பதினெட்டாம் பாகத்தை துவக்கியிருக்கும் நண்பர் திரு. ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Printable View
பதினெட்டாம் பாகத்தை துவக்கியிருக்கும் நண்பர் திரு. ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் பதினெட்டினைத் துவக்கி உள்ள ஆதவன் ரவி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
http://i1028.photobucket.com/albums/...psdi8mq0xw.jpg
( 1 )
பிரம்மனுக்குப் போட்டியாக
பூமியில் முளைத்தவரை,
கல்வெட்டின் எழுத்தாக
இதயங்களில் நிலைத்தவரை,
நடிப்பு, நடிப்பென்றே
நொடிக்கு நொடி இமைத்தவரை,
சாமர்த்திய அடுப்புகளில்
சாதனைகள் சமைத்தவரை...
மறத்தல் இயலாது-
எங்கள்
நெஞ்சிருக்கும் வரை.
http://i1028.photobucket.com/albums/...psrlsxuvbg.jpg
( 2 )
"என்றும் துன்பமில்லை"
பாட்டு வரும்
"புனர்ஜென்மம்"
பாட்டிக்குப் பிடிக்கும்.
சின்னப் பாட்டிக்கு
"கௌரவம்" பிடிக்கும்.
அத்தைக்கு
"பாலும் பழமும்" பிடிக்கும்.
அழுவது நிச்சயமென்று
தெரிந்தாலும்
துணிந்து "பாசமலர்" பார்க்க
அம்மாவுக்குப் பிடிக்கும்.
"நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்"
எனும் எழுத்துக்கள் ஓடும்
எல்லாப் படங்களும்
எனக்குப் பிடிக்கும்.
"எங்கிருந்தோ வந்தாளும்",
"எங்க மாமா"வும்
மகளுக்குப் பிடிக்கும்.
"திரிசூலமும், கர்ணனும்"
மகனுக்குப் பிடிக்கும்.
தலைமுறைகள் கடந்த தலைமுறைகளை
ஆக்கிரமித்து விட்ட
அற்புதக் கலைஞனே...
மிச்சமிருக்கிற படங்களையெல்லாம்
"எனக்குப் பிடிக்கும்",
"எனக்கும் பிடிக்கும்",
என்று ஆளுக்கொன்றாய்ச்
சொல்லி வருவார்கள்...
என் பேரன்,பேத்திகளும்,
கொள்ளுப் பேரன்,
கொள்ளுப் பேத்திகளும்.
Mr Aadhavan Ravi
Congratulations for initiating NT 18!
Hope this thread as usual will be filled with your metaphoric presentations of NT getting replenished with elite and delightful postings from all ardent followers of NTism!!
with greetings
senthil
http://i1028.photobucket.com/albums/...pskqpiungl.jpg
( 3 )
அந்த
எட்டையபுரத்தான் போல்
முறுக்கி விட்ட
மீசையில்லை.
அந்தப்
பாட்டுக் கோயிலின் மேல்
வெண் கோபுரமாய் எழுந்த
முண்டாசில்லை.
அவனைப் போல்
எப்போதும்
கண்களில் கோபமில்லை.
கனல் பறக்க
அவன் எழுதிய காலத்தில்
இவரில்லை.
அவனைப் போல
கவியெழுதும் தொழில்
இவருக்கில்லை.
"சிந்து நதியின் மிசை"
பாடுவதாய்
சினிமாத் திரை காட்டிய
அந்த ஒரு பாடலன்றி,
வேறெந்தப் படத்திலும்
இவரை,
அவனாகப் பார்த்ததில்லை.
ஆனாலும்...
தேனிலுஞ் சிறந்த
தமிழை வளர்த்ததிலும்,
தேசத்தின் செழுமை காண
நெஞ்சு துடித்ததிலும்,
மாசற்ற திறமைகளால்
மக்கள் மனம்
நிறைத்ததிலும்...
அந்த
மகாகவி போலத்தானே
எங்கள்
மதிப்புக்குரிய அய்யாவும்..!?
நடிகர்திலகத்தின் 18ம் திரியை இனிதே கவிதை கொத்தாக வழங்கி கொண்டிருக்கும் எங்கள் ஆதவன் ரவியின் படைப்புகளை வேண்டி விரும்பும் உங்கள் அன்பு நண்பர்
ராமச்சந்திரன் திருச்சி
நடிகர்திலகம் இணைவில் காதல் மன்னரின் வசன மழையும் மௌன மொழியும்
பகுதி 1 : பாச மலர்
GG in tandem with NT! Thunderballs and Snowfalls!!
Quote:
In many a movies he joined hands with NT Gemini Ganesan had always made his presence as well as his absence felt in scenes designed with volcanic eruptions of emotions through thunderbolt dialogues as well as ice cool silent monologues pitted against NT's calibre of multi-dimensional acting histrionics! NT's monopoly film Paasamalar remains the bench mark celluloid saga for the love and affection inherited by a brother towards his sister right from womb to tomb. Even as the story line provides ample space and scope for projecting the acting histrionics of NT,realizing the importance of the impact of a scene to the objective of creating the emotions in right proportions and mesmerizing the viewers to float NT was magnanimous enough in sacrificing a lot of screen space for his respected friend and companion GG to take on ! This friendship and understanding lasted over decades till both attained the lotus feet divinity of His Almighty! This classic film is always a unique experience for the acting clash of the titans in thundering dialogue deliveries as well as freezing silence upon facial expressions and body language the upcoming actors of any generation or language or parts of the world need to adore and admire!! Hats off to GG for his competitive portrayals synergistic to NT's acting dimensions!!
அண்ணன் தங்கை பாசப்பிணைப்பிற்கு என்றும் என்றும் உயிரோட்ட இணைப்பு பாசமலர் திரைப்படமே ....இந்த உலகம் உள்ளவரை!!
நடிகர்திலகமே பிரதானமெனினும் உணர்ச்சி பிரவாக கொந்தளிப்பிலும் வசனமழை நேர்த்தி மௌனமொழி கீர்த்தியிலும் தனது சிறப்பான பங்களிப்பை சீராக அளித்து நடிகர்திலகத்தின் ரசிகர்களையும் ஈர்த்தார் காதல் மன்னர் !
The Thunderball dialogue deliveries with histrionic body languages!
எரிமலைக் குழம்பாக அனல் பறக்கும் அமிலமழை தெறிக்கும் இடியாக இறங்கும் மின்னல் கீற்றாக ஜொலிக்கும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் வசனப் பொழிவுகள் !
https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc
The Snowfall Silence language with freezing facial expressions!
உறை பனியாக குளிர் ஊடுருவி உணர்வுகளையும் உறைய வைக்கும் வசனமற்ற மௌனமொழி முக பாவங்கள் !
https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0Quote:
ஆத்திரத்தில் சீறும் காதல் மன்னரிடம் எனக்கு அண்ணன்தான் தாய் தந்தை தெய்வம் உலகம் என்று ஆணியடிக்கும் தங்கையின் வசனப் பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தில் ததும்பி வரும் கண்ணீரை துப்பாக்கி நுனியில் நடிகர்திலகம் சுண்டி விடும்போது நம்மையறியாமல் நமது விரல் நுனி நமது விழிநீர்த் தேக்கத்துக்கு அணை போடுவதே நடிகர் திலகம் எதனால் ரசிகர்களின் மனசாட்சிப்படி உலகின் நடிப்பு முதல்வராக கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காலத்தை வென்று நிற்கும் அத்தாட்சி !!
நாளை 22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!
Quote:
காலங்கள் உள்ளவரை காட்சிகள் மறையும் வரை கண்ணியமான காதல் உணர்வுகளின் உயிரோவியமாகத் திகழ்ந்து இன்னும் ரசிக நெஞ்சக் கோட்டையில் வஞ்சிக் கோட்டை வாலிபராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் மாமன்னருக்கு அனைத்து திரி சார்ந்த நினைவஞ்சலி !!
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் உங்களின் இதமான இனிமையான காதலம்சங்கள் தென்றலாய் தவழ்ந்திடும் தேனிசைப் பாடல்கள்!
https://www.youtube.com/watch?v=KRvTO_-Uvq4
நடிகர்திலகத்தின் மிக பெரும் ரசிகரும், பொதுஜன தொடர்பாளர்,திரை பத்திரிகையாளர்,திரை பட களஞ்சிய தொகுப்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு எங்கள் அனுதாபங்கள்.
http://tamil.filmibeat.com/news/film...ay-039378.html
"சின்ன" ஆனந்தன் "பம்மலார் " நமது புத்தகத்தை வெளியிடும் நன்னாள் என்றோ?
In line with Gopal Sir I express my profound and heartfelt condolensces on the sudden demise of Shri 'Film News' Anandhan who was also instrumental in disseminating the name and fame of NT by virtue of his huge collections of volumes of data and information related to NTand his era!
May the soul rest in peace!
senthil