Printable View
சிரித்தத முகத்துடன் கொடுக்கும்
கொடை வள்ளலின் அழகை பாருங்கள்
http://i1094.photobucket.com/albums/...EDC4736a-1.jpg
1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லை யுத்தத்தின் போது நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் யுத்த நிதிக்கு தனது 200 பவுன் மதிப்புள்ள தங்கப்பேனாவை நமது நடிகர் திலகம் நன்கொடையாக பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் வழங்குகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தத் தங்கப்பேனா தனது "ஸ்கூல் மாஸ்டர்(1958)" கன்னடப் படத்தில் கௌரவ நடிகராக நடித்ததற்காக பந்துலு அவர்கள் நடிகர் திலகத்திற்கு அன்புப்பரிசாக வழங்கிய பொருள்.
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்துஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
http://i68.tinypic.com/e3jh3.jpg
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
http://i67.tinypic.com/2yor8rb.jpg
திரிச்சியிலுள்ள ஜமால்-முகம்மது கல்லூரி கட்டிட நிதிக்காக 1968 ம் ஆண்டு வியட்நாம் வீடு நாடகம் நடத்தி ரூ.1.30,000/-கொடுத்தார்.
இது பொதுப்பணி
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
http://i68.tinypic.com/dqj3f4.jpg
1968ஆம் ஆண்டு மயிலாப்புரிலுள்ள விவேகானந்தா கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ.40,000/- அளித்தார்.
இது பொதுப்பணி
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
http://i67.tinypic.com/2cz3q00.jpg
சிவாஜி- பிரபு அறக்கட்டளை அமைத்து, திரையுலகில் நலிந்த பிரிவிலுள்ள கலைஞர்களின் பிள்ளைகள்
பிள்ளைகள் பள்ளிப்படிப்பை தொடர வளிவகுத்தார். மாநகராட்சி,நகராட்சி கிராமப்பஞ்சாயத்தினர் நடத்தும்
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.இதுவரை பல லட்சக்கணக்கான பணம்
செலவிடப்பட்டுஏராளமானஏழை,எளியவர் பயன் பெற்றுள்ளனர்.
இது பொதுப்பணி
From the Chevalier Sivaji Ganesan Felicitation Souvenir
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fe&oe=58B9B8D9
எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது ...நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
PHOTO-(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)
(முகநூலில் இருந்து)