-
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 6: "பூமாலை நீயே, புழுதி மண் மேலே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~
பராசக்தியில் வந்த சோகப் பாடல். பின்னர் வரும் நீதி மன்ற காட்சி வசனத்திற்கு வலுக்கூட்டி அழைத்துச் செல்லும் பாடல். இசைத் தாலாட்டு: ஆர். சுதர்சனம். ஸ்ரீரஞ்சனி-க்காக பாடியவர் டி.எஸ். பகவதி என்று கொடுத்திருக்கிறார்கள். பூமாலை எப்படியெல்லாம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் வரி ஒரு சாட்சி. தாய் தன் குடும்ப பெருமை எடுத்துச் சொல்லி தற்போதைய நிலைமையை சொல்லி தன் குழந்தையின் நிலைமை இப்படியிருக்கிறதே என்று சொல்லி வருந்தும்போது... இதை விட என்ன சொல்ல முடியும். நல்ல வரிகள்.
https://www.youtube.com/watch?v=fdQzKA7I2GE
-
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 7: "ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
இயக்குனர் ஸ்ரீதரின் 'இனிய உறவு பூத்தது' படத்தில் இருந்து ராசாவின் ராஜ இசையில் வந்த பூமாலைப் பாடல். மனோவும், சித்ராவும் நடிகர்கள் சுரேஷ்-க்காகவும் நதியாவிற்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=0hOIiJNht04
-
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 8: "பூமாலை பொண்ணுக்கொரு புதுப் பாட்டு படிப்பதற்கு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~
படத்து பேரு 'மனம் விரும்புதே உன்னை'. பிரபு, கரண், மீனா நடிச்சுருக்காக. வழக்கம் போல ராசா அருமையா இசை அமைச்சு இருக்காக. பாட்டும் அருமையான கவிதையாத்தான் இருக்கு. நீங்களும் விரும்பி கேட்டு வச்சுக்கோங்க.
https://www.youtube.com/watch?v=SrZXy6SgQ1E
-