நிழல் பாட்டுக்கள் என்றாலே முதலில் நினைவுக்குவருவது சின்னத்திரையிலிருந்து ஒரு பாடல்.. ரயில் ஸ்னேகம் சீரியல்.. அந்த வீணைக்குத் தெரியாது அதை ச் செய்தவன் யாரென்று..
**
அவளோ வாழ்க்கையில் காதலனிடம் ஏமாந்தவள்.. தற்கொலை செய்ய முயற்சிக்கையில் ஒரு வாலிபனால் காப்பாற்றப் படுகிறாள்.. அவனிடம் காதலனிடம் ஏமாந்துவிட்டேன், இப்போது இன்னொரு உயிர் வளர்கிறது எனச் சொல்லி அதனால் தான் இறக்க முயன்றேன் எனும்போது அந்த வாலிபன் - நிழல்கள் ரவி - தற்கொலை செய்வது கோழைத்தனம் அமுதா (இவரும் நிழல்களில் அறிமுகமான்வர்)..வேண்டுமானால் நான் ஒரு ஊருக்குப் ப்ராஜக்ட் ஒன்றுக்காகப் போகிறேன்.. நான் ஒரு அனாதை..சோ நோ ப்ராப்ளம்..உனக்குக் குழந்தைபிறக்கும் வரை என்னிடம் தங்கு..பின் ஒரு வேலைவாங்கித்தருகிறேன்..அந்தக் குழந்தையை வளர்..துணிச்சலாக..ஓ.கேவா.. நோ எமோஷனல் அட்டாச் மெண்ட் “ என்று சொல்ல அவளும் அவனுடன் வந்து அட்டகட்டி என்னும் இடத்தில் தங்குகிறாள்..
அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது..
ஏதோ ஒரு மனஸ்தாபம் ஆர்க்யூமெண்ட் டால் அவனுக்கு மூட் அவுட் ஆகி நண்பனுடன் சென்று குடித்துவிட்டு வருகிறான்..வீட்டில் வந்து உறங்கியும் விடுகிறான்.. விடிந்து பார்த்தால்- எனக்கு உங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது என ஸ்லேட்டில் எழுதியிருக்க.பின் தேடுகிறான்..மாடியில் தான் இருக்கிறாள்..அந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை வைத்து அவன் பாடுகிறான்..
இந்த வீணைக்குத் தெரியாது.. என்று (பாடலில் ஸ்லேட்டில் என்னை மன்னிக்கவும் என்று எழுதிவைத்திருக்கிறான்..பாடலின் முடிவில் அவளும் வந்து எழுத..அது என்னையும் மன்னிக்கவும் என மாறியிருக்கும்..கே.பி.டச்)
என்னை மிகக் கவர்ந்த பாடல்..இதில் நிழ்லும் அழகாக் இருக்கும்..
https://youtu.be/-JOM2WweBi8
சித்ரா வெர்ஷனும் அழகாக இருக்கும்..
https://youtu.be/RmCNuf2JuoQ