Page 362 of 397 FirstFirst ... 262312352360361362363364372 ... LastLast
Results 3,611 to 3,620 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3611
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 26

    படம் : கள்வனின் காதலி

    கவிமணியின் ------
    "வெயிலுக்கேற்ற நிழல் உண்டு ...வீசும் தென்றல் காற்றுண்டு" ( solo song)

    கருப்பு வெள்ளை"யிலும்
    இசையின் தேன் கருவூலம் இது.
    இதைக்கேட்டு
    உருகி உள்ளம் வழிந்தோடியதில்
    காலமே "காலமாகி"ப்போனது."


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3612
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 27

    படம் : கள்வனின் காதலி

    வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு

    கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
    கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

    வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு

    தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
    தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

    வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு

    வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
    வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ?
    ஸ்வர்க்கம் வேறுண்டோ?

    வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
    வெய்யிற்கேற்ற நிழலுண்டு




    இளமை இதோ இதோ
    இனிமை இதோ இதோ

    என்று அன்றே அழகான ஜோடிகளை வைத்து பாடி விட்ட பாடல்

  5. #3613
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 28

    Chanda Hai Tu - Aradhana - Rajesh Khanna & Sharmila Tagore-



    A child gives birth to a mother .

    கீழ்கண்ட பதிவு இந்த பாட்டின் அர்த்தம் இல்லை - பல முதியோர் இல்லங்களில் வாழப்படும் தாய்மார்களின் ஏகோப்பித்த குரல் - அது உங்கள் காதுகளிலும் விழுந்தால் அது என் இந்த பதிவின் மகத்தான வெற்றி .

    ஒரு தாயின் - தவறு தவறு
    ஒரு தெய்வத்தின் குரல்

    மகனே !

    இன்று என்னை சம்பந்தமே இல்லாத நாலு பேர்கள் எங்கோ சுமந்து சென்றுகொண்டிருக்கிண்டார்கள் . உன்னை சுமந்து , வளர்த்த போது கிடைக்காத மலர் மாலைகள் இன்று காயிந்து போன என் உடலில் விழுகின்றது . கட்டிய ஒரே சேலையுடன் உன்னை வளர்த்தேன் - இன்று என் உடம்பில் புதிய சேலை ஒன்றை கட்டி இருக்கின்றாய் ( விலை அதிகமா மகனே ?) . முதியோர் இல்லத்தில் பலர் என்னை கேட்டனர் - உங்கள் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று - நீ பிறந்தவுடன் பிறருக்கும் , இந்த நாட்டிற்கும் என்னவெல்லாம் செய்வாய் என்று நான் கண்ட கனவை பற்றித்தான் அவர்களிடம் என்னால் சொல்ல முடிந்தது - உங்கள் மகன் எங்கே இருக்கிறான் ? ஏன் உங்களை பார்க்க வருவதில்லை என்றும் கேட்டனர் . என் மகன் என்றும் என் இதயத்தில் இருக்கிறான் - அவன் எங்குமே என்னைவிட்டு போவதில்லை என்றேன் .

    இருள் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னை ஒரு ஒளியாக பார்த்தேன் - அனால் அந்த ஒளி என் மனதை உளியாக ஏன் வதைத்து என்றே புரியவில்லை - நீ என்றும் நன்றாக , நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை நாடினேன் - இறைவன் என்னைப் பார்த்து சிரித்தான் - அவன் வாழவேண்டும் என்று நான் உனக்கு கொடுத்த ஆயுளை ஏன் உன் மகனுக்கு கொடுத்தாய் என்றான் ?

    வாழவேண்டும் என் மகன் என்று நினைத்தேன் - அவனோ நான் வாழ்ந்தது போதும் என்றே நினைக்கிறான் . அவன் ஆசைகளை என்றுமே நான் நிறைவேற்ற தவறியதில்லை இறைவா என்றேன் !!

    எனக்கு ஒரே ஒரு உதவி செய்வாயா மகனே ? நான் தங்கி இருந்த அறையில் கதிரவன் வர அச்சப்படுகிறான் - இந்த கோடையில் மனம் சுடுவதுபோல உடம்பும் சுடுகின்றது - சில மாற்றங்கள் தேவை - என்னை போல பல தாய் மார்கள் அங்கே போதிய வசதிகள் இல்லாமல் இறந்தே வாழ்கிறார்கள் - என் பென்ஷன் பணத்திலிருந்து அந்த முதியோர் இல்லத்தை சீரமைப்பாயா ? அங்கே இன்னும் என்னை போல பலர் வரக்கூடும் - அவர்களுக்கு எனக்கு இன்று கிடத்தைபோல நாலு பேர்களின் உதவி கிடைக்கும் வரை உன் உதவி அவர்களின் உடல் வலியை சற்றே குறைக்கட்டுமே !!

    அன்புடன்

    ஒரு காலத்தில் உனக்கு தேவைப்பட்டவள்

    மகன் உணர்கிறான் - கதறுகிறான் - இறைவனை திட்டுகிறான்

    " நீ இருக்கின்றாயா - இருந்தால் உலகத்தில் எங்கே வாழ்கிறாய் - ஏன் என் தாயை என்னிடம் இருந்து பிரித்தாய் பித்தனே ! -பதில் சொல் !!! "

    இறைவன் அவன் காதில் மட்டும் மெதுவாக சொல்கிறான் .

    " இதுவரை தாய் என்று சொன்னாயே - அவளிடம் தான் நீ பிறந்தது முதல் இருக்கின்றேன் - நீ அவளை என்று வேண்டாம் என்று நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தாயோ அன்றே என்னையும் மரணம் தழுவிக்கொண்டது "

  6. #3614
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 29

    Seethakoka Chiluka | Minneti Suridu song

    அழகான வாணிஜெயராம், SPB குரலில் - தெலுங்கில் வரும் கதிரவன் தமிழில் ( 1000 தாமரைகள் மொட்டுக்களே ) காமனாக வருகிறான்


  7. #3615
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 30

    Surya Kireedam Devasuram



    அழகான சுந்தர மலையாளத்தில் ஆதவனை உச்சரிக்கும் பாடல் - மோகன்லால் அவர்களின் அமைதியான நடிப்பு - அதற்க்கு வலிமை சேர்க்கும் ரேவதியின் நடிப்பு - கேரள சூழலில் நம்மை மறக்க வைக்கும் பாடல் இது

  8. Likes Russellmai liked this post
  9. #3616
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 30 - Happiness everywhere

    From Bale Raman

    Engume Anandam......



    From Brathuku theruvu

    Andame anandam......



    Andaame Anandam (male version)



    Looks like we have a very happy crew in this thread. I thought it would be appropriate to post these songs !
    Last edited by rajraj; 10th May 2015 at 02:38 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Thanks rajeshkrv thanked for this post
    Likes chinnakkannan liked this post
  11. #3617
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மறந்து போன பாடல்கள்

    ஊரடங்கும் சாமத்துல


  12. #3618
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    வீட்டில் மோடெம் ஒர்க் செய்யவில்லை எனில் எதுவும் போஸ்ட்ம் செய்ய இயலவில்லை..(நெட்டே வரலையே)

    எனில் இன்று அல்லது நாளை சரிசெய்துவிடுவேன் என நினைக்கிறேன்..

    வாசு சார் மாலினி பாடலுக்கு நன்றி..இனிமேல் தான் கேட்கவேண்டும்.. ஆ.கை. நீ ரவி இனிமேல் தான் பார்க்க வேண்டும்..

    விரைவில் வாரேன்..

  13. #3619
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 31

    சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
    சூரிய சந்திரரோ ?
    வட்டக் கரியவிழி -கண்ணம்மா !
    வானக்கருமை கொல்லோ ?

    பட்டுக் கருநீலப் -புடவை
    பதித்த நல் வயிரம்
    நட்ட நடு நிசியில் - தெரியும்
    நட்ச்ச்திரங்களடீ !

    சோலை மலரொளியோ -உனது
    சுந்தரப்புன்னகை தான்
    நீலக்கடலலையே - உனது
    நெஞ்சிலலைகளடீ !

    கோலக் குயிலோசை -உனது
    குரலினிமையடீ !
    வாலைக்குமரியடி -கண்ணம்மா !
    மருவக் காதல் கொண்டேன் .

    சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா !
    சாத்திர மேதுக்கடீ ?
    ஆத்திரிங் கொண்டவர்க்கே - கண்ணாம்மா !
    சாத்திர முண்டோடீ ?

    மூத்தவர் சம்மதியில் - வதுவை
    முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடீ ! - இதுபார்
    கன்னத்து முத்தமொன்று !!




    ( movie -thiyaagu)

    பாரதி உன்னை இன்று யார் என்று கேட்க்கும் இந்த உலகத்திலே நீயும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றாய் -உன் அழகிய கவிதைகள் மூலமாக - நாங்களும் காதலித்தோம் கண்ணமாவை - உன் கவிதைகளை அவள் மீது அள்ளித்தெளித்தோம் - அவள் உன் கண்ணம்மா இல்லை - கவிதைகள் வேண்டாமாம் - கை நிறைய தங்க வளையல்கள் வேண்டுமாம் - " வாழிய நீ எம்மான் !" என்றாய் - அந்த எம்மானைத்தாங்கிய வெள்ளை காகிதங்கள் மட்டுமே தேவையாம் ! - இன்றைய காதலிலே வேகம் இருக்கின்றது - விவேகம் இல்லை - ஆசை இருக்கின்றது - அதற்க்கு அடிப்படையான அன்பு இல்லை - உறவை ஆரம்பிபதற்க்கு முன் பிரிவைத்தானே கற்று கொள்கிறார்கள் !! - பாரதி நீ விடுதலைக்கு அன்று போராடினாய் - இன்றைய தலைமுறையும் அந்த விடுதலைப்பத்திரத்திர்க்குத்தான் போராடிக்கொண்டிருக்கின்றது - உண்மையான கண்ணமாவை உன்னை தொலைத்தது போலவே தொலைத்துவிட்டோம் பாரதி -- நீ இன்னும் வாழ்வாய் - நாங்கள் வாழ்ந்துவிட்டோம் !!!!!
    Last edited by g94127302; 10th May 2015 at 05:29 PM.

  14. Likes chinnakkannan liked this post
  15. #3620
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 32

    புத்தம் புது காலை பொன்னிற வேளை
    என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
    புத்தம் புது காலை பொன்னிற வேளை
    என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
    பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
    இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான்
    தாளமோ
    மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
    குயிலோசையின் பரிபாஷைகள்
    அதிகாலையின் வரவேற்புகள்
    புத்தம் புது காலை பொன்னிற வேளை
    வானில் தோன்றும் கோலம் அது யார்
    போட்டதோ
    பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார்
    சேர்ததோ
    வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
    வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
    புத்தம் புது காலை பொன்னிற வேளை
    என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
    புத்தம் புது காலை பொன்னிற வேளை
    என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •