nanri rasigan & suba
-kirukkan
Printable View
nanri rasigan & suba
-kirukkan
நீரூற்றி நெடுவயல் நட்டாலும் நெற்மணி
கிட்டாது நட்டது புல்லென்றால்
--
கிறுக்கன்
காணாத காட்சியெல்லாம் கண்முன்னே நடந்தாலும்
கண்டுகளிக்க இயலாது கண்மூடியிருந்தால்.
--
கிறுக்கன்
மிகவும் சரியே!
:clap: :clap: romba azhaga ezhuthareenga kirukan.....pramatham....niruthi vidaatheenga continue pannunga....ullangal magizha
துன்பம் கண்டு துன்பம் கண்டு
துவண்டு வீழ்வதேனடா
இன்பம் உண்டு இன்பம் உண்டு
எழுந்து நீயும் பாரடா
துன்பம் தந்த தீயில் நீயும்
தீந்து போனது ஏனடா
துன்பத்தில் இன்பமென
தீயில் மின்னி நகையடா
கண்களிரண்டு படைத்தது
கண்ணீர் சிந்த அல்லடா
கருணை கொண்டு இவ்வுலகை
கண்கள் கொண்டு காணடா
பூட்டி இருக்கும் மனைதனில்(மனதினில்)
புகுந்து விடும் இருளடா
பூட்டை நீயும் உடைத்திட்டால்
பிரகாசிக்கும் மனையடா(மனதடா)
-கிறுக்கன்
இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.
-கிறுக்கன்
aha ... oru kural padicha anubavam :-)Quote:
Originally Posted by kirukan
களவாடும் கள்வர் கூட்டம் கைதொழுதிடும்
காரியம் கூடியதும் கழுத்தறுக்க
-கிறுக்கன்
பகுத்தறிவும் பேச்சறிவும் புன்சிரிப்பும் யாதெனில்
ஆறாம் அறிவின் முப்பகுதியாம்.
-
கிறுக்கன்
பலமுடன் பலநாள் இருந்தாலும் பழுதானால்
பல்லை பிடுங்கத்தான் வேண்டும்
-
கிறுக்கன்
உண்மையும் நேர்மையும் உறவாடும் உத்தமரை
பிழைக்க தெரியாதவரெனும் உலகு.
-
கிறுக்கன்
வீழ்தலும் விழுதலும் வித்தியாசப் பட்டாலும்
எழுதல் என்றும் உன்கையில்
-கிறுக்கன்
நன்றாக எழுதுகிறீர்கள். :bow:
கனியாத கனியும் பணியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது
-
கிறுக்கன்
இன்பம் இனிக்கும் வேளை பரவசப்படு
இடுக்கண் கண்டு பக்குவப்படு
-
கிறுக்கன்
:clap:Quote:
Originally Posted by kirukan
பணியாத மனம் என்று இருக்க வேண்டுமா?Quote:
Originally Posted by kirukan
இல்லை பனியாத (வேறு வகையில் அர்த்தம் கொள்ளலாம்) மனம் தானா?
இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன்...
நன்றி சக்தி பிரபாQuote:
Originally Posted by Shakthiprabha
திருத்தி கொண்டேன்
கற்றுணர்ந்த கவிஞனல்ல நான் வெறும்
கிறுக்கல்களின் கிறுக்கன்
(நல்)உணர்வுள்ள உள்ளங்கள் ஊமையானதால் இங்கே
ஊழல்கள் உத்தமமாய் உலவுகின்றன
-கிறுக்கன்
கள்ளமில்லா கல்லார் கூட்டம் மேல்
கற்றுணர்ந்த கள்வர் கூட்டத்தினும்
-கிறுக்கன்
நிறை நிறைந்திருக்க குறை மட்டும்
காணின் நிறை குறைந்திடும்
-
கிறுக்கன்
தழைத்த பயிர்களில் நரைத்தது இரண்டு
தாடியிலும் வெள்ளை முடி.
--கிறுக்கன்
தொடர்க... தொடர்க...
எடுபடா உடையை உடுத்திவிட்டு - ஊரார்
சிரிக்க உடுத்திவிட்டாரும் சிரித்தனரே
-
கிறுக்கன்
வீழ்ந்து மடிவதில்லை விதைகள் -வீரிட்டு
எழுந்திடும் வானுயர் விருட்ச்சமாய்
--கிறுக்கன்
வார்த்தைகளை இன்னும் அழகாக அடுக்கியிருக்கலாம். எனினும், வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். மேன்மேலும் எழுதவும். நன்று.Quote:
Originally Posted by kirukan
நன்றி வெங்கிராஜா உங்கள் பாராட்டுக்கும் விமர்சனதுக்கும்.மாற்றி அமைத்திருக்கிறேன் வாற்த்தைகளை.Quote:
Originally Posted by VENKIRAJA
--
கிறுக்கன்
உங்கள் கவிதைகளை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொரு கவிதையும் வாசகர்களின் மனதுக்கும் அறிவுக்கும் விருந்து.
கருத்து கூறும் கனவான்கள் கண்டிலார் (எம்மக்கள்)
களத்தில் காணும் கஷ்டங்கள்.
--
கிறுக்கன்
அழுகை ஆனந்தமோ ஆற்றாமையோ அயர்ச்சியோ
அதனாழம் அழுவாரே அறிவார்
--
கிறுக்கன்
Quote:
Originally Posted by kirukan
absolutely true nga !!! well said!!
தவறும் சரியாகும் முதலாளியெனில் மாறாக
சரியும் தவறாகும் தொழிலாளிடத்து.
--
கிறுக்கன்
பாசப்பேச்சோ ஏச்சு பேச்சோ பொருளில்லையெனில்
பேச்சால் ஏதும் பயனில்லை.
--
கிறுக்கன்
தெருவிலிருந்து தேரோ தேரிலிருந்து தெருவோயென
தீர்மானிக்கும் தருணம் திருமணம்.
--
கிறுக்கன்
சுடு சொற்கள் சொலல் சுலபமாம்
சிரமமாம் சொல்லியன அள்ளல்
-கிறுக்கன்
Open a new site sir! Wishes...! Nice work here!
Enna solla varugireergal endru puriyavilai.Intha thread continue pana vendam endru solgireergala?Quote:
Originally Posted by VENKIRAJA
BTW I have voted for your story...
-
kirukan
Not at all... I meant to say that besides continuing your writings here, you can open a site (weblog). You can write a professional (or amateur) Thamiz blog on Blogger and Wordpress. Other services like Typepad, Livejournal, etc. also offer writing spaces on the internet. Please do google about them and start one!Quote:
Originally Posted by kirukan
Wow! Thanks.. Do post in your valuable comments and suggestion in the blog / stories section.Quote:
Originally Posted by kirukan
kirukan avargaley!!
ungaludaiya kavithagal irendu variyaaanaalum...karuthu romba aazham.....continue yr good work nga!!