Originally Posted by
Aathavan Ravi
புதுசாய்
கல்யாண மண்டபம்
திறக்கிறோமென்று
தெருமுனையில்
ஒலிபெருக்கிகளை
அலறி விடுகிறார்கள்.
"வேண்டாம்.. வேண்டாம்" என
கெஞ்சுகின்றன காதுகள்.
----------
காற்று கிழித்து விரையும்
வாகனமொன்றின்
ஹாரன் சத்தம்
தூக்கி வாரிப் போடுகிறது.
---------
வாசலில் விளையாடும்
சிறுவர்கள்
சிரிக்கிறார்கள்..
கத்துகிறார்கள்..
எதைக் கொண்டோ,
எதிலோ அடித்து
பெருத்த ஓசையெழுப்புகிறார்கள்.
அமைதி என்கிற
வார்த்தை
மறந்தே போயிற்று.
--------
தெரு முழுக்க
சிவப்பாய் பரப்பி
சரவெடி வெடிக்கிறார்கள்.
கைகள், தன்னைப் போல்
காதுகளை நோக்கிப் போகிறது..
அடைத்துக் கொள்ள.
---------
ஆனால்...
கட்டபொம்மனாகவே மாறி நீங்கள் கத்திப் பேசுவதை
இன்னுமொருமுறை
கேட்டு விட
செவிகள் துடிக்கின்றனவே?
எப்படி நிகழ்கிறது
இந்த அதிசயமென்று
யோசித்தால்
புரிகிறது.
உங்கள் சிம்மக் குரலிலிருந்து
வரும் பேரொலி
காதுகளோடு
சம்மந்தப்பட்டதில்லை..
அது,
எங்கள் மனசோடு
சம்மந்தப்பட்டது.
நாங்கள்
எங்கள் மனசோடு
பொருத்தியிருக்கும் காதுகளுக்கு
இது சத்தமல்ல..
சங்கீதம்.