சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!
Printable View
சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!
காலத்தை வென்ற காவிய நாயகன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன்
பாரதரத்னா திரு. M.G.இராமச்சந்திரன் அவர்கள் மீது எனக்கு நிறைந்த அபிமானமும் ஈடுபாடும் உண்டு. அவரை ஒரு நடிகராக பார்ப்பதைவிட காலத்தை வென்ற மக்களைக் கவர்ந்த மாபெரும் காவிய நாயகனாகவே நான் பார்க்கிறேன்.
பாரதரத்னா திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சமூக வலையில் ஒரு தளத்தை உருவாக்க உள்ளேன். அதில் எனது மனதிற்குப் பட்டதை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய உள்ளேன். நிறைகள் மட்டுமன்றி குறைகளும் இதில் பதிவு செய்யப்படலாம். எனது பதிவுகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை இங்கே தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழ்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக நல்லதொரு பேரும் புகழுடனும் வாழ்ந்து காட்டிய தலைவர்கள் மற்றும் மகான்களைப்பற்றி பேசவே தகுதியற்றவர்களெல்லாம்.
1) அவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் பேசி எல்லாம் தெரிந்தது போல் வேடமிட்டு அவர்களின் பெயரை மாசு படுத்த நினைக்கினறனர் அல்லது.
2) அவர்களின் பெயரைத் தனது சொந்த லாபங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறையினர் உண்மை நிலவரம் அறிய வேண்டும் விபரமற்ற வீணர்களின் வீண்வாதங்களால் தடம் புரண்டுவிடக்கூடாது அரசியல்வாதிகள் தன்னலமற்ற ஒப்புயர்வற்ற தலைவர்கள் வழி
courtesy net
#இலவசம்
#தெரியாதவர்கள் #தெரிந்து #கொள்ளட்டும்
பள்ளியில் சத்துணவு இலவசம்,
நோட்டு புக்,
பை இலவசம்,
ஏன் நாம் பலர் கற்ற கல்வியே இலவசம் தான்..
விவசாய மின்சாரம் இலவசம்,
இன்னும் மானியம் பல
ரேஷன் அரிசி இலவசம்
அது இல்லையென்றால் நாட்டில் இன்று பலர் பட்டினி..
முதலில் கொடுத்த இலவசம் கல்வி
பள்ளி மாணவர்களுக்கு செருப்பு இலவசம்
சிலருக்கு செருப்பே அப்ப தான்யா கிடைத்தது காரணம் ஒன்று வறுமை இன்னென்று பல ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணிய கூட இந்த சமூகம் விடவில்லை. அதை தகர்த்தது இலவசம்
இலவச பள்ளி சீருடை, பஸ் பாஸ் சாமானியனையும் படிக்க வைத்த இலவசம்..
அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை இலவசம்
சில மாநிலங்களில் 5ரூபாய் என்று குறைந்தபட்ச கட்டணம் உண்டு. நம் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம்..
மகளிருக்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் இலவசம். எத்தனை பெண்கள் திருமணம் நடைப்பெற இலவச நிதி உதவியுள்ளது...
டிவி, மிக்சி, கிரைண்டர் எல்லாம் அவன் பரம்பரையே பார்த்தது இல்லை. அதை அவனுக்கு வழங்கியது இலவசம்..
பொத்தாம் பொதுவாக இலவசங்களை குறைகூறி செல்வது சரியில்லை.
கூடி வாழ்ந்த இடம் குப்பம், சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி, மீனவர் வாழ்விடம் பட்டினம், பாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மீனவ, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது உங்கள் இலவசம் லிஸ்ட்டில் அடங்கும்.
இப்படி பாமரனை உயர்த்த அவனுக்கு உறைவிடம்,உணவு, கல்வி, உடை,சுகாதாரம் எல்லாம் இலவசமாக கொடுத்தது பெரிய பொருளாதார பின்னடைவு தரும் எனில் அதை ஏற்ப்போம். அது ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரா கடனை விட பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தப் போவதில்லை.
இளம் தலைமுறையினர் மத்தியில் இதுவரை எல்லாமே தவறு இனி தான் எல்லாத்தையும் மாத்தனும் என்றும்.இலவசம் ஒழிப்பு என்றும் கோஷம் பரப்பும் முன்,கார்ப்பரேட் கம்பெனிகளின் வரா கடனை வசூலிப்பது எப்படி என யோசியுங்கள்.
இலவசம் பிச்சை அல்ல.. அது வரிப்பணத்தில் எளியோரை எழுப்பி விடும் ஏணி....... இதயம் கருத்தில் கொண்டே அன்றே "தீர்க்கதரிசி" மக்கள் திலகம் இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்...
நண்பர்களே (மாற்று முகாம்), இப்போது வந்திருக்கும் சர்க்கார் படத்தில் 'கள்ள ஒட்டு' நிகழ்வை நினைவு படுத்தும் ஓர் காட்சியில் அவர்கள் அபிமான நடிகர் (.....சன்) ஒட்டயே போட்ட ஊர்.... என ஒரு காட்சி பெருமை படுத்தாமல், சிறுமை , வேதனை படுத்துவதாக அமைந்துள்ளது என பார்த்தவர் கூறினார்... இதை கண்டித்து அவர்கள் பக்கத்தில் மறுப்பு அல்லது கண்டனம் தெரிவுத்துளார்களா?!
முகநூல், வாட்ஸப்ப் போன்றவற்றில் மக்கள் திலகம் அபிமானிகள் கூட, குறைச்சல் இல்லாமல் சரியாக புள்ளி விபரங்கள் அளிக்கின்றனர்... ஆனால் ஒரு சில மாற்று முகாம் நடிகர் ரசிகர்கள் என சொல்லி கொள்பவர்கள் தப்பும், தவறாகவும் அவர்கள் படங்கள் ஓடிய நாட்களை பதிவு செய்து அவர்களுடைய நடிகர் மேல் தப்பான அபிபிராயத்தையே ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர வில்லையோ?!.....
இந்து தமிழ் திசைToggle navigation
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்
அரசாங்கம் கொடுத்த மடிக்கணினி உதவியால்தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்: விஜய் - முருகதாஸ் சார்ஸ்!
62 8.76K Subscribe
Published : 09 Nov 2018 09:57 IST
Updated : 09 Nov 2018 13:50 IST
இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளைப் போக்கியது - நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான். அதில் அத்தனை பாடங்கள், நூல்களைச் சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித் தேர்வு முயற்சிகள் சாத்தியமாகின.
“பெண்களுக்கு இலவச மருத்துவக் கல்வி, சென்னை மருத்துவக் கல்லூரிதான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது” என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை இலவச மிதிவண்டிகள் எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அது இலவசம் அல்ல; சமூகக் கடமை. ஒவ்வொரு நகர்வுக்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம்வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத் திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன!
சமூகத் தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்திய சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டுசேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆகியோரின் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை 'ஓசி' எனக் கொச்சைப்படுத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.
பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்கப் பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத் திட்டம்தான். அதைச் சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கியது சமூக நீதி! புனிதம் கெடும் என்று அடிப்படைவாதிகள் முட்டுக்கட்டை போடுவதால், சத்துணவில் முட்டை கிடைக்க வழியில்லாமல் பல மாநிலங்களில் பழங்குடியின, ஏழைப் பிள்ளைகள் அல்லலுறுகிறார்கள். அந்த மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவுக்குப் பேசுபவர்கள் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத் தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பேருந்துக் கட்டணம் கட்டக் காசில்லாமல் நடந்தே பல மைல் தூரம் கடந்து படித்தோரின் கதை தெரியாது. ‘கவுன்சிலிங்குக்குக் கட்ட ஐயாயிரமா?’ என கையறு நிலையில் தவித்த குடும்பங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ எனத் தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., (ஆதரித்தார்).....
- பூ.கொ.சரவணன். .... Thanks Friends...
உலையில் அரிசியை வைத்து விட்டு அரிசி கிடைக்கும் என்று நம்பி. ஒருவர் வீட்டுக்குப்போகலாம்னா அது.புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்களின் வீடுதான் இது புரட்சித்தலைவரின் சினிமாவையும் அரசியலையும் மட்டம்தட்டிய துக்ளக் பத்திரிகை ஆசிரியர் திரு சோ.. ராமசாமி சொன்னது தன்னை எதிர்ப்பவனும் புகழும்படிவாழ்ந்த உலகத்தின் எட்டாவதுவள்ளல் எம் ஜி ஆர் அவர்களின் வள்ளல்தன்மையில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்..... Thanks Friends...
ஆயிரத்தில் ஒருவன்!
-------------------------------------
லாவகமாக
நளினமாக!
உமது குத்து வாளை எடுத்துக் கொள்ளும்
ஓரே ஷாட் கேமரா மேன் ராமமூர்த்தியின் உறவினர் தியாகராஜன் என் நண்பர் கூறியது!
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளில் ஸ்டெப்ஸ் தப்பாது ஜாக்கிசான் கூறியது
நிதர்சனம் தானே!
வந்த வேலை
அதைத் தானே செய்து கொண்டிருக்கிறேன்
புரட்சி தலைவர் புகழ் பாடினால் என் உள்ளம்
புளகாங்கிதம் அடையுமே அதைத் தான் சொன்னேன்
அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்!
ஹயாத்!....... Thanks Friends...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து , இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற மாபெரும் வெற்றி படைப்பான
1974ம் ஆண்டில் வசூலில் முதலிடம் வகித்த "உரிமைக்குரல் " வெளியான நாள்
07/11/1974. 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
1974ம் ஆண்டில் இரண்டாம் வெளியீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சுமார் 85 அரங்குகளில் வெற்றி கண்ட காவியம் .
சென்னை ஓடியன் , மகாராணியில் 106 நாட்கள், உமாவில் 100 நாட்கள் ,
நூர்ஜஹான் 50 நாட்கள்,ஓடியது .
மதுரை சினிப்ரியா 200 நாட்கள், மினிப்ரியா 29 நாட்கள், நெல்லை லட்சுமி -182 நாட்கள் கோவை கீதாலயா 150 நாட்கள் ஈரோடு ராயல் 155 நாட்கள்
சேலம் சங்கம் 127 நாட்கள் திருச்சி சென்ட்ரல் 114 நாட்கள் தஞ்சை யாகப்பா 105 நாட்கள் குடந்தை டைமண்ட் 105நாட்கள் பட்டுக்கோட்டை முருகையா 101 நாட்கள் காஞ்சி லட்சுமி 50 நாட்கள் ஓடியது
திருநெல்வேலி நகரில் இதுவரையில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனை
உரிமைக்குரல் 182 நாட்கள் ஓடிய சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
http://i65.tinypic.com/2e1d8xf.jpg