Page 237 of 397 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2361
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..
    படம் கேக்கிறதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா? சின்னப் புள்ளைங்கல்லாம் பார்க்கக் கூடாது. கேக்கவும் கூடாது. ம்ஹூம். நிறய இருக்கு. ஆனாக்கா போட மாட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes kalnayak, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2362
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினி அதிபராக இருந்த மறைந்த மேதை திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வரும், விகடன் குழுமங்களின் தலைவரும், புரட்சித் தலைவர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து தயாரித்ததோடு அப்படத்தை இயக்கியவரும், பன்முக ஆற்றலாளருமான மரியாதைக்குரிய திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு எனது இரங்கலையும், அவரது மறைவால் வாடும் அவரது நெருங்கிய உறவினரான நண்பர் திரு.கோபாலுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #2363
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சமநிலை பெற வேண்டும்


    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    திரு.கிருஷ்ணா சார், எங்கே ரொம்ப நாளா பார்க்க முடியல?

    திரு.வாசு சார்,

    உங்களது முள்ளும் மலரும் ஆய்வு அற்புதம். நான் இந்தப் படத்தை ரிலீஸ் ஆனபோது ஒருமுறை பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டதைப் போல,....

    "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட கூட காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பையன் சார் அவன்"...என்று தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசி 'வேலை இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம்?' என ஒரு கணம் தடுமாறி, விட்டத்தைப் பார்த்து கண்கள் கலங்கிய நிலையில் வெதும்புவதில் ரஜினி கொடி கட்டுகிறார்.’’

    ........ உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் தன்மானமுள்ள தொழிலாளி உள்ளுக்குள்ளே கலங்கினாலும் வெளியே அப்படித்தான் சார் விட்டுக் கொடுக்காமல் பேசுவான். அப்படிப்பட்ட தொழிலாளியின் எண்ண ஓட்டத்தை பிரமாதமாக விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் நினைவாற்றல். பாராட்டுக்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சி, நாளிதழில் நான் படித்த செய்தியையும் அதையொட்டிய, அகத்தியர் திரைப்படத்தில் வெளியான பாடலையும் நினைவுபடுத்தியது.

    இசைப் பேரறிஞர் சீர்காழி திரு.கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘உலகம் சமநிலை பெற வேண்டும்...’ பாடல்தான் அது. அந்தப் பாடலைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திரு.கோவிந்தராஜன் அவர்களின் வித்தியாசமான கணீர் குரலும் எனக்குப் பிடிக்கும். அகத்தியர் வேடம் அவருக்கு பொருந்திய மாதிரி யாருக்கும் பொருந்தாது. வேடத்துக்கேற்ற அவரது உடல் வாகு கன கச்சிதம். நாளிதழில் நான் படித்த செய்தி என்றேனே, முதலில் அதைச் சொல்கிறேன்.

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் (foxconn) தொழிற்சாலை இன்று முதல் தனது உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அதாவது அதன் ஒரு பிரிவு மூடப்படுகிறது. 1,700 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டபோது 8,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். (இங்கே ஒரு விஷயம். காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வந்த நோக்கியா ஆலையில் 2 ஆண்டுக்கு முன் பெண் தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கினார். இயந்திரத்தை உடைத்தால்தான் அவரை மீட்க முடியும். ஆனால், பல லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தை மேலிடத்தின் அனுமதி இல்லாமல் உடைக்க முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டதால் பலர் முன்னிலையில் அந்த பெண் துடிதுடித்து இறந்தார். இயந்திரத்துக்கு உள்ள மதிப்பு மனித உயிருக்கு இல்லை.)

    நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் ஆர்டர்கள் வரவில்லை என்று கூறி தொழிற்சாலையை மூடுவதாக பாக்ஸ்கான் கூறுகிறது. ஆனாலும், தொடர்ந்து சீமென்ஸ், சோனி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது பாக்ஸ்கான். 500 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பட்டியலில் 30வது இடத்தில் இருக்கிறது பாக்ஸ்கான். 1,700 தொழிலாளர்களை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்வது அந்நிறுவனத்துக்கு ஒன்றும் பெரிதல்ல. இத்தனைக்கும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (special economic zone) அமைக்கப்பெற்ற பாக்ஸ்கான், அரசின் வரிச்சலுகை, மலிவு விலையில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் ஆகியவற்றை அரசிடம் இருந்து பெற்று கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது.

    தொழிற்சாலை அமைப்பதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்போது விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலையில் நிலமும் அரசால் கையகப்படுத்தப்பட்டு பகாசுர நிறுவனங்களிடம் வழங்கப்படுகிறது.(அம்பானிகளும், அதானிகளும், டாடாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் என்ன செய்வார்கள்? பாவம், அவர்கள் ஏழைகள்) நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களின் மூடலால் இவை எல்லாமே அர்த்தமற்று போகிறதே? இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால் அரசுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம்.

    முள்ளும் மலரும் காளியாவது கை போனதால் வேலை இழந்தான். ஆனால், கையிருக்கும்போதே வேலை இழந்த தொழிலாளர்கள் செய்வதறியாது கண் கலங்கி நிற்கின்றனர். என்றாலும் தன்மானத்தோடு போராடி வருகின்றனர். இந்த செய்தியையும் போராடும் தொழிலாளர்களின் நிலையையும் நினைத்தபோது எனக்கு அகத்தியர் படத்தில் வரும் இந்தப் பாடல்தான் தோன்றியது.

    கதைப்படி, சிவபெருமான் கல்யாணக் காட்சியைக் காண ஒரு பகுதியில் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் திரண்டதால் அந்தப் பகுதி சரிந்து விடுகிறது. பூமியை சமப்படுத்த குறுமுனி அகத்தியரை சிவபெருமான் அனுப்பி வைக்கிறார். அப்போது, அகத்தியர் பாடுவதுதான் இப்பாடல்.

    எனக்கென்னவோ, இந்தப் பாடலை எழுதிய திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள் உலகில் மக்களிடம் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், இமயம் குமரிக்கிடையே நிலவும் வேறுபாடுகள், சமயச் சண்டைகள், மனிதனின் திருப்தியில்லா பேராசை, நேர்மையின்மை போன்றவற்றை மனதில் கொண்டு எழுதியது போல இருக்கிறது. இதோ அந்தப் பாடல்.

    உலகம் சமநிலை பெற வேண்டும்
    உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
    நிறைவே காணும் மனம் வேண்டும்
    இறைவா அதை நீ தர வேண்டும்
    (உலகம் சமநிலை)
    இமயமும் குமரியும் இணைந்திடவே
    எங்கும் இன்பம் விளைந்திடவே
    சமயம் யாவும் தழைத்திடவே
    சத்தியம் என்றும் நிலைத்திடவே
    (உலகம் சமநிலை)
    அறிவும் அன்பும் கலந்திடவே
    அழகில் வையம் மலர்ந்திடவே
    நெறியில் மனிதன் வளர்ந்திடவே
    நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
    (உலகம் சமநிலை)
    .............
    என்ன அருமையான பாடல். சீர்காழி திரு.கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரல் பாடல் வரிகளுக்கு மேலும் உயிரூட்டுகிறது.


    உலகில் ஆண்டான்-அடிமை, இருப்பவன் -இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என்ற நிலை மாறிட...

    ஏழைகளின் குமுறலைப் பார்த்து எக்காளமிடும் ஏகாதிபத்யம் ஒழிந்திட.....

    தனியுடமைக் கொடுமை நீங்கி பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட...

    அந்த சமதர்ம பூமியிலே எல்லாரும் மன நிறைவுடன் வாழ்ந்திட....

    ‘உலகம் சமநிலை பெற வேண்டும்
    உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்’

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்









  6. Thanks uvausan thanked for this post
    Likes gkrishna liked this post
  7. #2364
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    திருத்தற்கு நன்றி வாசு

    நன்றி கலை சார் .சில பல அலுவல்களால் திரியில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது . வெண்கல குரலோன் சீர்காழி அவர்களின் 'உலகம் சம நிலை பெற வேண்டும் ' பாடலை மிக சரியான தருணத்தில் நினைவு படுத்தியதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
    gkrishna

  8. #2365
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலைவேந்தன் சார்!

    தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

    மிக அழகாக foxconn தொழிலாளிகளின் நிலைமையைப் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். படிக்கும் போது மனம் பதறுகிறது. எங்கள் நெய்வேலியில் கூட இது போன்ற நிகழ்வுகள் மறைமுகமாக வெளியே தெரியா வண்ணம் நிகழ்ந்து வருகின்றது. நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு இதுவரை வேலைகள் முறையாக வழங்கப் படவில்லை. அதனால் அடுத்த ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான நிலத்தைத் தர நிலத்தின் சொந்தக்காரர்கள் தயங்குகிறார்கள். பென்ஷன் என்ற ஒன்றே இங்கு கிடையாது. இது அதைவிட கொடுமை. விலை போகும் யூனியன்கள் இன்னும் அக்கிரமம்.

    இந்த அக்கிரமங்கள் அழிந்து சமதர்மம் நிலைக்க வேண்டும் என்று நீங்கள் அளித்துள்ள பாடல் மிகப் பொருத்தமானது.

    எனக்கும் மிக மிகப் பிடித்த பாடல் இது. காட்சிக்கான விளக்கத்தையும் நறுக்கென்று பதிந்து விட்டீர்கள். நன்றி!

    இதோ! நாம் எல்லோருமே இப்பாடலைக் கேட்டு ரசிக்கலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #2366
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 15 (for Holiday Fun)

    From Adhisaya PeN(1959)

    eenaa meenaa deekkaa.......... (Hindi video)



    Original tune from Aasha(1957)

    eenaa meenaa deekkaa........... (Female version)



    eenaa meenaa deekkaa..............(Male version)




    HAPPY HOLIDAYS
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #2367
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வானொலி அண்ணா என்று அன்புடன் அழைக்கபடும் திரு கூத்த பிரான் அவர்கள் நேற்று மாலை காலமானதாக எனது அலுவலக நண்பர் ஒருவர் கூறினார் எனது அலுவலக நண்பருக்கு திரு கூத்த பிரான் அவர்கள் தூரத்து சொந்தம் என்றும் கூறினார். ஆனால் எந்த வலைபூவிலும் இந்த செய்தி வெளியடபடவில்லை. நமது திரி நண்பர்கள் யாரவது உறுதி செய்தால் நன்று. சென்ற வாரம் இது போல் பெருமைக்குரிய இயக்குனர்சிகரம் திரு பாலச்சந்தர் அவர்கள் காலமாகி விட்டார் என்று தகவல் பரவி நானும் சில நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால் பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்ததும் மிகவும் வருத்தம் அடைந்தேன் .திருமதி குஷ்பூ சுந்தர் கூட அவர்கள் இது போன்ற வதந்திகள் பற்றி வருத்தம் தெரிவித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #2368
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தினமலர்

    பழம்பெரும் நாடக நடிகர் கூத்தபிரான் காலமானார். தனது வாழ்க்கையை, ஆல் இந்தியா ரேடியோவில், அறிவிப்பாளராக துவக்கிய கூத்தபிரான், குழந்தைகளுக்காக அவர், நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். 1970ம் ஆண்டுவாக்கில், இளைய தலைமுறையினரிடையே, 'வானொலி அண்ணா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சினிமா மற்றும் டிவிக்களின் வருகையால், ஒருபோதும் நாடகக்கலை பாதிக்கப்படாது என்றும், மற்ற ஊடகங்களை விட, நாடகங்களில் தான், பார்வையாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கவுரவித்தது.
    gkrishna

  14. #2369
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a beautiful melody from Moondru Mudhichu. Adi Velli Thedum Inbam


  15. Likes kalnayak, Russellmai liked this post
  16. #2370
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு.வாசு சார், திரு. கிருஷ்ணா சார். ‘உலகம் சமநிலை பெற வேண்டும்’ பாடலை எல்லாரும் ரசிக்கும் வகையில் தரவேற்றி உதவியதற்கும் நன்றி வாசு சார். பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு லேப் டாப்பும் கையுமாக பழைய பாடல்கள், படங்களைப் பற்றி உங்களோடெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. என்றாலும் சில கடமைகளும் பொறுப்புகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •