Page 111 of 401 FirstFirst ... 1161101109110111112113121161211 ... LastLast
Results 1,101 to 1,110 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1101
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு, ராகவேந்தர்,

    தயவு செய்து நம் திரியின் மாண்பையும்,நட்பையும் ,ஒற்றுமையையும் காக்க ,நாம் நடிகர்திலகத்தின் மேல் வைத்துள்ள பக்தியின் மீது ஆணையாக உரிமையோடு வேண்டுகிறேன். திரும்புங்கள்.
    Last edited by Gopal.s; 6th February 2014 at 07:06 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1102
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கெளரவம்-1973

    கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

    ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

    நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

    தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

    தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

    திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

    ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

    இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
    ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
    ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

    ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

    ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

    மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

    மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 6th February 2014 at 08:09 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1103
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை புரிந்து இந்த திரிக்கு மகுடம் சூட்டும் விதமாக தலைவரின் கௌரவம் சிறப்பு பதிவுகளுக்கு திரு.கோபால் சார் அவர்களுக்கு எமது நன்றி

    இதே போல் திரு.வாசு சார், திரு.ராகவேந்திரன் சார் பதிவுகளுக்கும் ஏங்கி கிடக்கும் உங்கள் அன்பு

    c. Ramachandran

  5. #1104
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    welcome respected Gopal Sir. our thread will be brighten on your arrival

  6. #1105
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Similarly eagerly awaiting on Vasu Sir and Ragavender Sir arrival/back to our thread

  7. #1106
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    முக நூலில் கோவை ராயலில் அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு சென்ற ஞாயிறு மாலைக் காட்சி நடைபெற்ற போது நண்பர் செந்தில்வேல் சிவராஜ், அவர் எடுத்த சில புகைப்படங்களை பதிந்த்திருந்தார் நண்பர் RKS பதிவிட்டது போக வேறு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.







    நன்றி செந்தில்வேல்!

    அன்புடன்

  8. #1107
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்து -8

    இந்த தொடர் எழுத ஆரம்பித்த உடன் நடிகர் திலகத்தின் படங்களை தேடி தேடி பார்ப்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது .
    ஷிரிடி செல்லும் முன்பே எழுத வேண்டும் என்றே நினைத்த படம் இந்த அறிய படம் , ஆனால் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த உடன் தான் தெரிந்தது இந்த படத்தின் பிரிண்ட் ரொம்ப சுமார் தான்

    இனிமெல்னும் இழுக்க விரும்பாமல் இந்த படத்தின் பெயரை தெரிவித்துவிடுகிறேன்

    அந்த படம் 1955 ல் வந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த கோடீஸ்வரன் படத்தை பற்றி தான் இந்த பதிவு

    இந்த படத்தை என்னை போல் இருக்கும் நபர்கள் பார்த்து இருக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் இந்த படத்தின் கதையை பற்றி விலாவரியாக எழுதி இருக்கிறேன்.

  9. #1108
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய அரண்மனை போன்ற ஒரு வீட்டில் ஆரம்பிகிறது , அந்த வீட்டில் ஒரு பணக்காரர் ராவ் பகதூர் ராமசாமி ,அவருக்கு எப்போதும் பணத்தின் மேல் தான் குறி . அவருக்கு இரண்டு குழந்தை செல்வங்கள் , இருவரும் கல்யாண வயதில் இருப்பவர்கள் .

    ராவ் பகதூர் ராமசாமின் (thangavelu) மகள் லீலா (பத்மினி) , லீலாவின் அண்ணன் பட்டணத்தில் படித்து விட்டு வருவது அறிந்து ஏக பட்ட நபர்கள் அவர்களின் பெண்களை ராமசாமின் மகனுக்கு மனம் முடிக்க விரும்பிகிறார்கள் , ராமசாமி 5000 ரூபாய்கள் வரதக்ஷணை யார் தருகிறார்களோ அவருக்கு தான் தன் மகனை கல்யாணம் செய்து வைக்க போவதாக தன் கணக்குபிள்ளையிடம் சொல்லி வரும் நேரத்தில் , தன் மகன் distinction + first கிளாஸ் யில் தேர்ச்சி அடைந்து இருப்பது அறிந்து வரதக்ஷணை பணத்தை கூட்டி சொல்லுகிறார்.

    இவர் எந்த அளவுக்கு பணத்தை சேர்த்து வைத்து இருக்காரோ அந்த அளவுக்கு பழசை மறந்து , பணம் இல்லாத நபர்களை பார்த்தல் ஏலனம் செய்ய கூடிய நபர்

    இவரின் இந்த இழி செயலுக்கு ஒரு உதாரணம்

    தன் தோழன் வாழ்கையில் அடி பட்டு இருக்கும் பொது தன் மகளுக்கு கல்யாண வரன் வருகிறது , அதற்காக தன் தோழியிடம் இருந்து ஒரு பழைய புடவையை வாங்கி வர தன் தங்கைகளை அனுப்புகிறார் ,
    அவர்களை உள்ளே விடவே மறுக்கிறார்
    இவர் மகள் லீலா (பத்மினி ) இதற்கு நேர் எதிர் . ரொம்ப நல்லவர் , கமலாவின் (ராகினி ) தங்கைகளிடம் இருந்து கமலாவின் அண்ணன் சந்தர் வருவதாக அறிந்து கொளுகிறார்

    சந்தர் வேறுயாரும் இல்லை நம்ம நடிகர் திலகம் தான் , படிப்பது டாக்டர்க்கு, சந்தர் மற்றும் ராமசாமின் மகனும் நண்பர்கள் .

    கமலாவை பெண் பார்க்க வருவது ஒரு டாக்டர் ,(S .Balachandar ) மனோதத்துவ நிபுணர் அவர் பெண் பார்க்க வந்து , அடிக்கும் கூத்து இருக்குதே அப்பப்பா ,ஒரு பெண்ணை கேள்வி கேட்டு torture செய்கிறார்

    கமலாவுக்கு கல்யாணம் ஆகாததால் கமலாவை 5 வது தாரமாக 80 வயது கிழவனுக்கு மனம் முடிக்க எனுகிறார் ராமசாமின் குமஸ்தா , இதை அறிந்து சந்தர் அந்த குமாஸ்தாவை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்

    இதற்கு இடையில் ராமசாமின் மகன் கமலாவை விரும்புகிறார் , கமலாவுக்கும் அவர் மேல் காதல் ,

    கல்யாணம் பேசி முடிவு செய்ய சந்தர் மற்றும் அவர் சித்தப்பா (கமலாவின் அப்பா ) இருவரும் ராமசாமின் வீட்டுக்கு செல்லுகிறார்கள்

    ராமசாமி வரதக்ஷணை பணமாக 30000 ருபாய் கேட்க , சந்தர் சாதுரியமாக தான் ஒரு பெரிய பணக்காரன் என்றும் , ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய வைர சுரங்கம் இருபதாக கதை விடுகிறார்.

    இதை நம்பி ராமசாமி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். சந்தர் தன் நண்பன் ராமசாமியின் மகனிடம் தன் வீட்டில் இருக்கும் பணத்தை திருடி
    கொடுக்க சொல்லுகிறார் , அவரும் அப்படியே செய்யவே கல்யாணம் இனிதே நடந்து முடிகிறது .

    ஆனால் இந்த விஷயம் ராமசாமிக்கு தெரிந்து அவர், தன் மகன் மற்றும் மருமகள் இருவரையும் விரட்டி விடுகிறார் .
    பணம் இருப்பதால் சந்தருக்கு இப்போ ராமசாமியிடம் ஏக பட்ட செல்வாக்கு

    சந்தர் தன் மகளை பெண் கேட்க வர சொல்லி விடுகிறார் , அவர் பெண் கேட்க வரும் நேரத்தில் ராமசாமி தன் பணத்தை முதளிட்டாக போட்டு
    உள்ள வங்கி திவால் ஆகி விட்டதாக தந்தி வர ஆடி போய் விடுகிறார் ராமசாமி , இப்போ ball is in chandar court . தன் மகள் சந்தர் யை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கவே , சந்தர் ராமசாமி பண திமிரில் தன் சித்தப்பாவை அவமனபடுதுயத்தை சொல்லி காட்டுகிறார்
    தன் தவறை உணர்த்து தன் மகன் , மருமகளை வீட்டுக்கு அழைத்து விடுகிறார் , சந்தர் லீலாவை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் , முடிவில் அந்த தந்தி சந்தர் கொடுத்து அனுப்பியது என்று அறிந்து அனைவரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக சேருந்து வாழுகிறார்கள்

  10. #1109
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தை பற்றி :

    படம் வந்த ஆண்டு 1955, நடிகர் திலகம் நடிக வந்து 3 வருடம் கழித்து வந்த படம் இந்த கோடீஸ்வரன்.
    எனவே மிகவும் இளமையாக ஸ்டைல் உடன் காட்சி அளிக்கிறார் சிவாஜி சார் .

    முதல் காட்சியில் தங்கவேலு தன் குமாஸ்தா உடன் பேசி கொண்டு இருக்க , தன் மகன் பாஸ் செய்து விட்டதை அறிந்து வரதக்ஷணை பணத்தை அதிக படுத்தி சொல்லும் பொது அவர் பணத்தின் மேல் இருக்கும் ஆசையை நன்றாகவே establish செய்து விடுகிறார் இயக்குனர் திரு சுந்தர் ராவ் அவர்கள் .

    அந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு தகப்பன் படும் கஷ்டங்களை நன்றாக கொடு இட்டு காட்டி உள்ளார் இயக்குனர் , அதற்கு சாட்சி , ராகினியை பெண் பார்க்க வரும் வீணை பாலசந்தர் செய்யும் கேலி கூத்துகள் , ஒரு ஏழை பெண்ணுக்கு நேரும் ,கொடுக்க படும் மரியாதையை எப்படி பட்டது என்பதை காட்டி உள்ளார் இயக்குனர்

    வேறு யாரும் தன் பெண்ணை கல்யணம் செய்து கொள்ள
    முன் வரவில்லை என்ற காரணத்தினால் அந்த பெண்ணுக்கு கணவனாக ஒரு 80 வயது முதியவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் பொது , மனதை எதோ செய்கிறது
    இந்த படத்தின் இயக்குனர் திரு சுந்தர் ராவ் , அவரின் திறமையை பற்றி குறிப்பிடும் பொது படத்தின் திரைகதை எழுதி உள்ள
    காங்கேயன் , இந்த படத்தின் மூலமான மராத்தி டிராமாவில் இருந்து தமிழுக்கு எத்த மாதிரி adopt செய்து , தன்மை மாறாமல் வசனம் எழுதி உள்ள தஞ்சை ராமதாஸ் இருவரை பற்றியும் குறிபிடுவது அவசியம் .


    இந்த படத்தில் நம்மவர் ரொம்பவும் இளமையாக காட்சி ஆளிகிறார், அறிமுக காட்சியில் ஒரு தொப்பி போட்டு கொண்டு , ஜெர்கின் போன்ற ஒரு coat போட்டு அறிமுகம் ஆவார் பாருங்கள் , அப்படியே மன்மதன் தான் , அதுவும் தன் நண்பன் ஸ்ரீராம் (என்று நினைவு ) உடன் அவர் நண்டந்து வருவதும் , அவரை என் நடத்தி அழைத்து வந்தீர் என்று ராமசாமின் குமாஸ்தா கேட்கும் பொது , இவர் அப்பா கூடையில் புடவை விற்றவர் அதனால் தான் நடத்தி அழைத்து வந்து உள்ளேன் என்று கூறும் இடம் துடுக்கு

    அதே குமாஸ்தா scholarship யில் தானே டாக்டர்க்கு படிகிறே என்று கேட்கும் பொது , சிவாஜி பதில் சொல்லும் விதம் ----------- ஹ ஹ

    ஸ்ரீராம் தான் சிவாஜியின் தங்கையை காதலிப்பதாக சொல்லும் காட்சியில் தான் என்ன ஸ்டைல்

    முதலில் cigarette எடுக்கும் சிவாஜி அதை ciagarette பேட்டியின் மேல் தட்டி தட்டி கேட்கிறார் , ஸ்ரீராம் தன் காதலை சொல்லும் பொது அதை பற்ற வைத்து கொள்ளுகிறார்

    அவர் சொல்ல சொல்ல இவர் அந்த cigarette யை ஒரு ஓரமாக கொண்டு வந்து ஒரு விதமாக பிடிக்கிறார் , அந்த விஷியத்தை சொல்லி முடித்த உடன் அவர் பிடிக்கும் விதத்தில் ஒரு மாற்றம் , அதை கவனித்த ஸ்ரீராம் முகத்தில் ஒரு அச்சம் , அவர் சரி என்று சொல்லுவதற்கு முன்பு நம்மளுக்கு திக்கு என்று ஆகிவிடுகிறது

    சிவாஜி ஸ்ரீராம்க்கு கல்யாணம் நடக்க வழி சொல்லு இடத்தில , சிரிப்பை வர வழைகிறார். அந்த காட்சியில் அவர் குல்லாவும் சூப்பர்

    அதே சிவாஜி ராமசாமியிடம் தன் ஜம்பத்தை காட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வேஷ்டி , சட்டையில் கலக்கலாக இருப்பார் , அதில் அவர் தங்கவேலு கண்ணில் விரல் விட்டும் ஆட்டும் இடத்தில சபாஷ் வாங்கி விடுகிறார்

    தங்கவேலு :

    சிவாஜிக்கு அடுத்தது acting scope உள்ள பாத்திரம் இவருக்கு தான் , முதல் காட்சியில் பணம் பித்து பிடித்த பணக்காரனாக அறிமுகம் ஆகும் காட்சியில் நிலைத்து விடுகிறார் , அப்புறம் என்ன எல்லா காட்சியிலும் sixer , பௌர் தான் நடிப்பில் , பணம் இருபதாக எண்ணி சிவாஜியிடம் பணிவு காட்டும் காட்சி , மகனை வீட்டை விட்டு அனுப்பும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் அதிர்ச்சி , பின்னர் செய்த தப்புக்கு வருந்துவது , பின்னர் மகளுக்காக கெஞ்சுவது , மனம் திருந்துவது என்று 15 நிமிடத்தில் உரு மாறுகிறார் நடிப்பிலும் இவர் தங்கம் தான்
    காமெடி வில்லன்க்கு எத்த சாய்ஸ்.

    வீணை பாலச்சந்தர் :

    இவரும் ஒரு டாக்டர் . பெண் பார்க்கும் காட்சியில் இவர் அந்த பெண்ணை கேட்கும் கேள்விகளும் , அந்த பெண்ணை செக் பண்ணுவதும் , கோபத்தை வரவழைக்கிறது , அதில் தான் அவருக்கு வெற்றி

    பத்மினி :
    நடிபத்துக்கு சான்ஸ் குறைவு , வீணை பாலச்சந்தர் பெண் பார்க்கும் காட்சியில் இவர் கொடுக்கும் பதில் டாப்

    ராகினி - படம் முழுவதும் சோகத்தை காட்டுகிறார்

    ஸ்ரீராம் , சாமா நன்றாக நடித்து இருக்கிறார்கள்

    6 பாடல்கள் , அதில் குலவும் தென்றல் , யாழும் குழலும் பாடல் இன்றும் பிரபலம்
    இசை - வெங்கட்ராமன் , பாடல் : தஞ்சை ராமதாஸ் , பாப்பநாசம் சிவன்


    பணம் இருந்தால் மட்டும் கோடீஸ்வரன் இல்லை , மனமும் , அனைவரையும் அரவணைத்து செல்லும் மனிதர் தான் உண்மையில்

    கோடீஸ்வரன் என்பது தான் படத்தின் கருத்து.

  11. #1110
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for pics செந்தில்வேல் சிவராஜ் sir ,RKS sir and Murali sir, Ravi kiran sir, GOld star sir, SP Chowdary sir and Sivaa sir for giving details about record collections
    Last edited by ragulram11; 7th February 2014 at 12:14 AM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •