Page 327 of 400 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3261
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ரவி ஜி
    டேப் ராதா மாணிக்கத்தின் கேளுங்கள் தரப்படும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    அந்த குரலே நம்மை அந்த பாடலுக்குள் இழுத்து செல்லும்

    நன்றி நன்றி
    ராஜேஷ் - பொறுமையுடன் படிப்பதற்கும் , பாடல்களை ரசிப்பதற்கும் மிகவும் நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பார்க்கும் பார்வை , கோணங்கள் மாறுபடும் போது அர்த்தங்கள் அனர்த்தங்களாகி விடுகின்றன - இல்லையா ck // மிகச் சரி ரவி

  4. #3263
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நேற்று 30.08.2015 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், நாம் தேர்ந்தெடுத்த பாடல்களும் பின்னணி இசையும் பல்வேறு பங்களிப்பாளர்களை அதில் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே அமைந்தன. இதனால் பல பாடல்களை நம்மால் இதில் சேர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரின் இணையில் வெளிவந்த படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அவற்றிலிருந்து ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்காக நம்மால் எவ்வளவு இடம் பெறச் செய்ய முடியுமோ அதைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சி நிரலை அமைத்தோம்.

    இதில் இடம் பெற்ற பாடல்களாவன -

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - புதையல்
    தாழையாம் பூ முடிச்சு - பாகப் பிரிவினை
    பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
    மயங்குகிறாள் ஒரு மாது - பாச மலர்
    நான் பேச நினைப்பதெல்லாம் - பாவ மன்னிப்பு

    புதிய பறவை - முகப்பிசை

    பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா
    இது வேறுலகம் - நிச்சய தாம்பூலம்
    பந்தல் இருந்தால் கொடி படரும் - பந்தபாசம்
    ஆறோடும் மண்ணில் - பழநி
    ஓ..லிட்டில் ஃப்ளவர் - நீலவானம்

    தெய்வ மகன் - சிதார் இசை

    மகராஜா ஒரு மகராணி - இரு மலர்கள்
    பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு
    அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன்
    சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
    ஆகாயப் பந்தலிலே - பொன்னூஞ்சல்

    சிவந்த மண் - பார்வை யுவராணி பாடலுக்கு முந்தைய வெளிநாட்டுச் சுற்றுலாக் காட்சி

    சொர்க்கம் பக்கத்தில் - எங்க மாமா
    பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
    ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு
    ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்
    இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்

    ராஜா - ரந்தாவா வுடனான சண்டைக் காட்சி

    அலங்காரம் கலையாத - ரோஜாவின் ராஜா
    கங்கை யமுனை - இமயம்
    தலைவன் தலைவி - மோகன புன்னகை

    சுமதி என் சுந்தரி - இறுதிக் காட்சி

    ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன்தான் மனிதன்

    மெல்லிசை மன்னரின் பேட்டி - தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி

    தேவனே என்னைப் பாருங்கள் - ஞான ஒளி
    தெய்வத்தின் தேரெடுத்து - பாட்டும் பரதமும்

    கௌரவம் - கேஸ்கட்டுக் காட்சி

    ஞான ஒளி - கருவிசை - மூன்று காட்சிகள்

    தங்கப் பதக்கம் - கருவிசை - இரு காட்சிகள்

    ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

    மெல்லிசை மன்னரின் பேட்டி - எங்கே நிம்மதி பாடலைப் பற்றி

    எங்கே நிம்மதி - புதிய பறவை

    உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்

    நிகழ்ச்சியில் முரளியின் சூப்பரான தொகுப்புரை (வழக்கம் போல) மக்களிடம் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது.

    பாடல்களைத் தொகுக்கின்ற வேலையே முந்தைய நாள் தான் முடிவடைந்தது. நேற்று காலையும் இருவரும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே தொகுப்புரை எவ்வாறு இருக்க வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்கின்ற திட்டமிடலை மேற்கொள்ள இயலவில்லை. ஆதலினால் இருவருமே அந்நேரத்தில் பாடல்களைப் பற்றிய விவரங்களை மக்களிடம் Extemporeயாக எடுத்துரைத்தோம். படங்களின் வெளியீடு மற்றும் அதன் தொடர்பான விவரங்கள், பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை முரளி தன்னுடைய அபார நினைவாற்றலால் எடுத்துக் கூற, அவ்வப்போது அந்தப் பாடல் அல்லது அந்தப் பின்னணி இசைக் கோப்புகளில் உள்ள சிறப்பம்சங்களை அடியேனும் எடுத்துக் கூறினோம். லோசான டென்ஷனோடு தான் நாங்கள் நிகழ்ச்சியைத் துவக்கினோம், இருந்தாலும் ஒவ்வொரு பாடல் அல்லது இசை முடிந்த பின்னும் பலத்த கரகோஷத்துடன் ஆடியன்ஸ் வரவேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல, தொகுப்புரைகளும் பல இடங்களில் கரவொலியைப் பெற்றது, எங்களுக்கு ஊக்கமளித்தது.

    பந்த பாசம் படத்தில் இடம் பெற்ற பந்தல் இருந்தால் கொடி படரும் பாடலையும் பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடலையும் பலர் நேற்றுத் தான் முதன் முதலில் பார்தததாகக் கூறினார்கள். இது எங்களுடைய தேர்விற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

    பின்னணி இசைக் கோப்புகள் தேர்வும் மிகவும் சிரமமான காரியமாகவும் சவாலாகவும் விளங்கியது. மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய முழுத்திறமையையும் காட்டுவதற்கு அதிக வாய்ப்பளித்தவை நடிகர் திலகத்தின் படங்களே என நான் சொல்லுவேன்.

    பல்வேறு விதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த காட்சிகளை நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் மட்டுமே அதிகம் காண முடியும் என்ற கோணத்தில் பார்த்தால் அத்தனையிலும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையமைப்பின் பல்வேறு பரிமாணங்களை நாம் காண முடியும். இது மற்ற படங்களில் அந்த அளவிற்குக் கிட்டியதா என்பது கேள்விக்குறியே. எனவே இந்த அடிப்படையில் அவருடைய பின்னணி இசைக்காட்சித் தேர்வும் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

    முகப்பிசையைப் பொறுத்த மட்டில் எடுத்த வுடனேயே எங்கள் இருவருக்குமே ஒரு சேரத் தோன்றியது புதிய பறவை டைட்டில் இசையே. எனவே அதனைத் தேர்ந்தெடுத்தோம். அதில் இடம் பெற்றிருந்த இசைக்கருவிகள், குறிப்பாக பாங்கோஸ் ஒலி, ஒரு விதமான திகிலை பார்வையாளரிடம் உண்டாக்கி படத்திற்கு அங்கேயே ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து விட்டது.

    ராஜா படத்தின் சண்டைக்காட்சியைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தம், இயற்கை என்றெல்லாம் கூறப்படுவது சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கே உரியது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த காட்சி என்பதால் ரந்தாவாவுடனான சண்டைக்காட்சியை எடுத்துக்கொண்டோம். எதிரி அடிக்கிறானா, முகத்தில் குத்துகிறானா, உதைக்கிறானா என்பது எதுவும் தெரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்பப் பட்ட காலத்தில் மெல்லிசை மன்னர் சண்டைக் காட்சிகளில் மிகவும் அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்தி ஒலியமைப்பைக் கொண்டு வருவார். பஞ்ச் விழும் போது மட்டுமே அந்த பஞ்சுக்கான ஒலியினை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் இணைப்பார். அதே போல் பலசாலியான எதிரியுடன் மோதும் போது நடிகர் திலகம் இரண்டு மூன்று முறை அடி வாங்குவதும், எதிரி காலால் உதைக்கும் பொழுது அதனை எதிர்க்க முடியாமல் விழுவதும் மிகவும் யதார்த்தமானதாகும். அதன் பிறகு வாலிபன் என்கிற முறையில் உள்ள சுறுசுறுப்பின் காரணமாக எதிரியை அநாயாசமாக எதிர்கொண்டு சமாளிப்பதும் இயல்பான சண்டைக் காட்சிக்குஉதாரணங்கள்.
    எனவே இதற்கேற்ப மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். குறிப்பாக மான் கொம்பினை எடுத்துக்கொம்டு ரந்தாவா குத்த வரும் போது பாங்கோஸின் ஒலியில் தாளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.

    இறுதியில் கதாநாயகன் தோல்வியும் அடையாமல் வெற்றியும் அடையாமல் தன் முதலாளியால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு இயல்பான பாத்திரப்படைப்புகளைக் கொண்டவை என்பதற்கு மற்றோர் சான்று.

    சிவந்த மண் திரைக்காவியத்தின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாததாகும். இந்தக் காலத்தில் கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாடல் கம்போஸிங்கிற்கே இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். கடைசியில் அங்கிருந்து அவர்கள் கம்போஸ் செய்வது ஏதேனும் ஒரு குத்துப்பாட்டாக இருக்கும் அல்லது வெளிநாட்டு இசைத்தட்டுகளில் இருந்து உருவிய மெட்டாக இருக்கும். ஆனால் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் இங்கிருந்தவாறே பல வெளிநாட்டு இசையமைப்புகளைத் தன் இசையமைப்பில் அபாரமாக கொண்டு வந்திருப்பார். அதிலும் இந்தப் பின்னணி இசை, நாயகன் நாயகி இருவரும் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலா செல்வது போல வரும் கனவுக் காட்சியாகும். கனவுக்காட்சி தானே யார் கேட்கப்போகிறார்கள் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று உரிமை எடுத்துக்கொள்ளாமல் அதிலும் முழு ஈடுபாட்டுடன் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டு வந்தது மெல்லிசை மன்னரின் தன்னம்பிக்கைக்கும் அபார திறமைக்கும் எடுத்துக்காட்டு.

    இந்தக் காட்சி 7 நிமிடங்களுக்குப் படத்தில் இடம் பெறுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகடுகளில் இக்காட்சியில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டி இடம் பெறவில்லை. இந்த இரண்டு நிமிட ஸ்பெயின் புல் ஃபைட் காட்சியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை மேற்கோள் காட்டுவதற்காகவே இது தேர்வு செய்யப்பட்டது.இதுவும் பலருக்கும் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷமாகும்.

    இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட் காட்சியில் பின்னணியில் ட்ரம்பெட், சாக்ஸஃபோன், ட்ராம்போன் போன்ற மேல்நாட்டு இசைக்கருவிகளை மெல்லிசை மன்னர் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார். அந்தப் பின்னணி இசையின் மெட்டு, இந்த நிகழ்ச்சியை நடிகர் திலகம் பார்ப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட லைவாக ஒளிப்பதிவு செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். அதில் நடிகர் திலகத்தை நாம் கவனித்தோமானால் அவருடைய அப்சர்வேஷன் பவர் புரியும், இதையெல்லாம் எடுத்துக் கூறத்தான் இந்தக் காட்சி.

    சரி இப்போது இந்தக் காட்சியின் முக்கியத்துவத்திற்கு வருவோம். புல்ஃபைட்டில் காளை மாட்டை அடக்கும் மேடடார் என்கின்ற அந்த வீரனின் உடல் மொழி நடிகர் திலகத்தை மிகவும் பாதித்திருக்கிறது போலும். மற்றவர்கள் எல்லோரும் சண்டைக்காட்சியில் லயித்திருக்க, இவரோ அந்த வீரனின் உடல் மொழியை கவனித்திருக்கிறார்.

    இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட்டில் வரும் அந்த வீரனின் உடல் மொழியைத் தான் நடிகர் திலகம் பொன் மகள் வந்தாள் பாடலில் தனக்கே உரிய பாணியில் அநாயாசமாக பிரயோகித்து உலகிலேயே ஸ்டைல் சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்று நாமெல்லோரும் தோள் தட்டும் அளவிற்கு புகுந்து விளையாடியிருப்பார்.

    இதே போன்று இந்த காட்சியில் ஒலித்த பின்னணி இசையின் மெட்டும் பொன் மகள் வந்தாள் பாடலின் சரணத்தின் மெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவும் குறிப்பிடக்காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் காட்சிக்கும் தேர்விடலில் எங்களுக்கு எந்த அளவிற்கு சிரமம் இருந்தது என்பதைக் கூறவே.

    நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, நம்மையெல்லாம் பாராட்டிய அன்புச் சகோதரர் ராம்குமார், மெல்லிசை மன்னரின் புதல்வர் கோபி, மற்றும் மெல்லிசை மன்னரின் புதல்வியரான லதா, சாந்தி, மற்றும் ஏராளமான ரசிகர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் முரளி சார்பிலும் என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3264
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்.. மிக அருமையான தொகுப்பு.. மிக அருமையான பாடல்கள்..அதைப்பற்றி வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்..உங்களுக்கும் முரளி சாருக்கும் எங்களது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. செம விவரணை..

    வீடியோ எதுவும் எடுத்திருக்கிறீர்களா..யூட்யூப் அல்லது இங்கு தரவேற்ற இயலுமா.. நாங்க்ளும் கண்டு களிப்போமே..

    இருவருக்கும் மறுபடியும் எங்கள் / நண்பர்களின் சார்பாக மறுபடியும் பாராட்டுக்கள்..

  6. Likes RAGHAVENDRA liked this post
  7. #3265
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ragavendra Sir - fantastic - no words to praise . A well articulated and nicely executed event . Many people can wonderfully articulate but may not have the inherent skill to execute and some people are good only in execution and incapable of articulating . You and Murali have the blend of both . Hats Off !!

  8. Likes RAGHAVENDRA liked this post
  9. #3266
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ராகவ் ஜி...

    பாடல்களின் வரிசையைப் படிக்கும் போதே ஒவ்வொரு பாடல் காட்சியாக மனதுக்குள் படம் ஓடிவிட்டது. ( ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடல் எனக்கு என்றுமே மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ்ஸின் குரலில் மயக்க வைக்கும். "இறைவன் ஆலய மணி... இதுவும் தேவனின் பணி.. அணிந்த மங்கல அணி... அன்பு இல்லறம் இனி என சின்ன சின்ன வரிகளை ஒவ்வொன்றாக வரிசையாக அவர் பாடும்போது சுலபமாக பாட முடிவது போல இருக்கும். ஆனால் நாம் பாடிப் பார்த்தால் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல தோன்றும். நடிகர் திலகத்தின் முக பாவனையை கவனித்துப் பார்த்தால் அந்த வரிகளுக்குள் இருக்கும் உணர்வு என்ன என்பது நமக்கு ஈசியாக புரிந்து போகும்... ஐ லவ் தட் சாங் )

    முரளியின் நினைவாற்றலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இருவரும் இணைந்து ஒரு சாதனையே செய்திருக்கிறீர்கள்.. Kudos !!

  10. Likes RAGHAVENDRA liked this post
  11. #3267
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை வெகு அம்சமாக விவரித்து ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் மேலிடுகிறது.

    'ராஜா' படத்தின் சண்டைகாட்சியைத் திரையிட்டமைக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள். என் உயிரோடு கலந்து விட்ட சண்டைக்காட்சி என்று உங்கள் அனைவருக்குமே தெரியும். முரளி சாருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள். பாடல்களின் தேர்வுக்கு நிச்சயம் சிரமப்பட்டிருக்கத்தான் நேரிட்டிருக்கும்.

    மதுண்ணா சொன்னது போல 'ஒரு நாள் நினைத்த காரியம்' பாடலைப் பற்றி நாம் இருவரும் இன்றுவரையிலும் கூட செல்லில் பல தடவை பேசி மகிழ்ந்து இருக்கிறோம். ஏனென்றால் 'பாதுகாப்பு' படத்தின் பாதி ஷூட்டிங்கும் எங்கள் கடலூரில் நடந்தது அல்லவா?

    அருமையான வர்ணனை. நேரிலே கண்டு களித்தது போலவே உணர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes RAGHAVENDRA liked this post
  13. #3268
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஒரு நாள் நினைத்த காரியம்'

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  15. #3269
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    30

    'நினைத்தால் நான் வானம் சென்று'

    பாலா தொடரில் முப்பதாவது பாடலாக வருவதும் இதற்கு முந்தைய தொடரின் படமான 'நான்கு சுவர்கள்' தான்.



    'நான்கு சுவர்கள்'

    இந்தப் படத்தைப் பற்றி போன தொடரில் சொல்லி விட்ட நிலையில் அது பற்றி வேண்டாம் என விட்டுவிடுகிறேன்.



    வாணிஸ்ரீக்கும், ரவிக்கும் காதல். அழகான கோவாவிலே டூயட். வாணிஸ்ரீ அதீதமான மேக்-அப்பில் வெள்ளையாகத் தெரிகிறார். ரவி குறைந்த முடி டோப்பாவுடன் அழகாகவே இருக்கிறார். வழக்கமான அவரது ஏர் ஹோஸ்டஸ் கொண்டை ஸ்டைல் மாறாமல் அப்படியே உண்டு. நான் முன்னம் சொன்னபடி இதுவும் முழுதும் கோவாவிலே எடுக்கப்பட்ட பாடல்தான். அருமையான படப்பிடிப்பு. சிறிய கப்பல் ஒன்றில் இருவரும் செல்லும்போது பின்னணி இசைக்குத் தக்கவாறு அழகான அளவான மூவ்ஸ் கொடுப்பது நன்றாக இருக்கும். பின்னாலேயே ஒரு பெரிய கப்பல் கிராஸ் ஆவதும் கண்ணுக்கு அழகு.

    பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். ரவி நிற்கும் ஸ்டைல்களில் 'நடிகர் திலகம்' பெரும் பங்கு வகிக்கிறார். மாலை மயங்கும் இருள் காட்டி மறுபடி வெயிலைக் காட்டும் கன்டின்யூட்டி நெருடலும் உண்டு. 'மெல்லிசை மன்னர்' வழக்கம் போல.

    பாலாவும், சுசீலாவும் வழக்கமாகப் பாடி இருப்பார்கள். அப்படி ஒன்றும் ரொம்ப ஈர்ப்படையச் செய்யும் பாடல் இல்லை. சுமார் ரகமே! ஹிட்டிலும் கோட்டை விட்டது. சொல்லும்படி விசேஷமாக ஒன்றும் இல்லை. பாலாவின் பஞ்ச்களும் இல்லை. கேட்டு வைக்கலாம். அதை விட பார்த்துக் கொண்டே கேட்பது இன்னும் கொஞ்சம் பெட்டெர். எண்ணிக்கையில் ஒன்று கூடும்.




    ஆஹாஹஹா ஆஹாஹஹா

    நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    மேகம் கொண்டு வீடொன்று
    மின்னல் கொண்டு விளக்கொன்று
    விண்மீனால் பூ ஒன்று
    சீர் கொண்டு உன்னோடு நானும் வருவேன்

    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
    அருந்தும்போது உன்னை
    அணைக்க வேண்டும் கண்ணே
    காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
    அருந்தும்போது உன்னை
    அணைக்க வேண்டும் கண்ணே

    வானவீதி ஓரம் தெய்வவீணை நாதம்
    வானவீதி ஓரம் தெய்வவீணை நாதம்
    கேட்கும்போது மெல்ல
    கிள்ள வேண்டும் கன்னம்

    நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    லா...ஆஹா ஆஹா ஹஹஹஹா

    தேவமாதர் கூட்டம் காமதேவன் ஆட்டம்
    ஆடும்போதே நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
    தேவமாதர் கூட்டம் காமதேவன் ஆட்டம்
    ஆடும்போதே நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்

    ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
    ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
    குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்

    நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    மேகம் கொண்டு வீடொன்று

    மின்னல் கொண்டு விளக்கொன்று

    விண்மீனால் பூ ஒன்று

    சீர் கொண்டு உன்னோடு நானும் வருவேன்
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

    லாலா லல்லலல்லா
    லாலா லல்லலல்லா
    லாலா லல்லலல்லா
    Last edited by vasudevan31355; 31st August 2015 at 07:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes RAGHAVENDRA, uvausan, madhu liked this post
  17. #3270
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - என்னவோ எனக்கு பாலா பாடினதைப்போல தெரியவில்லை - நீங்கள் பாடினது போலத்தான் இருக்கிறது . அருமையாக ரசிப்பவர் தான் உண்மையாக பாட முடியும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார் . என் அம்மா சிறந்த கர்னாடக பாடகி - ராகங்கள் அவளுக்கு அத்துப்படி - அவள் திறமை, வாழ்க்கை சென்ற வேகத்தில் குடத்தில் வைத்த ஒளி போல உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டது ( தெய்வமகனில் - கண்ணன் சிவாஜி சொல்வார் - அந்த மஹாலக்ஷ்மியின் மகனா இவன் - ஹ ---- - அதுபோல் நானும் என்னைப்பற்றி சொல்லிக்கொள்வேன் - அந்த அன்னைக்கு இப்படி ஒரு ஞான சூன்யமா என்று !!) - ஒன்று மட்டும் புரிகிறது - உங்கள் ரசனைக்கு நீங்கள் திரை உலகில் பாலாவிற்கு போட்டியாக , அவரை விட அதிக புகழுடன் இருந்திருக்க வேண்டிய ஒருவர் ; அப்படி இருந்திருந்தால் - நான் இப்பொழுது " வாசு " என்ற நெடுந்தொடரில் 30 வது இலக்கத்தை இங்கு பதிவிட்டுக்கொண்டிருந்திருப்பேன் ----------

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •