Page 241 of 400 FirstFirst ... 141191231239240241242243251291341 ... LastLast
Results 2,401 to 2,410 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2401
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மது,
    அந்தப் பாடல் வாசு சொன்னது போல் மாலை மயக்கத்தில் என்பது போலத் தான் பல்லவி வரும். பாட்டின் மெட்டும் தாளக் கட்டும் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் படம் பெயர் தான் சட்டென்று ஞாபகம் வரவில்லை. பார்ப்போம் நினைவிற்கு வந்தவுடன் இங்கு பகிர்ந்து கொண்டு விடுவோம்.

    இந்தப் பாடலின் மெட்டும் கூட கிட்டத்தட்ட மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் நீ ஒரு செல்லப் பிள்ளை மெட்டினை ஒத்திருக்கும் என நினைவு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks madhu, vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2402
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    சிவாஜி.செந்தில்ல்ல்ல்ல்ல்

    மனோஹர் பாட் ஒண்ணு யுரேகா யுரேகா..போட்டாச் நு நெய்வேலிக் குரல் கேட்காத் கேட்காத்..(ஆண்டவா காப்பாத்)

    மனோஹர் கே.ஆர்.விஜயா இசை எம்.எஸ்.வி.படம் தட்டுங்கள் திறக்கப்படும்..வெகு ஜோராகப் பாடியிருப்பது பி.சுசீலாம்மா

    அதுல பாருங்க கே.ஆர்.விஜயா வெகு இளமை + எட்டு ஒன்பது காஸ்ட்யூம் மாத்தறாங்க..மாத்திக்கிட்டே பாடறாங்களா..மனோகர் ரசிச்சுக்கிட்டே கேக்கறாரா.. நன்னாவே இருக்கு..அதனால நானும் ரசிச்சுக்கிட்டே டைப் அடிச்சனா..

    *


    வெகு ச்சின்ன கே.ஆர்.விஜயா என்ன சொல்றாஹ..
    *
    தித்திப்பது தித்திப்பது எது அதுவோ..
    தீராதது எது அதுவோ
    கண்களில் மட்டும் உண்டாவது எது அதுவோ
    உண்டானபின் ஒன்றாவது எது அதுவோ..

    (எது தாங்க)
    அட ஆன்ஸர் சொல்லிட்டஹளே

    ஆடை மூடிய பாவையின் மேனி பாடும் பாடலது
    ஆடிப் பாடி ஏங்கியதாலே மோதும் ஓடையது
    கண்கள் காணுவது தனியே பெண்கள் பேசுவது
    கன்னம் தேடுவது இனி நான் என்ன கூறுவது

    இன்னும் சொல்றாஹ..

    மேகம் மூடிய மலைகளின் நடுவே பாடும் பாடலது
    பாடும் பாடலைப் போடப் போட ஊறும் போதையது ( நன்னா உதட்டை மடிக்கிறாஹ)
    நதியில் ஓடுவது ஒரு நாள் கடலில் சேருவது..
    பழகித் தேறுவது ..இதில்யார் பாடம் கூறுவது (அப்படிப் போடுங்க அரிவாளை!)
    *
    அவுட்டோர் , துள்ளும் பாடலில் துள்ளும் இளமை, அடக்க ஒடுக்க மனோஹர் (படத்துல நல்லனா கெட்டனா தெரியாது (ஓ..வ மிஸ் ஆகிடுச்சு போட்டுக்குங்க!))



    வர்றேன் மறுபடி வர்றேன்

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #2403
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    நம் சந்தேகம் தீர்வு ஆகும் வரை ராட்சஸியின் இன்னொரு அருமையான பாடலைக் கேட்போம்.

    'பெண்ணை வாழ விடுங்கள்' என்று கர்ணன் சொல்லுகிறார். பின்னாலய கர்ணன் படங்களுக்கு பல விதங்களில் இந்தப் படம் முன்னோடி. காமெராக் கோணங்கள், வழக்கமான கர்ணனின் ஜெய், அப்போதைய எம்.ஆர்.ஆர்.வாசு என்று.

    'சிவந்த மண்' 'பட்டத்து ராணி' போல எகிப்தின் பிரமிடுகள் செட். காஞ்சனா போல ஷீலாவுக்கு மேக்-அப். அதே ஈஸ்வரி. பாடல் அருமையோ அருமை. என்ன சாட்டை ஓசை இல்லை. வண்ணம் இல்லை.

    'அழகிலே கனிரசம்
    இதழிலே மதுரசம்
    ஆட்டம் என்னென்ன
    வரும் கூட்டம் என்னென்ன
    அதில் நோட்டம் என்..னெ...ன்..ன'

    ஈஸ்வரி

    'அத்தை மகள்... வந்ததைப் போல்
    அன்னத்தின் மேனி கண்டு
    ஜாடை செய்கிறார்'

    என்று அசத்தி விடுவார்.

    ஷீலா ஆடும் நடன மாதர்களின் பின் பக்கம் நின்று அவர்களைக் காலால் உதைத்துத் தள்ளுவார். இதெல்லாம் கர்ணன் கைங்கர்யம். நல்ல வேளை. ஷீலா கால்களைச் சுழற்றி படம் பார்க்கும் நம்மை உதைப்பது போல் வரவில்லையோ தப்பித்தோம். இசை எஸ்.எம்.எஸ். இவர் ஈஸ்வரியைக் கையாளும் விதமே அலாதி.

    ஒளிப்பதிவு, தயாரிப்பு கர்ணன். பெயருக்கு ஆர்.தேவராஜன் இயக்குனர்.

    Last edited by vasudevan31355; 4th August 2015 at 09:20 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes eehaiupehazij, chinnakkannan liked this post
  8. #2404
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    //மனோஹர் பாட் ஒண்ணு யுரேகா யுரேகா..போட்டாச் நு நெய்வேலிக் குரல் கேட்காத் கேட்காத்..(ஆண்டவா காப்பாத்)//

    போட்டாச்சான்னு ஞாபகம் இல்லை. ஆனால் ரொம்ப ரேர் சாங்தான். தேடி தேடிக் கண்டு பிடிக்கிறீங்க. சபாஷ். அப்படித்தான் இருக்கணும். அதான் இன்னைக்கு முச்சூட ஆளைக் காணோமா? எனிவே அருமையான அரிதான பாடலைக் கொடுத்ததற்கு நன்றியோ நன்றி. எதுக்குதான் ஆண்டவனைக் கூப்பிடறதுன்னு இல்லையா? ஆண்டவா!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  10. #2405
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதில் தொலைபேசி கன்னியின் சொல்லாட
    தோதினில் நெஞ்சம் தோய்ந்தங்கே – மோதியே
    கண்திறந்தும் காட்சி கனவினில் தான்விரிய
    விண்ணுளே சென்ற விழி..

    அதானே பாருங்க இங்கே.. ரெண்டு லவ்வர்ஸ்..

    ஆரம்பத்துல காதோடு ஃபோன்ல பேசிக்கிட்டே பாடறதுக்கு பார்க் பீச் பின் மலை..ன்னு போய்டறாங்க..அவன் அவன் கனவைச் சொல்ல ஜொள் விட்டு ப்ளாக் அண்ட் ஒய்ட் தக்காளிக் கன்னம் மினுமினுக்க போதும்னு ஃபோன்லயே சொல்லிட்டு கேளுங்கள் என் கனவைங்கறா காதலி..அதுல ஆறு வருது..ஆறுதலும் தருது....

    நேரம் மாலை நேரம்
    நெஞ்சம் நெருங்கும் நெஞ்சம்.
    அத்தான் என்றேன் முத்து முத்தாக ( மாப்ள.. பாத்தா புதுசாட்டமா இருக்கு..இப்படித்தான் ஆரம்பிப்பாங்க ..பர்ஸ்ல க்ரடிட் கார்ட் டெபிட் கார்ட்லாம் இருக்கா)

    அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக..(ஹெள இஸ் தட்)

    ஆண்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம் ( நல்லவேளை தப்பிச்சாங்க…சல்மான்கான் அப்போ சின்னப் புள்ளையா இருந்திருப்பார்… )

    ஏ.எல் ஆர். சுசீலாம்மா ,அழகாப்பாடியிருக்காங்க.. ராஜ ஸ்ரீ..அண்ட் ஹீரோ..ஏல்.எல் ராகவனே தானாம்..ம்ம்
    ராஜ ஸ்ரீயீன் கனவு..

    நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
    எனைக்காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
    தேரோடும் ராஜாங்கம் இதுவோ என்றாய்
    திரு நாளில் முதல் நாளில் அறிவாய் என்றேன்..

    ம்ம் கல்லும் கனியாகுமாம்.. படம்.. எப்படி இருக்கும்..

    *


  11. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  12. #2406
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //'அத்தை மகள்... வந்ததைப் போல்
    அன்னத்தின் மேனி கண்டு
    ஜாடை செய்கிறார்'// நைஸ் பாட் வாசு .. ஆளை ஆளைப் பார்க்கிறாய் ஆளை ஆளைப் பார்க்கிறாய் ஆட்டத்தைப்பார்த்திடாமல் ஆளை ஆளை ப் பார்க்கிறாய் பாட்டும்
    ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது பாட்டும் நினைவுக்கு வருது..ஷீல் ஷீல் தான்..தாங்க்ஸ்

    ஹப்பாடா மனோகர் போடலையா பாராட்டுக்குத்தாங்க்ஸ்..இன்னிக்கும் இன்னுமிரு நாளும் கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஈவினிங்க்தான் வரமுடியும்னு நினைக்கறேன் ( யாருங்க அது ஹப்பாடி சொல்றது..!)

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #2407
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சுமெழில் விஞ்சிவர குழவியினை நன்றாக
    ..மிஞ்சிவிரும் ஆசையினால் மங்கையவள் அணைத்துவிட
    பஞ்சுமனம் கொண்டவனாம் பால்முகத்து வாலிபனும்
    …பற்றிவிட்ட தீயினிலே படபடத்துத் தானெரிய
    அஞ்சுகத்தைத் தான் நினைத்து அவன்கனவு காணுகிறான்
    ..அழகுரதம் எனவிருக்கும் ஆரணங்கின் கைபற்றி
    நெஞ்சுகொளும் ஆசையிலே சிறுமுத்தம் தான்கேட்க
    .. நேரிழையாள் விழியசைவில் பாடலது பிறந்ததையா..

    ***
    டி.எம்.எஸ். பி.எஸ்.. அழகுப்பாடல்.. நல்ல ஹம்மிங்க்.. லிரிக்ஸ் வாலி?

    *
    செக்கச் சிவந்த இதழிருந்தால் முத்தம் வேண்டுமே
    சீவி முடித்தகுழலிருந்தால் கோத வேண்டுமே
    தக்கவரைத் தேர்ந்தெடுத்து தழுவ வேண்டுமே
    தாமரைப்பூ முகத்தில்முகம் பதிக்க வேண்டுமே..

    நெற்றியிலுள்ளகுங்குமப் பொட்டு சட்டையில் ஒட்டாதோ
    நெளியும்கைகள் வளைய வந்து கட்டியணைக்காதோ
    கட்டில் போட்டு மெத்தை விரித்து க வி தை சொல்லாதோ
    கண்ணா அம்ம்மா ம்ம்ம் என்று கதை படிக்காதோ..

    காதல் பேச்சு ப் பேச ஒரு காலம் இல்லையா
    கல்யாணத்தின் முன்னே இது பாவம் இல்லையா
    ஆதி மனிதருக்கும் நமக்கும் பேதம் இல்லையா
    அன்னை தந்தை காத்து வந்த நியாயம் இல்லையா

    வாழப் போகும் ஜோடி இங்கு நானும் நீயுமா
    இல்லை வாழ்ந்து பார்த்து முடிந்து விட்ட தந்தை தாயுமா
    காலம் பார்த்து நேரம் பார்த்து மாலை சூடுவோம்
    கை கலந்து மெய் கலந்து கானம் பாடுவோம்..ம்ம்
    *
    உயிர் மேல் ஆசை ஜெய். எல்.விஜயலஷ்மி டி.எம்.எஸ் பி.எஸ்.


  15. Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  16. #2408
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சுமெழில் கொண்டபெண்ணே கொடுத்துவிடு என்னிதயம்
    ..கோதையுனைக் கெஞ்சித்தான் கேட்கின்றேன் தந்துவிடு
    பிஞ்சுமனம் கொண்டவளைப் பேதையெனைப் பித்தாக்கி
    …விஞ்சிவிடும் வார்த்தையினை விதைக்கலாமோ வித்தகரே
    நெஞ்சினிடம் கேட்டுவிட்டேன் நேரிடையாய் மொழிந்துவிட்டேன்
    .. நின்றதையா நாடியதும் சொன்னதையா சேதியினை
    தஞ்சமென என்னிதயம் உன்னிடமே இருக்கையிலே
    ..தாவிவந்த உன்னிதயம் கேட்பதுவோ நியாயமிலை..!
    *

    ஹை..இன்னொரு அழகிய டூயட் நான் கேட்காதது..ரவிச்சந்திரன்..பாரதி தானா..வாலிப விருந்து…

    எங்கே எங்கே என்மனது அது அங்கே இருந்தால் தந்துவிடு..

    தொட்டால் உடம்பு தாங்காது
    கை பட்டால் இதயம் தூங்காது (எல் ஆர். ஈ அண்ட் வாலி)
    வெட்கம் என்னைத் தடுக்குது
    உன் பக்கம் பார்த்தால் துடிக்குது

    கன்னியின் உடலே கற்கண்டா
    கைபட்டால் அதுவே கரைவதுண்டா

    கரும்பும் இனிப்பும் பிரிந்திடுமா
    காத்திருந்தாலே கசந்திடுமா ( வாலி அகெய்ன்.. நைஸ்)

    *



  17. Likes eehaiupehazij liked this post
  18. #2409
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சுமெழில் நங்கையர்கள் இருவர் அங்கே
    ….கொட்டுகின்ற இமைகளுடன் கண்க ளுள்ளே
    விஞ்சிவரும் காதலினை ஆசை கூட்டி
    ..வேட்கையுடன் பாடுகிற பாடல் கேட்டே
    மிஞ்சுகிறான் வாலிபனும் பண்பை அங்கே
    …மேலதிகம் பெண்களவர் கானம் கேட்க
    வஞ்சியரோ வாலிபத்தின் மயக்கம் கொண்டே
    ….வாகாகப் பாடினரே காலம் காலம்..!

    *

    ஹை.. கொஞ்சுமெழில் வச்சு மூணு பாட் எழுதிட்டேன்.. !
    *


    அமைதி கொள்ளாமல் ஆவலைச் சொல்லாமல்
    எரிமலை புகைபோலே மணிகடல் அலைபோலே – எவண்டி எவண்டி
    எனைக்கவர்ந்த கள்வனடி..

    கற்பனை செய்துசெய்து ஏங்குவதோ
    சிற்பத்தைப் பார்த்து பார்த்து தூங்குவதோ
    இனிக்கும் காதல் இளமைக்காதல்
    இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

    கனிந்து வந்தபோது பூப்போலே
    காவேரி வளைந்து நின்றாள் வேர்போலே
    ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
    ஏதோ ஏதோ வாழ்வைக் கண்டேன்

    சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
    கன்னியர் நீராடும் நீரோடை
    கள்வனைக் கண்டோம் கருத்தினில்கொண்டோம்
    பருவம் தந்த பார்வையைக் கொண்டோம்

    எவண்டி எவண்டி
    நம் மனம்கவர்ந்த கள்வனடி..

    எல் ஆர் ஈஸ்வரி ஜானகி விஜயபுரி வீரன் என்.டி.ஆர் ராஜஸ்ரீ அப்புறம் வாசு சொல்வார்!

    **

  19. Likes eehaiupehazij liked this post
  20. #2410
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி
    உமக்காக ஒரு சூப்பர் பாடல்
    மனசு பரிமளின்ச்சனே . ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் திரையிலிருந்து
    தமிழில் இது மனசு பரிமளித்ததே



  21. Likes vasudevan31355, madhu, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •