Page 11 of 59 FirstFirst ... 91011121321 ... LastLast
Results 101 to 110 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #101
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள பஷீர் திரையரங்கில், 25.2.2010 (வியாழன்) முதல் 1.3.2010 (திங்கள்) வரை, ஐந்து நாட்களுக்கு தினசரி 3 காட்சிகளாக, புதுமை வேந்தரின் "புதிய பறவை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.

    திரையுலகச் சக்கரவர்த்தியின் திரைக்காவியங்கள், தமிழகமெங்கும் மறுவெளியீடுகளாக வெற்றி பவனி வருவது, நம் எல்லோருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி தானே!

    முன்னைய பதிவிலிருந்து

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிங்காரச் சென்னையின் ஸ்டார் திரையரங்கில், இன்று (5.3.2010) வெள்ளி முதல், தினசரி பகல் காட்சியாக, சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" திரைக்காவியம் திரையிடப்பட்டுள்ளது.

    இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.ஆர்.குமார் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

    முன்னைய பதிவிலிருந்து

  4. #103
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிங்காரச் சென்னையின் பெரம்பூர் பகுதியில் உள்ள மஹாலட்சுமி திரையரங்கில், வருகின்ற மார்ச் 26, வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 1, வியாழக்கிழமை வரை, ஒரு வாரத்திற்கு, தினசரி 3 காட்சிகளாக, சிவாஜி வாரம் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனைச் சென்னையைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். ஒரு நாளுக்கு ஒரு படம் என்கின்ற விகிதத்தில், 7 நாட்களுக்கு 7 படங்கள் திரையிடப்படும். 7 படங்களில் 5 படங்கள் இது வரை முடிவாகி உள்ளன. அவையாவன:

    1. திருவருட்செல்வர்

    2. பாரத விலாஸ்

    3. எங்கள் தங்க ராஜா

    4. கெளரவம்

    5. மன்னவன் வந்தானடி

    நமது நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயங்களின் முயற்சிகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

    இத்தகவல் ஒரு முன்னோட்டமே. விவரங்கள் ஊர்ஜிதமான பின், அவசியம் பதிவு செய்கிறேன்.

    முன்னைய பதிவிலிருந்து


  5. #104
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக வெளியாகியுள்ள தங்கப்பதக்கத்தின் வசூல் விவரம்: (சற்றேக்குறைய)

    5.3.2010 (வெள்ளி) = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

    6.3.2010 (சனி) = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

    7.3.2010 (ஞாயிறு) = ரூ. 3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

    இந்த விவரங்களை அளித்த எமது நெருங்கிய நண்பரும், நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயமுமான திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்!

    (திரு.ராமஜெயமும், திரு.எஸ்.பி.செளத்ரி அவர்களை இன்று 7.3.2010 ஸ்டாரில் தரிசித்திருக்கிறார்)


    முன்னைய பதிவிலிருந்து

  6. #105
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம் - வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

    8.3.2010 (திங்கள்) = ரூ. 1,200/- (ரூபாய் ஓராயிரத்து இருநூறு)

    9.3.2010 (செவ்வாய்) = ரூ. 1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)

    10.3.2010 (புதன்) = ரூ. 1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)

    முன்னைய பதிவிலிருந்து

  7. #106
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா

    சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் செவாலியே சிவாஜி வாரம்:
    (7 நாட்கள் - 7 திரைக்காவியங்கள் - தினசரி 3 காட்சிகள்)

    அட்டவணை இதோ உங்கள் பார்வைக்கு:

    26.3.2010 (வெள்ளி) - மன்னவன் வந்தானடி

    27.3.2010 (சனி) - கெளரவம்

    28.3.2010 (ஞாயிறு) - எங்கள் தங்க ராஜா

    29.3.2010 (திங்கள்) - திருவருட்செல்வர் (பங்குனி உத்திரத்தை முன்னிட்டு)

    30.3.2010 (செவ்வாய்) - பாரத விலாஸ்

    31.3.2010 (புதன்) - ராஜபார்ட் ரங்கதுரை

    1.4.2010 (வியாழன்) - சொர்க்கம்

    6 நாள் காவியங்களையும் கண்டு களித்த பிறகு, 7-ம் நாள் பூலோகத்தில் சொர்க்கம்!

    பெரம்பூர் மஹாலட்சுமிக்கு வருகை புரிந்து, கலையுலக மகானை தரிசித்து, அருளாசி மலர்களைப் பெற்று, வாழ்வில் வளங்களைக் கூட்டுங்கள்!!

    சிவாஜி வாரம் திரையிடும் ரசிக, பக்த நல்லிதயங்களின் முயற்சிகள் இமாலய வெற்றி அடைய வளமான வாழ்த்துக்கள்!!!

    முன்னைய பதிவிலிருந்து

  8. #107
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம், 7வது நாளான வியாழனன்று (11.3.2010), சற்றேறக்குறைய ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) வசூல் அளித்துள்ளது.

    ஆக, பகல் காட்சியிலேயே, தங்கப்பதக்கம், ஒரு வார காலகட்டத்தில் (5.3.2010 முதல் 11.3.2010 வரை), சற்றேறக்குறைய ரூ. 14,600/- (ரூபாய் பதினான்காயிரத்து அறுநூறு) வசூல் கொடுத்துள்ளது. இது ஒரு சிகர சாதனை.

    இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, எல்லாப் பிடிப்புகளும், செலவுகளும் போக, ரூ.3000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

    தங்கப்பதக்கம் என்றுமே சொக்கத்தங்கம்!!!

    முன்னைய பதிவிலிருந்து

  9. #108
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

    நேற்று வெள்ளி முதல் [28.11.2014] சென்னை ஓட்டேரி சரவணாவில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் பார்த்தால் பசி தீரும் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  10. #109
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

    26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

    பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ.3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

    மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு)

    முன்னைய பதிவிலிருந்து

  11. #110
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

    26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

    இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

    27.3.2010 - சனி - கௌரவம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

    பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

    மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,100/- (ரூபாய் மூவாயிரத்து ஒரு நூறு)

    # நடிகர் திலகத்தின் பக்தர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தை மேட்னி ஷோவில் கண்டு களித்தார்.

    முன்னைய பதிவிலிருந்து

Page 11 of 59 FirstFirst ... 91011121321 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •