-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில்*வெளியான*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால*, குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய* இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன.* ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் .* சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் .* ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது .* இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள**ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில்*அசத்தியிருப்பார் .**
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் .* படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன்* நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.* இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள்* இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்*இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல்.* தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம்* தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின்* அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*. இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன்*, உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே* இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .**
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில்* ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை .* அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .*
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்* பாடல்கள் பலவற்றை* தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு* என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில்* பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல்.**இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் .* பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு* வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .**
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான*புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் .* இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும்.* ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி*புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி* கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .*
***
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த*படங்களின் எண்ணிக்கை அதிகம் .* குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து* கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை .* படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.* இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் .* என்றகவிஞர் வாலியின்* வைர வரிகள்*எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி .* ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன்* பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது .* அதன் காரணமாக அவரது பாடல்கள்* காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான**படம் மீனவ நண்பன்*தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய* காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் .* இந்த படத்தில்*அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது* என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில்**மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள்*எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது .***.
1974ல் வெளியான,நடிகர்*அசோகன்*சொந்தமாக தயாரித்த* நேற்று இன்று நாளைதிரைப்படத்தில்* அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன* தனது கட்சியின்*கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக*எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் .**நான் படித்தேன்*காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே.* ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்.* இந்த வரிகள்*தி.மு.க. கட்சியை*நேரடியாக தாக்குவது போலிருக்கும்.**
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில்* கவிஞர் வாலியின்*அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற*பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள்*, கருத்துக்கள்*, அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின்* பார்க்கும்போது*தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே*ட்டது*குறித்த*எழுப்பிய* கேள்விகள்**போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு*நல்ல வரவேற்பை அளித்தனர் .*.**
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது*எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து**தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும்*தன்னுடன் சில*ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் .* காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் .* ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை*சாப்பிட்டு*அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு*சென்று தனக்கு*உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி*பரிசளித்தார்* வள்ளல் எம்.ஜி.ஆர்.*.இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் .** இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே*போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும்* ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை*உருவாக்கி*ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .**
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து*பின்னர் சாலைகளில் கார்*செல்லமுடியாத தருணத்தில்*, குறுகலான பாதைகளில்*நடந்தே சென்று*பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை*ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில்*ஜாதி, மதம் ,இனம்,மொழி***பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா* ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால்*உயிரை தந்தேனும் காப்பவன்டா*,* ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை*நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன்*என்ற பாடல் வரிகள்*தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக*எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது .* இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள்,*எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும்.* ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான்* நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட்* அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை* பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர்.*ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் .* அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும்* தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக* தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு* வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ* எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள்* எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான்* எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .**
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன*
1. சங்கே முழங்கு* *- கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள்* - நான் ஏன் பிறந்தேன்*
3.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி*மன்னன்*
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்*
5.தரை மேல் பிறக்க வைத்தான்* - படகோட்டி*
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
7.புத்தன்*இயேசு காந்தி பிறந்தது*- சந்திரோதயம்*
8.பட்டத்து ராஜாவும் பட்டாள* சிப்பாயும் - மீனவ நண்பன்*
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை*
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்*
11.நான் பார்த்தா*பைத்தியக்காரன்*- நீதிக்கு தலை வணங்கு*
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை*
* *
-
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றனர்...... Thanks...
-
எம்.ஜி.ஆர் பிறந்ததினம் ஏழைமக்களின் மறுவாழ்வு தினமாக வோ அல்லது ஏழைக்குழந்தைகளின் மறுவாழ்வு தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும்..... Thanks...
-
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது...
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
" அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
" எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
"வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று....... Thanks...
-
ஸடைல் டிரஸிங் எந்த நிறம் போட்டாலும் தனி கலை
ஷூ பல வித மாடலை காட்டியது கூலிங் கிளாஸ் அழகு கூடியது எம் ஜிஆரிடம்
ஸடைலுக்கு ஒர் பல்கலை கழகம்........ Thanks...
-
எம்.ஜி.ஆர்-ஐ கீழே விழ வைக்க முயன்ற நம்பியார்! நடிகர் ராஜேஷ் பகிரும் பொக்கிஷம்
முழு வீடியோ: https://youtu.be/660wXsZGhKU
#Rajesh #Pokkisham #MGR #Nambiyar #Jeppiar...... Thanks...
-
Blossom Terry இதில் திரு.ராஜேஷ் சொன்னதில் எந்த இடத்தில சினிமாவை தூக்கி பிடிக்கிறார்னு நீங்க இவ்வளவு கடுமையா விமர்சிக்கிறீங்க ! புரட்சித்தலைவரின் நல்ல பண்புகளை ,அவர் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்த போதும் அவருடைய அந்தபணிவும் ,கனிவும் ,கருணையும் அவரிடம் பரிணமளித்ததுஎன்பதை நீங்கள் புரிந்து கொள்ள மறுப்பதுதான் உங்களை போன்ற அறிவுஜீவிகளின் அதிமாதாவித்தனமா ? உங்களைப்போன்ற போலி அறிவுஜீவி பைத்தியாகாரத்தனம் இன்னுமா உங்களுக்கு தெளியவில்லை!..... Thanks...
-
Blossom Terry sir,please try to understand me! MrRajesh could not be told for Mr.MGR's cini field imagination ! And then he had toldabout the real life's habits of our hounarable puratchithalaivar Dr.MGR! If let your argument there is the eligible for politics what about that ?I have told surely Your's soul is full fill of the bad thinking only! Please ,change your arquments and thinking about our MGR!........ Thanks...
-
என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.
தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை உலகிலேயே எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு....... Thanks........
-
1977 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ::::
முதல்ல சஸ்பென்ஸை உடைச்சுட்டு, எம்ஜிஆரோட தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பலாம்! இல்லேன்னா தம்பி பொன்னுவேல் ரொம்ப கோவிச்சுக்குவாரு!
எம்ஜிஆரின் முகவாட்டத்தை அறிந்த எம்.எஸ்.வி ஒரு தீர்வு சொன்னார்! அது, எம்ஜிஆர், மக்களிடம் ஓட்டுக்கேட்கும் பிரச்சாரத்தையும், அத்தோடு ஐந்து பாடல்களையும் இணைத்து அப்போதுதான் வந்திருந்த L. Pரிக்கார்டுகளா தயார் பண்ணி, எல்லா கிளைக்கழகங்களுக்கும் அனுப்பிச்சிடலாம் என்பதே அவர் ஐடியா!
எம்ஜிஆர் அசந்து போனார்! விஸ்வநாதனுக்கு இசையைத்தவிர வேறெதுவும் தெரியாது என்பதே எம்ஜிஆர் எண்ணமாக இருந்தது!
அப்போதுதான் பெரிய சைஸ் அரக்கு ரிக்கார்டுகள் முடிவுக்கு வந்து, சிறிய சைஸ் சின்தெடிக் ரிக்கார்டுகளும், சாவி கொடுக்க தேவையில்லாத நவீன கிராமபோன் பெட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தது! அதனால் குரல், இசையெல்லாம் துல்லியமாக, இனிமையாக மக்களை சென்றடைந்தது! இதுவும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அனுகூலம்!
சத்யா ஸ்டுடியோ ரிக்கார்ட் தியேட்டரில் "என் தாய்மார்களே "எனத்துவங்கும் எம்ஜிஆர் பேசும் பேச்சும், இரட்டை இலை வெற்றி இலை என TMS பாட்டும், அதோடு சுசீலா, வாணிஜெயராம் குரல்களில் நான்கு பாடல்களுமாக இரண்டே நாளில் ரிக்கார்ட் ஆனது!
எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் பாடல்களை எழுதினர்! இதற்கான தொகையை எம்ஜிஆர் தந்த போது கண்ணீர் சிந்த எம்.எஸ்.வி "என்னையும் உங்களையும் பிரித்துப்பார்த்து விட்டீர்களே அண்ணா" என்று உறுதியாக வாங்க மறுத்து விட்டார்! கவிஞர்கள் தொட்டு, பாடகர்கள், இசை அமைப்பாளர் என்று யாரும் ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை!
கிளைக்கு ஒரு ரிக்கார்ட் இலவசமாக தர வந்த போது நான் உள்பட பெரும்பான்மை கிளைச்செயலாளர்கள் வாங்க மறுத்து, நான்கைந்து ரெக்கார்டுகளை கடையில் பணம் தந்து வாங்கிக்கொண்டோம்!
இன்றளவும் அண்ணா திமுக மேடைகளில் அந்தப்பாடல்களும், எம்ஜிஆரின் உரையும் தேர்தல் காலங்களில் ஒலிப்பரப்பப்பட்டே வருகிறது!
மூன்று மாதத்துக்கு முன் எம்.பி தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடங்களாக இல்லாமல், புதிய பாதைகளில் புதிய இடங்களில் எம்ஜிஆர் பயணம் அமைவதாக பார்த்துக்கொள்ளப்பட்டது!
அப்படித்தான் அயோத்தியாப்பட்டிணம் --பேளூர் மார்க்கமாக படையாச்சியூர், ஏத்தாப்பூர் வழியாக ஆத்தூர் போவதாக பயணத்திட்டம் வகுக்கப்பட்டது! இன்றைக்கு 23,18 அடி அகலத்தில் நவீன எந்திரங்களை வைத்து சற்று குதிப்பது கூட இல்லாமல், நெகுநெகு என்று இருக்கும் அந்த சாலை அன்றைக்கு மாட்டு வண்டியில் கூடப்பயணிக்க தகுதியற்ற, பத்தடி அகலமுள்ள குண்டும் குழியுமான சாலை!
இன்றைக்கு தலைவர்கள் வந்தால் நான்குவழிச்சாலையில் கூட எங்காவது ஒன்றாக இருக்கும் வேகத்தடைகளை முழுக்க அப்புறப்படுத்தி விடுகிறார்கள்! இத்தனைக்கும் நவீன ஏர்பலூன் வைத்த இம்போர்டெட் வண்டிகள்! பெரிய குழிகளில் விட்டால் கூட ஜெர்க் ஆகாது!
அவர் குளிர் வசதியில்லாத தூக்கி தூக்கி போடும் ஸ்டான்டேர்ட் வேனைத்தான் பயன்படுத்தினார்! ஒரு மர ஸ்டூல் அசையாமல் போல்ட்டுகள் போட்டு இருக்கும்! மூன்று பேர் நிற்கும் அளவு மேல் மூடி திறந்து, அதில் அவர், வேட்பாளர், பாதுகாவலர் இரண்டு பேர் என நெருக்கிப்பிடித்து நிற்பார்கள்! கட்சியினர் வண்டிக்குள் ஏழெட்டு பேர் இருப்பார்கள்!
அவ்வளவுதான் அந்த காலத்தில், அந்த வண்டியில் அதிகப்பட்ச வசதி!
குண்டும் குழியும் சாலையில், தூக்கித்தூக்கிப்போடும் வண்டியில், மூச்சு விடக்கூட காற்றின்றி, நெருக்கிக்கொண்டு, நேரத்துக்கு நேரம் சோறு தூக்கமின்றி எம்ஜிஆர் தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களை, சிரித்த முகத்தோடு சந்தித்தார்!
காத்திருப்பதில் மக்கள் பட்ட துன்பத்தை விட, பயணப்பட்டு எம்ஜிஆர் அடையும் வேதனை அதிகமாகத்தான் இருந்தது! இருந்தும் பெரும்பாலும் பயணத்தை ரத்து செய்ய மாட்டார்! ஓய்வுக்கு ஒதுக்கிய நாளையும் பிரச்சாரத்துக்கே பயணப்படுத்துவார்! அவ்வளவு துன்பங்களும் மக்களைப்பார்த்தால் பஞ்சு பஞ்சாக பறந்து போய் முன்னிலும் உற்சாகமாவார்!
மக்களின் அன்பு மழையில் நனைந்து விட்டு, வண்டியில் பயணிக்கும் போது கட்சியினரிடம் "இந்த மக்களின் அன்புக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன்" என கண்கலங்குவார்!
எம்ஜிஆரின் வெற்றி, ஏதோ சுகவாசிக்கு கிடைத்த குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல! இருபதாண்டுகளுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் ஒன்றிப்பழகி. அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த, ஒரு கடின உழைப்பாளியின் வெற்றி!!
இந்த தொடரை எந்த ஆராய்ச்சி மாணவராவது படித்துக்கொண்டிருந்தால் என் பணிவான வேண்டுகோள்!
1958யில் நாடோடிமன்னன் வெளியானதிலிருந்து, 1987ல் அவர் மரணிக்கும் வரையிலான அவரது தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்களை நெடிய ஆராய்ச்சி செய்து, டாக்டரேட் பெறுங்கள்! வெறும் நடிகன் என்பதால்தான் வெற்றி எனும் அறிவிலிகளின் வாய் அடைபடட்டும்!!!........ Thanks...