-
திரைப்படம்: சாந்தி நிலையம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விச்வநாதன்
பாடகர்கள்: பாலு & பி. சுசீலா
நடிப்பு: ஜெமினி கணேஷ் & காஞ்சனா
https://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ண
மலையை தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி...
-
இந்த அந்திப் பட்டுப் பேசலாமே - எப்ப ப் பாட்டக் கேட்டாலும் சந்தேகமா இருக்கும்.. அதென்ன அந்திப் பட்டு.. மாலை நேரத்தில காதலர்கள் பட்டும் படாமல் பேசுகிற ஸ்வீட் நத்திங்க்ஸ் என கடைசியில் ஒரு க்ன்க்ளூஷனுக்கு வந்துட்டேன்..
ஐ திங்க் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே பாட்டின் இடம் ஊட்டி என நினைக்கிறேன்.. நன்றாகவே மாறியிருந்தது..கொஞ்சம் தான் தண்ணீர்..ம்ம் நன்றி ராக தேவன்..
-
Happy Valentine's Day to everyone! :)
திரைப்படம்: ராஜ பார்வை (1981)
இயக்குனர்: சங்கீதம் ஸ்ரீனிவாச ராவு
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடகர்கள்: பாலு & எஸ். ஜானகி
https://www.youtube.com/watch?v=YEJj_O-enus
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளில் சுமையடி இளமயிலே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுகொடு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
-
ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த பூமி சிணுங்கும் கிழே
அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல
https://www.youtube.com/watch?v=y0K56-djD1c
-
எங்கு நான் செல்வேன் அய்யா - நீ
தள்ளினால்
அருமையான திஜாவந்தி
https://www.youtube.com/watch?v=Oa4_diEJ8gQ
-
KokilavaNi
From KokilavaNi
Sarasa mohana sangetharmutha saaralil......
http://www.youtube.com/watch?v=OvZz0etN7r8
-
சமீபத்தில் கல்யாண சமையல் சாதம் திரைப்படம் பார்த்தேன்.. இந்த பாட்டு .. லேட்டஸ்ட் ட்ரண்டிற்கு ஏற்ப எடுக்கப் பட்டு.. என்னவோ எனக்கு பிடித்திருந்தது..
உங்களுக்கு??
https://www.youtube.com/watch?v=JUg4PvMeZrg
-
-
Test
Sent from my iPhone using Tapatalk
-
This is a piece that has an emotional impact on me!
Actor Omar Sharif passed away today, and the occasion brings back a lot of memories. This has a lot to do with
my first job in North America and the person from Wales (United Kingdom) who was then the head of the
department where I had my first job. She knew Omar Sharif personally, and told me that I looked exactly like
Omar Sharif, as he looked in the movie "Dr. Zhivago". I went out and bought a VHS cassette of the movie
(which was hard to find because it was quite old at that time), and was stunned to see the resemblance.
In fact, I still have friends who call me Dr. Zhivago! :) Needless to say, I have most, if not all of his movies
in my collection.
Without keeping on talking (which I am told that I am very good at!), here is "somewhere my love...",
(Lara's Theme) from David Lean's classic movie starring Omar Sharif and Julie Christe; composed and conducted
by Frenchman Maurice-Alexis Jarre:
https://www.youtube.com/watch?v=vXtFRl1nSs4