Page 6 of 67 FirstFirst ... 456781656 ... LastLast
Results 51 to 60 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #51
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    படத்தில் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் டி.எஸ்.பாலையா அவர்கள் அல்லவா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #52
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    படத்தில் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் டி.எஸ்.பாலையா அவர்கள் அல்லவா
    Yes Sir.

  4. #53
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Daksha Yagnam 1938

    Sati, the daughter of Daksha, a descendant of Lord Brahma, marries Lord Shiva (V. A. Chellappa) against the wish of her father. This annoys the king (Daksha) and he performs a yagna (to insult Shiva), where he invites all gods except his son-in-law (Lord Shiva). Sati attends this sacrifice against the wishes of Shiva and is insulted by her father. Unable to bear this, Sati kills herself by burning in the fire.

    Shiva destroys Daksha's sacrifice through Veerabhadra, cuts off Daksha's head and replaces it with that of a goat, and restores his life. Later he picks up the remain of Sati's body and performs "Rudra Thandavam", a dance that will lead to the destruction of Universe, but the other gods intervene, and the Disc of Vishnu (M. G. Ramachandran) cuts through the Sati's corpse Her body parts, known as Shakthi Peetas, fall in several places on the Indian subcontinent.


    M. G. Ramachandran, who later became one of the leading actors and politicians in Tamil Nadu acted in a small role as Lord Vishnu. M. G. Nataraja Pillai played an important role in the film.

    Cast

    • V. A. Chelappa as Lord Shiva
    • M. M. Radhabai
    • M. G. Nataraja Pillai
    • K. R. Jayalakshmi
    • P. G. Venkatesan
    • T. N. Chandramma
    • N. S. Krishnan
    • T. A. Mathuram
    • M. G. Ramachandran as Lord Vishnu


    From wikipedia.

  5. #54
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படத்தில் நமது தலைவர் அவர்களின் அழகு தோற்றம்.



    இந்த படத்தில் மகா விஷ்ணுவாக.

  6. #55
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear roop sir

    very nice postings .

    Makkal thilagam still is very fine to see him as lord vishnu in this movie .

    Unseen pic

  7. #56
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dhaksha Yagnam image. A really rare one. Good.

  8. #57
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Daksha Yagnam 1938



    V. A. Chellappa, M. M. Radhabai, M. G. Ramachandran, M. G. Nataraja Pillai, K. R. Jayalakshmi, P. G. Venkatesan, T. N. Chandramma, N. S. Krishnan and T. A. Mathuram ???
    This legend is associated with the destruction of Daksha's sacrifice and the origin of the Shakthi Peetas in India.

    Sati, consort of Shiva, is the daughter of Daksha Prajaapathi, a descendant of Brahma. She had married Shiva against her father's wishes. The vain Daksha performs a great yagna (with the sole aim of insulting Shiva), to which he invites all the gods and goddesses except his son-in-law Shiva. Against Shiva's wishes, Sati attends this sacrifice only to be insulted by her father. Unable to bear the insult, Sati immolates herself.

    Enraged, Shiva through Veerabhadra destroys Daksha's sacrifice, cuts off Daksha's head and replaces it with that of a goat, as he restores him to life. Still crazed with grief, he picks up the remains of Sati's body, and performs ‘Rudra Thandavam', the dance of destruction throughout the Universe. The other gods intervene to stop this dance, and the Disc of Vishnu (Vishnu Chakra) cuts through the corpse of Sati, whose various parts of the body fall at several spots in the Indian subcontinent and form the sites of what are known as Shakthi Peetas today.

    Not surprisingly, this interesting story was made into a movie many times in India during the Silent Film period and later during the Talking Picture era. The first film Sati Parvathi (a.k.a. Daksha Yagnam ) was made in 1920 in the Silent Film format. Then came another titled Sati in 1922, made by the well-known production company of the day, Madan Theatres. In 1927, noted filmmaker G. V. Sahni made it again as a silent film, which was believed to have fared well at the box office. The first talking picture version was made in 1938 in Tamil (the movie now being discussed) by noted filmmaker Raja Chandrasekhar. Qualifying himself in Arts in Bombay, he worked as art director and designer for some time. He graduated to film direction at which he was quite successful. He made films such as Ashok Kumar , featuring the icon of Tamil Cinema, M. K. Thyagaraja Bhagavathar. In those days, he was believed to have been a favourite director of Bhagavathar. However, his later years were spent in obscurity, while his brother T. R. Raghunath became a successful filmmaker. Chithrapu Narayanamurthi made the Telugu version in 1941 and another Telugu version was made by Kadaru Nagabhushnam, husband of celebrated star-actress and producer Pasupuleti Kannamba, in 1962. In 1980, a Bengali version came, proving the popularity of the epic tale.

    M. G. Ramachandran, the later day cult figure in Tamil Nadu political history, was an interesting feature of this film. He played a minor role and the initial advertisements released in support of the film did not mention his name at all! This was the fourth movie after his impressive debut in Ellis R Dungan's Sati Leelavathi (1936) in which he played a police inspector with laced turban, stick and all!

    Well-known stage and screen star of his day Chellappa played Lord Shiva in his flamboyant style and sang quite a few songs. Krishnan-Mathuram who had come together as a couple around the time provided comic relief in their own characteristic style.


    Remembered for being one of the early films of MGR.

    randor guy

  9. #58
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமாகிய "சதிலீலாவதி" படத்தைப் பற்றிய கூடுதல் தகவல் :
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கதைச்சுருக்கம் :

    நல்லவனாகிய கிருஷ்ணமூர்த்தி, மனைவி லீலவதியுடனும், மகள் லட்சுமியுடனும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். அவர்கள் வாழ்க்கையில் வில்லனாக ராமநாதன் குறுக்கிடுகிறான். துரதிருஷ்டமாக, ராமநாதனுடன் பழகியதால் கிருஷ்ணமூர்த்தி மது பழக்கத்துக்கு அடிமையாகிறான்.

    பரசுராமன் கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல நண்பன். கிருஷ்ணமூர்த்தியை திருத்துவதற்கு எவ்வளவு முயன்றும் முடிய வில்லை.

    ராமநாதன் செய்த சூழ்ச்சியால் தன் மனைவி மீதும், உற்ற நண்பன் பரசுராமன் மீதும் சந்தேகம் கொள்கிறான் கிருஷ்ணமூர்த்தி, பரசுராமனை கொல்ல எண்ணி சந்தர்ப்பத்தை எதிர் நோக்குகிறான். இதனிடையில்,பரசுராமனைப் போல் ஒருவனக்கு உடை அணிவித்து, அவனைப்போலவே நடை, பாவனைகளை ஏற்படுத்தி, கிருஷ்ணமூர்த்தி கண்ணில் படும்படி அவ்வழியே அனுப்புகிறான் ராமநாதன்.

    போலி பரசுராமனை துரத்திக்கொண்டு வரும் பொழுது கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுகிறான். இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராமநாதன், போலி பரசுராமனை சுட்டு விட்டு பழியை கிருஷ்ணமூர்த்தி மீது போட்டு விடுகிறான். பயந்து போன கிருஷ்ணமூர்த்தி இலங்கைக்கு தப்பி செல்கிறான். அங்கு அவனுக்கு புதையல் கிடைக்கிறது. உண்மையான பரசுரமனையும் சந்திக்க நேரிடுகிறது. இருவரும் மாறு வேடத்தில் தாய்நாடு திரும்பி வருகிறார்கள். தனியாக இருக்கும் லீலாவதியை கெடுக்க முயன்ற ராமநாதனை போலிசார் கைது செய்கின்றனர்.

    முழு உண்மை தெரிந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர, சுபமாக எல்லாம் நடக்கிறது.


    கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் மறைந்த எம். கே. ராதா அவர்களும், லீலாவதியாக எம். ஆர். ஞானம்பாள் அவர்களும், பரசுரமனாக கலைவாணர் என். எஸ் கே. அவர்களும், போலீஸ் அதிகாரி வெங்கையா நாயுடுவாக நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் நடித்துள்ளனர்.

    மனோரமா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு கதை எழுதியவர் கந்தசாமி முதலியார்.

    இத்திரைப்படம் 125 நாட்கள் வரை ஓடியதாக நம்பத்தகுந்த தகவல்.


    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    குறிப்பு : நமது பாரத திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது வெளிவந்த இத்திரை படத்தினைப் பற்றிய அதிகபட்சமான தகவல்களை அளித்துள்ளோம். வெளியான திரை அரங்குகள், மற்றும் இதர தகவல்கள் ஏதும் இருப்பின் அவற்றை இத்திரியில் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறோம்.

  10. #59
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கதைச்சுருக்கம் :

    மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
    காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்

    தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.

    பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.

    சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.

    பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.

    இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.

    இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.

    "பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

    இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
    உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.

    இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.

    அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.

    தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்

    இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
    பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
    ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.

    சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.

    ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
    பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.

    பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
    கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

    தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.

    பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
    நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .

    பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.

    குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #60
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


    1936- வெளிவந்த மக்கள் திலகத்தின் முதல் படமான சதிலீலவதியின் கதை சுருக்கம் இது வரை கேள்வி பட்டதே இல்லை .

    முதன் முறையாக சதிலீலாவதி கதை சுருக்கம் பதிவு மிகவும் அருமை . நன்றி சார்

Page 6 of 67 FirstFirst ... 456781656 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •