Page 112 of 401 FirstFirst ... 1262102110111112113114122162212 ... LastLast
Results 1,111 to 1,120 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1111
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பார்த்தசாரதி, சிவா, சுவாமி மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி.

    இலங்கையில் வெளியான தமிழ் படங்களில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியவை இரண்டு படங்களே! அவை இரண்டும் நடிகர் திலகத்தின் படங்களே என்பதை ஆணித்தரமாக தெளிவுபடுத்திய சிவா அவர்களுக்கு நன்றி!

    கோபால், மீள் வருகையில் கலக்கலாக ஆரம்பித்திருக்கிறீர்கள். விடாமல் தொடரவும்!

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1112
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal sir,

    Welcome back sir , expecting a 3rd dimension in your analysis

  4. #1113
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ந்து சீரியஸ் கதை உள்ள படங்களை பற்றி எழுவதினால் கொஞ்சம் over தோசே ஆகி விடும் என்ற காரணத்தினால் இந்த அத்தியாயத்தில் ஒரு காமெடி படத்தை பற்றி எழுதி உள்ளேன்

    அந்த படத்தின் பெயர் எமனுக்கு எமன்
    தொடர்ந்து கொஞ்சம் சீரியஸ் படத்தில் நடித்த காரணத்தினால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நடித்து இருபரோ என்று தோன்றுகிறது இந்த எமனுக்கு எமன் படத்தை பார்க்கும் பொது , பொதுவாக NTR படங்கள் மொழி மாற்றம் செய்யபட்டால் அதில் நடிப்பது MGR , அந்த காமெடி ஏரியாவுக்கு கொஞ்சம் காலம் லீவ் விட்ட பின் இந்த படத்தில் களம் எறங்கி உள்ளார் நடிகர் திலகம்.
    இந்த எமனுக்கு எமன் . 1980 பிறகு நம்மவர் நடித்த படங்களில் ரீமேக் படங்கள் தான் அதிகம் , இந்த படமும் அதே போல் ஒரு மொழி மாற்றம் செய்ய பட்ட படம் தான் , பொதுவாக ஹிந்தி படங்களில் நடிக்கும் நடிகர் திலகம் இந்த தடவை தேர்ந்து எடுத்து நடித்து ஒரு தெலுகு படம் , யமகோலா என்றல் யமலோகத்தில் குழப்பம் என்று .
    இந்த படத்தின் genre அதிகம் popular ஆகாத fantasy genre அதுவும் ஒரு மனிதர் எமலோகம் செல்லுவது போலே அமைந்து உள்ள படம்
    இந்த கதையில் லாஜிக் எல்லாம் கிடையாது

  5. #1114
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கதை என்று பார்த்தல் சத்யம் (சிவாஜி ) அந்த ஊரின் president (VKR ) செய்யும் தப்பை தட்டி கேட்கிறார் , இத்தனைக்கும் இருவரும் சொந்தகாரர்கள் , VKR மகளை (ஸ்ரீ பிரியா ) காதலிக்கிறார் சத்யம் , இதனால் ஆத்திரம் அடையும் president தாண்டவராயன் சத்யத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி , அதில் வெற்றியும் அடைகிறார் (silent துரை என்ற வாடகை கொலைகாரனை இந்த கொலையை செய்ய சொல்லி ) சத்யம் உயிர் இழந்து மேல் லோகம் செல்கிறார் ,

    முதலில் இன்றலோகம் செல்கிறார் அங்கே இருக்கும் ரம்பை , மேனகை ,ஊர்வசி உடன் ஒரே ஆட்டம் , பாடம் , கொண்டாட்டம் தான்
    இந்த்ரனை வாறு வாறு என்று வாருகிறார் . satire செய்ய ஒரு தூயா உள்ளம் , எந்த வித பயமும் இல்லாமல் இருகன்மும் , அது
    நம்மவருக்கு நிறைய உள்ளது , அந்த காத்சியில் இந்திரனை வாரும் பொது அவர் பேசும் பேட்டை பாஷை , ஊர்வசி விருது பற்றி அவர் அடிக்கும் கமெண்ட் அனைத்தும் உடத்தில் புன்னகை புக வழி செய்யும் .

    அடுத்தது அவர் செல்லும் லோகம் எமலோகம் , அங்கே பாவம் செய்யும் மனிதர்களுக்கு கொடுக்க படும் தண்டனை , நாம் அனைவரும் பாவம் செய்யும் முன் யோசிக்க வைக்கும்
    சித்திரகுப்தா வாக தேங்காய் ஸ்ரீநிவாசன் , தண்டனை கோடா வேண்டிய பெண்ணின் அழகில் மயங்கி அவர் கொடுக்கும் முக பாவனையில் சிறுப்பு வராமல் இருக்காது
    யமதர்மரஜவாக மீண்டும் சிவாஜி (டபுள் ரோல் )
    தெலுகு மூலத்தில் இந்த பாத்திரத்தில் சத்யநாராயண கலக்கி இருப்பார் , அவர் உடல் , குரல் கம்பீரத்தின் உச்சம்
    அதே போல் ஒரு manliness கலந்த divine லுக் சிவாஜியிடம் கொட்டி கிடக்கிறது , ரொம்ப கத்தி தொண்டை கட்டி கொள்ளும் பொது சத்யம் விக்ஸ் மாத்திரை கொடுக்கும் பொது கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் இந்த படத்தின் context யை மனதில் வைத்து அதை பெரிது படுத்த கூடாது .
    யமலோக கிங்கரர்கள் யை communism பேசி குழப்பி , யமலோகத்தில் strike செய்து , தன் விசிடிங் கார்டு யை கொடுத்து மீண்டும் பூமிக்கு வந்து விடுகிறார் சத்யம் .
    பூலோகத்துக்கு வருகிறார்கள் எமனும் , சித்திரகுப்தனும் , சென்னை மவுண்ட் ரோடு யில் உள்ள சாந்தி தியேட்டர் க்கு அருகில் நின்று கொண்டு அரட்டை வேறு (அந்த காட்சி நம் திரியில் கூட சமிபத்தில் விவாதிக்க பட்டது ). பூலோகத்தில் பண பிரச்சனை வந்த உடன் நகை யை அடக்க வைத்து அதில் ஒரு சொகுசு கார் வேறு வாங்கு கிறார்கள் எமனும் , சித்ரகுபதும், அந்த காட்சியில் தேங்காய் யின் உடை ஒரு frock (அந்த உடை யில் மிகவும் comfortable அக இருப்பார் தேங்காய் ),
    இங்கே சத்யம் தன் மாமா (தாண்டவராயன் ) வின் வீட்டுக்கு வந்து தன் பெயர் சுந்தரம் என்று பொய் சொல்லி விடுகிறார் , தாண்டவன் அவனை சத்யம் போலே நடிக்க சொல்லி பணம் குடுக்கிறார்.
    அவர் பாக்கெட் ல் உள்ள சத்தியத்தின் விசிடிங் கார்டு யை வைத்து போலீஸ் தகவல் சொல்லி , சத்யம் அவர்களை விடுவிக்கிறார் பூலோக அனுபவங்களை பெறுகிறார்கள் எமன் மற்றும் சித்திரகுப்தனும்

    சத்யத்தை மீண்டும் எமலோகத்துக்கு அழைகிறார்கள் , சத்யம் எப்படி தப்பினர் என்பதே முடிவு

    இந்த படம் ஒரு நகைச்சுவை கதை , சிரிப்பு படம் எடுக்கலாம் , படம் எடுபவர்களே சந்தோசமாக எடுத்து இருப்பார்கள் போல.
    இந்த படத்தின் குறை என்று பார்த்தல் மண் மனம் இல்லை கொஞ்சம் தெலுகு வாடை அதிகம் , ஸ்ரீ பிரியா க்கு பதில் தெலுகு வில் நடித்த ஜெயப்ரத வை நடிக்க வெச்சு இருக்கலாம் . பாடல்கள் ஓகே தான்

    சிவாஜி யின் ஆடை அவர் வயது , உடல் வாகுக்கு பொருத்தமாக இல்லை

    இந்த படத்தின் தெலுகு யின் மூலம் ஆங்கிலத்தில் வந்த death takes a holiday என்ற படம் .
    இந்த படத்தில் வந்த எமன் சிவாஜி யின் பாதிப்பில் கௌண்டமணி அதே வேடத்தில் நடித்த லக்கி man படத்தில் காணலாம் .
    இதே போல் மீண்டும் தெலுகு வில் வந்த படம் யமுடு கி மொகுடு, தமிழ் ல் அந்த படம் தான் அதிசிய பிறவி .
    கிட்ட தட்ட இதே போல் இந்திர லோகம் , எம லோகம் என்று சமிபத்தில் வந்த படம் இந்திர லோகத்தில் நா அழகப்பன்

    நன்றாக டைம் பாஸ் செய்ய எத்த படம் இது

  6. #1115
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம் திரியின் மகுடங்களாக நான் கருதுபவை.

    1)வாசு சாரின் ஆடை அழகர்.
    2)வாசு சாரின் கதாநாயகியர் வரிசை.
    3)வாசு சாரின் சண்டை காட்சிகள்.
    4)கார்த்திக் சாரின் ஐடம் மற்றும் தியேட்டர் அனுபவங்கள்.
    5)சாரதி சாரின் பாடல் ஆய்வுகள்.
    6)முரளி சாரின் அனைத்தும் சார்ந்த பட ஆய்வுகள் மற்றும் அரசியல் ஆய்வுகள்.
    7)அடியேனின் காதல்கள்.
    8)ராகவேந்தரின் Filmography மற்றும் துணை ஆய்வுகள்.
    இவை தொடர வேண்டும் என்பது ஒரு ரசிகனாக என் விருப்பம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1116
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்

    சாந்தி படத்தில் இடம்பெற்ற, 'யார் அந்த நிலவு...' என்ற பாடல், இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இப்பாடல் உருவான பின்னணியை, எம்.எஸ்.விஸ்வநாதன், என்னிடம் பகிர்ந்து கொண்டதை, இங்கே கூற விரும்புகிறேன்.
    இப்படத்தின், பாடல்களுக்கு ட்யூன் அமைத்துக் கொண்டிருந்த போது, எம்.எஸ்.வி., யிடம், சிவாஜி, 'பிரபல ஆங்கில பாப் பாடகர் கிளிப் ரிச்சார்டு பாடுவது மாதிரி, உன்னால் ட்யூன் போட முடியாதா?' என்று கிண்டலாக சவால் விட்டிருக்கிறார். எம்.எஸ்.வி.,யும், 'என்னால் ட்யூன் போட முடியும். அதற்கு ஏற்ப நீங்க நடிக்கணுமே...' என்று கூறியதுடன், இதை ஒரு சவாலாக எடுத்து, டி.எம்.சவுந்தரராஜனை, முதன் முதலாக, 'பேஸ்' குரலில் பாடவைத்து, ரிகார்டு செய்தார் எம். எஸ். விஸ்வநாதன்.
    படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்த பாட்டை சிவாஜிக்கு போட்டு காண்பித்தனர். மவுனமாக பாடலை கேட்டவர், இரண்டு நாட்களுக்கு பின், ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். இரண்டு நாட்களுக்கு பின் கேட்டபோது, மீண்டும் தள்ளிபோட்டார். இதைக் கண்டு, சற்று கவலை அடைந்த இயக்குனர் பீம்சிங், 'என்னண்ணே, பாட்டு பிடிக்கலையா... வேறே ட்யூன் போடச் சொல்லட்டுமா?' என்று கேட்டார். அதற்கு சிவாஜி, சிரித்துக்கொண்டே, 'விசுவை நான் சீண்டிவிட்டதில், கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு, பிரமாதமாக ட்யூன் போட்டிருக்கார். டி.எம்.எஸ்., அதைவிட பிரமாதமாக பாடியிருக்கார். இந்த மூன்றையும் தூக்கி அடிக்கிறமாதிரி நான் நடிக்கணும். அதுக்கு யோசிக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்...' என்று கூறினார். அதன்படியே, அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
    சிவாஜி தமிழில் நடித்த, படிக்காத மேதை, பாகப்பிரிவினை மற்றும் சாந்தி, ஆகிய மூன்று படங்களை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். மூன்றிலும் சிவாஜி நடித்த பாத்திரத்தை, ஏற்று நடித்தவர், இந்தி நடிகர் சுனில் தத்.
    சிவாஜி பிலிம்சே சொந்தமாக தயாரித்த ரீ-மேக் படம் கவுரி. (சாந்தி படத்தின் இந்தி ரீ-மேக்) ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின் போது, நீண்ட வசனத்தை பேசி, நடித்துக் கொண்டிருந்தார் சுனில் தத்.
    அதே ஸ்டுடியோவில், அடுத்த செட்டில், வேறு படத்திற்காக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி, சுனில் தத் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார். சுனில் தத் நடிக்கும் போது நடிப்பு, ஆக் ஷன் இரண்டும் சரிவர ஒத்துப்போகாமல் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனக்கு, இந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும், எந்த டயலாக்கிற்கு, எந்த மாதிரி ஆக் ஷன் செய்ய வேண்டும் என்பதை, நடித்துக் காட்டினார். சுனில் தத் உட்பட, செட்டில் இருந்த அனைவரும் வியந்து போயினர். சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார் சுனில் தத்.
    சிவாஜி மறைவுக்குப் பின், 'சிவாஜி சாரிட்டி ட்ரஸ்ட்' என்ற அமைப்பு சென்னை மியூசிக் அகாடமியில் நடத்திய நிகழ்ச்சியை, நான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அந்நிகழ்ச்சியில், அப்போதைய மத்திய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த சுனில் தத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், சுனில் தத், சிவாஜியுடன் தனக்கு இருந்த நட்பு, நெருக்கம் மற்றும் சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றி பெருமையாக பேசி, 'திரை உலகில், சிவாஜி செய்த சாதனைக்கு, அவருக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும்...' என்றார்.
    'நடிகர் திலகம் பிலிம் அப்ரிசியேஷன் சொசைட்டி' என்ற அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 'நடிகர் திலகம் டாட் காம்' என்ற இலவச இணையதளத்தை நடத்தி வரும் வி.ராகவேந்திரா, முரளி மற்றும் நானும் சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு இது. அதில், நான் கவுரவ ஆலோசகராக உள்ளேன். தற்போது, நூற்றுக்கும் அதிக மான அங்கத்தினர்கள், இதில் இருக்கின்றனர்.
    ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில், சிவாஜியின் படம் ஒன்றை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் இவர்களுக்காக, திரையிடுகிறோம். படம் முடிந்த பின், படத்தைப் பற்றியும், சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றியும் விவாதிப்போம்.
    ரசிகர்களில், சிவாஜி நடித்த மொத்தம், 288 படங்களையும் பார்த்தவர்கள், ஒவ்வொரு படத்தை, பல முறை பார்த்தவர்கள், சிவாஜியின் படங்கள் ரிலீசான தேதி, வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிய நாட்கள், அவற்றில் சிவாஜியுடன் பணிபுரிந்த கலைஞர்கள், போன்ற தகவல்களை, தங்கள் விரல் நுனியில் வைத்திருப்போர் என பல வகையினர் உண்டு.
    அவர்களில், ஒரு இளைஞரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். சென்னை எருக்கஞ்சேரியில் வசிக்கும், 21 வயது இளைஞர் ரா. கார்த்திக், சிவாஜியின் எல்லா படங்களையும் தியேட்டர்களிலும், 'டிவி'க்களிலும் பார்த்து ரசித்திருக்கிறார். அவரது தந்தை, தீவிர சிவாஜி ரசிகர். சிவாஜியின் மீது உள்ள ஈடுபாட்டால், தன் பெயரான ரவி என்ற பெயருக்கு முன்பாக சிவாஜி சேர்த்து, சிவாஜி ரவி என்று வைத்துக் கொண்டவர்.

    சிவாஜியின் ஆடை அணியும் நேர்த்தி பற்றிய சுவையான நிகழ்ச்சி இது...
    மேலே குறிப்பிட்ட சிவாஜி விசிறிகள் சங்கத்தில், இருவர் உள்ளம்' படம் திரையிடப்பட்டது. அன்று அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் என் நண்பர் சுவாமி, இருவர் உள்ளம் படம் பார்க்க என்னுடன் வந்திருந்தார். அந்த படத்தில் வரும், 'பறவைகள் பல விதம்...' என்ற பாடல் காட்சியில், சிவாஜி மிக ஸ்டைலிஷாக வருவார். அதைப் பார்த்த அவர், 'அமெரிக்காவில், இப்போது இளைஞர்கள் அணிகிற சட்டைகளை விட, சிவாஜி இந்த பாடல் காட்சியில் (1963ல் வெளி வந்த படம்) அணிந்து வந்த ஷர்ட் ரொம்ப ஸ்டைலாக இருக்கிறது...' என்றார்.
    இப்பாடலில் டெக்சாஸ் கேலன் ஹாட் என்று அழைக்கப்படும் உயர்ந்த தொப்பியும் அணிந்திருப்பார். மேலும், அதே படத்தில், 'இதய வீணை தூங்கும் போது...' என்ற பாடல் காட்சியில், முழு சூட்டில் வருவார் சிவாஜி. இதைப் பார்த்து வியந்து விட்டார் சுவாமி.
    கடந்த 1980களில், ஹீரோவுக்கு டிரஸ் தைக்க, மும்பையில் உள்ள கச்சின்ஸ் என்ற டெய்லரிங் நிறுவனத்தை தேடி செல்வர். பாரிஸ், லண்டன் நகரங்களிலிருந்து விசேஷமாக ஆடைகளை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், சிவாஜியோ இதெல்லாம் ஏதும் செய்ததில்லை. ராமகிருஷ்ணன் என்ற காஸ்ட்யூமர் தான், அவரது படங்களுக்கு தேவைப்படும் ஆடைகளை தைத்து கொடுப்பார். படித்தால் மட்டும் போதுமா படத்தை தயாரித்த ராமகிருஷ்ணன் தான் இவர்.
    — தொடரும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1117
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி (18) - ஒய்.ஜி. மகேந்திரன்

    சிவாஜியே பகிர்ந்து கொண்ட, செய்தி இது: நிறைய இயக்குனர்கள், சிவாஜியின் படங்களை இயக்கி இருந்தாலும், எந்த காட்சிக்கு, எப்படி நடிக்க வேண்டும் என்று, சிவாஜிக்கு நடித்துக் காட்ட கூடிய இயக்குனர்கள் எல்.வி.பிரசாத், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டைக்டர் ஸ்ரீதர் மட்டும் தான்!
    செல்வம் படத்தில், 'அவளா சொன்னால் இருக்காது...' என்ற பாடல் காட்சியில், மாடிப்படிகளில் இறங்கி வரும் போது, அவர் எப்படி இறங்கி வந்தால், பொருத்தமாக இருக்கும் என்று, இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் நடித்துக் காட்டினார். சிவாஜியும் அவ்வாறே செய்தார்.
    இருவர் உள்ளம் படத்தில் இயக்குனர் எல்.வி.பிரசாத், ஒரு காட்சியை விளக்கி கொண்டிருந்தார். 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று சிவாஜி அவரிடம் கேட்டார். சிவாஜியை தனியாக கூப்பிட்ட, எல்.வி.பிரசாத், 'நீங்கள் கோபித்து கொள்ளக் கூடாது. இக்காட்சியில் நீங்கள் ஒன்றுமே செய்யக்கூடாது. இந்த காட்சியில், சரோஜா தேவி தான், ஸ்கோர் செய்ய வேண்டும். சரோஜா தேவி பேசும் டயலாக்கால் உங்க மேல் சிம்பதி வந்து, படமே நிற்கும்...' என்றார் எல்.வி.பிரசாத்.
    மனோகரா படத்தில் சிவாஜிக்கு முழு சுதந்திரம் கொடுத்து, ஆவேசமாக நடிக்க வைத்த, அதே எல்.வி.பிரசாத் தான், இருவர் உள்ளம் படத்தில் அவரை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்.
    சிவாஜியின் நடிப்பில், ஒவ்வொரு கால கட்டத்திலும் முக்கிய மாறுதல் தெரியும். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறமை அவரிடம் நிறைய இருந்தது. 1952ல் பராசக்தி படத்தின் கிளைமாக்சில் நீண்ட நீதிமன்ற காட்சி வரும். எதுகை மோனையுடன், கவிதை நயத்துடன், கருத்து சொரியும் வசனங்கள் இருக்கும். இக்காட்சியில், அவர் நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயின்ட் ஆயின. அதன்பின், 11 ஆண்டுகள் கழித்து, 1963ல் வெளியான, இருவர் உள்ளம் படத்திலும் கிளைமாக்ஸ் கோர்ட் சீன் தான்; இதிலும், வசனம் கருணாநிதிதான். இருவர் உள்ளம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முழு காரணமும் இயக்குனர் எல்.வி.பிரசாத் தான் என்று பெருந்தன்மையாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி. 1970ல் வெளியான கவுரவம் படத்தில் வரும் கோர்ட் சீனில் அடுக்கு மொழி வசனமில்லாமல், தன்னுடைய ஸ்டைலை மாற்றி நடித்தார் சிவாஜி.
    எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழு சார்பில், 'அந்த ஏழு ஆட்கள்' என்ற நாடகத்தை, 1991ல் அரங்கேற்றினோம். அந்த நாடகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதுவரை தமிழ் நாடக மேடையில் யாரும் செய்யாத அளவில், ஏழு மாறுபட்ட பாத்திரங்களை நானே ஏற்று நடித்தேன். ரவுடி, டாக்டர், சமஸ்கிருத பேராசிரியர், வருமானவரி அதிகாரி, சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர், குள்ள சாமியார் மற்றும் டைரக்டர் ஒய்.ஜி..மகேந்திரா என்ற ஏழு பாத்திரங்கள்.
    குள்ள சாமியார் வேடத்திற்கு, ஸ்பெஷலாக ஷூக்கள் மற்றும் டிரஸ் தைக்க, என் நெருங்கிய நண்பர்களான கமலஹாசனும், பாண்டியராஜனும் நிறைய உதவி செய்தனர். இந்த நாடகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தபோது சிவாஜியிடம் பேசினேன். 'ஏன் சார்... ஏழு வேடங்கள் மட்டும் போடறீங்க, இன்னும் இரண்டு சேர்த்தால் நவராத்திரிக்கு சமமாக ஆயிடுமே...' என்று, தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். முதலில் கிண்டல் அடித்துவிட்டு, பிறகு மிகுந்த ஆர்வத்துடன், அக்கறையாக அந்த ஏழு கேரக்டர்கள் பற்றிய முழு தகவல்களையும் கேட்டு அறிந்தார். அப்போது, அவர் கூறியது...
    'ஒவ்வொரு பாத்திரத் திற்கும் டிரஸ் மற்றும் மேக் - அப்பில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்களில், பேசுகிற விதத்திலே, நடையில், உடல் அசைவில், குரலில் மாற்றங்களை காண்பித்தாலே, பிரமாதமாக அமையும்.
    'நான் நடித்த, உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடங்கள்; பார்த்திபன் ஹீரோ, விக்கிரமன் வில்லன். இரண்டு பேருக்கும் புறத்தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், பார்த்திபனிடத்தில் நேர்மை, பணிவு, கனிவு, நடையில் தனி பாணி இருக்கும். விக்கிரமனிடம் ராஜகம்பீரம், அகம் பாவத்தின் உச்ச கட்டமான பேச்சு காணப்படும். படத்தின் ஒரு காட்சியில், விக்கிரமன், பார்த்திபனாக வேடம் அணிந்து, பத்மினியிடமிருந்து ஒரு முக்கிய ரகசியத்தை அறிய முயலுவார்.
    'விக்கிரமன் நூறு சதவீதம் பார்த்திபனாக ஆகிவிட முடியாது. வந்திருப்பது விக்கிரமன் தான் என்பது ஆடியன்சுக்கு தெரிய வேண்டும். பார்த்திபன் கண்களில் காதல்; விக்கிரமனுக்கோ கண்களில் காமம். அதேபோல், பார்த்திபன், விக்கிரமனாக வெளியே செல்லும்போது, அவர் கண்களில் ஒரு சாதுத்தனம் தெரியும்.
    'இது தான் இரட்டை வேடம் போடுவதின் ரகசியம். கேரக்டருடைய உள்நோக்கத்தை வெளியே கொண்டு வரணும். இரட்டை வேஷம்கிறது வெறும் மாறு வேடப் போட்டி இல்லை...' என்றார் சிவாஜி.
    'அந்த ஏழு ஆட்கள்' நாடகத்தை இருநூறு தடவைகளுக்கு மேல் மேடை ஏற்றியிருக்கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சு, வளைகுடா என்று உலகமெங்கும் பல நாடுகளில் நடித்து, நிறைய பாராட்டுகள் பெற்றிருக்கிறோம். அந்த ஏழு கேரக்டர்களிலும் நான் வெற்றி பெற்றதற்கு மூல காரணம், சிவாஜியின் ஆலோசனை தான்.
    இதே டெக்னிக்கை பின்பற்றித் தான், 2009ல், யு.ஏ.ஏ., குழு சார்பில், நான் மூன்று வேடங்களில் தோன்றும், 'வெங்கடாத்ரி' என்ற நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகமும், பெரிய வெற்றி அடைந்தது.

    சிவாஜியின், 'தேன் கூடு' என்ற மேடை நாடகத்தில், ஒரு த்ரில்லிங்கான காட்சி... கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக வரும் சிவாஜி, மெக்கானிக்காக வருவார். வாக்குவாதத்தில் அவருடைய தம்பியாக நடித்த தங்கராஜ் கை நீட்டி, அண்ணன் நெஞ்சிலே குத்தி விடுவார். அண்ணன் பாத்திரத்திற்கு ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் உண்டு. நெஞ்சில் குத்து பட்டதும், மேடை ஓரத்தில் சுருண்டு கீழே விழுந்து விடுவார். சிறிது நேரத்திற்கு பின், சிவாஜி எழுந்து கொள்வார். அதிர்ச்சியான அமைதி நிலவும். தம்பியை நோக்கி இரண்டு அடி எடுத்து வைப்பார். தம்பியை விளாசப் போகிறார் என்று ஆடியன்ஸ் எதிர்பார்ப்பர். அப்படியே நெஞ்சுவலி பொறுக்காமல் மீண்டும் கீழே விழுந்து விடுவார். வாயிலிருந்து ரத்தம் சொட்டும்.
    'நடிப்புங்கிறது, மேஜிக் மாதிரி. ஆடியன்சை நம் பக்கம் கொண்டு வந்து, கடைசியிலே எதிர்பாராதவிதமாக ஏமாற்றுவது தான் நடிப்பு...' என்பார் சிவாஜி. சிவாஜி வாயில் ரத்தம் ஒழுக, மேடையில் விழுந்திருக்கும் போது, இடைவேளை என்று, அறிவிப்பர். இடைவேளை அறிவித்ததை கூட உணராமல், அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருப்பர் ஆடியன்ஸ்.
    'வியட்நாம் வீடு' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், குடும்பமே அவரை சுற்றி இருக்கும். இதய ஆபரேஷன் செய்து, வீட்டுக்குத் திரும்புவார். எமோஷனலாக உணர்ச்சி வசப்பட்டு, வசனம் பேசி, கீழே விழுகிற சீன். உடன் இருக்கும் மூன்று நடிகர்களிடம் சிவப்பு நிற திரவம் தோய்த்த பஞ்சை கொடுத்து வைத்திருப்பர். கண் இமைக்கும் நேரத்தில், எந்தப் பக்கம் சாய்கிறாரோ, அந்தப் பக்கம் இருக்கும் நடிகரிடமிருந்து பஞ்சை வாங்கி வாயில் போட்டு, கடித்து, ரத்தம் சிந்துவதுபோல, 'எபெக்ட்' கொடுத்து கீழே விழுவார். ஆடியன்ஸ் ஸ்தம்பித்து போவர்.
    சிவாஜிக்கு நான் செய்யும் காணிக்கையாக, அவர் நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை எங்கள் யு.ஏ.ஏ., குழு சார்பில் மீண்டும் மேடையேற்றி நடித்தோம். பஞ்சை வாயில் அடக்கி கடித்து, ரத்தம் வரும் எபெக்டை உண்டாக்கும் விதத்தை, வியட்நாம் வீடு சுந்தரமிடமிருந்து அறிந்தேன். அந்த டெக்னிக்கை நான் பின்பற்றினேன். எனக்கும் அதே இடத்தில், கைதட்டல் கிடைத்தது.
    சிவாஜியின் வழியை பின்பற்றினால் பாராட்டு கிடைப்பது உறுதி!

    — தொடரும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1118
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு கோபால் சார்,
    தங்கள் வரவு மனதில் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தியது.நமது திரி மீண்டும் களைகட்டும் என்பது உறுதி .கௌரவம் பட அலசலின் அடுத்த பாகத்திற்க்காக காத்துக்கொண்டிருக்கிறோம்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #1119
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கெளரவம் பார்க்காமல் திரிக்குத் திரும்பி,
    கெளரவம் - கலக்கல் பதிவைத் தந்து - திரிக்கு
    கெளரவம் - சேர்த்த - கோபால் அவர்களுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #1120
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.கோல்டு ஸ்டார் சதீஷ்,

    தங்களுடைய புகைப்படங்கள், மற்றும், சாதனைப் புள்ளி விபரங்கள் சிறப்பாக உள்ளது.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •