Page 271 of 397 FirstFirst ... 171221261269270271272273281321371 ... LastLast
Results 2,701 to 2,710 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2701
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றும் புதிய பறவை என்ற படத்திலிருந்து "உன்னை ஒன்று கேட்பேன்" என்ற பாடல். பாடியவர் - பி சுசீலா, பாடல் - கவியரசர், இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    கப்பலில் நடக்கும் விருந்தின்போது சிவாஜி சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாட சொல்ல, அவர் தயங்கும்போது, கைதட்டி அவரை பாடுமாறு ஊக்குவிக்கிறார்.
    முதலில் இரு முறை கை தட்டல், பின் ஒரு முறை, இவ்வாறு சிவாஜி இருமுறை செய்தவுடன், நடனக்குழுவினரும் தொடர்ந்து கைகளைத் தட்டி நடனமாடுகின்றனர். கூடவே பியானோ, மரக்கோஸ், பாங்கோஸ் சேர்ந்த இசையுடன் பின்னர் ட்ரம்ஸும் ஒலிக்க, ட்ரம்ஸின் வாசிப்பு முடிந்தவுடன், ஒரு சிறு அமைதி - சிவாஜி "ப்ளீஸ்" என்று சொல்ல, சரோஜாதேவி பாட ஆரம்பிக்கிறார்.
    உன்னை ஒன்று கேட்பேன்
    உண்மை சொல்ல வேண்டும்
    பெண்ணைப் பாட சொன்னால்
    என்னப் பாடத் தோன்றும்
    என்னப் பாடத் தோன்றும்
    இதில் முதலில் வரும் என்னப் பாடத் தோன்றும் என்பதில் தோன்றும் என்ற இடத்தில், தோ ஓ ஓ ன்றும் என்றும், இரண்டாவது முறை என்ன்.. னப் பாடத் தோன்றும் என்று சுசீலா இழுத்துப் பாடும் இடத்திலும் மெல்லிசை மன்னர்களின் கற்பனை பளிச்சிடுகிறது.
    பின் காதல் பாட்டுப் பாட என்று அனுபல்லவி துவங்குகிறது. அனுபல்லவிக்கு முன் இடையிசைஆக, பியானோவின் ஒரு நீண்ட இசையுடன், வயலின் சிறு இசை முடிந்ததும், கிடாரின் ஒரு தீர்மானமான மீட்டல். கூடவே, கை சொடுக்கும் ஒலி. சிவாஜி இந்த இடத்தில் இடது கையால் கை சொடுக்குவது அவருக்கே உரித்தான ஸ்டைல்.
    காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை
    தாலாட்டுப் பாட தாயாகவில்லை
    அனுபல்லவியிலும் காலம் இன்னும் இல்லை என்ற வரியில் இல்ல்ல்...லை என்று இழுத்தும், தாலாட்டுப் பாட என்ற இடத்தில் தா..லா..ட்டுப் பாட என்று பிரித்தும் சுசீலா பாடும் அழகே தனி சுகம்.
    உன்னை ஒன்று கேட்பேன்.....
    முதல் சரணத்திற்கு முன் இடையிசையாக, ட்ரம்பெட் ஒலிக்க அதைத் தொடர்ந்து, பியானோவுடன் வயலின் இசை. சிவாஜி உண்மையிலே ட்ரம்பெட் வாசிப்பது போலவே இருக்கும், ட்ரம்பெட் வாசித்ததும் அதை வைத்து விட்டு அவர் பியானோவுக்கு சென்று அதை வாசிப்பது, அவரது நடிப்பின் நேர்த்தியைக் காண்பிக்கிறது. மிக இயல்பான நடிப்பு.
    நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
    பேசாத பெண்மை பாடாது உண்மை
    கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
    பெண்ணைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
    இதில் தோன்றும் என்று வரும் இடங்களில்லேல்லாம்
    தோ ஓ ஓ ன்றும் என்று சுசீலா பாடுவது மிக இனிமை.
    உன்னை ஒன்று கேட்பேன்.....
    இரண்டாவது சரணத்திற்கு முன் சாக்ஸபோன், புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றின் மயக்கும் இசை. இதிலும் சிவாஜியின் சாக்ஸ் வாசிப்பு தத்ரூபமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு அழகுப் பதுமையாக சரோஜாதேவியை நடிக்க வைத்திருப்பது ஒரு நல்ல தேர்வு.
    தனிமையில் கானம் சபையிலே மௌனம்
    உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
    அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
    என்னைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
    சரணத்தின் வரிகள் அனைத்தும் punctuate செய்தாற்போல் பாடியிருப்பது, சுசீலாவின் சிறப்பு. பாடல் வரிகளை மிக எளிமையாகவும் இனிமையாகவும், இசைக்கு ஏற்ப தந்திருக்கும் கவியரசரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    உன்னை ஒன்று கேட்பேன்
    உண்மை சொல்ல வேண்டும்
    பெண்ணை பாட சொன்னால்
    என்னப் பாடத் தோன்றும்
    என்னப் பாடத் தோன்றும்
    மீண்டும் பல்லவி முடிந்தவுடன், ட்ரம்சின் தீர்மானத்துடன், அனைவரும் கைத்தட்ட பாடல் முடிவுகிறது. ஒரு இனிமையான மாலை நேரத்து விருந்தினை கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பாடல். மனதுக்கு நிறைவான இசையுடன் கூடிய பாடல். காலங்கள் கடந்தும் மனதில் அழியாத கோலமாய் இருக்கும் ஒரு பாடல் என்றால் அது மிகையாகாது.


    courtesy facebook

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2702
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கவிதையும் கானமும் - 12


    &&&&&&&&&&&&&

    திங்கள்

    *************


    நாலே முக்காலுக்கு மேலா ளருக்கு
    ஏதோ நினைவில் ஞானம் வந்திட
    இந்தா வேலை செய்எனச் சொல்ல

    கணினியை உயிர்த்துக் கண்களைப் பதித்து
    மனதினுள் திட்டி மெளனமாய் முடித்து
    நிமிர்ந்து பார்த்தால் ஆறரை ஆக

    வெளியில் வந்து சாதுவாய் நின்ற
    முரட்டு இயந்திரக் குதிரையை உசுப்பி
    வேகம் பிடித்தே சிகப்பை மீற
    தாகங் கொண்டே காவலன் தடுக்க

    ஹிஹி எனவே ஆங்கில மொழிந்து
    சின்னதாய் ஐம்பது பொற்பணங் கொடுத்து
    மறுபடி வேகமாய் வெள்ளத்தில் நீந்த
    மனது மட்டும் முன்னால் சென்று
    என்ன சொல்வாள் இன்றவள் என்றே
    எண்ணப் புற்களை மெல்லசை போட

    பத்துச் சுண்டல் விற்கும் பையன்
    இருபது தம்பதி முப்பது குடும்பம்
    ஐந்து ஆறு பொறுக்கிப் பேய்கள்
    வர்றயா அம்மா எனக்கேட் டார்கள்..
    மேலும் பஜ்ஜி கடலை வெள்ளரி
    என்று பலரும் வாங்கச் சொல்லினர்
    வழக்கம் போலவே மெல்ல வருவது
    நியாயமா என்றே எரிமலை வெடிக்குமோ..

    எண்ண ஓட்டத்தில் இடமும் வந்திட
    மாலை மயங்கி மெல்லிருள் சேர
    வண்டியை நிறுத்தி அட்டையைப் பெற்று
    தாமதத் திற்கான தண்டனை பெறஅவள்
    வழக்கமாய்த் தனியாய் இருக்கும் இடத்தை
    அடைந்தால் காணோம்; என்ன செய்யலாம்..

    தவித்துக் குழம்பித் திகைத்த போது
    தொலைவில் மொட்டாய் வரவர மலர்ந்து
    "கொஞ்சம் வேலை, மன்னி" என்றே
    என்னைப் பார்த்துச் சிரித்தது திங்கள்..

    **

    https://www.youtube.com/watch?x-yt-t...yer_detailpage

  5. Likes kalnayak liked this post
  6. #2703
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    கவிதையாகவே கருத்தினை வரைந்து
    பவித்திரமாகவே பாடலை தரும் முறை சிறப்பு.
    தவித்திருப்பர் தனியாக, விரைந்திடுவோம் விரைவாக
    ரவியவனும் மறைந்திடுவான் கண்டிடுவோம் காதலனை
    போற்றிடுவோம் காதலரின் சிந்தனையை நீர் கொடுத்த பாடல்வாய்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. #2704
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ரவியவனும் மறைந்திடுவான் கண்டிடுவோம் காதலனை
    போற்றிடுவோம் காதலரின் சிந்தனையை நீர் கொடுத்த பாடல்வாய். // நன்றி கல் நாயக்

    **
    தண்ணிலாரிப் பாட்டு சிக்கிடுச்சுங்க்ணா

    இணைந்த கைகள் நினைவிருக்கிறதா உங்களுக்கு.. (ராஜண்ணா பாட்டில் வேறு போட்டிருந்தீர்கள்) ஆபாவாணனின் இரண்டாவது படம் என நினைக்கிறேன்..ராம்கி, அருண்பாண்டியன் நிரோஷா அண்ட் அறிமுகம் சிந்து..

    திடுதிப்பென இந்தப் பாட்டு எதிர்பாராத சூழ் நிலையில் ஆரம்பிக்கும் (தண்ணிலாரிப்பாட்டு) இவ்வளவு வருடம் கடந்த பின்னும் நினைவிலிருப்பதற்கு பாடல் இசை வரி சூழல் ப்ளஸ் இளஞ் ஜோடிகள் ராம்கி சிந்து...

    Last edited by chinnakkannan; 30th January 2015 at 12:40 PM.

  8. Thanks kalnayak thanked for this post
  9. #2705
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்....

    சின்னக் கண்ணன்,

    கல்நாயக் சொல்வது போல கவிதையாகவே கருத்தை வரைந்து பாடலை தரும்முறை நன்றாகத்தான் இருக்கிறது. வழக்கம் போல கடைசியில் உங்கள் பஞ்ச்.ஆனால், எனக்குத்தான் கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. கவிதை எழுத வாருங்கள் திரியில் இதுபோல எழுதி விட்டு இங்கே இந்த பாமரனுக்காக சாதாரணமாக எழுதக் கூடாதா?
    ---------------------------------------

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை மற்றும் அவருடன் தான் கொண்டுள்ள நெருக்கம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையைத் தந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய சூழலில் உலகை ஆட்டிப்படைப்பது அமெரிக்காதான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்நிலையில், அந்நாட்டுடனான உறவை நமது முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும்.இந்தியாவுக்கு உதவியாகவும் கடனாகவும் 400 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவோம் என்றும் ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஒபாமா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

    அணுசக்தி உடன்பாடு பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும்- அணுமின் நிலையங்களில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பாளி? இழப்பீடு யார் தருவது? போன்றவற்றில் வழாவழா கொழகொழா.

    சரி... இருதரப்பு உறவுகளைப் பற்றி ரொம்ப எழுதினாலும் போரடிக்கும். சுருக்கமாக,....

    இந்தியாவும் அமெரிக்காவும் பல மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக இருப்பதாலும் மனித உரிமைகளைப் போற்றி மதிப்பதாலும் இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள உறவு நிலைத்து வளரும் என்று நம்புகிறேன் என்கிறார் ஒபாமா. பரஸ்பர நன்மை பயக்கும் உறவு கொண்டால் அந்த சொந்தம் தொடரட்டுமே...

    பிராப்தம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்..

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது...

    நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் அருமையான நடிப்பில் தெய்வப் பாடகர், இசையரசியின் குரலில் நம்மை மயக்கும் பாடல்...

    விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண..

    விளக்கு என்றாலே இரவில்தான் இருக்கும். இந்த இடத்தில் விளக்கு என்பது சுடர் விளக்கு. இரவில் தனிமையில் விளக்கின் ஒளியில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் முகத்தை சட்டென நேருக்கு நேர் பார்க்காமல் லேசாக ஜாடையில் (ஓரக்கண்ணால்)காண...

    வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண...

    வெள்ளியைப் போன்ற முகத்தில் (நிலவு) முத்தாக வியர்வை (பன்னீர்) தெளிக்கும் கோலம் நான் காண..

    கவியரசரின் சுகமான வரிகள்... இதற்கு மேல் வேணாங்க.

    இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரேடியோவில் மக்கள் திலகத்தின் சிறப்புத் தேன் கிண்ணம். தனது படங்களின் சிறப்பான பாடல்களை போட்டு பொளந்து கட்டப் போகிறார் என்று பார்த்தால் தன் படத்தில் இருந்து ஒரு பாடல் கூட போடவில்லை அந்த பெருந்தன்மையின் பேரரசர். அவருக்குப் பிடித்த பாடல் என்று அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த இந்த பாடலை போட்டார். மிகவும் அருமையான பாடல்.

    திரு.கோபால்,

    நேற்று இரவு எதேச்சையாகப் பார்த்தேன். நீங்கள் லாக் இன் ஆகியிருந்தீர்கள். பார்க்கிறீர்களே? பதிவு போடக் கூடாதா? உங்களுக்காக என் வேண்டுகோளைக்கூட தளர்த்திக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு என்று கூறியிருந்தேன். நீங்கள் உங்கள் ஸ்டைலில் எல்லாரையும் (என்னையும் சேர்த்து) திட்டுங்கள்(!). பதிலுக்கு நாங்களும் திட்டி (!) சரிப்படுத்திக் கொள்ளலாம்.

    நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள். சரக்கும் உள்ளவர். மக்கள் திலகம் திரிக்கு உங்களை கூப்பிடவில்லை. கூப்பிட்டாலும் வரமாட்டீர்கள். நாங்கள் தீண்டத்தகாதவர்கள். இங்கே வரலாமே. உண்மையைச் சொன்னால் நீங்கள் இல்லாமல் என் எழுத்துக்கள் சப்பென்று இருப்பதாக எனக்கே ஒரு உணர்வு. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நமது..

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது...

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Likes kalnayak liked this post
  11. #2706
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சாதாரணமாக எழுதக் கூடாதா?// கலைவேந்தன்...ஸாரிங்ணா.. அண்ட் ஸரிங்க்ணா..

    வழக்கம்போல உங்கள் ஸ்டைலில் அரசியல் கலந்த எழுத்து... ம்ம் நடத்துங்கள்.. நைஸ்..

    சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் இனிமையான பாடல்

    https://www.youtube.com/watch?featur...yt-cl=85114404

  12. #2707
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    பல்வேறு இடைவிடாத வேலைகளின் காரணத்தால் தொடர்ந்து மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பின் வழக்கம் போல் தொடர உள்ளேன்.
    நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பங்களிப்புகளைப் படித்தும் வருகிறேன்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #2708
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்திரரே.ஃபங்க்*ஷன் எல்லாம் நல்லபடியாய் முடிந்ததா ( நான் சுவாசிக்கும் சிவாஜி ஃபங்க்*ஷன் என எழுதியிருந்த நினைவு..சரிதானே) மிக்க நன்றி தங்களுடைய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்..

    சிலதினங்கள் முன்பு இந்தப்பாடல் பார்த்தேன்..இங்கு இதுவரை வந்ததில்லை தானே..உங்கள் நினைவும் வாசு வின் நினைவும் மறுபடியும் வந்தது..தேடி வந்த திருமகள் என்ன விதமான படம்

    கேட்டால் ஒன்று தரவேண்டும். கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
    ஒன்றாய் அதைத் தரமாட்டேன் இரண்டாய் அதைப் பெற மாட்டேன் (இப்ப என்ன தாம்மா சொல்ல வர்ற நீ!)

    . ரவி காஞ்ச் நல்ல டூயட்..

    http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage

  14. Likes kalnayak liked this post
  15. #2709
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி ஸ்ரீனிவாஸ்… குரு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எப்பொழுதும் வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும்.

    வரமாக எல்லாமே வாழ்க்கையில் கிட்டும்
    முரளியுமை எய்தாது மூப்பு

    அப்புற மேல்ட்டுக்கு, ஒரு நல்ல மலையாளப்படம் பற்றி ச் சொல்ல விட்டுப் போய் விட்டது. யே அடுத்த காலத்து என்று ஒருபடம்..பாருங்கள்.. (படம் முடியும் போது பார்ப்பவருக்கே ஒரு விதமான நிம்மதி ப்ளஸ் மகிழ்ச்சி வரும்..கொஞ்சம் இயல்பான படம்)

    உங்கள் பிறந்த நாளுக்குஎன்ன பாட் போடலாம்….
    ஒரு பழசு ஒரு புதுசு ஓகேயா.

    மயில்வண்ணத் தாவணிதான்; மஞசள் ரவிக்கை;
    துயில்வரும் ராத்திரியில் தோய்ந்திருக்கும் வண்ணமதைக்
    கொண்டிருந்த கூந்தலிலே கூட்டுகிறேன் அழகென்றே
    நின்றிருந்த ரோஜாவும் நன்று.
    .
    வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
    பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
    மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
    கேளாமல் கொன்றாளே காண்

    ஓவியப் பாவையென ஓராள்தான் உண்டதுவும்
    தேவிநீ என்று தெளிவு..

    கள்ளத் தனமாய் கவர்ந்தெடுத்துச் சென்றவந்த
    உள்ளம் உனதென்றே உணர்..
    (கலை திட்டப் போகுது புரியலைன்னு!)

    சம்திங் சம்திங் படத்துலருந்து தாவணி த்ரிஷா..பூப்பறிக்க நீயும் போகாதே உன்னைக் கண்டாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி..

    https://www.youtube.com/watch?x-yt-c...yer_detailpage

    அப்புறம், ந.தி தான்.. மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி…. எப்ப வேணா கேட்கலாம்

    ரோஜா போட்ட பொண் பாட் வேற எதுவும் இருக்கா..


  16. Likes kalnayak liked this post
  17. #2710
    Senior Member Regular Hubber umaramesh's Avatar
    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    247
    Post Thanks / Like

    Smile

    பிராப்தம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்..

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது...

    நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் அருமையான நடிப்பில் தெய்வப் பாடகர், இசையரசியின் குரலில் நம்மை மயக்கும் பாடல்...

    விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண..

    விளக்கு என்றாலே இரவில்தான் இருக்கும். இந்த இடத்தில் விளக்கு என்பது சுடர் விளக்கு. இரவில் தனிமையில் விளக்கின் ஒளியில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் முகத்தை சட்டென நேருக்கு நேர் பார்க்காமல் லேசாக ஜாடையில் (ஓரக்கண்ணால்)காண...

    வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண...

    வெள்ளியைப் போன்ற முகத்தில் (நிலவு) முத்தாக வியர்வை (பன்னீர்) தெளிக்கும் கோலம் நான் காண..

    கவியரசரின் சுகமான வரிகள்... இதற்கு மேல் வேணாங்க.

    Thanks for remembering this song.Ever green one with entirely different orchestra scored by MSV. You have mentioned about everyone in the song except MSV.
    So sad.

    Thanks

    Ramesh

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •