Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #13
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes ainefal liked this post
  7. #14
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #15
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன்!!.....

    சினிமாவில் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் கொட்டி “நாடோடி மன்னன்” படத்தைத் தொடங்கிய எம்ஜிஆர், ஆரம்பத்தில் கறுப்பு=வெள்ளையில் எடுக்கத் துவங்கி, பின் பாதியில் உள்ள ஏழாயிரம் அடிகளை வண்ணமயமாக எடுத்தார்.” நான் சம்பாதிச்ச புகழ்-பணம் அத்தனையும் இதுல தான் கொட்டியிருக்கிறேன்! இந்தப் படம் ஜெயிச்சா நான் மன்னன்…. இல்லேன்னா நாடோடி! எனக்கு மன்னனாக மகுடம் சூட்டுவதும், நாடோடியாக்குவதும் மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது…” படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கத் திரண்டு வரும் ரசிகர் படையை..பொதுமக்களைப் பார்த்து எம்ஜிஆர் இப்படி தமாஷாகச் சொல்வாராம்!

    அப்போது “நீங்க எப்பவுமே எங்களுக்கு முடிசூடா மன்னன் தான்” என ரசிகர்கள் பக்கமிருந்து ஆரவாரத்துடன் பதில் வருமாம்!

    “நாடோடி மன்னன்” பிரமாண்டமான படம் என்பதால் பணத்தை விழுங்கிக் கொண்டே வந்தது. பணமுடை ஏற்பட்ட போது, தன் கணவர் யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது என நினைத்த ஜானகியம்மையார் தன் நகைகளைக் கொடுத்து பட வளர்ச்சிக்கு உதவினாராம்.

    இவ்வளவு தடைகளைத் தாண்டி நாடோடி மன்னன் ரிலீஸாகி, தமிழ்த் திரைத் துறையில் இதற்கு முன்பிருந்த எல்லா ரெக்கார்டுகளையும் தூள் தூளாக நொறுக்கி, வரலாறு காணாத வசூல் சாதனையை செய்தது. திரையிட்ட இடத்தில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 200 நாட்களைக் கடந்து ஓடி, எம்ஜிஆரை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துக்கு கொண்டு போனது!

    திறமைசாலியைக் கண்டால் அவரை தி.மு.கழகத்தில் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் கருணாநிது. ஆகவே, நண்பர் என்கிற உரிமையில் கழகக் கொள்கையை அவ்வப்போது எம்ஜிஆருக்கு எடுத்துச் சொல்லி கட்சியில் சேரும்படி வற்புறுத்தி வந்தார். ஒரு நாள் விடாப்பிடியாக எம்ஜிஆரை அழைத்துப் போய் அண்ணா முன் நிறுத்தியே விட்டார். அண்ணாவின் அன்பும், பண்பும் எம்ஜிஆரைக் கவர்ந்தது. கதர் உடை….காசி மணி மாலை, நெற்றி நிறைய விபூதி ….என காந்தி பக்தராக வலம் வந்த எம்ஜிஆர், அதையெல்லாம் துறந்து கருப்பு – சிவப்பு கலருக்கு மாறி, அண்ணாவின் தம்பியாக மாறினார். கட்சியில் சேர்ந்த பிறகு தன் படங்களில் கொள்கைப் பிரச்சாரம் செய்தும், மேடையில் தோன்றி முழக்கமிடவும் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கருப்பு – சிவப்பு உடையணிந்து உதயசூரியன் – கதிரவன் என தன் கேரக்டருக்கு பெயர் சூடிக்கொண்டு, அறிவிப்பு செய்யாத கொள்கை பரப்புச் செயலாளராகவே வலம் வந்தார்!!

    நன்றி திரு பாலபாரதி!!.

  9. #16
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் வரும் உரையாடல்.
    அரசவையில் முடிசூட்டும் காட்சி முடிந்தபின், புரட்சி தலைவர் புதிய சட்டங்களின் படிக்க சொல்லுவார்.
    படிக்கப்படும் சட்டங்களின் பட்டியல், பெரும்பாலும், எளிய மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
    இதை கேட்டு விட்டு இடையில், (மறைந்த வில்லன்) பி.எஸ்.வீரப்பா அவர்கள்,
    'அப்படியென்றால், நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள், அல்லவா?' என்பார்.
    அதற்கு புரட்சி தலைவர்,
    'தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள்
    ஆனால் ஏழைகள் இருக்கமாட்டார்கள்'
    என்று பதிலளிப்பார்.
    இதிலிருந்து, மூன்று உண்மைகளை உலகிற்கு உணர்த்தி விட்டார்...
    . ஒன்று, திரைப்படங்களில்
    அவர் கூறிய வரிகள்,
    வெறும் வசனங்கள் மட்டுமல்ல,
    அவை எளிய மக்களின் நல்வாழ்வினை
    வேண்டி, அவரது மனதின்
    அடித்தளத்திலிருந்து
    தோன்றிய உணர்ச்சிகள், என்பதை
    . இரண்டாவதாக, திரைப்படங்களில்
    தான் எதை கூறினாரோ
    அதன்படியே தனது வாழ்க்கையில்
    பின்பற்றி வாழ்ந்தும் காட்டினார், என்பதை
    . மூன்றாவதாக, தான் ஒரு விஷயத்தை
    செய்ய முடிந்தால், மற்றவர்களும்
    அதை சாதிக்க இயலும் என்ற உண்மையை.
    அதனால்தான், இன்றும் மக்கள் அவரை தொடர்ந்து வணங்குகின்றனர்.
    வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

  10. #17
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வேலை சுமையினில் ,இணையத்திற்கு வர முடியவில்லை - தாமதமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் - திரு குமார் அவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த 15 வது பாகம் பல வெற்றிகளை கடப்பதுடன் , NT திரியுடன் இணைய ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் - நாம் ஏற்காத வரையில் , நம்மை யார் திட்டினாலும் , அந்த திட்டுக்கள் நமக்கு சொந்தமாகுவதில்லை - அப்படி திட்டுபவர்கள் தான் அந்த கடும் வார்த்தைகளுக்கு சொந்தமானவர்கள் .. இப்படி எடுத்துக்கொண்டு சென்றால் நம் திரிகளில் மாற்று கருத்துகளுக்கு இடமே இருக்காது - என்னை பொறுத்த வரையில் மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் இரண்டு creativities . அந்த கலைத்தாய் தான் creator - யாரை வருத்தி பேசினாலும் - அந்த கலைத்தாயை திட்டுவதர்க்குத்தான் இணையாகும் . ஆரோக்கியமான நட்பிற்கு இந்த ஆண்டு ஒரு வித்தாக இருக்கட்டும் .

    அன்புடன்
    ரவி

  11. Likes ainefal liked this post
  12. #18
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரி பாகம் 15-ஐ துவக்கி வைத்திருக்கும் திரு. சி.எஸ். குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேற்று இரவு பதிவு போட்டு விட்டு இப்போதுதான் திரியை பார்த்தால் 14 முடிந்து 15 தொடங்கி இருக்கிறது. இனிய அதிர்ச்சி. கடந்த திரியில் பங்களிப்பு செய்த சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
    அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தன் உடலை வருத்திக் கொண்டு பதிவுகள் போட்டு மக்கள் திலகம் திரியின் 14-ம் பாகத்தை விரைவில் முடித்த திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.

    மக்கள் திலகம் திரியின் 15-ம் பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி.
    திரியின் புதிய பாகத்தை தொடங்கி வைத்த திரு.குமார் சாரின் பதிவுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் திரு.எஸ்.வி.சாரின் பதிவுக்கும் லைக் போட்ட நண்பர் திரு.ஜோ அவர்களுக்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. #19
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

    தங்களது புதிய ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ குறுந்தொடர் அருமை. இதைத்தான் நான் நேற்றே சொன்னேன். தங்களது வித்தியாசமான கான்ஸெப்டகளை ரசிக்கிறேன் என்று. உங்கள் கருத்துக்களை பார்த்தாலே நீங்கள் எதையும் பாஸிட்டிவாக சிந்திக்கும் நேர்மறை சிந்தனையாளர் என்று தெரிகிறது. அந்தக் கருத்துக்களுக்கேற்ற பாடல்களையும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் தங்கள் திறமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #20
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் மீது கொண்ட அன்பினாலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் எண்ணிக்கை சிறியதாயினும் 600 பதிவுகளுக்காக பாராட்டு தெரிவித்த திரு.எஸ்.வி. திரு.ரவிச்சந்திரன், திரு.சிவாஜி செந்தில், திரு.குமார் சார், திரு.சைலேஷ் சார், திரு.சுஹராம் ஆகியாரின் வாழ்த்துக்களை சங்கோஜத்துடன் ஏற்கிறேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 16th April 2015 at 05:40 PM.

Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •