மாந்தளிரே மயக்கமென்னன்னு பாடுவது லாவண்யா. இது வாசுஜிக்கு தெரியாதா என்ன ?
Printable View
மாந்தளிரே மயக்கமென்னன்னு பாடுவது லாவண்யா. இது வாசுஜிக்கு தெரியாதா என்ன ?
அப்படிப் போடுங்க அரிவாளை மதுண்ணா :) தாங்க்ஸ்
வாசு,உங்களுக்குத் தெரியாதுன்னு நான் சொல்லவில்லையே..ஷமிக்கணும்..பய டேட்டா டைப்போ பயோடேட்டா ப்ளீஸ்..
நண்பர்களே!
சரி! விஷயத்துக்கு வருகிறேன். 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' நான்காம் பாகம் முடிய இன்னும் 22 பக்கங்களே உள்ளன. அடுத்த பாகம் விரைவில் தொடங்கி விடும்.
எனவே 5 ஆம் பாகம் தொடங்க நமக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கும், திரைப் பாடல்களைப் பற்றிய பல விவரங்களை, அரிய தகவல்களை, பாடல்களோடு அள்ளித் தரும் நம் எல்லோர்க்கும் சகோதரரான அருமை
மது அண்ணாவை
'மனதை மயக்கும் மதுர கானங்கள்'
பாகம் ஐந்தை தொடக்கி வைக்க முன்மொழிகிறேன்.
நண்பர்கள் அவரவர்கள் கருத்துக்களைக் கூறலாம்.
வதுவை கொளப்போகும் வஞ்சியின் நெஞ்சாய்
மதுவும் மயக்குவார் வா
சதிராடும் தென்றலாய் தக்கபடி ஆடும்
மதுரங்கொள் பாட்டில் மது..
நான் வாசு அவர்களை வழி மொழிகிறேன்.. ( மதுண்ணா ஒத்துக் கொள்ள வேண்டுமே)
அட வாசுதேவா...ஜீஈ....
நான் அடுத்த வாரம் முதல் ஒரு டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்பதாலும், என் நண்பர் ஒருவர் ஊரிலிருந்து வரப்போவதாலும் ஒரு மாதம் வரை ஒழுங்கா வர மாட்டேன் என்று போஸ்ட் செய்யணும் என்று இப்போதான் நினைத்தேன்.
எல்லோரும் மன்னித்து விடுங்க... இந்த நிலைமையில் என்னால் சமாளிக்க முடியாது... தல இருக்க விரல் ஆடலாமா ? இங்கே நான் ஒரு அணில் ( கும்ப்ளே அல்ல )... அப்பப்போ வந்து பதிகிறேனே... ப்ளீஸ்
ராஜா யுவராஜா
ஆரம்ப இசையே படு உற்சாகத்தை தரும் இந்த பாடல்.பாடலுக்கு முன் துவங்கும் அந்த துள்ளளலான இசைபாடல் முடியும் வரை சரவெடி சரமாய் இருக்கும்.
நீச்சல் குளத்தில் நடந்து வரும் ஸ்டைல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.வெறி பிடித்த ரசிகர்கூட்டத்திற்கு அந்த நடைக்காட்சி மேலும் ஆரவாரத்தை செய்ய வைப்பதாகவும்,
கைதட்டல் விசில் மூலம் ரசிக்கும் கூட்டத்திற்கு மேலும் கை வலிக்கும் அளவுக்கு கை தட்டும் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும்,
அமைதியாக ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்கூட்டத்தையே "சபாஷ்"என்று வாய்விட்டு சொல்லவைக்கும் .
திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு புலி வெளிவந்து நடந்தால் எப்படி இருக்கும்?இரை தேடி அலையும் பசித்த புலியின் நடையல்ல.இரை முடித்த ஒரு புலி எதையும் சட்டை செய்யாது.அதற்கு எதுவும் ஒரு பொருட்டல்ல.அது போல எதையும் பொருட்படுத்தாதது போன்றும்,எதைப்பற்றியும் கவலைப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்ததுவதாகவும் அதே சமயம் கம்பீரமாயும் அமைந்திருக்கும் அந்த நடை ரசிகர்களாலால் எப்போதும் ஆரவாரமாய் கொண்டாடப்படும்.
எதிரில் வரும் பெண்ணை பார்வையால் அளக்கும் பாவனை ஜோர்.உடம்மை மெதுவாக சாய்த்துமோகனப்புன்னகை செய்து கடந்து செல்லும் அந்த ஷாட் பாடலைத்தூக்கி செல்லும் ஆரம்ப முத்திரை.
ராஜா யுவராஜா என்று இழுப்பதில் ஆரம்பித்துநாள்தோறும் என்பதில் 'ம்ம்ம்ம் 'ஐ தொண்டையில் இருந்து நெஞ்சு வரை காற்றை அடைத்து சப்தமாய் வெளிவிடும் அழகே அழகு.
உதட்டைச் சுழித்து கண்ணை சிமிட்டி ரோஜாவை முடிப்பது செயலும் பாடலும் அட்சரம் பிசகாதஅழகு.
நித்தம்ஒரு புத்தம் எனும் போது மெல்ல துள்ளி ஆடும் அந்த சிறப்பு அவரிடம் மட்டுமே காண முடியும் மேனரிசம்.
அடிக்கடி வலதுகண் துடிக்குது எனத் தொடங்கும் வரிகளின் போது பின்னோக்கி ஆடிக்கொண்டே செல்வது போன்று படம்பிடித்திருப்பது புதுமை.அருமையான டான்ஸ் மூவ்மென்ட் .பாட்டின் ஹைலைட் டான்ஸ் ஸ்டைல்.
புளு கலர்சபாரி
கடற்கரை
கூலிங்கிளாஸ்
காம்பினேசன் அருமை.
பாடல் முழுவதும் ஸ்டைல்களாக தூள் பரத்திக்கொண்டு வருபவர் இந்தக் காம்பினேசன் கிடைத்தால் விடுவாரா என்ன?நடந்து வந்து நின்று சிகரெட்டை தூக்கி எறியும்
ஸ்டைல்அட்டகாசம்.
நடிப்பிலே எவரையும் மயக்குவேன்.
கூறவே தேவையில்லை.மேலே தூக்கி விரல்களைசொடக்கும்அந்தக் கையசைவு அசத்தலான அழகு ஸ்டைல்.நடிப்பில் மட்டுமல்ல ஸ்டைல்களிலும் தனிக்காட்டு ராஜா இந்த ராஜா யுவராஜா.
வான் வெடிகள் வானில் வெடித்து ஒளிச்சிதறல்களாய் பிரிவதைப்போல
நடிகர்திலகத்தின் ஸ்டைல்கள் சிதறல்களாய் பாடல் முழுவதும் வெளிப்பட்டிருக்கும்.
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
சரோஜா ரீட்டா கங்கா ரேகா
சரோஜா ரீட்டா கங்கா ரேகா பாமா
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா
நேரம் ஒரு ராகம் சுகபாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா
தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண் பாவை கண் ஜாடை
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
தங்கம் அது தங்கும் உடல் எங்கும் அதை கண்டால் கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்
அடிக்கடி வலதுகண் துடிக்குது புது புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம்
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்து சுவைத்தவன் நான்
உன்போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக்கண்டால் மயக்கிப்பிடிப்பவன் நான்
நடிப்பிலே எவரையும் மயக்குவேன் அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண் ராசி நீ வா வா
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
I second and third MADHUJI as proposed by our search engine VasuVasu! Hope our forthcoming threads would also be eco friendly jolly rides without ego clashes !!
senthil