மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
***************************************
எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போத கத்தின் கழல்
ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே...
அட... மன்னிச்சுக்கோங்க... பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை என்று சொல்ல
இது இரட்டைக் கிளவியா ( காந்திமதி + வடிவுக்கரசி என்று சிக்கா சொல்வார் )
அதனால் ஆரம்பத்திலே என்ன சொல்லி நான் எழுத என்று சுவிஸ் குளிர் போல
கைகால்கள் நடுங்க......
முதலில் இந்த பாகத்தை துவக்கச் சொல்லி என்னை துவைத்து எடுத்த வாசுஜி அவர்களுக்கு
மனதின் அடித்தளத்திலிருந்து என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
மனதைக் கவரும் மதுர கானங்கள் திரியின் ஒவ்வொரு கிளையிலும் மலர்களாகப் பூத்து
மணம் வீசிய பதிவுகளை அள்ளி வழங்கிய நண்பர்கள் சின்னக் கண்ணன், கோபால் ஜி, ரவி சார்,
ராகவ்ஜி, சி.செ.ஜி, முரளி ஸ்ரீனிவாஸ், எஸ்.வாசுதேவன் ஜி, சுந்தர பாண்டியன், கோபு,
வாத்தியாரையா, ராகதேவன், எஸ்.வாசுதேவன், ஆதிராம், எஸ்வீ, கிருஷ்ணா, கல் நாயக்,
கலை வேந்தன், வரதா ஜி மற்றும் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னித்து விடும் மாண்பு
மிக்க நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
மருமகள் ந.தி. போல படுக்கையில் கிடந்த என்னை ரேவதி போல "அன்னையாக மாறவா..
அள்ளி வைத்து பாடவா" என்று தாலாட்டு பாடி எழுப்பி விட்ட பெருமை மதுரகானத் திரிக்கு சேரும்.
சட்டு புட்டுனு பூஜையை முடிச்சு லட்டைக் கொடுப்பியானு கேட்கும் குரலுக்காகவே இந்தப் பாடலுடன் திரியைத்
துவக்குகிறேன்.
பூவண்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த "ஆலம் விழுதுகள்" என்ற நாவல்
திரைப்படமாகி "நம்ம குழந்தைகள்" என்ற பெயரில் திரையிடப்பட்டபோது டைட்டில் பாடலாக சீர்காழி கோவிந்தராஜன்
பாடிய இந்தப் பாடல் ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்.
"சீதக் களப" என்று ஆரம்பித்து "சரணே சரணே" என முடியும் வரை முற்றுப்புள்ளி இல்லாத ஒரே வரியாக இருக்கும்
இந்தப் பாடலுடன் ஆரம்பிக்கும் நம் ஐந்தாம் பாகம் தடையின்றி இசை வெள்ளமாக நண்பர்கள் அனைவராலும்
மனதை நனைக்கட்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
https://www.youtube.com/watch?v=y6gZb3Icsb4
எல்லா நண்பர்களும் எல்லா நலமும் பெற்று இனிதாக வாழ கணபதியை வேண்டுகிறேன்.