Page 173 of 397 FirstFirst ... 73123163171172173174175183223273 ... LastLast
Results 1,721 to 1,730 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1721
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்றைய தமிழ் ஹிந்து நாள் இதழில் திரு கிரேசி மோகன் அவர்கள் நகைச்சுவை நாராயணன் என்ற தலைப்பில் நாகேஷ் அவர்கள் பற்றி

    சி.பத்மாவதி, நாகப்பட்டினம்.

    நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா?

    நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் நாகேஷ்.

    சார்... சீஸர்னு பேர் வெச்சு ஒரு நாய் வளர்த்தேன், செத்துடுச்சு சார் என்று ஒருவர் ஏதோ ஒரு படத்தில் இன்னொருவரிடம் சொல்லுபோது, புயலாக உள்ளே நுழையும் நாகேஷ் ஏன்யா... நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியோ? என்று கேட்டுவிட்டு, பதில் எதிர்பாராமல் வீட்டுக்குள் நுழைவார். இவரது டயலாக் டெலிவரி எப்போதுமே சுகப்பிரவசம்தான்.

    ஆயகலைகள் அறுபத்து நாலுக்குச் சொந்தக்காரியான சரஸ்வதிதேவியின் மோனோலிஸாசிரிப்புக்கே காரணம் நாகேஷ் அடித்த ஜோக்காகத்தான் இருக்கும். நான் வேடிக்கை பார்த்து வியந்த நாகேஷுக்கு வசனம் எழுதும் பாக்கியம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் தொடங்கி, மைக்கேல் மதன காமராஜன் வழியாக பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் வரை தொடர்ந்தது.

    அபூர்வ சகோதரர்கள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டம்மி புலி இல்லாமல் நிஜ புலியை ஜிம்மி போலவே பாவித்து, அதனுடன் சேர்ந்து நடித்தார். நாங்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் அமரர் விக்ரம் தர்மா தடுத்தபோது பேச்சாளன் மேடையில சாகணும். ஃபுட் பால் பிளேயர் கோல் போஸ்ட்ல சாகணும். நடிகன் ஷூட்டிங் ஸ்பாட்ல சாகணும். அதான் வீர மரணம் என்றார்.

    மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடிக்கும் போது, என்னிடம் தொடர்ந்து கிரேசி எனக்கு ஒரு வசனம் கூட கிடையாதா? என்று தொண தொணவென்று கேட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் அவருடைய நகைச்சுவை குறும்பு புரிந்து படக்குழுவே வாய்விட்டுச் சிரித்தது.

    அதே படத்தில் விறைத்த பிணம் படால் என்று கீழே விழும் காட்சிக்காக, விக்ரம் தர்மா ஒரு பிணத்தைப் போன்ற டம்மி செய்து வைத்தார். ஆனால், அந்த டம்மியை டம்மியாக்கி ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, தானே சரளைக் கல் நிரம்பிய தரையில் சாஷ்டாங்கமாக அதுவும் பின் பக்கமாக விழுந்து தத்ரூபமாக நடித்தார் நாகேஷ். இப்போது நினைத்தால் கண்ணில் நீர் முட்ட வைக்கிறது. இவரைப் போல் டைமிங் டெலிவரி வரவேண்டும் என்ற நப்பாசையில்தான் எனது நாடக ஹீரோ பாலாஜிக்கு, எதிர் நீச்சல் திரைப்பட கதாநாயகன் பெயரான மாது பெயரை வைத்தேன்.

    எனது நாடகத்துக்கு வந்து சைடிங்கில் நின்ற படி டயலாக் எப்படி சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அந்த மேதை. நாலு வரி என்ன நாலாயிரம் வரிகள் சொல்ல வேண்டிய திவ்யப் பிரபந்த நகைச்சுவை நாராயணன் நாகேஷ்!

    நாகேஷ் மறைந்த அன்று கிரேசி எழுதிய அஞ்சலி வெண்பா:

    காமெடியை இங்கினி காத்திட யாரென்றால்
    நோபடி என்றாச்சே நாகேஷின் டேமுடிஞ்சு
    போச்சே நகைச்சுவை பூலோகம் விட்டுவான்
    போச்சு அதுசொர்க்கம் ஆச்சு.


    அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்பில் நாகேஷுடன் கிரேசி மோகன்
    gkrishna

  2. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1722
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 23)



    இன்று ராஜா தொடரில் 'காற்றினிலே வரும் கீதம்' (1978) ஒலிக்கப் போகிறது.



    முதலில் இப்படத்தைப் பற்றி சில விஷயங்களைச் சொல்லி விடுகிறேனே.

    விஜயபாஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப் படம் இது.

    'ஓ.. மஞ்சு' படத்தில் ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய கவிதா சும்மா மப்பும் மந்தாரமுமாக, கொத்தும் குலையுமாக இளமை விருந்து படைத்து இளைஞர்கள் தூக்கத்தைக் கெடுத்த படம் அளவான கவர்ச்சியோடு.



    முத்துராமனுக்கு கவிதா ஜோடி. முதன் முறையாக என்று நினைக்கிறேன்.

    ஸ்ரீகாந்த், தேங்காய், அசோகன், எம்.என்.ராஜம், கோபாலகிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

    எடிட்டிங் ஆர். விட்டல். ஒளிப்பதிவு கண்ணான பாபு. கதை, வசனம் பாடல்கள் பஞ்சு அருணாச்சலம்.

    இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.


    நிஜமாகவே நல்ல படம். கொஞ்சம் வித்தியாசம் கூட. கதை சற்றே வித்தியாசத்துடன் அளவான மசாலா தூவப்பட்டு, நல்ல நடிகர்களால் மெருகேற்றப்பட்டு, எல்லாவற்றுக்கும் மேல் காலம் அழிக்க முடியாத மிகச் சிறந்த பாடல்களையும், பின்னணி இசைக் கோர்ப்புகளையும் தொடரின் நாயகர் மூலம் வழங்கப்பட்டு இன்றும் பார்ப்பதற்கு இன்ட்ரெஸ்ட் ஆக இருக்கும்படி எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

    இப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை நேற்று முழுதுமாகப் பார்த்தேன். எனக்கென்னவோ ரொம்ப நன்றாகவே இருந்தது. போரடிக்கவில்லை.

    நல்ல பாடல்கள், நல்ல கதை, நல்ல நடிக நடிகையர்கள், ஒளிப்பதிவு அம்சம், அருமையான வெளிப்புறக் காட்சிகள், பிரம்மாண்டம் தெரியும் ஃபிரேம்கள், கண்ணுக்குக் களிப்பூட்டும் வண்ணம், ஜோரான சண்டைக் காட்சிகள், கர்ணன் பட ரேஞ்சுக்கு குதிரைத் துரத்தல்கள் (கதைக்கேற்றவாறு) விறுவிறு டைரெக்ஷன் என்று ஜோர் படம்தான்.

    முத்துராமனுக்கு பிரேக் தந்த படம்.

    சரி கதைதான் என்ன? 'மறந்து போச்சே! கொஞ்சம் நீதான் சொல்லேன்' என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது.


    கதை (Full Meals)


    மிகப் பெரிய பணக்கார எஸ்டேட்டுக்கு சொந்தக்காரர் மோகன் (முத்துராமன்). அம்மா எம்.என்.ராஜம். பட ஆரம்பத்தில் மோகன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண் ரோடில் நிலைகுலைந்து பரிதாபமாக ஓடிவர, அதே சமயம் காற்றிலே ஒரு கானம் மிதந்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மோகனை தூக்கத்தில் மெய்மறந்து எழுந்து நடக்கச் செய்ய, அந்தப் பெண் மீது கத்திக்குத்து விழுந்து அவள் சாகவும், மோகன் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து அந்தக் கத்தியை எடுக்கவும் சரியாய் இருக்க, போலீஸ் முத்துவை சந்தேகப்படுகிறது.

    விசாரணை செய்ய கீதா (கவிதா) என்ற சாமர்த்திய துப்பறியும் நிபுணி அனுப்பப்படுகிறாள். அவள் மோகனையும், நண்பன் சந்திரனையும் (தேங்காய் ஸ்ரீனிவாசன்) கண்காணிக்க, அவளை எதிர்பாராமல் பார்க்கும் மோகன் அதிர்ச்சியடைகிறார். ஏனென்றால் அந்த கீதா ஏற்கனவே மோகன் காதலித்த பெண் போலவே உருவத்தில் அப்படியே அச்சு அசலாக இருப்பதால்.

    சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் மோகன்தான் கொலையாளியாக இருக்குமோ என்று சந்தகம் கொள்ள வைக்க, போலீஸ் மோகனை அரெஸ்ட் செய்து விசாரிக்கிறது.

    அப்போது மோகன் போலீசிடம் தன்னுடைய பிளாஷ்-பேக் கதையை சொல்கிறார். அதாவது இரண்டு பிளாஷ்-பேக் கதைகள்.



    முதலாவது பிளாஷ்-பேக்

    மோகன் ஓய்வுக்காக ஹில் ஸ்டேஷனில் உள்ள தன் எஸ்டேட்டுக்கு செல்லும் போது அங்கு அடிக்கடி காற்றில் ஒரு இனிய கீதம்... அதுவும் பெண் குரல்... அதுவும் ஜானகி குரல்... மலைகளின் நடுவே ஒலிப்பதைக் கேட்கிறார். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டு பிடிக்கறார். மலை ஜாதிப் பெண்ணான காமினி (கவிதா) என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணை மனதார விரும்புகிறார். காமினி வேற யாருமில்லை. மோகன் எஸ்டேட்டில் வேலை செய்யும் வீரண்ணா (அசோகன்) மகள்தான் காமினி. அவளும் மோகனைக் காதலிக்க, இந்தக் காதலுக்கு வீரண்ணா பலத்த எதிர்ப்பு. வீரண்ணா வேறு ஒருவனுக்கு காமினியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய, மோகனும், காமினியும் எதிர்ப்புகளை எதிர்த்து ஜீப்பில் தப்பித்து ஓட, பின்னால் குதிரைகளில் துரத்துகிறார்கள் வீரண்ணாவும், அவன் ஆட்களும். அசோகன் மகள் காமினியை ஆத்திரத்தில் கத்தியை வீசிக் கொன்று விடுகிறார். தானும் இறந்து விடுகிறார்.

    அதிர்ச்சியடையும் மோகன் காமினி பாடிய பாடலை அடிக்கடி கேட்பது போல் நினைத்துக் கொண்டே அவள் நினைவாகவே வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் நடைபிணமாக.



    இரண்டாவது பிளாஷ்-பேக்

    பின் தாயின் தொந்தரவால் ஒரு மாற்றத்துக்காக வேண்டி வெளியிடங்களுக்கு சென்று வர முடிவு செய்து புறப்பட்டு கேரளா செல்கிறார் மோகன். அங்கு அவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சி. அங்கு வெயிட்டராக பணிபுரியும் ரோஸி என்ற பெண்ணை (இதுவும் கவிதா... கிறிஸ்டியன் கவிதா) பார்க்கும் மோகன் அப்படியே அவள் இறந்து போன தன் காதலி காமினி போலவே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவளையே ஃபாலோ செய்கிறான். ரோஸி ஜேம்ஸ் (ஸ்ரீகாந்த்) என்ற நண்பனோடு அடிக்கடி சுற்றுகிறாள். தன்னை மோகன் பின் தொடர்வதை பிடிக்காத ரோஸி மோகனை ஒருநாள் சந்தித்து நன்றாகத் திட்டி விடுகிறாள். ஆனால் மோகன் அவளிடம் தான் கெட்ட எண்ணத்தில் அவளை பின் தொடரவில்லை என்று அவன் காமினியைக் காதலித்த கதையைக் கூறி காமினி போலவே ரோஸி இருப்பதால்தான் மன ஆறுதலுக்காக அவளைப் பின் தொடர்ந்து வந்ததாகக் கூறுகிறான். தன் வீட்டுக்கு ரோஸியை அழைத்துச் சென்று இறந்து போன காமினியின் புகைப்படத்தையும் காண்பிக்கிறான். தன்னைப் போலவே காமினி இருந்ததைக் கண்டு ரோஸி திகைக்கிறாள். மோகன் காமினியின் நினைவாக இருப்பதையும், அவள் இறந்த பின்னும் அவள் மீது தீராக் காதல் கொண்டு அவளையே நினைத்து மனம் உருகுவதையும் உணர்ந்து கொண்ட ரோஸி கோபத்தை மறந்து மோகனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ரோஸியின் பெற்றோர் (மேஜர், சுகுமாரி) ரோஸியை சுதந்திரமாக வளர்த்ததால் அவள் இஷ்டப்படியே அவள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் ரோஸியின் காதலை நிராகரிக்கும் மோகன் முடிவில் ரோஸியை மணக்க சம்மதிக்கிறான்.

    ரோஸியைக் காதலிக்கும் ஜேம்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஆனால் ரோஸி 'ஜேம்ஸை காதலிக்க வில்லை... மோகனைத்தான் காதலிக்கிறேன்' என்று சொல்லி விடுகிறாள். முத்துவும் ரோஸிக்காக மனம் மாறி, மதம் மாறி அவளைக் கரம் பற்றுகிறான் கல்யாணக் கோலத்தில். ஆனால் விதி ஜேம்ஸ் வடிவத்தில் இங்கேயும் மோகனிடம் விளையாடுகிறது. ஆம். ஜேம்ஸ் ரோஸி தனக்குக் கிடைக்காததனால் ஆத்திரமுற்று ரோஸியை திருமணக் கோலத்திலேயே சர்ச்சுக்கு வெளியே சுட்டுக் கொன்று விடுகிறான்.

    முன்னால் காதலித்த காமினியையும் பறி கொடுத்து, இப்போது தன் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற வந்த ரோஸியையும் பறி கொடுத்த மோகன் பைத்தியம் போல் ஆகிறான். தன்னுடய ராசி இரண்டு பெண்களை சாகடித்து விட்டது என்று தன்னை ராசியில்லாதவன் என்று முத்திரை குத்திக் கொள்கிறான். நடை பிணமாக வாழ்கிறான்.

    இந்த இரண்டு கதைகளையும் முத்து போலீசிடம் சொல்வது மட்டுமல்லாமல் இரண்டு பெண்களின் போட்டோ ஆல்பத்தையும் காட்டி தான் கொலையாளி அல்ல என்று மோகன் நிரூபிக்கிறான். மோகன் வீட்டில் வேலை செய்த பெண்ணை கொலை செய்தது ஜஸ்டின் என்றும் போலிஸ் கண்டுபிடிக்கிறது. ஜஸ்டின் விபாச்சார விடுதியில் கொண்டு போய்த் தள்ளிவிட நினைத்து அந்த வேலைக்காரப் பெண்ணைத் துரத்த, அவள் தப்பி ஓட ஜஸ்டின் அவளைக் கத்தியால் குத்திவிட்டு ஓடி விடுகிறான். அந்தப் பழிதான் மோகன் மேல் விழுகிறது. மோகன் இப்போது நிரபராதி.



    இப்போது மூன்றாவது பிளாஷ்-பேக் இல்லாத நேரடிக் கதை.

    துப்பறியும் மங்கை கீதா மோகனின் இரண்டு கதைகளையும் கேட்டு மோகன் மேல் இரக்கம் கொண்டு அவரை காதலித்து மணந்து கொள்ள நினைக்கிறாள். ஆனால் மோகன் தன்னை யார் மணந்தாலும் அவர்கள் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது... அப்படிப்பட்ட ராசி உள்ள நான் உன்னை திருமணம் செய்ய முடியாது... நீயாவது நன்றாக வாழ வேண்டும் என்று கூறி மறுத்து விடுகிறார். ஆனால் கீதா பிடிவாதமாக முத்துவைக் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். இதனால் மனம் நொந்த மோகன் வெளிநாடு செல்ல முடிவெடுத்து கீதாவுக்குத் தெரியாமல் புறப்பட்டு விமானத்தில் உட்கார்ந்தால் கீதா விடாமல் துரத்தி வந்து விடுகிறாள். மோகன் அதிர்ச்சியுற்று இருக்க கீதா விடுவதாக இல்லை. மோகன் அவள் உயிருக்கு தன் ராசியால் ஏதாவது சோதனை வந்து விடுமே என்று கவலைப் படுகிறான். அவன் கவலைப் பட்டது போலவே அவருடைய மூன்றாவது காதலிக்கு மட்டுமல்ல... விமானத்தில் இருக்கும் அனைவரது உயிருக்கும் ஆபத்து எற்படுகிறது. ஆம். விமானம் பழுதடைந்து விட்டதாக விமானி கூற விமானம் நிலை தடுமாறுகிறது.

    நினைத்தபடியே சோதனை எற்பட்டு விட்டதே என்று மோகன் கீதாவைக் கடிந்து கொள்கிறான். கீதாவோ 'உங்கள் ஒருவர் ராசியினால் எல்லோரும் உயிர் இழக்க நேர்ந்தால் இங்கிருக்கும் ஒருவருக்குக் கூடவா நல்ல ராசி இல்லாமல் போய்விடும்?' என்று பதில் கூறுகிறாள் நம்பிக்கையோடு.

    அவள் நம்பிக்கை ஜெயித்ததா? விமானம் விழுந்து நொறுங்கியதா? வழக்கம் போல் மோகன் ராசியால் இந்த கீதாவும் உயிர் இழந்தாளா? விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன?



    இதுதான் 'காற்றினிலே வரும் கீதம்' படத்தின் கதை. இக்கதையை பலர் மறந்திருக்கலாம். அதை நினைவு படுத்தவே இந்த சிரத்தையான பதிவு.

    கவிதா... கவிதா... கவிதா... படம் முழுக்க கவிதாதான். அழகு மெழுகு சிலையாக வாளிப்பான வனப்பாக அழகிலும் , நடிப்பிலும் ஜொலிக்கிறார். அருமையான கராத்தே பைட் ஒன்றை ஜஸ்டினுடன் போடுகிறார். கவிதாவுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது இந்தப் படத்தின் மூலம்.

    காமினி, ரோஸி, கீதா என்று மூன்று வித்தியாசமான ரோல்களில் நம் மனதைக் கவர்ந்து விடுகிறார்.

    மலை ஜாதிப் பெண்ணாக 'காற்றினிலே வரும் கீதம்' பாடி மகிழ்விக்கிறார்.

    ரோஸி என்ற கிறிஸ்டின் பெண்ணாக சுதந்திரப் பறவையாக சிறகடிக்கிறார். நம் இதயத்திலும்தான்.

    கீதா என்ற துப்பறியும் புயலாக வந்து பின் முத்துவின் காதலியாக தென்றலாக மாறி மணம் வீசுகிறார்.

    முத்துராமன் படுபாந்தம். அற்புதமாக இந்த மோகன் ரோல் பொருந்துகிறது. பணக்காரத் தன்மை ஜோர். தன் ராசியை நினைத்து உருகுவது அருமை. 'ஒரு வானவில் போலே' டூயட் கலக்கல். முத்துராமன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    தேங்காய், அசோகன், மேஜர், சுகுமாரி, ஸ்ரீகாந்த், கோபாலகிருஷ்ணன் எல்லோருமே கனகச்சிதம்.

    'வானொலி' ஜெயம்கொண்டான் ஜஸ்டினின் அல்லக்கையாம் கிருஷ்ணா. சிரிப்பாக வரவில்லை? ஒய்.ஜி.மகேந்திரனும் சாஸ்திரத்திற்கு உண்டு.



    இப்படத்தின் அற்புதப் பாடல்களைப் பற்றி நாளை தொடருகிறேன்.

    'சித்திரச் செவ்வானம்' நாளை சிரிக்கும். அவசரம் வேண்டாம். அதுவரை பொறுமை.
    Last edited by vasudevan31355; 28th November 2014 at 09:04 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, kalnayak liked this post
  6. #1723
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,
    இப்படியா ஆர்வத்தைக் கிளப்பி தொங்கலில் விடுவது?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. #1724
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    காற்றினிலே வரும் கீதம் தமிழ் திரை படம் விகடன் விமர்சனம்

    முழு கதையும் படித்து விட்டேன் அன்பரே .... நண்பரே
    அது என்ன என் மனதில் பொல்லாத பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டீர்
    நாட்டி பாய் நாட்டி பாய் (man என்று சொல்லலாமா ?)

    திரை படம் கண் முன்னாலே ஓடி கொண்டு இருந்தது . உங்கள் முழு பதிவை படிக்கும் போது . மலை வாழ் பெண் கவிதா (நாடோடி ஜிப்சி உடையில் ),ரோஸ் கலர் பெல் பாட்டம் வைட் கலர் ஷர்ட் மேலே ரோஸ் கலர் கோட் மேல் நாட்டு பெண் கவிதா, துப்பறியும் அதிகாரி கவிதா
    அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள். ஸ்டில் இணையத்தில் தேடி கொண்டு இருக்கிறேன்

    'கண்டேன் இங்கு பூ மகள் ' கவுன்ட்டர் பாயிண்ட் அடிப்படையில் ரெகார்டிங் செய்யப்பட்ட பாடல் ஜானகி மற்றும் வாணி குரலில் இரண்டு முறை ஒலிக்கும் .

    ஒரு வானவில் போலே ஜெயச்சந்திரன் ஜானகி கலக்கல் குரல்

    சித்திர செவ்வானம் ஜெயச்சந்திரன் - காத்து கொண்டு இருக்கிறேன் நாளை ரசிக்க (கம்பர் ஜெயராமன் அந்த படகு ஓட்டுபவர் )



    கவிதாவே அசந்து போயிட்டார் உங்கள் .. உங்கள் வர்ணனை கண்டு
    gkrishna

  8. Likes Russellmai liked this post
  9. #1725
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vaasu

    இளையராஜா!! இசையில் உருவான சில படங்களில் அனைத்து பாடல்களும் கேட்க சலிக்காது. உதாரணத்துக்கு.
    முள்ளும் மலரும், பதினாறு வயதினிலே, நிறம் மாறாத பூக்கள், பகலில் ஒர் இரவு, காற்றினிலே வரும் கீதம், பொண்ணு ஊருக்கு புதுசு, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கன்னிப்பருவத்திலே, அன்னக்கிளி,கவிக்குயில், தர்மயுத்தம், இளமை ஊஞ்சலாடுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !!!

    மேற் கூறிய படங்கள் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட் வரிசை
    gkrishna

  10. #1726
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல் குட் ஆஃப்டர் நூன்

    சில விஷயங்க்ள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்ததால் காலையில் வர முடியவில்லை

    வாசு சார், ரவி சார், கிருஷ்ணாஜி, ராஜேஷ், கல் நாயக் சார், ராஜ் ராஜ் சார் அனைவருக்கும் நன்றி..

    எஸ்.வி சார். அழகிய பழைய புகைப்படங்கள்..டி.கே ஷண்முகம்.. ஒளவை டி.கே ஷண்முகம் தானே.. டி.கே பகவதியின் சகோதரர்.. நாடகக் காவலர் இல்லையா.

    வாசு சார்.. ஆஹா காற்றினிலே வரும்கீதம்.. வாவ் அழகு அழகு தொடருங்கள்.. மதுரை தங்கம் தியேட்டரில் குவைத்திலிருந்து வந்த ஒரு உறவினரைக் கூட்டிக் கொண்டு சென்று மாடியில் பார்த்த படம்.. வந்த உறவினர் – இரவுக் காட்சி என்பதால் – கொய்ங்க் என்று தூங்கிவிழ நான் கொட்டக் கொட்ட கண்கொட்டாமல்கவிதையின் அழகையும் முத்தின் பயமுறுத்தும் ஹேர்ஸ்டைலையும் இளையராஜாவின் பாடல்களையும் வியந்து முழித்துப் பார்த்த படம் நைஸ்..

    இனி சரவெடி போல ச் சில எழுதிப் பார்த்தேன். காலையிலிருந்து இப்போது வரை அவை உங்கள் பார்வைக்கு..

    அன்புடன்
    சி.க..

  11. #1727
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் - 1

    மாதா பிதா குரு தெய்வம்.. என்பதில் முதலில் மாதா..

    தன்னுள்ளே தானடக்கி தன்னுயிர்போல் பேணிவந்த
    அன்னையவள் போலுண்டா ஆம்..

    பிதா…
    நீண்டிருக்கும் வாழ்க்கை நிலைத்தே இருப்பதற்கு
    ஈன்றவர் செய்தாரே ஆம்..

    எனில் அடுத்து வருவது குரு.. அதற்குப் பின் தான் தெய்வமெல்லாம்.. குரு.. வழி நடத்துபவர்..கற்பிப்பவர்.. மொழியாகட்டும் தொழிலாகட்டும்.. கற்காமல் ஒரு மனிதன் மேல் வந்த்தில்லை..

    ஆரம்ப காலப் பள்ளியாசிரியர்கள் மேல் நிலைக் கல்வி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என நீள் வரிசை உண்டு எல்லாருக்கும்.. என்னைப் பொருத்தவரை இன்று வரை எல்லாரிடமும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன்.. தொலைபேசியிலோ நேரிலோ பேசும் போதுகூட குரு என்று தான் பேசுவேன்..பேசிக் கொண்டிருக்கிறேன்..

    வாழ்க்கை நெடும்பயணம்.. தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ் நாட்களில் தினமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்..

    பதினைந்து வருடங்களுக்கு முன் இதே மன்ற மையத்தில் வந்த போது.. தமிழ் கற்கக் கசக்கவா செய்கிறது கண்ணா வா எனப் பிடித்து எனக்குத் தமிழ்ப்பால் புகட்டிய மேலான ஆசிரியர்கள் பேரா. பசுபதி, சொல்லின் செல்வர் ஹரியண்ணா, பேரா. அனந்த், கலைமாமணி இலந்தை, நண்பர் அபுல் கலாம் ஆசாத். இன்னும் எண்ணிலா ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்..

    தங்கள் பதவி என்னவாகிலும் இருந்தாலும் அதை விட்டு எனக்குச் சொல்லிக் கொடுத்து திருத்திய அவர்களின் மனப்பாங்கு தான் என்னே.. (இன்னும் திருந்தவில்லை என்பது வேறு விஷயம்..) அவர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்..

    இந்தப் பாடல் நூற்றுக்கு நூறு படத்தில் வருவது.. ஆசிரியர் என்பவரும் மாணவராக இருந்து வந்தவர் தான்.. மாணவர்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு பெருக்கெடுக்கும் உற்சாகம் ஊற்றாய் ப் பெருகி வரும் பாடல் இது..

    கன்னை எடுத்தோமா
    கண்ணால் குறிபார்த்தோமா
    கன்னெனச் சுட்டோமா
    கண்ணழகு நாயகியருடன் பாடினோமா என்றிருந்த ஜெய்சங்கர்
    கண்கலங்க வைத்துவிடுவார்
    பார்ப்போரைத் தன் நடிப்பால்.. வித்தியாசமான படம்.. அழகிய பாடல்..


    உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்


  12. Likes kalnayak, Russellmai liked this post
  13. #1728
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் – 2

    கடலாய் விரிகின்ற கானகமாம் வாழ்க்கையிலே
    உடலுக்குத் தேவை உணவு..
    *
    அது ஒரு கனவைப் போலச் சென்ற காலம்..

    திருமணம் முடிந்து சிலவருடங்கள் ஆனபின்னர் கிடைத்த விடுமுறையில் இரண்டாவது தேனிலவெனச் சில நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தேன்..(முதலும் அங்கே தான்).. ரெஃப்ரஷிங்க் த மெமரீஸ்..

    அழகாய்த் தான் சிரித்திருந்தது இயற்கை..மனம் உடல் உள்ளம் எல்லாம் பூரித்து கொஞ்சம் இனிமையான ஓய்வு தான்..

    தங்கியிருந்த ஹோட்டலில் கொடைக்கானலில் பார்க்காத இடம் எது என்று கேட்டுப் பார்த்ததில் “ இங்கிருந்து சிலபல கிலோ மீட்டர்கள் மேலே மலைப்பாதையில் சென்றால் பூம்பாறை என்றொரு கிராமம் வரும்.. அதன் மேலே இன்னும் ஏறினீர்களெனில் மன்னவனூர் என இன்னொரு கிராமம் உண்டு.. என்ன அங்கு இன்னும் கரெண்ட் வசதி வரவில்லை ( அப்போது..அந்தக்காலத்தில்..இப்போது வந்திருக்குமா தெரியாது) அங்கு போய்விட்டு வேண்டுமானால் வாருங்கள்..தங்குவதானாலும் தங்குங்கள்” என்றனர்.. தங்குவதற்கு எங்கள் நிகழ்ச்சிகள் இடம் கொடுக்காததால் மினி வேன் ஒன்றை வைத்துக் கொண்டு ச்சலோ பூம்பாறை..

    அதைத் தாண்டி மன்னவனூர் செல்லும் போது வரும் வழியெல்லாம் இயற்கை மகளின் நாட்டியங்க்ள்.. சுற்றிலும் பச்சைப் பசேல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஸ்விட்சர் லாந்து மற்றும் சில பல வெளி நாடுகளில் எடுக்கப்பட்ட பாடல்காட்சிகளில் வரும் இடங்களுக்குச் சற்றும் குறைவில்லாத இடம்.. என் சிந்தனையைத் தெரிந்துகொண்டதாலோ என்னவோ டிரைவர்..”இந்த இடத்திலும் சில சினிமா ஷூட்டிங்குகள் நடந்திருக்கிறது என்றான்..(சொன்ன படங்கள் நினைவிலில்லை)

    மன்னவனூர் அடைந்தால் மறுபடியும் பச்சை.. சில பல பெண்கள் தலையில் துணி கட்டி ஏதோ ஒரு விவசாயம் பண்ணிக்கொண்டிருந்தனர்.. உற்றுப்பார்த்தால் பீன்ஸ், மற்றும் சில காய்கள்.. வேன் டிரைவர் அங்கே ஒரு பெண்ணிடம்..”கொஞ்சம் காய் கொடும்மா “ எனக் கேட்க அந்தப் பெண் சுறு சுறுவென பறித்துக் கொடுத்தாள் ஒரு ஒருகிலோ இருக்கும் பீன்ஸ் மற்றும் சில காய்கள்.. இந்தாம்மா என்று பத்து ரூபாய் எடுத்து என் மனைவி கொடுக்க ம்ஹூ ஹீம் வேண்டாங்க.. நீங்க எங்க விருந்தாளி..எனப்பிடிவாதமாய் மறுத்தாள்..

    என் மனைவி அவள் கரம்பிடித்து பணத்தை வைத்தவுடன் மனமில்லாமல் வாங்கிக் கொண்டவள் “கொஞ்சம் இருங்க” எனப் புள்ளி மானாய் த் தாவி மேட்டுப் பக்கம் ஓடி ஒரு வீட்டினுள் புகுந்தாள்.. நாங்கள் புரியாமல் பார்த்த படி நின்றிருக்க பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்த அவள் மலர்க்கரங்களில் பல மலர்கள்.. இல்லையில்லை..கொஞ்சம் உற்றுப்பார்த்தால் புற்கள் தான்.. வண்ணமேற்றப் பட்டு வெகு அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தன..

    “இந்தாங்கக்கா..வீட்டில வச்சுக்குங்க.. அழகாயிருக்கும்” எனக் கொடுத்து வெள்ளந்தியாய்ச் சிரித்தாள்.. நாங்கள் திகைத்து நெகிழ்ந்து நின்றோம்.. அவள் அன்பை நினைந்து..

    *

    ம்ம் விவசாயம் இல்லையெனில் உணவில்லை..விவசாயியின் வெள்ளந்தி மனம் மற்றவர்களுக்கு விரைவில் வருவதில்லை..

    விவசாயியின் புகழ்பரப்பும் ம.தி பாடலாகட்டும்., விவசாயம் செய்யச் சொல்லும் ந.தி பாடலாகட்டும் எவர்க்ரீன் பாடல்கள்..என்று நினைத்தாலும் பசுமை தான்..

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விவசாயி..

    http://www.youtube.com/watch?feature...&v=PgQky1Z8tKQ

    மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட
    உழுது போடு செல்லக்கண்ணு..

    http://www.youtube.com/watch?feature...&v=WQQwUqxBaFg

    *

  14. Likes kalnayak liked this post
  15. #1729
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    தொழில் பாட்டுக்கள் – 3

    மெல்லக் கரம்நீட்டி மேதினியில் கூடிவரும்
    அள்ளக் குறையா அழுக்கு..

    யெஸ்.. இந்த அழுக்கு என்பதை ஆராய்ந்தால் என்னவெல்லாம் தோன்றுகிறது.. உடல் அழுக்கு மன அழுக்கு, உடை அழுக்கு..

    உடல் அழுக்குக்கு தினமும் காலை மாலை இருவேளைகளிலும் அழகாய்ச் சமர்த்தாய் நீராடி (அஃப் கோர்ஸ் நம் உடலுக்கு ஒத்துக்கொள்கிற சோப்பினால் தேய்த்து) குளித்தால் உடல் அழுக்கு போய்விடும்..அட்லீஸ்ட் ஒருவேளையாவது குளிக்கத் தான் செய்கிறோம்..

    மன அழுக்கு… அதுபோக்கத் தான் ஆண்டவன் இருக்கிறானே..அப்படி நீராடி முடித்ததும் ஆண்டவா எலலாரையும் ரட்சி எனக் கண்மூடி வணங்கினால் தானாகவே மன அழுக்கு மறையும்..

    உடை அழுக்கு… கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது பழ மொழி.. (எனக்குத்தெரிந்த ஒரு பருவப் பெண் கந்தனென்றால் இறுக்கிக் கட்டு என்றாள்.. ஏய் தப்பான பழமொழி என்றால் இல்லை சார் கந்தன் என் லவ்வர் என்றாள்..ஷ்ஷ்.. சீரியஸா எழுதுகண்ணா..) இந்தக் காலத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன.. வாஷிங்மெஷின் என.. அந்தக்காலத்தில் கொல்லைப்புறத்தில் தோய்க்கும் கல்.. பின் குழாயடியில் பக்கெட்.. மின்னலடிக்கும் வெண்மைக்கென நீல நிற சர்ஃப் அதில் ஊறவைத்த துணிகள் பேண்ட் ஷர்ட்.. பின் இன்னொரு வாளியில் நீர் பிடித்து அந்தத்துணிகளை இவற்றில் அலச்சி கொஞ்சம்பிழிந்து காயவைத்து பின் அயர்ன் பண்ணக் கொடுத்திருக்கிறேன்..

    அந்தக் காலத்தில் வேஷ்டிகள் எல்லாம் துவைப்பதற்கு வண்ணானிடம் தான் தருவார்கள்..ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் விருப்பம் போல் துவைக்கும் வண்ணான்கள்..இப்போதுஅவர்கள் இருக்கிறார்களா தெரியாது..ட்ரை க்ளீனர்ஸ் என உண்டு..

    என் தந்தைக்கும் ஒரு ஆஸ்தான வண்ணான் உண்டு..பெயர் அழகு.. வெகு வயதானவர்..என் தந்தையை விட குறைந்தபட்சம் ஐந்து ஆறு வருடம் பெரியவர் என நினைக்கிறேன்.. கண்களில் மூக்குக் கண்ணாடி குள்ள உருவம்.. கொஞ்சம் கறுப்பு நிறத் தோல்.. சின்ன வயதில் (கல்லூரி) என்னுடைய கால்கள், பாதங்கள் (மட்டும்) கொஞ்சம் நீளம்.. எனில் செருப்புகள் எல்லாம் பெரிய சைஸ் தான் போட்டிருப்பேன்..(பதினொன்று)

    ஒரு நாள் அழகு வர அழுக்குக் கூடையிலிருந்து துணிகள் எடுத்து நான் போட்டுக்கொண்டிருக்கும் போது அவர் கண்கள் திண்ணை மூலையை நோக்கின.. நானும் பார்த்தேன்.. மூலையில் எனது பிய்ந்து போயிருந்தலெதர் செருப்பு பக்கத்தில் எனது புதிய இரண்டுமாதமே ஆன இன்னொரு செருப்பு..

    “சின்னச் சாமி” அப்படித் தான் அவர் என்னைக் கூப்பிடுவார்..”என்ன” இந்தப் பிஞ்ச செருப்பு தர்றீங்களா” “எதுக்கு அழகு” “எனக்குத்தான்.. என் செருப்பு கொஞ்சம் பிஞ்சுடுச்சு” பலமுறை தைக்கப் பட்டு நொந்து நூடுல்ஸாகியிருந்த டயர் செருப்பு அவர் கால்களில்..

    “அழகு..” என்றேன்..” இந்தா இந்தப் புதுசையே போட்டுக்குங்க. உங்க்ளுக்குப் பத்துமா பெரிசா இருக்காது” “வேண்டாம்” என்றார்.. பழசே கொடுங்க சின்னச்சாமி.. “ம்ஹூம் எனச் சொல்லி புதிய செருப்பைக் கொடுத்தே..கொஞ்சம்பெரிய சைஸ் தான் ஆனால் அவர் கால்களை விட்டு நழுவவில்லை.. கண்களில்கொஞ்சம் சிரிப்பு.. உங்களுக்கு… எனக்கு ஹவாய்ச்செருப்பு இருக்குங்க.. வேணும்னா பைசா தர்றேன்..புதுசே வாங்கிக்குங்களேன்.. “ம்ஹூம் வேணாம்” இதுவே போதும் எனச் சொல்லி தளர்ந்து சென்று விட்டார்..

    சூழ்நிலையில் ஒரு நாள் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது சுய நினைவு திரும்புவாரா மாட்டாரா என விரல் நகம் கடித்து நானிருந்த போழ்தில் ஒரே ஒரு நிமிடம் சுய நினைவுக்கு வந்தார் தந்தை.. “கண்ணா கடையை” “ நான் பார்த்துக்கறேம்ப்பா” (இப்போது கடை இல்லை) “ம்ம்.. “ என்றவரின் அடுத்த வார்த்தை தான் கடைசி வார்த்தை..” வண்ணான் அழகுவோட பணம்டா..லாக்கர்ல…. அவன் ட்ட கொடுத்துடு…” எனக் குழறலாகச் சொல்லி உறக்கத்துக்குச் சென்று சில மணி நேரங்களில் மீளா உறக்கத்திற்குச் சென்று விட்டார்..

    தந்தை பிரிந்த சில நாட்களில் அழகு வந்தார்.. விஷயம் தெரிந்து தான் வந்தார் என நினைக்கிறேன். கண்கள் முழுக்க கண்ணீர்.. சாமி இப்படி சுருக்க போவார்னு நினைக்கலியே… எனறு அழுகை நீண்டு விட்டு சாமி ஒங்க கிட்ட ஒண்ணு.. என ஆரம்பிக்க.. ஒரு நிமிஷம் என்று நான் உள்சென்றேன்..

    திரும்பி வந்து அழகுவிடம் கவரை நீட்டினேன்..”அழகு.. அப்பா லாக்கர்ல உங்கபேர் போட்டு இந்தக் கவர்ல வச்சிருந்தார்ப்பா..மேல ரெண்டாயிரமோ என்னவோ எழுதியிருந்தார்.. நான் எண்ணலை.கடைசியா அவர் என்கிட்ட சொன்னது இது தான்.. .சரியா இருக்கான்னுபாத்துக்குங்க..”.. அழகுவின் கண்களில் கண்ணீர்..”சாமி..பொண்ணு கல்யாணத்துக்காக நான் கொடுத்துவச்ச்ருந்தேன்.. வீட்ல இருந்தா புள்ள எடுத்துக்கிட்டுப் போய்டுவான்னு..இப்படி நல்ல மனசு கொண்ட சாமி போய்டுச்சே..” கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தான் புறப்பட்டான்.. அதன் பிறகு என்ன காரணமோ அல்லது தொழில் மந்தமோ அவர் வரவேயில்லை..சிலவருடங்களுக்குப் பிறகு தான் பக்கத்து வீட்டு வண்ணான் மூலமாக அவர் அப்பா இறந்து சில மாதத்திலேயே இறந்த்து தெரிய வந்தது..

    *

    ம்ம் அழுக்கைச் சுத்தம் செய்யும் வண்ணான் தொழில் திரையில்… ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணி நிறஞ்சுருக்கு.. திருவருட்செல்வர் படம்.. திருக்குறிப்புத் தொண்டராய் ந.தி.. மறக்க முடியாத பாடல்..

    http://www.youtube.com/watch?feature...&v=mYZSNEn4EJg

    **

  16. Likes kalnayak liked this post
  17. #1730
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    தொழில் பாட்டுக்கள் – 4

    முன்பொரு நாள் எழுதிப் பார்த்த கவிதை..

    கடைசி நாள் சம்பளம்
    மேஸ்திரி வாங்கக்
    கையசைத்தது வீடு….

    *
    குடியிருக்கும் இடம் என்பது எவ்வளவு முக்கியம் மனித வாழ்க்கையில்.. இறைவன் ஏதோ நமது உயிர் குடியிருக்க உடலென்ற வீடைக் கொடுத்து விட்டான்.. அந்த வீட்டிற்கும் தேவை இன்னொரு வீடு.. மனைவி மக்கள் குழந்தைகளுடன் இருப்பதெற்கென..

    நிலம் வாங்கியவர் ஒருவர்.. அந்த நிலத்தில் வீடு கட்டித்தர ஒப்புக்கொள்பவர் கண்ட்ராக்டர்.. அதைப் பார்த்துப் பார்த்துக் கட்டித் தருபவர் மேஸ்திரி.. இந்தக் கலவை இப்படிப் போடு, இப்படி ச் செங்கலை வை..இப்படிச் சாரம் கட்டு இந்தக் கம்பிகள் இப்படி இருக்க வேண்டும் டேய் மச மசச்ன்னு இருக்காதே..என அவ்வளவாகப் படித்திராத ஆனால் திறம்பட வேலைவாங்கும் மேஸ்திரிகள் நிறையப் பேர் இருக்கின்றனர்.. இன்ஃபேக்ட் அவர்களது மேற்பார்வை அண்ட் அனுபவம் கட்டடமோ வீடோ எழும்புவதற்கு உறுதியாக இருக்கிறது..

    மண் உறுதியாய் இருக்கிறதா என்று பார்ப்பதற்குப் பெயர் மனைப் பொருத்தம் என நினைக்கிறேன்..அதில் ஆரம்பித்து வீடு வளரவைத்து பின் அதற்கான மரவேலைகள் எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்கின்ற மேஸ்திரி வீடுகட்டி முடித்ததும் பார்க்க முடியுமோ.. ம்ஹும்.. கட்டி முடிக்கிறவரை தான் அவன் வேலை.. கட்டியபின் அது அதன் சொந்தக்காரரிடம் போய்விடுகிறது.. கட்டியதற்கு அவனுக்குக் கிடைத்த சம்பளம் தான் அவனுக்கானது..ஒரு வேளை இதனைத் தான் வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்கிறார்களோ.. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு முடிந்தபின் அவனால் சொந்தம் கொண்டாட முடியாது.. பார்த்துப் பார்த்து ஓவ்வொருபருவத்திலும் சிரித்து சிலிர்த்து வளர்த்த மகள் பருவத்தில் இன்னொருவனுக்கு மணமுடித்து வைத்தால் அவ்வளவு தான்..அவள் புகுந்த வீட்டிற்குச் சொந்தம்..தந்தையின் கண்களில் கண்ணீர் மட்டும் நினைவுகள் மட்டுமே மிச்சம்..

    ம்ம் எனில் என்ன சொல்ல வந்தேன் வீடு..இந்தப் பாடல் மேஸ்திரிக்கும் ஒருபெண்ணிற்கும் உண்டான காதலை கட்டடம் கட்டும்போது அழகாகச் சொல்கிறது.. ந.தி. பத்மினி தெய்வப் பிறவி.. வெகு அழகிய பாடல்..

    கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
    காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்..
    மட்ட சுத்தம் பார்த்து வீடு கட்ட வேணும்
    மாமியாரப்பார்த்து –பொண்ணக் கட்ட வேண்டும்

    குடையப் பிடிச்சு நடக்கிறாரு மேஸ்திரியாரு
    அவர் குறுகுறுத்த கண்களுக்கு அகப்பட்டதாரு..
    நடை பழகி சதிரு பண்ணும் தங்கத்தப் பாரு
    அதுக்கு நட்டு வாங்கம் போடுறாரு கண்ணால பாரு (குறும்பு வரிக்ள்)

    கடைக்காலைத் தோண்டுறப்போ கொத்தனாரு
    கடைக்கண்ணால் பார்ப்பதென்ன கொத்தனாரு
    அடையாளம் புரிஞ்சு போகும் தங்கபாப்பா
    அது ஆசை படுத்தும் பாடு தங்கப்பாப்பா (மீண்டும் குறும்பு)

    சாரத்துல நடக்குறப்போ கொத்தனாரு
    தங்கம் சதுரு பண்ணி நடப்பதென்ன கொத்தனாரு
    ஓரத்திலே அவ நடந்தா தங்கப் பாப்பா
    அவரு ஒடம்பெல்லாம் நடுங்குதுபார் தங்கப்பாப்பா
    மேஸ்திரி ஒடம்பெல்லாம் நடுங்குது பார் தங்கப்பாப்பா

    கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்..காதலுக்கு
    மனப்பொருத்தம் அவசியம்..ம்ம் அவசியமாய் மனதில் தங்கிவிட்ட பாடல்..

    http://www.youtube.com/watch?list=PL...yer_detailpage

  18. Likes kalnayak, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •