Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #81
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    CONGRATULATIONS AND BEST WISHES FOR THE NEW TEAM HEADED BY RAMKUMAR SIR
    duly assisted by raghavendran and murali sirs. Lot of expectations by sivaji fans and seniors like me in uphoding the NT FLAG very high ALWAYS.
    my belated greetings to kc sir for the grand opening of nt thread part15 with nadaswaram and related flashbacks.
    GREETINGS TO ALL NT FOLLOWERS.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்திரருக்கும் முரளிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  4. #83
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  5. Thanks KCSHEKAR thanked for this post
  6. #84
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வாழ்த்துக்கள் திரு.ராகவேந்திரன் & திரு.முரளி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #85
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Hearty congrats to M/s. Raghavender and Murali.

    Also, very many thanks to Mr. Senthilvel Sivaraj for uploading invaluable articles.

    Regards,

    R. Parthasarathy

  8. #86
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவாளர்கள் இராகவேந்திரர்,முரளி ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு என்னுடைய
    வாழ்த்துகள்..
    அன்புடன் கோபு..

  9. #87
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Russellmai liked this post
  11. #88
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த ஒரு சில தினங்களாக காலை மற்றும் மாலை செய்தித்தாளை ஆக்ரமித்த செய்தி ஒன்று - சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படம் படு தோல்வி அடைந்ததால் விநியோகஸ்தர் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர், அந்த படத்தின் பினாமி தயாரிப்பாளர்களோ அல்லது அந்த படத்தை promote செய்த நாயகனோ, தங்களுக்கு நேர்ந்த கோடிகணக்கான நஷ்டத்திற்கு பரிகாரம் காண்பார்கள் என்று. பினாமிகள் செய்தார்களோ இல்லையோ அந்த நாயகன் ஒரு குழுவை ஏற்பாடுசெய்து நஷ்டக்கணக்கு என்ன என்று அறிந்து தகுந்த பரிகாரம் செய்தார்.

    அதன் படி அந்த குழுவை சேர்ந்த மூத்தவர் கொடுத்த தகவலின் பேரின் சுமார் 3.3 கோடி ருபாய் சமமாக பகிர்ந்து கொடுக்க முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    விநியோகஸ்தர்கள் அந்த பத்தில் ஒரு பங்கு பணம் வைத்து ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் அதற்காக நூதன பிச்சை போராட்டம் ஒன்றை விரைவில் நடிகர் வீட்டின் முன்பு செய்யபோவதாக அறிக்கை கொடுத்துள்ளனர்.

    நடிகர்கள் தயாரிப்பாளர்களை வேண்டுமென்றே போண்டியாக்குவது தமிழகத்திற்கு மற்றும் அண்டைமாநிலங்களுக்கு புதிதல்ல. நடிகர் சொன்ன நேரத்திற்கு வந்து படத்தை நிறைவு செய்து கொடுத்தாலே போதும். தயாரிப்பலர்களுக்கு நிறைந்த லாபம் கிடைக்கும். ஆனால் நம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டே அந்த கலாசாரம் இல்லாமல் போய்விட்டது. குறித்த நேரத்திற்கு படபிடிப்பிற்க்கு வராமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை காயவிடுவது சிலருக்கு இனிப்பு சாப்பிடுவதை போல ஒரு செயலாகும். அதே போல தயாரிப்பாளர் நல்ல கறவை மாடு என்று தெரிந்தால் அந்த தயாரிப்பாளரை முடிந்தவரையில் கறந்து முக்கால்வாசி ஓட்டண்டியாக்கி வேடிக்கை பார்க்கும் sadist நடிகர்களும் இருக்கிறார்கள்.

    இந்த sadist torture தாங்காமல் ஒட்டாண்டியான தயாரிப்பாளர், உயிர் விட்ட தயாரிப்பாளர்கள் பலர் தமிழ் திரையுலகில் உதாரண புருஷர்களாக உள்ளார்கள்.

    படங்களில் பஞ்ச் வசனம் பேசுவதை நிஜ வாழிவில் உண்மை என்று நம்பி கெட்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். வீம்புக்காக மதோன்னத வெற்றி...பிரம்மாண்ட வெற்றி ....அசுர வெற்றி....இதனை கோடி வசூல் ..அத்தனை கோடி வசூல் என்று ஒரு மாநிலத்தில் கால் பங்கு BUDGET தொகையை வசூல் செய்ததாக கூறி மானியம் விட்டு ஓலமிட்டாலும்...உள்ளுக்குள் எந்தளவிற்கு நொந்து noodles ஆகி போனார்கள்..போகிறார்கள் என்பதை விசாரித்தால் பல நல்லவர்கள் ஒட்டாண்டியான உண்மை கதைகள் உண்மையான திரை உலக விற்பன்னர்கள் நன்கு அறிவார்கள்.

    இந்த செய்தி படித்தபோது நடிகர் திலகம் அவர்களின் மேன்மையும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர், திரை அரங்கு உரிமையாளர் வரை எந்தளவிர்ற்கு தன்னுடைய படங்கள் மூலம் லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளார் என்பதை எண்ணி பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது.

    ஒரு சிறு உதாரணம் :

    நடிகர் திலகத்தை வைத்து ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் முடிசெய்யும் பட்சத்தில் ஒரு சில மற்ற நடிகர்களை வைத்து தயாரிக்கப்படும் படத்தின் தயாரிப்பு செலவை விட, பல லட்சம் ரூபாய்கள் மிச்சமாகின்றன..! நிறைந்த லாபமும் நடிகர் திலகம் அவர்கள் படம் மூலம் கிடைக்கிறது..!

    அது எப்படி என்றால்....

    1) நடிகர்திலகம் அவர்களுடைய நேரம் தவறாமை ஒரு முக்கிய காரணம் !

    அதாவது குறித்த நேரத்தில் படபிடிப்பு / காட்சிகள் தொடங்கி குறித்த நேரத்தில் படபிடிப்பு அல்லது காட்சி நிறைவடைகிறது ! - ஒரு காட்சி அல்லது ஒரு நாள் காட்சி எடுக்க சுமார் 10,000 முதல் 20,000 ருபாய் செலவாகிறது என்று வைத்துகொண்டால், நடிகர் திலகம் அவர்கள் நடிக்கும் படம் என்றால் நிச்சயமாக திட்டமிட்டபடி அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்டுவிடும், நடிகர் திலகம் அவர்களின் நேரம் தவறாமையால். இதே ஒரு சில மற்ற நடிகர்கள் படபிடிப்பில் இந்த guarantee கிடைக்கவே கிடைக்காது. காட்சி நடந்தால் நடக்கும் ..நடக்கவில்லை என்றால் எப்போது நடிகர் வருவாரோ அப்போது நடக்கும். இதை கேட்கப்போனால் கோ-operation என்பது பூரண ஒத்துழயாமையாக மாறி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை mental torture செய்துவிடுவார்கள் ஒரு சில நாயகர்கள்...இதற்க்கு பயந்தே பல தயாரிப்பாளர்கள் மாட்டிகொண்டாயிற்று...வேறு வழியில்லை..எப்படியோ முடித்து தொலைப்போம் என்று வயிறு எரிந்து தமது விதியை நொந்துகொண்டிருப்பர்.

    நடிகர் திலகம் படத்தில் நடிப்பதால் அதுவரை ஷூட்டிங்குக்கு லேட்டாக வந்தே பழக்கப்பட்ட ஒரு சில திமிர் பிடித்த கதாநாயகியர், ஒரு சில துணை நடிகர்கள் நடிகர் திலகம் படங்களில் தங்களுடைய வாலை சுருட்டிக்கொண்டு நேரத்திற்கு வந்து நடித்து கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அப்படி ஒரு ஒழுக்கம் நடிகர் திலகம் படங்களில் படப்பிடிப்பில் மட்டுமே காணமுடியும் அது அவர் இப்பூவுலகை விட்டு பிரிந்த வரையில் நடந்த ஒன்றாகும். ஆகையால் நடிகர் திலகம் அவர்கள் படம் என்றால் இப்படியும் பல நன்மைகள் தயாரிப்பாளர்களுக்கு போய் சேர்ந்ததுண்டு.

    ஒரு சில நடிகர்கள் குறிப்பிட்ட காட்சிகளில் எப்படி நடிக்கவேண்டும் என்று தெரியாமால் காட்சி பிழை ஏற்பட்டு பல டேக் எடுத்து நடிக்கவேண்டிய சந்தர்பங்களில் தயாரிப்பு செலவு கூடும் அதிக film ரோல் பயன்படுத்துவதால். இந்த செலவு நடிகர் திலகம் படங்களில் வருவதற்கான வாய்ப்பே இல்லை. காரணம் தமிழ் திரை உலகில் single take actor என்று புகழ் நடிகர் திலகத்திற்கு மட்டுமே உண்டு..! ஆகையால் film role கூடுதலாக செலவு என்று நடிகர் திலகம் படங்களில் வருவது கடினம் !

    இப்படி பல வழிகளில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கு நடிகர் திலகம் மூலம் லாபம் வந்ததால் தான் ஒரு சில நடிகர்கள் ஒரு சாதாரண மசாலா படத்தை முடிப்பதற்குள் நடிகர் திலகம் அவர்களுடைய மூன்று திரைப்படங்கள் முடிந்து வெளிவந்துவிடும் அதில் ஒருபடம் சமூக படம், ஒரு படம் வரலாற்றுப்படம்...ஒரு படம் இதிகாச படம் இப்படி வித்தியாசமுள்ள படங்களாகவும் இருக்கும்...!

    குறித்த காலத்தில் படங்கள் எடுத்து முடித்து அதை வெளியிட்டு லாபம் பார்க்கவும் முடிந்ததால் தான் பல தயாரிப்பாளர்கள் நடிகர் திலகம் அவர்களை வைத்து படம் எடுக்க 1953 முதல் 1987 வரை படையெடுத்து வந்தனர்.

    நடிகர் திலகம் அவர்களுடைய படங்கள் சராசரி வருடத்திற்கு 8 முதல் அதிகபட்சமாக 13 வரை கூட வெளிவந்துள்ளது ..!

    தமிழ் திரை உலகின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் நடிகர் திலகம் படங்களை மட்டுமே வைத்துதான் 1953 முதல் 1987 வரை இருந்துள்ளது என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது ! நடிகர் திலகம் படம் நஷ்டம் அடைந்து எந்த தயாரிப்பாளரோ அல்லது விநியோகஸ்தர்களோ இது போல உண்ணாவிரதமோ அல்லது நூதன பிச்சை திட்டமோ நடத்தியதாக வரலாறு இல்லை. நடிகர் திலகத்தால் போண்டியான தயாரிப்பாளரோ விநியோகச்தரோ இருந்ததாக எங்கும் எதிலும் கேள்விகூட நாம் பட்டதில்லை...புத்தகங்களில் படித்ததுகூட இல்லை என்பது தமிழனாகிய ஒவொருவரும் பெருமை படகூடிய விஷயம்.!

    இனியாவது ....தகுதி அறிந்து சம்பளம் கொடுத்தால்ஒழிய இவர்களை யாரும் காப்பாற்ற முடியாது !
    Last edited by RavikiranSurya; 15th February 2015 at 10:01 PM.

  12. Likes eehaiupehazij liked this post
  13. #89
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Russellmai, eehaiupehazij liked this post
  15. #90
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes Russellmai liked this post
Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •