-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*25/07/20 அன்று தெரிவித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தை வென்ற காவிய நாயகன் , மன்னாதி மன்னன் என்பதற்கு**ஒரு அத்தாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பது* , சகாப்தம் நிகழ்ச்சிக்கு தரும்* நல்ல வரவேற்பை காட்டுகிறது .
1977ல் சட்ட மன்ற பொது தேர்தல் வருகிறது . அ .தி.மு.க .கட்சி ஆரம்பித்த பின் வரும் முதல் தேர்தல் என்பதால் எம்.ஜி.ஆர். வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு தேர்வு செய்கிறார் .* தேர்தலுக்கு முன்பு மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். சென்று திறந்து வைக்கிறார் . அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. கட்சி பிரமுகராக உள்ள பஞ்சவர்ணம்**மற்ற இடங்களில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கான உதவிகள் , செலவினங்கள் தொடர்பாக உதவிட எம்.ஜி.ஆர். தன்*அண்ணன் சக்கரபாணி அவர்களை அனுப்புகிறார் . எம்.ஜி.சக்கரபாணி அவரகள் மதுரையில் தங்கியிருந்து அருப்புக்கோட்டை தொகுதிக்கு சென்று , தேர்தல் நிலவரம் பற்றி அறிய தொகுதியில் சுற்று* பயணம் செய்து தகவல்களை சேகரிக்கிறார் .* அந்த தொகுதி மக்கள் , எம்.ஜி.ஆர். மீது வைத்துள்ள அபரிமிதமான அன்பு , பற்று ,பாசம் ,விசுவாசம் ஆகியவற்றை அறிந்து நெகிழ்ந்து போகிறார் .அருப்புக்கோட்டையில் முக்கிய அ.தி.மு.க. பிரமுகரான ,எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட அந்த பஞ்சவர்ணம் வீட்டில் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தங்கி கட்சியின் நிலவரம், செல்வாக்கு ,முக்கிய பிரமுகர்களின் ஆதரவு, பொதுமக்கள் எதிர்பார்ப்பு , தேர்தல் முடிவுகள் ஆகியன பற்றி தெளிவாக ஆலோசனைகள் நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார் . இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டால் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கணித்து , எம்.ஜி.ஆரிடம் தான் சேகரித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் .* ஒரு சில மாதங்களில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஜேப்பியார் அந்த தொகுதிக்கு சென்று தேர்தல் நிலவரம், கட்சி நிலவரம் , மக்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை ஆராய்ந்து*சென்னைக்கு திரும்பி எம்.ஜி.ஆரிடம்* தான் சுற்றி பார்த்து சேகரித்த விஷயங்களை தெரிவிக்கிறார் . அதன்பின் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர். போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகிறது .தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று* முதல்வராவதற்கு அச்சாரமாக அருப்புக்கோட்டை தொகுதி திகழ்ந்தது .அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்தது எப்படி, காரணங்கள் என்ன என்று ,கட்சியின் முக்கிய பிரமுகரான திரு.பஞ்சவர்ணம் வின் டிவிக்கு பேட்டி அளிக்க முன் வந்துள்ளார் .கூடிய விரைவில் அவருடைய பேட்டியை* பதிவு செய்து , எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்கள் ரசிகர்கள் /பக்தர்களுக்கு பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் .
பூக்களை தேடி வண்டுகள் வருவது போல, பூக்களின் நறுமணம் ,வாசம் எங்கும் பரவுவது போல அந்த வாசத்தை எப்படி மறைக்க முடியாதோ , அதுபோல எட்டு திக்கிலும் ,திசையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் பரவிக் கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆருடைய ஆற்றல், திறமை, கொடை தன்மை,தன்னலமற்ற உதவிகள் ,பண்புகள் ஆகியன பற்றிய தகவல்கள்* சொல்வதற்கு பல்வேறு வகைகளில்*நம்மை தொடர்பு கொண்டு ஆர்வம் செலுத்துகிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள், பாடல்கள் பற்றிய தங்கள் சுய அனுபவங்கள், நினைவுகள் அந்த காலத்தில் படங்களை எப்படி பார்த்து ரசித்தோம், சைக்கிளில் சென்றோம் , பல மைல்கள் நடந்தே* சென்றோம், மாட்டு வண்டியில் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தோம் என்று வியப்புடன்* பகிர்ந்து கொள்கிறார்கள்*ஒவ்வொரு படத்தையும் பார்ப்பதற்கு எப்படி சூழ்நிலைகளை எதிர்கொண்டோம் .*கஷ்டத்தில், பிரச்னையில், சோகத்தில்,தோல்வியில்* இருக்கும்போது கூட அவர் படங்கள் பார்த்தால் துவண்டு* எழுந்து வழக்கமான பணிகளை பார்க்கலாம் .தற்கொலை எல்லைக்கு போனவன் கூட எம்.ஜி.ஆர். பாடல்களை கேட்டால்*வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறக்கும், வெற்றி தன் வசப்படும் என்ற தாரக மந்திரம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் . அதனால்தான் அவர் வாத்தியார் என்று அழைக்கப்படுகிறார் .
எம்.ஜி.ஆருடைய* பாடல்கள், படங்கள் இன்றைக்கும்* வாழ்க்கையில் துளிர்த்து எழுப்பும் வழிகாட்டியாக* ஒரு நெம்புகோலாக இருக்கிறது* என்பதற்கு காரணம்*பாடலின் ஒவ்வொரு,எழுத்து,* வார்த்தை, வரிகள் ஆகியவற்றை கவிஞர்களை வைத்து செதுக்கியுள்ளார்* அந்தப்பாடல்கள்* ஒவ்வொரு மனிதனின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் . 1961ல் ஒரு படத்திற்கு நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பை வைப்பதற்கு யோசனை சொன்னதற்கு , எப்போதும் நாம் எதிர்மறை தலைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது . பல லட்சங்கள் செலவு செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டம் காட்டாமல் நமக்கென்று சில லட்சியங்களோடு படம் எடுத்தோமானால் மக்கள் மனதில் நாம் நீங்கா இடத்தை பெற முடியும் என்று சொல்லி அந்த படத்திற்கு திருடாதே என்கிற நேரடியான பாசிட்டிவ் கருத்தான தலைப்பை சூட்டினார் . படமும் சென்னையில் பிளாசா, பாரத், மகாலட்சுமி* மற்றும் தென்னகத்தில் பல நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி மகத்தான வெற்றி பெற்றது .இந்த படத்தில் இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்*திருடாதே , பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை* இருக்கு மறந்து விடாதே பாடல் காலத்தை வென்று ரசிக்கப்படுகிறது .இன்றைக்கும் லட்சோப லட்சம் மக்களின் அடி நாதமாக இருக்கிற ஒரு நம்பிக்கை கோட்பாடு,மிக பெரிய தத்துவங்கள் கொண்டது. வாழ்க்கையில் மிக எளிமையான* மனிதனுக்கு , எளிமையாக வாழ்வதற்கு ஒரு நெம்புகோல் தத்துவமாக விளங்கிக் கொண்டிருக்கிறது .
எம்.ஜி.ஆர். என்றால், அழகு, கொடை வள்ளல், மற்றவர்க்கு உதவும் பண்பாளர் ,வசீகரமானவர் , பிறர் துன்பம் அறிந்து உதவுபவர் , வீரம், தமிழ் பற்றுடையவர் , தமிழின் அகமும், புறமும்* என்று அவரை பற்றி பலவேறு வகைகளில் இலக்கண இலக்கியங்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .அவருடைய வாழ்க்கையின் வெற்றி பயணம் , நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடரும் என்று கூறி மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------------
1.புதியதோர் உலகம் செய்வோம்* -பல்லாண்டு வாழ்க*
2.காலத்தை வென்றவன் நீ .காவியமானவன் நீ - அடிமைப்பெண்*
3.இதயவீணை படத்தில் ஒரு காட்சி யில் எம்.ஜி.ஆர்.*
4.நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் -விவசாயி*
5.ஏத்தமுன்னா ஏத்தம் -அரசிளங்குமரி*
6.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*
7.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*
8.சின்னவளை, முகம் சிவந்தவளை* - புதிய பூமி*
9.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
10.நாளை உலகை ஆள வேண்டும்* - உழைக்கும் கரங்கள்*
11.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*
-
1978-1979-ம் ஆண்டுகளில் புயல், மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதில் கோவை மண்டலமும் தப்பவில்லை. நொய்யல் பொங்கிப் பிரவாகமெடுத்திருந்தது.
இந்த ஆறு சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆறுகள்போல மாறின.
அணைகள், தடுப்புச் சுவர்கள், வாய்க்கால் மதகுகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.
ஏறத்தாழ 32 குளங்களின் மதகுகள் உடைந்து, பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
கோவை நகருக்கு 2 கிலோமீட்டர் மேற்கே உள்ள செல்வசிந்தாமணி குளம் கரை உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செட்டிவீதி, சுண்டக்காமுத்தூர் பிரிவு பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
அதேபோல நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் உடைப்பெடுத்து, உபரி நீர் ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது
செட்டி வீதி, ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அவதிப்பட்டனர்.
அதே போல குனியமுத்தூர் செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குனியமுத்தூர் பகுதிக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது...
தமிழக முதல்வர் #மக்கள்திலகம் அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்த அவர் வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்...
நீங்கள் பார்க்கும் இந்த காணொளியில் ஆரம்ப காட்சிகள் மற்றும் நடுவே ஒரு சிலகாட்சிகள் கோவை செல்வபுரத்தில் பொன்மனச்செம்மல் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட காட்சிகளே...
அப்போது புரட்சித்தலைவருடன் இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் கூறியது:
"கோவையில் வெள்ளம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தலைவரிடம், செட்டிவீதி, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டதை தெரிவித்தேன்.
உடனே அவர் காரிலேயே என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார். குடியிருப்புகளில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தபோது, ஓரிடத்தில் தலைவருக்கு முள்குத்திவிட்டது.
மக்களின் துயரத்தையும், வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த நம் பாரி வள்ளல்
உணர்ச்சிவசப்பட்டு, செருப்பை காரிலேயே விட்டுவிட்டு வந்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.
எனது செருப்பை அவரை அணியும்படி கேட்டுக்கொண்டேன்.
“நீ என்ன செய்வே?“ என்று வள்ளல் கேட்க,
“நான் சமாளிச்சுக்குவேன்” என்று கூறினேன்.
அன்று என் செருப்பை அணிந்து கொண்டுதான் #மக்கள்திலகம் தண்ணீருக்குள் நடந்தார் என்பது என்றும் என்னால் மறக்க முடியாதது.
அப்போது செல்வ சிந்தாமணி குளத்தின் கரையும், ஒரு பக்க மதகும் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம், பக்கத்தில் இருந்த பிரதான தார் சாலையை மூழ்கடித்து, அடுத்ததாக இருந்த செட்டி வீதி மற்றும் சுண்டக்காமுத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்திருந்தது.
கரை உடைந்த பகுதியில் ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லவேண்டும்.
அங்கேயே பாலம் கட்டித் தடுப்புச் சுவர் ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு #புரட்சித்தலைவர் ஆணை பிறப்பித்தார்
.
அதன் பின்னர் புதிய மதகும், தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது. தற்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.".........
-
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..
புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
நடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .
மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .
1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .
1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .
1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .
மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .
சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு
சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .
சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .
பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .
மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .
சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .
1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்
1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.
சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .
கடந்த 13/06/2019 & 14/06/2019 நாட்களில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கையின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .
வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .
இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர் .-வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரைபாரதி*26/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி* பல்வேறு**சமூக வலைத்தளங்களில்* இன்றைக்கும்**பரவலாக பேசப்படுவது அவருடைய புகழை பாடும் பாடல்கள் ,திரைப்படங்களின் முக்கிய காட்சிகள்* ஆகியன . அவருடைய ஒவ்வொரு படங்களும் பாடத்திட்டங்களாக மக்களுக்கு போதனைகள் அளித்துள்ளன .இப்படியெல்லாம் விளக்கிக்* கொண்டிருக்கிறார்கள் .* அப்படியான விளக்கங்களுடன்* அவருடைய வாழ்க்கை*எப்படி நம்பிக்கையூட்டும்* விதமாக*இருந்திருக்கிறது என்பதை பலரும் ரசித்து,ரசித்து* சகாப்தம் நிகழ்ச்சியின் தகவல்களாக பரிமாறிக் கொள்கிறார்கள் .* தொடர்ந்து எம்.ஜி.ஆரின் தேசிய பயணம் எப்படி இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது .வெற்றி ஜோடியாக கணிக்கப்பட்டது . லட்சிய ஜோடி என்றும்*அழைக்கப்பட்டது . எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அதிகமாக 28 படங்களில் நடித்தவர் ஜெயலலிதா . அவருக்கு அடுத்தபடியாக சரோஜாதேவி 26 படங்களில் எம்.ஜி.ஆருடன்* ஜோடி சேர்ந்தார் . ஆனால் பூஜை போடப்பட்ட , சில காட்சிகள் ,சில ஆயிரம் அடிகள்* எடுக்கப்பட்ட படங்கள் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் . பல்வேறு காரணங்களுக்காக பல படங்கள் ரத்தானது .தமிழ் திரையுலகிற்கு சரோஜாதேவியை திருடாதே படம் மூலம் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார் . ஆனால் முதலில் வெளியானது எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்ற நாடோடி மன்னன் நாடோடி மன்னன் மூலம் அறிமுகம் ,மற்றும் படத்தின் இமாலய வெற்றி காரணமாக சரோஜாதேவி*புகழின் சிகரத்திற்கு சென்றார் . சுமார் 30 படங்கள் ஒப்பந்தம் ஆகி கைவசம் இருந்தன .சரோஜாதேவி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராவின் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர் . அவர் மறைவிற்கு பின்னர் ,எம்.ஜி.ஆர். சரோஜாதேவியிடம் ,நீங்கள் விரும்பினால் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் பேசி , காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் பதவி வாங்கி தருகிறேன் என்றார் .இதை எம்.ஜி.ஆர். வற்புறுத்தி சொன்னதாக சரோஜாதேவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .* மற்றவர்களின் மாற்றுக்கொள்கையை மதிக்கும் தன்மை*உடையவர் எம்.ஜி.ஆர். என்பதை* இது காட்டுகிறது .
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோடு எம்.ஜி.ஆருக்கு கருத்து வேறுபாடு இருந்ததா என்றால் இருந்தது . எப்போது என்றால் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு*மகாத்மா காந்திக்கும் , சுபாஷ் சந்திர போஸுக்கும் போட்டியிடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . பட்டாபி சீதாராமைய்யா என்பவர் தோற்றபோது காந்தி*இது நானே தோற்றது போன்றது என்று கருத்து வெளியிட்டார் . அந்த நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார் .* நேதாஜியின் வெளியேற்றம் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .எனவே*காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த பற்றுதலை* துறந்தார் . கதர் ஆடைகள் அணிவதை தவிர்த்தார் .மற்ற உடைகள் அணிய ஆரம்பித்தார் . இருந்தாலும் ,மகாத்மா காந்தி மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் ,பற்றுதல் ஒருபோதும்* கொஞ்சம் கூட மாறவில்லை . நேதாஜியின் வீரத்தை மதித்தார் .* இலங்கையில்*தமிழ் இயக்கத்தை சார்ந்த விடுதலைப்புலி வீரர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டபோது , அவர்களுக்கு, பணம், பொருள், ஆயுதங்கள், போர் கருவிகள் என்று பல்வேறு வகைகளில் உதவினார் எம்.ஜி.ஆர். .
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தபோதெல்லாம் ராஜ்பவனில் சந்திக்கும்போது , அவர் பிரதமராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி , அவர்முன்பு அமருவதை எம்.ஜி.ஆர். தவிர்த்தார் . ஒரு கட்டத்தில் இந்திரா அவர்கள் ,திரு.முதல்வர் அவர்களே*நீங்கள் அமரவில்லையென்றால் நானும் எழுந்து நிற்க வேண்டி வரும் என்று சொன்ன பிறகுதான் உட்கார்ந்தார் . அந்த அளவிற்கு காங்கிரசின் உயர்மட்ட தலைவர்கள் மீது அளவற்ற அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.*தனது திரைப்படங்களில் காந்தியின் புகைப்படங்கள், அவரை பற்றிய வசனங்கள் , பாடல்கள்* அதிகம் இடம் பெறும்படி பார்த்துக் கொண்டார் .* எனவே தேசியக்கொள்கைக்கு எதிராக , குந்தகம் விளைவிக்கும் வகையிலோ , பிரிவினை வாதங்களை ஆதரிக்கும் செயலிலோ எம்.ஜி.ஆர். எப்போதும் ஈடுபட்டதில்லை .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் பாடலில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை , தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்*சுதந்திரம் என்பது தாய்நாட்டின் மீதுள்ள நேசம்,பாசம், பற்று ,மதிப்பு, மரியாதை*என்பதுதான் . பல்லாண்டு வாழ்க படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவிகளை சந்திக்கும்போது ஒரு இந்தியா வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் உருவம் வரைந்து கொண்டிருப்பார் . பின்பு அந்த வரைபடத்தை பல துண்டுகளாக கிழித்துவிட்டு இப்போது இந்தியா வரைபடத்தை ஒன்று சேருங்கள் என்று சொல்லுவார் .அவர்கள் ஒன்றுசேர்க்க முடியாமல் திண்டாடுவார்கள் .அப்போது மனிதனின் உருவத்தை ஒன்று சேருங்கள் என்பார் .அவர்கள் மனிதனின் அங்க அடையாளங்கள், உறுப்புகள் வைத்து வெகு சுலபமாக ஒன்று சேர்த்துவிடுவார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். இப்படி மனிதனின் உருவத்தை ஒன்று சேர்த்துவிட்டால் அதை அப்படியே திருப்பி பார்க்கும்போது , இந்தியா வரைபடமும் சரியாக வந்துவிடும் இல்லையா . அப்படி ஒவ்வொரு தனி மனிதனும் சரியாக இருந்தால் , ஒட்டு மொத்த இந்தியாவே சரியாகிவிடும் இல்லையா என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறுவார் .* இதயவீணை படத்தில் வரும் காஷ்மீர் பியுட்டிபுல் பாடலில் , தாய் நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் படைவீரர்கள் பற்றி சில வரிகள் இருக்கும்* அதாவது எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள், அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள் என்று .இப்படி பல படங்களில் , பாடல்களில், காட்சிகளில், வசனங்களில், தேச பக்தி, நாட்டுப்பற்று,*தேசிய ஒற்றுமையை* வலியுறுத்தி எம்.ஜி.ஆர். நடித்து தன் தேசபற்றை,தேசத்தொண்டை* வெளிப்படுத்தி* தேசத்தை நேசித்தவர் எம்.ஜி.ஆர்.*
திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ராணுவத்தில் சேர்வது என்று ஒரு திட்டம் இருந்தது .* தமிழக முதலவர் ஆனபின்பு ஒரு கட்டத்தில்* *ராணுவத்தையே சந்திக்க தயார் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார் .*அப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தேசத்தின் மீதும் , தேச தியாகிகள் மீதும் இருந்த பற்று, பாசம், நேசம் , மதிப்பு, மரியாதை ஆகியன ஒருபோதும் குறைந்ததில்லை* மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் .தொடரும்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------------
1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*
2. நாடு அதை நாடு - நாடோடி*
3..அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*
4.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜம் உரையாடல் -நாடோடி மன்னன்*
5.இது நாட்டை காக்கும்* கை - இன்றுபோல் என்றும் வாழ்க*
6.பட்டத்து* ராஜாவும் , பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்*
7.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து* = நேற்று இன்று நாளை*
-
இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. ஆபாசப் பேச்சால் பெண்களிடம் செல்வாக்கை இழந்த திமுக... எம்.ஜி.ஆர். காட்டிய பொது நாகரிகம்..!
.................................................. .........
1970களின் தொடக்கம். தமிழக அரசியல் மேடைகளில், அவதூறுகளும் ஆபாசங்களும் மிகுந்து இருந்த காலம். ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆபாசப் பேச்சாளர்களை அடுக்கடுக்காய் களம் இறக்கியது. இவர்களின் பேச்சுகளைக் கேட்டு ரசிப்பதற்கு என்றே ஒரு பட்டாளம் எல்லா ஊர்களிலும் இருந்தது.
என்ன ஒன்று... இவ்வகைப் பேச்சாளர்கள் வருகிறார்கள் என்றால், அன்றைக்கு, ஊரில் ஒரு பெண்மணி வீட்டை விட்டு வெளீயில் தலைகாட்ட முடியாது. முழுக்கவும் ஆண்களுக்கான அதிலும் ஆபாசத்தை ரசிக்கிற ஆண்களுக்கான கும்பல் மட்டும் மேடையைச் சுற்றி இருக்கும். இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. தங்களது ஆற்றாமையை ஆத்திரத்தை, கொச்சைப் பேச்சாக கூச்சம் இன்றிப் பரப்பினார்கள்.
தாய்க்குலத்துக்கு எம்.ஜி.ஆர். மீது இருந்த அளவிட முடியாத பாசம் ஒருபுறம்; அவருக்கு எதிராக இறக்கி விடப்பட்ட சிறப்புப் பேச்சாளர்களின் ஆபாசம் மறுபுறம். இந்த 'யுக்தி' (குயுக்தி) எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு, ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. இதனால் பெண்களின் ஓட்டு என்றைக்குமே 'எதிர்க் கட்சிக்கு' கிட்டாமலே போனது. இது ஒரு வகையில், அதிமுகவுக்கு எதிர்பாராமல் கிடைத்த 'போனஸ்'! இன்றளவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களாகப்
பெண்கள் இருப்பதற்கு எதிர் முகாமின் ஆபாசப் பிரச்சாரமும் ஒரு காரணம்.
சரி.. இத்தனை பேர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதரைக் குறி வைத்துத் தாக்கினார்களே... இதற்கு எம்.ஜி.ஆர். தந்த பதில் என்ன..? ''பெயத்தக்க நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'' என்கிறது உலகப் பொதுமறை. இதனை அப்படியே தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தார் மக்கள் திலகம்.
1972 அக்டோபர் 17 - அதிமுக தோன்றிய நாள் தொட்டு, 1987 டிசம்பர் 24 அன்று அமரர் ஆன நாள் வரையில், யாரைப் பற்றியும் அநாகரிகமாக ஒரு வார்த்தை கூட ஒரு நாளும் எம்.ஜி.ஆர். பேசியதே இல்லை. 1977 தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தலின் போது எம்.ஜி.ஆர். பேசிய பரப்புரை / விளக்கவுரை குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அதற்கு இணையான தேர்தல் பிரச்சாரப் பேச்சு இன்றுவரை இல்லை. இது குறித்து விரிவாகப் பிறகு பார்ப்போம்.
தனக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்த கட்சித் தலைமை குறித்து தனது இந்த உரையில் எம்.ஜி.ஆர். கூறியது இவ்வளவுதான். 'நாநயம் இருந்தால் மட்டும் போதாது; நாணயம் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்'. பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை; 'நாநயம்', 'நாணயம்' என்று இரண்டு சொற்களை மட்டும் சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆர். யாரைக் குறித்து என்ன சொன்னார் என்று தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்து போனது.
1977இல் அமோக வெற்றி பெற்று அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு முடிந்து, முதல் முறையாக முதல்வராக மக்கள் முன் உரையற்றினார்.சென்னையில் அண்ணா சிலை மேடையில் இருந்து அவர் பேசியதை மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அடுத்ததாக, 1980ஆம் ஆண்டு. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாக, எம்.ஜி.ஆர். ஆட்சி, பிரிவு 356இன் கீழ் நீக்கப் பட்டது.
இன்று ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடுகிறவர்கள், மாநில உரிமை பற்றி மூச்சு விடாமல் முழங்குகிறவர்கள், மக்கள் தேர்ந்து எடுத்த மக்கள் திலகத்தின் ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்தார்கள்.1977ஐ விடவும் மோசமாக, எம்.ஜி.ஆர். மீது, தனிப்பட்ட அவதுறுப் பிரச்சாரத்தை அள்ளி வீசியது பிரதான எதிர்க் கட்சி. எம்.ஜி.ஆர். சற்றும் கலங்கவில்லை. மக்களைச் சந்தித்து நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பி விட்டார். அப்போதும் தனக்கு எதிராக செயல்பட்ட சதிகாரர்களைக் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
'நான் செய்த தவறு என்ன..?' என் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள்... இல்லையேல், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று மட்டுமே சொல்லிச் சென்றார். மதுரை மேற்கு தொகுதியில் ஒரு பிரமாண்டமான 'போஸ்டர்'. 'என்ன தவறு செய்தேன்..?' என்கிற கேள்வியுடன், 'கொடுத்துச் சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கிறது. வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே..' என்று கேட்டது. தமிழ்நாடு முழுக்க இதுதான் அதிமுகவின் பிரச்சாரமாக இருந்தது.
அராஜகமாக ஆட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் கூட, தனது பேச்சில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தார் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போன மக்கள் அமோக ஆதரவு நல்கி, முன்னினும் அதிக இடங்களைத் தந்து மகிழ்ந்தனர், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார் பொறுப்பு ஏற்ற கையோடு, சென்னை அண்ணா சிலை அருகில் இருந்து உரையாற்றினார் எம்.ஜி.ஆர். பல லட்சம் மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அந்த மக்கள் கடலில் நானும் ஒருவன்!
காலத்தின் கோர விளையாட்டில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப் பட்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 1984 அக்டோபர் 31. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி, தனது மெய்க் காப்பாளர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். உடனடியாக, மக்களைவைக்குப் பொதுத் தேர்தலும் அறிவித்தார். அது சமயம் அதிமுகவும் முன்னதாகவே பொதுத் தேர்தலைச் சந்திக்க விரும்பி, தனது ஆட்சிக் காலத்தைக் குறுக்கிக் கொண்டு, மக்களவையுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வழி விட்டது.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்து இருந்தார் எம்.ஜி.ஆர். இங்கே தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத் தேர்தல்! அப்போதும் பிரதான எதிர்க் கட்சி நேர்மறை அரசியல் செய்ய முன் வரவில்லை. 'எம்.ஜி.ஆர். இறந்து விட்டார்' என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமல்ல; 'ஒருவேளை எம்.ஜி.ஆர். திரும்ப வந்தால், அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்' என்றெல்லாம் 'வீர வசனம்' பேசினார்கள். இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 'எதிரணி வேட்பாளர் வந்து விட்டால், அவரிடமே ஆட்சியைத் தந்து விடுவேன்' என்று வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்ட கேலிக் கூத்து அரங்கேறியது
இதனை முறியடிக்க, மருத்துவ மனையில் இருந்தபடி, வீடியோவில் தோன்றினார் எம்.ஜி.ஆர் 'தலைவர் உடல் நலம் தேறி வருகிறார்; விரைவில் தமிழகம் திரும்பி முதல்வர் பொறுப்பு ஏற்பார்' என்று அப்போதைய கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஊர்ஊராகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சியின் அவதூறுப் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டது. மீண்டும் ஒருமுறை, முன்னை விடவும் அதிக இடங்கள் பெற்றது அதிமுக. மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர்., பரங்கிமலை மைதானத்தில் பேசினார். இப்போதும், தலைவரைக் காண்பதற்காக மக்கள் வெள்ளம். அவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டு மக்கள் தன் மீது வைத்த அபரிமிதமான அன்புக்கு கன்ணீர் மல்க நன்றி கூறினார், மற்றபடி, ஒரு வார்த்தை கூட யாரையும் சாடிப் பேசவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அரசியல் நாகரிகத்தில் உச்சம் தொட்டவர் அவர். தனது திரையுலக வாழ்க்கையின் பிற்காலத்தில், அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களில் ஒருவர் - கண்ணதாசன். மகாகவி பாரதிக்குப் பிறகு, தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த மாபெரும் மக்கள் கவிஞன். 'கவியரசு' என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த தன்னிகரில்லாக் கவிஞன்.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பு ஏற்ற பிறகு, அரசவைக் கவிஞராக யாரை நியமிக்கலாம் என்கிற கேள்வி எழுந்த போது, சற்றும் யோசிக்காமல் கவியரசர் கன்ணதாசன் மட்டுமே பொருத்தம் ஆனவர் என்று தீர்மானித்தார். அப்போது, பாடலாசிரியர் வாலி, தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தனது காரில் அவரை அழைத்துக் கொண்டு போன எம்.ஜி.ஆர். அவரிடமே இந்த யோசனையை சொன்னார். உடனடியாக முழு மனதுடன் ஆமோதித்தார் கவிஞர் வாலி.
நன்றாகப் பாருங்கள். கண்ணதாசனுக்குப் பதவி தருவது மட்டுமல்ல; தன்னை நம்பி, தன்னுடன் நெருங்கி இருக்கிற கவிஞனுக்கும் மனவருத்தம் இருக்கக் கூடாது என்று எண்ணியவர் எம்.ஜி.ஆர். கவியரசு கன்ணதாசன் போன்ற ஒரு மாபெரும் யுகக் கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் என்கிற பதவி மிகச் சாதாரணம்தான். ஆனால் அன்னாருக்கு அப்பதவியை வழங்கியதன் மூலம், தமிழ் மொழியின் மீது தலைவருக்கு இருந்த தனியார்வம் நன்கு வெளிப்பட்டது. கூடவே அவரின் நாகரிக அணுகுமுறையும் நமக்குப் புரிந்தது. பொது மேடையில் கடுஞ்சொல் உதிர்க்காத, புன்னகையை மட்டுமே வீசிச் சென்ற அந்த சரித்திரத் தலைவன், நிகழ்த்திக் காட்டிய மற்றொரு சாதனை - இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கிய மைல் கல். அது என்ன..?
(வளரும்.....).........
-
எம்ஜிஆர் - திரையுலகில்
முடிசூடா மன்னர். !m.g.r.
எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.
‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.
இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.
அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.
அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.
தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.
‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடுகிறேன்.........’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.
-
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?
Mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் ,பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு "நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான்" என்று சொன்னவர் , காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடைமுறை வாழ்விலும் வாழ்ந்தார் வாத்தியார்...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
பல்லாண்டு, பசுமையுடன் நம் மனத்தில் நேசப்புன்னகையுடன், நம்மை அன்புடன் அரவணைத்து, இளமை மாறா முகத்துடன் என்றும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.............
-
பாடல் பிறந்த கதை.
மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .
“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”
கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?
புரிந்து கொண்டார் கண்ணதாசன்... !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே 'சங்கே முழங்கு' படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்...
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!
“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்...
“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”
ஆம்...!
யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..
கவிஞருக்கு எங்கிருந்து வந்தது ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி..!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே..
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே..
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா..!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!.........
-
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' 14.8.1977
43 ஆண்டுகள் நிறைவு ..........
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்
1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்து ,30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் சாதனைகள் பெற்றார் . தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெயர்
பெற்றார். உலகிலயே அதிகமான ரசிகர்களை பெற்றவர் எம்ஜிஆர் .
இன்றும் அவருடைய ரசிகர்கள் உலகமெங்கும் அவர் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . வசூல் சக்கரவர்த்தி என்று மலைக்கள்ளன் -1954 படத்திற்கு புகழ் கிடைத்தது .1977 வரை தொடர்ந்து நிரந்தர வசூல் மன்னன், ஏக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து கொண்டார் .
1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் அவர் வாழ்ந்த 1987 வரை 11 ஆண்டுகளில் அவருடைய 90 படங்கள் தொடரந்து தென்னகமெங்கும் பவனி வந்தது . வசூலை வாரி கொட்டியது. 1987 முதல் 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் பல படங்கள் புத்தம் புதிய பிரதிகளாகவும் , டிஜிட்டல் வடிவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . சாதனை .2005 முதல் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து காண்பித்து வருகிறார்கள் . மக்கள் திலகத்தை பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன . பல்வேறு அமைப்பினர் நடத்திய எம்ஜிஆர் பட விழாக்கள் ஏராளம் ..........
-
#எம்ஜிஆர்_மற்றவர்களுக்கும்_மதிப்பளித்தவர்!
M.g.r. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.
முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’
#சிறு_குறிப்பு
மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்..........