நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ!:)
Printable View
நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ!:)
கருவின் கரு - பதிவு 30:-D:smile2:
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக விவரிக்கலாம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - மேற்கொண்ட வரிசையில் சில பாடல்களை ரசிப்போமா ?
பருவம் 1- தத்ரீ
https://youtu.be/3LwFGJSX1h8
https://youtu.be/gCx-8SwvAe8
https://youtu.be/YS14kSchpog
ஆஹா.. மாஞ்சு மாஞ்சு கண்ணா செலக்ட் பண்ணின அவனோட கவிதைகள்ளயும் (?!) பாட்டுல்லயும் மச்சினி தான் பிடிச்சதாங்க்காட்டியும்..
நான் கொஞ்சம் சின்ஸியர் சிகாமணியாக்கும்.. ஹோம் ஒர்க்னு வந்துட்டா ஆரம்பத்துலருந்து தான் செய்வேன்.. ராஜேஷோட ரேர் சாங்க்ஸ் கேக்கணும்.. நான் போட்ட சாங்க்ஸையே கேக்கணும்! பட் மச்சினி கூப்பிடறாளே..!
//I object your honour. There is a song from the popular Vijay film "Poove Unakkaaga"//
//மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்.. //
கல் நாயக், ராகவேந்திரா சார்.. நன்ற்ற்றி..மொதல்ல இதைத் தான் கேட்டேன்.. பாட்டு நல்லா இருந்தது..முரளி விஜி.. மேலேயும் இதை ஆடிக்கிட்டிருப்பாங்களோ.. நாகேஷ் டான்ஸ் அஸ்யூஸ்வல்.. நம்பியாருக்குத்தான் டான்ஸ் வராது ( இதுக்கு யாராவது பாட் போட மாட்டாங்களா என்ன)
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ணக்கிளி பறக்குது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒண்ணு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசலெங்கும் கோலம் போட
நல்ல பாடல். கொடுத்தமைக்கு நன்றி.. :)
*
ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும். :)
(இன்னும் பாட்டு கேக்க ஆரம்பிக்கலை)(ஆரம்ப வரிகளைச் சொன்னேன்..
மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே
அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
ஜும்பாயே....ஆகும்பையே...
அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி
அது என்ன விலை நான் என்ன விலை
நான் மோகினி இரவினில் முக்கனி கனி"
ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!
*
அல்லிப் பூவின் அழகே அழகு தனி அழகு
அள்ளிக் கொண்டு மதனா பழகு நீ பழகு
அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர
பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற (சே ரவியும் கல் நாயக்கும் மிஸ் பண்ணிட்டாங்களே!) :)
படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா
இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
இந்த அணிலுக்கு மனமில்லையா
இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா
இடை அழைக்குது இடைவெளி தடுக்குது
அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா..
நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…
காட்டுக்குள்ளே பாடும் என் பாடல் புதுசு
காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா):)
இன்பம் தேடித் தானே உருகாதோ மனசு
என் பெண்மை கொண்ட ஆசை என்னாளும் இளசு
இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே
புது விடை சொலும் இள மன சிலம்புகள் தினம் புலம்பிட மழை வருதோ
இவன் தொடுகையில் உயிர்வரை சிலிர்க்குது அட இது ஒரு புதுசுகமோ
தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
தவிக்குது கொதிக்குது துடிக்குது
துணை வருமோஓ ஓ சுகமென்று சொல்லியதோஒஒ
(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)
சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…
( நா இந்த ஆட்டைக்கே வரலை!) :)
*
இரண்டுபாடல்களுக்கும் (தமிழ், தெலுங்கு) மனமார வயிறு குலுங்க சிரிக்க வைத்ததற்கும்.,
வெங்கடேஷ்,ஸ்ரீதேவிக்கு மறுபடி ஆக்ஷன் கட் கொடுத்து ஒவ்வொரு வரியாய்
என்னை நகலெடுக்க வைத்ததற்கும் (அது என்னாங்க கிடுகிடுன்னு ஓடறாங்க பாடறச்சே),
அப்புறம் மஞ்சள் பச்சை டிரஸ்ஸை அடிக்கடி பார்க்க வைத்து
ஸ்ரீதேவி ரைட் ஆங்கிள்ட் ட்ரையாங்கிளாட்டம் கை உயர்த்தி அப்பப்ப பாடுவதை
மறுபடிமறுப்டி பார்க்க வைத்து ( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி) :)
இப்போது வீக் எண்ட் வரும்போது இந்தப் படத்தையும் பார்க்கவைப்பதற்கும் மிக்க்க நன்றி வாசுசார்..
*
மனைவியின் தங்கை வந்தாள்
…மாசிலா நிலவாய் என்முன்
சுனையென இளமை பொங்க
..சுகந்தநீ ராடல் செய்தே
இணைந்தநல் லிதழ்பி ரித்தே
…இனிமையாய்க் கண்ணைக் கொட்டி
கணையினை விட்ட அம்பாய்
..கனித்தமிழ் பேச லுற்றாள்..
*
அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! :)
*
அப்புறம் வாரேன்..
//பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .//
ரவி சூப்பர்.. நெகிழ வைக்கும் கவிதை..ச்சும்மா பூந்து விளையாடறீங்க..
*
என்னமோ போங்க 16
**
ஓரவிழிப் பார்வையிலே உள்ளமெலாம் தந்தவளை
…ஊடிநின்று கேள்வியினைக் கேட்கின்றான் வாலிபனும்
பாரமென இளமனதை வாட்டுகின்ற வேட்கையிலே
..பாவையவள் நூலிடையை பற்றித்தான் கேட்கின்றான்
ஆரமென நாணத்தில் அன்னமது நடைமறந்து
..ஆணழகன் கேள்விக்குப் பதில்சொல்லும் நாடகந்தான்
வாரம்போய் வருஷம்போய்ப் பலவிதமாய் ஆனாலும்
..வரமெனவே தொடர்ந்துவிடும் காதல்தான் தெரியாதா..
தெரியலையா..என்னமோ போங்க..
*
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனா..
https://youtu.be/vTEwKW26kI0
டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..என்னவாக்கும் படம்..
*
என்னமோ போங்க - 17
*
முன்பு எழுதியது நினைவில் ( போன போஸ்ட் கவிதை புச்சு)
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
***..
கரெக்ட் தானே பொண்ணுங்கள்ளாம் ஸ்விட்ச் போட்டா மாதிரி எப்படி மாறறாங்க.. என்னமோ போங்க
ம்ம் இங்க இந்தப் பொண்ணு என்னவாக்கும் பாடுது
*
உயிர் நீ உனக்கொரு உடல் நான்.
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் (கொஞ்சம் கஷ்டம் தான்)
விழுந்தால் மடிமேல் விழுவேன் நான்..
பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்
வளர்ந்தாள் காதல் அமுதம்
கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே
வருவாள் வாழ்வு முழுதும்..
*
https://youtu.be/_M-oUzzMORs
என்னமோ போங்க - 18
*
கல்யாணம்னாலே எல்லாருக்கும் ஒருவித மயக்கம் நடுக்கம் - ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உள்ளூர இருக்கத் தான் செய்யும்..
ஆனா குஷியா வெளிக்காட்டிக்கறதுங்கறது கொஞ்ச பேர் தான்.. அதில் ஆண்களோட பெர்சண்டேஜ் ஜாஸ்தி தான்..
பெண்கள் ரேர் தான்..
இங்கபாருங்க இந்தப் பொண்ணு..படத்தோட டைட்டில் மலை நாட்டு மங்கையாம்.. ஆனா படிச்ச பொண்ணாட்டமா கல்யாணத்தைப் பத்தி எப்படிக் கனவு
காணுது பாருங்க..தப்பில்லைங்கறீங்களா.. நானும் என்ன தப்புன்னா சொன்னேன்.. என்னமோ போங்க
*
https://youtu.be/qhLwwr_ldBQ
கருவின் கரு - பதிவு 30// ஒம்ம கிட்ட இருந்து நான் கற்றுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே.. நீரும் என் குருக்களில் ஒருவராகி விட்டீர்கள் ரவி.. நன்றி..(கடைசிப்பருவத்திற்கு எப்படி முதியோர் இல்லம் வரும்..ஸ்லோகத்தில..அந்தக்காலத்திலயும் அப்படி இருக்கா என்ன)
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=RW6BUF7kOPA
Piano ... என்னென்ன மாயமெல்லாம் செய்கிறார் மன்னர். அதுவும் துவண்டு கிடக்கும் மனதைத் தேறுதல் செய்து தைரியம் தரும் பாடலுக்கு பியானோ என்னவாய் இவரிடம் ஏவல் செய்கிறது. மனிதன் என்பவன் பாடலுக்கு சற்றும் குறையாத சிறப்பு வாய்ந்த இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நன்றி. பால்குடம் படத்திலிருந்து துணிந்து நில் பாடல் பாடகர் திலகத்தின் குரலில்..
பியானோ மட்டுமா.. ட்ராம்போன், அக்கார்டின், விசில், புல்லாங்குழல், வயலின் எல்லாமே அமர்க்களமான இசை ராஜ்ஜியம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்..
பாடல் வரிகள்.. தனியே ஒரு திரியே ஆரம்பிக்கலாம். அவ்வளவு உண்மையான வரிகள்..