Page 11 of 397 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #101
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நண்பர் வாசுவே

    உறுதியாக பார்கிறேன்
    என்னை ஜீகே என்றே அழைக்கலாம் .நானும் 'உசுவா' போல் நண்பா வாசு (புத்த பிச்சு ) என்றே அழைக்கிறேன் . சிலர் பிரிய வாசு என்பார்கள்
    'பிச்சுவாப் ப(போ)க்கிரி'யின் பிரிய வாசு. யாருக்கு எப்படியோ எனக்கு மிக மிகப் பிடித்த 'விஸ்வம்' அவர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #102
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அதே போல் இன்னொரு வெளியாகாத தமிழ் படம்
    gkrishna

  4. #103
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி

    இதோ ராட்சசி கலக்கும் ஒரு பாடல்
    ராஜேஷ்ஜி!

    குட்டி ராஜியுடன் குமாரி வாணிஸ்ரீ பாடும் பாடல். என் பாடகி பின்னி எடுப்பார். ஆஹா! என்ன குரலப்பா அது! அப்படியே உயிரை அலாக்காக தூக்கிக் கொண்டு போகுதே!

    இந்தப் பாடலுக்கு நன்றியாக உங்களை கோபாலுக்கு நேரிடையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #104
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    கேரளா திரைபடத்தின் மிக சிறந்த ஒளிபதிவாளர்களில் ஒருவர் திரு ராமச்சந்திர பாபு.திரைப்பட கல்லூரியில் படித்து பின் நிறைய மலையாள படங்களுக்கும் தமிழில் i v சசி இயக்கிய பகலில் ஒரு இரவு படத்திற்கு இவர்தான் ஒளிபதிவாளர் என்று நினைவு . யாரவது உறுதி செய்யவும் இப்படத்தின் இயக்குனர் திரு ஜெயகுமார் தான் ஆனந்த பாபு நடித்த பாடும் வானம் பாடி படத்தின் இயக்குனர் . பின்னாளில் வீடு மனை வாங்க விற்க என்கிட்டே வாங்க என்று வீட்டு தரகர் வேலைக்கு போய் விட்டார்
    Last edited by gkrishna; 10th October 2014 at 10:58 AM.
    gkrishna

  6. #105
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முக்கியமாக ஒன்றை மறந்து விட்டேன். மது அண்ணா ஒரு அற்புத பாடலை அளித்திருந்தார். எனக்கு ரொம்ப விருப்பமான பாடல் கூட.

    //மனோரமா கதா நாயகியாக நடித்த "கொஞ்சும் குமரி" படத்தில் அந்தக் கால ஜேசுதாஸ் வசந்தா டூயட்
    "ஆசை வந்த பின்னே"வில் நடித்தவர் இந்திராதேவி. கண்டுகொண்டேன்...//

    வசந்தாவின் வசீகரக் குரல். ஜேசுதாசின் ஆரம்பகால இளமை இனிமைக் குரல். சமீபத்திய திரியின் பிரபலம் இந்திராதேவி. அருமையான மயக்கும் இசை.

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மது அண்ணா.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes madhu liked this post
  8. #106
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஹதிம்தாய்' ஹிந்திப் படத்தில் மனதை மயக்கும் ஒரு பாட்டு.

    'Jhoomti Hai Nazar Jhoomta Hai Pyar'



    ரபி,ஆஷா பாடியது. கிழ ஜெயராஜ் தேவதையாக வரும் ஷகீலாவுடன் பாடுவது. இசை எஸ்.என்.திரிபதி. வண்ணப்படம். மாயா தந்திரக் காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்ற படம்.







    இதே படம் தமிழில் டப் செய்யப்பட்டு 1956 இல் 'மாய மோகினி' அல்லது 'ஹதீம்தாய்' என்ற பெயரில் வெளிவந்ததாம்.

    'வான்மதி ஆகியே நாம் உலாவலாம்'

    வழக்கமாக ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் குரல் தந்திருப்பார்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #107
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #108
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #109
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நினைவு ஊட்டிய தமிழ் ஹிந்து நாள் இதழ்

    இன்று அன்று | 1964 அக்டோபர் 10: அகால மரணமடைந்தார் குரு தத்

    குரு தத். இந்தியத் திரையுலகில் மறக்க முடியாத பெயர். ஜால், பியாஸா, காகஸ் கி பூல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்.

    பெங்களூரில் பிறந்த குரு தத், இளம் வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது ஈடுபாடு காட்டினார். அவரது இயற்பெயர் வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. கொல்கத்தாவில் வளர்ந்த அவர், வங்கக் கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டார். தனது பெயரையும் குரு தத் என்று மாற்றிக்கொண்டார்.

    இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் உதய்சங்கர் அல்மோராவில் நடத்திவந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நிகழ்த்துக் கலை பயின்றார் குரு தத். 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் போன்ற நடிகர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையே ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற பியாஸா திரைப்படத்தின் கதையை எழுதினார்.

    1951-ல் தேவ் ஆனந்த் நடித்த பாஸி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களில் நடித்தும், படங்களை இயக்கியும் புகழ்பெற்றார். சொந்த வாழ்வில் பல துன்பங்களால் அவதியுற்ற அவர், 1964-ல் இதே நாளில் தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற் கொலை இல்லை என்றும் மதுபானத்துடன் அதிமான தூக்க மாத்திரைகளை விழுங்கிய தால் மரணமடைந்தார் என்றும் சொல்லப் படுகிறது.
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #110
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தமிழ் ஹிந்து நாள் இதழ்

    தொழில்நுட்பம்: மசாலா அரைத்த எலும்புக்கூடு!



    தெலுங்கில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1978-ல் வெளியானது விட்டலாச்சார்யா இயக்கிய ஜெகன் மோகினி. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியில் அதன் விஷுவல் எஃபெக்ட் உத்திகளுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. தொழில்நுட்பம் வளராத எண்பதுகளின் தொடக்கத்தில் பாலிவுட்டில்கூட யாரும் யோசித்துப் பார்க்க முடியாத பல உத்திகளைப் பயன்படுத்தினார் விட்டலாச்சார்யா.

    விட்டலாச்சார்யாவின் படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றதால், என்.டி.ஆர் அளவுக்குத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் ஜெகன்மோகினி படத்தின் நாயகனான நரசிம்ஹ ராஜூ.

    விட்டலாச்சார்யாவின் பல படங்களில் மோகினியின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் இளவரசனாகவும், மன்னனாகவும் நடித்திருப்பார். ஜெகன் மோகினிப் பேயின் அழகில் மயங்கி, அதைத் திருமணம் செய்துகொள்வதும், அதனோடு வாழ்வதும், பிறகு மனைவி வந்து அம்மனிடம் வேண்டி, பாம்பு, குரங்கு, யானை, ஆடு உதவியுடன் மோகினியை விரட்டி கணவனை மீட்பதுமாக செம ரகளையாக இருக்கும்.

    ஜெகன்மோகினி என்றில்லை, விட்டலாச்சார்யா இயக்கிய மாயா ஜாலப் படங்களில் பேய் உருவத்தில் நடிப்பவர்கள் அணியும் விதமாகத் தலைமுதல் கால்வரை ஒரே உடையாக இருக்கும்படி வெள்ளை நிறத்தில் ஒரு உடையைத் தயார் செய்தார். இந்தப் பேய் உடைக்கு மண்டையோடு போன்ற முகமுடியும், செம்பட்டை நிறத்தில் நீண்ட தலைமுடியும் என்று பேய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைக்கும் தோற்றம் அது.

    அந்தப் பேய் உருவம் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துக்கொண்டே பயந்து ரசித்த காலம் அது. விட்டலாச்சார்யாவின் வெள்ளைப் பேய்கள் தங்கள் கால்களை எரியும் அடுப்பில் வைத்து விறகாக்கிப் பலகாரம் சுடுவதும், பிறகு அவை ஆடாகவும், கோழியாகவும், பெண்ணாகவும் சட்டென்று மாறுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத விஷுவல் எஃபெக்டுகள். அழகிய பெண்ணாக இருக்கும் உருவம் அடுத்த நொடி வெள்ளைப் பேயாக மாறும் ஆச்சரியம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.

    இதைவிட அதிகம் ரசிக்கப் பட்டது எலும்புக் கூடுகளின் அட்டகாசம்! குழம்புக்கு அம்மிக்கல்லில் மசாலா அரைக்கும் எலும்புக் கூடு, திருமண மண்டபத்தில்

    தவிலும் நாதஸ்வரமும் வாசிக்கும் எலும்புக்கூடுகள் என்று மிரட்டிய விட்டலாச்சார்யா, எலும்புக்கூடுகளை இயக்கத் திறமையான பொம்மலாட்டக் கலைஞர்களைக் கொண்டு, நூல் கட்டி அவற்றை அசைத்துப் படமாக்கியுள்ளார். இதற்காகப் படப்பிடிப்புத் தளத்தின் பின்னணியில் பூசப்பட்டிருக்கும் நிறம் எலும்புக்கூடுகளை இயக்கும் நூலுக்கும் பூசப்பட்டது.

    பாத்திரம் வைக்கப்பட்டு எரியும் அடுப்பைத் தனியாகவும், பிறகு பேய் வேடம் போட்டவரை எரியாத அடுப்பில் கால்களை வைக்கச் சொல்லி தனியாகவும் படம்பிடித்து இரண்டையும் ஆப்டிகல் முறையில் பிலிம் லேப்பில் இணைத்துவிடுவார்கள்.

    ஒரு ஷாட்டை மாஸ்க் செய்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை படம்பிடிக்க கேமராவிலேயே வசதியிருக்கிறது. இரு வெவ்வேறு படச்சுருள்களை இணைத்துத் தேவையான விளைவை, ஒரு புதிய படச்சுருளில் மறு ஒளிப்பதிவு செய்வது விட்டலாச்சார்யா அதிகம் பயன்படுத்திக்கொண்ட ஆப்டிகல் எஃபெக்ட் முறை.

    படத்தின் மேல் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களை டைட்டில் கார்டாகப் போடுவதிலிருந்து, காட்சி மாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும், அதாவது ஒரு காட்சி மெல்ல மெல்ல மறைந்து மற்றொரு காட்சி தோன்றும் டிஸ்சால்வ் (Dissolve), ஒரு காட்சி

    முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதை உணர்த்தும் உத்தியான (Fade Out.- Fade In ), கனவின் அரூப நிலையைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தவும், ஆவிகள் நடமாடுவது போலவோ, வானில் மேகத்தில் ஆவிகள் தவழ்ந்துசெல்வதுபோலவோ காட்டவும் உதவும் சூப்பர் இம்போஸ் (super impose) வரையில் ஒரு படக்காட்சியின் மேல் இன்னொன்று தெரிவதுபோலச் செய்வது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்தான். இன்று எல்லாம் சாத்தியமாகிவிட்ட சினிமாவில் அசரவைத்த முதல் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எதுவென்று அடுத்த வாரம் பார்க்கலாமா?
    gkrishna

  15. Likes Russellmai liked this post
Page 11 of 397 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •