http://i57.tinypic.com/24ms0n6.jpg
Printable View
இனிய நண்பர் திரு சத்யா சார்
மக்கள் திலகத்தின் படங்கள் - dvd அட்டை படங்கள் பதிவுகள் சூப்பர் . நன்றி
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
மதுரை நம்நாடு - வசூல் மற்றும் போஸ்டர் பதிவுகள் அருமை . நன்றி .
இனிய நண்பர் திரு சி .எஸ் .குமார் சார்
1975ல் வெளியிடப்பட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைகுரல்
தங்க பதக்கம் வசூல் விபரங்கள் நோட்டீஸ் - அபூர்வமான ஆவணம் . தங்களுக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகும் வரை 1979 வரை தக்க வைத்து கொண்ட இமாலாய சாதனைகள் என்பது
சரித்திர உண்மை .
பொதுவாக புது டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் உள்ள கலை அரங்கில்,
1. கர்நாடக இசை
2. மேடை நாடகங்கள்
3. பட்டி மன்றம்
4. பக்தி சொற்பொழிவுகள்
போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதன் முறையாக, நாளை (14-06-2015) நம் புரட்சித்தலைவரின்
http://i58.tinypic.com/2poxogj.jpg
"உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியத்தை காலை 11.00 , பிற்பகல் 2.30 மணி மற்றும் மாலை 6.30 மணியளவில் 3 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவலை, மக்கள் திலகத்தின் திரி பதிவாளர்கள் மற்றும் அன்பர்களிடையே மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்கிறேன்..
உன்னதமான இந்த தகவலை அளித்த "குமுதம்" பத்திரிகையின் மூத்த சினிமா பத்திரிகையாளரும், சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவரும், நமது பொன்மனச்செம்மலின் அபிமானியுமாகிய , திரு,. மேஜர் தாசன் அவர்களுக்கு நன்றி !
இலவசமாக காண்பிக்கப்படும் இந்த சிறப்பு காட்சிகளை டில்லி வாழ் மக்கள் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
புது டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு, கோடிக்கணக்கான எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில் நன்றியை இந்த திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.