Page 12 of 400 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #111
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நான் வழங்கிய பதிவுகளை பாராட்டிய இத்திரியின் சில பதிவாளர்களுக்கும், அலைபேசியில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்த பார்வையாளர்கள் பலருக்கும் எனது மனமார்ந்த நன்றி !

    அன்பர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, மேலும் பல புதிய தகவல்களை இத்திரியில் பதிவிட உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.


    எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆருக்கே.!


    அன்பன் : சௌ.செல்வகுமார்


    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 7th September 2013 at 12:59 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் திரியின் 6 வது பாகத்தை மிகவும் அற்புதமான முறையில் துவக்கிய அருமை நண்பர் திரு புதுவை கலியபெருமாள் அவர்களுக்கு எனது உளமான வாழ்த்துக்கள்



    அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி

    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  4. #113
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் திரு. சுகராம் அவர்கள் அறிவது :

    தாங்கள் கூறியது போல், நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கு நற் பட்டங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஏன் என்றால் அவர் அனைத்து நற் பட்டங்களுக்கும் தகுதியானவர்.

    நேற்றைய பட்டியலில், விடுபட்ட சில பட்டங்கள் :


    1. "மக்கள் மதிவாணர்" என்ற பட்டம், 1979ல் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் அளிக்கப் பட்டது.

    2. நடிகை பானுமதி அவர்கள் பெருமையுடன் அழைத்தது : (மேக்ஸிமம் கியாரண்டி ராமச்சந்திரன்)

    M for MAXIMUM
    G for GUARANTEE
    R for RAMACHANDRAN


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  5. #114
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    1967

    தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த வருடம்.

    தமிழகத்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்ற வருடம்.

    பண்ணை மிராசுகள், ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள் பிடியில் சிக்கிய தமிழகத்தை மீட்டு மக்களாட்சியை நிறுவவும், தீண்டாமை ஒழித்து சாமான்ய மக்கள் நாட்டை ஆளவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட கனவை, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நிறைவேற்றிய வருடம்.

    மக்கள் திலகத்தின் மக்கள் சக்தியை இந்த உலகம் உணர்ந்து கொண்ட வருடம். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தங்கள் பாதிப்பாக எண்ணி தமிழக மக்கள் எம்ஜிஆரை 4எங்கவீட்டுப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட வருடம்.

    புரட்சி நடிகர் குண்டடி பட்டபோது, அவரது வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் இதோடு தொலைந்தார் என நினைத்தபோது, அதை முறியடித்து புரட்சித்தலைவராக அவதாரம் எடுத்த வருடம்.

    தொண்டையில் குண்டடிபட்டு, இனி இவரால் பேசமுடியாது என படத்தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் கலங்கியபோது, கலங்காதீர்கள் என தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வருடம்.

    தயாரிப்பாளர்களும், மற்றவர்களும் நீங்கள் பேசுவதற்கு சிரமமாயிருக்கும், டப்பிங் போடலாம் என்றபோது, என் குரலை மக்கள் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன், இல்லையென்றால் நடிப்பு தொழிலையே விட்டு விடுகிறேன் என்று கூறியபோது, தமிழக மக்களும் எங்க வீட்டுப் பிள்ளையின் முகத்தைப் பார்த்தாலே போதும் என்று தீர்மானித்து அவரது திரைப்படங்களை வெற்றிப்படங்களாக மாற்றிய வருடம்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வருடத்தில், மக்கள் திலகத்தின் சிகிச்சைக்குப் பின் முதன்முதலாக அவரது சொந்த குரலில் பேசி 07.09.2013 அன்று வெளிவந்து மக்களின் 'காவல்காரன்' இவர் என போற்றிய மாபெரும் வெற்றி பெற்ற படம்.

    1967ம் வருடத்தின் தமிழக அரசின் சிறப்பைப் பெற்ற படம்.
    ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுறுசுறுப்பாக செல்லும் இப்படத்தில் குண்டடிபட்ட சோர்வு தெரியாமல் எவ்வளவு நேர்த்தியாக குத்துசண்டை செய்கிறார். தலைவர் எதையும் நடிப்புக்காக செய்வதில்லை, எதுவாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொண்டுதான் செய்வார் என்பது இதில் நன்கு புலனாகிறது. தடுப்பதும், தடுத்து மீண்டும் குத்துவிடுவதும் என ஒரு கைதேர்ந்த குத்துசண்டை வீரராக ஜொலிக்கிறார். உண்மையில் இந்த சண்டையை உற்றுநோக்கினால் ஆச்சர்யத்தின் எல்லைக்கு நாம் செல்வது உறுதி.

    சுடப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட மெல்லப்போ..மெல்லப்போ என்ற காதல் பாடலில் அந்த கருப்பு பனியனில் என்ன ஒரு அழகு. பாடலின் நடுவில் மேற்கத்திய நடனத்தின் மேன்மை ரசிக்கும்படியாக உள்ளது. எம்ஜிஆர்-ஜெயலலிதா காதல் பாடல்களில் அழகான, அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.

    குத்து சண்டையில் வந்த பணத்தை நன்கொடையாக அண்ணன் கொடுத்துவிட்டார் என்று தம்பி சிவக்குமார் சொல்லும்போது, தாய் பண்டரிபாய், முகம் முழுவதும் சந்தோஷத்தில் 'நான் ஆனந்தத்தில் மூழ்கி நிற்கிறேன். பணத்துக்கு பலியாகாத பண்பு மகனாய் வளர்க்கனும்னு நினைச்சேன். அப்படியே வளர்த்துட்டேன் அதில் எனக்குதான் வெற்றி என்று பெருமிதத்தோடு சொல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    வில்லன் நம்பியார் ஒரு பெண் டாக்டரை கெடுக்க முற்படும்போது, ஒரு முறை உங்களை கற்பழிப்பு குற்றத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறேன் என்றும், மறுமுறை உங்களை கொலைகுற்றத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறேன் என சொல்லும்போதும், துப்பாக்கியிலிருந்து குண்டுகளை எடுக்கும்போதும், புரட்சிநடிகரின் நடிப்பு பிரமாதம். அதே போல் கண்ணனுடன் மோதும் காட்சியில் ஒரு குத்தில் அலமாரியை உடைத்து, கடிகாரம் ஓடுகிறதா என்று பார்ப்பாரே...அந்த காட்சியை எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 7th September 2013 at 02:31 PM.

  6. #115
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    மக்கள்திலகம் திரியின் 6 வது பாகத்தை மிகவும் அற்புதமான முறையில் துவக்கிய அருமை நண்பர் திரு புதுவை கலியபெருமாள் அவர்களுக்கு எனது உளமான வாழ்த்துக்கள்



    அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி

    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
    Thiru. Ramamoorthy Sir. Thanks a lot for your greetings. As you are my predecessor and also Super Express of our Thread, please make postings of our beloved God recurrently. Once again Thank U Sir.

  7. #116
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
    m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
    'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
    கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
    முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
    எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
    ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
    எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
    கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
    வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
    அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
    பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
    போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
    தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
    சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
    திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
    அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

    தாங்கள் பதிவிட்ட திரு. ஏ. கே. வேலன் பற்றிய செய்தியில் ஒரு சிறு திருத்தம் :

    அண்ணன் ஆர். எம். வி. அவர்கள் (திராவிட இயக்கத்தை சார்ந்திருந்த சமயத்தில்) "நாம்" படத்துக்குப் பின்பு தான் நமது மக்கள் திலகம் அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

    "நாம்" படம் வெற்றி காண இயலாத காரணங்களை அலசி ஆராய்ந்து, மக்கள் திலகத்திடம் துணிவாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியதன் விளைவாக, ஆர். எம். வி. அவர்கள் நமது பொன்மனசெம்மலின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி, இறுதி வரை அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டார்.

    "மாட்டுக்கார வேலன்": திரைப்படம், இந்தி மொழியில் வெளியான "ஜிக்கிரி தோஸ்த்" என்ற பட த்தை தழுவி எடுக்கப்பட்டதேயன்றி
    ஏ. கே. வேலனின் கதை யல்ல என்பதே உண்மை. படத்தின் பெயரிலும், அவரது பெயரிலும் உள்ள ஒற்றுமை காரணமாக இந்த செய்தி வெளியாகி இருக்கலாம்.



    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 7th September 2013 at 04:32 PM.

  8. #117
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    watched back to back "Vikramathithan" and "MahaDevi"...
    it's hard to see someone other than MGR in those charecters....Vikramathithan was more light heatred than Mahadevi....kannadesan dialogues in mahadevi is top notch....
    MGR is so ease in Chaste tamil... It's a nostaligia for watching MGR movies now.....Plan to continue more this weekend...

    In mahadevi, THough MGR is the hero... other three chrecters including Savithri, Veerapa and Jamuna....has equal footage.... Especially P S veerappa with his dialogue...
    "mananthaal mahadevi ellaiyel maranadevi"....with his body language and flashing light on his face.....above all watching bladk and white movie give completely different viewing experience.

    it's sad we all forgot directors like Sundar Rao Nadkarni

    there was an article about the movie mahadevi in The hindu.... it's interesting...

    http://www.thehindu.com/news/cities/...cle4153636.ece
    Last edited by Avadi to America; 7th September 2013 at 08:42 PM.
    In theory there is no difference between theory and practice; in practice there is

  9. #118
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    to-day ( 7-09-2013 ) SUNLIFE- TV- telecast of the movie- THAAI SOLLAI THATTATHEA... re-release MGR films many times, but ran ( 2 ) two weeks in TRICHY-RAMAKRISHNA-theatre; 1)alibabavum 40 thirudarkalum, 2)kanavan, 3)petraalthaan pillaiya, 4)nadodi mannan, 5) adimaipenn, 6)parisu, 7)panathottam, 8)thaai makalukku kattiya thaali, 9)malaikallan, 10)padakotti,

  10. #119
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    TRICHY- ROXY-theatre; ( 3 ) three weeks ran 1)maattukkara velan, 2)paasam, (2) two weeks ran; 1)nadodi mannan, WELLINGTON-theatre- (2) weeks ran; 1)kudieruntha koil, 2)padakotti, 3)maattukkara velan, TRICHY- RUKMANI- theatre- 1)ulagam sutrum vaalibhan, TRICHY- MARIS 70 MM A/C-theatre; two (2) weeks ran; 1)aayirathil oruvan, 2) adimaipenn, three (3) weeks ran; 1)ulagam sutrum vaaliban, MARISFORT- nadodi mannan, CAUVERY A/C-theatre- (2) two weeks ran; 1)periya edathu penn, 2)kudieruntha koil, URVASI A/C- (2) two weeks ran; 1)gulaebakavali, KALAIARANGAM A/C- two (2) weeks ran; 1)adimaipenn, MULLAI A/C- (2) two weeks- ulagam sutrum vaaliban, - these datas were correct? kindly check it various persons...

  11. #120
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு mgr ராமமூர்த்தி அவர்கள் மீண்டும் இந்த மதிப்பு மிகுந்த திரியில் இது வரை கேள்வி படாத மக்கள்திலகம் அவர்களின் நுணுக்கமான செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் என நம்புகிறோம், காவல்காரன் - திரை பட செய்திகள் திருப்தியாக உள்ளன. அந்த படம் வெளி வந்த நேரம் mgr அவர்களின் குரல் எப்படி இருக்கிறது என தாய்மார்கள் மிக பெரும்பான்மையுடனும் அனைத்து ரசிகர்கள் ஆவலாகவும் சென்று படம் பார்த்ததின் விளைவு 1967- வருடம் பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்தது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •