Page 263 of 401 FirstFirst ... 163213253261262263264265273313363 ... LastLast
Results 2,621 to 2,630 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2621
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -30

    பொதுவாக நடிகர் திலகத்தின் அபிமானிகள் பல பேர் mid 80's க்கு பிறகு நடிகர் திலகத்தின் படங்களை பற்றி எழுதும் பொது அவர்கள் தவறாமல் குறிப்பிடும் படங்கள் , முதல் மரியாதை , தேவர் மகன் , இன்னும் கொஞ்சம் பேர் படிக்காதவன் , படையப்பா என்று சொல்லுவார்கள்

    ஆனால் தேவர் மகன் படம் வந்த அதே 1992 வருடம் வந்த முழு நீள குடும்ப சித்திரத்தை பற்றி தான் இந்த பதிவு .

    1992 வருடம் வந்த சின்ன மருமகள் என்ற படம் தான் இந்த பதிவில் நான் அலசி உள்ள படம்

    நடிகர்கள் :

    நடிகர் திலகம் சிவாஜி , வடிவுக்கரசி , ரேணுகா (சீரியல் நடிகை ), மோகினி , சிவா , குமரேசன் , தியாகு மற்றும் பலர்

    கதை :பத்மாலயா கதை இலக்கா , தெலுகு நடிகர் கிருஷ்ணாவின் நிறுவனம் , நடிகர் திலகத்தை வைத்து விஸ்வரூபம் என்று படத்தை எடுத்தவர் .
    திரைகதை , வசனம் - பிரசன்னா குமார் , நடிகர் விவேக் நடித்த பல படங்களுக்கு காமெடி track எழுதியவர் ,
    இயக்கம் ;பிரசாந்த் குமார்
    தயாரிப்பு - கேயார் , ஈராமான ரோஜாவே , வனஜா கிரிஜா , மாயாபஜார் 1995 , எனக்கொரு மகன் பிறப்பான் என்று பல படங்களை இயக்கியவர் .

  2. Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2622
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கதை :

    சிவாஜி சார் ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் தன் மனைவி இறந்த உடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுகிறார் , வந்த மகராசியின் பெயர் ராஜேஸ்வரி (வடிவுக்கரசி ), சிவாஜி மற்றும் அவர் மூத்த மகன் சேகர் இருவரையும் மட்டம் தட்டுகிறார் . வருடங்கள் உருண்டு ஒடிகிறது - ராஜேஸ்வரிக்கு இப்போ இரண்டு மகன்கள் , ஒரு மகள் ,

    சேகரின் மனைவி சாந்தி (ரேணுகா ) ஒரு சின்ன பையன் என்று அளவான குடும்பம் , வருமானம் சொற்பம் , அதனால் எப்போதும் ராஜேஸ்வரி அவர்களை திட்டுகிறார் , சாந்தியை வேலைகாரி மாதிரி நடத்துகிறார் . சிவாஜி சார் இப்போ பென்ஷன் வாங்கும் 60 வயது முதியவர் . . பாவம் பார்வை இல்லாதவர் . இளைய மகன் வசந்த் நன்றாக சம்பாதிக்கிறார் , அதனால் அவர் மனைவிக்கு அதிக மரியாதை காட்டுகிறார் ராஜேஸ்வரி , வசந்த் மற்றும் அவர் மனைவி இருவரும் சாந்தி , அவர் கணவர் சேகர் இருவரிடமும் மரியாதை இல்லாமல் பேசி மனதை புண் படுத்துகிறார்கள் , ராஜேஸ்வரியின் மகள் தன் மாமியாரை கொடுமை படுத்துகிறார் , இதை சகித்து கொண்டு வாழுகிறார் குமரேசன். தன் அம்மா வீட்டுக்கு வரும் பொது சாந்தி மீது தன் அதிகாரத்தை காட்டுகிறார் , இப்படி எல்லா திசையிலும் சாந்தி வதைக்க படுகிறார் . மாமனார் சிவாஜி மட்டும் அவர் மேல் பிரியமாக இருக்கிறார் . அவருக்கு எல்லாம் தெரியும் , ஆனால் எதுவும் செய்ய முடியமால் இருக்கிறார்
    சேகர் , சாந்தி இருவரும் ராஜேஸ்வரி மீது உண்மையான அன்பு , மரியாதை வைத்து இருக்கிறார்கள் , ஆனால் மற்றவர்கள் ராஜேஸ்வரி மீது வைத்து இருப்பது போலி அன்பு , மரியாதை

  5. #2623
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    காலேஜ் படிக்கும் சிவா தன் கூட படிக்கும் கீதாவை (மோகினி ) வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளுகிறார் , தன் தாய் தந்தை இருவருக்கும் அதை தெரிய படுத்துகிறார் , சிவாஜி அதை பெருசாக எடுத்து கொள்ளாமல் ஆசிர்வதிக்கிறார் , ராஜேஸ்வரி , கீதா ஆனதை என்றும் , பணம் இல்லாத ஏழை என்றும் ஏசுகிறார் . தன் மனைவியை விட்டு வெளி ஊருக்கு வேலை தேடி செல்லுகிறார் சிவா , வேலையும் கிடைத்து விடுகிறது .

    கீதா இங்கே தன் மாமியாருடன் தினமும் சண்டை போடுகிறார் , பாதி நேரம் சாந்திக்காக , ராஜேஸ்வரி போடும் அணைத்து திட்டமும் கீதா முறியடிக்கிறார் . தன் மாமனாரின் பரி பூரண ஆசிர்வாதம் கிடைகிறது .

    இந்த நேரத்தில் ராஜேஸ்வரிக்கு வாதம் வர , சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் கால்களை எடுக்க வேண்டிய நிலைமையில் இளைய மகன் வசந்த் வீட்டை விட்டு போகிறார் , மாப்பிளை குமரேசன் பணத்தை தர அவர் மனைவி அதை தடுக்கிறார் , (ஒரு நாள் தன் மாமியாரை அடிக்க , குமரேசன் கோபம் வந்து அவரை கொளுத்த போக அவர் அம்மா அவரை தடுக்க , தன் மாமியாரின் அருமையை தெரிந்து கொள்ளுகிறார் ராஜேஸ்வரியின் மகள் )
    சேகர் தன் வேலையை விட்டு pf பணத்தை கொண்டு அறுவை சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்கிறார் . தன் சின்ன மருமகள் வந்த காரணத்தால் தான் தனக்கு உடம்பு சரி இல்லாமல் போனது என்று கூறி அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல , தன் நகைகளை கொடுத்து தான் கீதா அந்த அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்தார் என்றும் , சேகர் வெளியை விடவேண்டாம் என்று கீதா செய்த தியாகம் என்று சிவாஜி சொல்ல , இரண்டாவது மகன் வசந்த் மனிப்பு கேட்க , மகளும் மனிப்பு கேட்க குடும்பம் ஒன்று சேருகிறது

  6. #2624
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தை பற்றி :

    படத்தின் மிக பெரிய பலம் - பக்கத்து வீட்டில் நடக்கும் விஷியங்கள் போன்ற கதை அம்சம் .

    CASTING - சரியான நடிகர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருந்தால் அதிலே பாதி வெற்றி உறுதி செய்ய படுகிறது என்பதே thumb rule . இதில் ரேணுகா , மோகினி , வடிவுக்கரசி , மற்றும் சிவாஜி சார் அனைவரின் பாத்திர படைப்பும் அருமை .

    பெரிய deviations இல்லாத திரைகதை


    கதை ஒரு வீட்டை சுற்றியே நகர்கிறது. வெளிப்புற காட்சிகள் என்றால் காலேஜ் காட்சிகள் மட்டுமே . வடிவுகரசிக்கு நோய் வந்த உடன் சேகர் , கீதா ,சாந்தி மட்டுமே பார்த்து கொள்வதும் வடிவுகரசியின் மகள் கூட கார் வாங்க பணத்தை செலவழிப்பதும் பயங்கர சினிமாத்தனம் . படத்தின் close to reality feel பறிபோகிறது , காமெடி என்ற பெயரில் தியாகு பேசும் வசனம் , குமரேசன் செய்யும் மிமிக்க்ரி , காலேஜ் காட்சிகள் சொதபல்

  7. #2625
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்களை பற்றி :

    நடிகர் திலகம் :

    உகார்ந்த இடத்தில ஜெயிக்க முடியுமா
    எங்கள் நடிகர் திலகத்துக்கு அது முடியும்

    நடிக்க தெரியாத நபர்கள் நடிப்பை பற்றி பேசுவதும் , நடிகர் திலகத்தின் நடிப்பை சத்தம் போட்டு நடிப்பவர் என்றும் , கத்தி பேசி நடிப்பவர் என்றும் , over action என்று சொல்லும் நபர்களும் , இந்த படத்தை பார்க்கலாம் , பார்த்து விட்டு அதை மாற்றி கொளுவார்கள் , இல்லை என்றால் அதை prove பண்ண வேண்டிய அவசியம் இல்லை

    இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு எதார்த்தத்தின் உச்சம் . திரு கோபால் சாரின் எழுத்தில் சொல்ல வேண்டும் என்றால் Stanislavsky Method Acting . இதை பார்த்திங்களா என்று அவர் மனைவி கேட்க , எனக்கு கண் தெரியாது என்று self depreciate பண்ணி கொல்வது ஆகட்டும் , தான் கதை சொல்லும் பொது தன் மகள் அதை உதாசீன படுத்தி விட்டு போவது தெரியாமல் மருமகள் வந்து கேட்கும் பொது , இவள் கல்யானதுக்குகாக என் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்தேன் , அதனால் கண் பார்வை போய் விட்டது , அதை கூட நான் நினைக்க வில்லை , ஒரு கண் பார்வை தெரியாத நபரை ஏமாத்தி விட்டு , ஒரு உறுத்தல் இல்லாமல் போகிறாளே என்று வெம்பும் காட்சி ஆகட்டும்

  8. #2626
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தன் இரு மருமகள் சாந்தி , கீதா இருவருக்கும் , அவர்கள் பசியை தீர்க்க , அவர்களை bless பண்ண தன் biscuit டின் யை திறந்து பிஸ்கட் தருவது ஆகட்டும் , தன் பேரன் பிறந்தநாள் வருவதனால் புது துணி கேட்கும் பொது அவரால் அதை afford செய்ய முடியாமல் தவிக்கும் காட்சி ஆகட்டும் . தன் மருமகள் கீதா தன் மாமியாரின் வாயை மூட 800 ருபாய் சம்பாதிக்கும் நபரின் மனைவி இப்படி தான் சாப்பிட வேண்டும் என்றால் 300 ருபாய் பென்ஷன் வாங்கும் நபரின் மனைவி சாப்பிடவே கூடாது என்று தன் பொருளாதார நிலைமையை தன் மருமகள் குத்தி காடும் பொது அதை புன்முறுவல் உடன் RIGHT SPIRIT ல் எடுத்து கொண்டு , அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை தன் முகத்தில் பிரதிபலிக்கிறார் நம்மவர்.

    தன் இளைய மகன் இகட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு போகும் பொது அதை handle செய்யும் விதம் எதார்த்தம் - NO MELODRAMA . தன் மனைவி கடைசியில் தன் சின்ன மருமகளால் தான் இதனையும் என்று சொன்ன உடன் உண்மையை சொல்லி நீ இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை , வேறு வீட்டுக்கு போகும் அவர்களை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று தான் சொன்னேன் என்றும் , தன் மனைவி தன் இளைய மகனை பார்த்து கடைசியில் திட்டும் பொது மீண்டும் ஒரு மருமகளை திட்டாதே என்று அறிவுரை குறும் இடம் நன்று. தனக்கு 60 வது திருமணம் செய்ய நினைக்கும் பொது தன் மகன்கள் தங்கள் ரூம்களில் அடைந்து இருக்கும் பொது , அப்பா எங்கே பணம் கேட்டு விடுவாரோ என்று நினைக்காதிங்க என்று பொதுவாக வெளியே வந்து உரக்க சொல்லும் இடம் PRESTIGE பத்மநாதன் தான் நினைவுக்கு வருகிறார் .

  9. #2627
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தியாகு வசனம் பேசும் பொது தமிழை கொலை செய்வதும் அதற்கு நடிகர் திலகம் தமிழ் பேச தெரியாமல் முடியை வளர்த்து இங்கே வரீங்க என்று சொல்லும் இடம் - (யாரை சொல்லுகிறாரோ )
    நாடகத்தை பற்றி பேச்சு வரும் பொது , நான் அந்த கலைக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லும் இடமும் , சிவாஜி நாடகத்தை மீண்டும் வசனம் பேசுவதும் - சிவாஜி இப்படியா பேசி இருப்பார் என்று கேட்டு விட்டு பேசுவது , இப்படி தான் கற்பனை செய்து நடித்து இருப்பாரோ இந்த பிறவி கலைஞன் என்று நினைக்க தோன்றுகிறது

  10. #2628
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வடிவுக்கரசி :

    ஒரே வார்த்தை VETERAN performer . கொடுமைக்கார பாட்டியாக அருணாசலத்தில் , கொடுமைக்கார மாமியார பிறந்த வீடா ,புகந்த வீடா என்று பல படங்களில் இதே மாதிரி பாத்திரங்களில் பார்த்தது - ரேணுகாவை அவர் கொடுமை படுத்துவது எட்டி உதைப்பது, கரிச்சு கொட்டுவது , தன் கணவரை மதிக்காமல் பேசுவது என்று தன் கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து இருக்கிறார் .

    கடைசியில் தான் கொடுமை படுத்திய மருமகள்கள் இருவரும் தன்னை கவனித்து கொள்ளுவதை அறிந்து தவிக்கும் இடம் அவர் காட்டும் reactions அவர் ஒரு veteran என்பதை காட்டுகிறது

    மோகினி :
    அறிமுகம் ஆகி சில வருடங்களில் சிவாஜி ,வடிவுக்கரசி என்று பெரிய நடிகர்களுடன் screen space ஷேர் செய்து கொண்டு நன்றாக நடித்து இருக்கிறார் , தன் மாமியார் போடும் சத்தத்தை tackle செய்யும் விதமும் , தன் மாமியார் தன் மாமா கொண்டு வரும் மோதிரத்தை எறிந்த உடன் அவரிடம் கண்ணீர் உடன் கெஞ்சும் இடம் நடிப்பு பிரமாதம்

    ரேணுகா :
    dark horse performer 1992 வருடம் தேவர் மகன் படத்திலும் நடிகர் திலகத்தின் மூத்த மருமகள் . இந்த பத்தியும் அதே பாத்திரம் , தியாகத்தின் உருவம் , தன் தம்பி வந்த உடன் ரேணுகாவின் சாப்பாட்டை வடிவுக்கரசி பறித்து தன் தம்பிக்கு கொடுக்கும் இஅடதில் நிஜமாகவே ரேணுகா மீது பரிவும் , வடிவுக்கரசி மீது வெறுப்பும் வருகிறது . சாப்பாடு போடும் பொது , வடிவுக்கரசி தள்ளி விட , சாம்பார் கொட்டி விட , வடிவுக்கரசி திட்டும் இடமும் ரேணுகா மீது வருகிறது ,

    தன் அறையை மோகினிக்கு கொடுத்து விட்டு வெளியில் படுத்து கொல்வது , 60 வது கல்யாணத்துக்கு தன் வளையல்களை கொடுப்பது என்று படம் முழுவதும் இவர் நடிப்பின் முத்திரை ஏராளம்

  11. #2629
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    என் பார்வை :
    இந்த படம் நான் முதலில் பார்த்த சிவாஜி படங்களில் ஒன்று -6 வயதில் பார்த்த நினைவு . இந்த படத்தில் சிவாஜி சார் கையில் இருக்கும் பிஸ்கட் டின் வேண்டும் என்று கேட்டு அதை வாங்கி சாபிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது
    சிறு சிறு குறைகள் இருந்தாலும் இந்த படம் தரம் மிகவும் அதிகம்

  12. Likes KCSHEKAR liked this post
  13. #2630
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லை சென்டிரல் திரையரங்கில் 2-5-2014 வெள்ளிக்கிழமை
    முதல் பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •