கன்னுக்குட்டி என்றாலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்று தானே சொல்லத் தோன்றுகிறது..
இதோ..
https://www.youtube.com/watch?v=hdOBRY1Y734
கன்னட மஞ்சுளா துள்ளி விளையாடவும் கொஞ்சி விளையாடவும் துணை போகிறது ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி..
படம் புதுவெள்ளம்
Printable View
கன்னுக்குட்டி என்றாலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்று தானே சொல்லத் தோன்றுகிறது..
இதோ..
https://www.youtube.com/watch?v=hdOBRY1Y734
கன்னட மஞ்சுளா துள்ளி விளையாடவும் கொஞ்சி விளையாடவும் துணை போகிறது ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி..
படம் புதுவெள்ளம்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்..
இது மனித இனத்திற்கு மட்டுமல்ல...மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும்..
இருந்தாலும் தாயாரையும் பாராட்டினால் அது நிறைவடையும் தானே..
https://www.youtube.com/watch?v=eYpNMT6EZ38
வாசு,
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். படிப்பவர்களையும் அந்த அனுபவத்தை பெறவைத்தீர்கள்.
ரஜினியின் நடிப்பில் நானும் உங்களுடன் நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன். வெளியானபோது பாடலியில் பார்க்க முடியாமல், பின்னர் எங்கேயோ பார்த்தேன். இப்போதைய லிங்கா பார்த்து ... சரி வேண்டாம். நீங்களே எல்லாம் சொல்லியாயிற்று.
இவ்வளவு பெரிய பதிவுகளை எனக்காக தொங்கலில் விடாமல் தொடர்ந்து சொல்லியதற்கு நன்றி. அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.
சி.க.
நீங்க அப்படி ஒரு கன்னுக்குட்டி பிரியரா? உங்களுக்காக இதோ இன்னொன்று. இளமையான சிவகுமாருடன்...
https://www.youtube.com/watch?v=eOHOQ8o0bjg
இன்னொரு பிரபல பாடல்:
https://www.youtube.com/watch?v=ufykpOeA4NA
வாசு
சில பல காரணங்களால் பதிவிட முடியவில்லை. நண்பர் ஒருவர் மூலமாக இதை எழுதுகிறேன். முள்ளில் மலர்ந்த செந்தாழம் பூவை ரஜினியின் பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளீர்கள். முரளி சொன்னது போல் 1978 ஆகஸ்ட் 15 வெளியீடு நெல்லை சென்ட்ரலில் . இதே சமயத்தில் நெல்லை ராயலில் பாரதியின் கிழக்கெ போகும் ரயில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் படம் எடுத்த வரைக்கும் பார்த்து விட்டு 'என் பணம் எல்லாம் போச்சு' என்று புலம்பியதாக படித்து உள்ளேன்.மேற் கொண்டு பணம் செலவிட மறுத்து கமல் உதவியுடன் படம் வெளி வந்து பெரும் வெற்றியை பெற்ற படம்.
ஆரம்ப கால இளமை ஊஞ்சல் ஆடிய நண்பர் சி கே சொன்னது போல் 'கெட்ட பையன் சார் இந்த காளி ' ரஜினியின் முழு திறமையை வெளி கொணர்ந்த படம். தமிழ் திரை உலகிற்கு பாலு மகேந்திரா என்ற பொக்கிஷ கலைஞன் கிடைத்தான். ஒரு பக்கம் நிவாஸ் ,மறு பக்கம் பாலு மகேந்திரா அதன் நீட்சியாக அசோக் குமார் . தாலாட்டும் 77-80 கால கட்டம் .
ரஜினியின் நண்பர்களாக சாமிகண்ணு(உட்கார்ந்து கொண்டே தூங்கும் பாத்திரம்)இவரது மனைவி பாத்திரத்தில் வருபவர் தான் மூர்த்தியின் kk :) ,நமது எஸ் எ கண்ணன் (படத்தில் இவரது பெயரும் கண்ணன் தான் ),
கல்கி பத்திரிகை மிகவும் ஸ்லாகித்து எழுதிய விமர்சனம் இன்னும் நினைவில் இருக்கிறது. பாடல்களுக்கு காத்து இருக்கிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
பாலுமகேந்திராவின் முள்ளும் மலரும் நினைவுகள்
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.
முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!
http://tamil.webdunia.com/ta/article...224044_1_1.jpg
படம் அரம்பிக்கும் போது, கவர்ந்தது அதனுடைய டைட்டில் கார்ட். டைட்டில் கார்டில் பலருடைய பேர் இருந்தது என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அதை முழுவதும் படிக்க அவகாசம் தருகிறார்கள்.
"“முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை." - என்று மகேந்திரன் சொல்லியுள்ளார்
ரஜினி ரஜினியாக நடிக்காமல், காளி என்ற கதாபாத்திரமாக நடித்தது. தேவை இல்லாமல் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது, பஞ்ச் வசனம் என்று எதுவும் இல்லாமல் டைரக்டர் சொல்லுவதை செய்தது இந்த படத்துக்கு பலம்.
சரத்பாபுவை சுலபமாக வில்லனாக காட்டியிருக்கலாம் ( ரஜினியின் தங்கையை ஏமாற்றுவது மாதிரி ) ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் இந்த சினிமாவிற்கு பிளஸ்.
பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படிக்க: http://pesaamoli.com/index_content_6.html
வாசு,
நான் மலரோடு மட்டுமே இனி வர வேண்டுமென்ற கலை வேந்தனின் ஆசை நிறைவேறாமல் முள்ளோடும் ஓடி வர செய்து விட்டீர்கள்.
என்னதான் முன்னறிவிப்பு செய்து விட்டு பதித்தாலும், தங்களுடைய எனது கிராமம், துளிவிஷம் முதலியவற்றை தாங்களே தாண்டி சென்று சாதித்து , என்னையும் பெரும் பதிவு போட தூண்டியுள்ளீர்கள்.
நான் பத்து வயதில் ,கல்கி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற முள்ளும் மலரும்(உமாசந்திரன்),கல்லுக்குள் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) இவற்றை படித்து உத்வேகம் பெற்று ,எங்கள் வீட்டு நாக மரத்தின் உச்சி கிளையில் அமர்ந்து சிவாஜியை நாயகனாக்கி ,அந்த இரு கதைகளையும் கற்பனையில் படமாக்கி மகிழ்வேன். அந்த கதைகளின் பின்புலம்,பாத்திர வார்ப்புகள், வித்தியாச சூழல்கள் என்னை அவ்வளவு கவர்ந்தது. பின்னாட்களில் என் நண்பர் மகேந்திரன் முதலாவதை படமாக்க போவதோ, கமல் பின்னதை பெயர் போடாமல் தழுவ (ஹே ராம்) போவதோ அப்போது தெரியாது. (1969)
1976 முதல் 1981 வரை சென்னையில் பீ.டெக் படித்த நான் என்னை விட அதிர்ஷ்டசாலி இல்லையென்றே சொல்ல வேண்டும். தமிழ் பட உலகின் மறுமலர்ச்சி காலம். பாலசந்தரால் உச்சம் தொட்டு, பாரதிராஜா,மகேந்திரன்,பாலு மகேந்திரா,ருத்ரையா போன்றவர்களால் வளமாக்க பட்ட தமிழ் பட உலகம், ஸ்ரீதர்,பீம்சிங் போன்ற பழம் பெரும் ஜாம்பவான்களின் புதிப்பிக்க பட்ட பங்களிப்பையும் பெற்று செழுமை கண்டது.இந்த எழுச்சி கண்டதமிழ் பட ஆன்மாவிற்கு புதிய ரத்தங்கள் ரஜினி,கமல் இந்த மாற்றத்திற்கு தோள் கொடுக்க, இளைய ராஜா இதற்கு மெருகு சேர்த்து ,பின்னணி இசை என்ற ஆரோக்ய உடல் ஈந்தார் .
நான் மகேந்திரனின் துக்ளக் விமரிசன (போஸ்ட் மார்ட்டம் )ரசிகன். அவர் முதல் முதலில் இயக்குகிறார் ,அதுவும் நான் விரும்பிய கதையை என்பதால் 15/8/1977 முதல் நாள் முதல் ஷோ விற்கு நண்பர்களுடன் ஆஜர்.
மகேந்திரன் ,பாலச்சந்தர்,பாரதிராஜா இவர்களை தாண்டி சென்று .யதார்த்தம்,பாத்திரபடைப்பு, திரைக் கதை அமைப்பு, ஜீனனுள்ள இயக்கம்,மௌனத்திற்கு புதிய அர்த்தங்கள், ஊடு பாவான கதாபாத்திர வார்ப்புகள் ,அவர்களின் சாதக-பாதக இடையீடுகள்,தன்னையே வார்த்து செல்லும் காட்சியமைப்புகள் என்று என்னை பிரமிக்க வைத்திருந்தார். இளைய ராஜா mood music ,theme music இவற்றை கொண்டு மகேந்திர மௌனத்தை ,இசையால் இதயத்தில் ஊடுரவ செய்தார்.(பவுளி என்ற தொடாத ராகத்தில் செந்தாழம் பூவில், ராமன் ஆண்டாலும் (பத்மா அண்ணி ஷ்யாமளா உபயம்),காற்றுக்கென்ன வெளி பாணியில் அடி பெண்ணே)
பாலு மகேந்திரா என்ற கலைஞனின் வெளிப்புற படபிடிப்பையே எல்லாம் சிலாகிக்க, நான் அவருடைய கேமரா சித்து விளையாட்டில் காட்சிகள் பெரும் புது அர்த்தங்கள், காட்சிக்கேற்ற lighting ,script முழுமையாக உள்வாங்கப்பட்டு செழுமை பெரும் மந்திரம் இவற்றை பிரமித்து பார்ப்பேன்.
என்னதான் ஷோபா ,படாபட்,சரத் என்று எல்லோரும் நன்கு உணர்ந்து நடித்திருந்தாலும் ,ரஜினி தான் எத்தைகைய சாத்யகூருகள் கொண்ட அற்புத நடிகன் என்பதை உணர்த்தி ,தன்னுடைய inherent histrionic potential தன்னுடைய சமகால கலைஞர் கமலை விட emoting ,expressing ,Exhibitionist skill பல மடங்கு உயர்ந்தது என்பதை காட்டி பரிமளித்திருப்பார். (சே !!! எப்படி வீணாக்க பட்ட கலைஞர். லிங்கா பார்த்தால் வயிறு எரிகிறது)
இந்த கதையில் பாசம் என்கிற அம்சம் ஒரு incidental கோர்ப்பே. முக்கிய விஷயத்தை வழக்கம் போல விமரிசகர்கள் கோட்டை விட்டிருந்தனர். காளிக்கு ,வள்ளி மேல் உள்ளது ஒரு பாதுகாப்பு கலந்த முரட்டு பாசம். தன்னால் பாதுகாப்பானது என்ற உணர படாத எதுவும் ,தன் தங்கையையும் காக்காது என்ற உள்ளுணர்வு. அவனுக்கு தன சுயம் விஸ்வரூபம் எடுக்கும் ego .இதற்கு நெருப்பு வார்ப்பது முதலே கோணலாகும் மேலதிகாரி உறவு.பூக்களை நார் கொண்டு தொடுப்பது போல பண்ணியிருப்பார் மகேந்திரன்.இதன் பிரச்சினை ego தானே தவிர பாசமல்ல.இல்லையென்றால் பெண் கேட்டு விட்ட ஆத்திர அவசரத்தில் ,தங்கையை ஊரே இகழும் முருகேசனுக்கா அவசர சம்பந்தம் பேசுவான்?கையை இழப்பது போல ,ego விற்காக பாசத்தையுமல்லவா அடகு வைக்கிறான்? வள்ளியின் ரெண்டுங்கெட்டான் நிலை,படாபட்டின் நன்றி சார்ந்த பாத்திர இடையீடு, சரத் பாபுவின் நானென்ன செய்வது நிலை என்று இறுதி வரை அப்படி ஒரு புது மெருகுடன் பயணிக்கும் neo -classic படைப்பாக வந்த காலத்தில் திகழ்ந்தது.
வாசு,மன்னியுங்கள். சிறிதே வாட்டம் (உங்களுக்கு காரணம் புரியும்),நேரமின்மை காரணமாக எழுத நினைத்ததை ரொம்ப சுருக்கி விட்டேன். பிறகொரு நாள் ,இந்த அதிசய படத்தை எடுத்து நீண்ட ஆய்வு புரிவேன்.நன்றி.நன்றி.நன்றி.