Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,
    தாங்கள் கூறியது மிகவும் சரி. இந்த ஐடியா திடீரென்று மின்னல் போல் தோன்றியதே. அதனால் பலருக்கும் இது சர்ப்ரைஸாகத் தான் இருக்கும். நம்முடைய விவாதங்களின் நடுவில் படங்களைப் பற்றிய விவரங்கள் வந்தாலும் அதே போல் படங்களைப் பற்றிய தகவல்களூடே விவாதங்கள் வந்தாலும் இரண்டுமே தத்தம் சிறப்பினை இழக்கும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி புதியதாக வரக் கூடிய ரசிகர் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது நிகழ்ச்சிகளைப் பற்றியோ அறிய வேண்டும் என்றாலும் அல்லது ஏதேனும் விவாதத்தின் முந்தைய பகுதிகளைப் படிக்க வேண்டும் என்றாலும் பக்கங்களைப் புரட்ட வேண்டியதிருக்கும், அல்லது பாகங்களையே புரட்டிப் பார்க்க வேண்டியதிருக்கும். ஓரளவு இவற்றை தனித்தனியாகத் தந்தோமானால் யாருக்கு எது வேண்டுமோ அவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே இது துவங்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே பம்மலாரும் வாசுவும் மற்ற நண்பர்களும் பகிர்ந்து கொண்ட பல்வேறு தகவல்கள், நிழற்படங்கள், காணொளிகள் போன்றவையே இங்கு மறுபடியும் இடம் பெறப் போகின்றன. எனவே நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் திரிகளுக்கு துணை நிற்கும் வகையில் இது விளங்கும்.

    இதே போல் வாழ்த்துரை வழங்கிய ராமஜெயம் சார், பாலகிருஷ்ணன் சார், கோபால் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 22nd January 2013 at 06:32 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •