Anuradha Ramanan is no more
http://www.dailythanthi.com/article....date=5/17/2010
குமுதம் குழுமம் புதிய அச்சு இயந்திரங்களை வாங்கியபோது, வாரத்துக்கு ஒரு நாள் வரும் குமுதம் அச்சிடுவது அல்லாமல் மற்ற நேரம் அவற்றைப்பயன்படுத்துவதற்காக ஆரம்பித்தது தான் 'மாலைமதி' என்ற புதின இதழ் என்று நினைக்கிறேன். (கூடாமல், கல்கண்டு உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அச்சிடத்தொடங்கினார்கள், ஆனந்தவிகடனும் அதேமாதிரி அச்சியந்திர உபயோக நோக்கத்தோடு துக்ளக் அடிக்க ஆரம்பித்ததாக நினைவு).
மாலைமதியின் முதல் சில நாவல்கள் பிரமாதமாக இருந்தன. சுஜாதாவின் "மறுபடியும் கணேஷ்", "எதையும் ஒரு முறை" போன்ற நாவல்கள் புதிதாக மாலைமதிக்கென்றே எழுதப்பட்டவை. சு.சமுத்திரம் எழுதியதும் பின்னால் திரைப்படமாக வந்து ராசாவின் இனிய பாடலகளைக்கொண்டிருந்ததுமான 'இன்று நீ நாளை நான்' இந்தக்கூட்டத்தில் சேர்ந்தது தான்.
அப்படி எழுதிய "அரளிப்பூ மேல் ஆசை வைத்து' மூலம் தான் அனுராதா ரமணன் எனக்கு அறிமுகம். அசத்திய நாவல் அது! அப்போது அவர் வளரும் எழுத்தாளர் மட்டுமே.
ஆழ்ந்த அனுதாபங்கள் :-(