PDA

View Full Version : BHARATHI RAJA'S "Therkathi Ponnu"



R.Latha
28th April 2008, 07:58 AM
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நெடுந்தொடர் ``தெக்கித்திப் பொண்ணு''. இயக்குனர் பாரதிராஜாவின் எண்ணம், எழுத்து, இயக்கத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

முதல் முறையாக ஒரு நெடுந்தொடரை இயக்க களம் இறங்குகிறார் பாரதிராஜா.

நெப்போலியன் கதாநாயகனாகவும் ரஞ்சிதா கதாநாயகியாகவும் நடிக்க வாகை சந்திரசேகர், சொர்ணமால்யா, `கனாக்காணும் காலங்கள்' புகழ் கே.எஸ்.முருகன், `பருத்திவீரன்' செவ்வாழை ராசா மற்றும் புதுமுகங்களாக மதுரை மண்ணின் மைந்தர்களான சங்கரபாண்டியன், ரோஸ்முகிலன், ஸ்டாலின், வைசாலி, செண்பகம், சிவாஜி, வெள்ளைப்பாண்டி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர்.

"மூணு கிராமத்தைச் சேர்ந்த மூணு குடும்பங்கள்ல நடக்கிற கதை. தலைமுறை தலைமுறையா அந்த குடும்பத்திற்குள் நடக்கும் பாசப்பிணைப்புகள், காதல் போராட்டங்கள், பங்காளி உறவுகள் என்று பகையும் நேசமும் நெகிழ்ச்சியும் கொண்டதுதான் இந்த கதையின் ஆணிவேர்.

நகரத்துல இருக்குற சில பொண்ணுங்கள்லாம் சம உரிமை வேணும்னு கேக்குறாங்க. அதுக்கு பல திட்டங்கள்லாம் போடுறாங்க. ஆனா எந்த சட்ட திட்டமும் இல்லாம ஆணும் பெண்ணும் சமம்ங்கிறத இயல்பா பாவிக்கிறவங்க கிராமத்துப் பொண்ணுங்க. பாசத்துலயும் சரி கோவத்துலயும் சரி, இந்த பொண்ணுங்கள மிஞ்சினவங்க யாரும் கிடையாது. அவங்களை யாராலயும் எதுனாலயும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி ஒரு பாசமும் நேசமுமான பொண்ணப் பத்தின கதைதான் இந்த `தெக்கித்திப்பொண்ணு'' என்கிறார், தொடரை இயக்கும் பாரதிராஜா.

ரத்னகுமார் கதைக்கு, கவிஞர் தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுத பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்குகிறார். தலைப்பு பாடலுக்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. பாடல்கள்: சினேகன், தேன்மொழி, ஒளிப்பதிவு: தனபால், படத்தொகுப்பு: அசோக், பின்னணி இசை: நூர், கலை இயக்குனர்: ராஜா, நடனம்: கூல் ஜெயந்த். சண்டைப் பயிற்சி: ராஜசேகர்.



தெக்கித்திப் பொண்ணு' - Title song (http://raretfm.mayyam.com/stream/vserial/Thetkathipponnu.rm)

R.Latha
28th April 2008, 08:00 AM
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிராஜாவின் "தெக்கித்தி பொண்ணு'' தொடருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இயல்பான காட்சியமைப்பில் யதார்த்தமான கேரக்டர்கள் தொடரின் சிறப்பு அம்சம். சீரியலாக இல்லாமல் `சினிமா'வாக இதை உணர வைத்த பாரதிராஜாவுக்குத்தான் இந்த வெற்றியின் முழுப்பலனும் சேரும்.

இந்த தொடரில் சிவனாண்டி கேரக்டரில் வாழ்ந்திருப்பவர் நடிகர் வாகை சந்திரசேகர். தொடரில் தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

"கிராமத்தின் கம்பீர குடும்பம் எங்களுடையது. என் தங்கை பவுனுத்தாய் மீது உயிரையே வைத்திருக்கிறேன். என் சொந்த மாப்பிள்ளைதான் மச்சக்காளை. எங்கள் இரண்டு குடும்பப் பின்னணியிலும் நிகழும் சம்பவங்கள்தான் கதைக்களம்.

தொடரில் எனக்கு "முதல் மரியாதை'' சிவாஜி சார் மாதிரியான கேரக்டர். ரொம்ப கோபம். ரொம்ப பாசம். கூடவே மானரோஷம். குடும்பத்தில் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத குணம் என்று என்னை வித்தியாசமாகவே வடிவமைத்திருக்கிறார், பாரதிராஜா.

"ஈகோ'' மனைவியுடன் வாழ்ந்தாக வேண்டும். தங்கைக்காகவும் வாழவேண்டும். இப்படியான போராட்ட மன நிலையை காட்சிகளில் அற்புதமாக வெளிப்படுத்த முடிந்ததற்கும் பாரதிராஜாவே காரணம். தொடரில் என் நடிப்பை பார்த்து டாக்டர் கலைஞர் பாராட்டியது என்னை `நடிகனாக' நான் பெருமிதம் கொள்ள வைத்த தருணம்.

தொடரில் நெப்போலியனுக்கும், எனக்குமான காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே உணர்ச்சி பூர்வமாக உணர வைக்கும்.''

`சிவனாண்டி'யாகவே மாறி தனது கேரக்டரை உணர்வு பூர்வமாக விவரித்தார், வாகை சந்திரசேகர். ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடரின் கேரக்டர்களில் சிவனாண்டிக்கும் முக்கிய இடம் உண்டு.
--
HOW IS THIS SERIAL? Anybody watch

bingleguy
29th April 2008, 09:52 PM
wow ..... Bharathiraaja for the small screen ..... meendum or gramathu adhiyayam :-) indha murai chinnathiraiyil :-)

:clap:

eppo oliparappaagardhu !

aanaa
19th July 2008, 06:19 PM
any updates