Page 194 of 402 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #1931
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




    என் அண்ணனும் இதய மன்னனும்

    ஒருவர் ஒரு துறையில் காலூன்றி முத்திரை பதிப்பதே அரிது. காலூன்றிய அந்த துறையில் சாதனை படைப்பது அதைவிட அரிது. இரண்டு துறைகளில் சாதனை படைப்பது என்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் கலைத்துறை, அரசியல்துறை என இரண்டு துறைகளிலும் சாதனை படைத்தவர் நம் தலைவர். அரசியல்துறையில் அவர் சாதனை படைப்பதற்கும் அது சரித்திரமாவதற்கும் உதவியது திண்டுக்கல் இடைத்தேர்தலின் வெற்றி. திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நாள் இன்று.

    அந்த தேர்தலில் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டு 7 மாதக்குழந்தையாக தவழ்ந்த அ.தி.மு.க.வை மக்கள் வாரி அணைத்து வெற்றியை பரிசளித்தனர். இப்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்கு அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்று தெரிந்திருக்கும். ஆனால், அந்த வெற்றியின் வீரியம் பற்றி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

    ஒருபுறம் அப்போது மாநில அதிகாரத்தில் இருந்த திமுகவின் அசுர பலத்தோடு அக்கட்சியின் வேட்பாளர் திரு. பொன்.முத்துராமலிங்கம். மறுபுறம் சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் வேட்பாளர் திரு.சீமைச்சாமி. இன்னொருபுறம் அப்போதிருந்த அரசியல் சூழலில் திமுகவை விடவும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கிய ஸ்தாபன காங்கிரஸ் (தேர்தலில் 2-வது இடத்தை அக்கட்சி பெற்றதே சான்று) வேட்பாளர் திரு.என்.எஸ்.வி. சித்தன்.

    இந்தக் கட்சிகளை எல்லாம் மீறி அதிமுகவின் வேட்பாளர் திரு.மாயத்தேவர் அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் என்றால் புரட்சித் தலைவர் என்ற தனி மனிதர், மக்களின் ஆதரவோடு செய்த மிகப் பெரிய சாதனை. அதிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையான 4 லட்சத்து 91 ஆயிரத்து 553 வாக்குகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930. பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை விடவும் கூடுதலாக அதிமுக பெற்றது என்றால் அந்த வெற்றியின் வீச்சை புரிந்து கொள்ள வேண்டும்.

    அரசியல்துறையில் முதன் முறையாக இந்த வெற்றி சாதனையை படைப்பதற்கு முன்பாக பல்வேறு இடையூறுகள், சதிகள் ஆகியவற்றை முறியடித்து மே 11ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டு படம் அமோக வெற்றி பெற்றதன் மூலம் திரைப்படத்துறையிலும் சாதனை படைத்தார். இது நடந்த 12-வது நாளில் அரசியலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனையைச் செய்த சாதனைச் சக்ரவர்த்தி நம் தலைவர் என்பது, நம்மை நெஞ்சு விம்ம பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

    இந்த வெற்றிகளுக்கு காரணம் பேரறிஞர் அண்ணாவை ‘என் அண்ணன்’ என்று தலைவர் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரின் ஆசியோடும் மக்களின் ஆதரவோடும் தமிழகத்தின் இதய மன்னனாக தலைவர் இன்றும் விளங்குகிறார். என்றும் விளங்குவார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Likes mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1932
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -20/05/2015










  5. Thanks mgrbaskaran thanked for this post
  6. #1933
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  7. Thanks mgrbaskaran thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  8. #1934
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    The following is the posting in Rajinifans.com:

    https://www.facebook.com/fbrajinifans


    It was 1991. Thalapathi was making waves all over Tamil Nadu. In an TV interview, Srividya was saying that she was very proud of acting with Rajni as his mother. Like Sujatha, Srividhya also become Heroine-turned-mother in Rajni's films. She concluded the interview by saying that there would not any change in the rule of Rajni - Kamal era in Tamil Cinema for the next 25 years. After watching her statement, one of my uncle commented, "Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema.. how Rajni & Kamal could.". But, things has been changed. Now, we could say that there will be some impact of Rajni & Kamal in Tamil Cinema for the next 30 years, we can sure.
    In early 90s, Srividhya would be in news whenever she did mother role in Rajni film. When Rajni was started his career, Srividhya was a leading artist. Rajni was not comfortable in romantics scenes in Aboorva Raagangal. K.B had to go for so many re-takes and only few portions of the same was handled during the final production. Whenever we ask about Rajni, Srividhya didn't forget to mention the same.
    Srividhya couldn't forget the role she played in Manithan which got good appreciation among the audience. By that time, there was no one to make a remark by doing sister role. Rajni himself offerd Srividhya to play the same. Srividhya got so many combination scenes in the film compared to heroine.
    Personally i couldn't forget one of her interview when the Thalapathi shooting was on. By that time, any bit news about Thalapathy was really treat for the fans. Media was not like as today. She was the first person gave some hint about the song "Rakkamma Kaiyathattu" in which she told that Rajni tried some unusual steps in the film which had come very good. Compare to Rajn's usual dance movements in Mappillai, Panakkaran, Dharmadurai & Athisiyapiravi, it doesn't have more stuff but it has come out very well, as told.
    It's still a question mark of why she left Tamil cinema and settled in Kerala during her last days. It's really a lose for tamil cinema especially we missed one more personality who was very close to Rajni's earlier days.
    She passed away in the year 2006

    My response follows:

    "Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema? Please avoid such comments. Could your uncle say that MGR and Shivaji have exited from Tamil Cinema till today? To praise SS it it not required to make such comments about personalities who are still the pillairs of Tamil Cinema. In fact they laid the foundation stone.

    Devotees and Fans of MT and NT should never allow such postings for any reason whatsoever.
    Last edited by saileshbasu; 20th May 2015 at 10:11 PM.

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  10. #1935
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like






  11. Thanks mgrbaskaran thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  12. #1936
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    The following is the posting in Rajinifans.com:

    https://www.facebook.com/fbrajinifans



    My response follows:

    "Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema? Please avoid such comments. Could your uncle say that MGR and Shivaji have exited from Tamil Cinema till today? To praise SS it it not required to make such comments about personalities who are still the pillairs of Tamil Cinema. In fact they laid the foundation stone.

    Devotees and Fans of MT and NT should never allow such postings for any reason whatsoever.
    சைலேஷ் சார்
    முக நூலில் வெளிவந்த ரசிகர்களின் கருத்துக்கள் - அவர்களுடைய மனோ பாவனையை காட்டுகிறது .சில ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு நடிகரை பிடிக்காத நிலையில் அவரை பற்றி தவறானமுறையில் விமர்சனம் செய்வது மூலம் அவர்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது .கோடீஸ்வரனாக இருந்த தயாரிப்பாளர் பஸ்ஸில் டிக்கெட் வாங்க முடியாத நிலையில் இருந்தார் . ஒரு தயாரிப்பாளர்கடனாளியாக நொந்து மடிந்தார்.இப்படி எல்லாம் நினைவு கூர்ந்து மகிழ்பவர்கள் எந்த காலத்திலும் தங்களை மாற்றி கொள்ள மாட்டார்கள் .விரக்தியின் உச்சம் . விட்டு விடுங்கள் .


  13. #1937
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் அண்ணனும் இதய மன்னனும்
    அருமையான கட்டுரை . நன்றி திரு கலைவேந்தன் .
    சரவணா பிலிம்ஸ் திரு வேலு மணி மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் வினோத் சார் .

  14. #1938
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சித்திரம் . மக்கள் ரசனைகளுக்கு ஏற்றவாறு நடிப்பை மட்டும் தராமல் சமுதாய சீர்கேடுகளை வெளிப்படுத்தி அதற்குரிய தீர்வுகளையும் எடுத்து கூறிமக்களின் மனங்களில் இடம் பிடிப்பது என்பது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு சாத்தியமாயிற்று .


    பணத்தோட்டம் -

    வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்கள் - தோல்விகள் சந்திக்க ஒருவர் தன்னை திடப்படுத்தி கொள்ளவும் , வாழ்வில் நம்பிக்கை ஏற்படவும் இந்த பாடல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நமக்கு வழங்கியுள்ளார் .


  15. #1939
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படகோட்டி

    மீனவர்கள் வாழக்கையில் இருந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளை மிக தெளிவாக கூறிய படம் .
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ...
    தரை மேல் பிறக்க வைத்தான் ...
    இரண்டு பாடல்கள் .மீனவர்களின் துயரங்களை எடுத்து கூறிய படம் .




  16. #1940
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலங்கரை விளக்கம்
    சங்கே முழங்கு - பாரதி தாசனின் பாடல் .சீர்காழி - சுசீலா இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் நம்மை மெய் மறக்க செய்யும் இனிய பாடல் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •