http://wondersinthedark.files.wordpr...pg?w=500&h=280
அன்பு முரளி சார்/வாசு ஜி /நண்பர் சி கே
வாசுவின் 'காற்றினிலே வரும் கீதம் ' பதிவு, முரளி சார்,மீண்டும் வாசு சார்,சி கே சார் பதிவுகளின் மூலம் மிக சிறந்த மலரும் நினைவுகளாக வாடா மலர் ஆக பரிமளிக்க செய்து விட்டது 1978 ஆம் ஆண்டு. 1978 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களம் . 1977 ஆம் ஆண்டில் தான் தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 1977 தீபாவளி மறக்க முடியாத அண்ணன் ஒரு கோயில், அதோடு வேடசந்தூர் புயல்,மேலும் நெருக்கடி நிலை தளர்வு காரணமாக கல்லூரியில் போராட்டங்கள் அதன் காரணமாக தேதி அறிவிக்கபடாமல் கால வரையற்ற கல்லூரி விடுமுறை ,அதனால் தள்ளி போன கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் டிசம்பர் இல் முடிந்து 1978 ஆம் ஆண்டு பிறக்கிறது.எங்களுக்கும் இரண்டாம் செமஸ்டர் ஆரம்பம்
அப்போது எல்லாம் இப்போது போல் ஜனவரி முதல் தேதி கொண்டாட்டங்கள் என்பது எதுவும் கிடையாது. ஜனவரி பிறந்தால் பொங்கல் அதனை ஒட்டி வரும் 3 தினங்கள் விடுமுறை ,அதனால் வெளியாகும் திரைப்படங்கள் ,ஜனவரி 26 அன்று ஏதாவது கே பாலாஜியின் ஹிந்தி திரை படங்களை தழுவி எடுக்கப்பட்ட நடிகர் திலகதின் படம் இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்கும். 1978 ஜனவரி பொங்கலுக்கு மக்கள் திலகத்தின் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் . இதனை mms பாண்டியன் என்று அந்நாளில் சுருக்கி அழைப்பார்கள் 68 தினங்கள் ஓடியதாக கருதுகிறேன்.மெல்லிசை மன்னரின் இனிய கீதங்கள் 'அமுதும் தமிழும் எழுதும் கவிதை','தென்றலில் ஆடும் ','தாயகத்தின் சுதந்திரமே ' நிறைந்த படம்.மார்ச் 24 அன்று நிழல் நிஜமாகிறது ரிலீஸ்.மக்கள் திலக ரசிகர்கள் mms பாண்டியன் 100 நாட்கள் ஓடாததால் கொஞ்சம் அப்செட். 1977 தேர்தல் கூட்டணியால் மக்கள் திலகம் நடிகர் திலகம் ரசிகர்கள் ஓரளவு ராசியாக இருந்த நேரம். மக்கள் திலகமும் திரை உலகை விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாறிய நேரம்
.
இந்த நேரத்தில் 26 ஜனவரி அன்று கே பாலாஜியின் திரை படத்தை எதிபார்த்து இருந்த எங்களுக்கு முக்தா ஸ்ரீனிவாசனின் 'அந்தமான் காதலி' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்ற உ டன் கொஞ்சம் பயந்தோம். 1974 தீபாவளி வெளியீடு 'அன்பை தேடி' வெற்றியை தேட வேண்டியதாகி அதனால் 3 ஆண்டுகள் 75,76,77 நடிகர் திலகம் படம் எதுவும் எடுக்காமல் இருந்த முக்தா ஸ்ரீனிவாசனின் படம் என்ற உடன் ஒரு பயம். ஏற்கனவே கண் பார்வை போன காதலிகாக வருந்தும் நிறைகுடம்(நெல்லை ராயல்) ,மாலை கண் நோய் தவப்புதல்வன் (நெல்லை ரத்னா) ,கனவுலக மனநோய் அன்பை தேடி (நெல்லை பூர்ணகலா) என்று நோய் வாய்ப்பட்ட முக்தா படம் கொஞ்சம் நெல்லை ரசிகர்கள் அவ்வளவாக முக்தாவின் மீது நாட்டம் இல்லாமல் இருந்த காலம் .அதே 26/1/78 நாளில் கமலஹாசனின் பருவ மழை நெல்லை ரத்னாவில் ரிலீஸ் (மதனோற்சவம் மலையாள டப்பிங்).
முதல் காட்சி ரசிகர் மன்ற காட்சி வழக்கம் போல் நடிகர் திலகம் தரிசனம் கண்டு படம் நல்ல ரிசல்ட் என்ற களிப்புடன் மாலையில் திரை அரங்கின் வாசலில் நின்று வரிசையில் நின்று கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் படம் பற்றி சிலாகிக்து விட்டு இரவு காட்சி மதனோற்சவம் என்ற பருவ மழையில் நனைந்த மாட புறாவாக திரும்பினோம்.இரவு முழுவதும் சரீனா வாஹாப் (பருவ மழை கதாநாயகி) நினைவுடன் 'அடி லீலா கிருஷ்ணா ' என்று பாடல் அடிகடி நினைவுக்கு வந்து,
அதிலும் 'பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' என்ற வரிகளிலும்
'பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை
அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' வரிகளிலும்
மனதை பறி கொடுத்து பாட்டு புத்தகம் வாங்கி வாசு சொன்னது போல் சந்திர மோகனுக்கு பதிலாக நடிகர் திலகத்தை கற்பனை செய்தே பிற நண்பர்கள் உடன் பாடி கழித்த பாடல்.டி எம் எஸ் கொடி கொஞ்சம் தாழ்வாக பறந்த காலம் .அப்போது நெல்லையில் பாடகர்களுக்கு 3 குரூப் டி எம் எஸ் குழு,ஜேசுதாஸ் குழு,எஸ் பி பி குழு என்று நண்பர்களிடம் இருக்கும்.அதே போன்று இசையில் 'மெல்லிசை மன்னர்','இளையராஜா ' (இசை ஞானி,மொட்டை எல்லாம் 80 களுக்கு பின் தான் ).அந்தமான் காதலியில் எஸ் பி பி பாடல் இல்லை என்ற உடன் அந்த நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.
இதற்கிடையில் தியாகம் மார்ச் 4 அன்று நெல்லை பார்வதி ரிலீஸ்.தீபத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு இளையராஜா இசை .
நடிகர் திலகம் பட்டையை போட்டு பட்டையை கிளப்பிய திருவிழா டான்ஸ்,ஜஸ்டின் சண்டை ,'தேன் மல்லி பூவே','உலகம் வெறும் இருட்டு', போன்ற ஜனரஞ்சக பாடல்களால் பார்வதி திரை அரங்கமே அல்லோகலம். இதிலும் பாலா பாடல் கிடையாது. இந்நிலையில்,சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோசமாக இருந்த நேரத்தில் நன்றாக ஓடி கொண்டு இருந்த அந்தமான் காதலி எதிர்பாராத விதமாக 51வது நாள் கடைசி என்று செய்தி காதில் இடியாக விழுந்தது. மார்ச் 18 முதல் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ராமண்ணாவின் 'என்னை போல் ஒருவன் ' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்று செய்தி அறிந்ததும் அந்தமான் காதலி திரைப்பட விநியோகஸ்தர் சுவாமி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும்,என்னை போல் ஒருவன் திரைப்பட விநியோகஸ்தர் ராணி பிலிம்ஸ் (இதன் அதிபர் திரு மு சூரியநாராயணன் முன்னாள் மேயர் -விஜயா சூரி combines மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம்,குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்-மிசா நெருக்கடி கால நிலையில் கைது செய்யப்பட்டு தனக்கும் தி மு க விற்கும் தொடர்பு கிடையாது என்று நாள் இதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ) அலுவலகத்திற்கும் நாய்கள் போன்று நெல்லை மன்றத்தில் இருந்து சென்றோம். என்னை போல் ஒருவன் படத்திற்கு கொடி கட்ட மாட்டோம்,மன்ற வரவேற்பு பதாகை எதுவும் வைக்க மாட்டோம்,மறியல் போராட்டங்களில் ஈடு படுவோம் என்று எல்லாம் சொல்லி பார்த்தோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். ராணி பிலிம்ஸ் விநியோக அலுவலர்களே (அனைவரும் தி மு கழகத்தை சேர்ந்தவர்கள் ) காங்கிரஸ் கொடி கட்டி,நெல்லை தலைமை மன்ற வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும்,வளைவுகளையும் செய்து விட்டனர்.காலத்தின் கட்டாயம் என்பது இதுதான் போலும். இவ்வளவுக்கும் நெல்லை பூர்ணகலா திரை அரங்க நிறுவனர் அந்நாளைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.நடிகர் திலகத்தின் பரம விசிறி .மேலும் தலைமை மன்ற வரவேற்பு பதாகையை மன்றத்தில் இருந்த ஒருவரே எங்களுடன் அந்தமான் காதலி இறுதி நாள் இரவு காட்சி பார்த்த சிவாஜி மன்ற உறுப்பினரே ராணி பிலிம்ஸ்/திரை அரங்கில் கொண்டு கொடுத்த அவல நிலை .பின்னாளில் இந்த உறுப்பினரே காங்கிரஸ் கட்சியிலும் ,மன்றத்திலும் மிக பெரிய பொறுப்புக்கு வந்த துர்ப்பாக்கிய நிலை .
சிலர் இப்போது சொல்லலாம்
'என்னை போல் சிவாஜி ரசிகர் கிடையாது .அவர் படத்தை நான் பார்த்தது போல் யாரும் பார்க்க முடியாது . பார்த்தாலும் என்னை போல் ரசிக்க முடியாது. ரசித்தாலும் என்னை போல் எங்கும் யாராலும் சிலாகித்து எழுத முடியாது போனால் போகிறது என்று தருமி போல் உங்களை எல்லாம் இந்த திரியில் ஒரு பதிவாளராக ஏற்று கொண்டு இருக்கிறோம் ' .என்று
1978/79/80 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியால் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ..என்னை போல் ஒருவன் பரபரப்பு எதுவும் இல்லாமல் 45 நாட்கள் ஓடியது
மார்ச் 24 அன்று பாலச்சந்தர் கமல் இணைந்த 'இலக்கணம் மாறிய கம்பன் ஏமாந்த' கருப்பு வெள்ளை நிழல் நிஜமாகிறது நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் .பாலா ரசிகர்களும்,மெல்லிசை மன்னர் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் .இதே நேரத்தில் ரஜினி,லதா ,விஜயகுமார் நடித்து என் வீ யார் pictures 'ஆயிரம் ஜென்மங்கள் 'நெல்லை ரத்னாவில் வெளியாகி 'வெண் மேகமாக' வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. ரஜினி,லதா கிசு கிசு பரவலாக பட்டி தொட்டி எங்கும் மாய மூக்குத்தி ஆக பரவி கொண்டு இருக்கிறது.இதற்கு முன்னரே பிப்ரவரியில் ரஜினி ,லதா,விஜி,மஞ்சு,ஜெய் கணேஷ்,வசந்தி(பஞ்ச கல்யாணி) ஜோடிகளில் நெல்லை சிவசக்தியில் வெளியான நடிகர் திலகம் முகாமில் இருந்து பிரிந்து வந்த பி மாதவன் இயக்கிய அருண் பிராசாத் மூவிஸ் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற 'அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்க முடியாது ' என்ற பாடலின் போது பிளந்த விசில் சப்தம் இன்றும் காதை நொய் என்று குடைந்து கொண்டு தான் இருக்கிறது
ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் .
மே மாதத்தில் மீண்டும் நடிகர் திலகத்தின் 'புண்ணிய பூமி' சிவசக்தியில் .இதே நேரத்தில் நெல்லை ரத்னாவில் ஆயிரம் ஜென்மங்கள் 50 நாட்கள் கடந்து விழா கொண்டாடி பின் ரஜினி வில்லனாக நடித்த சந்திர போஸ் இசையில் வெளிவந்த வி சி குகநாதனின் கருப்பு வெள்ளை 'மாங்குடி மைனர்' ரிலீஸ். விஜயகுமார் மக்கள் திலகம் புகழ் பாட ஆரம்பித்த நேரம்.மக்கள் கலைஞர் வர்ணம் மாற ஆரம்பித்த நேரம் .நெல்லை சென்ட்ரலில் நிழல் நிஜமாகிறது 50 நாள் முடிந்து 'வருவான் வடிவேலன் ' வெளியீடு .மெல்லிசை மன்னர் இசையில் லத்து பக்தி பரவசத்துடன் காவடி ஆடிய படம். பெண்களின் அரோகரா சப்தத்தில் ,பாலாவின் 'ஜாய் புல் சிங்கபூர் ,கலர் புல் மலேசிய ' என்று சப்தமில்லாமல் 70 நாட்கள் கடந்த வெற்றி படம்
ஜூன் தியாகம் 100வது நாள் விழா நெல்லை பார்வதியில் மீண்டும் சிவாஜி ரசிகர்கள் -காங்கிரஸ் கட்சியினர் ரகளை அரங்கேற்றம் . 100வது நாள் மாலை காட்சி காங்கிரஸ் கட்சி விழாவாகவும் ,இரவு காட்சி ரசிகர் மன்ற விழாவாகவும் நடந்தேறியது . நடிகர் திலகத்தின் ஜெனரல் சக்கரவர்த்தி நெல்லை பார்வதியில் தியாகத்திற்கு பிறகு வெளியாகிறது .இதே மாதத்தில் தான் நெல்லை பூர்ணகலாவில் கமல்,ரஜினி நடித்த ஸ்ரீதரின் மீண்டும் முக்கோண காதல் கதை 'ஒரே நாள் உன்னை நாள் ' என்று இளைமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. நியூ ராயலில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ரஜினி தனி ஹீரோவாக அரங்கேற்றம் ஆகிய நடிகர் திலகத்தின் ஸ்டைல் பாடல் 'நண்டூருது நரியூருது' பைரவி '
ஜூலையில் நெல்லை ரத்னாவில் வெளியான 'வணக்கத்துக்குரிய காதலியே' விஜி ஸ்ரீதேவி ,ரஜினி ஸ்ரீதேவி இணைவில் வந்த ஞே ராஜேந்திர குமார் கதை .மெல்லிசை மன்னர் இசை -ஜாலி ஆபிரகாம் ஜல்லி அடிக்க ஆரம்பித்த நேரம் . திருலோக் இயக்கம் அவ்வளவாக பரபரப்பை கிளப்ப வில்லை .
ஆகஸ்ட் பராதி ராஜவின் இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' நெல்லை நியூ ராயல் திரை அரங்கில் மாஞ்சோலை குயிலாக கூவ ஆரம்பிக்க ,பின்னாலேயே மகேந்திரனின் செந்தாழம் பூ நெல்லை சென்ட்ரலில் முள்ளும் மலராக பரிமளிக்க, நெல்லையில் உள்ள எந்த டீ கடைக்கு சென்றாலும் ரசிகர்கள் 15 பைசா டீக்கும் 25 பைசா விவா டீ க்கும் டீ மாஸ்டர் தாடையை கொஞ்சியும் கெஞ்சியும் lp இனிரிகோ ,hmv இசைக்க கேட்ட காலம் .கிழக்கே போகும் ரயில் 100வது நாள் விழா நெல்லை ராயலில் கோலாகலமாக நடந்தேறியது . சுதாகர் என்ற மொக்கை ஹீரோ 'ஆல' மரமான தமிழ் சினிமாவை 'ஆழ'ம் இல்லாமல் 'ஆள' ஆரம்பிக்கிறார் . தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற புது விதி நமது தலை விதியாகிறது. பாரதிராஜா ஆரம்பித்த மாற்றம் இன்றும் தொடர்கிறது. 78 களில் ஏற்பட்ட சில கெட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.
வருகிறது தீபாவளி மாதம் அக்டோபர்
வந்தார் அய்யா 'இலங்கையில் இளங்குயில் உடன் இன்னிசை பாடிய' எங்கள் பைலட் பிரேம்நாத் .நெல்லை சென்ட்ரல்லில் .பெல்ட் எடுத்து கொண்டு உறுமி நிற்கும் போஸ்டர் கூட நினைவில் இருக்கிறது. நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் மாடி ஏறும் போது ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் .அதற்கு அருகில் வாயிலை பார்த்து ஒரு ஷோ கேஸ் இருக்கும். அதில் இந்த போஸ் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்களால் மாலை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது .
78 தீபாவளி கோலாகலத்தை மறக்க முடியுமா ? நெல்லை பூர்ணகலாவில் வண்டிக்காரன் மகன்,சிவசக்தியில் 'தப்பு தாளங்கள்',
ரத்னாவில் 'மனதிரில் இதனை நிறங்களா ',பார்வதியில் 'தாய் மீது சத்தியம் '.லக்ஷ்மியில் ஜேப்பியாரின் 'தங்க ரங்கன் ' ,பாபுலர் இல் 'சிகப்பு ரோஜாக்கள் ' .கிழக்கே போகும் ரயில் ராயலில் தீபாவளிக்கு தொடர்ந்தது . ரத்னாவில் 10 தினங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மைல் கல் ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' 3 தினங்கள் மட்டுமே (3 திங்கள் ஓட வேண்டிய படம்) .கொஞ்சம் தினங்கள் கழித்து மீண்டும் நடிகர் திலகத்தின் தசோலி அம்பு சாக்கடை சந்து என்று அந்நாட்களில் சொல்லப்படும் நெல்லை லக்ஷ்மியில் .நடிகர் திலகத்தின் தெய்வமகன்,பாபு,ஞான ஒளி எல்லாம் இங்கே தான் சாக்கடையில் விழுந்து டிக்கெட் எடுத்து திரை அரங்கு உள் சென்று சட்டையை 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ' சபரிமலை பாடல் போல் எப்போதும் நறுமணம் கமிழும் நெல்லை லக்ஷ்மி கக்கூஸ் இல் பிழிந்து காய போட்டு மேல் சட்டை இல்லாமல் நோஞ்சான் பாடி உடன் பார்த்த களித்த, கழித்த நாட்கள் தான் எத்துனை எத்துனை
டிசம்பர் இல் நடிகர் திலகத்தின் பரபரப்பு இல்லாமல் நெல்லை நியூ ராயலில் 'ஜஸ்டிஸ் கோபிநாத் ', நெல்லை பார்வதியில் மேற்கத்திய சங்கீதத்தை தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளில் கிடார் கம்பிகளின் மூலமாக ஏற்றிய (டார்லிங் டார்லிங் i லவ் யு) ப்ரியா,நெல்லை ரத்னாவில் ரஜினிகாந்த் - விஜயகாந்த் இணைந்து வந்து இருக்க வேண்டிய இறுதியில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்கள் தாங்கி வந்த மீண்டும் அருண் பிரசாத் மூவிஸ் மாதவனின் 'என் கேள்விக்கு என்ன பதில் '
இதனை களேபரங்களுக்கும் நடுவில்
வெள்ளிகிழமை ஹீரோ ஜெய்
'டாக்ஸி டிரைவர் (parvathi),சக்கை போடு போடு ராஜா (rathna),'உள்ளத்தில் குழந்தையடி' (sivasakthi),'மேள தாளங்கள்' (central),'முடி சூடா மன்னன் ' (lakshmi),'வாழ நினைத்தால் வாழலாம் '(popular),ராஜ்வுகேற்ற ராணி' (lakshmi),'மக்கள் குரல்' (lakshmi),'இது எப்படி இருக்கு' (sivasakthi),'இளையராணி ராஜலக்ஷ்மி' (rathna)
சிவகுமார்
'கண்ணாமூச்சி' (central),'சொன்னது நீதானா ' (rathna),'அதை விட ரகசியம்' (poornakalaa),'சிட்டு குருவி (sivasakthi)(வாசு சிலாகித்து எழுதிய இளைய ராஜாவின் இனிய பாடல்கள் நிறைந்தும் பறக்க முடியாமல் போனது )
,'கை பிடித்தவள்' (not in memory),'கண்ணன் ஒரு கை குழந்தை' (lakshmi),'ராதைகேற கண்ணன் ' (rathna)
முத்துராமன் 'வயசு பொண்ணு (rathna),அவள் தந்த உறவு (pornakalaa),வாழ்த்துங்கள் (sivasakthi),உறவுகள் என்றும் வாழ்க(lakshmi) ,பேர் சொல்ல ஒரு பிள்ளை (parvathi),அன்ன பூரணி (sivasakthi),அச்சாணி (lakshmi) போன்ற படங்கள்
ஸ்ரீகாந்த் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (central),சதுரங்கம் (sivasakthi)(ரஜினியும் உண்டு),கருணை உள்ளம் (lakshmi),ஒரு வீடு இரு உலகம் (rathna) ,அக்னி பிரவேசம் (central) -கருணை உள்ளம் ஸ்ரீகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழ் நாடு அரசு விருது வழங்கியது
என்று சிந்து பாடி கொண்டு தான் இருந்தார்கள்.
மிகவும் நீண்டு விட்டது . மன்னிக்க வேண்டுகிறேன்
இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் செமஸ்டர்,மூன்றாம் செமஸ்டர் எந்த arrear இல்லாமல் பாஸ் செய்தேன் :) (கொஞ்சம் sj ப்ளீஸ் பொறுத்தருள்க
)
திரைப்படங்களும் arrear இல்லை :)
பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி
மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்