நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணிமண்டபம் - Chief Minister of Tamilnadu #Jayalalithaa
Breaking News
Hope this becomes true , Very Happy Moment
Printable View
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணிமண்டபம் - Chief Minister of Tamilnadu #Jayalalithaa
Breaking News
Hope this becomes true , Very Happy Moment
Birth Day Gift to Chandrasekar
http://newsalai.com/wp-content/uploa...01.2014-cm.jpg
விதி எண் 110ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அரசே மணிமண்டம் கட்டும் என உறுதியளித்துள்ளீர்கள். தங்கள் மீது என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக, இது வெறும் மணிமண்டபமாக இல்லாமல் நடிகர் திலகத்தின் நினைவினை என்றென்றும் நினைவு கூறும் வகையில் கேலரி, ஆய்வுக்கூடம், நூலகம், முன்னோட்டத் திரையரங்கு போன்றவை அமைந்தால் மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாயும் இருக்கும். காலம் தோறும் தங்கள் பெயர் சொல்லும்.
நடிகர் திலகம் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற அறிவிப்பு உண்மையிலேயே தங்களுக்கு அவர் மேல் இருக்கும் மதிப்பையும் காட்டுவதோடு, தங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
மணிமண்டப அறிவிப்பு செயல்படும் நாளைஆவலுடன் எதிர்பார்த்து, தங்களுக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
What a wonderful B'day gift to Mr KC Sir.
சந்திரசேகர் சார்!
உங்கள் நல்ல மனது போலவே எல்லாம் நன்றாக நடக்கிறது. உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
கட்டபொம்மனின் கர்ஜனை வெற்றி, மணிமண்டப அரசாங்க அறிவிப்பு என்று சந்தோஷ நிகழ்வுகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. நம் ரசிகர்களுக்கு இதைவிட மகிழ்ச்சி தருணம் ஏது?
நான் ரசித்த கட்டபொம்மன்
நடிகர் திலகம் படம் re ரிலீஸ் அதுவும் டிஜிட்டல் முறையில் என்று அறிவிப்பு வந்த உடன் இருந்த குஷி படம் பார்த்து முடிக்கும் வரை இருந்தது
அதுவும் கடந்த சண்டே மாலை காட்சிக்கு அட்வான்ஸ் booking செய்த பொது நண்பர்கள் சிரித்தார்கள் , பாவம் அவர்களுக்கு தெரியாது அரங்கு நிறைந்து விடும் என்று , கடைசியில் நான் அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இருந்தது தனி கதை
6.45 காட்சிக்கு நான் 4.30 மணிக்கு சென்று விட அப்போதே அரங்கம் களைகட்ட அதை காண கண் கோடி வேணும் .
ஒரு பக்கம் 10000, வாளா வெடிக்க , மக்கள் ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்து படத்தை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள் , அதுவும் படத்தின் சாதனைகள் பற்றி பேச , அந்த வளாகமே சந்தோசம் நிறைந்து இருந்தது . பட்டாசு வெடித்த பொது டிராபிக் ஜாம் வேறு , ஆனால் மக்களுக்கு இடையுறு இல்லாமல் இருந்தது , ரசிகர் மன்றத்தினர் சிலர் இனிப்பு கொடுக்க , சிலர் மலர் தூவ , பலர் தியேட்டர் அலங்காரத்தை பார்த்து கொண்டு உள்ளே சென்றார்கள்
படம் ஆரம்பிக்கும் பொது மீண்டும் கரகோஷம் , நடிகர் திலகம் திரையில் தெரிந்த உடன் அரங்கம் முழுவதும் கிளாப்ஸ் ,whistle , etc
ஒரு பக்கம் நான் என் நண்பர்கள் , மற்றும் என் தந்தை உடன் இதை அனைத்தும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தோம் .
அரங்கம் 90 % புல். ஜாக்சன் துரை உடன் பேசும் காட்சிக்கு கிடைத்த reception பற்றி சொல்ல தேவை இல்லை ,
இடைவேளையில் சில ரசிகர்கள் , மற்றும் மக்கள் பேசி கொண்டு இருந்தத பொது அவர்கள் சாய்ஸ் APN படங்கள் , குறிப்பாக தில்லானா மோகனம்பாள் , சிவந்த மண் , தெய்வ மகன் , ராஜா ராஜா சோழன் , நவராத்திரி
இடைவேளை முடிந்த உடன் மீண்டும் படம் துவங்கி கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு
பிரிண்ட் நன்றாக இருந்தது , இருந்தும் சில காட்சிகள் , பாடல்களை ட்ரிம் செய்து இருக்கலாம்
முக்கியமான , நடிகர் திலகத்தின் படங்களை இப்பிடி re ரிலீஸ் செய்தால் அந்த படத்தின் நெகடிவ் பாதுகாக்க படும் , மேலும் வசூலிலும் சாதனை படைக்கும்
படம் கர்நாடிக் அரங்கில் 2 காட்சிகள் மட்டும் , SPI சினிமாஸ் 1 காட்சி , யமுனாவில் 2 காட்சி , கக் 1 காட்சி
ஒரு அரங்கில் 4 காட்சி இருந்தால் மக்கள் படத்தை இன்னும் அதிகம் ரசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை
ராகுல்
கட்டபொம்மன் வெளியீடும் மணிமண்டபமும் தங்களை வரவழைத்து விட்டது பார்த்தீர்களா..
தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
Courtesy: Tamil Hindu
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "சிவாஜி கணேசன் நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவர்.
'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவர்.
'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.
'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவர்.
மறைந்த சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிடப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று தமிழக அரசே அமைத்தது.
தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை.
அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
நாள்
26ஆக
2015*
12:16
பதிவு செய்த நாள்
ஆக 26,2015 11:35
சென்னை: சென்னை சட்டசபை கூட்டத்தொடரில், தமிழகஅரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார். விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.