Page 321 of 397 FirstFirst ... 221271311319320321322323331371 ... LastLast
Results 3,201 to 3,210 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3201
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில் மலர்ந்த நாவல்கள் - 3

    அது ஒரு கிராமத்தில் வாழுகின்ற குடும்பம்.. பஞ்சாயத்துத் தலைவர் அப்பா , அம்மா. இரு மகள்கள் தேவி, சித்ரா.. தேவி இளையவள்..சித்ராவிற்கு அவளுடைய அத்தை பையன் உமாசங்கர் தான் என ஏற்கெனவே பெரியவ்ர்களால் முடிவு செய்யப் பட்ட விஷயம்..சூழ் நிலையில் தேவிக்கு ஒரு விபத்து நிகழ்ந்து அதனால் அவளுக்கு சற்றே முன்கூட்டி நடக்கப் போகிறவை தெரிய ஆரம்பிக்கின்றன..(உதாரணம்..ஒருவன் மாடு காணவில்லை எனச் சொல்ல அவன் கையை எதேச்சையாகத் தொட்ட தேவிக்குள் கொஞ்சம் அதிர்வு ஏற்பட அதான் அந்த வடகிழக்கு வயக்காட்டுப்பக்கம் இருக்குதே எனச் சொல்ல - சொன்னவன் தேடிப்பார்த்தால் மாடு தேவி சொன்ன இடத்திலேயே இருக்கிறது.. தன் வீட்டு வேலைக்காரியை ஒரு நாள் கோடீஸ்வரி என விளிக்கிறாள் தேவி..ஏன்மா என்றால் நீ தான் தங்கவளையல்கள் எல்லாம் போட்டுக்கொண்டு பட்டுப்புடவையில் பவனி வருவது போல த் தோணிச்சு என்கிறாள்.. மறு நாள் வேலைக்காரிக்கு லாட்டரியில் பத்து லட்சமோ என்னமோ எனறு விழுந்து விடுகிறது..) தேவி இருப்பது கிராமம்..எனில் தீயை விட வேகமாக விஷயம் பரவி எல்லோரும் அவளை த் தெய்வமெனப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்..

    பட்டணத்தில் இன்னொரு பெண் ஜென்னி.. தேவியின் ஜெராக்ஸ்.. அவளுக்கு ஒரு லவ்வர்.. ஜோஸப்..வழக்கம் போல காதலுக்குப் பணக்காரத் தந்தை தாமஸ் ஒத்துக்கொள்ள வில்லை.. எனில் திருமணம்செய்து கொள்ளலாமென நினைக்கும் போது ஜென்னிக்கு அடிவயிற்றில் பிரளயமாய் ஒரு வலி உருக்கி உருக்கி வலிக்க அவள் அலறுகிறாள்.. ஜோஸப் டாக்டரிடமழைத்துச் சென்று காட்டுகையில் டாக்டர் கான்ஸரோ என்னவோஎன ஒரு கொடிய வியாதியின் பெயர் சொல்லி அவள் இருக்கப் போவது கொஞ்ச நாள் தான் என்கிறார்.. ஜென்னி தந்தையைப் பார்க்க வருகையில் தாமஸ் தான் அவளது வள்ர்ப்புத் தந்தை என்றும் ஒரிஜினல் தந்தை கிராமத்தில் இருக்கிறார் என்றும் இரட்டையரில் ஜென்னியைத் தானெடுத்து வந்ததாகவும் கூற கிராமத்தில் இருக்கும் தேவியைப்பார்க்க ஆசைப்பட்டுப் போனால்..

    கிராமத்தில் தேவியின் நிலைமை மோசமாக இருக்கிறது.. காரணம் அவளே தான்.. விஷயமென்ன வென்றால் எல்லாரும் அம்மன் ரேஞ்சுக்கு அபிஷேக ஆராதனை செய்வதை பொறுக்கவொண்ணாத தேவி சில பல தப்புத்தப்பான ஹேஷ்யங்களைச் சொல்லி விடுகிறாள்..கிராமத்தினருக்கு நம்பிக்கை போய்விடுகிறது..கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என தேவி நினைக்கையில் அக்கா சித்ராவிற்கு அத்தை பையன் உமாசங்கர் வருகிறான்..வெளி நாடு போவதாகவும் உடனடியாக க் கல்யாணம் செய்யவேண்டுமென்றும் கூற தேவியின் பெற்றோருக்கு ஒரே மகிழ்ச்சி.. தேவிக்கும் மகிழ்ச்சி..அத்தானின் கைகுலுக்கப் பார்க்கையில் மறுபடியும் அவளுக்கு ஏற்படும் அதிர்வு ஏற்படுகிறது..

    அதில் அத்தான் உமாஷங்கர் போகும் விமானம் தீப்பிடித்து எரிவதைப் பார்க்கிறாள் காட்சியாக.. தான் சொல்வதை எவரும் நம்ப மாட்டார்கள் எனத் தெரிந்ததால் கல்யாணத்தைத் தடுக்க நினைக்க அனைவரும் அவளைத்தப்பாக நினைத்து விடுகிறார்கள்.. அவள்- உமாஷங்கரை ஆசைப்படுவதாக நினைக்கிறார்கள்..விதி வலியதாகி உமாஷங்கர் கிளம்பிச் சென்ற பிறகு தான் தேவி தான் கண்ட கனவை..தனது உள அதிர்வுகள் சொன்னதை அக்காவிடம் சொல்கிறாள்..அக்கா அதிர்ந்து நிற்க ஃபோனும் வருகிறது..உமாஷங்கரின் மரணச்செய்தியைத் தாங்கி..அனைவரும் தேவியைக் குறை சொல்ல நொந்து போய் தேவி வெளியேறும் தருணம் ஜென்னியின் கார் அந்த வீட்டு வாசலில் வந்து நிற்கிறது..

    தேவி ஜென்னி இருவரும் சந்திக்க ஜென்னி பெற்றோரைப் பார்த்து வருகிறேனெனச் சொல்லி உள் செல்ல - ஏற்கெனவே கோபத்தில் அவளை கன்னா பின்னாவென அடித்திருந்த அவள் அப்பா அவளிடம் மன்னிப்புக் கேட்க வர..ஜென்னி அவர்களைப்பார்த்த மகிழ்ச்சியிலேயே விழுந்து உயிர் விட எல்லோரும் தேவி என அலறி அழ,

    வெளியில் இருக்கும் ஜோஸப் உள்ளே ஓட முயற்சிக்க தேவி தடுக்கிறாள்..என் ஜென்னீ என் ஜென்னீ எனப் புலம்புகிறான்.. அவனைத் தடுத்து சென்னை வந்தால் தாமஸ் மிக மரணப் படுக்கையில்.. எனில் தாமஸூக்காக ஜென்னியாக வாழ முடிவெடுக்கிறாள்.. ஜோஸப் எனக்கு என் ஜென்னி தான் நினைவு..அவள் மாதிரி நீ இருந்தாலும் உன்னை நினைக்க மாட்டேன்..தாமஸூக்காக நாம் சேர்ந்தே பிரிந்து இருப்போம் எனச் சொல்ல... நாவல் முடிகிறது (சொல்ல மறந்து விட்டேன்..தேவிக்கும் ஒரு காதலன் உண்டு..அவனும் அவளைத் தப்பாக நினைத்திருப்பான்..)

    இது ராஜேந்திர குமார் எழுதி மாலை மதியில் வெளியான வணக்கத்த்க்குரிய காதலியே வின் சுருக்க்கம்.. இதுவே பின்னால் அதே தலைப்பில் படமாக வந்தது.. தேவி, ஜென்னியாக ஸ்ரீதேவி(வெகு இளமை) ஜோடிகளாக - முறையே விஜயகுமார், ரஜினிகாந்த். அப்பாவாக எஸ்வி சுப்பையா வேலைக்காரத் தம்பதிகளாக தேங்காய் சீனிவாசன் மனோரமா தாமஸாக அசோகன் தேவியின் அக்காவாக ஜெய்சித்ரா, தேவியின் அத்தானாக ஜெய்கணேஷ் என..

    என்ன நாவலை அப்படியே படமாக்கி இருந்திருக்கலாம்..கதாசிரியர் சொன்னசம்பவங்களையே காட்டியிருக்கலாம்.. கொஞ்சம் மாற்றி, கடைசியில் ரஜினிகாந்த் தேவியான் ஸ்ரீதேவியை அவளது காதலன் விஜயகுமாருக்குக் கொடுப்பது போல முடித்திருந்தது விறுவிறுப்பான நாவல் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருந்தது..சுமாராக ஓடியது என நினைக்கிறேன்..

    பாடல்கள் இரு பாடல்கள் ஓகே அடியேனைப்பாரம்மா அப்புறம் ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்.. அந்த ஸ்ரீதேவி க்யூட்டியான ஊஞ்சலை இப்போ பார்ப்போம்...


    Last edited by chinnakkannan; 30th March 2015 at 02:38 PM.

  2. Likes rajeshkrv, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3202
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    'வணக்கத்துக்குரிய காதலியே' நானும் கதையை படித்தேனோ என்னவோ தெரியவில்லை. நிற்க. கோபால் இங்க வரமாட்டாரே. ஒரு முன் ஜாக்கிரதைதான். அவர் இதை முன்னாடியே பிரிச்சு மேஞ்சிருந்தா சொல்லிடுங்க. தேடி படிச்சுட்டு வந்து மேல சொல்றேன்.

    ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. சொன்னமாதிரி ஸ்ரீதேவி இளமையா அழகா இருக்காங்க. பாட்டும் பட்டைய கெளப்புது.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #3203
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. // அதான் சேஃபா நாலு பாராங்கறத எடுத்துட்டேனே போரடிச்சுதா என்ன?(அப்படி இருப்பின் அது என்ற மிஷ்டேக்.. நாவல் சுவாரஸ்யமா இருக்கும்)

    ராஜேந்திர குமார் எழுதிய துப்பறியும் நாவல்களை விட அந்தக்காலத்தில் விகடனில் எழுதிய தொடர்கள் எனக்குப் பிடிக்கும்..எப்படியடி காதலிப்பது - நாவல் ஹிலாரியஸ் ப்ளஸ் ஆழமாகவும் இருக்கும்..வால்கள்.. குமுதத்தில் இஷ்டத்திற்கு பத்து விஷயங்களின் பெயர்கள் கிரிக்கெட் பால், பகவத் கீதை, கொரியப் படம் என க் கொடுத்து ஒரு கதை எழுதச் சொல்ல இவரும் ஆசிரியரின் பத்துக் கட்டளைகள் எனக் கதை எழுதியிருந்தார்..! மூடுபனி இவரது கதையைத் தழுவி பாலுமகேந்திரா எடுத்திருந்தார்.. அந்தக் கதை நான் படித்ததில்லை..

  6. #3204
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சந்திரன் பாடல் 53: "சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே"
    ----------------------------------------------------------------------------------------

    அப்பாடி, அம்மாடி ஒரு வித்தியாசமான பாட்டு. பார்த்ததெல்லாமே காதல் பாட்டுக்களாய், சோகமாய், சந்தோஷமாய் இருக்க, இது ஒன்றாவது தந்தை மகனைப் பார்த்து சோகமாக கொஞ்சிப் பாடும் பாட்டாக இருக்கிறதே. அதனாலேயே சூரியனுடன், நட்சத்திரங்களுடன் சந்திரன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. நாயகன் நினைப்பில் எடுத்த படமா தெரியவில்லை. வெற்றி பெற்றதா எனவும் தெரியவில்லை. படமா என்று பார்த்துவிட்டு நிறைய பேர் திரும்பினோம். கார்த்திக் ஒரு பாட்டு பாடி ஹிட் ஆகி (சரி வேண்டாம் விடுங்க.) ஆனாலும் ஸ்ரீவித்யா பாட்டுதான் மிக பிரபலம். இந்த பாடலை பார்ப்போம். இயக்குநர்: திரு.கே.ராஜேஸ்வர், இசை: திரு.ஆதித்யன், திரு.சிவகுரு, நடிகர்கள்: கார்த்திக், பானுப்ரியா; பாடும் நிலா பாலசுப்ரமணியம் ஒரு முறையும், கந்தர்வ குரலோன் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் ஒரு முறையும் பாடியிருக்கிறார்கள்.

    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
    சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
    சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

    நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்க முடியுமா
    கண்ணுல முள்ளு தைச்சா இமையும் மூட முடியுமா
    பாரத கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியம் தான்
    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
    நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே

    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

    நீயும் நானும் வாழனும்னா தீமையெல்லாம் தீயிடு
    கெட்டது இங்கே அழியனும்னா கொடுமையெல்லாம் பழிகொடு
    கண்னன் கீதையிலே சொன்னது போல் நடந்திடு
    பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
    பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
    அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கதை நான் எழுதல

    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

    கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
    சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
    சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே





    இதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கப் போறாங்களாம். ஜனங்க விட்டாலும் இவங்க அமரனை தூங்க விட மாட்டாங்க போல இருக்கே.
    Last edited by kalnayak; 30th March 2015 at 03:22 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes chinnakkannan liked this post
  8. #3205
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. // அதான் சேஃபா நாலு பாராங்கறத எடுத்துட்டேனே போரடிச்சுதா என்ன?(அப்படி இருப்பின் அது என்ற மிஸ்டேக்.. நாவல் சுவாரஸ்யமா இருக்கும்).
    சி.க. நிச்சயமா போராடிக்கலை. கதை முழுவதும் கொடுத்திருந்தீங்க. சுவாரசியமாவே எழுதி இருந்தீங்க. தப்பா நினைக்க வச்சது என்ர மிஸ்டேக்

    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராஜேந்திர குமார் எழுதிய துப்பறியும் நாவல்களை விட அந்தக்காலத்தில் விகடனில் எழுதிய தொடர்கள் எனக்குப் பிடிக்கும்..எப்படியடி காதலிப்பது - நாவல் ஹிலாரியஸ் ப்ளஸ் ஆழமாகவும் இருக்கும்..வால்கள்.. குமுதத்தில் இஷ்டத்திற்கு பத்து விஷயங்களின் பெயர்கள் கிரிக்கெட் பால், பகவத் கீதை, கொரியப் படம் என க் கொடுத்து ஒரு கதை எழுதச் சொல்ல இவரும் ஆசிரியரின் பத்துக் கட்டளைகள் எனக் கதை எழுதியிருந்தார்..! மூடுபனி இவரது கதையைத் தழுவி பாலுமகேந்திரா எடுத்திருந்தார்.. அந்தக் கதை நான் படித்ததில்லை..
    எப்போதாவதுதான் நான் விகடன் படித்திருந்தேன். அதனால் அந்த தொடர்களை நான் படித்ததில்லை. குமுதம் படித்திருந்தாலும் பத்து கட்டளைகள் நினைவில் இல்லை.
    *****இப்பொழுது இரண்டும் படிப்பதில்லை.****************
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #3206
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //*****இப்பொழுது இரண்டும் படிப்பதில்லை.****************// ஹப்பாடி இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கீங்கன்னு சொல்லுங்க.. பட் இப்ப குமுதம் கொஞ்சம் பிக்கப் ஆகிடுச்சு இறையன்பு, வைரமுத்து, ரா.கி.ரவின் பழைய தொடர் என..மீன்ஸ் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு..

    அமரன் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுச் சொல்கிறேன்..ஐ திங்க் படமாகவும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..டப்க்குன்னு மனசுல முணுமுணுக்க ஒரு பாட்டு நினைவலையில் நீந்தி வருது..அது க்யாஹூவா தேரா வாடா ஹிந்திப்பாட்டு மெட்டில் போடப்பட்ட தமிழ்ப்பாடல்..படம் காளிக் கோவில் கபாலி! உங்களுக்கு நினைவுக்கு வருதா?

  10. #3207
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அமரன் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுச் சொல்கிறேன்..ஐ திங்க் படமாகவும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..டப்க்குன்னு மனசுல முணுமுணுக்க ஒரு பாட்டு நினைவலையில் நீந்தி வருது..அது க்யாஹூவா தேரா வாடா ஹிந்திப்பாட்டு மெட்டில் போடப்பட்ட தமிழ்ப்பாடல்..படம் காளிக் கோவில் கபாலி! உங்களுக்கு நினைவுக்கு வருதா?
    வெண்ணிலா வெள்ளித் தட்டுதானே. எழுதுகிறேன், கூடிய சீக்கிரம். சொன்ன காரணமும் புரியுது.
    Last edited by kalnayak; 30th March 2015 at 03:58 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. #3208
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில் மலர்ந்த நாவல்கள் - 4

    அவன் இளைஞன்..அழகன்.. நிறையப் படித்தவன்..அதனாலேயே நல்லவேலை.. எனில் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது தானே..செய்தும் கொள்கிறான்.. கொஞ்சமே கொஞ்சம் உயரம் கம்மியான தங்கச் சிலை போன்ற நங்கை..மூக்கும் முழியும் கன்னமும் மற்றவையும் வெகு அழகாக அளவாக இருக்கின்றன்.. கல்யாணத்தன்று இரவே அவனுக்கு ஏமாற்றம்.. மலர்ந்து விகசிப்பாள் என்றால் தொட்டாச் சுருங்கியாய் சுருங்கி உடலைச் சுருக்கியும் கொள்கிறாள்..அவனுக்குப் புரியவில்லை..(இளைஞன் பெயர் வாசு அவன் மனைவி பெயர் வசு என வைத்து கொள்ளலாம்)..பின் தான் புரிகிறது. வசு வளர்க்கப் பட்ட விதம் அப்படி.. வளர்க்கப் பட்டது கல்யாணம் ஆனவுடனேயே கணவர் இறந்து போன அத்தைப் பாட்டியிடம் என்பது..இல்லறம், உணர்வுகள் என்பதே தெரியாதவளாக வளர்க்கப் பட்டிருக்கிறாள் வசு..

    வாசுவின் அலுவலக் செக்ரட்டரி பிரகதி..அவளுடைய கணவன் ஓவியன் விஜயன். ஓவியனென்றால் பெண்களை இயற்கை அழகுடன் உடையில்லாமல் வரைபவன்.. தொழில் முனைப்பில் மனைவியிடம் சந்தோஷமாக இருப்பதுமில்லை.. சூழ் நிலையில் வாசுவின் மேலதிகாரியின் பெண் கமலி வாசு வீட்டில் தங்க நேர்கிறது..வசுவுக்கு க் கோபம் வருகிறது.. கடைசியில் வசுவிற்கு இல்லறமென்றால் என்னவென்று புரியவைத்து கமலி இறக்கிறாள்.. ஒரு சந்தர்ப்ப சூழ் நிலையில் வாசுவும் பிரகதியும் கொஞ்சம் உணர்வு நிலை மறக்கும் வண்ணம் நிகழ சட்டென இருவருமே சுதாரித்து வருந்துகிறார்கள்.. அதையே நாசூக்காய் பிரகதி விஜயனிடம் சொல்லி அழ, புரிந்து கொள்கிற விஜயனும் தொழிலுக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்து பிரகதியுடன் இனிய வாழ்வினைத் தொடர்கிறான்..(கண்ணா நன்னா சமாளிச்ச போ)


    இது மணியன் எழுதி ஆனந்த விகடனில் வந்த மோகம் முப்பது வருஷத்தின் சுருக்கமான கதை..(பெயர்கள் மட்டும் நினைவில்லாமல் மாற்றியிருக்கிறேன்) தொடராகவோ புத்தகமாகவோ படித்த நினைவு..சுவாரஸ்யமாகத் தானிருக்கும்..

    இதுவே படத்தில் வாசுவாக கமல் வசுவாக சுமித்ரா பிரகதியாக ஃப்டாபட் விஜயனாக விஜி என மோகம் முப்பது வருஷம் என்ற தலைப்பிலேயே வந்தது..சினிப்ரியாஎன நினைவு.. கொஞ்சம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். கொஞ்சம் நழுவியிருந்தாலும் விரசமாகியிருக்கும் விஷயத்தை வெகு நாசூக்காக இயல்பாக எடுத்திருப்பார்கள்.. நாவலில் கமலி இறக்கமாட்டாள்..இதில் கமலியாய் நடித்த ஸ்ரீப்ரியா டபக்கென்று பரங்கி மலையில் இருந்து விழுந்து செத்துப்போவார்..ம்ம் (ஹை நாலு பாரால முடிச்சுட்டேனே) நினைவுக்கு வரும் பாடல்..எனது வாழ்க்கைப் பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணெய் இல்லை ஒன்றிலே என்ன இல்லை ஒன்றிலே- கொஞ்சம் பூசினாற்போன்ற குண்டு தீபம் ஸ்ரீப்ரியா.. (கொஞ்சம் ஷார்ட் சுமித்ரா..இந்தப் பாட்ல வர்றாங்களான்னு நினைவில்லை) பாக்கலாமா..

    Last edited by chinnakkannan; 30th March 2015 at 04:03 PM.

  12. Likes kalnayak liked this post
  13. #3209
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சொன்ன காரணமும் புரியுது.// எந்தக் காரணமும் இல்லைங்க..அதுசட்டுனு நினைவுக்கு வந்தது..க்யாஹீவாவை வெண்ணிலான்னு எழுதறதுக்கு என்ன ஒரு மனத்திட்பம் வேண்டும்..!

  14. #3210
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    என்ன சி.க. ஷார்ட்டா முடிச்சிட்டீங்க - மோகம் முப்பது வருஷம் படத்தை. நெறையவே எழுதுங்களேன்; நான் படிக்கிறேன்.

    யாராவது இந்த படம் பார்த்தவங்க கமெண்ட் போடுங்க. புண்ணியமா போகும். கோபால் எங்கே?

    எனது வாழ்க்கைப் பாதையில் - அப்பொழுது வந்த பாடல்கள் நிறைய இந்த மாதிரி சாயல்களிலேயே படமாக்கப் பட்டிருந்ததாக நினைவு. அழகான, இளமையான கமல். சோகமாக இருக்கும் நாயகி (ஸ்ரீபிரியாவா இது? அடையாளமே தெரியவில்லை.) இந்த பாட்டிற்கு அவ்வப்போது ஆடுவது... என்னத்த சொல்றது?
    Last edited by kalnayak; 30th March 2015 at 04:41 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •