https://i.postimg.cc/bYVKLfxp/IMG-4467.jpg
Printable View
எம்.ஜி.ஆரும்..! பாரதிராஜாவும்..!
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ...
அப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்” என்று ரஜினி பாரதிராஜாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.
எம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜா...
”நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.
ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ‘சின்னவர் வருகிறார்… சின்னவர் வருகிறார்… ‘ என்று பயங்கர பரபரப்பு.
அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.
‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.
ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.
அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.
அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.
“அஞ்சு பத்து ‘அண்ணா’க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்” என்று கூறியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.
எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.
‘எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்’ என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் ‘வேதம் புதிது’. ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கட்சி கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்............. Thanks.........
சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி* குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி* சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் இன்று (08/12/19) பிற்பகல் 3.30 மணியளவில்* நடைபெற்றது .* பிரபல பின்னணி பாடகர் கோவை முரளி மற்றும் இதர பாடகர்கள்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :*
1. தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*
2.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
3.நாளை நமதே* - நாளை நமதே*
4.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
5.பனியில்லாத மார்கழியா* - ஆனந்த ஜோதி*
6.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்* - நம்நாடு*
7.அழகிய தமிழ்மகள் இவள்* - ரிக் ஷாக்காரன்*
8.காஷ்மீர் பியூட்டி புல் - இதயவீணை*
9.குமாரி பெண்ணின் உள்ளத்திலே* - எங்க வீட்டு பிள்ளை*
10.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ* - சந்திரோதயம்*
11.பால் வண்ணம் பருவம் கண்டு* - பாசம்*
12.பொன்னெழில் பூத்தது புதுவானில்* - கலங்கரை விளக்கம்*
13.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*
14.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை* - நேற்று இன்று நாளை*
15.எங்கிருந்தோ ஆசைகள்* - சந்திரோதயம்*
16.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
17..பதினாறு வயதினிலே* - அன்னமிட்டகை*
18.அவள் ஒரு நவரச நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*
19.பாட்டுக்கு பாட்டெடுத்து* - படகோட்டி*
20.விழியே கதை எழுது* - உரிமைக்குரல்*
*எனக்குப் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்*
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடலுக்கு உயிர் கொடுத்து இறவாப் புகழுடன் இதய தெய்வமாக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி அவரது ரசிகனாக தொண்டராக பக்தராக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கமல்ராஜ் தெரிவித்துக் கொள்ளும் அன்பு வணக்கம் .
அன்றும் இன்றும் என்றென்றும் வானத்தில் இருப்பது ஒரு சந்திரன் , மக்கள் உள்ளத்தில் இருப்பது ஒரு சந்திரன் அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் .
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக என் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்து என் வாழ்க்கைப் பாதைக்கு வாத்தியராக இருந்து வழிகாட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல .
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து எட்டு வயது சிறுவனாக இருந்த காலம் முதலாக நான் பார்த்த எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன .
நம்மைப் பெற்ற தாய் தந்தையர்கள் நமக்கு சொல்லும் நல்ல அறிவுரைகளை வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி நாம் நடப்பதில்லை அவர்கள் சொல்லும் அறிவுரைகளை நாம் மிகவும் ஆர்வமாகக் கேட்பதும் இல்லை .
தாய் தந்தை சொல் கேட்பதனால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் அடையக்கூடிய வெற்றிகளை தன்னுடைய திரைப் படங்களில் அருமையாகப் படம்பிடித்து மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் காட்டியிருப்பார் புரட்சித்தலைவர் .
தனக்குகொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
அதற்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி . என்று
தன் திரைப்பட பாடல்களில் இளைய தலைமுறைக்கு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி காட்டுவார் .
நீதிக்குப் பின் பாசம்
தர்மம் தலை காக்கும்
திருடாதே
என்று அவர் நடித்த
திரைப்படங்களின் தலைப்புகளையே மக்கள் உள்ளங்களில் எல்லாம்
எளிதில் பதியும் வண்ணம் நல்ல போதனையாக தந்தார் .
புரட்சித்தலைவர் மக்கள் உள்ளத்தில் ஒரு உயர்ந்த இடத்தை பிடிக்க அடிப்படையாக அவரது படங்களின் தலைப்புகளே அமைந்து இருந்தன .
மக்களும் இவரை எங்கள் வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்கள் . அந்த பெயர்களிலும் தலைப்புகளாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தன . தமிழ் திரைப்பட உலகின் முன்னனி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஏழையாக நடித்தாலும் , செல்வந்தராக நடித்தாலும் , மன்னனாக நடித்தாலும், நடோடியாக நடித்தாலும், தொழிலாளியாக நடித்தாலும், முதலாளியாக, நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை தவறாமல் வழங்குவார்.
அவருடைய திரைப்படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மது அருந்தும் காட்சிகளிளோ புகைப்பிடிக்கும் காட்சிகளிளோ நடிக்கவே மாட்டார் .
புரட்சித்தலைவரின் திரைப்படங்களைப் பார்த்துதான் நானும் இன்னும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்தையோ மது அருந்தும் பழக்கத்தையோ ஏற்றுக் கொள்ளமாட்டோம் .
மலேசியாவில் சிறப்பாகச் செயல்படும் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் நான் . எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் முக்கிய கொள்கையே ஊத்த மாட்டோம் ( குடி )
ஊத மாட்டோம் ( புகை )
என்பதுதான் .
புரட்சித்தலைவர் தன்னுடைய திரைப்படங்களைப் பணம் சம்பாரிக்கும் தொழிலாகப் நினைக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் மேடையாக பயண்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டது .
எம்ஜிஆர் நடந்தால் ஊர்வலம் நின்றால் மாநாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கை சிறப்பாக புகழ்ந்துரைத்தார் .
அரசியலில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த சமயத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒரு பெரும் தொகையை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ராமச்சந்திரா நீ கொடுத்த தேர்தல் நிதியை விட திமுகழகத்திற்கு உன்னுடைய பி்ச்சாரம்தான் முக்கியம் உன் முகத்தை காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டுகள் கழகத்திற்கு கிடைத்திடும் என்று புகழ்ந்து பேசிய அண்ணாவின் கருத்தை மக்கள் உண்மை என்று ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்தார்கள் .
அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர் திமுக கட்சியிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிரடியாக நீக்கப்பட்டார் .
அதுவரை புரட்சிநடிகராக அவரைக் கொண்டாடிய தமிழ்நாடு புரட்சித்தலைவராக எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டது . அஇஅதிமுக என்ற கட்சியை துவக்கி அதன் தலைவரானார் . அதன் பின்னர் நடைபெற்ற தின்டுகல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. புரட்சித்தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான மக்களின் முதல்வராக பணியாற்றினார் .
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று மூன்று முறை முதல்வர் என்ற சாதனை படைத்தார் .
யாரும் எதிர்பாராத தருனத்தில் உடல் சுகவீனமுற்று மண்னை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் மக்கள் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்து வருகின்றார் .
நன்மை செய்வதே என் கடமையாகும் என்று எட்டாவது வள்ளலாக வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள் பத்தொன்பதாவது சித்தராக மறைந்தும் மறையாது மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் .
புரட்சித்தலைவரின் அதிதீவிர ரசிகராக இருந்த நான் அவரது தொண்டராக பல நற்பணிகளை எங்கள் பகுதி மக்களுக்குச் செய்து வந்தேன் . அவரது மறைவுக்குப் பின்னர் தமிழகம் செல்லும் ஒவ்வொரு முறையும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்.
அதன் பின்னர் அவர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஊமைகள் செவிடர்கள் பள்ளியில் நல்ல தரமான உணவுகளை அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு வழங்குவேன் .
2014ஆம் ஆண்டு மலேசியாவின் புகழ்பெற்ற மேடை கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து , காமராஜர் அரங்கத்தில் புரட்சித்தலைவர் அவர்களின் 97 வது பிறந்தநாள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி என்னுடைய தலைமையில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தினோம் . அதே விழாவில் மலேசிய அரசாங்கத்தின் மூலம் புரட்சித்தலைவருக்கு தபால் தலையும் வெளியிட்டோம். அந்த விழாவிற்குப் பின்னர்தான் டாக்டர் .கமல்ராஜ் ஆகிய நான் டாக்டர் .எம்ஜிஆர் கமல்ராஜ் என்று புரட்சித்தலைவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டேன் .
ஒரு முறை நான் புரட்சித்தலைவரின் தோட்டத்திற்குச் சென்ற பொழுது என்னுடைய உடல் சிலிர்த்தது, அது போன்ற உணர்வை நான் என் வாழ் நாளில் பெற்றதில்லை.
புரட்சித்தலைவர்தான் உங்களை ஆசிர்வதிக்கின்றார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பொழுது என் கண்களில் நான் அறியாமலேயே ஆணந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அன்று இரவு என் கனவில் தோன்றிய புரட்சித்தலைவர் உன்னுடைய நற்பணிகளை ஒரு இயக்கமாக தொடங்கினால் சிறப்பாகச் செய்யலாம் என்று குறிப்பிட்டார் .
அவரது வழி காட்டலிலும் ஆசிர்வாதத்தாலும் தோன்றியதுதான் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் .
புரட்சித்தலைவர் அவர்களின் அருள்வாக்கின் படி உருவாக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் மூலம் சிறப்பான நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உலகமெங்கும் வாழும் புரட்சித்தலைவரின் பக்தர் உள்ளத்திலும் தனி இடம் பிடித்து வருகின்றோம் .
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
என்று பாடிய எங்கள் புரட்சித்தலைவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் .
நன்றி , வணக்கம் ............ Thanks.........
மதுரையில் திருமண வரவேற்ப்பு விழாவில் கல்கண்டு ஆசிரியர் திரு . லேனா தமிழ்வாணன் அவர்கள் மக்கள் திலகம் பட்டம் கொடுக்கப்பட்டது பற்றியும் மக்கள் திலகத்தை பாராட்டி பேசிய வீடியோ தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் இதில் மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட தொகுப்பு.......... Thanks.........
https://youtu.be/U8ZtcIZGMAE........... Thanks.........
மாலை மலர் -சிறப்பு மலர் - 10/12/19
-------------------------------------------------------
நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான தலைவர் எம்.ஜி.ஆர். ஒருமுறை எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடு வாடகைக்கு தரமாட்டார்கள் .* ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி இந்த நாட்டையே கொடுத்து இருக்கிறார்கள் என பாராட்டி பேசினார் .**
நடிகர் ரஜினியின் பட தயாரிப்பில் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் திரு.பத்மநாபன் .ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் .* சரியாக சொல்ல போனால் இந்த பத்மநாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி .* எம்.ஜி.ஆருக்காக*உயிரையும் விட தயங்காதவர்* என்கிற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் . எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் , அதே கவலையில் இறந்தும் போனார் .* எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்திய போதே உடனிருந்தவர் இந்த பத்மநாபன் .* எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர் . எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் .* எம்.ஜி.ஆர். வெளியூர் போகின்ற நேரங்களில்* கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுகோப்பால் ஒழுங்கு படுத்தியவர் .*
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதலமைச்சர்* ஆனபோதும் அவருடன் இருந்தார் .* பத்மநாபனுக்கு 6 பெண்கள்.* குடும்ப சூழ்நிலையும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை* என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார் . சிகிச்சைக்காக அமேரிக்கா சென்று திரும்பிய பின்னர் , சரளமாக பேச முடியாத சூழ்நிலையில் பத்மநாபனை அழைத்த எம்.ஜி.ஆர். சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .* ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மநாபன் , உங்கள் நலம் மட்டுமே என் சொத்து .* எனக்கு அதுவே போதும் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.* இரண்டொரு நாளில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட , அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்து இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் மீது விசுவாசம் வைத்தவரின் சுவாசம்* அவரை எண்ணியே போய்விட , ஆறு பெண்களுடன் பத்மநாபனின் மனைவி தவித்து வருகிறார் . இந்த விஷயங்கள் தனது கலை நண்பர்கள் மூலம் தனக்கு தெரிந்ததாக நடிகர் ரஜினி கூறினார் . தலைவருக்கான விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும்*துச்சமாக கருதிய பத்மநாபன் ஏற்படுத்திய பிரமிப்பு தான் அவரை பங்குதாரர் ஆக்கியதாம் .
https://youtu.be/ticwipbUZcc.......... Thanks.........
https://youtu.be/2hnVz5K876w......... Thanks.........