Page 1 of 397 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

    மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



    மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

    முதலில் என்னை பாகம் 3 துவங்க அழைத்த கோபால், வாசு ஜி, கிருஷ்ணா ஜி, மதுண்ணா,
    ராகவ் ஜி, எஸ்.வி ஜி மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    ஹப்பில் நீண்ட நாட்கள் உறுப்பினராக இருந்தாலும் சில திரிகளில் மட்டுமே தலைக்காட்டி கொண்டிருந்த
    என்னை இரவு பகல் பாராமல் பதிவிட செய்தது மனதை கவரும் மதுர கானங்கள் திரி தான். என்றோ ஒரு நாள் திரியின் பெயரிலேயே மயங்கி உள்ளே நுழைந்து பின் இங்கு பேசப்படும் விஷயத்தாலும், நண்பர்கள்
    பதிவிடும் பாடல்களும் அதைப்பற்றிய அலசலும் சற்று பிரமிக்கத்தான் வைத்தது. இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு பின் ஹப்பில் தொடர்ச்சியாக ஒரு திரியில் பலரும் நட்பு பாராட்டி, கேலி கிண்டல் என குடும்ப உறுப்பினர்கள் போல் உலா வந்தது இந்த திரியில் தான். நான் பாட்டுக்கு பாட்டு, நடிகர் திலகம் திரி மற்றும் சில திரிகளுக்கு மட்டுமே சென்று கொண்டிருந்த நிலை மாறி இப்பொழுது மதுர கானம் திரியை தவிற வேறு எந்த திரிக்கும் செல்வதில்லை என்றால் அது இந்த திரியின் வளர்ச்சியையும் ஆளுமையையும் ஈர்ப்பையுமே குறிக்கும். சொல்லப்போனால் மனதை கவரும் மதுர கானம் என்பது போய் மனதை மயக்கும் மதுர கானம் ஆயிற்று என்றே சொல்லலாம்.
    கானம்/இசை என்பது இறை … ஆம் இறைவனை அடையும் வழி இசையே என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை .. எல்லா வித சூழலுக்கும் வடிகாலாக இசை உள்ளது அதனால் தான் இன்றும் நாம் பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறோம்.. கர்நாடக கீர்த்தனைகள், பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள், நாட்டு பாடல்கள் என்று வகை படுத்தினாலும் எல்லாமே இசை தான்.
    சிலர் நினைக்கலாம் என்னடா இவன் தமிழ் பாடல் சொன்னால் உடனே தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல பாட்டை பதிவிடுகிறானே , இவனுக்கு மற்ற மொழி பாடல்கள் தெரியும் என்ற மமதை என்று யாராவது நினைத்தால் இல்லவே இல்லை … இசைக்கு மொழி கிடையாது . அதுவும் நம் தென்னாட்டில் ஒரே படம்/கதை பல மொழிகளிலும் படமானது அதே சூழலில் அதே மெட்டோ இல்லை வேறு மெட்டோ அதை இங்கே பதிவிடுவதே என் நோக்கம். அதுமட்டுமல்லாது 60-70 கால கட்டங்களில் தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் மிகச்சிறந்த படங்களும் பாடல்களும் வெளி வந்தன . ஏற்கனவே அறிமுகனாவர்களுக்கு சலிப்பு தட்டலாம் ஆனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அறிமுகம் செய்யவே இந்த நோக்கம் .. நோக்கம் தவறில்லை என்று நினைக்கிறேன்..(மதுண்ணா ரொம்ப காலமாக எனக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார். அவருக்கு தெரியாத தமிழ் பாடல்கள் இல்லை இருந்தாலும் நான் ஏதாவது மற்ற மொழி பாடல் பதிவிட்டால் அதை கேட்டு அருமையாக பின்னூட்டம் இடுவார்.. அதையே தான் வாசு ஜி, கிருஷ்ணா ஜி, சி.க என எல்லோருமே ரசித்து எழுதுகிறார்கள்… நன்றிகள் பல)

    அதே போல் இசையரசி பைத்தியம் முற்றித்தான் விட்டது (சிலர் மனதில் நினைக்க கூடும் … என்ன இவன் இசையரசி பாட்டை மட்டுமே பதிக்கிறான் என்று கொஞ்சம் கோபம் கூட வரும் …அடி வாங்கிக்க நான் ரெடி ) … என்னுடைய ரத்தம், நினைவு, சிந்தனை என எல்லாவற்றிலும் இசையரசியின் இனிய கீதமும் குரலும் கலந்துவிட்ட நிலையில் அது தவிர்க்க முடியாத ஒன்று . ஏதோ காதலி பற்றி சொல்வது போல் தோன்றலாம் ஆனால் அந்த தேன் குரலுக்கு தெய்வமே அடிமையாகும் நான் எம்மாத்திரம். இருந்தாலும் இசையரசி பாடல்கள் அல்லாது மற்ற பாடகர்களின் பாடல்களையும் பதித்திருக்கிறேன் இன்னும் பதிவிடுவேன் என்ற உறுதியும் தருகிறேன் … (கோபால் அவர்களே 70% இசையரசி பாடல்கள் 30% மற்றவர்களின் பாட்டு ஒ.கே தானே )

    முன்னுரை முடிந்தது … போதும் உன் புராணம் பாடலை பதிவிடுப்பா என்று நீங்கள் எல்லோரும் சொல்வது கேட்கிறது. வருகிறேன் வருகிறேன் பாடலுக்கு வருகிறேன்.



    ”மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன் “ என்ற வசனம் ஞாபகம் இருக்கா.. ஆம் பூரி என்ற அந்த பையன் அடிக்கடி சொல்லும் வசனம். படம் “யார் பையன்“
    வங்காள மொழி கதைகள் பலவும் தமிழில் படமான காலமது. அதே போல் ஒரு வங்காள கதை
    தமிழில் யார் பையன் ஆனது. (இராணி சகோதரிகளான ஹனி இராணி, டெய்ஸி இராணி குழந்தைகள் மிகவும் பிரபலம். அதிலும் டெய்ஸி இராணி தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தார்).. கதையின் பிரதான பாத்திரமான பையனாக டெய்ஸி இரானி, மற்றும் ஜெமினி, சாவித்திரி,
    என்.எஸ்.கே, மதுரம், டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி என பலரும் நடித்திருந்தனர். அனாதையான பூரி ஒரு பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஜெமினியிடம் பெயரை கேட்க அந்த பெயரையே தன் தந்தையின் பெயராக நினைத்து கொண்டு அதையே சொல்வதால் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. என்.எஸ்.கே குடும்பத்தார் தயாரித்த இந்த படத்தை இயக்கியது டி.ஆர் .ரகுனாத்.
    வீட்டிற்கு கூட்டி சென்றதால் ஏற்பட்ட குழப்பம் தீரும் வரை குழந்தையை தன் காதலி சாவித்திரியிடம் ஒப்படைக்கிறார் ஜெமினி.. சாவித்திரியும் அவர் அம்மாவும் அந்த குழந்தையிடம் படும் பாடு … அப்படி இப்படி அவனை சமாதானம் செய்து தூங்க வைக்க முயற்ச்சிக்கிறார் சாவித்திரி …. அப்படித்தான் ஆரம்பம் இந்த பாடல் .. டி.சலபதிராவ் அவர்களின் இசையில் அ.மருதகாசி ஐயாவின் அற்புத வரிகளில் இசையரசியின் வினோத தாலாட்டு

    ”தந்தை யாரோ” என்று சாவித்திரி பாடல் வரியை தொடங்கிய உடனே “மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன்” என பையன் சொல்ல இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சாவித்திரி முறைக்க ஏக தமாஷ்… நடுவில் மீண்டும் தந்தை யாரோ என்று வரி வரும் போது சொல்ல வாய் திறக்கும் பிள்ளையின் வாய் பொத்தி பாடலை பாட..அதுவும் இசையரசி குறும்பாக ஜாலக்காரா தூங்குடா என்று பாடி முடித்து தூங்குடா என்று அதட்டுவது போல் பாடும் விதம் …. சத கோடி பிரணாமம்
    மருதகாசி ஐயா எல்லாவித பாடல்களையும் எழுத வல்லவர். பாடலாசிரியர் என்ற அந்த சொல்லுக்கு
    முதல் முதலில் முழுப்பெருமைய் சேர்த்தவர் மருதகாசி ஐயா. அவருக்கு அப்புறம் வந்தவர்கள் தான் கவியரசரும், வாலி ஐயா போன்றவர்கள் எல்லாம்.. என்ன அழகான வரிகள் .. வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும் , வாலை கொஞ்சம் சுருட்டிக்கொண்டு தூங்குடா நீ தூங்கு


    தந்தை யாரோ?
    குழந்தை: மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர் ராஜன்
    சுசீலா: நீயும் எந்த ஊரோ?
    தந்தை யாரோ தாயும் யாரோ
    நீயும் எந்த ஊரோ?
    தந்தை யாரோ தாயும் யாரோ
    நீயும் எந்த ஊரோ?
    ஜாலக்காரா தூங்கடா
    ஜாலக்காரா .....தூங்குடா
    ஜாலக்காரா தூங்கடா
    ஆராரோ .. நான் யாரோ .. நீ யாரோ

    தந்தை யாரோ தாயும் யாரோ
    நீயும் எந்த ஊரோ?

    மணம் புரிந்து அரசு வேம்பும்
    வலம் வராத போதிலும்
    மணம் புரிந்து அரசு வேம்பும்
    வலம் வராத போதிலும்
    நான் வலம் வராத போதிலும்
    மதலையாக வீடு தேடி வந்ததென்ன விந்தையோ

    தந்தை யாரோ தாயும் யாரோ
    நீயும் எந்த ஊரோ?

    மாலை சூடி லாலி பாடி ஓஓஓஓஓஓஓஓஓஓ
    மாலை சூடி லாலி பாடி
    மனைவியாகக் கொள்ளுமுன்னே
    ஏழு வயசு பிள்ளையாக எனக்குத் தந்தார் உன்னை
    வாலை சும்மா சுருட்டிக் கொண்டு தூங்கடா நீ தூங்கு ...
    தூங்கடா நீ தூங்கு ..
    வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும்
    வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும்

    தந்தை யாரோ தாயும் யாரோ
    நீயும் எந்த ஊரோ?

    தந்தை யாரோ?

    வரிகளுக்கு நன்றி: மறைந்த நம் மன்ற உறுப்பினர் ஜெயந்தி அவர்கள்
    பாடல் அழகா, பாடியிருக்கும் விதம் அழகா, திரையில் சாவித்திரியின் நடிப்பு அழகா இல்லை தூங்காமல்
    குறும்பு செய்யும் டெய்ஸி இராணி அழகா … யார் பையன் நம் பையன்…
    இசையரசிக்கு ஒரு ஸ்பெஷல் வந்தனம் -அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்றாமல் அப்படியே வந்த பிள்ளை என மருதகாசி ஐயாவின் வரியை இவர் பாடும் விதம் .. மெய் சிலிர்க்கும்
    மாலை சூடி லாலி பாடி என்ற வரியிலும் அதே சிலிர்ப்பு
    பாகம் 3 .. தேன் இனிமையிலும் இசையரசியின் குரல் திவ்யமதுரமாமே என்பது போல் தொடங்கியாயிற்று. எல்லோரும் தங்கள் மதுர பதிவுகளை பதிந்து இந்த பாகத்தையும் மாபெரும் வெற்றி பெற செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து பாகம் 3 இனிதே ஆரம்பம் …



    இதே பாடலின் தெலுங்கு வடிவம் (எவரி அப்பாயி)

    THANDRI EVARO THALLI EVARO NEEKU DIKKU EVARO-Evari abbayi(yaar payyan).MP3
    Last edited by rajeshkrv; 9th October 2014 at 03:53 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அருமையான பாப்பா பாட்டுடன் திரியைத் துவக்கிய ராஜேஷுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

    வருக வருக என்று சொல்லி அழைப்பார்
    சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்.

    நானும் அது போல சுசீலாம்மாவின் குரலில் ஒரு சின்ன சிலீர்....

    படம் : பனித்திரை


  5. Likes Russellmai liked this post
  6. #3
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி..

    இதோ.. ஆறேழு நாட்கள் போகட்டும் என்று சொல்லாமல் ஆரம்பம் இன்றே ஆகிவிட்டது

    காவியத்தலைவியில் எஸ்.பி.பி., எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்களில் பெல்பாட்டம் (?) போட்ட சௌகாரும், ரவிச்சந்திரனும்


  7. Likes Russellmai liked this post
  8. #4
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுர கானங்கள் மூன்றாம் பகுதியைத் துவக்கி உள்ள இராஜேஷ் சார் அவர்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.
    அன்புடன் கோபு.

  9. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மனதை கவரும் மதுர கானங்கள் - பாகம் - மூன்று

    துவக்கியவர் திரு ராஜேஷ் - மூன்றெழுத்து

    முந்தைய திரியை நடத்தியவர் திரு கிருஷ்ணா - மூன்றெழுத்து

    இசைக்குயில் சுசீலா - மூன்றெழுத்து

    பாடகர்கள் டி .எம்.எஸ் - பி.பி .எஸ் -மூன்றெழுத்து

    நம்மை எல்லாம் இணைத்த தமிழ் -மூன்றெழுத்து

    முக்கனிகள் தரும் சுவை - முத்தமிழ் பாடல்கள்

    மறந்தே போன பல அரிய பல மொழி பாடல்கள் இங்கே சங்கமம்

    மனதை மயக்கும் மதுர கானங்கள் - தினமும் பல் சுவை விருந்தாக

    படைத்திடும் அன்பு உள்ளங்கள் .....தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்தில்

    திரு ராஜேஷின் தலைமையில் நண்பர்கள் வெற்றி கொடி நாட்டி புதிய

    வரலாற்றை படைப்போம் .......சாதனைகள் புரிவோம் ...இசையால் இணைவோம்

  10. Likes Russellmai liked this post
  11. #6
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'யார் பையன்' படத்தின் சுசீலா அம்மாவின் பாடலோடு மதுர கானம் பகுதி 3 ஐ துவக்கியிருக்கும் ராஜேஷ்ஜி அவர்களுக்கு என் மனம் நிறை வாழ்த்துக்கள்.

    அருமையான மிக நல்லதொரு பாடலை முதல் பதிவாக வழங்கி இசையரசிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். திரிக்கும் கௌரவமான ஒரு துவக்கத்தைத் தந்திருக்கிறீர்கள். பாடல் வரிகளுக்கும், டெய்ஸி இராணி, சாவித்திரி நடிப்பின் விளக்கங்களுக்கும் நன்றி!

    பிற மொழிப் பாடல்களின் சேர்ப்பால் மதுரகானம் இன்னும் மயக்கும் கானம் ஆனது. ஏதோ ஒரு விளையாட்டாக ஆரம்பித்த இந்தத் திரி இவ்வளவு அசுர வளர்ச்சி பெரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் மது அண்ணா, ராஜ்ராஜ் சார், மற்றும் நீங்கள் போன்ற விவரங்கள் அறிந்த அருமை சீனியர் ஹப்பர்கள் இங்கு கலந்து கொண்டு சிறப்ப்பித்து வருவது நாங்களெல்லாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளக் கூடிய பெருமைக்குரிய விஷயம். அதே போலத்தான் இங்கு பதிவிடும் அனைத்து நல்லுள்ளங்களும்.

    மதுர கானங்களில் இப்போது முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது இரட்டை சந்தோஷத்தை தருகிறது. தங்களின் பதிவுகள் இந்த திரிக்கு பதிக்கப்படும் இன்னொரு வைரக்கல்.

    அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் மீண்டும்.

    இதோ 1960-ல் வெளிவந்த 'புதிய பாதை' படத்தில் பாலாஜி தபேலாவிலும் காபி கப் அண்ட் சாஸரிலும் இசை தர, சாவித்திரி அருமையாக புல்லாங்குழல் ஊத, அழகு டெய்ஸி இராணி அந்த இசைக்கேற்ப அற்புத நடனமாட (பாடல் இல்லாமல்) ஒரு சில விநாடிக் காட்சிகளே என்றாலும் மனதை கொள்ளை கொள்ளும் புல்லாங்குழல் இசை, நடனம்.

    Last edited by vasudevan31355; 9th October 2014 at 06:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #7
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வருக வருக என்று 3 ஆம் பாகத்திற்கு பொருத்தமான அதுவும் திரி தொடங்கிய ராஜேஷ்ஜியின் உள்ளம் கொள்ளை கொண்ட, எங்களது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட, சுசீலா அம்மவின் பனித்திரை பாடல் தந்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்த மது அண்ணாவுக்கு நன்றி!

    அதே போல 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' ஆனந்தப் பாடலை தந்து மகிழச் செய்ததற்கும் நன்றி!
    Last edited by vasudevan31355; 9th October 2014 at 06:45 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #8
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி, காலை வணக்கங்கள். வாழ்த்துக்கு நன்றி
    மதுண்ண, எஸ்.வி இருவருக்கும் நன்றி

  15. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ராஜேஷ்ஜீ,
    அமர்க்களமாக இசையரசியின் இனிமையான பாடலுடன் மூன்றாம் பாகத்தைத் துவக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.. எக்காலத்திலும் சூப்பர் ஹிட் பாடல் தந்தை யாரோ...
    எல்லோருடைய ஆதரவுடனும் வாழ்த்துக்களுடனும் இத்திரியும் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை.

    நேற்று கிரகணம் முடிந்து நிலா விரிவடைந்ததை யார் பார்த்தார்களோ இல்லையோ தெரியவில்லை. எனவே விரிந்து வருகின்ற வெண்ணிலாவை எல்லோரும் பார்ப்போமா..

    பால நாகம்மா படத்திலிருந்து டி.வி.ராஜு இசையில் கண்டசாலா ஜிக்கி குரல்களில் சூப்பர் ஹிட் பாடல்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #10
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ராகவ் ஜி, நன்றி

    விரிசிந்தி விந்த ஹாயி பாடல் தான் விரிகின்ற வெண்ணிலவே ஆனது


  18. Thanks Russellrqe thanked for this post
    Likes Russellrqe liked this post
Page 1 of 397 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •