Page 4 of 399 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

  1. #31
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆரம்பமே நல்ல தொடக்கத்துடன் சீரான வேகமெடுத்து செல்லும் மக்கள் திலகம் திரி பாகம் எண் 7 புரட்சி தலைவரை போலவே நற்- பெயர் எடுத்து விளங்க பிரார்த்திகிறோம்... மற்றபடி நாளை அருஞ்சுவை காவியமாம் " ஆயிரத்தில் ஒருவன் " - நாளிதழ்களில் வெளி வருகிறது என வினியோகஸ்த நண்பர் கூறியபொழுது ஆவல் அதிகம் வளர்ந்த வண்ணம் இருக்கின்றது... பாண்டிச்சேரி திரு கலியபெருமாள் விநாயகம் அவர்களின் மலேசியா நாட்டின் அனுபவங்களையும் பற்பல செய்திகளை பகிர்ந்து கொள்வது பேரானந்தத்தை தருகிறது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #33
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    Thanks to Mr. Boominathan Andavar, Mumbai

  5. #34
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    24-12-2013- daily thandhi paper


  6. #35
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #36
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    24.12.2013

    dinamalar

    பொன்னின் நிறம்... பிள்ளை மனம்... வளளல் குணம் இவரோ?மக்கள் மனதில் என்றும் மின்னும் எம்.ஜி.ஆர்

    நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.

    பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்; எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்."இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை! மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்; அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.சொல்லாமல் வரும் புயலையும், நிலநடுக்கத்தையும் சந்திக்க துணியும் மனிதன், இந்த மனிதரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத தினம், இன்று. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம். "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி! எம்.ஜி.ஆர்., வாழ்க்கை பயணத்தில், அவருடன் பழகிய சிலரை சந்தித்தபோது...

    எனக்கு இரு குலதெய்வம்:


    கணேசன், மாநகராட்சி துப்புரவு கண்காணிப்பாளர், மதுரை: எனக்கு இரு குலதெய்வம்; ஒன்று கருப்பணசாமி, மற்றொன்று எம்.ஜி.ஆர்., அவரால் வாழ்க்கை பெற்ற சாமானியர்களில் நானும் ஒருவன். சென்னையில் அவரை சந்திக்க, வீட்டிற்கு பல முறைச் சென்றுள்ளேன். பார்த்ததும், "சாப்பிட்டாயா?' என்ற கேள்வி தான், அவரிடம் முதலில் வரும். உலகத்தமிழ் மாநாட்டிற்காக, மதுரையில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்றேன். "அடிக்கடி, என்னை பார்க்க வருகிறாய்; உனக்கு வேலை இல்லையா?' எனக்கேட்டார். "இல்லை...' என, நான் சொல்லி முடிப்பதற்குள், "மதுரை மாநகராட்சியில் வேலை பார்க்கிறாயா?' என, அவரே பதிலையும் முடித்து, பணி ஆணையும் வழங்கிவிட்டார். இன்று என்னிடம் இருப்பவை, அன்று எம்.ஜி.ஆர்., வழங்கியவை. என் வீடு, வாகனங்களில் கூட, எம்.ஜி.ஆர்., பெயர் தான், வைத்திருக்கிறேன். எங்களிடம் வாழும் போது, அவர் எப்படி மறைவார்?

    நான் முதல் ஏவுகணை:


    மாயத்தேவர், முன்னாள் எம்.பி., திண்டுக்கல் எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய போது, திண்டுக்கல் லோக்சபாவிற்கு இடைத்தேர்தல்; பாசத்தில், என்னை வேட்பாளராக்கினார். 16 சின்னங்களை, கலெக்டர் என்னிடம் காண்பித்தார்; இரட்டை இலையை தேர்வு செய்து, எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன்; அவர் காரணம் கேட்டார். "இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை காட்டியது இரட்டை விரல்; அது போல், நாமும் காட்டலாம்,' என்றதும், மகிழ்ச்சியடைந்தார்.அவர் உண்ணும் போது, உடன் யார் இருந்தாலும், உண்ண வேண்டும். சென்னை ஓட்டலில், அவருடன் சாப்பிடும் போது, நான் பாதியில் எழுந்தேன்; என்னை உட்காரச் சொன்னவர், "இந்த உணவுக்காக தான், நீ வக்கீல், நான் நடிகன்; அதை வீணாக்காதீர்கள்,' என, அறிவுரை வழங்கி, உண்ண வைத்தார். தன் அரசியல் ராக்கெட்டில், முதல் ஏவுகணை என்ற பெருமையை, எனக்கு தந்த உத்தமர் அவர்.

    மறக்க முடியாத மனிதநேயம்:


    எஸ்.டி.சண்முகவேலு, முன்னாள் ஊராட்சி தலைவர், எரசக்கநாயக்கனூர், தேனி: சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் அவரை காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார். "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, நான் கூறியதும், என்னை கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார். அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்திக்க, மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தேன். அடையாளம் கண்டு, உதவியாளரிடம் என்னை அழைத்து வர செய்தவர், என் மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, என் மனைவியிடம் நலம் விசாரித்தார். வெளியே வந்த என் மனைவி, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது; இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசியிருக்கிறார் என்றால், அவருக் காக நம் சொத்துக்களை இழந்தாலும், பரவாயில்லை,' என, நெகிழ்ந்து போனார். மறக்க முடியாத மனிதநேயர், அவர்.

    பாசத்திற்காக வேலை:


    பஞ்சாட்சரம், குடும்பத்தலைவி, தட்டட்டி, சிவகங்கை: என் கணவர் சிதம்பரம், சென்னை ஓட்டலில் வேலை பார்த்த போது, அவரது ருசி அறிந்து, தன் வீட்டு சமையல்காரர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகள், அவருடன் தான் தங்கியிருந்தார்; பொங்கலுக்கு மட்டும் ஊருக்கு வருவார். சம்பளத்திற்காக இல்லாமல், எம்.ஜி.ஆர்.,ன் பாசத்திற்காக தான், என் கணவர், அவரிடம் வேலை பார்த்தார். ஒரு நாள் கூட, அவரை வேலைக்காரர் போல, அவர் நடத்தியது இல்லையாம். "அய்யா... வாங்க, போங்க,' என்று தான், அழைப்பாராம். என் மகள் திருமணத்திற்கு, நாங்கள் எதிர்பார்த்தை விட, அதிகமாகவே செய்தார். இன்று என் கணவர் என்னுடன் இல்லை; அவர் நேசித்த மனிதன் இங்கு இல்லாத போது, அவர் மட்டும் எப்படி, என்னுடன் இருப்பார்?

    சிரிப்பில் மயங்கி விடுவோம்:


    எஸ். நாகராஜன், ஓட்டல் மேலாளர்,அருப்புக்கோட்டை : 1977 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று, நன்றி அறிவிப்புக்காக, 3 நாட்கள் அருப்புக்கோட்டை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அவருக்கு தேவையான உணவுகள், மதுரை ஓட்டலில் இருந்த வந்தது. இருப்பினும், அருப்புக்கோட்டை தனலட்சுமி ஓட்டலில் இருந்து, நானும் உணவு கொண்டு செல்வேன்; அவற்றையும் உண்பார். நண்பர் ஆறுமுகம் வீட்டில் தயாரான கீரை மசியலை, விரும்பி உண்பார். அப்போது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. வரவேற்கும் அவரது சிரிப்பில், நாங்கள் மயங்கிவிடுவோம். அவரது சென்னை வீட்டில், 3 முறை சாப்பிட்டிருக்கிறேன். "அவங்களை நல்லா கவனிங்க,' என, தன் வேலையாட்களிடம் கூறுவார். இவ்வாறு அந்த பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம் பற்றி மனம் திறந்தனர்.
    Last edited by esvee; 24th December 2013 at 05:45 AM.

  8. #37
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    DINAMALAR - COMMENTS PORTION

    எந்த ஒரு தலைவருக்கும் எம்.ஜி ஆர் போல உலகத்தின் பல பாகங்களிலும் பிறந்த நாள்,நினைவு நாள்கொண்டாடுவது கிடையாது.அவர் அவர்நாட்டில் வேண்டுமானால் கொண்டாடுவார்கள்.தமிழன் எங்கெல்லாம் உள்ளானோ அங்கெல்லாம் எம்.ஜி.ஆருக்கு விழ எடுக்கபடுகிறது.பிரான்சு நாட்டிலும் பிரான்சு எம்ஜிஆர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக விழ எடுக்கிறோம்.மனித புனிதர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க வாழ்க வாழ்கஎன்றென்றும்.

    Chandru K

    திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 25 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை


    வைகை செல்வன் - சென்னை,இந்தியா


    வைகை செல்வன் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மலின் வரப்போகும் நினைவு நாளை நினைவு கூர்ந்தமைக்கு தினமலருக்கு நன்றி .... தமிழ் உள்ள வரை தலைவரின் புகழ் நிலைத்திருக்கும் ..

    Karuppiah Sathiyaseelan - kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
    24-டிச-201303:37:12 IST Report Abuse
    Karuppiah Sathiyaseelan இன்னும் உயரிய பண்புகள் பல.

    gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
    gopalakrishnan saminathan இன்று உலகத்தை விட்டு நீ பிறந்த நாள் ஆனால்ஏழைமக்கள் உன்னை நினைக்கும் நாள் அதுதான் எம் ஜி யார்

    gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்

    gopalakrishnan saminathan பாயும் புலியின் கோபத்தை அதன் முகத்தில் வைத்தானே பாழும் மனிதனின் கோபத்தை இதய பொர்வையில் வைத்தானே இந்த வார்த்தை என் நெஞ்சில் நான் அடிக்கடி உன்னைப்போல் நினைப்பேன்


    gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்

    gopalakrishnan saminathan
    என் தெய்வம் என்நை விட்டு பிரிந்த தினத்தை நன் மறக்க முடிமா நானும் உன்னை போல் தர்மம் செய்ய நினைக்கின்றேன் உன் அளவு என்னால் செய்ய முடிவதில்லை என்னை மன்னித்து விடு முயற்சிக்கிறேன் வாழ்க என்றும் உன் புகழ் பாரிஸ் கோபாலகிருஷ்ணன் என்றும் உன் ஆசி எனக்கு வேண்டும்

    Usman Mohamed Ibrahim - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Mohamed Ibrahim எம் ஜி ஆர் என்ற மாமனிதர் பல குடும்பங்களை வாழ வைத்தவர். இன்றும் அவர் பலரின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் சாதனைகள் யாராலும் நெருங்க முடியாது, சினிமாவிலும், அரசியலிலும் அவர் தொட்ட வுயரங்களை தொட யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ரீகன் அமெரிக்க அதிபதியாக ஆவதற்கு முன்பே ஒரு நடிகன் அரசியலில் மிக வுயர்ந்த பதவியில் அமர்ந்து வுலக சாதனை படித்ததும் மக்கள் திலகம் தான், இந்த ஒரு சாதனையே போதும் இந்த வுலகம் வுள்ள வரை அவர் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்.
    Last edited by esvee; 24th December 2013 at 06:16 AM.

  9. #38
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    THANTHAI PERIYAR - MAKKAL THILAGAM NINAIVU NAL -24-12-2013

  10. #39
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    24-12-2013

    jaya movies

    kalaththai vendravan

    oorukku uzhaippavan

    kumarikottam


    polimer tv

    thayai kaththa thanayan

    vasanth tv

    thayai kaththa thanayan

    sunlife

    kavalkaran

  11. #40
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Page 4 of 399 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •