https://youtu.be/Xyp_IBF9-CI............ Thanks.........
Printable View
https://youtu.be/Xyp_IBF9-CI............ Thanks.........
புரட்சித்தலைவர் அவர்களின் தம்பிமார்களுக்கு வணக்கம். நேற்று வெளிவந்துள்ள இரண்டு சட்டசபை இடைத்தேர்தல் முடிவின் வெற்றி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரியான பல வெற்றிகளை பெறுவதற்கு, விதை விதைத்து உருவாக்கிய நம் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி ஆசி பெறுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை............. Thanks.........
ஒரு தலைவன் எப்படி உருவாக வேண்டும்... என காட்டிய ஒரே தலைவன் எம். ஜி .ஆர்.,
தன் உழைப்பால் உயர்ந்தார் எம் ஜி ஆர்
தான் ஈட்டியதை ஈந்து மகிழ்ந்தார்
மக்களோடு மக்கள் ஆனார் மக்களின் அன்பின் உச்சம் கண்டார்...
எம் ஜி ஆரை குறித்து ஒரு பிரபல மலையாள நாளிதழ் இப்படி குறிப்பிட்டது
மகாத்மா காந்திஜீ க்கு கூட சென்று அடைய முடியாத மக்களின் அடிமனம் சென்று அவர்களின் முழு அன்பையும் எம் ஜி ஆரால் பெற முடிந்தது என்று
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்........... Thanks.........
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்...,
“இனி தமிழகத்தில் அண்ணா திமுக என்ற ஒரு கட்சியே இருக்க போவது இல்லை” என்று திமுகவினர் மட்டுமல்ல, அதிமுகவின் அதி தீவரமான தொண்டர்கள் கூட நம்பிக்கை இழந்து கவலை கொள்ள தொடங்கியதில் வியப்பு ஒன்றும் இல்லை அன்று.
ஒரே கட்சி சிதறு தேங்காய் போல நான்காக உடைந்து, இரட்டை இலை சின்னமும் இழந்து, மக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் இழந்து, ஸ்டாலினிடம் மறைமுக பேரம் கண்ட தினகரனின் தினம் ஒரு ஆட்டங்களினால் இருந்த சொச்சகொச்ச நம்பிக்கையும் மக்களிடம் இழந்து, கடலில் பெரும் அலைகளுக்கு இடையே தத்தளிக்கும் ஒரு கப்பல் போல, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையை அடைந்த ஒரு ஆட்சியை, கட்சியயை...
அடடா...
என்ன ஒரு லாவகத்துடன்... என்ன ஒரு நிதானத்துடன்... என்ன ஒரு ராஜதந்திரத்துடன்.... காச்மூச் என்று மிரட்டி கொண்டிருந்த மத்திய அரசுடன் இருந்த உறவை.. நட்பாக்கி, பின், இறுக்கி..... எதிர் கட்சி எம்.எல்.ஏ க்களை கூட அனாசியமாக வளைத்து போட்டு, சிலரை இணைத்து, சிலரை வெளியே அனுப்பி, சிலரை ஆப் செய்து, சிலரை மண்ணை கவ்வ வைத்து, சிலருக்கு கிச்கிச் மூட்டி, சிலரை தலை கிறுகிறுங்க வைத்து, இதோ இன்று கவிழும்... நாளை கவிழும் என்று மிரட்டி கொண்டிருந்த எதிர்கட்சி தலைவரின் கனவில் மண்ணை அள்ளி தூவி.... மக்கள் திலகம் கண்ட மாபெரும் இயக்கம், செல்வி ஜெயலலிதாவினால் உச்சம் கொண்டு செல்லப்பட்ட நாட்டின் மிக பெரிய ஒரு இயக்கத்தின் மீது... மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற வைத்து, எந்த வித சேதாரமும் இன்றி, இன்று கப்பலை பாதுகாப்புடன் கரையில் சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி அவர்களும், துணை முதல்வர் அவர்களும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.. நன்றிகள்.
அண்ணா திமுக என்பது குடும்ப கட்சி அல்ல. இது தொண்டர்களின் இயக்கம். எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட இயக்கம். செல்வி ஜெயலலிதா அவர்களின் இயக்கம் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளது. அண்ணா திமுக தொண்டர்களின் அசுரதனமான பணிகளுக்கும், அயராத முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது. வெற்றிகள் தொடரட்டும்...... Thanks...
கருணாநிதியைக் கலங்கடித்த திண்டுக்கல் தேர்தலும்
தி.மு.கவை உறைய வைத்த உலகம் சுற்றும் வாலிபனும்
சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.
விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.
இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார். ‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’........... Thanks.........
தீபாவளி மறுவெளியீடு*---------------------------------------
இன்று முதல் (25/10/19) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*
இன்று முதல் (25/10/19) மதுரை சென்ட்ரலில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் வசூல் சாதனை புரிய வருகை தந்துள்ளது .
கோவை பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .------------------------------------------------------------------
சண்முகாவில் 25/10/19முதல்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "* டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*
டிலைட்டில்* 25/10/19 முதல் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தூத்துக்குடி சத்யாவில் 25/10/19 முதல் கொள்கை வேந்தன் / கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் , சனி ஞாயிறு 3 காட்சிகள் நடைபெறுகிறது*
23/10/19 முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் ' பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் )நடைபெறுகிறது .
செய்தி திருத்தம்*-------------------------
25/10/19 முதல் சென்னை சரவணாவில் டி.டி.எஸ். அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .சென்னை பாலாஜியில் அல்ல..
தினத்தந்தி வெள்ளிமலர் -25/10/19
என்றென்றும் கண்ணதாசன் .--------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படத்திற்கு 1956லும், மகாதேவி படத்திற்கு 1957லும் கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதி இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றன .
இந்த வெற்றிகளை தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க "ஊமையன் கோட்டை " என்கிற படத்தை தயாரிக்க முற்பட்டார் .
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பெரிய மேடை போடப்பட்டு , அறிஞர் அண்ணா தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.* தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா இப்படி நடைபெற்றது அதுவே முதல் தடவை .
ஊமையன் கோட்டை* படப்பிடிப்பு தொடங்கியது .* எம்.ஜி.ஆர். வேறு படங்களில் நடித்து கொண்டிருந்ததால்* அவர் இல்லாத காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன .
மதுரை வீரன், மகாதேவி படங்களின் வசனங்கள், வெற்றிகள் பற்றி* கேள்விப்பட்டவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் உயரத்திற்கு போய்விடுவார்.அவரை வளர விடக்கூடாது என்று முடிவு செய்து , இடைப்பட்ட காலத்தில்*எம்.ஜி.ஆரிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர் மனதை கலைத்து விட்டார்கள் .
கண்ணதாசன் தன்னை பற்றி இப்படி பேசி இருப்பாரா என்று எம்.ஜி.ஆர். யோசிக்கக்கூட அவர்கள் விரும்பவில்லை .எம்.ஜி..ஆரும்,கண்ணதாசனும் அப்போது தி.மு.க. வில்தான் இருந்தார்கள் .இதன் காரணமாக ஊமையன் கோட்டை படம் கைவிடப்பட்டது .
கண்ணதாசன் மீது தப்பில்லை.* தன்னிடம் வேண்டுமென்றே தவறான தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்று பின்னாளில் எம்.ஜி.ஆர். உணர்ந்து கொண்டார் .* இருவரும் மனம் விட்டு பேசினார்கள். மீண்டும் எம்.ஜி.ஆர். கண்ணதாசன் கூட்டணியில் _நாடோடி மன்னன் , மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா , ராஜா தேசிங்கு என வரிசையாக படங்கள் வெளிவந்தன .
குமுதம் வார இதழ்*
கே. ராஜேஷ், திருவள்ளூர்*
நீங்கள் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகராமே.?* இதுதான் தங்களை ஆக்ஷன்*படங்களில் நாட்டம் கொள்ள வைத்தது உண்மையா ?
பதில் :எம்.ஜி.ஆர். அவர்களின் டெக்னீகல் நாலெட்ஜ் மீது பெரிய வியப்பு உண்டு .ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற உலகம் சுற்றும் வாலிபன், அண்டர் வாட்டரில்*அவள் ஒரு நவரச நாடகம், பாடல், ஸ்கெட்டிங்கில் கிளைமாக்ஸ் சண்டை, , நாடோடி மன்னனின் ஒரு தீவு தண்ணீரில் மூழ்குவது !. இதெல்லாம் பிரமிப்பான கற்பனைகள் .
தினகரன் வெள்ளிமலர் 25/10/19---------------------------------------------
old is gold
பந்துலு கட்சி மாறிய கதை .------------------------------------------
பி.ஆர். பந்துலு , சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனராக 1960களில்*தொடக்கத்தில் உருவெடுத்தார் .சிவாஜி கணேசனின் 100வது படத்தை தானே தயாரித்து, இயக்கி ,முரடன் முத்து என்கிற படத்தை வெளியிட முற்பட்டார் .
ஆனால் ஏ.பி.என்.நாகராஜன் தயாரிப்பில் , 100வது* படமாக நவராத்திரி படத்திற்கு சிவாஜி கணேசன் அந்தஸ்து அளித்தார் .
இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான பந்துலு, தான் இதுவரை இயக்காத* எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து ,* படம் தயாரிக்க விரும்பினார் .* *எம்.ஜி.ஆரும்* பச்சை கொடி காட்ட "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை பிரமாண்டமாக தயாரித்து பெரும் வெற்றி பெற்றார் . அதை தொடர்ந்து, நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை தயாரித்தார் .