும் கற்றுக் கொண்டேன். மாஸ்டர் கே.வி.நடராஜ பாகவதரும், சர்மாவும்தான் ஆசிரியர்கள்.

பள்ளியில் படிக்கும்போது நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பாடி, பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அடிப்படையில் நான் வயலினிஸ்ட். என்றாலும் என் குரல் நன்றாக இருக்கிறது என்பதற்காக எல்லாரும் என்னைப் பாடச் சொல்வார்கள். அப்படிப் பாடியதில் பக்திப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு வந்தது.

சத்யப்பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் கோவையில் ராகவேந்திரர் பக்திப் பாடல்களுக்கான ஆல்பம் ஒன்றைத் தயாரித்தார். அதில் நான் ஒரு பாட்டுப் பாடினேன். பிறகு சென்னைக்கு வந்து பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கினேன். சுமார் 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிவிட்டேன்.

அந்தக் கால கட்டத்தில் நெய்வேலி சந்தான கோபாலன் சாரைச் சந்தித்தேன். அன்று முதல் எனக்கு நல்ல ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் அவர் இருந்தார். இருக்கிறார்.

"என் சகியே' பட இசையமைப்பாளர் பிரதீப் ரவி அந்தப் படத்தில் பாட எனக்கு முதன்முதலில் வாய்ப்புக் கொடுத்தார். "சகியே' என்ற பாடலை அதில் பாடினேன். அதற்குப் பின் நிறையப் படங்களுக்காகப் பாடிவிட்டேன். தவமாய் தவமிருந்து, வெயில், குசேலன், நான் அவனில்லை போன்ற படங்களுக்காக நான் பாடிய பாடல்கள் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தவை. மாயாண்டி குடும்பத்தார், பொக்கிஷம், நினைத்தாலே இனிக்கும், மரியாதை, நண்டு ஊருது நரி ஊருது ஆகிய படங்களிலும் நான் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இளையராஜா இசையில் நான் பாடியது "கண்ணுக்குள்ளே' படத்தில். விஜய் ஆன்டணி சார் எனக்கு நிறைய வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், சபேஷ் முரளி எல்லாரும் என்மேல் அன்பு கொண்டவர்கள். வாய்ப்புத் தருபவர்கள்.

தொலைக்காட்சிகளிலும் தலைகாட்டுகிறீர்களே?

ஆமாம். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறேன். சன் தொலைக்காட்சியின் "அதிரடி சிங்கம்' நிகழ்ச்சியில் நானும் விஜய் ஆன்டணியும் நடுவர்களாக இருந்தோம். அது எங்களுடைய நெருக்கத்தை அதிகப்படுத்தியது. என்றாலும் அதற்கு முன்பே நாங்கள் நண்பர்கள். ஜீ தமிழ் டிவியில் "சரிகமப' நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன்.

சினிமா ஆசை?

சினிமாவில் நடிப்பதற்காக பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. ஆனால் மறுத்துவிட்டேன். எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தில் எனது மனதுக்குப் பிடித்த கதாபாத்திரம் கிடைக்கும் என்றால் ஒருவேளை நான் நடித்தாலும் நடிக்கலாம். நல்ல பாடகராக இருக்கவே ஆசை.

சினிமாவில் குத்துப் பாட்டுகளுக்குத்தானே இப்போது மதிப்பு?

என்னைச் சந்திக்கும் பல ரசிகர்கள் ஏன் சினிமாவில் குத்துப் பாட்டுகள் அதிகமாக வருகின்றன? என்ற கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். குத்துப்பாட்டுகள் தமிழ் சினிமாவில் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. முதலில் மெலோடியான பாடல்கள் அதிகமாகவும் குத்துப் பாட்டுகள் குறைவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தன. இப்போது நிலைமை தலை கீழாகியிருக்கிறது. அதனால்தான் ரசிகர்கள் அப்படிக் கேட்கிறார்கள்.

ஆரவாரமான இசை உள்ள குத்துப் பாடல்கள் இப்போது அதிகம் வந்தாலும் மனதைத் தொடும் ஒன்றிரண்டு மெலோடி இசைப் பாடல்களும் வரத்தான் செய்கின்றன.

மக்களின் மனதைக் கவர்கின்றன. அத்தகைய பாடல்களை நான் பாடியிருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.

குத்துப் பாட்டுகள் அதிகம் வருவதற்குக் காரணம், மக்கள் அதை அதிகம் ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். உண்மையில் குத்துப்பாட்டுகள் ஓரிரு மாதங்களில் கவர்ச்சியை இழந்துவிடுகின்றன. மெலோடியான பாடல்கள்தாம் எத்தனை வருடங்களானாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன.

குத்துப் பாட்டிலும் கூட சில நாட்டுப்புற மெட்டை அடிப்படையாக வைத்து இசையமைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பாடல்கள் மக்கள் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துவிடுகின்றன.

மறக்க முடியாத நிகழ்ச்சி?

லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்த ஒரு பெண் என்னிடம் போனில் பேசினார். வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டு, தற்கொலை முயற்சி வரைக்கும் போன அவர், என்னுடைய பாடல்களைக் கேட்டு தன்னுடைய மனது மாறிவிட்டதாகச் சொன்னார். உங்கள் பாடல்கள் மனதுக்கு அமைதியைக் கொடுத்தன என்றார். இது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.

R.Latha
20th July 2009, 12:56 PM
"பழமையும் பரதமும்'

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாளுக்கு நாள் புதுமைகள் வந்துகொண்டே இருக்க, பழைய சினிமா பாடல்களின் தொகுப்புகளைக் கேட்பது அரிதாகி விட்டது. இந்நிலையில், ஜெயா டி.வி.யில் பழைய பாடல்களைக் கவிதை நயத்தோடு வழங்கி வரும் ஸ்ரீதேவியிடம் பேசிய போது....

""பல சமயங்களில் நம் உதடுகள் முணுமுணுக்கும் பாடல்கள் பெரும்பாலும் பழைய பாடல்களாகத்தான் இருக்கும். தலைமுறை இடைவெளியில் சில சமயங்கள் இது மாறிவிட்டாலும், சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நம் உதடுகளால் முணுமுணுக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் இன்னும் பழமையின் சாயல்கள்தான்.

மற்ற டி.வி.க்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஜெயா டி.வி.யின் "தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்க கூடிய இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது பெருமையாக இருக்கிறது.

பழைய பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள கவிதை நயத்தையும் உவமைகளையும் திறனாய்ந்து சொல்லுவது என் ஸ்பெஷல். இந்த நிகழ்ச்சியை வழங்கியதிலிருந்து என் நண்பர்களும் இப்போது பழைய பாடல்களின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

என்னதான் சினிமாக்களில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டு புதிய இசைக் கோர்வையில் வந்தாலும் பழைய பாடல்களுக்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.

இதே போல் முன்பு பொதிகை டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "கதை கதையாம் காரணமாம்' என்ற நிகழ்ச்சியையும் நான்தான் வழங்கி வந்தேன். "தேன் கிண்ணம்' பழைய பாடல்களில் தொகுப்பு என்றால், அந்த நிகழ்ச்சி பழைய சினிமா காட்சிகளின் தொகுப்பு. அது என்னவோ தெரியவில்லை... எனக்கு பழைய சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாகவே அமைகின்றன.

ஆரம்பத்தில் பழமையை ரசிக்கக் கூடிய மனப்பக்குவம் எனக்கு இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி பழைய பாடல்கள்தான் என்னை ஆக்கிரமிக்கின்றன.

பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நேரம் போக, மீதம் இருக்கும் நேரத்தில் பரத நாட்டியம்தான் என் வாழ்க்கை. சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் ஈடுபாடு இல்லை. எனினும் சினிமா பார்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. என்னுடைய மனமும் உடலும் உற்சாகமாக இருக்கக் காரணமே பழமையும் பரதமும்தான்"" என்கிறார் தொகுப்பாளினி ஸ்ரீதேவி.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=91552&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

R.Latha
20th July 2009, 01:01 PM
தோழி சாக்கு!

தளபதி
First Published : 19 Jul 2009 09:46:00 PM IST

Last Updated :

கோலிவுட்டில் மீனாவோடு செட் சீனியர் நாயகிகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மீதம் இருப்பது சங்கவி மட்டுமே உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டால்? சிரிக்கிறார். முன்பெல்லாம் என் தோழி மீனாவுக்குத் திருமணம் முடிந்த பின்னர்தான் என் திருமணப் பேச்சு என்று கூறிவந்தார். சினிமா முடிந்து சீரியல்களில் பிஸியாக இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். இப்போது மீனாவின் திருமணம் முடிந்து விட்டதால் சங்கவியின் திருமண பேச்சு ஆரம்பித்து விட்டது. அடுத்த வருடம் திருமணம் நடக்கலாம் என்று கூறும் சங்கவி அது ரகசிய திருமணமாக இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்கிறார்.

aanaa
21st July 2009, 04:49 AM
Thank you Latha

R.Latha
21st July 2009, 12:07 PM
welcome aanaa

aanaa
25th July 2009, 08:19 PM
[tscii:b7c6b3bdc0]

Here’s to harmony!

They differ on many issues, but their outlook on life is similar. Meet the talented husband-wife team of actors Charanya and Ponvannan

"This is the only profession where seniority isn’t seen as a qualification "



“We are very different from each other. I’m a complete pessimist and he a diehard optimist. I get easily provoked while he’s always cool,” laughs Charanya looking relaxed and radiant in a muted green and brown sari. “But we are a contented couple,” adds husband Ponvannan as they speak about the success behind their 14-year-old marriage, home and career.

Today both Ponvannan and Charanya have established themselves as capable character actors. She’s busy doing Telugu films too.

If Charanya’s portrayals in films such as Raam, Em Magan and Thavamai Thavamirundhu proved her calibre as a character actor, Karuththamma, Pasumpon and Paruththi Veeran showcased Ponvannan’s dynamism.

“When I accept a role, I give a lot of thought to my make-up and body language and as I’m a director too, I see the scene in its entirety,” he says. Be it the cunning politician in the recent Muththirai, the upright police officer in Anjaadhae or the shrewd Customs official in Ayan, Ponvannan’s performance always makes an impact. But as a director, he is still to get his due — Jameela, his second film, which was selected for the Shanghai Film Fest, won him accolades here and abroad.

“As I told you, equanimity is my asset. I don’t worry unduly about things that don’t happen my way. But I keep myself abreast of the latest in filmmaking. And I’m a keen observer. It isn’t as though cinema is the only medium of expression for a creator. Who knows, I could write books or take up public speaking. I’ll make it as director one day and even if I don’t, I know I have it in me,” he says. “Didn’t I tell you? He sees only positives,” smiles Charanya.
Back to the past

Cinema was never on Ponvannan’s agenda, when he came down to Chennai. “As an avid painter my only dream was to become a drawing master in a school in my hometown, Erode. Of course, writing has always been a passion and we had a literary circle which met regularly.” It was in this regard that he met writer and journalist Valampuri John, which led to a stint with Kovai Thambi’s Motherland Pictures and later on with Bharatiraaja as assistant director. Simultaneously roles kept happening.

Charanya’s career began on a very high note, with Mani Ratnam’s Nayakan. “I had just joined the undergraduate course in Nutrition at WCC, when a photographer followed me up to my home one day, for a picture to be used on the cover of Kungumam. It was a women’s magazine then. My father wasn’t for it. ‘She commutes by bus every day. She may face problems,’ he said. But the photographer convinced him,” recalls Charanya. The cover caught the eye of Mukta Srinivasan, and soon she found herself catapulted to the status of Kamal Haasan’s heroine!

Surprisingly her graph seemed to slide downwards despite solid roles in films such as Manasukkul Maththaappu and En Jeevan Paadudhu. “That was because it was an era of rustic films, when every film had the heroine having a bath with her skirt tied around her chest. I’d vetoed all those offers and hence the choices were limited. Yet I have no regrets. I’m modern in outlook, but as a heroine I could never do certain things,” she says.

Priorities changed and marriage and children made her opt for home. K. Balachander brought her back to television with “Veetukku Veedu Looty”. “Till then I didn’t know I could do comedy. But director Chanakya talked me into it.” Her big screen re-entry began with Vael, in which she played Surya’s mother and there’s been no looking back since. “I’ve never had qualms playing mother. And I’m not unduly bothered about how I look on screen. I have to suit the part, that’s it. Anyway I don’t accept insipid roles.”

Are character actors treated well at the workplace? “Let him answer it first. We never see eye to eye on the issue,” she laughs.

Ponvannan’s contention puts things in perspective. “Time is money and work is the priority. Personal problems don’t have a place here. This is the only profession where seniority isn’t seen as a qualification and treated with the deference extended to say an experienced doctor or lawyer. You have to be practical.”

But films wax eloquent on values … “Is it their mistake if you think that those who espouse lofty ideals don’t follow them? Cinema is a dream factory where lies are sold,” is his calm reply.

Appeasing Charanya isn’t easy. “You know about the caravan culture. Nobody is faulting it. During outdoor shoots while a heroine is able to change her costume and use the washroom in the total privacy of her caravan, dancers have to dress up behind bushes. And what are her pluses? That she’s from Mumbai, she’s young and most important, she doesn’t know a word of Tamil!”

At a recent function where Charanya was invited to receive an award, her request for two passes for her daughters, was turned down. “But when I go over there I see an actor who wasn’t receiving an award enter with a huge coterie and the same organiser providing seats for all of them. When we talk about the industry which has made us popular, I’ve also got to be vociferous on such issues,” she says, as Ponvannan shrugs his shoulders with a smile.

He sums up his stand when he says, “Life allows no rehearsal. It’s just a straight ‘Take.’ Similarly once a shot is canned it can’t be changed. So without getting worked up about things, it’s much simpler to concentrate on your job and keep giving your best.”


[html:b7c6b3bdc0]<div align="center">http://www.hindu.com/cp/2009/07/24/images/2009072450130401.jpg[/html:b7c6b3bdc0]


நன்றி: Hindu [/tscii:b7c6b3bdc0]

R.Latha
27th July 2009, 01:15 PM
"சுஜாதா கதைகள் பிடிக்கும்''

First Published : 27 Jul 2009 12:12:25 AM IST

Last Updated :

தமிழ் சேனல்களில் ஆங்கிலம் கலந்து பேசும் தொகுப்பாளர்கள்தான் அதிகம். சிலர்தான் தமிழில் பேசுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழில் பேசி ரசிகர்களைக் கவருவதுதான் என் ஸ்டைல் என்கிறார் சின்னத்திரை தொகுப்பாளினி அம்சிகா.
சூரியன் எஃப்.எம். மூலம்தான் இந்த துறைக்கே நான் வந்தேன். அப்போது ரசிகர்கள் அதிகம் பேர் கேட்ட பண்பலை அதுதான். அதில் என்னுடைய ஸ்டைல் தனியாக தெரிந்ததால் எல்லோரையும் என் குரல் கவர்ந்துவிட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு, ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. வாய்ப்பு கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன்.
அப்போது "விகடன்' இதழில் வந்த சுஜாதா விருதுகளில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்தது. எழுத்துலகமே கொண்டாடிய, கொண்டாடுகிற சுஜாதாவை என் குரல் கவர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. ஆனால் ஒரு வருத்தம்... அதன் பிறகு நான் சுஜாதாவை சந்தித்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. அவரை "மிஸ்' பண்ணியதை நினைத்தால் இப்போதும் அழுகையாக வருகிறது. ஆனால் அவருடைய கதைகளைப் படிப்பதை இப்போது என் வழக்கமாக்கிக் கொண்டேன். அவருடைய கதைகளில் வரும் எழுத்து நடைதான் என் காம்பியரிங் ஸ்டைல்!
இப்போது ஜீ டி.வி.யில் "கோலிவுட் காலிங்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறேன். திரைப்பட விமர்சன வரிசைதான் அந்த நிகழ்ச்சி. படங்கள் பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இப்போது இன்னும் அதிக படங்களைப் பார்த்து திறனாய்வு செய்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளை வழங்குவதை விட சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சினிமா, சீரியல் வாய்ப்புகள் ஒரு சில வந்தன. சீரியல்களில் ஆர்வம் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். தற்போது "ஒரு கூடை முத்தம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். அந்த சினிமா முடிந்த பிறகு புதிய சினிமாக்கள் பற்றி யோசிப்பேன் என்கிறார் அம்சிகா.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=95840&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

R.Latha
27th July 2009, 01:16 PM
பலகுரல் அரசி!

என்னுடைய கல்லூரி தோழிகளைப் பொறுத்தவரை ஒரு சிறந்த பாடகியாகத்தான் தெரியும். நான் இளையராஜாவின் உறவினர். அதனால் இசைக் குடும்பத்தில் வந்திருக்கிறேன் என்று
அழகான தமிழ், அதிலும் மரியாதையுடன் கூடிய அழுத்தமான உச்சரிப்பு, பாரதிராஜா படத்தின் பள்ளிக்கூட டீச்சர் மாதிரி புடவை- குடை என ஆதித்யா சேனலில் தோன்றி, தொடர்பு கொள்ளும் அனைவரையும் நகைச்சுவை மழையில் நனைய வைப்பவர் விளாசினி. நுனி நாக்கு ஆங்கிலத்தில், கொஞ்சிக் கொஞ்சி அலட்டும் பேர்வழிகளுக்கு மத்தியில் தன்னுடைய, தன்னிகரில்லா மிமிக்ரி திறமையின் மூலம் மிகக் குறைந்த காலகட்டத்திலேயே ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் இவர். இவரிடம் ஒரு பொன்மாலை பொழுதில் பேசியதிலிருந்து...



கல்லூரி நாள்களில் நீங்கள் பலகுரல் அரசியாகத் திகழ்ந்தீர்களோ?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் கல்லூரி நாள்களில் மிமிக்ரி எதுவும் செய்ததில்லை. நன்றாகப் பாடுவேன் என்று பெயர் எடுத்திருந்தேன், அவ்வளவுதான்.

அப்புறம் எப்படிப் பெரும்பாலான ஹீரோயின்களின் குரலை அப்படியே தத்ரூபமாகப் பேசுகிறீர்கள்?

இல்லைங்க. நான் பாட்டுப் பாடும்போது அந்தந்தப் பாடலை பாடிய இசைக் கலைஞர்களைப் போலவே மிமிக்ரி பண்ணி பாட முயற்சித்தேன். குறிப்பாக, சித்ரா, ஜானகி போன்றவர்களின் குரலை அச்சு அசலாகக் கொண்டு வர வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிதான் இப்போது என்னை உங்களுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

இசையை முறையாகக் கற்றுக்கொண்டீர்களா?

ஆமாம். நான் முறையாக கர்நாடிக் மியூசிக்கைக் கற்றிருக்கிறேன். அதனால் என்னுடைய கல்லூரி தோழிகளைப் பொறுத்தவரை ஒரு சிறந்த பாடகியாகத்தான் தெரியும். நான் இளையராஜாவின் உறவினர். அதனால் இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

ஆதித்யாதான் உங்கள் முதல் படியா?

இல்லைங்க. நான் விஷுவல் மீடியாவுக்கு வருவதற்கு முன்பே என்னுடைய குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தேன். அந்த வாய்ப்பை வாரி வழங்கியது ரேடியோ மிர்ச்சியின் "பேட் ராப்' நிகழ்ச்சி. இதற்குப் பிறகு ஹலோ எப்.எம். ரேடியோ சிட்டியில் ஹாலிவுட் மசாலா இப்படி பல நிகழ்ச்சிகளில் வலம் வந்திருக்கிறேன்.

அலட்டல் அலுமேலுவாக ஆதித்யாவில் வலம்வரும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

பேப்பர்ல விளம்பரத்தைப் பார்த்து ஆடிஷனுக்குப் போனேன். அப்போது கலந்துகிட்ட மூவாயிரம் பேரில் எனக்கென்று தனி அடையாளம் அளித்தது என்னுடைய மிமிக்ரி திறமைதான். மூவாயிரத்தில் இருந்து ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்கிற விஷயம் ரொம்ப பெருமையாக இருக்கிறது. சேனல் தரப்பில் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். முதல் நாள் நேரலையில் என்ன பேசப் போகிறோம் என்று டென்ஷனோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தேன். பாராட்டுகளோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தேன்.

கோவை சரளாவின் வாய்ஸ் உங்களுக்கு அச்சு அசலா வருதே? நீங்கள் கோயமுத்தூரா?

நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அவ்வளவாக பெண்கள் பேசப்படாத துறையான, அதேநேரத்தில் ரொம்பவும் சவால் மிகுந்த இந்த துறையில் மின்னணும் என்று நான் மேற்கொண்ட முயற்சியில் சாத்தியமானவைதான் இவை. அப்புறம் "இப்போதுள்ள நடிகைகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் குறிப்பிட்ட சிலரே டப்பிங் கொடுக்கிறதுனால ஒரிஜினாலிட்டி இல்லாம போயிருச்சு. அதனால அவங்க பேசிய டயலாக்தான் அடையாளத்தைக் கொடுக்குது. இப்போது, ""இடுப்ப பாத்தியா'' அப்டீன்னா அது ஜோதிகா. அப்படி நான் முயற்சித்ததில் கோவை சரளா, நமீதா, அசின் என சிலருடைய குரல் எனக்கு ஈஸியாக இருந்தது. இதைத் தவிர எம்.என்.நம்பியார், தங்கவேலு என பல ஜாம்பவான்களின் குரலும் பரிட்சயமாச்சு!

"நேரலையில் லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்காங்க. இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்கே அதை ஒத்துக்கறீங்களா?

ஆமாம். உண்மைதான். என்னைப் பொறுத்தவரை இது புதிதல்ல. ஏன்னா சின்ன வயசுல நான் ரொம்ப பேசுறதப் பார்த்து, "வாயாடின்னு' பட்டம் கொடுத்தாங்க! கொஞ்சம் வளந்துக்கப்பறம் ""அய்யய்யோ இவ வாயைத் தொறந்தா மூடவே மாட்டா'' அப்படீன்னு சொன்னாங்க. ஆனால் என்னுடைய பலவீனமாக அவர்கள் கருதினதை இப்போது என்னுடைய பலமா மாத்திருக்கிறதா உணருகிறேன்.

பொது இடங்களில் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட அனுபவம் உண்டா?

சிக்கிக்கொண்டு தவிச்சதெல்லாம் கிடையாது. ஆனால் என்னை வெகு சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். நான் என்னுடைய இன்னொரு நிகழ்ச்சியில் வரும்போது, நானும் அலமேலுவும் இரட்டை சகோதரிகள்னு சும்மா விளையாட்டாகச் சொல்லி வைத்தேன். ஆனால் பொது இடத்தில் வைத்து ஒரு ரசிகர், உங்கள் அக்கா வரவில்லையா என்று கேட்டபோது, ரொம்பவே உள்ளம் நெகிழ்ந்து போனேன். என்னுடைய ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிற ரசிகர்களை எப்பவுமே சந்தோஷப்படுத்திக்கிட்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=95739&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
28th July 2009, 12:11 PM
'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது போலவே இப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகை ஆகி விட்டேன். ஆனால் சினிமா மட்டும் "மிஸ்' ஆகி விட்டது என்கிறார் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா. பள்ளிப் பருவமே என்னை நடிகையாக்கி விட்டது. பள்ளியில் நடக்கும் நாடகங்களில் நடித்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு சினிமாதான் என் கண்களில் தெரிந்தது. ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் சீரியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

சினிமாவில் நாயகனுக்கும் நாயகிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சீரியல்கள், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கின்றன. சினிமாவில் சாதிக்க முடியாததை சீரியல்களில் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தால் நான் சீரியலுக்கு வந்து விட்டேன்.

அவ்வப்போது ஓரிரு சினிமாக்களில் வருவேன். அதுவும் சினிமா நண்பர்களால்தான். மற்றபடி எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்து விட்டது. சினிமாக்களைப் பார்ப்பதோடு மட்டும் சரி. இப்போது எல்லோர் வீட்டிலும் அமைதியான பெண்ணாக, துறுதுறு மாணவியாக, அழகான காதலியாக, அன்பான மகளாக, சில நேரங்களில் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

ஒரே நேரத்தில் பல வித கேரக்டர்களை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் எவ்வளவுதான் உழைத்தாலும் இப்போது சீரியல்களில் வாங்கியுள்ள பெயரை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன்.

சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகைகளே இறுதியாக வந்து சேரும் இடம் சீரியல் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பெருமைதான். அவர்களோடு போட்டி போட்டு நடிப்பதில் சந்தோஷம் இருக்கிறது. அந்த போட்டி நிச்சயம் சீரியல் உலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். காதல், கல்யாணம் இதைப் பற்றி யோசிப்பதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பக்குவம் வரும்போது நிச்சயமாக சொல்லுவேன் என்றார் ஸ்ரீவித்யா.

[html:7b85a68ac9]<div align="center">http://dinamani.com/Images/article/2009/7/28/28srividya.jpg</div>[/html:7b85a68ac9]

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=96459&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

aanaa
29th July 2009, 02:23 AM
சுஜாதா கதைகள் பிடிக்கும்''

தமிழ் சேனல்களில் ஆங்கிலம் கலந்து பேசும் தொகுப்பாளர்கள்தான் அதிகம். சிலர்தான் தமிழில் பேசுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழில் பேசி ரசிகர்களைக் கவருவதுதான் என் ஸ்டைல் என்கிறார் சின்னத்திரை தொகுப்பாளினி அம்சிகா.

சூரியன் எஃப்.எம். மூலம்தான் இந்த துறைக்கே நான் வந்தேன். அப்போது ரசிகர்கள் அதிகம் பேர் கேட்ட பண்பலை அதுதான். அதில் என்னுடைய ஸ்டைல் தனியாக தெரிந்ததால் எல்லோரையும் என் குரல் கவர்ந்துவிட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு, ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. வாய்ப்பு கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன்.

அப்போது "விகடன்' இதழில் வந்த சுஜாதா விருதுகளில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்தது. எழுத்துலகமே கொண்டாடிய, கொண்டாடுகிற சுஜாதாவை என் குரல் கவர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. ஆனால் ஒரு வருத்தம்... அதன் பிறகு நான் சுஜாதாவை சந்தித்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. அவரை "மிஸ்' பண்ணியதை நினைத்தால் இப்போதும் அழுகையாக வருகிறது. ஆனால் அவருடைய கதைகளைப் படிப்பதை இப்போது என் வழக்கமாக்கிக் கொண்டேன். அவருடைய கதைகளில் வரும் எழுத்து நடைதான் என் காம்பியரிங் ஸ்டைல்!

இப்போது ஜீ டி.வி.யில் "கோலிவுட் காலிங்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறேன். திரைப்பட விமர்சன வரிசைதான் அந்த நிகழ்ச்சி. படங்கள் பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இப்போது இன்னும் அதிக படங்களைப் பார்த்து திறனாய்வு செய்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளை வழங்குவதை விட சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சினிமா, சீரியல் வாய்ப்புகள் ஒரு சில வந்தன. சீரியல்களில் ஆர்வம் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். தற்போது "ஒரு கூடை முத்தம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். அந்த சினிமா முடிந்த பிறகு புதிய சினிமாக்கள் பற்றி யோசிப்பேன் என்கிறார் அம்சிகா.


[html:3ee3e1c126]<div align="center">http://dinamani.com/Images/article/2009/7/27/cine3.jpg</div>[/html:3ee3e1c126]

aanaa
8th August 2009, 04:42 AM
பெண்கள் எல்லாத்துறையிலும் கலக்கிகிட்டிருக்காங்கன்னு அனுபவம் வாய்ந்த பெரியவங்களே சொல்றாங்க. தாமதிக்காமல் பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படணும் - விஜய் டி.வி.யில் அன்பே வா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அபிராமியை பேட்டிக்கு சந்தித்தபோது உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. அமெரிக்காவில் படித்து வந்த படிப்பை பாதியில் விட்டு விட்டு கலைச்சேவையில் ஈடுபட்டிருக்கும் இவர் முதலில் ஜெயா டி.வி., ஆங்கில செய்தி வாசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தற்போது அன்பே சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இது இன்னும் ஏன் நடக்கவில்லைனு எதையாவது நினைக்கிறீங்களா என்று கேட்டால், பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை தொடர்ந்துக் கிட்டிருக்கு. அவைகள் தகர்த்தெறியப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள் எல்லாத்துறைகளிலும் கலக்குவதைப்போல அரசியலிலும் நிச்சயம் கலக்குவாங்க, என்கிறார். அம்மணிக்கு அரசியலுக்கு வர்ற ஆசையெல்லாம் இருக்குது போல!!
[html:e3708122cd]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/728Tv-1.jpg</div>[/html:e3708122cd]


நன்றி: தினமணி

aanaa
26th September 2009, 09:18 PM
சினிமாவே வேண்டாம் என்று திரையுலகை விட்டு விலகிய கருத்தம்மா ராஜஸ்ரீ தற்போது மீண்டும் பீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். "கருத்தம்மா' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ராஜஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜெயா "டிவி'யில் "நெஞ்சைத் தொட்ட கதைகள்' சீரியல் மற்றும் சத்திய ஜோதியின் "இதயம்' சீரியலிலும் நடித்து வருகிறார். இதுதவிர "அய்யனார்' உட்பட, நான்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருகிறார். வேண்டாம் என்று ஒதுக்கிய பீல்டுக்கு மீண்டும் வந்தது ஏன்? என்று கேட்டால் புன்னகை ததும்ப பேசுகிறார்.

அவரது பேட்டி:-


பாரதிராஜாவின் "கருத்தம்மா'வுக்கு பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நான்கு வருடத்துக்கு முன்னாடி நடிக்க வேணாம். பீல்டிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். திடீரென்று சீரியல், சினிமான்னு வாய்ப்புகள் வந்தது. நல்ல இடங்களிலிருந்து வந்ததால் மீண்டும் இந்த பீல்டுக்கு வந்திருக்கேன்.


நீங்கள் திரும்பியும் இந்த பீல்டுக்கு வருவதற்கு காரணம் யார்?


நடிப்பாற்றல் இருக்கு. திறமையும்,ஆர்வமும் இருந்தும் ஏன் பீல்டைவிட்டு ஒதுங்கியிருக்கணும். மீண்டும் ஏன் முயற்சிக்க கூடாதான்னு நெருக்கமானவங்க சொன்னாங்க. அப்பத்தான் சத்தியஜோதி பிலிம்ஸ்ல புதிய படத்தில நல்ல கேரக்டர் இருக்கு நீங்க நடிக்கலாமேன்னும் சொன்னாங்க. நானும் அலுவலகத்திற்கு போனேன். அங்கு என்னோட வீடியோ டெஸ்ட் எடுத்தாங்க. மீண்டும் அழைப்பதாக சொல்லி அனுப்பி வச்சாங்க. ஒரு நாள் அழைப்பு வந்தது. போய் பார்த்தபோது டைரக்டர் நித்யா இருந்தார். நான் "கருத்தம்மா' படத்திற்கு முன்பாக சினிமாவுக்கு வர முயன்றபோது, நித்யா சார்தான் ஸ்டில்ஸ்செல்லாம் எடுத்து கொடுத்தார். அப்புறம் கன்னட படத்தில் வாய்ப்பு கிடைச்சு போய் விட்டேன். பிறகு "கருத்தம்மா' கிடைத்தது. படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சதால "டிவி'க்கு வருவது குறித்து யோசிக்கலை. சத்யஜோதி ஆபீஸ்ல என்னை பார்த்த டைரக்டர் நித்யா "இதயம்'ங்கிற பேர்ல சீரியல் பண்ணப்போறோம். நீ நடிக்கிறியான்னு கேட்டார். சரி சொன்னேன். ஜெயா "டிவி'யில் "இதயம் தொட்ட கதைகள்' சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு நடிகையை பற்றிய கதை அது. பிடிச்சிருந்தது. நடித்தேன்.


சினிமா, டி.வி. பீல்ட் பற்றி உங்கள் கணிப்பு?


சினிமாவிலும் சரி, டி.வி.யிலும் சரி இப்ப வந்திருக்கிற புதிய டைரக்டர்களிடம் நிறைய விஷயமிருக்கு. பிரண்ட்லியா பேசி அவுங்க நினைச்ச மாதிரி ஈசியா வேலை வாங்கிடறாங்க. தேனப்பன் தயாரிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். ராஜமித்ரன் டைரக்டர் பண்றார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். கன்னடத்தில படம் பண்ணிட்டு தமிழுக்கு வந்திருக்கார். ரொம்ப யதார்த்தமா பேசி, சிரமமில்லாம என்னிடம் தேவையான நடிப்பை ஈசியா வெளிகொண்டு வந்திடறார். புதுமுக இயக்குனர்களிடம் நிறைய விஷயமிருக்கு. அவுங்களோட திறமையை மதிச்சு தயாரிப்பாளருங்க வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய பேர் ஜொலிப்பார்கள்.


இந்த பீல்டுக்கு நினைத்து வந்தது நிறைவேறி விட்டதா?


என்ன நினைச்சு இந்த பீல்டுக்கு வந்தேனோ, அது நடந்துக்கிட்டு தானிருக்கு. மக்களுக்கு நல்ல அறிமுகம் கிடைச்சதே பெரிதா நினைக்கிறேன். நிறைய வேலைகளில் பலர் முக்கியமானவங்களா இருக்காங்க. ஆனால் அவுங்களுக்கு மக்களிடம் அறிமுகம் கிடைப்பது கிடையாது. "சினிமா, டி.வி.யில் வருபவங்களுக்கு எளிதாக நல்ல அறிமுகம் கிடைச்சிடுது. சின்ன குழந்தைகூட நடிகர், நடிகரை அடையாளம் தெரிஞ்சுக்கிடறது. இந்த பீல்ட்டை நான் செலக்ட் பண்ணி வந்தது சரிதான்னு சொல்வேன். சந்தோஷமா நினைக்கிறேன்.


சினிமா - டி.வி... எதில் நடிப்பது சிரமம்?


சினிமாவை விட டி.வி.யில் நடிப்பது கஷ்டம். ஒரு நாளைக்கு 2, 3 எபிசோட் கூட எடுப்பாங்க. நிறைய எடுக்கறாங்க, ஏதோ நடிச்சா போதும்ன்னு நடிச்சுட்டு போயிட முடியாது. டி.வி. சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களும், வித்தியாசமான சீரியல்களும் போட்டி போட்டு வந்திட்டிருக்கு. தியேட்டருக்கு போறவங்க படம் சரியில்லைனா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிருக்கோம். கடைசி வரை போவோம்ன்னு இருந்து பார்ப்பாங்க. டி.வி.யில் இந்நிலை இல்லை. சீரியல் பிடிக்லைன்னா மன்னிப்பே கிடையாது. கையில் வைத்திருக்கும் ரிமேட்டை ரசிகர்கள் வில்லனை போல பயன்படுத்தி அடுத்த சேனலுக்கு மாறிடுவர். சீரியலை ரசிகர்கள் முழுத்திருப்தியோடு ரசிக்க வைக்க நடிகர், நடிகைகள் 100 சதவீதம் நடிச்சாத்தான் ரசிகர்களிடம் எடுபடும்.


[html:cfe3c39577]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/986karuthamma.jpg </div>[/html:cfe3c39577]



நன்றி: தினமணி

aanaa
28th September 2009, 04:54 AM
Interview with Shruthihassan


[html:aa8466de0c] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=15781726&vid=6074257&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11441/93961153.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15781726&vid=6074257&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11441/93961153.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:aa8466de0c]

thanks to IsaiTamilNet

aanaa
8th October 2009, 05:30 AM
விஜய்யின் "வில்லு' படத்தில் "தீம் தணக்க தில்லானா' பாடலை பாடிய திவ்யா விஜய், தற்போது விஜய் "டிவி' சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்து வருகிறார். "பேட்டி'க்காக சந்தித்தபோது "கர்நாடக இசையை முறையாக கற்றுக் கொண்டதால் இந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் காம்பியரிங் செய்ய முடிகிறது'' என்றார். திவ்யா விஜய்யின் ஆர்வப் பேட்டி:

டிவி', சினிமாவில் பணி புரிந்தால் பணம், புகழ் கிடைக்கும் என்று நினைப்பில் தானே இந்த துறைக்கு வந்தீர்கள்?


கர்நாடக இசை தெரிஞ்சதால தான் சினிமாவில் பாடுவதற்கும்"டிவி' நிகழ்ச்சிகளில் காம்பியரிங் வாய்ப்பும் எனக்கு கிடைச்சிருக்கு. அம்மாவின் ஆசை தான் இதற்கு முழுக்க, முழுக்க மூலகாரணம். ஆரம்பத்தில கர்நாடக இசை கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் இல்லை. அம்மாவுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. என்னை இசை கத்துக்க சொன்னப்ப நான் முடியாதுன்னு தான் சொன்னேன். இசையோட அருமை உனக்கு இப்ப தெரியாது, நீ கத்துக்கிட்டு பாடும் போது இசையோட அருமை உனக்கு தெரியும். சந்தோஷப்படுவேன்னும் சொன்னாங்க. நான் கர்நாடக இசை கத்துக்க ரொம்ப உதவினாங்க. அம்மாவோட அந்த உதவியால தான் நான் யார்ன்னு இன்னைக்கு பலருக்கு தெரிஞ்சிருக்கு. அம்மாவுக்கு இந்த தருணத்தில நன்றி சொல்லிக்க விரும்பறேன். உழைப்புக்கு பணம், புகழ் கிடைத்தால் சந்தோஷம் தான்.


விஜய் "டிவி'யில் "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சியில் காம்பியரிங் செய்வது திருப்தியா?


புதிய நிகழ்ச்சிகளை வித்தியாசமா, ஈர்ப்பா மக்களிடம் அறிமுகம் செய்வதில் விஜய் "டிவி'யை யாரும் மிஞ்சிட முடியாது. குழந்தைகளிடம் உள்ள இசையாற்றலை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சி அமைஞ்சிருக்கு. ரொம்ப திருப்தியா இருக்குங்க.


இசை போட்டி நிகழ்ச்சியில் பாடுவதில் உங்களை அசத்திய குழந்தைகள் பற்றி?


"சூப்பர் சிங்கர் ஜூனியர் 2'வில் கலந்திட்டிருக்கிற குழந்தைகளிடம் நிறைய டேலண்ட் இருக்கு. ஒவ்வொரு போட்டியிலும் ஆச்சரியப்படும்படி அவுங்களோட டேலண்ட் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. பாடுவதற்கு கஷ்டமான பாடல்களை கூட ஈசியா பாடி அசத்துறாங்க. நிகழ்ச்சியில இந்தக் குழந்தை தான் "பெஸ்ட்'டா பாடுதுன்னு அவசரப்பட்டு கணிச்சிட முடியாது. ஒருத்தரை விட ஒருத்தர் டேலண்ட்ல குறைஞ்சவங்க இல்லைன்னு நிகழ்ச்சியை பார்த்தாலே தெரியும். இசை ஆர்வத்துடன் போட்டிக்கு வந்திருக்கும் எல்லா குழந்தைகளுமே எனக்கு பிடிச்ச குழந்தைங்க தான்.


முதலில் சினிமாவில் பாடுவதற்குத்தான் முயற்சித்ததாக பேசப்பட்டதே,"டிவி' பக்கம் வந்திருப்பது பற்றி?



கர்நாடக இசை கத்துக் கிட்டதால மேடைக்கச்சேரிகள் நிறைய பண்ணியிருக்கேன். சினிமாவில் பாடுவதற்கு முயன்றப்ப தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரெடி, கிங் ஆகிய படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைச்சது. "சிலம்பாட்டம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான "மாவாடு' படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையிலும் பாடியிருக்கேன். தமிழில் "வில்லு' படத்தில "தீம் தணக்க தில்லானா' பாடல் என்னை நிறைய ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கு. தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 15 படங்களில் பாடியாச்சு. தமிழகத்திலும்,கேரளாவிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன். மலையாளத்தில கைரளி "டிவி' சேனலில் "கந்தர்வ சங்கீதம்' நிகழ்ச்சியை காம்பியரிங் செய்தப்ப கேரள மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்ப விஜய் "டிவி'யில் கிடைச்ச இந்த காம்பியரிங் வாய்ப்பு தமிழகத்திலும் நிறைய பேருக்கு என்னை யார் என்று தெரியவச்சிருக்கு. சந்தோஷமாயிருக்கு.


நினைச்ச இலக்கை எட்டிவிடுவோம் என்று நம்பிக்கை பற்றி?



உழைப்புக்கு வருவாய் கிடைச்சா போதும்ன்னு நினைச்சு ஒரு தொழிலை செய்யும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அந்த தொழிலை பயபக்தியோடும், ஆர்வத்தோடும் செய்யும் போது கிடைக்கிற சந்தோஷமும், மனதிருப்தியும் அலாதியானது. மனசுக்கு இதமாக இருக்கும். பயபக்தியோடும், ஆர்வத்தோடும் இந்த துறையில காலடி வச்சிருக்கேன். அதனால உயர்வேன்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு.


யாரோட இசையில் பாட ஆசை?


இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு. நிச்சயம் பாடுவேன்ங்கிற நம்பிக்கையும் இருக்கு.


நீங்க பாடிய பாடலை கேட்டுவிட்டு இசையமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வந்ததா?


"நாம 15 படங்கள்ல பாடிட்டோம். அதனால இசையமைப்பாளர்கள் உடனே அழைப்பு விட்டு பாட அழைப்பாங்கங்கிற நினைப்பெல்லாம் எனக்கில்லை. பாடலில் என்னோட குரல் வளத்தை தெரிஞ்சுக்கிட்டு அழைப்பு வந்தா உடனே ஏத்துக்கிட்டு அவுங்க எதிர்ப் பார்ப்புபடி பாடிட முடியும். எந்த பாடலை யாரு பாடினால் சரியா இருக்கும்ன்னு இசையமைப்பாளர்களுக்கு தெரியும். திவ்யா பாடினா சரியாயிருக்கும்னு நினைச்சா கண்டிப்பா எனக்கு சான்ஸ் தேடி வரும். வராட்டியும் வருத்தப்படக்கூடாது,'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன திவ்யா விஜய் காம்பியரிங் செய்ய புறப்பட்டார்.


[html:66d15d0533]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/1067Divya.jpg[/html:66d15d0533]


நன்றி: தினமலர்

R.Latha
13th October 2009, 10:52 AM
சினிமா எங்களுக்கு உயிர்!
:

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் "மானாட மயிலாட' புகழ் ஆர்த்தி - கணேஷ் இருவரையும் ஒரு விழாவில் மடக்கிப் பிடித்தோம். இதோ அவர்களுடன் ஒரு ஜாலி கலாட்டா...



சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நீங்கள் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறீர்கள்? உங்கள் இருவரில் யார் முதன்முதலில் அன்பைத் தெரிவித்தீர்கள்?

ஆர்த்தி:அன்பைத் தெரியப்படுத்தியது என்று எதுவும் இல்லை. இருவரும் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பர்கள். அவரோட அம்மா இறந்த கொஞ்சநாள்லேயே அவுங்க பாட்டியும் இறந்துட்டாங்க. அவர்களுக்குப் பிறகு அவுங்க வீட்டைக் கவனித்துக் கொள்ள பெண்கள் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெண் பார்க்க அவரது வீட்டில் யாரும் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அம்மா இறந்ததில் இருந்து ரொம்ப உடைந்து போய் இருந்தார். அதனால நாங்க ரெண்டு பேரும் மூணு மாதத்திற்கு முன்பு இது பற்றிப் பேசினோம். எங்க அப்பாவிடம் கலந்து சொல்றேன்னு சொன்னார். அவுங்க அப்பாவும் முறைப்படி வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்டார்.

உங்கள் இருவரையும் இணைத்து நிறையக் கிசுகிசு வந்ததே?





ஆர்த்தி:எங்களைப் பற்றி நிறைய கிசுகிசு எல்லாம் வந்தது. அது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க. நல்ல பேமிலி, நல்ல பையன், நல்ல நட்பை இப்படிக் கெடுக்கிறாங்களேன்னு. இதனால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போகுதேன்னு கவலைப்பட்டாங்க. அந்த மாதிரி கிசுகிசு எல்லாம் வரும்போது அவர்களிடம் போய் சண்டை போட வேண்டும் என்று தோன்றும். அது போல கிசுகிசு வந்ததுனாலேயே நாங்கள் இரண்டு பேரும் ஒரு மூன்று மாதம் மீட் பண்ணவே இல்லை. அப்படி நாங்கள் காதலித்தால் இப்போ சொல்ற மாதிரி அப்பவே சொல்லிருக்கப் போறோம். இதுல என்ன வந்திருக்கு. நாங்க என்ன தப்பாவா முடிவெடுப்போம். உண்மையிலேயே காதல் கீதல் என்று ஒன்றும் கிடையாது. நீறைய சேர்ந்து நடித்திருக்கோம். அதனால வந்த வதந்திகள்.

உங்கள் இரண்டு பேரையும் கணவன் - மனைவியாகத்தான் மக்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி என்ன பீல் பண்ணுவீங்க?

கணேஷ்:எங்கள் இருவருக்கும் திருமணம் முடிவானது தெரிந்ததும் நிறையப் பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. இப்போதானா உங்கள் திருமணம். பேப்பர்ல செய்தி எல்லாம் கொடுத்து...காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னார்கள். கணேஷ் உண்மையைச் சொல்லு. முன்பே உனக்கு கல்யாணம் ஆகலன்னு சிலர் கேட்டாங்க. எனக்குத் தூக்கிப் போட்டுட்டு அடப்பாவிகளான்னு.

சின்ன வயதில் இரண்டு பேரும் ஒன்றாகப் படங்கள் நடித்திருக்கிறீர்கள்? வளர்ந்த பிறகு எப்போ எங்கே எப்படிச் சந்தித்தீர்கள்?

ஆர்த்தி:சின்ன வயசுல படங்கள் ஒண்ணா நடிச்சோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆறுவருடம் கழித்து சன் டிவியில சூப்பர்10 நிகழ்ச்சிக்காக மறுபடியும் இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பண்ணினோம். முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்லதான் மீட் பண்ணினோம்.

கணேஷ்:சூப்பர் 10 நிகழ்ச்சியிலதான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே அடி பின்னி எடுத்துட்டாங்க.

ஆர்த்தி:ஆறு வருஷம் தொடர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சியில எங்க ரெண்டு பேரோட ஜோடி நல்லா இருக்குன்னு கலைஞர் டிவியில கூப்பிட்டாங்க. கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகள் பண்ணினாலும் மானாட மயிலாடதான் எங்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்தது.

திருமணத்திற்குப் பின்பு தொடர்ந்து நடிப்பீங்களா?

கணேஷ்:வழக்கமாப் பெண்களைத்தானே கேட்பீங்க. இப்போ எங்களையும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?

ஆர்த்தி:திருமணத் திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து நடிக்கிற மாதிரி பிட் போடறது எல்லாம் கிடையாது. கண்டிப்பா ரெண்டு பேருமே நடிப்போம். சினிமா எங்களுடைய தொழில் மட்டுமல்ல. உயிர்.

R.Latha
13th October 2009, 10:59 AM
ஒரு நடிகையின் கதை!

First Published : 04 Oct 2009 11:52:00 AM IST

Last Updated :

கன்னடத்தில் பிஸியாக இருக்கும் நடிகை சங்கவி ஜெயா டிவியில் புதியதாக ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் "சாவித்திரி'யில் அதன் நாயகியாக நடிக்கிறார். நடிகை சங்கவியை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டிற்குச் செல்லும் இடைவெளியில் நம்மிடம் பேசினார்.



ஜெயா டிவியில் ஆரம்பமாகும் சாவித்திரி என்ன மாதிரியான கதை? அதில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கிறது?

சாவித்திரி ஒரு நடிகையின் கதை. கதையைக் கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்று வித்தியாசமான கேரக்டர். நல்லா பெர்ஃபாம் பண்ணுவதற்கான கேரக்டர். நல்ல சப்ஜெக்ட். கேரக்டர் மாறிக் கொண்டே இருக்கும். ரொம்ப இன்னோசென்ட்டாக இருக்கிற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதில் இருந்து மீண்டும் எப்படி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள் இதெல்லாம் சொல்வதுதான் "சாவித்திரி'. அழகே இல்லாத ஒரு பெண் தன்னை எப்படி ஒரு நடிகையாக்கிக் கொள்கிறாள். ஒரு நடிகையாக அவளுக்கு ஏற்படும் ஏமாற்றங்களை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற கதை. நிறைய முயற்சியெடுத்துப் பண்ணியிருக்கேன். மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.

சினிமா, சின்னத்திரை என்ன வித்தியாசம்?

சின்னத் திரையில் நடிக்கும்போது நான்தான் ஹீரோயின். சின்னத் திரையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டுவதற்கு வாய்ப்பும் இருக்கும்.

சினிமாவில் அப்படிக் கிடையாது. வந்தோமா? நாலு சீன் பண்ணினோமா? டான்ஸ் பண்ணினோமா? அப்படித்தான் இருக்கும்.

தொடர்களில் நடிப்பதால் சினிமா "டச்' குறைந்திருக்குமே?

அப்படி ஒன்றும் இல்லை. நான் இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட "மன்மதராஜா' போய்க் கொண்டு இருக்கிறது. கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா மொழிகளிலும் சேர்த்து எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் மறக்க முடியாத படம்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 100 படங்கள் பண்ணியிருக்கிறேன். மறக்க முடியாத படம் என்று சொல்வதை விட எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் "செந்தூரம்' தெலுங்குப் படம். அந்தப் படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைத்தது. தமிழில் "ரசிகன்' படம்தான் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது. அதற்குப் பிறகு கேரக்டர் ரோல் என்று சொல்வது போல அமைந்தது "பொற்காலம்' தான்.

சினிமாவுக்கு இப்போது வருகிற ஆர்ட்டிஸ்ட் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வருகிறார்கள். நான் அந்த மாதிரி ட்ரெயினிங் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை. இங்கே வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.

தமிழ் தவிர பிறமொழிப் படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணுகிறீர்கள்?

சமீபத்தில் கன்னடத்தில் "அணாதெரு' - பிதாமகன் ரீமேக், அதில் உபேந்திரா - விக்ரம் ரோல் பண்ணினார். தர்ஷன் - சூர்யா ரோல் பண்ணினார். அடுத்து ரமேஷ் அரவிந்த் ஜோடியாக ஒரு படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அது மராட்டி மொழிப் படம் ரீமேக். அப்புறம் "இந்திரா' என்று ஒரு படம். தர்ஷன் ஜோடியாக நடிக்கிறேன். முனி ரத்தினம் சார் ரீமேக் செய்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கித் தந்தது.

சூட்டிங் இல்லாத நேரத்தில் உங்களுடைய பொழுதுபோக்கு?

நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது. சினிமாவுக்குப் போவது. வெளியே போய் சாப்பிடுவது. சிலநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு இருப்பது.

எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?

என் கல்யாணம் எப்போது என்று எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் தெரியும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் யாரும் முடிவாகவில்லை. முடிவானதும் எல்லாருக்கும் சொல்கிறேன்.

aanaa
17th October 2009, 04:24 AM
[tscii:d2a0f71d2c]

I still have a lot to learn about acting, says Sangavi

S.R. Ashok Kumar

"I think a stint in the film institute is necessary for upcoming artists to bloom"



Sangavi

Sangavi is an artist who has balanced glamour and character roles in her career. Except for Malayalam, the actor has acted in all other south Indian languages. A graceful dancer, Sangavi talks about her films, and her likes and dislikes.

I am a nice person as long as you are nice to me. I do not mingle with everyone freely, but once I strike a friendship it will be for life.

I have acted in films since I was a child. My grandmother's younger sister is popular Kannada artist Arathi. Whenever she went for shoots, I used to accompany her. Maybe, those visits sparked an interest in acting later in my life.

It was director Selva who made me a lead actor in his directorial venture `Amaravathi'. My co-star in that movie was Ajith Kumar. The same director cast me opposite Arjun in `Aanai', in which I did the mature role of a mother who loses her daughter. My work in the film won me appreciation.

I still think I have a lot to learn about acting. After my first film I got a few breaks in Telugu and Kannada. I did nearly 45 films in Telugu and some half-a-dozen films in Kannada. The remaining movies are in Tamil.

In spite of not performing too well, I like my first film `Amaravathi'. My list of favourite films includes `Rasikan' and `Porkalam'. I also rate the Telugu film `Seetharamraj' with Nagarjuna highly. I did the lead role in the national award winning film `Sindooram', which was directed by Krishna Vamsi, husband of Ramya Krishnan, with two new heroes — Ravi Teja and Brammaji. For that film I got the State award. Now, I am working in the Telugu remake of `Pithamagan'.

My role model is Sridevi. But I like all the artists who are working today. How can one forget performances of Trishna in the Telugu film `Nuvvu Vasthanante Nenoddantana' or Simran in `Valee', Asin in `Gajani' and Jyotika and Nayantara in `Chandramukhi'? I also liked Suriya in `Kakka Kakka' and `Peralazhagan', and Vijay and Vikram in some of their films.

I think a stint in the film institute is necessary for upcoming artists to bloom. When I came I was raw in all the departments of filmmaking. There is no limit to what the youth of today can achieve.

When my first film was released a reviewer wrote that I "had a deadpan face". But, a subsequent review in the same newspaper lauded my performance. I feel that this is one of the best critical reviews I got in my lifetime.

When I did the film `Porkalam', directed by Cheran, superstar Rajinikanth, director Bharathiraaja and Suhasini commended my acting. I was really thrilled. Another high point was when I received an award from the Andhra Pradesh Government for the film `Sindooram'.

I do not plan my future, as things do not happen as one wishes it would. I have learnt to accept things as they come.

My mission in life is to serve the underprivileged.




நன்றி: Hindu [/tscii:d2a0f71d2c]

aanaa
24th October 2009, 04:22 AM
சின்னத்திரையில் ஜெனிலியா!



தமிழ்த் திரைத் தாரகையாக ஜொலித்த ஜெனிலியா, தற்போது பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2003-ம் ஆண்டில் `துஜே மேரி கசம்' படத்தின் மூலம் இந்தித் திரை யுலகில் பிரவேசித்த ஜெனிலியா, அது முதல் துறுதுறுப்பான அடுத்த வீட்டுப் பெண் வேடத்திலேயே நடித்து வருகிறார். "ஆறாண்டுகள் ஆகிவிட்டபின்பும் அம்மாதிரிப் பாத்திரங்கள் அலுத்த மாதிரி தெரியவில்லை'' என்று உறுதியளிக்கிறார், ஜெனிலியா.

படங்களில் பிசி நிலையிலும் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவிருக்கும் `ரியாலிட்டி ஷோ' விலும் தொகுப்பாளினியாகப் பிரவேசிக்கப் போகிறார், ஜெனிலியா.

வறுமையே அறியாது வளர்ந்த 10 பணக்காரப் பையன்கள் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதும், கிடைக்கும் சாதாரண வேலைகளைச் செய்வதும்தான் அந்த நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி குறித்து ஜெனிலியா கூறுகையில், ``பணத்துக்காகவோ, மற்ற சினிமா நட்சத்திரங்கள் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றுகிறார்கள் என்பதற்காகவோ நானும் சின்னத்திரைக்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சியின் `கான்செப்ட்' எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஆரம்பத்தில், நான் ஒரு திரைப்பட ஷூட்டிங்குக்குக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் நிகழ்ச்சியை நான் நடத்த முடியுமா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போக, நான் டி.வி. நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்'' என்று முன்கதை கூறு கிறார் ஜெனிலியா.

சரி, இவருக்குப் பிடித்த டி.வி. நிகழ்ச்சிகள் என்னென்ன?

``நான் பெரும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பேன். அவை தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை.''

இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியா மிகவும் நெருக்கமாக இருப்பதாகச் செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதைப் பற்றிக் கேட்டால்...

``நான் இந்த மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். நாங்கள் நல்ல நண்பர்கள்தான். நான் யாருடனும் சேர்ந்து சேர்ந்து சுற்றவில்லை''. ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் பதில் வந்து விழுகிறது.

சரி, ஜெனிலியா விரும்பும் ஆண் எப்படியிருக்க வேண்டும்?

``எந்த ஒரு உறவிலும் முக்கியமானது தொடர்பு தான். நல்ல ஒரு தொடர்பாளராக இருக்கக்கூடியவரை நான் விரும்புவேன்''

சொல்லியபடி தனது `பளீர்' புன்னகையைப் படர விடுகிறார் ஜெனிலியா.



நன்றி: தினதந்தி

aanaa
24th October 2009, 04:24 AM
தமிழ் கலாச்சாரத்துடன் ஒரு சிங்கப்பூர் சீரியல்


தமிழ்சேனல்களில் அதிக சீரியல்களை இயக்கி தயாரித்தவர் என்ற முறையில் பிரபுநேபாலைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தென்னாப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இவர், தனது கலைப்படைப்புக்கள் மூலம் தமிழ் சேனல்களில் வித்தியாசமான படைப்புக்களை தந்து நிலைத்தார்.

இப்போதும் தமிழ் சேனல்களுக்கு தனது படைப்புக்களை தொடர்ந்து கொண்டிருக்கும் பிரபுநேபால், இத்துடன் இன்னொரு கலாச்சாரப் பதிவையும் ஓசையின்றி செய்து கொண்டிருக்கிறார். சிங்கப்பூர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடிப்புக் கலைஞர்கள் நடிக்க, தமிழ் டெக்னீஷியன்கள் கைவண்ணத்தில் சிங்கப்பூர் டிவிக்காக ஒரு சீரியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலுக்குப் பெயர் `சின்டா தியேடா ஆக்கிர்.' தொடரை தயாரிப்பதுடன் இயக்குவதும் பிரபுநேபால் தான். இதில் சிங்கப்பூரில் முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகர்கள் நடிக்கிறார்கள்.

"என்ன திடீரென்று சிங்கப்பூர் சீரியலுக்குப் போய்விட்டீர்கள்?

பிரபுநேபாலைக் கேட்டால்...

"நான் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நான் பிரபலமானது தமிழ் சீரியல்கள் மூலம் தான். என்னை பிரபலப்படுத்திய தமிழகத்தின் கலாச்சாரத்தை அதன் இயல்பு மாறாமல் வெளிநாடுகளிலும் தரவேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே இம்மாதிரியான முயற்சிகள்.அதிலும் இதில் நடிக்கும் சிங்கப்பூர், தென்னாப்பிரிக்க கலைஞர்கள் அனைவரும் தமிழ்க்கலாச்சார உடையணிந்தே நடிக்கிறார்கள். கதையும் இந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதை தான்.''

"தொடர் என்றாலே வருடக்கணக்கில் நீளுமே?''

"அதுதான் இல்லை. அங்கே ஒரு தொடரை அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் முடித்து விடுகிறார்கள். அதற்குமேல் நீண்டால் அங்குள்ளவர்கள் பார்ப்பதை விட்டு விடுவார்கள். இதை மனதில் கொண்டே அங்கு குறைந்த பட்சமாக ஒரு மாத தொடரையும், அதிகபட்சமாக இரண்டு மாத நீண்ட தொடரையும் தயாரிக்கிறார்கள்.''

"இம்மாதிரியான முயற்சிக்கு வித்திட்டது எது?''

"சிங்கப்பூரில் இருந்து ஒரு பெண், நடிகர் ஷாருக்கானை பார்க்கும் ஆவலில் இந்தியாவுக்கு வருவதாக 5 வருடத்திற்கு முன்பு `சின்டா பாலிவுட்' என்ற படத்தை உருவாக்கினேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக கிரேஸ் உண்டு. மும்பை வந்தும் அந்தப்பெண் ஷாருக்கானை பார்க்கமுடியாமல் சிங்கப்பூருக்கே திரும்பிபோவதாக கதை முடியும். நடிகர்-நடிகைகளை திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் படத்தின் மெசேஜ். இந்த படத்துக்கு சிங்கப்பூர் அரசின் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 9 விருதுகள் கிடைத்தன. இந்த படைப்புக்கு கிடைத்த உற்சாகம் தான் இப்போது என்னை சீரியலுக்காக சிங்கப்பூர் வரை நகர்த்தியிருக்கிறது. என்றாலும் தமிழ்சீரியல்களிலும் என் படைப்புக்கள் தொடரும்.''


[html:5fe5d21f4e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091024/TV-01%20CINTA%20TIADA%20AKHIRR.jpg</div>[/html:5fe5d21f4e]


நன்றி: தினதந்தி

R.Latha
27th October 2009, 12:10 PM
[tscii:0b59ddd50f]ஆயி​ரம் ஆண்​டுகளுக்கு ஒரு​முறை பூக்​கும் பூ

மும் ​பைக்​கும் சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருந்த சுதா​சந்​தி​ரனை ஏர்போர்ட் வாச​லில் சந்​தித்​தோம். போர்​டிங்​பாûஸ எல்​லாம் செக்​கிங் கவுன்​ட​ரில் கொடுத்​துக் கொண்டே நமது கேள்​வி​க​ளுக்கு விடையளிக்க ஆரம்​பித்​தார் "கலச'த்தில் சந்​தி​ர​வாக கலக்கி,​ "அரசி'யில் அட்வெ​கேட்​டாக வந்து தற்​போது "தாய'த்தில் சோலப்​பூ​வாக மலர்ந்​தி​ருக்​கும் மயூரி சுதா சந்​தி​ரன். நீண்ட இடை​வெ​ளிக்​குப் பிறகு பத்​தி​ரி​கைக்கு அளிக்​கும் பேட்டி இது.

தமிழ் தொலைக்​காட்​சி​யில் நடிக்க வந்​தது எப்​படி இருக்​கி​றது?​

​ பனி​ரெண்டு வரு​டத்​திற்​குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்​தது ரொம்ப சந்​தோமா இருக்கு. அப்போ நான் நடிக்​கும் போது எனக்கு சரி​யான ரோல்ஸ் அமை​யல. படங்​கள் சரியா ஓடல. அதுல கொஞ்​சம் ஏமாற்​றமா இருந்​தது. இந்த சம​யத்​துல இந்​தி​யில வாய்ப்​பு​கள் நிறைய வந்​தது. அத​னால மும்​பை​யில போய் செட்​டில் ஆகிட்​டேன். அங்கே போய் டி.வி. சீரி​யல்,​ இந்தி படங்​கள் நிறைய நடிச்​சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸி​யாக இருந்​தேன்.

பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்​சதை பார்​துட்டு குட்டி பத்​மினி மேடம் போன் பண்ணி கல​சத்​துல நடிக்க கூப்​பிட்​டாங்க. அதே போல பிர​பு​நே​பால் சாரும் ஜெயா டிவி​யில ஒரு தொடர்ல நடிக்​கக் கூப்​பிட்​டார். அவுங்க இரண்டு பேரும்​தான் தமிழ் இண்​டஸ்ட்​ரிக்கு மறு​படி வர கார​ணம். "கல​சம்', "அரசி' இரண்​டும் நெகட்​டீவ் ரோல். ரொம்​பவே மேக்​கப் போட்டுக்​கிட்டு நடிச்​சேன். ராதிகா ​ மேட​மோட நடிச்​சது ரொம்ப நல்ல அனு​ப​வம். எனக்கு பார​தி​ராஜா சார் ​ படத்​துல நடிக்​க​னும் ரொம்ப நாளா ஆசை​யி​ருந்​தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்​கல. இப்போ அவ​ரோட உத​வி​யா​ளர்​தான் இந்த ​ தாயம் தொடரை எழு​து​றாரு. என்​னோட ஆசை நிறை​வே​றின திருப்தி.

​மேக்​கப்பே இல்​லாம பண்​ணி​யி​ருக்​கீங்களே?​

​ மக்​கள் கிட்ட ரீச் கண்​டிப்பா இருக்​கும். விளம்​ப​ரம் பார்த்​துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசா​ரிக்​க​றாங்க. "இதுல என்​ன​மா​திரி பண்​றீங்க?​ பார்க்​க​ற​துக்கு ​ ​ ​ ​ ​ ​ ​ ரொம்ப சிம்​பிள்ளா இருக்​கீங்க,​ என்ன கதை' அப்​ப​டின்னு ரொம்ப ஆர்​வமா கேட்​கி​றாங்க. ஆடி​யன்ஸ் எவ்​வ​ளவு எதிர்​பார்ப்​போட இருக்​காங்​கன்னு தெரி​யுது. ​

​வடி​வுக்​க​ரசி மேடம் இதில் பட்​டம்​மாவா வராங்க. ஒரு சூழ்​நி​லை​யில அவுங்க ஜெயி​லுக்​குப் போக வேண்​டி​யது ஆகி​வி​டும். அவுங்​க​ளுக்கு ஐந்து மகன்​கள். அவங்​க​ளை​யும்,​ அவுங்க வீட்​டை​யும் நான் தான் மெயிண்​டன் பண்ண வேண்டி இருக்​கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப்​ பூன்னா அது ஆயி​ரம் வரு​ஷத்​துக்கு ஒரு முறை பூக்​கும் பூ. அது மாதிரி ஒரு அழ​கான ரோல். ரொம்ப எமோ​ஷோ​னல் ஆன ரொம்ப இண்​னோ​சென்ட்​டான.. அதே சம​ய​துல எந்த பிரச்​னையா வந்​தா​லும் உறு​தியா எதிர்​கொள்​கிற மாதி​ரி​யான கேரக்​டர். ​

அப்​போது நடித்​தற்​கும்,​இப்​போது நடிப்​ப​தற்​கும் எப்​படி உணர்​கி​றீர்​கள்?​

​ காண்​பி​டண்ட் வந்​தி​ருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்​த​து​னால தமிழ் அவ்​வ​ளவா என்​னால பேச​மு​டி​யல. இப்போ லாங்​வேஜ் நல்லா செட் ஆகி​டுச்சு. நல்லா சர​ளமா தமிழ் பேசு​றேன். அது​மட்​டு​மல்ல மும்​பை​யில் இந்தி தொடர்​க​ளில் நிறைய நடித்​தில் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் கிடைச்​ச​ருக்கு. அங்​கே​யும் சரி,​ இங்​கே​யும் சரி டைரக்​டர்​கள் நல்ல சப்​போர்ட் பண்​ணாங்க. ​ எல்​லா​ரும் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் டைரக்​டர்​கள் அது​னால நிறைய அனு​ப​வம் கிடைச்​சது.

​விபத்​தில் உங்​கள் காலை இழந்த போது மீண்​டும் நடிக்க முடி​யும்னு நம்​பிக்கை இருந்​ததா​?​

​ அந்த நேரத்​துல நடிக்​க​றது எல்​லாம் என் மைண்ட்ல இல்ல. எப்​ப​டி​யா​வது எந்து நடக்​க​னும் மட்​டும் ​ ​ ​ ​ ​ தான் ஆசைப்​பட்​டேன். அதுக்​காக நிறைய முயற்சி எடுத்​தேன்,​ ரொம்​ப​வும் கஷ்​டப்​பட்​டேன். பிற​கு​தான் நடிக்​க​ணும்,​டான்ஸ் பண்​ண​ணும்ன்ற ஆசை எல்​லாம் வந்​தது.

​மும்​பை​யில் உள்ள ஆடி​யன்ஸ்க்​கும்,​ தமிழ் ஆடி​யன்ஸ்க்​கும் என்ன வேற்​றுமை?​

​ ரொம்ப வித்​தி​யா​சம் இருக்கு. அங்கே பார்த்​தீங்​கன்னா கொஞ்​சம் அதி​க​மாக மேக்​கப் போட்டு நடிக்​க​னும். ஆனால் மலை​யா​ளம்,​ தமிழ்ல எல்​லாம் ஓவர் மேக்​கப் எல்​லாம் இருக்​காது. தமிழ் கதை​கள் எல்​லாம் ஒவ்​வொரு குடும்​பத்​து​லை​யும் நடக்​கிற உண்​மை​யான கதை போல இருக்​கும். ரொம்ப ஏதார்த்​தமா இருக்​கும். இந்​தி​யில அப்​படி கிடை​யாது. இப்​போ​தான் ​ இந்தி டெலி​வி​ஷன் மாறிக்​கிட்டு வருது. ​ மெட்​ரோ​வை​விட்டு ​ நகர்ந்து கிரா​மங்​க​ளுக்​குப் போக ஆரம்​பி​தி​ருக்​கி​றார்​கள். இருந்​தா​லும் இந்​தி​யில் ஜூ​வல்​லரி,​ ஆடம்​பர சாரின்னு எல்​லாமே கொஞ்​சம் அதி​கமா இருக்​கும். ஆனால் தமி​ழில் அப்​ப​டி​யில்லை. தமிழ் ஆடி​யன்ûஸ சீட் பண்ண முடி​யாது.

​இது​வரை நீங்​கள் நடித்​த​தில் மறக்க முடி​யாத கதா​பா​தி​ரம் எது ஏன்?​

​ "மயூரி' படம்​தான் என் வாழ்க்​கை​யில் மறக்​கவே முடி​யாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்​டாங்க. அப்​ப​டியே பண்​ணாக்​கூட கதை யாரைப் ​ பற்​றியோ அவுங்​களே அதில் நடிக்​கி​றது ரொம்ப கஷ்​டம். அந்த மாதிரி அமை​யாது. நான் ரொம்ப லக்கி என்​னோட வாழ்க்​கையே பட​மாக்கி அதுல நானே நடிச்​சி​ருக்​கேன். அதுக்​காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்​சது. இதை​விட பெருமை வேற எது​வுமே இல்ல என் வாழ்க்​கைல.

​டான்ஸ் ஸ்கூல் நடத்​து​றீங்​களே?​ அதில் கிடைச்ச அனு​ப​வம்?​

​ மும்​பை​யில டான்ஸ் ஸ்கூல் வெச்​சி​ருக்​கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்​கார்ந்​துட்டா மன​சுக்கு ரொம்ப நிம்​மதி கிடைக்​கும்.ரொம்ப நல்லா போய்​கிட்டு இருக்கு. ​

​மும்​பைக்​கும்,​ சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருக்​கி​றீர்​களே?​ சென்​னை​யில் ​ எப்போ வீடு வாங்க போறீங்க?​

​ இந்​தக் கேள்வி கொஞ்​சம் லேட். போன​மா​தம் தான் சென்​னை​யில் வீடு வாங்​கி​னேன். இப்போ சூட்​டிங்​கிற்​காக மாதத்​தில் பதி​னைந்து,​ இரு​பது நாள் இங்​கே​தான் இருக்​கி​றேன். முன்பு மும்​பை​யில் இருந்து சென்​னைக்கு வந்து கொண்​டி​ருந்​தேன். இப்போ சென்​னை​யில் இருந்து மும்​பைக்​குப் போய் வரு​கி​றேன்

.

​உங்க குடும்​பம் பற்றி?​

​எனக்​ குக் குழந்​தை​கள் இல்லை. என் கண​வர் ரவி​யும் நானும் தான். அவர் ​ ​ ​ ​ ​ சினிமா இன்​டஸ்ட்​ரி​யில் டைரக்​ஷன் பீல்​டு​ல​தான் இருந்​தாரு. அதுக்​குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்​ணி​கிட்டு இருந்​தாரு. இப்​போது எங்​கள் நாட்​டி​யப்​பள்​ளியை அவர்​தான் பார்​து​கிட்டு இருக்​கி​றார்.


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=144802&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
[/tscii:0b59ddd50f]

aanaa
31st October 2009, 04:47 AM
[tscii:7eeeff0ccf]

டைட்டில் பாடலுக்குத்தான் அதிக உழைப்பு!



சின்னத்திரையில் `ஆளவந்தார் கொலைவழக்கு,' `வசந்தம் காலனி, புனிதபூமி, தர்மயுத்தம், துப்பறியும் சோழன், நிறங்கள், வண்ணவண்ணபூக்கள், காவ்யா, குல விளக்கு, ஜென்மம் எக்ஸ், ஷியாமளா, குடும்பம் ஒரு கோயில் என்று 75-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களுக்கு இசை யமைத்தவர் `கலைமாமணி' அரவிந்த் சித்தார்த்தா. பெரிய திரையிலும் காவியத்தலைவன், முற்றுகை, வள்ளிவரப்போறா, ராஜாளி, எங்கிருந்தாலும் வாழ்க, பயம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்போதும் 5 படங் களில் இசையமைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.

"பெரியதிரை, சின்னத்திரை இசையமைப்பில் என்ன வித்தியாசம்?''

இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவைக் கேட்டால்...

"திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோருடன் படத்தின் கதையையும், காட்சிகளின் அமைப்புகளையும் நன்கு கலந்தாலோசிப்பேன்.

மெகா சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலில் `டைட்டில் பாடல்' கம்போசிங்கின் போது மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக பலநாட்கள் செயல்படுவேன்.

ஏகப்பட்ட டிïன்களை கம்போஸ் செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர், பாடலாசிரியர் என்று எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் முடிவாக ஒரு டிïனில் பாட்டை கம்போஸ் செய்து கொடுப்பேன்.

மெகாசீரியலுக்கு டைட்டில் பாடல் மிக முக்கியமாச்சே. அதன் பிறகு தினமும் சுடச்சுட ஷூட்டிங் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்வேன். இந்த அனுபவம் கொஞ்சம் திரில்லிங்காகவே இருக்கும்.''

அரசியல் கட்சிகளின் கொள்கைப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறீர்களே?''

"தேர்தல் சமயத்தில் முதல்வர் கலைஞர் எழுதிய `தீட்டிய வாளை ஒத்த மீசை கொண்ட திராவிட காளையே புறப்படுக' என்ற பாடலை எடுத்துக் கொண்டு இயக்குனர் அமிர்தம் என்னை சந்தித்தார்.

தேர்தல் கால அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக புஷ்பவனம் குப்புசாமியை வரவழைத்தேன். காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடலை கம்போஸ் செய்து முடித்தேன்.

அப்போது கலைஞரிடமிருந்து போன் வந்தது. பாட்டை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். அமிர்தம் சாரும், நானும் இரவு ஒரு மணிக்கு கலைஞரிடம் கேசட்டை எடுத்துச் சென்று போட்டுக் காட்டினோம். உற்சாகமாய்க் கேட்டு ரசித்து பாராட்டினார்.

இரவு ஒரு மணிக்கு தான் எழுதிய பாட்டிற்கு இசையமைப்பும், பாடகரின் வார்த்தை உச்சரிப்புகளும் சரியாக இனிமையாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தூங்கச் சென்ற கலைஞர் அவர்களின் ஆர்வத்தையும், என் இசையமைப்பை அவர் பாராட்டியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.''



நன்றி: தினதந்தி [/tscii:7eeeff0ccf]

aanaa
31st October 2009, 04:51 AM
ரோஜாத்தோட்டம்



வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாத்தோட்டம், பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு பேசும்
நிகழ்ச்சியாகும்.

இடையிடையே பெண்கள் விரும்பி கேட்ட புதிய திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் கலந்து கொண்டு நேயர்களிடம் பேசுகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி.

[html:15e0726c91]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091031/TV04.jpg[/html:15e0726c91]


நன்றி: தினதந்தி

aanaa
31st October 2009, 04:53 AM
பேசும் பைங்கிளி



பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தன்னுடைய திரையுலக வாழ்க்கையை வசந்த் டிவி நேயர்களுடன், வாரந்தோறும் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆருடன் அறிமுகமான நாடோடி மன்னன் முதல், சமீபத்தில் வந்த ஆதவன் படத்தில் நடித்தது வரை தன்னுடைய திரையுலக அனுபவங்களை விவரிக்கிறார்.

சொந்த வாழ்க்கை, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்கு நடிகர்கள் என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட பிரபல நாயகர்களுடனான தனது அனுபவங்களையும், மனம் திறந்து பேசுகிறார்.

நிகழ்ச்சி இயக்கம்: ஆர்.பாலாஜி.

தயாரிப்பு வசந்த் டிவி.

ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு வசந்த் டிவியில் பேசும் பைங்கிளியை காணலாம்.

நன்றி: தினதந்தி

கோபால் ல் ல் ல்

aanaa
12th November 2009, 05:51 AM
சின்னத்திரை உலகின் பெண்கள்?

எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது நுழைந்து வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி அவர்கள் முத்திரை பதித்திருக்கும் துறைகளில் சின்னத்திரையும் ஒன்று.

ஆனால் சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு என்று தங்களின் முத்திரையை பதிக்கும் பெண்களால், அதன் இதர துறைகளான எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றில் பேசப்படும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இதுக் குறித்து "பாலாஜி டெலி ஃபிலிம்ஸ்' நிறுவன கிரியேட்டிவ் ஹெட் திருமதி. சுபா வெங்கட்டிடம் கேட்டபோது,

]

""சினிமா எப்படி ஆண்களுடைய துறையாக இருக்கிறதோ, அதுபோல பெண்களுடயை துறை சின்னத்திரை என்றாகிவிட்டது. டி.வி.யில் வரும் சீரியல்களை பொறுத்தவரையில் பெண்கள்தான் ஹீரோக்கள்! சீரியல்களில் பெண்களுக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதுபோல பொருளாதார ரீதியாக பார்த்தாலும், சினிமாவில் எப்படி ஹீரோவுக்கு நிறைய சம்பளம் தரப்படுகிறதோ, அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஏனென்றால் கதையில் முக்கிய பாத்திரங்களாக அமைவதும், அதை ஏற்று நடிப்பதும் பெண்கள்தான். பெண்களைச் சுற்றித்தான் கதை நகரும். சினிமாவில் வில்லன் என்றால், தொடர்களில் வில்லி பாத்திரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவும் பெண்களுக்கான ஒரு தனிச் சிறப்பு.

அதனால் சின்னத்திரையில் நடிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், சினிமாவில் மற்ற துறைகளில் பெண்கள் சாதிப்பதை பார்க்கும்போது சின்னத் திரையில் பெண்களின் பங்களிப்பு கம்மிதான். சினிமாவில் நிறைய பெண் இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பெண் உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் டி.வி. மீடியாவை பொறுத்தவரையில் நிகழ்ச்சித் தயாரிப்பில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களே தவிர கேமராவுக்குப் பின்னால், தொழில்நுட்ப வேலைகளில் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. அது போன்று எழுத்துத் துறையிலும் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி வருகிற இரண்டு, மூன்று பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

2000-ல் கே. பாலசந்தரின் "அண்ணி' தொடருக்கு நான்தான் வசனம் எழுதினேன். அது போன்று "வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற தொடருக்கு இன்னொரு பெண் எழுத்தாளர் எழுதினார். இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே அன்றும் இன்றும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும்.

அதுபோல டெலி ஃபிலிம், ஒரு எபிசோடு நிகழ்ச்சி... இப்படி சின்னச் சின்ன படைப்புகளைதான் பெண்கள் இயக்கியிருக்கிறார்களேத் தவிர யாரும் மெகா தொடர்களை இயக்கியதில்லை. மெகா தொடர் என்பது ஒரு மெகா கூட்டணியின் உழைப்பு அடங்கியது. ஆனால் அந்த மாதிரியான மெகா தொடர்களின் "கிரியேட்டிவ் ஹெட்' ஆக பெண்கள் வொர்க் பண்ணியிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவர்.

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நடிக்க வரும் பெண்களில் நல்ல திறமை சாலிகள் இருக்கிறார்கள். ஆனால் என்ன? ஓரிரு தொடர்களில் நடித்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

அவர்களுக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களது குடும்ப சூழ்நிலைகளால் நடிப்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. பெரிய திரையில் இருந்த வந்த ராதிகா, குட்டி பத்மினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி ஆகியோரெல்லாம் சின்னத்திரையிலும் சாதித்திருக்கிறார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம். இது போன்று திறமையான பெண்கள் நிறைய பேர் வந்தால் சின்னத்திரை துறையிலும் பெண்களின் கை ஓங்கி நிற்கும். தமிழ்நாட்டில்தான் நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை பார்த்தும் நிறைய பெண்கள் சின்னத்திரைக்கு வருகிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

சாதிக்க நினைக்கிறவர்களுக்கு சின்னத்திரையில் நிறைய துறைகள் இருக்கிறது. புதியவர்கள் வரும்போதுதான் புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும். முயற்சி செய்தால்தான் தங்களோட கற்பனைகளையும், படைப்புகளையும் திரையில் கொண்டுவர முடியும்.

அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்போம். அவர்களின் திறமையை பாராட்டுவோம். இது என்னுடைய தீபாவளி செய்தியாக இருக்கட்டும்'' என்றார்.



நன்றி: cinema Express

R.Latha
25th November 2009, 12:56 PM
ஞாயிறு கொண்டாட்டம்
சினிமாதான் என் உலகம்!


சன் டிவி​யில் ஒளி​ப​ரப்​பா​கிக் கொண்​டி​ருக்​கும் "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. கங்​காவை ​(ரம்யா கிருஷ்​ணன்)​ பழி​வாங்க சதி செய்து கொண்​டி​ருந்த இள​வஞ்சி​ (காவேரி)​யைச் சந்​தித்​தோம். அங்கு சுப்​பு​லட்​சமி,​ நாச்​சியா,​ மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்​தார் நடிகை காவேரி. படப்​பி​டிப்பு இடை​வே​ளை​யில் வந்து,​ நம்​மு​டைய கேள்​வி​க​ளுக்கு அவர் சொன்ன பதில்​களி​லி​ருந்து...​

"தங்​கம்' தொட​ரில் உங்​கள் கேரக்​டர் இந்​த​ளவு பேசப்​ப​டும் என்று நினைத்​தீர்​களா?​​

கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான். ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​

பார்ப் ​ப​தற்கு ரொம்ப வெகு​ளியா இருக்​கீங்க. ஆனால் தொட​ரில் பயங்​கர வில்​லி​யாக கலக்​கு​றீங்​களே மக்​கள்​கிட்ட உங்​கள் இமேஜ் பாதிக்​காதா?​​

பொது ​வாக வில்லி கேரக்​ட​ரில் நடிப்​ப​வர்​கள் என்​றால் பார்க்​கும் பொழுதே பய​மு​றுத்​தும்​படி இருப்​பார்​கள். ஆனால் பார்​வைக்கு மென்​மை​யாக இருக்​கிற ஒரு பெண் செய்​கிற வேலை​யெல்​லாம் பயங்​கர வில்​லத்​த​ன​மாக இருந்​தால் பார்க்​கி​ற​வர்​க​ளுக்கு வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்று எதிர்​பார்த்​தேன். என்​னு​டைய இந்த நினைப்பு வீண்​ போ​க​வில்லை. என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. இது இமேஜை பாதிக்​கும் என்று எனக்​குத் தோன்​ற​வில்லை.​

தொட​ரில் உங்​க​ளின் வில்​லத்​த​ன​மான நடிப்​பைப் பார்த்​து​விட்டு உங்​கள் வீட்​டில் உள்​ள​வர்​கள் என்ன சொன்​னார்​கள்?​​

நான் முதன் முறை​யாக நெகட்​டீவ் ரோல் செய்​வ​தால்,​ "ஏன் இப்​படி?​ இந்த மாதிரி நடித்​தால் ​ மக்​கள் உன்னை உதைக்க மாட்​டார்​களா?​ இவ்​வ​ளவு அநி​யா​யம் செய்​வது போல் இருக்​கி​றதே...?' என்று சொல்​லு​வார்​கள். அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள்.

பெரும் பகுதி படப்​பி​டிப்​பில்​தான் இருக்​கி​றீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் பற்றி சொல்​லுங்​கள்?​​

என் ​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான்.

எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

இந்த கேரக்​ட​ருக்​காக உங்​களை எப்​படி தயார் செய்து கொள்​கி​றீர்​கள்?​​

ஹோம் ஒர்க் செய்​கி​றேன். ஒவ்​வொரு சீன் முடிஞ்​சப்​ பு​றம் என்ன என்ன தவறு செய்​தி​ருக்​கேன் என்று பார்ப்​பேன். மறு​ப​டி​யும் அதை செய்​யக்​ கூ​டா​தல்​லவா?​!​ வீட்​டில் நடித்து பார்ப்​பேன். மற்​ற​படி அடுத்து ​ சீன் என்ன என்​ப​தெல்​லாம் எங்​க​ளுக்கு தெரி​யாது. முன்​னா​டியே சொல்​ல​மாட்​டாங்க. ஸ்பாட்​டுக்கு வந்த பிற​கு​தான் சொல்​வார்​கள். வீட்​டுக்கு வந்த பிறகு படப்​பி​டிப்​பின் போது ஏதா​வது தவறு செய்​தி​ருக்​கேன் என்று தோன்​றி​னால்,​ எங்​க​ளின் கிரி​யேட்​டீவ் ஹெட்​கிட்ட போன் செய்து அவுங்​க​ளோட கருத்​துக்​களை கேட்​போம் அவ்​வ​ளவு தான்.​

வேறு என்ன ​ தொடர் பண்​றீங்க?​ சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வாய்ப்பு வந்​தால் நடிப்​பீர்​களா?​​

கலை ​ஞர் டிவி​யில் வரு​கிற "தாயம்' தொட​ரி​லும் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்​றேன். அதில் ஹீரோ,​ ஹீரோ​யின்ஸ் எல்​லாம் புதுசு. டைரக்​ட​ரும் மலை​யாள டைரக்​டர். பிர​தாப் போத்​த​னுக்கு ஜோடி​யாக நடிக்​கி​றேன். ஒரு சீனி​ய​ரு​டன் நடிப்​பது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது. ரொம்​ப​வும் நட்​போடு நடிப்​பைச் சொல்​லித் தரு​வார். அவர் இரு​பது வரு​ஷத்​திற்​குப் ​ பிறகு சினி​மா​வில் மறு​ப​டி​யும் ரீஎண்ட்ரி ஆவது மன​திற்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது. சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வந்​தால் பண்​ணி​த்தான் பார்ப்​போமே!​​

வைகா ​சி​பொ​றந்​தாச்சு படத்​தில் அறி​மு​க​மான காவே​ரிக்​கும். இப்​போது இள​வஞ்​சியா நடிக்​கும் காவே​ரிக்​கும் வித்​தி​யா​சம் எப்​படி இருக்கு?​



சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும். "வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எது​வுமே தெரி​யா​தில்​லையா அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

ரம்யா கிருஷ்​ண​னோட நடிப்​பது பற்றி சொல்​லுங்​கள்?​​

அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்​சன். ரொம்​ப​வும் ஃபி​ரண்ட்​லியா பழ​கு​வாங்க. புரோ​டி​யூ​சர்ங்​கிற மாதிரி நடந்​துக்க மாட்​டாங்க. ஒரு ஃபேமிலி மாதி​ரி​தான் எல்​லோ​ரி​ட​மும் பழ​கு​வாங்க. ​

உங்​கள் ஃபேமிலி பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு நாலு அண்​ணன்​கள்,​ நான் ஒரே பெண் தான்,​ இப்​பொ​ழுது அம்​மா​வோட தான் இருக்​கேன். என் கல்​யாண வாழ்க்​கை​யைப் பற்றி நான் எதை​யும் சொல்ல விரும்​ப​வில்லை. ஒரு ஆர்ட்​டிஸ்ட்​டாக இல்​லா​மல் ஒரு பெண்​ணாக இருந்து என் பிரச்​ச​னை​க​ளு​டன் போரா​டிக்​கிட்டு இருக்​கேன்.

R.Latha
4th December 2009, 12:53 PM
[tscii:09677cea80] டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!

"அலை ​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​



"யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். ​

​நாட்​டி​யத் துறை​யில் ​ உங்​கள் பங்​க​ளிப்பு என்ன?​

​ இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன். சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும். ​

​உங்​கள் ​ திற​மையை திரை​யு​ல​கம் சரி​யாக பயன்​ப​டுத்​த​வில்லை ​ என்ற குறை ​ இருக்​கி​றதா?​

​அப்​படிச் ​ சொல்ல முடி​யாது. எந்த ஒரு சினி​மா​வும்

ஒரு ​வ​ரு​டைய திற​மையை வெளிப்​ப​டு​வ​தற்​காக எடுக்க கூடிய விஷ​யம் இல்லை. ஐநூ​று​பேர்,​அறு​நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி​யது. ஒரு ​ தனி​பட்​ட​வ​ரு​டைய திற​மையை ​ வெளிப்​ப​டுத்​து​வ​தற்​காக ஒரு சினிமா எடுப்​பாங்​கன்னா அது நடக்க முடி​யாத ஒரு விஷ​யம். அப்​படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்​தா​லும் அதில் என்​னு​டைய எல்லா பரி​மா​ணங்​க​ளை​யும் ​ ஒரு மூன்று மணி நேரத்​தில் காண்​பிக்க முடி​யாது. அத​னால் அந்த மாதிரி எதிர்​பார்ப்​பதே ​ என்னை பொருத்​த​வரை முட்​டாள்தனம். அவர்​கள் கொடுக்க கூடிய கதா​பாத்​

தி​ரத்​தில் என்​னு​டைய திற​மையை வெளிப்​ப​டுத்த தெரிந்​தால் நான் புத்​திசாலி. அதை வாங்​கிக் கொண்​டால் அவர்​கள் புத்​திசாலி. ​

​சினி​மா​வில் நெகட்​டிவ் ​ ரோல் வந்​தால் நடிப்​பீர்​களா?​

​ இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். கத்தி எடுத்து ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். என்னை பார்த்​தால் உங்​க​ளுக்கு எப்​படி அந்த மாதிரி கேட்க தோன்​று​கி​றது என்று கேட்​டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்​தி​ருக்க மாட்​டார்​கள்.வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்​றார்​கள். ஒரு மாதம் வரை காத்​தி​ருந்​தார்​கள் நான் ​ ​ ​ வேண்​டா​மென்று சொல்​லி​விட்​டேன். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன். ​

​http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=161874&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:09677cea80] டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!

"அலை ​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​



"யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிர&#3007

R.Latha
20th January 2010, 02:08 PM
[tscii:88aa77c28c] பிசினûஸ விட்​டு​விட்டு நடிக்க வந்​தேன்!



இண் ​டஸ்ட்​ரிக்கு வந்த சிறிது காலத்​தி​லேயே தனக்​கென்று ஒரு இடத்​தைத் தக்க வைத்​துக் கொண்​ட​வர்,​​ "அரசி' தொட​ரில் ராதி​கா​வின் மக​ளாக வந்து இப்​போ​ழுது "செல்​லமே',​ "கண்​மணி',"ஓவியா' என்று ஏகப்​பட்ட தொடர்​களை கைவ​சம் வைத்​துக் கொண்டு,​​ பெரிய திரை​யில் வரும் வாய்ப்​பு​கள் கூட வேண்​டாம் என்று ​ படு பிஸி​யாக இருக்​கும் சின்​ன​தி​ரை​யின் கலக்​கல் நாயகி மகா​லஷ்​மியை சந்​தி​த்தோம்.​ இதோ அவர் நமக்கு அளித்​த பேட்டி.:



* சின்​னத்​தி​ரைக்கு எப்​படி நடிக்க வந்​தீங்க?​​

தொகுத்து வழங்​கும் நிகழ்ச்​சியோ,​​ சீரி​யலோ நடிப்​பேன் என எனக்கு ஐடி​யாவே ​ ​ ​ ​ ​ இல்லை.​ ரெண்​டுமே தானா​க​வே​தான் அமைந்​தன.​ நடிக்​க​ணும் என்ற ​ எண்​ணமே கிடை​யாது.​ அம்மா எக்ஸ்​போர்ட் பிஸி​னஸ் பண்​ணிக்​கிட்டு இருந்​தாங்க.​ அவுங்​க​ளுக்கு திடீர்ன்னு உடம்பு சரி​யில்​லாம போன​தால நான்​தான் பிசி​ன​ûஸப் பார்த்​துக்​கிட்டு இருந்​தேன்.​ அப்போ என் அக்கா ​(பெரி​யம்மா மகள் நீபா)​ மூல​மா​கத்​தான் எனக்கு இந்த ஆஃ​பர் ​ வந்​தது.​ அவுங்க செல்​போன்​னில் இருந்த என்​னு​டைய போட்​டோவை "அரசி' தொடர் டைரக்​டர் சுந்​தர்.கே.விஜ​யன் பார்த்​து​விட்டு,​​ விசா​ரித்​தி​ருக்​கி​றார்.​ "ஒரு ​ கதா​பாத்​தி​ரம் இருக்கு.​ அதுக்​காக நாங்க ஒரு பெண்​ணைத் தேடி​க்கிட்டு இருக்​கோம்.​ அந்த கேரக்​டர் இவுங்க நடிச்சா நல்லா இருக்​கும்' என்று சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அப்​ப​டித்​தான் "அரசி' வாய்ப்பு கிடைத்​தது.​ ​

* ​முதல் தொடரே நெகட்​டீவ்வா பண்​ணி​னால் அதை தொடர்ந்து அதே மாதிரி கேரக்​டர் வரும் என்று நீங்​கள் நினைக்​க​வில்​லையா?​​

அது உண்​மை​தான்.​ இருந்​தா​லும் எனக்கு நெகட்​டீவ் ரோல் ரொம்பப் பிடிக்​கும்.​ பாஸிட்​டிவ் ரோல் பண்​ணு​வ​தற்கு நிறைய பேர் வரு​வாங்க.​ ஆனால் ஒரு சிலர்​தான் நெகட்​டீவ் ரோல் பண்​ணு​வார்​கள்.​ நெகட்​டீவ் ரோல் ரொம்ப சேலஞ்​சிங்கா இருக்​கும்.​ பாஸ்ட்​டீவ் ரோலை விட நெகட்​டீவ் ரோல் பண்​ணும் போது மக்​கள்​கிட்ட நல்ல ரீச் கிடைக்​கும்.​ அது​வு​மில்லா என்​னோட முதல் தொடர் என்​ப​தால எனக்கு எது​வும் தெரி​யாது இல்​லையா?​ அத​னால அவுங்க எப்​ப​டிச் சொன்​னாங்​களோ அதே மாதிரி பண்​ணி​னேன்.​ ​

* ​"அரசி'..​ அடுத்து "செல்​லமே' என்று ராதி​கா​வு​டன் நடிக்​கின்ற அனு​ப​வம் எப்​படி இருக்கு?​​

என் ​னோட முதல் தொடரே ராதிகா மேடம்​கூட பண்​ணு​கின்ற வாய்ப்பு கிடைச்​சது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது.​ ரொம்ப உறு​தி​யான பெண் அவுங்க.​ அதே சம​யத்​தில் ரொம்ப இனி​மை​யா​க​வும் அமை​தி​யா​க​வும் பேசு​வாங்க.​ நடிக்க வரு​வ​தற்கு முன்பே அவுங்​க​ளோட ரசிகை நான்.​ எனக்கு அவுங்​களை ரொம்ப பிடிக்​கும்.​ அவுங்​க​ளோட பழ​கும்​போது அவுங்க கேரக்​டர் ரொம்ப பிடிச்​சது.​ ​ அப்​படி பிடித்​த​வர்​க​ளோட சேர்ந்து நடித்​தது ரொம்ப சந்​தோ​ஷமா இருந்​தது.​ நான் ஏதா​வது தப்பு பண்​ணி​னால் கூட உடனே திருத்தி சொல்​லிக் கொடுப்​பாங்க.​ அதில் அவுங்க சீனி​யா​ரிட்​டி​யும் சின்​ஸி​யா​ரிட்​டி​யும் தெரிந்​தது.​ நிறைய நல்ல நல்ல அட்​வைஸ் எல்​லாம் ​ ​ ​ கொடுப்​பார்​கள்.​

​* மானாட மயி​லாட நிகழ்ச்​சி​யில் உங்​கள் அக்கா டான்ஸ் ஆடி பயங்​க​ரமா கலக்​கு​றாங்க.​ நீங்​கள் எப்​படி?​​

நானும் பரதநாட்​டி​யம் முறைப்​படி கற்​றுக்​கொண்​டேன்.​ அரங்​கேற்​றம் வரும் சம​யத்​துல டென்த் எக்​ஸôம் வந்​தி​டுச்சு.​ அத​னால அப்​ப​டியே நிறுத்​திட்​டேன்.​ அதுக்கு பிறகு தொட​ரு​வ​தற்கு டயம் கிடைக்​கல.​ ஆனா ஸ்கூல்ல,​​ காலேஜ்ல படிக்​கும்​போது நிறைய டான்ஸ் பெர்​பா​மன்ஸ் பண்​ணி​யி​ருக்​கேன்.​ ​ ஆனா ​ அக்கா அள​வுக்கு எல்​லாம் நான் டான்​ஸர் கிடை​யாது.​ அவ ​சூப்​பரா டான்ஸ்ல வெளுத்து வாங்​குவா.​ நான் எப்​படி சொல்லி கொடுக்​கி​றாங்​களோ அப்​ப​டியே ஆடு​வ​தோடு சரி.​

​"அணு ​வ​ள​வும் பய​மில்லை' நிகழ்ச்​சி​யில் ஐஸ்​கட்​டி​யின் மேல் உட்​கா​ரும் போதும்,​​ உய​ர​மான இடத்​தில் இருந்து குதிக்​கும் போதும் உங்​கள் மன நிலை எப்​படி இருந்​தது?​​

​நான் முதன்​முத​லில் பண்​ணின ரியா​லிட்டி ஷோ அது.​ இது​வ​ரைக்​கும் இந்த மாதிரி எல்​லாம் நான் டிரை பண்​ணி​னதே கிடை​யாது.​ இது​தான் முதல் முறை.​ நாற்​பது அடி உய​ரத்​தில் இருந்து குதிக்க ரொம்ப ரொம்ப பய​மாக இருந்​தது.​ கொஞ்​சமா கொஞ்​சமா மேலே போக போக தலை எல்​லாம் சுத்​து​வது போல ஆயி​டுச்சு.​

மேலே ஏறி நின்​ற​தும் ரொம்ப பயமா இருந்​துச்சு.​ அத​னால மேலே போன​வு​டனே குதிச்​சிட்​டேன்.​ ஐஸ்​கட்​டி​யின் மேல் உட்​கார்ந்​தாச்சு எப்​ப​டி​யும் வின் ஆயிட்​டு​தான் எந்​தி​ரிக்​க​னும்னு முடி​வோட உட்​கார்ந்​திட்​டேன்.​ அது முடிஞ்சு எழுந்​த​போது கையெல்​லாம் ரத்​தம் உறைஞ்ச மாதிரி ஆகி சிவந்து போச்சு.​ கால் எல்​லாம் அப்​ப​டியே ​ இழுத்​துக் கொண்​டது.​ இரவு முழு​வ​தும் ​ தூங்​க​மு​டி​யாம வலி​யால அவ​திப்​பட்​டேன்.​

​* உண்​மை​யில் மகா​லஷ்மி எப்​படி? உறு​தி​யான பெண்ணா, இல்லை பயந்த சுபா​வமா?​​

உறு ​தி​யான பெண்​தான்.​ என்னை பொருத்​த​வரை எந்த ஒரு விஷ​யம் எடுத்​துக்​கிட்​டா​லும் அதில் உறு​தியா இருக்​க​னும்.​ அப்​போ​தான் ஜெயிக்க முடி​யும்.​ ஒரு விஷ​யம் பண்ண வேண்​டும் என்று முடிவு செய்​து​விட்​டால் அதில் எவ்​வ​ளவு தடை​கள் வந்​தா​லும் சரி கண்​டிப்​பாக செஞ்சி முடிச்​சு​டு​வேன்.​

* ​உங்​கள் குடும்​பத்​தைப் பற்றி சொல்​லுங்​கள் கிச்​சன்​பக்​கம் எல்​லாம் போனது உண்டா?​​

​ அம்மா சுபி.​ அப்பா சங்​கர் அவர் சினி​மா​வில் ​ கொரி​யோ​கி​ராபி பண்​ணிக்​கிட்டு இருக்​கார்.​ தம்பி பன்னி​ரெண்​டாம் வகுப்பு படித்து கொண்​டி​ருக்​கி​றான்.​ அதற்​குப் பிறகு ரெண்டு நாய்க்​குட்டி இருக்கு.​ கிச்​சன் பக்​கம் எல்​லாம் நான் போனதே கிடை​யாது.​ அம்மா சூப்​பரா சமைப்​பாங்க.​ ​ ​ ​ ​

* ​வேறு என்ன என்ன தொடர் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றீர்​கள்?​​

சன் ​டி​வி​யில் வரு​கிற "செல்​லமே',​ "கண்​மணி',​ ஸ்டார் விஜய்​யில் "யாமி​ருக்க பயம் ஏன்?​',​ ஜெயா டிவி​யில் "ஓவியா',​ பாலி​மர் டிவி​யில் "மூன்று முகம்',​ அதற்கு பிறகு ​ ரியா​லிட்டி ஷோ ஒண்ணு பண்​ணிக்​கிட்டு இருக்​கேன்.​ அது இல்​லா​மல் தெலுங்​கில் சுந்​தர காண்​டம் என்று தொடர் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன்.​ ​


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=184283&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:88aa77c28c]

Madhu Sree
20th January 2010, 02:34 PM
கோபால் ல் ல் ல்

aanaaaa :rotfl2: naan ippodhaan gavinikkaren :lol2:

aanaa
14th February 2010, 08:24 AM
சினிமாவை விட சின்னத்திரை சீரியல்கள்தான் பெஸ்ட் என்று இரண்டு திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரமான நடிகை தீபா வெங்கட் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட். ஏகப்பட்ட சீரியல்களில் இவரது முகம் பளீச் அறிமுகம். சிலபல சினிமாக்களிலும் தலை காட்டியிருக்கிறார். சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல சினிமாவிற்கு கொடுப்பதில்லையே என தீபாவிடம் *கேட்டால் படபடவென பட்டாசுபோல வெடித்து பேசுகிறார். அவரது பேட்டி:-

சினிமாவில் ஒரு படத்தில், ஒரு ரோலில் நடித்தால் அடுத்து வரும் 10 படங்களிலும் அதே ரோல்தான் கிடைக்கும். படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்த கதை படத்தில் 2 சீனில்தான் நடித்தேன். ஆனால் எனக்கு அது மன நிறைவை தந்தது. அடுத்து வாடா படத்தில் சுந்தர் சி.யுடன் தங்கச்சி ரோல் பண்ணிருக்கேன். தில், உள்ளம் கொள்ளை போகுதே, ஜெயம் கொண்டான் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. சினிமாவை விட சீரியல்களில் நல்ல ரோல் கிடைக்கிறது. நிறைய கேரக்டர்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் சீரியல்தான் பெஸ்ட் என சொல்வேன். எனது திருமணம் அநேகமாக இந்த வருடத்தில் இருக்கும். காதல் திருமணம் செய்தாலும் என் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும், என்று சொல்லும் தீபா வெங்கட் சமீப காலமாக ஒரு புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார். அது ரேடியோ தொகுப்பாளர் அவதாரம்தான்.

அதேபோல இவரைப் பற்றிய இன்னொரு சங்கதி நிறைய படங்களில் முன்னணி நாயகிகள் பலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பது. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரனுக்கும், குரு படத்தில் வித்யாபாலனுக்கும் குரல் கொடுத்திருக்கும் தீபா, விரைவில் வெளிவரவுள்ள முறியடி, முரட்டுக்காளை, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறாராம்.

mr_karthik
16th February 2010, 12:13 PM
கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட்.
onnum printing mistake illaiyE... :D

Because if we calculate with this, her gae comes 40+ now.
But she she still looks like 20+ age.

R.Latha
19th February 2010, 12:37 PM
Theepa Vengat
maraimuga thirumanam aagi vittathaaga kealvi. iam not sure.

R.Latha
19th February 2010, 12:39 PM
ஞாயிறு கொண்டாட்டம்
பழிவாங்குவது பிடித்திருக்கிறது!

கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.

என்ன, என்ன தொடர்கள் நடிச்சிகிட்டு இருக்கீங்க?

"அவர்கள்', "கிருஷ்ணா காட்டேஜ்', "தேவதை, பந்தம்', "நம்ம குடும்பம்' இந்த தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போழுது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்கள் "கண்மணி', "தங்கமான புருஷன்', "மூன்று முகம்', விஜய் டிவியில் "ரோஜாக்கூட்டம்' ஆகிய நான்கு தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கேன். மஸ்தானா மஸ்தானாவுல ஏற்கனவே கலந்துகிட்டு டைட்டில் ஜெயிச்சியிருக்கேன். மானாட மாயிலாட எம்.எம்.2 ல ஜெயிக்க முடியல. எம்.எம்.4 பைனல்ஸ் ஆடி முடிச்சிருக்கோம். அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும், யார் ஜெயிக்கப் பண்ணப் போறாங்கன்னு. ரொம்ப படப்படப்பா இருக்கு. இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு.

"கண்மணி' தொடரில் வெறிதனமா பழிவாங்க துடிக்கிறீங்களே? யாரும் திட்டலையா?

உண்மையில் எனக்கு அந்த ரோல் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ரசித்து, கஷ்டப்பட்டு செய்கிற ரோல் அந்த திலகா கேரக்டர். இதுப் போல வித்தியாசமான கேரக்டர் செய்யும் போதுதான் மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். அதனாலயே நெகட்டீவ் ரோல் செய்ய எனக்கு ரொம்ப இஷ்டம். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அக்காவா வருவேன். ஒரு பிரச்னையால் பாதிக்கப்படும் தங்கைக்காகப் பழிவாங்க துடிக்கும் அக்கா கேரக்டர் அது. இந்த மாதிரி பழிவாங்குவது ரொம்ப பிடிச்சிருக்கு.

டான்ஸ் புரொகிராம்மில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்கள் நிறைய பேர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாதாக சொல்கிறார்களே உண்மையா?

நான் ஏற்கனவே இந்த மாதிரி டான்ஸ் ஷோஸ் எல்லாம் கலந்துகிட்டதுனால எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லை. நான் ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரிச்சு செய்வதுனால என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஸ்பாட்டுக்குப் போய்ட்டா என்ன காட்சியோ அதை சரியா முடிச்சு கொடுத்திட்டு வந்திடுவேன். அங்க போய்ட்டு தூக்கமின்மை, டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதனால் ஏற்படும் வலி அதையெல்லாம் கம்மிச்சுக்க மாட்டேன்.

அதுப்போல ஷோ இருக்கிற அன்று சீரியலுக்கு தேதி தரமாட்டேன். ஒரே நேரத்துல ரெண்டடையும் செய்ய முடியாது.

பெரியத்திரையில் படங்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்களா?

என்னோட முதல்படம் "பெருசு' அதில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். காமராஜ் சார் டைரக்ட் செய்திருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு புரொடியூசரும் கூட. அதன்பிறகு கதம் கதம்ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். பத்மா மதன் டைரக்ட் செய்த "அம்முவாகிய நான்' என்ற படத்திலும் நடிச்சிருக்கேன்.

அதன்பிறகு தங்கர்பச்சன் சார் டைரக்ஷன்ல "பள்ளிக்கூடம்' படத்தில் நடிச்சிருக்கேன். பி.ஆர்.ஓ பாலன் டைரக்ட் பண்ணின "ராசாத்தி'ன்னு ஒரு டெலி ஃபிலிம் பண்ணியிருக்கேன். இப்போ லேட்டஸ்ட்டா பாலா சார் அஸிடெண்ட் டைரக்ட் பண்ணும் "தேரோடும் வீதியிலே' நடிச்சுகிட்டு இருக்கேன். அதற்கடுத்து பாலசூரியா சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதில் ரெண்டாவது ஹீரோயினா நடித்துக்கொண்டிருக்கேன்.

மானாட மயிலாட, தொடர்கள், பெரியத்திரைன்னு பிஸியா இருக்கீங்க எப்படி நேரம் கிடைக்குது?

காலையில் 9-9 சூட்டிங் முடித்துவிட்டு அதன் பிறகு டான்ஸ் பிராக்டீஸ்க்கு போயிடுவேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரத்தை பகிர்ந்து செய்வதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இப்படி டைட் ஷெடியூல்ல ஓர்க் பண்ணுவது எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா உட்கார்ந்தா சோம்பேறி ஆயிடுவோம்ல. அதனால எப்போழுதும் சுறுசுறுப்பா இருக்கனும் ஏதாவது வேலையை செய்துகிட்டே இருக்கணும்.

இந்த மாதிரி கேரக்டர் நடிக்கணும்னு நினைத்ததுண்டா?

ஓரளவுக்கு எல்லா மாதிரி கேரக்டரும் நடிச்சுட்டேன். நான் இதுவரை நடிக்காத கேரக்டர்ன்னா அது பைத்தியகாரி கேரக்டர், இன்ஸ்பக்டர் கேரக்டர், ஊனமுற்றவர்கள் கேரக்டர் பண்ணதில்லை. அந்த மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கு.

நடிப்பு தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?

நாட்டியம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பேஸிக்கலாவே ஒரு கிளாசிக்கல் டான்ஸர். இப்பவும் பரதநாட்டியத்தில் சாதிக்கணும்ங்கிற வெறி, எண்ணம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூல் வைத்து பெரிய அளவில் வரணும்ங்கிற ஆசையும் இருக்கிறது.

உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?

டான்ஸ் மாஸ்டர் ராமன் பழனிதான் என் அப்பா. அம்மா, நான் தம்பி என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கான்.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=197317&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

aanaa
20th February 2010, 12:34 AM
கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட்.
onnum printing mistake illaiyE... :D

Because if we calculate with this, her gae comes 40+ now.
But she she still looks like 20+ age.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/1728/Chinna-thirai-Television-News/TV-Actress-Deepa-Venkat-exclusive-interview.htm

மிகப் பழைய நாடகமான குடும்பம்(?) ஜெய்கணேஷின் பேத்தியாக வந்த ஞாபகம் ...

R.Latha
8th March 2010, 11:52 AM
[tscii:dab82c1742] சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?

'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.​

''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:​ ​

'ஆமாம்.​ இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.​ கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை.​ இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன்.​ இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது.​ ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால்,​​ அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.​ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ​ ​

இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' ​

இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

'செல்லமே', ​ 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.​ இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள்.​ 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம்.​ மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம்.​ இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.​ அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ​

உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?​ ​

மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ தற்போது 'ரசிக்கும் சீமானே',​​ 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?

நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.​ ​

சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?

எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​ கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு ​ ​ நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ அதுவும் இப்போது மாறிப்​ போய்விட்டது.

உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?

என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=208016&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:dab82c1742]

R.Latha
15th March 2010, 01:56 PM
ஞாயிறு கொண்டாட்டம்
லட்சிய நடிப்பு

"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்

களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று

ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.

உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?

என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.

என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?

"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.

"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?

அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.

நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?

சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.

அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.

டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?

தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.

ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?

நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ

அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.

பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?

சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=211483&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
22nd March 2010, 11:45 AM
[tscii:a24c9d8a77] திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!

"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே

கிடை​யாது.​ அந்த அள​வுக்கு இல்​லத்​த​ர​சி​க​ளின்

மனங் ​க​ளை​யும் கொள்ளை கொண்​ட​வர்.​ பெரி​ய ​தி​ரை​யில் பின்​ன​ணி​கு​ரல் கொடுப்​ப​வ​ரா​க​வும்,​​ ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வரு​கி​றார் தீபா.​ இதோ அவ​ரது வசீ​க​ரக் குர​லில் ​ நமது கேள்​வி​க​ளுக்குப் பதி​ல​ளிக்​கி​றார்..​ ​ ​

* தொலைக்​காட்சி தொடர்​க​ளில் உங்​களை நிறைய பார்க்க முடி​ய​வில்​லையே,​​ ஏன்?​​

இது ​வரை நிறைய தொடர்​க​ளில் நல்ல நல்ல ரோல்ஸ் ​ நடித்​தி​ருக்​கி​றேன்.​ அதற்​காக ஆடி​யன்ஸ் ​ கிட்ட பாராட்​டு​க​ளும் வாங்​கி​யி​ருக்​கி​றேன்.​ இப்​போது என்​னு​டைய எதிர்​பார்ப்​புக்கு ​ ஏற்ற மாதிரி ரோல் அமை​ய​வில்லை.​ நிறைய தொடர்​கள் நடிக்​க​வேண்​டும் என்​ப​தில்லை.​ ஒரு சில தொடர்​கள் நடித்​தா​லும் அது மக்​கள் மன​தில் நிற்க வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​

நான்கு மாதங்​கள் வரை தொடர்​கள் நடிக்க வேண்​டாம் என்று முடிவு செய்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் டைரக்​டர் விஸ்​வ​நா​தன் "வாடகை வீடு' தொட​ரைப் பற்றி சொன்​னார்.​ அது இரண்டு நாய​கி​கள் கதை.​ இருந்​தா​லும் இரண்டு பேருக்​குமே முக்​கி​யத்​து​வம் உள்ள கதை.​ அந்த ஸ்கி​ரிப்ட் எனக்​குப் பிடித்​தி​ருந்​தது.​

சந்​தோ​ஷி​யும் நானும் நடிக்​கி​றோம்.​ வாடகை வீட்​டில் குடி​யி​ருப்​ப​வர்​க​ளின் சொந்த வீடு பற்​றிய கன​வு​ம் அதற்​காக அவர்​கள் சந்​திக்​கும் பிரச்​னை​யும்​தான் கதை.​ அது ஒரு காமெடி தொடர்.​ இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்​பத்தைச் சார்ந்த பெண்​ணாக நடிக்​கி​றேன்.​ என் கேரக்​டர் பெயர் பூஜா.​ ​

* இன்​றைய ​ சின்​னத்​தி​ரை​யில் நடிப்​ப​தற்கு நிறைய பெண்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ அது உங்​க​ளுக்​குப் போட்​டி​யாக இருக்​கும் என்று நினைக்​கி​றீர்​களா?​​

அப்​படி யாரை​யும் நான் போட்​டி​யாக ​ நினைப்​ப​தில்லை.​ இது ​ போன்று நிறைய புது​மு​கங்​கள் ​ வரும்பொழுது அது ஒரு ​ ஆராக்​கி​ய​மான போட்​டி​யாக ​ தான் இருக்​கும்.​ என் திறமை ​ மீது எனக்கு நிறைய ​ நம்​பிக்கை இருக்​கி​றது.​ இந்த மாதிரி ஆரோக்​கிய போட்​டி​கள் வரும்​போ​து​தான்,​திற​மை​கள் வெளியே தெரி​யும்.​ அதுவே தங்​களை இந்த பீல்​டில் தக்க வைத்​துக் கொள்ள ஒரு முயற்​சி​யாக இருக்​கும்.​ ​

* பெரி​ய ​தி​ரை​யில் ​ நடிப்​ப​தற்குச் சின்​னத்​திரை நடி​கை​கள் விரும்​பு​வ​தில்​லையே?​ ஏன் நீங்​க​ளும் சின்ன சின்ன கதா​பாத்​தி​ரத்​தில்​தான் வரு​கி​றீர்​கள் அதைப் பற்றி என்ன நினைக்​கி​றீர்​கள்?​ ​

பெரி​ய ​தி​ரை​யில் ​ நீடிக்க வேண்​டும் ​ என்​றால் கொஞ்​சம் கிளா​ம​ரா​க​வும் நடிக்க வேண்​டும்.​ கிளா​ம​ரா​க​வும் ரொமான்​ஸô​க​வும் நடித்​தால்​தான் மக்​கள் ஏற்​றுக்​கொள்​கி​றார்​கள்.​ இது தவிர்க்க முடி​யா​தது.​ ஒரு படத்​தில் இரண்​டா​வது நாய​கி​யாக நடித்​து​விட்​டால் அதற்குப் பிறகு சில வரை​மு​றை​களைக் கடை​ப்பி​டிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ என்​னு​டைய லிமிட்டுக்​குள்ள வரு​கிற படங்​க​ளில் மட்​டுமே நான் நடிக்​கி​றேன்.​ அப்​படி என்​னு​டைய லிமிட்டைத் தாண்டி நடித்​தால் எனக்​கும் ​ நிறைய வாய்ப்​பு​கள் வரும்.​ இப்​போது தங்கை கேரக்​டர்​கள் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ ​

* நீங்​கள் டைரக்ட் செய்ய ​ போகி​றீர்​க​ளாமே?​​

உண் ​மை​யைச் சொல்ல வேண்​டு​மென்​றால் ஒரு ​ நடி​கை​யாக ஜெயிப்​ப​தற்கே நிறைய போராட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ எத்​தனையோ பிரச்​னை​களைச் சந்​திக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ இதை​யெல்​லாம் தாண்டி வந்​தால் தான் ஜெயிக்க முடி​யும்.​ அதுபோல ஒரு டைரக்​டர் ஆவது சுல​ப​மல்ல.​ நிறைய பொறுப்​பு​களைச் சுமக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ அப்​படி நான் டைரக்​ஷ​னில் இறங்​கி​னால் எப்​படி நடி​கர், நடி​கை​களை வேலை வாங்​கு​வ​தில் இருந்து மற்ற எல்​லா​வற்​றை​யும் தெரிந்து கொண்டு,​​ கற்​றுக் கொண்​டு​தான் வரு​வேன்.​ ​

* உங்​கள் வருங்​கால திட்​டம் என்ன?​​

எந் ​தத் துறை​யாக இருந்​தா​லும் நல்ல பேர் வாங்​கு​வ​தற்​கும்,​​ ஒரு நல்ல இடத்​திற்கு வரு​வ​தற்​கும் ​ நிறைய உழைக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ ஆனால் சினி​மாவைப் பொருத்​த​வரை அது ரொம்ப ஈசி.​ இப்​போ​தைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்​கி​றது.​ அதை கடை​சி​வரை காப்​பாற்ற வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​ மக்​கள் என்னை அவர்​கள் குடும்​பத்​தில் ஒருத்​தி​யாக நினைக்​கி​றார்​கள் அதை தக்கவைத்துக் கொள்​வ​து​தான் இப்​போ​தைய பிளான்.​ ​

* நடிப்பைத் ​ தவிர வேறு எந்த துறை​யில் ஆர்​வம் இருக்கு?​​

நடிப்பைத் ​ தவிர பெரி​ய ​தி​ரை​யில் நாய​கிக்கு ​ டப்​பிங் குரல் கொடுக்​கி​றேன்.​ ​ சினி​மா​வில் நடிக்க வந்​த​தில் இருந்து டப்​பிங் பேசிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்​கி​றேன்.​ ரேடி​யோ​வி​லும் ​ நிறைய ரசி​கர்​கள் இருக்​கி​றார்​கள்.​ அது எனக்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​

* உங்​கள் ​ திரு​ம​ணம் எப்​போது?​ காதல் திரு​ம​ண​மாக ​ இருக்​குமா?​​

கல் ​யா​ணம் என் வாழ்க்​கை​யில் ஒரு திருப்​ப​மாக இருக்​கும்.​ நான் காத​லித்​தா​லும் இல்லை என்​றா​லும் அது என் பெற்​றோர்​கள் சம்​ம​தத்​து​டன் நடக்​கும்.​ காதல் திரு​ம​ணம் செய்து கொள்​ப​வர்​கள் சந்​திக்​கும் நிறைய பிரச்​னை​களை நான் பார்த்​தி​ருக்​கி​றேன்.​ பெற்​ற​வர்​கள் வாழ்த்​துக்​க​ளோட நடக்​கிற திரு​ம​ணம்​தான் சந்​தோ​ஷ​மா​ன​தாக இருக்​கும்.​ என் திரு​ம​ணம் என் அப்பா அம்​மா​வின் விருப்​ப​ப​டி​தான் இருக்​கும். அந்த பொறுப்பை அவர்​க​ளி​டமே ஒப்​ப​டைத்​து​விட்​டேன்.​ திரு​ம​ணத்​திற்குப் பிறகு நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை.​

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=215005&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:a24c9d8a77]

R.Latha
29th March 2010, 12:18 PM
ஞாயிறு கொண்டாட்டம்
நடிப்பதில் ஆர்வம் இல்லை!

விஜய் டிவி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளி​னி​யாக கொஞ்​சும் தமி​ழில் பேசி மக்​கள் மன​தில் இடம் பிடித்​த​வர் ஷில்பா.​ "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சி​யின் படப்​பி​டிப்பு தளத்​தில் அவ​ரைச் சந்​தித்​தோம்.​ நம்​மி​ட​மும் கொஞ்​சும் தமி​ழில் பேசி​னார்.​ இனி அவ​ரு​டன்..​

* உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு பூர்​வீ​கம் கேரளா.​ நான் ஆங்​கில இலக்​கி​யம் படித்​தி​ருக்​கி​றேன்.​ ஐந்து வரு​ட​மாக இந்​துஸ்​தானி மியூ​சிக் கற்று வரு​கி​றேன்.​ என் தங்கை என்​ஜி​னீ​ய​ரிங் படிக்​கி​றாள்.​ எங்​க​ளு​டை​யது சிறிய அன்​பான குடும்​பம்.​ ​

* தற்​போது என்​னென்ன நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்​கு​கி​றீர்​கள்?​​

"நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சியை ஒன்​றரை வரு​ட​மாக தொகுத்து வழங்​கிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதைத்​த​விர டிவி நிகழ்ச்​சி​க​ளைத் தொகுத்து வழங்​கு​கி​றேன்.​ தற்​போது விஜய் டிவி​யில் புதி​ய​தாக தொடங்​கி​யி​ருக்​கும் "சினிமா சினிமா' நிகழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளி​னி​யா​க​வும் இருக்​கி​றேன்.​

* பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்​கும் அனு​ப​வம் பற்றி சொல்​லுங்​கள்?​​

புது ​மை​யான அனு​ப​வம்.​ பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை நேரில் சென்று பார்க்க முடி​யா​த​வர்​கள் தங்​கள் வீட்​டில் இருந்தே அவர்​க​ளு​டைய சடங்​கு​கள்,​​ சம்​பி​ர​தா​யங்​க​ளைப் பார்ப்​பது ​ நன்​றாக இருக்​கி​றது.​ அதைத் தவிர திரு​ம​ணத்​தில் கலந்து கொள்​ளும் பிர​ப​லங்​க​ளைப் பார்க்​கும் வாய்ப்​பும் கிடைக்​கி​றது.​ இந்​தக் கான்​சப்ட்டே ரொம்ப புது​மை​யா​னது.​ மக்​க​ளி​டம் நிறைய வர​வேற்பு இருக்​கி​றது.​

* தொடர்​க​ளில் ஏன் நீங்​கள் நடிக்​க​வில்லை?​​

தொடர்​க​ளில் நடிக்க நிறைய வாய்ப்​பு​கள் வரு​கின்​றன.​ ஆனால் நடிப்​ப​தில் எனக்கு அவ்​வ​ளவு ஆர்​வம் இல்லை.​ ​

* நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தவிர வேறு எதில் கவ​னம் செலுத்​து​கி​றீர்​கள்?​​

ஸ்டேஜ் ஷோக்​க​ளில் இந்​துஸ்​தானி இசை​யில் பாடல்​கள் பாடு​கி​றேன்.​ பாட்டு தான் ரொம்ப பிடித்​தி​ருக்​கி​றது.​ இப்​போ​தைக்கு முழுக்க முழுக்க இந்​துஸ்​தானி இசை பாடல்​க​ளில்​தான் கவ​னம் செலுத்​து​கி​றேன்.​ ​

* பின்​னணி பாடகி ஆவ​தற்கு ஏதும் முயற்சி செய்​கி​றீர்​களா?​​

கன் ​ன​டப் படம் ஒன்​றில் ஒரு பாடல் பாடி​யி​ருக்​கி​றேன்.​ தமி​ழில் பாடு​வ​தற்​கான முயற்​சி​கள் செய்து வரு​கி​றேன்.​ அதற்​காக இசை​ய​மைப்​பா​ளர்​க​ளி​டம் டெமோ சிடி​கள் கொடுத்து வரு​கி​றேன்.​ ​

* இந்​துஸ்​தானி இசை​யைத் தேர்​தெ​டுத்​தது ஏன்?​​

என் குர​லுக்கு இந்​துஸ்​தானி இசை பொருத்​த​மாக இருக்​கி​றது.​ சிறு​வ​ய​தில் கர்​நா​டக இசை கொஞ்​சம் கற்​றுக்​கொண்​டேன்.​ மேற்​கத்​திய மற்​றும் இந்​துஸ்​தானி இசை பிடித்​த​மா​னவை.​ எனவே அவற்றை விரும்பி கற்​றுக்​கொண்​டேன்.​ பொது​வா​கவே எனக்கு ​ மெலோ​டி​யான இசை​யைக் கேட்க ரொம்ப பிடிக்​கும்.​

* நிகழ்ச்​சி​க​ளின் மூலம் மக்​க​ளி​டம் நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசும் அனு​ப​வம் ​ ​ பற்றி சொல்​லுங்​கள்?​​

மக் ​களை நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசு​வ​தால்,​​ ​ நிதா​ன​மா​க​வும்,​​ கவ​ன​மா​க​வும் பேச​வேண்​டி​யுள்​ளது.​ ஏதா​வது தவ​றாகி போனா​லும் திருத்​திக் கொள்ள முடி​யாது.​ மக்​கள் நம்மை நேர​டி​யாக திட்​டி​வி​டு​வார்​கள்.​ அத​னால் மிக கவ​னத்​து​டன் பேச வேண்​டும்.​ சிர​மங்​க​ளுக்கு ஆண்,​பெண் என்ற வேறு​பாடு தெரி​யாது.​ பிற துறை​க​ளில் உள்ள சிர​மங்​கள் இத்​து​றை​யி​லும் இருக்​கின்​றன.​

* உங்​க​ளைப்​பற்றி ரசி​கர்​கள் என்ன சொல்​லு​கி​றார்​கள்?​​

நிகழ்ச் ​சி​யைத் தொகுத்து வழங்​கும்​போது என் உச்​ச​ரிப்பு நன்​றாக இருக்​கி​றது எனச் சொல்​லு​கி​றார்​கள்.​ மேலும்,​​ நளி​ன​மா​கப் பேசு​வ​தா​க​வும் சொல்​லு​கி​றார்​கள்.​ ​ இப்​படி மக்​கள் நம்​மி​டம் நேர​டி​யாக சொல்​லும்​போது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ இதை எனக்கு கிடைக்​கும் பரி​சாக நினைக்​கி​றேன்.​

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=218644&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

aanaa
3rd April 2010, 11:07 PM
[tscii:41d94f906d]
மானாகிறேன் மயிலாகிறேன் - நமீதா!

தமிழ் சினிமாவில் "கவர்ச்சிகன்னி'யாக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நமீதா. தற்போது வித்தியாசமான வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

நமீயிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் கொஞ்சம் இளைத்து, இன்னும் கூடுதல் அழகாயிருப்பது! தட்டுத்தடுமாறி நமீ பேசும் தமிழை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

வெயில் தலைக்காட்டத் தொடங்காத ஒரு காலை வேளையில் நமீயை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உரையாட காத்திருந்தோம். "வாங்க மச்சான்' என்று கூறியபடியே நமீ, கண்களில் காந்தப்பார்வையும், இதழில் புன்னகையுமாக நம் முன்னே வந்து அமர்ந்தார். இரண்டு கோல்டு காபிகளுக்கு ஆர்டர் செய்து விட்டு, நம்மிடம் உரையாடினார்.

நீங்கள் நடித்து வெளியான ஒரு படம் சம்பந்தமாக உங்களைப் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளதே?

இனிமேல் அந்தப் படத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கு நாலு பேர் திட்டினாக்கூட அது ஒரு செய்திதான். ஆனால், எந்தத் திட்டுக்கும் நான் பொறுப்பானவள் இல்லை.

அந்தப் படத்தை பொருத்தவரை நான் நேர்மையாகவும், சரியாகவும், மரியாதையாகவும் நடந்திருக்கிறேன். தவறுகள் யார் தரப்பில் என்பதை நான் உணர்த்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஏன்? சொன்னவருக்கும் கூட இது தெரியும்!

அப்படியிருக்கும்போது நான் எதைச் சொல்லுவது?

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். என்னை பழிப்பவர்களுக்கு கடவுள் பதில் அளிப்பார்.

தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?

தெலுங்கில் "சிம்ஹா' என்னும் பெயர் கொண்ட படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக, போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்கிறேன்.

இதில் எனக்கு கிளாமர் கேர்ள் வேடம் (உங்களுக்கு வேறெந்த வேடமும் கொடுக்கமாட்டாங்களா? நமீ!) இதில் பாலகிருஷ்ணா ஸôர் பொதுவுடைமை பேசுகிற வேடத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த பேச்சினால் அவர் மேல் எனக்கு காதல் பிறக்கிறது. அதன்பின் எங்கள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் இயக்கத்தில் "தேசத்துரோகி' என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் மலையாள இயக்குநரான பிரமோத் பப்பன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இது தவிர வேறெந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

தொடர்ந்து தெலுங்கிலும் நடிப்பீர்களா?

இயக்குநர் சரண் ஸôர்தான் தெலுங்கு "ஜெமினி' படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதானே தெலுங்கிலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தேன். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஒன்றும் தவறில்லையே? தமிழ், தெலுங்கு, மலையாளரம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. எல்லா மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.

"கோ' படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே?

"கோ' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைத்தார்கள். ஆகவேதான் நடிக்க மறுத்தேன். இப்போது

மட்டு ​மில்லை,எப்போ​துமே ""ஒரு பாட​லுக்​காக நான் நடிக்க மாட்​டேன்'' என்று சொல்​லித்​தான் வந்​தி​ருக்கி​றேன்.அது மிகப்பெ​ரிய பட​மாக இருந்​தா​லும் கூட நான் நடிக்க மாட்​டேன்.

ஏனென்​றால், நான் ஒரு பாட​லுக்கு மட்​டும் போய் அந்​தப் படங்க​ளில் ஆடி, நடித்​தால் பிறகு அதையே நமது பாணி​யாக்கி நம்மை ஒரு பாட​லுக்கு மட்​டும் ஆடும் நடி​கை​யாக்கி விடு​வார்கள். எனக்​கென்று ரசிகர்களிடத்​தில் ஒரு இமேஜ் இருக்கிறது. ஆகவே​தான் "கோ' படத்​தில் நடிக்க மறுத்​தேன்.மற்றபடி அதில் வேறெந்த உள்​நோக்க​மும் இல்லை!

உங்க​ளுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் கிடைக்கிறதா?

என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன்.தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள்.

அப்ப​டித்​தான் "நில் கவனி என்​னைக் காதலி',"இந்திர​விழா' போன்ற படங்க​ளில் நடித்​தேன்.ரசிகர்க​ளும் இப்படங்க​ளுக்கு பெரிய ஆதரவு அளித்​தார்கள்.இது போன்ற கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது!

"மானாட மயி​லாட' குறித்து?

இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது.

ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்."மானாட மயி​லாட' என்பது ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி.அதுக்கு மக்கள் மத்தி​யில் கிடைத்தி​ருக்​கும் வர​வேற்பு எத்​தகையது? என்பது உங்க​ளுக்​கேத் தெரி​யும்!

இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.

அந்த உற்சாகப்ப​டுத்​தும் வேலையை நான் மானாக​வும்,மயிலாக​வும் இருந்து செய்து வருகி​றேன். அதுமட்டு​மில்லை, இந்த நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது. வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.

தென் ​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் பூஜா,ரம்பா ஆகி​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன்.

ஆக்ஷன் ஹீரோயி​னாக நடிப்​பீர்களா?

இந்தக் கேள்​வியை நீங்கள் இயக்குநரிடம்​தான் கேட்டி​ருக்க வேண்​டும்.எந்த இயக்குநர் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிக்கக் கேட்டா​லும் என்னு​டைய கால்​ஷீட் ரெடி!தற்​போது நடிக்க இருக்​கும் "தேசது​ரோகி' படத்​தில் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிப்பதற்​கான வாய்ப்புகள் இருக்கு.

படம் தயா​ரிக்​கும் எண்ண​முண்டா?

ஒரு நல்ல கதை கேட்டு வைத்தி​ருக்கி​றேன்.இதை கொஞ்ச காலத்​திற்​குப் பிறகு தயா​ரிக்க​லாம் என்று திட்ட​மிட்டி​ருக்கி​றேன்.அவசரப்பட்டு தற்​போது படம் தயா​ரிக்​கும் திட்ட​மில்லை.ஆனால் தயா​ரிக்​கும்​போது கண்​டிப்​பாக தமி​ழில்​தான் அந்தப் படத்தை எடுப்​பேன்.

சாமி​யார்க​ளைச் சந்​தித்து இருக்கி​றீர்களா?

எனக்கு கட​வுள் நம்​பிக்கை உண்டு!​

​ நெருக்க​மான தோழிகள் யார்? யார்?

சினேகா​வும், பூஜா​வும்​தான்!


நன்றி: தினமணி [/tscii:41d94f906d]

R.Latha
13th April 2010, 12:29 PM
தங்கம் தந்த தங்கை!

சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்

"தங்கம்' தொடரில் ரம்யாவின்

தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்

இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்

படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.

சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?

நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.

அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.

முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.

தற்போது என்ன தொடர்களில் நடித்து

வருகிறீர்கள்?

தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.

ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?

தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.

பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?

நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.

ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி

வருகிறேன்.

உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?

எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?

ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.

இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=225264&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
20th April 2010, 11:48 AM
ஞாயிறு கொண்டாட்டம்
தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்!

'தென் ​றல்' தொட​ரில் சுப​லேகா சுதா​க​ரின் மகள் துள​சி​யாக வந்து அசத்​து​ப​வர் ஸ்ருதி.​ பார்ப்​போர் நெஞ்​சத்தை தனது எதார்த்த நடிப்​பால் ஈர்க்​கி​றார்.​ பாவாடை தாவணி,​​ கழுத்​தில் ஒரு முத்​து​மாலை என எளி​மை​யா​கத் தோன்​றும் ஸ்ருதி,​​ சினி​மா​வி​லும் கால்​ப​தித்​தி​ருக்​கி​றார்.​ "தென்​றல்' தொட​ரின் படப்​பி​டிப்பி​லி​ருந்த ஸ்ருதி நம்​மி​டம்

பேசி​யதி​லி​ருந்து...​

இந்த தொட​ருக்​காக உங்​களை எப்​ப​டித் தேர்​தெ​டுத்​தார்​கள்?​​

"ஜெர்ரி' படம் ரீலி​ஸிற்​குப் பிறகு நிறைய பேர் நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள்.​ நான் உடனே ஒத்​துக்​க​வில்லை.​ நல்ல கதா​பாத்​தி​ர​மாக இருக்​க​வேண்​டும் என்று எதிர்​பார்த்து காத்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் சன் டிவி​யில் விக​டன் டெலி​வி​ஷன் தயா​ரிப்​பில் தென்​றல் தொட​ருக்கு நடிக்​கிற வாய்ப்பு வந்​தது.​ கிட்​டத்​தட்ட ஆறு வரு​டங்​க​ளுக்கு மேல் ஓடி,​​ ரசி​கர்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு பெற்ற கோலங்​கள் தொடர்,​​ நல்ல தொட​ராக இருந்​த​தால்​தான் பெரி​ய​ள​வில் வெற்றி பெற்​றது.​ அந்​த​மா​திரி ஒரு தொடரை தயா​ரிக்​கிற நிறு​வ​னத்​தில் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்​தது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது அத​னால் உடனே ஒப்​புக்​கொண்​டேன்.​

முத ​லில் டைரக்​டர் கும​ரன் வந்து கதை​யைச் சொன்​னார்.​ "பாவாடை தாவணி போட்​டு​கிட்டு நீங்க சாதா​ர​ண​மாக எப்​ப​வும் வீட்​டில் இருப்​பது போல ஒரே ஒரு பொட்டு மட்​டும் வெச்​சுக்​கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்​தி​ட​லாம்' என்று சொன்​னார்.​ பிறகு டய​லாக் கொடுத்து பேசச் சொன்​னார்​கள் அதில் ஓ.கே.​ ஆகி​விட்​டேன்.​

அந்த கேரக்​டர் இந்​த​ள​வுக்​குப் பேசப்​ப​டும் என்று எதிர்​பார்த்​தீர்​களா?​​

நல்ல கேரக்​டர் என்று தான் நினைத்​தேன்.​ ஆனால் இந்​த​ள​விற்கு வர​வேற்பு இருக்​கும் என்று நினைக்​கலை.​ ஒரு நல்ல பிரா​ஜக்ட் ஒத்​துக்​கிட்டு செய்​வது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ தென்​றல் தொடர் ஆரம்​பித்த ​ முதல் வாரத்​தில் இருந்தே ரசி​கர்​கள் நிறைய சப்​போர்ட் செய்​கி​றார்​கள்.​ திரை​யு​லகைச் சார்ந்​த​வர்​க​ளும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்​டி​னார்​கள்.​ அதைக் கேட்​கும் பொழுது என் கேரக்​டர் மீது இன்​னும் ஆர்​வம் அதி​கம் ஆகி​றது.​ துளசி கேரக்​ட​ரில் வரும் மேன​ரி​ஸம்,​​ உச்​ச​ரிப்பு,​நடிப்பு எல்​லாமே டைரக்​டர் சொல்லி கொடுப்​பதை அப்​ப​டியே செய்​கி​றேன்.​ அவர் சொன்​னதை அப்​ப​டியே என்​னு​டைய கதா​பாத்​தி​ரத்​தில் பிர​திப​லிக்​கி​றேன்.​

சினி ​மா​வில் பெரி​தாக வரு​வீர்​கள் என்று நினைத்​தி​ருப்​பீர்​கள்.​ ஆனால் சின்​னத் திரை​தான் உங்​களை நன்​றாக அடை​யா​ளப்​ப​டுத்​தி​யி​ருக்​கி​றது.​ அப்​ப​டித்​தானே?​​

ஆமாம் உண்​மை​தான்.​ நிறை​யப் பேர் சொன்​னாங்க.​ சினி​மாவை விட இந்த ஒரு தொடர் பெரி​ய​ள​வில் ​ அங்​கீ​கா​ரத்தை உண்டு பண்​ணி​யி​ருக்கு.​ "காதல் டாட் காம்',​ "ஜெர்ரி',​ "மந்​தி​ரம்' என மூன்று தமிழ் படங்​க​ளில் நடித்​தேன்.​ தெலுங்​கில் இரண்டு,​​ மூன்று படங்​கள் நடித்​தி​ருக்​கி​றேன்.​ மலை​யா​ளத்​தில் "தோஸ்த்' என்ற படம் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அது​தான் என்​மு​தல் பட​மும் கூட.​ இத்​தனை படம் நடித்​தி​ருந்​தா​லும் எனக்கு இந்​தத் தொட​ரும்,​​ துளசி கேரக்​ட​ரும்​தான் பெரி​ய​ள​வில் பெயர் வாங்கி கொடுத்​தி​ருக்​கி​றது.​ இது,​​ தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்​தான்.​ பெரி​யத்​தி​ரை​யில் எதிர்​பார்த்​தது சின்​னத்​தி​ரை​யில் கிடைத்​தி​ருக்​கி​றது.

இனி சினி​மா​வில் நடிப்​பீர்​களா?​​

நல்ல கேரக்​ட​ராக இருந்து அந்தக் கதா​பாத்​தி​ரத்​திற்கு முக்​கி​யத்​து​வம் ​ ​ இருந்​தால் கண்​டிப்​பாக நடிப்​பேன்.​ வாய்ப்பு வரு​கி​றது என்​ப​தற்​காக ​ ​ ​ ​ ​ எல்லா படங்​க​ளி​லும் நடிக்க மாட்​டேன்.​ இப்​போ​ழுது இந்தத் தொட​ரின் மூலமா மக்​கள் மன​தில் நல்ல அடை​யா​ளம் கிடைத்​தி​ருக்​கி​றது.​ "யார்,​​ இந்தப் பெண் புதுசா இருக்​கி​றது?​' என்று ஆச்​சர்​ய​மாக கேட்​கி​றார்​கள்.​ இனி சின்​னச் சின்ன கேரக்​டர் சினி​மா​வில் செய்​ய​மு​டி​யுமா?​ அதில் எனக்கு விருப்​ப​மும் இல்லை.​ அதே​ச​ம​யத்​தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத்​து​கொள்ள வேண்​டும் இல்​லையா?​ அத​னால் நல்ல கதை​யும்,​​ கதா​பாத்​தி​ர​மும் வந்​தால் கண்​டிப்​பாக நடிப்​பேன்.​

நடிக்க வேண்​டும் என்ற ஆசை உங்​க​ளுக்​குள் எப்​பொ​ழுது வந்​தது?​​

நான் நடிக்க வேண்​டும் என்று ஆசைப்​பட்​டது எல்​லாம் கிடை​யாது.​ சின்ன வய​தில் பள்ளி நாட​கங்​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அப்​படி எட்​டாம் வகுப்பு படிக்​கும் பொழுது ஒரு நாட​கத்​தில் நடித்​தேன்.​ அப்​போது நிகழ்ச்​சி​யில் எடுத்த போட்​டோவைப் பார்த்​து​விட்டு நடிக்​கக் கூப்​பிட்​டார்​கள்.​ ஆனால் பத்​தா​வது படிக்​கும் போது​தான் நடிக்க வந்​தேன்.​ மலை​யா​ளப் படத்​தில் அறி​மு​க​மா​னேன்.​ அதன்​பி​ற​கு​தான் தமி​ழுக்கு வந்​தேன்.​ இந்த நான்கு வரு​டப் போராட்​டத்​திற்குப் பிறகு இப்​பொ​ழு​து​தான் நல்ல வாய்ப்பு கிடைத்​தி​ருக்​கி​றது.​

குடும்​பம் பற்றி?​​

அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்​டரி எக்ஸ்​சர்​வீஸ்​மேன்,​​ அம்மா ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ சுலோச்​சனா ராஜன்,​​ நான்.​ இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்​டெல்​லாம் எது​வு​மில்லை.​ என் தாய்​மொழி மலை​யா​ளம்.​ சின்ன வய​தில் டான்ஸ் கொஞ்​சம் கத்​துக்​கிட்டு இருக்​கேன் அவ்​வ​ள​வு​தான்.​


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=229224&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
26th April 2010, 11:22 AM
வெற்றியின் ரகசியம்!

ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 25 Apr 2010 11:21:00 AM IST

Last Updated :

சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் "ராணி மகா ராணி' நிகழ்ச்சியின் நாயகி மமதி. தன் வசீகர குரலால், அழகு தமிழில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரைச் சந்தித்தோம்....

ராணி மகா ராணி நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கேம் ஷோ. எல்லா பெண்களுக்குள்ளேயும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவே இந்த கேம் ஷோ. சில பெண்களுக்குப் போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மட்டும் இருக்கும்.

ஆனால்,வெற்றிபெறத் தெரியாது. அப்பொழுது அவர்களைச் சுற்றி இருப்பவர்களோ, அல்லது வேறு யாராவதோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பெண்களின் மனது வேதனைப்படும்படி பேசிவிடுவார்கள். ஆனால் இந்த மேடையில் அதைப் போன்று எதுவும் கிடையாது.

அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும். இதில் வெற்றி, தோல்வி என்ற இலக்கு இல்லாமல் சந்தோஷமாக விளையாடுவார்கள். ஒவ்வொரு பெண்ணும், பணமோ அல்லது பொற்காசோ வென்று செல்லுவார்கள்.

ஆக்கப்பூர்வமாக நாலு விஷயங்களைப் பேசி, சந்தோஷமாக விளையாடி, திருப்திகரமாக வீட்டுக்குப் போக வேண்டும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சின்னத்திரையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

தூர்தர்ஷன் மட்டும் இருக்கும் பொழுதிலிருந்தே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை.

வேறு என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகின்றீர்?

பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இப்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும் வழங்கி கொண்டிருக்கிறேன்.

சிறுவயது முதலே சின்னத்திரையில் இருக்கும் நீங்கள் பெரியதிரை பக்கம் போகாதது ஏன்?

பெரியதிரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தமிழ் ரசிகர்களைப் பொருத்தவரை மமதியின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது, அப்படியிருக்க பின்னணி குரலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே?

தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

குரலால் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகிட்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை.

இந்தத் துறையில் பெண்கள் வெற்றி பெறுவது சுலபமில்லை என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆடவராக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும்.

அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது.

ஆண்களுக்குத்தான் ஜெயிப்பது கஷ்டம். புத்திசாலிதனமான பெண்களுக்கு அது சுலபம். வெற்றியை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று நினைப்பவர்களும் உண்டு, இப்படித்தான் அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அது அவரவர் தனிப்பட்ட கொள்கை.

ஓரிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்தாலும் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அதன் ரகசியம் என்ன?

என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=232607&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
6th May 2010, 02:40 PM
பெண்கள்தான் ஹீரோக்கள்!

ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 02 May 2010 12:00:00 AM IST

Last Updated :

சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட பெரியதிரையின் பிரபல நாயகியான கஸ்தூரியை அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கூடத்தில் சந்தித்தோம். அங்கே இருந்த பரபரப்பின் ஊடே நம்முடைய

கேள்விகளுக்குச் சுடச்சுட பதிலளித்தார்.

பெரியதிரையில் வாய்ப்புகள் இருக்கும்பொழுது எப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வந்தீர்கள்?

சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் அதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. வெளிநாட்டில் இருக்கும் என் குடும்பத்தினர்கள் அனைவரும் பார்த்து மகிழ்கிறார்கள்.

சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது பட்டி தொட்டி எல்லாம் பரவிவிடும். இந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தொகுப்பாளினியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம். வெகு நாட்களுக்கு பிறகு என் முகம் ஒரு சில நிமிடமே டிவியில் வந்து போனாலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எத்தனை பேர் எனக்கு போன் செய்து மறுபடியும் எப்போது சினிமாவிற்கு வந்தீர்கள்.

சின்னத்திரையில் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்கள். சின்னத்திரையின் வளர்ச்சியைக் கண்டு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

ஏன் டி.வி. சீரியலில்களில் நடிப்பதில்லை?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடருக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அப்படியில்லாமல் வேறு டிவி சேனலாக இருந்தால் அதுவும் உலகமெங்கும் தெரியக்கூடிய டிவியாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நானே மாதத்தில் பாதிநாள் ஜெர்மனியில்தான் இருக்கிறேன்.

அந்த நேரங்களில் நான் நடித்ததைப் பார்க்க எனக்கே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால்தான். அது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில்தான் சாத்தியம். அந்த மாதிரி முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.

தெலுங்கு, மலையாளம் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் இருந்து நடிக்க கேட்கிறார்கள். இப்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருப்பதால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

சின்னத்திரையைப் பொருத்தவரை எனக்கு ரோல் மாடலாக ரம்யா கிருஷ்ணனைத்தான் நினைக்கிறேன். அவர்கள் இரண்டு துறையிலும் கலக்குகிறார்கள். அது போல செய்ய முடிந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.

பெரிய திரை நடிகைகள் நிறைய பேர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

சின்னத்திரைதானே என்று சொல்லி ஒதுக்கிய காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. ஒருமுறை இயக்குநர் வாசு சொன்னார். "முன்பெல்லாம் தியேட்டரில் சினிமாவைத் தேடிப் போய் பார்ப்பார்கள். ஆனால் இப்போது சினிமா வீட்டுக்கே தேடி வருகிறது.

அதைப் பார்க்கக்கூட மக்கள் விரும்புவது இல்லை. தொடர்கள், கிரிக்கெட் என்று உலகத்தில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்னத்திரையா,பெரியதிரையா என்ற பேச்சுக்கே இடமில்லை.

அப்படிபார்த்தால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான் போன்றவர்கள் எல்லாம் சின்னத்திரையில் இருந்து போய்தான் பெரியதிரையில் கலக்கிகிட்டு இருக்காங்க. அவ்வளவு ஏன் டான்ஸ் மாஸ்டர் முதல் கொண்டு தொலைக்காட்சியில் இருந்து பெரியத்திரைக்குப் போகிறார்கள்.

அது அவரவர் மனதைப் பொருத்தது. எங்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள்' என்றார். இதுதான் என் கருத்தும்.

சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் ஒரே நேரத்தில் நல்ல லீடிங் ரோல் வந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

இன்றைய சூழ்நிலையில் நான் கேரக்டர் ரோலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதே போல டான்ஸ் என்றாலும் ஒ.கே. கலக்கலா ஆறு நிமிடம் வந்தாலும் அந்த ஆறு நிமிடத்தில் ஸ்கோர் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெரியதிரையைப் பொருத்தவரை படம் முழுக்க ஹீரோயினாக நடித்தாலும் நல்ல கதை அமையவில்லை என்றால் ஸ்கோர் செய்வது ரொம்ப கஷ்டம். சின்னத் திரையில் அப்படியில்லை.

பெண்கள்தான் ஒவ்வொரு கதையிலும் ஹீரோ. தினமும் ஒவ்வொருவருடைய வீட்டிற்கே சென்று அவர்களோட வீட்டில் ஒருவராக வாழ்கிறார்கள் சின்னத்திரை ஹீரோயின்கள்.

சன் குடும்ப நிகழ்ச்சிக்கானத் தேர்வு வேலைகள் செய்து கொண்டு இருக்கும்போதுதான் தெரிந்தது சின்னத்திரை நடிகைகளுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் இருக்கிறது என்று. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. "திருமதி செல்வம்' என்ற தொடரில் நடித்த அபிதாவுக்குச் சினிமாவில் கிடைக்காத வெற்றியை சின்னத்திரை கொடுத்திருக்கிறது.

அவருக்கு இனி பெரியதிரை பக்கம் போகவேண்டும் என்கிற எண்ணம் கூட வருமா என்று தெரியவில்லை. அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

சின்னத்திரை வளர்ச்சியினால் பெரியதிரை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்கள் வந்த போது கூத்து கொஞ்சம் நசுங்கி போனது. அடுத்து சினிமா வந்த போது நாடகங்கள் நலிந்து போனது. இப்போது டிவி வந்தபோது சினிமா கொஞ்சம் நலிந்து தான் போனது.

இந்த மாதிரி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப வளர்ச்சி மாறிக்கிட்டே இருக்கிறது. எத்தனையோ மேடை நாடக கலைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டவர்கள் இன்று டிவி வந்த பிறகு ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்கள் தான். அந்த வகையில் சின்னத்திரை ஒரு முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் கணவரோட ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?

என் கணவர் டாக்டர் குமார். அவருக்கு நான் நடிப்பதைப் பற்றி எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நான் நடிப்பதை ரொம்ப விரும்பிப் பார்ப்பார். அதற்காக எல்லா விதத்திலும் சப்போர்ட் செய்வார். ஆனால் நடிப்பதற்காக அவரைப் பிரிந்திருப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=235614&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
6th May 2010, 02:41 PM
பாடகர் கிருஷ்ஷை திருமணம் செய்து ஒரு வருடம் நெருங்கிவிட்ட நிலையிலும் ஒரு கேள்வி மட்டும் சங்கீதாவை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறதாம்.

என்னவென்று கேட்டால்...

""நாங்கள் காதலித்தோம்; திருமணமும் செய்துகொண்டோம். இப்போது நாங்கள் கணவன்-மனைவி. திருமண வாழ்க்கையைப் பற்றிக் கேட்டால் கூட பரவாயில்லை. ஆனால் இன்னமும் எங்களைப் பார்ப்பவர்கள் எங்களுடைய காதலைப் பற்றியே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் இனி எங்கும் சேர்ந்து போகக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு எங்களைத் தள்ளிவிட்டார்கள். கணவரை அழைத்துக்கொண்டு ஹீரோ வாய்ப்பு தேடுவதாவும் கூறுகிறார்கள். அதிலும் உண்மையில்லை. அவர் ஏதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால்கூட அதில் ஒரு சிறிய கேரக்டரில்கூட நான் நடிக்க மாட்டேன்'' என்கிறார் சங்கீதா.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=235611&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
24th May 2010, 11:43 AM
ஆட்டோ ராணி!

"தென் ​றல்' தொட​ரில் ஆட்டோ ஓட்​டு​ன​ராக வந்து ரசி​கர்​கள் மன​தில் இடம் பிடித்த சுசை​னியை ​(அது தாங்க அவ​ரின் நிஜ​பெ​யர்)​ நமது வாச​கர்​க​ளுக்​காக ஒரு மாலை பொழு​தில் சந்​தித்​தோம்.​ இத​மாக வந்​தது அவ​ரின் இனி​மை​யான பதில்​கள் ​

நடிக்க வந்​தது எப்​படி?​ நடிப்​ப​தற்கு உங்​கள் வீட்​டில் எப்​படி சம்​ம​தித்​தார்​கள்?​​

அம்மா, ​​ அண்​ணன்,​​ நான் மட்​டும்​தான்.​ அப்பா இறந்​து​விட்​டார்.​ அம்மா கல்​லூரி பேரா​சி​ரி​யை​யாக இருந்​த​வங்க.​ இப்போ வேலையை விட்​டு​விட்டு வீட்​டில்​தான் இருக்​கி​றார்​.​ அண்​ணன் ஸ்கி​ரிப்ட் ரைட்​டர்.​ நான் வளர்ந்​தது,​​ படித்​த​தெல்​லாம் பெங்​க​ளு​ரில்.​ டிப்​ளமோ சாப்ட்​வேர் படிச்​சேன்.​ இறுதி ஆண்டு படிக்​கும் போது​தான் சென்​னைக்கு வந்​தேன்.​ ​ நான் நடிப்​ப​தற்கு சம்​ம​திக்க வைத்​தது ரொம்ப பெரிய கதை.​ ​ நான் சென்​னைக்கு படிக்க வந்த போது ஜெயா​டி​வி​யில் இருந்து எங்க கல்​லூ​ரி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தேர்வு செய்​தார்​கள்.​ அதில் தேர்வு ஆனேன்.​

படிப்​பில் சாதிக்க வேண்​டும் என்று நினைக்​கிற குடும்​பம்.​ அத​னால அம்மா கண்​டிப்​பாக டி.வி.யில தோன்ற ஒத்​துக்க மாட்​டாங்க,​​என்ன செய்​வது என்று யோசித்​தேன்.​ ஆனால் என்​னோட தோழி​கள் எல்​லாம் கிடைத்த வாய்ப்பை நழு​வ​விட வேண்​டாம் என்று சொன்​னார்​கள்.​ அத​னால ​ அம்​மா​வுக்​குத் தெரி​யாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தக​வல்.காம்' என்ற நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்கிக் கொண்​டி​ருந்​தேன்.​

ஒரு​நாள் அம்மா டி.வி.யில் என்​னைப் பார்த்​து​விட்டு ரொம்ப சத்​தம் போட்​டார்​கள்.​ பிறகு அம்​மா​வி​டம் பேசி ஒரு வழியா சம்​ம​தம் வாங்​கி​விட்​டேன்.​ அம்மா எப்​ப​வுமே ரொம்ப பிராக்​டிக்​கலா யோசிப்​ப​வங்க.​ எப்​ப​வுமே ரொம்ப என்​கரேஜ் செய்​வாங்க.​ அத​னால என்​னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்​லிட்​டாங்க.​ ஆனா தோற்​றுப் போய் மட்​டும் வரக் கூடாது என்று

சொன்​னார்​கள்.​

பெங்​க​ளுரைச் சேர்ந்த நீங்​கள் நல்ல தமிழ் பேசு​வது எப்​படி?​​

நிறைய டைரக்​டர்​கிட்ட திட்​டு​வாங்கி,​​ எழுதி எழுதி பழ​கியே தமிழை கற்​றுக் கொண்​டேன்.​ இப்போ சூப்​பரா தமிழ் பேசு​வேன்,​​ எழு​து​வேன்.​

சின்​னத்​திரை பக்​கம் வந்​தது எப்​படி?​​

பிரம்மா சார் முல​மா​கத்​தான் முதன் முத​லில் தொலைக்​காட்​சிக்கு வந்​தேன்.​ விஜய் டிவி​யில் வி.ஜே.வாக நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்கி கொண்​டி​ருந்​தேன்.​ அப்போ "தென்​றல்' தொட​ரில் என் கேரக்​ட​ருக்கு நடிக்க ஒப்​பந்​த​மாகி இருந்​த​வங்க வரா​த​தால்,​​ நான் அந்த கேரக்​ட​ருக்கு பொருத்​த​மாக இருப்​ப​தாக என்​னைக் கேட்​டாங்க.​ ​

ஆட்டோ ஓட்​டு​ன​ராக ​ வரும் காட்​சி​க​ளில் நிஜ​மா​கவே ஆட்டோ ஓட்​டு​வீர்​களா,​​ ஓட்டு​வ​து​போல நடிப்​பீர்​களா?​​

நிஜ ​மா​கவே ஆட்டோ ஓட்ட கற்​றுக் கொண்​டேன்.​ ஆட்டோ ஓட்​டு​வது ரொம்ப பிடிச்​சி​ருக்கு.​ தொடர் இல்​லைன்னா கூட கைவ​சம் ஒரு தொழில் இருக்​குங்க ​(சிரிக்​கி​றார்)​.​ முத​லில் தயக்​க​மா​கத்​தான் இருந்​தது.​ என்​னால அந்த கேரக்​டர் செய்ய முடி​யுமா என்று நினைத்​தேன்.​

வில்​ லத்​த​ன​மான கேரக்​டர்​கூட யோசிக்​கா​மல் செய்​து​விட்​டேன்.​ ஆனால் ஆட்​டோ​கா​ரி​யாக மேக்​கப்பே இல்​லாம நடிக்க வேண்​டும் என்ற போது,​​ இதெல்​லாம் சரியா வருமா என்று யோசித்​தேன்.​ ​ ஆட்டோ ஓட்டு​வது அவ்​வ​ளவு ஈசி​யான விஷ​ய​மல்ல.​ ​ அவங்க பாடி லாங்​வேஜ்,​​ அந்​தக் குரல் எல்​லாம் ரொம்ப கஷ்​டப்​பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​வெளி​யில் எங்​கா​வது சென்​றால் ரசி​கர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்​கி​றார்​கள்.​ அதுவே எனக்கு கிடைத்த வெற்​றி​யாக நினைக்​கி​றேன்.​ ​

வேறு என்ன தொடர்​கள் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றீர்​கள்?​​

"வேட்டை' என்ற தொட​ரில் கதா​நா​ய​கி​யாக நடிக்​கி​றேன்,​​ பாலி​மர் சேன​லுக்​காக ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ "மூன்று முகம்' என்ற தொட​ரில் நடிக்​கி​றேன்.​ அடுத்து "உயி​ரின் நிறம் ஊதா' என்ற ​ தொடர் கலை​ஞர் டிவிக்​காக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ இது எல்​லாம் புதுத் தொடர்​கள் அனே​க​மாக அடுத்த மாதத்​தில் இருந்​து​தான் ஒளி​ப​ரப்​பாக உள்​ளது.​ இதற்கு முன்பு விஜய் டி.வி.யில் "அன்​பேவா' என்ற தொட​ரில் நடித்​துள்​ளேன்,​​ அதே​போல "ரோஜா கூட்​டம்' தொட​ரி​லும் நடித்​துள்​ளேன்.​

பெரி​ய ​தி​ரை​யில் நடிக்க வாய்ப்பு வரு​கி​றதா?​​

"மைனா", ​ "அர்​ஜு​னன் காதலி' என்று இரண்டு படங்​கள் நடித்து கொண்டு இருக்​கி​றேன்.​ இரண்டு படங்​க​ளும் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்​கி​றது.​ ரொம்ப ஆவ​லோடு எதிர்​பார்த்து கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதில் "அர்​ஜு​னன் காதலி' என்ற படத்​தில் முழுக்க முழுக்க காமெடி ரோல் செய்​தி​ருக்​கி​றேன்.​

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=245191&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
3rd June 2010, 01:24 PM
ஞாயிறு கொண்டாட்டம்
இளவரசி கயல்விழி!



படபடக்கும் பட்டாம் பூச்சியாய், நமது கேள்விகளை

முடிக்கும் முன்னரே சட்டென்று கொஞ்சமும்

தயாங்காமல் தெள்ளத் தெளிவாக பதிலளிக்கும் இவர், "இளவரசி' தொடரில் அமைதியான

கயல்விழியாக வந்து ரசிகர்களின் மனதை அள்ளி செல்லும் அகிலாதான். அவருடன் ஒரு சந்திப்பு.

எப்படி சினிமாத்துறையை தேர்ந்தெடுத்தீங்க?

நான் சினிமாத்துறை தான் வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வில்லை அது தானாகவே அமைந்த ஒன்று. எனக்கு குருவாக இருந்து என்னை வழி நடத்தி செல்லும் பிரதாப் என்பவர்தான் நான் முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சேர உதவி செய்தார்.

அதன் பின் படிப்படியாக உயர்ந்து தற்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக வளரும் வரை எனக்கு பக்கபலமாக இருந்து, உதவிகள் செய்து, ஊக்குவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நானும், பிரதாப் சாரும் சேர்ந்து ஐடியா செல்லர் என்று நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தின் மூலம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாடவா என் பாடலை' என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம்.

வேறு என்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறீர்கள்?

வஸந்த் டிவியில் பெண்களுக்கான ஸ்பெஷல் க்விஸ் நிகழ்ச்சி, பாலிமர் சேனலில் லைவ் ஷோ அது மட்டுமல்லாமல் ஒரு துறையில் சாதித்த சாதனையாளர்களைப் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறேன். இதைத் தவிர பெரியதிரையில் கிட்டத்தட்ட பனிரெண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

பிரபலங்களையோ, சாதனையாளர்களையோ நேர்காணல் செய்யும்போது என்ன தோன்றும்?

பிரபலங்களின் நேர்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு சாதனையாளர்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்த கொண்டு கேள்வி கேட்கும் போது என்னுடைய அறிவும், செயல் திறனும் அதிகரிக்கிறது.

ஒரு மருத்துவரையோ, அல்லது பாடகரையோ அல்லது வேறு துறையில் சாதித்தவர்களையோ, கேள்வி கேட்கும் போது அவர்களுக்கு ஏற்றவாறு என்னை தயார் செய்து கொள்ள முடிகிறது. இதனால் நமது அறிவும் தெளிவும் வளர்ச்சியடைகிறது. சாதனையாளர்களைச் சந்திக்கும் போது மனதில் ஒருவித தெம்பு பிறக்கிறது. நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.

"இளவரசி' தொடரில் கயல்விழியாக நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?

"இளவரசி'யில் பூ தொடுத்து விற்று பிழைக்கும் அம்மாவுக்கு மகளாக நடிக்கிறேன், நிஜத்தில் கயல்விழிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதற்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் நான். இந்த மாதிரி ஒரு ரோலில் நடிப்பது உண்மையிலேயே எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவம். அதே சமயத்தில் நல்ல அனுபவமும் கூட. ராடன் நிறுவனத்தின் தொடரில், ஒரு நல்ல ரோலில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மூலம் மக்களைத் தொடர்பு கொண்டு பேசும் போழுது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நேரடி நிகழ்ச்சிகள் வழங்கும் போது அதை நாம் பார்க்கவோ கேட்கவோ முடியாது. அதே போல அடுத்து நம்மிடம் யார் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், யாரிடம் பேசப்போகிறோம், என்ன கேட்பார்கள், என்ன பதில் சொல்ல போகிறோம் என்பதே சில நேரங்களில் தெரியாமல் பேச வேண்டியிருக்கும். அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி எதுவுமே தெரியாமல் எதிரே கேட்டபவர்கள் மனநிலையை அறிந்து அவர்களுக்குத் தகுந்த பதில் அளிப்பது என்பது ஒரு கலைதான். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் ரொம்ப த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும். நான் ரொம்ப விரும்பி வழங்கும் நிகழ்ச்சிகளில் "லைவ் ஷோ'வும் ஒன்று.

நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?

கலைஞர் டிவியில் காலை ஒன்பது முதல் பத்து மணிவரை ஒளிபரப்பாகும், தேனும் பாலும், ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "தேன்கிண்ணம்', வஸந்த் டிவியில் "தேனருவி', கேப்டன் டிவியில் "நெஞ்சில் நின்றவை' போன்ற பழைய பாடல்களை ஒளிபரப்பும், நிகழ்ச்சிகளையும் மற்றபடி க்விஸ் புரொகிராம்களும்தான் விரும்பி பார்ப்பேன்.

உங்களைப் பற்றி?

நான் ஒரு மலையாள பெண். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, இதுதான் எங்கள் இனிய குடும்பம். பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். எப்பவும் தைரியமாக இருக்கணும், எதையாவது சாதிக்கணும், எந்தத் துறையாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னைப் பொருத்தவரை சோம்பேறியாக இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க வேண்டும். இதுதான் அகிலா.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=249145&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
7th June 2010, 12:14 PM
ஞாயிறு கொண்டாட்டம்
குழந்தை நக்மாவாக நான்!

ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 06 Jun 2010 01:56:00 PM IST

Last Updated :

இரவு 8.30 மணிக்கு சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளி

பரப்பாகிக் கொண்டிருக்கும் "தென்றல்' தொடரில் ரசிகர்

களுக்கு நல்ல பரிச்சயமான கதாபாத்திரம் ஹேமா. அத்தொடரின் கதாநாயகி துளசியின் தோழியாக வந்து "நிழல்கள்' ரவியை படாதபாடுபடுத்தும் கதாபாத்திரம் அது. ஹேமாவாக கலக்கிக் கொண்டிருக்கும் தீபாவுடன் ஒரு சந்திப்பு..

சின்னத்திரையில் தொடர்கள் பக்கம் எப்போது வந்தீர்கள்?

ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன்.

அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி. "விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கேட்பதற்கு. அதுதான் இந்த கேரக்டருக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.

சினிமாத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?

என் அம்மாவோட தம்பிகள் உதய்குமார்- சுரேஷ் என்ற என் மாமா இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள்.

இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன். "சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.

மறுபடியும் பெரிய திரை பக்கம் போகும் எண்ணம் உண்டா?

பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.

வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சன் டிவியில் காலை பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில் நடிக்கிறேன். அதில் சந்திரா லக்ஷ்மன் அவங்களோட உறவுக்கார பெண்ணாக நடித்து வருகிறேன்.

என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவீர்கள்?

நடிக்க வந்தாச்சு. இதில் இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும்.

சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருடைய சப்போர்ட் அதிகமாகக் கிடைக்கும்?

எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள்.

நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=252731&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

aanaa
10th July 2010, 05:40 AM
[tscii:3795cad836]

நாடகத்துறையிலிருந்து சினிமா, சினிமாவிலிருந்து அரசியல் என்று கலக்கிக் கொண்டிருப்பவர் எஸ்.வி.சேகர். தனது 5600-வது நாடகக் காட்சியை அரங்கேற்றிய உற்சாகத்தில் இருந்தவரை சந்தித்தோம். அவரின் கலகல பேட்டி இதோ!

தற்கால நாடகச் சூழல் குறித்து?

தற்காலத்தில் நிறைய நாடகங்கள் நடக்குது. ஆனால், நாடகங்களுக்கு வரக்கூடிய ஆட்களின் எண்ணிக்கைதான் குறைஞ்சு போயிருக்கு. சமீபத்தில் என்னுடைய நாடகம் ஒன்றை காமராஜர் அரங்கத்தில் போட்டேன். அந்த அரங்கம் 1700 இருக்கைகள் கொண்டது. அரங்கம் நிறைந்து 100 பேர் நின்றுகொண்டே பார்த்தனர்.

ஆனால், பெரும்பாலும் இப்போதெல்லாம் இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், நூறு பேர்தான் நாடகம் பார்க்கவே வருகிறார்கள். பெரும்பாலான நாடகங்கள் இலவசம் என்று அறிவித்தும் கூட யாரும் பார்க்க வரமாட்டார்கள். காரணம் தொலைக்காட்சியினுடைய தாக்கம் நாடகத்தைப் பாதித்திருக்கிறதுதான்.

"நாடகப்பிரியா' மூலம் 5600வது முறையாக நாடகக் காட்சியை மேடையேற்றியிருக்கிறீர்கள். இந்த அரிய சாதனையை எப்படி உணருகிறீர்கள்?

நாங்கள் 1974-ல் நாடகப்பிரியாவை ஆரம்பித்தோம். இதுவரை 36 வருடங்களில் 5600 முறை நாடகக் காட்சியை அரங்கேற்றியிருக்கிறோம். தினம் ஒரு நாடகம் என்று பார்த்தால் கூட 13 வருடங்கள் ஆகும். ஒன்று விட்டு ஒரு நாள் என்று நாடகம் போட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை நினைத்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கு. கடவுளுடைய அருள் இருப்பதால் இதைச் செய்திருக்கிறோம்.

இதுவரை அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் எது? எதனால் அந்த நாடகம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது?

எந்த நாடகமுமே தொடர்ந்து அரங்கேற்றப்படுவதற்கு முக்கியக் காரணம் அது ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால்தான்! "ஆவியே உன்னை ஆராதிக்கிறேன்', "மகாபாரதத்தில் மங்காத்தா', "காதுல பூ', "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' இவை எல்லாமே முந்நூறு, நானூறு முறை தொடர்ந்து அரங்கேற்றப்பட்டவைதான்.

உலக நாடுகளில் "நாடகப்பிரியா' எந்த மாதிரியான நாடகங்களை நடத்தியிருக்கிறது? உங்களை கவர்ந்த நாடு எது?

எல்லா நாடுகளிலும் எங்களுடைய நாடகப்பிரியாவின் நாடகங்களைத்தான் நடத்தியிருக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் செட் போட இயலாத இடங்களில் கூட நாடகத்தை நடத்தியிருக்கிறோம். அங்கு அரங்குகள் எல்லாம் மிகப்பெரியதாக இருக்கும். கார், பைக் எல்லாம் அரங்குக்கே வருகிற அளவிற்கு நீளமானதாக இருக்கும். அங்கே போய் நாம் செட் போட்டால் அரங்கத்தின் நடுவே வத்திப்பெட்டி வைத்தது மாதிரி இருக்கும்.

அதுமட்டுமின்றி சின்ன இடங்களில் கூட நாடகத்தை போட்டிருக்கிறோம். எந்த நாட்டில் போட்டாலும் நம்முடைய தமிழ் மக்களுக்காகத்தானே நாடகம் போடுகிறோம். அதனால் எந்த நாட்டில் போட்டாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.

மறக்க முடியாத நாடக நிகழ்வு எது?

மறக்க முடியாத நாடக நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. எங்கள் நாடகக் குழுவில் பாலன் என்று ஒருத்தர் இருந்தார். முக்கியமான வேடங்களில் எல்லாம் அவர்தான் நடிப்பார். சமீபத்தில் அவருடைய குழந்தை ஒன்று இறந்து போய் விட்டது. சரி!

அவருடைய இடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, தன் குழந்தையினுடைய ஈமச்சடங்கை முடித்துவிட்டு, அன்று மாலையே நடிக்க வந்துவிட்டார். அதுபோல முக்கியமான நாடகம் ஒன்றில் நடிக்க வேண்டிய பெண் ஒருத்தர் நாடக அரங்குக்கு வரவில்லை. நாடக ஆர்வலர்கள் எல்லாம் அரங்குக்குள் வந்து காத்திருக்கின்றனர்.

அவர் 6.45 மணிக்கு வர வேண்டும். ஆனால், 6.45 மணிக்குத்தான் அவர் வரமாட்டார் என்கிற செய்தியே எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, அவசரமாக எங்களது குழுவில் உள்ள டி.ஏ.குமார் என்பவரை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தோம். இதுபோல் எத்தனையோ இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு நாடகம் நடத்தியிருக்கிறோம்.

பிரபலங்கள் ரசித்த நாடகம் எது?

பிரபலமா? அல்லது பிரபலமாகாதவரா? என்பது முக்கியம் இல்லை. ரசிகரா இருக்காரா? இல்லையா? என்பதே முக்கியம். பிரபலம் ஒருவரை அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்து, அவர் நாடகத்தை ரசிக்காமல் உர்ரென்று இருந்தால் என்ன செய்வது? பொதுவாக எங்கள் நாடகத்தின் அடிப்படையே நூறு நிமிடத்தில் 200 சிரிப்புகள் என்பதுதான். எல்லா பிரபலங்களும் எங்கள் நாடகத்தை ரசித்திருக்கிறார்கள்.

பிரபலமில்லாதவர்களும் ரசிக்கிறார்கள். அதேபோல எங்கள் நாடகத்தைப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக எங்கள் நாடகத்தை முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த சபாநாயகர் ராஜாராம், வலம்புரி ஜான், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோரும் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

உங்களை மிகவும் கவர்ந்த நாடகாசிரியர் யார்?

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நல்லா இருக்கக் கூடிய எல்லா நாடகங்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக "சோ'வின் நாடகங்கள் ரொம்பப் பிடிக்கும்.

ழ் திரைப்படம், தொலைக்காட்சி, இணையம் இவற்றின் ஆதிக்கத்தின் சூழலில் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றுவதில் என்ன சிரமங்கள் உள்ளன?

மக்களை வரவழைக்கிற சிரமம்தான். ஆனால் அதையும் தாண்டி வர்றாங்க. இது ஒரு வியாபாரம் மாதிரி. இந்தக் கடையில் இந்தப் பொருள் கிடைக்கும் என்றால் கிடைக்கணும். அப்படிக் கிடைக்காமல் போனால் மக்கள் அந்தக் கடைக்கு வருவதை நிறுத்திக் கொள்வார்கள். நான் அவர்கள் எதை எதிர்பார்த்து வருகிறார்களோ, அதைக் கொடுக்காமல் ஏமாற்றுவதில்லை. ஆகவே, என்னுடைய நாடகங்களுக்கு ரசிகர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பல்துறை வித்தகராக இருக்கிறீர்கள். உங்கள் மனநிலையை எப்படி சமன் செய்து கொள்கிறீர்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

இதில் ஒன்றுமேயில்லை. எல்லோருமே சராசரிதான். எல்லோருக்குமே பல்வேறு விதமான முகங்கள் உண்டு. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் அந்த இடத்தில் ஒரு அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தால் என் குடும்பத்தில் ஒரு தகப்பனாக, கணவனாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்.

இது அடிப்படையான விஷயம். வீட்டில் வந்து அரசியல்வாதி வந்திருக்கேன், சாப்பாடு போடுங்கன்னு சொன்னா? போய்ட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க! எனக்குப் பிடித்தது நாடகக்காரன் என்கிற ஆளுமைதான். ஏன்னா, அதில்தான் எல்லா அதிகாரங்களும் எங்கிட்ட இருக்கு.

"நாடகப்பிரியா'விற்கு கிடைத்த விருதுகள் குறித்து?

எல்லா விருதுகளும் உயர்வான விருதுகள்தான். இதில் உயர்வு, தாழ்வெல்லாம் ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நாடகம் போட்டேன். அப்போது உடம்பெல்லாம் கரி படிந்த நிலையில் ஒருத்தர் வந்து, ""இருபது ரூபா டிக்கெட்டுக்கு கடைசி வரிசையில்தான் உட்காரணும்னு சொல்றாங்க ஸôர்! நான் முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பார்க்க வேண்டும்'' என்று சொன்னார்.

நான் அவரிடம் என்ன வேலைப் பார்க்கிறீர்கள்? என்று விசாரித்தபோது, அவர் கரி வண்டி இழுப்பதாகவும், ஒரு நாளைக்கு கரி வண்டி இழுத்தால் இருபது ரூபாய் கிடைக்கும் என்றும் சொன்னார். நான் அவரிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம். முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பாருங்கள் என்று கூறினேன். அதைத்தான் மிகச்சிறந்த விருதாக நினைக்கிறேன். ஏன்னா அவருடைய ஒரு நாள் சம்பளத்தை என்னுடைய நாடகத்திற்காக கொடுக்கிறார் இல்லையா?

அதனால்தான் அப்படி சொன்னேன். இன்றைக்கு என்னுடைய நாடகத்தின் முதல் வரிசை டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய். கடைசி இருக்கையின் டிக்கெட் விலை இருநூறு ரூபாய். சிலர் என்னிடம் வந்து, ""ஸôர் டிக்கெட் விலை அதிகமாக இருக்கு. ஆனால், உங்க நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்கு'' என்பார்கள். அவர்களிடம், "இலவசமாக பார்த்துவிட்டு போங்க' என்று சொல்லுவேன்.

அதற்காக எல்லோரையும் இலவசமாக நாடகம் பார்க்க அனுமதிக்க முடியாது. நாடகம் நடத்துபவர் பிழைக்க வேண்டும் இல்லையா? இப்போதும் ஒவ்வொரு முறை நாடகம் நடக்கும்போதும் குறைந்தது நான்கு பேரையாவது இலவசமாக பார்க்க அனுமதிக்கிறோம். அந்த நான்கு பேர் யாருன்னா இதுவரைக்கும் என்னுடைய நாடகத்தையே பார்க்காதவர்களாகத்தான் இருப்பார்கள்.

குடும்பம் பற்றி?

என் மனைவி பேரு உமா மகேஸ்வரி. ஒரு மகன். ஒரு மகள். மகன் அஸ்வின் சேகர் திரைப்பட நடிகர். "வேகம்'னு ஒரு படம் நடித்திருக்கிறார். இப்போ "நினைவில் நின்றவள்'னு ஒரு படம் நடிச்சிட்டு இருக்காரு. மகள் அனுராதா சேகர். அளவான அழகான குடும்பம் எங்களுடையது.[/tscii:3795cad836]

R.Latha
13th July 2010, 12:41 PM
ஆவியா.. ஓவியா!

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "ஓவியா' என்கிற திகில் தொடரின் நாயகியாக நடிக்கிறார் அம்மு. நடிப்பு, தொகுப்பாளினி, டப்பிங் எனப் பிஸியாக இருப்பவரிடம்

தொடரின் திகில் அனுபவங்கள் பற்றிப் பேசினோம்:

"ஓவியா'வில் நடிக்கும் அனுபவம் பற்றி?

ஓவியா ஒரு திகில் தொடர். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடிக்கிறேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு இறந்துபோன பெண்ணினுடைய ஆவி என் உடம்பில் புகுந்து அவள் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போன்ற பாத்திரம். அதை நான் சிறப்பாகச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு என்னவென்றால் என்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்களே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.

பேய்ப் பாத்திரத்தில் நடிக்கப் பயமாக இருக்கிறதா?

நடிப்பதில் பயமாக இல்லை. அதற்கான லோகேஷனுக்குப் போகும் பொழுதும்,அந்த இடங்களைப் பார்க்கும்பொழுதும்தான் பயமாக இருக்கிறது.

சாதாரண கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும், இதுபோன்ற பேய்க் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

பேய்ப் பாத்திரம் அவ்வப்போது வந்துபோகிற கதாபாத்திரம் என்பதால் அது ரொம்ப சேலஞ்சிங்காக இருக்கிறது. திடீரென்று முறைக்க வேண்டும், சிரிக்க வேண்டும், கோபப்பட வேண்டும். சில நேரங்களில் ஆக்ரோஷமான சீன்ஸ் எல்லாம் எடுத்து முடித்த பிறகும்கூட அந்தக் கோபத்தில் இருந்து மீண்டுவர கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு விதமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக நடிக்கிறபோது அப்படியெதுவும் இல்லை. ஒரே மனநிலையில் இயல்பாய் நடித்துவிட முடியும்.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரை பக்கம் இப்போதைக்குக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். டைரக்டர் கரு. பழனியப்பன் இயக்கத்தில் "மந்திரபுன்னகை' என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர "சிக்குபுக்கு' பட ஹீரோயினுக்கு டப்பிங் பேசுகிறேன்.

நடிப்பு, டப்பிங், தொகுப்பாளினி இதில் எதைத் கடினமானதாக உணர்கிறீர்கள்?

இதில் எதையுமே நான் கடினமாக நினைக்க வில்லை. வேலை மட்டுமல்ல; எதையும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். சுலபம் என்று நினைத்தால் சுலபம்.

திருமணம்?

இதுவரை காதல் வரவில்லை. அதனால் அம்மா விருப்பப்படிதான் என் திருமணம் இருக்கும்.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=270159&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

aanaa
15th August 2010, 11:55 PM
[tscii:ffb0047ae0]
ஒரு தொடர்... ஒன்பது வேடங்கள்!

அரசி'யில் ராதிகாவின் மகளாக வந்து இப்போழுது "இளவரசி'யாகி இருக்கும் சந்தோஷியை நமது ஞாயிறு கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம். கிச்சனில் படுபிஸியாக இருந்தவர்,சமைத்துக் கொண்டே நம்மோடு உரையாடினார். இதோ கம கம வாசத்துடன்.

இளவரசி என்ன மாதிரியானவள்?

"இளவரசி' தொடர் ஆரம்பமாகி இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. இருந்தாலும் மக்கள் கிட்டே இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிலையை சொல்லும் கதை. இந்தத் தொடரில் நான் மெயின் ரோல் செய்கிறேன். ரொம்ப ஹோம்லியான கேரக்டர்.

அரசியில் ராதிகாவின் மகளாக நடித்த அனுபவம் எப்படி?

ராதிகாவைப் பார்க்கும்போது ஒரு பெண் பத்து வருஷமா ஒரு நிறுவனத்தை இவ்வளவு வெற்றிகரமா நடத்த முடியுமான்னு பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க துணிவும், திறமையும் எதையாவது சாதிக்கணும்னு இன்ஸ்பரேஷனா இருந்தது.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீங்க?

காமெடி தொடர் ஒண்ணு சன் டி.வி.யில் புதுசா வரப்போகிறது. தொடர் பேரு "பொண்டாட்டி தேவை', கலைஞர் டிவியில் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும்தொடர், பாலிமர் டிவியில் ஒரு பிராஜக்ட் எடுத்திருக்காங்க. அது இனிமேதான் வரப்போகிறது, மறுபடியும் அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் என் கணவரோட கலந்துக்கப் போறேன்.

அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களுக்கு தயக்கமில்லையா?

தினமும் காலையில் எழுந்து மேக்கப் போட்டு நடிக்க போறத்துக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமான எக்ஸ்பிரியன்ஸô இருக்கு. இந்த சான்ஸ் எல்லாருக்குமே கிடைக்காது. நான் உண்மையில் என் நிஜவாழ்க்கையில் ரொம்பவே பயந்தவள். திக்திக் தொடர் எல்லாம் பார்க்கக்கூட ரொம்ப பயப்படுவேன்.

அங்கே போய் பாம்பு, தேள் கூட எல்லாம் எடுக்கும்போது ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. மற்றவர்கள் செய்யும் போது நானும் செய்யணும்னுங்கிற எண்ணம் அங்கே போனதும் தன்னாலேயே வந்துவிடுகிறது. அப்படி ஒரு தைரியம் வருவது எனக்குப் பிடித்திருந்தது. நிறைய விஷயத்தில் பயப்பட கூடாது, தைரியமா இருக்கணும்ங்கிற விஷயத்தை எடுத்துச் சொல்வதுபோல இருக்கு இந்த நிகழ்ச்சி.

"அரசி' தொடரில் பைத்தியமா நடிக்கும் போது என்ன நினைத்தீர்கள்?

"அரசி' தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடிச்சிருக்கேன். கல்லூரி பொண்ணாக, மனைவியாக, குழந்தை காணாமல் போனதில் பைத்தியம் பிடிக்கும் தாயாக, கொலைகாரியாகன்னு ஒன்பது கேரக்டர் அந்த ஒரு சீரியல்ல கிடைச்சது.

அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. சமுத்திரகனி இயக்கிய தொடர் அது. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்போதில் இருந்து அவரை பார்த்துக்கிட்டு இருக்கேன். அவர் இருந்ததுனால எனக்கு அவ்வளவு கஷ்டமா தெரியல. எப்படி பட்டவங்களா இருந்தாலும் அவர் வேலை வாங்கிடுவார்.

அந்த மாதிரி பைத்தியமா நடிக்கும் போது ரொம்ப ஈசியா இருந்தது. டப்பிங்க எல்லாம் போனா கத்துற வேலை தான் ஐந்து நிமிடத்தில் ஒரே டேக்ல கத்திட்டு வந்துகிட்டே இருப்பேன்.

என்ன மாதிரி கேரக்டர் செய்ய நினைக்கிறீங்க?

எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. தமிழ் சீரியலைப் பொருத்தவரை இன்னும் நிறைய வளரணும், மாற்றங்கள் வரணும்னு நினைக்கிறேன். நம் தமிழ்நாட்டு பெண்களை பொறுத்தவரை கிளிசரின் போட்டு அழுறவங்களைத்தான் பிடிக்குது.

அதே மும்பை சீரியல் எல்லாம் பார்த்தா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும். இந்த மாதிரி தமிழ்லயும் வரணும்னு அடிக்கடி நினைப்பேன். அதனாலயே என் காஸ்டியூம், என் மேக்கப் எல்லாத்துக்கும் நிறைய அக்கறை எடுத்துக்குவேன்.

நடிப்பு தவிர இந்த ஃபீல்டில் வேற எந்த துறையில் ஆர்வம் இருக்கு?

புரொடக்ஷன் சைடுல ஆர்வம் இருக்கு. அதுக்காக புரொடியூசரா யோசிக்கல. பேக் ஆப் தி ஸ்கிரின் சொல்லுவாங்கல புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்வா பண்ணணும்னு ஆசையிருக்கு. ரேவதி மேடம் கிட்ட கூட ஆப்ளிகேஷன் போட்டு வெச்சிருக்கேன், உங்க ஆபிஸ்லேயே எனக்கு ஒரு வேலை வேணும்னு.

ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள் டிவி பார்ப்பீர்களா?

டிவி பார்ப்பேன். ரியாலிட்டி ஷோ பார்ப்பேன். இண்டெர் நெட்ல உக்கார்ந்துடுவேன். அதைவிட முக்கியமா எந்தக் கடைக்குப் போகலாம், என்ன வாங்கலாம்ன்னுதான் யோசிப்பேன்.

சின்னத்திரை நடிகைகளில் யாருடைய நடிப்பு பேசப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?

நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக சின்னத்திரையில் தேவிப்ரியாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு பேர் இருக்கு. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க.
நன்றி: தினமணி



[/tscii:ffb0047ae0]

R.Latha
23rd August 2010, 12:44 PM
நம்பியார் செய்யாத வில்லத்தனமா?

திருமதி செல்வம்' தொடரில் வடிவுகரசியின்

மருமகளாக வந்து ரசிகர்களின் மனதில் எரிச்சலை

ஏற்படுத்தும் ராகவியை நேரில் சந்தித்து, "இப்படிப் பழிவாங்குறீங்களே "நியாயமா?' என்றால் கொஞ்சம் நேரம்

சத்தமாகவே சிரித்தார். கல்மிஷம் இல்லாத சில்மிஷ சிரிப்பை ரசித்தபடியே அவரோடு பேசினோம்:

சினிமாத் துறைக்கு வந்தது எப்போது?

ரஜினி நடித்த "ராஜா சின்ன ரோஜா' படத்தில்தான் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதில் நடித்த நான்கு, ஐந்து பிள்ளைகளில் நானும் ஒருத்தி. அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். அப்பொழுது படித்துக் கொண்டிருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது நடித்து வந்தேன்.

அதன் பிறகு முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்தி பி.ஏ. முடித்துவிட்டு, மறுபடியும் சினிமாத்துறைக்கு நடிக்க வந்துவிட்டேன். தற்பொழுது சின்னத்திரையில் திருமதி செல்வம் தொடரிலும், மகாலஷ்மி தொடரிலும் நடித்துவருகிறேன்.

"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?

ரொம்ப நல்ல அனுபவம். ரெண்டு வருஷத்துக்கு மேலாக இந்தத் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ஹோம்லியான கதை. படப்பிடிப்பின் நடுவே அத்தை, மாமா, அண்ணன், அண்ணி, தங்கச்சி என்று ஒரு குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதில் கொஞ்சம் வில்லத்தனமான பாத்திரத்தில் நடிக்கிறேன்.

வில்லத்தனமான கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஒப்புக்கொண்டீர்களா?

இல்லவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஆரம்பத்தில் மிகவும் வருத்தமாகவும் சிரமமாகவும் இருந்தது. என்னை இப்படி நெகடீவ் கதாபாத்திரமாக மாற்றுகிறீர்களே என்று புலம்பிக்கிட்டே இருப்பேன். அப்போதெல்லாம் இயக்குநர் "உங்கள் கதாபாத்திரத்தின் பலத்தைப் போகப்போகப் புரிந்துகொள்வீர்கள்' என்று சொல்வார். அவர் சொல்லியபடி ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. இப்போது விரும்பி நடித்து வருகிறேன்.

ரசிகைகளிடம் திட்டு வாங்கிய அனுபவம் இருக்கிறதா?

திட்டு இல்லை. ஓர் அம்மா என் கழுத்தை நெரித்தே இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து அந்த அம்மாவை விலக்கிவிட்டு, அது நடிப்புங்க, நிஜமில்லை என்று சொன்ன பிறகே விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெளியில் போக வேண்டும் என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ரசிகர்கள் இந்த மாதிரி நடந்து கொள்ளும்பொழுது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

ஆரம்பத்தில் அழுதே இருக்கிறேன். நடிப்பு என்று தெரிந்து இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும். இப்போது கதையோடு எப்படி ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். அவர்கள் திட்டுவதில்தான் என் வெற்றி இருக்கிறது என்றும் புரிகிறது. அதேசமயம் அந்தக் காலத்தில் நம்பியார் செய்யாத வில்லத்தனத்தை நான் என்ன செய்துவிட்டேன் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

குடும்பம்?

கணவர் சசிகுமார் சினிமாத் துறையில் தான் கேமிராமேனாக இருக்கிறார். "தொட்டுப்பார்' படம் முடித்துவிட்டு வேறு ஒரு படத்தில்

பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஜிரித்தி சாய் என்கிற பெண்குழந்தை உள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=291371&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/quote]

R.Latha
31st August 2010, 12:08 PM
[tscii:5fbf339a8f]3 மணி நேரமா? வருடமா?

" உல்லாசம்' மகேஸ்வரி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சௌந்தரவள்ளி' தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். எதையும் தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

நல்ல கதையாக இருந்தால் சின்னத்திரை பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன். அப்பொழுது "சௌந்தரவள்ளி' தொடரைப் பற்றி சொன்னார்கள்.

அதன் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒத்துக்கொண்டேன். இடையில் தெலுங்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன். அதனால் என்னைப் பொறுத்தவரை இடைவெளி எதுவும் இல்லாமல்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் அதிகம் நடிக்காததால் இடைவெளி ஏற்பட்டிருப்பதுபோல உங்களுக்குத் தோன்றலாம்.

சினிமாவிலேயே தொடராமல் சின்னத்திரை பக்கம் வந்தது ஏன்?

சின்னத்திரையில் வருவதும் நல்ல விஷயம் தானே. ஏன் சின்னத்திரையைத் தேர்தெடுத்தேன் என்பதற்கு சிறப்புக் காரணம் எதுவுமில்லை. ஏற்கனவே விஜய் டிவியில் தொடர்கள் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். பெரியதிரையில் ஒரு படம் நடித்தால் மூன்று மணி நேரம் தான் ஆடியன்ஸ் மனதில் நிற்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்தால் இரண்டரை வருடம், மூன்று வருடம் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும்.

தெலுங்கில் வேறு தொடர்கள் நடிக்

கிறீர்களா?

தெலுங்கில் "மை நேம் இஸ் மதர்தெராஸô' என ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அது முடிந்து விட்டது. அந்தத் தொடரை தமிழில் எடுக்கப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் முடிவாகவில்லை.

பெரிய திரையில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

சின்னத்திரையே முழு திருப்தியாக இருப்பதனால், இப்போதைக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் இல்லை.

நெகட்டீவ் கதாபாத்திரம் எல்லாம் செய்கிற எண்ணம் உண்டா? எந்த மாதிரியான கதைகள் தேர்வு செய்கிறீர்கள்?

கதை கேட்கும் பொழுது பிடித்திருந்தால் செய்கிறேன். மற்றபடி இந்த மாதிரியான பாத்திரம் என்றெல்லாம் தேடி நடிப்பதில்லை.

நடிப்பைத் தவிர இயக்கம், புரொடக்ஷன் என வேறு துறைகளில் ஆர்வம் இருக்கிறதா?

என் கணவர் ஜெயகிருஷ்ணா சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். எனவே ஆபிஸ், குடும்பம், நடிப்பு என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் வேறு துறை பக்கம் கவனம் செலுத்துகிற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=294620&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
[/tscii:5fbf339a8f]

R.Latha
7th September 2010, 01:16 PM
[tscii:ea19d85c86] என் வீட்டு டிவியைக் கேட்டுப் பார்!

ஸ்ரீதேவிகுமரேசன்.
First Published : 05 Sep 2010 02:35:00 PM IST

Last Updated :

ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு

ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின் மூலம் சின்னதிரைக்கு வந்திருக்கிறார்.

அவரோடு பேசினோம். எல்லாக்

கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டு,

இனிமையாகப் பேசினார்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன

திரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்

கிறது?

சிறிது இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே. சின்னதிரைக்கும் பெரியதிரைக்கும் திரைதான் வெவ்வேறே தவிர மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நீண்ட நாளைக்குப் பிறகு மேக்-அப் போட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இழந்த ஒன்றைப் பெற்றது போன்று இருந்தது.

"சௌந்தரவல்லி'யில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?

சௌந்தரவல்லி தொடரில் எனக்குத் தாசி கதாபாத்திரம். சுதாசந்திரன், மகேஸ்வரி எல்லாம் அக்ரஹாரத்துப் பெண்களாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தோட சரித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது. பருவ வயதில் ஊரைவிட்டுப் போன ஒரு பெண். நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பவும் ஊருக்குள் வந்து பழிவாங்கத் துடிக்கிறாள். நியாயத்துக்காகப் போராடுகிறாள். ஐயர் குடும்பத்துப் பெண்களை எதிர்த்துப் போராடும் தாசி பெண்தான் சௌந்தரவல்லி.

இந்தித் தொடர்களில் நடிக்காமல் தமிழில் நடிக்க வந்தது ஏன்?

மும்பையிலேயே ஏதாவது இந்தி தொடர்கள் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் பிரபுநேபால் இந்தக் கதைகயைப் பற்றி சொன்னார். அங்கிருந்து சென்னை வந்து நடித்துவிட்டுப் போக வேண்டும் என்றால், சரியா வருமா என்று நினைத்து முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் பிரபு நேபால் என்னை வந்து சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

என்னை அந்தக் கதாபாத்திரமாகவே கம்ப்யூட்டரில் சித்தரித்துக் காண்பித்தார். அதைப் பார்த்தபொழுது வித்தியாசமாக இருந்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்தபொழுது கண்டிப்பாக என் கதாபாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்று தோன்றியது. அதில் ஏற்பட்ட ஆசையினால்தான் இந்தி தொடர்களில் நடிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நான், இந்தக் கதை மேல் உள்ள ஆர்வத்தினால் இப்பொழுது சென்னைக்கு வந்து நடித்துவிட்டு போகிறேன்.

இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?

இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். "டெல் மீ யுகுதா' என்ற ஹேமாமாலினியோட படத்தில் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அதுதான் மறுபடியும் எனக்கு இன்டஸ்ட்ரியில் ரீ என்டரி கொடுத்த படம்.

அதையடுத்து ராஜஸ்ரீ புரொடக்ஷனில் "லவ் யூ மிஸ்டர் காலாகான்' என்ற படத்திலும் ஒரு அருமையான கதாபாத்திரம் செய்து வருகிறேன்.

தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?

பிரச்னை இல்லாமல் எனக்குப் பொருந்துவது போல் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்க்க நேரம் கிடைக்

கிறதா?

என் வீட்டு டிவியைக் கேட்டுப் பாருங்கள் "செüந்தரவல்லி... செüந்தரவல்லி' என்றுதான் சொல்லும். ஆனால் இதில் ஒரு விஷயம் தொடர் ஒளிபரப்பாகும் 8.30 மணிக்கு என்னால் பார்க்க முடிவதில்லை. அந்த நேரம் பிள்ளைகள் படிக்கும் நேரம். அதனால் அந்தத் தொடரை ரிக்கார்ட் செய்து வைத்துகொண்டு பிறகுதான் பார்க்கிறேன். பிரபுநேபால் குழுவினரின் தயாரிப்பு முறை, வழங்கும் தன்மை எல்லாம் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவசியம் பார்த்துவிடுகிறேன்.

உங்கள் குடும்பம்?

குஜராத்தி குடும்பம். கணவர் பிஸினஸ் செய்துகிட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்குப் பத்து வயது. அவள் பெயர் அமியா. சிறியவளுக்கு எட்டு வயது. அவள் பெயர் கெயா. மாமனார், மாமியார் எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=298641&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
[/tscii:ea19d85c86]

R.Latha
7th September 2010, 01:16 PM
[tscii:bdc99c3a1f] என் வீட்டு டிவியைக் கேட்டுப் பார்!

ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு

ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின் மூலம் சின்னதிரைக்கு வந்திருக்கிறார்.

அவரோடு பேசினோம். எல்லாக்

கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டு,

இனிமையாகப் பேசினார்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன

திரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்

கிறது?

சிறிது இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே. சின்னதிரைக்கும் பெரியதிரைக்கும் திரைதான் வெவ்வேறே தவிர மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நீண்ட நாளைக்குப் பிறகு மேக்-அப் போட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இழந்த ஒன்றைப் பெற்றது போன்று இருந்தது.

"சௌந்தரவல்லி'யில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?

சௌந்தரவல்லி தொடரில் எனக்குத் தாசி கதாபாத்திரம். சுதாசந்திரன், மகேஸ்வரி எல்லாம் அக்ரஹாரத்துப் பெண்களாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தோட சரித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது. பருவ வயதில் ஊரைவிட்டுப் போன ஒரு பெண். நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பவும் ஊருக்குள் வந்து பழிவாங்கத் துடிக்கிறாள். நியாயத்துக்காகப் போராடுகிறாள். ஐயர் குடும்பத்துப் பெண்களை எதிர்த்துப் போராடும் தாசி பெண்தான் சௌந்தரவல்லி.

இந்தித் தொடர்களில் நடிக்காமல் தமிழில் நடிக்க வந்தது ஏன்?

மும்பையிலேயே ஏதாவது இந்தி தொடர்கள் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் பிரபுநேபால் இந்தக் கதைகயைப் பற்றி சொன்னார். அங்கிருந்து சென்னை வந்து நடித்துவிட்டுப் போக வேண்டும் என்றால், சரியா வருமா என்று நினைத்து முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் பிரபு நேபால் என்னை வந்து சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

என்னை அந்தக் கதாபாத்திரமாகவே கம்ப்யூட்டரில் சித்தரித்துக் காண்பித்தார். அதைப் பார்த்தபொழுது வித்தியாசமாக இருந்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்தபொழுது கண்டிப்பாக என் கதாபாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்று தோன்றியது. அதில் ஏற்பட்ட ஆசையினால்தான் இந்தி தொடர்களில் நடிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நான், இந்தக் கதை மேல் உள்ள ஆர்வத்தினால் இப்பொழுது சென்னைக்கு வந்து நடித்துவிட்டு போகிறேன்.

இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?

இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். "டெல் மீ யுகுதா' என்ற ஹேமாமாலினியோட படத்தில் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அதுதான் மறுபடியும் எனக்கு இன்டஸ்ட்ரியில் ரீ என்டரி கொடுத்த படம்.

அதையடுத்து ராஜஸ்ரீ புரொடக்ஷனில் "லவ் யூ மிஸ்டர் காலாகான்' என்ற படத்திலும் ஒரு அருமையான கதாபாத்திரம் செய்து வருகிறேன்.

தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?

பிரச்னை இல்லாமல் எனக்குப் பொருந்துவது போல் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்க்க நேரம் கிடைக்

கிறதா?

என் வீட்டு டிவியைக் கேட்டுப் பாருங்கள் "செüந்தரவல்லி... செüந்தரவல்லி' என்றுதான் சொல்லும். ஆனால் இதில் ஒரு விஷயம் தொடர் ஒளிபரப்பாகும் 8.30 மணிக்கு என்னால் பார்க்க முடிவதில்லை. அந்த நேரம் பிள்ளைகள் படிக்கும் நேரம். அதனால் அந்தத் தொடரை ரிக்கார்ட் செய்து வைத்துகொண்டு பிறகுதான் பார்க்கிறேன். பிரபுநேபால் குழுவினரின் தயாரிப்பு முறை, வழங்கும் தன்மை எல்லாம் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவசியம் பார்த்துவிடுகிறேன்.

உங்கள் குடும்பம்?

குஜராத்தி குடும்பம். கணவர் பிஸினஸ் செய்துகிட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்குப் பத்து வயது. அவள் பெயர் அமியா. சிறியவளுக்கு எட்டு வயது. அவள் பெயர் கெயா. மாமனார், மாமியார் எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=298641&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
[/tscii:bdc99c3a1f]

R.Latha
13th September 2010, 12:47 PM
[tscii:6e0526c52d]
ஞாயிறு கொண்டாட்டம்
யாரும் தப்​பா​கப் பார்க்​க​வில்லை!

-ஸ்ரீதேவிகுமரேசன், படம் : குணா
First Published : 12 Sep 2010 02:14:00 PM IST

Last Updated :

சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்:

* "செல்லமே' தொடரின் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

"செல்லமே' தொடரில் நடிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது. ராதிகா மேடத்தோடு நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

எப்போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?

அடிப்படையில் நான் ஒரு பாடகி. கூடவே மேடையில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயா டிவியில் "ஸ்டார்ஸ் கப்புள்' என்கிற நிகழ்ச்சியை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் தொடரில் நடிக்க வந்தேன்.

* சினிமாவில் பாடியிருக்கிறீர்களா?

இல்லை. அதற்குச் சந்தர்ப்பம் இதுவரை கிட்டவில்லை. மேடை கச்சேரிகள், சில விழா நிகழ்ச்சிகளில், திருமண வைபவங்களில் பாடிவருகிறேன். பாட்டு என்றால் எனக்கு உயிர். ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.

* "செல்லமே', "திருமதி செல்வம்' இரண்டிலுமே உங்கள் பெண்மையைப் பறிப்பது போன்ற கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இதில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

இதுபோன்ற அழுத்தமுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் எப்போதுமே வலிமை அதிகம். எனக்கு அமைந்தது ஒரு சவாலான ரோல் என்றுகூட சொல்லலாம். வழக்கமான கதாபாத்திரமாக அமையாமல் வித்தியாசமாக அமைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் கதாபாத்திரத்தைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்ன பிறகு நடிக்க முடிவெடுத்தேன். ரசிகர்களின் பரிதாபத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல நடிகருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.

* "திருமதி செல்வம்' தொடரில் ப்ரியாவாக நடிக்கும் அனுபவம்?

கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தத் தொடரில் என் கேரக்டர் ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே என் கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக அமைந்திருக்கிறது. காதலனை நம்பி ஏமாந்து போய்விடும் ஒரு பெண்ணின் மனநிலை, அவள் சந்திக்கும் பிரச்னை, அதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பு இதை வெளிப்படுத்தக்கூடிய ரோல். இதற்கு முன்பே கே. பி. ஸôரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரிலும் இது போன்று நடித்திருக்கிú றன்.

அது "கல்கி' படத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒரு பெண்ணுக்கு நல்லது செய்வதற்காக, ஒரு பையனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனைத் திருத்திக் கொண்டு போய் அவளிடம் ஒப்படைப்பது போன்ற கதை. இதில் நடித்ததால் இப்போது நடிப்பதில் எனக்கு அவ்வளவாகக் கஷ்டம் தெரியவில்லை.

* ரசிகர்கள் உங்கள் நடிப்பைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

ஷாப்பிங் போகும்போது, மேடைக் கச்சேரிகளில் பாடுவதற்காகச் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்தோடு வந்து சூழ்ந்துகொண்டு பேசுகிறார்கள். "நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. உங்களைப் பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் இந்த மாதிரி கஷ்டங்கள் வருகிறது' என்று சொல்வார்கள். உங்களை ஏமாற்றியவர்களைச் சும்மாவிடக்கூடாது, கண்டிப்பாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். யாரும் என் கதாபாத்திரத்திரத்தைப் தப்பாக பார்க்கவில்லை.

* சினிமாவில் நடிக்க ஆர்வம் உண்டா?

இப்போதைக்குச் சினிமா பக்கம் போகிற எண்ணம் இல்லை. தொடர்களிலேயே நிறைய நல்ல வித்தியாசமான, சேலஞ்சிங்கான பாத்திரங்களில் நடித்துச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். [/tscii:6e0526c52d]

aanaa
19th September 2010, 07:10 PM
[tscii:e557ff72cf]

Anuradha

You now play character roles on the small screen. Why weren't you able to do this on the big screen?

I played the heroine in 35 films, the majority of which did not do well at the box office. So I began to dance, and it clicked. I have done nearly 700 films in all the South Indian languages and Hindi. I have acted in a Telugu serial; now I am appearing in “Thangam”, a serial on Sun TV.

Don't you think every film in those days had a song sequence pictured on an ‘item girl'?

It was a must in every film in those days. But today, the heroines don't mind wearing glamorous outfits and doing item numbers. On the whole, the number of solo dances has come down these days.

Why did you make your daughter dance in films and not allow her to play good roles?

She is doing a variety of roles, besides dance. In the recent film, Quarter Katting, she plays the role of a police officer. She has also won the ‘Nandi' Award for her comedy role in a Telugu film. She has acted as a heroine, vamp and comedian and danced in some.

Can you name five best films of your career?

Mohana Punnagai, Nermai, Puthuyugam and Simmasoppanam in Tamil and Repati Pourulu in Telugu.

Even today, Jothilakshmi dances in films, why not you?

She maintains her figure and is able to dance. But I am happy playing character roles on the small and big screens. I am waiting for a good big screen break.

[html:e557ff72cf]<div align="center">http://www.hindu.com/cp/2010/09/19/images/2010091950331601.jpg </div>[/html:e557ff72cf]


நன்றி: Hindu [/tscii:e557ff72cf]

aanaa
19th September 2010, 07:17 PM
[tscii:e2a865481c]
Thirumbi Paarkiraen
(Jaya TV, Monday – Friday, 10 p.m.)
The show that features the experiences of senior actors and technicians of Tamil cinema will have ‘Kaka' Radhakrishnan talking about his past, for a week beginning September 20.
Even after 1,000 films Radhakrishnan continues to work! His thoughts about his 60 years in cinema should be a treat.

Arukaani 2 Azhagurani (Jaya TV, Sunday, 12 noon)
The curtain comes down on this talent hunt this weekend.
The nine girls who have reached the finals will compete for the title ‘Arukaani 2 Azhagurani.' Many prizes await the winner and the top team.
<h>

Kanavu Meippada Vendum-(Makkal TV, Sunday, 10.30 a.m.)
The team visited Puducherry where young contestants gave their opinion on how they would handle things if they were a minister.

Manmanam-(Makkal TV, Sundays, 2 p.m.)
The programme documents the lifestyle, culture and festivals of those residing in various parts of the State.
Different sports and competitions, based on the beliefs of a particular sect, are highlighted.

Bommai - BommaiMakkal TV, Saturdays, 7 p.m.
The show serves as a platform for creative minds to showcase their talent in arts and crafts. The programme gets a facelift as the forthcoming episodes will feature many new talents. In this week's episode, a young girl will explain how various objects are created and how they can be used.<h>


Tamizhagathin Champions -(Polimer TV, Sundays, 8 p.m.)
Watch some amazing acts on this show. Jaiganesh performs yoga while putting on his clothes; Anand, with his eyes covered, lifts a person with his teeth and Parthasarathy cuts vegetables with his eyes covered.

Bhajans -(Sri Sankara TV, Mon-Sun, 5 a.m.)
For the religious minded, begin the day with a spiritual touch. Listen to devotional songs rendered by eminent scholars.
For those who miss the programme, watch the repeat telecast on Friday and Saturday, 1 p.m.<h>


Sangeeta Mahayuddham - (Sun TV, Sunday, 9.30 p.m.)
It's a crucial week as the top two contenders for the finals will be chosen. Usha Uthup joins the team.
On Sunday Chennai Singangal take on Tiruchi Thimingalangal.




நன்றி: Hindu [/tscii:e2a865481c]

aanaa
22nd September 2010, 09:13 PM
[tscii:e00affc93d]
ராதிகாவோடு சண்டை போடுவேன்: கன்யா

-
"செல்லமே' தொடரில் எப்பொழுதும் மது பாட்டிலும் கையுமாகத் திரியும் (மதுமிதா)கன்யாவைப் படப்பிடிப்பில் சந்தித்தோம். அவர் மீது மது வாடை வீசுமே என்கிற தயக்கத்துடனே பக்கத்தில் அமர்ந்து பேசினோம். வாசனைத் திரவியம் மணக்க எவ்வித ஆக்ரோஷமும் இல்லாமல் அமைதியாகப் பேசினார்:


சினிமாத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
முதன் முதலில் டெலி ஃபிலிம் மூலமாக தான் என் வாழ்கையை ஆரம்பித்தேன். டெலி ஃபிலிம் நடிக்கும்போது, "நங்கூரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறேன். அப்போது நிம்பஸ் டெலிவிஷன் மூலம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தமிழில் "நீதி' என்ற தொடரில் ஷோபனா மேடம் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு மலையாளத்தில் நான் நடித்தேன். அதன் பிறகு சன் டிவியில் "நீலவானம்' என்ற தமிழ்த் தொடரில் நடிக்கக் கூப்பிட்டார்கள். அது எனக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிறகு "காவ்யாஞ்சலி' தொடரில் நடித்தேன். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பொறுமை இருக்குமோ அவ்வளவு அமைதியான பெண்ணாக அஞ்சலி என்ற கேரக்டர் செய்திருந்தேன். பேரும், புகழும் வாங்கி கொடுத்த கேரக்டர் அது. அதன் பிறகு இப்பொழுது "செல்லமே' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

"செல்லமே' தொடரில் மதுமிதா கேரக்டருக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்?
அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததினால்தானே என்னைக் கூப்பிட்டிருப்பார்கள்? அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் கதையைக் கேட்கும் பொழுது தயக்கமாக இருந்தது. ஒரு குடும்பப் பெண் இப்படி இருப்பாளா இந்த மாதிரி நடித்தால் நம்மையும் இப்படி தான் நினைப்பார்களோ என்று நினைத்தேன். என் கணவரிடம் கேட்டேன். அவர் உனக்கு விருப்பமிருந்தால் செய் என்று சொன்னார். அதன் பிறகு தான் ஒத்துக்கொண்டேன்.

உங்களுடைய உடை, அலங்காரம் எல்லாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கே?
எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர். சாதாரணமாக இருந்தால் பொருத்தமாக இருக்காது. மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நானேதான் என் காஸ்ட்யூமை டிசைன் செய்துகொண்டு போய் நின்றேன். ராதிகா மேடம், டைரக்டர் எல்லோருமே பார்த்துவிட்டு இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் இப்படியே செய்திடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதே மாதிரி ஸ்கிரீனில் பார்க்கும்போது ரொம்ப பொருத்தமாக இருந்தது. என்னைப் பார்க்கிற நிறையபேர் என்னிடம் உடைகளைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கிறார்கள்.
தொடரில் கணவரையும், பிள்ளைகளையும் எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?
எனக்குக் கணவராக அபிஷேக் ஸôர் ரொம்ப பொறுமையான கேரக்டரில் நடிக்கிறார். ரொம்ப நல்ல நடிகர் அவர். அப்படி அவர் திட்டு வாங்குவதனாலதானே அவருடைய கேரக்டரும் என்னுடைய கேரக்டரும் பேசப்படுகிறது. அதேபோல தான் அதில் என் பிள்ளைகளுக்கும் பெயரும் புகழும் கிடைக்கிறது.
உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
வீட்டில் உள்ள எல்லோருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். என் கணவர் கவிதாபாரதியும் சரி, என் அம்மாவும் சரி நான் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். அதுவே நன்றாக நடித்திருந்தால் எதுவுமே சொல்ல மாட்டார்கள். அதைக் கொண்டே நான் என்று நன்றாக நடித்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்வேன்

வேறென்ன தொடரில் நடிக்கிறீங்க?
இப்பொழுது விஜய் டிவியில் ஆரம்பமாகி இருக்கிற மீரா தொடரில், என் கணவர் கவிதா பாரதி இயக்கத்தில் நடிக்கிறேன். இதிலும் ஒரு மாதிரி நெகட்டீவ்வான கேரக்டர்தான். அமைதியான குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு உள்ளுக்குள் குத்திவிடுவது போன்ற கேரக்டர்.

செல்லம்மாவுடன் சண்டை போடும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
ராதிகா மேடம் ரொம்ப சீனியர் ஆர்ட்டிஸ்ட். இந்தத் தொடரைப் பொருத்தவரை எங்களுக்கு முதலாளியாக இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது அவுங்க செல்லம்மா என்ற கேரக்டர்... நான் மதுமிதா என்ற கேரக்டர் அவ்வளவுதான். இயக்குநர் சொல்கிறபடி ராதிகாவோடு தொடர்ந்து சண்டை போடுவோம்.

[html:e00affc93d]<div align="center">http://www.dinamani.com/Images/article/2010/9/19/19konda1.jpg</div>[/html:e00affc93d]


நன்றி: தினமணி[/tscii:e00affc93d]

R.Latha
18th October 2010, 01:21 PM
சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "தென்றல்'. இத்தொடரில் தமிழரசு குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டி கொள்ளும் சுதாவை சந்தித்தோம். பெங்களூருவைச் சேர்ந்த அவரின் நிஜப்பெயர் பவ்ய கலா. கன்னடம், தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழியிலும் படுபிசியாக இருக்கும் அவருடன் உரையாடினோம்.

"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

"தென்றல்' தொடரில் எனக்கு முழு வில்லத்தனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல்தான், பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரிலும் நடக்கிறது. அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். புதிதாக வரவிருக்கும் பணக்கார சின்ன மருமகள் மீது பாசம் காட்டும் மாமியாரைப் பழிவாங்குவதற்காக அந்தத் திருமணத்தை நிறுத்த பல வகையில் முயற்சி செய்வேன். ஆனால் திருமணம் தானாகவே நின்றுவிடும்.

நெகட்டீவ் கேரக்டர் செய்யப் பிடித்திருக்கிறதா?

மென்மையான கதாபாத்திரத்தைவிட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னதான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக்கும்போது அந்த

அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம்.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

"கஸ்தூரி' தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து "தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனின் கணவராக வரும் கலெக்டருக்கு முறைப் பெண்ணாகக் கிராமத்து வேடம் செய்கிறேன். அதில் கங்கா-கலெக்டர் காதலுக்காக என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவது போன்ற கதாபாத்திரம்.

இதற்கு முன்பு தொடர்களில் நடித்திருக்கிறீர்களா?

நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங்கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர்களிலும் நடித்து வருகிறேன். அதன் பிறகு தமிழில் மெகா டிவியில் "சுற்றமும் நட்பும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதுதான் தமிழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து "ருத்ரா' தொடரில் குஷ்புவின் தங்கையாக நடித்துள்ளேன். அதன் பிறகு "கோலங்கள்' தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்றலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

உங்களைப் பற்றி?

என்னுடைய சொந்த ஊர் ஆந்திரம். ஆனால் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப்போது கன்னடவாசி என்றும் சொல்லலாம். தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.

சென்னை, ஆந்திரம், பெங்களூரு என்று பயணம் செய்து கொண்டே இருப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வருவதனால் இப்பொழுது பழகிவிட்டது. அவ்வளவாக சிரமம் தெரியவில்லை.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=316252&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
28th October 2010, 02:07 PM
சினிமா என்றாலே திருவிழாதான்!

"திரைவிழா', "ஹாலிவுட்' போன்ற நிகழ்ச்சிகளைப் பாலிமர் டிவியில் தொகுத்து வழங்கும் மோனிகா, நர்சிங் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் வேலை பார்க்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கிறது? அதே ஆச்சரியத்தோடுதான் நாங்களும் அவரை அணுகிப் பேசினோம். அவருடைய பதில்களிலும் பல சுவாரஸ்ய ஆச்சரியங்கள்.

செவிலியருக்குப் படித்துவிட்டு சின்னதிரை பக்கம் வந்தது எப்படி?

நர்ஸிங் படித்து முடித்ததும், தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடம் செவிலியராக வேலை பார்த்தேன். அதன்பிறகு டிவியில் காம்பயரிங் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் சினிமா சம்பந்தப்பட்ட விருது வழங்கும் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது நண்பர்கள் மூலமாக இமயம் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சின்னதிரைக்கு வந்தேன். அது தவிர ராஜ் டிவியில் "சினிமா சினிமா', "காதல் மீட்டர்' போன்ற நிகழ்ச்சிகளைக் கொஞ்ச நாள் தொகுத்து வழங்கினேன்.

இப்பொழுது பாலிமர் டிவியில் "ஹாலிவுட் டாக்கிஸ்', "திரைவிழா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருக்கிறேன், இதையடுத்து சிங்கப்பூர் டவுன் சேனல், தமிழ் பாக்ஸ் ஆபிஸில், "ஹலோ டி.பி.ஓ.' போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருக்கிறேன். இதை தவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன்.

"திரை விழா' நிகழ்ச்சி சினிமாவை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் நிகழ்ச்சி... அதைப் பற்றி சொல்லுங்கள்?

சினிமா என்றாலே திருவிழா மாதிரிதான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் என்ன சிறப்பு என்றால் ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பு அப்படத்தின் துவக்க விழாவில் தொடங்கி இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு, படப்பிடிப்பு.. எனப் பல கட்டங்கள் கடந்து பிறகுதான் ரிலீஸ் ஆகும். அப்படத்தின் செய்திகளையும், இது போன்ற குட்டிக் குட்டி திரைவிழாவையும் தொகுத்து வழங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

தமிழ்ப் படங்களை விமர்சிப்பதற்கும் ஆங்கிலப் படங்களை விமர்சிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

தமிழில் டப் ஆகி திரைக்கு வரும் புதிய ஆங்கில திரைப்படங்களை விமர்சிப்பதுதான் ஹாலிவுட் டாக்கீஸ். நம்முடைய தமிழ்ப் படங்களில் யதார்த்தம் இருக்கும், வாழ்க்கை இருக்கும். அதே சமயம் லாஜிக்கில்லாத விஷயங்கள் இருந்தால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஹாலிவுட் படங்களில் அதை எதிர்பார்க்க முடியாது. பிரம்மாண்டம், கிராபிக்ஸ், டெக்னாலாஜி தான் அதிகமாக இருக்கும். லாஜிக்கே இருக்காது. தமிழ்ப் படத்துக்கும் ஆங்கிலப் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துதானே பார்க்கிறோம்? அதனால் அதற்கு ஏற்றாற்போல் விமர்சனமும் இருக்கும்.

மருத்துவமனை போன்ற பொதுமக்கள் கூடும் இடத்தில் இருப்பதனால் ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்களா?

என்னோடு பணிபுரியும் ஒரு சிலருக்குத்தான் நான் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது தெரியும். அதே போல் மருத்துவமனைக்கு வரும் பேஷன்ட்களில் ஒரு சிலர் அடையாளம் கண்டு கொண்டு கேட்பார்கள். உங்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று சொல்லுவார்கள், ஒரு சிலர் தெரிந்தாலும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களே தவிர பேசமாட்டார்கள். ஒரு சிலர் கண்டுபிடிக்கவே மாட்டார்கள். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் நிறைய பேர் அடையாளம் கண்டு கேட்டிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

மேடை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது இந்த இரண்டிலும் எது சுலபமானது?

இரண்டையுமே சுலபமானது என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றிலுமே சில சிரமங்கள் இருக்கும். அதேசமயம் டிவி நிகழ்ச்சியைக் காட்டிலும் மேடை நிகழ்ச்சிதான் கடினமானது. டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது ஏதாவது தவறு நேர்ந்தால், அதை அடுத்த டேக் எடுத்துச் சரி செய்து விடலாம்.

ஆனால் மேடை நிகழ்ச்சிகள் அப்படி இல்லை, நம்மை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்களைப் பார்த்து நாம் பேச வேண்டும். ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே முகம் சுளித்துவிடுவார்கள். அதனால் அதில்தான் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பார்க்க அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு மட்டும் போனால் போதாது. சமயோசிதமாக வேலை பார்க்க வேண்டும்.

கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள், உங்களை எப்படி உற்சாகப்படுத்திக் கொள்கிறீர்கள்?

பொதுவாக வேலைக்கும் செல்லும் பெண்கள் எல்லோரையும் போல நானும் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை மருத்துவமனையில் வேலை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். இரண்டையும் நான் எப்பொழுதும் குழப்பிக் கொள்வதில்லை. இந்த நேரத்தில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று தெளிவாக இருப்பேன்.

இரண்டு வேலைகளையும் விரும்பிச் செய்கிறேன். சோர்வாக உணரும் நேரங்களில் எஃப்.எம். ரேடியோவில் பாடல்களை விரும்பிக் கேட்பேன். அது என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்வதில்லை. முழுமையாக ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். இதைத் தவிர மற்ற பெண்களைப் போல சினிமாவுக்குச் செல்வது, ஷாப்பிங் செல்வது ரொம்பப் பிடிக்கும்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=322626&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

R.Latha
8th November 2010, 01:22 PM
ஞாயிறு கொண்டாட்டம்
பரி கொய்ரே என்கிற பரமேஸ்வரி!

படித்ததற்குத் தொடர்பில்லாமல் தொலைக்காட்சி, சினிமா, ஈவென்ட் மேனேஜ்மென்ட், மாடலிங் என்று பலதுறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பரி கொய்ரே. அவர் படித்ததோ ஹோமியோபதி, அக்குபங்சர் மருத்துவம். தற்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறையில் மேனேஜராக இருக்கிறார். பரி கொய்ரேவிடம் ஒரு மினி உரையாடல்...

பேரே வித்தியாசமாக இருக்கிறதே?

அப்பா, அம்மா வைத்த பெயர் பரமேஸ்வரி. ஊடகத்தில் நுழைந்தபோது வித்தியாசமாக பெயர் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டதுதான் பரி கொய்ரே. இதில் கொய்ரே என்பது குடும்பப் பெயர். பரமேஸ்வரியின் சுருக்கம்தான் பரி.

படித்ததற்குத் தொடர்பில்லாமல் ஊடகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்களே?

அப்படிச் சொல்ல முடியாது. எனது மூன்று வயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ராபர்ட் மாஸ்டரிடம் , பரதம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எல்லாம் கற்றுக் கொண்டேன். பள்ளியில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நான் ஊடகத்துறையில் நுழைந்திருக்கிறேன். கலைத்துறையில் நுழைவதற்குச் சின்ன வயதிலேயே அடித்தளம் போட்டாகிவிட்டது.

உங்களைப் பார்த்தால் தமிழ்ப்பெண் மாதிரி தெரியவில்லையே, தமிழ் நன்றாகப் பேசுகிறீர்களே?

நீங்கள் மட்டுமல்ல, எல்லாரும் எனக்குத் தமிழ் தெரியாது என்றுதான் நினைக்கிறார்கள். பஸ்ஸில் செல்லும்போது, பொது இடங்களில் எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் அடிப்பார்கள். அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக நானும் தமிழ் தெரியாத மாதிரி இருந்துவிடுவேன். ரொம்ப ஓவராகக் கமெண்ட் அடித்தால் மட்டும், எனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வேன்.

எனது தாய்மொழி நேபாளி. ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில். அதனால் தமிழ் சரளமாகப் பேசுவேன்.

சின்னதிரையில் என்ன செய்திருக்கிறீர்கள்?

ராஜ் டிவியில் "என் மனமே' என்று ஒரு நிகழ்ச்சி. ஆல் டைம் மியூசிக் எனும் அந்த நிகழ்ச்சிக்கு காம்பியராக இருந்தேன். விஜய் டிவியில் "கோடம்பாக்கம் ஸ்கூல்' என்ற நிகழ்ச்சியில் நடித்தேன். அதில் தமிழ் தெரியாதவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பார்கள். நான் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகையாக அந்த நிகழ்ச்சியில் நடித்தேன். எனக்குத் தமிழ் தெரியாது. தமிழை எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டேன் என்பதை மிகுந்த கலகலப்புடன் சொல்லும் நிகழ்ச்சி அது. தற்போது சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிப்பரப்பாகிவரும் "நாதஸ்வரம்' தொடரில் நடிக்க இருக்கிறேன்.

சினிமாவில்?

ஏ.எம்.ரத்தினம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கிய "ஊ..ல..ல..லா..' படத்தில் நடித்தேன். இப்போது நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறேன்.

வேறெந்த துறைகளில் கலக்குகிறீர்கள்?

பெங்களூருவைச் சேர்ந்த சன்னி என்பவர் இயக்கிய "சிதறல்' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது "சென்னை ஈவென்ட் ஆர்ட்' என்னும் நிறுவனத்தில் பிசினஸ் மேனேஜராக இருக்கிறேன்.

குடும்பத்தினர் ஒத்துழைப்பு?

அப்பா ஷ்யாம்லால் அசோக்லேலண்ட் நிறுவனத்தில் வேலை செய்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அம்மா மது குடும்பத் தலைவி. அண்ணன்,தங்கை உள்ளனர். எனது முயற்சிகளுக்கு எங்கள் வீட்டில் யாரும் தடை சொல்வதில்லை. இல்லாவிட்டால் இப்படிச் சிறகடித்துப் பறக்க முடியுமா?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=329088&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=


[html:3639873480]<div align="center">http://www.dinamani.com/Images/article/2010/11/8/07kon6.jpg</div>[/html:3639873480]

R.Latha
22nd November 2010, 11:49 AM
என் பெயர் அமுதா!

சென்னையில் உள்ள திரிசூலம் மலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "என் பெயர் மீனாட்சி' தொடரின் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் நாயகி மீனாட்சிக்கு எதிராக நடித்துக் கொண்டிருந்த அமுதாவை (ப்ரியா) சந்தித்து உரையாடினோம்.

"என் பெயர் மீனாட்சி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?

இது நான் நடிக்கும் முதல் தொடர். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரின் நாயகியாக நடிப்பதற்குத்தான் ஆடிஷனுக்குப் போனேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. அதன் பிறகு தான், டைரக்டர் ஜெரால்ட் ஸôர் என்னைக் கூப்பிட்டு, ஹீரோயினுக்கு எதிரான கதாபாத்திரம் நல்ல முக்கியத்துவமுள்ள ரோல் இருக்கு. அதை நீங்கள் செய்யுங்கள் என்றார். முதலில் எனக்கு நெகட்டீவ் ரோல் என்றதும் அது சரியாக வருமா என யோசித்தேன். நான் நிஜத்தில் ரொம்ப மென்மையானவள். அதற்கு அப்படியே எதிரான கேரக்டர் என்றபோது என்னால் செய்ய முடியுமா எனக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள் என்று டைரக்டர்தான் உற்சாகப்படுத்தினார். அதன் பிறகுதான் ஒப்புக் கொண்டேன்.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்றபோது நார்மலாக ஒரு பொண்ணுக்கு என்ன கோபம் வருமோ அந்த மாதிரியான கேரக்டர். நிறைய காட்சியில் அமுதாவாகவே மாறி நிஜமாக அழுதிருக்கிறேன். ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வாள் அமுதா என்கிற மாதிரியான கேரக்டர். இப்பொழுது என் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?

காம்பெயரிங் செய்வதைப் பொருத்தவரை ப்ரியா டேக் என்று சொன்னதும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். அதோடு ஸ்டாப் என்று சொல்லும்வரை பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் தொடரைப் பொருத்தவரை அப்படியில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பேச வேண்டும். எனக்கு முதலில் கொடுத்த டயலாக் என்ன தெரியுமா? ஓர் இடத்தில் ஹீரோ நின்று பேசிக்கிட்டு இருப்பாரு. அவருக்குப் பின்னாடி நான் திரும்பி நின்றிருப்பேன். இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பார்க்காமல் மோதிக் கொள்வது போன்ற சீன்.அப்போ நான் ஹீரோவிடம் என்னை நினைச்சியா என்று கேட்க வேண்டும். இதுதான் என் முதல் காட்சி. அதில் கோபம், காதல், ஆசை, அதிர்ச்சி என எல்லாவிதமான பாவமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு சீனையும் இப்படி ஃபீல் செய்து அனுபவித்து செய்ய வேண்டும். இது தான் தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் உள்ள வித்தியாசம்.

நடிப்பின் மீது ஆர்வமாக இருக்கும் உங்களுக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் உண்டா?

சினிமாவில் இப்பொழுது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. கரு.பழனியப்பன் இயக்கும் "மந்திர புன்னகை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் க்ளைமாக்ஸில் வருகிறேன். இந்தக் கதாபாத்திரமும் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை வாங்கித் தரும் என்று நினைக்கிறேன்.

பெரியதிரையில் நடிப்பதற்கும் சின்னதிரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

பெரியதிரையில் நிறைய ஹீரோயின்ஸ் வருகிறார்கள். அதில் சிலர் வந்த இடமே தெரியாமற் போய்விடுகிறார்கள். சின்னதிரையில் நடித்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நிற்கிறது.

நிகழ்ச்சித் தொகுப்பு, நடிப்பு, மற்றும்..?

முதன் முதலில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் "ஹலோ நான் அதிர்ஷ்ட லஷ்மி' என்ற நிகழ்ச்சிக்குத்தான் தொகுப்பாளினியாக வந்தேன். அதன் பிறகு கேப்டன் டிவியில் "வணக்கம் சென்னை' என்ற நிகழ்ச்சியில் சின்ன போர்ஷன் செய்தேன். இப்போது அதில் வருவதில்லை. ஆனால் "மிஸ் அண்ட் மிஸ்டர் கலாட்டா' என்று கேப்டன் டிவியில் ஞாயிறு இரவு 8-9 வரை வரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

இதை தவிர சூரியன் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளேன். "காதல் காதல் ப்ரியா' எனும் நிகழ்ச்சியும் இன்னும் சில நிகழ்ச்சிகளும் வழங்கியிருக்கிறேன். அதன்பிறகு சமயம் கிடைக்கும்பொழுது டப்பிங் குரல் கொடுப்பேன். சமீபத்தில் எழுத்தாளர் பாலகுமரனின் மகன் இயக்கிய "ஃபேர் அன்ட் லவ்லி' என்ற குறும்படத்தில் நாயகியாக நடித்திருந்தேன். விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். குரல் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் குடும்பம்?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிகிரி படித்திருக்கிறேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அதனால் பியூட்டி ஃபுல் என்று ஒரு சின்னதா நாட்டியப்பள்ளி வைத்து நடத்திவருகிறேன். என் அப்பா ஸ்ரீதர், அம்மா சுதா, அண்ணன் விஜய். இதுதான் எங்கள் பேமிலி.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=334699&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:3a35f2194a]

R.Latha
4th January 2011, 01:10 PM
[tscii:2fc409a803]எங்​கள் வீட்டு சீரி​யல்!

"செல்லமே', "மகள்", "உறவுகள்' என சன்

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மூன்று

தொடர்களில் நடித்து வருபவர் சிநேகா

நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல்

கன்னடம், தெலுங்கு சின்னதிரை உலகிலும்

கால்பதித்தவர். மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை

வேளையில் அவரை சந்தித்தோம். சில்லென காற்று வீச பதில்களும் குளுமையாகவே வந்தன.

"செல்லமே' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

இது போன்று ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த இரண்டு மாதமா என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.

வேறு என்ன தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

"செல்லமே' தவிர "மகள்', "உறவுகள்' இந்த இரண்டு தொடரிலும் நடித்து வருகிறேன். "மகள்' தொடரில் மது என்ற கேரக்டர் செய்கிறேன். அதில் நெகட்டீவ்வாக ஆரம்பித்த என் கேரக்டர் இப்பொழுது பாஸிட்டீவ்வாக மாறிவிட்டது. "உறவுகள்' தொடரிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்கிறேன்.

வில்லத்தனமான கேரக்டர் அல்லது குடும்பப்பாங்கான கேரக்டர்... உங்களுக்கு எது

பிடித்திருக்கிறது?

நெகட்டீவ் கேரக்டர் செய்யும் பொழுது நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து இந்த வில்லி கேரக்டர் என்ன செய்யப் போகிறாள் என்று ரசிகர்களிடம் ஆவலும் எதிர்பார்ப்பும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.

ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

நீங்கள் கன்னட சினிமாத்துறையில் இருந்து

வந்தவரா?

ஆமாம், சொந்த ஊர் பெங்களுரூ. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட இண்டஸ்ட்ரியில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் தமிழ் இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். úஸன் மீடியா தான் "அகல்யா' என்ற தொடருக்காக என்னை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். இப்போ இங்கேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்.

உங்கள் குடும்பம்?

என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு பள்ளிகூடம் நடத்திவருகிறார்கள். ஒரு அண்ணன், ஒரு தங்கை. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். சீரியலில் கூட்டுக் குடும்பமாக காட்டுவார்களே அதுபோலத்தான் இருக்கும் எங்கள் வீட்டிலும்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=351779&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:2fc409a803]

R.Latha
18th January 2011, 11:03 AM
[tscii:34711cb4a7]படிக்க வந்த இடத்தில் நடிப்பு!

"மெட்டிஒலி' தொடரை இயக்கிய திருமுருகன், தற்போது இயக்கி வரும் தொடர் "நாதஸ்வரம்'. ஒரு அழகான காலை பொழுதில் அத்தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். அங்கு ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார், அத்தொடரில் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிகா. ஒப்பனை செய்தபடியே நம் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

திருமுருகன் ஸôரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் என் கேரக்டர் பேரு மலர். என்ஜினீயர் கதாபாத்திரம். ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர். படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸôக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு.

இதைத் தவிர வேறு தொடர்கள் நடிக்கிறீங்களா?

தற்சமயம் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் பாலு தம்பி மனசிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். நேரம் கிடைக்காததால் நிறைய தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.

"நாதஸ்வரம்' தொடருக்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள்?

"வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

நீங்கள் பெரியதிரையில் இருந்து சின்னதிரைக்கு வந்தவரா?

நான் பெரியதிரையில் இருந்து வரவில்லை. முதலில் சின்னதிரையில்தான் ஆங்கராக இருந்தேன். அதைத் தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன்.

சினிமாத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

என் அக்கா சுதா, டிவியில்தான் ஆங்க்கராக இருக்கிறார்கள். நான் கல்லூரி விடுமுறையில் இருக்கும் பொழுது அவர் மூலமாக தான் சின்னதிரையில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் இண்டஸ்ட்ரிக்குள்ளே வந்தேன்.

பெரியதிரை, சின்னதிரை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

சினிமாவைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் தொடரை பொருத்தவரை மெகா பிராஜக்டாக இருக்கிறது. அதை தவிர வேறு வித்தியாசம் எதுவும் எனக்கு தெரியவில்லை.

உங்கள் குடும்பம் பற்றி?

எனக்கு சொந்த ஊர் மலேசியா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தோம். பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.

வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுது ரசிகர்கள் உங்களை அடையாளம் தெரிந்து கொள்கிறார்களா?

நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். "நாதஸ்வரம்' தொடரில் கோபியை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரொம்ப ஆர்வமாகக் கேட்பார்கள். இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள். என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=359671&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:34711cb4a7]

R.Latha
26th January 2011, 01:23 PM
நடிப்பு எனக்குப் புதுசு


ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?

* சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?

"வந்தாளே மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில் நெகட்டீவ் கேரக்டர்னுகூட சொல்லலாம். ஸ்ரீ எனக்கு ஜோடியா நடித்திருக்கிறார். பேசப்படுகிற மாதிரியான கேரக்டராக இருக்கும் என்னுடையது. அந்த டீம்ல எல்லாருமே ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்காங்க. டைரக்டரிடம் இருந்து நடிப்பைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். முதல்முறையாகத் தொடரில் நடிப்பது எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.

* சினிமா துறைக்குள் வந்தது எப்படி?

நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படியே மாடலிங்கும், சில ஷோவும் செய்துவந்தேன். அப்பொழுது சசிக்குமார் என் போட்டோவைப் பார்த்துவிட்டு அவருடைய "ஈசன்' படத்தில் நடிக்க கூப்பிட்டார். ஏற்கனவே சசிக்குமார் படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அதனால உடனே ஒத்துக்கிட்டேன். "ஈசன்' படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருப்பேன். அதன்பிறகு தான் ஜெயா டிவியில் இருந்து நடிக்க கூப்பிட்டார்கள். அப்படித்தான் சினிமாதுறைக்குள் எண்ட்ரி கொடுத்திருக்கிறேன்.

* வேறு தொடர்களில் நடிக்கிறீங்களா?

தற்போதைக்கு தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் பெரியதிரையில் இரண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன். படத்துக்குப் பேரு இன்னும் வைக்கவில்லை.

* என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பப்படுகிறீர்கள்?

நான் இப்பொழுதுதான் புதுசா சினிமாத் துறைக்குள் வந்திருக்கிறேன். நடிப்பு எனக்கு புதுசு. அதனால இந்தக் கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரம்னு எனக்கு சொல்லத் தெரியலை. இருந்தாலும் எல்லா விதமான கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக நெகட்டீவ் கேரக்டராக இருந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.

* மாடலிங் செய்வதற்கும் தற்போது நடிகையாகி இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

மாடலிங், நடிப்பு ரெண்டுமே வேற வேற துறை. மாடலிங் பொருத்தவரை கஷ்டம்னு சொல்வது போன்று எதுவும் கிடையாது. ஆனால் நடிப்பு அப்படியில்லை. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் கேமிரா முன் நிற்பதற்கே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கும். எப்படி எங்க நிற்கணும், என்ன செய்யணும்னு எதுவுமே தெரியாது.

ஏதாவது தப்பா செய்துவிட்டால் யாராவது திட்டிவிடுவார்களோன்னு பயம் இருந்தது. ஆனால் எல்லாருமே ரொம்ப ப்ரண்ட்லியா இருந்தாங்க. நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. ஓரளவுக்கு இப்போ அனுபவம் வந்துவிட்டது. இன்னொரு விஷயம் பார்த்தீங்கனா நடிப்பு துறைக்கு வந்த பிறகு எங்கு வெளியே போனாலும் மக்கள் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். அது எனக்கு புது அனுபவமா இருந்தது. ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.

குடும்பம் குறித்து?

நான் பிறந்தது, வளர்ந்தெல்லாம் சென்னையில்தான். பி.எஸ்ஸி. சைக்காலாஜி படித்திருக்கிறேன். அப்பா சந்தானம், அம்மா ஷீலா, அக்கா, தங்கை, பாட்டி இருக்காங்க. இது தான் எங்கள் குடும்பம்.

உங்கள் பொழுது போக்கு என்ன?

சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு அடிக்கடி ஷாப்பிங் போவேன், பிரண்ட்úஸôட ஜாலியா அரட்டை அடிப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் ஷாப்பிங் போவதற்குகூட நேரம் கிடைப்பதில்லை. மாற்றி மாற்றி ஷூட்டிங் போவதற்கே நேரம் சரியா இருக்கிறது, அப்படியே நேரம் கிடைத்தாலும் நல்லா தூங்குறேன்.

Thanks Dinamani
[/tscii:a65f570530]

R.Latha
23rd February 2011, 12:43 PM
திருமதிகளின் செல்லப் பிள்ளை!

2008 -ஆம் ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது பெற்றிருக்கிறார் "திருமதி செல்வம்'

தொடரின் நாயகன் சஞ்சய். "விளக்கு வெச்ச நேரத்துல' தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை உணவு இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்:

"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?

திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.

"மானாட மயிலாட' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அனுபவம்?

"மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.

கலா அக்கா என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.

நிஜத்தில் சஞ்சய் செல்வம் மாதிரி பொறுமைசாலியா? இல்லை கோபமானவரா?

ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்பொழுது அது நம் மனசில் பதிந்துவிடும். அந்த விஷயம் சில நேரங்களில் நம் சொந்த வாழ்க்கையைக்கூட பாதிக்கும்னு சொல்வாங்க.

இந்தத் தொடரில் வருவதற்கு முன்பு நான் ஓரளவுக்கு அமைதிதான். என்ன செல்வம் அளவுக்குப் பொறுமை கிடையாது. சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் "செல்வம்' கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த இந்த நான்கு வருஷத்தில், என் லைப் ஸ்டைலே செல்வமாக மாறிப்போச்சு. ரொம்ப பொறுமைசாலியாகவே மாறிவிட்டேன்.

படங்களில் எதுவும் நடிக்கிறீர்களா?

தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒரு படத்திற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அது முடிவானால் தான் முழுமையாகத் தெரியும்.

2008-ஆம் ஆண்டுக்கான, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது வாங்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

முதல்வர் கையால் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதைவிட பெரிய சந்தோஷம் அவர் விருது கொடுக்கும்பொழுது என்னிடம் உன்னுடைய நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும், நான் உனக்குப் பெரிய ரசிகன். எங்க வீட்டில் எல்லாருக்குமே உன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். அவ்வளவு பெரியவங்க அப்படிச் சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது நான் வாங்கிய விருதைவிட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.

குடும்பம்?

என் மனைவி ப்ரித்தி. ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருப்பார். அவரும் சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். எங்களுக்கு லயா என்று எட்டு மாத பெண் குழந்தை இருக்கிறார். இப்போது எங்கள் உலகமே அவர்தான்.

R.Latha
29th March 2011, 12:32 PM
ஞாயிறு கொண்டாட்டம்
நாயகியும் நானே வில்லியும் நானே!

-ஸ்ரீதேவி குமரேசன்
First Published : 27 Mar 2011 12:00:00 AM IST

Last Updated :

சுதôவாக "மகள்' தொடரிலும், சுவாதியாக "முந்தானை முடிச்சு' தொடரிலும் நடித்து வரும் துர்கா. அடுத்து மூன்று வேடங்களில் ஒரு தொடரில் பரபரப்பாக நடித்துக்

கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

"மகள்' தொடரில் சுதாவாக நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

"மகள்' தொடரில் எங்கள் குடும்பம் பரம ஏழ்மையான குடும்பம். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் தங்கை நான். அதனால் பணத்தின் மீது அதிக ஆசைப்படும் ஓர் அப்பாவியான பெண்ணாக வருவேன். எனக்கு ஜோடியாக பாலாஜி நடிக்கிறார். என் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி என்னை ஏமாற்ற நினைப்பார் பாலாஜி. என் அண்ணனை ஒரு பணக்கார வீட்டு பெண் காதலிப்பாள். அவர்கள் காதலைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிற மாதிரியான கேரக்டர். இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

"முந்தானை முடிச்சு' தொடர் பற்றி?

"முந்தானை முடிச்சு' தொடர், நான்கு அக்கா தங்கைகளின் கதை. அந்த நான்கு பேரில் நான்தான் கடை குட்டி, என் பேரு சுவாதி. மாமியார் வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போகிற அன்பான மருமகள் கேரக்டர் எனக்கு. அந்தத் தொடரில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. நான் இதுவரை நிறையத் தொடர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நிறையப் பேர் சுவாதி கேரக்டரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

எத்தனை வருடங்களாக தொடரில் நடிக்கிறீர்கள். எப்படி இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

என் தம்பி குழந்தை நட்சத்திரமாக நிறைய தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். தம்பி சூட்டிங்குக்குப் போகும் போது நானும் அடிக்கடி கூட போவேன். அங்கே அவர்கள் நடிப்பதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் சேனலில் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிகை சொர்ணமால்யாவின் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து நான்கு வருடங்களாக நடித்து வருகிறேன். "சௌந்தரவல்லி', "உறவுக்குக் கைகொடுப்போம்' போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறேன்.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

ராஜ்டிவியில் ஒளிப்பரப்பாகும் "கொடிமுல்லை' தொடரில் நடித்து வருகிறேன். இதைத் தவிர "ஒன்றாய் இரண்டாய்' என்ற திரை படத்தில் நடித்து வருகிறேன்.

அதையடுத்து தற்போது புதிதாக உருவாகி வரும் ஒரு மெகா தொடருக்காக மூன்று வேடங்களில் நடித்து வருகிறேன். அந்தத் தொடரின் கதாநாயகியும் நான்தான். வில்லியும் நான் தான். இன்னொன்று மென்மையான ரோல். ஆனால் அந்தத் தொடர் எந்த சேனலில் வரப் போகிறது என்று இன்னும் முடிவாகவில்லை. அந்தத் தொடரை, சௌந்தரவல்லி, கர்ணமஞ்சரி, அம்மன் போன்ற தொடர்களை இயக்கிய ஆர்.கே. இயக்கு

கிறார்.

ஒரே நேரத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?

இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் பாஸிட்டிவ்வான கேரக்டரா, வில்லத்தனமான கேரக்டரா என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்வேன். ஷாட்டில் போய் நிற்கும்போதே அந்தக் கேரக்டராகத்தான் நிற்பேன். அதுவுமில்லாமல் ஒவ்வொரு கேரக்டரையும் மாற்றி மாற்றித் தான் எடுப்பார்கள். ஒரு கேரக்டருக்கு மேக்கப் போடும்போது அந்தக் கேரக்டராக என்னை மாற்றி கொள்வேன்.

உங்களைப் பற்றி?

எனக்கு தாய் மொழி சிந்தி. ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். அப்பா ஜி.லக்ஷ்மணன் எல்.ஐ.சி ஏஜண்டாகப் பணிபுரிந்து வருகிறார். அம்மா குடும்பத் தலைவி. ஒரு தம்பி, அவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


http://www.dinamani.com/Images/article/2011/3/26/sk5.jpg
Nandri. Dinamani

R.Latha
12th April 2011, 01:07 PM
மனிதரில் இத்தனை நிறங்களா?

-ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 10 Apr 2011 12:00:00 AM IST

Last Updated :

விஜய் டிவி​யில் புதி​தாகத் துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "பிரி​வோம் சந்​திப்​போம்'.​ மனி​தர்​க​ளின் நிறத்தைக் கதைக்

கரு ​வா​கக் கொண்டு உரு​வா​கி​யி​ருக்​கும் தொடர் இது.​ இதில் இரு​நா​ய​கி​க​ளில் ரேவதி கேரக்​ட​ரில் நடிக்​கும் கல்​யா​ணி​யி​டம் பேசி​னோம்.​ குழந்​தைத்தனம் மாறாத அவ​ரு​டைய பேச்சி​லி​ருந்து...​ ​

"பிரிவோம் சந்திப்போம்' என்ன மாதிரி கதை? அதில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

ஜோதி-ரேவதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதைதான் "பிரிவோம் சந்திப்போம்'. மனிதர்கள் மனதில் பதிந்து கிடக்கும் நிறவேறுபாடுகளை வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. ரேவதி நல்ல சிவந்த நிறமாகவும் ஜோதி கருப்பாகவும் இருக்கிறார்கள். அதில் நான் ரேவதியாக நடிக்கிறேன். தாய், தந்தையை இழந்த நான் ஜோதியின் வீட்டில் வளர்வேன். எங்களுக்குள் நிற வேறுபாடு இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் இருப்போம். எங்கள் இருவருக்கும் நிறம் ஒரு பிரச்னை இல்லை.

இது பிடிக்காத ஜோதியின் தாயும், பாட்டியும் எங்களைப் பிரிக்க முயற்சி செய்வார்கள். ஒரு கட்டத்தில் எங்களுடைய நிறமே பல சிக்கல்களை உருவாக்குகிறது. கருப்பாக இருக்கிற பெண் ஒருவித பிரச்னையை சந்தித்தால், சிவப்பாக இருக்கிற பெண் வேறு விதமான பிரச்னையைச் சந்திக்கிறாள். இப்படி மனித நிறத்தினால் விளையும் விபரீதங்களை எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்பதுதான் கதை. இதை உணர்வுபூர்வமானப் பாசப் போராட்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரசூல் சார். இந்த தொடர் இந்தியில் மிகப் பரபரப்பாக ஓடிய "விதாய்' என்கிற தொடரின் ரீமேக்.

டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கால் பதித்த நீங்கள் இந்தத் தொடரின் மூலம் நடிகையாகி இருக்கிறீர்கள்?... அதைபற்றி சொல்லுங்கள்?

இந்தத் தொடரின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமாகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறேன். பிரபுதேவா சார் நடித்த "அள்ளித் தந்த வானம்' என்ற படத்தில் காசு காசு என்ற ஒரு ஹிட்டான பாடல் காட்சியில் நடித்திருந்தேன். அதன்பின் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியானேன். இதைத் தவிர மலையாளத்தில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். "பருந்து' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். மோகன்லால் சார், மம்மூட்டி சாருடன் எல்லாம் நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பது புதுசாக தெரியவில்லை.

வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?

வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு நடிக்கவில்லை. ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். மற்றபடி நான் கிளாசிக்கல் டான்ஸர் என்பதால் பல வெளிநாடுகளுக்குச் சென்று நடன நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன்.

சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

தமிழில் பெரியதிரையில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நானும் படத்தில் நடித்துவிட்டேன் என்று வந்து போக எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. கொஞ்சம் தாமதமானாலும் நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுபோன்ற கதை அமையும்போது கண்டிப்பாக நடிப்பேன்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது, நடிப்பது இவற்றில் எதைச் சுலபமாக உணர்ந்தீர்கள்?

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது, ஏனென்றால் அங்கே கட் சொல்லி ஒன்ஸ்மோர் எல்லாம் போக முடியாது. கல்யாணியின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் நடிப்பு அப்படியில்லை இயக்குநர் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். அங்கே கல்யாணிக்கு வேலையில்லை. எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியாகச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

குடும்பம் குறித்து?

தாய்மொழி மலையாளம். சொந்த ஊர் கொல்லம். ஆனால் நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். என் அப்பா ஜி.கே. சுரேஷ் பைலட்டாக இருக்கிறார். அம்மா வீணா சுரேஷ், அவர்களும் கிளாசிக்கல் டான்ஸர். நான் ஒரே பெண்தான். என்னுடைய சின்ன வயதில் அம்மாவுடன் போய் டான்ஸ் புரோகிராம் எல்லாம் செய்வேன். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன்.


http://www.dinamani.com/Images/article/2011/4/9/k13.jpg
Nandri. Dinamani

R.Latha
19th April 2011, 01:35 PM
tks for posting aanaa.

R.Latha
5th May 2011, 12:53 PM
ஞாயிறு கொண்டாட்டம்
உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக..!

First Published : 01 May 2011 12:00:00 AM IST

Last Updated :

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் செந்தாமரையாக நடித்து வரும் சார்மியை இந்த வாரம் சந்தித்தோம். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி, இன்று பெரியதிரையில் நாயகர்கள், நாயகிகளுக்கு அம்மா கேரக்டர் வரை செய்து வரும் அவருடன் ஒரு சுவையான கலந்துரையாடல்.

"உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் உங்களின் செந்தாமரை கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தத் தொடரில் இரண்டாவது நாயகி செந்தாமரையாக நடித்து வருகிறேன். என்னைத் துரத்தித் துரத்திக் காதலிப்பரை மணந்து கொள்வேன். இதனால் என் மாமனாருக்கு என்னைப் பிடிக்காது அதனால் அவர் என்னை கஷ்டப்படுத்துவது போன்ற கேரக்டர். வெளியிடங்களுக்குப் போகும்போது நிறைய பேர் என் கேரக்டரை பார்த்து என் மீது பரிதாபப்பட்டுப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அப்படி பேசும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்துத் திரையில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நடிப்பு அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் அப்பா நடிகர் சந்திரபாபுவின் மிக நெருங்கிய நண்பர். அதனால் நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதிலிருந்தே எங்கள் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு பந்தம் உண்டு. அப்பவே நான் ஒரு நடிகையாகத்தான் வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்போதே நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா நடித்த கேரக்டரில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. "தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமல் சாரோட தங்கச்சி கேரக்டரும் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என் அப்பா படிப்பு முடியும் வரை சினிமா பக்கமே போகக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதனால் படிப்பை முடித்தவுடன் பெரியதிரையில் நடிக்க வந்துவிட்டேன். கிட்டதட்ட முப்பத்தி இரண்டு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஹீரோயின் கேரக்டரில் இருந்து, அக்கா, தங்கை,அம்மா என எல்லாவிதமான கேரக்டரும் செய்து வருகிறேன்.

உங்களை மக்களுக்கு அடையாளம் காண்பித்த தொடர் அல்லது படம் எது?

பெரியதிரையில் "ஒயிலாட்டம்' என்ற படம் என்னை மக்கள் முன் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து "சிந்துபாத்' தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தேன். அது மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

சின்னதிரையில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?

"உறவுக்கு கை கொடுப்போம்' தொடர் மட்டும் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு நல்ல கேரக்டராக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என்னைப் பொருத்தவரை நிறைய படங்களிலோ, தொடரிலோ நடித்துப் பணம் சம்பாதிப்பதைவிட நல்ல கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் குறைவாக நடித்தாலும் கேரக்டர் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். இதைத் தவிர பெரியதிரையில் படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் "கோட்டி', "புழல்' போன்ற படங்களில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். அடுத்து தற்போது ரிலீஸ் ஆக உள்ள படங்கள் "காந்தி கணக்கு', "காதலித்துப் பார் வேதனை புரியும்', "பாண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பைத் தவிர மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறேன். இதையடுத்து கடவுள் ஏசு பிரானின் மகிமையைச் சொல்லும் ஏஞ்சல் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறேன். நேரம் கிடைக்கும் பொழுது நடன நிகழ்ச்சியும் செய்து வருகிறேன்.

சின்னதிரை, பெரியதிரை எதில் நடிப்பது விருப்பமாக இருக்கிறது?

பெரியதிரையில் நடிப்பதுதான் எனக்கு சுலபமாக தோன்றுகிறது. ஏனென்றால் பெரியதிரையைப் பொருத்தவரை ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் எனக்கு சிறுவயது முதலே பெரியதிரையில் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதற்காக சின்னதிரை மீது நாட்டம் இல்லை என்பதில்லை. அதேசமயத்தில் டி.வி.யில் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சின்னதிரைக்கு அதிக வரவேற்பிருக்கிறது. ஒரு தொடரில் நடித்தாலும் ரசிகர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிடலாம். பெரியதிரையில் மூன்று மணிநேரத்தில் நம்முடைய கேரக்டர் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் அப்படியில்லை. மெகா தொடர்களாக வருவதால் வருடக்கணக்கில் தினமும் நம் முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். நான் முன்பே சொன்னது போன்று வெளியிடங்களுக்குப் போகும்போது அவர்கள் குடும்பத்துப் பெண் போன்று மக்கள் வந்து நலம் விசாரிக்கிறார்கள். நாம் வில்லியாக நடித்தால் கோபப்படுகிறார்கள். அதுவே பாஸிட்டீவ்வாக நடித்தால் நம் மீது பரிதாபப்படுகிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நீங்கள் இதுவரை இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?

வருத்தம் என்பதைவிட ஆசை என்று சொல்லலாம். "படையப்பா'வில் வரும் நீலாம்பரி கேரக்டரைப் போன்ற போல்டான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வில்லி கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.

உங்களைப் பற்றி?

என் கணவர் ராஜேஷ் செல்போன் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார். எங்களுக்கு இரண்டரை வயது மகன் இருக்கிறார். நான் மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ளவள். எனக்கு இதுபோன்ற ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.


http://www.dinamani.com/Images/article/2011/4/30/kondattam7.jpg

R.Latha
9th May 2011, 12:27 PM
கையில் சூடம் ஏற்றிப் பூஜை செய்தார்கள்!

சேது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அபிதா. இவர் தற்போது திருமதி செல்வம் தொடரின் நாயகி அர்ச்சனாவாக நடிப்பதன் மூலம் இல்லத்தரசிகளின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். இத்தொடர் பற்றி அவர் கூறுகையில் சில நாட்களுக்கு முன் ஊட்டியில் இருந்து ஒரு பெண் போன் செய்து இந்தத் தொடரைப் பற்றி கூறினாள் : ""எங்கள் வீட்டில் நடப்பது போலவே இந்தத் தொடர் இருக்கிறது. இதைப் பார்த்ததன் மூலமாகப் பிரிந்திருந்த எங்கள் பெற்றோர் ஒன்று சேர்ந்து விட்டார்கள்'' என்று சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் தொடருகிறார்...



திருமதி செல்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து இப்படி ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறீர்களே?

பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். ரொம்ப சிக்கனமான மிடில் கிளாஸ் ஃபேமிலி எங்களோடது. இப்போ கொஞ்சம் பணம் வர வர தாராளமாச் செலவு செய்ய ஆரம்பிப்பார் செல்வம். ஆனா பணம் வருதுன்னு இப்படி தாராளமா செலவு செய்யக் கூடாதுன்னு நான் சொல்வேன்.இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு எங்க திருமதிசெல்வம் வாழ்க்கை. இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

பல வருடங்களாக ஒரே கேரக்டரில் நடிக்க சலிப்பு ஏற்பட வில்லையா?

இந்தத் தொடரைப் பொறுத்தவரை சலிப்பு எப்பவுமே வந்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால். ஆடியன்சின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் நான் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டதாக ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள்.

அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

அர்ச்சனா கேரக்டரைப் போன்று நேரில் பார்த்திருக்கிறீர்களா?

நானே அந்த மாதிரி கேரக்டர் தான். அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

வேறு தொடர் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இந்தத் தொடரை தவிர கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் தொடர் மறு ஒளிபரப்பாகிறது. மற்றபடி வேற எந்த தொடரிலும் தற்போதைக்கு நடிக்கவில்லை. நல்ல கதை அமையும் போது கண்டிப்பாக நடிப்பேன்.

பெரிய திரையில் உங்கள் நடிப்பை பார்த்து வெகுநாட்கள் ஆகிறதே மறந்துவிட்டீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. இப்போது தான் என் குழந்தைக்கு ஒரு வருடம் ஆகப் போகிறது. அதனால் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருந்தேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன்.

நடிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது?

என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது.

உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

ஓய்வு நேரமா? அப்படி ஓய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

உங்கள் குடும்பம் பற்றி?

எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா.

கனவு கதாபாத்திரம் என்ன?

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது.

adiram
30th May 2011, 03:07 PM
if you go through the replies of the artists, all looks like sterio type.

why?.

looks like same stories repeating in serials.

R.Latha
6th June 2011, 12:24 PM
ஞாயிறு கொண்டாட்டம்
சாதிப்பதற்கு தடையில்லை!

கன்னட சின்னதிரை நடிகையான மகாலஷ்மி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் தமிழ் சின்னதிரையில்

அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். தமிழில் ஒரு தொடராவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தத் தொடரின் மூலம் என் கனவு

நனவாகியுள்ளது என்கிறார்.

உங்களைப் பற்றி?

என்னுடைய சொந்த ஊர் பெங்களுர். சட்டம் படித்து வருகிறேன். கன்னட சின்னதிரை நடிகையாக இருக்கிறேன். தெலுங்கு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அதன் மூலமாகத்தான் தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடர் பற்றி கேள்விப்பட்டு அதன் இயக்குனர் ரசூல் ஸôரை வந்து பார்த்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இப்போது கதையிலே நடிக்கிறேன். எனக்குத் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் தமிழ் தொடர் என்றதும் உடனே ஒத்துக் கொண்டேன். தமிழ் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

பிரிவோம் சந்திப்போம் பற்றி?

இந்தத் தொடர் தான் தமிழில் எனக்கு முதல் தொடர். இதில் இரண்டு நாயகிகள் இருக்கிறோம். இந்தத் தொடர் மனிதர்களின் நிற வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட தொடர். இதில் நான் கறுப்பு நிற பெண் ஜோதியாக நடிக்கிறேன். பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களை தான் மற்றவர்கள் ரசிப்பார்கள். கறுப்பாக இருப்பவர்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.

கறுப்பாக இருக்கும் ஒரு பெண் எந்த மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறாள் என்பதுதான் என் கேரக்டர்.

பொதுவாக பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்தத் தொடரில் நீங்கள் கறுப்பு நிற பெண்ணாக வருகிறீர்கள். அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

கண்டிப்பாக வருத்தப்பட்டதில்லை. அதுவுமில்லாமல் நிறத்தை ஒரு பொருட்டாக நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இதுபோன்று ஒரு கேரக்டர் செய்வதற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருக்கிறவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வருவதில்லையா? நாம் கறுப்பாக இருப்பதால் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தால் எதுவுமே சாதிக்க முடியாது. உலகில் சாதனையாளர்கள் யாரும் நிறத்தைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. சாதிப்பதற்கு நிறம் தடையாக இருந்ததில்லை.

நிஜத்தில் நீங்கள் கறுப்பு நிறம் தானா?

என் நிறத்தைப் பற்றி சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால் அது ரகசியமாக இருக்கட்டும்.

தமிழ் நன்றாக பேசுகிறீர்களே எப்படி?

பெங்களுரில் எங்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ் ஆட்கள். அதனால் சின்ன வயதில் இருந்து அவர்களோடு பேசிப் பேசி தமிழ் நன்றாக கற்றுக் கொண்டேன். இங்கே தொடருக்காக முதல் நாள் நடிக்க வந்தபோதுகூட யாருக்கும் தெரியாது நான் கன்னட பெண் என்று. அந்த அளவுக்கு தமிழ் நன்றாக பேசினேன். அதேப் போல தெலுங்கிலும் நன்றாகப் பேசுவேன்.

தமிழில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா? பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் உண்டா?

தற்போதைக்கு வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஆனால் படங்களுக்கு எடிட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன்.

குடும்பம்?

அப்பா ருஷிக் குமார் மைசூர் சாண்டல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா சுசீலா, குடும்பத் தலைவி. நான் வீட்டுக்கு ஒரே பெண்தான். ஆனால் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.


nandri.dinamani

R.Latha
13th July 2011, 01:50 PM
ஞாயிறு கொண்டாட்டம்
ஓவர்- ஆக்டிங் வாழ்க்கைக்கு ஒத்து வராது!

என் நிஜப்பெயர் ராஜேஸ்வரி. "சின்னக்காளை' என்ற படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானேன். அந்தப் படத்தை இயக்கிய பாரதிமோகன் தான் என் பெயரை பூரணி என மாற்றினார். நேற்றுதான் நடிக்க வந்ததுபோல் இருக்கிறது. ஆனால் இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. "தங்கராசு', "தாமரை', "டேக் இட் ஈஸி', "சத்தியம் அது நிச்சயம்' போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு சின்னதிரையில் மட்டுமே நடித்து வருகிறேன். தற்போது "உறவுக்கு கைகொடுப்போம்' என்ற தொடரில் நடித்து வருகிறேன். என் கணவர் ரமேஷ் பாபு. குழந்தை சாய் ரக்சிதா யு.கே.ஜி படித்து வருகிறாள்.'' மேலும் தொடருகிறார் பூரணி



தமிழில் நடிக்க வந்து இவ்வளவு நாள் ஆகிறது இன்னும் தெலுங்கு கலந்து பேசுகிறீர்களே, தொடரில் நீங்கள் பேசுகிறீர்களா?

சாதாரணமாகப் பேசும்பொழுதுதான் சில நேரங்களில் தெலுங்கு கலந்து பேசிவிடுகிறேன். மற்றபடி தமிழ் நன்றாகவே பேசுவேன். அதுமட்டுமில்லாமல் தொடரில் பேசும்பொழுது ரொம்ப கவனமாக, சரியாகப் பேசிவிடுவேன். "சக்தி' தொடரில் நடிக்கும் பொழுது எல்லாம் தமிழ் அவ்வளவாக பேசமாட்டேன். பேப்பரில் என்ன எழுதி கொடுக்கிறாங்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்துவிடுவேன். ஏதாவது தப்பாகப் பேசிவிட்டாலும் அதற்கு மாற்றாக என்ன பேச வேண்டும் என்று அப்பொழுது தெரியாது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி நன்றாகவே தமிழ் பேசுகிறேன்.

இப்பொழுது பெரிய திரையில் படங்களின் வாய்ப்புகள் வருகிறதா?

நிறைய படங்களின் வாய்ப்புகள் வருகின்றன. படங்கள் ஒத்துக் கொண்டால் அவுட்டோர் போக வேண்டியது இருக்கும். என் குழந்தையை விட்டுவிட்டுப் போக முடியாது என்பதால் படங்களில் நடிக்க முடியவில்லை.

நந்தி விருது வாங்கியிருக்கிறீர்களாமே?

ஆமாம். தெலுங்கில் மௌலி சார் டைரக்ட் செய்து சின்னா ஹீரோவாக நடித்த "கின்னஸ் ரெக்கார்ட்' என்ற தொடரில் நடித்ததற்காக எனக்கு நந்தி விருது கிடைத்தது. பொதுவாக நான் நடித்த தொடர்களில் எல்லாம் அழுது கொண்டே இருப்பது போலத்தான் நடித்திருக்கிறேன். அந்தத் தொடரில்தான் முதன் முதலில் காமெடி கலந்த வேடத்தில் நடித்தேன். அந்தத் தொடருக்கு எனக்கு விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அழுவது போலவே நடிக்கும் பொழுது உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா?

எந்த நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் தொடரில் வேறு வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் என்ன செய்வது அழுவது போன்ற கேரக்டர்களே அமைகின்றன. சலிப்பு ஏற்படுவது என்பதைவிட ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் தினமும் தொடர்களில் அழுது அழுது இப்பொழுதெல்லாம் கிளிசீரின் போட்டால் கூட அழுவதற்குக் கண்ணில் நீர் வருவதில்லை. அந்த அளவுக்குக் கண்கள் வற்றிவிட்டன. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அப்படி அழுது நடிக்கும் பொழுது அந்த கேரக்டருக்கு ஆதரவு நிறைய இருக்கும். அதனால் அழுவதனால் சலிப்பு ஏற்படுவதில்லை சந்தோஷமே கிடைக்கிறது.

கிட்டதட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள். ஆனால் தற்பொழுது ஒரு சில நடிகைகள் வரும் பொழுதே ரொம்ப ஆர்பாட்டமாக வருகிறார்களே, அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் சரி பந்தா இல்லாமல் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். நாம யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இருந்தாலே போதும். நம்மை தேடி நன்மைகள் பல வரும். இது சினிமாத்துறைக்கு மட்டும் என்பதில்லை வாழ்க்கைக்கும் பொருந்தும். சினிமாவில் ஓவர் ஆக்டிங் செய்தால் கட்பண்ணி தூக்கிவிடலாம். ஆனால் வாழ்க்கையில் ஓவர் ஆக்டிங் செய்தால் வாழ்க்கையே காணாமல் போய்விடும்.

Nandri. dinamani

R.Latha
18th July 2011, 01:29 PM
ஞாயிறு கொண்டாட்டம்
சீரியல் தங்கை!

""என் அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்க்கிறார். "ஜெயம்' ரவி நடித்த "தாஸ்' படத்தில் வேலை பார்க்கும் பொழுது அங்கே நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க வந்திருப்பதைப் பார்த்துவிட்டு அப்பா டைரக்டரிடம் கேட்டிருக்கிறார். "என் பொண்ணு நல்லா நடிப்பா. அவளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா' என்று. அவரும், "அழைத்து வாங்க பார்க்கலாம்' என்று சொன்னார். சரின்னு போய் பார்த்தோம். அவர் என்னைப் பார்த்ததும் செலக்ட் பண்ணிட்டாரு. இப்படித்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். இப்போ சின்னதிரை, பெரியதிரை இரண்டிலும் நடித்துவருகிறேன்'' என்கிறார் "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடித்து வரும் பந்தனா.



முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

இப்பவும் ஒவ்வொரு முறை கேமிரா முன்னாடி நிற்கும் பொழுதும் சரியா நடிச்சிடணும்னு லேசான பயம் இருந்துகிட்டேதான் இருக்கு. முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எனக்கு எட்டு வயதிருக்கும்.

சினிமான்னா என்ன என்பதே தெரியாது. நிறைய பேர் இருந்தாங்க. என்னைச் சுற்றி பெரிய பெரிய லைட்ஸ், கேமிரா என்று எல்லாம் பார்க்கும்போது ரொம்ப பயமா இருந்தது.

ஆனா என்னை போலவே நிறைய சின்ன பசங்க இருந்தாங்க. அதனால கொஞ்சம் தைரியம் வந்துடுச்சு. குழந்தைங்க எல்லாம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ரயில் மாதிரி பிடிச்சுக்கிட்டு ஓடணும். அதுதான் சீன். ஒரு பையன் கையில் ஆரஞ்சு பழத்துடன் தட்டு வைத்திருந்தான். நாங்க ஓடும்போது அந்தப் பையன் கையில் இருந்து ஆரஞ்சு பழம் ஒண்ணு ஒண்ணா கீழே விழுந்துடுச்சு. அதை பார்த்ததும் நான் "ஆரஞ்சு கீழே விழுந்துடுச்சுப்பா'ன்னு கத்திட்டேன். உடனே கட் சொல்லிட்டு எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. என்னாச்சுன்னு அதன் பிறகுதான் சொன்னாங்க. அப்படி எல்லாம் கத்தக் கூடாது. பழம் விழுந்தா பரவாயில்லைன்னு சொன்னாங்க.

தற்பொழுது எந்தந்தத் தொடரில் நடிக்குறீங்க?

சன் டிவியில் "தென்றல்', "திருமதி செல்வம்', ஏஞ்சல் டிவியில் "உடைந்த சிறகுகள்' ஆகிய தொடர்களில் நடிக்கிறேன். முன்பு ராஜ் டிவியில் இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் என்னுடைய போர்ஷன்ஸ் முடிஞ்சிடுச்சு. "தென்றல்' தொடரில் தீபாவாக வரும் ஹேமலதாவின் தங்கை பானுவாக நடிக்கிறேன். "தென்றல்' செட்டுக்கு போய்ட்டா ரொம்ப ஜாலியா இருக்கும். எல்லாரும் ரொம்ப அன்பாப் பழகுவாங்க. நம்ம வீட்ல இருப்பது போல இருக்கும். "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடிக்கிறேன். "உடைந்த சிறகுகள்' தொடர் ஐந்து பேரை மையமாகக் கொண்ட கதை. அதிலும் தங்கை வேடத்தில் நடிக்கிறேன். சொல்லப்போனால் சீரியல்களின் அன்பான தங்கச்சி நான்.

பெரியதிரையில் படங்கள் எதுவும் நடிக்கிறீங்களா?

"வாக்கப்பட்ட சீமை' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். அதில் என் கேரக்டர் பேரு ராசாத்தி. ரொம்ப துறு துறுன்னு இருக்கிற பெண்ணா நடிச்சிருக்கேன். அதையடுத்து ஆனந்த வாசன் இயக்கும் "இதயம் முதல் குமரி வரை' என்கிற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை தவிர பாலு மலர்வண்ணன் இயக்கும் "ஒத்தவீடு' என்கிற படத்தில் ஹீரோ திலீப்பின் தங்கையாக நடிக்கிறேன். ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். படம் திரைக்கு வந்ததும் கண்டிப்பா பந்தனா யாரு என்று எல்லாரும் தெரிகிற அளவுக்கு ரொம்ப சவாலான கேரக்டர் எனக்குக் கிடைத்திருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமா நடித்ததற்கும், இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?

வித்தியாசம் என்று எதுவும் தெரியல. குழந்தை நட்சத்திரமா நடிக்கும் பொழுது நான் நடித்திருப்பதே அவ்வளவா யாருக்கும் தெரியாது. முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியில் ஓடிக் கொண்டிருப்பதாகவே எனக்குக் காட்சிகள் அமைந்தன. இப்போது ஒரு வருஷமா கேரக்டர் ரோல்ஸ் எல்லாம் நடிக்கிறேன். சினிமான்னா என்ன, அதன் அருமை என்னங்கிறது இப்போதான் புரிஞ்சிருக்கு. பொதுவா எல்லாரும் படத்தைப் பார்த்துவிட்டு இது நல்லா இருக்கு, இது நல்லா இல்லன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. ஆனா ஒரு படத்துக்குப் பின்னாடி எத்தனை பேர் உழைக்கிறாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்றாங்க என்று யாருக்கும் தெரியாது. அதை எல்லாம் ஒரு நடிகையா இப்போ தான் உணர்ந்திருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?

ரஜினி சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிகைகளில் அனுஷ்கா ரொம்பப் பிடிக்கும்.

குடும்பம்?

அப்பா கண்ணன், அம்மா லஷ்மி, நான் வீட்டுக்கு ஒரே பெண். எங்க மாமா ஸ்ரீனுவும் எங்களோடுதான் இருக்கிறார். அவர் சினிமாவில் லைட் மேனாக இருக்கிறார்.

Nandri.Dinamani

aanaa
31st July 2011, 06:28 AM
காமெடி கேரக்டரே ஹீரோயினுக்கு இணையானதுதான் : கோவை சரளா!


http://www.alaikal.com/news/wp-content/sarala1.jpg



‘முந்தானை முடிச்சு’ படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உறவுக்காரர்களின் வாரிசுகளை படிக்க வைத்து ஆளாக்கும் அவர், இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.

ஏன் இந்த வெறுப்பு?

திருமண பந்தத்தில் வெறுப்பு இல்லை. யாரோ ஒருவன், என்னிடம் இருந்து தப்பித்து, பிழைத்துப் போகட்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். உறவினர்களின் வாரிசுகள் எனக்கும் வாரிசுகள்தான். அவர்களுக்காக என்னை நான் அர்ப்பணித்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறேன்.

தமிழில் ஏன் இடைவெளி?

அதற்கான காரணம் தெரியவில்லை. தமிழில் ‘மகாராஜா’, ‘காஞ்சனா’, தெலுங்கில் ‘புலி’, ‘கோத்தி மூக்கா’ படங்களில் நடிக்கிறேன். தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் எனக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பெண்கள். நான் எந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறேனோ, அந்தப் பெயரில் செல்லமாக அழைக்கிறார்கள். தெலுங்குப் படங்களில் எனக்கான முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கிறது.

மனோரமாவை தொடர்ந்து நீங்கள். உங்களுக்குப் பிறகு?

நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். எங்கள் இருவருக்குப் பிறகு யார் என்று இன்னும் தெரியவில்லை. தமிழில் புதுப்புது காமெடி நடிகைகள் வர வேண்டும். அப்போதுதான் நடிப்பில் போட்டி இருக்கும். ரசிகர்களுக்கும் வித்தியாசமான காமெடி கிடைக்கும்.

ஏன் ஹீரோயினாக நடிக்கவில்லை?

இருபது வருடங்களுக்கு முன், கன்னடத்தில் ‘பிரேமானு ராகா’ படத்தில் அக்கா, தங்கை என இரு வேடங்களில் ஹீரோயினாக நடித்தேன். படம் இதுவரை ரிலீஸாகவில்லை. பாவம், ரசிகர்கள் பிழைத்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் பிறகு ஹீரோயினாகவே நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, காமெடி செய்வதே ஹீரோயினுக்கு நிகரானதுதான். ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அப்படி என்றால், நானும் ஹீரோயின்தானே?

சாமியாராகப் போவதாக சொன்னீர்களே?

நான் எப்போது சொன்னேன்? அப்படி எழுதிவிட்டார்கள். சாமியாராகித்தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வாழ்க்கையையும் கெடுக்காமல், என்னால் முடிந்தவரை உதவுகிறேன். யாரைப்பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை. என் மனசாட்சிக்குப் பயந்து நடக்கிறேன். பிறகு ஏன் சாமியாராக வேண்டும்?

aanaa
28th September 2011, 04:26 AM
அத்தி எப்போது பழுக்கும்?
மதியம் 2 மணியை "அத்திப்பூக்கள்' நேரம் என்றே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பெண்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குடும்பப் பெண்களைக் டிவியின் முன் கட்டிபோட்டு வைத்திருக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள் என்று தொடரின் இயக்குனரான மருதுவிடம் கேட்டோம்..

வருடக்கணக்கில் "அத்திப்பூக்கள்' வெற்றிகரமாக செல்வதன் ரகசியம் என்ன?

பொதுவாக டிவியை ஓடவிட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து கொண்டே வசனத்தைக் கேட்பார்கள். ஆனால், எங்கள் தொடரைப் பொருத்தவரை ஆடியன்ஸ் விஷூவலாகக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக கேமிரா, டெக்னிக்கல், நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மெனக்கெடல் எங்கள் மொத்த டீமிடமும் இருக்கிறது. இதுதான் காரணம். மற்றபடி ரகசியம் ஒன்றும் இல்லை.

தொடரை முடித்துவிடுவதுபோல் கொண்டு வந்து மீண்டும் தொடர்வதற்கு என்ன காரணம்?

வழக்கமான குடும்பப் பிரச்னையாக இல்லாமல், ஒரு கன்னிப்பெண் வாடகைத் தாயாக மாறுகிறாள் என்பதைக் கருவாகக் கொண்டு ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்ததால்தான் கிட்டத்தட்ட மூன்று முறை க்ளைமாக்ஸ் வரை சென்றுவிட்டு தொடரை முடிக்காமல் தொடர்ந்தோம். ஆடியன்ஸ் விரும்பும் வரை இந்தத் தொடரைக் கொண்டு போகலாம் என்று நினைத்திருக்கிறோம்.

அந்தக் குழந்தை பற்றிச் சொல்லவில்லையே?

அவன் "அத்திப்பூக்கள்' தொடரில் நடிக்க வரும்பொழுது நான்கு மாதக் குழந்தை. இப்போது அவனுக்கு நான்கு வயதாகிறது. உண்மையில் அவனை வைத்துத்தான் எங்கள் சீரியல் எத்தனை வருடம் ஆகியிருக்கிறது என்பதையே தெரிந்து கொள்வோம்.

ஆரம்பத்தில் குழந்தையாக இருந்ததால் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிந்ததும், இது தன்னுடைய அம்மா இல்லை என்று தெரிந்து அழுது அடம்பிடித்தான். ஆனாலும், தேவதர்ஷினிதான் அவனை தன்னுடைய குழந்தையைப் போலவே எந்நேரமும் மடியிலேயே வைத்திருப்பார். அவன் அழக் கூடாது என்பதற்காக ரொம்பவே கஷ்டப்பட்டார்.

இப்போது முழு நடிகனாகவே மாறிவிட்டான். ஷுட்டிங் முடிந்து பேக்கப் சொன்ன பிறகுதான் கையில் பணமே வாங்குகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்கள் அழுது புலம்புவது போலவே எல்லா சீரியல்களும் இருப்பது ஏன்?

பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்றுதான் சொல்வார்கள். அப்படி தான் நேரில் சந்தித்த ஒரு பிரச்னையைத் சீரியலில் பார்க்கும்போது அவர்கள் வாழ்க்கையையே அதில் உணர்கிறார்கள்.

இன்னொரு விஷயம், சீரியல்களைப் பெண்கள்தான் அதிகம் பார்க்கிறார்கள். இன்று பெண்கள் உயர வேண்டுமென்றால் பலவிதக் கஷ்டங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுபோன்ற கஷ்டங்களில் அழுவது இயல்பானதுதான். அதைத்தான் சீரியலில் சொல்கிறோம்.

aanaa
20th October 2011, 10:44 PM
நடிகை சி்த்தாராவின் ஆசை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா.
தமிழில் புது புது ராகங்கள், புது வசந்தம், உன்னை சொல்லி குற்றமில்லை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் படையப்பா படத்தில் நட்புக்காக குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார், இவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று எண்னினார்.

ஆனால் என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று கூறினார்.

சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது, ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது.

சினிமாவை தேடி நான் வரவில்லை, சினிமா தான் என்னை தேடி வந்தது, சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன் அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்று நடிகை சித்தாரா கூறியுள்ளார்.

25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன், காதலித்து இருக்கிறேன் அது, கல்யாணம் வரை போகவில்லை காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவர் என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும், அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

aanaa
11th December 2011, 01:47 AM
ஒவ்வொரு சீரியலுமே சினிமாதான்!



உடல் மெலிந்து, இளமை கூடி, இன்னும் அழகாகி இருக்கிறார் தேவயானி. ‘கோலங்கள்’ அபி விட்டுச் சென்ற இடத்துக்கு இப்போது ‘முத்தாரம்’ ரஞ்சனி! அபி கேரக்டர் பொறுமையின் அடையாளம் என்றால், ரஞ்சனி பொறுமையின் உச்சம்!

பொறுமைசாலியாவே நடிச்சு போரடிக்கலையா மேடம்?

‘‘பெண்கள் பொறுமையோட பிம்பங்கள்தானே? ‘கோலங்கள்’ முடிஞ்சதும் ஒரு வருஷத்துக்கு எந்த சீரியலையும் கமிட் பண்ணலை. அபி கேரக்டர்லேருந்து வெளில வர முடியலை. நிறைய கதைகள் கேட்டதுல, ‘முத்தாரம்’ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். முதல்முறையா டீச்சரா நடிக்கிறேன். என் பாட்டி & அதாவது அம்மாவோட அம்மா & தான் இந்தக் கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன். பெரிய பணக்காரக் குடும்பத்துலேருந்து வந்தாலும், அந்த எண்ணமே இல்லாத பொறுமைசாலி. அவங்களை மாதிரிப் பெண்கள் இந்தக் காலத்துலயும் இருக்காங்க...’’ & நீண்ட விளக்கத்துடன் ஆரம்பிக்கிறார் தேவயானி.

சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலான தேவயானி, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தவர். ‘‘கல்யாணத்துக்குப் பிறகும் படங்கள் பண்ணி ட்டிருந்தேன். அப்பவே சீரியல் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல தயங்கினேன். என் முதல் சீரியல் ‘கோலங்கள்’ அந்த எண்ணத்தையே மாத்திடுச்சு. கிட்டத்தட்ட 7 வருஷம் அபியாவே மக்கள் மனசுல வாழ்ந்திருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. இதைவிட வேற என்ன வேணும்?’’ என்கிறவரை இப்போதும் சினிமா வாய்ப்புகள் விரட்டாமல் இல்லையாம்.

‘‘நியூ படத்துல சின்ன வயசு எஸ்.ஜே. சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். படத்துல எஸ்.ஜே.சூர்யா ராத்திரில பெரியவரா மாறிடற மாதிரி கதை. பலரும் என்னை 10 வயசுப் பையனுக்கு அம்மாவா பார்க்கலை. ஹீரோவோட அம்மாங்கிற மாதிரியே நினைச்சிட்டாங்க. அந்தப் படத்துக்குப் பிறகு ‘அம்மாவா நடிக்கிறீங்களா’னு கேட்டு ஏகப்பட்ட வாய்ப்புகள். எனக்கோ, என் ஹஸ்பெண்டுக்கோ அதுல விருப்பமில்லை.

இந்தி சினிமால கல்யாணமாகி, குழந்தை பெத்த பிறகு கூட கஜோல் மாதிரி நடிகைகள் ஹீரோயினா நடிக்கிறாங்க. நம்ம இண்டஸ்ட்ரியோட தலையெழுத்து வேற. அதுக்காக நான் கவலைப்படலை. என் ஹஸ்பெண்ட் ராஜகுமாரன் டைரக்ஷன்ல, எங்க புரடக்ஷன்ல ‘திருமதி தமிழ்’ படத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன். என் எதிர்பார்ப்புக்கேத்த கேரக்டர் அமைஞ்சா படம் பண்ணுவேன். இல்லைன்னாலும் நோ பிராப்ளம். ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!’’ & உதடு பிரியாமல் சிரித்துச் சொல்கிறார் தேவயானி.


நன்றி: தினகரன்

aanaa
11th December 2011, 01:47 AM
சன் டி.வி ‘அனுபல்லவி’ தொடரில் நடிக்கிற கிரீஷுக்கு சின்னத்திரை தொடர் களில் நடிப்பது அல்வா சாப்பிடுகிற மாதிரியாம்! தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல வருட மேடை நாடக அனுபவத்துடன் சீரியலுக்கு வந்தவர் கிரீஷ்.

‘‘மலையாள நாடகங்கள்லதான் அறிமுகமானேன். பத்து வருஷங்களுக்கும் மேலா ஒய்.ஜி.மகேந்திரன் சார் ட்ரூப்ல இருக்கேன். நாடகங்கள்ல நடிக்கிறது ரொம்பவே சிரமம். டயலாக்கை மிஸ் பண்ணக்கூடாது. தப்பு பண்ணக் கூடாது. பண்ணினாலும், சமாளிக்கிற டைமிங் சென்ஸ் வேணும். இதையெல்லாம் பழகினவங்களுக்கு சீரியல் ஒரு விஷயமே இல்லை’’ என்பவர், அடுத்து சன் டி.வியில் வரவிருக்கும் ‘வெள்ளைத் தாமரை’ தொடரிலும் முக்கிய வேடம் ஏற்கிறார். சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேனேஜராக இருக்கும் கிரீஷின் அடுத்த இலக்கு சினிமா! .
நன்றி:தினகரன்

aanaa
11th December 2011, 01:48 AM
சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே செல்ல முடிவு செய்திருக்கிறாராம் நடிகை லேகா வாஷிங்டன். எஸ்.எஸ். மீயூசிக் சேனல் காம்பியராக இருந்த லேகா வாஷிங்டன் தமிழில் சிம்பு நடிக்கும் கெட்டவன் படத்தில் ஒப்பந்தமானார். அந்த படத்தில் ஒப்பந்தமானதோடு சரி... எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்றே தெரியாத நிலையில், இந்தியில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு வந்தது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் லேகா.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கெட்டவன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மீண்டும் நல்ல வாய்ப்பு வந்தால் டி.வி.க்கே போய்விடலாம் என்ற எண்ணம் இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

நன்றி:தினமலர்

aanaa
11th December 2011, 01:48 AM
`வாழ்க பாரதம்!'

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `தென்றல்' சீரியலில் தர்மன் என்ற தாதா கேரக்டரில் வில்லத்தனத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ராஜேந்திரநாத். யுவராணியை தனது அடியாட்கள் சகிதம் அவர் சந்திக்கும்போது சிரித்த முகத்தில் மறைந்திருக்கும் அடியாழ வில்லத்தனம் அழகு. அவ்வப்போது `வாழ்க பாரதம்' என்று சொல்லிக் கொள்வது இன்னொருவித அழகு.

1987-ல் விஜயகாந்த் நடித்த `ரமணா' படத்தில் தான் இவரது நடிப்பு பயணம் தொடங்கியது. இந்த 25 ஆண்டுகளில் நூறு படங்களை எட்டி விட்டார். இத்தனை படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ், ஒரேயொரு சீரியலில் கிடைத்திருப்பது இவரை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சீரியல் நடிப்புக்கு வரும்வரை இவருக்கும் சின்னத்திரை சாதாரணமாகவே தெரிந்திருக்கிறது. `இந்த மாதிரியான புத்திசாலித்தனம், ரவுடியிசம் இரண்டும் மிக்சான ஒரு கேரக்டர் இருக்கிறது. நடிக்கிறீர்களா?' என்று `தென்றல்' சீரியலின் இயக்குனர் குமரன் கேட்டபோது, முதலில் தயங்கவே செய்திருக்கிறார். இருந்தாலும் இயக்குனர்மீது நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று தென்றலின் முக்கிய கேரக்டர்களில் ஒருவராகி விட்டார்.

"எப்படியிருக்கிறது , சின்னத்திரை அனுபவம்?'' ராஜேந்திரநாத்தைக் கேட்டால்...

"நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை 95 படங்கள் நடித்து முடித்து விட்டேன். வெளியில் பார்த்தால் யாராவது ஒன்றிரெண்டு பேர் என்னை உற்றுப்பார்ப்பார்கள். தயங்கித்தயங்கி நீங்கள் இந்தப்படத்தில் நடித்தீர்கள் தானே என்று கேட்பார்கள். அத்தோடு சரி. ஆனால் `தென்றல்' தொடரில் எப்போது என்டர் ஆனேனோ அப்போது முதலே எந்த ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் `வாழ்க பாரதம்' என்ற குரல் கொடுக்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் கூட உற்சாகமாய் என் கேரக்டர் பற்றியும், கதை பற்றியும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொதுவாக சினிமாவில் வசனங்கள் அதிகம் இராது. அப்படி இருந்தாலும் பிரித்துப் பிரித்து பேசவைத்து படம் பிடித்து விடுவார்கள். சீரியலில் அது நடக்காது. வசனம் பக்கம் பக்கமாக கொடுத்து நடிக்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் சற்றே சிரமமாகத் தெரிந்தது. போகப்போக பழகி விட்டது. இதன் விளைவு, இப்போது சினிமாவில் பெரிய வசனம் என்றாலும் ஒரே டேக்கில் சுலபமாக பேசி விடுகிறேன். சீரியல் நடிப்பில் இது எனக்கு கிடைத்த பரிசாகவே இதை உணருகிறேன். தொடர்ந்து பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பை தொடர்வேன்''

குரலில் உற்சாகம் பொங்க சொல்லி முடிக்கிறார், ராஜேந்திரநாத்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120114/TV3.jpg
நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:48 AM
"கரு த் த ம்ம ô' ர ôஜ ஸ்ரீ யி ன்
த ங் கை எ ன்ற அறி மு
க த் தே ôடு சினி ம ô வு க்கு வ ந்த
மி துன ô,.


சினி ம ô வி ல் நடி க்க ஆர ம் பி ச்ச உட னே இ வ் வ ளவு
சீ க் கி ர ம் சீரி ய லு க்கு வ ந் து ட் டீ ங் க ளே..?
"ம ôம து ரை', "தீய வ ன்', "ச ôபூ த் திரி' பட ங் க ளி ல் கத ô
ந ô ய கி ய ôக நடி ச் சி ரு க் கே ன். இ ப் ப வு ம் " சை தை செ ல்ல ô',
"எதி ர் ப ô ர ô த து', "லூசு ப் பெ ண் ணே..' பே ô ன்ற தமி ழ் ப்
பட ங் க ளி லு ம் நடி ச் சு ட் டு த ô னி ரு க் கே ன். வ ô ய் ப் பி ல் ல ôம
சீரி ய லு க்கு வரல.


"க ôத ம் பரி' க தை யு ம், அ ந் த க் க தை க்கு நீ ங் க த ô ன்
சரிய ô இரு ப் பீ ங் க ன்னு இய க் கு ந ர் பிரபு ச ங் க ர் செ ô ன் ன
வி த மு ம் என க் கு ப் பிடி ச் சி ரு ந் த து. மு க் கி யம ô எ ன் கத ô
ப ô த் தி ர த் து க்கு இ ணைய ô அதி ல் சுத ô ச ந் தி ர ன் மேட
மே ôட அ ந்த வி ல்லி கெ ட் ட ப் ரெ ô ம் ப ப் பிடி ச் சி ரு ந் த து.
அவ ங் க ளை ப் பே ôல இ ன் னெ ô ரு த் த ர ôல இ தை ச் செ ய்ய
முடி யு ம ô ன்னு நி னை க் கற அள வு க்கு ஆ க் ரே ô ஷம ô
இரு ந் த து. அ தை ப் ப ô ர் த் த து மே நம க்கு இ து சேல ஞ் சி ங்
க ôன ரே ôல ô இரு க் கு ம், வழ க் க ம ôன க தை ய ôக இரு க் க ô
து ன்னு உட னே ஒ த் து க் கி ட் டே ன்.


உ ங்க ச கே ô தரி ர ôஜஸ்ரீ உ ங் க ளு க்கு ஆ லே ô ச னை
க ள் செ ô ல் வ ô ங் கள ô?
"க ôத ம் பரி' சீரி ய லு க் கு க் கே ட் ட பே ô து, பெரி ய தி ரை
யி ல் இ ன் னு ம் செ ô ல் லி க் கிற ம ôதிரி ச ôதி க் க லை. அ து க்
கு ள்ள சி ன் ன த் தி ரை க்குப் பே ôக ணு ம ô ன்னு குழ ப் பம ô
இரு ந் த து. அத ன ôல எ ன் னே ôட அ க்க ô ர ôஜ ஸ்ரீ கி ட்ட
இ து ப ற்றிக் கே ட் டே ன்.


"சி ன் ன த் தி ரை, பெரி ய தி ரை ன்னு எ ந்த வி த் தி ய ô ச
மு ம் இ ல்ல. சி ன் ன த் தி ரை க்கு இ ப் பே ô ந ல்ல வர வே ற்பு
இரு க்கு. வீ ட் டி ல் உ ள்ள பெ ண் க ள் எ ல் ல ô ரு ம் சீரி ய லை
விரு ம் பி ப் ப ô ர் க் கி ற ô ங்க. பெரி ய
திரை யி ல் நடி ச்ச ô சி ன் ன த் தி ரை யி ல்
நடி க் க க் கூட ô து ன்னு சில நடி கை க ள்
நி னை க் கி ற ô ங்க. அ து த ப்பு. எ ந்த
தி ரை ய ôக இரு ந் த ô லு ம் நடி ப்பு எ ன்
ப து ஒ ண் ணு த ô ன்'னு செ ô ன் ன ô ங்க.
அவ ங்க செ ô ன் ன து சரி த ô னே ன்னு
தே ôணு ச்சு. இ ந்த சீரி ய ல்ல ந ô ன் கமி ட்
ஆன து க்கு அவ ங்க மு க் கி ய ம ôன க ôர
ண ம்.


"க ôத ம் பரி' அ ப்ப ரெகு ல ர ôன சீரி
ய ல் இ ல் லைய ô?
ஆம ô ம்! இ து 200 வரு ட ங் க ளு க்கு
மு ன் ன ôடி வ ô ழ் ந்த ஒரு பெ ண் ணே ôட
க தை. என க் கு த் தெரி ந் து டி.வி தெ ôட
ரி ல் இ ந் த ள வு க்கு மு க் கி ய த் து வ ம்
உ ள்ள சரி த் தி ர க் க தை இ து வே முத ல்
மு றை ன்னு நி னை க் கி றே ன். 18-ஆ ம்
நூ ற் ற ô ண் டுல இரு ந்த டிர ஸ், ஹே ர் ஸ் டை ல், வ ளை
ய ல், பெ ô ட்டு என எ ல் ல ô மே தேடி ப் பிடி ச்சு நி றைய
உ ழை ச் சி ரு க் கே ô ம். ஒரு சினி ம ô வு க் கு க் கூட இ ந் த ள
வு க்கு செலவு ப ண்ண ம ô ட் ட ô ங்க. அ ந் த ள வு க்கு மிக ப்
பிர ம ô ண் டம ô இ ந்த தெ ôட ரை எடு க் கி ற ô ங்க. 500 எபி
சே ô ட் முடி ச் சு ட் டே ô ம், ஜெய ô டிவி யி ல் வி ரை வி ல் ஒளி
ப ர ப் ப ô க ப் பே ôகு து.


ப ôர தி ர ôஜ ô ஹீ ரே ô யி ன் ம ôதிரி ஜ ô க் கெ ட் இ ல் ல ôம
நடி க் கி றீ ங் க ள ô மே.. பர ப ர ப் பு க் க ô கவ ô?
அ து பர ப ர ப் பு க் க ôக இ ல்ல, அ ந்த க ôல த் து ப் பெ ண்
க ள் எ ப் படி இரு ப் ப ô ங் க ன்னு ஆய்வு செய்து இ ந்த
க ô ஸ் ட் யூ ம் வெ ச் சி ரு க் க ô ங்க. அ ந்த க ôல த் து ப் பெ ண்
க ளே இ ப் படி இரு ந் தி ரு க் க ô ங்க. பட த் துல கம ர் μ ய
லு க் க ôக கிள ô ம ர் ச ô ங் ஸ் தே வை யி ல் ல ô ம ப் ப ண் ணு ம்
பே ô து, க தை க்கு அவ சி ய ம ôன இ ந்த கெ ட் ட ப் என க் கு ப்
பெரிய விஷ யம ô தெரி யல. எ ந் த த் தி ரை ய ôக இரு ந் த ô
லு ம் க தை க்கு ஏ ற்ற க ô ஸ் ட் யூ ம் இரு ந் த ô ல் த ô னே ப ô ர் க்க
ந ல் ல ô ரு க் கு ம்?


நடி ப்பு தவிர வேறு எ ந் த த் து றை யி ல ô வ து ஆ ர் வ ம்
இரு க் கி றத ô?
டைர க் ஷ ன் செ ய் ய ணு ம்னு ஆ ர் வ ம் இரு க்கு. ஷ þ ட்
டி ங் ஸ்ப ô ட்ல எ ன் னே ôட ஷ ô ட் முடி ஞ் ச து ம் எ ன்ன ப ண்
ற ô ங் க ன்னு கவ னி ச் சு ட் டே இரு ப் பே ன். எ ல் ல ô த் தி லு ம்
இ ப் பே ô கெ ô ஞ் ச ம் கெ ô ஞ் ச ம் க த் து வ ச் சி ரு க் கே ன். முழு
மை ய ô க் க த் து க் கி ட் டே ன்னு ந ம் பி க் கை வரு ம் பே ô து
க ண் டி ப்ப ô டைர க் ட ர் ஆ வே ன். அ து சினிம ô, சீரி ய ல்
எ துவ ô வேண ô லு ம் இரு க் கு ம். ஏ ன்ன ô, இர ண் டு ம் எ ன்
னை ப் பெ ôரு த்த அளவு ஒ ண் ணு த ô ன்.

aanaa
11th December 2011, 01:48 AM
ரம்யா கிருஷ்ணன் எப்போதும் அப்படித்தான்!
http://www.cinemaexpress.com/Images/article/2012/2/21/varsha.jpg


"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே எப்படி?அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லோரரையும் ஆதிக்கம் பண்ணுவாங்க. ஆனா அவங்களுக்கே டென்ஷன் கொடுக்கிற கேரக்டர் எனக்கு. அதனாலதான் எதிர்த்து சண்டை போட்டுட்டிருக்கேன். டென்ஷனுக்கே டென்ஷன்ங்கறது வித்தியாசமான அனுபவமா இருக்கு. என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்ல ரீச் ஆகியிருக்கிறதுக்கு அதுதான் காரணம்.பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கிறதா?
என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது. வெளியே எங்கேயாவது ஆடியன்ஸ் பார்த்தாக் கூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம்? நீங்க கல்யாணமாகி அங்கே போங்க.. அப்பதான் நல்லா இருக்கும்'னு சீரியல் சம்மந்தமாதான் அதிகம் பேசறாங்க.சின்னத்திரைக்கு வந்தது எப்படி?நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத். இப்போ நடிக்கறதுக்காக சென்னையில் என் அத்தை, மாமாவோடதான் தங்கியிருக்கேன். நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ எங்கள் வீட்டில் டி.வி. எல்லாம் பார்க்கக்கூடாது. ஒரே ஒரு ரேடியோதான் இருக்கும். அதுவும் எங்க அப்பாதான் வைச்சிருப்பார். சின்ன வயசுல இருந்தே எனக்கு டி.வி.யில வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள், டிரஸ் எல்லாம் ஆசையாப் பார்ப்பேன். அதற்காகவே டி.வி. பார்ப்பேன்.காலேஜ் முடிச்சதும் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். மாடலிங்கில் இருந்த டைம்லதான் "லட்சியம்' தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துட்டு நீங்க இந்த தொடர்ல நடிச்சா நல்லாருக்கும்'னு சொல்லிக் கேட்டார். ஆஹா.. இதுதானே நான் நினைச்சதுன்னு கமிட் ஆகிட்டேன். அதன் பிறகு, மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்."தங்கம்' தொடர்ல ரம்யா கிருஷ்ணனோட நடிக்கும் அனுபவம் எப்படி?நான் அவங்களோட படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். ஆனால், படத்தில் பார்த்ததற்கும் இப்போ நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரணக் குடும்பப் பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ அப்படித்தான் பழகுறாங்க.பெரிய ஹீரோயின் என்ற பந்தா எல்லாம் ரம்யா அக்காகிட்ட கிடையாது. எல்லோர்கிட்டயும் எப்பவும் அதே பக்குவத்தோடயும் அன்போடவும்தான் இருப்பாங்க. யார் எந்த சீன் நல்லா நடிச்சாலும் உடனே பாராட்டுவாங்க.காவேரிகூட சீரியல்ல சண்டை போட்டுட்டே இருக்கீங்களே..தங்கம் யூனிட்ல எல்லோரும் ஒருத்தரோடு ஒருத்தர் ரொம்ப அன்பாப் பழகுவாங்க. குறிப்பா நானும் காவேரி அக்காவும் சீரியல்ல எதிரிகளாக இருந்தாலும். நிஜத்தில் ரொம்ப திக் ஃபிரண்ட். செட்ல எப்பவும் அரட்டை அடிச்சுக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டே இருப்போம். வெளியே ஷாப்பிங் எங்கே போனாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் போவோம். எனக்கு இப்போ சென்னையில் இருக்கிற ஒரே தோழி அவங்கதான்.டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிற நீங்க, சின்னத்திரையில் நடக்கிற நடன போட்டிகள்ல கலந்துக்கறதில்லையே ஏன்?ஏற்கெனவே நிறைய சீரியல் கமிட் ஆகியிருக்கேன். அதனால அந்தளவுக்கு நேரம் கிடையாது. தேவையில்லாத விஷயங்கள்ல கவனம் திரும்புனா நடிப்புல கவனம் செலுத்த முடியாதுங்கறது என்னோட பாலிஸி. இதனால பிரஷர்தான் அதிகமாகும். சின்னத்திரை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவு மாதிரி எப்போதாவது ஸ்பெஷலா டான்ஸ் ஷோ செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனா போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை

aanaa
26th February 2012, 09:19 PM
Vellai Thamarai: Serial press meet


http://timesofindia.indiatimes.com/videos/entertainment/regional/tamil/Vellai-Thamarai-Serial-press-meet/videoshow/12948160.cms



http://www.indiaglitz.com/channels/tamil/videos/33843.html


http://www.padangal.com/galattavideos/vellai-thamarai-serial-press-meet-video_a736a98ea.html#



http://www.youtube.com/watch?v=_agyElOO0wo

aanaa
29th June 2012, 02:54 AM
போல்டான கேரக்டரில் நடிக்க ஆசை: 'திருமதி செல்வம்' அபிதா புதன்கிழமை, ஜூன் 27, 2012, 10:22


திருமதி செவ்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து பெண்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் அபிதா. இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் பெற்றிருக்கும் அபிதா தன் சொந்த வாழ்க்கையில் எப்படி? அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

http://tamil.oneindia.in/img/2012/06/27-abitha-300.jpg
பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். மிடில் கிளாஸ் குடும்பமா இருந்து இப்போ கோடீஸ்வர குடும்பமா மாறியிருக்கோம். இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

இந்தத் தொடரைப் பொறுத்தவரை எனக்கு எப்பவுமே சலிப்பு வந்ததில்லை. அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால் ரசிகர்களின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டதா ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள். அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

அர்ச்சனா கேரக்டரைப் போன்றுதான் நான். அதனால்தான் தொடரில் என்னால் எளிதாக நடிக்க முடிக்கிறது. அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன். எனக்கு ஒய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா. என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது. எனக்கு சின்ன குழந்தை இருப்பதால் சினிமாவில் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் அபிதா.

அமைதியான அர்ச்சனாவிற்கு படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறதாம்.

அப்ப கூடிய சீக்கிரம் இன்னொரு நீலாம்பரியை பார்க்கலாம்.



நன்றி: OneIndiaதி

aanaa
29th June 2012, 03:02 AM
அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா



சினிமாவில் நடன இயக்குநர் சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் இயக்குநர் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறது நடன இயக்குநர் கலாவின் வாழ்க்கை. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள். எம்.எம் சீசன் 7ல் பிஸியாக இருந்த கலா மாஸ்டரை நமக்காக பத்து நிமிடம் ஒதுக்கச் சொன்னோம்.


"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்.எம் சீசன் 7 வரை போய் கொண்டிருக்கிறது. என்னை எல்லோரும் மாஸ்டர் என்று அழைப்பதை விட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும் என்று கூறி தொடர்ந்தார்.


நடனத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.


கலைஞர் டிவி தொடங்கும் போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதன் அடிப்படையில் மானாட மயிலாட தொடங்கினோம். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அதுதான் சீசன் 7 வரை தொடர காரணமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடுவதற்கு திறமை இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம் என்றார். எங்களுடையை நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கெமிஸ்ட்ரி. இப்பொழுது அது பலரும் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.


இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதிகளுக்கு இடையே சண்டை போடுவது டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக்காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!. எங்களின் தீர்ப்பும் சரியாக இருக்கும் அதனால்தான் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர காரணமாக இருக்கிறது என்று கூறி நிகழ்ச்சிக்கு கிளம்பினார் கலா மாஸ்டர்.

aanaa
29th June 2012, 03:04 AM
வில்லி கேரக்டர்தான் ரொம்ப பிடிச்சிருக்கு..புவனேஸ்வரி




சின்னத்திரை, சீரியல், சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் சென்று விட்டு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் சீரியலில் களம் இறங்கியுள்ளார் நடிகை புவனேஸ்வரி. சவுபர்ணிகாவில் தொடங்கி வாழ்வே மாயம் வரை அவரின் பயணம் குறித்து அவரிடமே கேட்போம்.


சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.


சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது.


என்னுடைய கண்கள்தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட். அதேபோல் ஐஸ்வர்யா ராயின் கண்களையும், அவரின் அழகையும் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்.
பொதுவாகவே எனக்கு முன்கோபம் அதிகம் வரும். அப்பொழுது எனக்கே என்மீது பயம் ஏற்படும். அந்த கோபம்தான் என் வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திவிட்டது. அதை மறக்க நினைக்கிறேன்.


எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன் என்று கூறிவிட்டு சிரித்தார் சின்னத்திரை வில்லி புவனேஸ்வரி.

aanaa
12th July 2012, 07:13 PM
நான் பொறுப்பான அம்மா ... விஜி சந்திர சேகர்



http://tamil.oneindia.in/img/2012/06/25-azhagi-30.jpg




விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘அழகி' தொடரில் தன்னம்பிக்கை சுந்தரி. வீட்டு வேலை, ஹாஸ்பிடல், பெட்ரோல் பங்க் என பல வேலைகளைப் பார்த்து கஷ்டப்படும் பெண்ணாக நடித்து நடுத்தர குடும்பத்துப் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார் விஜி சந்திரசேகர். சினிமாவில் நடித்த விஜி நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார்.

முள்ளும் மலரும் தொடரில் துறு துறு என்று நடித்த விஜி சந்திரசேகர் சில வருடங்கள் காணமல் போய் கிழக்குச் சீமையிலே தொடரில் வடிவேலுக்கு ஜோடியாக வந்தார். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என இருந்தாலும் கொஞ்சகாலம் மீடியாக்களின் கண்களில் சிக்கவில்லை. இப்பொழுது திடீர் சீரியல் பிரவேசம். எதனால் இந்த இடைவெளி என்று கேட்டோம்.

ரெண்டு குழந்தைகளை வளர்க்கவே நேரம் போதலை. பெரியவ காலேஜ் போறா சின்னவள் ப்ளஸ் டூ அதனால் இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு சீரியல்ல வந்துட்டேன்.

அழகி சீரியல் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கு. சில மாதங்களுக்கு முன் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன். கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி'யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ்.

'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?'னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...'னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச சில மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது.

நானும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து இந்த சீரியலில் நடிக்கிறேன் என்று கூறினார் விஜி சந்திரசேகர்.
ஒரு முக்கிய செய்தி: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறாராம். வீட்டில் விஜி சந்திரசேகர் ஸ்டிரிக்ட் அம்மா என்று கூறுகின்றனர்.

விஜியின் பெரிய பெண் சுரக்ஷா எம்.பி.பி.எஸ் மாணவியாம். சின்னபெண் லல்லின் ப்ளஸ் ஒன் படிக்கிறாராம். இருவருக்கும் செல்போன் வாங்கி கொடுத்தது கிடையாதாம். டிவி சேனல்ஸ் பார்க்க தடை விதித்துள்ளாராம். பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் அவர்களுக்கு நட்பு வட்டம் கிடையாதாம். இப்போதைக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கூறி குழந்தைகளை வளர்க்கிறாராம்.
பொறுப்பான அம்மாதான்!

aanaa
15th July 2012, 03:50 AM
என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி




புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார்.

சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி கூறுவதைக் கேட்போம்.

என்னுடைய சின்னத்திரை பயணம் சன் மியூசிக்கில் காலை நேரத் தில் வாழ்த்தலாம் வாங்க நிகழ் ச்சியில் ஆரம்பித்தது இப்போது சீரியல்களில் தொடர்கிறது. நடி க்கணும் என்ற எண்ணமே கிடையாது. நிகழ்ச்சி தொகுப் போ, சீரியலோ இரண்டுமே தானாகவேதான் அமை ந்தன.

அம்மா சுபி. அப்பா சங்கர் அவர் சினிமாவில் கொரியோகிராபி பண்ணிக்கிட்டு இருக்கார். தம் பி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். அம்மா எக் ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போனதால நான்தான் பிசினஸைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் பெரியம்மா மகள் நீபா மூலமாகத்தான் எனக்கு சீரியல் நடி க்க வாய்ப்பு வந்தது.

என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட பண்ணுகின்ற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிக்க வருவதற்கு முன்பே அவுங்களோட ரசி கை நான். எனக்கு அவுங்களை ரொம்ப பிடிக்கும். அவுங்களோட பழகும்போது அவுங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அப்படி பிடித்தவர்களோட சேர்ந்து நடித்தது ரொ ம்ப சந்தோஷமா இருந்தது.

சீரியலில் எனக்கு நெகடிவ் ரோல்தான் அதிகமாக கிடைக்கிறது. சாதரணமாகவே எனக்கு நெகட்டீவ் ரோல் ரொம்பப் பிடிக்கும். பாஸி ட்டிவ் ரோல் பண்ணுவதற்கு நிறைய பேர் வருவாங்க. ஆனால் ஒரு சிலர்தான் நெக ட்டீவ் ரோல் பண்ணுவார்கள். நெகட்டீவ் ரோல் ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பாஸ்ட்டீவ் ரோலைவிட நெகட்டீவ் ரோல் பண்ணும் போது மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும்.

நான் பரதநாட்டியம் முறைப்படி கற்றுக் கொண்டேன். அரங்கேற்றம் வரும் சமய த்துல டென்த் எக்ஸாம் வந்திடுச்சு. அதனா ல அப்படியே நிறுத்திட்டேன். அதுக்கு பிற கு தொடருவதற்கு டயம் கிடைக்கல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும் போ து நிறைய டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணி யிருக்கேன். ஆனா அக்கா அளவுக்கு எல்லாம் நான் டான்ஸர் கிடை யாது. அவ சூப்பரா டான்ஸ்ல வெளுத்து வாங்குவா. நான் எப்படி சொல்லி கொடுக்கிறாங்களோ அப்படியே ஆடுவதோடு சரி.


என்னை பொருத்தவரை எந்த ஒரு விஷ யம் எடுத்துக்கிட்டாலும் அதில் உறுதியா இருக்கனும். அப்போதான் ஜெயிக்க முடி யும். ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதில் எவ் வளவு தடைகள் வந்தாலும் சரி கண்டிப் பாக செஞ்சி முடிச்சுடுவேன் என்று கூறி விட்டு சீரியலில் நடிக்க கிளம்பினார் மகா லட்சுமி.

aanaa
15th September 2012, 07:06 PM
மனதில் வந்த கம்பீரம்! அனுஜா ஐயர் பெருமிதம்!!


சின்னத்திரை தொடரில் வக்கீலா நடித்து வரும் நடிகை அனுஜா ஐயர், தனது மனதில் தானாக கம்பீரம் வந்திருப்பதாக கூறியுள்ளார். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற அனுஜா ஐயர் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ஒளிபரப்பாகும் தர்மயுத்தம் தொடரில் வக்கீல் கோட் போட்டு கம்பீரமாக வருகிறார்.


சீரியல் அனுபவங்கள் குறித்து அனுஜா அளித்துள்ள பேட்டியில், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் டெல்லியில்தான் மாஸ் கம்யூனிகேசன் படித்தேன். மாடலிங் வாய்ப்போடு சினிமாவும் தேடி வந்தது. உன்னைப்போல் ஒருவன் சினிமாவில் ரிப்போர்ட்டராக நடிக்கும் போதே ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் மைக்குமாக தில்லாக நடித்து இருந்தேன். அது பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது அதேபோல் தில்லான கேரக்டர் சின்னத்திரையில் அமைந்திருக்கிறது.


தர்மயுத்தம் தொடரில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்ல வேண்டும். ஏழு வருடங்களாக குடும்ப விஷயம் ஒன்றுக்காக கோர்டுக்கு போனது இப்போது சீரியலில் நடிக்க ஈஸியாக இருக்கிறது என்கிறார் அனுஜா. சின்னத்திரை தொடர்களிலேயே இந்த தொடர்தான் 5 டி கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது. இது மாறுபட்ட ஃபார்மேட் என்பதால்தான் இந்த தொடரில் நான் கமிட் செய்து கொண்டேன். இந்த தொடரைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. சீரியலுக்காகத்தான் கறுப்பு கோட்டை அணிகிறேன் என்றாலும் மனதில் தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்கிறது, என்று கூறியுள்ளார்.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2013, 03:28 AM
சின்னத்திரையில் இருந்து...

திருமதி செல்வம், முந்தானை முடிச்சு, இளவரசி, தென்றல், மருதாணி, வசந்தம், அத்திப்பூக்கள், உதிரிப்பூக்கள், பிள்ளை நிலா என ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் தன் நடிப்பால் ரசிகர்கள் மனதில் நின்று போனவர் மதுரை பிரியா. மதுரை நரிமேட்டைச் சேர்ந்த மதுரை பிரியா, சென்னைக்கு நடிக்க வந்து மூன்றாண்டுகள் முடிந்திருக்கிறது. அதற்குள் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடிப்புப் பிரவேசம். எப்படி? நாடக அனுபவம் தான் காரணமா?


பிரியாவைக் கேட்டால்...


ஒருவர் பேசும்போதே அவர்கள் மேனரிசம் எப்படி இருக்கிறது என்பதை மனதில் படம் பிடித்துக் கொள்வேன். பிறகு அவர்கள் மாதிரி பேசிப்பார்ப்பேன். சிறு வயதிலேயே என்னை தொற்றிக் கொண்ட பழக்கம் இது. இதனால் என் பள்ளிக்கால தோழிகளில் பலரும் நீ நடிக்கத்தான் லாயக்கு என்பார்கள். அப்படியாக என்னை பற்றிக்கொண்டது தான் கலையார்வம். ஊரில் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேடையில் நடிப்புக்கு கிடைத்த கைதட்டல் தந்த தைரியத்தில் தான் சென்னை வந்தேன். வந்ததும் வாய்ப்புக்கு முயன்றபோது தங்கம் சீரியலில் டாக்டர் கேரக்டர் வந்தது. அந்த டாக்டர் கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பில் அத்திப்பூக்கள் உள்ளிட்ட அடுத்தடுத்த பல சீரியல்களில் டாக்டர் வேடமா? கூப்பிடு பிரியாவை என்கிற அளவுக்கு நிலைமை போய் விட, அப்போது தான் நான் சுதாரித்துக் கொண்டேன். கதைக்குள் இணைந்த வித்தியாசமானகேரக்டர்களை கேட்டு வாங்கினேன்.


இதன் பிறகே பெரியதிரை அழைப்புகள் வரத்தொடங்கின. தூங்காநகரம் படத்தில் நடிகர் விமலுக்குஅக்காவாக வந்தேன். மதுரை சம்பந்தப்பட்ட கதை என்பதால், மதுரையில் இருந்து வந்த எனக்கு முக்கிய கேரக்டர் தந்து நடிக்க வைத்தார், டைரக்டர் கவுரவ். தொடர்ந்து காவலன், கோ, வேலாயுதம், அவன் இவன் என படங்கள் தொடர்ந்ததில் இப்போது துட்டு படத்தில் கஞ்சா கருப்புவின் ஜோடியாகி இருக்கிறேன். இந்த காமெடி கேரக்டர் எனக்கு சினிமாவில் புது விலாசம் தரும்.


வில்லியாக நடிக்க ஆசையில்லையா?


யார் சொன்னது? வந்தால் அதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் வெண்ணிலாவின் அரங்கேற்றம் படத்தில் கொடுமையான வில்லி கேரக்டர். நடிக்க முடியுமா? என்று கேட்டார்கள். கதை கேட்டபோது தூள்சொர்ணக்கா மாதிரியான அடாவடி கேரக்டர் என தெரிந்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டேன். இனி வில்லியாகவும் அதகளம் பண்ணவிருக்கிறேன்.


சின்னத்திரையிலும் தொடர்வீர்கள் தானே?


என்னை ரசிகர்களிடம் முதலில் கொண்டு சேர்த்தது சின்னத்திரை தான். எனவே பெரியதிரையில் பிசியானாலும் சின்னத்திரை வாய்ப்புக்களையும் தொடரவே செய்வேன்.
உற்சாகமாக சொல்கிறார், மதுரைபிரியா.

aanaa
5th February 2014, 10:52 PM
......

பாலுமகேந்திரா படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை நடிகை ரம்யா. தலைமுறைகள் படத்தில் நடிக்கும் போது பால்ய பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பாலுமகேந்திரா...சுயசரிதை எழுதும் அளவிற்கு அந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன. ஒருவருடம் தலைமுறைகள் படத்தில் நடித்தேன். இன்னும் கொஞ்சநாள் அந்த படத்தில் நடிக்க மாட்டோமா? என்றிருந்தது என்று கூறியுள்ளார். சீரியல், மாடலிங், சினிமா, காதல் திருமண வாழ்க்கை போட்டோகிராபி என வாழ்க்கையில் சுவையான சம்பவங்களை மனம் திறந்து கூறியுள்ளார் ரம்யா.


மாடலிங் சின்னத்திரை நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். சின்னத்திரைக்குள் ‘இது ஒரு காதல் கதை' நான் அறிமுகமான முதல் சீரியல்.


சினிமாவில் மந்திரப்புன்னகை அதை தொடர்ந்து கரு. பழனியப்பன் சார் இயக்கி நடித்த ‘மந்திரப்புன்னகை' படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.


தடையற தாக்க கண்டுபிடி கண்டுபிடி' எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ‘தடையற தாக்க' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள். தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான பாலுமகேந்திரா சார் படத்தில் நடித்ததை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். . எனக்கு போட்டோகிராபியில் ஆர்வம் இருந்ததால் அதைப் பற்றி பாலுமகேந்திராவிடம் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன்

aanaa
6th June 2014, 05:43 AM
ஒரு பக்கம் சீரியல்களில் அழுவாச்சி கண்ணீர், மறு பக்கம் விஜய் டி.வி. 'காமெடியில் கலக்குவது எப்படி?’ நிகழ்ச்சியில் ஹ்யூமர் கலாட்டா என கலக்குகிறார் சின்னத்திரையின் ஸ்வீட் பியூட்டி சபர்ணா. கசங்கிய சேலையும், கண்ணீர் கண்களுமாய் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் ஜாலியும் கேலியுமாய்ப் பேசியதில்...


''ஹீரோக்கள் 60 வயசானாலும் ஹீரோவா நடிக்கிறாங்க... ஹீரோயின்கள் மட்டும் ஏன் சீரியலுக்கு வந்துடுறாங்க?''


''அவங்க என்னங்க பண்ணுவாங்க? இதுவரைக்கும் அந்த மாதிரி கல்யாணம் ஆன பொண்ணுங்களை நம்ம தமிழ் சினிமா ஏத்துக்கிட்டது இல்லை. அதனால ஹீரோயின்களும் அதுக்கான முயற்சியை எடுக்கிற எண்ணம் வரலை.''


''சைட்...?''


''சூப்பரா அடிப்பேன்! பட்... நான் சைட் அடிக்கிறது மத்தவங்களுக்கு மட்டுமில்ல, சம்மந்தப்பட்ட ஆளுக்குக்கூடத் தெரியாது. ஓரக் கண்ணால பார்க்கிறதுல அப்படி ஒரு கிக்.''


''உங்களை கரெக்ட் பண்றதுக்கு என்னங்க பண்ணணும்?''


'' 'அகத்தின் அழகு முகத்துல தெரியும்’னு சொல்வாங்க. அதனால, அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை. கேரக்டர் நல்லா இருந்தாப் போதும். கல்யாணம் பண்ண பொண்ணை கண் கலங்காம வெச்சுப் பார்த்துக்கிறவன்தான் ஆம்பளை. என்னோட சாய்ஸ் அப்படி இருக்கும்.''






''நிறைய அனுபவமோ?''


'' அய்யய்யோ... இதுவரைக்கும் எனக்கு வந்த மொத்த லவ் லெட்டர் ரெண்டோ, மூணோதான். முதல் லெட்டர் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ, பேக்கரி கடை வெச்சிருந்த அஜித்துங்கிற மலையாளிப் பையன் கொடுத்தது. லெட்டர்னு சொல்ல முடியாது... காதல் கவிதையை எழுதிவெச்ச கிரீட்டிங் கார்டு. அதை வாங்கிக்கிட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் 'எனக்கும் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்டி’னு பெருமைப்பட்டுக்கிட்டேன்.''


''இப்போ கிரீட்டிங்ஸ் கார்டுல காதல் கவிதை எழுதிக் கொடுத்தா?''


''நோ சான்ஸ்... 'ஐ மேரி யூ...’னு அப்ரோச் பண்ணிட்டு, வீட்டுல வந்து பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் முடிஞ்சு ஆற அமர லவ் பண்ணிக்கலாம்.''


''முகத்துக்கு முன்னாடி விழற முடி மேல பொண்ணுங்களுக்கு அப்படியென்ன கிரேஸ்?''


''சில பேருக்கு அது ஸ்டைல், சில பேருக்கு அது 'என்னைக் கவனிடா’ங்கிற சிக்னல். முக்கியமானது பசங்க பக்கத்துல நிக்கும்போது வர்ற படபடப்பைப் போக்கிக்கிறதுக்கு!''





நன்றி: விகடன்

aanaa
6th June 2014, 05:48 AM
கலைஞர் டி.வி. 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ சீரியல்ல... ஜாலியான கேரக்டர்; சன் டி.வி. 'சொந்தபந்தம்’ சீரியல்ல ரொம்ப பொறுப்பான கேரக்டர்னு... மாத்தி மாத்தி கலக்கிட்டிருக்காங்க ஆஷ்ரிதா.


அம்மணிகிட்ட பேச்சுக் கொடுத்தா... ''ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல!''னுதான் சொல்லணும்.


''நிஜம்தான் ரீட்டா... ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவாச்சும் நான் சைலன்ட்டா இருந்தா போதும்... 'என்னம்மா, உடம்பு ஏதும் சரியில் லையா?'னு ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பிச்சுடு வாங்க. அந்த அளவுக்கு துறுதுறு பொண்ணு. சின்ன வயசுல இருந்தே நான் ஃபீல்டுக்கு வந்த வங்கறதால, செட்ல உள்ளவங்களுக்கு நான் எப்பவுமே செல்லம்'' என்று சொல்லும் ஆஷ்ரிதா, மூணு வயசுல சன் டி.வி. 'அப்பா அம்மா’ சீரியலில் நாகேஷ் சாருக்கு பேத்தியா நடிச்சதுதான் ஆரம்பம். பிறகு... 'அண்ணாமலை’, 'கீதாஞ்சலி’, 'சலனம்’, 'கனாகாணும் காலங்கள்’, 'அனுபல்லவி’னு தொடர்ந்து ஓடிட்டே இருக்காங்க.


''எங்க அப்பா தாஸ், டெலி மீடியால புரொடக்ஷன் மேனேஜரா இருந்ததால, சின்ன வயசுலயே இதுக்குள்ள வந்துட்டேன். அதனால் நான் ஜாலியா இருந்தாலும்.. 'ஷாட் ரெடி’னு சொன்னதும் நடிப்புல வெளுத்துக் கட்டிடுவேன். ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முன்ன திடீர்னு அப்பா தவறினதுதான் கொடுமை. ஆனாலும், அவரோட ஃப்ரெண்ட்ஸ் இன்னிக்கு வரை ஃபீல்டுல எனக்கு ரொம்பவே உதவியா இருக்காங்க'' என சென்டிமென்ட்டாக பேசிட்டிருந்த ஆஷ்ரிதாவை ஜாலியாக்க...


''ஆமா, உங்க குடும்பமே கலைக்குடும்பமாமே?'' கேள்வியை எடுத்துவிட்டேன்.


ரொம்ப உற்சாகமாயிட்ட பொண்ணு, ''ஆமா ரீட்டா... இதை எப்படி கண்டுபிடிச்சே? எங்கம்மா புஷ்பாவும் ஆர்ட்டிஸ்ட்தான். என்னோட சித்தி தீபா, சீரியல் ஆக்டர் நேத்ரன் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு பேருமே நடிக்கறாங்க. இன்னொரு சித்தி சப்னாவும் 'தேன்நிலவு’ சீரியல்ல நடிச்சுட்டிருக்காங்க. அவங்க பையன்தான் விஜய் டி.வி. '7- சி’ சீரியல்ல கலக்கற கண்ணன். தீபா சித்தியோட பொண்ணு அபிநயா, விஜய் டி.வி. 'ஜோடி நம்பர்-1’ , 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ல டான்ஸ் ஆடி இருக்கா. அடுத்ததா எங்க குடும்பத்துல இருந்து இன்னொரு ஆளும் ரெடியாயிட்டு இருக்கு. சீக்கிரமே உன்கிட்ட சொல்றேன்''னு சொன்ன ஆஷ்ரிதாகிட்ட...


''வெள்ளித்திரை?''னு கேட்டேன்.


''ஆல்ரெடி வந்தாச்சு’'னு படக்குனு பதில் வரவே... ''சொல்லவே இல்ல''னு நான் 'ஷாக்' ஆனேன்.


''நம்பு ரீட்டா... நம்பு. 'திருமணம் என்னும் நிக்காஹ்’ அப்படிங்கற படத்துக்காக ஜெய்க்கு அத்தை பொண்ணாவும், 'தெகிடி’ படத்தில் ஜனனி ஐயரோட ஃப்ரெண்டாவும் நடிச்சுட்டிருக்கேன்'' என கலகலத்தவருக்கு.... வீட்டுல வெச்சுருக்கற செல்லப் பேரு 'கிங்கிணி’யாம்!


அம்மணி பொறந்த சமயத்துல மலையாள ஹிட் சாங்... 'கிங்கிணி'. இதுதான் பேருக்கு பின்னணி!


''இந்த ஷபானா பொண்ணு செம்ம டெடிகேடட்பா''னு யூனிட்ல ஒரே பேச்சா இருக்காம்.


''நிஜமாவா சங்கதி?''னு... சன் டி.வி. 'தேவதை' சீரியலில் நடிக்கும் ஷபானா பர்வின்கிட்ட கேட்டேன்.


''ஓ, அதுவா... பாட்டில் பாட்டிலா கோக்கை என் மேல கடகடனு ஊத்தி, அப்படியே ஷூட் பண்ணினதுதான் 'தேவதை' சீரியல்ல என்னோட முதல் ஷாட். கோக் பாட்டில்களை உடைச்சு ஊத்தினதும் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். ஆனாலும் அசராம ஆக்ட் கொடுத்துட்டிருந்தேன். அதுக்குப் பிறகும், தொடர்ந்து பல எபிசோட்கள்ல குங்குமத்தை மேல கொட்டுறது, சேற்றை அள்ளி மேல அடிக்கறது, சோப்பு தண்ணியை ஊத்துறது... எல்லாத்தையும் தாங்கிட்டே இருக்கேன். அதான், 'இவ ரொம்ப நல்லவப்பா’னு... இப்படி பட்டம் கொடுத்துட்டாங்க...'’னு சொன்ன ஷபானாவை...


''ஏம்மா... ஏன் இப்படி?''னு அதிர்ச்சியா பார்த்தேன்.


http://cdnw.vikatan.com/aval/2013/10/mgqwyz/images/p90a.jpg
''எனக்கு நடிப்புனா ரொம்ப இஷ்டம். அதனாலதான் எதைக் கொட்டினாலும் தாங்கிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன் (பாறாங்கல்லைக் கொட்டினா கூடவா?!). சன் மியூசிக், கலைஞர் டி.வி, இசையருவினு காம்ப்பயர் பண்ணிக்கிட்டே நடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன். ஆனா, இதெல்லாம் எனக்கு பெரிசா தெரியல. கதைல நான் உருகி உருகி லவ் பண்றனே அதான் காமெடியா இருக்கு. ஏன்னா, நெஜத்துல எனக்கு 'லவ்’வுனா சுத்தமா புடிக்காது. கல்யாணமே பண்ணிக்காம, அன்னை தெரசா மாதிரி சர்வீஸ் பண்ணணும்ங்கிறதுதான் என் ஆசை''னு சொன்னாங்க.


அன்னை ஷபானா பர்வீன்... வருக வருக!

http://cdnw.vikatan.com/aval/2013/10/mgqwyz/images/p90b.jpg



நன்றி: விகடன்

aanaa
2nd October 2014, 07:11 PM
எப்படி காதல் வரும்?



சீரியல் நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவிகிருபா. தமிழின் பெரும்பாலான முன்னணி தொலைக்காட்சிகளில் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவருடைய தம்பி கோகுலும் சீரியல் நடிகர்தான். ஒரே குடும்பத்தில் இருந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இருவரையும் தி.நகர் நடேசன் பூங்காவில் சந்தித்தோம்.


""பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிங்காரச் சென்னைதான். பி.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேயே நடிகையாகணும்கிற ஆசை வந்துவிட்டது. ஆனால், ஏன் வந்தது, எப்படி வந்ததுனு தெரியவில்லை. 8ஆம் வகுப்பு படிக்கும்போதே ஜெயா தொலைக்காட்சியில் "ஜோடி மாற்றம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானேன். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நன்றாகத் தமிழ் பேசவேண்டும் என்று சொன்னார். பிறகு, பேசிப்பேசி, நாளிதழ்கள் படித்து நன்றாகத் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். நான் நடிகையானதற்கு காரணம் என் தம்பிதான்'' என்று கோகுலைக் காண்பித்த தேவிகிருபா, அதற்கான காரணத்தையும் சொன்னார்.


"" "என் பெயர் ரங்கநாயகி' என்ற சீரியலில் குட்டி சேத்தனாக இவன் நடித்தான். ஒருநாள் இவனுடன் ஷூட்டிங் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் கிரேஸி மோகன் சீரியலைப் பற்றி சொல்லி, "நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது?' என்றார். அந்தச் சமயத்தில் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. இருந்தாலும், ஆடிஷனில் கலந்துகொண்டேன்.
அவர்கள் சொல்கிற டயலாக்கை திருப்பிச் சொன்னால் போதும் என்றார்கள். நானும் அப்படியே செய்தேன். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது'' என்று தேவிகிருபா சொல்ல, ""இந்த வாழ்க்கை நான் போட்ட பிச்சை...'' என்று சொல்லி சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார் கோகுல்.


"" "இணைக் கோடுகள்', "ஆனந்தம்', "தீர்க்க சுமங்கலி', "கஸ்தூரி' ஆகிய சீரியல்களில் நடித்தேன். பிறகு படங்களில் நடிக்கலாம் என்று மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு உடம்பைக் குறைத்தேன். "பயமறியான்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தேன். பிறகு, மறுபடியும் சீரியல். அதுவும் இவனால்தான்'' என்ற தேவிகிருபா, தொடர்ந்தார்.

""ஒருவரைப் பார்ப்பதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இவன் சென்றிருந்தபோது, நடிகர் சஞ்சீவைப் பார்த்திருக்கிறான்.
"தென்றல்' சீரியலில் உனக்கு ஒரு ரோல் இருக்கு, மேனேஜரைப் போய் பாரு என்றிருக்கிறார் அவர். தற்போது ஆடம்ஸ் நடித்துக் கொண்டிருக்கும் பாத்திரம் அது.

அங்கு சென்றால், "நீ ரொம்ப சின்னப் பையனா இருக்க. வேற ரோல் இருந்தா சொல்றேன்' என்றார் இயக்குநர் குமரன்.
அப்போது நானும் இவன்கூட போயிருந்தேன். குமரன்கூட ஏற்கெனவே சில நாட்கள் "கஸ்தூரி' சீரியல்ல வேலை பார்த்திருந்தேன்.
அதனால் "தென்றல்' சீரியலில் புஜ்ஜிமா ரோல் கிடைத்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நான் அந்த சீரியலில் வரவில்லை. இருந்தாலும், மக்களுக்கு இன்னும் புஜ்ஜிம்மாவை ஞாபகம் இருக்கிறது.

"புகுந்த வீடு', "மாமா மாப்ளே', "மை நேம் இஸ் மங்கம்மா', "மாயா', "பிள்ளைநிலா' என சீரியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறேன்'' என்று தேவிகிருபா சொல்ல, ""ஒரு பக்கத்துக்கு நீயே பேசிக்கிட்டிருக்காத.
எனக்கும் கொஞ்சம் இடம்கொடு'' என வம்படியாக அக்காவை ஆஃப் பண்ணிவிட்டு ஆரம்பித்தார் கோகுல்.
""அக்காவால்தான் எனக்கு நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவங்க ஆடிஷனுக்கு போனபோது, இந்தப் பையன் நல்லா இருக்கானே என்று "என் பெயர் ரங்கநாயகி' சீரியலில் ஜூனியர் சேத்தனாக நடிக்க வைத்தனர். தற்போது முதன்முதலில் என்னை அறிமுகப்படுத்திய ஜே.கே.வின் தயாரிப்பில் நீராவி பாண்டியன் இயக்கிவரும் "தேவதை' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 350 எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கும் என நினைக்கிறேன். அதில் பெருமையாக சொல்லிக்கக் கூடிய விஷயம், 330 எபிசோடுகளில் நான் இருப்பேன்.'' "மறுபடியும் சினிமாவில் நடிப்பீர்களா?' என்று தேவிகிருபாவிடம் கேட்டோம்.

""தற்போது "இலக்கணமில்லா காதல்' என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஜெய் ஆகாஷுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருக்கிறேன்'' என்று தேவிகிருபா சொல்ல, கோகுல், தங்களுக்குள் இருக்கும் சிக்கலையும் விளக்கினார்.


""எப்போது வெளியில் சென்றாலும் நான், அக்கா, அம்மா மூவரும் சேர்ந்துதான் போவோம். சில சமயங்களில், அம்மா இல்லாமல் நாங்கள் இருவரும் மட்டும் வெளியில் செல்லும்போது, காதலர்கள் என்று தவறாக நினைத்துவிடுகின்றனர். பையனும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்றால், காதலர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எங்களைப் போல அக்கா - தம்பியாகவும் இருக்கலாம்.''

"உங்களுக்கு வந்த காதல் மனுக்களைப் பற்றிச் சொல்லுங்கள்...' என்று தேவிகிருபாவிடம் கேட்டோம்.

""பல வருடங்களாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை காதல் மனுக்கள் வரவில்லை. நடிக்க வேண்டும், செட்டில் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பதால், என்னை யார் பார்க்கிறார்கள் என்று நான் கவனிப்பதே இல்லை. ஆனால், கண்டிப்பாக காதல் கல்யாணம்தான். ஆனால், காதல் எப்படி வரும்னுதான் தெரியலை.''

aanaa
1st November 2014, 05:09 AM
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராதிகா.
சங்கத்திற்காக பல திட்டங்களை அவர் கையில் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:எங்களுக்கென்று சொந்த அலுவலக கட்டிடம் வேண்டும். சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டப்போகிறோம். அதை எந்த வகையில் செய்யலாம் என்று யோசித்து வருகிறோம்.
பிற மொழி சீரியல்கள் இங்கு டப் செய்து ஒளிபரப்புவதால் இங்குள்ள டெக்னீஷியன்களுக்கு வேலையில்லாமல் போகிறது. கேரளா, கன்னடத்தில் டப்பிங் சீரியல்கள் கிடையாது. அதுபோன்ற நிலையை இங்கு கொண்டு வரவேண்டும். இதற்காக சேனல்களுடன் பேசுவோம்.
எங்கள் சங்கம்தான் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்த விஷயத்தில் சினிமா வேறு தொலைக்காட்சி வேறு. பெப்சி ஸ்டிரைக் நடந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஸ்டிரைக் முடிந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அப்படியில்லை அன்றைக்குள்ள எபிசோட்களை கொடுத்தாக வேண்டும். இடைவெளி விட முடியாது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். இதனை பெப்சி அமைப்புடன் பேசி சீர்படுத்துவேன் என்கிறார் ராதிகா.

aanaa
12th January 2015, 06:24 AM
சீரியல்களில் நடிப்பது சினிமாவை விட கடினமானது: எஸ்.பி.பி.சரண்


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பல முகங்கள் உண்டு. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை எனக்கு புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை சீரியலில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு படத் தயாரிப்பில் இறங்கினேன். பல படங்களை தயாரித்தேன். சென்னை 28 தவிர மற்ற எல்லா படங்களும் எனக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்து. ஆரண்ய காண்டம் பட ரிலீசுக்கு பட்ட கஷ்டத்தால் படத் தயாரிப்பையே விட்டு விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.


நான் நடிகன், பாடகன் எந்த மாதிரி வாய்ப்புகள் அமைகிறதோ அதனை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் சீரில்களில் நடிக்கிறேன். என்னை மக்களுக்கு சின்னத்திரை நடிகனாகத்தான் அதிகமாக தெரியும். சீரியல்களில் நடிப்பது சினிமாவில் நடிப்பதை விட கடினமானது. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒரு சீன்தான் எடுப்பார்கள். சீரியலுக்கு பத்து சீன் வரை எடுப்பார்கள். அதிகமாக ரீடேக் போகாமல் மளமளவென நடிக்க வேண்டும். அந்த கடின உழைப்பு பிடித்திருக்கிறது. அதனால் சீரியல்களில் நடிப்பதை ரசித்து செய்கிறேன். என்றார் சரண்



நன்றி: தினமலர்

aanaa
12th January 2015, 06:41 AM
டிவி சீரியல்களில் கசக்கிப் பிழிகிறார்கள்! -டிவி நடிகை துர்கா பேட்டி


டிவி சீரியல்களில் ஒரு நாளைக்கு 10, 12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். சில சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அந்த வகையில் நாஙகளெல்லாம் ஒவ்வொரு நாளும் கசக்கிப்பிழியப்படுகிறோம் என்கிறார் டிவி நடிகை துர்கா


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


பெரும்பாலும் அழுகாச்சி கேரக்டர்களாக நடிப்பது ஏன்?


அழுகாச்சி கேரக்டர்களாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. எனது தோற்றம், முக அமைப்பு எல்லாமே ரொம்ப மென்மையானதாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரியான கேரக்டர்களே தருகிறார்கள். மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை ரப் அண்ட் டப்பாக நடிக்கும் வேடங்களில் நடிப்பவர்களை திட்டுவார்கள். ஆனால் என்னைப்போன்று சாப்ட்டான வேடங்களில் நடிக்கும் நடிகைகளை தங்களில் ஒருத்தியாக கருதுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சீரியல் பார்க்கும் பெண்கள் எல்லாருமே என் பக்கம்தான் இருக்கிறார்கள்.


இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து ஒரேமாதிரியான நடிப்பது போரடிக்கவில்லையா?


சாப்ட்டான வேடம் என்றாலும் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்களில்தான் நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்படி மாறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய வேடங்களில் நடிப்பதால் எனக்கு ஒவ்வொரு சீரியல்களிலுமே ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. நேயர்களும் எனது நடிப்பை வெகுவாக ரசிக்கிறார்கள். ஆனபோதும், இப்போது நான் நடித்து வரும் சொந்தபந்தம் தொடரில் நான் நடித்து வரும் செளந்தர்யா என்ற கேரக்டர் இதுவரை மென்மையானதாக இருந்தபோதும், இனிமேல் வில்லியாக மாறுகிறது.


அப்படி வில்லியாக மாறும்போது எனக்கு தீங்கு விளைவித்தவர்களை நான் பழிவாங்குவதை நேயர்கள் வரவேற்று கைதட்டுவார்கள். காரணம் அந்த அளவுக்கு நான் இதுவரை கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அதனால் இனி வரும் எபிசோடுகளில் எனது கையே ஓங்கியிருக்கும்.


உங்களது மென்மையான முகம் வில்லி அவதாரத்துக்கு பொருந்துமா?


பூ ஒன்று புயலானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாதா? சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் நம்மை மாற்றும். அந்த வகையில், கேரக்டர் நெகடீவாக மாறும்போது அதற்கேற்ற பர்பார்மென்ஸை கொடுத்தால் நமமுடைய கெட்டப்பும் டோட்டலாக மாறி விடும். அந்த மாதிரி ஏற்கனவே சில சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன். அதனால், என்னால் கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாறி நடிக்க முடியும்.


சீரியல் நடிகைகளில் எந்த நடிகையின் நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?


என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன்தான். சீரியல்களை விட சினிமாவில் அவரது நடிப்பை ரொம்ப ரசிப்பேன். குறிப்பாக, ரஜினியுடன் அவர் நடித்திருந்த படையப்பா படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதற்கு முன்பு அவர் நடித்திருந்த படங்களை பார்த்தால், ரம்யாகிருஷ்ணனா இது என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு நடித்திருந்தார்.


மற்றபடி சீரியல்களில் ராதிகா மேடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரது நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கும். இந்தமாதிரி சீனியர்களிடமிருந்தும் நான் நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


சீரியல்கள் பார்க்க நேரம் ஒதுக்குவதுண்டா?


ஒரே நேரத்தில் முந்தானை முடிச்சு, சொந்த பந்தம் என இரண்டு மெகா தொடர்களில் நடிப்பதால் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. அதனால் நான் நடித்த சீரியல்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், எனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து தங்களது கருத்தை சொல்வார்கள். அதேபோல் என் அம்மா நிறைய சீரியல்களைப்பார்ப்பதால், ஒவ்வொரு தொடர்களைப்பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.


மேலும், சில சமயங்களில் நேரம் கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி இந்தி சீரியல்களையும் பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் தமிழுக்கு டப்பாகியுள்ள சில இந்தி சீரியல்கள் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.


அப்படியென்றால் இந்தி ரீமேக் தொடர்களில் நடிப்பீர்களா?


ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லா விதமான கதைகளிலும் நடிக்க ஆசை உள்ளது. அதிலும் அவர்களின் கதை, காட்சி அமைப்புகள் நம்மளை விட வித்தியாசமாககூட உள்ளது. முக்கியமாக ஒரே மாதிரியாக இல்லாமல் குடும்ப பிரச்சினை மட்டுமின்றி, கல்லூரி போன்ற ஜாலியான கதைகளிலும் வருகிறது. அதனால், அந்த மாதிரி தொடர்களில் சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம், இந்தி தொடர்களில் சினிமாக்களில் காட்சிகள் வருவது போன்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகள் வைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான காட்சிகளில நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவில் நடிப்பதைகூட நான் தவிர்த்து வருகிறேன்.


சீரியல்களில் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறப்படுகிறதே?


உண்மைதான், ஒரே நாளில் 10,12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். இதனால் காலையில் ஸ்பாட்டுக்கு செல்லும் நாங்கள் மாலை வீடு திரும்பும் வரை துளியும் இடைவேளை இல்லாமல் நடிக்கிறோம். சில சமயங்களில் மதியம் சாப்பிடகூட நேரம் இருக்காது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடுவோம். அந்த வகையில், டிவி சீரியல்களில் நடிப்பவர்களை கசக்கிப்பிழிகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் துர்கா.



நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:29 PM
நான் மூன்று முகம் கொண்ட நடிகன் ! - சொல்கிறார் ராமச்சந்திரன்


சின்னத்திரையில் ஏராளமான தொடர்களில நடித்திருப்பவர் ராமச்சந்திரன். தற்போது மகாபாரதம், கேளடி கண்மணி, சொந்தபந்தம், லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். டிவித்தொடர்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே வில்லன், காமெடியன், கேரக்டர் என எல்லாவிதமான வேடங்களிலும் நான் நடித்து வருகிறேன். எந்த மாதிரி கேரக்டருக்கும் நான் பொருந்தக்கூடிய நடிகனாக இருப்பதால் என்னை நம்பி மாறுபட்ட வேடங்களாக தருகிறார்கள் டைரக்டர்கள். அந்த வகையில், சின்னத்திரை உலகில் நான் மூன்று முகம் கொண்ட நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ராமச்சந்திரன்.


இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, கோலங்கள் தொடரில் தேவயானியின் சித்தப்பாவாக நடித்தேன். வில்லன், காமெடி, கேரக்டர் என மூன்றுவிதமான நடிப்பை அந்த ஒரே கேரக்டரில் வெளிப்படுத்தினேன். அதனால் அப்போதே ராமச்சந்திரன் என்றால் வில்லன், காமெடியன், கேரக்டர் என மூன்றுவிதமான கேரக்டர்களிலும் நடிப்பார் என்றொரு பெயராகி விட்டது. அதனால் இதையே நான் பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மேலும், உறவுகள், அகல்யா, மைநேம் இஸ் மங்கம்மா போன்ற தொடர்களில் முழுக்க முழுக்க காமெடியனாகவும் நடித்து கைதட்டல் பெற்றேன் என்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150617102931000000.jpg
அவரிடத்தில், சின்னத்திரையில் நடிகர்கள் டைட்டில் ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, சான்சே இல்லை என்கிறார். காரணம், டிவித்தொடர்கள் முழுக்க முழுக்க பெண்களை நம்பியே தயாரிக்கப்படுகிறது. ஆண்கள் காலையில் அலுவலகம் சென்றால் இரவு 9 மணிக்கு பிறகுதான் வீட்டிற்கு செல்வார்கள். அதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரே பொழுதுபோக்கு டிவித்தொடர்கள்தான். அதனால் டிவி சீரியலைப்பார்ப்பது பெரும்பாலானோர் பெண்களே என்பதால் பெண்களை மையப்படுத்திதான் சீரியல்கள் தயாரிக்கப்பட்டு ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளது.


திருமதி செல்வம் என்ற தொடரில், ஆண்களை நல்லவர்கள் போன்றும் ஹீரோயிசம் கொண்டவராக காண்பிப்பது போல் கொண்டு வந்தாலும், அந்த சீரியலும் பின்னர் பெண்ணில்தான் முடிந்தது. ஆக, பெண்களே டிவித்தொடர்களுக்கு ஆடியன்ஸ் என்பதால், இந்த நிலை மாற வாய்ப்பே இல்லை.


மேலும் என்னைப்பொறுத்தவரை, யாருக்கு கதையில் முக்கியத்துவம் உள்ளது என்பதையெல்லாம் பார்க்கமாட்டேன். என்னை நம்பி டைரக்டர்கள் தரும் வேடத்தை நூறு சதவிகிதம் திருப்தியாக நடித்துக்கொடுப்பேன். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பேன். இப்படி எந்த வேடமாக இருந்தாலும் நான் முழுமனதோடு நடிப்பதால்தான் எல்லாவிதமான கேரக்டர்களுக்கும் நான் செட்டாகி விடுகிறேன்.


சினிமாவில்கூட, கண்களின் வார்த்தைகள், பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் அந்த கேரக்டர் பெருசாக ரீச்சாகவில்லை. அதேசயம், டிவியைப்போன்றுதான் சினிமாவிலும் நான் இந்த மாதிரியாகத்தான் நடிப்பேன் என்று சொல்வதில்லை. எந்த மாதிரியான வேடத்தை என்னை நம்பி கொடுத்தாலும் நடிக்க தயாராகயிருக்கிறேன்.


மேலும், டிவியில் இருந்து சினிமாவுக்கு சென்ற சந்தானம், சிவகார்த்திகேயன் என பலர் சமீபகாலமாக ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்போன்றோருக்கு சினிமாவிலும் நம்மால் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. அதோடு சினிமாவில் ஒருநாளைக்கு ரெண்டு சீன் எடுத்தால் டிவியில் 6 சீன்கள் வரை எடுப்பார்கள். அதோடு டயலாக்கும் அதிகமாக இருக்கும். அந்த வகையில், சின்னத்திரை நடிகர் நடிகைகள் நல்ல திறமையானவர்களும் கூட. அதனால் இங்கிருப்பவர்களால் சினிமாவிலும் பெரிய அளவில் சாதிக்க முடியும். முக்கியமாக, எதிர்காலத்தில் சின்னத்திரை கலைஞர்களும் சினிமாவுக்கு அவசியம் தேவை என்கிற நிலையும் ஏற்படும் என்கிறார் ராமச்சந்திரன்.



நன்றி: தினமலர்

aanaa
30th July 2015, 11:15 PM
மீண்டும் சினிமாவில் நடிக்க சுதா சந்திரன் ஆர்வம்


மயூரி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சுதா சந்திரன். பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சின்னத்தரை சீரியல்களில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு சீரியலில் அவர் நடிக்கும் சித்ரா என்ற மாமியார் கேரக்டர் பெண்களிடையே மிகவும் பிரபலம். அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.


"தெய்வம் தந்த வீடு சித்ரா கேரக்டர் எனது நிஜ கேரக்டர் மாதிரி, அதனாலதான் எளிதாக நடிக்க முடிகிறது. நான் எந்த சீரியலில் நடித்தாலும் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். தெய்வம் தந்த வீடு தொடரில் மாமியார் கேரக்டராக இருந்தாலும் பாசிட்டிவான கேரக்டர். மற்ற தொடர்களில் மாமியார்களை வில்லியாக காட்டும்போது எனது கேரக்டரில் மருமகளுக்கு இன்னொரு தாயாக உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர். அதனால்தான் சித்ரா கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டராக இருக்கிறது.


சினிமாவில் இருந்துதான் சின்னத்திரைக்கு வந்தேன். என் காலகட்டத்து நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. எனக்கேற்ற நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்" என்கிறார் சுதா சந்திரன்.





நன்றி: தினமலர்

aanaa
8th August 2015, 12:46 AM
சீரியல் வில்லி நிஷாவின் அடுத்த ஆசை!


வைராக்கியம், அழகி, கஸ்தூரி, தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் மெயின் வில்லியாக நடித்தவர் நிஷா. இதில் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வரும் ப்ரியா கேரக்டர் டிவி நேயர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கிக்கொடுத்திருக்கிறதாம்.


இப்படி டிவி நேயர்கள் உங்களை திட்டுவது மனதை பாதிக்கிறதா? என்று நிஷாவைக்கேட்டால்,


ஆரம்பத்தில் இப்படி திட்டுகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அது பழகி விட்டது. தொடர்ந்து நான் வில்லியாகவே நடிப்பதால் ஷாப்பிங் போகும் இடங்களில் என்னை பார்க்கும் பெண்கள் சகஜமாக பேச மாட்டார்கள். அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொள்வார்கள். பின்னர் தயக்கத்துடன்தான் பேசுவார்கள்.


ஆனால் நான் அவர்களிடம் சீரியலில் பேசுவது போன்று ரப் அண்ட் டப்பாக பேசாமல் மென்மையாக பேசுவதைப்பார்த்து அவர்களும் என்னிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனபோதும், எதற்காக சீரியல்களில் அவ்வளவு மோசமானவராக நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ஒரு கதை என்று வருகிறபோது வில்லி கேரக்டர் அப்படி இருந்தால்தான் கதையே நகரும். டைரக்டர்கள் எப்படி அதில் நடிக்க சொல்கிறார்களோ அப்படித்தான் நாங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்வேன். அதை சிலர் புரிந்து கொள்வார்கள்.


மேலும், சீரியலில் பேசப்படும் நடிகையாகி விட்ட எனக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. என்று கூறும் நிஷா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து சீரியல்களைப் போன்று சினிமாவிலும் என்னை வெளிச்சம் போட்டு காட்டும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அதோடு, என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடீவ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனக்கு ஸ்கோர் பண்ணுவதற்கு எந்த கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறதோ அதில் நடிப்பேன் என்கிறார் நிஷா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150801081756000000.jpg




நன்றி: தினமலர்

aanaa
5th November 2015, 12:56 AM
பேய் வேடத்தை என்சாய் பண்ணி நடித்தேன்! - சீரியல் நடிகை ஷாமிலி பேட்டி


சின்னத்திரைகளில் என்ட்ரியான 3 வருடங்களில் 20 சீரியல்களுக்கு மேல் நடித்து விட்டவர் ஷாமிலி. பாசிட்டீவ், நெகடீவ் என சீரியலுக்கு சீரியல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் ஷாமிலி, மாதம் 30 நாட்களும் நான் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


தென்றல் சீரியலில் சுஜிங்கிற கேரக்டர்ல வில்லியாதான் நான் முதல்ல சீரியலுக்கு அறிமுகமானேன். அந்த சீரியல் பெரிய அளவில் ரீச் ஆனதால், ஒரே சீரியலில் பிரபலமாகி விட்டேன். எங்க வீட்ல யாரும் சீரியல் பார்க்க மாட்டாங்க. அதனால் எனக்கு முதல்ல அந்த வில்லி வேடத்தோட ரெஸ்பான்ஸ் தெரியல. ஆனா நான் ரோட்டுல நடந்து போகும்போது சுஜி போறா பாருங்க என்று சிலர் பெண்கள் கூறினர். இன்னும் சிலர் என்னை திட்டவும் செய்தனர். இதனால் நான் பயந்து விட்டேன். அதையடுத்து டைரக்டரிடம் என்னை பார்க்கிற லேடீஸ்ங்க திட்டுறாங்க சார் என்றேன். அதற்கு, இப்பதான் முதன்முதலா வில்லியாக நடிச்சிருக்கீங்க. போகப்போக இது பழகிடும் என்றார். அதுக்கு அப்புறம் உதிரிப்பூக்கள் அதுவும் செகண்ட் லீடுதான். ரொம்ப நல்ல வேடம். மேகா என்ற அந்த கேரக்டர் சிறந்த நடிகைக்கான விருதினை எனக்கு வாங்கித்தந்தது.


அப்புறம் பைரவியில் நடிச்சேன். இப்ப பாசமலர், மாகாபாரதம், ரோமாபுரி பாண்டியன், 63 நாயன்மார்கள். வள்ளி, பிரியசகின்னு நிறைய சீரியல் பண்றேன். பிரியசகியில செகண்ட் லீடு கேரக்டர். ஹீரோயினிக்கு ப்ரண்டா வந்து அப்புறம் அவருக்கு எதிர்ப்பா மாறும் நெகடீவ் வேடம். ஒரு பாசிட்டீவா இருந்து நெகடீவா ஹீரோயினோட லவ்வருக்காக மாறும் இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


அவரிடத்தில், இதுவரை நடித்ததில் அதிக என்சாய் பண்ணி நடித்த வேடம் எது? என்று கேட்டபோது,


பாசமலர் சீரியலில் நடித்த பேய் வேடத்தில்தான் என்சாய் பண்ணி நடித்தேன். கதைப்படி பேய் என் உடம்புக்குள் போயிடும். எனக்குன்னு ஒரு கேரக்டர் உருவாக்கி என்னைச்சுற்றியை கதை செல்வது போல் இருந்த அந்த கேரக்டரை அனுபவித்து நடித்தேன். மேலும் எப்போதுமே நான் டைரக்டர்கள் சொல்வதை மட்டுமே செய்யக்கூடிய மிஷின் மாதிரி இல்லாமல் நானும் அந்த கேரக்டருக்கு தேவையான கொஞ்சம் விசயங்களை சேர்த்துதான் நடிப்பேன். அந்த வகையில் அந்தந்த கதாபாத்திரங்களாக என்னை முழுமையாக மாற்றிக்கொள்வேன்.


பேய் இருக்கிறதா? எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?


என்னைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒன்று இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும். காரணம் பாசிட்டீவ் ஒன்று இருந்தால் நெகடீவ் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். மேலும், எனக்கு பேய்க்கு பெரிதாக பயம் கிடையாது. ஆனால் ஒருமுறை மகாபாரதம் சீரியல் படப்பிடிப்புக்காக கார் ஓட்டிக்கொண்டு பெங்களூர் ஹைவேயில போய்க்கிட்டிருக்கும்போது ஒரு ஆள் நிற்பதுபோல் இருந்தது. ஆனால் பக்கத்துல போனபோது அதை காணவில்லை. நான் பயந்துட்டு காரை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் சாமியை கும்பிட்டு விட்டு காரை வேகமாக எடுத்து சென்றேன். அதுக்கு அப்புறம் நான் தனியாக லாங் டிரைவிங் போறதில்லை. அந்த பேய நெனச்சு இப்ப வரை பயந்துக்கிட்டிருக்கேன்.


சினிமா வாய்ப்புகள் வருகிறதா?


ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தேன். ஜூனியர் பாலையா பேத்தியாக நடித்துள்ளேன். எனக்கு ஒரு பாடல்கூட உள்ளது. அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் படத்திலும் நடித்தேன். அதுவும் ஒரு நல்ல கேரக்டர். இந்த ரெண்டு படத்திலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தால் அப்புறம் சினிமாவை தொடருவேன். பெருசா பேர் கிடைக்கலேன்னா சீரியலே பெட்டருன்னு ஒதுங்கிடுவேன்.


மேலும், சினிமாவில் ஒர்க் கம்மி. ஆனால் சீரியலில் காலை 9 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஷீட்டிங் போய்க்கிட்டேயிருக்கும். சினிமாவை விட சீரியலில்தான் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்குது. மேலும் சினிமா ஒரு பத்துல நாள்ல முடிஞ்சிடும். ஆனா சீரியல் மாசம் 30 நாளும் ஒர்க் இருந்துக்கிட்டேயிருக்கும். அதோடு, டிவி நடிகைங்க சினிமாவில் பெருசாக வந்த மாதிரி தெரியல. அதனால் எனக்கு சினிமா ஆசை பெருசாக இல்லை.


மேலும், நான் சிட்டியில் மாடர்ன் கல்ச்சரில் வளர்ந்து பொண்ணு. ஆனா எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும். நான் மெயினா பண்ணின ரெண்டு சீரியல்களிலும் பாவாடை தாவணி அணிந்துதான் நடித்தேன். என்னை நானே ரொம்ப ரசித்தேன். நான் எந்த நடிகர் நடிகைக்கும் ரசிகை கிடையாது.


அவர்கள் நடிக்கும் கேரக்டர் பிடித்திருந்தால் ரசிப்பேன். எனக்கு பிடித்த நடிகருன்னு சொல்லனும்னா தனுஷ்தான். அவருக்கு கொடுத்த ரோலை அழகாக பண்ணுவார்.


சினிமாவில் பாடல் காட்சிகளில் கிளாமர் பண்ணுவீங்களா?


கண்டிப்பாக பண்ண மாட்டேன். எனக்கு சினிமாவில் பிடிக்காத விசயமே கிளாமர்தான். சீரியலில் தொடாமல் நடிக்க வைப்பார்கள். டீசன்டா இருக்கும். அதனால்தான் நான் சீரியலை செலக்ட் பண்ணினேன். அதனால் சீரியல் மாதிரிடீசன்டான வேடங்கள் சினிமாவில் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். ஹீரோக்களை தொட்டு நடிக்கும் வேடங்களை தவிர்த்து விடுவேன். அதேசமயம், சீரியலில் யாராவது கொஞ்சம் கிளாமராக டிரஸ் பண்ணியிருந்தாலும் கமபெனியில் இருந்து போன் வந்து விடும். அவங்க என்ன அப்படி டிரஸ் பண்ணிருக்காங்க என்பார்கள். அந்த அளவுக்கு சீரியல்களில் குடும்பப் பாங்காக மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. அதனால் சீரியல்களில் டீசன்டான நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.


மேலும், நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு 3 வருடமாச்சு அதற்குள் 20 சீரியல்களில் நடித்து விட்டேன். இங்கே ரொம்ப டீசன்டா பிகேவ் பண்றாங்க. பாதுகாப்பா இருக்கு. அதனால் சினிமாவைவிட நான் சீரியல்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் ஷாம்லி.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151031110236000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
26th November 2015, 09:10 PM
அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்! - நடிகை பாலாம்பிகா பேட்டி


நாதஸ்வரம், பிரியமானவள், அக்னி பறவை, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை பாலாம்பிகா. பெரும்பாலும் அம்மா வேடங்களாகவே நடித்து வரும் அவர், அம்மா வேடங்களே எனக்கு திருப்தியாக உள்ளதால், அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன் என்கிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது.
1991ல் பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நான் சினிமாவில் அறிமுகமானேன். முதல் படத்தில் தங்கையாக அறிமுகமானதால் அதன்பிறகு எனக்கு தங்கை வேடங்களாகவே வந்தன. நடிகனில் குஷ்புவுக்கு தங்கை, பாட்டாளி மகன் படத்தில் அர்ஜூன், திருமதி பழனிச்சாமியில் சத்யராஜ் இப்படி பல முன்னணி ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து விட்டு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் ஹீரோயின் ஆனேன். அதையடுத்து என் ஆசை தங்கச்சி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பின்னர் 2001ல் திருமணமாகி விட்டது. அதனால் 12 வருடங்களாக நடிப்பை விட்டு விலகியிருந்தேன்.


இந்நிலையில், 2013ல் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். திருமுருகனின் நாதஸ்வரம் தொடரில்தான் ரீ-என்ட்ரி ஆனேன். அதன்பிறகு பிரியமானவள் உள்பட பல தொடர்களில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. சீரியல்களில் எனக்கு மகளாக நடிக்கும் பொண்ணுங்களே என்னை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். இது பெரிய சந்தோசமாக உள்ளது. இதுதவிர அக்கா, அண்ணி வேடங்கள் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் சீரியல்களில் அக்கா அண்ணி கேரக்டர்கள் ரொம்ப கம்மி. அதேசமயம் அம்மா கேரக்டர் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இந்த வேடங்களுக்கு சீரியல்களில் அதிக முக்கியத்துவமும் உள்ளது. அதனால் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன்.


சீரியல்களில் எந்த அளவுக்கு ரீச் கிடைக்கிறது? என்று அவரைக்கேட்டால்,


நான் நாதஸ்வரம் தொடரில் ஒரு வில்லியாக நடித்தேன். கேங் லீடர் போன்ற ஒரு வேடம் கொடுத்தார் திருமுருகன். நான் ஆளை கடத்துவேன். ஏய் தூக்குடா அவளை என்று அதிரடி வசனம் பேசுவேன். நான் வில்லின்னா என்னாலே நம்ப முடியல. ஆனா என்னையும் வில்லியாக நடிக்க வைத்தார் டைரக்டர். இதே மாதிரி வேறு சில தொடர்களிலும் நெகடீவ் வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், சினிமாவை விட சின்னத்திரைதான் எனக்கு திருப்தி கொடுத்துள்ளது.


நான் சினிமாவில் நடிக்கிற காலத்தில் ஒரு படத்தில் நடித்தாலே ரீச். ஆனால் இப்போது அப்படியல்ல. 15 படங்களில் நடித்தால்தான் வெளியில் தெரிவோம். அதேசமயம், ஒரு மெகா சீரியலில் நடித்தாலே பெரிய ரீச் இப்போது கிடைத்து விடுகிறது. சீரியல்களில் நடிக்கிற எனது பெயர் எந்த நேயர்களுக்கும் தெரிவதில்லை. ஆனால் பிரியமானவள் கதாநாயகி அவந்திகாவின் பெயரை சொல்லி அவந்திகா அம்மா போறாங்க பாரு என்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல் உடனே மக்கள் மனதில் பதிந்து விடுகிறது.


சீரியல் நடிகைகளெல்லாம் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே. நீங்கள் எப்படி?
எனக்கு இப்போது சினிமாவில் நடிக்கிற ஆசை உள்ளது. அதனால் சில படங்களின் ஆடிசன்களில் கலந்து கொள்கிறேன். பாலாம்பிகா என்ற நடிகையை முன்பு தெரியும். ஆனால் இப்போது எனது உருவம் உடல்கட்டு யாருக்கும் தெரியாது என்பதால் சில கம்பெனிகளுக்கு நானே செல்கிறேன். சமீபத்தில் வெளியான குபேர ராசி படத்தைத் தொடர்ந்து ஆறாது சினம், ஒரு கனவு போல, மூன்று ரசிகர்கள், பாதை என 6 படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் அம்மா வேடங்களில்தான் நடிக்கிறேன். அந்த வகையில், சீரியல்களைப்போலவே சினிமாவிலும் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்.


செண்டிமென்ட் நடிப்பில் என்னென்ன வித்தியாசம் காட்டி வருகிறீர்கள்?

அம்மா மகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்கிறபோது பிரச்னைகளுக்கேற்ப நடிப்பு மாறுபடும். மற்றபடி கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஹேர்ஸ்டைல், காஸ்டியூம் என மாற்றிக்கொள்வேன். குறிப்பாக, வசதி, ஏழ்மை, நடுத்தரம் என அதற்கேற்பவும் என்னை மாற்றிக்கொள்வேன். அப்படி நான் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கும்போது பர்பாமென்சும் மாறுபடும். அந்த வகையில், ஒவ்வொரு சீரியல்களிலும் எனது நடிப்பை கதைகளின் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டே வருகிறேன் என்று கூறும் பாலாம்பிகா, இப்போது சீரியல்களில் மாதம் 15 நாட்கள் பிசியாக இருக்கிறேன். அது தவிர, ஏதேனும் கடை திறப்பு விழா, கேம்ஸ் ஷோ, சமையல் ஷோ என வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். ஆக, சினிமா-சின்னத்திரை என்று மீண்டும் கலைத்துறையில் பிசியாகி இருப்பது சந்தோசமாக உள்ளது. இது தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151126105826000000.jpg




நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:27 PM
நேயர்களை சிரிக்க, சிந்திக்க வைப்பதே எனது நோக்கம்! -ஜனனி நிவிதா


ராஜ் டிவியில் லைவ் ஷோ, செலிபிரிட்டி ஷோ, பிரபலங்களின் பிறந்த நாள் ஷோ என பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் ஜனனி நிவிதா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். எதிர்காலத்தில் நேயர்களை சிரிக்க, சிந்திக்க வைக்கக்கூடிய நிகழ்ச்சிகளை இயக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாம்.


இதுபற்றி தினமலர் இணையதளத்திற்கு ஜனனி நிவிதா அளித்த பேட்டி..


விஸ்காம் படித்து விட்டு டைரக்சன் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உடனடியாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ராஜ் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக என்ட்ரி ஆனேன். அதையடுத்து விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க இப்போது உதவி இயக்குனராக ஒர்க் பண்ணி வருகிறேன். மேலும், 3 வருடத்துக்கு முன்பு நிஜத்தில் ஒரு கனவு, என்ன இப்படி நடக்குது போன்ற குறும் படங்களிலும் நான் நடித்திருக்கிறேன்.
மேலும், முதலில் ஆக்ட் பண்ண மட்டுமே ஆசை இருந்தது. ஆனால் இப்போது டைரக்சன் பண்ண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக காமெடி ஷோ பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெண்ணாக இருப்பதால் பெண்களை மனதில் கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கான் செப்ட்டை யோசித்து நிகழ்ச்சி டைரக்ட் பண்ணுவேன். இன்னும் ஒரே வருசத்தில் டைரக்டர் ஆகிடுவேன். அதில் எனக்கேற்ற வேடம் இருந்தால் நடிப்பேன்.


உங்களது ரோல் மாடல்?
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி டைரக்டர் தாம்சன்தான் எனது ரோல் மாடல். அவருக்கு ஒர்க்தான் பர்ஸ்ட். அவ்ளோ ரெஸ்பான்சிபிலிட்டி. அதோடு தன்னிடம் இருப்பவர்களையும் வளர்க்கனும் என நினைப்பார். பொறுமையாக சொல்லிக்கொடுப்பார். அவரிடம்தான் டைரக்சன் பற்றி நிறைய கற்றுக்கொண்டி ருக்கிறேன். அதேமாதிரி, நடிகர் உதயராஜ் எனக்கு நிறைய நடிப்பு பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார். நிலாக்காலம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பு திறமையை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்.


எதிர்காலத்தில் சினிமாவில் பிரவேசிக்கும் எண்ணம் உள்ளதா?
சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன். மற்றபடி, சின்னத்திரையில் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை இயக்கி குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடிய விசயங்களையும் எனது நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவேன். ஆனால் அதை அட்வைசாக இல்லாமல் மருந்தில் தேன் கலப்பது போல் கொடுப்பேன் என்கிறார் ஜனனி நிவிதா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160107080413000000.jpg


நன்றி: தினமலர்

aanaa
8th January 2016, 08:39 PM
வைராக்கியம், அழகி, கஸ்தூரி, தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் மெயின் வில்லியாக நடித்தவர் நிஷா. இதில் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வரும் ப்ரியா கேரக்டர் டிவி நேயர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கிக்கொடுத்திருக்கிறதாம்.இப்படி டிவி நேயர்கள் உங்களை திட்டுவது மனதை பாதிக்கிறதா? என்று நிஷாவைக்கேட்டால்,ஆரம்பத்தில் இப்படி திட்டுகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அது பழகி விட்டது. தொடர்ந்து நான் வில்லியாகவே நடிப்பதால் ஷாப்பிங் போகும் இடங்களில் என்னை பார்க்கும் பெண்கள் சகஜமாக பேச மாட்டார்கள். அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொள்வார்கள். பின்னர் தயக்கத்துடன்தான் பேசுவார்கள்.
http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Television-new-161.jpg

ஆனால் நான் அவர்களிடம் சீரியலில் பேசுவது போன்று ரப் அண்ட் டப்பாக பேசாமல் மென்மையாக பேசுவதைப்பார்த்து அவர்களும் என்னிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனபோதும், எதற்காக சீரியல்களில் அவ்வளவு மோசமானவராக நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ஒரு கதை என்று வருகிறபோது வில்லி கேரக்டர் அப்படி இருந்தால்தான் கதையே நகரும். டைரக்டர்கள் எப்படி அதில் நடிக்க சொல்கிறார்களோ அப்படித்தான் நாங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்வேன். அதை சிலர் புரிந்து கொள்வார்கள்.


மேலும், சீரியலில் பேசப்படும் நடிகையாகி விட்ட எனக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. என்று கூறும் நிஷா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து சீரியல்களைப் போன்று சினிமாவிலும் என்னை வெளிச்சம் போட்டு காட்டும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அதோடு, என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடீவ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனக்கு ஸ்கோர் பண்ணுவதற்கு எந்த கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறதோ அதில் நடிப்பேன் என்கிறார் நிஷா.



நன்றி: தினகரன்

aanaa
8th January 2016, 08:45 PM
பாசிட்டீவ் வேடங்களில் நடிக்க வேண்டும்! - சீரியல் நடிகை ஷாமிலி


தென்றல், பிரியசகி என சில சீரியல்களில் வில்லியாக நடித்து வந்த எனக்கு, இப்போது பாசமலர் தொடரில் பாசமான தங்கையாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது. அதனால் தொடர்ந்து நிறைய செண்டிமென்ட் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஷாமிலி.</p><br /><p><b>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
தென்றல் சீரியலில் சுஜி என்ற வில்லியாகதான் நான் என்ட்ரியானேன். நல்ல டிஆர்பியான சீரியல் என்பதால் என்னை அந்த சீரியலே பிரபலப்படுத்தி விட்டது. அந்த சமயத்தில் எங்க வீட்டில் யாருமே சீரியல் பார்க்க மாட்டார்கள். அப்போது அந்த சீரியல் டைரக்டர், உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள் சீரியலைப் பார்த்துவிட்டு என்ன ரிசல்ட் சொல்கிறார்கள்? என்று கேட்டார். ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் எதுவும் சொல்லவில்லை. அதனால் ரெஸ்பான்ஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன்.
ஆனால், அந்த சமயத்தில் ஒருநாள் நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில பெண்கள் சுஜி போறா பாரு என்றார்கள். அதோடு எல்லோரையும் நான் பழிவாங்குவதை சொல்லி திட்டினார்கள். எனக்கு பயமாகி விட்டது. இது என்னடா வம்பா போச்சு என்று இதை டைரக்டரிடம் சொன்னேன். இப்பத்தானே திட்ட ஆரம்பிச்சருக்காங்க. போகப்போக உனக்கு இது பழகிடும் என்றார்.அப்புறம் உதிரிப்பூக்களில் மேகா என்ற கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு பெஸ்ட் பர்பாமர் என்ற விருது வாங்கித்தந்தது. பிரியசகியில் பாசிட்டீவா இருந்து நெகடீவாக மாறும் ரோலில் நடித்தேன். ஹீரோயினியின் லவ்வருக்காக அப்படி மாறுவேன். இப்போது பைரவி, பாசமலர் ஆகிய தொடர்களில் நடிக்கிறேன்
இதில், பாசமலரில் ஒரு அண்ணன் ரெண்டு தங்கச்சி கதை. அதுதான் கான் செப்ட்டே. ரெண்டு தங்கைகளை கல்யாணம் செய்து கொடுக்க ஒரு அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் கதை. ரொம்ப நல்ல சீரியல். இந்த சீரியலில் எனது செண்டிமென்ட் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு, இன்னும் இந்த மாதிரி பாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் ஷாமிலி, என்னதான் வில்லி வேடங்கள் பரபரப்பாக பேசப்பட்டபோதும், பாசத்தை வெளிப்படுத்தும் பாசிட்டீவான வேடங்களில் நடித்து நேயர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார்.



நன்றி: தினமலர்

R.Latha
12th January 2016, 03:34 PM
kealdi kanmani, aboorva raagangal, en iniya thozhi,sabitha engira sababathi endra Naangu seriyalgalil thrpothu bisiyaga nadithu kondirupavar nadigai eagavalli.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/41975/Chinna-thirai-Television-News/TV-Serial-Actress-Yegavalli-interview.htm

R.Latha
12th January 2016, 03:38 PM
bangaluril settil aana Kalyani.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/41926/Chinna-thirai-Television-News/Kalyani-settled-in-Bengaluru.htm

R.Latha
12th January 2016, 03:41 PM
Maina kearaktaril en ammavaithaan pirathibalikkirean . saravanan meenakshi Nandhini interview.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/41905/Chinna-thirai-Television-News/Tv-serial-actress-Nandhini-exclusive-interview.htm

aanaa
12th January 2016, 09:53 PM
சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும்! - டெலிபோன் ராஜ் பேட்டி




நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து விட்டு, சின்னத்திரை சீரியல்கள், சினிமா என பரவலாக நடித்து வருபவர் டெலிபோன் ராஜ். அதிகமாக காமெடி வேடங்களிலேயே நடித்துள்ள எனக்கு சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரசிகர்களை அழ வைக்கக் கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் டெலிபோன் ராஜ்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..


இதுவரை என்னென்ன சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள்?
மெளலி இயக்கிய பிளைட் நம்பர் 172 தான் நான் நடித்த முதல் சீரியல். கமல்ஹாசன் சாரே அப்போது எனது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு செவன்த் சேனல் தயாரித்த மரியாதை ராமன், கள்வனின் காதலி, வாழ்க்கை, பாண்டியன் பரிசு, எத்தனை மனிதர்கள் என பல சீரியல்களில் நடித்தேன். டைரக்டர் வசந்த் தயாரித்த சீனியர் ஜூனியரில் நடித்தேன். வாரம் ஒரு விஐபி இடம்பெற்ற அந்த சீரியலில் ஒரு வாரம் சூர்யாவும் நடித்தார். பின்னர் பாக்யராஜின் ஒரு கதையின் கதை, ஏவிஎம்மின் கீதாஞ்சலி, இப்படிக்குத்தென்றல், நடிகை ரோஜா நடித்த நதி எங்கே போகிறது, ராதிகாவின் செல்லமே, கோவை சரளாவுடன் தம்பதிகள் களப்படம், ஊர்வசி நடித்த ருக்கு ருக்கு ருக்குமணி, மசாலா குடும்பம், நாம் சிரித்தால் தீபாவளி என கிட்டத்தட்ட நூறு சீரியல்களில் நடித்து விட்டேன்.


சமீபத்தில் மடிப்பாக்கம் மாதவன் தொடரில் 25 எபிசோடு நடித்தேன். எமன், அரசியல்வாதி, கந்துவட்டிக்காரன், பெரிய தாதா, லோக்கல் தாதா, தெலுங்கு தாதா என பல கெட்டப்புகளில் நடித்தேன். அடுத்து ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் ஆ மாமியார் ஓ மருமகள் -என்ற சீரியலில் நடிக்கயிருக்கிறேன்.


கேரக்டர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
என்னைப்பொறுத்தவரை கேரக்டர்தான் முக்கியம். நல்ல வேடம் கொடுத்தால் நான் பணத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எத்தனை பக்கம் டயலாக் கொடுத்தாலும் பேசி நடித்துக்கொண்டேயிருப்பேன். நேரம் காலம் பார்க்கவே மாட்டேன். மேலும், இன்றைக்கு சின்னத்திரையில், தெரிந்தவன், வேண்டப்பட்டவன் என யார் வந்தாலும் சான்ஸ் கொடுத்து சீரியல்களை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தகுதியான வர்களை நடிக்க வைத்து தரமான படைப்புகளை டைரக்டர்கள் நேயர்களுக்கு கொடுக்க வேண்டும்.


காமெடி வேடங்களாக நடித்துள்ள உங்களுக்கு குணசித்ர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதா?
நிச்சயமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் நான் தோழர்கள் கலைக்களம் -என்ற நாடக ட்ரூப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் 200 நாடகங்களை நடத்தியிருக்கிறேன். பி.எல். ராகவன் எனது 50 சீரியல்களில் நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துவோம். தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கோல்கட்டா என பல வெளிமாநிலங்களுக்கு சென்று நாடகம் நடத்தியிருக்கிறேன். பின்னர் மெளலியின் டிராமா ட்ரூப்பில் பத்து வருடம் இருந்தேன்.
முக்கியமாக, மேடை நாடகங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி அழவும் வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு அப்போதே நான் குணசித்ர வேடங்களிலும் நடித்து பெயர் வாங்கினேன். என்னுடன் சேர்ந்து ரசிகர்களையும் கதறி அழ வைத்திருக்கிறேன். அந்த மாதிரி நாடகங்களில் எனக்கு கதாபாத்திரங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எனக்கு தொடர்ந்து சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே என்னை காமெடியனாகவே பயன்படுத்தி வருகிறார்கள். இவர் இந்த மாதிரி மட்டும்தான் நடிப்பார் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். ஆனால், எனக்கு சீரியசான, எமோசனலான, செண்டிமென்டான வேடங்களில் நன்றாக நடிக்கத் தெரியும். அதற்கான வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை


உங்களது விருப்பத்தை டைரக்டர்களிடம் தெரிவித்ததுண்டா?
இதுவரை சொல்லவில்லை. ஆனால் இப்போது எனது விருப்பத்தை சில டைரக்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், கடல் படத்தில் மணிரத்னம் சார் ஒரு வேடம் கொடுத்தார். அலையில் விழுந்த என மகன் இறந்து கிடப்பான். அவனை மடியில் போட்டுக்கொண்டு நான் அழுகிற மாதிரி காட்சி. சுற்றி நின்றவர்கள் கண்கலங்கும் அளவுக்கு நடித்தேன். மணிரத்னம் உள்பட அனைவருமே பாராட்டினார்கள். காமெடி பண்றவர் இப்படி நடிக்கிறீர்களே என்றனர். எனக்குள் ஒரு குணசித்ர நடிகர் இருப்பதை அப்போது வெளிப்படுத்தினேன். ஆக, சரியான சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கிறேன்.


ஆனால், காமெடியாக நடிப்பதுதான் கடினம் என்று சிலர் சொல்கிறார்களே?
என்னைக்கேட்டால், நடிப்பைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதிப்பது, சண்டை காட்சிகளில் நடிப்பதுதான் கடினம். மற்றபடி எந்த நடிப்பிலும் கஷ்டம் இல்லை. அதேசமயம், நம்முடன் இணைந்து நடிப்பவர்களும் நல்ல நடிகர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டி போட்டு நடிக்க முடியும். காட்சிகளும் நன்றாக வரும். இதை வடிவேலு செய்வார். அவருடன் நடிக்கிற அனைவருமே நல்ல நடிகர்களாக போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் அவரது காமெடிகள் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது என்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ்.



நன்றி: தினமலர்

aanaa
12th January 2016, 09:56 PM
சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான்! - அரவிந்த் பேட்டி


பாசமலர் தொடரில் பாரிவள்ளல் என்ற லீடு ரோலில் நடித்து வருபவர் அரவிந்த். அப்பா-அம்மா - இரண்டு தங்கைகள் என குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பொறுப்புள்ள வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். அதன்காரணமாக ஏராளமான நேயர்களின் மனங்களிலும் இடம்பிடித்து பிரபலமாகி வருகிறார் அரவிந்த்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சின்னத்திரையில் வீடியோ ஜாக்கியாக எனது கேரியர் தொடங்கியது. 5 வருடங்களாக மியூக் சேனலில் தொகுப்பாளராக இருந்தேன். சினிமாவே எனது டார்கெட்டாக இருந்ததால் அதற்காக நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி, அதாவது பிசிக்கலாவும், மென்டலாவும் ரெடியாகி மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தேன். அடுத்து பலம் என்ற படத்தில் நடித்தேன். அந்த இரண்டு படங்களுமே 2009-ல் ரிலீசானது. அதன்பிறகு அஸ்தினாபுரம், சூரத்தேங்காய் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இதில் சூரத்தேங்காய் படத்துக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். அடிக்கு அடி உதைக்கு உதை என்கிற ரீதியில் கதை உள்ளது. சில சிறுவர்கள் என்ன அண்ணா நீங்க, சண்டையே போடமாட்டேங்கிறீங்க -என்று பீல் பண்ணி வந்தனர். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்க்கும் வகையில் இந்த படத்தில் ஆக்சன் ரோலில் டிரை பண்ணியிருக்கிறேன். பள்ளிக்கூட பருவத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மனதில் போட்ட ஒரு விதைதான் இன்றைக்கு மரமாக முளைத்து நிற்கிறது.
இந்த நேரத்தில் தற்போது குடும்ப சூழல், அதாவது பணத்தேவைகள் காரணமாக சின்னத்திரையில் பாசமலர் தொடரில் நடிக்கிறேன். எனது பார்வையில் சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான். அங்கேயும் டைரக்டர் ஸ்டாட் கேமரா ஆக்சன் சொல்கிறார். இங்கேயும் அதைத்தான் சொல்கிறார். சினிமாவில் ஒரு நாளைககு 3 சீன் என்றால் சின்னத்திரையில் 6 சீன் எடுக்கிறார்கள். இது எனக்கு பெரிய அனுபவமாக உள்ளது. இங்கே வேலை அதிகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அதை ஆர்வத்துடன் செய்யும்போது கடினம் தெரியாது. அதோடு நாளுக்கு நாள் நம்மை வளர்த்துக்கொண்டிருப்பது போல்தான் சீரியலில் நடிப்பது இருக்கிறது. குறிப்பிட்ட டயத்திற்குள் ஒரு விசயத்தை பெஸ்ட்டா கொடுக்க வேண்டும் என்பது பெரிய சேலஞ்சிங்கான விசயம். இதை சின்னத்திரையில் செய்கிறோம். அதனால் என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை பெரிய பயிற்சிக்களமாகவும், ஆரோக்யமாகவும் உள்ளது. அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகுகிறார்கள். சந்தோசமாக உள்ளது.


மேலும், இந்த பாசமலர் சீரியலில் பாரிவள்ளல் என்ற ரோலில் நடிக்கிறேன். கோபக்காரன். ஆனால் கஞ்சப்பிசுனாரி. அதே சமயம் பொறுப்பானவன். அதாவது நிஜவாழ்க்கையில் எனக்கு எப்படி அம்மா, அப்பா, இரண்டு தங்கையோ அதேபோல்தான் இந்த சீரியலிலும் எனக்கு அம்மா-அப்பா இரண்டு தங்கைகள் உள்ளனர். அதனால் நடிப்பு என்று நினைக்காமல் நிஜவாழ்க்கை போன்றே இந்த சீரியலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், சீரியலில் ஒருநாள் நான் அடிவாங்கினாலே அடுத்த நாள் இரண்டு பாட்டிகள் வந்து, அடி வாங்காதேப்பா என்று அழுது கொண்டே சொல்கிறார்கள். சீரியல்கள் மூலம் தினமும் அவர்களது வீடடிற்கே செல்வதால் அவர்களது குடும்பத்தில் ஒருவர் போலவே சீரியல் நடிகர் நடிகைகளை நேயர்கள் நினைக்கிறர்கள்.


அதோடு, என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை, பெரிய திரை என்ற வேறுபாடெல்லாம் இல்லை. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நான் வந்திருந்தாலும், சினிமாதான் எப்போதுமே எனது டார்கெட்டாக உள்ளது. அதனால் மீண்டும் சினிமாவுக்கு வருவேன். சின்னத்திரைக்கு வந்திருப்பது எனக்கு எந்தவகையிலும் வருத்தமளிக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும் என்று உறுதியான நம்பிக்கையுடன் சொல்கிறார் அரவிந்த்.



நன்றி: தினமலர்

R.Latha
13th January 2016, 12:28 PM
Cinema heroin aagiraar pooja.

S.S. music thogupaalini pooja peatti.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/41938/Chinna-thirai-Television-News/Pooja-to-soon-act-as-heroine.htm

R.Latha
13th January 2016, 12:45 PM
Sila chinnathirai secretgal.........
kanavarai pirindhuvitta ramyamaana thogupaalini.......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42004/Chinna-thirai-Television-News/Television-secrets.htm

Nandri; Dinamalar.

aanaa
19th January 2016, 11:19 PM
சைக்கோவாக நடிக்க வேண்டும்! -சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி




மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


எந்தமாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியபோது எனக்கு நெகடீவ் ரோல்களாகத்தான் கிடைத்தன. ஆனால் இப்போது இரண்டுவிதமான வேடங்களும் கிடைத்து வருகிறது. என்னைக்கேட்டால் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.


சீரியல் டைரக்டர்கள் சொன்னது போலவே நடந்து கொள்கிறார்களா?
முதலில் இந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லி புக் பண்ணுவார்கள். ஆனால் அதில் சிலசமயங்களில் மாற்றம் ஏற்படும். காரணம், சீரியலின் ரேட்டிங்கைப் பொறுத்து கதையில் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருப்பார்கள். அப்போது அவர்கள் சொன்னது போலவே இல்லாமல் சில சமயங்களில் நம்முடைய கேரக்டரின் தன்மை குறையலாம். அதேசமயம், முதலில் சொன்னதை விட பின்னர் வெயிட்டான ரோலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த விசயத்தில் யாரையும் நிறை-குறை சொல்ல முடியாது.


வில்லியாக நடித்து நேயர்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?
அது பலமுறை நடந்திருக்கிறது. எங்காவது ஷாப்பிங் செல்லும்போது சந்திக்கும் பெண்கள், நான் யாரை கொடுமைப்படுத்துவது போன்று நடிக்கிறேனோ அந்த கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு, எதற்காக அப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள். சிலர் கெட்ட வார்த்தையில் திட்டகூட செய்கிறார்கள்.
மேலும், வம்சம் தொடரில் நான் வில்லனுக்கு ஜோடியாகப்போவது போல் கதை சென்றபோது யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. ஆனால் பின்னர் அந்த வில்லனை நான் வேண்டாம் என்று சொன்னபோது எனது கேரக்டர் ரீச்சாகி விட்டது. அதேபோல், கேளடி கண்மணியில் தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு அக்கா வேடத்தில் நடிக்கிறேன். பிரச்சினை செய்பவர்களை அடித்து விடும் அளவுக்கு கொஞ்சம் ஆவேசம் கலந்த வேடமும்கூட. இந்த வேடமும் தற்போது என்னை பேச வைத்துள்ளது.


எந்த மாதிரியான வேடங்களில் உங்களை உங்களுக்கு பிடிக்கும்?
வில்லியாகத்தான் என்னை எனக்கு பிடிக்கும். சீரியல்களில் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்ல பெண். கோபத்தில்கூட நான சூடான வார்த்தை களை பேச மாட்டேன். நேரில் பார்ப்பவர்கள், என்னம்மா நீ சீரியல்ல அப்படி நடிக்கிறே, ஆனா ரொம்ப சாப்ட்டா இருக்கியே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நிஜத்தில் நான் ரொம்ப சாப்ட்டான பெண். கேமரா முன்பு நடிக்கச் சொல்லும்போது மட்டுமே என்னை முழு வில்லியாக மாற்றிக்கொள்கிறேன்.
மேலும் முந்தானை முடிச்சு சீரியலில் நான் நடித்த பிரேமா என்ற வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு குடும்பத்தை பழிவாங்கும் ரோல். வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் அந்த குடும்பத்தை எந்த லெவலுக்கு சென்று பழிவாங்குவாள் என்பதுதான் கதையே. அந்த ரோலை நான் ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன்.


உங்களை கவர்ந்த வில்லி நடிகை யார்?
தற்போது சந்திரலேகா நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரஸ்ஸிங் சென்ஸ், பாடியை மெயின்டெய்ன் பண்ணுவது என பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பார். அதன்பிறகு தேவிப்ரியா. அவங்களும் டிரஸ், மேக்கப் என முழுசாக தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பார். செல்லமே தொடரில் கலக்கியிருப்பார்.
மேலும், திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி லட்டு மாதிரி ஒரு வில்லி வேடம் கிடைத்தால் பின்னி எடுத்து விடுவேன்.


என்னென் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
சைக்கோ மாதிரி, இது வேணும்னா அதுக்காக நான் எந்த லெவலுக்கும் போவேன் என்கிற மாதிரி வேடத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. லூசு மாதிரி நடிக்க ஆசை. இந்த மாதிரி வெரைட்டியாக பண்ணும்போது மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுக்க முடியும்.


எந்தமாதிரி வேடங்களுக்காக ரிகர்சல் எடுத்து கொண்டது உண்டு?
இந்த மாதிரி கேரக்டர் என்பதை டைரக்டர்கள் முன்பே சொல்லி விடுவார்கள். அதனால் அதற்கு ரெடியாக நாங்களும் ஸ்பாட்டுக்கு வருவோம். ஆனால் சினிமாவைப்போன்று முன்பே ரிகர்சல் கொடுப்பதெல்லாம் சீரியலில் கிடையாது. அதற்கு நேரமும் இருக்காது. ஒரு மணி நேரத்தில் இரண்டு சீன் எடுக்க வேண்டுமென்றால் அதை எடுத்த பிறகே விடுவார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டுதான் சீரியல்கள் படமாக்கப்படுகின்றன என்கிறார் கிருத்திகா.



நன்றி: தினமலர்

aanaa
19th January 2016, 11:21 PM
வில்லியாக நடிக்கத்தான் பிடிக்கிறது; வந்தனா சொல்கிறார்


பொன்னூஞ்சல் மற்றும் காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் வில்லியாக நடிக்கிறார் வந்தனா. சில தொடர்களில் பாசிட்டிவான கேரக்டர்கள் வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வந்தனா கூறியதாவது:


சின்னத்திரைக்கு வந்தது முதலே நான் வில்லியாகத்தான் நடித்து வருகிறேன். இது நான் விரும்பி செய்ததில்லை. ஆனால் இப்போது வில்லி கேரக்டர்கள்தான் பிடிக்கிறது. அழ வேண்டியதில்லை. ரொம்ப சிரிக்க வேண்டியதில்லை. வில்லித்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தினால் போதும். அதனால்தான் வில்லி வேடங்களை விரும்புகிறேன்.


நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிக்க விருப்பம் இருந்தாலும் நேரம் இல்லை. ஒரே நேரதில் இரண்டு சீரியல்கள், அதன்பிறகு நடன பயிற்சி, நடன நிகழ்ச்சி என்று பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்க வில்லை. என்கிறார் வந்தனா.



நன்றி: தினமலர்

aanaa
19th January 2016, 11:34 PM
சீரியலையே நகர்த்தி செல்லும் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும்! - நடிகர் துரைமணி பேட்டி


கல்யாண பரிசு, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, சிவரகசியம், ஆதிரா உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் துரை மணி. ஒரு முழு சீரியலையே நகர்த்தி செல்லக் கூடிய மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய ஆசை என்கிறார் அவர்
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


1993-ல் வெளியான மோகமுள் படத்தில் ஜூனியர் ஹீரோவாக நான் அறிமுகமானேன். அப்போது 3வது படித்தேன். அதன்பிறகு கல்லூரி படிப்பெல்லாம் முடித்த பிறகு இளவரசி, கல்யாண பரிசு சீரியல்களில் வில்லன் வேடம் கிடைத்தது. 2014ல் ஒளிபரப்பான இந்த சீரியல்தான் எனக்கு பெரிய அளவில் ரீச் ஆனது.


இந்த தொடர்களில் பெண்களை கொடுமைப்படுத்தும் வேடங்கள். புளு பிலிம் எடுப்பது. மயக்க மருந்து கொடுத்தாவது அடைய வேண்டும் என்று முயற்சிப்பது போன்று நடித்தேன். குறிப்பாக என்னை அசிங்கப்படுத்தும் பெண்களை பழிவாங்குவது போல் நடித்தேன். அப்படி நடித்த வேடங்கள்தான் எனக்கு பெரிய பெயரை வாங்கித்தந்தன.
அதைப்பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதில் ஒரு அனாதை வேடத்தில் நடித்தேன். கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக அமைந்தது. பின்னர் சிவனின் ரகசியங்களை சொல்லும் சிவரகசியம் சீரியலில் ஒரு நெகடீவ் ரோலில் நடித்தேன். சூனியம், மாந்திரீகம் பண்ணுவது போல் நடித்தேன். அடுத்து கெளசல்யா நடித்த அக்கா சீரியலில் பாசிட்டிவான ஒரு ரோலில் நடித்தேன். பைரவியில் நெகடீவ் ரோல். இப்போது ஆதிரா ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இப்படி பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்ததால் எனக்கு நல்லதொரு எக்ஸ்பீயன்சாக அமைந்து வருகிறது.


ஆதிராவில் உங்கள் ரோல் பற்றி?
ஆதிரா சீரியலில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் 6 பேரின் பிளாஷ்பேக் இப்போது நடக்கிறது. அதில் 2வது பையனான தேவராஜ் என்ற கேரக்டரின் இளமை கால வேடத்தில் நான் நடிக்கிறேன். நான் நடிக்கிற இந்த தேவராஜ்தான் ஆதிராவின் மாமனார். மேலும், ராஜா காலத்தில் இருந்தே பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பொக்கிஷப்பெட்டியை அடைய நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் படப்பிடிப்பு அனைத்தும் கேரளா, பொள்ளாச்சி காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆக, இந்த சீரியலிலும் எனக்கு நேகடீவ் ரோல்தான் கிடைத்திருக்கிறது.


டைரக்டர்கள் உங்களை வில்லனாகவே பார்ப்பதேன்?
வில்லனாக நடித்த ஒரு சீரியல் ரீச் ஆனால் டைரக்டர்கள் அதே தாட்டில் போகிறார்கள். எனக்கு அதுதான் செட்டாகிறது. அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கிறேன். மேலும், இப்போது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இல்லாமல் சீரியல்கள் முழுக்க மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. அடிதடி காட்சிகளிலும் நடிக்க வேண்டும். எல்லாமே நானாக இருக்க வேண்டும். இதுவரை நடித்த சீரியல்கள் எனக்கு நல்ல பயிற்சியையும், அனுபவத்தையும் கொடுத்திருப்பதால், இன்னும் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.


உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி விமர்சனம் வருகிறது?
ஒருநாள் கோயிலுக்கு சென்றபோது ஒரு பூக்கார பாட்டி, ஏன் அந்த பொண்ணை அப்படி கொடுமைப்படுத்துறே என்று என்னை திட்டினார். அதேசமயம், பலருக்கு இது சீரியல். நாட்டில் நடக்கும் விசயங்களைத்தான் சீரியலாக காட்டுகிறார்கள். கெட்டவன் வேடத்தில் இவர் நடிக்கிறார் என்கிற புரிதலும் உள்ளது. அந்த வகையில் நல்லவனாக நடிப்பதை ரசிப்பது போன்று கெட்டவனாக நடிப்பதையும் ரசிக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160118113628000000.jpg
மேலும், நான் கலைத்துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா சிவகாமிதான். அவர் இல்லையென்றால் நான் நடிகனாகவே ஆகியிருக்க முடியாது. அதேசமயம் என் அம்மா எனது நடிப்பைப்பற்றி இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஆனால், மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார். அதை நான் கேட்டிருக்கிறேன். அதுவே எனக்கு பெரிய சந்தோசம். ஆக, என் அம்மாவுக்கு என் நடிப்பு பிடித்திருப்பது தெரிகிறது என்கிறார் துரைமணி.





நன்றி: தினமலர்

aanaa
19th January 2016, 11:43 PM
நானே நானா பேசும் மைனா


தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, ,;நானே நானா பேசும் மைனா,; என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். ,;தினமலர்,; பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...


உங்களை பற்றி...
நான் ஒரு பக்கா மதுரை பொண்ணு. வக்போர்டு, அம்பிகா காலேஜ்ல தான் டிகிரி படிச்சேன்.


எப்படி நடிக்க வந்தீங்க ?
நடிக்குற அம்சம் இருக்குன்னு வம்சம் படத்துல இயக்குனர் பாண்டிராஜ் வாய்ப்பு கொடுத்தாரு. அப்புறம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், வெள்ளைக்கார துரை, படங்களில் நடிச்சேன்.


சினிமா டூ டிவி..
முதல்ல ,டிவி; தொடர்ல நடிக்குற ஐடியாவே இல்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு லட்சியமெல்லாம் இருந்துச்சு. டிவி தொடர்ல நண்பர் ரமணன் தான் நடிக்க வைச்சாரு. அது தான் இன்னிக்கு என்னை ஒரு நல்ல நடிகையா நடிப்பு உலகத்திற்கு கொண்டுவந்திருக்கு.


இனி சினிமால நடிப்பீங்களா ?
என்ன இப்படி கேட்டுபுட்டீங்க, என் ரசிகர்கள் காமெடி கேரக்டர்ல நடிக்க சொல்றாங்க. அடுத்த கோவை சரளா, மனோரமான்னு சொல்லி ஓவரா உசுப்பேத்தி வேற விடுறாங்க. கெத்து கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்போம்ல


மதுரை பாஷைல சும்மா பின்றீங்களே..
இதுல என்ன ஆச்சர்யம்? நம்மூர் பேச்சு நமக்கு வராதா என்ன? டிவி தொடர்ல வர என்னோட ,;மைனா,; கேரக்டர் என் அம்மா தான். ஆமா, அவுங்க எப்படி மதுரை பேச்சு பேசுவாங்களோ அதை தான் நான் பேசுறேன். இது மட்டுமில்லை நெல்லை, கோவை, கன்னியாகுமரி என பல ஊர் பாஷைகளும் எனக்கு அத்துப்படி.


நடிக்க கிரீன் சிக்னல் எப்படி ?
என் அப்பா, அம்மா கிரீன் சிக்னல் தான் கொடுத்தாங்க. சொந்தக்காரங்க தான் ரெட் சிக்னல் போட்டாங்க. விண்ணை தாண்டி வந்த மாதிரி, சிக்னலை தாண்டி தான் நடிக்க வந்தேன். இன்னிக்கு சொந்த, பந்தமெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படுறாங்க


உங்களுக்கு பிடிச்ச காமெடி நடிகை?
கோவை சரளா, ஆரம்பத்துல இவங்க என்ன காமெடி பண்றாங்கனு எல்லாரும் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். இப்போ என்னை பார்த்து ரசிகர்கள் ,;கோவை சரளா,;ன்னு சொல்லும் போது தான் புரியுது.


காமெடி மட்டும் தானா..
காமெடி நடிகையா ரசிகர்களை சிரிக்க வைக்குறதுல ஒரு திருப்தி இருக்கு. ஆனால், எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும்.


மதுரையும், பொங்கல் விழாவும்
மதுரை, பாரம்பரியத்தை போற்றும் பாசக்காரர்கள் நிறைந்த ஊர்ன்னு பெருமையா சொல்வேன். பொங்கலுக்கு முதல் நாள் விடிய, விடிய கலர் கோலம் போடுவோம். காலங்காத்தால மண் பானையில பொங்கல் வைச்சு சாமி கும்பிடுவோம்


பொங்கல் சபதம்?
புத்தாண்டுக்கு தான் சபதம் எடுப்பாங்க, பொங்கலுக்குமா? பொங்கி வரும் கோபத்தை குறைக்கணும்னு சபதம் எடுத்திருக்கேன்.


அடுத்த ஆண்டு தலைப் பொங்கல் போல...
அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சா, நிச்சயதார்த்தம் முடிஞ்சது. கல்யாண வேலை நடந்துகிட்டு இருக்கு.


எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை
தனுஷ், சிவகார்த்திகேயன் கூட கலகலன்னு காமெடி கேரக்டர்ல நடிக்கனும்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160115135013000000.jpg



உங்கள் கனவு
என் வருங்கால கணவருடன் இணைந்து ஆரம்பித்த, ,;வே பவுண்டேஷன்,; மூலம் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி கொடுத்தோம். எங்களுக்கு தனுஷ் நிதி கொடுத்து உதவினார். இது போல இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்யணும்.



நன்றி: தினமலர்

ababasenuupam
20th January 2016, 03:23 AM
Not sure where else to post. Maybe someone shared this already.

Balakumaran's out of body experience. Interview and recorded footage.

https://www.youtube.com/watch?v=o1WGlfcp6s4

"Ithellam naan paaka mudiyadhu na, nee paaka mudiyadhadhu neraiye iruku thambi. Naathigam pesum muttal nee. Unnai sulubamaga matramudiyum. Nalai naan irandu kadhal kadhaigalai eluthinaal yennai deivamaai paarpai." :lol2::oops:

R.Latha
20th January 2016, 12:45 PM
IAS veadam kidaithaal sambalam vaangaamalea nadipean.

PRIYANKA

imayam, keaptan TV-yil 3 aandugalaaga nigalchi thogupaalaraaga irundhaar priyanga.


Nandri; Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42023/Chinna-thirai-Television-News/If-IAS-role-i-get-i-did-not-ask-salary-says-Priyanka.htm

R.Latha
20th January 2016, 12:52 PM
coffee with DD-yil Ilaiyaraja.

isaijaani ilaiyaraja epodhume thani beatigalukku udanpaduvathillai. Adhuvum kuripaaga thanithu peati tharuvadhu aboorvamanathu.Aanaal Ilaiyaraja-vin nadavadikaigalil tharpothu maatrangal earpattullathu.

Nandri. Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42034/Chinna-thirai-Television-News/Ilayaraja-in-Coffee-with-DD.htm

R.Latha
20th January 2016, 01:05 PM
Aadiyancin comments-ai arindhu nadikirean Nadigar Arnav.

kealadi kanmani seariyalil naayaganaaga nadithu varubavar Nadigar Arnav..Antha thodaril YUGI endra kearaktar makkal mathiyil nandraaga reach aagiyirukkiradhu.

Nandri. Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42096/Chinna-thirai-Television-News/I-am-acting-audience-response-says-Arnav.htm

R.Latha
20th January 2016, 01:13 PM
chinnathirai nadigar sangathil puthiya kattupaadu amalukku varugiradhu.

chinnathirai nadigar sangathin thalaivaraaga tharpodhu shivan shrinivaas poruppeatrulaar. Kadantha madham nadaipetra thearthalil vetri petradhum, chinnathirai
nadigar sangathirkku PUTHIYA KATTADAM katapadum endra VAAKURUTHIyai ALITHULA AVAR,,,,,,,,,,,,,,,,,,,,,


NANDRI.Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42189/Chinna-thirai-Television-News/new-rules-implement-in-chinnathirai-nadigar-sangam.htm