இன்று 22.06.2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள ஆரூர்தாஸ் கட்டுரை நிழற்படமாக நமது வாசு சார் அவர்களால் தரவேற்றப் பட்டுள்ளது. அதற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1055205
Printable View
இன்று 22.06.2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள ஆரூர்தாஸ் கட்டுரை நிழற்படமாக நமது வாசு சார் அவர்களால் தரவேற்றப் பட்டுள்ளது. அதற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1055205
தேங்க்ஸ் ராகவேந்தர் சார்.
நமது ரசிகர்களுக்கு மற்றும் நமது காவியங்களை ரசிக்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!
மில் தொழிலாளி ராஜு, மில் ஓனர் ராஜசேகரன் ஆனபோது எப்படி ஒரு பெரிய பளபளப்பு வந்ததோ அது போன்ற ஒரு மெருகு ஒரு உயிர்ப்பு ஒரு பளபளப்பு, புதிய மெருகேற்றலில் காலத்தால் அழியாத காவியமாம் நமது பாச மலர் திரைப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது!
சினிமாஸ்கோப் வடிவத்தில் மெருகேற்றப்பட்டு ஆடியோ போன்றவை மேம்படுத்தப்பட்டு உருவான காவியத்தின் ஒரு Preview ஷோ இன்று திரையிடப்பட்டது. படத்தின் நீளம் trim செய்யப்பட்டு இருக்கிறது. பிரிண்ட் quality பிரமாதமாக வந்திருக்கிறதாம். வெகு சில இடங்களை தவிர மற்ற அனைத்து frame-களும் திருவிளையாடலின் 90% quality-யில் அமைந்திருப்பதாக Preview ஷோ பார்த்தவர் சொன்னார்!
ஆடியோ மிக நன்றாக வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சின்ன ஒலி கூட தெளிவாக காதில் கேட்கும் வண்ணம் இருக்கிறது எனபதையும் குறிப்பிட்ட அவர் பாடல்கள் வெகு பிரமாதமாக வந்திருப்பதாகவும் சொன்னார். இன்று காணப்பட்ட சின்ன சின்ன குறைகளையும் நீக்கி படம் ஒரு முழுமையான மேருகேற்றலோடு அடுத்த மாதம் [ஆகஸ்ட்] வெளி வர வாய்ப்பு இருப்பதாக சொன்னார்.
அந்த நாளும் உடனே வந்திராதா என்ற ஆவலுடன் காத்திருக்கும்
அன்புடன்
ஆஹா, ஜூலைக்குள் வெளியானால்? பார்த்தவர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வண்ணம் வந்திருப்பதை கேட்டு மகிழ்ச்சியே.
http://i0.wp.com/kollytalk.com/poste...size=433%2C591
சற்று முன் வந்த தகவல், ஊர்ஜிதத்திற்குட்பட்டது.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் சிறந்த திரைப்டங்களின் பட்டியலில் இடம் பெறும் உன்னதத் திரைக்காவியம் பாச மலர், வரும் ஆகஸ்ட் 15 வாக்கில் வெளியாகலாம் எனவும், அநேகமாக ஜூலை 20ம் தேதி காலை சென்னை சத்யம் திரையரங்கில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறக் கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் உறுதி செய்யப் படும்.
ராகவேந்தர் சார் இங்கே குறிப்பிட்டுள்ளது போல் காலத்தை வென்ற காவியம் பாச மலர் அடுத்த மாதம் முதல் [ஆகஸ்ட் மாதம்] திரையரங்குகளில் வெற்றி பவனி வர இருக்கிறது. சத்யம் திரையரங்க வளாகத்தில் கர்ணன் படம் போலவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜூலை 20 ந் தேதி சனிக்கிழமை அன்று ட்ரைலர் வெளியீட்டு விழா இருக்குமா என்பது பற்றி ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பதாக செய்தி.
ஒன்று மட்டும் உறுதி. இன்று மாலை முதல் சென்னை முதல் குமரி வரை இந்த செய்தி தீயாக பரவி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
அன்புடன்
பாச மலர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 29.07.2013 திங்கள் காலை 9.00 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
நவீன மயமாக்கலில் பாச மலர் திரைப்பட மறு வெளியீட்டின் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 29 ஜூலை 2013 அன்று காலை 9 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழின் நிழற்படம் தகவலுக்காக இங்கே தரப்படுகிறது.
http://i1146.photobucket.com/albums/...psfe6baccd.jpg
இந்த விழாவிற்கென பிரத்யேகமாக திரு ஆரூர்தாஸ் அவர்கள் எழுதித் தந்துள்ள குறிப்புரை
http://i1146.photobucket.com/albums/...ps4da95fa8.jpg
விழா பற்றிய விவரங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps6d888e77.jpg
Times of India Ad 26.07.2013
http://epaper.timesofindia.com/Repos.../Ad0320601.png
27.07.2013 தேதியிட்ட இன்றைய டைம்ஸ் ஆ..ப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள பாசமலர் திரைப்பட விளம்பரத்தின் நிழற்படம்
http://epaper.timesofindia.com/Repos.../Ad0340501.png