-
நம் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு அழகின் அம்சமா! இல்லை அழகின் உச்சமே அவர் !!
அவர் 1958ல் நாடோடிமன்னனில் துவங்கினார் தனது அழகை தான் தரித்திரிந்த ஆடைகள் மூலமா? அல்லது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அணிந்திருந்த ஆடைகள் மூலமாகவா ?
இத்துடன் சில படங்கள் பதிவு செய்துள்ளேன்.அதில் நமது தலைவர் அந்த ஆடைகளில் எவ்வளவு வசீகரமாக கனக்கச்சிதமாக எவ்வளவு அழகை கொடுக்கிறார் பாருங்கள்.
இதில் ஒரு வினா எழுந்தது.தலைவருக்கு எந்த ஆடைகள் போட்டாலும் கனக் கச்சிதமாக பொருந்தும்.மற்ற நடிகர்களுக்கு சொதப்பும் என்ற வழக்கமும் உண்டு.
ஆனால் உண்மை என்ன ?
தலைவருக்கு எந்த ஆடை அணிந்தாலும் அவருக்கு பொருந்தும்.ஆனால் இதில் பெருமை என்னவெனில் தலைவர் அணியும் ஆடைகளால் அந்த ஆடைகள் தான் பெருமை பெறுகிறது .எப்படி. இந்த அழகன் அணியும் ஆடைகள் தான் பெற்ற பேறை அடைகிறது.
தலைவரால் யாருக்கெல்லாம் பெருமை கிடைக்கிறது பாருங்கள்.இதே கருத்தை அமீரகம் சைலேஷ் பாசு அவர்கள் ஒரு பதிவில் சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை...nssm
-
#புரட்சிதலைவர்MGRபுகழ்ஓங்குக!!!!!! உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை...
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்ஜியாரின் திரைப்படங்கள் பற்றிய அலசல் தொடரில் இன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 27 வது
படமான என் தங்கை பற்றி பார்ப்போம்..
என் தங்கை 1952 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தார். இந்த படம் அதே பெயரில் டி.எஸ். நடராஜனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த கதை நாடகமாக நடைபெற்று கொண்டிருக்கும் போது திரையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்து முடித்தார்...
சி.எச். நாராயண மூர்த்தி தயாரித்தவர் அசோகா பிக்சர்ஸ் எழுதியது
டி.எஸ்.நடராஜன்
கே.எம். கோவிந்தராஜன்
திரைக்கதை
நாராயண மூர்த்தி
எம்.ஜி.ராமச்சந்திரன்
பி.எஸ்.கோவிந்தன்
பி.வி.நரசிம்ம பாரதி
இ.வி.சரோஜா
மாதுரி தேவி
வி. சுஷீலா
சி.என். பாண்டுரங்கன் அவர்களின் இசையில், ஒளிப்பதிவு ஜிதன் பானர்ஜி எடிட்டிங் சி.எச். நாராயண மூர்த்தி
அசோகா பிக்சர்ஸ் தயாரித்து
விநியோகித்தது வெளிவந்த தேதி
மே 31, 1952
மூத்த சகோதரர் ராஜேந்திரன் (எம்.ஜி.ராமச்சந்திரன், குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் நல்ல மனம் படைத்தவர், அவரது இளைய சகோதரர் செல்வம் (பி.வி. நரசிம்ம பாரதி), ஒரு மாணவர், அவரது தங்கை மீனா (ஈ.வி.சரோஜா) மற்றும் அவர்களது உடல்நிலை சரியில்லாத தாய் குணவதி (எஸ்.ஆர்.ஜனகி) ). அவர்களின் தந்தைவழி மாமா கருணாகரன் பிள்ளை (எம்.ஜி. சக்ரபாணி), தேசபக்தர் காணாமல் போன பின்னர் அவர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ராஜேந்திரனின் எம்ஜிஆர் அவர்களின் குடும்ப நிதி உதவிக்கான அனைத்து கோரிக்கைகளையும் மறுக்கிறார். மறுபுறம், கருணாகரனின் மகன் சூரியமூர்த்தி (பி.எஸ். கோவிந்தன்) தனது உறவினர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்...
ஒரு மாலை, ஒரு இடியுடன் கூடிய
விபத்தில், மீனா தனது பார்வையை இழக்கிறாள்.அப்போது அவள் செல்வத்தின் செல்வந்த மனைவி ராஜம் (மாதுரி தேவி), அவளுடைய மைத்துனரின் பலிகடாவாக மாறுகிறாள். .. அதிலிருந்து
மீனாவை வெறுக்கத் தொடங்குகிறார். முன்னர் நிலைமையை அறியாத ராஜேந்திரன், இறுதியாக தனது தங்கையின் குடும்பத்தில் படும் கஷ்டங்களை கண்டுபிடிப்பார்... கடுமையான சண்டையைத் தொடர்ந்து, செல்வமும் ராஜமும் குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்கள், ராஜேந்திரனை முற்றிலும் கலக்கமடையச் செய்கிறார்கள்.
இதனால் நோயுற்ற அவர்களின் தாய் இறந்துவிடுகிறார், இதன் பிறகு அவரின் மாமாவால், ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
அவர்களது உறவினர் ஒருவர் சூரியமூர்த்தி, தனது தந்தையிடமிருந்து தலைநகருக்கு வேலை தேடி ஓடிவருகிறார், அங்கு அவர் ஒரு ரிக்*ஷா டிரைவராக வேலை செய்து கொண்டு இருக்கிறார்..
ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோருக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்குகிறார். இதற்கிடையில், இளைய சகோதரர் செல்வம் தனது மாமியார் (ஆர். பி. ராவ்) போலவே குதிரை பந்தயத்திற்கு அடிமையாகி, தனது குடும்பத்தை நிதி அழிவுக்குள்ளாக்கி, ராஜமை புறக்கணிக்கிறார். ராஜேந்திரன் தம்பதியரை சமரசம் செய்த பிறகு, ராஜம் சாலை விபத்தில் இறந்து விடுகிறாள் கருணாகரன் தன் மகனைத் தேடி வருகிறான், அவனும் ஒரு வாகனத்தால் தட்டப்படுகிறான். இறக்கும் தருவாயில் அவர்,தன் மகன் சூரியமூர்த்திக்கு ஒரு கிறிஸ்தவரான மேரி (வி. சுஷீலா) என்பவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறார். ராஜேந்திரனைப் பொறுத்தவரை, அவர் இறுதியாக, தனது எல்லைக்குத் தள்ளப்பட்டு, தனது சகோதரியைக் கடலுக்குள் கொண்டு செல்கிறார், அவர்கள் இருவரும் அலைகளின் கீழ் மறைந்து விடுகிறார்கள்.
ராஜேந்திரனாக எம்.ஜி.ஆர்
சூர்யமூர்த்தியாக பி.எஸ்.கோவிந்தன்
செல்வமாக பி.வி.நரசிம்மபாரதி
கருணாகரம் பிள்ளையாக எம்.ஜி.சக்ரபணி
வீரசாமி பிள்ளையாக டி. ஆர். பி. ராவ்
அசாகனாக சி.எஸ். பாண்டியன்
வீரையன் ஆக எஸ்.என்.நாராயணசாமி
சித்ரகுப்தனாக கோட்டாபுலி ஜெயராமன்
இடியட் பாயாக மாஸ்டர் கிருஷ்ணன்
குண்டு செட்டியாக என்.ஜஸ்வர்
ராஜமாக மாதுரி தேவி
மேரியாக வி.சுஷீலா
குணவதியாக எஸ்.ஆர்.ஜானகி
மீனாவாக ஈ.வி.சரோஜா
அசாகியாக எம். என். ராஜம்
இப்படத்தை தெலுங்கில்
சி.எம். நாராயண மூர்த்தி
நா செல்லெல்லு மற்றும் அதே அணியுடன். இது 1953 இல் வெளியிடப்பட்டது. இந்த படத்தை
எல்.வி.பிரசாத் இந்தி மொழியில் சோதி பஹேன் என்ற தலைப்பில் ரீமேக் செய்து 1959 இல் வெளியிடப்பட்டது.
சி.என். பாண்டுரங்கன் இசையமைத்தார்.
பாடல்களை பாரதிதாசன், ஏ.மருதகாசி, சரவனபவனந்தர், சூரதா,
கி.ராஜகோபால் மற்றும் நரசிம்மன்.
ஆகியோர் எழுதினார்
பாடகர்கள் பி.எஸ். கோவிந்தன் மற்றும் சி.எஸ். பாண்டியன்.
பின்னணி பாடகர்கள்
எம்.எல். வசந்தகுமாரி,
பி.லீலா, என்.லலிதா, ஏ.பி.கோமலா, கே.வி.ஜானகி, ஏ.ஜி.ரத்னமாலா,
டி.ஏ.மோதி, மற்றும் ஏ.எம்.ராஜா.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...Skt...
-
எச்சூழ்நிலையிலும் மனிதநேயத்தில் முதன்மையாக இருப்பார் எம்.ஜி.ஆர் !
1972ல் நமது தலைவர் இயக்கம் ஆரம்பித்து ஒவ்வொரு இடங்களுக்கும் மக்களை சந்திக்க செல்வது வழக்கம்.அப்படி 1973ல் திண்டிவனம் வழியாக கழக கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது திண்டிவனத்திற்கு முன்பே ஒரு தரப்பினர் தலைவர் வருவதை அறிந்து அவரை ரோட்டில் வரவேற்று வேனில் இருந்தபடியே பேசச்சொன்னார்கள்.கூட்டம் கூடிவிட்டது.பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு மூதாட்டி முண்டியடித்து முன்வர முயற்சித்தும் வர முடியவில்லை.இந்தக்காட்சியை கண்டார் தலைவர்.உடனே அந்த மூதாட்டியை காரின் அருகே அழைத்து என்னவென்று கேட்டார்.உடன் அந்த மூதாட்டி அகமகிழ்ந்து முகமகிழ்ந்து ராசா என்வீட்டில் உனது பாதம் படவேண்டும் அது தான் என் ஆசை.வேற எதுவும் வேண்டாம் என்று சொல்லியதைக் கேட்டதும் தலைவர் கண் கலங்கிவிட்டார்.சரி என்று சொல்லிவிட்டு அந்த மூதாட்டியை கூட்டம் முடிந்தவுடன் தன் காரில் ஏற்றிக்கொண்டு அந்த மூதாட்டியின் இல்லத்திற்கு சென்றார்.அது ஒரு அநேக ஓட்டைகள் நிறைந்த குடிசை.தலைவர் உள்ளே சென்று அமர்ந்து ஏதாவது குடிக்க கொடுங்கள் என்று கேட்டார்.அந்த மூதாட்டியோ ராசா இங்கு என்னிடம் கூழ் மட்டும் தான் உள்ளது.அது குடிக்கிற மாதிரி இருக்காது என்றாள். தலைவரோ அம்மா கொடுக்கும் கூழ்தானே கொடுங்கள் என்றார்.உடன் அதை பருகிக்கொண்டிருக்கும் போதே தலைவர் மூதாட்டியை பார்த்தார்.அந்த மூதாட்டி மகிழ்ச்சி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.பின்னர் அந்த மூதாட்டியின் மகிழ்ச்சியில் திளைத்து அவருக்கு வேண்டியதை செய்து விட்டு விடைபெற்றார்.அந்த மூதாட்டி ஒரு இஸ்லாமியப்பெண். தலைவர் எங்கு சென்றாலும் முதலில் மனிதநேயத்தில் தான் கவனம் செலுத்துவார்.இந்த நிகழ்வின் கார்ட்டூன் படம் தான் இத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தை செய்தியுடன் வெளியிட்டது குமுதம் இதழ்..........nssm.........
-
#பொக்கிஷம்
மக்கள் திலகம் 1967 ம் வருட இடைத்தேர்தலில் பரங்கி மலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்...
இந்த பதவிலியிருந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து 1977 ம் வருடத்தில் அஇஅதிமுக எனும் தனி இயக்கம் கண்டு தமிழக முதலமைச்சரானார் மக்கள் திலகம்.
இன்று புதிய கட்சியை துவங்குபவர்கள், களத்தில் படு தோல்வி அடைந்தாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றாலே வெற்றி பெற்றதாக கொண்டாடுகிறார்கள். மக்கள் திலகமோ கட்சி துவங்கிய சில வருடத்திலேயே தமிழக முதல்வராகி சாதனை படைத்தார் , அஇஅதிமுக என்னும் இயக்கத்தை தமிழகத்தின் அதிக நாட்கள் ஆண்ட கட்சி என்ற சாதனையை படைக்க வைத்தார்.... Sr.Bu..
-
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா Amma ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாAmma அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் Amma ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்…."மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்".......BPNG
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள்
அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த ஓவ்வொரு காவியங்களை பற்றிய தகவல்கள் மற்றும் அந்த படத்தின் விமர்சனம் பற்றிய என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்று அவருடைய 28-வது படமான #"நாம்", திரைப்படம் பற்றி பார்ப்போம்...
நாம் திரைப்படம் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில்
ஜூபிட்டர் பிக்சர்ஸ்
மேகலா பிக்சர்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவானது பி.எஸ்.வீரப்பா மற்றும் கருணாநிதி அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம் வசனம் எழுதியவர்
மற்றும் திரைக்கதை எழுதியவர்
மு.கருணாநி
இசை சி.எஸ்.ஜெயராமன்
ஒளிப்பதிவு ஜி.கே.ராமு
எடிட்டிங் ஏ.காசிலிங்கம்
வெளியிட்ட தேதி
5 மார்ச் 1953
குமரன் (எம்.ஜி.ஆர்) ஒரு ஜமீன்தார் குடும்பத்தின் வாரிசு, அவர் இறக்கும் தனது தாயிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்கிறார். இருப்பினும், விருப்பமும் சொத்து தொடர்பான சாட்சியமும் மலையப்பன் (வீரப்பா) அவர்களால் மறைக்கப்படுகின்றது.
ஒரு மருத்துவர் சஞ்சீவி
(எம்.ஜி.சக்ரபாணி) அவர்களும் எம்ஜியாரின் சொத்தின் மீது ஆர்வம் கொண்டு இவரும் ஒரு புறம் சூழ்ச்சி செய்து வருகின்றார் மேலும் அவரது மகள் (சரஸ்வதி) எம்ஜிஆரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக, குமாரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (ஜானகி அம்மையார்) காதலிக்கிறார். மீனாவும் விருப்பம் கொள்ளும் போது, குமரன் தனது நோக்கங்களை சந்தேகித்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். பின்பு நகரத்திற்கு சென்று நகரில், அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆகிறார். இதற்கிடையில், மலையப்பன் குமாரனின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு, குமரன் இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கின்றார்... இருப்பினும், அவர் மீனாவால் காப்பாற்றப்படுகிறார். காணாமல் போனவர் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், ஒரு சிதைக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருகிறார், இது கிராமத்தில் ஒரு பேய் பற்றிய வதந்திகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், உண்மை இறுதியில் வெளிப்படுகிறது, மேலும் காதலர்கள் எவ்வாறு ஒன்றுபடுகிறார்கள் என்பதே கதைக்களம்.
குமாரனாக எம்.ஜி.ராமச்சந்திரன்
மீனாவாக வி.என்.ஜானகி
மலையப்பனாக பி.எஸ்.வீரப்பா
எம்.என்.நம்பியார்
சஞ்சீவியாக எம். ஜி. சக்ரபாணி
சஞ்சீவியின் மகளாக பி.கே.சரஸ்வதி
எஸ். ஆர். ஜானகி
ஆர்.எம்.செதுபதி
எஸ்.எம்.திருபதிசாமி
டி.எம். கோபால்
எம்.ஜெயஸ்ரீ
ஏ. சி. இருசப்பன்
சாண்டோ எம்.எம். ஏ. சின்னப்பா தேவர்
ஆகியோர் நடித்து உள்ளனர்..
திரைக்கதை எழுத்தாளர் காசியின் கதையான கதல் கண்ணீரை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை,
படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், என்று பெயர் இடம் பெறாது அவர் அப்போது பிரபலமான ஐகான் அல்ல, அவரது பெயரை "ராமச்சந்தர்" என்று திரையில் உச்சரித்தார், ஏனெனில் அது "ஸ்டைலானது" என்று நினைத்ததாலும் ஏற்கனவே பிரபலமான நடிகர்
டி. ஆர். ராமச்சந்திரனிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள விரும்பினார்.
சி.எஸ். ஜெயராமன் இசையமைத்துள்ளார்,
எம்.கருணாநிதி எழுதிய பாடல். ஜெயராமன், நாகூர் ஈ.எம்.ஹனிஃபா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி,
எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.பி.கோமலா, கே.ஆர்.செல்லமுத்து மற்றும்
டி. ஆர்.கஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்...
5 மார்ச் 1953 அன்று வெளியிடப்பட்டது. படம் வெற்றிகரமாக இல்லை, ஆனால் அவர் "சுவாரஸ்யமான கதைக்களம், அர்த்தமுள்ள உரையாடல், பயனுள்ள இயக்கம், எம்.ஜி.ஆர், சக்ரபாணி, வீரப்பா, ஜானகி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் நல்ல நடிப்பைப் பாராட்டினார். ".
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
எம்ஜிஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.
‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’… பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.
‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’… எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’… இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.
மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்..........bpg
-
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.
‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !
- தி இந்து............
-
தெய்வம் "எம்.ஜி.ஆர்."
பட்ட அவமானங்கள்....!!
********************************
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக் காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய்,
கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம்... தான் , எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
திரையுலகில் விரக்தியில் இருந்த
எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான
டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச் செய்வார்.
இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம்
எம்.ஜி.ஆர் ஏதோ மனக் குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்க முடியவில்லை , பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்
கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள்.
என் மனைவியை அவமானப் படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி,
எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந் நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு
”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை,
சுடு பாறையில் சூட்டிங், ஏ.எஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார். அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில்
எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே
எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில்
எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிகிறார். டங்கன் காட்சி முடிந்தவுடன்
எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப் படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தைகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் ஆர். டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்து விட்டாரே,
உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற
எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு
எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு
எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்து விட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
---- நன்றி...bpg