Originally Posted by saradhaa_sn
நடிகர்திலகத்துக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்றார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதை வழங்கினார். விருது வழங்கும் முன்னதாக திரையுலகப்பிரமுகர்கள் பலரும் மைக்கில் பேசும்போது ஜெயலலிதாவை 'மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்றே விளித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடிகர்திலகத்துக்கு காஃபி வந்தது. காஃபியை கையில் வாங்கிய நடிகர்திலகம், தன் அருகில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப்பார்த்து படு கேஷுவலாக "அம்மு... காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்க, அவர் புன்முறுவலோடு மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சரானபின்னரும் அவரை ஒருமையில் அழைத்தவர் நடிகர்திலகம் மட்டுமே.