Page 4 of 401 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #31
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation Mr Krishnaji for starting the Part II

    Thanks for Mr Vasudevan Ji for remembering me also.



    Mr Karthik, the song in video , especially for you.



  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    மிக்க நன்றி! நேற்று மிக்க நம்பிக்கையுடன் எங்கள் கார்த்திக் சார் வருவார் என்ற அசையா நம்பிக்கையுடன் இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நேற்று இரவு வினோத் சாரிடம் பேசும் போதுகூட கார்த்திக் சார் இன்று நிச்சயம் வருவார் என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டேன். நீங்கள் ஒரு நாள் சென்று வந்து விட்டீர்கள். நிஜமாகவே சொல்கிறேன் சார். நீங்கள் இல்லாமல் திரி சற்று பொலிவிழந்து நின்றது உண்மை.

    நிச்சயமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. திரியைத் துவக்கினேன். அவ்வளவுதான். அத்தனை பேரும் அற்புதமாக அதை பரிமளிக்கச் செய்தீர்கள். ஆனால் எல்லோரும் என்னை கூச்சப்படும் அளவிற்கு பாராட்டித் தள்ளி விட்டீர்கள். இந்த சகோதர பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை.

    தங்களின் விட்ட பதிவுகள் இரண்டாம் பாகத்தில் தொடர வேண்டும்..மீண்டும் தங்களுக்கே உரித்தான முத்திரைப் பதிவுகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணா என்ற நல்ல உள்ளம் இரண்டாம் பாகத்தை துவங்கி இருக்கிறது. அந்த உள்ளத்தின் பின்னே நாம் அணிவகுத்துச் சென்று திரியை வளப்படுத்துவோம்.

    அதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது தங்கள் 'ஏணிப்படிகள்' பதிவு. 'கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்' அருமை. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அமர்க்களம். நம்ம மாமா தானே இசை.
    சுசீலா அருமையாகப் பாடியிருப்பார். பாடும் பையனை இன்னொரு படத்தில் பார்த்திருக்கிறேன்.

    'ஆடு புலி ஆட்டம்' படத்தில் 'வானுக்குத் தந்தை எவனோ' என்று கமல் ஒரு கண்ணில்லா பையனிடம் ஆதரவாகப் பாடுவாரே! அந்தப் பையன் தான் இந்தப் பாடலுக்கும் நடிப்பான். அவன் பெயர் 'மாஸ்டர்' அனில் குமார்.

    அதிலும் குருடு. இதிலும் குருடு. ஏன். அவனைப் பார்த்தே விடுவோமே.

    'ஆடு புலி ஆட்டம்' படத்தில்



    'ஏணிப்படிகள்' படத்தில்

    Last edited by vasudevan31355; 14th August 2014 at 10:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #33
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இரண்டாம் பாகத்தில் கலக்க வரும் ராஜேஷ்ஜி!

    வருக! வருக!

    இன்றைய இசையரசியின் பாடல் எது தரலாம்? ம்ம்... சி.க உறுமுவது தெரிகிறது.

    'நீ இன்றி நான் இல்லை வாடா ரங்கய்யா
    நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கய்யா'

    அழகான, மிடுக்கான காளையை கொஞ்சியபடியே ஜெயந்தி ஆடிப்பாட, வழக்கம் போல ஜெமினி காளை ஜெயந்தி பசுவை தன் வழக்கமான இடுப்பில் கை வைத்த ஸ்டைலில் வீழ்த்தப் பார்க்க 'எப்படியோ போங்கள்... பாடலை நான் தூள் கிளப்பி விடுவேன்' என்று இசையரசி அம்சமாகப் பாடுகிறாரோ! 'நல்ல முடிவு'.

    அமைதியான அழகான பாடல்.

    பார்த்து இன்புறுவோமே!

    Last edited by vasudevan31355; 14th August 2014 at 10:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #34
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    இசையரசியின் அமர்க்களத்தோடு சேர்த்து என் ராட்சஸி பாடலும் இந்த புதிய பாகத்தில் தினம் ஒன்று அல்லது இரண்டு இரவில் தங்களோடு சேர்ந்து தரவுள்ளேன்.

    சம்மதமா.... நான் உங்கள் கூட வர சம்மதமா...

    இதோ ஆரம்பிக்கிறேன்.

    'நீ' படத்தில் எங்கள் ராட்சஸி பாடும்

    அடடா என்ன அழகு
    அருகே வந்து பழகு'

    அட்டகாசமான பாடல். அப்படியே ஈஸ்வரி முத்திரை.

    'அனல் மேல் வைத்த மெழுகு
    அது போல் நீயும் உருகு'

    நன்றாக கவனியுங்கள்.

    'அனல் மேல் வைத்த மெழுகு' என்று இந்த ராட்சஸி பாடுகையில் அப்படியே மெழுகை அனல் மேல் வைத்தது போலவே இருக்கும். 'அ'வுக்கும் 'ன'வுக்கும் இடையில் ஒரு மிகச் சிறிய மாத்திரை ஒலிக் குறைவில் ஒரு கேப்.

    அலட்சிய போக்கு.
    அசுரத்தனமான உச்சரிப்பு.

    அராத்தல் பாடல்களில் நானே சாம்ராஜ்ய மகாராணி என்று கொக்கரிப்பு.

    இதோ கேளுங்கள். ஜெயலலிதா மேடத்தின் அருமையான டேப் டான்ஸையும் உடன் சேர்ந்து அனுபவியுங்கள். விஸ்வநாதரின் பின்னிப் பெடலெடுக்கும் இசை ராஜ்யத்தை அனுபவியுங்கள்.

    ஈஸ்வரி + ஜெயலலிதா = பெர்பெக்ட் மேட்ச்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai, rajeshkrv liked this post
  9. #35
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இந்த இரண்டாம் பாகத்தை பாங்காகவும் அழகாகவும் துவக்கிய கிருஷ்ணா ஜிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    உத்தரவின்றி உள்ளே வா .. ராட்சசியும் பாடகர் திலகமும் பட்டைய கிளப்பும் பாடல் ...

    எல்லாமே சிறந்த பாடல்கள்
    எனக்கு மிகவும் பிடித்தது

    பாலா, இசையரசி, சாய்பாபா, அரக்கி பாடிய “உன்னை தொடுவது இனியது நான் சொல்லித்தருவது புதியது”

    ஆஹா தூள் கிளப்பும் பாடல் ... ரவி-காஞ்சனா ரொமான்ஸ் என்றால் நாகேஷ் ரமாபிரபா உடான்ஸ் ... எனிவே நைஸ் டான்ஸ் ...


    இதோ




    உத்தரவின்றி உள்ளே வா தெலுங்கில் பி.சங்கர் என்ற இசையமைப்பாளர் விந்த இல்லு சந்த கோலா என்ற படத்தில் உபயோகித்தார்

    பாலு, இசையரசி, ஜி.ஆனந்த் பாடிய பாடல் இதோ ..

    vintha illu santha gola- neepai moju vunnadhiraa-spb,ps,g.anand-kosaraju-b.sankar.mp3

  10. #36
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,
    கேட்கனுமா தாராளமாக வழங்குங்கள் .. இசையரசிக்கு அடுத்து இரு குரல்கள் என்னை கவர்ந்தவை.. ராட்சசி மற்றும் ஜிக்கி..
    அப்புறம் புதியவர்களில் சுஜாதா, ஸ்வர்ணலதா பிடிக்கும்

    வாணிஜெயராம் பாடுவார் ஆனால் அவருக்கு பக்திபாடல்களுக்கான வாய்ஸ் என்பதால் சில ரொமாண்டிக் பாடல்களில் கூட பக்தி ரசம் சொட்டும்..இது என் கருத்து .. தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    உதாரணத்திற்கு “கங்கை யமுணை பாடல் இசையரசியின் அக்மார்க் பாடல் .. வாணி அதை பஜனாக மாற்றியிருப்பார்”

  11. #37
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

    இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்


    இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா

    rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
    கிருஷ்ணா சார்!

    வார்ரே வா! அப்படி வாங்க கண்ணா!

    சலீல் இசையமைத்த 'ஆனந்த்' திரைப்படத்தில் ஸ்மிதா சன்யால் நடிக்க லதா பாடிய அற்புத பாடல் 'நா ஜியா லாகே நா'.

    சலீல் சௌத்திரி என்ற அற்புத உன்னத இசையமைப்பாளரின் உயிரை உருகச் செய்யும் இசைக்கு நான் முதல் பரம அடிமை. பல தடவை ராகவேந்திரன் சாரும், நானும் இப்பாடலைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம். நீங்களும் அப்படியே இருக்கிறீர்கள்.

    ஆனால் ஒன்று. லதா பிரமாதமாகப் பாடியிருந்தாலும் நம்ம பாலா அதைவிட ஒரு படி மேலே போய் அசத்தி விட்டார். 'நான் எண்ணும் பொழுது' தமிழ்ப் பாடல்களில் ஒரு அழியாக் காவியம்.

    இப்போது உங்களுக்காக லதா பாடிய பாடல்.



    படத்தின் முடிவில் வரும் பாலாவின் சின்ன பிட்.



    Last edited by vasudevan31355; 14th August 2014 at 11:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #38
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இனிமை ராஜேஷ் சார்.

    பாலாவின் அந்த பேஸ் வாய்ஸ். லலலலலலலலலால்லா லல்லல்லலல்லலல்லலாலா

    அய்யோ! அப்படியே அள்ளிக்கிட்டுப் போக்குமே!

    நடுவில் எங்க ஆள்

    'நீ பாண்டியனின் பிள்ளையோ' அந்த 'யோ' மறக்க முடியுமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes chinnakkannan liked this post
  14. #39
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.

    இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?

    என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #40
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஸ்மிதா சன்யால் எவ்வளவு சிம்பிள் அழகு!



    Last edited by vasudevan31355; 14th August 2014 at 11:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 4 of 401 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •