-
தலைவர் நினைவுநாள் சிறப்பு பதிவு.
தலைவருக்கு நடிகர் வி.கே.ராமசாமியை மிகவும் பிடிக்கும்.. அவர் நடிப்பு திறமையை ரசிப்பார். ராமசாமிக்கு மது பழக்கம் உண்டு. இது நம் வாத்தியாருக்கு மன உளைச்சல் ஏற்படித்தியது.
மாட்டுக்காரவேலன் பட பிடிப்பில் இறுதி காட்சி படப்பிடிப்பு முடிந்து அதில் அவர் நடிப்பை கண்டு வியந்த வாத்தியார் அவரை தனியாக அழைத்து பேசினார்.
நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... எவ்வளவு பாடுபட்டு இந்த துறையில் நாம் வந்தோம்...இது உங்க சொந்த விஷயம் ஆக இருந்தாலும் இதை நம் குடும்ப விஷயமாக நான் நினைக்கிறேன்.
நல்ல கலைத்திறமை இருந்த பல நம் முன்னோடி நடிகர்கள் உடம்பில் ஆரோக்கியம் கெட்டு கலை திறமையை முழுவதும் காட்ட முடியாமல் இடையில் மறைய இந்த தீய பழக்கமே காரணம்.
நீங்கள் நல்ல நடிகர்..நான் உங்கள் ரசிகன்...நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும்...இதுவே என் ஆசை..இனி உங்களை நான் புதிய வி.கே.ஆர். ஆக பார்க்கணும் என்று சொல்ல.
உடனே கண் கலங்கி நம் இதயதெய்வத்தை கட்டி பிடித்து கதறி அழுத வி.கே.ஆர்..கண்ணீரை வாத்தியார் துடைக்க மீண்டும் பட பிடிப்பு தளத்துக்கு இருவரும் வந்தனர்.
மறுநாளே தன்னிடம் இருந்த மது பெர்மிட் ஐ
திரும்ப கொடுத்த வி.கே.ஆர்....அன்று முதல் திருந்திய மனிதன் ஆக நடிகராக மிளிர்ந்தார்.
நிகழ்வு பதிவு தலைவரின் மெய் காப்பாளர் ஐயா கே.பி.ஆர்..அவர்கள்.
வாழ்க வள்ளல் புகழ்.
என்றும் வாத்தியார் தொண்டன் ஆக நெல்லை மணி நன்றி..........
நேற்று எங்கள் பகுதியில் நினைவு அஞ்சலி படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது........... Thanks.........
-
MGR வாழ்க.
முகநூல் நண்பர்களே
மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி னார்
அதைப் படித்துப் பார்த்த எம்ஜிஆர் அவர்கள்
.
அந்தப்பாடலில் இரண்டுவரிகள்/ ஆபாசமாக இருக்கின்றன.
என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்
கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற ஆபாசமான பாடல் வரிகள்
,இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்
அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்களஎன்று உதவி டைரக்டர் ராஜ சேகரிடம் கொடுத்துஅனுப்பினார் MGR / ராஜசேகர் கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார் / MGR பாடலை மாற்றசொன்னாரா என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார்
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது /
//////////////////////////////////////////////////--+--
வக்கீல் எம்ஜிஆரும் மாட்டுக்காரன் எம்ஜிஆரும்
தன் காதலி களுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்துள்ளது
வக்கீல் MGR பாடுகின்றார்/
பள்ளிக்ககணக்கு /கொஞ்சம் சொல்லி பழக்கு/ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு .
கதாநாயகி பாடுகின்றார் /
போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கல் / நான் போதும் எண்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள் /
இந்தவரிதான்முதலில் கண்ணதாசன் எழுதிய வரி
இந்த வரி ஆபாசமாக உள்ளது என்று எம்ஜிஆர் மாற்றச் சொன்னார்
;/;/////////////////////////////;//;;;;;;//////////////
MGR / சொல்லியபிறகுமாற்றியவரி/
போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்
எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகள்வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்
எம்ஜிஆர் தன் படங்களில் நீதி நேர்மை சத்தியம் தர்மம் ஒழுக்கத்தை சொன்னார்
ஆகவே தான் அவருடைய புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது
பழைய சினிமா படத்தில்
கதாநாயகி பாடுகிற ஒரு பாடல் வரி எனக்கு நினைவுக்கு வருகிறது
கலப்பையை தோளில தூக்கி
காடு உழுகப் போற மச்சான்
கலப்பையை அழித்து உழுங்கள்
வந்தாளே மகராசி என்ற படத்தில் வருகின்ற இந்த பாடலை
திமுக பொதுக் கூட்டத்தில்
தீப்பொறி ஆறுமுகம் அவர்கள. ஏற்ற இறக்கத்தோடு அழகாக பாடுவார்
இந்தப் பாடலுக்கு விளக்கமும் கூறுவார்
இதைக் கேட்டு அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் கைத்தட்டி சிரி சிரி சிரி சிரிசிரி என்று சிரிப்பார்கள்
நன்றி / பொம்மை
மாத இதழ் ...........
1972........... Thanks...
-
-
*மருதூர்* *கோபாலமேனன்* *ராமச்சந்திரன்* . எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் இவரை மிக நல்ல மனிதர் என்றே போற்றியுள்ளனர். இளமைக் காலங்களில் வறுமையில் துவண்டபோதும், பின்னர் செல்வத்தில் புரண்ட போதும் இவரை எளியோரின் நண்பன் எனப் பாராட்டினர். நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தமக்கென ஒரு பாணியை, பாதையை வகுத்துக் கொண்டு வெற்றி பெற்றவர். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், இதயக்கனி எனப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். எனும் பெயர் இவரை உலகமறியச் செய்தது.
2017 ஜனவரி 17ஆம் நாளோடு, எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டுகள் நிறைவுற்றுவிட்டன. தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான, வெற்றிடச் சூழலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டினை சிறிதளவில் மழுங்கச் செய்துவிட்டன என்றால் மிகையில்லை.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, அரசியல் எனப் பல துறைகளில் பரிணமித்து, பரிமளித்திருந்தாலும் திரைத்துறையில் அவரது பயணத்தை நோக்கினால், அப்போதைக்குப் பிரபலமாயிருந்த ஒரே வெகுஜன ஊடகத்தை, மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் எம். ஜி. ஆர் என்று புரியும்.
ஒரு நடிகராக வாழ்க்கையைத் துவங்கி, பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்த போதிலும் அந்த அனுபவங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு, தனது ரசிகர்களது நாடித் துடிப்பைக் கச்சிதமாகப் படித்தறிந்து வெற்றிக்கான சூத்திரத்தை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். தொண்டையில் குண்டடிப்பட்டு குரல் சேதமடைந்த பின்னர், பின்னணி பேச வசதிகள் இருந்த போதிலும், தனது சொந்தக் குரலில் பேசி, உடைந்து போன உச்சரிப்பையும் மீறி ரசிகர்களைச் சென்றடைந்தார்.
நடிகர் திலகம் என்ற இமயம் எதிரே இருந்த போது, அதனுடன் முட்டி மோதாமல் அதைச் சுற்றிலும் நதியாக ஓடி, பலரது இதயங்களில் இடம் பிடிக்கும் லாவகத்தைப் புரிந்து வைத்திருந்தவர். ஏறக்குறைய 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். ஒவ்வொரு காலகட்டத்திலும், தனது போட்டியாளர்களைப் புரிந்து கொண்டு தனது பாதையை மாற்றிக்கொண்டார் என்றால் அது மிகையில்லை.✍.......... Thanks...
-
-
-
https://i.postimg.cc/C5jmHsLR/IMG-4608.jpg
நண்பர் திரு ராமமூர்த்தி - வேலூர் அனுப்பிய புகைப்படங்கள்
-
-
-
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் (27/12/19)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை சென்ட்ரல் சினிமா* - கலங்கரை விளக்கம் -தினசரி 4 காட்சிகள்*
கோவை சண்முகா* -* தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்*