Results 1 to 10 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.

    சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.

    மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.

    ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.

    அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.

    மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.

    இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.

    அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

    அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.

    மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.

    இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

    ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

    அன்புடன்

  2. Likes Russellmai, joe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •