PDA

View Full Version : Weekly show on Kannadasan in Podhigai TV



RAGHAVENDRA
27th August 2009, 09:26 PM
பொதிகை தொலைக்காட்சியில் வியாழன் தோறும் இரவு 9.00 மணிக்கு காவியத் தலைவன் என்ற தலைப்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இன்று 27.08.09 நிகழ்ச்சியில் இயக்குநர் வி.எந்.சம்பந்தம் அவர்கள் நினைவு கூர்ந்த நிகழ்ச்சி புதியதாக இருந்தது. வாடாமலர் என்ற படத்திற்காக (படம் வெளிவந்ததாகத் தெரியவில்லை), இயக்குநர் தாதா மிராஸியும் உதவி இயக்குநர் வி.என்.சம்பந்தம் அவர்களும் மறுநாள் பாடல் கம்போஸிங்கிற்காக கவியரசரிடம் பாடல் பெற வேண்டி, அவரிடம் சொல்லி அனுமதி வாங்கினராம். அதே போல் மறுநாள் கவியரசர் வந்து விட்டாராம். வந்த வுடன் தமது பாடலை யார் எழுதப் போகிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு இயக்குநர் உதவி இயக்குநர் வி.எந்.சம்பந்தம் அவர்களைக் காட்டி இவரே எழுதவாராம் என்றாராம். இரண்டு பாடல்கள் தேவைப்பட்டதாகவும், அதற்காக மாமல்லபுரம் செல்வதாகவும் ஏற்பாடாம். காரில் இவர்கள் புறப்பட்டாராம். கார் அடையாரை நெருங்கும் போது கவியரசர் திரும்பி சம்பந்தத்திடம் நான் இப்போது சொன்னால் எழுதவாயா என்று வினவினாராம். இவரும் சரியென்று சொல்லவும், உடனே பாடலை சொல்லத் தொடங்கினாராம். பருவம் என்று தொடங்கும் பல்லவி. கார் திருவான்மியூரை நெருங்கும் போது பார்த்தால் இரு பாடல்களும் நிறைய சரணங்களுடன் எழுதி முடித்தாகி விட்டதாம். அனைவரும் மாமல்லபுரம் போகாமல் அப்படியே திரும்பி விட்டார்களாம்.
மேலும் திரு சுந்தர ஆவுடையப்பன் என்கின்ற தமிழறிஞரும் தம்முடைய கருத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் எனக்காகப் பாடினார் என்ற நிகழ்ச்சியில் நேயர் விரும்பி அவர்களிடம் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றிக் கூறும் பாடல் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து உமா சுந்தரேஸ்வரி குழுவினர், கவியரசரின் கவிதையை கர்நாடக கச்சேரியாகப் பாடினர்.

கவியரசரின் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.

ராகவேந்திரன்